[7/1, 10:25 AM] Elango: ⚠ *இன்றைய வேத தியானம் -01/07/2017* ⚠
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், *சகோதரனென்னப்பட்ட ஒருவன்*👇
விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது,
உதாசினனாயாவது,
வெறியனாயாவது,
கொள்ளைக்காரனாயாவது இருந்தால்,
*அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.*1 கொரிந்தியர் 5:11
1⃣👉👆இப்படிப்பட்ட கண்டிப்புக்களை நம்முடைய சபையில் செயல்படுத்த வேண்டுமா❓ அல்லது பாவிகளை நேசித்து பாவத்தை வெறுக்க வேண்டுமா❓
2⃣பொருளாசைக்காரர்கள் என்றால் என்ன அர்த்தம்❓அதற்கு வரைமுறை ஏதாவது உண்டா❓பொருளாசைக்காரர்களோடு நாம் கலந்திருக்கக்கூடாதா❓
3⃣ சபையில் இருப்பவர்கள் எல்லோரும் பரிசுத்தவான்களா❓விசுவாசிகள் துன்மார்க்கராக வாழும் நிலையில், சபை இவர்களை எப்படி கையாள வேண்டும்❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[7/1, 10:44 AM] Raja VT: மத்தேயு 5 : 29 - உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
http://onelink.to/p7hdt5
[7/1, 10:44 AM] Raja VT: லூக்கா 13 : 3 - அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; *நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.*
http://onelink.to/p7hdt5
[7/1, 10:46 AM] Raja VT: யோவான் 11 : 50 - *ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று* நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
http://onelink.to/p7hdt5 புளித்த மாவு நல்ல மாவை கெட பண்ணும். பாவி சபையில் இருந்தால் ஆபத்து
[7/1, 10:47 AM] Raja VT: பிரசங்கி 10 : 1 - பாடம் 10 *செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்;* ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
http://onelink.to/p7hdt5 சபையில் சில செத்த ஈக்கள் நல்ல சபை தைலத்தை கெட்ட பெயர் வாங்கி கொடுக்கும்.
[7/1, 10:49 AM] Levi Bensam Pastor VT: *களைகள் வளரட்டும், அதை பிடுங்க வேண்டாம்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 மத்தேயு 13:24-30
[24]வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
[25]மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.
[26]பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
[27]வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
[28]அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: *நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.*👇👇👇👇👇👇👇👇
[29]அதற்கு அவன்: *வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும்🌱🌿🌱🌱🌱 வளரவிடுங்கள்.*
[30]அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
[7/1, 10:49 AM] Elango: சபை போதகர் மேய்ப்பர் என்ற ஸ்தானத்திலிருந்து இரண்டு பக்கத்தையும் அலசி பேசியிருக்கீங்க பாஸ்டர்.🙏🙏🙏👍✅👍
[7/1, 10:51 AM] Raja VT: மத்தேயு 9 : 17 - புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
http://onelink.to/p7hdt5 பாவிகள் பரிசுத்தவான்களின் சபையில் நிற்பதில்லை.
[7/1, 10:52 AM] Raja VT: தெரிந்தும் மனந்திருப்பாமல் பாவத்திலே நிலைநிற்ப்பவர்களை சபையில் வைத்தால் ஆபத்து.
[7/1, 10:54 AM] Raja VT: குடிகாரர்கள், பீடி, வெத்தலை, பணத்தாசைக்காரர்களும் மனந்திரும்பாமல் சபையில் இருக்கிறார்கள் இறுமாப்பாக. இவர்களை துடைத்து எறிவதே சரி.
[7/1, 10:57 AM] Elango: 1 யோவான் 1:8-10
[8]நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
[9] *நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.*
[10] *நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.*
*உலக பிரகாரமாக பிறனை கொலை செய்தால் பாவம், ஆனால் வேதத்தில் சகோதரனை காரணமில்லாமல் பகைத்தால் பாவம்.*
[7/1, 10:57 AM] Raja VT: பவுல் விபச்சாரக்காரனை தூக்கி எறியுங்கள் என்றார்.
[7/1, 10:58 AM] Elango: இயேசு விபச்சார ஸ்தீரியை மன்னித்தாரே
[7/1, 10:58 AM] Raja VT: இயேசு சபையில் மன்னிக்கவில்லை. பொது இடத்தில் மன்னித்தார். சபையில் அப்படிப்பட்டவர்களை தூக்கி எறிவதே சரி
[7/1, 11:02 AM] Raja VT: 1 கொரிந்தியர் 5 : 11 - புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
http://onelink.to/p7hdt5
[7/1, 11:03 AM] Raja VT: 1 கொரிந்தியர் 5 : 12 - புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் *அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.*
http://onelink.to/p7hdt5
[7/1, 11:03 AM] Levi Bensam Pastor VT: *என்னுடைய சவுதி ஊழிய அனுபவத்தில் குடிகாரன் மற்றும் பல விதமான பாவ பழக்கம் உள்ளவர்களை இயேசுவுக்குள் கொண்டு வந்திருக்கிறேன், அநேக சாட்சிகள் உண்டு, மனுஷனுக்கள் போகிறது பார்க்கிலும் மனுஷனுக்கள்ளிருந்து வருகிறது தான் (அப்பப்பா) அநேகரை தீட்டுப்படுத்தும்*😂😂😂😂😂😂
[7/1, 11:03 AM] Elango: ஒரு சபையில் ஒருவர் சில நாள் சபைக்கு செல்லவில்லை என்பதால் அவரை ஒரு பெயர் வாங்கின பெந்தேகோஸ்தே சபை அந்த நபரை சபையை விட்டே ஒதுக்கி வைத்தது.
இப்போது அந்த ஒதுக்கி வைத்த நபர் கோவிலில் சாமி ஆடுகிறார்.💃💃💃💃💃😭😭😭😭😭
*காரணம் சபை கண்டிப்பா அல்லது இவர் சபைக்கு போகாமல் மனந்திரும்பாமல் இருந்ததா*😭😭😭❓❓❓
[7/1, 11:04 AM] Elango: 2 கொரிந்தியர் 2:5-8
[5]துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
[6]அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும்.
[7] *ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும்.*
[8] *அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.*😀😀🤝🤝🤝❤❤❤💞💞💞💞💞
[7/1, 11:04 AM] Elango: கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
[7/1, 11:06 AM] Raja VT: ஒரு கட்டியை வெட்டி எறியாவிட்டால் புற்றுநோய் முழுவதும் உடலில் பரவி விடும்.
[7/1, 11:06 AM] Raja VT: பிரசங்கி 9 : 18 - யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்; *பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.*
http://onelink.to/p7hdt5
[7/1, 11:07 AM] Raja VT: 1 கொரிந்தியர் 3 : 17 - *ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்;* தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
http://onelink.to/p7hdt5
http://onelink.to/p7hdt5
[7/1, 11:08 AM] Elango: நியாயப்பிரமாணம் வேண்டாம். கிருபையை பேசினவரா இப்படி பேசுவது🤔🤔🤔
[7/1, 11:08 AM] Levi Bensam Pastor VT: *அநேகரை 😂துரத்த வேண்டும்*👇👇👇👇👇👇👇 மத்தேயு 5:27-28
[27]விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
[28]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; *ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 *நம்ம வெளியில் நடக்கிற சம்பவத்தை பார்த்து துரத்தி விடலாம், உள்ள உள்ளது யாருக்கு தெரியும், சபையில் வந்தால் தீர்க்கதரிசி மூலம் அந்தரங்க பாவம் வெளிப்படும்*
[7/1, 11:09 AM] Raja VT: மறுப்பு இல்லை
[7/1, 11:10 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 14:24-25
[24]எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.
[25] *அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்;*👇👇👇👇👇👇 *அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.*✅✅✅✅✅✅✅✅✅
[7/1, 11:10 AM] Raja VT: பாவம் செய்ய கிருபை இல்லை. பாவத்தை மேற்க்கொள்ளவே கிருபை
[7/1, 11:10 AM] Evangeline VT New: மத்தேயு, Chapter 9
11. பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
12. இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
13. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்É நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
[7/1, 11:11 AM] Raja VT: பிறகு பவுல் ஏன் விபச்சாரகாரனை விரட்டுங்கள் என்றார்
[7/1, 11:13 AM] Raja VT: சபைக்கு வந்தபிறகு இப்போது குடித்தால் நீங்கள் அவர்களை கண்டிப்பீர்கள் பிறகு சபையை விட்டு நீக்கிவிடுவீர்கள் தானே
[7/1, 11:14 AM] Jeyanti Pastor VT: 👆👆👆1 கொரிந்தியர் 5
5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
[7/1, 11:15 AM] Raja VT: ஆனா இப்ப குடிக்கிறாரா அவர்
[7/1, 11:17 AM] Jeyanti Pastor VT: திருந்த தவணம் கொடுக்கும்படி, ஆனால் எல்லாரையும் ஒரே மாதிரியல்ல, அடிக்கடி கடிந்துக் கொள்ளப்பட்டும், பிடரியை கடினமாக்கும் சிலருக்கே என்று நினைக்கிறன்
[7/1, 11:17 AM] Levi Bensam Pastor VT: நல்ல ஒரு ஊழியம் செய்கிறார் 👍
[7/1, 11:18 AM] Elango: உங்களைப் போல இப்படிப்பட்ட மேய்ப்பர்கள் அநேக ஆத்துமாக்களை ஆண்டவரிடத்தில் கொண்டு வருவார்கள்.🙏👍❤
ஏசாயா 53:12
[12]அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, *அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.*🙏🙏
[7/1, 11:18 AM] Elango: அல்லேலுயா நன்றி இயேசப்பா😭😭😭😭😭👍
[7/1, 11:19 AM] Raja VT: தேவன் ஆசீர்வதிப்பாராக அவரையும் உங்களையும்.
[7/1, 11:20 AM] Raja VT: சில செத்த ஈக்கள் நம் சபை தைலத்தை கெட பண்ணாதா?
[7/1, 11:20 AM] Raja VT: எத்தனை முறை
[7/1, 11:22 AM] Levi Bensam Pastor VT: *நீக்க கூடிய அளவுக்கு நான் நீதிமான் அல்ல, ஒரு வேளை அவருடைய குடி என் கண்களுக்கு முன்பாக பெரிய பாவமாக தெரியும், அதை காட்டிலும் பெரிய பாவம் என் தேவனுடைய கண்களுக்கு முன்பாக என்னை குறித்து தெரியும், அதனால் அப்படி பட்டவர்களை விலக்கி வைக்க நான் யார்*😭😭😭😭
[7/1, 11:22 AM] Jeyanti Pastor VT: இது உங்க ஆத்தும பாரத்தால கிடைத்த பதில் பாஸ்டர். இது மெய்யான பரிவு. தனிமையில் பேசினதால், இவ்வளவு பெரிய மாறுதல் கிடைத்துள்ளது.
[7/1, 11:25 AM] Elango: ஒரு பெந்தேகோஸ்தே சபை விசுவாசி வேளாங்கண்ணிக்கு போய் தன் மகனுக்கு மொட்டை போட்டிருக்கிறார். முதல் தடவை சபை போதகர் கண்டித்திருக்கிறார்.
ஆனால் மறுபடியும் அந்த விசுவாசி, தன் மகன் அநேக வருடங்களை பிறகு பிறந்ததால் நேர்த்திக்கடனாக மாதாவுக்கு பையனுக்கு மொட்டை இரண்டாவதும் மொட்டை போட்டதும், அவர் சபை போதகர் கோபப்பட்டுவிட்டார்.
*சபைக்கே இனிமேல் வரவேண்டாம் என்றார்*
[7/1, 11:25 AM] Levi Bensam Pastor VT: *இந்த பாவம் எல்லாம் மறை முகமாக கிரியை செய்யும்*👇 👇 👇 👇 மாற்கு 7:20-23
[20]மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
[21]எப்படியெனில், *மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 ,
[22] *களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.*👇👇👇👇👇👇👇👇
[23] *பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.*
[7/1, 11:27 AM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 5:19-20
[19]சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி *மோசம்போகும்போது,* மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
[20]தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் *ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து*, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.👍👍👍👍
[7/1, 11:27 AM] Jeyanti Pastor VT: Exactly. Hallauiah. ம
[7/1, 11:28 AM] Elango: பிறகு அந்த விசுவாசியும் இரண்டு வாரம் சபைக்கு வரவில்லை, பிறகு அந்த சபை போதகரே அந்த விசுவாசியை சபைக்கு அழைத்தார். திரும்பவும் அந்த அந்த ஆடு இப்போது சபையில் திரும்பவும் வந்துவிட்டது.
*மூன்றாம் முறையும் இந்த ஆடு வேளாங்கண்ணி மாதாவுக்கு மொட்டை போட்டால், இவருக்கு பாஸ்டர் என்ன தண்டனை கொடுப்பார் என்று சபை விசுவாசிகள் யோசிக்கிறார்கள்*🤔🤔🤔😀
[7/1, 11:31 AM] Levi Bensam Pastor VT: யோவான் 5:13-14
[13]சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
[14]அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: *இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.*
[7/1, 11:31 AM] Jeyanti Pastor VT: இது கர்த்தருக்குள் அவருடைய வளர்ச்சி குறைவு. கர்த்தர் மேலுள்ள இரட்சிப்பில் அவர் உத்தமமாயிருக்கவில்லை. இது விக்கிரக ஆராதனை. சரிதானே பாஸ்டர்.
[7/1, 11:32 AM] Elango: ஆமா அம்மா. அந்த விசுவாசிக்கு தமிழ் படிக்க வராது. படிப்பு குறைவு
[7/1, 11:33 AM] Raja VT: ஆவியானவர் அவருக்குள்ளே இல்லை. அதுதான் பிரச்சனை
[7/1, 11:35 AM] Raja VT: அப்படியென்றால் அப்படிபட்ட விசுவாசிகளோடு நாம கலந்து இருக்கக்கூடாது என்று வேதம் சொல்கிறதே தவறா?
[7/1, 11:41 AM] Levi Bensam Pastor VT: *தவறு என்று நான் சொல்லவே மாட்டேன், அதே பவுல் தான் தேவனுடைய அன்பையும் இருதயத்தில் ஊற்றி இருக்கிறார்*
[7/1, 11:41 AM] Raja VT: நீதிமொழிகள் 28 : 13 - தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
http://onelink.to/p7hdt5
[7/1, 11:45 AM] Levi Bensam Pastor VT: எபிரெய 3:13
[13] *உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் 👉👉👉👉நாடோறும்👇👇👇👇 ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.*
[7/1, 11:49 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 19:26
[26]இயேசு, அவர்களைப் பார்த்து: *மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.*✅✅✅✅
[7/1, 11:54 AM] Stanley Ayya VT: நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால்,
நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்.
அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
1 யோவான் 1 :10 .
மனதால் பாவிகளாக இருப்பது எளிதென்பதால் பாவம் நேராக மனதை பாதிகௌகிறது.
நம்மை அறியாமல் நாம் சிக்கி கொள்ள கூடிய பாவங்கள்.
பிறரை
விமர்சிப்பது
அற்பமாக சிந்திப்பது
குற்றவாளியாக ஆக்குவது
தீர்பிடுவது போன்றதே ஆகும்.
இவை இல்லாமல் தேவையற்ற பேச்சுகள்,
கோள் சொல்லுதலும் ஆகும்.
சொல்ல கூடாத இடத்தில் தேவையற்ற நிலையில் உண்மையை சொல்லுதலும் தவறே.
[7/1, 11:54 AM] Jeyanti Pastor VT: Yes. Pastor.
[7/1, 11:54 AM] Elango: கலாத்தியர் 6:1-3
[1] *சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.⚠⚠⚠*
[2]ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
[3] *ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால்,*☹☹ தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.⚠⚠⚠
[7/1, 11:56 AM] Raja VT: களைகளை நீக்கினால் தானே பயிர்கள் நன்றாக வளரும். இல்லையென்றால் களைகளும் நல்ல பயிர்களை வளர விடாமல் செய்து விடுமே. புளித்த மாவை எப்படி வீச வேண்டாம் என்கிறீர்கள் புரியவில்லை
[7/1, 11:58 AM] Levi Bensam Pastor VT: 1 தெசலோனிக்கேயர் 5:14-18
[14]மேலும், சகோதரரே, *நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.*👇👇👇👇👇👇
[15] *ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆
[16]எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
[17]இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
[18]எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
[7/1, 11:58 AM] Antony Abel 2 VT: 29 அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
மத்தேயு 13
[7/1, 12:00 PM] Raja VT: இது பிசாசை சொன்னது
[7/1, 12:02 PM] Jeyanti Pastor VT: இல்லை. மேய்ப்பன் இப்படிப் பட்ட ஆடுகளைக் கைவிடக்கூடாது
[7/1, 12:02 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 5:8
[8]ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, *துர்க்குணம் பொல்லாப்பு* என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
[7/1, 12:02 PM] Elango: செத்தா தான் சுடுகாடு தெரியும் என்பார்கள். நீங்கள் ஒரு சபையை நடத்தி பாருங்கள் அப்பொழுது தெரியும். முதலில் ஒரு குடும்பத்தை நடத்தி பாருங்கள்
ஆத்ம பாரம் இல்லாத இருதயம். அன்பில்லாத இருதயம்.
[7/1, 12:03 PM] Antony Abel 2 VT: *அருமை* *👏👏👏👏
[7/1, 12:03 PM] Elango: *ஒரு ஆத்துமாவை சபைக்குள் கொண்டு வருவதை, அதை கொண்டு வந்தவருக்கே பாரம் தெரியும்.*
[7/1, 12:06 PM] Raja VT: வெளி 2 : 22 - இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் *தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,*
http://onelink.to/p7hdt5
[7/1, 12:08 PM] Raja VT: அழுகிய பாகத்தை அறுத்து எறிவது சரி. இல்லையென்றால் முழு பாகமும் கெட்டுப் போகும்.
[7/1, 12:09 PM] Levi Bensam Pastor VT: *ஒரு ஆத்துமா வரவில்லை என்றால், எதோ ஒன்றை இழந்தது போல தோன்றும்*😭😭😭😭😭✅✅✅👍
[7/1, 12:10 PM] Antony Abel 2 VT: யூதாசும் இயேசு வோடு கூடவே இருந்தானே...
*அவர் அதை அனுமதித்தார்*
[7/1, 12:11 PM] Elango: பவுல் விபச்சார காரனை விரட்டினாரே
[7/1, 12:13 PM] Elango: என்பது அவர் திருந்தவே.
[7/1, 12:13 PM] Elango: என்பது அவர் திருந்தவே.
[7/1, 12:13 PM] Levi Bensam Pastor VT: *அழுகி நாற்றமெடுத்த என்னை வெட்டி போடத தேவனுக்கு ஸ்தோத்திரம்*👇 👇 👇 👇 1 கொரிந்தியர் 1:27-29
[27]ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் *பைத்தியமானவைகளைத்* தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் *பலவீனமானவைகளைத்* தெரிந்துகொண்டார்.
[28]உள்ளவைகளை அவமாக்கும்படி, *உலகத்தின் இழிவானவைகளையும்,*😭😭😭😭😭😭 *அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.*
[29]மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
[7/1, 12:14 PM] Elango: பவுல் விபச்சார காரனை விரட்டினாரே என்பது *பவுல் சபையிலிருந்து அந்த விபச்சாரக்கானை விலக்கிவைத்தது அவன் மனந்திரும்ப வேண்டும் என்றே.*
[7/1, 12:16 PM] Jeyanti Pastor VT: மிகவும் உண்மைதான் பாஸ்டர்
[7/1, 12:18 PM] Jeyanti Pastor VT: Related to our meditation Pastor
[7/1, 12:18 PM] Levi Bensam Pastor VT: *பொருமையாக இருந்து, தேவனுடைய நாமம் மகிமைபட காத்திருப்போம்*🙋♂🙋♂🙋♂
[7/1, 12:22 PM] Levi Bensam Pastor VT: *சகேயுவை எல்லாரும் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள், ஆனால்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 லூக்கா 19:5-10
[5]இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
[6]அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
[7] *அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.*😭😭😭😭😭😭😭
[8]சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
[9]இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; *இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.*👍👍👍👍👉👉👉👍
[10] *இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.*
[7/1, 12:26 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 15:13,24-27,30,32
[13]சில நாளைக்குப்பின்பு, *இளையமகன்* எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், *அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி*👇 👇 👇 , *தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.*
[24]என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
[25]அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
[26]ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
[27]அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
[30] *வேசிகளிடத்தில்😂😂😂😂😂 உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.*🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
[32] *உன் சகோதரனாகிய இவனோ மரித்தான்,💀💀💀💀 திரும்பவும் உயிர்த்தான்;🕺🕺🕺🕺 காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு😃😃😃😃😃😃 மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.*
[7/1, 12:28 PM] Jeyanti Pastor VT: Yes. பிலிப்பியர் 2:5
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
[7/1, 12:33 PM] Jeyanti Pastor VT: கவலைப் படாதீங்க. கர்த்தர் தேற்றின வார்த்தை அனுப்புறேன். படிங்க. எசேக்கியேல் 17:22 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக் கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதத்தின்மேல் நாட்டுவேன்.
23 இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளை விட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.
24 அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்தவிருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தாரென்று சொல் என்றார்.
[7/1, 12:41 PM] Antony Ayya VT: நீங்கள் சொல்வது போல் உழிகாரர்களுக்கு கெடிதான காலம் போல் தெரிகிறது
[7/1, 12:48 PM] Elango: 2⃣பொருளாசைக்காரர்கள் என்றால் என்ன அர்த்தம்❓அதற்கு வரைமுறை ஏதாவது உண்டா❓பொருளாசைக்காரர்களோடு நாம் கலந்திருக்கக்கூடாதா❓
பாஸ்டர் இதற்கு பதில் கொடுங்களேன்
[7/1, 12:54 PM] Levi Bensam Pastor VT: *உலகத்திலும், உலகத்தில் உள்ளவைகளில் அன்பு கூறுவதே பொருள் ஆசை*
[7/1, 12:54 PM] Elango: 👍👍ஏசாயா 51:1-2
[1]நீதியைப் பின்பற்றி கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; *நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.*
[2]உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.
[7/1, 12:57 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 4:8-10
[8]மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், *உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து*👁👁:
[9] *நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.*👇👇👇👇👇
[10] *அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே*👇 👇 👇 👇 👇 ; *உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் .
[7/1, 1:00 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 4:5-8
[5]பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
[6] *இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; 😂😂😂😂😂எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.*
[7]நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
[8]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: *எனக்குப் பின்னாகப்போ சாத்தானே*, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
[7/1, 1:10 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 16:13-14
[13]எந்த ஊழியக்காரனும் *இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது*; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
[14]இவைகளையெல்லாம் *பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு,* அவரைப் பரியாசம் பண்ணினார்கள்.
[7/1, 1:16 PM] Levi Bensam Pastor VT: எபேசியர் 5:1-4
[1]ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
[2]கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
[3]மேலும், *பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய்🤔🤔🤔 உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.*
[4]அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
[7/1, 1:18 PM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 3:1-5
[1] *நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்,*👇 👇 👇 👇 👇 👇 கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
[2]பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
[3]ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
[4]நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
[5]ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான *பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்*.
[7/1, 1:20 PM] Stanley Ayya VT: ஐயா லாசரு கதை பணகாரன் உதாரணகதையையும் விளக்கி விடுங்கள் ஐயா.
நான் நேர்மையாக பணம் ஈட்டி நன்றாக வாழ்ந்தாலும் நித்தியம் இழந்து விடுவேனா?
[7/1, 1:25 PM] Raja VT: பொருளாசை ஒரு விக்கிரக வணக்கம்
[7/1, 1:26 PM] Levi Bensam Pastor VT: 1 தீமோத்தேயு 6:6-12,17-19
[6]போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
[7]உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
[8]உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.
[9]ஐசுவரியாவன்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
[10]பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
[11]நீயோ, தேவனுடைய மனுஷனே, *இவைகளை விட்டோடி,* நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
[12]விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாயிருக்கிறாய்.
[17]இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும்,
[18] *நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,*👇👇👇👇👇👇👇👇👇
[19] *நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.*
[7/1, 1:27 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 53:9
[9]துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; *ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்*; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
[7/1, 1:28 PM] Jeyanti Pastor VT: It is a great sin. Lord hates it
2 பேதுரு 17:2 ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
1 சாமுவேல் 8:3
4 பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
நீதிமொழிகள் 1:19
6 பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.
நீதிமொழிகள் 28:16
7 நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன் நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன், தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.
ஏசாயா 57:17
[7/1, 1:29 PM] Raja VT: 1 யோவான் 2 : 15 - ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், *ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.*
http://onelink.to/p7hdt5
[7/1, 1:31 PM] Raja VT: பணத்தாசையே எல்லா தீமைக்கும் வேர். சபையில் காணிக்கை கொடுக்க இவர்கள் பிசினாரிகள். தன் பிள்ளைகளுக்கு செலவழிக்க கணக்கு பார்க்க மாட்டார்கள்.
[7/1, 1:31 PM] Levi Bensam Pastor VT: ஐசுவரியவானாக துரிதபடாதே😂
[7/1, 1:32 PM] Jeyanti Pastor VT: சங்கீதம் 62:10 கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால்z பெருமை பாராட்டாதிருங்கள. ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.
[7/1, 1:32 PM] Raja VT: ஆகானுக்கு என்ன நிலைமை கிடைத்தது
[7/1, 1:32 PM] Jeyanti Pastor VT: Mm. Ya
[7/1, 1:33 PM] Levi Bensam Pastor VT: அப்படி செய்தால் இன்று சுவிசேஷம வேகமாக பரவுமே 🤔
[7/1, 1:33 PM] Raja VT: விக்கிரக ஆராதனை காரனை சபையில் வைக்கக்கூடாது. பணத்தாசை ஒரு விக்கிரக ஆராதனை
[7/1, 1:34 PM] Raja VT: CSI சபையில நிறைய பணம் இருக்கிறது. சுவிஷேசம் பரவ தடையாக அவர்களே இருக்கிறார்கள்.
[7/1, 1:37 PM] Levi Bensam Pastor VT: *நமக்குள், குடும்பத்துக்குள், ஊழியத்திக்குள் வராமல் இருக்க கண்ணீரோடு ஜெபித்து காத்து கொள்ள வேண்டும்*👇 👇 👇 *ஆனால் சபையில் உள்ளவர்களை யாரையும் நியாயந்தீருக்க கூடாது*
[7/1, 2:04 PM] Elango: ⚠ *இன்றைய வேத தியானம் -01/07/2017* ⚠
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், *சகோதரனென்னப்பட்ட ஒருவன்*👇
விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது,
உதாசினனாயாவது,
வெறியனாயாவது,
கொள்ளைக்காரனாயாவது இருந்தால்,
*அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.*1 கொரிந்தியர் 5:11
1⃣👉👆இப்படிப்பட்ட கண்டிப்புக்களை நம்முடைய சபையில் செயல்படுத்த வேண்டுமா❓ அல்லது பாவிகளை நேசித்து பாவத்தை வெறுக்க வேண்டுமா❓
2⃣பொருளாசைக்காரர்கள் என்றால் என்ன அர்த்தம்❓அதற்கு வரைமுறை ஏதாவது உண்டா❓பொருளாசைக்காரர்களோடு நாம் கலந்திருக்கக்கூடாதா❓
3⃣ சபையில் இருப்பவர்கள் எல்லோரும் பரிசுத்தவான்களா❓விசுவாசிகள் துன்மார்க்கராக வாழும் நிலையில், சபை இவர்களை எப்படி கையாள வேண்டும்❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[7/1, 2:18 PM] Ebi Kannan Pastor VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:2
[2]தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.
[7/1, 3:35 PM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 8:10-14
[10] *பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்;*😭😭😭😭😭😭 அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.
[11] *துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.*😷😷😷😷👆👆👆👆👆
[12] *பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.*🙋♂🙋♂😃😃😃😃😃🙋♂
[13] *துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.*
[14]பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.
[7/1, 3:36 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 1:4-6
[4]துன்மார்க்கரோ அப்படியிராமல், *காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்*.
[5]ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், *பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.*👍👍👍👍👍👍👍
[6]கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
[7/1, 3:40 PM] Levi Bensam Pastor VT: *எல்லாமே 🐐 🐏🐑🐑ஆடு தான் ஆனால் மேய்ப்பானவர் பிரிக்கும் போது தான் நாம் யார் என்று தெரியும்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 மத் 25:31-33
[31]அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
[32]அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். *மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,*👇 👇 👇 👇 👇 👇
[33] *செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.*
[7/1, 3:43 PM] Levi Bensam Pastor VT: எசேக்கியேல் 34:17,20
[17] *என் மந்தையே,* கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: *இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.*
[20]ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே *கொழுத்த😂😂😂😂 ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.*
[7/1, 3:47 PM] Levi Bensam Pastor VT: *யாரை கர்த்தர் சபையில் சேர்த்து கொண்டு வருகிறார்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 அப்போஸ்தலர் 2:47
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். *இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்*👍👍👍.
[7/1, 3:50 PM] Levi Bensam Pastor VT: *கீழ் காற்று அடிக்கிறதா😃😃 சமுத்திரத்திமாக இருந்தாலும் கடைகளை கொண்டு வரும், மேல் காற்று 💨 அடிக்கிறதா*🎐 😂😂😂
[7/1, 5:48 PM] Glory Joseph VT: அருமையான தியானம். தேவையான ஒன்று. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
[7/1, 6:05 PM] libyarex VM: மனம் திரும்பின பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்
காணாமல் போன ஒரு ஆட்டை கண்டுபிடிக்கிறபோதுதான் மிகுந்த மகிழ்சி உண்டாகும் ஆகவே பாவிகளை சபையைவிட்டு வெளியேற்றுவது என்பது சரியானது அல்ல அவன் விரும்பி பாவம் செய்யவில்லை பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்றுதான் நாம் கவனிக்க வேண்டும் அப்படி நாம் வெளியேற்ற வேண்டுமென்றால் முதலில் அனேக பாஸ்ட்டர்களைதான் வெளியேற்ற வேண்டும்
தலையில் பூ வைக்ககூடாது ஆனால் பூப்போட்ட சேலை அணியலாம் நகை அணியக்கூடாது ஆனால் வாசனைதிரவியங்களை பயன்ப்படுத்தலாம்
இன்றைக்கு லெக்கீன்ஸ் போட்டுக்கொண்டு ஆராதனைக்கு வரும் பாஸ்ட்டர் குடும்பங்கள்
ப்யூட்டி பார்லர்க்கு சென்று தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் பாஸ்ட்டர் குடும்பங்கள் ஏன் கண்டிக்கப்படவில்லை
வெளியரங்கமாய் விபச்சாரம் செய்பவர்களை சபையைவிட்டு விரட்ட நினைக்கிறோம் ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தாலே அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்ற வார்த்தையின் படி அந்தரங்கசிந்தனையில் இச்சையோடு இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள் ஆகவே நாம் அவ்ர்களுக்கு முன்னாக
பரிசுத்தமாய் வாழ்வதுதான் அவர்களை கல்வாரிக்கு
நேராய் திருப்பும். நாம் பாவிகளை வெளியேற்ற வேண்டும் என்று சிந்திப்பதைவிட நாம் சபைக்குள் இருக்க தகுதியானவர்களா என்பதை முதலில் சிந்திப்போம் நாம் அவரின் சாயலிலும் அவரின் ரூபத்தின் படியும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம் நம்மிடத்திலுள்ள அவரின் சாயலை பாவிகளுக்கு முன்னால் வெளிக்காட்டுவோம்
பவுலின் நிருபங்களை நாம் வாசிக்கும் போது முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டியது நிருபம் எழுதப்பட்டதின் சூழல் ,சொல்லப்பட் வேண்டிய தேவைகள்,அந்த பட்டணத்தில் இருந்த பிரச்சனைகள் ஏன் பவுல் இதை சுட்டிக்காண்பிக்கிறார்,அந்தபட்டணத்திலுள்ள மக்களின் வாழ்வுமுறைகள் இவற்றையெல்லாம் அறிந்துக்குண்டு வாசிக்கின்றபோதுதான் நிருபங்களில் கண்டிக்கப்பட்டிருக்கும் பாவத்தின் தன்மையும் அது எப்படி இன்றைய நாளில் சபைக்குள் கிரியை செய்யமுடியும் அதை நாம் எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளமுடியும்,கொரிந்துவில் இருந்த சூழல் வேறு,பிலிப்பியில் இருந்த சூழல் வேறு, இப்படியாக பவுலின் கண்டிப்பு பட்டணத்திற்கு ஏற்றார் போல் மாறுவதை கவனிக்க வேண்டும் அதைவிடுத்து அதைஅப்படியே இங்கு செயல் படுத்த நினைக்கும் போதுதான் பாவிகளை புறக்கணிக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோம்...
தொடரும்
[7/1, 6:09 PM] libyarex VM: நான் பாஸ்டர்களை குற்றப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை அவர்களின் வாயின் வார்த்தைகளின் மூலம்தானே ஆண்டவர் நம்மோடு சபையில் இடைபடுகிறார் ஆகவேதான் அவர்களின் வாழ்வே ஒரு நிருபமாகவும் நற்செய்தியாகவும் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை
[7/1, 6:11 PM] Elango: அருமையான நிதானிப்பு.👍👌✍✅ நன்றி சார்.🙏
[7/1, 6:21 PM] Jeyanti Pastor VT: Of course
[7/1, 6:23 PM] Elango: *உண்மை சம்பவம், காணால் போன ஆடுகளை தேடிப்போங்கள்*👇👇👇
தனி மனித புகழுக்கு ஆசைப்படும் எல்லோருக்கும் இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை !!!!!!! அப்படியே சபை சட்டம் மிகவும் ஒருமனிதனை சிதரடிக்கச்செய்து கொர்ச்சிக்கிற சிங்கத்திடம் அனுப்பும் என்பது உண்மை சம்பவம்👇👇👇
*ஒரு தம்பி நான் மாவடியில் இருக்கும்போது இரட்சிக்கப்பட்டு சபைக்கு வந்தான் ஆரம்பத்திலேயே தீர்க்கத்தரிசன வரம் வேண்டும் என்று போராடி ஜெபித்தான் அப்போது தன்னோடு தேவன் பேசினார் நீ ஊழியத்துக்கு போ என்றுக் கூறினார் என்று கூறிக்கொண்ட இந்த தம்பி கொஞ்சநாள் தீர்க்கதரிசனம் கூறிக்கொண்டும் அநேகருக்கு தேவனைப்பற்றி அறிவித்தான் ஆனால் இந்த தம்பிக்குள் பெருமை வந்திருந்தது யாருடைய பேச்சும் கேட்காமல் தன் சுயமாக வருவோருக்கும் போவோருக்கும் தீர்க்கதரிசனம் கூறினதை நான் கேள்விப்பட்டு அந்தம்பியை தனியாக கூப்பிட்டு அவனுக்குள் வஞ்சிக்கிற ஆவி இருப்பதையும் மென்மையாக கூறி நீ உண்னை தாழ்த்தி தேவனுக்கு ஒப்புக்கொடு என்று கூறினேன் அவனும் தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டான் .ஆனால் நான் மும்பை வந்துவிட்டேன் 10 வருடங்கள் கடந்தோடிவிட்டது இந்த தம்பி குடும்பத்தில் அநேக புயல் அடிக்கத்தொடங்கியது இந்த தம்பி போன த பெந்தே கோஸ்தே சபையில் அவனுக்கு நல்ல மரியாதை கிடைத்திருந்தது ஆனால் அது வெறும் சொற்ப்ப நாள்தான் கோள் சொல்லுகிறவர்களுக்கு சபையில் என்றுமே பாஸ்டர்கள் மத்தியில் நற்பெயருதான்.*
சில வருடத்துக்கு முன்பு இவருடைய தகப்பணார் காலமானார் இதற்குப் பின்பு இந்த தம்பி வாழ்கையில் அநேகப் பிரச்சனை தகப்பணார் சடத்தை தூக்குவதற்கு ஊரில் இருந்து யாரும் செல்லவில்லை த பெந்தே கோஸ்தே சபையில் இருந்து சொற்ப்பமான ஜனங்களே சென்றிருந்தார்கள்.
இத்தனை வேதனைக்கும் மத்தியில் இந்ததம்பியின் தங்கை மர்மமான முறையில் இறந்திருந்தார் *அதற்கு பிறகு இந்ததம்பியின் அம்ம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது சபையில் இருந்து எந்த ஐக்கியமும் கிடையாமல் தனித்திருந்த தம்பி நாளடைவில் உலகப்பிரகாரமாக வாழ ஆரம்பித்தார்*😭😭😭😭
*இதை ஏன் எழுதுகிறேன் என்றால் ஒரு ஆவிக்குரிய சபையில் பின்மாற்றத்தில் போவோரை சந்தித்து புத்தி சொல்லி சபைக்கு கூப்பிட்டுச்செல்லவேண்டு இதுதான் சகோதர அன்பு ஆனால் பின்மாற்றக்காரனுடன் பேசக்கூடாது என்ற சபை சட்டத்தால் இந்த தம்பி இப்போது அய்யாவழி இந்துக்கோயிலில் பேய் ஆடிக்கொண்டு இருப்பதாக இன்று கேள்விப்பட்டேன்.*🤔🤔🤔🤔🤔🤔👆👆😭😭😭😭😭
எனக்கு மிகுந்த அழுகையாக வந்தது ஓ என் சகோதரனை சபை சட்டத்தால் கொன்றுப்போட்டுவிட்டார்களே!⚠⚠⚠👆👆👆👆🤔🤔
எல்லாமனிதனுக்குள்ளும் பெருமை வரத்தான் செய்யும் அதற்க்காக பின்வாங்கிப்போகும் ஒரு ஆடு காணாமல் போன ஆடு அல்லவா அது இப்போது கொர்சிக்கிற சிங்கத்துக்கு இறையாகிப்போனதே!😭😭😭
[7/1, 6:23 PM] Elango: கண்டிப்பாக படிங்க👆👆😭😭
[7/1, 6:25 PM] Elango: ஒருவரது தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படுகின்ற தோல்வி தான் பின்மாற்றம்.
இதற்கும் சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை .ஆனாலும் 👇👇👇ஒரு சபையில் ஒரே நேரத்தில் பல விசுவாச குடும்பங்கள் பிரிந்து போகிற நிலை வந்தால் அதற்கு சபையை நடத்துபவர்கள் கண்டிப்பாய் பதில் சொல்ல கடமை பட்டவர்கள் .☹☹
[7/1, 6:29 PM] Elango: அழிந்து போகும் ஆத்துமாக்களை தேவனிடத்தில் சேர்க்க வேண்டும், நரக குழியில் இருந்து அத்துமாக்களை தப்புவிக்க வேண்டும் என்ற ஆழமான வாஞ்சையோடு ஊழியம் செய்பவர்கள் , ஒரு ஆத்துமா தன்னைவிட்டு பிரிந்து போனானாலும் அதை விடவே மாட்டார்கள். மோசேயை போல தாழ விழுந்து மன்னிப்பு கேட்டாவது திரும்பி அழைத்து வருவான்.❤🐑🐑🐑🐑🐑
[7/1, 6:31 PM] Elango: ஆடுகளை குறித்த கரிசனையுள்ள ஊழியர்களும் அனேகர் இருக்கிறார்கள்.
ஆடுகளுக்கொரு வேதனையென்றால் அவர்களோடு கூடவே நின்று அவர்களுக்காக போராடும் ஊழியர்.
*ஆடுகளின் நிலமைகளை அறிந்து ஓநாய் வரும்போது விட்டுச்செல்லாமல் கூடவே இருந்து சுமக்கவேண்டிய இடத்தில் சுமந்து நடத்துபவரே உண்மையான மேய்ப்பன்.*🐑🐑🐑🐑❤❤❤💞💞
[7/1, 6:34 PM] Elango: சில சபைகளின் உபதேசத்தை நான் தவறு என்று கூறவில்லை ஆனால் சபை ஒழுங்கு என்று சொல்லும் மனித சட்டத்தையே தவறு என்று கூறுகிறேன்.
*பாவத்தில் விழுந்து பின்மாற்றக்காரர்களிடன் கலவக்கூடாது அதாவது ஐக்கியம் வைக்கக்கூடாது என்றுதான் உபதேசம் கூறுகிறதே தவிர அவர்கள் தவறை உணர்த்தி புத்திக்கூட சொல்லக்கூடாது என்று வேதத்தில் இல்லை!*🤔🤔🤔⚠⚠👆👆👆👆❓❓❓
அவர்களுக்கு புத்திக்கூறி சபைக்கு அழைக்கலாமே! ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பர். தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாமல் இருக்கக்கடவன்.
[7/1, 10:40 PM] Elango: சீக்குபிடித்த கோழிகளை தனியாக பிரித்து அது தன் நோயிலிருந்து குணமாகும் வரைக்கும், கோழி கூட்டத்திலிருந்து பிரித்து வைப்பர்.
1 கொரிந்தியர் 5:5
[5] *அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி,* மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
*அவன் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே பவுலின் நோக்கமும், ஏக்கமும்*❤❤💞💞
தேவ ஊழியர்கள் ஒரு ஆத்துமாவையும் இழந்துவிட விரும்பமாட்டார்கள், மனுஷகுமாரன் பாவிகளை தேடி வந்தது போல, அவருடைய ஆவியை அடிச்சுவடை பின்பற்றும் ஊழியர்களையும் பாவிகளை நேசிப்பர். அவர்கள் மனந்திரும்பி குணப்படுவதையே விரும்புவர்.
ஒருவரும் கெட்டுப்போவது தேவ சித்தமல்ல, பாவிகளை தேடியே பரமன் வந்தார்.
சாகிறவனுடைய சாவை விரும்பாதவர், அவன் மனந்திரும்பி பிழைப்பதையே விரும்புவார்.
*சீழ்ப்பிடித்த ஒரு பாகத்தை வெட்டி எடுப்பதன் நோக்கம், மற்ற பாகங்களும் அசுசிபடக்கூடாது, பாதிப்பு உள்ளாகக்கூடாது என்பதற்க்கே, வெறுத்து தள்ளுவது என்று அர்த்தமாகி விடாது*❤❤❤
[7/1, 10:41 PM] Elango: 2 கொரிந்தியர் 7:9-11
[9] *இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல,*👇👇👇👇 மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்;😀😀😀😀🤝🤝👍👍 நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
[10]தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
[11] *பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.*
[7/1, 10:44 PM] Elango: யோபு 5:17-18
[17]இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
[18] *அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.*
[7/1, 10:45 PM] Elango: நீதிமொழிகள் 20:30
[30] *காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.*
[7/1, 10:45 PM] Elango: சங்கீதம் 119:71
[71] *நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது;*👍👍👍👇👇 அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.🤝🤝🙏🙏👏👏👏🙌🙌
[7/1, 10:46 PM] Elango: ⚠ *இன்றைய வேத தியானம் -01/07/2017* ⚠
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், *சகோதரனென்னப்பட்ட ஒருவன்*👇
விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது,
உதாசினனாயாவது,
வெறியனாயாவது,
கொள்ளைக்காரனாயாவது இருந்தால்,
*அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.*1 கொரிந்தியர் 5:11
1⃣👉👆இப்படிப்பட்ட கண்டிப்புக்களை நம்முடைய சபையில் செயல்படுத்த வேண்டுமா❓ அல்லது பாவிகளை நேசித்து பாவத்தை வெறுக்க வேண்டுமா❓
2⃣பொருளாசைக்காரர்கள் என்றால் என்ன அர்த்தம்❓அதற்கு வரைமுறை ஏதாவது உண்டா❓பொருளாசைக்காரர்களோடு நாம் கலந்திருக்கக்கூடாதா❓
3⃣ சபையில் இருப்பவர்கள் எல்லோரும் பரிசுத்தவான்களா❓விசுவாசிகள் துன்மார்க்கராக வாழும் நிலையில், சபை இவர்களை எப்படி கையாள வேண்டும்❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
Post a Comment
0 Comments