Type Here to Get Search Results !

சிலுவையின் ஏழு வார்த்தைகளில் முதலாம் வார்த்தையின் தியானம்..

[4/10, 8:04 AM] : ✝ *இன்றைய வேத தியானம் - 10/04/2017* ✝
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று முதலாவது வார்த்தையை👇👇 தியானிக்கலாம்*⁉

 ⏹ *பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.* லூக்கா 23:34⏹

    🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/10, 11:07 AM] Stanley Ayya VT: தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் இருக்கும்
"அறியாமை" தேவனையே பலி கொடுத்த கொடிய பாவம்.
"அறியாமை பாவத்தில் இருக்கிறோமா" என்பதை தேவனிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளாமல் வாழும் குருட்டு வாழக்கை விடுதலையே நம் தேவை.
ஆண்டவரின் காலத்தில் தேவகுமாரன் யுதரின் பார்வையில் வெறும் யோசேப்பின் மகனாக , ஏழை தட்சனாகவே தெரிந்ததே காரணம்.
ஆசாரியர்கள் சமுதாயத்தில் உயர்ந்து இருந்த படியால் அவர்கள் சொல்லுக்கே மதிப்பு இருந்தது.
தேவ குமாரன் கரத்தில் பலத்த கிரியைகளை அனுபவித்த போதும்
சபையில் குற்றம் சுமந்த போது யூத மக்களால்/ஆசாரியர்களா  அற்புதங்கள் மகிமையாக நினைக்கக படவில்லை.
மாகா கொடிய அறியாமை பாவத்தினால் பரிசுதத்த இரரத்ததின் பாவங்களை பல தலைமுறை சுமந்த இஸ்ரவேலே நமக்கு உதாரனம்.
நாம்மை ஞானம் என்ற பாதுகாப்பில் காத்து அறியாமை பாவத்தில் பிழைப்போம்.
தேவனை இரட்சகராக கொண்ட நம்மில் பலர் அறியாமையில் இருக்கிறோம்.
நாமும் யூதர்களை போல் ஆண்டவரை தட்சனீன் மகனாக அற்பமாக பார்த்ததுபோல் சாதாரண மனிதன் மூலம் வரும் இரட்சிப்பின் எச்சரிக்கைகளை சிந்திப்போம்.
 ஆசாரியர்களை உயர்வாக பார்த்ததை போல பெரிய ஊழியர்களின் வேத பாரம்ரிய சொல் வழிமுறைகளை அப்படியே கொண்டு சத்தியத்தை சிலுவையில் அறைந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்போம்.

[4/10, 11:59 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 2:7-16
[7] *உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.*👇👇👇👇👇👇👇
[8] *அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை;*✝✝✝✝✝✝✝✝✝ *அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[9]எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
[10]நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
[11]மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
[12] *நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.*
[13] *அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.*
[14]ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
[15]ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
[16]கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

[4/10, 12:19 PM] Elango: 👍👍🙏🙏
Thank you pastor,  உங்கள் அலுவலக வேலையின் மத்தியிலும் கர்த்தருடைய வார்த்தையை பகிர்வதற்க்கு🙏

[4/10, 12:20 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 10/04/2017* ✝
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று முதலாவது வார்த்தையை👇👇 தியானிக்கலாம்*⁉
 ⏹ *பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.* லூக்கா 23:34⏹
    🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/10, 1:06 PM] Immanuel Brother VT: இவர்தான் முழு உலகின் பாவத்தையும் சிலுவை மரணத்தால் மன்னிக்க இருக்கும் போது, (இனி வரும் மனுக்குலத்திற்கும் பாவத்தை போக்க போதுமானது இவர் மரணம்) அது என்ன ஸ்பெஷல் - ஆக சிலுவையிலிருந்து இவர்களை மன்னியும் என்று சொல்கிறார். சற்று விரிவாக விளக்கவும் அன்புச் சகோதரர்களே....

[4/10, 1:12 PM] Elango: தீத்து 3:3-5
[3] *ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.*

[4]நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,
[5]நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

[4/10, 1:20 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 8: 32 ☝☝☝☝☝
*தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?*❓❓❓❓❓❓
Romans 8: 32
*He that spared not his own Son, but delivered him up for us all, how shall he not with him also freely give us all things?*🙏🙏🙏🙏🙏🙏

[4/10, 1:24 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:4-6
[4]ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
[5]தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
[6]மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
நாமும் பாவம் செய்யும் போது இயேசுவை சிலுவையில் அறைகிறோம்
.
[4/10, 1:25 PM] Immanuel Brother VT: நிச்சயமாக... அருமை சகோ👌👌

[4/10, 1:27 PM] Levi Bensam Pastor VT: 1 தீமோத்தேயு 2:4-6
[4]எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
[5] *தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.*👇👇👇👇👇
[6] *எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே*; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.☝ ☝ ☝ ☝ ☝

[4/10, 1:32 PM] Immanuel Brother VT: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி,  மாற்கு: 2-10

[4/10, 1:34 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 3:19-20
[19]அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.
[20] *மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.*👉👉👉👉👉👉 இயேசு கிறிஸ்துவை அன்றி இரட்ச்சிப்பே இல்லை 🙏

[4/10, 1:38 PM] Immanuel Brother VT: அவரே வழி, சத்தியம், ஜீவன்.. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்: 4 :12

[4/10, 1:41 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 13:6-9
[6]அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; *அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.*☝ ☝ ☝ ☝
[7] *அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.*😭😭😭😭😭😭😭😭😭
[8] *அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்;*👉👉👉👉☝☝☝
[9]கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
[4/10, 2:00 PM] Elango: இயேசுவை தாயாக சிந்தித்து 👆🏼🙏👍❤
மத்தேயு 23:37-39
[37] *எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்;❤❤❤❤❤❤❤✝✝✝✝ உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.*

[38]இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
[39]கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[4/10, 2:04 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 66:13
[13]ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

[4/10, 2:08 PM] Immanuel Brother VT: அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். அப் : 2 :23

[4/10, 2:11 PM] Elango: 1 தீமோத்தேயு 1:13-16
[13]முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.
[14]நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
[15] *பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.*

[16]அப்படியிருந்தும், *நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.*
நாம் இப்படி பட்டசூழ்நிலையில், எல்லோரும் புறக்கணித்த நிலையிலும் பிறரை மன்னித்த இருதயம் இயேசுவின் இருதயம், கசப்பு அவர் இருததயத்தில் துளியும் இல்லாத இருதயம்.
நாமும் அவருக்குள் நிலைத்திருந்தால் அதே இருதயம் நமக்கும் இருக்கும்❤💛💛💚💙💜

[4/10, 2:14 PM] Thomas VT: நாம் மன்னிக்க வேண்டும் எவைகளை →
1) சகோதரன் செய்த தப்பிதங்களை - மத் 18-35, 6:14
2) சகோதரன் செய்த குற்றங்களை - மத் 18-21
3) மற்றவர்களுடைய குறைகளை - மாற் 11-25
வேதத்தில் மற்றவர்களை மன்னித்தவர்கள் →
1) யோசேப்பு → தன் சகோதரர்களை (பழிவாங்க எல்லா அதிகாரம் இருந்தது)
2) ஏசா → யாக்கோபை
3) தாவீது → சவுலை
4) தகப்பன் → கெட்ட குமாரனை
5) தாவீது → தன் மீது கல்வீசியவர்களை
6) ஸ்தேவான் → தன் மீது கல்வீசியவர்களை
7) இயேசு → தன்னை சிலுவையில் அறைந்தவர்களை

[4/10, 2:22 PM] Sam Ramalingam VT: தாவீது சீமேயியை தற்காலிகமாகவே மன்னித்தான். பின் நாட்களில் சாலோமோனிடம் போட்டுக்கொடுத்து கொல்லப்பட்டான்.
பாஸ்டர் சாம்

[4/10, 2:24 PM] Levi Bensam Pastor VT: . 1 இராஜாக்கள் 2:8-9
[8]மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
[9]ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.🤔🤔🤔

[4/10, 2:25 PM] Levi Bensam Pastor VT: என் இயேசுவை போல் யாரும் இல்லையே 🙏☝

[4/10, 2:27 PM] Elango: தேவனின் இருதயத்திற்க்கு ஏற்றவன் என பெயர் பெயர் பெற்றவர்... சாகும் தருணத்தில் இப்படி பழிவாங்க சொல்லிவிட்டாரே😟😟😟
தேவனுக்குள் நாம் நிலைக்கொள்ளாத வரை பூரண அன்பு வெளிப்படாதோ...

[4/10, 2:28 PM] Levi Bensam Pastor VT: யோவான் 10:8-11
[8] *எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.*
[9]நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
[10]திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
[11]நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

[4/10, 2:30 PM] Jeyachandren Isaac VT: 👆பழைய பரிசுத்தவான்கள் அல்ல.....
இயேசு கிறிஸ்துவே நாம் பின்பற்றவேண்டிய ROLL MODEL🙏

[4/10, 2:31 PM] Jeyachandren Isaac VT: 👆பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அல்ல..

[4/10, 2:32 PM] Levi Bensam Pastor VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1-3
[1]ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற *இயேசுவை நோக்கி*, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
[2]அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
[3]ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த *அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.*☝ ☝ ☝

[4/10, 3:22 PM] Viknesh VT: உங்கள்  சத்ருக்களைச் சிநேகியங்கள்; உங்களைச்  சபிப்பவர்களை ஆசிர்வதியுங்கள்;  உங்களை  பகைக்கிறவருக்கு  நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும்   உங்களை துன்பபடுத்துகிறவர்களுக்காகவும்  ஜெபம்  பண்ணுங்கள்.

மத்தேயு  5:44

[4/10, 4:00 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 10/04/2017* ✝
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று முதலாவது வார்த்தையை👇👇 தியானிக்கலாம்*⁉
 ⏹ *பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.* லூக்கா 23:34⏹
    🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/10, 4:05 PM] Elango: மத்தேயு 21:33-44
[33]வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.
[34]கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.
[35]தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
[36]பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
[37]கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
[38]தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
[39]அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
[40]அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.⁉⁉😟😟😟😟
[41]அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.
[42]இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?

[43] *ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.*
[44] இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
நல்ல கனிக்கொடா மரங்களெல்லாம்... அக்கினியிலே போடப்படும்.
இராஜா வருகிறார் ஆயத்தமாவோம்.
இயேசு வருகிறார் எதிர்கொண்டு போவோம்.

[4/10, 4:31 PM] Jeyaseelan VT: 🌹இயேசுகிறிஸ்து சிலுவையில் அருளின
ஏழு வார்த்தைகள்🌹

💥முதலாவது வார்த்தை💥

🌷…அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். -
(லூக்கா 23:34).🌷

இயேசுகிறிஸ்துவை கொல்கதா மலைக்கு கொண்டு சென்ற ரோம வீரர்கள் அவரை சிலுவையில் படுக்க வைத்து, கைகள் கால்களை ஆணிகளால் கடாவ ஆரம்பித்தார்கள். கர்த்தர் தன் வேதனையின் உச்சத்தில் வலி தாங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தபோது, சிலுவையை எடுத்து அதற்கென்று வைக்கப்பட்டிருந்த குழியில் நிறுத்தினார்கள்.

அதுவரை, தம்மருகே வந்த யாரையும் புறம்பே தள்ளாத தேவன், தம் கரத்தை நீட்டி, தொட்டு சுகப்படுத்தின தேவனின் கரங்கள் இப்போது ஆணிகளால் கடாவப்பட்டதாய் சிலுவையில் நீட்டப்பட்டிருந்தது. நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்த அந்த கால்கள் ஆணிகளால் கடாவப்பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

நமக்கு ஒரு சிறிய முள் குத்தி விட்டாலும், எவ்வளவாய் வலி தாங்க முடியாமல் கத்துகிறோம், இந்த இடத்தில் எப்படி இந்த முள் வந்தது என்று திட்டுகிறோம். கர்த்தரின் கரங்களிலும், கால்களிலும் ஆணிகளால் கடாவப்பட்டு, வலியால் துடித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தர் ஒரு ஜெபத்தை செய்கிறார்.

‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்னும் உன்னத ஜெபமேயாகும். இயேசுகிறிஸ்து ஊழியத்தை ஆரம்பிக்கும்போதும் ஜெபம் செய்து ஆரம்பித்தார் (லூக்கா 3:21),முடிக்கும்போதும் ஜெபத்தோடு முடிக்கிறார். எல்லாவற்றிலும் ஜெபித்து ஆரம்பித்து, முடிக்க வேண்டும் என்பது அவர் நமக்கு காட்டும் வழியாகும்.

இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கியபடி தம்மை சுற்றிலும் இருக்கிற மக்களை பார்க்கிறார். அவருக்கு உதவும்படி, அவர்மேல் கரிசனை காட்டும்படி யாராவது இருக்கிறார்களா என்று ஒருவேளை அவர் பார்த்திருந்தால் யாரும் இல்லை. சீஷர்கள் பயந்து ஓடிப்போனார்கள். அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் (லூக்கா 23:49).

தம்மை சுற்றிலும், சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று கோஷமிட்ட மக்களின் கூக்குரல் நிறைவேறின சந்தோஷத்தில் அவரை கேலி செய்து பரிகசித்த கும்பல்தான் அவருக்கு முன்பாக நின்றிருந்தது. இதே மக்களுக்குதான் அவர் நன்மை செய்து, பிணிகளை நீக்கி, சுகப்படுத்தியிருந்தார். அந்தோ அதே மக்கள், இன்று அவர் சிலுவையில் பாடுகள் படுவதை பார்த்து எள்ளி நகையாடி கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்த்துதான் கர்த்தர் இந்த வார்த்தைகளை சொன்னார். பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று.

இயேசுகிறிஸ்து நினைத்திருந்தால் ஒரே நிமிடத்தில் அவர்கள் அத்தனை பேரையும் சபித்திருக்க முடியும், அவர்களுக்கு முன்பாக அற்புதம் செய்து, சிலுவையில் இருந்து இறங்கி வந்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யாமல், பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தவராக, அத்தனை பாடுகளையும் ஏற்றுக் கொண்டு, அவர்கள் செய்யும் கேலிகளையும், வேதனைகளையும் பொறுத்துக் கொண்டுதான், பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று கூறினார்.

தம்முடைய கையில் ஆணி அறைந்தவனை பார்த்து அவர் சொன்னார், பிதாவே இவர்களை மன்னியும், தம் கால்களில் ஆணியை பாய்ச்சினவனை பார்த்து சொன்னார் பிதாவே மன்னியும், தம்முடைய சிரசில் முள்முடி சூடினவனைப் பார்த்து சொன்னார், பிதாவே இவர்களை மன்னியும் என்று. தம்மை சவுக்கால் அடித்து, உடலை இரத்தகளறி ஆக்கினவர்களை பார்த்துதான் சொன்னார் பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று. அவர் தாம் தேவன் என்பதை இந்த இடத்தில் நிரூபித்தாரே! அவர் ஜெபித்த அந்த ஜெபம் அப்போஸ்தலர் 2:40ல் பேதுரு பிரசங்கித்தபோது மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டபோது நிறைவேறிற்று. பேதுருவின் பிரசங்கத்தினால் மட்டும் அல்ல, கிறிஸ்துவின் ஜெபத்திற்கு பதிலாக அந்த மாபெரும் அறுவடையாக ஆத்துமாக்கள் அந்த நாளில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அல்லேலூயா!

இதைபோன்றே ஸ்தேவானும் ஜெபித்தார், ‘அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான் (அப்போஸ்தலர் 7:59-60). இங்கு ஸ்தேவான் ஜெபித்தபோது, முதலில் தன்னுடைய ஆவியை கர்த்தாவே ஏற்றுக் கொள்ளும் என்று தனக்காக ஜெபித்துவிட்டு, பின் இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும் என்று ஜெபித்தார். ஆனால் இயேசுவோ, முதலாவது மற்றவர்களை மன்னித்து, பின் தம் ஜீவனை ஒப்புக் கொடுத்தார். இதிலும் அவர் தேவன் என்பதை நிரூபித்தாரே!

நமக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்களுக்கு நாம் அவர்கள் மன்னிப்பு கேட்காமலேயே மன்னிக்கிறோமா? சகோதரி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் தன்னுடைய கணவரையும் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்தவர்களை மன்னித்தபோது, அவர்கள் தான் கிறிஸ்துவின் அடிச்சுவடியை பின்பற்றுகிறவர்கள் என்று நிரூபித்தார்களல்லவா! சமீபத்தில் எழுபத்தொன்று வயதான கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை அந்த சகோதரி மன்னித்தது அவர் கிறிஸ்துவின் அடிச்சுவடியை பின்பற்றுகிறவர்கள் என்று நிரூபித்தார்களல்லவா?

கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்று வார்த்தையினால் சொன்னால் மட்டும் போதாது, நமக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்களை மன்னிப்பதன் மூலம் கிறிஸ்து நமக்குள் இருப்பதை வெளிப்படுத்த முடியும்.

பிரியமானவர்களே பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று கிறிஸ்து ஜெபித்த ஜெபம் நமக்கு விரோதமாக அநியாயமாய் செயல்படும் ஒவ்வொருவருக்காகவும் இருக்கட்டும்.

இயேசுகிறிஸ்து “மத்-5:44 ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்’ என்று தாம் சொல்லி கொடுத்ததை நிஜ வாழ்விலும் செய்து காண்பித்தார். அப்படியே நாமும் அவரை பின்பற்றுவோம்.

இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த நாளும் அவருடைய முன்மாதிரி நமக்கு முன் இருக்கட்டும். அதன்படி செய்யும்போது நாம் அவருடைய பிள்ளைகள் என்பதை வெளிக்காட்டுவோம்.
 ஆமென் அல்லேலூயா!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
http://jeberson.in/?p=1760

[4/10, 4:41 PM] Elango: பிறரை மன்னித்தல் என்பதில் அநேக விசயங்கள் அடங்கி உள்ளன.
❤ நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறோம்.
❤கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கிறோம்.
❤தன்னைப் போல பிறரை நேசிக்கிறோம்.
❤உலக பிரகாரமாக நம் வீட்டில் உள்ள ஒருவரை போல அவரை மன்னித்து விடுகிறோம்.
❤நம் இருதயத்தில் கசப்பு,  விரோதம் இல்லை.
❤நாம் மரணத்தில் நிலை கொள்ள வில்லை

[4/10, 5:52 PM] Peter David VT: 1 பேதுரு 5:1-10
[1]உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:
[2]உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
[3]சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.
[4]அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
[5]அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
[6]ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
[7]அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
[8]தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
[9]விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
[10]கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;

[4/10, 6:03 PM] Jeyachandren Isaac VT: மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
மத்தேயு 6 :14
15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். மத்தேயு 6 :15
👆அனேகருடைய நாட்பட்ட பிரச்சனைகள், குணப்படுத்த முடியாத மற்றும் தீராத வியாதிகள் போன்றவைகளுக்கு ஒருவேளை பிறர் மீதுள்ள கசப்பும் மற்றும் அவர்களை மன்னியாத தன்மைகளும் காரணங்களாக இருக்கக் கூடுமோ....???

(குறிப்பு:எல்லா வியாதிகள் மற்றும் பிரச்னைகளுக்கு இதுவே காரணம் என்று எடுத்துக் கொள்ளாமல்...இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என கொள்வது நல்லது)

[4/10, 6:08 PM] Elango: Exactly
ஒரு சகோதரி வியாதி நேரத்தில் கூட்டத்தில் கேட்ட செய்தியில் பிறரை மனதார மன்னித்தார்களாம், அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற்றார்களாம்.

[4/10, 7:42 PM] Elango: அப்போஸ்தலர் 3:17-18
[17] *சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.*👁👁👁👁👁👁👁👁

[18] *கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.*‼‼
அவர்கள் இயேசுவை கொல்ல வேண்டும் என்று நினைத்து கொன்றார்கள், ஆனால் தேவ சித்தமோ கிறிஸ்துவானவர் பாவபலியாக சிலுவையில் மரித்து, உயிர்க்க வேண்டுமென்பது.

[4/10, 7:47 PM] Elango: ஆதியாகமம் 50:17-21
[17]ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.😭😭😭😭😭😭😭

[18]பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.
[19]யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;❓❓❓❓
[20] *நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.*

[21] *ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்.*

*தனக்கு துரோகம் செய்த சகோதர்களை யோசேப்பு மன்னித்து, அழுது.. உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நான் பராமரிப்பேன் என்று சொல்லும் போது... நம்முடைய ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அன்பு எவ்வளவு பெரிதாக இருக்கும்.❤❤❤💚💙💙💜💛✝✝✝✝*

[4/10, 7:52 PM] Elango: 1 பேதுரு 2:15
[15] *நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.*
இயேசுவின் சிலுவையில் முதலாவது வார்த்தை நிறைவேற்றியது...👇👇

  *பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.* லூக்கா 23:34

[4/10, 8:14 PM] Elango: நச்சென்று சுருக்கமாக சிலுவை சம்பவத்தையே படம் படித்து காட்டியது போன்ற விளக்கம்😭😭😭🙏🙏🙏🙏✝✝✝🙋♂🙋♂

[4/10, 8:27 PM] Elango: கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙋♂
*ஆண்டவர் இயேசு பிறந்ததிலிருந்து அநேக விதமான காரியங்கள் நடக்கிறது...ஆண்டவர் இருக்கும் போது நான் இருந்திருந்தா கண்டிப்பா நானும் அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று சொல்லியிருப்பேன்.‼*
ஏனென்றால் தேவன் மனிதனாக வருவது என்பது யாராலும் சிந்திக்க முடியாத காரியம்.அதன் மத்தியில் 84 வயது விதவை அன்னாள், சிமியோன்👇👇👇

லூக்கா 2:25-32
[25]அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
[26] *கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.*
 மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்லாமல் தேவனால் இயேசுவைக் குறித்து மேய்ப்பர்களுக்கும், சாஸ்திரிகளுக்கும்  வெளிப்படுத்தப்பட்டது அதானால் இயேசு சிலுவையில் சொன்னார்.
*பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே*
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[4/10, 8:36 PM] Elango: 1 கொரிந்தியர் 2:7-8
[7] *உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.*👇👇👇👇👇👇👇
[8] *அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை;*✝✝✝✝✝✝✝✝✝ *அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
அந்த மகிமையே நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து.
இன்றைக்கு அநேகர் ஆண்டவரை அறிய வேண்டிய பிரகாரமாக அறியவில்லை..
சவுலைப் பாருங்க கொடுரமான காரியங்களை செய்து சபையை பாழாக்கிக்கொண்டிருந்தான்...
*குற்றஞ்சாட்டப்படாத மனுசன் தான் ஆனால் பக்திவைராக்கியமாக இயேசுவை அங்கிகரிக்க முடியலை... ஆனால் அவன் இயேசுவை ஏற்றுக்கொண்டான் அநேக சபைகளை உருவாக்க தேவன் கிருபை செய்தார்*🙋♂🙋♂🙋♂🙋♂👍👍👍👆🏼👆🏼‼👌👌👌
இயேசுவை அறியாதிருக்கிற அநேகருக்கு ஆண்டவர் மன்னிப்பை கொடுக்கிறார்...அந்த வேதனையின் மத்தியிலும், சத்துரு ஒரு பக்கம் சந்தோஷட்டிருக்கும் போது  அப்படி சொல்லுகிறார்.🗣🗣🗣😭😭😭❤❤❤❤✝✝✝
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[4/10, 8:47 PM] Immanuel Brother VT: ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
எபேசியர் 4:32....
கொலோச: 3:13

[4/10, 8:48 PM] Elango: மத்தேயு 18:22
[22]அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
ஏழு எழுபது தரம் மன்னிக்க சொன்ன தெய்வம்...
மத்தேயு 6:12
[12] *எங்கள் கடனாளிகளுக்கு 👉நாங்கள் மன்னிக்கிறதுபோல👈 எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.*
மத்தேயு 5:23-24
[23]ஆகையால், *நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,*
👇👇
[24] *அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து,*‼‼
இயேசு இராஜாவைப் போல யாரும் இல்லை..பாவிகளுக்காக ஜீவனை தந்த தேவன்,  மன்னிப்பை, இரட்சிப்பை, மீட்பை தந்த தேவன் ...ஆகையால் பழைய ஏற்ப்பாட்டு விசுவாசிகளை அவர்விட்டுக்கொடுக்கவே மாட்டார் ...
எபிரேயர் 11 ம் அதிகாரத்தில் எத்தனையோ பரிசுத்தவான்களை குறித்து எழுதினாலும், எபிரேயர் 12:1 ஐ தான் நாம் பின்பற்ற வேண்டும்.
👇👇👇
*பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எத்தனையோ காரியங்கள் செய்திருக்கலாம்... அற்ப்புதங்கள், அதிசயங்கள், பட்டணத்தை பிடித்த காரியங்கள்... ஆனால் நாம் இயேசுவை நோக்கிதான் முன்னாடி செல்ல வேண்டும்.*

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1,3
[1] *ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;*

- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[4/10, 9:08 PM] Darvin Sekar Brother VT: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திர்கு ஸ்தோத்திரம் இறைமைந்தன் இயேசுவின் ந hv ாமத்தில் யாவருக்கும் என்னுடைய வாழ்த்துதலையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்
       இந்த நாளிலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் சொன்ன முதலாம் வார்த்தையாகிய மன்னிப்பை குறித்து சுருக்கமாய் தியானிக்க இருக்கிறோம். லூக்கா 23:34 பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் என்பது
       பிதாவாகிய தேவனோடு பேசுகிறவார்த்தை பிதாவேஇவர்களுக்கு மன்னியும் என யாரைமன்னிக்க சொல்கிறார் தன்னை திட்டியவர்களையும் பரிகாசித்தவர்களையும் துப்பியவர்களையும் அடித்தவர்களையும் குட்டியவர்களையும் தனதுவஸ்திரங்களைகூட கழற்றி எடுத்து சிலுவையில் அறைந்தவர்களுக்காய் பரிதவித்து பரிந்து பேசுகிறார் பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று .
           இந்த சம்பவத்தை பார்த்தோமானால் எந்தஒருதகப்பனும் தன்னுடைய மகன் அனியாயமாய் பிரரால் தணடிக்கப்படுவதை பர்த்து சும்மா இருக்கமாட்டார்கள் அப்படியே பிதாவாகிய தேவன் இவர்களை தண்டித்துவிடக் கூடாதே என்ற நோக்கத்தில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும் என இவர்களுக்காக ஒரு ஜெபத்தை ஏரெடுக்கிறார் . இரண்டாவதாக இவர்செய்கிற விண்ணப்பம் தாங்கள் செய்கிறது இன்னெதென்று அறியாதிருக்கிறார்கள் என்கிறார் பொதுவாக இல்லங்களில் பிள்ளைகள் ஏதாவது தப்புசெய்துவிட்டால் தகப்பனோ தாயோ யாராவது தண்டிக்க வரும்பொழுது மற்றவர் அய்யோ விடுங்க தெரியாம செய்திட்டான் இனிஇப்படிசெய்யமாட்டான் என பரிந்துபேசுவார்கள் அவர்களும் இனிஇப்படிசெய்யாதேணி விட்டுவிடுவார்கள் இங்கேயும்  இயேசுகிறிஸ்துவும் இப்படித்தான் அவர்களுக்காக பரி்ந்துபேசுகிறார். இன்றைக்கும் ஏசு நம் அக்ரமம் மீருதலுக்காகநாம் தண்டிக்கப்படாதபடிக்கு நமக்காக பிதாவிடம் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
   மூன்றாவதாக நாம் இந்தவார்த்தையைக் குறித்து பார்க்கும்போது இயேகிறிஸ்து எல்லாகாரியங்களையுமே தன்னுடைய வாழ்க்கை மூலமாய் நமக்கு கற்றுக்கொடுக்கிறவராய் காணப்படுகிறார் மத்தேயு 5:44 ல் இப்படியாய் சொல்கிறார் உங்கள் சத்துருக்களை சினேகியுங்கள் சபிப்பவர்களைஆசீர்வதியுங்கள் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் நிந்திக்கிறவர்களுக்கும் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் என்று. சொன்னதுமாத்திரமன்றி அப்படியே அத்தனை வேதனைகழுக்கு மத்தியிலும் தன்னை நிந்தித்தவர்களுக்காகவும் துன்புருத்தியவர்களுக்காகவும் பிதாவிடம் ஜெபம்பண்ணினார். அப்படியே நாமும் பிரறை மன்னிக்கவேண்டும் ஜெபம்பண்ணவேண்டும் என ஆண்டவர் விரும்புகிறார். இன்று அனேகர் நினைக்கின்றனர் ஆண்டவர் எல்லாவற்றையும் நமக்கு மன்னித்துவிடுவார் என்று மன்னித்துவிடுவார்தான் ஆனால் நாம் இந்த மன்னிப்புக்கு பாத்திரராய் மனம்த்திரும்பாவிட்டால் அதுநம்முடைய தலையின்மேல் அக்கினியாய் குவியும் என்று வேதம் சொல்கிறது.
           இன்னொருகாரியத்தை சொல்லி முடிக்க விரும்புகிறேன் ஆண்டவர் நமக்காகஎப்பொளுதுமே பரிந்துபேசுகிறவராகவே இருக்கிறார் இதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் பிதாவாகிய தேவன் நம்மிடம் கனியைத்தேடுகிறார் கனியற்ற வழ்வு அந்த மன்னிப்பை பெரமுடியாமல் செய்துவிடுகிறது லூக்கா 12:6-8 ல் பிதாவாகியதேவன் சொல்கிறார் நல்லநிலமாகிய திருசபையில் நாட்டப்பட்டிருக்கிர இந்தமரம் கனியும் கொடுக்கவில்லை நல்லநிலமாகிய திருசபையையும் கெடுக்க நினைக்கிறது இதை வெட்டிபோடு என்கிறார் ஆனால் ஏசு நமக்காக பரிந்துபேசுகிறார் ஆனால் ஏசு அங்கும் நமக்காக பரிந்து பேசுகிறவராய் காணப்படுகிறார் இல்லை பிதாவாகிய தேவனே இந்தவருடம் விடுங்கள் என் நல்லவார்த்தைகளாலே இவனை செரிவூட்டுகிறேன் கனிகொடாவிட்டால் வெட்டிபோடலாம் என்கிறார் பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்று நமக்காக நித்தமும் பரிந்து பேசுகிறவறாய் காணப்படுகிறார்
   தேவஜனமே தேவனுடைய திருசபையே நீஇன்று எப்படிகாணப்படுகிறாய் இந்தமன்னிப்பை பெற்றுக்கொள்ளதக்கதாய் உன்வாழ்க்கை கனியுள்ளதாய் காணப்படுகிறதா இல்லை திருசபையாகிய நல்ல நிலத்தை கெடுக்கிறதாய்காணப்படுகிறதா சோதித்துபார் தேவன் இன்னும் ஒருவருடம் உனக்கு வாய்பு கொடுக்கிறார் இனியும் நீ திருசபையாகிய நல்ல நிலத்தை கெடுக்க திட்டம் தீட்டுவாயானால் உன் முடிவு எப்படியிருக்கும் சற்று சிந்தித்துபார்இப்பொழுதே கோடாரியானது மரத்தின் வேரருகே வைக்கப்பட்டுள்ளது நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்னியிலே போடப்படும் ஆமேன்
                              அன்புடன் உங்கள் சகோதரன் இ.டாா்வின் சேகா்

[4/10, 9:12 PM] Elango: ஆழுமான கர்த்தை தந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்த்தோத்திரம்🙋♂
✅தகப்பன் பிள்ளை உறவு
✅பரிந்து பேசுதல்
✅கனிக்கொடுக்க உரம் போடுதல்👍👍

[4/10, 10:44 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாகுதாக🙋♂
இன்று நாம் தியானிக்கும் வார்த்தை இயேசுகிறிஸ்து சிலுவையில் பேசிய முதலாவதான வார்த்தை... பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே...
எப்படிப்பட்டசூழ்நீலையில் இந்த வார்த்தையை ஆண்டவர் சொல்லுகிறார் என்பதை நாம் கவனிக்க தவறிவிடக்கூடாது...
சரித்திர பிண்ணனியையும், பூலோக பிண்ணனியையும், நபர்களை குறித்ததான பிண்ணணியும்,  இங்கு நாம் கவனிப்பட வேண்டிய முக்கிய ஒன்றாக காணப்படுகிறது...
முதலில் கிறிஸ்துவைக்குறித்து நாம் பார்க்கும் போது ... வியாழன் அன்று அவர் கைதது செய்யப்படுகின்றார் ...அந்த இரவு முழுவதும் விசாரணைக்குட்டுத்தப்படுத்தப்படுகின்றார் , அவர் ஆளுநரிடமும் ரோம பேரரசிடமும், அவரை விசாரணைக்கு உட்ப்படுத்துகின்றார்கள்...
விசாரணையின் போது அவருக்கு உணவோ குடிநீரோ அவருக்குதரப்பட வில்லை...மாறாக அவர் உடம்பு முழுவதும் நாட்டு மக்களை ... மகிழ்ச்சியடைவதற்க்காக இவரை விடுதலை செய்யும் எண்ணத்தோடு காணப்பட்ட பிலாத்து... அவருக்கு சவுக்கடியை 😭😭😭😭😭😭 எழும்பு துண்டினால் ஏற்றப்படுத்தப்பட்ட சவுக்கை உருவாக்கி ... அவர்உடல் முழுவதும் கிழிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது ...😰😨😢😥😪😓
அது மாத்திரம் அல்ல, அவர் சிரசில் முள்முடி அழுத்தப்பட்டு இருக்கிறது அங்கிருந்து அவருடைய முகமெல்லாம் இரத்தமாக காணப்படுகிறது...❣❣❣❣❣❣❣❣❣❣❣
இப்படிப்பட்ட வேளையில் மக்கள் அதிகமாக கூக்குரல் இடும் போது ...சிலுவையில் அறையப்படும் படி உந்துதல் கொடுக்கும்படி சதுசேயர் பரிச்சேயர்... வேதபாராகர் ... என்பவர்கள் தங்களுடைய பதவி, வாழ்வாதாரத்தை இழந்து விடாதப்படிக்கு ..கிறிஸ்துவை சிலுவையில் அறைய கொண்டு போனார்கள் மறுபுறம் ...தங்களுக்கு கிடைக்கும் பலனை இழந்துவிடாதபடிக்கு பரபாஷை விடுதலை செய்யும் என்று உரக்க சத்தமிட்டார்கள்...
இறுதியாக மறுபுறம் பிலாத்து தன்னுடைய பதவி ஆபத்தில் இருக்கிறதை கண்டும்... மக்களை பகைக்காமலும்... ஏரோதின் நட்பில் அவன் வருவதற்க்காகவும்... மனைவியால் எச்சரிக்கப்பட்டும் அவன் கிறிஸ்துவை கைக்கழுவினான்....
ஒரு குற்றமும் இந்த மனிசனிடத்தில் காணேன்...என்று சொல்லியும் கிறிஸ்துவை கைக்கழுவினான்...
*பிலாத்தும், மக்களும் எண்ணியிருக்கலாம் கிறிஸ்துவை கொன்று விட்டோம் என்று ... ஆனால் வேத வாக்கியம் நிறைவேறவே இப்படி நடந்தது என்பதுதான் வேதாகத்தின் உண்மை*✅✝🙏🙏🙏👍👍👍
இதன் அடிப்படையில் நம்முடைய விசுவாசம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.....
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடிதத்தை பெற்று ...அவர்கள் அவரை கொல்கதா மலைக்கு அழைத்துசென்று .....👇👇👇👇
.... continue ...👇👇
- சகோ. இம்மானுவேல் @Immanuel Brother VT

[4/11, 7:11 AM] Thomas VT: மன்னிப்பின் ஆசிர்வாதங்கள் =
1) நமது ஜெபம் கேட்கபடும் - மாற் 11-25
2) மற்றவர்கள் குறைகளை நாம் மன்னித்தால் நமது தப்பிதங்களை கர்த்தர்  மன்னிப்பார் - மாற் 11-25
3) நமக்கு மகிமை - நீதி 19-11

Post a Comment

0 Comments