Type Here to Get Search Results !

பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகை ( பிராயசித்த பண்டிகை ) என்பது என்ன❓

[7/26, 9:23 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 26/07/2017* ☀

1⃣ பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட இந்த *பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகை ( பிராயசித்த பண்டிகை ) என்பது என்ன❓* இந்த பண்டிகையை இஸ்ரவேலர் எப்படி அனுசரித்தனர்❓

2⃣     *பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகையின் ( பிராயசித்த பண்டிகை )    மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*

வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், *இன்றைக்கு *பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகையை ( பிராயசித்த பண்டிகை ) குறித்து தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*வேத தியானம் ( Web blog )* - 
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/26, 10:02 AM] Christopher Pastor VT: எபிரெயர் 9:  11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும்,
12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
13 அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,
14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

[7/26, 10:05 AM] Christopher Pastor VT: லேவியராகமம் 16:  3 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும்.
4 அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப் போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,
5 இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
6 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,
7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
8 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
9 கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக் கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
11 பின்பு ஆரோன் தனக்காவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக்கொன்று,
12 கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
13 தான் சாகாதபடிக்கு தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
14 பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
15 பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்தது போல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
16 இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
17 பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
18 பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின் மேல் சுற்றிலும் பூசி,
19 தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்.
20 அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
21 அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போக விடக்கடவன்.
23 ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு,
24 பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் ஜனங்களின் சர்வாங்கதகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.
26 போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
27 பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
28 அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
29 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும், உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.
30 கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.
32 அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு,
33 பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக்கூடாரத்துக்கும், பலிபீடத்துக்கும், பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
34 இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

[7/26, 11:42 AM] Christopher Pastor VT: சகரியா 13:  6 அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.
7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்பவைப்பேன்.
8 தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.
9 அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

[7/26, 11:43 AM] Christopher Pastor VT: சகரியா 9:  11 உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.
12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
13 நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.
14 அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.
15 சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.
16 அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.
17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.

[7/26, 12:13 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 26/07/2017* ☀

1⃣  பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட இந்த *பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகை ( பிராயசித்த பண்டிகை ) என்பது என்ன❓* இந்த பண்டிகையை இஸ்ரவேலர் எப்படி அனுசரித்தனர்❓

2⃣  *பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகையின் ( பிராயசித்த பண்டிகை )    மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*

வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், இன்றைக்கு *பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகையை ( பிராயசித்த பண்டிகை )* குறித்து தியானிக்கலாம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/26, 1:23 PM] Elango: *பிராயசித்த நாள் பண்டிகை -  லேவிராகமம் 16*

 உன்னதமான இப்பரிசுத்த நாளில் பிரதான ஆசாரியன் தனது பரிசுத்த ஆடைகளை உடுத்திக்கொண்டு ஆசாரிப்பு கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து பாவநிவிர்த்திக்காய் அடிக்கப்பட்ட காளையின் இரத்தத்தை தனக்காக கிருபாசனத்தின் மீது தெளிப்பான்.

 6. *பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,*

 14. *பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக, ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.*

 அவர் ,  மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து அவர் உயிருடன் காணப்படுவாரேயானால், அவர் தொடர்ந்து ஓராண்டு பிரதாண ஆசாரியராய் இருக்க தகுதி பெறுவார்.

அவர் மறுபடியும் இரண்டாம் முறையாய், வெள்ளாட்டின் இரத்தத்துடன் இஸ்ரவேல் ஜனங்களின் பாவநிவிர்த்திக்காய் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பார்.

அவர் மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே வரும்பொழுது தேசம் மன்னிப்பைப்பெறும். இஸ்ரவேல் ஜனங்கள் காக்கப்படுவர். வசனம் 30

30. *கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.*

[7/26, 1:27 PM] Elango: யூத நாள் காட்டியில் பிராயச்சித்தப் பண்டிகையானது, மிகமுக்கியமான பரிசுத்த நாளாய் விளங்கி வருகிறது. இந்தப் பண்டிகையி்ல் அவர்கள் தங்களை தேவனுக்கு முன்பாக பரிசோதித்து பார்க்கும் நாளாய் இருந்து வந்தது. *இது இஸ்ரவேல் தேசமானது கர்த்தரை ஏற்றுக்கொள்ளுவது சம்பந்தமாய் இருக்கிறது. இது மேசியாவின் இரண்டாம் வருகையுடன் சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது*

[7/26, 1:29 PM] Jeyaseelan Bro VT: 💥பாவ நிவாரணப் பண்டிகை💥
லேவியராகமம்: 23:29-32


*ஏழாம் மாதம் 10 ம் தேதியில் பாவ நிவாரண நாள் வருகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் இந்த நாள் மிகவும் பயபக்திக்குரிய நாளாகும்.*

முழு வருடத்திலும் இந்த ஒரே ஒரு தினத்தில் மட்டுமே பிரதான ஆசாரியன் தேவாலயத்தின் திரைச்சீலையின் வழியாக மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்துக்கடந்து, நடந்து முடிந்த ஆண்டு முழுவதும் எல்லா மக்களும் செய்த பாவங்களுக்காக முழு பாவ நிவாரணம் செய்வான்.

பாவ நிவாரணநாள் "பாவத்தை அகற்றும் நாள்". ஒரு நிறைவு பெற்ற பாவ நிவாரணமாக இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் நமக்காக ஜீவனை ஈந்தார். ஆனால், திருச்சபையோ பாவத்திலிருந்து முற்றிலும் விடுதலையாகி இந்த அனுபவத்தில் தொடர்ந்து நடக்கக் காணோம்.

பாவ நிவாரண நாளில் சிந்தப்படும் இரத்தத்துக்கும்  இரட்சிப்புக்கும் சம்பந்தமில்லை. பஸ்கா அவர்களுடைய பாவத்தோடு இடைபடாமல் பாவத்தை இரத்தத்தால் அப்படியே மூடிப்போட்டது. ஆனால், பாவ நிவாரணத்தில் சிந்தப்பட்ட இரத்தமோ இஸ்ரவேலரின் பாவங்களை முற்றிலும் கழுவி சுத்தப்படுத்தினது.

கூடாரப்பண்டிகைக்கு முன்பாக ஆசரிக்கப்படும் பண்டிகையே பாவ நிவாரணப் பண்டிகை. தேவனுடைய சரீரமாகிய சபை எப்படி கழுவப்பட்டு  பூரணத்தை நோக்கி கடந்து செல்ல வேண்டும் என்பதை இந்த பண்டிகை தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறது.

நீதிமொழிகள்: 4:18 - "நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிறசூரியப்பிரகாசம் போலிருக்கும்"

பாவ நிவாரண நாளில் ஆசரிப்பு: (லேவியராகமம்: 16:4)

*1. பிரதான ஆசாரியனுடைய வஸ்திரங்கள்: (லேவி: 16:4)*

பாவ நிவாரண தினத்தன்று பிரதான ஆசாரியன் தன் மகிமையும், அலங்காரமுமான வஸ்திரங்களை களைந்துவிட்டு, அதற்குப் பதிலாக பரிசுத்தமான சணல் நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்கு  சணல் நூல் சல்லடையைப் போட்டு, சணல் நூல் இடைக் கச்சையைக் கட்டி, சணல் நூல் பாகையைக் காத்துக் கொள்ள வேண்டும்.

சணல் - நீதியைக் குறிக்கும்.

*2. திரைச் சீலைக்குள்ளே :  (லேவி: 16:2)*

திரைச்சீலையானது பரிசுத்தஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கிறது. வருடத்தில் வரும் ஒரே ஒரு நாள் இந்த பாவ நிவாரண தினத்தில் மட்டுமே பிரதான ஆசாரியன், திரைச்சீலையின் வழியாக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செக்கின்னா மகிமைக்குள் நிறைந்திருக்கும் தேவ பிரசன்னத்தில் பிரவேசிப்பான். (எபிரேயர்: 9:7-9; 10:19,20; 6:19,20) கர்த்தரின் கிருபாசனத்தண்டையிலே 2 கேரூபீன்கள் மத்தியில் ஒரு மேகத்தில் தோன்றுவார்.

எந்த இஸ்ரவேலனாவது, எந்த நேரத்திலாவது அங்கு பிரவேசித்து விட்டால் அவன் அங்கு தானே மரித்து விடுவான்.

*3. பலியின் காளை:  (லேவி: 16:6,11-14)*

 பிரதான ஆசாரியனாகிய ஆரோன் சகல ஜனங்களின் பாவ நிவாரணத்துக்காக மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் முன்பு, தன்னுடைய சொந்த பாவங்களுக்காக முதலில் பரிகாரம் தேட வேண்டும்.  தனது பாவங்களுக்காக முதலில் ஒரு காளையை பலி செலுத்துவான். பின் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து அடிக்கப்பட்ட அந்த காளையின் இரத்தத்தை உடன்படிக்கைப் பெட்டியின் முன்பாக திரையிலும் கிருபாசனத்திலும் தெளிப்பான்.

*4. இரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள்:(லேவியராகமம்: 16:5-10,20-22)*

ஜனங்களால் கொண்டு வரப்பட்ட இரண்டு ஆடுகள் மேல் பிரதான ஆசாரியன் சீட்டுப் போடுவான். ஒன்று கர்த்தருக்கென்று தெரிந்து கொள்ளப்படும். மற்றது போக்காடாக விடப்படும்.

*கர்த்தருடைய ஆடு:*

கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவை பாவ நிவாரண பலியாக சேரப் பண்ணுவார்கள். அந்த இரத்தம் திரைச் சீலைக்குள் கொண்டு செல்லப்பட்டு, கிருபாசனத்திற்கு முன்பு ஒருமுறை தெளிக்கப்படும். இப்படியாக மகா பரிசுத்த ஸ்தலத்தில் பாவப் பரிகாரம் செய்யப்படும்.

*போக்காடு:*

பிரதான ஆசாரியன் தன் கைகளை ஆட்டின் மீது வைத்து, இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை அதன் மீது சுமத்துவான். அப்பொழுது அந்தப் பாவங்கள் ஆட்டின் மீது இறங்கும்.

(கவனியுங்கள்: உங்கள் தலையின் மீது கைவைத்து ஜெபிக்கிறவர்கள் எப்படிப்படட்டவர்கள் என்பதைக் குறித்து மிக கவனமாயிருக்க வேண்டும்.)

ஜீவனுள்ள அந்த ஆடு வனாந்திரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அது போக்காடாக விடப்படும். மக்களுடைய பாவங்களை சுமப்பதற்கு இது அடையாளம். இஸ்ரவேல் ஜனங்கள் இவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறார்கள்.

குறிப்பு: இரட்சிப்புக்காக கிறிஸ்துவண்டை வரும் பாவிக்கு கிடைக்கும் பாவமன்னிப்பு அல்லது பாவ நிவாரண தினத்தன்று கர்த்தர் தமது ஜனத்தின் பாவத்தோடே இடைப்பட்டு பாவங்களை கழுவி சுத்திகரிக்கிறார்.

*5. தாழ்மைப்படுத்தும் நாள்:  லேவியராகமம்: 16:31,23,27)*

ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் இந்தப் பரிகாரம் செய்யப்படும். 10 என்பது சோதனை, பாடுகள், துயரங்களைக் குறிக்கும். (தானியேல்: 1:12; வெளிப்படுத்தல்: 2:10)  இஸ்ரவேல் ஜனங்கள் 10 விதமான சோதனைகளுக்குள்ளாய் வனாந்திரத்தில் கடந்து சென்றார்கள். பெந்தேகோஸ்தே நாளுக்கு முன் சீஷர்கள் 10 நாட்கள் சோதிக்கப்பட்டார்கள்.

கர்த்தர் நம்மைச் சுத்திகரிக்கவும்,பூரணப்படுத்தவும் அநேகப் பாடுகள், சோதனைக்கூடாய் நடத்துகிறார். ஒவ்வொரு சோதனையும் இன்னும் பெரிய சோதனைகளுக்குள்ளும், பாடுகளுக்குள்ளும் கொண்டு செல்கிறது. (எரேமியா: 2:6). பாடுகளின் வழியாகக் கடந்து பரிசுத்தத்தில் முன்னேறக்கூடிய காட்சி இது. இப்படிப்பட்ட அனுபவங்கள் வழியாக சிலுவையில் அறையப்பட்ட வாழ்க்கைக்குள் கடந்து செல்லுகிறோம்.

பாவ நிவாரண நாள் சபைக்கு பாடுகளும் சோதனைகளும் நிறைந்த நாள். கர்த்தர் சபையினரை  பூரணத்துடன் வழிநடத்தும் நாள். சங்கீதம்: 119:67,71 - "நான் உபத்திரவப்படுமுன் வழி தப்பி நடந்தேன்", "நான் உபத்திரவப்பட்டது நல்லது; அதனால், உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன்."

பாவ நிவாரணத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி உபவாசத்திலிருந்து தங்கள் ஆத்துமாக்களை பாடுகளுக்குட்படுத்தினார்கள். அப்போஸ்தலர்: 27:9- ல் கூறப்பட்டுள்ள உபவாசம் பாவ நிவாரண தினத்தில் குறிப்பிடப்படுகிறது.

http://nesarin.blogspot.in/2012/12/blog-post_17.html?m=1

[7/26, 1:33 PM] Elango: பிராயச்சித்தப் பண்டிகையில் , நாளில் பிரதாண ஆசாரியன் கையிலிலுள்ள பாத்திரத்தில் இரத்தத்துடன், மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பான். தனக்காக ஒருமுறையும், தேசத்திற்காக ஒரு முறையும் பிரவேசிப்பான். (எபிரெயர்9:6-7).அவனது பிரவேசம் கிறிஸ்துவின் தியாக பலியை பிரதிபளிக்கிறது.

*இப் பண்டிகையின் நிறைவேறுதல் கிறிஸ்துவின தியாகபலியாகும். பாவமற்ற பழுதில்லா பலியாக ஒரேமுறை கிறிஸ்து சர்வ லோகத்தின் பாவத்திற்கான காணிக்கையாக தன்னை ஒப்புக்கொடுத்தார்.*

11. *கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு,* கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

12. *வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.*

13. அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,

14. *நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!* Book=Hebrews&Chapter=9

[7/26, 1:33 PM] Elango: 6. இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.

7. *இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.*

[7/26, 1:35 PM] Elango: *பண்டிககளின் சுருக்கம்*

பஸ்கா பண்டிகை: கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பஸ்கா தினத்தில் நிறைவேறியது.

புளிப்பில்லா அப்பப்பண்டிகை: புளிப்பில்லா அப்பப்பண்டிகைநாளில் கிறிஸ்து அடக்கம்பண்ணப்பட்டபோது நிறைவேறியது.

முதற்பலனை சேர்க்கும் பண்டிகை: முதற் பலனை சேர்க்கும் நாளில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த போது நிறைவேறியது.

பெந்தெகொஸ்தே பண்டிகை: யூதர்களின் யுகம் நிறைவடைந்த, சபை பிறந்த நாள் - பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது.

எக்காளப்பண்டிகை : சபை எடுத்துக்கொள்ளப்படும்போது நிறைவேறும்.

*பிராயச்சித்தப்பண்டிகை: கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது நிறைவேறும்.*

கூடாரப்பண்டிகை: கிறிஸ்துவின் ஆயிரவருட ஆழுகையின் போது நிறைவேறும்.

[7/26, 8:45 PM] Elango: பெந்தேகோஸ்தே பண்டிகைக்கும், எக்காள பண்டிகைக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கிறது.. 4 மாதங்கள் இடைவெளி இருக்கிறது..

இந்த 4 மாத இடைவெளியில் தான் திராடௌசை ரசம் அறுப்பு வேலைகள்..எல்லாம் நடைபெறும்.

இந்த நீண்ட 4 மாத இடைவெளி எதைக் காட்டுகிறது என்றால், இப்போது இருக்கிற நிகழ்காலத்தையே குறிக்கிறது.

அதாவது சபையில் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை, பரிசுத்த ஆவியானவர் இந்த நாட்களில் கூட்டி சேர்க்கிற ஆண்டவராக காணப்படுகிறார்.

இந்த இஸ்ரவேல் ஜனங்கள், புறஜாதி ஜனங்களிடையே சிதறடிக்கப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள்.

ரோமர் 11:25
[25] *மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.*

கிருபையின் காலம் முடிவடையும் போது, இஸ்ரவேல் ஜனங்கள் எக்காளப்பண்டிகையை ஆசரிக்கும்படி  பூமியில் 4 திசைகளிலிமிருந்து இஸ்ரலுக்கு வருவார்கள்.

மத்தேயு 24:31
[31] *வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.*

- Pastor Christopher @⁨Christopher Pastor VT⁩

[7/26, 8:53 PM] Elango: 7 ம் முதலாம் தேதியில் நடக்கிற அந்த எக்காளப்பண்டிகை...ஓய்வுநாளாகிய அமாவாசையில் இந்த பண்டிகை நடக்கிறது...

*7 ம் மாதம் 10 ம் தேதியில் பாவ நிவாரண பண்டிகை நடைபெறுகிறது*

அதற்கு பிறகு அதே மாதம் 15 ம் தேதி ஓய்வு நாளில் கூடார பண்டிகை ஆரம்பித்து, 22 ம் தேதி முடிவடைகிறது.

அந்த முடிவு நாளும் ஓய்வுநாளாகவே காணப்படுகிறது. இதற்கெல்லாம் ஆரம்பம் எதுவென்றால் எக்காளப்பண்டிகை தான்.

*பண்டிகைகளளுக்கெல்லாம் ஆரம்பம் எக்காள பண்டிகையாகத் தான் இருக்கிறது*

வனாந்திர பயணத்திலே, இரண்டு பூரீகைகளை செய்யென்று ஆண்டவர் இஸ்ரவேலருக்கு கட்டளையிடுகிறார்.

எண்ணாகமம் 10:2-7
[2] *சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப்பூரிகைகளைச் செய்துகொள்வாயாக;* அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
[3]அவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக்கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
[4] *ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.*

[5] *நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.*

[6]அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்.
[7]சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதவேண்டியதேயன்றி பெருந்தொனியாய் முழக்கவேண்டாம்.

- Pastor Christopher @⁨Christopher Pastor VT⁩

[7/26, 9:22 PM] Elango: இந்த எக்காள பண்டிகை இரண்டு பண்டிகைகளின் இடையில் வருவதன் பொருள் என்னவென்றால் - கிருபையின் கால முடிவில் இரண்டு சம்பவங்கள் நடைபெறுவதாக இருக்கிறது.

1⃣ சபை எடுத்துக்கொள்ளப்படுதல்

2⃣ இஸ்ரவேலர் தங்கள் சொந்த தேசத்தில் வந்து சேருவார்கள்.
1 தெசலோனிக்கேயர் 4:16
[16]ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

1 கொரிந்தியர் 15:51-52
[51]இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
[52]எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.

*கிறிஸ்துவுக்குள் மரித்தர்கள் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், இஸ்ரவேலர் தன் சொந்த தேசத்திற்க்கு திரும்பி வருவார்கள்*

- Pastor Christopher @⁨Christopher Pastor VT⁩

[7/26, 9:35 PM] Elango: இந்த பாவ நிவாரண பண்டிகை என்பது வருஷம் தோறும் இஸ்ரவேல் ஜனங்கள், தங்களை பரிசுத்தமாக்கும்படி இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

*இந்த பிராயசித்த ( பாவ நிவாரண பண்டிகை)  என்பது கிறிஸ்துவுக்குள் நிறைவேறி விட்டது, ஏனென்றால் பிரதான ஆசாரியனாகிய கிறிஸ்து, தனக்கான பாவ நிவாரண பலியை செலுத்தாமல், நமக்காக பாவ நிவாரண பலியானார்*

இந்த பண்டிகையானது எக்காள பண்டிகைக்கும், கூடார பண்டிகைக்கும் நடுவில் காணப்படுவதாக இருக்கிறது. அதாவது இயேசுவின் இரண்டாம் வருகைக்கும், 1000 வருட அரசாட்சிக்கும் இடையில் காணப்படுகிறதாயிருக்கிறது.

இந்த இடை காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் பரிசுத்தமாக்கப்படுதலை நாம் இதன் மூலமாக தெரிந்துக்கொள்ள முடிகிறது.

- Pastor. Christopher @⁨Christopher Pastor VT⁩

[7/26, 9:49 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 26/07/2017* ☀

1⃣  பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட இந்த *பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகை ( பிராயசித்த பண்டிகை ) என்பது என்ன❓* இந்த பண்டிகையை இஸ்ரவேலர் எப்படி அனுசரித்தனர்❓

2⃣  *பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகையின் ( பிராயசித்த பண்டிகை )    மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*

வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், இன்றைக்கு *பாவ நிவிர்த்தி நாளின் பண்டிகையை ( பிராயசித்த பண்டிகை )* குறித்து தியானிக்கலாம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/26, 10:57 PM] Elango: *பாவ நிவிர்த்தி செய்யும் பண்டிகை*

லேவியராகமம் 23:26-32
[26]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
[27] *அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.*

[28] *அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.*

[29]அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

[30]அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.

[31]அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை.

[32]அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

இப்பண்டிகையானது,  7ம் மாதம் 9ம் தேதி சாயங்காலம் ஆரம்பித்து..மறுநாள் அதாவது 10 ம் தேதி சாயங்காலம் வரைக்கும் கொண்டாடப்பட்டது.

*அது அவர்களுக்கு பாவ நிவிர்த்திசெய்யும் நாளும், சபை கூடும் பரிசுத்த நாளுமாக இருத்தல் வேண்டும், அந்த நாளில் அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை தாழ்மைப்படுத்தி, தகன பலி செலுத்த வேண்டும், அந்நாளில் யாரும் வேலையும் செய்யக்கூடாது*

லேவியராகமம் 23:29
[29]அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

இப்பண்டிகையானது கர்த்தர் தம்முடைய இரகசிய வருகையில் மணவாட்டி சபையை தம்மிடத்தில் சேர்த்துக்கொண்ட பிறகு நடக்கும் சம்பவத்தை குறிக்கிறது.

பரிசுத்தவான்களாகிய நாம் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, பூரணமாக்கப்படாதவர்களான சபையில் மீதியானவர்கள் கைவிடப்படுவிடப்படுவார்கள்.

இருப்பினும் அவர்கள் கர்த்தருடைய இரகசிய வருகைக்கு பின்பதான மூன்றரை வருட உபத்திர காலத்தில்,  இரத்த சாட்சிகளாக மரித்தால் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவார்கள்.

மிருகத்தின் நாமத்தையாவது அதன் முத்திரையாவது, தங்கள் மேல் தரித்துக்கொள்ளாமல் இருப்பதாலும், எல்லா உபத்திரவத்தையும் சகிப்பதினாலும் முடிவிலே இரத்த சாட்சியாகவும் மரிப்பதாலும், அவர்கள் இந்த பாவ நிவிர்த்தி செய்யும் பண்டிகையை ஆசரிக்கின்றனர்.

- பிஷப் ஜாண் ராஜதுரை @⁨John Rajadurai Bishop VM⁩

[7/26, 11:08 PM] Elango: *பாவ நிவாரண அல்லது பாவ நிவிர்த்தி, அல்லது பிராயசித்த பண்டிகை*

பாவ நிவிர்த்தி என்கிற இந்த வார்த்தைக்கு எபிரேய வார்த்தை -.கப்பாஃர் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் அர்த்தம் மூடுதல் என்று பொருள்படும்.

சங்கீதம் 32:1
[1]எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, *எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.*

சங்கீதம் 85:2
[2]உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, *அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.* (சேலா).

☝☝தாவீது இந்த இரண்டு வசனங்களிலே கப்பாஃர் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பார்.

இதன் கப்பாஃர் என்ற எபிரேய வார்த்தைக்கு இணையான வார்த்தை நாம் பார்த்தோமானால் சமாதான படுத்துதல், தணித்தல் ( ஆற்றுவது) , மன்னித்தல்,  சாந்தப்படுத்துதல், ஒப்புரவாக்குதல் என காணமுடிகிறது.

-.Pastor Charles @⁨Charles Pastor VT⁩

[7/26, 11:15 PM] Elango: இந்த கப்பாஃர் என்ற வார்த்தையை நாம் பொருள் கொள்ள வேண்டுமானால், , எதிரியாக இருந்தவர்கள் ... ஒன்றாக்க படுதல் என்ற வார்த்தை இதற்கு சரியாக இருக்கும்ம்

ரோமர் 5:10
[10] *நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.*

நமக்கும் தேவனுக்கும் இடையில் அக்கிரமம் பாவம் என்கிற அந்த ஒரு பிரிவினையை நீக்கி நம்மை, தேவனோடு ஒஒப்புரவாக்குவது தான் அந்த பாவ நிவிர்த்தியை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

இதை வேறு வார்த்தையில் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், தேவனையும் மனிதனையும் பிரித்த அக்கிரமங்களை பலியின் இரத்தத்தினால், அல்லது பலியின் கிரயத்தினால்,  செலுத்தி அதை நிவிர்த்தி செய்து,  தேவனையும் மனிதனையும் ஒப்புரவாக்க பயன்படுத்தப்பட்ட காரியம் தான் இந்த பாவ நிவிர்த்தி.

- Pastor Charles @⁨Charles Pastor VT⁩

[7/26, 11:31 PM] Elango: இந்த பாவ நிவிர்த்தியினால் எபிரேயர் 9:7 சொல்கிற படி👇🏿👇🏿

எபிரெயர்  9

7: இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒரு தரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
But only the high priest entered the inner room, and that only once a year, and never without blood, which he offered for himself and for the sins the people had committed in ignorance. (NIV)

வருஷத்திற்க்கு ஒரே ஒரு நாள், பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்க்கு போவதற்க்கு அனுமதித்திருந்தார்...

*கர்த்தர் கொடுத்த கட்டளையில் ஏதாவது ஒன்றாகிலும் அங்கு தவறாக செய்ப்பட்டாலோ, தவறுதல் நடந்தாலோ, பிரதான ஆசாரியன் மரிக்க வேண்டியது தான், பிரதான ஆசாரியனுக்கு ஒரு பெரும் ஆபாயகரமான நாள் இந்த நாள் - பாவ நிவிர்த்தி நாள்.

பரிசுத்த ஸ்தலத்தில் அந்நிய அக்கினியை கொண்டு வந்த ஆரோனின் இரண்டு குமாரர்களையும் கர்த்தர் அழித்துப் போட்டார்.

லேவியராகமம் 10:1-2
[1]பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
[2] *அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.*🔥🔥🔥🔥🔥🔥

ஆகையால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழையும் ஆசாரியன் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் கவனிக்க வேண்டும்.

லேவியராகமம் 16:2
[2] *கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.*

இந்த பாவ நிவிர்த்தி நாளில், வருஷத்திற்க்கு ஒரு நாள் 2 முறை மகா பரிசுத்த ஸ்தலத்திற்க்குள் பிரதான ஆசாரியன் போவதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

1⃣ பிரதான ஆசாரியன்,  தன்னுடைய பாவங்களுக்காக இரத்தத்தை கொண்டு போய் தெளிப்பதற்க்கும்,

2⃣ மக்களின் பாவத்திற்க்காகவும் இன்னொரு முறை அவன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்க்குள் போக வேண்டும்.

வருஷத்திற்க்கு ஒருநாள் இப்பப்டி இருமுறை மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரதான ஆசாரியன் நுழையும் நாள் தான் - பாவ நிவிர்த்தி செய்யும் பண்டிகை நாள்.

- Pastor Charles @⁨Charles Pastor VT⁩

[7/27, 12:42 AM] Elango: பழைய ஏற்பாட்டிலே பிரதான ஆசாரியன் ஆடு அல்லது மாடு இரத்தத்தை கிருபாசனத்தின் மேலே, அதை தெளித்து ஜனங்களுக்காக பாவ நிவிர்த்தி செய்யும் சம்பவம், இயேசுகிறிஸ்து நமக்காக தம்முடைய ஜனங்களுக்காக பிரதான ஆசாரியனாக இருந்து இரத்தம் சிந்தி, இரத்தம் தெளித்தற்க்கு அடையாளமாக சொல்லப்பட்டிருக்கும்.

 எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:1
[1]இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் *பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக்* கவனித்துப்பாருங்கள்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:15-16
[15 ] *நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.*

[16]ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

*இந்த பாவ நிவர்த்தி நாளன்று என்ன செய்வார்கள் என்று சொன்னால், ஒரு வயதான இரண்டு வெள்ளாட்டு கடாவை கொண்டு வருவார்கள்  இரண்டு அம்சங்கள் நிவிர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்க்காக...*👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

1⃣ முதலாவது பாவத்தின் முதல் அம்சம் - தண்டனை

2⃣ இரண்டாவது குற்றம் செய்த ஞாபகம்,  செய்த குற்றத்தை உறுத்திக்கொண்டேயிருக்கிறவை.

இந்த இரண்டும் நிவிர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்க்காக ஒரு வயதான இரண்டு வெள்ளாட்டு தெரிவு செய்ய சொல்கிறார்.

*இரண்டு வெள்ளாட்டுக்கிடாவில், பாவத்தின் தண்டனைக்காக பிரித்ததெடுக்கப்படுகிறது, 👇🏼👇🏼👇🏼

எசேக்கியேல் 18:20
[20] *பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.*

அதேப்போல

ஆதியாகமம் 2:17
[17] *ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.*

ரோமர் 6:23
[23] *பாவத்தின் சம்பளம் மரணம்;* தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

இப்படி பாவத்திற்க்கு ஒரு தண்டனை உண்டு, அது நிவிர்த்தி செய்ய வேண்டுமென்றும் ... இரண்டில் ஒன்றை பாவ நிவிர்த்திக்கென்று பலியிடப்பட்டு,, பிரதான ஆசாரியன் உடன்படிக்கை பெட்டியிலே கிருபாசனதண்டையிலே...இரத்தத்தை தெளிப்பான்.

லேவியராகமம் 16:6
[6]பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,

எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:7
[7]இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒரு தரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.

லேவியராகமம் 16:14
[14]பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.

*பாவத்திற்க்கு நிவராணமாக இந்த வெள்ளிட்டுக்கிடா செலுத்தப்பட்டாகி விட்டது என்பதற்க்கு சாட்சியாக இரத்தம் செலுத்தப்படுகிறது*

லேவியராகமம் 17:11
[11] *மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.*

பாவத்தை நிவர்த்தி செய்வதற்க்காக அந்த முதல் வெள்ளாட்டுக்கிடா,  கர்த்தருடைய சமுகத்தில் கொல்லப்பட்டு அந்த இரத்தம் தெளிக்கப்படுகிறது.

*நாம் பாவம் செய்த பிறகும் கூட அந்த பாவம் செய்த குற்ற உணர்வு,  நம் மனசாட்சியை விட்டு போகாமல் நம்மை உணர்த்தும்,  அதை நிவிர்த்தி செய்வதற்க்காக தான் இரண்டாவது வெள்ளாட்டுக்கிடா* தேர்ந்தெடுக்கப்படுகிறது.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:14
[14] *நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!*

இரண்டாவது நிலையிலிருந்து நாம் வெளியே வரும் போது தான் தேவனிடத்தில் இன்னும் கிட்டி சேர முடியும்.

அதனால் தான் நாம் செய்த பாவத்தையும் மறந்து போக தக்கதாக அந்த வெள்ளாட்டுக்கிடாவை பொருத்தபட்டது.

இந்த பாவமான இருதய உணர்வுகளை குறித்து ...👇🏼👇🏼

1 யோவான் 3:21
[21 ] *பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,*
குற்ற உணர்வு நம்மை தேவனிடத்தில் கிட்டி சேர விடாது. குற்றமில்லாத இருதய உணர்வே நம்மை தேவனை கிட்டி சேர முடியும்.

*இரண்டாம் ஆடு அந்த வார்த்தை எபிரேய மொழியிலே - அசாசேல் என்று அழைக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் புறப்படும் வெள்ளாடு அல்லது மறைந்து போகும் வெள்ளாடு என்று சொல்லப்பட்டுள்ளது.*

*இந்த இரண்டாவது ஆட்டிற்க்கு என்ன சம்பவிக்கும்* 👇🏼👇🏼👇🏼

லேவியராகமம் 16:21-22
[21]அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.

[22]அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போக விடக்கடவன்.

*அதாவது இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை, ஆட்டின் தலைமேல் வைத்து அறிக்கை செய்து , அதை வனந்தரத்திலே ஆளில்லாத இடத்திலே குடியில்லாத இடத்திலே அதை அனுப்பி விடுவார்கள் அது மறைந்து போகும், பாவத்திற்க்கான தண்டனை நிறைவேற்றின பிறகு , குற்ற மனசாட்சி எல்லாம் நம்மை விட்டு கடந்து போய் விடும் என்கிற அர்த்தத்திலே அந்த காரியத்தை பழைய ஏற்பாடு காலத்திலே அனுமதித்தார்.

- Pastor Charles @⁨Charles Pastor VT⁩

Post a Comment

0 Comments