1⃣பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட பண்டிகைகள் என்னென்ன❓
2⃣பண்டிகைகளை கொண்டாட வேண்டுமென்று, தேவன் ஏன் கட்டளையிட காரணமென்ன❓
3⃣பண்டிகைகளுக்கும், இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு என்ன❓
*ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையாக தேர்ந்தெடுந்து தியானிக்கலாம், இன்றைக்கு பொதுவாக பண்டிகைகளை குறித்து தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* - https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline
*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com
*ஆசாரிப்புக் கூடாரம், பலிகளை பற்றி குழுவில் தியானித்த பழைய தியானங்களையும் கீழுள்ள லிங்கை சொடுக்கி படிக்கலாம்.👇*
https://vedathiyanam.blogspot.in/search/label/ஆசரிப்புக்கூடாரம்
[7/19, 10:48 AM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 2:16-17
[16]ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, *பண்டிகை* நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
[17]அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; *அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆
[7/19, 11:02 AM] Charles Pastor VT: *பன்டிகைகளின் அறிமுகம்:-*👇
[7/19, 11:06 AM] Charles Pastor VT: *முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,*
லேவியராகமம் 23:5 👇
[7/19, 11:07 AM] Charles Pastor VT: *சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:*
லேவியராகமம் 23:4
👇
[7/19, 11:30 AM] Stanley Ayya VT: பண்டிகைககள் ஆசாரிக்கும் போது நம் துன்பங்களை மறந்து சபை மக்களோடு இணைந்து மகிழ்வோடு அனுபவிக்க தேவன் தந்த அனுமதி என்று என் எண்ணத்தில் தோன்றுகிறது.
ஆனால் தேவ சட்டங்களுக்கு உட்பட்டதாக அமைதல் அவசியமே.
[7/19, 11:57 AM] Charles Pastor VT: 14 வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக.
யாத்திராகமம் 23:14
15 புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, *(பஸ்கா)* நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக. அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.
யாத்திராகமம் 23:15
16 நீ வயலின் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், *(பெந்தேகோஸ்தே)* வருஷமுடிவிலே நீ வயலின் உன் வேலைகளில் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் *(கூடார பன்டிகை)* ஆசரிப்பாயாக.
யாத்திராகமம் 23:16
[7/19, 12:00 PM] Tamilmani Ayya VT: தேவ பண்டிகையும் இயேசு கிறிஸ்துவின் வருகையும்
இரட்சிப்பு என்பது ஆதியாகமம் தொடங்கி இன்று வரை இருந்து வருகிற ஒன்றாகும். வெளிப்படுத்தின விசேஷம் வரை தேவ திட்டத்தை கால நேரத்திற்க்கு உட்படுத்தி சொல்லப்பட்டுள்ளது. சாதாரணமான உண்மை வேதத்தில் அடிக்கடி சொல்லப்பட்டது. வேதத்திலே மனந்திரும்புதல் ஓவ்வொருவருக்கும் சொல்லப்படவில்லை. காதுள்ளவன் சுவிசேஷத்தை கேட்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து திட்டவட்டமான ஒழுங்கை அதில் வைத்திருந்ததால்தான் அவர் அடிக்கடி
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் (மத்தேயு 11 :15) என்று சொல்லி வந்தார்.
முதற்க்கனி பண்டிகை
ஏழு ஒய்வு வாரங்கள் முடிந்து அடுத்தநாள் ஐம்பதாவது நாளன்று தேவன் முதற்பலனான இரண்டு அப்பத்தை காணிக்கையாக கொண்டுவர சொல்லுகிறார். அந்த நாளே
முதற்பலன் பண்டிகை - பெந்தேகொஸ்தே பண்டிகை எனப்படுகிறது. பெந்தேகொஸ்தே என்றால் 50 என அர்த்தம்.
ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஜம்பதாம் நாள் அன்று கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டுபங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,
(லேவியராகமம் 23 :16-17)
இதே பெந்தேகொஸ்தே நாளன்றுதான்
இயேசு கிறிஸ்து கூறியபடி
அப்போஸ்தலர்களும் விசுவாசிகளும் மொத்தம் 120 பேர் எருசலேமிலே மேல்வீட்டு அறையிலே காத்திருந்தார்கள். சகல நாட்டிலிருந்தும் யூதர்கள் வந்திருந்தார்கள்.
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
(அப்போஸ்தலர் 2 :4)
ஆக, கர்த்தர் நமக்களித்த ஏழு பண்டிகைகள் தேவ பண்டிகைகள் (லேவி 23: 44) என்றே வேதம் கூறுகிறது.
தேவன் எல்லாவற்றையும் காரணமாகவே வைத்திருக்கிறார். இந்த முதற்க்கனி பண்டிகை, அறுவடை நாள், வாரங்களின் பண்டிகை, பெந்தேகொஸ்தே என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக தற்போது இந்த நாள் திருச்சபையின் பிறந்தநாள் என்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் தியாகத்திற்க்குப்பிறகு பரிசுத்த ஆவியானவரின் திருவருகையாயிருந்ததால் ப. ஏ. காலங்களைவிட இது வரவேற்புக்குரிய நாளாயிருக்கிறது. முக்கியமாக இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததற்க்கு பிறகு வரும் 50வது நாள் என்பது சிறப்பானதாகும்.
தேவ பண்டிகைகள் (லேவி 23: 44) இரண்டு விதமான காரணங்களுக்காக முன்னமே குறிக்கப்பட்டதாயிருக்கிறது, வரக்கூடியதை வைத்து. நடப்பவைகளை நோக்கிப்பார்த்து நிறைவேறுதலைக் கொண்டு தீர்க்கதரிசனப்படி உள்ளது.
வசந்த கால நாட்களில் வரும் பண்டிகையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைப்பற்றியதாயுள்ளது.
பஸ்கா பண்டிகை : இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களுக்காக தியாகம் செய்தது. (யாத்ராகமம் 12:13, யோவான் 1:29) எகிப்தை கடப்பதும் தேவ ஆட்டுக்குட்டியும்.
அப்பம் பிட்கும் பண்டிகை நாள் : கிறிஸ்துவுக்குள் வந்தவர்கள் தங்கள் பாவத்தை பிரிக்கும் நாள்.
( யாத் 12:15, 1 கொரிந்தியர் 5:7-8)
முதற்பலன் அறுவடைபண்டிகை : கிறிஸ்துவுக்குள் வந்தவர்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் வருவது
இலையுதிர் கால பண்டிகை நாட்கள் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறிக்கிறது.
எக்காள பண்டிகை : மீண்டும் வருகிற இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.
(லேவி 23:23-25, மத்தேயு 24:30-31).
நியாயத்தீர்ப்பின் நாள் : கடைசி நியாயத்தீர்ப்பும் சாத்தானை இந்த உலகத்தின் அதிபதியை தண்டனைக்குட்படுத்துதல்
(லேவி 23:26-32, வெ. வி. 20:10)
கூடார பண்டிகை: இயேசு கிறிஸ்துவின் வருகைக்குப்பின் இரட்சிக்கப்பட்டவர்களை பரிசுத்தவான்களை கொண்டு நடக்கும் உண்மையான ஆயிர வருட அரசாட்சி
(லேவி 23:33-36, வெ. வி 20:2-4)
*அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.*
(லேவியராகமம் 23 :44)
[7/19, 12:33 PM] Tamilmani Ayya VT: *தேவ பண்டிகைள் எல்லாம் இயேசுவே*
வேதத்தில் பண்டிகைகள்
*தேவ பண்டிகைகள்* என்றே குறிக்கிடப்படுகிறது. இது யூதர்களுக்கான பண்டிகை மாத்திரம் அல்ல.
*1. பஸ்கா பண்டிகை – இயேசுவின் மரணம்*
2. அப்பம் பிட்கும் பண்டிகை
– பாவத்தின் வீட்டை விடுவித்தார்.
*3. முதற் கனிகள் பண்டிகை – இயேசு மரணத்திலிருந்து உயிர்ந்தெழுந்தார்.*
4. பெந்தேகொஸ்தே பண்டிகை
– தன் ஆவியை அனுப்பினார்.
*5. எக்காள பண்டிகை – இயேசு திரும்ப வருகிறார்*
6. பாவ நிவாரண நாள் பண்டிகை
– உலகை நியாந்தீர்க்கிறார்
*7. கூடாரப்பண்டிகை –ஆட்டுக்குட்டியானவர் கலியாணம்*
[7/19, 2:14 PM] Jeyasingh VM: பலியின் ஒழுங்குகள்
----------------
ப.ஏ.ல் பலி செலுத்துவதற்கென்று சில ஒழுங்குகள் இருந்தன. அந்த ஒழுங்குகளின்படி செலுத்தப்பட்ட பலிகளே தேவனால் அங்கீகரிக்கப்பட்டன மற்றவை தேவனால் புறக்கணிக்கப்பட்டன.அந்த ஒழுங்குகளில் சிலவற்றை இங்குபதிவு செய்கிறேன்.
1,தேவ கட்டளையின்படி பலியிட வேண்டும்.( யாத்8:27).
2,தேவன் குறித்த ஸ்தலத்தில் பலியிட வேண்டும்.( உபா12:13,14;உபா12:5-7;12:11).
உதாரணமாக யாக்கோபுக்கு பெத்தேல்(ஆதி35:1-7)
எல்கானாவுக்கு சீலோம் (1சாமு2:1-3).
ஆபிரகாமுக்கு மோரியாமலை (ஆதி22:2).
சவுல் கில்காலில்(1சாமு14:35;15:21;13:12).
தாவீதுக்கு எருசலேம் (2நாளா11:16).
கண்ட கண்ட இடங்களில் பலி செலுத்த கூடாது.(உபா12:13).
3,நலமானதையும் பழுதற்றதையும் பலியிட வேண்டும். (உபா17:1;15:21;1சாமு15:15;மல்1:13,14).(மல்1:8).
4,பலிபீடம் கட்டி அதன் மேல் தான் பலியிட வேண்டும்.,( உபா12:27;எஸ்றா3:2,5;யாத்20:24).(ஏசா56:7).(ஆதி35:1).
5,பலியிலே உப்பு தேவை. (லேவி2:13)(மாற்9:49).
உப்பில்லாத பலி தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை.
6,பலியிலே வாசனை தேவை. (ஆதி8:21;எசே20:41).
பலியிலல்ல பலியின் வாசனையில்தான் தேவன் பிரியமாயிருக்கிறார்.
மிருகங்கள் அக்கினியில் எரியும்போது தான் வாசனை வரும் காயினின் பலியில் வாசனை இல்லை.
7,பலியில் தேவ அங்கீகாரம் தேவை. (ஆதி4:4,5;லேவி7:18;ஆமோ5:22).
[7/19, 2:21 PM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 19/07/2017* ♦
1⃣பழைய ஏற்ப்பாட்டில் அனுசரிக்கப்பட்ட பண்டிகைகள் என்னென்ன❓
2⃣ *பண்டிகைகளை கொண்டாட வேண்டுமென்று, தேவன் கட்டளையிட காரணமென்ன❓*
3⃣பண்டிகைகளுக்கும், இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு என்ன❓
*ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையாக தேர்ந்தெடுந்து தியானிக்கலாம், இன்றைக்கு பொதுவாக பண்டிகைகளை குறித்து தியானிக்கலாம்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline Application )* - https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline
*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com
*ஆசாரிப்புக் கூடாரம், பலிகளை பற்றி குழுவில் தியானித்த பழைய தியானங்களையும் கீழுள்ள லிங்கை சொடுக்கி படிக்கலாம்.👇*
https://vedathiyanam.blogspot.in/search/label/ஆசரிப்புக்கூடாரம்
[7/19, 3:14 PM] Sam Jebadurai Pastor VT: Exodus 5:1 "பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்திரத்திலே எனக்குப் *பண்டிகை* கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்."
இங்கு காகஹ் חגג
என்ற வார்த்தை பண்டிகை என்பதற்கு பயன்படுத்த பட்டுள்ளது.இதற்கு மூல வார்த்தை கஹ் הוג .இதற்கு ஒருவரை ஒருவர் தழுவுதல், கூடி வருதல், ஒன்றாக கூடி வட்டமாக இருத்தல் என அர்த்தம் ஆகும்.
[7/19, 3:18 PM] Sam Jebadurai Pastor VT: வேதாகம பண்டிகைகளை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. தோராவில் கூறப்பட்டவை
2. பின்னாட்களில் சேர்க்கபட்டவை.
வேதாகம பண்டிகைகள் a)ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நினைவு கூறுவதாகவும், b)விவசாயம் மற்றும் தட்ப வெட்பங்களின் அடிப்படையிலும், c)தீர்க்கதரிசன அடையாளம் உடையதாகவும் இருக்கும்.
[7/19, 3:20 PM] Sam Jebadurai Pastor VT: தோராவில் மொத்தம் உள்ள பண்டிகைகளில் மூன்று பண்டிகைகள் கண்டிப்பாக சபை கூடி வர வேண்டும் என்ற அடிப்படையிலானது.
[7/19, 3:25 PM] Sam Jebadurai Pastor VT: Colossians 2:16 (TBSI) "ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக."
Colossians 2:17 (TBSI) அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
ஏழு முக்கியமான பண்டிகைகளை நாம் பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கலாம். அவைகளாவன
1. பஸ்கா
2. புளிப்பில்லாத அப்ப பண்டிகை
3. முதற் கனிகளை படைக்கும் பண்டிகை
4.வாரங்களின்(அறுவடை) பண்டிகை அல்லது பெந்தேகொஸ்தே பண்டிகை
5. எக்காள பண்டிகை
6. பாவ நிவாரண நாள்- (யோம் கிப்பூர்).
7. கூடாரப்பண்டிகை
[7/19, 3:28 PM] Jeyasingh VM: 16 நீ வயலின் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலின் உன் வேலைகளில் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
யாத்திராகமம் 23:16
Shared from Tamil Bible 3.8
https://goo.gl/xIdjuS
www.bible2all.com
[7/19, 3:31 PM] Sam Jebadurai Pastor VT: இவைகளில்
பஸ்கா, பெந்தேகோஸ்தே மற்றும் கூடாரப் பண்டிகைக்கு உடன்படிக்கை பெட்டி இருக்குமிடம்( ஆசரிப்பு கூடாரம்), எருசலேமுக்கு பிரயாணம் பண்ணி ஆண்கள் கூடி வர வேண்டும்.
[7/19, 3:31 PM] Satya Dass VT: 14 நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் 14 நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் *பின்மாரியையும்* பெய்யப்பண்ணி,
உபாகமம் 11:14
11:14
[7/19, 3:40 PM] Jeyasingh VM: அறுப்புகால பண்டிகை என்பது பெந்தெகொஸ்தே பண்டிகையை குறிக்கும்.
ப.ஏ அறுப்பின் பண்டிகையின்போது முதற்பலன்களை அறுவடைச்செய்தார்கள்
பு.ஏ. பெந்தெகொஸ்தே நாளில் 3000 ஆத்துமாக்களை அறுவடை செய்தார்கள்.
சேர்ப்பின் பண்டிகை என்பது கூடாரபண்டிகை ஆகும் ப.ஏ இப்பண்டிகையின்போது வயலின் பலனை சேர்த்தார்கள் பு.ஏ கூடார பண்டிகையாகிய ஆயிர வருட அரசாட்சியில் ஊழியத்தின் பலனாகிய பரிசுத்தவான்கள் கூட்டி சேர்க்கப்படுகிறார்கள்.
[7/19, 3:46 PM] Parthiban VM: SUPER..
[7/19, 3:52 PM] Sam Jebadurai Pastor VT: Leviticus 23:4 "சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் *குறித்தகாலத்தில்* கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:" ְּמוֹעֲדָֽם- மோயாய்டீம் என்ற வார்த்தை இங்கு குறித்த காலம் என மொழி பெயர்க்கபட்டபட்டுள்ளது. இதே வார்த்தை குறித்த காலம்(season), குறித்த நேரம்(time),குறித்த இடம்(place),குறித்த முறைப்படி (method or way) என மொழி பெயர்க்கபட்டபட்டுள்ளது. இந்த வார்த்தை மிகவும் முக்கியமான வார்த்தை
[7/19, 3:57 PM] Jeyasingh VM: அறுப்புகாலத்தின் முடிவில் சேர்ப்பின் பண்டிகை
கிருபையின்கால முடிவில் பரிசுத்தவான்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
அறுப்பின்(பெந்தெகொஸ்தே) பண்டிகையின்போது முதற்பலன்கள் சேகரிக்கப்பட்டது.
பெந்தெகொஸ்தே நாளில் ஆவியின் முதற்பலன்களாகிய ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்பட்டார்கள்.
சேர்ப்பின் பண்டிகையாகிய கூடாரபண்டிகை அறுவடையின் முடிவில் ஏழுநாள் கொண்டாடப்பட்டது
புதிய ஏற்பாட்டில் கிருபையின்கால முடிவில் ஏழு ஆண்டுகள் மத்திய ஆகாயத்தில் கலியாணவிருந்து.
[7/19, 4:02 PM] Sam Jebadurai Pastor VT: Numbers 9:2 *குறித்த காலத்தில்* இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள்.
Numbers 9:3 இந்த மாதம் பதினாலாந்தேதி *அந்திநேரமான* வேளையாகிய *குறித்த காலத்தில்* அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
Genesis 22:3 "ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் *குறித்த இடத்திற்குப்* புறப்பட்டுப்போனான்."
Deu 16:6 Tamil உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,
[7/19, 4:03 PM] Sam Jebadurai Pastor VT: எனது பதிவுகளை தொடர்ச்சியாக படித்தால் நான் கூறுவது புரியும்
[7/19, 4:09 PM] Jeyasingh VM: ப.ஏ.பஸ்கா பண்டிகை
எகிப்தில் ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டதை நினைவுகூருதல்
பு.ஏ பஸ்காவாகிய இயேசுவின் மரணத்தை நினைவுகூருதல்
பஸ்காஆடு பழுதற்றது.இயேசு பாவமில்லாதவர்,பழுதற்றவர்,குற்றமில்லாதவர்,மாசற்றவர்
பஸ்காஆடு ஒருவயது ஆண் இயேசு பூரணபுருஷன்.
பஸ்காவில் அப்பமும் கசப்பான கீரையும் இது இயேசுவின் பாடுகள்.
[7/19, 4:12 PM] Jeyasingh VM: பஸ்கா சூரியன் அஸ்தமித்தபோது அடிக்கப்பட்டது.
இயேசு மரித்தபோது சூரியன் அந்தகாரப்பட்டது.(அஸ்தமித்தது).
[7/19, 4:23 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 24:32
[32]அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, *வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே🔥🔥🔥🔥🔥 கொழுந்துவிட்டு எரியவில்லையா* என்று சொல்லிக்கொண்டு,👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
[7/19, 4:25 PM] Elango: ஏழு பண்டிகைகள்
--------------------------
*பண்டிகைகள் இரண்டு வகைகளாக பிரிக்கலாம் - முன்மாரி , பின்மாரி*
*முன்மாரி - ஆண்டவரின் முதல் வருகையின் குறிக்கிறது*
பஸ்கா பண்டிகை - கிறிஸ்து அடிக்கப்படுதல்
புளிப்பில்லாத அப்பம் பண்டிகை - புளிப்பு பாவத்தை குறிக்கிறது, பாவத்திலிருந்து சுத்திகரித்தார்.
முதற்கனி பண்டிகை - கிறிஸ்துவின் உயிர்ந்தெழுதல் colossians 1:18 18.
*பெந்தேகோஸ்தே பண்டிகை , Penta 50 அப்போஸ்தலர் 2:1 - சபை நிறுவியது*
*பின்மாரி - ஆண்டவரின் இரண்டாம் வருகையின் குறிக்கிறது*
எக்காள பண்டிகை - இரண்டாம் வருகை I_Thessalonians 4:15-16
பாவ நிவராண நாள் - யூதர்களின் இரட்சிப்பு Romans 11
கூடார பண்டிகை - புதிய வானம் புதிய பூமி Leviticus 23:43, Ishaiah 65:15
- சகோ. சத்தியதாஸ் @Satya Dass VT
[7/19, 5:05 PM] Sam Jebadurai Pastor VT: *பண்டிகைகளை படிக்க வேண்டிய அவசியம்*
*1. தேவ ஆவியானவரால் எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமத்தில் இது இருக்கிறது. இவைகள் தேவனால் ஏற்படுத்தபட்டவைகள். இவைகளை கற்றுக் கொள்ளும் போது நாம் தேவனுக்குள் தேறுகிறோம்.*
2 Timothy 3:16-17
16 "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,"
17 "அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. "
*2. இந்த பண்டிகைகள் கிறிஸ்துவை கற்றுக் கொள்ள கொடுக்கபட்டவைகள்.*
Colossians 2:16-17
16 "ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக."
17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
Hebrews 10:1 "இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்தவருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது."
*3. தேவனுடைய மீட்பின் திட்டத்தில் நடக்கும் முக்கியமான சம்பவங்களை காட்டும் தீர்க்கதரிசனங்களாக இந்த பண்டிகைகள் உள்ளன.*
1 Corinthians 10:1-6, 11
1 "இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்."
2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
3 எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
4 "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே."
5 "அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்."
6 "அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது."
11 இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
*4. இந்த பண்டிகைகளை நாம் அறிந்து கொண்டு தேவனுடைய திட்டத்தை சரியாக அறிந்து அவரோடு நாம் சரியான ஐக்கியம் கொள்ள இயலும்.*
Romans 15:4 "தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது."
*5. இந்த பண்டிகைகள் தோராவின் பகுதி. தோரா என்றால் அறிவுரைகள் வாழ்க்கை நெறிமுறைகள் என அர்த்தம். இவைகள் இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை நடத்தும் நல்ல ஆசிரியர் அல்லது உபாத்தியர் ஆகும்.*
Galatians 3:24 "இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது."
*6. வேதாகம பண்டிகைகள் கிறிஸ்துவை பற்றியும் அவர் மூலம் உலகத்தில் நடக்கும் மீட்பின் திட்டத்தையும் கூறுபவை.*
Psalms 40:6-8
6 "பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை."
7 "அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், _புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது;"_
8 "என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்."
Hebrews 10:7 "அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்."
*7. இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் தம்மை குறித்து கூறப்பட்டவைகளை நிறைவேற்றவே இவ்வுலகில் வந்தார். [பழைய ஏற்பாடு மோசேயின் ஆகமங்கள்(தோரா), தீர்க்கதரிசனங்கள்(நெஃவ்வீம்), எழுத்துக்கள்( சில சமயம் சங்கீதம்,வேத வாக்கியம் என உருவகபடுத்தி கூறப்படும்: கெத்தூவீம்) என மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது]*
Luke 24:26-27
26 "கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,"
27 மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
John 5:46-47
46 "நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே."
47 அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
*8. பண்டிகைகள் பரலோகத்தின் நிழலாக, மாதிரியாக பூமியில் இருக்கிறது.*
Hebrews 8:1-2, 5
1 "மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,"
2 "பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு."
5 "இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்."
Hebrews 9:8-9, 23
8 "அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்."
9 அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.
23 "ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே."
Exodus 25:8-9, 40
8 "அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக."
9 "நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக."
40 மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.
Exodus 26:30 இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.
Ezekiel 43:10-12
10 "மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்."
11 "அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன்வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும், அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்கு முன்பாக எழுதிவை."
12 ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.
*9. தேவன் இவ்வுலகில் இருப்பவைகளை கொண்டு ஆவிக்குரியவைகளை விளக்கி உள்ளார்.*
1 Corinthians 15:46-47
46 "ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது."
47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
*10. காண்கிறவைகளை படிக்கும் போது காணப்படாதவைகளான நித்தியமானவைகளை நாம் அறிந்து கொள்ள இயலும்.*
1 Corinthians 2:9-13
9 "எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;"
10 "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்."
11 "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."
12 "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்."
13 "அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்."
2 Corinthians 4:18 "ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். "
[7/19, 5:08 PM] Sam Jebadurai Pastor VT: *குறித்த காலம்*
Galatians 4:5 "காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்."
Acts 17:31 "மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்."
[7/19, 5:13 PM] Sam Jebadurai Pastor VT: *குறித்த இடம்*
Deuteronomy 16:2, 6, 9-11, 13-16
*பஸ்கா*
2 "கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக."
6 "உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,"
*பெந்தேகோஸ்தே*
9 ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.
10 "அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,"
11 "உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,"
*கூடாரப் பண்டிகை*
13 "நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாள் ஆசரித்து,"
14 "உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;"
15 "உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழு நாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக."
16 "வருஷத்தில் மூன்று தரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்."
*குறித்த இடம் எருசலேம்*
2 Kings 21:4 "எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,"
[7/19, 5:29 PM] Sam Jebadurai Pastor VT: இந்த பஸ்கா,பெந்தேகோஸ்தே, கூடார பண்டிகைகள் தேவன் தெரிந்து கொண்ட ஸ்தலமான எருசலேமில் கொண்டாடப்பட வேண்டும். ஏனெனில் பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய
இயேசு கிறிஸ்துவின் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிரோடு எழுந்தது எருசலேமில் தான்.
பரிசுத்த ஆவியானவர் தம்மை விசுவாசித்தவர்கள் மேல் பெந்தேகோஸ்தே நாளில் இறங்கி வந்ததும் எருசலேமில் தான்.இயேசு கிறிஸ்து
மீண்டும் எருசலேமில் உள்ள ஒலிவ மலையில் தான் வந்து இறங்க போகிறார். (
Zechariah 14:4 "அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்."). இயேசு கிறிஸ்து வரும் முன்பு எல்லோருடைய கவனமும் எருசலேமுக்கு நேராக திரும்பும். அது ஆண்டவர் தெரிந்து கொண்ட ஸ்தலம்.
Zechariah 12:2-3
2 "இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப்போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும்."
3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
இந்த வசனத்தின் படி தேவாலயம் அமைந்து இருந்த இடத்திற்காக சீக்கிரம் ஒரு தத்தளிப்பு வரும். ஏனெனில் அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு மூன்றாவது முக்கிய புனித ஸ்தலம். அங்கே al-Aksa Mosque என்ற மசூதி உள்ளது. அதை இடித்து மீண்டும் வரலாற்றில் கூறப்பட்ட எருசலேம் தேவாலயத்தை கட்ட இஸ்ரயேல் முயற்சி மேற்கொண்டு உள்ளது.
பின் குறிப்பு: கடந்த வெள்ளிக்கிழமை அந்த மசூதி இஸ்ரவேல் அரசால் பூட்டப்பட்டது. ஆகவே இஸ்லாமிய நாடுகள் கொதித்து போய் உள்ளன.
[7/19, 5:51 PM] Elango: *அங்கே al-Aksa Mosque என்ற மசூதி உள்ளது. அதை இடித்து மீண்டும் வரலாற்றில் கூறப்பட்ட எருசலேம் தேவாலயத்தை கட்ட இஸ்ரயேல் முயற்சி மேற்கொண்டு உள்ளது. பின் குறிப்பு: கடந்த வெள்ளிக்கிழமை அந்த மசூதி இஸ்ரவேல் அரசால் பூட்டப்பட்டது. ஆகவே இஸ்லாமிய நாடுகள் கொதித்து போய் உள்ளன* 🙏🏻🙏🏻🙏🏻
[7/19, 6:04 PM] Tamilmani Ayya VT: சங்கீதம் 122: 6
*எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.*
[7/19, 6:05 PM] Tamilmani Ayya VT: உலகத்தின் காலக்கடியாரம் எருசலேம்.
[7/19, 6:10 PM] Sam Jebadurai Pastor VT: எருசலேமுக்கு ஒரே சமாதானம் மீண்டும் இயேசு கிறிஸ்து வரும் போது தான் வரும். அவரே சமாதானப்பிரபு. எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டுபவர்கள் மாரநாதா என இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக ஜெபிக்கிறார்கள்.
Isaiah 9:6 "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, *சமாதானப்பிரபு* என்னப்படும்."
Revelation 22:20 "இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், *கர்த்தராகிய இயேசுவே, வாரும்."*
[7/19, 7:18 PM] Charles Pastor VT: ஏழு பண்டிகைகள்
லேவியராகமம்: 23:4-43
1. பஸ்கா பண்டிகை
2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை
3. முதற்பலனாகிய கதிர்கட்டு பண்டிகை - முதலாம் மாதம்
4. பெந்தெகொஸ்தே பண்டிகை - மூன்றாம் மாதம்
5. எக்காளப் பண்டிகை
6. பாவ நிவாரணப் பண்டிகை
7. கூடாரப் பண்டிகை - ஏழாம் மாதம்
இந்த ஏழு பண்டிகைகளையும் ஆசரிக்க வேண்டுமென்று இஸ்ரவேலருக்கு தேவன் கட்டளை கொடுத்தார். ஏழு என்பது பரிபூரணத்தைக் (முழுமையை) குறிக்கும்.
இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைகள் அனைத்தும் இந்த ஏழு பண்டிகைகளைச் சுற்றியே இருந்தது.
இதில் பெரிய பண்டிகைகள்: (யாத்திராகமம்: 23:14-17)
1. பஸ்கா பண்டிகை
2. பெந்தெகொஸ்தே பண்டிகை
3. கூடாரப் பண்டிகை
இந்த மூன்று பண்டிகை தினங்களிலும் சமஸ்த இஸ்ரவேலரின் சகல ஆண் மக்களும், குழந்தைகளும் கர்த்தருக்கு காணிக்கைகளோடு கூடி வர வேண்டும்.
பண்டிகைகள் சில ஒப்பீடு:
அ) ஆசரிப்பு கூடாரத்தின் மூன்று பாகங்களும், மூன்று பண்டிகைகளுக்கு அடையாளமாக இருக்கிறது.
1. மகா பரிசுத்த ஸ்தலம் - கூடாரப் பண்டிகை
2. பரிசுத்த ஸ்தலம் - பெந்தேகொஸ்தே பண்டிகை
3. பிரகாரம் - பஸ்கா பண்டிகை
ஆ) பஸ்கா பண்டிகை - நியாயப் பிரமாணம் - இரட்சிப்பு
பெந்தெகொஸ்தே பண்டிகை - சபை - பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
கூடாரப் பண்டிகை - 1000 வருட அரசாட்சி - கடைசிக் கால எழுப்புதல்
[7/19, 8:28 PM] Satya Dass VT: 28 இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும், இந்தப் *பூரீம் என்னும் பண்டிகை நாட்கள*் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.
எஸ்தர் 9
[7/19, 8:50 PM] Sam Jebadurai Pastor VT: இதிலே பின்னாட்களில் சேர்க்கபட்ட பண்டிகைகள்
1. பூரிம் பண்டிகை
இஸ்ரவேலர்கள் பெர்சியாவில் ஆமானால் அழிக்க தீர்மானிக்கபட்ட போது தேவன்கொடுத்த விடுதலை மற்றும் ஜெயத்தை நினைவு கூறும் பண்டிகை.
2. ஹணுக்கா பண்டிகை
விளக்குகளின் பண்டிகை எனவும் இது அழைக்கபடும். மக்கபெயர் காலத்தில் செலுசி மன்னன் அன்டியோகஸ் IV க்கு எதிராக புரட்சி செய்து வெற்றி கண்டதையும் இரண்டாவது தேவாலயத்தை சுத்திகரித்து, தொடர்ந்து 8 நாட்கள் ஒரு நாள் மட்டுமே எரிய போதுமான எண்ணெயில் தேவாலய குத்து விளக்கு எரிந்ததை கொண்டாடும் பண்டிகை.
[7/19, 9:20 PM] Elango: இன்றைக்கு *பண்டிகைகளை குறித்த* தியானம் சகோ. குமார்
[7/19, 9:26 PM] Sam Jebadurai Pastor VT: அடுத்து பண்டிகைகளை பற்றி குறித்த காலம் பற்றி படிக்கும் போது நாம் நினைவு வைக்க வேண்டியது வேதாகம காலண்டர் அதாவது நாட்காட்டி முறை...
[7/19, 9:29 PM] Sam Jebadurai Pastor VT: நாட்காட்டியை இரண்டாக பிரிக்கலாம்
1. பொது நாட்காட்டி
2. சமய நாட்காட்டி
[7/19, 9:49 PM] Jeyaseelan Bro VT: 💥பண்டிககளின் சுருக்கம்:💥
*பஸ்கா பண்டிகை:* கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பஸ்கா தினத்தில் நிறைவேறியது கி.பி. 32.
*புளிப்பில்லா அப்பப்பண்டிகை:* புளிப்பில்லா அப்பப்பண்டிகைநாளில் கிறிஸ்து அடக்கம்பண்ணப்பட்டபோது நிறைவேறியது கி.பி. 32
*முதற்பலனை சேர்க்கும் பண்டிகை:*
முதற் பலனை சேர்க்கும் நாளில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த போது நிறைவேறியது. கி.பி 32.
*பெந்தெகொஸ்தே பண்டிகை:*
யூதர்களின் யுகம் நிறைவடைந்த பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது. கி.பி 32.
*எக்காளப்பண்டிகை :* சபை எடுத்துக்கொள்ளப்படும்போது நிறைவேறும்.
*பிராயச்சித்தப்பண்டிகை:*
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது நிறைவேறும்.
*கூடாரப்பண்டிகை:* கிறிஸ்துவின் ஆயிரவருட ஆழுகையின் போது நிறைவேறும்.
பவுல் முதல் நான்கு பண்டிகைகளும் எட்டு வாரகாலங்களில் கி.பி. 32 ல் எழுத்தின்படி நிறைவேறியதை கண்டவராய் இருக்கிறார். "சபை எடுத்துக்கொள்ளப்படும், சந்ததியில்" மற்ற பண்டிகளும் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை. (1 தெசலோனிக்கேயர்4:13-18, 2 தெசலோனிக்கேயர் 2:1).
[7/19, 10:14 PM] Elango: 3 பிரதான பண்டிகைகளை அனுசரிக்கும் படி இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் சொல்லியிருந்தார்.
1⃣பஸ்கா
2⃣பெந்தேகோஸ்தே
3⃣கூடார பண்டிகை
மூன்றும் பிரதான பண்டிகையாக கொண்டாடப்பட வேண்டுமென்று கர்த்தரால் சொல்லப்பட்டிருந்தது.
பஸ்காவை தொடர்ந்து இரண்டு பண்டிகையும்.
கூடார பண்டிகையை முன்பதாக இரண்டு பண்டிகையும்,
பெந்தேகோஸ்தே ஒரு தனி பண்டிகையாகவும், மொத்தம் 7 பண்டிகைகளும் கொண்டாடப்பட்டன.
ஆபிப் என்கிற எபிரேய மாதம் ( அதாவது நமக்கு ஏப்ரல் மாதம்) இந்த மாதத்தில் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்படும்.
இந்த 1⃣பஸ்கா பண்டிகையை தொடர்ந்து, 2⃣புளிப்பில்லாத அப்பப்பண்டிகையும் 7 நாள் கொண்டாடப்படும்.
அதை தொடர்ந்து 3⃣முதற்பலனாகிய கதிர்கட்டு காணிக்கை பண்டிகை கொண்டாடப்படும்.
இது மூன்றும் தொடர்ச்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகள்.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[7/19, 10:41 PM] Elango: *இந்த தியானத்தில் அநேகருக்கு கேள்வி எழும்பும், இந்த பண்டிகைகளை குறித்து ஏன் படிக்க வேண்டும், இயேசுதான் வந்து விட்டாரே, பண்டிகைகள் நிழல்தானே அது நமக்கு ஏன் என்று யோசிப்பதுண்டு*
ஆவிக்குரிய பொக்கிஷத்தை திறக்க வேண்டும் என்று சொன்னால் நமக்கு சாவி தேவைப்படும்.
அந்த பொக்கிஷம் யாரென்றால் இயேசுகிறிஸ்துவே..
பண்டிகைகள் என்பது அந்த பொக்கிஷத்தை திறக்கும் திறவுகோல்.
*எவ்வளவு பெரிய ஆண்டவர் எப்படி ப்ளான் பண்ணி இவைகளை செய்திருக்கிறார்*
1⃣பண்டிகைகள் தேவனோடு உள்ள உறவை வலுப்படுத்தும்.
2⃣பண்டிகைகளை குறித்த காலத்தில் கொண்டாட வேண்டும்.
லேவியராகமம் 23:1-6
[1]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
[2]நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
[3]ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
[4] *சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:*👇👇
[5]முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,
[6]அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
3⃣ இயேசுகிறிஸ்துவின் மரணம், அவரை அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல், அவர் எப்பொழுது பரிசுத்த ஆவியை அருளுவார், எப்பொழுது பரிசுத்தவான்களை கூட்டி சேர்ப்பார், அவர் எப்பொழுது திரும்ப வருவார், அவர் வருகை எப்படி நடக்கும், 1000 வருட அரசாட்சி எப்படியிருக்கும்... இப்படி பல காரியங்களை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. *பண்டிகைகள் என்பது பொக்கிஷங்களை திறக்கும் திறவுகோல்.*
இந்த பண்டிகைகளை ஏன் தியானிக்கவேண்டும்?👇👇👇
2 தீமோத்தேயு 3:16-17
[16] *வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,*
[17]அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
*இந்த பண்டிகைகளெல்லாம் தேவ ஆவியினாலே தேவ மனிதர்களால் எழுதப்பட்டது ஆகையால் இவைகளை நாம் படிக்க வேண்டும்.*
பண்டிகைகள் கிறிஸ்துவுக்கு நிழலாக இருக்கிற படியினால், நாம் கட்டாயம் இதை படிக்க வேண்டும்.
- பாஸ்டர் சேம் @Sam Jebadurai Pastor VT
[7/19, 9:59 PM] Jeyaseelan Bro VT: இஸ்ரவேலரின் பண்டிகைகள்
1. யூத நாள்காட்டியில், ஏழு பண்டிகைகள் யூதர்கள் ஆசரிக்கும்படி தேவனால் நியமிக்கப்பட்டுள்ளது. இவைகள் மற்ற விசுவாசிகளுக்கும் அடையாளங்களாய் இருக்கின்றன.
2. பண்டிகைகளின் விவரம்:
பஸ்கா பண்டிகை
புளிப்பில்லா அப்பப்பண்டிகை
முதற்பலன் சேர்ப்பு பண்டிகை
பெந்தெகொஸ்தே பண்டிகை
எக்காளப் பண்டிகை
பிராயச்சித்தப்பண்டிகை
கூடாரப்பண்டிகை
3. பஸ்காப்பண்டிகை (உபாகமம்16:1-8, லேவியராகமம்23:5)
சரித்திரம்:
இப்பண்டிகை இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, விடுபட்ட அன்று ராத்திரியில் கர்த்தருடைய தூதனானவர் எகிப்தை கடந்து சென்று அவர்களின் தலைச்சன்கள் அனைத்தையும் சங்கரித்தார், அன்று இரவே இஸ்ரவேலர் மோசேயின் கீழ் எகிப்தைவிட்டு வெளியேறினர்.
b) ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஆண் ஆட்டுக்குட்டியை நிசான் மாதம் 14 ம் நாளில் அடிக்கப்படுவதற்கு, நான்கு நாட்கள் முன்னதாகவே கொண்டு வரப்படவேண்டும். அதன் எலும்புகள் ஒன்றும் முறிக்கப்படாவண்ணம் மிக கவனத்துடன் அதை அடித்து புசிக்கவேண்டும். (யாத்திராகமம் 12:1-6)
c) ஆட்டுக்குட்டியை அடித்து அதை நெருப்பில் சுட்டு, அதை கசப்பான கீரையுடன் புசிக்கவேண்டும், அதில் விடியற்காலம் வரைக்கும் எதுவும் மீந்திருக்கக்கூடாது.
( யாத்திராகமம் 12:7-10).
d)பஸ்கா பண்டிகையின் ஆரம்பத்தில், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை கதவு சட்டத்திலும், ஜன்னலின் சட்டத்திலும் பூச வேண்டும், அப்படி பூசப்பட்ட வீடு எகிப்தின் கடைசி வாதைக்கு உட்படாது. (யாத்திராகமம் 12:21-28). எகிப்தின் மீது வந்த வாதைகள் அனைத்தும் அவர்கள் தேவர்கள் மீது வந்த வாதைகள் ஆகும்.
e) பஸ்கா பண்டிகை, ஆபிரகாமுக்கு அளித்த வாக்குத்தத்தின்படி, வருடாந்திரப்பண்டிகையாய் இருக்கிறது.
நிறைவேறுதல்:
பலிக்கான ஆட்டுக்குட்டி கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைக் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 5:7).
கிறிஸ்து நிசான் மாதம் 14 ம் தேதி சிலுவையில் தொங்கி மரித்தார், அவர் தான் மரிப்பதற்கு நான்கு தினங்களுக்கு முன், நிசான் மாதம் 10 ம் தேதிக்கு முன்னரே எருசலேமில் பிரவேசித்தார்.
ரோம சிப்பாய்கள் கள்ளரின் கால் எலும்பை முறிக்கும்போது, இயேசு மரித்து இருந்தார், ஆகையால் அவர் கால் எலும்பை அவர்கள் முறிக்கவில்லை. (யோவான் 19:32, 33).
சுடப்பட்ட ஆட்டுக்குட்டி - நியாயத்தீர்ப்பையும், கசப்பான கீரை, - பாவம் அல்லது தோல்வி இவைகளை பிரதிபலிக்கிறது.
ஆட்டுக்குட்டியை புசிப்பது - இயேசுக்கிறிஸ்துவின் கிரியையில் விசுவாசம் வைப்பதைக்காட்டுகிறது, ( கர்த்தருடைய மேஜையில் புசித்து பானம் பண்ணுவதை காட்டுகிறது)
கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசத்தினால் தேவனின் இறுதி நியாயத்தீர்ப்பில் நாம் பாதுகாக்கப்படுகிறவர்களாய் இருக்கிறோம்.
தற்பொழுது:
ஒவ்வொருமுறையும் கர்த்தருடைய மேஜையில் பங்கு பெறும்பொழுது, கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய கிரியைகளை பின்னிட்டுப் பார்க்கிறோம். (1 கொரிந்தியர் 11:23-26).
இது விசுவாசியின் இரட்சிப்புக்கு முக்கியம் வாய்ந்ததாய் இருக்கிறது.
4. புளிப்பில்லா அப்பப்பண்டிகை: (லேவியராகமம்23:6-8).
நிசான் மாதம் 15 ம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் இப்பண்டிகை ஆசரிக்கப்படுகிறது, இது தேவனுடைய பராமரிப்பு, ஐக்கியம் இவைகளை வருணிக்கிறதாய் இருக்கிறது.
எகிப்தைவிட்டு துரிதமாய் புறப்பட்டகாரணத்தால் அப்பம் புளிக்கவில்லை. அதனுடன் பருகும் திராட்சை ரசமும் கூட புளிப்பற்றதும் ஆல்ககால் (alcohol)சேர்க்கப்படாததுமாய் இருந்தது. இப்பண்டிகையின் போது திராட்சைரசம் கொதிக்கவைத்து பருகப்பட்டது. இது கல்தேயரின் பட்டாளத்திற்கு அளிக்கப்பட்ட கட்டளைகள் மூலம், புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் போது யூதர்களுக்கு போதையூட்டப்பட்ட கல்தேயரின் பீர் பரிமாறப்பட்டால் யூதர்கள் கலகம் செய்வார்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
புளித்தமா வேதாகமத்தில் தீங்கு மற்றும் துர் உபதேசதத்தைக்குறிக்கிறது, தேவன் புளித்த மாவை அகற்றுங்கள் என்பது தீங்கை உங்கள் நடுவிலிருந்து அகற்றுங்கள் எனப்பொருள்படுகிறது.
வேதாகமத்தில் பல நிலையில் புளித்தமா குறிப்பிடப்பட்டுள்ளது:
சதுசேயரின் புளித்தமா - மனுஷீக நிலையில் காண்பது (மத்தேயு16:6)
பரிசேயரின் புளித்தமா - சடங்காச்சாரம் (மாற்கு8:15)
ஏரோதின் புளித்தமா - உலகப்பிரகாரம் (மற்கு8:15)
கொரிந்தியரின் புளித்தமா - ஒழுக்க சீர்கேடு (l கொரிந்தியர் 5:6, 7)
கலாத்தியரின் புளித்தமா - சட்ட ஒழுங்கை கண்டிப்புடன் கைக்கொள்ளுதல் (கலாத்தியர்5:9).
e) புளிப்பற்ற அப்பம் கிறிஸ்துவின் பூரணத்தைக்காட்டுகிறது. (லேவியராகமம்2:11)
f)இது ஒரு விசுவாசியின் கிறிஸ்தவ நடக்கையைக்காட்டுகிறது.
g) புளிப்பில்லா அப்பம் சுடப்படும் போது அதில் வரிகள் காணப்படும் மற்றும் துவாரங்கள் காணப்படும். அவரது தழும்புகளால் குணமாகிறோம் (ஏசாயா 53:5)
அவரைக்குத்தினவர்கள் அவரை நோக்கிப்பார்ப்பார்கள். (சகரியா12:10)
5. முதற்பலன்கள் (லேவியராகமம்23:9-14).
இப்பண்டிகை எப்பொழுதும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறுகிறது. நிசான் மாதம் 17 ம் தேதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை சித்தரிக்கிறது. மற்றும் இப்பண்டிகை புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் மத்தியில் இடம் பெறுகிறது.
நித்திரையடைந்தவர்களில் முதற்பலனாக கிறிஸ்து இருக்கிறார். (1 கொரிந்தியர் 15:20).
பஸ்கா பண்டிகையின்போது மரித்த இயேசுக்கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறின இஸ்ரவேலர்கள் மூன்றாம் நாளில் சிவந்த சமுத்திரத்தை கடந்தனர்.
நோவாவின் பேழை அரராத் மலையில் இதே நாளில் அமர்ந்தது. (ஆதி. 8:4).
இது விசுவாசியின் உயித்தெழும் சரீரத்தை பிரதிபலிக்கிறது.
6. பெந்தெகொஸ்தே பண்டிகை: (லேவியராகமம்23:15-21)
பென்டா (Pente) - ஐம்பது - இப்பண்டிகை எப்பொழுதும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்கின்றது, முதற்பலன்களை சேர்க்கும் பண்டிகையிலிருந்து ஐம்பதாவது நாளில் இப்பண்டிகை ஆசரிக்கப்படுகிறது, பொதுவாக இப்பண்டிகை மே அல்லது ஜூன் மாதத்தில் வருகிறது. (லேவி.23:15)
கி.பி. 70 ல் சரித்திரபூர்வமாய் யூதர்கள் இந்நாளில் சிதறடிக்கப்பட்டனர். இதன் பின்னர் அவர்கள் இப்பண்டிகையை ஆசரிக்கமுடியாமல் வெகுகாலம் தங்கள் தேசத்திற்குப் புறம்பே இருந்தனர்.
கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வருஷத்தில், கொண்டாடப்பட்ட பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது, எருசலேமில், பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்துடன் சபையுகம் ஆரம்பமானது. (அப்போஸ்தலர்2:1-4).
பெந்தெகொஸ்தே பண்டிகை நாளில் 3,000 பேர் மறுபடி பிறந்தனர், நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபோது 3,000 பேர் கொல்லப்பட்டனர்.
7. எக்காளப்பண்டிகை: (லேவியராகமம்23:23, 24)
இப்பண்டிகை செப்டம்பர் மாதத்தில் இடம்பெறுகிறது. எக்காளம் ஊதப்படுவது ராஜா வருவதை குறிக்கிறது. இது யூதர்களின் புதிய வருடப்பிறப்பின் நாள்.
இது சபை எடுத்துக்கொள்ளப்படும் நாளில் இயேசுக்கிறிஸ்து தனது சபைக்காய் திரும்ப வருவதைக் குறிக்கிறது. இது யூதர்களுடன் தேவன் திரும்ப உறவுகொள்ளும் நாள் என யூதர்கள் உணருவார்கள்.
8. பிராயச்சித்தப்பண்டிகை: (லேவியராகமம்23:26-32).
எக்காளப்பண்டிகைக்குப் பத்து தினங்களுக்குப் பின்னர், இப்பண்டிகை இடம்பெறுகிறது. விசுவாசிக்கும் யூதர்கள் மட்டும் ஆயிரவருட ஆழுகையில், பிரவேசிப்பார்கள் என இது பிரதிபலித்துக்காட்டுகிறது.
தானியேல் 12:11&12 மற்றும் இணையான வேதபகுதிகளின் கருத்துக்கணிப்பின் படி, இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் 45 நாட்கள் நியாயத்தீர்ப்பு நடைபெறும். இக்காலப்பகுதியில், கோதுமை மற்றும் பதர், செம்மரியாடு மற்றும் வெள்ளாடு வேறுபிரிப்பு இடம் பெறும். அவிசுவாசிகள் அக்கினி ஞானஸ்நானம் பெறுவர். (மத்தேயு3:11,12.). விசுவாசிகள் ஆயிரவருட ஆழுகையில் பிரவேசிப்பர்.
இப்பண்டிகை நாளில் பிரதாண ஆசாரியன் கையிலிலுள்ள பாத்திரத்தில் இரத்தத்துடன், மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பான். தனக்காக ஒருமுறையும், தேசத்திற்காக ஒரு முறையும் பிரவேசிப்பான். (எபிரெயர்9:6-7).அவனது பிரவேசம் கிறிஸ்துவின் தியாக பலியை பிரதிபளிக்கிறது.
இப் பண்டிகையின் நிறைவேறுதல் கிறிஸ்துவின தியாகபலியாகும். பாவமற்ற பழுதில்லா பலியாக ஒரேமுறை கிறிஸ்து சர்வ லோகத்தின் பாவத்திற்கான காணிக்கையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். (எபிரெயர்9:11-14).
(On the feast of Atonement red wool, the Atonement Lot, was tied to the temple pillar. After the blood was spilt the lot turned white until the time of the cross. Afterwards it stayed red. This sign showed Christ's once and for all sacrifice)
9. கூடாரப்பண்டிகை: (லேவியராகமம்23:33-36).
இப்பண்டிகை பிராயச்சித்தப்பண்டிகை முடிந்த ஐந்து நாட்களுக்குப் பின்னர் இடம்பெறும். ஒரு வாரமளவும் கொண்டாடப்படும். இது இயேசுக்கிறிஸ்துவின் ஆயிரவருட ஆழுகையை பிரதிபலிக்கிறது. பூரணமான நன்மைகளும், சூழலும் அளிக்கப்படும். (உபாகமம் 16:13-15, ரோமர்8:19-22).
10. தேவனின் பூரணமான நன்மைகளை அருளும் இருபண்டிகைகள் ஆர்வமூட்டக்கூடியதாய் இருக்கிறது. - புளிப்பில்ல அப்பப்பண்டிகை, கூடாரப்பண்டிகை - மற்றப் பண்டிகைகள் யாவும் ஒரே நாளும், இப்பண்டிககள் ஏழு நாளும் ஆசரிக்கப்படுகிறது. இவைகள், சிலுவையில் அறையப்படுதல், உயிர்த்தெழுதல், அல்லது சபை எடுத்துக்கொள்ளப்படுவது போன்றவற்றை குறிக்கிறது.
[7/19, 10:14 PM] Jeyaseelan Bro VT: *பண்டிகையும் கிறிஸ்தவமும் - 1*
பண்டிகை , திருவிழா ஆகியவற்றிற்கு எபிரேய மொழியில் "ஹக்" (Hag) என்று பதம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு"விருந்து" என பொருள்படும். விழாக்கள் அனைத்தும் விருந்துண்ணும் பழக்கமா இருப்பதனால் இப்படி அறியப்பட்டிருக்கலாம். (சகரியா: 8:19 ).
இஸ்ரவேலரிடையில் பலவகையான திருவிழாக்கள் காணப்பட்டன. பெரிய விழாக்களுக்கு முன்பு உபவாசித்தலும் (நியாயதிபதிகள்: 26,27 அதிகாரங்கள், 1சாமுவேல்: 7:5,6, 2ராஜாக்கள்: 19:1-17, எரேமியா: 36:4-6,) , விழாக்களில் பலியிடுவதும் (1சாமுவேல்: 7:16, 2 சாமுவேல்: 23:16,17) முக்கிய அம்சங்களாகும்.
இஸ்ரவேலரிடையில் காணப்பட்ட விழாக்கள் யாவும் மூன்று வகையாகப் பகுக்கப்பட்டன. அவை:
1. திருநூல் சட்ட ஒழுங்கிற்குட்பட்டவை: (Canonical Festivals)
ஓய்வுநாள், அமாவாசை, ஏழாவது அமாவாசை, ஏழாவது ஆண்டு, பெந்தெகோஸ்தே அல்லது ஐம்பதாவது ஆண்டு.
2. வாழ்க்கை வழக்கிலுள்ளவை: (இவை புண்ணிய யாத்திரைக்குரியது)
பஸ்கா, புளிப்பில்லா அப்பப் பண்டிகை, வாரங்களின் விழா, கூடாரப் பண்டிகை ஆகியவை.
3. திருநூல் சட்ட ஒழுங்கிற்கு வெளியிலுள்ளவை:
பிரதிஷ்டை விழா, புரீம் விழா, நியாயப் பிரமாண விழாக்கள் முதலியவை:
*பண்டிகையும் கிறிஸ்தவமும் - 2*
பண்டிகையின் நோக்கம்:
பழைய ஏற்பாட்டுக் காலங்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பிதாவாகிய தேவன் பஸ்கா என்னும் பண்டிகையை தந்தார். இதை அவர்கள் தலைமுறை தலைமுறைதோறும் கொண்டாடி ஆசரித்து வந்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பஸ்காவை ஆசரித்தார். (மாற்கு: 14:12, லூக்கா: 22:1,8@ 2:41,42, 22:15 மத்தேயு: 26:17, யோவான்: 2:13, 12:1).
பிதாவாகிய தேவன், "...நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக" (யாத்திராகமம்: 13:10) என கூறினார். இதனால், இவர்கள் பஸ்கா பண்டிகையை வருஷந்தோறும் கொண்டாடி வந்தனர்.
"பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று கேட்டால், நீ அவனை நோக்கி: கர்த்தர் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்..." "கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக் குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றார்" (யாத்திராகமம்: 13:14-16)
எனவே, தேவன் கொண்டாடச் சொன்ன ஒவ்வொரு பண்டிகையிலும் தேவனுடைய வல்லமையும், தம்முடைய தேவ ஜனங்களுடைய மீட்பும், அதை அவர்கள் நினைத்து நன்றி செலுத்துதலும், கொண்டாட்டமும் இருக்கும். பஸ்கா பண்டிகை மட்டும் அல்ல, புரிம் பண்டிகையும் தேவன் அவர்களுக்கு கொடுத்த மீட்பை வெளிப்படுத்துகிறது. (எஸ்தர்: 9:21,22).
ஆகவே, பண்டிகையின் நோக்கம்:
தேவன் தம்முடைய ஜனங்களுக்கு கொடுத்ததான மீட்பு, ஆசீர்வாதம் ஆகியவற்றை நினைத்து, தேவனுக்கு நன்றி செலுத்தி, அதை நினைவு கூர்ந்து ஆராதிப்பதாகும். அதுமட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளுக்கும், வருங்கால சந்ததிகளுக்கும் தேவனுடைய மீட்பையும், அவரது வல்லமையும் வெளிப்பட, அதை அவர்களும் அறிந்து தேவனை நோக்கி ஜெபிக்க, துதிக்க ஏதுவாகும்.
*பண்டிகையும் கிறிஸ்தவமும் - 3*
பண்டிகை கொண்டாட வேண்டிய அவசியமென்ன?:
இன்றை சூழ்நிலையில் இதை சற்று சிந்தித்து பார்ப்போம். இன்று இருக்கிற பெந்தேகொஸ்தே ஊழியக்காரர்கள் - "சினிமா பார்க்கக் கூடாது, கேளிக்கை கூடாது, வீண்பொழுது போக்குக் கூடாது, நகை போடக் கூடாது என சபைமக்கள் நடுவே போதிப்பது சரிதான். தவறல்ல. ஆனால், அதேசமயம், அதற்கான மாற்று வழிகளையும் சிந்தித்து செயல்பட்டால் நல்லது.
அதாவது சபையில் வருகிறவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்துக்கள் மற்றும் புறஜாதியினரே. இவர்கள் இந்த கேளிக்கைகளை உடனே விட்டுவிடவும் மாட்டார்கள். அப்படியானால் அவர்களுக்கு ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி ஒன்று வேண்டும். (அதற்காக புறஜாதிய வழக்கப்படி அவர்களைப்போல நாம் கொண்டாட இயலாது. தேவன் எதை அனுமதித்திருக்கிறாரோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்) நாம் வாழ்வதோ புறஜாதியார் மத்தியில்தான். நம்மைச் சுற்றிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டாடுகிற விழாக்களை நம்மவர்கள் காணத்தான் செய்கிறார்கள்.
விக்கிரகங்களை தொழுதுகொள்ளும் மக்கள் அவைகளால் ஒரு பலனுமில்லை என அறிந்திருந்தும் அதை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜீவனுள்ள தேவனை நாம் கொண்டாடக் கூடாது? என நம்மக்கள் நினைக்கத்தான் செய்வார்கள். இதன் விளைவுகளை பழைய ஏற்பாட்டு சம்பவங்களில் நாம் காண்கிறோம். (யாத்திராகமம்: 32:4,5).
ஜனங்களின் மனநிலையை அறிந்த தேவன் - இவர்கள் அந்நிய தேவர்களை நாடி சோரம் போகக் கூடாது என்பதற்காகத்தான் மாற்று ஏற்பாடாக - தேவன் பண்டிகைகளை ஏற்படுத்தினார் என கருதுகிறேன். வாசித்துப்பாருங்கள்: (யாத்திராகமம்: 34:22,23, உபாகமம்: 16:16, யாத்திராகமம்: 23:17,13,14).
நமக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு ஆராதனை ஒரு பண்டிகை போலத்தான். சிறப்பு தினங்கள், வாலிபர் கொண்டாட்டம், நற்செய்தி கொண்டாட்டம், விடுதலைப் பெருவிழாக்கள், குடும்ப ஆசீர்வாத கொண்டாட்டம், சிறப்பு உபவாசக் கூடுகை, சிறப்பு முகாம்கள், கருத்தரங்குகள், ஜெப முகாம், படைமுயற்சி கூட்டங்கள் ... போன்ற எத்தனையோ காரியங்கள் நமக்குண்டு. அடிக்கடி அதையெல்லாம் பண்டிகை கொண்டாட்டங்களைப்போல உற்சாகப்படுத்தி ஆத்துமாதாயம் செய்ய வேண்டும்.
*பண்டிகையும் கிறிஸ்தவமும் - 4*
பண்டிகை கொண்டாடலாம் என்பதற்கு வேத ஆதாரம்:
(எண்: 10:10, யோவேல்: 2:15,16)
வேதத்தை வாசிக்கும்போது - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொருமுறையும் சுவிசேஷம் அறிவிக்கும்போதும் பண்டிகை நாட்களில்தான் அதிகம் அறிவித்தார் என நாம் அறியலாம். பண்டிகைக்கு முன்பாகவே அவர் அவ்விடத்திற்கு வருவதைக் காணமுடியும். (யோவா: 5:1). இயேசு பஸ்கா பண்டிகையை ஆசரித்தார். (மத்: 26:17, மாற்: 14:12, லூக்: 22:9, 2:41,43, 22:15, யோவா: 2:13, 6:4, 12:1,15, 7:10) இயேசு பண்டிகைக்கு இரகசியமாக போனார். யோவா: 7:37 - பண்டிகையில் இயேசு சுவிசேஷம் அறிவித்தார். யோவா: 10:22,23 - ல் - இயேசு தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகையில் கலந்து கொண்டார்.
அப்.பவுல் பண்டிகையில் கலந்து கொள்ள விருப்பமாயிருந்தான். (அப்: 18:20,21). பவுல் பெந்தேகொஸ்தே பண்டிகையில் கலந்து கொள்ள எருசலேமிற்கு செல்ல தீவிரப்பட்டான். (அப்: 20:16). "ஆதலால், பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." (1கொரி: 5:8).
மேலும் பவுல் கூறும்போது, பண்டிகை கொண்டாடலாம். ஆனால், பிறர் குற்றப்படுத்தும்படியான வகையில் கூடாத என்கிறார். "ஆகையால், போஜனத்தையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகைகளையும், மாதப் பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாதிரப்பானாக" (கொலோ: 2:16).
நாகூம்: 1:15 - "...யுதாவே உன் பண்டிகைகளை ஆசரி".
எசேக்: 45:17, 21,23,25 - குறிக்கப்பட்ட பண்டிகைகளை ஆசரிக்கலாம்.
ஏசா: 33:20 - "நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயோனை நோக்கிப்பார்".
சங்: 83:3 - "மாதப்பிறப்பிலும், நியமித்த காலத்திலும், நம்முடைய பண்டிகை நாட்களிலும் எக்காளம் ஊதுங்கள்".
எஸ்தர்: 9:17,18 - "...சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்".
நெகே: 8:18 - "...ஏழு நாள் பண்டிகையை ஆசரித்தார்கள்".
(எஸ்றா: 6:22, 3:5, 2நாளா: 35:17, 30:13,22, 8:13, 7:8,9, 2:4, 1ராஜா: 8:65, 12:32, உபா: 16:10,15,16, யாத்: 5:1, 10,9, 23:14-16, யாத்: 32:5, 34:18,22, லேவி: 23:6, எண்: 28:17, லேவி: 23:34, எண்: 29:12, உபா: 16:13, எண்: 10:10)
Post a Comment
0 Comments