Type Here to Get Search Results !

இயேசு கிறிஸ்துவை பற்றிய சாட்சி என்பது என்ன?

[8/12, 10:15 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம்* ✝
👉 *இயேசு கிறிஸ்துவை பற்றிய சாட்சி என்பது என்ன*❓

*வேதத்தை தியானிப்போம்*

[8/12, 10:18 AM] Charles Whatsapp: வெளி 12:17 இதன் விளக்கத்தை தேடினால் பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்

[8/12, 10:20 AM] Benjamin Whatsapp: 👇🏿இந்த வசனங்களை கவனித்து கொள்ளுங்கள் brothers👇🏿

 [12/08 9:57 am] 👑T. Benjamin 👑: இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், *இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும்*, தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:2
 வெளி 1 : 9 - உங்கள் சகோதரனும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், *இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும்* பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
வெளி 20 : 4 - அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. *இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும்* தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
 ஆகையால் நம்முடைய *கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது*, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி.
2 தீமோத்தேயு 1:8
 *கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி* உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே*,  நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,  அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
1 கொரிந்தியர் 1:4‭-‬6

[8/12, 10:21 AM] ‪+91 96005 95455‬: John the Baptist
 இயேசுவை குறித்து சாட்சி கொடுத்தார். ( John 1:24)
*தேவ குமாரன்* என்று...
கிறிஸ்து யார் என்பதை வெளிப்படுத்தி காட்டும் நம் செயலோ வார்த்தையோ... இயேசுவின் சாட்சி
My view👆

[8/12, 10:36 AM] John Whatsapp: 1யோவான் 5: 9
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
1 John 5: 9
If we receive the witness of men, the witness of God is greater: for this is the witness of God which he hath testified of his Son.

[8/12, 10:37 AM] John Whatsapp: 1யோவான் 5: 10
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.
1 John 5: 10
He that believeth on the Son of God hath the witness in himself: he that believeth not God hath made him a liar; because he believeth not the record that God gave of his Son.

[8/12, 10:37 AM] John Whatsapp: 1யோவான் 5: 11
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
1 John 5: 11
And this is the record, that God hath given to us eternal life, and this life is in his Son.

[8/12, 10:39 AM] John Whatsapp: 1யோவான் 4: 14
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
1 John 4: 14
And we have seen and do testify that the Father sent the Son to be the Saviour of the world.

[8/12, 10:40 AM] John Whatsapp: 1யோவான் 1: 2
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
1 John 1: 2
For the life was manifested, and we have seen it, and bear witness, and shew unto you that eternal life, which was with the Father, and was manifested unto us;)

[8/12, 10:43 AM] John Whatsapp: 1யோவான் 5: 6
இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
1 John 5: 6
This is he that came by water and blood, even Jesus Christ; not by water only, but by water and blood. And it is the Spirit that beareth witness, because the Spirit is truth.

[8/12, 10:44 AM] John Whatsapp: 1யோவான் 5: 7
(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
1 John 5: 7
For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.

[8/12, 10:45 AM] John Whatsapp: 1யோவான் 5: 8
பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
1 John 5: 8
And there are three that bear witness in earth, the Spirit, and the water, and the blood: and these three agree in one.

[8/12, 11:50 AM] Ebeneser Whatsapp: 1 பேதுரு 4:14-18
[14]நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடையய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
[15]ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
[16]ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
[17]நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
[18]நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

[8/12, 11:59 AM] Benjamin Whatsapp: அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். *இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது* என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:10 தமிழ்
http://bible.com/339/rev.19.10.தமிழ்
▶தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றால் என்ன?

[8/12, 12:09 PM] Samson Whatsapp: கிறிஸ்துவைக் குறித்து வேதம் சொல்லுவதற்கு யாரப்பா சாட்சி?
கிறிஸ்து இந்த உலகில் எப்படி வாழ்ந்தார்? என கிறிஸ்துவை அறியாதவர்கள் கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்?
1. கிறிஸ்து பாவத்தை வெறுத்தும், ஜெயித்தும், சாத்தான் வெட்கப்படும்படியும் வாழ்ந்தார்
2. கிறிஸ்து எதிரியையும் நேசித்து, தன்னை சபிப்பவர்களையும் ஆசீர்வதிக்கமுடியும் என காண்பித்தார்
3. தன் சுய விருப்பத்தை ஒருபோதும் பிரியப்படுத்தாதமல், பிதாவின் சித்தம் செய்ய தன்னை ஒப்புக்கொடுத்த வாழ்க்கை
4. மரணமே பரிசாகக் கிடைத்தாலும் பரிசுத்தத்தை பற்றிக்கொண்டிருக்கும் வாழ்க்கை
5. அடுத்தவர்களின் பாவம் எத்தகையதாக இருந்தாலும் மன்னிக்கும் மனப்பான்மை
6. மற்றவர்களுடைய பாவத்தையும் தன்மேல் சுமத்திக்கொள்ளும் தன்மை
7. மனுஷனுடைய மகிமையை தேடாமல் தேவனால் மாத்திரம் வரும் மகிமைக்காக வாழ்ந்த ஒருவர் தான் இந்த கிறிஸ்து...
இப்படி கிறிஸ்துவைக்குறித்ததான சாட்சியை, கிறிஸ்துவை அறியாதவர்களிடம் நம்மால் மார்தட்டி சொல்லமுடியும் என்பது உண்மைதான், ஆனால் இதைக்கேட்கும் அவர்கள்
இந்த சாட்சியை வேதாகமத்தில் மட்டும்தானே பார்க்கமுடியும், இதெல்லாம் உண்மைதான் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று நம்மிடம் கேட்டால் நீங்களும் நானும் என்ன பதில் சொல்லமுடியும்?
என்ன பதில் தெரியுமா?
வேதத்தில் கிறிஸ்து சொல்லுகிறார், பிதா என்னை அனுப்பினார் என்பதற்கு என் கிரியைகளே சாட்சி”, என்று, அதே போல கிறிஸ்து யார் என்பதற்கும் நம் கிரியைகளே சாட்சி என்று நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம்.
1. கிறிஸ்துவால் மற்றவர்களின் பாவத்தை மன்னிக்கமுடியும் என்பதற்கு நானே சாட்சி எப்படி? நான் மற்றவர்களின் பாவத்தை மன்னிக்கிறேனே!
2. கிறிஸ்து பாவத்தை ஜெயித்தாரா, வெறுத்தாரா என்று கேட்டால், ஆம் எனக்குள் இருக்கும் அவரால் நானும் பாவத்தை வெறுத்து ஜெயிக்கமுடிகிறதே ஆதால் நானே சாட்சி
3. அவரால் எதிரியை நேசிக்கமுடியும் என்பதற்கு நானே சாட்சி ஏனெனில் நானும் எதிரியை நேசிக்கிறேனே!
இப்படி கிறிஸ்துவைக்குறித்ததான வேதம் சொல்லும் எல்லா காரியங்களுக்கும் நானே சாட்சி,  நாமே உயிருள்ள சாட்சி என்பதை இன்றைக்கு நாம் மறந்ததால் தான் வெறும் பிரசங்கத்தில் மட்டுமே கிறிஸ்துவை அறிவிக்கிறவர்களாகவே இருக்கிறோம், கிறிஸ்துவை யார்வேண்டுமானாலும் அறிவிக்கமுடியும், ஆனால் உண்மையான விசுவாசிகள் மாத்திரமே கிறிஸ்துவை அறிவிக்க மட்டும் செய்யாமல் தங்கள் மூலம் கிறிஸ்துவை அறியச்செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
இன்றைக்கு விசுவாசிகள் நாம் சொல்லும் ஒரு பொதுவான வார்த்தை எந்த விஷயத்திலும் என்னை பார்க்காதீர்கள், இயேசுவை மட்டும் பாருங்கள் என்று, ஆனால் என்னை பொருத்தவரை இது சரியான வார்த்தை இல்லை, ஏனெனில் எந்த ஒரு பிரச்சனையிலும் நம் வாழ்க்கை மாதிரியாக இருக்கவேண்டும், நானே சரியில்லை எனில் மற்றவர்களிடம், கர்த்தர் சரிசெய்வார் எனக்கூறி அழைக்கமுடியுமா? என்னுடைய வாழ்க்கையிலே கர்த்தர் இடைபடவில்லை எனில் மற்றவர்களின் வாழ்க்கையில் கர்த்தர் இடைபடுவார் என நான் உறுதியாய் சொல்லமுடியாதே!
ஒரு பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களும் தோற்றுப்போய்விட்டனர், ஆனால் அங்கு தன் பிள்ளையை புதிதாக சேர்க்கவந்திருக்கும் தகப்பனிடம் அந்த தலைமை ஆசிரியர் இப்படி சொல்லுகிறார் என வைத்துக்கொள்வோம், “சார், மற்ற மாணவர்களை பார்க்காதீர்கள் எங்கள் பள்ளி ஓனரை மட்டும் பாருங்கள்,” என்று சொன்னால் அவர் தன் பிள்ளையை சேர்ப்பாரா? இப்படித்தான் இருக்கிறது நம் கிறிஸ்தவ வாழ்க்கை. கிறிஸ்து நம் வாழ்வில் மாற்றம் கொண்டுவரவில்லையெனில் கிறிஸ்துவைக்குறித்து நான் சொல்லும் எந்த ஒரு சாட்சியும் பொய்சாட்சியே! நான் உணர்ந்து, அனுபவிக்காத பொய்சாட்சியாகவும் வெறும் வேதாகமத்தில் மனப்பாடம் பண்ணிய ஒரு சாட்சியாக இருக்குமே ஒழிய மெய்சாட்சியாய் இருக்காது. சிந்தியுங்கள் நீங்கள் உயிருள்ள சாட்சியா? வேதத்தில் சொல்லப்பட்ட வசனத்தை உண்மையென ருசிபார்த்த சாட்சியா?
கிறிஸ்துவைக்குறித்து வேதம் சொல்லும் எல்லா சத்தியங்களுக்கும் என் வாழ்க்கைதான் சாட்சி என்று சொல்லுகிறவர்கள் இன்றைக்கு எத்தனைபேர்? எழும்புவோமா, எழும்பி பிரகாசிப்போமா?
சாலமன் திருப்பூர்

[8/12, 12:10 PM] Jesusgivesstrength Whatsapp: யோவான் 5
36  யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.

[8/12, 12:13 PM] Elango: 13 ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
அப்போஸ்தலர் 3 :13
14 பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,
அப்போஸ்தலர் 3 :14
15 *ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள். அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.*👈👈👈
அப்போஸ்தலர் 3 :15
16 அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது. அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
அப்போஸ்தலர் 3 :16
18 *கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.*
அப்போஸ்தலர் 3 :18
19 ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,
அப்போஸ்தலர் 3 :19
20 உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக்குணப்படுங்கள்.
அப்போஸ்தலர் 3 :20
21 உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அப்போஸ்தலர் 3 :21

[8/12, 12:20 PM] Samson Whatsapp: 8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 1 :8

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/12, 12:33 PM] Samson Whatsapp: வழுக்கை தலை உள்ள ஒருவர்,
"கேசவர்த்தினி " எண்ணெய் விற்றால்,
அந்த விற்பனை பலனுள்ளதாக இருக்குமா,
வேடிக்கை யாக இருக்குமா!?
நம்முடைய சாட்சி வாழ்க்கை வேடிக்கையாக அல்ல,
தேவ சித்தத்தின்படியான
விளைவுகளைத் தர வேண்டும் என்பதற்கே பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டுள்ளார். 🙏

[8/12, 12:39 PM] Ebeneser Whatsapp: 1 கொரிந்தியர் 1:21
[21]எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

[8/12, 12:42 PM] Elango: ஆமென்
ஆவியானவரின் வழிநடத்துதல் நமக்கு அவசியம். Thank you Jesus.
இன்று நான் Local train ல் சுவிஷேசம் அறிவிக்கப் பிரயாசபட்டேன் ஆனால் அது அங்கே வாய்க்கவில்லை.
ஆவியானவர்  இருவரை தந்தார் அலுவலகம் போகும் வழியில் ஒரு வாலிபனுக்கும், ஒரு முதியவருக்கும் சுவிஷேசம் அறிவிக்க இருதயத்தில் அனலையும், அன்பையும் ஊற்றினார், கொண்டு வந்த மராட்டி புதிய ஏற்பாடு வேதாகமத்தை கொடுக்க கிருபை தந்தார். Thank you APPA 🙏🙏🙏😭

39 *அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரியும் அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.*
அப்போஸ்தலர் 8 :39

16 *ஆகையால் விரும்புகிறவனாலும்அல்ல, ஓடுகிறவனாலும்அல்ல, இரங்குகிறதேவனாலேயாம்.*
ரோமர் 9 :16

[8/12, 1:58 PM] Samson Whatsapp: வாங்குதல், விற்குதல்!
ஆவிக்குரிய வாழ்க்கையிலும் கொடுக்கல், வாங்குதல் உண்டு என்று உங்களுக்கு தெரியுமா?
நீதி: 23:23
சத்தியத்தை வாங்கு அதை விற்காதே!
ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழவேண்டுமென்றால், நாம் வாங்குகிறவர்களாயிருக்கவேண்டுமே ஒழிய, விற்கிறவர்களாய் இருக்கக்கூடாது, புரியவில்லையா?
ஏதாவது ஒன்றை வாங்கும்போது, நம் பணத்தை நாம் இழக்கவேண்டும், அதேபோல நம்முடையவைகளை நாம் விற்கும் போது, பணத்தை பெற்றுக்கொள்கிறோம் தானே! ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ நாம் எப்போதும் வாங்குகிறவர்களாகவே இருக்கவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது, இழப்பில்லாமல் ஆவிக்குரிய வாழ்க்கை சாத்தியமில்லை.
யூதாஸ் 30 வெள்ளிக்காசிற்கு, தன்னிடமிருந்த இயேசுவை விற்றுப்போட்டான், அதேசமயம், அவன் இயேசுவை காட்டிக்கொடுக்காமல் இருக்கவேண்டுமென்றால் அவன் நஷ்டத்தை சந்தித்திருக்கவேண்டுமல்லவா! ஆனால் அவனோ நஷ்டப்படவிரும்பவில்லை, லாபமடைய விரும்பி விற்றுப்போட்டான். இன்றைக்கு நம்மில பலர் அற்ப லாபத்திற்காகக் கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியங்களை செய்து, சத்தியத்தையும் நம்மிடம் உள்ள இயேசுவையும் விற்றுப்போடுகிறவர்களாய் இருக்கிறோம். இதை தவிற்கவேண்டுமானால் நான் சத்தியத்தை என்ன விலைகொடுத்தாவது வாங்குகிறவனாய் இருக்கவேண்டுமே ஒழிய விற்றுப்போடுகிறவனாய் இருக்கக்கூடாது.
நான் நாபோத்தா? இல்லை ஆகாபா? (1 இரா 21)
ஆகாபை குறித்து தேவன் இவ்வாறு சொன்னார்.” கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்ய தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப் போல ஒருவனுமில்லை” என்று, ஏன் தெரியுமா?
நாபோத்தின் சேஷ்டபுத்திரபாகத்தை விற்க ஆகாப் அவனை வற்புறுத்தினான், ஆனால் வேதம் சொல்லுகிறது, சேஷ்டபுத்திரபாகத்தை விற்கக்கூடாது என்று. இந்த வசனத்தில் உறுதியாயிருந்த நாபோத் தன் சேஷ்டபுத்திரநிலத்தை விற்க ஒருபோதும் சம்மதிக்கவில்லை, அதற்காக எவ்வளவு விலை கொடுத்தாலும் அவன் சம்மதிக்கவில்லை, கடைசியில் உயிரை விட்டாலும் விடுவேனே தவிற கர்த்தரின் வார்த்தையை விற்கமாட்டேன் என்று மார்தட்டி இறந்துபோனான்! அவனே சத்தியத்தை வாங்குகிறவன்.

நாபோத் “எசாவை” போல கேவலம் ஒரு பயற்றம் கூலுக்கு தன் சேஷ்டபுத்தியபாகத்தை விற்றுப்போட்டவன் அல்ல, தன் உயிரைக்கொடுத்து வாங்கியவன்.
சத்தியத்தை வாங்குகிறவர்களாயிருக்கிறோமா? இல்லை விற்கிறோமா?
எந்த ஒரு நஷ்டமுமில்லாமல் கர்த்தரின் சத்தியத்தை பின்பற்றுவது சாத்தியமில்லாத காரியமே! எத்தனையோ பரிசுத்தவான்கள் தங்களிடமுள்ள கிறிஸ்துவை காத்துக்கொள்ள தங்கள் ஜீவன் நஷ்டப்பட கூட அனுமதித்தனர், மரணபரியந்தம் உண்மையாயிருந்தனர். நஷ்டமே, இன்றைய ஆவிக்குரிய வாழ்வின் தாரகமந்திரம். சிந்தியுங்கள்....
நான் நாபோத்தா? இல்லை ஆகாபா? வாங்குகிறோமா, இல்லை விற்கிறோமா?