Type Here to Get Search Results !

நம்முடைய இரட்சிப்பு நிறைவேற நாம் எப்படி பிரயாசப்பட வேண்டும்❓


[4/25, 8:05 AM] 🔷 *இன்றைய வேத தியானம் - 25/04/2017* 🔷

👉 *நம்முடைய இரட்சிப்பு நிறைவேற நாம் எப்படி பிரயாசப்பட வேண்டும்❓*

👉 இரட்சிப்பில் விசுவாசம் மட்டுமே போதுமா இல்லாவிட்டால் கிரியையும் வேண்டுமா❓
          *http://vedathiyanam.blogspot.com*

[4/25, 8:47 AM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 2:10-16
[10]இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
[11]பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

[12]ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், *அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[13]ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
[14]நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
[15]கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,
[16]எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.

[4/25, 8:53 AM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 1:21-27
[21]ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, *உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்*☝ ☝ ☝ ☝ ☝ ☝ .
[22]அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.,
[23]என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பா.யிருப்பான்;
[24]அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.
[25]சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
[26]உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
[27]திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

[4/25, 9:00 AM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 2:14-26
[14]என் சகோதரரே, *ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?*👇👇👇👇👇👇👇👇
[15]ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,
[16]உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?👆👆👆👆👆👆👆👆👇👇👇👇
[17] *அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.*
[18]ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
[19]தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
[20] *வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?*
👇👇👇👇👇👇👇[21]நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் *ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது,*👇 👇 👇 👇 👇 👇 👇 கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
[22] *விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ 
[23]அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
[24]ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 *தேவன் சொன்னதை செய்கிறது தான் கிரியை, ஆபிரகாம் இதை தான் செய்தார்*

[4/25, 9:05 AM] Levi Bensam Pastor VT: . யாக்கோபு 2:24-26
[24]ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
[25]அந்தப்படி *ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
[26]அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 *ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது*☝ இது தான் கிரியை 🙏

[4/25, 9:11 AM] Stanley Ayya VT: ஆண்டவராகிய இயேசப்பா
விசுவாச பலத்தில் குறைவுபட்டிருந்தாலும் கிரியைகளின் வாய்பை பற்றிகொள்ள கிருபை தாங்கப்பா.

[4/25, 9:12 AM] Elango: இயேசுவை இரட்சரகராக ஏற்றுக்கொண்டு ஒருவர் ... தன்னுடைய இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுதல் அவசியமான ஒன்று ...
அந்த விருப்பத்தையும் வாஞ்சையையும் தேவனே பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்குள் உருவாக்குகிறார்.

*இந்த இரட்சிப்பின் பிரயாசமானது முதலாவது இயேசுவில் வைக்கும் விசுவாசத்தில் தொடங்கி.. ... பின்பு அனுதினமும் வேத வாசிப்பிலும், தனி ஜெபத்திலும் தரித்திருத்தலும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் நாடக்கூடிய பிரயாசமாகவும் இருக்கும்.*

[4/25, 9:23 AM] Elango: நாம் செய்யும் எந்த வேலையானாலும் அதை நேசித்தால் தான் அதனை மனதிருப்தியாக செய்ய முடியும்...

இயேசுவை விசுவாசத்தால் மட்டுமே நம் இரட்சிப்பின் நிலை முடிந்துவிடுவதில்லை...
அதனால் தான் நாம் இரட்சிப்பில் ஸ்திரப்படவும் பலப்படவும் ஆவியானவரை நமக்காக கொடுக்கப்பட்டிருக்கிறார்.

[4/25, 9:27 AM] Elango: 1 கொரிந்தியர் 15:10
[10]ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; *அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.*

நாம் இரட்சிப்பிலும் ஆத்ம தாகத்திலும் பிரயாசப்படுவதும் தேவனுடைய கிருபையே.‼‼‼

[4/25, 9:55 AM] Elango: யோனா 4:10-11
[10]அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும் நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
[11]வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

கர்த்தருடைய பிரயாசம் நம்முடைய  ஆத்தும இரட்சிப்பு...கர்த்தரே நமக்காக பரிதபிக்கும் போது நாம் அதிகமாக பிரயாசப்பட வேண்டுமல்லவா...

1 பேதுரு 2:1-3
[1]இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
[2]சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு
[3] *நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.*

[4/25, 10:02 AM] Elango: 👍👍👍
எபேசியர் 2:10
[10]ஏனெனில், *நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.*

[4/25, 10:09 AM] Elango: நாம் நம்முடைய இரட்சிப்பிற்க்காகவும், பிறருடைய இரட்சிப்பிற்க்காகவும்  எடுக்கும் ஒவ்வொரு பிரயாசமும்,  கண்டிப்பாக ஒரு நாள் பலன் கொடுக்க வல்லமையானது
எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:10
[10]ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் *தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.*

நாம்
சங்கீதம் 126:5-6
[5] *கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.*

[6]அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

[4/25, 10:18 AM] Elango: எனக்கு தெரிந்த ஒருவர் கடந்த சில மாதங்களாக இயேசுவைத் தேடி இங்குமங்குமாக ஓடியவர்... அவருடைய தொழில் அமோகமாக ஓடியது... அவரும் ஆண்டவரை விடவில்லை... அதே நேரத்தில் வேதாகமமும், ஜெபமும் அவரது வாழ்க்கையில் இல்லை... 
சில மாதங்கள் கழித்தது ... அவரது தொழிலில் நஷ்டம் ஏற்ப்பட்டது...

இப்போது அவரே என்னோடு நேத்து இரவு சொன்னார்... 

*என் குல தெய்வத்தை எல்லாம் விட்டுட்டு இந்த இயேசுவை நம்பி வந்ததால் தான் என் தொழிலில் நஷ்டம் என்கிறார். பாருங்கள் பிழை யாரிடம் என்று.😰😨😢😥😳😳😲😲😮😮*

இரட்சிப்பு கர்த்தருடையது என்றாலும் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பது நம்முடைய கடமையல்லவா.

செடியில் நிலைத்திராத கொடி என்னவாகும்... அறுப்பட்டு உலர்ந்து அக்கினியில் தானே போடுவார்கள்🔥🔥🔥🔥🔥

மாற்கு 4:16-20
[16]அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
[17]தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
[18] *வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள*்.
[19]இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
[20]வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.

[4/25, 10:27 AM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 25/04/2017* 🔷
👉 *நம்முடைய இரட்சிப்பு நிறைவேற நாம் எப்படி பிரயாசப்பட வேண்டும்❓*
👉 இரட்சிப்பில் விசுவாசம் மட்டுமே போதுமா இல்லாவிட்டால் கிரியையும் வேண்டுமா❓
*http://vedathiyanam.blogspot.com*

[4/25, 10:58 AM] Elango: கீழானவைகளுக்காக நாம் இயேசுவை பின்பற்றினால் பரிதபிக்கப்பட்டவர்களே.

யோவான் 6:26-29
[26]இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: *நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*

[27] *அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.*
[28]அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
[29]இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.

[4/25, 11:06 AM] Jeyachandren Isaac VT: 👆 அன்பினால் கிரியை செய்யும் விசுவாசம்...
விசுவாசம் அன்பினாலே வெளிபடவேண்டும்👉 அன்பில்லாத விசுவாசம் செத்த விசுவாசமே..
அன்பு👉 இயேசை நம்மை நேசித்ததை போல பிறரை நேசிப்பதே👉

[4/25, 1:01 PM] Elango: சங்கீதம் 42:1-2
[1]மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

[2] *என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது;* நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

*இரட்சிப்புக்கு அனுதினமும் கதறும் தாகம் எடுக்கும் ஆத்துமாவின் வாஞ்சை*👆🏼👆🏼

[4/25, 1:04 PM] Elango: இரட்சிப்பில் தாகமான தேவன் மேல் பற்றுதலான ஆத்துமா👇

சங்கீதம் 63:1-6,8
[1]தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; *வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.*

[2]இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

[3]ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.

[4]என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.

[5]நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

[6]என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

[8] *என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;* உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

[4/25, 1:57 PM] Jeyaseelan Bro VT: *இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா?*

பதில்: 

கிறிஸ்தவ உபதேசத்தில் ஒரு முக்கியமான கேள்வி இதுவாகத் தான் இருக்கக்கூடும். இந்தக் கேள்வி தான் கத்தோலிக்க திருச்சபைக்கும் ப்ராட்டஸ்ட்ன்ட் திருச்சபைகளுக்கும் பிரிவுண்டாக்கி மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தக் கேள்விக்கான பதிலே வேதாகமக் கிறிஸ்தவத்திற்கும், பல கிறிஸ்தவ கள்ள போதனைகளுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு. இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா? இயேசுவில் நம்பிக்கை மட்டும் வைப்பதால் நான் இரட்சிக்கப் படக்கூடுமா அல்லது இயேசுவில் நம்பிக்கை வைப்பதோடு கூட ஒரு சில காரியங்களையும் செய்யவேண்டுமா? 

வேதத்திலுள்ள ஒரு சில புரிந்து கொள்ளக் கடினமான வசனங்களால் இந்தக் கேள்விக்கான விடை சிக்கலானதாக உள்ளது. ரோமர் 3:28, 5:1 மற்றும் கலாத்தியர் 3:24 ஆகிய வசனங்களை யாக்கோபு 2:24 கூட ஒப்பிட்டுப் பார்க்கவும். ஒரு சிலர் பவுலுக்கும் (இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டும்) யாக்கோபுக்கும் (இரட்சிப்பு விசுவாசத்தோடு கிரியைகளும்) இடையில் ஒரு வேறுபாட்டைக் காண்கின்றனர். பவுல் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறுகின்றார் (எபேசியர் 2:8-9). யாக்கோபோ விசுவாசத்தோடு கிரியைகளினாலே தான் நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறுவதாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே யாக்கோபு என்ன கூறுகின்றார் என்பதை ஆராய்ந்து பார்ப்பதின் மூலமே இந்த வெளிப்படையான சிக்கலுக்குத் தீர்வு காண முடியும். ஒரு மனிதன் விசுவாசத்தைக் கொண்டிருந்து நற்கிரியை இல்லாமல் இருக்கமுடியும் என்ற தவறான நம்பிக்கையை கண்டிக்கிறார் (யாக்கோபு 2:17-18). கிறிஸ்துவின் மேலுள்ள மெய்யான விசுவாசம் மாற்றப்பட்ட வாழ்க்கை மற்றும் நற்கிரியைகளைப் பலனாய்த் தரும் என்ற கூற்றை வலியுறுத்துகின்றார். யாக்கோபு விசுவாசத்தோடு கிரியைகளினாலே தான் நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறவில்லை, ஆனால் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட ஒருவரின் வாழ்வில் நற்கிரியைகளைக் காணமுடியும் என்று கூறுகின்றார். ஒருவர் தான் விசுவாசி என்று கூறிக்கொண்டு, அவரது வாழ்வில் நற்கிரியைகள் இல்லையென்றால் கிறிஸ்துவின் மேலுள்ள அவரது விசுவாசம் மெய்யானதாயிருக்காது (யாக்கோபு 2:14,17,20,26). 

பவுலும் இதே காரியத்தை தனது நிரூபங்களில் கூறுகின்றார். கலாத்தியர் 5:22-23 ல் விசுவாசிகளின் வாழ்வில் இருக்க வேண்டிய நல்ல கனிகளைப் பட்டியலிடுகின்றார். நாம் கிரியைகளினாலே அல்ல விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டுள்ளோம் (எபேசியர் 2:8-9) என்று கூறிய மறுகணமே நாம் நற்கிரியைகளைச் செய்வதற்காக படைக்கப்பட்டோம் என்று பவுல் எடுத்துரைக்கிறார் (எபேசியர் 2:10). யாக்கோபைப் போலவே பவுலும் அதே அளவு மாற்றப்பட்ட வாழ்வை எதிர்பார்க்கிறார்: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). யாக்கோபும் பவுலும் இரட்சிப்பைக் குறித்த தங்களது போதனைகளில் வேறுபடவில்லை. அவர்கள் ஒரே காரியத்தை வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றனர். பவுல் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படமுடியும் என்று எடுத்துரைக்க, யாக்கோபோ கிறிஸ்துவின் மேலுள்ள உண்மையான விசுவாசம் நற்கிரியைகளைப் பலனாய்த் தரும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார்.
https://www.gotquestions.org/Tamil/Tamil-faith-alone.html

[4/25, 2:00 PM] Tamilmani Ayya VT: *அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.*

_பிலிப்பியர் 2: 12_

[4/25, 4:44 PM] Tamilmani Ayya VT: பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும், கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.
- ஏசாயா 33: 6

[4/25, 4:50 PM] Tamilmani Ayya VT: *கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு* ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
1 பேதுரு 1: 5
[4/25, 7:53 PM] Saranya VT: Thank u Holy Spirit for great explanations. Help us to obey and follow Lord's word

[4/25, 9:17 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6
[6]விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், *தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.*

அவிசுவாசத்தினால் வருவது எல்லாம் பாவம்...Rom 14:23

கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசம் நற்கிரியையில் வெளிப்படுவதாக இருக்கும்.

பிலிப்பியர் 1:5,10
[5] *உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர்* அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,

[10] *தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,*🍏🍎🍐🍊🍋🍌🍉🍇🥝🍍🍑🍒🍈🍓

Post a Comment

0 Comments