[7/25, 9:07 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 25/07/2017* ☀
1⃣ பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட இந்த *எக்காள பண்டிகை என்பது என்ன❓* எக்காளப் பண்டிகையை இஸ்ரவேலர் எப்படி அனுசரித்தனர்❓
2⃣ *எக்காளப் பண்டிகையின் மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*
வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், *இன்றைக்கு எக்காளப் பண்டிகையை குறித்து தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* - https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline
*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[7/25, 9:43 AM] Elango: 👍🏻🙏🏻
லேவியராகமம் 23:23-25
[23]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
[24] *நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக*
[25] *அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.*
[7/25, 11:04 AM] Jeyaseelan Bro VT: 💥எக்காள சத்தப் பண்டிகை💥
லேவியராகமம்: 23:24,25
*யூத வருடத்தில் ஏழாவது மாதம் முதலாம் நாள் எக்காளப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.*
ஏழாவது மாதத்தில்தான் கடைசி மூன்று பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது.
*எக்காளப் பண்டிகை, பாவ நிவாரணப் பண்டிகை, கூடாரப் பண்டிகை ஆகியவை. இதற்கு முன்னாளிலுள்ள பெந்தெகோஸ்தே பண்டிகைக்கும், இந்த பண்டிகைக்கும் இடையில் நான்கு மாத இடைவெளிகள் இருக்கிறது. இது முக்கியமான கவனித்தலுக்குரியது.*
முதல் நான்கு பண்டிகைக்குரியதான நிறைவேறுதல்கள் முடிந்து விட்டன. ஆனால், இந்த மூன்று பண்டிகைகளும் முடிந்தவை என்பதற்கு ஆதி திருச்சபையிலும், புதிய ஏற்பாட்டிலும் எந்த அத்தாட்சியும் இல்லை.
அதன் நிறைவேறுதல்கள் கடைசிக் காலத்தில் சம்பவிக்கும். ஏசாயா: 58:1 - "எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி..."
*எக்காளம் என்பது தீர்க்கதரிசன குரலின் முழக்கமாகும்.*
எக்காளம் தொனிக்கும்போது தேவனுடைய சத்தம் அவருடைய ஊழியர்கள் மூலம் வரப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
வெளிப்படுத்தல்: 1:10 - "கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன். அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்."
[7/25, 11:05 AM] Jeyaseelan Bro VT: *எக்காளங்களை ஊதுவதின் நோக்கம்: (எண்ணாகமம்: 10:1-10)*
வெள்ளியால் செய்யப்பட்ட இரண்டு எக்காளங்கள். (எண்ணாகமம்: 10:2).
இரண்டு என்பது சாட்சிகளைக் குறிக்கிறது.
வெள்ளி என்பது மீட்பைக் குறிக்கிறது.
1. சபையாக கூடி வரச் செய்ய:
இஸ்ரவேல் அனைத்தையும் ஒன்றாக கூடிவரச் செய்யும்படியாக எக்காளம் ஊதப்பட்டது. 12 கோத்திரத்திலுள்ள எல்லா இஸ்ரவேலரும் கூடி வந்தார்கள். "ஜனங்கள் அவரிடத்தில் (இயேசு கிறிஸ்துவினிடத்தில்) சேருவார்கள்" ஆதியாகமம்: 49:10.
2. தலைவர்களை மட்டும் கூட்டிச் சேர்க்க: எண்ணாகமம்: 10:4
ஒரே ஒரு எக்காளத்தை மட்டும் ஊதும்போது, ஆயிரவர்களுக்கு தவைனாகிய பிரபுக்கள் கூடிவருகிறார்கள். கர்த்தர் இன்றைக்கும் தலைவர்களோடு பேசுகிறார். அவர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கிறார்.
3. பாளையங்களை பிரயாணப்படச் செய்ய: (எண்ணாகமம்: 10:2,5)
மேகஸ்தம்பம் புறப்படும்போது எக்காளங்கள் பெருந்தொனியாய் முழங்கும். கானானை நோக்கி அவர்கள் புறப்படுகிறார்கள் என்பதை அது அறிவிக்கும். சாதாரணமாய் முழங்குவதற்கும், பெருந்தொனியாய் முழங்குவதற்கும் வேறுபாடு இருக்கிறது. தேவன் தம் சபையை மன்னேற அனுமதிக்கிறார்.
கர்த்தருடைய நோக்கமெல்லாம் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. அதுபோலவே, இயேசு கிறிஸ்து திரும்ப வருமுன், கர்த்தருடைய சபை சத்தியத்துக்குள்ளும் கடந்து சென்று உறுதிப்பட வேண்டும் என்று விரும்புகிறார். பரிசுத்த அவியின் அபிஷேகத்தைப் பெற்ற உடன் நமது பயணம் முடிந்து விடவில்லை. இன்னும் அதிக அனுபவங்களுண்டு. நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.
4. ஜனங்களை யுத்தங்களுக்கு ஆயத்தம் செய்ய: (எண்ணாகமம்: 10:9)
ஜனங்களை யுத்தத்துக்கு ஆயத்தம் செய்ய எக்காளங்கள் பெருந்தொனியாய் முழங்க வேண்டும். (1கொரிந்தியர்: 14:8). "அந்தப்படி எக்காளம் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்துக்கு ஆயத்தம் பண்ணுவான்...."
நாம் தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடுத்து, தேவனுடைய சகல சர்வாயுதவர்க்கங்களையும் தரித்துக் கொண்டு, சாத்தானோடும், அதிகாரங்களோடும், துரைத்தனங்களோடும் யுத்தம் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். (எபேசியர்: 6:10-18).
ஒரே நேரத்தில் போதகர்களும், ஆவிக்குரிய தலைவர்களும் சத்தத்தை எக்காள சத்தத்தைப் போல உயர்த்தி, வரப்போகும் ஆபத்தை குறித்து தேவ ஜனத்தை எச்சரித்து, அவர்களை யுத்தத்துக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். (எசேக்கியேல்: 33:2-9).
5. பண்டிகைகளைக் கொண்டாட:(எண்ணாகமம்: 10:10)
எல்லா ஜனங்களையும் ஒன்றாகக் கூட்டி பண்டிகைகளை ஆசரிக்கச் செய்யவும், விசேஷித்த ஜெபத்தையும் உபவாசத்தையும் அறிவிக்கவும் எக்காளங்கள் ஊதப்பட வேண்டும். (யோவேல்: 2:15,16).
ஆரோனும், அவன் குமாரரும் எக்காளத்தை ஊத வேண்டும்:(எண்ணாகமம்: 10:8)
ஆரோனும் அவன் நான்கு குமாரரும் எக்காளம் எக்காளம் ஊதும்படி நியமிக்கப்பட்டார்கள். வேறு யாரும் ஊதிவிட முடியாது. (யாத்திராகமம்: 28:1). இது ஊழியத்துக்கென்று கிறிஸ்து தரும் வரங்களும் அதன் அடையாளமுமாக இருக்கிறது. (எபேசியர்: 4:11).
[7/25, 11:06 AM] Jeyaseelan Bro VT: 1கொரிந்தியர்: 15:51,52 - "ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது ஒரு இமைப் பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்"
அநேக கிறிஸ்தவர்கள் கடைசி எக்காள தொனிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்று தொனித்துக் கொண்டிருக்கும் மற்ற எக்காளங்களுக்கு செவி சாய்த்து அதின் செய்திகளை அறிந்து கொள்ளா விட்டால் கடைசி எக்காளத்துக்கு ஆயத்தமாக இருப்பது எப்படி?
ஆதித் திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் அசைவு மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், கி.பி.350 க்கு பின் கிறிஸ்தவ மார்க்கத்தோடு அரசாங்கம் இணைந்தது. திருச்சபையின் வீழ்ச்சி (சரிவு) ஆரம்பமாயிற்று.
ஏறத்தாழ 1000 ஆண்டுகள் இருண்ட காலம் என அழைக்கப்படுகிறது. ஆவிக்குரிய எந்த வெளிச்சமும் வீச வில்லை. ஆங்காங்கே கிறிஸ்துவின் நாமத்தில் தவறான மார்க்கங்களே நடமாடி வந்தன. அதன்பின் கர்த்தர் மீண்டும், சத்தியத்தையும், சபையையும் நிலைநிறுத்த வேத சத்தியங்களை எக்காளத் தொனியில் அறிவிக்கும் தேவ மனுஷர்களையும் எழுப்பினார்.
*இருண்ட காலத்தக்குப் பின் தொனித்த எக்காளங்கள்: *
1. கி.பி.1517 - "விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுதல்" என்ற சத்தியத்தோடு மார்டின் லுத்தர் எழுந்தார். இதனால், லுத்தர் அனுபவித்த பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அநேக சீர்திருத்தவாதிகள் இரத்த சாட்சியாய் இந்த சத்தியத்திற்காக மரித்தார்கள். சபையை கீழ் நிலைக்கு இழுத்துச் சென்ற அநேக துர் உபதேசங்களுக்கு விரோதமாய் மார்டின் லுத்தர் தைரியமாய் பிரசங்கித்தார். நாம் கிரியைகளினாலோ, சடங்காச்சாரத்தினாலோ அல்லாமல், விசுவாசத்தினாலே இரட்சிக்கப்படுகிறோம் என்று அறிவுறுத்தினார்.
2. கி.பி.1524 - பாப்திஸ்துகள் எழும்பி தண்ணீரில் மூழ்கித்தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற சத்தியத்தைக் கொண்டு வந்தார்கள்.
3. கி.பி.1738 - பரிசுத்தத்தையும் சுத்திகரிப்பையும் எக்காளத் தொனியில் முழங்குவதற்காக கர்த்தர் ஜான் வெஸ்லியை எழுப்பினார். பரிசுத்தத்திற்கும் வேறுபட்ட ஜீவியத்திற்கும் ஒப்புக் கொடுத்து அநேக கிறிஸ்தவர்கள் முன் வந்தார்கள். பாவ ஜீவியத்தைப் பற்றி உணர்த்தப்பட்ட ஜனங்கள் ஆயிரமாயிரமாய் தெருக்களில் அழுது புலம்பினார்கள். இதனால், பிரஞ்சுப் புரட்சியின் கொடுமையிலிருந்து இங்கிலாந்து தேசத்தார் பாதுகாக்கப்பட்டனர்.
4. கி.பி.1865 - நடைமுறை கிறிஸ்தவ ஜீவியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை வந்தது. இரட்சண்ய சேனை பிறந்தது. டாக்டர்.பெர்னாண்டோ அநேக அனாதை இல்லங்களை ஸ்தாபித்தார். அது போன்ற இயக்கங்கள் 1886 ஆம் ஆண்ட முதல் ஏராளமாய் பெருகிற்று.
5. கி.பி.1875 - பரிசுத்தத்திற்கும் சுத்திகரிப்பிற்கும் மறுபடியும் திரும்பினார்கள். சுத்திகரிப்பு என்பது திட்டமான அனுபவமாக வலியுறுத்தப்பட்டது. கெஸ்விக் இயக்கம் ஆரம்பமானது.
6. கி.பி.1880 - ஏ.பி.சிம்சன் தெய்வீக சுகமளித்தலைப் பற்றிய சத்தியங்களைக் கொண்டு வந்தார். இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மட்டும் சிலுவையில் மரிக்காமல் நமது சரீரத்தின் நோய்களை நீக்கவும், வழியுண்டாக்கினார் என்று பிரசங்கித்தார்.
7. கி.பி. 1890 - பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பற்றி சத்தியமும் அந்நிய பாஷையில் பேசுவதுமாகிய சத்தியங்களும் வெளிவந்தன. 1906 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் என்னுமிடத்தில்அசுசா தெருவில் நடந்த எழுப்புதல்கூட்டங்களில் கர்த்தர் பரிசுத்தாவியின் நிறைவை அபரிதமாக ஊற்றினார். இது அநேக தேசங்களுக்கு பரவியது. அநேக பெந்தெகோஸ்தே ஆலயங்கள் உருவாயின.
8. கி.பி. 1948 பெரிய பெரிய சுவிசேஷ விழாக்களில் எக்காளச் சத்தம் பெருந்தொனியாய் முழங்கிற்று. பில்லி கிரஹாம், ஓரல் ராபர்ட்ஸ், டி.எல.ஆஸ்போர்ன் போன்ற கர்த்தருடைய ஊழியர்கள் எழுந்தனர். ஆயிரக்கணக்கான அற்புதங்கள் நடந்தன. பெருங் கூட்டத்தார் இரட்சிக்கப்பட்டனர். 1948 ஆம் ஆண்டில்தான் இஸ்ரவேல் தேசம் மீண்டும் உருவானது. மட்டுமல்ல, பரிசுத்தாவியின் பின்மாரி அநேக ஸ்தாபன சபைகளில் ஊற்றப்பட்டது.
9. கி.பி.1962 - இன்றும் புதிய அபிஷேகம் புராட்டஸ்டாண்டசபைகளில் பற்றி பிடித்தது. கத்தோலிக்கர் மத்தியிலும் பரவியது. ஆழமான வேத பாடங்களை நடத்தும் ஊழியம் ஆரம்பமானது. முழு உலகத்தையும் சுவிசேஷத்தால் நிரப்பக் கூடிய சுவிசேஷ ஊழியம் நிறைந்த நாட்களுக்குள் வந்திருக்கிறோம். 1962 பிப்ரவரி 26 க்குப் பின் 'அக்கியூரியஸ்' என்ற சின்னமாகிய பானையிலிருந்து தண்ணீர் ஊற்றும் மனிதனின் அடையாளத்துக்கும் வந்திருக்கிறோம்.
[7/25, 11:09 AM] Jeyaseelan Bro VT: 🌷கிறிஸ்து வருவதற்கு முன்பாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும்,* நிலைநிறுத்தப் போகும் சத்தியங்கள்:*
- பரிசுத்தாவியின் ஒன்பது வரங்கள் - 1கொரிந்தியர்: 12:8-10
- உண்மையான ஆவிக்குரிய ஆராதனை
- ஆவியிலே பாடி, கீத வாத்தியங்களோடு ஆராதிப்பது.
- விடுதலையின் ஊழியம், பிசாசின் பிடியிலிருந்தும், பாரம்பரியங்களிலிருந்தும், குறி சொல்லுதலிலிருந்தும் மக்களை விடுவிப்பது.
*ஆலயத்தில் தெய்வீக ஆராதனை ஒழுங்குகள்:*
1. ஊழியத்துக்கடுத்த 5 வகை வரங்கள் - எபேசியர்: 4:11
2. சரீரமாகிய ஊழியம்
- எல்லா ஊழியங்களையும் ஒன்றாகக் கட்டுதல். எண்ணாகமம்: 10 அதிகாரம். தேவன் ஊழியத்திலே ஒற்றுமையையும், ஒருமுகப்பாட்டையும் கொண்ட வருதல்.
- யுத்தத்திற்கு ஆயத்தம் செய்தல் - ஆவிக்குரிய பிளவுபட்ட காலத்திற்கு முடிவு உண்டாக்குதல்.
*எக்காளப் பண்டிகை... தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைவேறுதல்:*
தேவன் நமக்களிக்கும் புதிய சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்போது இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை பரிபூரணமாக ஒப்புக் கொடுக்கும்போது நாம் தனிப்பட்ட முறையில் இந்த அனுபவத்துக்கு வருகிறோம். பெரிய காரியங்களை நடைமுறைக்கு கொண்டு வர தேவனுடைய அழைப்புக்கு செவி கொடுப்போமாக.
எபிரேயர்: 6:2 - "பூரணராகும்படி கடந்து போவோமாக..."
வாசித்துப் பாருங்கள்: ஏசாயா: 60:1; எபேசியர்: 5:14-16
http://nesarin.blogspot.com/2012/12/blog-post_12.html?m=1
[7/25, 11:32 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 15:51-54
[51]இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் *கடைசி எக்காளம்🎷🎷🎷🎷🎺🎺🎺🎺🎺🎺🎺 தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும்😆😆😆 மறுரூபமாக்கப்படுவோம்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[52] *எக்காளம்🎷🎷🎷🎷🎷🎷 தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.*
[53]அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
[54]அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
[7/25, 11:35 AM] Levi Bensam Pastor VT: 1 தெசலோனிக்கேயர் 4:16-17
[16]ஏனெனில், *கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ🎷🎷🎷🎷🎷🎷🎷 எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.*👇👇👇👇👇👇👇👇👇
[17] *பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.*
[7/25, 11:55 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 25/07/2017* ☀

[7/25, 7:44 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 25/07/2017* ☀

[7/25, 8:27 PM] Elango: *எக்காளங்களின் பண்டிகை*
லேவியராகமம் 23:23-25
[23]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
[24]நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: *உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக.*
[25]அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.
இப்பண்டிகை ஏழாம் மாதத்தில் முதல் நாள் கொண்டாடப்பட்டது, அது எக்காள சத்தத்தால், ஞாபககுறியாக கொண்டாடப்படும் பண்டிகையாகும், சபை கூடுதலான பரிசுத்த ஓய்வுநாளாகும். அதில் அவர்கள் யாதொரு வேலையும் செய்யாமல் கர்த்தருக்கு தகனபலி செலுத்த வேண்டும்.
*இப்பண்டிகையின் ஆவிக்குரிய அர்த்தம் என்பது கர்த்தருடைய இரகசிய வருகையில் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை குறிக்கிறது.*
1 தெசலோனிக்கேயர் 4:16
[16] *ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.*
1 தெசலோனிக்கேயர் 4:17
[17]பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
*ஓய்வுநாள் பண்டிகை, பஸ்கா பண்டிகை, புளிப்பில்லாத அப்ப பண்டிகை, பெந்தேகோஸ்தே பண்டிகை இந்த பண்டிகைகளை சரியான விதத்தில் ஆசரித்தால்... எக்காளங்களின் பண்டிகையும் மிகுந்த சந்தோஷத்துடன் ஆசரிக்கக்கூடியவர்களாக இருப்போம்., இந்த எக்காளங்களின் பண்டிகையை ஆசரிக்க நாம் ஆவலோடு இருக்க வேண்டும். இல்லாவிடில் இதற்கு முன்பாக ஆசரித்த பணௌடிகைகளும் வீணாகயிருக்கும்*
- பிஷப் ஜாண் ராஜதுரை, அமெரிக்க ஐக்கிய தேசம் @John Rajadurai Bishop VM
[7/25, 8:38 PM] Elango: எக்காளம் சத்தம் என்று கேட்கும் போதே, இருதயம் சந்தோஷத்தால் நிறைந்து வழிகிறது...மடை திறந்த வெள்ளத்தை போல ஆகா என்ன இன்பம் ....
*எக்காள சத்தம் வானில் தொணித்திடுதே, என் இயேசு மகாராஜன் வந்திடுவார்*🎼🎼🎼
எக்காளம் தொணிக்கம் போது மரித்தோர் எழுந்திருப்பார்கள் என்று வேதம் கூறுகின்றது...இன்னும் எக்காள சத்தத்தோட தம் தூதர்களை அனுப்பப் போகிறார்.
1 தெசலோனிக்கேயர் 4:16-17
[16] *ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்*

வெளிப்படுத்தின விஷேசத்தில் எக்காளத்தின் சத்தம்தான் ரொம்ப கேட்பதை பார்க்க முடிகிறது..
1 கொரிந்தியர் 15:52
[52] *எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.*
மத்தேயு 24:31
[31] *வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.*
எக்காளம் தொணிக்கும் மரித்தோர் எழுந்திருப்பார்கள்.
வேறு எந்ந சத்தத்தையும் கேட்காமல், நம்மிடத்தில் அந்த எக்காள சத்தத்தை மட்டுமே கேட்க கூடிய காது இருக்கட்டும். பழைய ஏற்ப்பாட்டின் நிழலை நிஜமாக்குவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
- Pastor Levi @Levi Bensam Pastor VT
[7/25, 9:07 PM] Elango: *எக்காள பண்டிகை*
கலாத்தியர் 4:5
[5] *காலம் நிறைவேறினபோது,* ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
அப்போஸ்தலர் 2:1
[1] *பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது,* அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
*காலம் நிறைவேறினபோது,*
*பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது,*
☝☝☝இதை தேவனுடைய கால அட்டவணை என்று கூட சொல்லாம். சிலவற்றிற்றுக்கு தேவன் அந்த நாளைக் கூட சரியாக குறித்து வைத்திருக்கிறார்
அவருடைய கால அட்டவணையில் சிலவை பல வருடக்கணக்காக நடைபெறுவதற்க்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்ப்பட்டிருக்கு.
கர்த்தர் ஒவ்வொன்றிற்க்கும் ஒரு காலம் வைத்திருக்கிறார் அது அப்போது மட்டும் தான் நிறைவேறும்.
*இதை ஏன் நான் இங்கே சொல்லுகிறேன் என்றால், இதுவரைக்கும் நாம் பார்த்த பண்டிகைகள் பழைய ஏற்ப்டாட்டில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்ட பண்டிகைகள்*
*இதற்க பிறகு நாம் பார்க்கப்போகிற பண்டிகைகள், தேவன் தீர்மானித்த கால அட்டவணையில் நிறைவேற போகிறதாக இருக்கிறது, அவர் குறித்த காலம் நிறைவேறுகிற போதுதான் அது நிறைவேறும்*
*அந்த நிறைவேறக்கூடிய காலம் நம்முடைய காலமாகவும் இருக்கலாம்*
- Pastor Charles @Charles Pastor VT
[7/25, 9:22 PM] Elango: எக்காளங்களின் பண்டிகை குறித்து 👇👇👇
லேவியராகமம் 23:23-25
[23]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
[24] *நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக.*

*இவைகள் தான் எக்காள பண்டிகையில் செய்ய வேண்டிய காரியங்கள்*☝☝☝
இஸ்ரவேலர் அனுசரித்த பெரிய மூன்று பண்டிகைகளில் , மூன்றாவது வரும் கூடார பண்டிகையிற்க்கு முன்பாக வருக்கூடிய, சிறப்பு வாய்ந்த ஒரு பண்டிகை எக்காள பண்டிகை.
*அதாவது அறுவடைக்காலத்தின் பெரிதுமான மூன்றாவதும் கடைசியுமான காலத்தை சமயத்தை இந்த எக்காளங்களின் பண்டிகை குறிப்பிடுகிறது*
பெந்தேகோஸ்தேவிற்க்கு முன்னாடி முதற்பலன் என்ற பண்டிகை பார்த்தோம், அறுவடை காலத்திற்க்கு முன்பதாகவே விளைந்த முதற்பலன்களின் அறுவடையை அது காட்டுகிறது, அது ஒரு சிறு அறுவடையாக காட்டப்படுகிறது.பெந்தேகோஸ்தே நாளில் வசந்த காலத்தில் செய்யப்படுகிற அறுவடையை அங்கே சித்தரிக்கப்பட்டிருக்கும்
*ஆனால் மிகப்பெரிய அறுவடை என்பது இந்த எக்காளத்தின் பண்டிகையில் தான் நடைப்பெற போகிறது, இதைதான் சேர்ப்புக்காலம் என்று எழுதப்பட்டிருக்கிறது*
யாத்திராகமம் 34:22
[22]கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், *வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.*👈👈👈☝☝☝
-.Pastor Charles @Charles Pastor VT
[7/25, 9:34 PM] Elango: மத்தேயு 13:39
[39]அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; *அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.*
பரலோக இராஜ்யத்திற்க்கு உவமைகளாக சொல்லிக்கொண்டு வரும்போது ..அந்த உவமைக்கு விளக்கம் கொடுக்கிற அந்த நேரத்தில்...👇👇👇
*அறுப்பு உலகத்தின் முடிவு;*
*இந்த முடிவுகால அறுவடையை தான்..எக்காளங்களின் பண்டிகை குறிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது*
*எக்காளங்களின் பண்டிகையாக இந்த பண்டிகையின் காலத்தில் தான், அநேக ஜனங்கள் சுவிஷேசத்தை ஏற்றுக்கொண்டு தேவனுக்கு...பிள்ளைகளாக மாறி தேவனுடைய இராஜ்யத்தில் பிள்ளைகளாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், அதற்கு அடையாளமாக தான் இதை கடைசி கால அறுவடை பண்டிகையாக சொல்லுவார்கள்*
*எக்காளங்களின் பண்டிகையை அனுசரிக்கக்கூடிய அந்த நேரத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பது தான் என்னுடைய கருத்து, சீக்கிரத்திலே நாம் எக்காளங்களின் பண்டிகையை நாம் சந்திக்கப்போகிறோம், கொண்டாடப்போகிறோம் அதற்கு நிறைவேற வேண்டிய எல்லா கால சூழலும் தீர்க்கதரிசனமும் நிறைவேறிக்கொண்டு முடிந்ததாகவே நான் பார்க்கிறேன்*
- Pastor Charles @Charles Pastor VT
[7/25, 9:57 PM] Elango: பெந்தேகோஸ்தே பண்டிகைக்கும், எக்காள பண்டிகைக்கும் ஒரு நீண்ட இடைவெளியை இருப்பதை நாம் காண முடியும்.இது தீர்க்கதரிசனரீதியாக ஒரு முக்கிய அம்சத்தை கொண்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கும்.
*எக்காளங்களின் பண்டிகை புதிய ஏற்ப்பாட்டிலே நிறைவேறி விட்டதாக எந்த இடத்திலும் சொல்லவும் முடியாது, யூகிக்கவும், காட்டவும் முடியாது ஏனென்றால் இனிமேல் சம்பவிக்கப்போகிற நிறைவேறப்போகிற அம்சத்தை கொண்டதாகவே இருக்கிறது.
தேவன் எப்படி பஸ்கா , புளிப்பில்லாத, முதற்கனி, பெந்தேகோஸ்தே பண்டிகைகளையும் நிறைவேற்றினாரோ அதேப்போல மீதியுள்ள மூன்று பண்டிகைகளையும் நிறைவேற்ற ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார்.அந்த பண்டிகைகளை சந்திக்க நாம் ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் அவரோடு கூட வருவது எது என்ற கேள்விக்கு ...கீழுள்ள வசனங்கள் நமக்கு பதில் தரும்👇👇👇
மத்தேயு 24:30-31
[30]அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, *மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல*் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
[31] *வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்;* அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
1 கொரிந்தியர் 15:51-52
[51]இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.

*இங்கே எக்காளங்களின் பண்டிகை சபை காலத்தின் கடைசி நொடியில் காலத்தில் நேரத்தில் நிறைவேற போகிற நிகழ்ச்சியோடு நெருங்கிய தொடர்பு உடையதாக காட்டப்பட்டிருக்கிறது*
- pastor Charles @Charles Pastor VT
[7/25, 10:17 PM] Satya Dass VT: 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 10:1
2 சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப் பூரிகைகளைச் செய்துகொள்வாயாக, அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
எண்ணாகமம் 10:2
3 அவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக்கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
எண்ணாகமம் 10:3
4 *ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில்* ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.
எண்ணாகமம் 10:4
5 நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழங்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.
எண்ணாகமம் 10:5
[7/25, 10:21 PM] Elango: லேவி 23:24 ல் சொல்லப்பட்ட எக்காள பண்டிகை எதை குறிக்கிறது என்றால் அது அநேக காரியங்களுக்கு முன்னடையாளமாக குறிக்கப்பட்டு இருந்தாலும், முதலாவது நான் குறிப்பிட போவது - *நாம் இனிமேல் இளைபௌபாற போகிற. ஆறுதல் காலத்திற்க்கு மீன் அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறது*
ஆதாம் ஏவாள் பாவத்தில் விழுந்த பிறகு, தேவன் இளைப்பாறாமல் இரட்சிப்பு மற்றும் ஜனங்களை விடுவிக்க அந்த காரியத்தை தொடர்ச்சியாக செய்துக்கொண்டேயிருக்கிறார்,
தேவன் மோசேயின் மூலமாக எகிப்து தேசத்திலிருந்து அவர் ஜனங்களை விடுவித்து கானான் தேசத்தில் கொண்டு வந்தும் ஜனங்களுக்கு இளைப்பாறுதல் இல்லாத காலத்தை பார்க்கிறோம்.
*இளைப்பாறுதல் என்பது மோசேயின் காலத்திலும், யேசுவாவின் காலத்திலும் இல்லை*
எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:3,5-11
[3]விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
[5]அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
[6]ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரிமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும்,
[7]இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.
[8]யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.
[9] *ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது.*
[10]ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
[11] *ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.*
*இந்த இளைப்பாறுதல் எக்காள பண்டிகையின் மூலம் நமக்கு கிடைக்கப் போகிறது, இளைப்பாறுதல் இனிமேல் தான் நடை பெற போகிறது என்பதை நான் ஆணித்தரமாக விசுவாசிக்கிறேன்*
- Pastor Charles @Charles Pastor VT
[7/25, 10:32 PM] Elango: *எக்காளங்களி பண்டிகை என்பது இயேசுகிறிஸ்துவின் சரீரம் முழுமைப் பெறுவதற்க்கு அடையாளமாக இருப்பதை காட்டுகிறது, அதாவது சபை முழுமை பெறுவதற்க்கு எக்காளங்களின் பண்டிகை ஒரு அடையாளமாக இருக்கிறது*
வெளிப்படுத்தின விசேஷம் 10:6
[6]இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, *ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,*
எபேசியர் 3:2-10,12
[2]உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே;
[3]அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
[4]இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.
[5]அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;
[6]இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.
[7]தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.
[8]பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
[9]தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,
[10]உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக,
[12]அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.
*மேலுள்ள வசனத்தில் சபையே தேவனுடைய இரகசியம் என்று புரிந்துக்கொள்ள முடியும்*
*இயேசுகிறிஸ்துவுக்குள் நாமும் ஐக்கியமானபடியினால் புறஜாதியாரும் யூதர்களுக்கு இணையாக, சுதந்தரவாளிகள் என்பதே இந்த தேவ இரகசியம், யூதரும் புறஜாதியாரும் ஒன்றாக ஒரே சரீரமாக இணைந்து ஒரே சபையாக உருவாக்கப்படுவதே தேவனுடைய இரகசியம்*
- Pastor Charles @Charles Pastor VT
[7/25, 11:41 PM] Elango: முதலாவது வனாந்தரத்தில் இருக்கிற இஸ்ரவேலரை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.
3 கோத்திரங்கள் வடக்கிலும், 3 கோத்திரங்கள் தெற்கிலும், 3 கோத்திரங்கள் கிழக்கிலும், 3 கோத்திரங்கள் கிழக்கிலும் இருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரர்கள் மோசேயை சுற்றி கூடார கூடாரமாக பாளயமிட்டு அங்கே இருக்கிறார்கள்.ஆனால் எக்காள சத்தம் தொணிக்கும் போது எல்லோரும் ஒரு கூட்டமாக ஆசரிப்புக்கூடாரத்தில் கூடி வருகிறார்கள். இது எதை காட்டுகிறதென்றால் வரப்போகிற எக்காள சத்தத்தின் சம்பவங்களை குறிப்பதற்க்கு முன்னடையாளமாக இருக்கிறது.
எபேசியர் 1:9-10
[9] *காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,*
[10]தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.
*இயேசு சொன்ன வார்த்தையை அப்போஸ்தனாகிய பவுல் குறிப்பிடுகிறார்*☝☝☝
*இன்றைய காலத்தில் பல சபைகள் , அல்லது உபதேச அடிப்படையில் நாம் பிரிந்து , இஸ்ரவேல் கோத்திரங்களை போல இருக்கலாம், ஒவ்வொன்று பெயரிலும் இருக்கலாம். ஆனாலும் தேவன் எக்காளத்தை ஊதும் போது, நாம் யாவரும் ஒரே சரீரமாக ஒன்றாக கூடி வர வேண்டும், இன்றைக்கு நாம் ஒரு மனப்பட வேண்டும் ஒரே சரீரமாக மாற வேண்டும், என்பதற்கு முன்னடையாளமாகவே இந்த ஆசரிப்புக்கூடாரத்திற்க்கு முன் கூடி வருவது முன்னடையாளமாக காட்டப்படுகிறது*
நாம் இக்காலத்திலும் உயர்ந்தன் தாழ்ந்தவன், என்றும் வேறுபட்டு பிரிந்து கிடந்தால், ஆசரிப்புக்கூடாரத்தில் எப்படி இஸ்ரவேலர் எக்காளம் தொணிக்கும்போது கூடி வந்தார்களோ அப்படி கூடி வர முடியாது... *தன் சுயத்தை இழக்கிறவன், சபையோடு இணைந்துக்கொள்ள விரும்புகிறவன் அதாவது சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தோடு இணைந்துக்கொள்ள விரும்புகிறவன்...உயர்வு தாழ்வு எண்ணாதவன்... எந்த விதமான மாறுபாட்டை எண்ணாதவன் இந்த ஆசரிப்புக்கூடாரத்தில் ... அதாவது சரீரமாகிய சபையில் அவன் நிலைத்திருப்பான்..அந்த எக்காளத்தொணியை கேட்பான் அவனே மறுரூபமாக்கப்பட்டு தேவனோடு எடூத்துக்கொள்ளப்படுவான்*
- Pastor Charles @Charles Pastor VT
[7/26, 12:23 AM] Elango: *இந்த எக்காளங்கள் கடைசி நாட்களில் உரைக்கப் போகிற தீர்க்கதரிசனம் ஊழியங்களை குறித்துக்கூட அடையாளமாக சொல்லப்பட்டிருக்கிறது, சபை காலம் முடிவடைகிற போது இந்த எக்காளப்பண்டிகை நிறைவேற்றப்பட போகிறது*
மத்தேயு 23:34
[34]ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; *அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;*
லூக்கா 11:49
[49]ஆதலால் தேவஞானமானது: *நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்.*
*மறுரூப மலையிலிந்து சீஷர்கள் இயேசுவோடு இறங்கி வரும்போது, அவரிடத்தில் கேட்கிறார்கள்.* 👇👇👇
மத்தேயு 17:10
[10]அப்பொழுது, அவருடைய சீஷர்கள் *அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.*
மத்தேயு 17:11-12
[11] *இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.*
[12]ஆனாலும், *எலியா வந்தாயிற்று* என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; *அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார்* என்றார்.
மல்கியா 4:5
[5] *இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.*
*தீர்க்கதரிசனம் என்பது ஒருமுறைதான் நிறைவேற வேண்டும் என்பது கிடையாது,ஒரு சில தீர்க்கதரிசனம் பலமுறை நிறைவேறக்கூடியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட வரிசையில் வருவது தான் யோவான்ஸ்நாகனை குறித்து ஆண்டவர் சொன்னது*
2 இராஜாக்கள் 2:9-14
[9]அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
[10]அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான்.
[11]அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
[12]அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.
[13]பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
[14]எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.
அதாவது எலியாவின் அபிஷேகம் முதலாவது எலியாவின் மேலும் பின்பு அந்த சால்வை எலிசாவின் மேலும் இருந்தது போலவே, ....அதற்கு பின்பு யோவான்ஸ்நாகன் மேலும் அந்த சால்வை ( அபிஷேகம்) தங்கினதாக நம்மால் பார்க்கமுடியும் ...இதைப் போலதான் எக்காளங்களின் பண்டிகை- சபை முடிவடைகிற இந்த கால கட்டத்தில் ...அந்த எலியாவுனுடைய சால்வை ( அபிஷேகம் ) இன்னோரு ஒருவர் மேல் தங்கும் என்பதை அநேக வேத வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள்.
*அந்த எலியாவின் அபிஷேகம் இறங்கிய ஒருவர் தீர்க்கதரிசனம் சொல்வதன் என்பது எக்காள பண்டிகையின் ஆரம்பமாக இருக்குமென்று சில வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்*
- Pastor Charles @Charles Pastor VT
[7/26, 12:49 AM] Elango: மத்தேயு 16:28
[28] *இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.*
மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வரும்போது என்ன சம்பவிக்கும் என்பதை மிக அழகாக சுட்டி காட்டுகிறதை மத்தேயு 17:1 குறிப்பிடுகிறது.👇👇
மத்தேயு 17:1
[1]ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,
இங்கு ஆறுநாள் என்பது தீர்க்கதரிசனமாக காட்டப்படுகிறது, தரிசனத்தில் அவர்களுக்கு சீக்கிரத்தில் நடைபெறபோகிறதை காட்டப்படுகிறது...அது சபையின் இறுதி காலத்தில் நடை பெறப்போகிற சம்பவத்தை தாவது எக்காள பண்டிகை நடைபெறப் போகிற சம்பத்திற்க்கு அடையாளமாக அது சொல்லப்படுகிறது.
*அங்கே மலையில் என்ன நடக்கிறது என்றால் மறுரூப மலையில் மறுரூபமாகும் ஒரு சம்பவம் நடக்கிறது..இது எக்காள பண்டிகையின் காலத்திலே நாம் மறுரூபமாக்கப்படுகிறதற்க்கு அடையாளமாக சொல்லப்பட்ட ஒரு வேத வசனம் ஆகும், இது ஒரு தீர்கதரிசன வசனமாகும், இந்த வசனத்தை நாம் நுணுக்கமாக ஆராய வேண்டும், அப்பொழுதான் அதன் உட்கருத்தை நாம் புரிந்துக்கொள்ள முடியும்*
நாம் நன்றாக கவனித்தால் இயேசுகிறிஸ்துவை சுற்றி பல மக்களும் 12 சீஷர்களும் இருந்தார்கள்..ஆனால் இயேசுவை தொடர்ந்தவர்கள் எல்லோருமே அந்த உயர்ந்த மலைக்கு போகவில்லை...
*இயேசுவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள், இயேசுவோடு அதிகமாக நெருங்கி பழகினவர்கள் மட்டும்தான், அந்த உயர்ந்த மலைக்கு கொண்டு சென்று அந்த மறுரூப அனுபவத்தை காட்டினார், இது எதற்கு அடையாளமாக இருக்கிறதென்றால்..இன்று கிறிஸ்தவர்களாக இருக்கும் எல்லோரும் அந்த மறுரூப அனுபவத்திற்க்கு செல்ல முடியாது*
எக்காள பண்டிகை, அதற்கு பிறகு நடக்கப்போகிற 1000 வருட அரசாட்சியில் பங்கு பெறப்போவதில்லை... அவரோடு நெருங்கி தொடர்பு வைத்திருப்பவர்கள் மட்டுமே.. அவருக்கு இணக்கமாக இருப்பவர்கள் மட்டுமே ... அந்த மறுரூப அனுபவத்திற்க்குள் செல்ல முடியும் என்பதை காட்டுவதற்க்காகவே தீர்க்கதரிசனமாக சித்தரித்து சொல்லப்பட்ட வேத வசனம் தான் இந்த வேத வசன பகுதி.
*உலக கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும், அவர்களை நெருக்கி போடுவதால் அவர்கள் வளராமல் போவார்கள் என்பதை கீழுள்ள வசனம் காட்டுகிறது*
மத்தேயு 13:22
[22]முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.

Post a Comment
0 Comments