Type Here to Get Search Results !

சிலுவையின் ஏழு வார்த்தைகளில் மூன்றாவது வார்த்தையின் தியானம்...

[4/12, 8:16 AM] : ♥ *இன்றைய வேத தியானம் - 12/04/2017* ♥
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று மூன்றாவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉

26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, *தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன்* என்றார்.
27. பின்பு *அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்* அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். யோவான் 19:26-27

🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏
[4/12, 9:50 AM] Jeyaseelan VT: 🌹இயேசுகிறிஸ்து சிலுவையில் அருளின
ஏழு வார்த்தைகள்🌹
💥மூன்றாவது வார்த்தை....
ஸ்திரீயே, அதோ, உன் மகன்….💥
🌷அப்பொழுது இயேசு
தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். - (யோவான் 19:26-27).🌷

நாம் தொடர்ந்து கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளை தியானித்து வருகிறோம். இன்றைய தினம் மூன்றாவது வார்த்தையாகிய ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். என்ற வார்த்தையை குறித்து தியானிக்க இருக்கிறோம். கர்த்தர் தாமே மகிமைப்படுவாராக!

தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தவர்கள் இப்போது கர்த்தருடைய சிலுவையின் அண்டை வந்து நின்று கொண்டிருந்தார்கள். இந்த வேளையில் இயேசுவின் தாயாராகிய மரியாளை நாம் நினைத்து பார்த்தால், அவர்கள் எத்தனை வியாகுலம் அடைந்திருந்திருக்க கூடும்?

குழந்தையாயிருந்தபோது, இயேசுவின் தலையை வருடிக் கொடுத்த இடத்தில் இப்போது முட்கிரீடம் சூடப்பட்டிருப்பதையும், கைளை பிடித்து நடக்க சொல்லி கொடுத்த கரங்கள் கால்களில் ஆணிகள் கடாவ பட்டிருப்பதையும் காணும்போது அந்த தாயின் இருதயம் எப்படி துடித்திருக்கும்? வேதத்தில் அவர்கள் எதையும் சொன்னதாக எழுதப்படவில்லை. அமைதியாக ஓடும் ஓடத்தில் ஆழம் மிகுதி என்று சொல்வார்கள். அமைதியாக கண்ணீர் வழிய சிலுவையை அண்ணாந்து பார்த்தபடி இருதயத்தில் வியாகுலம் நிறைந்தவர்களாக நின்று கொண்டிருந்த அவர்களை இயேசுவின் கண்கள் கண்டது.

தாம் மரிக்கும் இந்த நேரத்தில் தம் தாயின் உள்ளம் எவ்வளவு துக்கமடைந்திருக்கும் என்று அவருக்கு தெரியும். எவ்வளவு துயரமடைந்திருப்பார்கள் என்று அவருக்கு தெரியும். தம்மை இந்த நிலையில் பார்க்கும்போது கண்ணீர் விட்டு, கண்களினாலேயே ‘ஏனப்பா உனக்கு இப்படி பாடுகள்’ என்று கேட்காமலேயே கேட்பதை அவர் கண்டார். உடனே பேச ஆரம்பித்தார், ‘ஸ்திரீயே, அதோ, உன் மகன்’ என்றார். நான் இனி உங்களோடு இருக்க போவதில்லை, ஆனால் என்னை போலவே உங்கள் மேல் அன்புகூரும் ஒரு மகனை தருகிறேன் என்று சொல்லி, யோவானை தம் தாயிடம் ஒப்புக்கொடுத்தார்.

மரிக்கும் நிலையிலும் தம் தாயின் பொறுப்பை தம் சீஷனிடம் கொடுத்து சென்ற நம் இரட்சகர் எந்த நிலையிலும் நமக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்கிறார். ‘பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது’ (எபேசியர் 6:1-3) என்ற வார்த்தைகள் சிறு பிள்ளைகளுக்கு மாத்திரமல்ல, வளர்ந்தவர்களுக்கும் பொருந்தும். நாம் நம் தாய் தகப்பன்மாரை கனம் பண்ண வேண்டுமென்பது கர்த்தருடைய கட்டளையாகும். பெற்றோரின் வயதான காலத்தில் அவர்களை தள்ளி விடாமல், அவர்களை பராமரித்து, அவர்களை கண் கலங்காமல் காத்து கொள்ளும்போது, நமக்கு நன்மை உண்டாயிருக்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருக்கும். அல்லேலூயா!

‘அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றார்’ (மத்தேயு 26:31-33) வரை உள்ள வசனங்களில் என்னிமித்தம் எல்லாரும் இடறலடைவீர்கள் என்று இயேசுகிறிஸ்து சொன்னபோது, பேதுரு நான் ஒருக்காலும் இடறலடையேன் என்று சொன்னாலும், கர்த்தரை பிடிக்க வந்தபோது, ‘சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்’ (56ம் வசனம்) என்று பார்க்கிறோம்.
ஆனால்; சிலுவையில் அறையப்பட்ட பின்பு யோவான் கிறிஸ்துவின் தாயாரோடு வந்து நின்றார். அப்படி நிற்கும்போது, கிறிஸ்து அவரை ‘என் மேல் அன்பாயிருந்த நீயும் என்னை விட்டு ஓடிப்போனாயே, என் துக்கத்தை பகிர்ந்து கொள்ள நான் தேடினபோது, உங்களில் யாருமே என் கண்களில் தென்படவில்லையே’ என்று கேட்கவில்லை. மாறாக, தம் தாயின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.

பிரியமானவர்களே, நமக்கு பிரச்சனை வரும்போது, துன்பங்கள் வரும்போது, பாடுகள் வரும்போது கர்த்தரை விட்டு மாறி போய் பின்மாற்ற நிலையை அடைந்து விடுகிறோமா? அப்படி போனவர்கள் கர்த்தரிடம் வரும்போது கர்த்தர் அவர்களை போ என்று தள்ளி விடுகிறதில்லை. மாறாக, அவர்களையும் ஏற்று கொள்ளும் உன்னத தேவன் அவர். பொறுப்பையும் தருகிறவர்.

ஒருவேளை நாம் கர்த்தரை விட்டு பின் வாங்கி போயிருந்தால், யாரையும் தள்ளாத தேவனிடத்தில் வந்து சேர்ந்து விடுவோம். அவர் ஏற்று கொள்வார். நமது பின் நிலைமையை மாற்றுவார்.
ஆமென் அல்லேலூயா!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[4/12, 9:59 AM] Elango: ஆமென். இப்போது புரிகிறது ... யோவான் ஏன் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் என அழைக்கப்பட காரணம்.
அங்கே சிலுவையை பார்த்துக்கொண்டு நிச்சயம் பண்ணிரண்டு சீஷர்களில் சிலர், 12 பேர்களையும் தவிர மற்ற சீஷர்களும் இருந்திருந்திருக்கும் வேளையிலும் இயேசு தன் தாயை ஒப்படைத்தது யோவானித்தில் மட்டுமே.♥🙏👍
தான் மகனாக இருந்த இடத்தில் யோவானை வைத்து ஆண்டவர் பார்க்கிறார்.

[4/12, 10:03 AM] Elango: யாத்திராகமம் 20:12
[12]உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, *உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.*
நமக்கு இவ்வுலகில் எத்தனையோ இரத்த உறவுகள் இருந்தாலும்... தந்தையையும், தாயையும் கனம் செய்வதன் மூலம், அவர்களுக்கு நிறைவேற்ற வேண்டியதன் மூலம் நம்முடைய வாழ்நாள் நீடித்திருக்கும் என்கிறார் கர்த்தர்.

[4/12, 10:11 AM] Elango: *தன்னை பெற்றெடுத்தின் நிமித்தம் மரியாளே தனக்கு தாய் என்ற போதும்... அந்த தாய், சகோதரி, சகோரன் என்ற ஸ்தானத்தை நமக்கு தருகிறார் அதாவது தேவனுடைய வசனத்தை கைக்கொள்ளுபவர்களையே தாயும், சகோதரனும், சகோதரியும் என்கிறார்.👇👇👇👇*
லூக்கா 8:20-21
[20]அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
[21] *அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.*

[4/12, 10:21 AM] Elango: லூக்கா 11:27-28
[27]அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச்👈❓❓🤔🤔🤔 சொன்னாள்.
[28] *அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.*

[4/12, 11:25 AM] Elango Personal: ♥ *இன்றைய வேத தியானம் - 12/04/2017* ♥
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று மூன்றாவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉
26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, *தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன்* என்றார்.
27. பின்பு *அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்* அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். யோவான் 19:26-27
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/12, 2:45 PM] Elango: லூக்கா 2:48-49
[48]தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: *மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.*
[49]அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? *என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டிதென்று அறியீர்களா என்றார்.*
வளர்ப்பு தகப்பனை விட ... தன்னை இவ்வுலகத்திற்க்கு அனுப்பிய பரம தகப்பனின் காரியங்களையே கவனிக்கவலானார்.

[4/12, 2:46 PM] Elango: லூக்கா 2:51-52
[51]பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, *அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.* அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
[52]இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
[4/12, 4:20 PM] Elango: ஆமென்🙋‍♂
ஏசாயா 66:13
[13] *ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.*♥♥♥♥♥

[4/12, 4:30 PM] Elango: கடைசி காலத்தில் மனிதர்கள்  நல்லோரை பகைக்கிறவர்களாயும், அக்கிரமம் மிகுதியாவதினால் அன்பு தணிந்துப்போம் என்ற தேவ வார்த்தைக்கு ஏற்ப்ப ... *தாயை கொன்ற மகன்* என்று அடிக்கடி செய்தித்தாளில் வருவதை காணலாம்.
யாத்திராகமம் 21:15
[15] *தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.*

[4/12, 5:44 PM] Stanley Ayya VT: வேதனை.
பெற்றோர் பாசத்தை இழந்து தவிக்கிறோம்.
மேற்கத்திய நாடுகள் குடும்ப வாழ்வு இல்லாவிட்டாலும் Practicalலாக சிந்தித்து சிறந்த முறையில் முதியோர் இல்லங்களை பராமரிகௌகிறார்கள்.
இங்கு குடும்ப அமைப்பை பொய்யாய் சித்தரிக்க பட்டு உண்மைக்கு எதார்த்ததிற்க்கு முரனாக செயல் படுகிறோம்.
மேற்கத்திய நாகரிகம்,  அறிவியல் கலாச்சாரம் பரவினாலும் போலியான அன்பில்லாத குடும்ப கலாச்சாரம் பின்பற்ற படுகிறது.
நாம் இருவரும் வேலைக்கு போய் பிள்ளைகளை Crushல் காப்பத்தில் விட்டுவிட்டு செல்லும் பட்சத்தில்
நமக்கும் 12 மணி நேர களைப்பு,மற்றும் பொருளாதார, சுகமின்மை பாரம் போன்ற நிலையில் தள்ளாத பெற்றோறை எப்படி பேணி காப்பாது.
 இந்த நிலையில் இயலாமையால் மனஅழுத்தம் அன்பை முறிக்குமே?
நமக்கு தேவை சரியான புரிதலே.
சமுக கட்டமைப்பு வாழ்கை ஒட்டத்திக்கு சரியாக ஒத்துழைக்காது.
எதார்தத்தை ஒத்து கொள்வோம்.
அரசின் தலையாய கடமை
முறையான குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகம்.
வீட்டின் அருகில் தேவையே.
அனேக இடங்களில் வீட்டிற்க்குள் வயதானவர்கள் சம்பளமில்லா வேலைகாரரர்களாக குழந்தை காப்பாளர்களாக வேதனையுடன் வெளியில் சொல்ல இயலா நிலையில் தவிக்கிறார்கள்.
சிந்திக்கும்முறையில் காலம் இருக்கிறது.
நம் சமுதாயம் புதிய கட்டமைப்பை திட்டமிட வேண்டியுள்ளது.

[4/12, 6:25 PM] Elango: இதற்க்கெல்லாம் காரணி பணத்தாசையும், சொகுசு வாழ்க்கையை விரும்புவதுமே 😨😰

[4/12, 8:13 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙋‍♂
நாம் தியானிக்கிற வசனம் .. தம்முடைய தாயை நோக்கி ... ஸ்திரியே அதோ உன் மகன் ...சீஷனை நோக்கி அதோ உன் தாய் என்றார்.
ஆரம்பகாலம் முதலே இயேசுகிறிஸ்து தன்னுடைய தாயோடு பேசும்போது அநேகருக்கு அது பாரமாக இருக்கும் ... *மரியாள் வணக்கத்துக்குரியவர்கள் அல்ல வாழ்த்துக்குறியவர்கள்*💐💐💐💐அதனால் தான் தாழ்மையின் ரூபத்தில் வந்த இயேசுகிறிஸ்து மரியாளின் வயிற்றில் பிறக்க தேவன் கிருபை செய்தார்.
நிச்சயமாகவே மரியாள் ... ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்ட பெண்.👑👑இப்படிப்பட்ட இயேசுவை இந்த கொண்டு வரும்படிக்கு  தன்னுடைய சரீரத்தை ... கல்யாணத்திற்க்கு நிச்சயம் பண்ணின வேளையில் தூதன் வந்து சொன்ன வேளையில் ..ஆண்டவருக்கு அடிமை என்றாள்.
லூக்கா 1:38
[38] *அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை,* உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
மத்தேயு 1:18-20
[18]இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
[19]அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, *அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.*🤔🤔🤔🤔
[20]அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; *அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.*
கல்யாணத்திற்க்கு முன்பாக கற்பமானால்... கல்லெறிவார்கள், சட்டதிட்டம் எல்லாம் தெரியும், அந்த சட்டதிட்டம் தெரிந்தும்.. அந்த பாரத்தையும் சுமக்க ரெடியாக இருந்தாங்க!!
ஆனால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேசின ஒவ்வொரு வார்த்தையும்... *மரியாளுக்கு தெரியும் இது தேவனுடைய குமாரனான கிறிஸ்து என்று*
சிமியோன் சொல்கிறார் மரியாளைப் பார்த்து👇👇👇
லூக்கா 2:34-35
[34]பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
[35] *உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.*❣❣❣❣❣🗡🗡🗡🗡🗡🗡
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தனது 12 ம் வயதில் பஸ்கா பண்டிகைக்கு சென்று காணாமல் போய் விடுகிறார்...பண்டிகை முடிந்து இயேசு எருலேமிலேயே இருந்துவிட்டார்.
லூக்கா 2:43
[43] *பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.*
லூக்கா 2:46
[46] *மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.*
லூக்கா 2:48-49
[48]தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
[49] *அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டிதென்று அறியீர்களா என்றார்.*‼‼‼‼‼
லூக்கா 2:50-51
[50]தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
[51]பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, *அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.*❤❤❤❤
லூக்கா 8:19-21
[19] *அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.*
[20]அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
[21] *அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.*
இப்படி ஒவ்வொரு காரியங்களை இயேசுவானவர் மரியாளை நோக்கி அப்படி சொல்ல பார்க்கும் போது .. நமக்கு வித்தியாசமாக தோணும்.
லூக்கா 11:27-28
[27]அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.
[28] *அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.*
அப்ப அங்கேயும் தன் தாயை காட்டிலும் தேவ ஜனங்களை நேசிக்கிறார்.இயேசுவை சுமந்த மரியாளை பாக்கியவதி என்று சொன்ன வேளையில் அதை விட சிறந்த பாக்கியவான் தேவனுடைய வசனத்தை கைக்கொள்கிறவர்களே என்கிறார்.
யோவான் 2:3-5
[3]திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
[4]அதற்கு இயேசு: *ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.*
[5]அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
இங்கேயும் நாம் பார்க்கலாம்.. ஒருவேளை இயேசு தன் தாயை வெறுக்கிறாரோ இல்லையோ என்று...தோன்றுகிறது. அப்படியல்ல...‼
..ஆவியின் படி நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன் என்று கல்வாரி சிலுவையில் ...
26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, *தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன்* என்றார்.
27. பின்பு *அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்* அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். யோவான் 19:26-27
இந்த பூமியிலும் ஒரு தாயிற்க்கு ஒரு மகன் வேண்டும், மகனுக்கு தாயும் வேண்டும் என்று நல்லா தெரியும்.
அவர் தேவத்துவத்தில் ஆவியில் பேசினபடியினால் தான் அப்படிப்பட்ட வார்த்தைகளை பேசினார் இதை நாம் தப்பாக புரிந்துக்கொள்ளலாம்.
ஆனால் கல்வாரி சிலுவையில் சொன்ன இப்படிப்பட்ட வார்த்தைக்காக கோடான கோடி ஸ்தோத்திரம்.🙋‍♂🙋‍♂🙋‍♂
இயேசு மரித்து மறுபடியும் உயிர்த்து வருவார் என்று மரியாளுக்கு தெரியும், ஆனாலும் இந்த பூமியில் மரியாளுக்கு ஆதரவாக தனக்கு அன்பாயிருந்த இயேசுவோடு இருந்த சீஷனை , தன்னனோடு கடைசி வரை இருந்த அந்த யோவானுக்குத்தான் அப்படிப்பட்ட பாக்கியம் கிடைத்தது.
அதனால இயேசு தன் தாயை வெறுக்கவில்லை.
லூக்கா 4:22-23
[22]எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: *இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.*
[23]அவர் அவர்களை நோக்கி: *வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்* என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
அவர் மாம்சத்தின் படி யோசேப்பின் குமாரனா? பிதா சொல்கிறார் *இவர் என் நேச குமாரன்* என்று.
நேச குமாரானான இயேசுவின் நாமத்தில் சொல்கிறேன் அவர் நம்மையும் நம் குடும்பத்தையும் திக்கற்றவர்களாக விடவே மாட்டார். God bless you.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[4/12, 8:17 PM] Elango: ♥ *இன்றைய வேத தியானம் - 12/04/2017* ♥
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று மூன்றாவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉
26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, *தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன்* என்றார்.
27. பின்பு *அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்* அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். யோவான் 19:26-27
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/12, 8:47 PM] Elango: கடவுள் ஆதாமுக்கு ஒரு குடும்பத்தையும் , நமக்கு ஒரு தாயையும் ஏற்ப்படுத்துகின்றார் ...இவ்வுலகத்தி முதல் தாய் ஏவாளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
பாவம் வந்தது உறவில் விரிசல் ஏற்ப்பட்டது, தமது குமாரனின் மூலம் மனிதனோடு உள்ள அந்த உறவை புதிப்பிக்கின்றார் ...சாமூவேல் புத்தகத்திலே அன்னாள் ஜெபிக்கும் போது ...👇👇
1 சாமுவேல் 1:10-11
[10]அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
[11] *சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.*
அவள் சொன்னபடியே கர்த்தருக்கு அவளுக்கு பிறந்த பிள்ளையை ஒப்புக்கொடுத்தாள்.. மறுபடியும் அவளுக்கு பிள்ளையில்லாத போது ...👇👇 அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றெடுக்கிறாள்.
1 சாமுவேல் 2:21
[21]அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியிலே வளர்ந்தான்.
அன்னாளின் குடும்பத்தை தேவன் சந்தோஷத்தினால் நிறைவாக்குகிறார்.
லூக்கா 7:11-15
[11]மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
[12]அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
[13] *கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,*😭😭😭😭❤❤❤❤
[14]கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
[15]மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். *அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.*
ஏற்க்கனவே தன் கணவனை இழந்த விதவை இப்போது தன்னுடைய ஒரே மகனையும் இழந்துவிட்டால்... அவளது வாழ்க்கையை சற்று யோசித்துப்பார்க்கவே முடியவில்லை...
கடைசிகாலத்தில் எனக்கென்று இருந்த ஒரே மகனும் இழந்துவிட்டேனே என்று கலங்கி நின்ற மகளுக்கு ... உடைந்த பாண்டத்தை ஆண்டவர் இணைக்கின்றார்.❣❣❣
*இறந்த உறவு மீண்டும் இயேசுவில் தான் துளிர்த்தது, குடும்ப உறவை முறிந்த உறவை இயேசு சீர்ப்படுத்துகின்றார்.*
மத்தேயு 19:6-8
[6] *இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.*💞💝💖
[7]அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
[8] *அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்;*😭😭😭😭😭😭 ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.
மத்தேயு 12:46-50
[46]இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
[47] *அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.*👆🏼👆🏼👈👈👈👇👇👁👀👀👀👀👀

[48]தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,

[49]தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
[50] *பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார்.*
இறுதிவரை இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தை அனைத்தையும் மரியாள் கடைப்பிடித்து வந்தாள்.
*‼எத்தனை குழந்தை பிறப்பினும் இயேசுவைப் போல ஒரு குழந்தை பிறக்குமா❓❓*‼
தன் வயிற்றிலே பிறந்த மகன் இப்படி சிலுவையிலே தொங்கிக்கொண்டிப்பதை பார்த்து...உள்ளம் உடைந்தவளாக .. தன் இருதயத்தை ஒரு பட்டயம் உருவி கொண்டு போகும் என்ற சிமீயோன் சொன்ன வார்த்தையை நினைவுக்கூர்ந்தவளா நின்றுக்கொண்டிருந்தவளை பார்த்து *அதோ உன் மகன்* என்றார்.
-.சகோ. இம்மானுவேல் @Immanuel Brother VT

[4/12, 9:19 PM] Elango: இயேசுவுடனே உண்று, உறங்கி, ஒன்றாய் மார்பில் சாய்ந்து...அன்பின் உச்சத்தில் இருந்த சீஷன் யோவான் ...இனி யாரோடு என் அன்பை பகிர்வேன் என்று சிந்தித்த அன்பின் அன்னை...கடவுளுக்காக தன்னையே அற்ப்பணித்தவள்... கடவுளையே தன் அன்பால் கொஞ்சி மகிழ்ந்தவர்கள்...இப்படிப்பட்ட தாய்க்கு தனக்கு பதில் தன்னுடைய இடத்தில் யோவான் தான் தனக்கான மாற்று என்று அறிந்த ஆண்டவர் *இதோ உன் தாய்* என்கிறார்.
தனிமையில் தவித்த தாயிற்க்கும், மார்பில் சாய்ந்து அன்பை பெற்றுக்கொண்ட சீஷனுக்கும்...ஒரு உறவை ஏற்ப்படுத்தி ஒரு குடும்பத்தை அமைத்து .. சீர்ப்படுத்தி செம்மைப்படுத்துகின்றார் இறைவன்.
*குழந்தைகளுக்கு அதிகம் பெற்றோர்கள் காணப்படுகிற நம்முடைய தேசத்திலே ... அதைக்காட்டிலும் முதியோர்களும் அதிகமாக இருக்கிறார்கள்... நாம் முதியவர்களையோ, குழந்தைளையோ கண்டும் காணதவர்கள் போல் இல்லாமல் ...அவர்களை நாம் தத்தெடுத்து புதிய உறவுப்பாலத்தை கிறிஸ்துவைப் போல அவர் சிந்தையை நம்மில் வளர்க்கலாம்.*🙏🙏💝💝💞💞👍🙋‍♂👌👌
கடவுளின் படைப்பில் யாரும் அனாதைகள் அல்ல..அனைவருக்குமே கடவுளே தாயும் தந்தையும் என்று நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மரியாளுக்கு ஒரு மகன் கிடைத்துவிட்டான்.. யோவானுக்கு ஒரு மகன் கிடைத்துவிட்டான் எங்களுக்கு என்று யாருண்டு என்று கலங்குபவர்களே...கணவனால், மனைவியால் குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டவர்களாக நீங்கள் இருக்கலாம்... அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்...👈👇👇👇👇👇
*நான் உங்களுக்கு ஒரு தாயும் தகப்பனுமாக இருந்து உங்களை ஒரு தாய் தேற்றுவது போலவும், ஒரு தகப்பனை போல சுமந்து செல்வேன் என்கிறார்*♥♥👌👌🙏🙏🙋‍♂🙋‍♂👍👍👍
*பெற்றோர் உற்றோர் உலகத்தில் யார் மறந்தாலும் நான் மறப்பதில்லை...என்றும்.. என் உள்ளங்கையிலே உன்னை வரைந்து வைத்திருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார்.‼👍♥💞*
இச்சம்பவத்தின் மூலமாகவும் அனாதையாக ஒருவரும் இல்லை என்பதையே இயேசு வழியுறுத்த விரும்புகிறார்.
இதோடு இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.. கல்வாரியிலே மரியாள் யாரை இழந்தாரோ அவரையே யோவான் மூலமாக மகனாக திரும்ப பெற்றுக்கொண்டார். அப்படியே யோவானும் தாயை பெற்றுக்கொண்டார்.‼
அப்படியே நீங்களும் பந்தயப்பொருளை பெற்றுக்கொள்ளத்தக்கதாக இறுதிவரை சிலுவை வரை வந்து அவரையே நோக்கிப்பார்த்தால் பிழைப்பீர்கள்.
நாம் வாழ்க்கையில் எப்படியோ ஓடிக்கொண்டிருந்தோம், உறவுகளை உதாசீனப்படுத்திக்கொண்டிருந்தோம்...இனிமேல் நாம் எந்த உறவுகளையும் உதாசீனப்படுத்தாமல் ... கிறிஸ்து அந்த உறவின் ஆழத்தையும் அன்பையும் நம்மில் அந்த வார்த்தையின் மூலமாக தாக்கத்தையும் ஏற்ப்படுத்துகின்றார்.
*இந்த தாக்கத்தை பெற்றுக்கொண்ட நாம் நம்முடைய வாழ்க்கையில் உண்மையாவே ஒரு மகன், தந்தை, தாய் வேண்டுமென்று ஏங்குவோமாயின் ... நாமும் கூட கிறிஸ்துவைப்போன்று ஒரு புதிய உறவையும், ஒரு புதிய குடும்பத்தையும் ஏற்ப்படுத்த அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்துக்கொண்டு கிறிஸ்துவின் வார்த்தையில் நாம் மேன்மேலும் வளர்ச்சிபெற இறைவன் தாமே நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.*👍‼🙏🙋‍♂
- சகோ. இம்மானுவேல் @Immanuel Brother VT

[4/12, 9:49 PM] Elango: நம்மை நாமே சீர்தூக்கி பார்கக்க சிலுவை தியானம் ஆகும்.. இன்று பத்திரிகை தொலைக்காட்சிகளிலும் கூர்ந்து கவனித்தோமானால் உறவுகள் மேம்படாததால் தான் பல துக்ககரமான நிகழ்வுகள் முடிகின்றது.
குறிப்பாக தங்கள் பெற்றோர்களை ஒரு கட்டத்திற்க்கு மேல் பார்த்துக்கொள்ள இயலாமல்...அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், ,.. பிள்ளைகள் எங்களுக்கு தேவையில்லை என்று வீதியோர குப்பைத்தொட்டிகளில் வீசியெறிவதும்...பெற்றோர்களையும் தாய்மார்களையும் இன்று நாம் பல செய்திகளின் வாயிலாக பார்க்கின்றோம்.
*இன்னும் ஒரு படி மேலே சென்று ஆதரவற்ற பெண் பிள்ளைகளை விடுதியில்,  காவல் காக்க வேண்டியவர்களே வக்கிர புத்தி காரணமாக குழந்தைகளென்றும் பாராமல் அவர்களை சினௌனாபின்னமாக சிதைப்பதை நாம் பார்க்கின்றோம். இவைகளை கேட்க யார் இருக்கிறார்கள் என்று கேட்டு உறவுகளை சிதைக்கின்றார்கள் மனிதர்கள்.*‼‼
*ஒரு புறம் தாய் தந்தையரால் கைவிடப்பட்ட பிள்ளைகள் ஆதரவற்ற இல்லத்தில் ...மறுபுறம் மூதியோர்கள் முதியோர் இல்லங்களில்...சமுதாயத்தில் மலிந்துக்காணப்படுகிற இச்செயல்களை என்னவென்று சொல்வது...😭😭😭😭*
தாய்ப்பாசம் என்னவென்று தெரியாத குழந்தைகள் ஒருபுறம்... குழந்தைளை வீசியெறும் தாய்மார்கள் மறுபுறம்... என்ன கொடுமை!!!
சிலுவை பிண்ணனியத்தில் இருந்து நாம் பார்க்கையில் ... தன் உயிர் போனாலும் பரவாயில்லை உறவுகள் சீர்ப்பட வேண்டும், அது அமைக்கப்பட வேண்டும், அது பிரிக்கப்பட கூடாது,  ஒரே குடும்பமாய் ஒரே மந்தையாய் நாம் கடவுளோடு இணைக்கப்பட வேண்டும்...என்று சித்தங்கொண்டு சிலுவையில் தொங்கிக்கொண்டு இருக்கையில் ...
*ஏழு வார்த்தைகளுமே .. உறவுகளின் மூலம்... இயேசுவின் மூலமே... என்பதை உணர்த்துவதாக அமைகின்றது ...*💞♥👍🙋‍♂👌
சமூதயத்தில் நடக்கும் அநேக பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆண்டவரின் வார்த்தையை கொண்டு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கடவுள் இந்த உலகத்தை படைக்கும் போது மனிதனையும் படைக்கின்றார் அவனுக்கு ஏற்ற துணையாக ஏவாளையும் படைக்கின்றார். அவளை நாம் அனைவருக்கும் தாயாக அறிமுகப்படுத்துகின்றார்.
- சகோ. இம்மானுவேல் @Immanuel Brother VT

[4/12, 10:59 PM] Elango: மத்தேயு 27:46
[46]ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு *என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்* என்று அர்த்தமாம்.
நாளை நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து சிலுவையில் பேசிய  நான்காவது வார்த்தையை தியானிக்கலாம்.🙏🙏

Post a Comment

0 Comments