[4/14, 8:59 AM] : ✝ *இன்றைய வேத தியானம் - 14/04/2017* ✝
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று ஐந்தாவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉
🔹அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, *வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன்👈 என்றார்.* யோவான் 19:28🔹
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏
[4/14, 9:21 AM] Stanley Ayya VT: ஜீவனுள்ள கருத்துக்கள்
நம்மில் ஆனேகர் மறைமுகமாக
அல்லது
நம்மை அறியாமல்
தேவனை அறிய முடியாத / ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களை அற்பமாகவே நினைக்கிறோம்.
நம்மால் எப்போது அவர்களும் தேவனுக்காகக படைக்க பட்ட அவருடைய பிள்ளைகள் என்றும் ,
தேவபிள்ளைகளாக நம்முடைய சொந்த சகோதரர் என்றும் உருக இயல வில்லை எனில்.
நாம் பெயர் கிறிஸ்த்தவர்களே.
ஆமென்.
மனதை தொடும் செய்தி
__________________________
http://vedathiyanam.blogspot.com
[4/14, 9:24 AM] Stanley Ayya VT: மனதை தொடும் தங்களின்
____________________________செய்தி :-
________
அவர் தன் வாழ்நாள் முழுவதும் எங்கு அவர் தேவைப்படுகின்றாரோ அங்கேயே அவர் சென்றார் ...அதேப்போல நாம் நிறைய பேருக்கு சுவிஷேசம் அறிவிப்பதற்க்கு தேவையாக இருக்கின்றோம்...
ஒதுக்கப்பட்ட தள்ளப்பட்ட வெறுக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களுக்கு சுவிஷேசம் அறிவிக்க உன்னையும் என்னையும் அழைக்கிறார் ...
நாம் இந்த மக்களை பார்த்து சிலை வழிபடுகிறான், பேயை வழிபடுகிறான் என்று சொல்லாமல்... அவன் தெரியாமல் செய்கிறான் என்று அவர்களை ஒதுக்கிவிடாமல் அவன் அறியாமல் செய்கிறான் என்று அவனுக்கு கிறிஸ்துவை அறிவித்துyi ஜீவ வார்த்தைகளையும் உன்னத வாழ்க்கையையும் காட்டி சுவிஷேசம் அறிவிக்க வேண்டும்.
[4/14, 9:40 AM] Elango: யோவான் 4:14
[14] *நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது;*
*நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.*
வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்றார் ஆண்டவர் ...👇👇👇
சங்கீதம் 22:15
[15] *என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.*
இந்த தாகத்தை உலகின் ஒட்டுமொத்த பாவத்தை சுமந்த ஆவிக்குரிய வேதனையையும், மரணத்தின் கடைசி நிலையென்றும், ஆத்ம தாகம் என்றும் கூறுகின்றனர்.
சமாரியா ஸ்தீரியிடம் தாகத்துத்தா என்றாள்.. ஊர் மக்களிடம் சாட்சி பகிர்ந்தாள்... சிலுவையில் தாகமாயிருக்கிறேன் என்றார் காடியை குடிக்க கொடுத்தார்கள்😢😓😥
[4/14, 9:46 AM] Elango: *வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக*
இயேசுகிறிஸ்து வேதவாக்கியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம்கொடுத்துள்ளார் என்பதை இதில்இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.‼‼
இயேசு உண்ணும்போஜனமும்,அவருடைய தாகத்துக்குதகுந்த தண்ணீரும் எதுவாக இருக்கும் என்ற கேள்வியை நாம்எழுப்புவோமானால், வேத வசனம்இப்படியாக சொல்லுகிறது👇👇
இயேசு அவர்களைநோக்கி, *நான் என்னைஅனுப்பினவருடைய சித்தத்தின்படிசெய்து அவருடையகிரியையைமுடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.* யோவான் 4:34
[4/14, 9:49 AM] Elango: தன்னை அனுப்பின பிதாவின் சித்தப்படி செய்வதே இயேசுவுக்கு போஜனாமாக இருந்ததுதுதூ
இயேசுவின் தாகம் பிதாவின்சித்தம் செய்யப்படுவதே‼👈
*அப்படியானால் இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவை பின்பற்றும் நாம் இன்றைக்கு நாம் இயேசுவின் தாகத்தை போக்க என்னசெய்துவருகிறோம். பிதாவின் சித்தத்தை நாம் உணர்ந்து இருக்கிறோமா என்பதை நாம் நம்மை நாமே உய்த்து ஆராய்ந்து நிதானித்து அறிய வேண்டும்.😔😔🤔🤔🤔*
[4/14, 9:54 AM] Stanley Ayya VT: மகா மேன்மையை நமக்காக விட்டுவிட்டு மனிதனாக வந்த தேவன்
இறுதி வினாடி வரை எல்லா துன்பத்தையும் அவமானத்தையும் அடைந்தே நம் பாவ கணக்கை அடைந்தார்.
வாழ்க்கை நடத்தை விதிகளை மீறி இன்பமடைய முயலும்
பாவத்தாலும்
நன்மை செய்யும் வாய்பை நழுவ விட்ட
பாவத்தாலும்
தேவனுக்காக / தேவ வார்த்தையின் நிமித்தம் நம் பாதுகாப்பிற்க்காக சிலவற்றை இழக்க மனமில்லாத
பாவத்திற்காகவும்
அவர் தாகத்தால் துடித்த போது காடியை குடிக்கவைக்கபடும் அவமான துன்பத்தை அடைந்தார் என்பதே நினைக்க தகும்.
நாம் தேவனை அறிந்த ஆத்ம தாகத்தின் பலனுக்காக அவர் காயப்பட்டார்.
ஆத்தும மன பாரத்திற்க்கு அனுதினமும் ஜெபிக்க கூட முடியாத கிறிஸ்தவனாக நானும் அவரை ஆணியால் அடிக்கிறேன்.
[4/14, 3:25 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 14/04/2017* ✝

[4/14, 3:45 PM] Immanuel Brother VT: தாகமாயிருக்கிறேன்!
தியானம்: ஏப்ரல் 14 வெள்ளி; வேத வாசிப்பு: சங்கீதம் 69:1-10
“அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்” (யோவான் 19:28).
அடிபட்ட ஒருவர், அல்லது, விபத்தில் சிக்கிக் காயப்பட்ட ஒருவர், “தண்ணீர்! தண்ணீர்!” என்று தவிப்பதைப் பல சந்தர்ப்பங்களிலும், நேரடியாகவோ, தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலோ நாம் கண்டிருக்கிறோம்.
தாகம் என்பது வேதனையின் ஒரு பிரதிபலிப்பு. திடீரென ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகும்போதும், அல்லது, மரணத்தை உணரும்போதும் அதிக தாகம் கொள்வதுண்டு. 69ம் சங்கீதத்திலும் தாவீது, வேதனையின் உச்சக்கட்டமாய் கதறியபோது, “நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன். என் தொண்டை வறண்டு போயிற்று” (வச.3) என்கிறார். அதிகமான இரத்தம் வெளியேறும்போதும் தாகம் ஏற்படும். இவ்விதமான பல்வேறுபட்ட காரணங்களால் தாகம் ஏற்படும் சாத்தியம் உண்டு. சர்வலோகத்தையும் ஆண்டுகொள்ளும் தேவன், சேராபீன்களும் கேராபீன்களும், ‘பரிசுத்தர் பரிசுத்தர்’ என்று துதிபாடும் அந்த இசையில் உலாவிவரும் தேவன், என்னையும் உன்னையும் மீட்பதற்காய் அந்தப் பரலோகத்தின் மேன்மையைத் துறந்து இப்பூமிக்கு வந்து கல்வாரி சிலுவையில் பாடுகளின் மத்தியில், “தாகமாயிருக்கிறேன்” என்று சொல்லுகிறார். அவரது இந்த நிலைக்குக் காரணம் யார்? தாகம் எடுப்பதற்கு நாம் பல காரணங்களைச் சொல்லலாம். “என்றென்றைக்கும் தாகம் எடுக்காத ஜீவத் தண்ணீரைத் தருகிறேன்” என்று சமாரியப் பெண்ணுக்குச் சொன்ன ஆண்டவர், இன்று அதே ஜீவத் தண்ணீரை நமக்குக் கொடுப்பதற்காக சிலுவையிலே தாகம் எடுத்தவராய் தொங்கினார். நமது மீட்புக்காய் ஆண்டவர் செய்த அளப்பெரிய காரியத்தைத் தியானிக்கும் இந்த நாளிலே, அவருக்காய் நாம் கொடுப்பது என்ன? இன்று ஒருநாள் உபவாசமும், மூன்றுமணி நேர ஆராதனையுமா? அன்று சிலுவையின் உபத்திரவத்தில் தாகமடைந்த ஆண்டவர், இன்றும் ஆத்தும தாகம் கொண்டவராய் நம் மத்தியிலே நிற்கிறார். அவருக்காய் நாம் என்ன செய்யப்போகிறோம்?
“உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?” என்று கேட்கும் ஆண்டவருக்கு இன்று நாம் கொடுக்கின்ற பதில் என்ன? பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காய் தமது ஜீவனைக் கொடுத்த ஆண்டவர், இன்று நம்மை எப்படிக் காண்கிறார்? நமது வாழ்வு சுயத்திற்குச் செத்ததாய், தேவ பணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதாய், ஆண்டவரை உண்மையாக நேசிக்கிறதாய், பிறரையும் தேவ அன்புக்குள் கொண்டுவந்து சேர்ப்பதற்கு ஆயத்தமுள்ளதாய் காணப்பட நம்மை இன்றே தேவகரத்தில் தருவோமாக.
“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” (சங்கீதம் 116:12).
ஆமென்.
[4/14, 3:59 PM] Elango: சிலரது தாகம் இந்த பூமியில் ஜெயிப்பதிலேயே இருக்கும்.
சிலரது தாகம் சொத்து சுகங்களை சேர்ப்பதிலேயே இருக்கும்.
சிலரது தாகம் பிறருடைய பொருளை இச்சிப்பதிலேயே இருக்கும்.
❤இயேசுவின் சிலுவை தாகமோ நம்முடைய ஆத்ம இரட்சிப்பையே நோக்கி இருந்தது.❤✝
[4/14, 4:04 PM] Jeyaseelan VT: 🌹இயேசுகிறிஸ்து சிலுவையில் அருளின
ஏழு வார்த்தைகள்🌹
💥ஐந்தாவது வார்த்தை....
தாகமாயிருக்கிறேன்💥
🌷அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். - (யோவான் 19:28-29).🌷
நாம் தொடர்ந்து சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசின ஏழு வார்த்தைகளை குறித்து தியானித்து வருகிறோம். இன்றைய தினம் ஐந்தாவது வார்த்தையாகிய தாகமாயிருக்கிறேன் என்னும் வார்த்தையை குறித்து தியானிக்க இருக்கிறோம்.
கெத்சமனே தோட்டத்தில் பிடிக்கப்பட்டு, பிரதான ஆசாரியன், பின் பிலாத்து என்று மாறி மாறி விசாரிக்கப்பட்டு, இவரிடத்தில் ஒரு குற்றத்தையும் காணேன் என்று தீர்ப்பு வழங்கியிருக்க, சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று யூத மக்களின் தொடர் கூச்சலுக்கு இணங்க, தன் கையை கழுவி, நீதிமானின் இரத்தபழிக்கு நான் நீங்கலாகுகிறேன் என்று பிலாத்து, கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தப்பின், துப்பப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, கேலி பரியாசம் செய்யப்பட்டு, இரும்பு முட்களால் ஆன சவுக்கினால் முதுகு உழுதவன் நிலத்தை போல ஆகி, இரத்தம் அதிகமாய் சிந்தப்பட்டு, கோர குருசை சுமந்து கொல்கதா மலைக்கு ஏறி சென்ற கிறிஸ்துவுக்கு கொஞ்சம் இந்த தண்ணீரை குடித்து விட்டு, தொடர்ந்து செல்லுங்கள் என்று கொடுத்ததாக வசனத்தில் சொல்லப்படவில்லை. அப்படி கொடுப்பதற்கும் ரோம வீரர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.
கொல்கதா மலைக்கு சென்று அங்கு கைகள் கால்களில் ஆணிகளால் கடாவபட்டு, தலையில் முள்முடி சூடி, தொடர்ந்து பன்னிரண்டு மணி நேர துன்புறுத்தலுக்கு ஆளாகி, ஆறாவது மணி நேரமாக சிலுவையில் தொங்கி கொண்டிருந்த கிறிஸ்துவுக்கு தாகம் ஏற்பட்டிராதா? நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் அவர் நூறு சதவிகிதம் தெய்வமாக இருந்தாலும், அவர் நூறு சதவிகிதம் மனிதனாகவும் இருந்தார். அவர் பயங்கரமான டிஹைடிரேஷன் என்னும் தண்ணீர் உடலில் வற்றிப் போன நிலையில் இருந்தார் என்று அவர் பாடனுபவித்ததை நன்கு கற்று அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சங்கீதம் 22 ல் தாவீது தீர்க்கதரிசனமாக உரைத்தவைகள் அந்த நாளில் நிறைவேறிற்று. அவற்றில் ஒன்றான, ‘என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்’ (15ம் வசனம்) என்ற வசனத்தின்படி ஈரப்பசை இல்லாதபடியால், அவருடைய நாவு மேல் வாயோடே ஒட்டிக் கொண்டது. அப்போது அவர் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னவுடன், அங்கிருந்த ரோம வீரர்கள், அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். ‘என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்’ (சங்கீதம் 64:21) என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று.
‘நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்’ (யோவான் 4:14)என்று என்றுமே தாகம் வராத ஜீவ தண்ணீரை சமாரியா ஸ்தீரிக்கு கொடுத்தவர், இன்று தாகமாயிருக்கிறேன் என்றார். அவருடைய உண்மையான தாகம் அழிந்து போய் கொண்டிருக்கிற ஆத்துமாக்களை பற்றியதே. தண்ணீரை திராட்சராமாக மாற்றியவர், கன்மலையிலிருந்து தண்ணீரை புறப்பட்டு வர செய்து ஜனங்களின் தாகத்தை தீர்த்தவர், இன்று தாகமாயிருக்கிறேன் என்றார். அவர் நினைத்திருந்தால், அவரிடம் கொடுக்கப்பட்ட தண்ணீரை அவருடைய வாய்க்கு உகந்ததாக, அவருடைய தாகத்தை தீர்ப்பதாக மாற்றியிருந்திருக்கலாம். ஆனால் அது சாத்தானின் தந்திரம் என்பதை உணர்ந்தவராக, தம் பிதாவின் சித்தத்திற்கு தம்மை அர்ப்பணித்தார்.
வார்த்தையின் வடிவானவர், வார்த்தை என்னும் நாமத்தை உடையவர், தம்மை குறித்து எழுதப்பட்டிருந்த அத்தனை தீர்க்கதரிசனங்களும் நிறைவேறபட்டிருப்பதை அறிந்திருந்தார். அப்பொழுது அவர் ‘என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்’ என்ற வாக்கியம் நிறைவேறாததை கண்டபோது, ‘வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்’. அல்லேலூயா!
தாகமாயிருக்கிறேன் என்ற கிறிஸ்துவின் தாகம் இன்றளவும் தீரவில்லை. அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் அவரண்டை வந்து சேரும் வரை அவர் தாகம் தீராது. அவருடைய தாகத்தை தீர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா? Each one catch one என்று ஒவ்வொருவரும் மாதம் ஒருவரை அல்லது வருடம் ஒருவரை கர்த்தரிடம் வழிநடத்தினாலே கர்த்தரின் தாகத்தை நாம் ஓரளவு தீர்க்க முடியுமல்லவா?
கிறிஸ்து நம் அன்பின் மேல் தாகமாயிருக்கிறார். நம் மேல் கொண்ட அன்பினாலேதானே இத்தனை பாடுகள், கஷ்டங்கள் சகித்தார். அவர் நம்முடைய அன்பை எதிர்ப்பார்ப்பது ஒன்றும் தவறில்லையே! நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தி, அதற்காக தியாகம் செய்யும்போது, அவரிடமிருந்து அன்பு திரும்ப கிடைக்காவிட்டால் அதை நம்மால் தாங்க முடியாதல்லவா? அதுப் போலதான் கர்த்தரும் நம்மில் அன்பு செலுத்தி, இத்தனை தியாகங்கள் செய்திருக்க நாமும் அவரில் அன்பு செலுத்த கடனாளிகளாயிருக்கிறோம் அல்லவா?
நம் ஆத்தும தாகத்தை தீர்த்தாரே! என்றுமே தாகம் வராத ஜீவ தண்ணீரண்டை நம்மை வழிநடத்தினாரே! அப்படி நம் தாகத்தை தீர்த்தவரின் தாகத்தை நாம் தீர்க்க வேண்டுமே! அழிந்து போகும் ஆத்துமாக்களின் தாகத்தை தீர்ப்போம். வேதத்தில் அவரை கண்டு, அவரை நேசிப்போம். அவருடைய தாகத்தை தீர்ப்போம்.
ஆமென் அல்லேலூயா!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[4/14, 4:23 PM] Elango: தாகமாயிருக்கிறேன் என்ற கிறிஸ்துவின் தாகம் இன்றளவும் தீரவில்லை.
கிறிஸ்து நம் அன்பின் மேல் தாகமாயிருக்கிறார்.
👌👍
[4/14, 5:32 PM] Tamilmani Ayya VT: சாட்சி
*யோவான் 12 :32*
_இந்த திருவசனத்தின் மூலம் நான் அறிந்த சகோதரன் இயேசுவே தெய்வம் என்று ஏற்றுக் கொண்டார்._
_IAS தேர்வுக்கு படித்துப்பயிற்சி பெற சென்னையில் இருந்து டெல்லி சென்று அறை எடுத்து தங்கி படித்துக் கொண்டிருந்ததார். அப்போது அங்கிருந்த புகழ் பெற்ற சாமியார்களை தேடிச்சென்றார். போதனைகளில் ஆழ்ந்தார். நல்ல அறிவுள்ள இளஞர். IAS புத்தகங்கள் மனதில் ஏறவில்லை. மத்திய அரசு பணியில் பொறியாளர். மனச்சஞ்சலம், மனச்சிக்கல் உண்டாகி விட்டது. யார் மெய்யான கடவுள் என்று? குழம்பிப்போய் விட்டார். இவர் சென்னையிலிருந்து கிளம்பும்போது இவர் மனைவி பையில் ஒரு பைபிள் புத்தகத்தை போட்டு அனுப்பி விட்டார். இவரும் மனைவி கும்பிடுகிற சாமிதானே என்று விட்டு விட்டார். மனைவி 4 வருடங்களுக்கு முன் இரட்சிக்கப்பட்ட பெண். டிசம்பர் 31 - 2005 இரவு பெருங்குழப்பத்தில் இருந்தார். இவர் மெய்யான தெய்வம் யார் என்று புலம்பி தான் தங்கியிருந்த அறையிலிருந்து பிரார்த்தனை செய்தார். ஏதோ நினைவு வந்தவராய் மனைவி கொடுத்த பைபிளை எடுத்து விரித்தார். அவர் கண்ணில் காட்சியாய் வந்த வசனம் :_
யோவான் 12:32. *நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்.*
_" உயர்த்தப்பட்டவர் " என்ற திருவசனம் மூலம் ஆண்டவர் நானே தேவன் என உணர்த்தியதை உணர்ந்தார். தெளிவானார். ஏற்றுக்கொண்டார். தேவனுக்கே மகிமை!!_
[4/14, 7:00 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 14/04/2017* ✝

[4/14, 7:52 PM] Elango: வெள்ளிகிழமை மாலை ஆறு மணிக்கு இயேசுவை கல்லறையில் வைத்தால் அவர் ஞாயிறு உயிர்த்தார்.அப்படி யெனில் மத்தேயு12:39,40 ல் இயேசு சொ ன்னது தவறா.அல்லது நாம் கொண்டாடும் பண்டிகையில் தவறா....Please clarify this
மத்தேயு 12:40
[40]யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
👆பதில் தேவை
கேள்வி என்னுடையது அல்ல
இந்த கேள்விக்கான பதில் ஞானமாக அதே சமயம் எச்சரிக்கையாக தர உங்களை நாடுகிறேன்.
🙏🙏🙏
[4/14, 8:15 PM] Jeyaseelan VT: Tamil Bible Q and A (பைபிள் கேள்வியும் பதிலும்) www.tamil-bible.com
Tuesday, November 17, 2009
19. இயேசு "யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல்" இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தாரா?
இந்தக் கட்டுரையின் நோக்கம் இயேசு பொய் சொல்லவில்லை, அவர் தாம் சொன்னபடியே மரித்து மூன்றுநாள் இரவும் பகலும் கழித்து எழுந்தார் என்று விளக்குவதாகும்.
இயேசுவிடம் யூதர்கள் ஒரு அடையாளம் கேட்டார்கள். அப்பொழுது இயேசு சொன்னார்:மத்தேயு 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
பெரிய வெள்ளி (Good Friday) அன்று அவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்று வேதத்தில் இல்லை. ஓய்வுநாளுக்கு முன்தினம் இறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.வெள்ளியன்று (12pm-3pm) அவர் இறந்திருந்தால்: வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு என்று ஒன்றரை நாள்தான் வரும். வாரத்தில் முதலாம் நாள் ஞாயிறு காலையில் கல்லறையில் அவர் இல்லை.
இதைக்குறித்து வாதிடும் மற்ற மதத்தினர்களுக்கு என்னுடைய செய்தி: "இயேசு உயிருடன் எழுந்தார் என்று நீங்கள் நம்புகின்றீர்கள். மகிழ்ச்சிடையகின்றேன்"
இயேசு உயிர்த்தெழுந்தபின்பு சொன்னவை (லூக்கா 24:25-49) :
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி:தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
மேலே: "நான் மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்துஎழுந்திருக்கவேண்டியதாயிருந்தது" என்று இயேசு உயிர்த்தெழுந்தபின்பு சொன்னார். எனவே மூன்று நாள் இரவும் பகலும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படியானால் கணக்கின்படி வெள்ளிக்கிழமை இறக்கவில்லை என்றே கூறவேண்டும். காரணம் இயேசு பொய் பேசவில்லை. பொய் பேசவேண்டும் என்று அவர் பேசியிருந்தால் அவர் சிலுவையில் அறையப்படாமலே தப்பியிருக்கமுடியும். அநேக இடங்களில் அவரைக்கொல்லும்படி வகைதேடும்போதெல்லாம் அவர் மறைந்துபோனார். ஆனால் அவர் பூமிக்கு மனிதனாக வந்ததே நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமக்கும்படிதானே. அவர் தேவன், பொய் சொல்லவில்லை.
மேலே கூறியபோது புரிந்துகொள்ளமுடியாதவர்களை இயேசு: "விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே" என்று சொன்னார். இயேசு என்னை வெள்ளிக்கிழமையில் சிலுவையில் அறையவில்லை என்று நேரடியாகச் சொல்லாமல், மூன்றாம் நாள் உயிரோடு எழும்பவேண்டியதாயிருந்தது என்றார்.
எது ஓய்வு நாள்?
ஏழாம் நாள் ஓய்வு நாள். ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள் என்றால், 52 ஓய்வுநாட்கள் என்று நாம் முடிவுக்கு வரக்கூடாது. பழைய ஏற்பாட்டில் ஓய்வுநாட்களைப் பார்ப்போம்.
[1] யாத்திராகமம் 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; (இதுதான் 52 தடவை வருடத்துக்கு வரும்). இது போக...
[2] லேவியராகமம் 16:29-31 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே (07/10), சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.
[3] லேவியராகமம் 23:4-8 சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
3A. முதலாம் மாதம் பதினாலாம் தேதி (01/14) அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,
3B. அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே (01/15), கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்
3C. முதலாம் நாள் (01/15) உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
3D. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் (01/21) பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
[4] அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில்கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும். நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது;
[5] லேவியராகமம் 23:24 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி (07/01)எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.
[6] லேவியராகமம் 23:34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் (07/15 - 07/21) கர்த்தருக்கு ஆசரிக்கும்கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
6A. முதலாம் நாள் (07/15) சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
6B. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் (07/22) உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
{ Repeats [6] லேவியராகமம் 23:39 நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் (07/15) கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு (07/15), எட்டாம் நாளிலும் ஓய்வு (07/22). }
எனவே ஏழாம் நாள் தவிர, பல ஓய்வுநாட்களை நாம் காண்கிறோம். இவைகள் பெரிய ஓய்வு நாட்கள் அல்லது விசேஷித்த ஓய்வுநாட்களாகும் . இவை வழக்கமாய் வரும் ஏழாம் நாளைத் தவிர மாதம் பிறக்கும் தேதியினைப்பொருத்து எந்தக் கிழமையிலும் வரலாம்.
லூக்காவில் வாசியுங்கள்:
லூக்கா 6:1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள். [எத்தனை ஓய்வுநாட்கள் புரிந்ததா? seehttp://www.a4t.org/Sermons/Brown/time_line_calendars.pdf ]
யூதர்களின் வருட அட்டவணையைப் பார்க்கவும். அதில் எங்கெல்லாம் ஓய்வுநாள் என்று பாருங்கள்.
. http://www.chabad.org/calendar/view/year.asp?tDate=11/18/2008&mode=j
. http://www.chabad.org/calendar/view/year.asp?tDate=11/18/2009
நாள், மணிவேளை, ஓய்வுநாள், இதன் ஆரம்பம், முடிவு:
நாள்: யூதர்களுடைய நாள் சாயங்காலம் துவங்கி, மறுநாள் சாயங்காலம் வரைக்குமாகும். உங்களுக்கு இதுவரை தெரியவில்லையெனில் இப்போது தெரிந்துகொள்ளுங்கள். இங்கே [கலிஃபோர்னியாவில்] என்னுடன் வேலைபார்க்கும் யூதர்களும் எங்களுக்கு நாள் என்பது சாயங்காலம் துவங்கி, அடுத்தநாள் சாயங்காலம் ஆரம்பமாகும் வரை என்றே சொல்கின்றார்கள். வேதாகமத்திலும் ஆதியாகமம் 1 ல் "சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதல் நாள் ஆயிற்று" என்று உறுதிப்படுத்துகின்றது. மேலே கொடுக்கப்பட்டுள்ள யூதர்களின் வருட அட்டவணையும் அப்படித்தான். யூதர்களின் இணையத்தளமும் அதைத்தான் சொல்கின்றது:http://www.jewfaq.org/holiday0.htm
ஓய்வு நாள்: லேவியராகமம் 23:32 சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
மணிவேளை: வேதத்தில் ஆறாம் மணிவேளை என்றால் நம்முடைய தற்போதைய நாட்கணக்கின்படி மதியம் 12 மணியாகும், ஒன்பதாம் மணிவேளை என்றால் மாலை 3மணியாகும்.
விளக்கம்: மத்தேயு 20:1-12 அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். மூன்றாம் மணி வேளையிலும் (9am) அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள்; நியாயமானபடி உங்களுக்கு கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், ஆறாம்(12pm) ஒன்பதாம் மணிவேளையிலும்(3pm) அவன் போய் அப்படியே செய்தான். பதினோராம் மணிவேளையிலும்(5pm) அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: ஒருவனும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள். நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். சாயங்காலத்தில் (6pm), திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான். அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு வீட்டெஜமானை நோக்கி: பிந்திவந்தவர்களாகிய இவர்கள் "ஒரு மணி நேரமாத்திரம்" வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
மூன்று நாள் இரவும் பகலும் கணக்கு எப்படி?
யோவான் 19:13,14 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.. அந்த நாள் "பஸ்காவுக்கு ஆயத்தநாளும்" ஏறக்குறைய ஆறுமணி (12pm) நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
மாற்கு 15:42 ஓய்வுநாளுக்கு முந்தின நாள் "ஆயத்தநாளாயிருந்தபடியால்", சாயங்காலமானபோது, கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
யோவான் 19:30, 31 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
லூக்கா 23:53,54 அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; [பெரிய] ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
எனவே இயேசு மரித்தது ஆயத்த நாளில்தான். இதில் சந்தேகமே இல்லை.
நன்றாக கவனித்தால் அந்த வாரம் இரண்டு ஓய்வுநாட்கள் வருவதைக்காணலாம். மேலே யோவான் எழுதின சுவிஷேசத்தில் 19:30, 31ல் தெளிவான பெரிய ஓய்வு நாள் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஓய்வுநாட்கள் ஒருவாரத்தில் இதற்குமுன் வந்திருக்கின்றது என்பதை லூக்கா 6:1 ல் உங்களுக்கு எடுத்துக் காண்பித்தேன்.
ஓய்வுநாள் ஆரம்பமாவது சாயங்காலம் என்பதை நினைவில்கொண்டுவரவும். எனவே அந்த பெரிய ஓய்வு நாளில் யூதர்கள் வேலை ஒன்றும் செய்யவில்லை.
லூக்கா 23:55,56 [அதற்கு மறுநாள்] கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
இங்கே பரிமளதைலங்களை ஆயத்தம்பண்ணியது ஒருநாள்.
பின்பு கற்பனையின்படியே (as per commandment அதாவது ஏழாம் நாள்) ஓய்ந்திருந்தார்கள், இது அதற்கு அடுத்தநாள்.
மத்தேயு 28:1 ல் "ஓய்வு நாட்களுக்குப் பின்" என்று கூறப்பட்டுள்ளது:
Young's Literal Translation:
And on the eve of the sabbaths, at the dawn, toward the first of the sabbaths, came Mary the Magdalene, and the other Mary, to see the sepulchre,
கிரேக்க மொழி:
οψε δε σαββατων τη επιφωσκουση εις μιαν σαββατων ηλθεν μαρια η μαγδαληνη και η αλλη μαρια θεωρησαι τον ταφον [ σαββατωνnoun - genitive plural neuter sabbaton]
அதாவது ஓய்வு நாட்கள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில் [6am என்று வைத்துக்கொண்டால்கூட ஞாயிறுநாள் ஆரம்பித்து சுமார் 12மணிநேரம் ஆயிற்று - அதான் நாள் சாயங்காலம் ஆரம்பமாகின்றதே], மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அங்கே அவர் இல்லை.
எனவே:
புதன்கிழமை - அவர் சிலுவையில் அறையப்பட்டார். அன்றே 3:00pm மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார். [அன்று பஸ்காவுக்கு ஆயத்த நாள்]
வியாழக்கிழமை - "பெரிய ஓய்வுநாள்",
வெள்ளிக்கிழமை - "பரிமளதைலங்கள் ஸ்திரீகள் தயார் செய்தார்கள்",
சனிக்கிழமை - கற்பனையின்படி ஓய்வுநாள்.
இயேசு உயிருடன் எழும்பியது சனிக்கிழமை மாலை அதாவது ஞாயிறு ஆரம்பிக்கும் கொஞ்சம் முன்னே. எப்படியெனில் சாயங்காலம் துவங்கி, சாயங்காலம் வரைக்கும் ஓய்வுநாள் என்று வாசித்தோம். யோவான் 28:1ல் ஓய்வுநாட்கள் முடிந்த சாயங்காலம் என்று வாசித்தோம். அதாவது வாரத்தின் முதல்நாள் ஆரம்பமாகிறது. மரித்த புதன் மாலையிலிருந்து இது மிகச்சரியாக மூன்று இரவுகள் மற்றும் மூன்று பகல்கள், அதாவது 72 மணி நேரம் (24 x 3). மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் சொல்லலாம்.
இதைத்தான் இயேசுவும் உயிர்த்தெழுந்த பின்பு நான் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழவேண்டியதாயிருந்தது என்று [நாம் ஆரம்பத்தில் படித்த பகுதியில்] சொன்னார்.
பெரிய ஓய்வுநாள் வேறொரு பார்வை (யாத்திராகமம் 12:2-8):
"இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் (01/10) தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள். அதை இந்த மாதம் பதினாலாம் தேதி (01/14) வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்" என்று வாசிக்கிறோம்.
இயேசுதான் நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி (I கொரிந்தியர் 5:7 நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே).
எனவே 14ம் தேதி சாயங்காலம் அவர் இறந்தார்.
3A. வில் (01/14) அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும் [ஆயத்த நாள்],
3B, 3C. யில் அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே (01/15), கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையும் இருக்கும் என்று வாசிக்கிறோம். இது பெரிய ஓய்வு நாள். அதாவது இயேசு மரித்து அடக்கம்பண்ணப்பட்ட நாளுக்கு அடுத்த நாள். இதன் பின் ஒரு வேலைசெய்யும் நாள், பின் ஓய்வுநாள் என்று அந்த வருடம் வந்துள்ளது.
"பஸ்கா ஆயத்த நாள் (01/14)" அன்று அவர் இறந்திருக்கிறார் சரி, அவர் சீஷர்களுடன் இராப்போஜனம் எப்போது சாப்பிட்டார்?
யூதர்களுக்குத்தான் நாள் சாயங்காலம் துவங்குகின்றதே, "பஸ்கா ஆயத்த நாள்" துவங்கிய அன்று மாலை சாப்பிட்டார். இரவு காட்டிக்கொடுக்கப்பட்டார். விடிந்து பகலில் (இன்னும் நாள் முடியவில்லை) பஸ்கா ஆயத்த நாள் அன்று சிலுவையில் அறையப்பட்டு, அன்றே அடக்கம்பண்ணப்படுகிறார்.

. அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையிலே மரித்து பின்பு அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார். இதை நாம் விசுவாசிக்கவேண்டும்
[4/14, 8:22 PM] Levi Bensam Pastor VT: இயேசு கிறிஸ்து 3 நாள் எங்கே இருந்தார், என்ன செய்தார் ❓👇👇👇👇👇
[4/14, 8:23 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 23:42-43
[42]இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
[43]இயேசு அவனை நோக்கி: *இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய்* என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
[4/14, 8:25 PM] Levi Bensam Pastor VT: 1 பேதுரு 3:18-20
[18]ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
[19] *அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.*❓❓❓❓❓❓❓❓
[20]அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
[4/14, 8:27 PM] Levi Bensam Pastor VT: எபேசியர் 4:8-10
[8]ஆதலால், *அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.*☝ ☝ ☝ ☝ 👇👇👇👇👇👇👇👇
[9] *ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?*
[10]இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
[4/14, 8:28 PM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 1:5
[5]தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; *சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.*🤔🤔🤔🤔🤔🤔❓❓❓❓
[4/14, 8:29 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 90:4
[4]உமது பார்வைக்கு *ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.*☝
[4/14, 8:30 PM] Levi Bensam Pastor VT: உபாகமம் 29:29
[29] *மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்;* வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
[4/14, 8:31 PM] Levi Bensam Pastor VT: 2 பேதுரு 3:8
[8]பிரியமானவர்களே, *கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.*
[4/14, 8:32 PM] Sam Jebadurai Pastor VT: பாஸ்டர் ஆடியோ கிளிப் போடுங்கள்
[4/14, 8:32 PM] Sam Jebadurai Pastor VT: புரியவில்லை
[4/14, 8:33 PM] Levi Bensam Pastor VT: Sam pastor sorry 🙏
[4/14, 8:38 PM] Jeyaseelan VT: *அவருடைய மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் இயேசு எங்கே இருந்தார்?*
பதில்:
1 பேதுரு 3:18-19, “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.” என்று கூறுகிறது. “ஆவியிலே” என்று 18ஆம் வசனத்திலே வரும் சொல், “மாம்சத்திலே” என்று வரும் அதே அமைப்பையே கொண்டிருக்கிறது. எனவே “ஆவி” என்ற சொல்லை “மாம்சம்” என்ற சொல்லின் பொருள் வரையறைச் சூழலில் விவரிப்பதே சரியாகும். மாம்சமும் ஆவியும் கிறிஸ்துவின் ஆவியும் மாம்சமுமாகும்.
“ஆவியிலே உயிர்பிக்கப்பட்டார்” என்ற சொற்கள் கிறிஸ்து பாவம் சுமந்ததும் மரித்ததும் அவருடைய மனித ஆவியை பிதாவினடத்திலிருந்து பிரித்ததைக் காண்பிக்கிறது (மத்தேயு 27:46). மத்தேயு 27:46 மற்றும் ரோமர் 1:3-4ல் குறிப்பிட்டுள்ளதுபோலான மாம்சத்திற்கும் ஆவிக்கும் உள்ள் வேற்பாடே இது, கிறிஸ்துவின் மாம்சத்திற்கும் பரிசுத்த ஆவிக்கும் இடையேயான வேறுபாடு இல்லை. கிறிஸ்து பாவத்திற்கு பரிகாரத்தைச் செலுத்தி முடிந்தபின், அவரது ஆவி தான் பிரிந்திருந்த ஐக்கியத்தோடே இணைந்தது.
கிறிஸ்துவின் பாடுகளுக்கும் (18ஆம் வசனம்) அவரது மகிமைப்படுதலுக்கும் (22ஆம் வசனம்) இடையே இருக்கும் ஒரு முக்கியமான தொடர்பை ஒன்று பேதுரு 3:18-22 விவரிக்கிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே நடந்ததைப் பேதுரு மட்டுமே தெளிவாகத் தெரிவிக்கிறார். 19ஆம் வசனத்திலுள்ள “போதித்தார்” என்ற சொல் சுவிஷேத்தை போதிப்பதைக் குறிக்க புதிய ஏற்பாட்டில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சொல் இல்லை. இது ஒரு செய்தியை பிரகடணம் செய்வதை நேரடியாகக் குறிக்கும். இயேசு பாடு அனுபவித்துச் சிலுவையில் மரித்தார், இதில் அவர் உடல் மரணத்திற்கு உள்ளானது, அவர் பாவமானபோது அவர் ஆவி மரித்தது. ஆனால் அவர் ஆவி உயிர்பிக்கப்பட்டபோது அவர் அதைத் தன் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்.
*பேதுருவைப் பொருத்தவரையில், தன்னுடைய மரணத்துக்கும் உயிர்தெழுதலுக்கும் இடையே எப்போதோ “காவலிலுள்ள ஆவிகளுக்குப்” பகிரங்கமாக அறிவித்தார்.*
தொடங்கும்போதே, பேதுரு மக்களுக்கு அறிவிக்கையில் “ஆத்மாக்கள்” என்றல்லாமல் “ஆவிகள்” (3:20) என்றே குறிப்பிடுகிறார். புதிய ஏற்பாட்டில், “ஆவிகள்” என்ற சொல் மனிதர்களையல்ல தேவதூதர்களையும் பிசாசுக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும், 22ஆம் வசனமும் இந்த பொருளைத்தான் குறிக்கிறது. மேலும், வேதாகமத்தில் எங்கேயுமே இயேசு நரகத்திற்கு சென்றுவந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.
அப்போஸ்தலர் நடபடிகள் 2:31 அவர் பாதாளத்திற்குச் சென்று வந்ததாகவே குறிப்பிடுகிறது. பாதாளம் என்பது நரகம் இல்லை. “பாதாளம்” என்னும் சொல், மரித்தவர்கள் உயிர்தெழுதலுக்காக காத்திருக்கும் ஒரு தற்காலிகமான இடத்தைப் பற்றிய பொருளைக் குறிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் காண்பிக்கிறது. நரகம் என்பது தொலைந்து போனவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு கடைசியாக நிரந்தரமாக அனுப்பப்படுகிற இடம். பாதாளமோ தற்காலிகமான இடம்.
நம் ஆண்டவர் தன்னுடைய ஆவியை பிதாவினடத்தில் ஒப்புவித்தார்; மரித்தார்; மேலும் மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடையே உள்ள நேரத்தில் மரித்தவர்களின் இடம் என்னும் சுழலுக்குச் சென்றார். அங்கு அவர் ஆவி ஜீவன்களுக்குப் பிரசங்கித்தார் (விழுந்துபோன தூதர்களாக இருக்கலாம்: பார்க்க யூதா 6). அவர்கள் யாரென்றால் ஏதோ ஒரு வகையில் நோவாவின் காலத்தில் வந்த வெள்ளத்திற்கு முன் உள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள். வசனம் 20 இதைத் தெளிவுபடுத்துகிறது. அவர் காவலிலுள்ள ஆவிகளுக்கு என்ன பிரசங்கித்தார் என்று பேதுரு கூறவில்லை ஆனால் அது மீட்பு பற்றிய செய்தியாக இருக்க முடியாது ஏனெனில் தூதர்கள் இரட்சிக்கப்பட முடியாது (எபிரேயர் 2:16). இது பெரும்பாலும் சாத்தானின் மேலும் அவன் சேனையின் மேலும் வெற்றி அடைந்ததற்குரிய பிரகடணமாயிருந்திருக்கலாம் (1 பேதுரு 3:22; கொலோசேயர் 2:15). எபேசியர் 4:8-10 கூட கிறிஸ்து “பரதீசுக்கு” சென்று அவருடைய மரணத்திற்கு முன்பு தன்மேல் நம்பிக்கை வைத்தவர்களை பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார். என்ன நடந்தது என்று இந்தப் வேதாகமப் பகுதியில் அதிகமாக விவரிக்கப்படவில்லை, ஆனால், “சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி” என்பது குறிக்கும் பொருள் இதுதான் என பெரும்பாலான வேத ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
ஆகையால் கிறிஸ்து அவருடைய மரணத்திற்கு உயிர்த்தெழுதலுக்கும் இடையே இருந்த மூன்று நாட்களில் என்ன செய்தார் என்று வேதாகமத்தில் முழுவதும் தெளிவாக இல்லை என்றே சொல்லமுடியும்.
ஆனால் *அவர் விழுந்துபோன தூதர்கள் அல்லது அவிசுவாசிகளின் மேல் வெற்றியைப் பிரசங்கித்தார் என்பது மட்டும் புலனாகிறது.*
*இயேசு மக்களுக்கு இரட்சிப்பிற்கான இரண்டாம் வாய்ப்பை அளிக்கவில்லை என்பது மட்டும் நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது. மரணத்திற்கு பின் நாம் நியாயத்தீர்ப்பை சந்திக்க வேண்டும், இரண்டாம் வாய்ப்பை அல்ல என்பதை வேதாகமம் நமக்குச் சொல்கிறது (எபிரேயர் 9:27).*
இயேசுவின் மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் என்ன செய்தார் என்பதற்கு ஒரு திட்டமும் தெளிவுமான விடையில்லை.
*ஒருவேளை, மகிமையை சென்றடையும்போது நாம் புரிந்துகொள்ளப்போகும் இரகசியங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.*
https://www.gotquestions.org/Tamil/Tamil-Jesus-3-days.html
[4/14, 8:42 PM] Levi Bensam Pastor VT: Glory to God 👏, உயிரோடு இருக்கும் போது வாய்ப்புகளை நஷ்டபடுத்தினால், மரித்த பிறகு பாதாளத்தில் இருந்த வேண்டுதல் செய்த ஐசுவரியவானின் நிலமை தான😭
[4/14, 10:18 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 14/04/2017* ✝

[4/15, 12:41 AM] Elango: தாகமாகயிருக்கிறேன் என்ற வார்த்தையின் மூலம் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான காரியம்... *இயேசுகிறிஸ்துவானவர் பிதாவின் சித்தத்தை செய்வதுதான் என்னுடைய சிறந்த போஜனம் என்கிறார்.*
பிதாவின் சித்தம் என்னவென்றால் 👇👇
1 தீமோத்தேயு 2:4
[4] *எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.*
*இதன் மூலம் நாம் தேவனுடைய சித்தத்தை எப்படி செய்துக்கொண்டிருக்கிறோம் என்பதை யோசிக்க வேண்டும்...ஏதோ பேசிவிட்டோம், பெரிய மீட்டிங்கை நடத்திவிட்டோம் என்பதோடு முடிந்துவிடுகிறதா❓❓*இல்லை‼
*கிறிஸ்து ஒவ்வோரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் இடைப்பட்டார்*👍🙏👌♥✝❤அவரே பல வகைகளில் முறைமைகளில் தன்னுடைய பிரசங்கத்தால் நிறைத்திருக்கின்றார்.
*அதேபோல் நாமும் ஒவ்வொரு தனிமனிதனிடமும், கூட்டமாகவும் இடைப்பட வேண்டும்... சுவிஷேசத்தின் ஒளியை அவர்கள் மீது பாய்ச்ச வேண்டும்.✝✨✨✨⚡⚡⚡⚡❤❤👍👍🙏🙏*
இந்த உலகம் எவ்வளவு அந்தகாரத்தில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.🌑🌑🌑🌑🌑சமகாலத்தில் நம் தேசத்தில் நடக்கிற பிரச்சனை ... விவசாயிகள் 75 நாட்களுக்கு மேலாக அவர்கள் கடன்களை தள்ளுபடிக்காகவும், மற்ற காரணங்களுக்காகவும் பிரதமரை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்.
*மேலும் சென்னையில் இப்போது தாகமாயிருக்கிற காலங்கள் ... அண்டை மாநிலத்திடலே தாகத்திற்க்கு தாங்கள் என்று கேட்க வேண்டிய இந்நேரம்...இது உலகபிரகாரமான காரியங்களாக இருந்தாலும் கூட நிதானிக்க வேண்டும்.*🙏🙏🙏🙏🙏
- சகோ. இம்மானுவேல் @Immanuel Brother VT
[4/15, 1:03 AM] Elango: அவர் உதடு மேல் அன்னத்தோடு ஒட்டிக்கொள்கிறது ... தாகமாயிருந்ததால்... தாகமாயிருக்கிறேன் என்கிறார் ..அனைத்தையும் படைத்த தேவன் இவராலும் இவரைக்கொண்டு சர்வமும் உண்டானது...அவர்மூலமாய் அன்றி ஒன்றும் உண்டாக்கப்பட வில்லை..
மனிதர்கள், தூதர்கள், சாத்தான் மீதும் சகல அதிகாரம் படைத்தவர் ஆனால் அவர் குடிக்க வேண்டிய பாத்தீரத்தை தந்தை இவருக்கு ஏற்ப்படுத்தினார்...அதை இவர் முழுமையாக குடித்துக்கொண்டிருக்கிறார்...
நான் குடிக்கும் பாத்திரத்தில் உங்களால் பாணம் பண்ண முடியாது என்று சீஷர்களை பார்த்து சொல்கிறார்...
*ஆனாலும் கூட இன்றும் இவரின் தாகம் தீரவில்லை...*😢😓😥😭😭😭😭
*கடவுளின் சித்தம் நிறைவேற நாம் எப்பொழுது ஒவ்வொருவரும் முடிவெடுக்கிறோமோ... அன்று தான் கடவுளின் தாகம் தீரும்*👌👍👆🏼👂👂🙋♂🙏‼
இறைவனின் மிகப்பெரிய தாகம்👇👇👇

*சிலுவையில் தொங்கி ஆண்டவர் இரட்சிப்பை தந்தார் நாம் கடவுளின் பிள்ளைகளானோம் அதேப்போல இந்த அனைவரையும் கடவுளின் வழி நடத்திட நாம் தாகம் கொள்ள வேண்டும்.*‼👂👂👂👆🏼👆🏼👆🏼👌👌👍👍👍🔥🔥✍✍✍
இந்த சிலுவை வார்த்தை தேவ அன்பை உணர்ந்து கொள்ளவே... நம் இருதயத்தை நொறுக்கவே என்பதை உணர்ந்த அதே வேளை அதேவேளை சிலுவை என்பது நமக்கு ஒடுக்கரீதியான மாற்றத்தை கொண்டு வரவே என்பதை நாம் உணர வேண்டும்.
பால் கிளாடன் என்ற தேவ மனிதர் - இப்படி சொல்லுகிறார் 👇👇
*கிறிஸ்து துன்பத்தை அழிக்க வரவில்லை...அதை விலக்கவும் வரவில்லை... அந்த துன்பத்தை தனது வரவால் நிறைக்க வந்தார்*.என்று
*கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நம் வாழ்க்கையில் தாகம் எப்பொழுதெல்லாம் உண்டாகிறதோ அப்பொழுது கிறிஸ்துவைக்குறித்தும்..கிறிஸ்து எப்படி பிதாவின் சித்தத்தை செய்யவே தாகமாக இருந்தாரோ அதேபோல நமக்கும் பிதாவின் சித்தத்தை செய்ய ஒரு தாகம் இருக்க வேண்டும்.*👍👍🔥🔥👌👌👂🙏🙏🙏‼‼
- சகோ. இம்மானுவேல் @Immanuel Brother VT
[4/15, 1:32 AM] Elango: பழைய ஏற்ப்பாட்டில் பிரதான ஆசாரி ..பாவத்தை மக்களிடமிருந்து சுத்திகரிக்க ஒரு காளையை, அல்லது வெள்ளாட்டு கிடாவை பிடித்து மக்களின் பாவத்தை அதன் தலையில் சுமத்தி அதை போக்காடாக விட்டு விடுவார்கள் - இது கடவுள் மூலம் இஸ்ரவேலருக்கு மோசேயினால் கொடுக்கபட்டது‼
அந்த ஆடு தண்ணீருக்காக அங்குமிங்கும் ஓடி நாவரண்டு தண்ணீரில்லாமல்...இறுதியில் இறந்துபோகும்...
மற்றொரு இளங்காலை அல்லது இளங்கடாவை பாவநிவாரண பலியாக வெட்டி ...இரத்தத்தை மக்கள் மீது தெளித்து மீதி இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்தில் வருடத்திற்க்கு ஒருமுறை பிரதான ஆசாரியன்எடுத்துச் செல்வார்...அந்நேரத்தில் வானத்திலிருந்து கடவுளின் கோப அக்கினி அந்த பலியின் மீது இறங்கி ...அதனை தகனித்துப்போடும்...இது வருடத்திற்க்கு ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சியாகும்.
*பழைய ஏற்ப்பாட்டில் ஆசாரியர்கள் மூலமாக செய்யப்பட்டு வந்த செயல்கள்.... கிறிஸ்துவின் மூலமாக அல்டிமேட் பலியாக நிறைவேற்றப்பட்டது ... இனி பலி தேவையில்லை.* 👌🙏‼👍🔥🔥✍
மனுக்குலத்தின் பாவத்தை சுமந்து போக்காடாக விடப்பட்ட கிறிஸ்து ...தாகத்திற்க்காக தவிக்கின்றார் ...மறுபுறம் கடவுளின் கோபாக்னை அதாவது தன்னுடைய நீதியை பரிசுத்தத்தை காண்பிக்கும் பொருட்டாகவும்...
*மக்கள் மீதும் அவர்களின் பாவத்தின் நிமித்தம் அடக்கி வைத்திருந்த தம்முடைய கோபத்தின் உச்சத்தையும் மொத்தத்தையும் ...அவர் அந்த கோபத்தை செலுத்தினால் இந்த உலகம் தாங்காது என்பதால் ...கல்வாரி சிலுவையில் நமக்காக நம் பாவத்திற்க்காக தொங்கிக்கொண்டிருக்கும் தம்முடைய குமாரனின் மீது கொட்டித்தீர்த்தார்*‼🙏✍👍👌👂👂👂👂😢😢😓😥😥😭😭😭😭
கடவுள் தம்முடைய கோபத்தை உக்கிரத்தை குமாரன் மீது கொட்டித்தீர்த்து ... தம்முடைய நீதியை இயேசுகிறிஸ்துவின் சிலுவையிலே நமக்கு காண்பித்தார் ...
இந்த இக்கட்டான சூழ்நிலையிலே தான் சரீரம், ஆத்துமா, ஆவியில் தாகம் கொண்டவராய் ...இயேசு காணப்பட்டார்.
*ஒரு இரட்சிப்பின் திட்டம் நிறைவேறுகிறது ...அதுவே அவரின் தாகமும் தாக்கமும் கூட ..தாகம் என்பது சரீரம் சார்ந்தது மாத்திரமல்ல உள்ளம் சார்ந்தது மாத்திரமல்ல...கடவுளை சார்ந்தது கடவுளின் செயலை சார்ந்தது ...அனைத்தையும் செய்து முடிக்கிறார் ... வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்கிறார்...தெளிவான வரலாற்று புத்தகம் நமக்கு உண்டு அது இந்த வேதாகமமே‼*👍👍👍👍👌👌👌🙋♂🙋♂‼‼💞💞
இதன் வெளிச்சத்தில் நாம் காணும் போது நாம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.

Post a Comment
0 Comments