Type Here to Get Search Results !

கர்த்தரிடத்தில் நாம் எப்படி மிகவும் அன்புகூரலாம்❓

[4/8, 8:26 AM] : ✝❤ *இன்றைய வேத தியானம்  - 08/04/2017*❤✝
ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; *இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே.* எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;
👉 நம்முடைய அனுதின வாழ்க்கையில் , *கர்த்தரிடத்தில் நாம் எப்படி மிகவும் அன்புகூரலாம்❓*

👉 இயேசுவுக்கு அன்பாயிருந்தவன் என்று   யோவான் அழைக்கப்பட காரணம் என்ன❓யோவான் 19:26, 20:2, 21:20
  📚🌏 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚

[4/8, 9:01 AM] Yohaan Pastor VT: 👉 நம்முடைய அனுதின வாழ்க்கையில் , *கர்த்தரிடத்தில் நாம் எப்படி மிகவும் அன்புகூரலாம்❓*
*யோவான் 15 :13*

13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் *தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும்* அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

[4/8, 9:02 AM] Yohaan Pastor VT: 8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். *யோவான் 15 :8*

[4/8, 9:28 AM] Yohaan Pastor VT: இயேசு சொன்ன கனி, ஆவியின் கனியல்ல ஏன் என்றால் அவர் *கனிகள்* என்று பன்மையில் கூறியிருக்கிறார். அப்படி என்றால் அவர் ஆத்துமாக்களை சீஷர்களாக ஆக்குவது அதாவது ஆத்துமாக்களை தனக்கோ, ஒரு நிறுவனமாயிருக்கிற சபைக்கோ சீஷர்களாக அல்ல இயேசு ஒருவருக்கே சீஷர்களாக ஆக்குவதை தான் அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் கனிகள்.
அப்போ ஆவியின் கனி என்பது ஒருமையில் இருக்கிறதை கவனியிங்கள், இது ஒரு நல்ல விதையிலிருந்து முலைத்த நல்ல மரத்திற்கு இருக்க வேண்டிய பண்புகள், குணாதிசயங்கள என்று சொல்லலாம் அவைகள் தான் நல்ல கனி உருவாக்க முடியுமல்லவா ?.

[4/8, 9:31 AM] Elango: அன்பு கூருதல், *மிகவும்* அன்பு கூருதலுக்கும் என்பதற்க்கும் உள்ள வேறுபாடு அதாவது... இடைவெளியை கவனித்தால் இன்னும் நாம் கர்த்தரிடத்தில் அதிகமாக அன்பு கூறலாம்

[4/8, 9:37 AM] Elango: மாற்கு 12:42-44
[42]ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போட்டாள்.
[43]அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[44] *அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.*
தன்னுடைய பரிபூரணத்திலிருந்தெடுத்திலிருந்து காணிக்கை போட்டவர்களின் மத்தியில்,  தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்ட விதவையின்  தேவன்பு *மிக* அதிகமாகவே இருந்தது என சொல்லலாம்.

[4/8, 9:44 AM] Elango: லூக்கா 21:3
[3]இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் *அதிகமாகப்* போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இங்கே ஆண்டவர் ... அவர்கள் எல்லோரும் போட்ட காணிக்கையின் மதிப்பை பார்த்து *அதிகம்* என்று அளவிடாமல்... கொஞ்ச பெலனிருந்தும், என் நாமத்தை மறுதலியாமல் என்ற கண்ணோட்டத்தில் ... அதாவது ... தன் வறுமையிலிருந்தும் ... தனக்கு  கொஞ்சம் இருக்கிறது யென்றாலும் அதையும் ஆண்டவருக்காக கொடுக்க துணியும் அன்பு❤❤❤🙏🙏

[4/8, 9:52 AM] Elango: 2 கொரிந்தியர் 11:23
[23]அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; *நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன்,* அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
கிறிஸ்துவின் மேல் உள்ள... *மிகவும் அன்பு கூறுதலை பவுல் வெளிப்படுத்துகிறார்*
ரோமர் 8:35-37
[35]உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
[36] *கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?* உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
[37] *இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே* முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

[4/8, 10:15 AM] Yohaan Pastor VT: நீங்கள் சொல்வது உண்மை தான் ஆவியின் கனி நமக்கு இருக்க வேண்டிய ஒன்று அதனை மறுக்கவே முடியாது. அது தனி மனிதனாகிய தேவபிள்ளைகளுக்கு இருந்தால் தான் அவர் நல்ல விதையிலிருந்து (தேவனுடைய வார்த்தையிலிருந்து முளைத்த நல்ல மரமாக இருப்பார். அவர் கொடுக்கும் கனி என்பது அவரை போன்றே அநேக மனிதர்கள்.
உதாரனமாக இயேசு ஒரு ஜீவவிருட்சம் அவர் 12 கனிகள் கொடுத்தார் அதுவே அவருடைய சீடர்கள். அவர்களும் ஆவியின் கனியால் நிறைந்து அநேக இயேசுவின் சீஷர்களாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள் அல்லவா ?
இந்த வசனத்தில் அவர் சீஷர்களாக்குவதை தான் அவர் கூறுவதாக நான் நிதானிக்கிறேன் சகோதரரே.
*நல்ல மரம் = ஆவியின் கனி*
*நல்ல கனி = இயேசுவுக்கு சீஷர்களை உருவாக்குவது*
*மத்தேயு 7 :19*
19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். 
நன்றி.

[4/8, 10:32 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 5:5-10
[5] *மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்,* அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
[6]அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, *குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[7] *நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.*👇👇👇👇👇👇👇👇👇👇
[8] *நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[9]இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
[10]நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

[4/8, 10:39 AM] Levi Bensam Pastor VT: லூக்கா 7:40-47
[40]இயேசு அவனை நோக்கி: சீமோனே, *உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும்* என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
[41]அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
[42]கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.
[43]சீமோன் பிரதியுத்தரமாக: *எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி*,
[44]ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், *நீ என் கால்களுக்குத் தண்ணீர்த் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[45] *நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[46] *நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.*
[47]ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; *இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே.* எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;

[4/8, 10:54 AM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 2:4-5
[4]ஆனாலும், *நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.*👇👇👇👇👇👇👇👇
[5]ஆகையால், *நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.*

[4/8, 11:00 AM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 5:22-26
[22] *ஆவியின் கனியோ*( *கனிகள் அல்ல, கனி*👉👉) , அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.
[23]சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
[24]கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
[25]நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.
[26]வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

[4/8, 11:03 AM] Tamilmani Ayya VT: *கிறிஸ்துவின் எட்டு தொடுதல்கள்:*
1. சுத்தமாக்க  தொடுதல்
          (மத் 8: 3)
2.  திறக்கப்பட தொடுதல்
        (மத் 9: 29, 30 )
3.  குளிர்விப்பதற்க்காக
     தொடுதல்
             (மத் 8: 15)
4.  உறுதி செய்வதற்க்கான தொடுதல்
             (மத் 17: 7)
5.  விடுவிக்க தொடுதல்
           (மாற்கு  7: 33)
6.  ஆசீர்வாத தொடுதல்
     (மாற்கு 10: 13)
7. உயிர்ப்பிக்கும் தொடுதல்
           (லூக்கா 7: 14)
8.  குணமாக்கும் தொடுதல் 
           (லூக்கா 22: 51)

[4/8, 11:07 AM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 2:7-11
[7]சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.
[8]மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
[9] *ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.*🤔🤔🤔🤔🤔🤔🤔
[10] *தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.*☝ ☝ ☝ ☝ ☝
[11] *தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.*😭😭😭😭😭😭😭😭😭

[4/8, 11:15 AM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 3:14-18,23-24
[14] *நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.*🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂
[15] *தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; 👉மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.*👈👇
[16] *அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; 👉நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.*👈
[17]ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் *தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?*❓❓❓❓❓❓❓
[18] *என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.*👍👍👍👍
[23]நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.
[24]அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

[4/8, 12:47 PM] Elango: அல்லேலுயா 👍👏🙏😃

2 கொரிந்தியர் 12:16
[16]அப்படியாகட்டும், *நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.*❤🤝🙏

[4/8, 12:56 PM] Jeyanti Pastor VT: அன்பு சகலத்தையும் சகிக்கும்

[4/8, 12:56 PM] Jeyanti Pastor VT: தந்திரம் அன்பா பாஸ்டர்?

[4/8, 12:57 PM] Jeyanti Pastor VT: உபாயம் என்றால் என்ன பாஸ்டர்?

[4/8, 1:00 PM] Elango: 2 தீமோத்தேயு 4:16
[16] *நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்;*🖐🖐🖐🖐🖐🖐 அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

ஆண்டவரிடத்தில் வைக்கும் *மிகுந்த அன்பு*❤
[4/8, 1:04 PM] Elango: தந்திரத்தில் இருவகை உண்டென்று நினைக்கிறேன் அம்மா.
1.
தனக்கு ஒரு பொருள் வேண்டுமென்று , தந்திரத்தினால் பிறனுடையதை அபகரித்தல்....
2.
சிலரை நன்மையான வழியில் திருப்பும் படியாக , அவர்களுக்கு நாம் உபயோகமுள்ளவர்களாய் இருந்து ... அவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுதல்...
பவுல் செய்தது இரண்டாம் வகை.

16 நான் உங்களுக்குச் சுமையாய் இல்லாதது குற்றமாகவே இருக்கட்டும். ஆனால் நான் உங்களைக் சூழ்ச்சியாய் வஞ்சித்தேன் என நினைக்கிறீர்களா?
2 கொரிந்தியர் 12 :16
17 *நான் உங்களிடம் அனுப்பியவர் எவர் மூலமாவது ஆதாயம் தேடினேனா?*
2 கொரிந்தியர் 12 :17
18 உங்களிடம் வருமாறு தீத்துவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்; மற்றொரு சகோதரரையும் அவரோடு அனுப்பிவைத்தேன். தீத்து உங்களிடம் ஆதாயம் தேடினாரா? நாங்கள் ஒரே மனப்பாங்கோடு செயல்படவில்லையா? ஒரே வழிமுறையைப் பின்பற்றவில்லையா?
2 கொரிந்தியர் 12 :18
19 நாங்கள் குற்றமற்றவர்கள் என உங்கள் முன் காட்டுவதாக இதுவரை எண்ணியிருப்பீர்கள். அன்பார்ந்தவர்களே, கடவுளின் திருமுன் கிறிஸ்து வழியாய் உங்களுக்குச் சொல்கிறேன்; நான் செய்வதெல்லாம் உங்கள் வளர்ச்சிக்காகவே.
2 கொரிந்தியர் 12 :19

[4/8, 1:12 PM] Elango: clever device,
strategy
உத்தி
சூழ்ச்சி
யோசனை
plan
 tactic
 idea

[4/8, 1:13 PM] Jeyanti Pastor VT: Thank you
[4/8, 1:17 PM] Elango: தேவனிடத்தில் காட்டும் *மிகுந்த அன்பு 👇*❤
2 கொரிந்தியர் 8:2-3
[2]அவர்கள் *மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில்,* கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
[3]மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாகவும், *தங்கள் திராணிக்கு மிஞ்சியும்* கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.

[4/8, 1:17 PM] Jeyanti Pastor VT: 2 கொரிந்தியர் 11
24  யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;
25  மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
26  அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
27  பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
28  இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
29  ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?

[4/8, 1:23 PM] Elango: லூக்கா 23:33-34
[33]கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
[34]அப்பொழுது இயேசு: *பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே* என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
*சிலுவையில் தன்னை அறைந்தவர்களையும் மன்னித்து,  அறைந்தவர்களுக்காகவும் வேண்டி நிற்ப்பதே தேவனுடைய மிகுந்த தேவ அன்பு❤✝🙋♂*

[4/8, 1:52 PM] Elango: ✝❤ *இன்றைய வேத தியானம்  - 08/04/2017*❤✝
ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; *இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே.* எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;
👉 நம்முடைய அனுதின வாழ்க்கையில் , *கர்த்தரிடத்தில் நாம் எப்படி மிகவும் அன்புகூரலாம்❓*
👉 இயேசுவுக்கு அன்பாயிருந்தவன் என்று   யோவான் அழைக்கப்பட காரணம் என்ன❓யோவான் 19:26, 20:2, 21:20
  📚🌏 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚

[4/8, 2:15 PM] Jeyanti Pastor VT: வேதத்தை சுற்றி சுற்றி தேடினாலும்,  வித்தியாசமான கருத்து சொல்ல நினைத்தாலும் தேவ அன்புக்கு இணையான அன்பு வேறொன்றுமே இல்லை 🙌🙌💃💃💃

[4/8, 2:18 PM] Jeyanti Pastor VT: எபேசியர் 3
17  விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,
18  சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;
19  அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
20  நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

[4/8, 2:19 PM] Jeyanti Pastor VT: எபேசியர் 3
21  சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

[4/8, 2:57 PM] Elango: தேவனிடத்தில் மிகுதியாக வைக்கும் அன்பானது, மற்ற எல்லா பொருட்களையும் துச்சமாக எண்ணும்...

சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:7
[7] *திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் *நேசத்துக்காகக்❤💞💓 கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.*

[4/8, 2:59 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 12:11
[11]மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி *தங்கள் ஜீவனையும் பாராமல்,* ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

தங்கள் ஜீவனையும் பெரிதாக  பாராமல் , எண்ணாமல் தேவனுக்காக நின்றவர்கள், *மிகுதியான, அதிகமான அன்பு*💞💓❤

[4/8, 3:02 PM] Elango: ரோமர் 8:32
[32] *தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல்* நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

*தம்முடைய குமாரனுடைய ஜீவனையே நமக்காக தந்தது என்பது மிகுதியான அன்பு*💞💓❤

[4/8, 3:06 PM] Elango: 1 நாளாகமம் 11:16-19
[16]தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது.
[17]தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
[18]அப்பொழுது அந்த மூன்றுபேர் பெலிஸ்தரின் பாளயத்திற்குள் துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
[19]நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; *தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ* ❓❓❓❓❓என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
*தங்களின் ஜீவனையும் பாராமல்... தாவீதின் தாகத்திற்க்காக பெலிஸ்தலின் பாளாத்திற்க்குள் நுழைந்து, தண்ணீர் கொண்டு வந்தார்கள்... இதுவல்லோ மிகுதியான அன்பு*❤👍

[4/8, 3:09 PM] Elango: 👉மற்ற சீஷர்களுக்கு மத்தியில் ....  இயேசுவுக்கு அன்பாயிருந்தவன் என்று யோவான் அழைக்கப்பட காரணம் என்ன❓யோவான் 19:26, 20:2, 21:20
[4/8, 3:51 PM] Jeyanti Pastor VT: பாஸ்டர் என் கருத்து மற்ற சுவிசேஷங்களைவிட யோவான் சுவிசேஷம் மிகவும் வித்தியாசமானது. 
இயேசுவின் மார்பில் சாய்ந்த சீஷன்,  என்றாலும் மற்றவர்களைவிட கர்த்தர் கூறிய ஆழமான கருத்துகளை அதிகம் ஆராய்ந்தவன்.  கர்த்தருடைய வார்த்தை யோவானிடம் ஆழமாக பதிந்திருந்தது.  So He was loved by Jesus More than others

[4/8, 4:01 PM] Elango: 👍🙏
மற்ற சுவிஷேச நூல்களில் யோவான் இயேசுவுக்கு அன்பான சிஷன் என்று சொல்லப்பட்டது போல தெரியவில்லை... ஆனால் யோவானில் அப்படி சொல்லாப்பட்டிருக்கிறது ... யோவான் தன்னைத் தான் எழுத தன்னை மறைத்து தாழ்மையாக எழுதுகிறாரா அல்லது இயேசுவுக்கு யோவான்  அன்பாயிருந்த காரணம் வேறு ஏதாவது இருந்தால் அதையுமே ஆராயலாம். யோவான் 19:26, 20:2, 21:20

[4/8, 6:37 PM] Yohaan Pastor VT: ௯௯௯௯௯௯௯௯௯௯௯௯௯௯௯௯௯௯௯௯
👉 *இயேசுவுக்கு அன்பாயிருந்தவன் என்று   யோவான் அழைக்கப்பட காரணம் என்ன❓யோவான் 19:26, 20:2, 21:20*
யோவான் மாத்திரம் அல்ல, பேதுருவும் யாக்கோபும் அன்பாய் தான் இருந்தார்கள். ஆனாலும் யோவான் ஒருபடி மேலே என்று தான் சொல்ல வேண்டும்.
ஏன் இவர்கள் மேல் இயேசு அன்பாயிருந்தார் ?
இவர்கள் இயேசுவை மீதி சீஷர்களை காட்டிலும் அதிகமாய் *விசுவாசித்தார்கள்*, அதனால் அவர்கள் இயேசு சொன்னவைகளை செயல்படுத்தவும் செய்தார்கள்.
இயேசுவிடம் அன்பாக இருப்பவர் எவரும் அவர் கட்டளைகளை கடைப்பிடிப்பார்கள் இல்லையா ? (யோவான் 14:15) அது போல இவர்கள் மற்ற சீஷர்களை காட்டிலும் இயேசுவின் கட்டளைகளை *விசுவாசித்து கடைப்பிடித்தார்கள்*. விசுவாசமில்லாமல் தேவனிடத்தில் பிரியமாய் இருப்பது கூடாத காரியம்.(எபிரேயர் 11:6)
இயேசு கெத்சமெனே தோட்டத்தில் பிடிக்கப்பட்டபொழுது எல்லா சீஷர்களும் ஓடித்தான் போனார்கள். ஆனால் இயேசுவுக்கு அன்பாய் இருந்த பேதுருவோ, யாக்கோபோ அவருடன் சிலுவையில் அறையப்படும் போது இல்லை. தன்னையும் பிடிப்பார்கள் என்ற போதிலும் யோவான் தைரியமாக இயேசுவோடு இருந்தார். இயேசுவும் தன் தாயை யோவானுக்கு தாயாய் அருளினார். தன் உயருக்கு பயப்படாமல் விசுவாசத்தினால் இயேசுவோடு இருந்தபடியால் அவர் இரத்தசாட்சியாக மரியாமல் நீண்ட வயதுவரை வாழ்ந்து நித்திரை அடைந்தார். ஆனால் யாக்கோபோ முதல் இரத்தசாட்சியாக தலை வெட்டப்பட்டார், பேதுரு இரத்தசாட்சியாக சிலுவையில் அறையுன்டார்.
*லூக்கா 17 :33*
33 தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான், இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.
இதனால் என்ன ?
*இயேசுவுக்கு அன்பாயிருந்தவன் என்று   யோவான் அழைக்கப்பட காரணம் என்னவென்றால் இயேசுவை விசுவாசித்து அவருடைய கட்டளைகளை பின்பற்றி தன் ஜீவனை இரட்சிக்க வகைத்தேடாமல் அதை இயேசுவுக்காக கொடுக்க ஆயத்தமாக இருந்ததே.*
*வசனக்குறிப்பு:* Verse References
*மத்தேயு 26 :37*
37 *பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும்* கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
*மாற்கு 14 :33*
33 *பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும்* தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
*மாற்கு 9 :2*
2 ஆறு நாளைக்குப்பின்பு, *இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும்* அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.
*மாற்கு 5 :36 - 37*
36 அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே,ஜெபஆலயத்தலைவனை நோக்கி,பயப்படாதே,விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி.
37 *பேதுருவையும்,யாக்கோபையும்,யாக்கோபின் சகோதரன் யோவானையும்* தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்.
*மாற்கு 13 :3*
3 பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில்,பேதுருவும், யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து.
*லூக்கா 22 :8*
8 அப்பொழுது அவர் *பேதுருவையும் யோவானையும்* அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.
*அப்போஸ்தலர் 3 :1*
11 குணமாக்கப்பட்ட சப்பாணி *பேதுருவையும் யோவானையும்* பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
*அப்போஸ்தலர் 4 :13*
13 *பேதுருவும் யோவானும்* பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, *அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்.*
*அப்போஸ்தலர் 4 :19*
19 *பேதுருவும் யோவானும்* அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; *தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ* என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

Post a Comment

0 Comments