Type Here to Get Search Results !

சிலுவையின் ஏழு வார்த்தைகளில் நான்காவது வார்த்தையின் தியானம்...

[4/13, 7:59 AM] : 👑 *இன்றைய வேத தியானம் - 13/04/2017* 👑
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று நான்காவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉

😭 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு *என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்* என்று அர்த்தமாம். மத்தேயு 27:46😭

🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/13, 8:19 AM] Jeyaseelan VT: 🌹இயேசுகிறிஸ்து சிலுவையில் அருளின
ஏழு வார்த்தைகள்🌹
💥நான்காவது வார்த்தை💥
🌷ஏலி! ஏலி! லாமா சபக்தானி…🌷
ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். – (மத்தேயு 27:45-46).
நாம் தொடர்ந்து இயேசுகிறிஸ்துவின் சிலுவை வார்த்தைகளை குறித்து தியானித்து வருகிறோம். இன்றைய தினம் நான்காவது வார்த்தையாகிய : ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்ற வார்த்தையை குறித்து தியானிக்க போகிறோம்.
இந்த வார்த்தை எல்லா வேத பண்டிதர்களாலும் மிகவும் துக்கம் நிறைந்த வார்த்தை என்று கருதப்படுகிறது. இயேசுகிறிஸ்து அந்த நேரத்தில் நண்பர்கள், சீஷர்கள், மனிதர்கள் எல்லாராலும் கைவிடப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, தனிமையாக, வேதனை நிறைந்தவராக, பாடுகள் அனுபவித்தவராக இருந்தபோது, பிதாவாகிய தேவனும் அவரை கைவிட்டபோது, இருதயம் உடைந்தவராக, எல்லாரும் என்னை விட்டுவிட்டார்கள் நீங்களும் என்னை கைவிட்டீர்களே என்று கதறி சொன்ன வார்த்தைதான் இந்த ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்ற வார்த்தை. அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
கர்த்தர் எல்லாவற்றையும் சிருஷ்டித்த வேளையில், ‘நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்தது, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்’ (நீதிமொழிகள் 8:30) என்று கிறிஸ்து பிதாவின் செல்லப்பிள்ளையாக இருந்ததை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. பின் இந்த உலகத்தில் மானிடனாக பிறந்து முப்பத்து மூன்றறை வருடங்கள் பரலோகத்தில் பிதாவின் பிரசன்னத்தை விட்டு, இந்த உலகத்தில் வாழ்ந்த போதிலும், எப்போதும் பிதாவோடு உறவாடி மகிழ்ந்தவர் கிறிஸ்து. ‘என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை’ (யோவான் 8:29) என்று பிதாவோடு எப்போதும், அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தார்.
பிதாவின் பிரசன்னத்தில் எப்போதும் நிறைந்திருந்த இயேசுகிறிஸ்துவின் மேல் உலகத்தின் பாவங்கள் அத்தனையும் சுமத்தப்பட்ட போது, தேவ பிரசன்னம் அவரை விட்டு மறைந்தது. பாவத்தின் சின்னமாக அந்த கோர குரிசில் பரிதாபமாக, உள்ளம் உடைந்தவராக, பிதாவின் பிரசன்னம் தடைபட்டவராக தொங்கினார். பாவமறியாத அவர் நமக்காக பாவமானார். ‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்’ (2கொரிந்தியர் 5:21). நாம் அடைய வேண்டிய ஆக்கினை அவர் மேல் வந்தது. நாம் பெற வேண்டிய தண்டனை அவர் மேல் சுமத்தப்பட்டது.
இயேசுகிறிஸ்து ஆறுமணிநேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்து கொண்டார். ஆறாம் மணி நேர முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடி கொண்டது.
அந்த நேரத்தில் பிதாவானவர் கிறிஸ்துவை நோக்கினபோது, ‘இவர் என்னுடைய நேச குமாரன், இவர் மேல் பிரியமாயிருக்கிறேன’ என்ற வார்த்தை அல்ல, மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து நமக்காக சாபமாக்கப்பட்டபடியினால், பாவத்தை பார்க்க மாட்டாத சுத்த கண்ணர் தம் முகத்தை அவரிடமிருந்து மறைத்து கொண்டார்.
ஒரு நிமிடம் அல்ல, ஒரு மணி நேரம் அல்ல, மூன்று மணி நேரம் அவருடைய முகத்தை, பிரசன்னத்தை பிதா மறைத்து கொண்டார். எத்தனை சவுக்கடிகள், நிந்தனைகள், எகத்தாளமான பேச்சுகள், எல்லாவற்றையும் தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பு வாய் திறவாதிருக்கிற ஆட்டைப் போல அமைதியாக இருந்த கிறிஸ்து, பிதாவின் பிரசன்னம் மறைந்தபோது, அவரால் அதை தாங்க முடியவில்லை. மனம் பதறினவராக, என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என கதறினார்.
உலகத்தின் பாவத்தை சுமந்த தீர்க்கிற தேவ ஆட்டுகுட்டியாக பாவமறியாத கிறிஸ்து நமக்காக பாவமாகி, கோர குரிசில் தேவ பிரசன்னத்தையும், உறவையும், பிதாவின் நேசத்தையும் இழந்தவராக தொங்கினார்.
ஆனால் உலகத்தார் கிறிஸ்து செய்த தியாகத்தை உணராதவர்களாக, அவருடைய பாடுகளை, வேதனைகளை அறியாதவர்களாக தங்களுக்கு பாவ விமோசனத்திற்காக எதையெல்லாமோ தேடி, எங்கெல்லாமோ ஓடி தங்கள் கிரியைகளினாலும், செயல்களினாலும் பாவ மன்னிப்பு உண்டு என்று அலைகிறார்கள். உலகில் பிறந்த ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சிலுவை தியாகத்தை, சிலுவையில் அவர் பட்ட பாடுகளை அறிந்து நமக்காகவே அவற்றை சகித்தார் என்பதை ஏற்றுக் கொண்டால் எத்தனை நலமாயிருக்கும்!
பாவத்தின் கோரம் மிகவும் கடுமையானது. கிறிஸ்து இல்லாதபடி நம்பிக்கை அற்ற கல்லறை செல்லும் ஆத்துமாவின் ஆதங்கம், கடைசி நாளில் இயேசு கதறினபடி, என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றபடிதான் இருக்கும். பாவத்தின் தண்டனை கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டபோது, தம்முடைய ஒரே பேறான குமாரன் என்றும் பாராமல், தம் முகத்தை பிதாவானவர் மறைத்து கொண்டாரே! பாவத்தோடு நாம் நித்தியத்திற்கு செல்லுவோமானால், நம் நிலைமை எப்படியாயிருக்கும் என்று யோசித்து பார்ப்போமா?
கிறிஸ்து இல்லாத நித்தியம் கொடுமையானது, வேதனை நிறைந்தது, அங்கு நம்முடைய நினைவுகளும், செய்கைகளும் அழிவதில்லை. நித்திய நித்திய அக்கினியே அதன் பங்கு. நமக்கு கொடுக்ப்பட்டிருக்கும் இந்த கிருபையின் நாட்களில், கிறிஸ்துவின் பாடுகள் நமக்காக என்று உணர்ந்து கர்த்தரிடம் வந்து விடுவோமா? கிறிஸ்து சிந்திய இரத்தம் நம் பாவம் போக்கவே என்று உணர்ந்து அவரை ஏற்றுக் கொள்வோமா? கர்த்தருடைய கோபாக்கினை நாளில் நம்முடைய எந்த நியாயமும், எந்த நற்கிரியைகளும் நம்மை காப்பாற்றாது. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே நம் பாவத்தை கழுவி சுத்திகரிக்கும். அந்த அன்பை உணர்ந்தவர்களாக கர்த்தரை பற்றி கொள்வோம். நித்திய நித்தியமாய் கர்த்தருக்குள் வாழ்வோம்,
 ஆமென் அல்லேலூயா!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[4/13, 8:33 AM] Thomas Udumalai VT: தேவன் தீமையை பாராத சுத்த கண்ணர் எனபது இயேசு.க்கு தெரியுமா? தெரியாதா?
பதில்........
சிலுவையில் மரிக்க போகிறேன் என்பது இயேசு.க்கு தெரியுமா? தெரியாதா?
பதில்........
இயேசு பூமிக்கு வந்த நோக்கம் அதிசயம் அற்புதம் செய்ய மட்டுமே அல்ல... நோக்கமே சிலுவையில் மரிக்க வேண்டும் என்பது தான்....

அப்புறம் ஏன் இயேசு என்னை கை விட்டீர் என கேட்க போகிறார்.?
அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன.?

[4/13, 9:15 AM] Jeyachandren Isaac VT: 100% மனிதனாக மனத சரீரத்தில் இருந்து,தெய்வத்துவத்தையும், வல்லமையையும் சற்றும் பயன்படுத்தாமல் தம்மை வெறுமையாக்கினார் என்ற காரணத்தை தவிர வேற ஒன்றும் சொல்லமுடியாதே....எனவேதான் அந்த வியாகுலம் மற்றும் அங்கலாயப்பு

[4/13, 9:15 AM] Jeyachandren Isaac VT: 👆மனித சரீரத்தில்

[4/13, 9:16 AM] Elango: யோவான் 8:29
[29]என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், *பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்.*
சிலுவையின் முடிவுபரியந்தம் பிதாவுக்கு பிரியமானதையே இயேசு செய்தார்.‼
சங்கீதம் 22:1
[1] *என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?* எனக்கு இரட்ச்சியாமலும் செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
*வேத வசனம் நிறைவேறத்தக்கதாகவே இயேசு அப்படிப்பட்ட வார்த்தையை சொன்னார்.*

[4/13, 9:23 AM] Elango: மத்தேயு 5:17
[17] *நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.*
சங்கீதம் 22 - இயேசுவைக்குறித்த தீர்க்கதரிசனம்...   கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைக் குறித்து ஆவியானவர் தீர்க்கதரிசனமாக தாவீதால் எழுத வைத்தது.👇👇👇
சங்கீதம் 22:1,7-8,12-21
[1] *என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு இரட்ச்சியாமலும் செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?*

[7] *என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:*
[8] *கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.*

[12] *அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.*
[13]பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.
[14]தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டன, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
[15]என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.
[16] *நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கினறன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.*🗡🗡🗡🗡❣❣❣❣❣❣

[17] *என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.*
[18] *என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.‼👆🏼👆🏼👆🏼*

[19]ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

[20]என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்க்கும் தப்புவியும்.

[21]என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் பதிலருளினீர்.

[4/13, 9:48 AM] Elango: *கிறிஸ்து பாடுபட வேண்டுமென்றும், மூப்பரால் தள்ளப்பட வேண்டுமென்றும் ஆரம்பத்திலிருந்து ஆண்டவர் சொன்னதை சீஷர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை*👇👇
லூக்கா 24:22-27
[22]ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
[23]அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள்.
[24]அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
[25]அப்பொழுது அவர் *அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,*😰😳😮😧
[26] *கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,👆🏼🤔🤔🤔*
[27] *மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.*🌟🌟🌟✨✨✨💔💔💔
[4/13, 10:10 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 2:12-18
[12]உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்;
[13]நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்;, *இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.*👇👇👇👇👇👇
[14] *ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்;👉👉👉👉👉👉👉👉👉 *மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்*☝☝☝☝☝👇👇👇👇👇👇,
[15] *ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும்*☝ ☝ 👇👇👇👇 *விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.*🙏🙏🙏🙏🙏🙏
[16]ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.
[17]அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.
[18] *ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, 👉 👉 👉 அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.*

[4/13, 10:10 AM] Elango: மரணபரியந்தம் தன்னைத்தானே தாழ்த்தி... பிதாவின் வலதுபரிசம் வரைக்கும் உயர்த்தப்பட்டார்.
ஏசாயா 54:7-8
[7] *இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்;😰😰😭😭💔💔💔 ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.*💞💞🙏🙏🙏🙏❤❤❤
[8] *அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; 🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்* என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
*நீதியினிமித்தம் தேவனால் கைவிடப்பட்ட எவரும்... இரட்டிப்பான ஆசீர்வாதத்தை சுதந்தரிப்பவர் என்பதற்க்கு அநேக தேவ மனிதர்களின் வாழ்க்கை ஆதாரமாகயிருக்கிறது👇👇👇*

👉 சிலுவையில் கைவிடப்பட்டு, பிதாவின் வலதுபக்கம் வரை உயர்த்தப்பட்டார்.
👉 யோசேப்பு அவன் தேவ சித்தத்தின் படி சகோதரர்களால் கைவிடப்பட்டு... எகிப்தில் மந்திரியாக உயர்த்தப்பட்டார்.
👉 யோபு தேவனால் கைவிடப்பட்ட நிலைமையில்  இருந்தாலும் தேவன் அவரை இரட்டிப்பாக ஆசீர்வதித்தார்.
👉 பவுல் தன் கடைசி நேரத்தில் எல்லோரும் என்னை கைவிட்டார்கள் அந்த பழி அவர்கள் மேல் சுமராதிப்பதாக என்கின்றார்... ஆனால் நித்திய ஜீவனை காத்துக்கொண்டேன் என்று முழக்கமிடுகிறார்.
*நீங்களும் தேவனால் நீதியினிமித்தம் கைவிடப்பட்டதுண்டா? இரட்டிப்பான ஆசீர்வாதத்திற்க்கு நீங்களே சுதந்திரவாளி✨🙏🌟💝💖💖💖💖*

[4/13, 11:08 AM] Levi Bensam Pastor VT: எபி 2:6-10
[6]ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
[7] *அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;* மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.
[8]சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.
[9]என்றாலும், *தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.*
[10]ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் *அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.*

[4/13, 11:14 AM] Levi Bensam Pastor VT: 1 தீமோத்தேயு 3:16
[16]அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. *தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,* ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்☝☝☝☝☝.

[4/13, 11:15 AM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 3:15
[15]உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; *அவர் உன் தலையை நசுக்குவார்,* நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

[4/13, 11:17 AM] Levi Bensam Pastor VT: ஏசாயா 52:13-15
[13]இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
[14], *மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.*🤔🤔🤔🤔🤔😭😭😭
[15]அப்படியே, அவர் அநேகம் ஜாதிகளின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

[4/13, 11:25 AM] Levi Bensam Pastor VT: ஏசாயா 53:2-6
[2]இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்;, *அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது*.
😭😭😭😭😭😭😭😭😭[3] *அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.*😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👇👇👇
[4] *மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.*☝☝☝☝☝☝
[5] *நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.*
[6]நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; *கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 *மந்திரி இரதத்தை நிறுத்தச்சொன்னான் ஏன்*❓👉இந்த ஏசாயா தீர்க்கதரிச வாசித்து கொண்டிருந்த மந்திரிக்கே எவ்வளவு பாக்கியம் என்றால், நமக்கு எப்படி ❓❓❓

[4/13, 11:29 AM] Frederick Thompson VT: சிந்திக்கவே கேள்வி வாக்குவாதம் செய்ய அல்ல

[4/13, 11:29 AM] Frederick Thompson VT: உலகத்தில் வாழ்ந்த போது மற்றவர்களின் பாவங்களை மன்னித்த கிறிஸ்து ஏன் சிலுவையில் பிதாவே இவர்களை மன்னியும் என்றார்.

[4/13, 11:51 AM] Ebi Kannan Pastor VT: 1.அவர்கள்  தேவகுமாரனை சிலுவையில் அறைகிறார்கள் அதான்
2. முன் மாதிரியாக
3. தம்முடைய  பிதாவை  அறிக்கை  செய்ய

[4/13, 12:02 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 3:14-15
[14]யோவான் அவருக்குத் தடை செய்து: *நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.*❓❓❓❓❓👇👇👇
[15]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: *இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது* என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

[4/13, 12:09 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 2:48-52
[48]தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, *உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.*❓❓❓❓❓❓❓
[49]அதற்கு அவர்:👉 *நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டிதென்று அறியீர்களா*❓❓❓❓❓❓❓❓❓ என்றார்.
[50]தங்களுக்கு *அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.*
[51]பின்பு அவர் *அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.*🙏🙏☝☝☝☝🙏🙏 அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
[52]இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

[4/13, 12:14 PM] Levi Bensam Pastor VT: யோவான் 19:9-11
[9]மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். *அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.*
[10]அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? *உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.*😂😂😂😂😂😂😂
[11] *இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது;*👍👍👍👍👍👍👍 ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.

[4/13, 12:17 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 27:19
[19]அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: *நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்.*😀😀😀

[4/13, 12:25 PM] Elango: குமாரன் ஏற்க்கனவே அவர்களை மன்னித்திருந்தார், நியாயத்தீர்ப்பின் அதிகாரம் முழுவதும் பிதாவிடமிருந்து குமாரனுக்கு தரப்பட்டாலும் இப்போது குமாரனையே குற்றவாளியாக அவர்கள் தீர்க்க நிற்கும் இந்த நேரத்தில் பிதாவை நோக்கி ஆண்டவர் இயேசு கதறுகிறார் *பிதாவே இவர்களை மன்னியும்* என்று.
*தேவன் அன்பாகவே இருக்கிறார், அவரை குத்தினார்கள் அந்த நேரத்திலும் அவரே பரிந்து பேசுகிறவராக இருந்தார்.❤❤🙏🙏🙏🙏🙏🙏🗣🗣🗣🗣*

ஏசாயா 53:12
[12]அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, *அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.*
*உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் என்று மலை பிரசங்கத்தில் சொன்னவர், அவரே அவர் எதிரிகளை மன்னியாமல் இருப்பாரா?* இயேசு மன்னித்தார் அவர்களை ... அதனால்தான் பிதாவிடம் பரிந்து பேசுகிறார்.😭😭😭😭😭
1 யோவான் 2:1
[1]என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; *ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.*

[4/13, 12:27 PM] Elango: 👑 *இன்றைய வேத தியானம் - 13/04/2017* 👑
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று நான்காவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉
😭 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு *என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்* என்று அர்த்தமாம். மத்தேயு 27:46😭
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/13, 1:13 PM] Elango: ஆமென்
ரோமர் 8:36-37
[36] *கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?*
[37] *இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.*💪💪💪🙋♂🙋♂👑👑👑👑

[4/13, 5:00 PM] Thomas Udumalai VT: இன்றைய வேத தியானம் :
இயேசு கிறிஸ்து சிலுவையில் பேசிய வார்த்தைகளில்  நாம் சொல்லும் நான்காவது வார்த்தையை.,
இன்று நான் இந்த குரூப்.ல் பகிர்ந்து கொள்கிறேன் இந்த காரியங்களை இதுவரையில் நீங்கள் இப்படி தியானித்தையோ விளக்கங்களையோ கேட்டிருக்க மாடடீர்கள்.
ஆனால்., இதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை.
நான் கேட்கும் ஒவ்வொரு எளிமையான கேள்விகளுக்கும் பதில் தெரிந்த அனைவரும் பதில் தரலாம்...
அப்படி பதில் தரும் போது., இந்த வேத தியானம் குரூப்.ல் உள்ள அனைவருக்கும் இந்த நான்காம் வார்த்தையை தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்பதை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும்....

கேள்விகளை கேட்கலாமா உங்கள் அனுமதியுடன்......

[4/13, 5:02 PM] Immanuel Brother VT: நிச்சயமாக கேளுங்கள் சகோ.👏👏👏👏👌

[4/13, 5:10 PM] Thomas Udumalai VT: முதல் கேள்வி
நான்காம் வார்த்தை : ஏலி ஏலி லாமா சபக்தானி இந்த வார்த்தை எந்த மொழி..?

[4/13, 5:11 PM] Immanuel Brother VT: எபிரேயம்

[4/13, 5:12 PM] Thomas Udumalai VT: சரிதான். 👏
ஆனால்.,
அந்த வார்த்தை முழுமையுமே எபிரேய மொழியா.?

[4/13, 5:15 PM] Jeyachandren Isaac VT: aramic

[4/13, 5:16 PM] Jeyachandren Isaac VT: 👆not hebrew

[4/13, 5:16 PM] Immanuel Brother VT: அரமேய கலப்பு இருக்கலாம்.

[4/13, 5:17 PM] Immanuel Brother VT: மாற்குவில் Aramic மொழி முழுமை என நினைக்கிறேன்.

[4/13, 5:18 PM] Thomas Udumalai VT: இந்த வார்த்தையில்
சபக்தா - மட்டும் எபிரேய மொழி கிடையாது...
இன்று நாம் பேசும் தமிழில் ( Tv , Bike , Car) ஆங்கிலம் கலந்து இருப்பது போல அன்று அரமிக் கலந்து காணப்பட்டது...

[4/13, 5:19 PM] Jeyanti Pastor VT: அவர் பேசியது அரேமிக் மொழிதானே பாஸ்டர்

[4/13, 5:19 PM] Thomas Udumalai VT: இல்லை எபிரேயம்.

[4/13, 5:20 PM] Thomas Udumalai VT: இரண்டாவது கேள்வி
ஏல் என்றால் என்ன ?
ஏலி என்றால் என்ன.?

[4/13, 5:22 PM] Ebi Kannan Pastor VT: அரமேயம் என்பது  அரபிக் அல்ல

[4/13, 5:23 PM] Jeyanti Pastor VT: But Jesus was speaking Aramic only

[4/13, 5:23 PM] Jeyanti Pastor VT: Pastor

[4/13, 5:35 PM] Thomas Udumalai VT: இரண்டாவது கேள்வி
ஏல் என்றால் என்ன ?
ஏலி என்றால் என்ன.?

[4/13, 5:35 PM] Thomas Udumalai VT: ஏல் - என்று சொன்னால் தேவன்..

ஏலி என்று சொன்னால்
என் தேவன்...

இந்த வார்த்தை இந்த இடத்தில் மட்டும் வருகிறதா?
வேதாகமத்தில் வேறு எங்கேயாவது வருகிறதா.?

[4/13, 5:49 PM] Immanuel Brother VT: ப.ஏ.பகுதியில் பல இடங்களில் ஏல், ஏலி என்ற வார்த்தை காணப்படுகிறது. அதே போல சங்கீதங்கள் முழுமையின் கூட

[4/13, 5:52 PM] Thomas Udumalai VT: இன்று நாம் பேசும் தமிழ்மொழியில் ஆங்கிலம் கலந்து விட்டது போல.,
நேற்று முன் தினம் இரயிலில்.,
நேற்று பஸ்ஸில்
இன்று காரிலும்
நாளை பைக்கிலும் என்னுடைய பிரயாணம் இருக்கிறது.
இந்த வார்த்தை தமிழா?
ஆங்கிலமா?

[4/13, 5:56 PM] Thomas Udumalai VT: பதில் சரி.
ஆனால் ப.ஏற்பாட்டின்
வசன ஆதாரங்கள்
( ஏல் - ஏலி ) எங்கே வருகிறது.?
[4/13, 5:57 PM] Sam Ramalingam VT: இரயில் - தொடர்வண்டி
பஸ் - பேருந்து
கார் - மகிழ்வுந்து
பைக் - இரு சக்கர வாகனம்

[4/13, 6:10 PM] Ebi Kannan Pastor VT: Never  but Hebrew  perfectly

[4/13, 6:10 PM] Thomas Udumalai VT: நம்முடைய சமுதாயத்தில் இன்று படிப்பறிவற்றவர்களும் பேசும் போது எல்லோரும் புகை வண்டிக்கு செல்கிறேன்,
மகிழ்வுந்துக்கு செல்கிறேன் என்று பேசுகிறார்களா?
அல்லது
பஸ் க்கு - கார் க்கு போகிறேன் என்று சொல்கிறார்களா?
இப்படி தான் அன்று எபிரேய மொழியோடு
அரமிக் மொழியும் கலந்து பேசினார்கள்....

[4/13, 6:12 PM] Ebi Kannan Pastor VT: யோவான் 7:14-15
[14]பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார்.
[15]அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.

[4/13, 6:12 PM] Immanuel Brother VT: இன்று English போல அன்று Hebrew World Language.. JC. knows Hebrew r not ?

[4/13, 6:13 PM] Ebi Kannan Pastor VT: தெளிவாக  எபிரேயம் பேசினார்

[4/13, 6:14 PM] Jeyachandren Isaac VT: HE is GOD and above all languages.....
HE is the ONE who created the languages.....

[4/13, 6:15 PM] Jeyachandren Isaac VT: unneccesary to restrict HIM to a certain languages

[4/13, 6:15 PM] Ebi Kannan Pastor VT: இயேசு  அரமேயம் மாத்திரமே பேசினார் என்ற கருத்து  என்பது  ஆண்டவர்  இயேசுவின்  மாண்பை  மட்டுப் படுத்துவதாகும்

[4/13, 6:18 PM] Ebi Kannan Pastor VT: எபிரேயம் பேசுகிறவர்களே கற்றுத்  தேறினவர்கள்  என்பதுதான் யூதர்களின் நிலையாகும்

[4/13, 6:20 PM] Thomas Udumalai VT: பதில் சரி.
ஆனால் ப.ஏற்பாட்டின்
வசன ஆதாரங்கள்
( ஏல் - ஏலி ) எங்கே வருகிறது.?

[4/13, 6:20 PM] Jeyachandren Isaac VT: 👆 Today also some people are saying like this 😊😊

[4/13, 6:20 PM] Thomas Udumalai VT: பதில் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்...

[4/13, 6:21 PM] Ebi Kannan Pastor VT: முக்கியமாக வேதபாரகர்கள்
ஆசாரியர்கள்
பரிசேயர்கள் மத்தியில்  எபிரேயத்தில் பேசுபவர்களே ரபி  என்றும்  ஆண்டவன் என்றும்  அழைக்கப்பட  முடியும்

[4/13, 6:21 PM] Ebi Kannan Pastor VT: தவறான  புரிதலேக் காரணம்

[4/13, 6:22 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 8:19
[19]அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

[4/13, 6:22 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 12:38
[38]அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.

[4/13, 6:23 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 19:16
[16]அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.

[4/13, 6:23 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 22:36-46
[36]போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
[37]இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
[38]இது முதலாம் பிரதான கற்பனை.
[39]இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
[40]இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
[41]பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:
[42]கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
[43]அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
[44]நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
[45]தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
[46]அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

[4/13, 6:25 PM] Ebi Kannan Pastor VT: அரமேயம் மாத்திரமே  பேச தெரிந்த ஒருவர் பரிசேயர்களையும்
வேதபாரகர்களையும் கவர  முடியாது

[4/13, 6:26 PM] Ebi Kannan Pastor VT: இயேசு  அரமேயமும் பேசினார்  என்று  வேண்டுமானால் கூறலாம்

[4/13, 6:27 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 27:46-50
[46]ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
[47]அங்கே நின்றவர்களில் சிலர் அதைக்கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
[48]உடனே அவர்களில் ஒருவன் ஓடி. கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
[49]மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
[50]இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

[4/13, 6:28 PM] Ebi Kannan Pastor VT: அரமேயம் புரியாதவர்களும் அங்கு இருந்தார்கள்

[4/13, 6:31 PM] Sam Jebadurai Pastor VT: 12 வயது வரை எல்லா எபிரேய குழந்தைகளும் எபிரேயம் கற்க வேண்டும். இயேசு கிறிஸ்து ஜெப ஆலயத்தில் எபிரேய வேதாகமத்தை வாசித்து இருக்க வேண்டும். கல்லாதவர் என்பது 12 வயதுக்கு மேல் எந்த ரபீக்கும் கீழ் அமர்ந்து கற்காதவர். கிரேக்க கல்வி கற்காதவர் என பொருள் தரும்

[4/13, 6:32 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 26:13-16
மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.
[14]நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று *எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.*
[15]அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
[16]இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.

[4/13, 6:34 PM] Sam Jebadurai Pastor VT: Luke            4:20 (TBSI)  "வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது."
Luke            2:42, 46 (TBSI)
42 "அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய்,"
46 "மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்."

[4/13, 6:35 PM] Ebi Kannan Pastor VT: கிரேக்கமா

[4/13, 6:41 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 21:39-40
[39]அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
[40]உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப்பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்:

[4/13, 6:54 PM] Thomas Udumalai VT: எபிரேய மொழியில்
Beth என்றால் வீடு
EL என்றால் தேவன்
Beth + EL = Bethel
தேவனுடைய வீடு.
Dan என்றால் நீதிபதி
E என்றால் என்னுடைய
Dani என்றால் என்னுடைய நீதிபதி
EL என்றால் தேவன்
Dani EL என்றால்
தேவன் என்னுடைய நீதிபதி ( நியாயதிபதி)
என்று அர்த்தம்.
Shema என்றால் (பெயர்) மற்றும் கேட்டார்
EL என்றால் தேவன்
Shema EL
தேவன் கேட்டார் என்று அர்த்தம்.
(தமிழில் சாமுவேல்)
இன்னும் பல
இடங்களில்.....
Esheki EL
Yov EL
Mick EL

[4/13, 6:56 PM] Thomas Udumalai VT: ஏலி என்றால்
என் தேவன்
"சபக்தா" என்றால் அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் பதில் தரலாம்....

[4/13, 6:58 PM] Sam Jebadurai Pastor VT: பெத்+லகேம் = அப்பத்தின் வீடு. ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார்

[4/13, 7:02 PM] Thomas Udumalai VT: சபக்தா என்றால் தனியாக  Bachelor என்று அர்த்தம்....
இயேசு சிலுவையில் ஏன் கைவிட்டீர் என்று அல்ல.....
ஏன் என்னை தனியாக விட்டீர் என்றே கேட்டார்...
அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் பதில் தரவும்.....

[4/13, 7:19 PM] Elango: சிலுவையில் பாவநிவாரண பலியாக இயேசு இருந்த போது... இயேசுகிறிஸ்து உணர்ந்தார் முற்றிலுமாக  தான் தனியே விடப்பட்டது.😭😭😭 பிதாவின் பிரசன்னம், உறவு தன்னோடு முற்றிலுமாக இழந்த இல்லாத ... தனியாக கைவிடப்பட்ட ஒரு நிலை.
*பிதாவின் பிரசன்னம் அவரோடு இல்லை... பிதா அவரை விட்டு பிரிந்திருந்தார்...*😔😔😔
நாம் ஒருவரை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் போது... நம்முடைய உடலில் உள்ள வலியை விட ... அவர்களின் அன்பு, அவர்களின் நேசம், பாசம்,  உறவு, அவர்களே நம்மை விட்டு பிரிந்து செல்லும் போது... அதைவிட கொடிய வேதனை ஒன்றுமில்லை.❣❣❣❣💔💔💔💔💔😭😭😭😭
*ஆண்டவரை அப்படி கதறj வைத்தது வலியோ அல்லது சிலுவை பாடுகளோ அல்ல ... ஆனால் பிதா தன்னை விட்டு பிரிந்த ஒரு சூழ்நிலை*

மத்தேயு 27:46
[46]ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த 👈சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு *என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்* என்று அர்த்தமாம்.

[4/13, 7:21 PM] Ebi Kannan Pastor VT: சங்கீதம் 22:1
[1]என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு இரட்ச்சியாமலும் செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

[4/13, 7:21 PM] Elango: ஆசாரியன் *ஏலீ*யை தவிர வேறு வார்த்தை இல்லை என நினைக்கிறேன்.

[4/13, 7:21 PM] Elango: பழைய ஏற்ப்பாட்டில்

[4/13, 7:25 PM] Ebi Kannan Pastor VT: லூக்கா 24:44
[44]அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் *சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று,* நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

[4/13, 8:33 PM] Elango: 👑 *இன்றைய வேத தியானம் - 13/04/2017* 👑
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று நான்காவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉

😭 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு *என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்* என்று அர்த்தமாம். மத்தேயு 27:46😭
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/13, 8:35 PM] Thomas Udumalai VT: சபை என்பது மணவாட்டி
மணவாட்டி என்றால் சபை
இந்த கருத்தில் இந்த குரூப்.ல் உங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளதா.?

[4/13, 9:27 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙋♂
*என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற வார்த்தையை பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு தேடும் போது... நிச்சயம் பதில் உண்டு....நாம் ஆண்டவருடைய வசனங்களை புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் தேவ ஆவியானவரின் துணையில்லாமல் தேட முடியாது...*
இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு நிறைய பேர் கேட்பதுண்டு இயேசுவுக்கு மேலே ஒரு தெய்வம் உண்டோ என்று..🤔🤔🤔🤔இப்படி அநேக வசனங்களை ப்ரீண்டிங்க் செய்து அநேக புஸ்தகங்களாக வைத்திருக்கின்றனர்.
மனிசீகமான புத்தியில விளக்கி இந்த வசனத்தை வைத்து திருப்ப முடியும்.. ஆனால் இயேசுவால் பிடிக்கப்பட்டவனை...இயேசுவை விட்டு பிரிக்க முடியாது...
தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் தேவன்....
பிறக்கும் போது இராஜாவாக பிறந்தார் மரிக்கும் போது இராஜாவாக மரித்தார் இனி வரும்போது இராஜாவாக வருவார்...
அண்ட சராசரங்ஙளையும் படைத்தவர், *என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று சிலுவையில் ஆண்டவர் சொல்லக்காரணம் அவர் சிலுவையில் மரணபரியந்தம் தம்மை தாழ்த்திக்கொடுத்தார், உயர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து இனி தாழ்த்த வேண்டிய அவசியமே கிடையாது ..*
பிலிப்பியர் 2:6-11
[6] *அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,*
[7] *தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.*
[8]அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
[9]ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
[10]இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
[11]பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
நாம் உயரப்போக வேண்டுமானால் பல process வழியாகத்தான் கடந்து போக வேண்டும்....
தேவத்தன்மையும், மனுசத்தன்மையும் நிறைந்தவர் தான் ஆண்டவர் இயேசுகிறிஸ்து என்று நமக்கு தெரியும்...
எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:14
[14]ஆதலால், *பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்;*......
தூதன் பாவம் செய்த போது தூதனின் ரூபம் எடூக்காமல் ...மனிதனுக்காக கல்வாரி சிலுவையில் பார்க்கக்கூடிய ரூபம் இல்லை அவருக்கு...
எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:18
[18] *ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.*
*பிசாசை ஜெயிக்க ஆண்டவர் எடுத்தது மரணம்... மரணத்திற்க்கு அதிகாரிதான் பிசாசு... மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே ஜெயித்தார்*🙏🙏👍👍👍💪💪👑👑👑
மத்தேயு 26:53
[53]நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
👆🏼என்கிறார்ஆண்டவர்.
ஏசாயா 53:4
[4] *மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்;*
அநேகர் நினைத்தனர் தேவனால் கைவிடப்பட்டார் என்று.. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது, கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
மத்தேயு 27:54
[54] *நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிரிச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.*
அவ்வளவு தூரம் சிலுவையில் தியாகமும், மன்னிப்பும், வெளிப்படுகிறது.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[4/13, 9:30 PM] Thomas Udumalai VT: தேவன் சபையாகவும் மணவாட்டியாகவும் ஆதாமை தேர்ந்தெடுத்தார்.
மணவாட்டி சபையாகிய ஆதாம் பாவம் செய்தார்கள்.

இயேசு பூமிக்கு வந்த நோக்கமே மணவாட்டியாகிய சபையை தேடி அதை
(மணவாட்டியை ) இரட்சிக்கவுமே வந்தார்.
மணவாட்டிக்கு கிரையமாக தேவன் கேட்டது இயேசுவின் இரத்தம்.,
இயேசு சிலுவையில் இரத்தத்தை சிந்திக்கொண்டு தேவனிடத்தில் கேட்கிறார்,
நான் என்னுடைய மணவாட்டிக்கு விலைக் கிரையமாக என்னுடைய இரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கிறேன்
என்னுடைய மணவாட்டி எங்கே.?
என் தேவனே என் தேவனே ஏன் என்னை    தனியாக விட்டீர்
(நான் இப்போது தனியாக இருக்கிறேன்)  என்றார்.
பிதாவின் பதில் :
சிலுவையின் பின்னே பார், உன்னுடைய மணவாட்டி தெரியும் என்றார்.
எத்தனை பேர் உறுதியாக சொல்ல முடியும்.. இயேசுவின் சிலுவையின் பின்னே, சிலுவையின் பாதையில் வருபவர்களே
இயேசுவின் மணவாட்டி என்று....!

[4/13, 9:53 PM] Elango: தேவபிள்ளையே...நான் சவூதியில் ஊழியம் செய்து 26 வருடங்கள் ஆகிறது ... நிறைய பேர் Even பாஸ்டர்ஸ் கூட இஸ்லாம் சென்டரில் சேர்ந்து மதம் மாறி போகிறார்கள் ... அந்த காலத்தில் மதம் மாறினால் நல்ல பணம்... சிம்பிளாக பெயரை தான் மாற்ற வேண்டும்.... ஆனால் நமக்குள்ளே இருக்கிற தேவ ஆவியானவர்...வைராக்கிய வாஞ்சை உள்ளவர்.
முதலாவது ஆபிரகாமை குறித்து தேவன் சொல்லும்போது ...

ஆதியாகமம் 22:1-2
[1]இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: *இதோ அடியேன் என்றான்.*
[2]அப்பொழுது அவர்: *உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.*
ஆபிரகாம் தேவனை விசுவாசித்ததினால் அப்படியே செய்கிறார்...
ஆதியாகமம் 22:6
[6]ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.
ஆதியாகமம் 22:10-12
[10]பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.
[11]அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
[12]அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; *நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.*
*தேவன் தம்முடைய நேசக்குமாரனான இயேசுவை மனுக்குலத்தின் பாவத்திற்க்காக கொடூக்கிறார்... இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை...*❣❣❣❣
ரோமர் 8:32
[32] தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
அந்த அளவுக்கு மனித அவதாரம் எடுத்து... மனிதனாகத்தான் கதறுகிறார்...🗣🗣😥😢😓😭😭😭 அவர் தேவனுடைய ரூபமாக இந்த பூமியில் வந்திருந்தால் யாரும் அவரை கிட்டி சேர முடியாது ...சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவர்...
*ஆனால் அநேகருக்கு இந்த வார்த்தை பரியாசமாக இருந்தாலும் இரட்சிக்கப்படுகிற நமக்கு தேவ பெலமாக இருக்கிறது*👌👍💪🙏
*நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவை ஏற்ப்படுத்தியது தேவ ஆவியானவர் அதனால் நம் உடலை துண்டு துண்டாக வெட்டிப்போட்டாலும் ...கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிக்கவே முடியாது*💪💪💪💪💪🙏🙏🙏👍👍👌👌❤❤❤❤
அநேக மிஷினரிகளின் பிள்ளைகளை ஒவ்வோரு குழியிலேயும் பிள்ளைகளை தூக்கி போட்டாலும் கிறிஸ்துவை அவர்கள் மறுதலிக்க வில்லை....நீரோ மன்னர்கள் என்று எத்தனையோ பேர்கள் இந்த வசனத்தை அழிக்க முற்ப்பட்டும் அவர்களால் முடியவில்லை...
தேவன் நமக்கு தந்த அபிஷேகத்தினால் ... வேறு எவரும் நமக்கு போதிக்க வேண்டிய அவசியமில்லாமல் ...அவர் எனக்காகவே மரித்தார் ...அதனால் தான் கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று வாசிக்கிறோம்...
So மரண அடிமைத்தனத்தை கிறிஸ்து வென்றதினால்... மரண பயத்தில் இருக்கும் அநேகருக்கும் specially எனக்கும் பெரிய சந்தோஷம் ...ஒரு இடத்தை ஆயத்தம் பண்ண போகிறேன் வந்து உங்களை சேர்த்துக்கொள்கிறேன் என்கிறார்..
இந்த ததேவனை வெளிப்படுத்திய பிதாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் செலுத்தக்கடவோம்.
என்னுடைய பாவத்திற்க்காக பிதாவானவர் கிறிஸ்துவுக்கு முகத்தை மறைத்துக்கொண்டார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:18
[18] *மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்,* ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[4/13, 9:57 PM] Elango: இயேசுகிறிஸ்து எப்போதும் ... பிதா பிதா என்று உரிமையோடு அழைத்தவர்... சிலுவையில் ஏன் *என் தேவனே* என்று அழைக்கிறார்?
ஏன் சிலுவையில் *என் பிதாவே... என் பிதாவே ஏன் என்னை கைவிட்டீர்* என்று சொல்லவில்லை...
யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்🙏😊

[4/13, 10:03 PM] Thomas Udumalai VT: உலகத்தின் மொத்த பாவமும்
(நம்மையும் சேர்த்து)

[4/13, 10:08 PM] Elango: எபி 2:6-10
[6]ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
[7] *அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;* மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.
[8]சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.
[9]என்றாலும், *தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.*
[10]ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் *அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.*
இயேசு இந்த பூமியில் மனித அவதாரம் எடுத்து வந்தபோது...பரமசேனையின் தூதர்கள் அவரை துதிக்க ஆரம்பித்தார்கள்.
லூக்கா 2:13-14
[13]அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
[14] *உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.*
அப்படிப்பட்ட தேவனை ... தூதரிலும் சற்று சிறியவரிக்கினீர் என்று சொல்லப்பட்டிருக்கிறது ... அப்படி தாழ்மையின் ரூபமெடுத்த ஆண்டவர் மனித ரூபத்தில் வந்ததால் ஆண்டவர் தூதரிலிருந்து ஒரு படி கீழே இறங்கிவிட்டார்...
அவனை தேவ தூதரிலும் சற்று சிறியவனாக்கினீர் ...தூதனை விட இயேசு கீழே உள்ளவர் தான் அதில் மாற்றம் இல்லை...எப்படி கீழானவர் .. ஏனென்றால் அவர் மனித அவதாரம் எடுத்து வந்தபடியினால்...தூதர்களுக்கு மரணமில்லை... இயேசு மரணத்தை ரூசி பார்த்தபடியினாலும் இயேசு தூதர்களுக்கும் கீழானவரே ...
மரணத்தை ரூசி பார்க்க வந்த , தூதரை பார்க்கிலும் கீழே இருக்கிற இயேசு ... அதனால் தான் *என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்* என்கிறார்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[4/13, 10:16 PM] Elango: 🙏🙏
சிலுவையில் இருக்கும் போது அவர் தேவ குமாரன் தானே... தேவன் தானே அவரது பிதா, அப்பா.. பின் ஏன் ... பிதாவே ஏன் என்னை கைவிட்டீர் என்று சொல்லாமல் ... *என் தேவனே என் தேவனே* என்று சொல்லுகிறார் நம் ஆண்டவர்  🙏🙏❓❔

[4/13, 10:17 PM] Thomas Udumalai VT: அவரிடம் பாவம் இல்லாத வரை எல்லா சூழ்நிலையிலும் பிதாவே என்றே அழைத்தார்..,
ஆனால்.,
 உலகத்தின் மொத்த பாவமும்
(நம்முடைய பாவமும்)
அப்போது கல்வாரி சிலுவையில் தொங்கிக்  கொண்டிருக்கும் வேளையில் இயேசுவின் மீது இருந்த படியால்,
பிதாவே என்று அவரால் சொல்ல முடியாமல் தேவனே என்று அழைத்து இருக்கலாம்.

[4/13, 10:18 PM] Elango: அருமை ஐயா அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏🙏👌👍✍✍

[4/13, 10:22 PM] Elango: 👌👍🙏
சாதாரண மனிதன் தேவனை நோக்கி .. என்னை ஏன் கைவிட்டீர் என்று சொல்வதற்க்கும்... தேவ குமாரன் சிலுவையில் சொன்ன வார்த்தையை விளக்கி நல்ல விளக்கம்.🙋♂👂👂👈👈

[4/13, 10:23 PM] Immanuel Brother VT: நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
2 கொரிந்தியர் 5 :21 பாவமாக்கப்பட்டிருந்த இயேசு. நமக்காக தேவனோ அவரை நொறுக்க சித்தமாகி....... ஏசாயா : 53 - 10 . மேலும்...உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஏசாயா 59..2

[4/13, 10:27 PM] Immanuel Brother VT: நமக்கு மாத்திரம் முகத்தை மறைக்கவில்லை. பாவமாக்கப்பட்டிருப்பது தம்முடைய சொந்த குமாரனே ஆனாலும் மறைப்பார். ஏனெனில் தேவன் மகா பரிசுத்தர். நீதியுள்ளவர். எனவே குமாரனென்றும் பாராமல் நமக்காக (பாவங்களுக்காய்) தகனித்துப் போட்டார்.

[4/13, 10:28 PM] Immanuel Brother VT: இச்சூழலிலே கிறிஸ்து பேசியதே 'என் தேவனே'

[4/13, 10:29 PM] Elango: சிலுவைக் காட்சி நண்பகலில் ஒரு நள்ளிரவு.🌑🌑🌑
சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல், நாணுதையோ! 🌞🌞🌞

[4/13, 10:35 PM] Elango: சிலுவையின் காட்சியும், தேவன் நமக்காக செய்த கிருபையையும் அழகாக படம்பிடித்து விளக்கியுள்ளீர்கள்.
👂👂👂👈👈👍👍👌👌

[4/13, 10:44 PM] Elango: ஆழமான சத்தியம்...👌👍✍ கைவிடப்பட்டவர்களுக்கு நாம் என்ன வேண்டும்👆🏼👆🏼👂👂👈

[4/13, 10:54 PM] Darvin Sekar Brother VT: பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
யோவான் 13 :5 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இன்மேல் அறிவாய் என்றார்.
யோவான் 13 :7

[4/14, 12:44 AM] Elango: தேவ குமாரனுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையைக் கண்டு ...இயற்க்கை தன் எதிர்ப்பை காட்டுவதாகவே எண்ணத்தோன்றுகிறது...
இந்த மூன்று மணி நேரம் இருள்  என்பது வேதாகமம் மற்றும்  வரலாற்று சரித்திரம் ஆகும்...இது பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இந்த மூன்று மணி நேர இருள் இருந்ததை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
முழுவதும் இருள் அங்கே என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரீயாது...அந்த இருளிலே அப்படியே எல்லோரும் தடவிக்கொண்டிருப்பார்கள் அல்லது குரல் எழுப்பிக்கொண்டிருப்பார்கள் ... இப்படிப்பட்ட இருள் என்பது பாவத்தின் கிரியையாக, தன்மையாக,  மக்கள் ஒளியிலே வராமல் இருளிலேயே இருப்பதை  காட்டியிருக்கிறது...
அங்கே அவர் மீட்பின் செயலை அவர் அங்கே செய்துக்கொண்டிருக்கிறார். தேவன் தன் குமாரனை கோபாக்கினையிலே ... தகனித்துப்போடுகின்றார்...
*பாவமாக்கப்பட்ட இயேசுகிறிஸ்து,  இவ்வுலகத்தின் ஒட்டுமொத்த பாவத்தையும் சுமந்துக்கொண்டிருந்த இயேசுவை தன் ஒரேப் பிள்ளை என்று கூட பாராமல் ...பாவத்திற்க்கான தண்டனையை அவர் நீதிபரராக வழங்கிக்கொண்டிருக்கிறார்...தன் சொந்த குமாரனே ஆனாலும் தேவன் பாவத்தை பாராத பரிசுத்தர் என்பதால் தன் ஒரே குமாரனை தகனித்துப்போடுகின்றார்.*🔥🔥🔥🔥🔥🔥
சங்கீதம் 22:15-16
[15] *என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.*
அந்த வேளையிலே ஒரு இமை நொடி பொழுது ... தேவன் தன் குமாரனை கைவிடுகிறார்...
தன்னுடைய குமாரனாக பார்த்தால் அதை அங்கு செய்ய முடியாது ஏனென்றால் கிறிஸ்து அவருடைய செல்லப்பிள்ளையாக ... அவருடனே இருந்தவர் ...அவரோடு வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர் ...
ஆகவே இமைப்பொழுது அவரை கைவிட்டு அவரை சுட்டெரித்துப்போடுகின்றார்.நம்முடைய பாவங்களையெல்லாம் அவர் மேல் சுமத்ததினாலேயே அவர் தகனிக்கப்படுகிறார்.
அந்த வலி வேதனையின் உச்சம் ஒரு புறம்... கைவிடப்பட்டதினால் அந்த பிரிவின் வேதனை மறுபுறம்... அந்த வேதனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை *என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்*
- சகோ. இம்மானுவேல்.

[4/14, 12:59 AM] Elango: இந்த வார்த்தையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால் ...இன்றைய சூழ்நிலையில் கைவிடப்படப்பட்ட மக்களை கண்டு ... நாம் அவர்களுக்கு என்ன செய்கிறோம்... நாம் அவரை பார்த்தும் பாராதவர்கள் போல சென்று விடுகிறோமே...
இயேசு ஒரு சம்பவத்தை சொல்லுகிறார் ...👇👇👇
லூக்கா 10:30-34
[30] *இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.*
[31]அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
[32]அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
[33]பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
[34] *கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.*
கைவிடப்பட்ட நிலைமை ... பல சம்பவங்கள் வேதாகமத்திலே உண்டு ...யாரெல்லாம் சமுதாயத்தல் ஒதுக்கப்பட்டிருந்தார்களோ, தேவையற்றவர்கள் என்று சொன்ன மக்களைத்தான் கிறிஸ்து நாடி சென்றார் ...❤❤❤❤💖💖💖💖
அவர் தன் வாழ்நாள் முழுவதும் எங்கு அவர் தேவைப்படுகின்றாரோ அங்கேயே அவர் சென்றார் ...அதேப்போல நாம் நிறைய பேருக்கு சுவிஷேசம் அறிவிப்பதற்க்கு தேவையாக இருக்கின்றோம்...
ஒதுக்கப்பட்ட தள்ளப்பட்ட வெறுக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களுக்கு சுவிஷேசம் அறிவிக்க உன்னையும் என்னையும் அழைக்கிறார் ...
நாம் இந்த மக்களை பார்த்து சிலை வழிபடுகிறான், பேயை வழிபடுகிறான் என்று சொல்லாமல்... அவன் தெரியாமல் செய்கிறான் என்று அவர்களை ஒதுக்கிவிடாமல் அவன் அறியாமல் செய்கிறான் என்று அவனுக்கு கிறிஸ்துவை அறிவித்து ஜீவ வார்த்தைகளையும் உன்னத வாழ்க்கையையும் காட்டி சுவிஷேசம் அறிவிக்க வேண்டும்.
சிலுவையில் கிறிஸ்து கதறினார் இதைப்போல எண்ணில் அடங்கா மக்கள் இன்றும் கதறிக்கொண்டிருக்கிறார்கள் ...
பிதாவானவர் எப்படி மீண்டும் குமானோடு உள்ள புதுப்பித்துக்கொண்டாரோ...அதேப்போல இம்மக்களை நாமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.இந்த நிகழ்விலிருந்து நாம் இதை அறிந்துக்கொள்ள வேண்டும்.
- சாகோ இம்மானுவேல்@Immanuel Brother VT

Post a Comment

0 Comments