[7/20, 9:12 AM] Elango: 🐑 *இன்றைய வேத தியானம் - 20/07/2017* 🐑
1⃣ பஸ்கா பண்டிகை என்றால் என்ன❓பஸ்கா என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன❓
2⃣பஸ்கா பண்டிகையை எப்போது, எங்கே, எப்படி கொண்டாட வேண்டும்❓
3⃣பஸ்கா பண்டிகைக்கும், இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு என்ன❓
*வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையாக தியானிக்கலாம், இன்றைக்கு பஸ்கா பண்டிகையை மட்டும் தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* - https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline
*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[7/20, 9:17 AM] Christopher-jeevakumar Pastor VT: கொலோசெயர் 2: 16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
[7/20, 9:20 AM] Jeyasingh VM: பஸ்கா என்ற சொல்லிற்கு கடந்து போகுதல் என்பது பொருள்.Eng.ல் paas over.
[7/20, 9:22 AM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 5: 1 இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.
[7/20, 9:36 AM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 12: 14 அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
[7/20, 9:49 AM] Christopher-jeevakumar Pastor VT: II கொரிந்தியர் 5: 17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.
[7/20, 9:50 AM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 5: 7 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
[7/20, 9:52 AM] Jeyasingh VM: பஸ்கா என்றால் paas over கடந்து போகுதல் என்று பொருள். இஸ்ரவேலர் பஸ்கா அன்று இரவு எகிப்தை விட்டு கடந்து போனார்கள்.
புதிய ஏற்பாட்டு சபையும் பாவமாகிய எகித்தையும் அதன் வழிபாடுகளையும் முற்றிலும் விட்டுவிட்டால் பரலோக கானான் செல்ல முடியும்.
பஸ்கா என்றால் புதிய துவக்கம் or ஆரம்பம் என்று பொருள். அதுவரை அடிமை வாழ்வு வாழ்ந்தவர்கள் பஸ்கா அன்று புதிய சுதந்திர வாழ்க்கை வாழ துவங்கினார்கள்
பு.ஏ பஸ்காவாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பாவத்தில் வாழும் மனிதனுக்கு விடுதலையும் புது வாழ்வும் கிடைக்கிறது.
"ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்;பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின"(1கொரி5:17)
[7/20, 10:26 AM] Elango: 🐑 *இன்றைய வேத தியானம் - 20/07/2017* 🐑

[7/20, 11:10 AM] Jeyaseelan Bro VT: 💥பஸ்கா பண்டிகை💥
(லேவியராகமம்: 23:4,5; யாத்திராகமம்: 12:1-23; உபாகமம்: 16:1-3)
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான அந்த நாளில்தானே இஸ்ரவேலரால் எகிப்து தேசத்தில் ஆசரிக்கப்பட்டது. இது முதலாம் மாதம் 14 ம் தேதி (யாத்திராகமம்: 12:6). கர்த்தர் ஒரு இரட்சகனை எழும்பப் பண்ணினார். அவர் பெயர் மோசே. எகிப்தின் மேல் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பாக ஒன்பது வாதைகள் வந்து இறங்கின. (யாத்திராகமம்: 7 -11 அதிகாரங்கள்). பஸ்கா பண்டிகையானது, கடைசி வாதையாகிய எகிப்தில் தலைப்பிள்ளை சங்காரத்திற்கு முன்பு இஸ்ரவேலர் ஆசரித்தார்கள்.
*1. புதிய ஆரம்பம்: (யாத்திராகமம்: 12:2)*
இஸ்ரவேலருக்கு ஒரு புதிய நாள்காட்டி, காலண்டர் ஆரம்பமானது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம். அப்படியே நாம் மறுபடியும் பிறக்கும்போது எல்லாம் புதிதாகிறது. புதிய ஆரம்பத்தை மேற்கொள்கிறோம். (2கொரிந்தியர்: 5:17).
*2. வீட்டுக்கொரு ஆட்டுக்குட்டி: (யாத்திராகமம்: 12:3)*
இந்த ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. 1கொரிந்தியர்: 5:7 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறார். வீட்டிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினர்களுக்கும் ஆட்டுக்குட்டியோடு நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்.
*3. ஆட்டுக்குட்டியைப் பற்றிய தன்மைகள்: (யாத்திராகமம்: 12:5)*
அ) அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும்:
1பேதுரு: 1:18,19 - "நீங்கள் ஆசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல் குற்றமில்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று அறிந்திருக்கிறீர்களே"
கிறிஸ்து தூய்மையானவர், கறைதிரையற்றவர், குற்றமற்றவர், பழுதற்ற ஆட்டுக்குட்டி, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியானவருக்கு நிழலாட்டமாய் இருக்கிறது. (யோவான்: 1:29)
ஆ) ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டி:(யாத்திராகமம்: 12:5)
இளமையான ஆட்டுக்குட்டி குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. நாமும் தாழ்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
இ) நான்கு நாட்கள் அதை பரிசோதிக்க வேண்டும்:(யாத்திராகமம்: 12:2,6)
அது குற்றமில்லாத பழுதற்றதுதானா? என்பதைப் பரிசோதிக்க நான்கு நாட்கள் வேண்டும். அந்த ஆட்டுக்குட்டி குருடானதாகவோ, காயம் பட்டதாகவோ காணப்பட்டால் அதை உபயோகப்படுத்தக் கூடாது. அதேபோல கிறிஸ்து, பிதாவினாலும், பிலாத்துவினாலும், பிரதான ஆசாரியனாலும், சாத்தானாலும் சோதிக்கப்பட்டு களங்கமற்றவராக காணப்பட்டார்.
ஆட்டுக்குட்டியை பரிசோதிப்பதற்காக அதன் ரோமத்தை இழுத்துப்பார்ப்பார்கள். தேவபிள்ளையே! அப்படியே உன்னையும், உலகமும், சபையும், பின் மாற்றக்காரரும் சோதித்துப் பார்க்கக் கூடும்.
*4. ஆட்டுக்குட்டி கொல்லப்பட வேண்டும்; அதின் இரத்தம் பூசப்பட வேண்டும்: (யாத்திராகமம்: 12:5,7)*
இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தம் சிந்தப்படாவிட்டால் எந்த மனுஷனும் தேவனுக்கு முன்பாக அங்கீகரிப்பட முடியாது.
எபிரேயர்: 9:22 - "இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை." அந்த இரத்தம் பூசப்படவேண்டும். அந்த ஆட்டுக் குட்டியின் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து ஒரு ஈசோப்புத் தண்டில் வீட்டின் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற் சட்டத்திலும் தெளிக்க வேண்டும். (யாத்திராகமம்: 12:6,7,21,22).
பாத்திரத்திலுள்ள அந்த இரத்தம் யாரையும் பாதுகாக்கக் கூடியது அல்ல. ஆனால், சிலுவையில் நிறைவேற்றப்பட்ட கிரியையை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு அடையாளமாக இருக்கிறது. (ரோமர்: 3:25,26).
*5.எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படக் கூடாது:*
(யாத்திராகமம்: 12:46)*
ஒரு ஆடு கட்டுப்படாமல் அலைந்த திரிகிறதாய் இருந்தால், அதை அடங்கியிருக்கும் பொருட்டு மேய்ப்பன் எலும்புகளில் ஒன்றை முறிப்பதுண்டு. இது இஸ்ரவேல் மேய்ப்பர்களின் வழக்கம்.
கால் - நமது நடக்கைக்கு அடையாளம் (யோவான்: 19:33,36) (சங்கீதம்: 34:20)
*6. அதின் மாமிசம் தீவிரமாய் புசிக்கப்பட வேண்டும்: (யாத்திராகமம்: 12:8,11)*
யோவான்: 6:53-55 - "நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தை புசியாமலும் அவருடைய இரத்தத்தை பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்... என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது".
மாம்சத்தைப் புசிப்பது என்பது - வேத வசனத்தை தியானிப்பதற்கு அடையாளம். (சங்கீதம்: 1, லேவியராகமம்: 11:3). வேதவசனம் நம்மில் ஒரு பகுதியாக மாறும் வரை உட்கொள்ளப்பட வேண்டும்.
யாத்திராகமம்: 12:11 - அரைகள் கட்டப்பட வேண்டும் என்பது - புறப்படுவதற்கு அடையாளம். இரட்சிக்கப்பட்ட பின் உலகத்தை பின்னே தள்ளி கிறிஸ்துவுக்குள் முன்னேற வேண்டும். இரட்சிப்பிலே கூடாரமடித்து தங்கி விடாதே.
*7. இரத்தமே அடையாளம்:(யாத்திரகமம்: 12:12,13)*
"அந்த இரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன்" கல்வாரி சிலுவையில் நிறைவேற்றப்பட்ட கிரியையிலே தேவன் என்றென்றுமாய் திருப்தி அடைந்தார். நாம் இரத்தத்தால் (இயேசுவின்) மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம்.
பஸ்கா பண்டிகை கிறிஸ்துவின் மரணத்துக்கும் அடக்கத்துக்கும் நிழலாட்டமானது. இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்படுகிறோம். மறுபடியும் பிறக்கிறோம். பஸ்கா பண்டிகையை தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவிக்கிறோம்.
வாசித்துப் பாருங்கள்: 1பேதுரு: 1:18,19; எபேசியர்: 1:7; 1யோவான்: 1:7; ரோமர்: 5:9; 1கொரிந்தியர்: 6:19,20.
http://nesarin.blogspot.in/2012/12/blog-post_8.html?m=1
[7/20, 11:16 AM] Elango: *ஐஞ்சுருள் அல்லது மெகில்லோத் பல வித பண்டிகைகாலங்களில் வாசிக்கப்படுவன*
*உன்னதப்பட்டு - பஸ்கா பண்டிகை*
ரூத் - பெந்தெகொஸ்தே பண்டிகை
பிரசங்கி - கூடாரப்பண்டிகை
எஸ்தர் - பூரிம் பண்டிகை
புலம்பல் - கி.மு 586 ல் எருசலேம் எருசலேம் வீழ்ச்சியடைந்ததை ஆண்டு தோறும் நினவு கூறும்போது வாசிக்கப்படும் புஸ்தகம்.
[7/20, 11:21 AM] Elango: நம்முடைய பஸ்கா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே.
I கொரிந்தியர் 5:7 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் *நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.*
யோவான் 13:1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
லூக்கா 22:15 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: *நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.*
*சிலுவை பாடுக்கு முன்பு நம் ஆண்டவர் ஏன் பஸ்காவை புசிக்க இவ்வளவு ஆவலாக இருந்தார்? அப்படியென்றால் பஸ்கா என்பது எவ்வளவு முக்கியமான பண்டிகை!!!
[7/20, 11:35 AM] Elango: *பழைய ஏற்ப்பாட்டில்பஸ்கா பண்டிகையை குறித்து, தேவன் கட்டளையிட்டது* - ( பஸ்கா நிழலும் )
------------------------------------------------------------------------------------------------------
1. கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2. *இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.*
3. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: *இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.*
4. ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற் போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அயல் வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத் தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத் தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
5. *அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்துகொள்ளலாம்.*
6. அதை *இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து* இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
7. *அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,*
8. *அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.*
9. பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.
10. *அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.* *யாத்திராகமம் 12:1-11*
*புதிய ஏற்ப்பாட்டில் பஸ்கா பண்டிகையின் நிஜத்தை குறித்து, ஆண்டவர் இயேசு, கட்டளையிட்டது* ( நிஜம் பஸ்கா )

23. நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், *கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,24. ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.*
25. *போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.*
26. *ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.* 1 கொரிந்தியர் 11:23-32
[7/20, 11:53 AM] Elango: அருமையான விளக்கம்... நிசான் மாதம் 10 ம் தேதி ஆட்டை தேர்ந்தெடுத்தல், 14 ம் தேதி அடித்தல்....
[7/20, 11:54 AM] Elango: 15ம் தியதி புளிப்பில்லாத அப்ப பண்டிகை.... 16ம் தியதி முதல்பலன் பண்டிகை....
[7/20, 12:03 PM] Sam Jebadurai Pastor VT: இது இது விவாதத்திற்குரிய விஷயம். இயேசு கிறிஸ்து கல்லறையில் எத்தனை நாள் இருந்தார்?
[7/20, 12:04 PM] Elango: உண்மைத்தான் பாஸ்டர்😀
[7/20, 12:07 PM] Elango: ஆனா இது சரியா பாஸ்டர், இல்லையென்றால் தவறான விளக்கமா... நிசான் மாத பண்டிகைகளும், திகதிகளும், கர்த்தருடைய நிறைவேறுதலும்...
[7/20, 1:05 PM] Elango: 🐑 *பஸ்காப்பண்டிகை* - சரித்திரம் - நிழல்* 🐑
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
1⃣இப்பண்டிகை இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, விடுபட்ட அன்று ராத்திரியில் கர்த்தருடைய தூதனானவர் எகிப்தை கடந்து சென்று அவர்களின் தலைச்சன்கள் அனைத்தையும் சங்கரித்தார், அன்று இரவே இஸ்ரவேலர் மோசேயின் கீழ் எகிப்தைவிட்டு வெளியேறினர்.
2⃣ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஆண் ஆட்டுக்குட்டியை நிசான் மாதம் 14 ம் நாளில் அடிக்கப்படுவதற்கு, நான்கு நாட்கள் முன்னதாகவே கொண்டு வரப்படவேண்டும். அதன் எலும்புகள் ஒன்றும் முறிக்கப்படாவண்ணம் மிக கவனத்துடன் அதை அடித்து புசிக்கவேண்டும். (யாதிராகமம் 12:1-6)
3⃣ஆட்டுக்குட்டியை அடித்து அதை நெருப்பில் சுட்டு, அதை கசப்பான கீரையுடன் புசிக்கவேண்டும், அதில் விடியற்காலம் வரைக்கும் எதுவும் மீந்திருக்கக்கூடாது. ( யாதிராகமம் 12:7-10).
4⃣பஸ்கா பண்டிகையின் ஆரம்பத்தில், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை கதவு சட்டத்திலும், ஜன்னலின் சட்டத்திலும் பூச வேண்டும், அப்படி பூசப்பட்ட வீடு எகிப்தின் கடைசி வாதைக்கு உட்படாது. (யாதிராகமம் 12:21-28). எகிப்தின் மீது வந்த வாதைகள் அனைத்தும் அவர்கள் தேவர்கள் மீது வந்த வாதைகள் ஆகும்.
5⃣பஸ்கா பண்டிகை, ஆபிரகாமுக்கு அளித்த வாக்குத்தத்தின்படி, வருடாந்திரப்பண்டிகையாய் இருக்கிறது.
*புதிய ஏற்ப்பாட்டில் நிறைவேறுதல்: - நிஜம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
1⃣ *பலிக்கான ஆட்டுக்குட்டி கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைக் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 5:7)*
2⃣ கிறிஸ்து நிசான் மாதம் 14 ம் தேதி சிலுவையில் தொங்கி மரித்தார், அவர் தான் மரிப்பதற்கு நான்கு தினங்களுக்கு முன், நிசான் மாதம் 10 ம் தேதிக்கு முன்னரே எருசலேமில் பிரவேசித்தார்.
3⃣ ரோம சிப்பாய்கள் கள்ளரின் கால் எலும்பை முறிக்கும்போது, இயேசு மரித்து இருந்தார், ஆகையால் அவர் கால் எலும்பை அவர்கள் முறிக்கவில்லை. (யோவான் 19:32, 33).
4⃣ சுடப்பட்ட ஆட்டுக்குட்டி - நியாயத்தீர்ப்பையும், கசப்பான கீரை, - பாவம் அல்லது தோல்வி இவைகளை பிரதிபலிக்கிறது.
5⃣ ஆட்டுக்குட்டியை புசிப்பது - இயேசுக்கிறிஸ்துவின் கிரியையில் விசுவாசம் வைப்பதைக்காட்டுகிறது, ( கர்த்தருடைய மேஜையில் புசித்து பானம் பண்ணுவதை காட்டுகிறது)
6⃣ கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசத்தினால் தேவனின் இறுதி நியாயத்தீர்ப்பில் நாம் பாதுகாக்கப்படுகிறவர்களாய் இருக்கிறோம்.
*தற்பொழுது: - நாம் அனுசரித்து வருவது*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
1⃣ *ஒவ்வொருமுறையும் கர்த்தருடைய மேஜையில் பங்கு பெறும்பொழுது, கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய கிரியைகளை பின்னிட்டுப் பார்க்கிறோம். (1 கொரிந்தியர் 11:23-26).*
2⃣ இது விசுவாசியின் இரட்சிப்புக்கு முக்கியம் வாய்ந்ததாய் இருக்கிறது.
[7/20, 1:47 PM] Elango: 🐑 *இன்றைய வேத தியானம் - 20/07/2017* 🐑

[7/20, 2:51 PM] Elango: *பழைய ஏற்பாட்டில் நிழலாக இருந்த பஸ்கா பண்டிகையானது, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பஸ்கா தினத்தில் கி.பி. 32 நிறைவேறியது*
[7/20, 3:05 PM] Elango: 🐑🐑🐑🐑 ❣❣❣❣ *பஸ்கா பண்டிகைக்கும், இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு என்ன❓* ❣❣❣❣🐑🐑🐑🐑
பஸ்கா பண்டிகையானது ஆண்டவர் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்பிடப்படுகிறது, கி பி 32 ல் சரியாக பஸ்கா தினத்தில் கிறிஸ்து இதை நிறைவேற்றினார்.
*கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து நமது பஸ்காவாக பலியிடப்பட்டிருக்கிறார்.1 கொரிந்தியர் 5:7*
2⃣பஸ்கா ஆட்டுக்குட்டி பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக , யூதர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு கட்டிவைத்து அது பழுதற்றது என்பதை உறுதி செய்யப்படும்.
*அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்துகொள்ளலாம்.* யாத்திராகமம் 12:5
*இதன் நிறைவேறுதலாய் ஆண்டவர் கிறிஸ்து தன்னை குற்றமற்றவராகவும் பழுதற்றவராகவும் இவ்வுலகின் பாவத்தை சுமந்து தீர்க்கும் பஸ்காவுக்கு தகுதியுள்ளவரென்று நிரூபித்துக்காட்டினார்*
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், *எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.எபிரெயர் 4:15*
3⃣பழுதற்றது என்பதை ஊர்ஜிதம் செய்த குடும்பம் தங்கள் பாதுகாக்கப்பட அந்த ஆட்டுக்குட்டியை கொல்லவேண்டும். யாத்திராகமம் 12:6
*கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பூரணமானவராக காணப்பட்டு மனமுவந்து தன்னையே பலியாக அற்பணித்தார்*
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. எபிரெயர் 9:22
17. *நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.*
18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
4⃣பலி செலுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம் வாசலின் நிலைக்காலில் பூசப்படவேண்டும் (யாத்திராகமம் 12:7
8. கிறிஸ்துவின் மரணத்தை தனிப்பட்ட நிலையில் உணர்ந்து செயல்படவேண்டும். கிறிஸ்துவின் மரணத்தால் எல்லோரும் இரட்சிக்கப்பட்டுவிட்டனர் என்ற கூற்று உண்மையல்ல, *கிறிஸ்துவின் மீது விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டுமே நித்திய ஜீவன், மற்றவர்களுக்கு ஜீவனில்லை (மரணமே) தேவனுடைய கோபம் அவர்கள் மீது நிலை நிற்கும்.. யோவான் 3:36*
5⃣இரத்தத்தை ஒரு முறை பூசினால் போதும் அது நியாயத்தீர்ப்புக்கு விலக்கி காக்க வல்லதாய் இருந்தது. யாத்திராகமம் 12:13
10. கிறிஸ்துவின் மரணத்தை ஒரு முறை வாழ்வில் உணர்ந்து செயல்பட்டு விசுவாசித்தால் போதுமானது, அது நம்மை நியாயத்தீர்ப்பிலிருந்து பாதுகாக்க வல்லதாய் இருக்கிறது. ரோமர் 8:1
11. எகிப்தின் தலைச்சன்கள் அனைத்தும் இறந்து போயினர் காரணம் பாதுகாப்பிற்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை.. யாத்திராகமம் 12:29
12. தேவன் நமக்கு ஒரேபேரான குமாரனை தந்தருளி நம்மை மரணத்திலிருந்து இரட்சித்தார் யோவான் 3:16
[7/20, 5:08 PM] Arokiam VM: ஐயா அரைஞான் கயிறு இடுப்பில் அணியலாமா ஐயா.....?
🤔🤔🤔🤔
[7/20, 6:29 PM] Elango: 🐑 *இன்றைய வேத தியானம் - 20/07/2017* 🐑

[7/20, 6:46 PM] Paul Victor VT: குடல் இறக்க நோய் வராமல் தடுக்கவே அரை ஞான் கயிறு கட்டப்படுகிறது சகோதரரே..
[7/20, 7:02 PM] Levi Bensam Pastor VT: *அரையில் கட்ட வேண்டியது*👇👇👇👇👇👇👇👇👇👇✅ எபேசியர் 6:14
[14] *சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்,* நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
[7/20, 7:55 PM] Charles Pastor VT: 2 இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம். இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.
யாத்திராகமம் 12:2
3 நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
யாத்திராகமம் 12:3
6 அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
யாத்திராகமம் 12:6
7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
யாத்திராகமம் 12:7
8 அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12:8
12 அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
யாத்திராகமம் 12:12
13 நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன். நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
யாத்திராகமம் 12:13
[7/20, 7:56 PM] Charles Pastor VT: *இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம். இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.*
யாத்திராகமம் 12:2
👇[7/20, 7:58 PM] Charles Pastor VT: 13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்தில் பரதேசிகளாயிருந்து, அத் தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
ஆதியாகமம் 15:13
14 இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
ஆதியாகமம் 15:14
[7/20, 8:03 PM] Charles Pastor VT: 4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்தஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு *பெரிதான இரட்சிப்பைக்குறித்த*ு நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
எபிரேயர் 2:4
[7/20, 8:12 PM] Charles Pastor VT: 1 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
ஆதியாகமம் 3:1
2 ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்.
ஆதியாகமம் 3:2
3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
ஆதியாகமம் 3:3
4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை.
ஆதியாகமம் 3:4
5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
ஆதியாகமம் 3:5
6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
ஆதியாகமம் 3:6
7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
ஆதியாகமம் 3:7
8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
ஆதியாகமம் 3:8
9 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
ஆதியாகமம் 3:9
10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
ஆதியாகமம் 3:10
11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
ஆதியாகமம் 3:11
12 அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.
ஆதியாகமம் 3:12
13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரியை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
ஆதியாகமம் 3:13
14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.
ஆதியாகமம் 3:14
9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற *பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம*் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:9
[7/20, 8:20 PM] Charles Pastor VT: 17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5:17
[7/20, 8:22 PM] Charles Pastor VT: 3 நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் *வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக,* ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
யாத்திராகமம் 12:3
👇
[7/20, 8:27 PM] Charles Pastor VT: 9 இயேசு அவனை நோக்கி: *இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது*, இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
லூக்கா 19:9
[7/20, 8:30 PM] Charles Pastor VT: 31 அதற்கு அவர்கள்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
அப்போஸ்தலர் 16:31
33 மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அப்போஸ்தலர் 16:33
34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.
அப்போஸ்தலர் 16:34
[7/20, 8:42 PM] Charles Pastor VT: 3 நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: *இந்த மாதம் பத்தாம் தேதியில்* வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
யாத்திராகமம் 12:3
6 அதை *இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து,* இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
யாத்திராகமம் 12:6
[7/20, 8:50 PM] Charles Pastor VT: 46 அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
மத்தேயு 22:46
[7/20, 8:54 PM] Satya Dass VT: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக!
நாம் இன்று பஸ்காவை குறித்து தியானித்துக்கொண்டிருக்கிறோம்.
எண்ணாகமம் 9:13
[13] *ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.*
பஸ்காவை ஆசரிக்காதவன் அறுப்புண்டு போவான் எறு தேவன் கட்டளை இடுகிறார்.
அப்பொழுது சிலர் மோசேயிடம் வந்து, நாங்கள் பஸ்காவா ஆசரிக்காமல் போனால், நாங்கள் தீட்டின் காரணமாகவோ பாஸ்காவை ஆசரிக்க முடியாமல் போனால், அதற்க்காக நாங்கள் தேவனிடத்திலிருந்து தண்டனை பெற முடியுமா என்று கேட்கும் போது, அதற்கு மோசே பொறுங்கள் நான் கர்த்தரிடத்தில் கேட்டுவிட்டு சொல்லுகிறேன் என்று கர்த்தரிடத்தில் போகிறான்.. அதற்கு கர்த்தர் என்ன சொல்கிறார் என்றால் ...
எண்ணாகமம் 9:6-13
[6] *அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:*
[7]நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள்.
[8]மோசே அவர்களை நோக்கி: *பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.*
[9]கர்த்தர் மோசேயை நோக்கி:
[10]நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: *உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.*
[11]அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,
[12]விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், *அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும்,* பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.

கர்த்தர் இங்கே சொல்வது
*ஒரு எலும்பையும் முறிக்காமலும்,*
*ஒரு எலும்பையும் முறிக்காமலும்,*
*ஒரு எலும்பையும் முறிக்காமலும்,* .....
யோவான் 19:31-32
[31]அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
[32]அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.
யோவான் 19:33
[33]அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, *அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.*
அந்த தீர்க்கதரிசனம் இங்கே இயேசுகிறிஸ்துவில் நிறைவேறுகிறதை நாம் காண்கிறோம்👆🏻👆🏻👆🏻
- சகோ. சத்தியதாஸ்
[7/20, 8:58 PM] Sam Jebadurai Pastor VT: Exodus 12:24, 26-27
24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
26 "அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,"
27 "இது *கர்த்தருடைய பஸ்காவாகிய பலி;* அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள்."
[7/20, 9:09 PM] Charles Pastor VT: *பஸ்கா பண்டிகை என்றால் என்ன????*
(லேவியராகமம்: 23:4,5;
யாத்திராகமம்: 12:1-23; உபாகமம்: 16:1-3)
எகிப்தின்அடிமைத்தனத்திலிருந்துவிடுதலையானஅந்த நாளில்தானே இஸ்ரவேலரால் எகிப்துதேசத்தில் ஆசரிக்கப்பட்டது. இது முதலாம் மாதம்14 ம் தேதி (யாத்திராகமம்: 12:6). கர்த்தர் ஒருஇரட்சகனை எழும்பப் பண்ணினார்.
அவர் பெயர் மோசே. எகிப்தின் மேல் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பாக ஒன்பது வாதைகள் வந்துஇறங்கின. (யாத்திராகமம்: 7 -11 அதிகாரங்கள்). பஸ்கா பண்டிகையானது, கடைசி வாதையாகியஎகிப்தில் தலைப்பிள்ளை சங்காரத்திற்கு முன்புஇஸ்ரவேலர் ஆசரித்தார்கள்.
1. புதிய ஆரம்பம்: (யாத்திராகமம்: 12:2)
இஸ்ரவேலருக்கு ஒரு புதிய நாள்காட்டி, காலண்டர்ஆரம்பமானது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒருபுதிய சகாப்தத்தின் ஆரம்பம். அப்படியே நாம்மறுபடியும் பிறக்கும்போது எல்லாம் புதிதாகிறது. புதிய ஆரம்பத்தை மேற்கொள்கிறோம். (2கொரிந்தியர்: 5:17).
2. வீட்டுக்கொரு ஆட்டுக்குட்டி: (யாத்திராகமம்: 12:3)
இந்த ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவைவெளிப்படுத்துகிறது. 1கொரிந்தியர்: 5:7 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகபலியிடப்பட்டிருக்கிறார். வீட்டிலுள்ள ஒவ்வொருஅங்கத்தினர்களுக்கும் ஆட்டுக்குட்டியோடு நேரடித்தொடர்பு இருக்க வேண்டும்.
3. ஆட்டுக்குட்டியைப் பற்றிய தன்மைகள்: (யாத்திராகமம்: 12:5)
அ) அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்கவேண்டும்:
1பேதுரு: 1:18,19 - "நீங்கள் ஆசரித்து வந்த வீணானநடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகியவெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்குற்றமில்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின்விலையேறப்பெற்ற இரத்தத்தத்தினாலேமீட்கப்பட்டீர்கள் என்று அறிந்திருக்கிறீர்களே"
கிறிஸ்து தூய்மையானவர், கறைதிரையற்றவர், குற்றமற்றவர், பழுதற்ற ஆட்டுக்குட்டி, உலகத்தின்பாவத்தை சுமந்து தீர்க்கும்தேவாட்டுக்குட்டியானவருக்கு நிழலாட்டமாய்இருக்கிறது. (யோவான்: 1:29)
ஆ) ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டி: (யாத்திராகமம்: 12:5)
இளமையான ஆட்டுக்குட்டி குற்றமற்ற தன்மையைவெளிப்படுத்துகிறது. நாமும்தாழ்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்றுகர்த்தர் எதிர்பார்க்கிறார்.
இ) நான்கு நாட்கள் அதை பரிசோதிக்க வேண்டும்: (யாத்திராகமம்: 12:2,6)
அது குற்றமில்லாத பழுதற்றதுதானா? என்பதைப்பரிசோதிக்க நான்கு நாட்கள் வேண்டும். அந்தஆட்டுக்குட்டி குருடானதாகவோ, காயம்பட்டதாகவோ காணப்பட்டால் அதைஉபயோகப்படுத்தக் கூடாது. அதேபோல கிறிஸ்து,பிதாவினாலும், பிலாத்துவினாலும், பிரதானஆசாரியனாலும், சாத்தானாலும் சோதிக்கப்பட்டுகளங்கமற்றவராக காணப்பட்டார்.
ஆட்டுக்குட்டியை பரிசோதிப்பதற்காக அதன்ரோமத்தை இழுத்துப்பார்ப்பார்கள்.தேவபிள்ளையே! அப்படியே உன்னையும், உலகமும், சபையும், பின் மாற்றக்காரரும் சோதித்துப்பார்க்கக் கூடும்.
4. ஆட்டுக்குட்டி கொல்லப்பட வேண்டும்; அதின்இரத்தம் பூசப்பட வேண்டும்: (யாத்திராகமம்: 12:5,7)
இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தம்சிந்தப்படாவிட்டால் எந்த மனுஷனும் தேவனுக்குமுன்பாக அங்கீகரிப்பட முடியாது.
எபிரேயர்: 9:22 - "இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை." அந்த இரத்தம்பூசப்படவேண்டும். அந்த ஆட்டுக் குட்டியின்இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து ஒருஈசோப்புத் தண்டில் வீட்டின் நிலைக்கால்கள்இரண்டிலும் நிலையின் மேற் சட்டத்திலும் தெளிக்கவேண்டும். (யாத்திராகமம்: 12:6,7,21,22).
பாத்திரத்திலுள்ள அந்த இரத்தம் யாரையும்பாதுகாக்கக் கூடியது அல்ல. ஆனால், சிலுவையில்நிறைவேற்றப்பட்ட கிரியையை தனிப்பட்டமுறையில் ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒருஅடையாளமாக இருக்கிறது. (ரோமர்: 3:25,26).
5. எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படக் கூடாது: (யாத்திராகமம்: 12:46)
ஒரு ஆடு கட்டுப்படாமல் அலைந்த திரிகிறதாய்இருந்தால், அதை அடங்கியிருக்கும் பொருட்டுமேய்ப்பன் எலும்புகளில் ஒன்றை முறிப்பதுண்டு. இது இஸ்ரவேல் மேய்ப்பர்களின் வழக்கம்.

6. அதின் மாமிசம் தீவிரமாய் புசிக்கப்பட வேண்டும்: (யாத்திராகமம்: 12:8,11)
யோவான்: 6:53-55 - "நீங்கள் மனுஷகுமாரனுடையமாம்சத்தை புசியாமலும் அவருடைய இரத்தத்தைபானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளேஜீவன் இல்லையென்று மெய்யாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன்... என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது".
மாம்சத்தைப் புசிப்பது என்பது - வேத வசனத்தைதியானிப்பதற்கு அடையாளம். (சங்கீதம்: 1, லேவியராகமம்: 11:3). வேதவசனம் நம்மில் ஒருபகுதியாக மாறும் வரை உட்கொள்ளப்பட வேண்டும்.
யாத்திராகமம்: 12:11 - அரைகள் கட்டப்படவேண்டும் என்பது - புறப்படுவதற்கு அடையாளம். இரட்சிக்கப்பட்ட பின் உலகத்தை பின்னே தள்ளிகிறிஸ்துவுக்குள் முன்னேற வேண்டும். இரட்சிப்பிலே கூடாரமடித்து தங்கி விடாதே.
7. இரத்தமே அடையாளம்: (யாத்திரகமம்: 12:12,13)
"அந்த இரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்துபோவேன்" கல்வாரி சிலுவையில் நிறைவேற்றப்பட்டகிரியையிலே தேவன் என்றென்றுமாய் திருப்திஅடைந்தார். நாம் இரத்தத்தால் (இயேசுவின்)மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம்.
பஸ்கா பண்டிகை கிறிஸ்துவின் மரணத்துக்கும்அடக்கத்துக்கும் நிழலாட்டமானது. இயேசுகிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தைவிசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்படுகிறோம்.மறுபடியும் பிறக்கிறோம். பஸ்கா பண்டிகையைதனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவிக்கிறோம்.

[7/20, 9:12 PM] Charles Pastor VT: https://vedathiyanam.blogspot.in/2016/12/festival.html?m=1
[7/20, 9:18 PM] Charles Pastor VT: பஸ்கா பண்டிகை
கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1300 வருடங்களுக்கு முன்பாக இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களுடைய கூக்குரல் தேவனுடைய சமூகத்தை எட்டியதால், ஜனங்களை விடுவிக்கும்படி கேட்க மோசேயையும் அவருடைய அண்ணன் ஆரோனையும் பார்வோனிடம் அனுப்பினார். அந்தக் கர்வம் பிடித்த பார்வோன் அவர்களை விடுதலை செய்ய மறுக்கவே, தேவன் எகிப்து தேசத்தை அடுத்தடுத்து பல வாதைகளால் வாதித்தார். இறுதியாக, பத்தாம் வாதையைக் கொண்டு வந்தபோது எகிப்தின் முதற்பேறனைத்தும் செத்துமடிந்தன. அதற்குப் பிறகே அவர்களை விடுதலை செய்தான். பழைய ஏறப்பாட்டு பஸ்காவை யாத்திராகமம் 12
கி.மு. 1513-ஆம் ஆண்டு, ஆபிப் என்றழைக்கப்பட்ட எபிரெய மாதத்தின் (பிற்பாடு நிசான் என்றழைக்கப்பட்டது. நிசான் மாதம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருகின்றது) 14-ஆம் தேதி பஸ்கா பலிக்கு, 10-ஆம் தேதியிலிருந்தே அவர்கள் தயாராக வேண்டும். அதாவது பஸ்கா பலியிடுவதற்கு தேவையான ஆட்டுக்குட்டி, நான்கு நாட்களுக்கு முன்பாக தெரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். (யாத் 12:3) பலியாகப்போகும் இந்த ஆடானது அவர்களுடைய வீடுகளில் நான்கு நாட்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கும். இந்த நான்கு நாட்களில் அந்த வீட்டில் உள்ளவர்கள் பலிஆட்டுடன் பழகினாலும் அவர்களால் நான்காம் நாள் அந்த ஆடு பலியிடப்படும். *கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம் போலவும் இருக்கிறது* II பேதுரு 3:8-ல் வாசிகின்றோம். மேலும் மோசேவின் ஜெபத்தில், *தேவனுடைய பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது* (சங்கீதம் 90:4) என்று கூறுகின்றார். கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம் போல இருந்தால், நிசான் மாதம் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையான நான்கு நாட்கள், நாலாயிரம் வருஷத்தை குறிகின்றது. ஆதாம் முதல் இயேசுவின் பிறப்பு வரையிலான நாலாயிரம் வருடங்களை அது குறிகின்றது.
[7/20, 9:19 PM] Elango: பழைய ஏற்பாடு பஸ்கா ஆட்டுக்குட்டியையும், புதிய ஏற்ப்பாட்டில் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை சம்பந்தபடுத்தியும், சில விசயங்களை வரிசைப்படுத்தி சொல்கிறேன்.
கூடுமானவரை கவனிக்கவும், கர்த்தர் உங்களுக்கு சொல்ல வருகிற காரியங்களை புரிய வைக்கும் படி கிருபைக்காக நான் ஜெபிக்கிறேன்.
*கர்த்தர் வெறுமனே இந்த மாதம் உங்களுக்கு பிரதானமான மாதம், வருஷத்தின் முதலாவதான மாதம் என்று சொன்னது ஏதேச்சயாக சொல்லப்பட்டது இல்லை.*
இஸ்ரவேல் ஜனங்கள் 400 வருஷம் இரண்ட நூற்றாண்டிலிருந்து, அடிமைத்தனத்திலிருந்தும் கட்டுண்ட நிலையிலிருந்து விடுதலைக்கும்... ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து சுயாதீனத்திற்க்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள்.
இப்போது அவர்களுக்கு பின்னாக எகிப்தும், முன்னால் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசமும் இருக்கிற காட்சியை நீங்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக கொண்டு வந்து அதற்க்கு பின்பாக பதிவுகளை கவனிக்கவும்.
*கர்த்தர் அவர்களுக்கு புது மாதமும், புது வருஷமும் என்று ஏன் சொன்னார் என்றால், இதன் பிறகே அவர்களின் வாழ்க்கை துவங்குகிறது. 👉👆🏻இது இரட்சிக்கப்படுகிற நமக்கு அடையாளமாக சொல்லப்பட்டது*
*அந்த பஸ்கா அடிக்கப்பட்ட பிறகு தான் இஸ்ரவேலருக்கு சமாதானம் சந்தோஷம் மகிழ்ச்சி*
அதுவரைக்கும் அவர்களுக்கு கண்ணீரும் கவலையும் சமாதானமின்மையும் ... ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த அவர்கள் ஒரு பரிபூரண சமாதான மகிழ்ச்சியையும் பெற்றார்கள்.
*இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் இந்த பரிபூரண சந்தோஷம் சமாதானத்தை மகிழ்ச்சியை பெறுகிறார்கள் .. அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முதல் வருஷத்தின் முதல் மாதத்தின் துவக்கமாக இருக்கிறது. இதை அடையாளப்படுத்தவே கர்த்தர் இது உங்களுக்கு பிரதானமா முதலாம் வருஷம் முதல் மாதமாக இருக்கட்டும் என்கிறார், ஒரு புதிய யுகம் துவங்குகிறது என்று கர்த்தர் உங்களுக்கு சொல்கிறார்*
2 *இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம். இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.*
யாத்திராகமம் 12:2
- போதகர் சார்லஸ் @Charles Pastor VT
[7/20, 9:20 PM] Sam Jebadurai Pastor VT: Exodus 12:14 அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் *தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.*
[7/20, 9:52 PM] Elango: அந்த புது மாதம் வருஷம் யுகத்திற்க்குள் செல்லும்போது நிகழ்கிற நிகழ்வும், இரட்சிக்கப்பட்ட போகிற நமக்கு நிகழப்போகிற நிகழ்வுக்கும் இடையே நாம் சற்று கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் நமக்கு புரியும்.
எகிப்து இராஜாவின் தலை கிரிடத்தின் முன்னால் ஒரு பாம்பு வடிவில் சின்னம் இருக்கும்...இது எதற்கு அடையாளம் என்றால்...👇👇
ஆதியாகமம் 3:1
[1] *தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.* அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
ஆதியாகமம் 3:14
[14]அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: *நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;*
வெளிப்படுத்தின விசேஷம் 12:9
[9] *உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.*
இந்த சாத்தானுடைய சின்னமாகிய பாம்பைத்தான் அவன் தன் கிரீடத்தின் முன் பகுதியில் வைத்திருந்தான்.
*ஆவிக்குரிய அர்த்தத்தில் சாத்தானீன் ஆளுகைக்குள் உட்ப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்கள்..விடுதலையாக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டு...அவர்களை தேவன் வெளியே கொண்டு வந்தது போல ... நம்மையும் இந்த பாவ உலகத்தின் அதிபதியாகிய பிசாசின் கீழிருக்கிற நம்மையும் ... இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை விடுதலையாக்கி இரட்சித்து..வெளியே கொண்டுவந்து ஒரு புது வாழ்க்கைக்குள் நுழைவதை இந்த காரியம் நமக்கு வெளிப்படுத்தி காட்டுகிறது*
*சாத்தான் இஸ்ரவேல் ஜனங்களை பார்வோன் மூலமாக இஸ்ரவேல் ஜனங்களை அடிமையாக வைத்திருந்தவர்களை... மோசேயின் மூலமாக தேவன் விடுதலையாக்கினது போல...பாவத்தில் அடிமையாக வைத்திருந்த சாத்தானிடமிருந்து.. இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் நம்மை விடுதலையாக்குவதற்க்கு அடையாளமாக இந்த சம்பவம் காட்டுகிறது...*
எகிப்தில் அடிமையாக இருந்த ஜனங்களை மோசே மூலமாக அற்புதம் அடையாளம் மூலமாக அவர்களை விடுவித்து எகிப்திலிருந்து விடுதலையாக்கியது போல, ஆண்டவர் இயேசுகிறிஸ்து மூலமாக நம்மையும் தேவன் அடையாளம் அற்புதம் மூலமாக இரட்சித்து வழி நடத்துகிறார்.
*பழைய ஏற்பாட்டில் நடந்த எந்த ஒரு சம்பமும் செயலும் தற்ச்செயலாக நடந்தது என்று சொல்லமுடியாது, எல்லாமே திட்டமிட்டு, ஒரு நோக்கத்திற்க்காக தீர்க்கதரிசனமாக அமைந்திருக்கிறது என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்*
- போதகர் சார்லஸ் @Charles Pastor VT
[7/20, 9:57 PM] Elango: 🐑 *இன்றைய வேத தியானம் - 20/07/2017* 🐑

[7/20, 10:15 PM] Sam Jebadurai Pastor VT: *கர்த்தருடைய பஸ்கா என்பது வரலாற்றில் எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை விடுவித்த கர்த்தரின் விடுதலையை கூறுகிறது. இது நித்திய நியமனமாக தேவன் கொடுத்தது.*
(Exodus 2:23-24
23 "சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது."
24 "தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்."
Exodus 6:7-8
7 "உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்."
8 "ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்."
Exodus 13:3-4
3 "அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்."
4 ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.)
*இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால் எகிப்தாகிய இந்த உலகத்தில் பார்வோனாகிய சாத்தானுக்கு அடிமைகளாக இருந்த நம்மை கர்த்தர் விடுவித்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள ஆண்டவர் விரும்புகின்றார்.*
(John 8:34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.)
*இஸ்ரவேலர்கள் பஸ்கா ஆட்டுகுட்டியின் ரத்தத்தை தங்கள் வீட்டு நிலைக்கால்களில் பூசினதால் விடுவிக்கபட்டார்கள். இதை போலவே நாம் நமது ஆவிக்குரிய வாழ்வில் சிலுவை மரத்தில் இயேசு கிறிஸ்து சிந்திய ரத்தத்தால் நாம் பாவத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம். *இயேசு கிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டி*( John 1:29 "மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, *உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி* ."). *இயேசு கிறிஸ்து பஸ்கா ஆட்டுகுட்டி* (1 Corinthians 5:7 "ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய *பஸ்காவாகிய கிறிஸ்து* நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.") *இயேசு கிறிஸ்துவே வாசலாகவும் இருக்கிறார்( John 10:9 " *நானே வாசல்,* என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்."). *இந்த வாசல் வழியே பிரவேசித்தவர்கள் தேவனுடைய வீடாக இருக்கிறார்கள்* ( Hebrews 3:6 "கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், *நாமே அவருடைய வீடாயிருப்போம்* ."; .1 Peter 2:5 "ஜீவனுள்ள கற்களைப்போல *ஆவிக்கேற்ற மாளிகையாகவும்,* இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.") *இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கிறதாக இருக்கிறது.* (
Leviticus 17:11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; *ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.*
Ephesians 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே *இவருடைய(இயேசுவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.*
Colossians 1:14 "(குமாரனாகிய) அவருக்குள், *அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது."*
1 Peter 1:18-19
18 "உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,"
19 குற்றமில்லாத *மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.*
1 John 1:7 "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய *இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."*
Revelation 1:6 *"நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி,* தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்."
[7/20, 10:17 PM] Sam Jebadurai Pastor VT: வாசலை குறித்து இன்னும் ஆழமான பார்க்கலாம்
[7/20, 10:27 PM] Sam Jebadurai Pastor VT: மத்திய கிழக்கு நாடுகளில் வாசலுக்குள் பிரவேசிப்பது, வாசற்படியை தாண்டி வருவது எல்லாம் உடன்படிக்கையின் அடையாளங்கள்.
[7/20, 10:39 PM] Active Unknown VM: பரிசுத்த வேதாகமத்தினை அறிந்து கொள்வோமே
[7/20, 10:46 PM] Sam Jebadurai Pastor VT: 👆
இந்த படத்தை பாருங்கள்.
*ப* வை தலைகீழாக மாற்றி வேத்தது போலத்தான் ஒரு வீட்டின் நிலைக்கால்கள் அமைந்து இருக்கும். எபிரேய மொழியில் 22 மெய்யெழுத்துக்கள் உண்டு. அதில் முதல் எழுத்து א ஆலெப் கடைசி எழுத்து ת தவ். இந்த தவ் என்பதற்கு முடிவு என அர்த்தம் ஆகும். இது எகிப்தின் அடிமைதனத்திற்கு வாசல் நிலைக்கால்களில் பூசப்பட்ட ரத்தம் முடிவாக இருப்பதை குறிக்கும்.
Revelation 22:13 "நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்."
என இயேசு கிறிஸ்து கூறினார். அல்பா கிரேக்க முதல் எழுத்து ஒமேகா கிரேக்க கடைசி எழுத்து. இதை எபிரேயத்திற்கு மாற்றினால் நானே א ஆகவும் ת ஆகவும் இருக்கிறேன் என இயேசு கூறினார். இந்த இரு எழுத்துக்களும் சேர்ந்த את என்ற வார்த்தை எத் என அழைக்கப்படும். இந்த வார்த்தை ஒரு இணைப்பு சொல்லாக பயன்படுத்தபட்டாலும் 2,622 தடவை தோராவில் மட்டும் வருகிறது. பல இடங்களில் இது மொழி பெயர்க்க இயலாது விடப்பட்ட வார்த்தை ஆகும். வெளி 22:13 படி அதை மேசியாவாகிய கிறிஸ்து என நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை காண முடியும்
[7/20, 10:56 PM] Sujit VM: ஆங்கிலத்தில் is இருப்பது போல ஒரு இலக்கணத்திற்கு தான் இது
[7/20, 10:57 PM] Satya Dass VT: Thank you very useful to us
[7/20, 10:59 PM] Sam Jebadurai Pastor VT: எல்லா இடங்களிலும் இப்படி வரவில்லை.
[7/20, 11:00 PM] Sam Jebadurai Pastor VT: .சில இடங்களில் இது சுட்டுச் சொல்லாக வரவில்லை
[7/20, 11:01 PM] Sujit VM: நான் இதை அகராதியில் தான் பார்த்தேன். அதான் கூறினேன். எந்த இடம் என்று கூறினால் நலம்👍🏻👍🏻
[7/20, 11:03 PM] Sam Jebadurai Pastor VT: ஆதி 1:1
[7/20, 11:04 PM] Sujit VM: நன்றி🙏🏼👍🏻

Post a Comment
0 Comments