Type Here to Get Search Results !

முதற்பலன் சேர்ப்பு பண்டிகை என்பது என்ன❓

[7/22, 9:16 AM] Parthiban VM: ☀ *இன்றைய வேத தியானம் - 22/07/2017* ☀

1⃣ பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட *இந்த முதற்பலன் சேர்ப்பு பண்டிகை என்பது என்ன❓*ஏன் கொண்டப்பட்டது❓

2⃣  *முதற்பலன் சேர்ப்பு பண்டிகையின் மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், இன்றைக்கு முதற்பலன் சேர்ப்பு பண்டிகையை குறித்து தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*வேத தியானம் ( Web blog )* - 
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/22, 12:35 PM] Elango: முதற் கனிகளை படைக்கும் பண்டிகை- இது ஆபிப் மாதம் 16ம் நாள் கொண்டாடப்படும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை இது குறிக்கிறது.

(லேவி23:9-14;
லேவியராகமம் 23:9-14
[9]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
[10]நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: *நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.*

[11] *உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.*

[12]நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,

[13]கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
[14]உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
 ரோம 8:23;
ரோமர் 8:23
[23]அதுவுமல்லாமல், *ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட* நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

1கொரி15:20-23)

1 கொரிந்தியர் 15:20-23
[20]கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
[21]மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
[22]ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
[23]அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், *முதற்பலனானவர் கிறிஸ்து;* பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

- @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/22, 12:40 PM] Elango: *முதற்க்கனி அறுப்பின் பண்டிகை*

(லேவியராகமம் 23:9-14, 26:1-11)

யாத்திராகமம் 26:29. *முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்க வேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக*


*முதற்பேரானவர் இதன் அர்த்தம் தேவனுக்கு நாம் வாழ்வில் முதற் கனியை கொடுக்க வேண்டும் என்பதாகும்...*

 அறுவடை முடிந்ததும் முதற்பலனை நாம் தேவனுக்கு கொடுக்க அழைக்கப்படுகிறோம். *இன்றும் நம் மாத சம்பளம் முதல் பகுதியை தேவனுக்கென்று கொடுக்கிறோம்*

மாதத்தின் முதல் நாளை ஆலயத்தில் செலவிடுகிறோம். நாளின் அதிகாலை வேளையை ஜெபத்தில் செலவிடுகிறோம். இதற்க்கு காரணம் வேத வசனமே.. முதற் பலனை தேவனுக்கு கொடுக்க வேண்டும்..

வேதாகமத்தில் இதை ஓர் பண்டிகையாக ஆசரித்து வந்துள்ளனர்.. தேவன் இதை பற்றி பேசி இருக்கிறார். சரி.. இப்போது புதிய ஏற்பாட்டின் காலத்திற்கு வருவோம். இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார்❓ கிறிஸ்தவர்கள் ஆசாரிக்கலாமா வேண்டாமா❓👇👇👇👇

யாக்கோபு 1:18. *அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்*

அவருடைய மரணத்தினாலே நாம் அனைவரும் பரிசுத்த தேவனின் முதற்பலன் ஆகிறோம். முதற்க்கனி எப்படி பரிசுத்த தேவனுக்கு சொந்தமோ அதை போல முதற்பலனை மாற்றப்பட்ட நாமும் தேவனுக்கு சொந்தமாகிறோம். நீங்களும் தேவனுக்கு சொந்தம் என்றால் முதற்க்கனி நாளை நினைவு கூறலாமே....

1 கொரிந்தியர் 15:20. கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். 22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் நாமும் பரலோகத்திற்கு சொந்தமாகிறோம். இந்த பெரிய பாக்கியத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாளை தேவன் உண்டாக்கினார்.
[7/22, 12:44 PM] Elango: *உலகத்தில் அநேக தேச மக்கள் இருந்தாலும், இஸ்ரவேலரே தேவனுக்கு முதல்பலன்*👇👇👇

ரோமர் 11:16-17
[16]மேலும் *முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால்,* பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
[17]சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,

ஆமோஸ் 3:2
[2] *பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்;*👍🏻 ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

[7/22, 12:48 PM] Elango: ரோமர் 16:5
[5]அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.

*அப். புவுல் அகாயாவிலே சுவிஷேசத்தை நட்டு, நீர்பாய்ச்சினவருக்கு கிடைத்த, முதல் கனி - எப்பனெத்து*

[7/22, 12:51 PM] Elango: *தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.*👇👇👇👇👇👇

வெளிப்படுத்தின விசேஷம் 14:4-5
[4] 1⃣ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே;

2⃣கற்புள்ளவர்கள் இவர்களே;

 3⃣ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே;

 இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் *முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.*


[5] 4⃣இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை;

 5⃣இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.

[7/22, 12:54 PM] Elango: எசேக்கியேல் 44:30
[30]சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான பொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; *உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.*

*மாத சம்பளம் எடுக்கிறவர்கள், அதில் முதல் பாகத்தை தேவனுக்கென்று முதற்பலனாக ஒதுக்கிவிட வேண்டும்*

[7/22, 12:55 PM] Elango: யாத்திராகமம் 34:26
[26] *உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள்.* வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.

[7/22, 12:57 PM] Elango: உபாகமம் 18:4-5
[4] *உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும்.*

[5] அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.

[7/22, 12:59 PM] Elango: *கர்த்தருக்கு கொடுத்தால் நமக்கு ஆசீர்வாதம் வரும் என்று நினைப்பதை விட..கர்த்தர் எனக்கு கொடுத்ததிலிருந்து முதற்பலனை ஒரு பங்கை அவருக்கே திருப்பி கொடுக்கிறேன் என்று நினைப்பது சரியாக இருக்கும்*👇👇👇

நீதிமொழிகள் 3:9-10
[9] *உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.*

[10]அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

[7/22, 1:07 PM] Elango: I நாளாகமம் 29:14 இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? *எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.*

[7/22, 1:13 PM] Elango: *முதற்பலனை கர்த்தருக்கு காணிக்கையாக கொடுப்போம்*

>>> ஆபிரகாம் தன் முதற்குமாரனைக் கொடுத்தார். இன்றும் அதன் பலனை நாமும் அனுபவிக்கிறோம்.
>>> அன்னாள் தன் முதற்பிள்ளையை சொன்னபடியே தேவசமுகத்தில் கொண்டுவந்து அர்ப்பணித்தாள். கர்த்தர் அந்தப் பிள்ளையை இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகவும் நியாயாதிபதியாகவும் உயர்த்தினார்.

*இன்றும் அநேகர் தமக்கு முதலாவதாக பிறந்த பிள்ளைகளை கர்த்தருக்கென்றும், அவரது ஊழியத்திற்க்கென்றும், அவருக்கென்று நேர்ந்துவிடுவதை நாம் பார்க்க முடியும்.*

மல்கியா 1:13 இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனா என்று கர்த்தர் கேட்கிறார்.

[7/22, 1:14 PM] Elango: 8. *நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.* Malachi&Chapter=1

[7/22, 1:16 PM] Elango: யாத்திராகமம் 34:26 *உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள்* வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.

[7/22, 1:24 PM] Elango: நீதிமொழிகள் 3:9 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

"விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" (2கொரி: 9:10)

*என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள்* என்று கர்த்தர் சொல்லுகிறார். I சாமுவேல் 2:30  பின் பாதி வசனம்

[7/22, 1:26 PM] Elango: “ *நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,23  உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.”**
(உபாகமம் 14: 22- 23)

[7/22, 1:30 PM] Elango: தேவன் இயேசுக்கிறிஸ்துவை, மூன்றாம் நாளாகிய, முதற்பலனை சேர்க்கும் அந்நாளில் உயிருடன் எழுப்பினார்.

[7/22, 1:33 PM] Elango: *இயேசுகிறிஸ்து முதற்பேறானவர்*

1. அவர் சிருஷ்டிக்கெல்லாம் முதற்பேறானவர் - கொலோசெயர் 1:15, யோவான்1:18,    1 யோவான் 4:12

2. *அவர் மரியாளின் முதற்பேறானவர் என அழைக்கப்படுகிறார்.* அவர் அவரது குடும்பத்தில் மூத்தவர் மரியாளின் சந்ததி மற்றும் யோசேப்பின் சந்ததி இருவருமே தாவீதின் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் இதன் மூலம் இயேசு, தாவீதின் இராஜ்ஜியத்தை சுதந்தரிக்கிறவராய் இருக்கிறார். மரியாளின் மூலம் மேசியா என்கிற தலைப்பை பெற்று இருக்கிறார் - மத்தேயு 1:25, லூக்கா 2:7

3. *தேவனின் ராஜரீக குடும்பத்தில், கிறிஸ்து முதற்பிறந்தவர் - ரோமர் 8:29.

4. அவர் மரித்தோரில் முதற்பிறந்தவர், அவர் மரணத்திலிருந்து முதலாவது எழுப்பப்பட்டவர்.  கொலோசெயர் 1:18, எபிரெயர் 1:5,6

5. அவர் மரித்தோரில் முதற்பலனானவர் - 1 கொரிந்தியர்15:2023.

6. சபை முதற்பேறானவரின் சங்கம் என அழைக்கப்படுகிறது - எபிரெயர் 12:23.

[7/22, 1:36 PM] Elango: *முதற்பலன் சேர்ப்பு பண்டிகை*

>> *இப்பண்டிகை எப்பொழுதும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறுகிறது. நிசான் மாதம் 17 ம் தேதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.*

>>  *இப்பண்டிகை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை சித்தரிக்கிறது.*

>> நித்திரையடைந்தவர்களில் முதற்பலனாக கிறிஸ்து இருக்கிறார். (1 கொரிந்தியர் 15:20).

>> பஸ்கா பண்டிகையின்போது மரித்த இயேசுக்கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

>> எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறின இஸ்ரவேலர்கள் மூன்றாம் நாளில் சிவந்த சமுத்திரத்தை கடந்தனர்.
>> நோவாவின் பேழை அரராத் மலையில் இதே நாளில் அமர்ந்தது.

ஏழாம்மாதம் *பதினேழாம் தேதியிலே* பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.   ஆதி. 8:4

>> இது விசுவாசியின் உயித்தெழும் சரீரத்தை பிரதிபலிக்கிறது.

[7/22, 1:38 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 22/07/2017* ☀

1⃣ பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட *இந்த முதற்பலன் சேர்ப்பு பண்டிகை என்பது என்ன❓*ஏன் கொண்டப்பட்டது❓

2⃣  *முதற்பலன் சேர்ப்பு பண்டிகையின் மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், இன்றைக்கு முதற்பலன் சேர்ப்பு பண்டிகையை குறித்து தியானிக்கலாம்*

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/22, 4:29 PM] Jeyaseelan Bro VT: *முதற்பலன்கள்  (லேவியராகமம்23:9-14).*

இப்பண்டிகை எப்பொழுதும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறுகிறது. நிசான் மாதம் 17 ம் தேதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை சித்தரிக்கிறது.

மற்றும் இப்பண்டிகை புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் மத்தியில் இடம் பெறுகிறது.
நித்திரையடைந்தவர்களில் முதற்பலனாக கிறிஸ்து இருக்கிறார். (1 கொரிந்தியர் 15:20).

பஸ்கா பண்டிகையின்போது மரித்த இயேசுக்கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறின இஸ்ரவேலர்கள் மூன்றாம் நாளில் சிவந்த சமுத்திரத்தை கடந்தனர்.
நோவாவின் பேழை அரராத் மலையில் இதே நாளில் அமர்ந்தது.  (ஆதி. 8:4).

இது விசுவாசியின் உயித்தெழும் சரீரத்தை பிரதிபலிக்கிறது.

[7/22, 7:53 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 22/07/2017* ☀

1⃣ பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட *இந்த முதற்பலன் சேர்ப்பு பண்டிகை என்பது என்ன❓*ஏன் கொண்டப்பட்டது❓

2⃣  *முதற்பலன் சேர்ப்பு பண்டிகையின் மூலம், தேவன் நமக்கு கற்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ன❓*

*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை தியானிக்கலாம், இன்றைக்கு முதற்பலன் சேர்ப்பு பண்டிகையை குறித்து தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/22, 9:15 PM] John Rajadurai Bishop VM: Pastor. Charles All your voice clippings are perfect.
May God bless you

[7/22, 9:38 PM] Elango: முதற்பலன் பண்டிகை குறித்தூ சில காரியங்களை நாம் கவனிக்கலாம்.

*முதற்பலன் பண்டிகை என்பது ஆண்டவரின் உயிர்ந்தெழுந்ததை காட்டுவதாக இருக்கிறது*

லேவியராகமம் 23:10-11
[10]நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, *அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.*

[11]உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

பாலஸ்தீனத்தில் அதாவது இஸ்ரவேலில் பிரதான  அறுவடை காலத்தில்,  யூதர்களின் ஏழாவது மாதம் சேர்ப்பின் பண்டிகை விளைச்சலையும் அறுவடையும் செய்வார்கள்.

இந்த முதற்பலன் கதிர்கட்டு எப்படி சேகரிக்கப்படுகிறது என்று பார்க்கலாம், இஸ்ரவேல் நாட்டிற்க்கு ஒருவர் சென்ற போது, இந்த முதற்கட்டு அறுவடை காரியங்களை குறித்து எழுதியிருந்தார்.

அவர் என்ன எழுதியிருந்தார் என்றால் *ஆபிப் மாதத்தில் நான் யோர்தானின் அழகிய கோதுமை வயல்களின் வழியாக வண்டி ஓட்டி சென்றேன்,  பிரதான அறுவடையின் உயரத்திற்க்கு மேலாக சில கோதுமை தண்டுகள்,  உயர்ந்து நிற்பதை கண்டேன், உள்ளூர் சகோதரர் ஒருவரிடத்தில் இதன் காரணத்தை கேட்டேன்.அவர் இது பிரதான கோதுமை அறுவடை காலத்திற்க்கு முன்பதாகவே முதிர்ச்சி அடைந்துவிட்டது அது தான் முதற்பலன் என்று விளக்கினார்* என்று பதிவில் எழுதினார்.

*இந்த கோதுமை தண்டுகள் மற்ற எல்லாவற்றோடும் நடப்பட்டிருந்தாலும், அறுவடை காலத்திற்க்கு முன்பாகவே நன்றாக வளர்ந்து, முதிர்ச்சியடைந்த கதிர்கட்டுகளை தான் முதற்பலன் என்று சொல்லி அதை அசைவாட்டு கொண்டு வந்து படைப்பார்கள். அதைதான் முதற்பலன் பண்டிகை என்று சொல்லி அழைக்கிறார்கள்.*

- @⁨Charles Pastor VT⁩

[7/22, 10:00 PM] Elango: குறித்த காலத்திற்க்கு முன்பதாகவே அறுவடை செய்யப்படுகிற அந்த அறுவடையை தான் முதற்பலன் என்று சொல்லி கொள்ளுகிறார்கள்.இஸ்ரவேலிலே பருவ நிலை மாற்றத்தினாலே இப்படியான நிலைமை ஏற்ப்படுகிறதாக சில வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

யோவான் 12:24
[24] *மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.*

இயேசுகிறிஸ்து தம்மை குறித்து சொன்னது👆🏻...

ஒரு சாக்கு மூட்டை நிறையா விதையை கொண்டு விதைக்கிறோம் என்றால்...அது இலட்சக்கணக்காண விதைகளை அது விளைவிக்க கூடியதாக அது காணப்படுகிறது.

இந்த விதை செத்த பின்பு உயிர்ந்தெழுகிற அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்று சொன்னால்..👇👇👇

மாற்கு 4:8
[8] *சிலவிதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.*

இயேசு தன்னுடைய மரணத்திற்க்கும், அடக்கம்பண்ணபடுவதற்க்கும் .. தன்னை ஒரு விதையாக விதைக்கப்பட்டதை அந்த வசனத்தில் சொல்கிறார்.

இயேசு ஒரூ விதையாக விதைக்கப்பட்டாலும், மரித்தோரிலிருந்து...உயிர்ந்தெழுகிற போது வெ.வி 20:4-6 👇👇👇

வெளிப்படுத்தின விசேஷம் 20:4-6
[4]அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
[5]மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
[6] *முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்;* இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

ஏசாயா தீர்க்கதரிசி,  இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து👇👇

ஏசாயா 26:19
[19] *மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.*

@⁨Charles Pastor VT⁩

[7/22, 10:13 PM] Elango: இயேசு மரித்த பின் பாதாளத்தில் இறங்கி சிறை கதவுகளை திறந்து மரணத்திலே சிறைவைக்கப்பட்டிருந்த திரளான பேர்களை விடுதலையாக்கினார்


மத்தேயு 12:40
[40] *யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.*

எபேசியர் 4:8-9
[8]ஆதலால், *அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி,* மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
[9]ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

சகரியா 9:11
[11] *உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.*

சங்கீதம் 107:14-15
[14] *அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.*

[15]கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,

ஏசாயா 25:8
[8] *அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.*

ஓசியா 13:14
[14]அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.

யோவான் 5:25
[25] *மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*

மத்தேயு 27:52-54
[52]கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
[53] *அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.*

[54]நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிரிச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

இந்த வசனங்களில் தெளிவாக தெரியும், ஆண்டவர் இயேசு மரித்து, அவர் உயிர்த்தெழும் போது திரளான ஒரு பெரிய பலனோடு கூட மிகுந்த விளைச்சலோடு அவர் உயிர்ந்தெழுந்ததை அந்த வசனங்கள் எல்லாம் காட்டும்.

@⁨Charles Pastor VT⁩

[7/23, 1:38 AM] Elango: 1 கொரிந்தியர் 15:20
[20] *கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.*

ஏற்கனவே இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் விதைக்கப்பட்டது ஒரு விதையை போன்று, ஒரு விதை விதைத்தால் அது ஒரே ஒரு கோதுமை மணியை கொடுக்காது...

இயேசு உயிர்ந்தெழுந்ததில் முதற்பலனாக இருந்தாலும்,  அவரில் அநேக பரிசுத்தவான்கள் முதற்பலனாக எழுந்தருளினார்கள் என்பதை தான் இந்த கதிர்கட்டு நமக்கு காட்டுகிறது.

இந்த முதற்பலன் பண்டிகையில் ஏதோ ஒரு கதிரை கொண்டு வந்து படைப்பதில்லை...கதிர் கட்டை கொண்டு வந்து படைப்பார்கள். 

இயேசுகிறிஸ்து அந்த கட்டிலே முதன்மையானவராக இருப்பார்., இயேசுவுக்கு பின்னாடி திரளான கதிர் கட்டு படைக்கப்படும். இது எல்லாமே தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட காரியங்கள். 

- @⁨Charles Pastor VT⁩

[7/23, 1:48 AM] Elango: ஆதியாகமம் 50:24-25
[24]யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; *ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி;*

[25]தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.

யாத்திராகமம் 13:19
[19] *மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான்.* தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.

*இதில் ஒரு பெரிய இரகசியமே அடங்கியிருக்கிறது*👆🏻👆🏻👆🏻👆🏻

இந்த சம்பவத்தை கூறி யேசேப்பு ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருக்க கூடும் என்று சொல்லுகிறார்கள், ஏனென்று சொன்னால் .. இயேசுவின் காலத்தில் நடக்கப்போகிற இந்த முதற்பலன் பண்டிகையை போல ஒரு பிரதான இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ...

1 தெசலோனிக்கேயர் 4:16
[16]ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது *கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.*

*பிரதான அறுப்புக்கு முன்பு,  முதற்பலனாகிய உயிர்ந்தெழுதல் நடக்கும்,  அதில் நான் பங்கு பெற வேண்டுமென்ற தீர்க்கதரிசன பார்வையோடு தான் என்னுடைய எலும்பை  கொண்டு போய் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் வையுங்கள் என்று தரிசனம் கண்டு சொன்னதாக அநேக வேத வல்லுனர்கள் சொல்லுகின்றார்கள்.*

@⁨Charles Pastor VT⁩

[7/23, 2:00 AM] Elango: பிரதானமான அறுவடை இஸ்ரவேல் தேசத்திலே, ஏழாவது மாதம் அதற்க்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிறது அது கூடார பண்டிகையின் காலத்தில்..அந்த காலத்தில் தான் பிராதான அறுவடை நிகழ்த்தப்படுகிறது...ஆனால் அதற்கு முன்பதாகவே ஆபிப் / நிஷான் மாதத்தில் , பிராதான அறுவடைக்கென்று விதைக்கப்பட்ட சில கதிர்களையே சில தேர்ச்சி பெற்று வளர்ந்து முதிர்ச்சி பெற்று ஓங்கி நிற்கிற சிலவற்றை முதற்பலனாக அறுவடை செய்து இந்த முதற்பலன் காணிக்கையை கொண்டு வந்து படைக்கிறார்கள் இந்த சம்பவந்தை இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலோடும்,  இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நடக்கும் உயிர்த்தெழுதலோடும் நாம் சம்பந்ம்படுத்தி நாம் பார்க்கும் போது ,பிராதான அறுவடையை குறித்து பேதுரு எழுதியிருக்கிறார். 

மத்தேயு 27:52-53
[52]கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
[53] *அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.*

*இது எல்லாம் முதற்பலன் பண்டிகைக்கு நிழலாக சொல்லப்பட்டதே.*👆🏻👆🏻👆🏻

*எல்லா பண்டிகையையும் இயேசுவை மையைப்படுத்தியே,  இயேசுகிறிஸ்து செய்யப்போவதை மகிமைப்டுத்தியே,  இயேசுவின் கிரியைகளையும் தெரிவிக்கும் ஒரு நிழலாகவே பண்டிகைகள் இருக்கிறது எபதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

- @⁨Charles Pastor VT⁩

Post a Comment

0 Comments