Type Here to Get Search Results !

பெந்தேகோஸ்தே பண்டிகை என்றால் என்ன❓

[7/24, 8:48 AM] Elango: 🎁 *இன்றைய வேத தியானம் - 24/07/2017* 🎁

1⃣ பெந்தேகோஸ்தே பண்டிகை என்றால் என்ன❓பெந்தேகோஸ்தே என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன❓

2⃣பெந்தேகோஸ்தே பண்டிகையை எப்போது,  எப்படி எதற்காக கொண்டாடப்பட்டது❓

3⃣பெந்தேகோஸ்தே பண்டிகைக்கும், இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு என்ன❓

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையாக தியானிக்கலாம், இன்றைக்கு பெந்தேகோஸ்தே பண்டிகையை மட்டும் தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*வேத தியானம் ( Web blog )* - 
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


[7/24, 12:04 PM] Charles Pastor VT: 20 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே *ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும்,* கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
பிலிப்பியர் 1:20

[7/24, 12:18 PM] Charles Pastor VT: 20 *உம்முடைய (சாட்சியாகிய) ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது,* நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
அப்போஸ்தலர் 22:20

13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப்பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு *உண்மையுள்ள (சாட்சியான) அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட* நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:13

[7/24, 1:12 PM] Elango: 🎁 *இன்றைய வேத தியானம் - 24/07/2017* 🎁

1⃣ பெந்தேகோஸ்தே பண்டிகை என்றால் என்ன❓பெந்தேகோஸ்தே என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன❓

2⃣பெந்தேகோஸ்தே பண்டிகையை எப்போது,  எப்படி எதற்காக கொண்டாடப்பட்டது❓

3⃣பெந்தேகோஸ்தே பண்டிகைக்கும், இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு என்ன❓

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையாக தியானிக்கலாம், இன்றைக்கு பெந்தேகோஸ்தே பண்டிகையை மட்டும் தியானிக்கலாம்*

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/24, 3:21 PM] Elango: *பெந்தேகோஸ்தே என்றால் ஐம்பது என்று அர்த்தம். பழைய ஏற்பாட்டில் தேவன் இதை 7 வாரங்கள் அதாவது 49 நாட்கள் நினைவு கூற செய்தார்.*

15. நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, *ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,*
16. *ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி*, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.

17. நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,

18. அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,

19. வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள்.

20. அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.

21. அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.லேவியராகமம் 23:15-21

[7/24, 3:25 PM] Elango: *சபை பெந்தெகொஸ்தே நாளில் துவங்கியது என்றும்*

1. *பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.*
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
4. *அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.*

*கிறிஸ்துவின் இரகசிய வருகையில், சபை எடுத்துக்கொள்ளப்படும் நாளில் பூமியிலிருந்து அகன்று போகும். *

16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், *அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.*

1 தெசலோனிக்கேயர் 4:17

[7/24, 3:29 PM] Elango: பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பண்டிகைகள் யாரும் கிறிஸ்துவைப் பற்றியதே, அவைகளின் பொருள் கிறிஸ்துவை பற்றியதே என்று சொன்ன பவுல், பெந்தெகொஸ்தெ பண்டிகைக்கு எருசலேமில் இருக்க வேண்டுமென்று ஏன் தீர்மானித்தார்? பண்டிகையை அனுசரிக்கவா? அல்லது வேறு காரணமா?

16. *பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம்,* தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு வந்தோம்.

[7/24, 3:36 PM] Elango: *அறுப்பு மிகுதி வேலயாட்களோ குறைவு என்று கூறிய ஆண்டவர், அறுப்பின் ஆட்கள் பலப்படவும், சபை பெருகி வளரவும், இரட்சிப்பின் அறுவடை நிறைவாகும் படியாகவும்  - ஆவியானவரை பொழுந்தருளினார் இந்த பெந்தெகொஸ்தே நாளில்.*

இந்த 7  வாரப்பண்டிகையை யூதர்கள் தங்கள் அறுவடைக்காக பயிரிடுவார்கள். அதை போல புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் இரண்டாம் வருகை அறுவடைக்கு ஆயத்தமாக பெந்தேகொஸ்தே நாளில் இறங்கியதாக கருதப்படுகிறது.

[7/24, 4:19 PM] Elango: 🎁 *இன்றைய வேத தியானம் - 24/07/2017* 🎁

1⃣ பெந்தேகோஸ்தே பண்டிகை என்றால் என்ன❓பெந்தேகோஸ்தே என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன❓

2⃣பெந்தேகோஸ்தே பண்டிகையை எப்போது,  எப்படி எதற்காக கொண்டாடப்பட்டது❓

3⃣பெந்தேகோஸ்தே பண்டிகைக்கும், இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு என்ன❓

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையாக தியானிக்கலாம், இன்றைக்கு பெந்தேகோஸ்தே பண்டிகையை மட்டும் தியானிக்கலாம்*

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/24, 4:50 PM] Jeyaseelan Bro VT: 💥பெந்தெகொஸ்தே பண்டிகை:💥
 (லேவியராகமம்23:15-21)

பென்டா (Pente) - ஐம்பது - இப்பண்டிகை எப்பொழுதும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்கின்றது, முதற்பலன்களை சேர்க்கும் பண்டிகையிலிருந்து ஐம்பதாவது நாளில் இப்பண்டிகை ஆசரிக்கப்படுகிறது,

 பொதுவாக இப்பண்டிகை மே அல்லது ஜூன் மாதத்தில் வருகிறது. (லேவி.23:15)
கி.பி. 70 ல் சரித்திரபூர்வமாய் யூதர்கள் இந்நாளில் சிதறடிக்கப்பட்டனர்.

 இதன் பின்னர் அவர்கள் இப்பண்டிகையை ஆசரிக்கமுடியாமல் வெகுகாலம் தங்கள் தேசத்திற்குப் புறம்பே இருந்தனர். 

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வருஷத்தில், கொண்டாடப்பட்ட பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது, எருசலேமில், பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்துடன் சபையுகம் ஆரம்பமானது.  (அப்போஸ்தலர்2:1-4).

*பெந்தெகொஸ்தே பண்டிகை நாளில் 3,000 பேர் மறுபடி பிறந்தனர்,*

 *நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபோது 3,000 பேர் கொல்லப்பட்டனர்.*

[7/24, 6:08 PM] Sam Jebadurai Pastor VT: *பெந்தேகோஸ்தே நாள்*
Acts 2:1-4
[1]Now when the day of Shavu`ot had come, they were all with one accord in one place.
[2]Suddenly there came from the sky a sound like the rushing of a mighty wind, and it filled all the house where they were sitting.
[3]Tongues like fire appeared and were distributed to them, and one sat on each of them.
[4]They were all filled with the Holy Spirit, and began to speak with other languages, as the Spirit gave them the ability to speak.
Acts            2:1-4 (TBSI)  "பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்."
"அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று."
"அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது."
"அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்."

முதன்முறையாக பெந்தேகோஸ்தே என்ற வார்த்தை இங்கு வருகிறது. மேலும் புதிய ஏற்பாட்டில் இரண்டு இடங்களில் இந்த வார்த்தை வருகிறது.

Acts            20:16  "பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்க வேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம்."
1 Corinthians   16:8  ஆகிலும் பெந்தெகோஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.

எங்கே இருந்து இந்த பண்டிகை வந்தது?
எதற்காக நாம் பெந்தேகோஸ்தே சபையார் என அழைக்கப்படுகிறோம்?

Leviticus       23:15-16  "நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,"
"ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்."

பழைய ஏற்பாட்டில் பெந்தேகோஸ்தே பண்டிகை வாரங்களின் பண்டிகை,சேர்ப்பு கால பண்டிகை என்று பெயர் உடையது. எபிரேயத்தில் வாரங்கள் என அர்த்தம் கொள்ளும் ஷவோத் என அழைக்கபடுகிறது.

வாற்கோதுமையை 49 நாட்களில் எண்ணி செலுத்த வேண்டும். சீனாயில் தேவன் பேசினதை கேட்க அவருக்கு சொந்த ஜனமாக இருக்க,தோராவை  பாக்கியமாக இஸ்ரவேலர் தங்களுக்கு பெற்ற நாள். எல்லா ஆசிர்வாதங்களும் பொறுப்புகளை கொண்டு வருகிறது.தோரா ஆசிர்வாதம் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு வந்த நாள்.

7x7=49 அளவு என்பதற்கான எபிரேய வார்த்தை மிட்தா םדה இதன் எண் மதிப்பு 49. ஆகவே 49 என்பது நல்ல ஒரு அளவு பூரண அளவு என்பதை குறிக்கிறது.

50 என்பதற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழலுக்குள் செல்லுதல் என அர்த்தம்.  From natural to Super Natural. எகிப்தில் இருந்து மீட்கபட்ட இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்திரத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை கண்டார்கள்.பஸ்காவில் துவங்கிய விடுதலை பயணம் தொடர்ந்து நடத்த சீனாய் வனாந்திரத்தில் தோரா கொடுக்கப்பட்டது.

இதே ஒரு ஒழுங்கு முறையை தேவன் யூபிலி வருடத்திற்கும் கொடுத்து உள்ளார்.
49வருடங்கள் முடிந்து 50 ம் வருட துவக்கத்தில் ஆட்டுக்கொம்பினால் ஆன ஷோபார் ஊதப்படும். அப்போது இஸ்ரவேலில் அடிமைகள் விடுதலை ஆவார்கள். காணியாட்சிகளை திரும்ப பெறுவர்.

Leviticus       25:10  "ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்."

எண்7 பூரணத்தை குறிக்கும் எண்ணாகும்.
50 என்பது மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுகையை குறிக்கும்.

Revelation      2:26  "ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்."

2 Timothy       2:12  "அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;"

பெந்தேகோஸ்தே நாள் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளின் உச்சமாக இருக்கிறது.

உடன்படிக்கை நாள்..
திருமணம் ஒரு உடன்படிக்கை
உறுதிவாக்குகள்(vows) பகிர்ந்து கொள்ளப்படும் நாள். இந்த நாளில் நாங்கள் கீழ்படிவோம் என யெகோவாவோடு உடன்படிக்கை செய்த நாள் இது...

இஸ்ரவேலர் தங்கள் உணவில் பால் சார்ந்த உணவை அதிகம் இந்த பண்டிகையில் உண்ணுவர். பால் தேவ வசனத்தை குறிக்கிறது. வசனத்தை பெற்ற நாள் இது...

3300 வருடங்களுக்கு முன்பு தோராவை இஸ்ரேல் ஜனங்களுக்கு யெகோவா பரிசாக கொடுத்த நாள்.

ஜனங்கள் பத்து கட்டளைகளை பரிசாக ஏற்றுக்கொண்ட  நாள்

Colossians      2:16-17  "ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக."
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

எப்படி பெந்தேகோஸ்தே பண்டிகை நிழலாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இது எங்கே வருகிறது என்பதை காணலாம்.

பெந்தேகோஸ்தே என்ற கிரேக்க பதத்திற்கு 50 என அர்த்தம் ஆகும். பஸ்கா பண்டிகைக்கு பின்னர் 50 வது நாள்  இந்த பண்டிகை வருவதால் இதற்குஇப்பெயர்.
இது ஒரு யூதப் பண்டிகை. வேதாகமத்தில் மூன்று பண்டிகைகளுக்கு வயது வந்த எல்லா ஆண்களும் எருசலேமுக்கு அல்லது உடன்படிக்கை பெட்டி இருந்த இடத்துக்கு வரக்கட்டளை
1.பஸ்கா
2.பெந்தேகோஸ்தே
3.கூடாரப் பண்டிகை (Deu.16:16)
இந்த பெந்தேகோஸ்தே என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் எபிரேய பாசையில் ஷவோத் shavuot என அழைக்கபடுகிறது.

1. இது ஒரு அறுப்பின் பண்டிகை
ஆவிக்குரிய சபை அறுவடை சபை
Leviticus       23:15-16  "நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,"
"ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்."

பஸ்கா பண்டிகைக்கு மறுநாளிலிருந்து 49 நாட்கள் வாற்கோதுமை தேவனுக்கு படைக்கப்படும். அதில் இருந்து 50வது நாள் கோதுமை தேவனுக்கு படைக்கப்படும். வாற்கோதுமை கோதுமையை விட சீக்கிரம் விளையக் கூடியது. இந்த வாற்கோதுமை,கோதுமை முறையே யூதர்கள் மற்றும் புற ஜாதியினரை குறிக்கும் எனலாம்.

இந்த நாளில் படைக்கபடும் இரண்டு அப்பங்கள் கூட இஸ்ரவேல் மற்றும் புறஜாதியினரை குறிக்கும்.

Leviticus       23:17  "நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,"

தேவனுக்கு நன்றி செலுத்தும் நாள் இது.

Matthew         9:37-38  "தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;"
"ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். "

பெந்தேகோஸ்தே சபை ஆத்தும அறுவடை செய்யும் சபையாக இருக்க வேண்டும்.

2. தேவனுடைய கட்டளைகளை பெற்ற நாள்.
தேவ வார்த்தைகள் கட்டளைகள் வெளிப்பட்ட நாள் இது. ஜனங்கள் நாங்கள் கீழ்படிவோம் என தேவனோடு உடன்படிக்கை செய்த நாள்.பழைய உடன்படிக்கையும் கிருபையின் உடன்படிக்கையே.அதற்கு கீழ்படியாத 3000 பேர் அழிக்கபட்டார்கள்.
புதிய ஏற்பாட்டில் கீழ்படிந்த 3000 பேர் சபையில் சேர்த்து கொள்ளபட்டார்கள்.
Exodus          19:8  "அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்."

3. இது புறஜாதிகள் தேவனிடத்தில் சேரும் நாள்.சமத்துவ சபை...
ரூத் புத்தகம் இந்த பண்டிகையில் வாசிக்கபடும். இதன் அர்த்தம் பல யூதர்களுக்கும் மறைவாக இருக்க நமக்கு இந்த பெந்தேகோஸ்தே நாள் மூலம் வெளிப்படுகிறது.
Deuteronomy     23:3  அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
என்ற வார்த்தையின் படி மோவாபிய ஸ்திரி ரூத் இஸ்ரவேல் சபைக்கு வர தகுதியற்றவர். ஆனால் தேவ இரக்கம் அவரை பாக்கியவானாக மாற்றியது.

Ruth            1:16  "அதற்கு ரூத்: நான் உம்மைப்பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்."எபிரேயத்தில்
இதன்எண் மதிப்பு 613
இது தேவ கட்டளைகளின் எண்ணிக்கை.

யார் யெகோவாவை தேவனாகவும் அவருடைய மக்களை தங்கள் குடும்பமாகவும் ஏற்றுக் கொள்கிறாரோ அவரே தேவ கட்டளைகளை நிறைவேற்றுகிறவர்கள்
நாம் தேவனை அவர் சபையை முக்கியபடுத்துகிறோமா இல்லை பழைய உலகப்பிரகாரமான குடும்பம் முக்கியபடுத்தபடுகிறதா??
இஸ்ரவேலை நேசிக்கிறோமா???

Galatians       3:14  "ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று."

4. பரிசுத்த ஆவியானவர் வந்து விசுவாசிக்கிற எல்லோர் மேலும் இறங்கிய நாள்.
Acts            2:4  "அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்."

பழைய ஏற்பாட்டில் தெரிந்து எடுக்கபட்டவர் மேல் மாத்திரமே பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார். அவர்களோடு தங்கி இருந்தார். பழைய ஏற்பாட்டில் மக்கள் மேல் விசிட் மட்டுமே செய்தார் என்பது தவறான புரிதல்.

Joel            2:28  "அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்."

Acts            2:17  "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;"

Numbers         11:29  "அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்."

Acts            10:46-47  "பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்."
"அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,"

நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றுள்ளீர்களா???

5.இது சபையின் பிறந்த நாள்

ஆத்தும அறுவடை துவங்கிய நாள்

Acts            1:5, 8  ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்."

பழைய ஏற்பாட்டில் சொந்த ஜனமாக இருந்து உலகிற்கு ரட்சிப்பை காண்பிக்க வேண்டிய யூதர்கள் தவறி போனார்கள். புதிய ஏற்பாட்டில்
Matthew         28:18-20  "அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது."
"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,"
"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.  "

கட்டளை பெற்ற நாம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை வைத்து என்ன செய்து கொண்டிருக்கிறோம்.

பெந்தேகோஸ்தே சபை
அறுவடை சபை
நன்றியறிதலுள்ள சபை
ஆவியானவர் இருக்கும் சபை
ஆத்தும அறுவடை சபை

வசனம் இல்லாவிட்டால் வல்லமை இல்லை. பரிசுத்த ஆவியானவர் இருக்குமிடத்தில் வசனம் உண்டு. வசனம் பெந்தேகோஸ்தே சபையில் வெளிப்பட வேண்டும்.

John            14:15-18  நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
"நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."
"உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்."
"நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்."
Sermon Notes Prepared by,
Ps. Sam Jebadurai,
Covenant Ministries,
Bangalore.
+919788124188
rev.samjebadurai@gmail.com

[7/24, 6:09 PM] Sam Jebadurai Pastor VT: இவ்வருட பெந்தேகோஸ்தே ஞாயிறு ஆராதனை பிரசங்க குறிப்பு

[7/24, 8:40 PM] Elango: லேவியராகமம் 23:15-17
[15]நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
[16] *ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.*

[17]நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,

உபாகமம் 16:9-12
[9] *ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.*

[10]அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,

[11]உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

[12]நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.

மேலுள்ள வசனங்கள் பெந்தேகோஸ்தே நாளை எப்படி தேர்வு செய்ய வேண்டும், அந்த நாளில் என்ன செய்ய வேண்டும், அதை எப்படி அனுசரிக்க வேண்டும், என்கிற ஒரு முழு விவரத்தையும் இந்த வசனங்கள் கூறுகின்றன.

- Pr. Charles @⁨Charles Pastor VT⁩

[7/24, 8:48 PM] Elango: இந்த பெந்தேகோஸ்தே பண்டிகை எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்றால் முதற்பலன் ( அறுப்பு அறுக்க தொடங்கும் காலம் முதல்)  கதிர்கட்டை அறுக்கும் அந்த நாள் முதல், அதன் பிறகு தொடர்ந்து வரும் ஏழு வாரங்களை எண்ண வேண்டும், அவைகள் முடிந்தபோது,  வாரங்களின் பண்டிகையை அதாவது பெந்தேகோஸ்தே பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து என்று வசனம் வருகிறது.

கதிர்கட்டு அறுக்கும் நாளிலிருந்து தொடங்கி, அதை தொடர்ந்து முடியும் ஐம்பதாவது நாளில் பெந்தேகோஸ்தே நாளை அனுசரிக்க வேண்டுமென்று என்று கர்த்தர் சொல்லியிருந்தார்.

- Pr. Charles @⁨Charles Pastor VT⁩

[7/24, 9:00 PM] Elango: *இந்த பெந்தேகோஸ்தே பண்டிகையில் செய்ய வேண்டிய மிக முக்கியமான இரண்டு காரியங்கள்.*

1⃣லேவியராகமம் 23:16
[16]ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, *கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.*

2⃣லேவியராகமம் 23:17
[17] நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் *இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,*

இந்த இரண்டு☝☝ காரியங்களும் ஆவிக்குரிய சத்தியங்கள்.

*ஏற்கனவே சொன்னபடி - பஸ்கா என்பது இயேசுவின் மரணத்தையும், புளிப்பில்லாத பண்டிகை என்பது இயேசுவின் அடக்கத்தையும், முதற்பலன் பண்டிகை என்பது இயேசுவின் உயிர்த்தெழுதலையும் சித்தரிக்கிறது போலவே...பெந்தேகோஸ்தே என்பது இயேசுவானவர் பரிசுத்த ஆவியை .. பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறும் படிக்கு பரிசுத்த ஆவியானவரை பூமிக்கு அருளப்படுகிற அந்த சம்பவத்தை சித்தரிக்கக்கூடிய ஒரு தீர்க்கதரிசன காரியமாக இந்த பெந்தேகோஸ்தே பண்டிகை இருக்கிறது.*

- Pr. @⁨Charles Pastor VT⁩

[7/24, 9:14 PM] Elango: இந்த பெந்தேகோஸ்தே பண்டிகையில் ஆவியானவர் அருளப்படுகிற ஒரு சம்பவம் நிகழ்கிறது...

அந்த ஆவியானவரை பெற்றுக்கொள்வதற்க்கு, அதை பெற்றுக்கொள்வகலிடத்தில்  இரண்டு விதமான தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை தான் 1⃣ *புதிய போஜன பலியும்* 2⃣கசப்பான பாகம் பண்ணப்பட்ட இரண்டு அப்பங்களை குறிக்கிறது.

லேவியராகமம் 23:16
[16]ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, *கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.*

இந்த புதிய போஜனபலி என்பது எதனை அடையாளப்படுத்துகிறதென்றால்...👇👇

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் மேல் வீட்டு அறையில் கூடியிருந்த ஒரு புதிய கூட்டத்திற்க்கு அது தீர்க்கதரிசன அடையாளமாக கொடுக்கப்பட்டிருந்தது.

*இந்த புதிய போஜனபலி ஒரு புதிய சந்ததிக்கு, ஜனக்கூட்டத்திற்க்கு, உலகத்திலிருக்கிற ஒரு புதுமையான மக்களுக்கு  அடையாளமாக அந்த புதிய போஜனபலி கொடுக்கப்பட்டிருந்தது.*

எப்படியென்றால் மற்ற ஜனங்களை போல இந்த ஜனக்கூட்டம் இருக்காது,  இவர்கள் வித்தியாசப்பட்டவர்கள்.அதனால் அதை புதிய போஜன பலி என்று பழைய ஏற்ப்பாட்டு காலத்தில் தேவன் அறிவித்தார்.

- Pr. Charles @⁨Charles Pastor VT⁩

[7/24, 9:32 PM] Sam Jebadurai Pastor VT: லேவி 23:17  ல் கூறப்படும் இரு அப்பங்களும் புறஜாதி மற்றும் யூதர்கள் தேவனுக்கு சொந்தம் என்பதை குறிக்கும்

[7/24, 9:49 PM] Elango: அந்த புதிய ஜனக்கூட்டம் எப்படிப்பட்டவர்கள் என்றால், அவர்கள் முழுவதுமாக இயேசுவுக்கு அர்ப்பணம் செய்து,  அவர் கொடுத்த வாக்குத்தத்தத்திற்க்காக காத்துக்கொண்டிருந்த கூட்டம்.

அப்போஸ்தலர் 1:4
[4]அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; *நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.*

இந்த புது ஜனங்கள் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெற்றவர்கள், இவர்கள் இயேசுவுக்கென்று தங்களை அர்ப்பணித்து , இயேசுவுக்கே ங்களை ஒப்புக்கொடுத்தவர்கள், கிறிஸ்துவின் நோக்கத்தையே யோசித்துக்கொண்டு, கிறிஸ்துவுக்குள் தங்களை அங்கமாக இணைத்து வாழ்பவர்கள்.

தங்கள் சொந்த புகழ் ஆசை எல்லாம் தியாகம் செய்து,  புது கூட்டமாக இருக்குமென்பதற்க்கு முன்னடையாளமாக அங்கே *புது போஜன பலி சொல்லப்பட்டது*

இந்த புது போஜனபலிக்கு அடையாளமாக இருக்கிறவர்கள் ஒன்றுபட்டு, ஐக்கியப்பட்டு தங்களை தடையின்றி கர்த்தருக்கு அர்ப்பணம் செய்தவர்கள், இயேசுவோடு தங்களை ஒருமைப்படுத்துவதற்க்கும், எந்த விதமான சூழ்நிலைக்கு ஆயத்தமாக இருப்பவர்களே *புதிய போஜன பலிக்கு அடையாளமானவர்கள்*

- Pr. Charles @⁨Charles Pastor VT⁩
[7/24, 10:08 PM] Elango: பெந்தேகோஸ்தே பண்டிகையில் அதிகமான வல்லமை இருக்கிறதை, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை மனிதர்கள் பெறுவதை காட்டுகிறது.

அந்த வல்லமையை பெற்றுக்கொள்ள ஒரு கிரயம் செலுத்தப்பட வேண்டும் என்பதை கூட நாமே வேதத்தை வாசிக்கும் போது புரிந்துக்கொள்ள முடியும், *அது என்ன கிரயம் என்று சொன்னால் ..நாம் நம்மை முழுவதுமாக தடையின்றி இயேவுக்கு ஒப்புக்கொடுத்து இயேசு நம்மை ஆளுகை செய்யும்படிக்கு நம்மை அவருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தல் வேண்டும். இதுவே நாம் அந்த வல்லமையை பெற வேண்டிய கிரயம்*

இப்படி செய்த கூட்டம்தான் அந்த போஜைனபலிக்கு அடையாளமாக இருக்கிறது, அந்த கூட்டமே ஏஏற்கனவே தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் பெந்தேகோஸ்தே நாளில் படைக்கப்பட்ட அந்த போஜனபலிக்கு அடையாளமாக இருக்கிறது

20 *நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே *ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.*
பிலிப்பியர் 1:20

- pr. Charles @⁨Charles Pastor VT⁩

[7/24, 10:13 PM] Elango: *பெந்தெகோஸ்தே பண்டிகை*

லேவியராகமம்:  23:15-21

ஏழு வாரங்களின் பண்டிகை:    யாத்திராகமம்: 34:22;  உபாகமம்: 16:10-16; 2நாளாகமம்: 8:13.

முதற்பலன் அசைவாட்டும் பண்டிகை நடந்த ஏழு வாரங்களுக்கு அடுத்து ஏழாவது ஓய்வு நாளுக்கு மறுநாள் வருவதால் இந்தப் பெயர் பெற்றது.

7 x 7 = 49;           49 + 1 = 50     -   வாசியுங்கள்:  லேவியராகமம்: 23:15,16.

"நீங்கள் அசைவாட்டும் கதிர்கட்டைக் கொண்டு வரும் ஓய்வு நாளுக்கு மறுநாள் முதற் கொண்டு எண்ணத் துவக்கி, ஏழு வாரங்கள் நிறைவேறின பின்பு, ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளாகிய ஐம்பதாம் நாள் மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜன பலியைச் செலுத்தக்கடவீர்கள்."

பெந்தெகோஸ்தே பண்டிகை:(அப்போஸ்தலர்: 2:1; 20:16;  1கொரிந்தியர்: 16:8)


'ஐம்பது' என்ற எண்ணுக்கு கிரேக்க மொழியில் "பெந்தெகோஸ்தே " என்று பெயர். எழுத்தின்படியாக இந்த பண்டிகையை யூதர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது தான், தேவன் அதன் உள்ளான அர்த்தத்தை நிறைவேற்றினார். (அப்போஸ்தலர்: 2:1-4).

[7/24, 10:14 PM] Elango: *சேர்ப்புக் கால பண்டிகை:* யாத்திராகமம்: 23:16.

வாற்க்கோதுமை அறுவடையின் முடிவில், கோதுமை அறுவடையின் துவக்கத்தில் இந்தப் பண்டிகை நடைபெறும் என்ற போதிலும், முக்கியமான அறுவடை - கூடாரப் பண்டிகை முடிந்து, திராட்சை, ஒலிவ அறுவடைக்குப் பின் நான்கு மாத இறுதியிலே நடைபெறும்.

ஆதித் திருச்சபையில் அந்த நாட்களில் மாபெரும் ஆத்தும அறுவடை நடைபெற்றது. யூதரானவர்கள் அறுவடை (வாற் கோதுமை)  (அப்போஸ்தலர்: 2:41;  4:4).

 புறஜாதி அறுவடையும் கூட, (கோதுமை அறுவடை) (அப்போஸ்தலர்: 15:14). என்றாலும் கூட, மாபெரும் அறுவடை - கிறிஸ்து பூமிக்கு திரும்புமுன் ஏற்படும் பெரிய எழுப்புதலில் நடக்கும்.

*எண் 50 - ன் முக்கியத்துவம்:*

ஏழு ஓய்வு நாட்களுக்கு அடுத்த நாள் 50 வது நாள். (லேவியராகமம்: 23:15,16).

'50' என்பது 'யூபிலி' எனப்படும். அது,'விடுதலை'  'நிலை நிறுத்துதல்'  'சுதந்தரம்' என்பதை சொல்லுகிறது.

50 வது வருடம்  'யூபிலி வருடம்' என்று சொல்லப்படும். இந்த யூபிலி ஆண்டு இளைப்பாறுதலும் மிகவும்  கொண்டாட்டமுமான வருடமாகும்.

யூபிலி வருடத்தில் மூன்று முக்கியமான காரியங்கள் நடைபெறும்: (லேவியராகமம்: 25:8-55).

1. தங்கள் சகோதரர்கள் கையிலிருந்த  அடிமைகளாயிருந்த எல்லா இஸ்ரவேலருக்கும் விடுதலை அறிவிக்கப்படுகிறது.

2. வறுமையினால் விற்றுப்போடப்பட்ட நிலம் வீடுகள் எல்லாம், பழையபடி விற்றவருக்கே வந்து சேருகிறது.

3. அந்த தேசம் முழுமைக்கும் அது இளைப்பாறுதல் ஆண்டு. பெந்தெகோஸ்தேயின் செய்திகள் எல்லாம் பரிசுத்த ஆவியானவரால் வரும் விடுதலையைப் பற்றியதே ஆகும். நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவ குமாரனுடைய மகிமையான சுயாதீனத்திற்குள் பிரவேசித்தல்.

[7/24, 10:14 PM] Elango: *புதிய போஜன பலி:*

கர்த்தருக்கு முன்பாக காணிக்கையாக புதிய மாம்சமோ அல்லது புதிய காரியமோ ஏறெடுக்கப்படும். பெந்தெகோஸ்தே பண்டிகை வரும்போது, நம்மைத் தாமே புதிய தானியமாக அர்ப்பணிக்கின்றோம். நமது ஜீவனை சமர்ப்பிக்கின்றோம். (யோவான்: 12:24). "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்; செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்".

அடுத்த வசனம் நாம் கிறிஸ்துவுக்காக எவ்விதம் நமது ஜீவனையும் அர்ப்பணிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் காண்பிக்கிறது. புதிய மரித்தல் இருக்க வேண்டும். நீ அந்நிய பாஷையிலே பேசும்போது என்பது அநேகருக்கு கஷ்டமான காரியம். ஆதிதிருச்சபை மக்களுக்கு சிலுவை என்றால் ஒரு பயங்கரமான சின்னமாக இருந்தது. என்னவென்றால், இது ஒரு குற்றவாளி மரிப்பதையே காட்டுகிறது. (எபிரேயர்: 13:13;  ரோமர்: 9:33).

இரண்டு அசைவாட்டும் அப்பங்கள்:(லேவியராகமம்: 23:17)

அசைவாட்டும் இந்த இரண்டு அப்பங்கள்யூதர்களையும் புறஜாதிகளையும் குறிக்கிறது. கிறிஸ்து சிலுவையிலேயூதரையும் புறஜாதியரையும் ஒரே மனுஷனாக இணைத்து சமாதானம் உண்டாக்கினார். (எபேசியர்: 2:14,15).

பத்தில் இரண்டு பாகங்கள் (2/10) இது முதற்பலனைக் குறிக்கிறது. இஸ்ரவேல் முதற்பலன் என்று அழைக்கப்பட்டது. அப்படியே சபையும் முதற்பலன் என்று குறிக்கப்படுகிறது. (எரேமியா: 31:9;  எபிரேயர்: 12:23).

புளிப்பாக பாகம் பண்ணப்பட்டவை: (லேவியராகமம்: 23:17)

'புளிப்பு' என்பது பாவம், மாய்மாலம், துர் உபதேசம் ஊழலைக் குறிக்கிறது. ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். ஒருவன் பரிசுத்தாவியைப் பெற்றுவிட்டாலோ அல்லது அந்நிய பாஷையைப் பேசுவதாலோ  அவன் சுத்திகரிக்கப்பட்டவனாக பரிசுத்தத்தில் நடக்கிறவனாக ஆகிவிடமாட்டான். ஒரு விசுவாசி இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட பின்பும் கூட அவனுக்குள் பாவ சுபாவம் காணப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக அதே ஆவிக்குரிய கூட்டத்தார்களும் பெந்தெகோஸ்தேகாரர்களும் எல்லாவிதமான பாவங்களினாலும் தவறான உபதேசங்களினாலும் பிரிவினையினாலும் மாம்சீகத்தினாலும் நிறைந்து காணப்படுகிறார்கள். கர்த்தரிலே தேறினவர்களாக விளங்குவதற்கு நமக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை. ஆனால், அதே நேரத்தில் அதை பரிசுத்தத்தோடு நாம் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களிடத் -திலும் கலப்படங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

[7/24, 10:15 PM] Elango: பெந்தெகோஸ்தே என்பது கர்த்தருக்கு முதற்பலனானது. (லேவியராகமம்: 23:17). இது கடைசி அறுவடை அல்ல.பெந்தெகோஸ்தே அனுபவம் என்பது அபிஷேகம் பெற்றவர்களின் முதற்பலனானவர்களின் ஆவியிலே வளரும் அனுபவம். பெந்தெகோஸ்தே என்பது முடிவு அல்ல. அது ஆதி திருச்சபை இயக்கி வைத்த ராக்கெட் ஆகும். (அப்போஸ்தலர்: 2:1-4).

*அசைவாட்டும் காணிக்கை:(லேவியராகமம்: 23:20)

பெந்தெகோஸ்தேயில்  அடங்கியுள்ள ஆராதனையை இது குறிக்கும். இந்தப் பண்டிகையில் பிரவேசிக்கும் வரைக்கும் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க முடியாது. (யோவான்: 4:24).

இளைப்பாறுதலின் பண்டிகை:(லேவியராகமம்: 23:21)

கர்த்தரில் நாம் இளைப்பாற வேண்டும். தேவனுடைய ஆவியானவர் நம்மில் இறங்கி கிரியை செய்ய விட்டுக் கொடுக்க வேண்டும். அநேக வேளைகளில் நாம் வேலை செய்து கொண்டிருக்கிறபடியால் கர்த்தருடைய கிரியையை தடை செய்து விடுகிறோம்.

*பெந்தெகோஸ்தே பண்டிகையின் நிறைவேறுதல்:*

நாம் பரிசுத்த ஆவியினாலே அபிஷேகிக்கப்பட்டு அந்நிய பாஷையிலே பேசும்போது நாம் தனிப்பட்ட வாழ்க்கையில் பெந்தெகோஸ்தே பண்டிகையைக் கொண்டாடுகிறவர்களாகிறோம்.
[7/24, 10:16 PM] Elango: *பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்த சில உண்மைகள்:*

1. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது இரட்சிப்பு அல்ல; அது திட்டமான இரண்டாவத அனுபவம். (அப்போஸ்தலர்: 8:14-16;  19:1-6)

2. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. (உபாகமம்: 16:11;  அப்போஸ்தலர்: 2:39;  யோவான்: 7:37).

3. பரிசுத்த ஆவி பெற்றுக் கொண்டதற்கு அடையாளம் - அந்நிய பாஷையில் பேசுவதாகும். (அப்போஸ்தலர்: 2:4; 10:46: 19:6)

*பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்வது எப்படி?:*

1. நீ மறுபடியும் பிறந்திருக்க வேண்டும். (யோவான்: 3:3)

2. இது ஒரு வரம்.  இதற்காக  நீ அலறவோ, போராடவோ, கட்டுப்பாட்டை இழக்கவோ தேவையில்லை. அப்படியே விட்டுக் கொடு. பெற்றுக் கொள். (லூக்கா: 11:9-10;  அப்போஸ்தலர்: 2:38).

3. விசுவாசத்தினால் பெற்றுக் கொள். (கலாத்தியர்: 3:14).

4. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கிற இயேசுவிடம் வா. (யோவான்: 7:37).

5. உனது நாவினாலும், குரலினாலும், உதடுகளினாலும் பேச ஆரம்பி. (அப்போஸ்தலர்: 2:4). ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்ல. பரலோக புது மொழியில் பரிசுத்த ஆவியானவர் உனக்குத் தரும் பாஷையிலே பேசு. கவனியுங்கள்: உடனடியாகத்தானே இரண்டு பாஷைகளில் உன்னால் பேச இயலாது.

[7/24, 10:16 PM] Elango: 🎁 *இன்றைய வேத தியானம் - 24/07/2017* 🎁

1⃣ பெந்தேகோஸ்தே பண்டிகை என்றால் என்ன❓பெந்தேகோஸ்தே என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன❓

2⃣பெந்தேகோஸ்தே பண்டிகையை எப்போது,  எப்படி எதற்காக கொண்டாடப்பட்டது❓

3⃣பெந்தேகோஸ்தே பண்டிகைக்கும், இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு என்ன❓

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையாக தியானிக்கலாம், இன்றைக்கு பெந்தேகோஸ்தே பண்டிகையை மட்டும் தியானிக்கலாம்*

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/24, 10:54 PM] Satya Dass VT: 28 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
யோவேல் 2:28

[7/24, 10:56 PM] Satya Dass VT: 16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
அப்போஸ்தலர் 2:16

17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ்சொல்;லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்.
அப்போஸ்தலர் 2:17

[7/24, 10:57 PM] Satya Dass VT: 5 மேலும் நமக்கு *அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே* தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
ரோமர் 5:5

[7/25, 12:00 AM] Sam Jebadurai Pastor VT: பெந்தேகோஸ்தே பண்டிகையின் போது ரூத் புத்தகம் வாசிக்கபடும். காரணம்
1.ரூத் புத்தக சம்பவங்கள் பெந்தேகோஸ்தே நாட்களை ஒட்டி நடந்தது
2. சபைக்கு விலக்கபட்டிருந்த மோவாபிய பெண் ரூத் சபையில் சேர்த்து கொள்ளபடுகிறாள்.இதை போலவே அன்னியராக இருந்த நாம் இயேசுவின் மூலம் பரிசுத்த ஆவியானவர் துணையால் ஆபிரகாமின் ஆசிர்வாதம் பெறுகிறோம்
Deuteronomy     23:3  அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
Colossians      1:21  முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
Ephesians       2:19-20
19 "ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,"
20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
Galatians       3:14  "ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று."

3. மணவாட்டி சபையை மணவாளன் இயேசு கிறிஸ்துவுக்கு பரிசுத்த ஆவியானவர் ஆயத்தபடுத்துவது போல ரூத்தை போவாசுக்கு நவோமி ஆயத்தம் செய்தாள்.
2 Corinthians   11:2  "நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்."

[7/25, 12:17 AM] Elango: இப்படிப்பட்ட அந்த கிரயத்தை செலுத்துகிற பொழுதுதான், இந்த பெந்தேகோஸ்தே வல்லமையை கிடைக்க தேவன் கிருபை செய்கிறார்.
இப்படிப்பட்ட கிரயத்தை செலுத்துபவர்கள் தான் புதிய போஜன பலியாக கருதப்படுகிறார்கள்.

அப்போஸ்தலர் 1:8
[8] *பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.*

இங்கே அப். 1:8 எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்ற வார்த்தை தான்,  இந்த புதிய போஜன பலியினுடைய அடையாளமாக புது சந்ததியை குறிக்கிறதாக இருக்கிறது.

இயேசுவுக்கு தங்களை சாட்சிகளாக அறிவிப்பார்கள், இருப்பார்கள் என்பதில் அது நிறைவேறுகிறது. நாம் இயேசுவுக்கு சாட்சியாக இருப்பதுதான் செலுத்த வேண்டிய கிரயமாக இருக்கிறது.

*சாட்சியாக இருப்பீர்கள்* என்ற வார்த்தையில் *சாட்சி* என்ற வார்த்தைக்கு கிரேக்க வார்த்தை,  மார்டஸ் என்கிற பயன்படுத்துப்பட்டுள்ளது.

இந்த மார்டஸ் என்கிற வார்த்தையினுடைய பொருள்,  *இரத்தசாட்சி* ❣❣ அதனுடைய பொருளாக இருக்கிறது.

வரலாற்று ஆசீரியர் என்ற கருத்துப்படி,  இந்த மார்டஸ் என்ற வார்த்தையை யாரிடத்தில் இயேசு சொன்னாரோ, அவர்களுடைய வாழ்க்கையில் அப்படியே நிறைவேறியிருக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

12 சீஷர்களுக்கு அந்த வார்த்தை சொல்லப்பட்டது. அதில் 11 சீஷர்களும் இரத்தசாட்சியாக மரித்தார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் அதை குறித்து குறிப்பிடுகிறார்கள்.

*இந்த பெந்தேகோஸ்தே பண்டிடிகையில் நாம் எல்லோரும் இரத்தசாட்சியாக மரிப்பதற்க்கு நம்மை அர்ப்பணிப்பதற்க்கு, நாம் அபிஷேகம் பண்ணட்டிருக்கிறோம் என்கிற உண்மையை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்*

20 *உம்முடைய (சாட்சியாகிய) ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது,* நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
அப்போஸ்தலர் 22:20

13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப்பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு *உண்மையுள்ள (சாட்சியான) அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட* நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:13

- @pastor Charles @⁨Charles Pastor VT⁩

[7/25, 12:37 AM] Elango: 1⃣ பெந்தேகோஸ்தே பண்டிகையின் மகிழ்ச்சியையும், வல்லமையையும் ஒரு மனிதன் பெற்றுக்கொள்வதற்க்கு மேலே நாம் பார்த்த, புதிய போஜனபலிக்கு அடையாளமான புதிய ஜனக்கூட்டத்திற்க்கு இருக்க வேண்டிய தகுதியான, அந்த கிரயம் அவன் செலுத்தப்பட வேண்டும், அந்த கிரயத்திற்க்கு தன்னை அர்ப்பணித்தவனாக இருக்க வேண்டும்.

2⃣ இரண்டு அப்பங்கள் அந்த போஜனபலியிலே படைக்கப்பட வேண்டும். இந்த புளித்த மாவினால் செய்யப்பட்ட இந்த இரண்டு அப்பங்கள் எதற்கு அடையாளமாக இருக்கிறதென்றால், இந்த பெந்தேகோஸ்தே அனுபவத்தை பெற்றுக்கொள்கிறவர்களின் குணநலனிற்க்கு அடையாளமாக இருக்கிறது.

 ▶ புளிப்பில்லாத அப்ப பண்டிகையிலே - புளிப்பு சேர்க்கலாகாது என்று சொல்லப்பட்டிருந்தது. அந்த புளிப்பு பாவத்தையும் துர்க்குணத்தையும் குறிக்கிறது.

*இங்கே புளிப்புள்ள அப்பத்தை அனுமதிப்பதற்க்கான காரணம் என்னவென்று சொன்னால்... தேவன் அந்த மேல்வீட்டு அறையில் இருந்த 120 பேருக்கும் அபிஷேகம் பெறுவதற்க்கு அவர்களின் கல்வியையோ ஞானத்தையோ, அவர்களுடைய பரிசுத்த வாழ்க்கையோ, தேவன் அவர்களிடத்தில் எதையும் எதிர்பார்த்து...அந்த அபிஷேகத்தை செய்ய வில்லை...மாறாக அவர்களுக்குள் இருந்த இயலாமையையும் துர்குணத்தையும் பாவத்தையும்,  எல்லாவற்றையும் பார்க்காமல் - அர்ப்பணித்தவர்களுக்கே அபிஷேகம் கொடுப்பதை நாம் பார்க்க முடியும்.

இந்த அபிஷேகம் பெறுவதற்க்கு நம்முடைய சுய பரிசுத்தமோ, சுய நற்கிரியையோ - என்பவைகள் அந்த தகுதியை பெறுவதற்க்கு ஏற்ற தகுதி அல்ல.

எந்த தகுதியும் நம்மிடத்தில் இல்லாவிட்டாலும் கூட, நாம் நம்மை தேவனுக்கு அர்ப்பணிக்கும் போது, தேவன் அருளும் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை கொடுக்கிறார் என்பதன் ன்னனடையாளமாக *இந்த புளிப்புள்ள இரண்டு அப்பங்கள்* அங்கே அடையாளமாக கொடுக்கப்பட்டது.

- pastor Charles @⁨Charles Pastor VT⁩

[7/25, 12:42 AM] Elango: மத்தேயு 26:56
[56]ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். *அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.*

யோவான் 20:19
[19]வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், *யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில்,* இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

இந்த சம்பவங்கள் எதை காட்டுகிறது என்று சொன்னால் பயந்து போய் இருக்கும் சீஷர்களை, தன்னால் எதுவும் முடியாது என்ற நிலையில் சீஷர்கள் இருந்த போதிலும்... *அப்படிப்பட்ட புளிப்புள்ள நிலையில் இருந்த போதிலும், அவர்களுக்கும் நான் பெந்தேகோஸ்தே அனுபவத்தை தருவேன் என்பதை அடையாளப்படுவதற்க்காக அந்த புளிப்புள்ள அப்பத்தை படைக்க தேவன் அனுமதித்திருந்தார்*

- Pastor Charles @⁨Charles Pastor VT⁩

[7/25, 12:55 AM] Elango: பஸ்கா  பண்டிகை
பெந்தேகோஸ்தே பண்டிகை
கூடார பண்டிகை

இந்த மூன்று பண்டிகைகளையும் இஸ்ரவேலர் தவறாமல் அனுசரிக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருந்தார்.

அதேப்போல இன்றைக்கு நமக்கு இந்த பெந்தேகோஸ்தே அனுபவம் அத்தியாவசியமான ஒன்று என்பதாலே, அன்று தேவன் பெந்தேகோஸ்தே பண்டிகையை கட்டளையிட்டிருந்தார்.

*ஏன் நாம் இந்த பெந்தேகோஸ்தேவின் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், இந்த அனுபவத்தில் நமக்கு ஆவியின் அதிகாரத்தை கொடுக்கிறார்.

அப்போஸ்தலர் 4:1,3,18
[1]அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,
[3]அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.
[18] *அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.*

அப்போஸ்தலர் 4:29-30
[29]இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
[30]உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.

அப்போஸ்தலர் 4:33
[33] *கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.*

அப்போஸ்தலர் 5:17-20
[17]அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
[18]அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
[19]கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
[20] *நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.*

*மேலுள்ள வசனங்களில் நாம் பார்க்கும் போது, இயேசுவைக் குறித்து எவ்வளவேனும் போதிக்க கூடாது என்று சீஷர்களை ஆசாரியர்களும்,  சதுசேயர்களும் பயமுறுத்துகிறார்கள், ஆனாலும் சீஷர்கள் இயேசுவை பிரகன படுத்தினார்கள், இந்த ஆவியின் வல்லமை அதிகாரம் அவர்களுக்கு கிடைத்தது பெந்தேகோஸ்தே அனுபவத்தில் தான்*

*அவர்கள் செலுத்திய கிரயம் என்னவென்றால், தங்களை புதிய போஜன பலியாக படைத்தார்கள்*

- Pastor Charles @⁨Charles Pastor VT⁩

[7/25, 1:46 AM] Sam Jebadurai Pastor VT: பெந்தேகோஸ்தே பண்டிகையின் போது பாலால் ஆன உணவு பொருட்கள் உணவில் அதிகமாக உண்ணுவர்.  காரணம் பெந்தேகோஸ்தே நாள் தேவ கட்டளைகள் கொடுக்கபட்ட நாள். பால் தேவ வார்த்தைக்கு ஒப்பாகும்.
1 Peter         2:3  "நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்."

[7/25, 9:07 AM] Elango: *நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல,  கசப்புள்ள ஒரு வாழ்க்கை இந்த நேரத்தில் இருக்கலாம் ஆனாலும் நாம் 👇👇👇
சங்கீதம் 63:1-2
[1]தேவனே, நீர் என்னுடைய தேவன்; *அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.*

[2]இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

சங்கீதம் 84:2
[2] *என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.*

சங்கீதம் 107:8
[8] *தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,*

சங்கீதம் 145:19
[19]அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
மத்தேயு 5:6
[6] *நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.*

*ஆகிய மேலுள்ள வசனங்களில் சொல்லப்பட்ட படி, நீதியின் மேல் பசித் தாகமாய், வாஞ்சையோடும் தாகத்தோடும்  இருப்போமானால் நாம் திருப்தியடைவோம், நம்மை ஒரு புது சந்ததிக்குள் இணைக்கும் போது, கசப்புள்ள நிலை நமக்குள் இருந்தாலும்,தேவன் இந்த பெந்தேகோஸ்தே ஆவிக்குரிய அதிகாரத்தை நமக்கு வல்லமையுள்ளவராய் இருக்கிறார் என்பதை தான் அந்த கசப்புள்ள அப்பங்கள் நமக்கு காட்டுகிறது*

- Pastor Charles @⁨Charles Pastor VT⁩

Post a Comment

0 Comments