Type Here to Get Search Results !

சிலுவையின் ஏழு வார்த்தைகளில் ஆறாவது வார்த்தையின் தியானம்...

[4/15, 11:49 AM] : ✝ *இன்றைய வேத தியானம் - 15/04/2017* ✝
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று ஆறாவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉
இயேசு காடியை வாங்கினபின்பு,

👉 *முடிந்தது*👈 என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.யோவான் 19:30
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/15, 12:14 PM] Elango: பிதாவானவர் இந்த பூமியில் ... ஆண்டவர் இயேசுகிறிஸ்து செய்யும்படியாக கொடுத்த எல்லா வேலையும் செய்து முடிந்தார் என்பதே *முடிந்தது* என்கிறார்.

[4/15, 11:33 AM] Jeyaseelan VT: 🌹இயேசுகிறிஸ்து சிலுவையில் அருளின
ஏழு வார்த்தைகள்🌹
💥ஆறாவது வார்த்தை💥
🌷முடிந்தது…🌷

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். – (யோவான் 19:30). .
முடிந்தது எல்லாம் முடிந்தது பாடுகள் வேதனைகள் முடிந்தது
பிசாசின் போராட்டங்கள் முடிந்தது
மனிதரின் துன்புறுத்தல்கள் முடிந்தது இயேசு உலகில் வந்த நோக்கம் முடிந்தது தேவனின் இரட்சிப்பின் செயல்திட்டம் நிறைவேறியது அல்லேலூயா! அல்லேலூயா! .
 எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்து, நான் என் பிதா என்னை இந்த உலகத்திற்கு அனுப்பினதன் நோக்கத்தை நான் வெற்றிகரமாக முடித்து விட்டேன் என்பதன் அடையாளமாக முடிந்தது என்று வெற்றி முழக்கமிட்டார். நரகத்தை நடுங்க வைத்த ஒரு வார்த்தை உண்டென்றால் அது இந்த வார்த்தையே ‘முடிந்தது’ அல்லேலூயா! . ஆதியாகமத்தில் இருந்து ஸ்திரீயின் வித்து வரக்கூடாது என்பதற்காக ஆபேலை கொன்று, இன்னும் எத்தனையோ பேரை அழித்த சத்துரு, அவர் சிலுவையில் இந்த வார்த்தை சொல்லிவிட கூடாது என்பதற்காக எத்தனையோ தந்திரங்களை செய்த சாத்தான் அவர் அந்த வார்த்தைகளை சொல்லிய மாத்திரத்தில் நடுங்க ஆரம்பித்தான். நரகமே குலுங்க ஆரம்பித்தது.
 மனுக்குலத்தின் மீட்பு ஆரம்பித்து விட்டது. அல்லேலூயா! .
நம்மில் அநேகர் அநேக திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்து அவற்றை முடிக்க முடியாமல் பாதியிலேயே விட்டு விட்டிருக்கிறோம். உதாரணத்திற்கு டயட் செய்ய வேண்டும் என்று ஆரம்பிப்பது, உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆரம்பிப்பது,
இன்றிலிருந்து தினந்தோறும் ஒரு மணி நேரம் ஜெபிப்பேன் என்று ஆரம்பிப்பது என்று எத்தனையோ காரியங்களை ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டு வந்திருக்கிறோம். .
கிறிஸ்து மனுக்குலத்தை இரட்சிக்க தேவனின் திட்டத்தை செயல்படுத்த இந்த உலகத்தில் மானிடனாக பிறந்து வளர்ந்தாலும், எத்தனையோ முறை அவர் அதை பாதியிலேயே நிறுத்தி விட்டு, மீண்டும் பரலோகம் சென்று விட தூண்டப்பட்டாலும், அவற்றை ஒருபுறம் தள்ளிவிட்டு, கடைசிவரை பிதாவின் சித்தத்திற்கு தம்மை அர்ப்பணித்து, ஒரு சிறிய தீர்க்கதரிசனமும் விடாதபடி, எல்லாவற்றையும் பக்குவமாக சரியானபடி, தம் திட்டத்தின்படி அல்ல, தேவ திட்டத்தின்படி செய்து முடித்தார். அதனால் அவர் முடிந்தது என்று வெற்றி முழக்கமிட முடிந்தது. .
பிரதான ஆசாரியர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்ட யூதர்களும் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவுடன் நினைத்திருக்கலாம், அவரை சிலுவையில் அறைந்து விட்டோம், எல்லாம் முடிந்தது என்று. ஆனால் கிறிஸ்துவின் வாயிலிருந்து அந்த வார்த்தை முடிந்தது என்று சொல்லும்வரை எதுவும் முடியவில்லை. . சத்துரு நினைத்திருக்கலாம், என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று இயேசுகிறிஸ்து கதறியபோது, அவ்வளவுதான் கிறிஸ்து முடிந்து விட்டார், அவரை சாகடித்து விட்டோம். எல்லாம் முடிந்தது என்று. ஆனால் கிறிஸ்துவின் வாயிலிருந்து அந்த வார்த்தை முடிந்தது என்று சொல்லும்வரை எதுவும் முடியவில்லை. . கிறிஸ்து மரித்து உயிர்த்து பரலோகத்திற்கு சென்ற போது வெறுங்கையாக போகவில்லை. தம் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட இன்றைக்கு என்னோடு கூட பரதீசிலிருப்பாய் என்று கிறிஸ்து சொன்ன, அந்த மனம் திரும்பிய, இரட்சிக்கப்பட்ட கள்ளனோடு சென்றிருப்பார். அல்லேலூயா! கிறிஸ்துவின் வாயிலிருந்து அந்த வார்த்தை முடிந்தது என்று சொல்லும்வரை எதுவும் முடியவில்லை. . உலக தோற்றத்திற்கு முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய (வெளி 13:8)கிறிஸ்துவின் மூலம் உலக தோற்றத்திற்கு முன்பே பிதாவானவர் தீர்மானித்திருந்த மீட்பின் திட்டம் இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து வந்த வார்த்தையாகிய முடிந்தது என்றதும் மூலம் நிறைவேறிற்று. . உலக மீட்பிற்காக குற்றமில்லாத, மாசற்ற, விலையேறப் பெற்ற கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதன் மூலம் அதன் விலைக்கிரயம் செலுத்தப்பட்டாகி விட்டது.
 சிலுவையில் கிறிஸ்து சிந்தின இரத்தத்தின் மூலம் உலக மீட்பு ஆரம்பித்தாகி விட்டது. பிசாசின் இராஜ்யம் முடிவடைந்து விட்டது. . பிரியமானவர்களே கிறிஸ்து சிலுவையில் சொன்ன இந்த ஆறாம் வார்த்தை மிகவும் முக்கியமானது. பழைய ஏற்பாட்டு விசுவாசிகள், தீர்க்கதரிசிகள் சொன்ன தீர்க்கதரிசனங்கள், உலகத்தின் மீட்பு எல்லாமே அவர் சொன்ன இந்த வார்த்தையில் அடங்கி விட்டது. . உலக மீட்பு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் மீட்பிற்காகத்தான் கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தினார். அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். ஒருவேளை நாம் இரட்சிக்கப்படாமல் இருந்தால், இந்த வேளையில் தானே கிறிஸ்துவின் இரத்தம் சுத்திகரிக்கட்டும். ‘என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்’ (ரோமர் 10:9-10) என்ற வார்த்தையின்படி கிறிஸ்துவை நம் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவோம். . கிறிஸ்து சிந்தின இரத்தத்தை வீணென்று எண்ணாதபடி, அவர் முடிந்ததென்ற சொன்னதை நாம் விலக்காதபடி, வசனத்தின்படி அவரை ஏற்றுக் கொண்டு, அவருக்காக வாழ்வோம். நமக்காக அவர் சிலுவையில் தம் இரத்ததை கிரயமாக செலுத்தி, நம்மை மீட்டுக் கொண்டார்.
ஆமென் அல்லேலூயா!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[4/15, 12:17 PM] Elango: ரோமர் 8:3-4
[3]அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
[4]மாம்சத்தின்படி நடவாமல் *ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.*
*நியாயப்பிரமாணத்தின் நீதியை ஆவியின் படி நடக்கிறவர்களுக்கு அந்த தேவ நீதி பெறும்படியாக தேவனை திருப்தி செய்யும்படியாக... கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும் படியாக ... இயேசு நியாயப்பிரமாணத்தின் முடிவாகயிருக்கிறார்.*👇👇
ரோமர் 10:3-4
[3]எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
[4] *விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.*‼

[4/15, 12:39 PM] Elango: கொலோசெயர் 1:20-21
[20]அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

[21] *முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.*
பாவிகளான நமக்கு பரிசுத்த பிதாவோடு ஒரு உறவை, சமாதானத்தை ஏற்ப்படுத்தினார்...

நம்மை பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும அவருக்கு முன்பாக நிறுத்துவதே சிலுவையில் சிந்தின இரத்தத்தின் நோக்கம்.

[4/15, 1:06 PM] Elango: *இயேசு தொடங்கி வைத்த முடிவு*
✝ நியாயப்பிரமாணத்திற்க்கு முடிவானார்.
✝மனிதர்களின் மரண பயத்திற்க்கு முடிவு கட்டினார்.
✝பிசாசின் கிரியைகளை அழித்து முடிவு கட்டினார்.
✝ மனிதர்களின் பாவத்திற்க்கு தன்னையே பலியாக தந்து,  நம் பாவத்திற்க்கு பாவபரிகாரியாக முடிவாக இருந்தார்.
✝மிருகங்களின் பலிகளுக்கு முடிவு கட்டினார்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:3-4,8-10
[3]அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
[4]அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
[8]நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:
[9]தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
[10] *இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.*

[4/15, 1:10 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 15/04/2017* ✝
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று ஆறாவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉
இயேசு காடியை வாங்கினபின்பு,
👉 *முடிந்தது*👈 என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.யோவான் 19:30
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/15, 2:41 PM] Elango: ஆடு மாடுகள் பலிகளை *முடித்து* வைத்தவர்..

.நம்மை நாமே ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்ற அந்த பலியை தொடங்கிவைத்தார்.
ரோமர் 12:1
[1]அப்படியிருக்க, சகோதரரே, *நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,* தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.

[4/15, 7:02 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 15/04/2017* ✝
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று ஆறாவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉
இயேசு காடியை வாங்கினபின்பு,
👉 *முடிந்தது*👈 என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.யோவான் 19:30
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/15, 10:12 PM] Thomas Udumalai VT: முடிந்தது இந்த வார்த்தையை யூத கலாச்சாரத்தில் யூதர்கள் சொல்லும் தகவல்களை படிக்க ஆர்வமாக இருக்கிறீர்களா..?
உங்களுடைய பதில்.காக காத்திருக்கிறேன்.....

[4/15, 10:15 PM] Thomas Udumalai VT: "முடிந்தது"என்றால் யூத கலாசாரத்தில் திருமணம் ஆன அன்று இரவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் முதல் இரவில் படுக்கையில் ஜெப வஸ்திரத்தின் மீது தான் உறவு கொள்ள வேண்டும்.
மறுநாள் காலையில் ஜெப வஸ்திரத்தை பொது மக்கள் முன்னனையில் அதில் இரத்தக்கறையை காட்ட வேண்டும்.
அந்த ஆண் காட்டும் ஜெப வஸ்திரத்தில் இரத்தக்கறை இல்லையென்றால் அந்த பெண் ஏற்கனவே கண்ணித்தன்மையை இழந்தவள் என்று தீர்மானித்து, அவளை கல் எரிந்து கொன்று விடுவார்கள்.

[4/15, 10:15 PM] Thomas Udumalai VT: ஒருவேளை அந்த ஆணுக்கு அந்த பெண் மீது மிகுந்த அன்பு வைத்து இருந்தால்
அந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற தன்னுடைய சரீரத்தை காயப்படுத்தி வரும் இரத்தத்தை , அந்த ஜெப வஸ்திரத்தின் மீது இரத்தத்தை பூசி
பொது மக்கள் முன்னிலையில் இவள்  என்னுடைய மணவாட்டி கண்ணித் தண்மையுடன் தான் இருந்தால் என்று சொல்லி, எனக்கும் இந்த பெண்ணுக்கும் இடையே எல்லாம் "முடிந்தது"  என்பதற்கு இது உங்களுக்கு அடையாளம் என்று வஸ்திரத்தில் இரத்தக்கறையை காட்டி  தப்புவிப்பான்.
இயேசு இதை தான் அன்று செய்தார்.
கண்ணித்தன்மை இழந்து.,
இயேசு மணவாளனை விட்டுவிட்டு பல விக்கிர தெய்வங்களை மணவாட்டியை கொண்டிருந்த நமக்காக
இயேசு நம்மீது் கொண்டிருந்த அன்பின் நிமித்தமாக, தன்னை காயப்படுத்தி கொண்டு அவருடைய இரத்தத்தினால் நம்மை என்னுடைய மணவாட்டி பரிசுத்தமானவள் என்று முழு உலகத்திற்கும் சிலுவையில் வெளியரங்கமாக காட்டி பிசாசிடம் சொன்னார் எங்களுக்குள் எல்லாம் "முடிந்தது" இவள் பரிசுத்தமானவள் இனி  என்னுடைய மணவாட்டி என்றார்.

[4/15, 10:21 PM] Thomas Udumalai VT: இந்த தகவல்கள் நிச்சயமாக உங்களுக்கு இது புதுமையாக இருந்திருக்கும்.
என்னுடைய கேள்வி., இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிந்ததா...?

[4/15, 10:41 PM] Elango: முடிந்தது என்பதற்க்கு ..நல்ல எடுத்துக்காட்டு ஐயா...👍👌நல்ல விளக்கம் ஐயா🙏🙏🙏
 யூத கலாச்சாரம் அதிகம் தெரிந்தவர்களுக்கு தெரியும் ஐயா.

[4/15, 10:44 PM] Angel-Raja VT: நிச்சயமாக நம்மீது வைத்த அன்பை  காட்ட *முடித்தார்*

[4/16, 8:55 AM] Levi Bensam Pastor VT: உபாகமம் 22:13-21
[13]ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்த பின்பு அவளை வெறுத்து:
[14]நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது *கன்னிமையைக் காணவில்லை*, என்று அவள் மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
[15] *அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ .
[16]அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
[17] *நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்*👉; *என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[18]அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
[19]அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
[20] *அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,*👇 👇 👇 👇 👇 👇 👇
[21]அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, *அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்*; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

[4/16, 9:38 AM] Sam Jebadurai Pastor VT: But i have never heard that Jewish background

[4/16, 9:44 AM] Levi Bensam Pastor VT: Pastor can you explain 🤔

[4/16, 9:45 AM] Sam Jebadurai Pastor VT: Now in a different church Pastor. Once i get free i will explain Iyya

[4/16, 11:04 PM] Sam Jebadurai Pastor VT: 1.  ஜெப வஸ்திரத்தின் பெயர் என்ன?
2. இதற்கு ஏதாவது வசன ஆதாரம் உண்டா?
3. ஜெப வஸ்திரத்தின் அமைப்பு எப்படி இருந்தது?
4. வேதாகமத்தில் யாருமே பயன்படுத்தியதாக இல்லையே ஏன்?

[4/16, 11:05 PM] Sam Jebadurai Pastor VT: பதில் தந்தால் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்

[4/17, 6:41 AM] Sam Jebadurai Pastor VT: எனக்கு இது தவறான தகவலாக தெரிகிறது

[4/17, 6:47 AM] Sam Ramalingam VT: ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது? இது ஒரு அருமையான யூதப்பாரம்பரியப் பின்னனியாலான ஒரு விளக்கம். இதை முழுவதும் விளங்கிக் கொள்ள ஓசியா புத்தகம் முழுவதையும் வாசிக்கவும்.
பாஸ்டர் சாம், மதுரை

[4/17, 6:55 AM] Sam Jebadurai Pastor VT: என்னுடைய கேள்வி ஜெபவஸ்திரம் குறித்தது...

[4/17, 7:09 AM] Sam Jebadurai Pastor VT: இது ஜெபவஸ்திரம் என்று தன்னை எபிரேய பண்டிதர் என்று அழைத்து கொள்ளும் ஒருவர் கற்றுக்கொடுப்பதாக ஒரு கேள்வி... சகோதரி விளக்கம் தரட்டும் 🙂🙏

[4/17, 7:10 AM] Sam Jebadurai Pastor VT: இது தவறாக தெரிகிறது அம்மா. தயவு செய்து ஜெபவஸ்திரம் குறித்து பதில் தரவும்

[4/17, 7:18 AM] Angel-Raja VT: உபாகமம் 22:13-21
[13]ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்த பின்பு அவளை வெறுத்து:
[14]நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது *கன்னிமையைக் காணவில்லை*, என்று அவள் மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
[15] *அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ .
[16]அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
[17] *நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்*👉; *என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[18]அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
[19]அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
[20] *அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,*👇 👇 👇 👇 👇 👇 👇
[21]அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, *அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்*; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

[4/17, 7:18 AM] Angel-Raja VT: 🖕ஜெப வஸ்திரம் என்று வரவில்லை.

[4/17, 7:26 AM] Sam Jebadurai Pastor VT: எபிரேயத்தில் חפּה (கூஃப்பாஃக்) என்ற வார்த்தை மறைவு என்பதற்கு பயன்படுத்த பட்டுள்ளது. இதற்கு கீழ் தான் இன்றைய நவீன யூதத்திருமணங்கள் நடக்கிறது. ஆனால் ஜெப வஸ்திரம் என்பது இதுவல்ல.

[4/17, 7:28 AM] Angel-Raja VT: இந்த வஸ்திரத்தின் பெயர்?????

[4/17, 7:29 AM] Angel-Raja VT: இது தான்
கூஃப்பாஃக் ?????

[4/17, 7:34 AM] Sam Jebadurai Pastor VT: Deuteronomy     22:17 (TBSI)  நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் (בּתוּלים -பெத்துலீம்)
 இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை (שׂמלה-சிம்லாஃக்)
 விரிக்கக்கடவர்கள்.

[4/17, 7:34 AM] Sam Jebadurai Pastor VT: இது பந்தல் போன்ற துணி அமைப்பு

[4/17, 7:36 AM] Prabhu Ratna VT: ஆம் ஜெப வஸ்திரம் படுக்கையில் பயன்படுத்தக்கூடியது அல்ல.
தலித் எனப்படும் சால்வையை யூத ஆண்கள் ஜெபிக்கும்போது தலையில் அணிவார்கள்.
ஆனால் படுக்கையில் விரிப்பது ஜெப வஸ்திரம் அல்ல.
முழுவதும் வெண்மை நிறம் கொண்ட துணி படுக்கையில் விரிக்கப்படும்.

[4/17, 7:37 AM] Sam Jebadurai Pastor VT: தல்லித் என்ற வார்த்தை வேதாகமத்தில் உள்ளதா???

[4/17, 7:40 AM] Prabhu Ratna VT: இல்லை ஐயா. அந்த சால்வை யூதர்கள் இப்போதும் பயன்படுத்துகின்றனர்

[4/17, 7:41 AM] Sam Jebadurai Pastor VT: ஆனால் இது வேதாகமத்தில் பல நிலைகளில் பல காலக்கட்டத்தில் பல மாற்றங்களை அடைந்து உள்ளது.

[4/17, 7:43 AM] Prabhu Ratna VT: எனக்கு தெரிந்த ஆதாரத் தகவலைச் சொன்னேன். ஜெபிக்கும்போது பயன்படுத்தப்படுவது என்பது தெரியும். அந்த சால்வையை நேரில் பார்த்திருக்கிறேன். வெண்மை நிறமாக இருக்கும். நீலநிறம் ஓரத்தில் இருக்கும்.
பெயரில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

[4/17, 7:45 AM] Sam Jebadurai Pastor VT: நான் அதை வைத்திருக்கிறேன். இயேசு கிறிஸ்து காலத்தில் இது பயன்படுத்தபட்டதாக ஏதாவது சான்று உள்ளதா??

[4/17, 7:47 AM] Prabhu Ratna VT: அந்தளவுக்கு ஆதாரம் தெரியவில்லை. ஆனால் இன்று எனக்கு தெரிந்த யூதர்கள் பயன்படுத்துகின்றனர். இப்போது அதன் பெயர் தலித்.

[4/17, 7:47 AM] Sam Jebadurai Pastor VT: தலித் அல்ல தல்லீத் என குறிப்பிடுங்கள். 🙂🙏

[4/17, 7:48 AM] Prabhu Ratna VT: மன்னியுங்கள். செவி வழியாகக் கேட்டது

[4/17, 7:50 AM] Prabhu Ratna VT: ஆனால் யூதர்கள் நிச்சயமாக அதை படுக்கையில் விரிப்பதில்லை. புனிதமாக வைத்திருக்கின்றனர்.

[4/17, 7:51 AM] Thomas Udumalai VT: ஜெப வஸ்திரத்தை பற்றி மிக சுறுக்கமாக,
நீங்கள் புரிந்து கொள்ளும் படி அனுப்புகிறேன்..
ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வளவு நாட்களும் ஜெப வஸ்திரத்தை பற்றி தெரியாமலே இருந்திருக்கிறீருகளே என்பது தான்.
இருப்பினும் நம்முடைய வேத தியான குரூப்.ன் மூலம் அநேகர் எழுதப்பட்ட வேதாகமத்தை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள பயனாயிருக்கிறது.

[4/17, 7:53 AM] Thomas Udumalai VT: தமிழில்
ஜெப வஸ்திரம்
ஆங்கிலத்தில் ப்ரேயர் ஷால்
எபிரேயத்தில்
தல்லீத்

[4/17, 7:54 AM] Sam Jebadurai Pastor VT: 🤣😂 அனுப்புங்கள். யாருக்கு தெரியவில்லை என்று கூறினார்கள்???

[4/17, 7:56 AM] Thomas Udumalai VT: நம்முடைய வேத தியானத்தில்
ஜெப வஸ்திரத்தை தியானிப்பது அநேகருக்கு ப்ரோயஜனமாக இருக்கும்.

[4/17, 8:04 AM] Thomas Udumalai VT: நான் ஒரு சில கேள்விகளை கேட்கும் போது நீங்கள் பதில் தரும் போது ஜெப வஸ்திரத்தை பற்றி ஓர் தெளிவு அடையலாம்.

[4/17, 8:05 AM] Thomas Udumalai VT: சங்கீதம் 91.ன் விளக்கமும் பிண்ணனியும் தெரிந்தவர்கள் பதில் தரலாம்.

[4/17, 8:11 AM] Sam Jebadurai Pastor VT: யூத கலாசாரம் மற்றும் விளக்கங்கள் பல்வேறு இடங்களில் பல விதங்களில் மாறுபடும். கவனமாக கையாள வேண்டியது அவசியம். உங்களுக்கு தெரிந்தவைகளை பதிவிடுங்கள். குழுவினர் நிதானிப்பர்..

[4/17, 8:27 AM] Thomas Udumalai VT: உரையாடல் சங்கீதம்
1 வசனம் தாவீது
2 வசனம் சாலமோன்
3 வசனம் முதல் 13 வரை தாவீது
14 - 16 தேவன்.
தாவீது - தேவன் எப்படிப்பட்டவர் என்பதை விளக்குகிறார் மகனுக்கு
மகன் சாலமோனும் தேவனை அறிக்கையிடுகிறான்
மகன் தேவனை அறிக்கை இட வில்லை என்றால் சங்கீதம் 91.ல் இரண்டு  வசனங்கள் மட்டுமே இருந்திருக்கும்.
தேவனை அறிக்கை இட்டதால் தாவீது தன் மகனுக்கு ஆசிர்வாதங்களை கூறுகிறார்.... 3 முதல் 13 வரை

சாலமோன் கூறிய அறிக்கை.க்கு தேவன் சொல்கிற ஆசிர்வாதம்
14 முதல் 16

இந்த சங்கீதத்தின் பெயர் பார்மிட்ஷ்வா என்பர்

[4/17, 8:29 AM] Thomas Udumalai VT: இதற்கும் ஜெப வஸ்திரத்திற்கும் சம்மந்தம் உண்டு.

[4/17, 8:30 AM] Sam Jebadurai Pastor VT: டாக்டர் கார்ல் கோக் அவர்களின் விளக்கம் இது.

[4/17, 8:31 AM] Sam Jebadurai Pastor VT: இதற்கு பல்வேறு விளக்கங்களும் உள்ளன. தெரியுமா???

[4/17, 8:35 AM] Jeyaseelan VT: எனக்கு யூதர்களின் கலாச்சாரம் தெரியாது....
எபிரேயம் தெரியாது....
நீங்கள் சொன்னது  எனக்கு புதுமையாகத்தான் உள்ளது.....
ஆனால் யூதர்களுக்கு இதைபற்றி தெரியும் தானே???
அவர்கள் இயேசுகிறிஸ்துவை மணவாளனாக ஏற்றுக்கொண்டார்களா??

என்னைப்பொருத்தவரை
*முடிந்தது*என்று இயேசு கிறிஸ்து சொன்ன ஆறாம்வார்த்தையின் பொருள்....👇
*“முடிந்தது”*
(யோவான் 19:30)
கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ (tetelestai) என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நிலத்தையோ, ஒரு விலையேறப்பெற்ற பொருளையோ வாங்கும்போது, அதற்கான முழுக் கிரயமும் செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் காட்ட ‘டெட்டெலெஸ்டாய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி னார்கள். அதாவது, இந்தக் காலத்தில் ரசீதுகளில் ‘PAID’ என்று முத்திரை குத்துவதுபோல, அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.
 ஆகவே இயேசு சிலுவையில் தொங்கின போது ‘முடிந்தது’ என்று சொன்னது நமது பாவ மன்னிப்பிற்கான முழுக் கிரயத்தையும் அவர் செலுத்திவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
‘முடிந்தது’ என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல காரியங்கள் அடங்கியிருக்கின்றன.
(i) சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது.
(ii) பழைய ஏற்பாட்டில் அவரு டைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங் களும் நிறைவேறி முடிந்தது.
(iii) உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது. எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு வந்ததுபோல மனுக் குலத்தின் பாவ வியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது.
(iv) இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தது.
(v) இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.
(vi) மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.
*முடிந்தது எல்லாம் முடிந்தது*
*பாடுகள் வேதனைகள் முடிந்தது*
*பிசாசின் போராட்டங்கள் முடிந்தது*
*மனிதரின் துன்புறுத்தல்கள் முடிந்தத*ு
*இயேசு உலகில் வந்த நோக்கம் முடிந்தது*
*தேவனின் இரட்சிப்பின் செயல்திட்டம் நிறைவேறியது*
*அல்லேலூயா! அல்லேலூயா!*
எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்து, நான் என் பிதா என்னை இந்த உலகத்திற்கு அனுப்பினதன் நோக்கத்தை நான் வெற்றிகரமாக முடித்து விட்டேன் என்பதன் அடையாளமாக முடிந்தது என்று வெற்றி முழக்கமிட்டார்.
நரகத்தை நடுங்க வைத்த ஒரு வார்த்தை உண்டென்றால் அது இந்த வார்த்தையே ‘முடிந்தது’ அல்லேலூயா! .
ஆதியாகமத்தில் இருந்து ஸ்திரீயின் வித்து வரக்கூடாது என்பதற்காக ஆபேலை கொன்று, இன்னும் எத்தனையோ பேரை அழித்த சத்துரு, அவர் சிலுவையில் இந்த வார்த்தை சொல்லிவிட கூடாது என்பதற்காக எத்தனையோ தந்திரங்களை செய்த சாத்தான் அவர் அந்த வார்த்தைகளை சொல்லிய மாத்திரத்தில் நடுங்க ஆரம்பித்தான். நரகமே குலுங்க ஆரம்பித்தது.
*மனுக்குலத்தின் மீட்பு ஆரம்பித்து விட்டது. அல்லேலூயா! .*

[4/17, 8:39 AM] Sam Jebadurai Pastor VT: யூதப் பின்ணனியத்தை படிப்பது வேதத்தை இன்னும் புரிந்து கொள்ளவும், பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து எப்படியெல்லாம் தீர்க்கதரிசனமாக முன் குறிக்கப்பட்டார் என்பதை அறிந்து கொள்ளவே..இன்னும் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட பல காரியங்கள் நடந்து முடியவில்லை என்பதையும் மறந்து விடக்கூடாது. முடிந்தது என்ற வார்த்தை அடுத்து புதிய துவக்கம் என்பதை குறிக்கிறது. அது இன்னும் முடியவில்லை

[4/17, 9:46 AM] Thomas - Brunei VT: This explanation has to be substantiated with scriptural references...

[4/17, 9:57 AM] Sam Jebadurai Pastor VT: தவறான தகவல்கள்

[4/17, 9:58 AM] Thomas - Brunei VT: A Jewish cultural practice cannot be taken as the basis for a doctrinal truth in the bible...

[4/17, 9:59 AM] Thomas - Brunei VT: Doctrinal truth transcends cultures and races...

[4/17, 10:05 AM] Thomas - Brunei VT: When Jesus said it is finished...
The very requirements for the salvation of the mankind was Tetelestai... Completely and perfectly fulfilled by Jesus by His sacrifice..

[4/17, 12:52 PM] Thomas Udumalai VT: உபாகமம் 22:13-21
[13]ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின c அவளிடத்தில் பிரவேசித்த பின்பு அவளை வெறுத்து:
[14]நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது *கன்னிமையைக் காணவில்லை*, என்று அவள் மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
[15] *அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ .
[16]அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
[17] *நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்*👉; *என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[18]அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
[19]அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
[20] *அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,*👇 👇 👇 👇 👇 👇 👇
[21]அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, *அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்*; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

[4/17, 3:14 PM] Thomas - Brunei VT: Taking these verses and linking them to Jesus is not proper.

[4/17, 3:15 PM] Sam Jebadurai Pastor VT: கற்பனை கதைகளை உட்புகுத்தி உள்ளனர்

[4/17, 3:16 PM] Prakash Tirupur VT: Yes

[4/17, 3:17 PM] Thomas - Brunei VT: Church is compared to a  Chaste virgin. 2 Corinthians 11:2

[4/18, 6:59 AM] Thomas Udumalai VT: ஜெப வஸ்திரம்
           பற்றிய தகவல்கள்

1.  நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி,
ஓரத்தின்  இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.
எண்ணாகமம் 15 :38

2.  தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள், தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
மத்தேயு 23 :5

3.  நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். மத்தேயு 9 :21

4.  பிள்ளையின் கையைப் பிடித்து, தலீத்தாகூமி என்றார், அதற்கு,சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.
மாற்கு 5 :41
5.   அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள். தானும் அந்தத்தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டு வந்தான். அப்போஸ்தலர் 18 :3

1. ஜெப வஸ்திரம் தேவன் சொல்லிய(அமைப்பில்)படி  மனிதர்களால் உருவாக்கப்பட்டது. எண்ணாகமம் 15 : 38
2. அந்த வஸ்திரத்தில் தொங்கல்கள் முக்கியமானது, ஏனெனில் அதில் தேவனுடைய கட்டளைகளை அந்த தொங்கல்கள் குறிக்கும்.
 இதை ஒரு சிலர் நாங்கள் மிகவும் தேவனுடைய கட்டளைக்களுக்கு கீழ் படிபவர்கள், பரிசுத்தவான்கள் என்பதை மற்றவர்களுக்கு காண்பிக்கும்படி தொங்கல்களை பெரிதாக்கி கொண்டார்கள்.
மத்தேயு 23 :5

3.  பெரும்பாடுள்ள ஸ்திரி இவரே தேவனுடைய கட்டளைக்கு கீழ் படிந்து பரிசுத்தமாக வாழ்கிறார்.
இவரின் தொங்கல்கல்கள் பரிசுத்தமானது., அதை தொடும் போது நான் சுகமாவேன் என தொட்டாள்.
வல்லமை அந்த தொங்கலில் இல்லை,
தொங்கல்கள் தேவ கட்டளைகளை நினைவு படுத்தல்,
தேவனுடைய கட்டளைகளின் படி யார் வாழ்கிறார்களோ அவர்களிடமே தேவ வல்லமை உண்டு.
மத்தேயு 9 : 21

4. தலீத்தாகூமி என்றார்
இந்த சிறிய கூடாரம் தேவனுடைய கட்டளைகள் இந்த பெண்ணுக்கு மேலாக இருப்பதை எடுங்கள் என்றார்.

5. பவுல் கூடாரத்தொழில் செய்தான்.
தல் என்றால் சிறிய - லீத் கூடாரம் தல்லீத் என்றால் சிறிய கூடாரம் என்பது அர்த்தம்...
ஜெப வஸ்திரம்...

* வேதாகமத்தில் நீங்கள் வாசித்திருப்பீர்கள் :
நீங்கள் ஜெபிக்கும் போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து அந்த அறைவீடு - ஜெப வஸ்திரம் தான்.

மற்றும்
1 சாமுவேல் 24 :10-11.ஜ
வாசித்தீர்கள் என்றால் தாவீது சவுலின் வஸ்திர தொங்கலை அறுத்துவிட்டேன் என்பார். அதன் அர்த்தம் இனி சவுல் உனக்கும் தொங்கல்கள் தேவ கட்டளைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை சவுலுக்கு தெரிவிக்கும் படி செய்தார்.

மற்றும் ஒரு மனிதன் இறந்த பின் மட்டுமே ஜெப வஸ்திர தொங்கல்களை துண்டிப்பார்.
தாவிது  சவுலின் தொங்கல்களை துண்டித்ததின் காரணம்  தேவனுடைய பார்வையில் நீ மரித்து விட்டாய் என்பதை தெரிவிக்கவே...
மற்றும் சங்கீதம் 91.ல்  அவர் செட்டைகளின் அடைக்கலம் புகுவாய் என்பதற்கு - ஜெப வஸ்திரம் செட்டையை போலதான் இருக்கும்.,
கர்த்தருடைய கட்டளைகளை நினைவு படுத்தும் (ஜெப வஸ்திரம்) கீழ் படிய வேண்டும் என சொல்கிறது..

இப்படி ஜெப வஸ்திரம் தொங்கல்கள் பற்றி அநேக காரியங்களை அறிந்திருந்ததால் முடிந்தது அந்த வார்த்தையில் சொல்லப்பட்ட வஸ்திரமும் ஜெப வஸ்திரமாக தான் இருக்கும் என நினைத்தேன்...
நான் தவறான பதிவை அனுப்பியிருந்தால் மன்னிக்கவும்...

ஆனால்., அதில் குறிப்பிடப்பட்ட மற்ற விஷயங்கள் சரி...
எபிரேய எழுத்தில்
(டவ் - ת ) இருபத்தி இரண்டாம் எழுத்து.
இந்த எழுத்தின் விளக்கம் meaning மரணம், சிலுவை,  இறுதியானது, நிறைவானது.
இயேசுகிறிஸ்து சிலுவையில் மரணத்தின் மூலமாக பலிகளில் இறுதியாகவும் எல்லா பாவங்களுக்கும் நிறைவாகவும்
இருந்தார், என்பதை குறிப்பிடுகிறது.
வேதாகமத்தில் சங்கீதம் 119.ல் எபிரேய எழுத்துக்கள் இருக்கிறது

[4/18, 9:29 AM] Sam Jebadurai Pastor VT: கூடாரம் பண்ணுகிறதை சரியாக விளக்க இயலுமா??
தலித்தாகூமி என்பதற்கு நீங்கள் கூறிய அர்த்தம் என்று எபிரேயத்தின் அடிப்படையில் விளக்க இயலுமா??
இவை இரண்டுமே சர்ச்சைக்குரிய கருத்துகள். பொதுத்தளத்தில் கேள்விபட்ட அனைத்தையும் உண்மை என்று எண்ணி பதிவிட வேண்டாம்

Post a Comment

0 Comments