Type Here to Get Search Results !

ஆதி 1:3 இல் வெளிச்சம் எப்படி வந்தது?

[8/16, 4:35 PM] Elango Gopal: 🔥🔥 *இப்போதைய வேத தியானம்* 🔥🔥
👉 ஆதி 1:14-18 இல் தான் சூரிய சந்திர நட்ச்சத்திரங்கள் படைக்கபட்டன அப்படி என்றால் ஆதி 1:3 இல் வெளிச்சம் எப்படி வந்தது⁉

👉 ஆதி 1:3 இல் வந்த வெளிச்சம் சூரிய சந்திர வெளிச்சமா? ஆம் என்றால் ஆதி 1:14-18 இன் விளக்கம் என்ன? இல்லை என்றால் அந்த வெளிச்சத்தின் விளக்கம் என்ன⁉

*வேதத்தை தியானிப்போம்*

[8/16, 4:27 PM] Charles Whatsapp: ஆதி 1:14-18 இல் தான் சூரிய சந்திர நட்ச்சத்திரங்கள் படைக்கபட்டன அப்படி என்றால் ஆதி 1:3 இல் வெளிச்சம் எப்படி வந்தது?

[8/16, 4:32 PM] Charles Whatsapp: ஆதி 1:3 இல் வந்த வெளிச்சம் சூரிய சந்திர வெளிச்சமா? ஆம் என்றால் ஆதி 1:14-18 இன் விளக்கம் என்ன? இல்லை என்றால் அந்த வெளிச்சத்தின் விளக்கம் என்ன?

[8/16, 4:41 PM] Charles Whatsapp: நிதானமாய் ஆராயுவோம் வேதத்தின் ஆசிரியரான பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக...!!!

[8/16, 4:46 PM] Charles Whatsapp: கேள்வியில் உள்ள வசனங்களை பதிவிடுங்கள் சகோ (ஆதி 1:3,14-18)

[8/16, 4:52 PM] Charles Whatsapp: அந்த கேள்வியுடன் இதையும் இனையுங்கள் ஆதி 1:3-5 இல் சூரிய சந்திரன் இல்லாமல் பகல் இரவு வித்யாசம் எப்படி வந்தது, முதல் நாள் எப்படி வந்தது?

[8/16, 4:54 PM] Benjamin Whatsapp: தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.  வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.  தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

  பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.  அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.  தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.  அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்.  பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.  சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:3‭-‬5‭, ‬14‭-‬19 தமிழ்
http://bible.com/339/gen.1.3-19.தமிழ்

[8/16, 4:54 PM] Elango Gopal: 🔥🔥 *இப்போதைய வேத தியானம்* 🔥🔥
👉 ஆதி 1:14-18 இல் தான் சூரிய சந்திர நட்ச்சத்திரங்கள் படைக்கபட்டன அப்படி என்றால் ஆதி 1:3 இல் வெளிச்சம் எப்படி வந்தது⁉
👉 ஆதி 1:3 இல் வந்த வெளிச்சம் சூரிய சந்திர வெளிச்சமா? ஆம் என்றால் ஆதி 1:14-18 இன் விளக்கம் என்ன? இல்லை என்றால் அந்த வெளிச்சத்தின் விளக்கம் என்ன⁉
*தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1 :3*

🎯 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
🎯அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.
🎯தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
🎯அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
🎯பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார். தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் 1 :14-18

*வேதத்தை தியானிப்போம்*

[8/16, 4:59 PM] Benjamin Whatsapp: 👆🏿இந்த வசனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்......

[8/16, 5:02 PM] Benjamin Whatsapp: தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.  வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.  தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

  பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் ▶வித்தியாசம் உண்டாகத்தக்கதாக◀ வானம் என்கிற ஆகாயவிரிவிலே ▶சுடர்கள் உண்டாகக்கடவது,◀ அவைகள் ▶அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும்◀ இருக்கக்கடவது என்றார்.  அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.  தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.  அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்.  பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.  சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:3‭-‬5‭, ‬14‭-‬19 தமிழ்

[8/16, 5:15 PM] Benjamin Whatsapp: *சுடர்கள் ஏன்?*
1.பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக
2. அடையாளங்களுக்காக, காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காக...
3.பூமியின்மேல் பிரகாசிக்க
4.பகலையும் இரவையும் ஆள
5.வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்க

[8/16, 5:31 PM] Charles Whatsapp: சூரிய சந்திரன் படைக்கபட்டது 4ஆம் நாள் (ஆதி 1:19) வெளிச்சம் வந்தது முதல் நாள் (ஆதி 1:5) இது எப்படி சாத்தியம் ஆகும்....?

[8/16, 5:31 PM] Charles Whatsapp: சூரிய சந்திரன் படைக்கபட்டது 4ஆம் நாள் (ஆதி 1:19) வெளிச்சம் வந்தது முதல் நாள் (ஆதி 1:5) இது எப்படி சாத்தியம் ஆகும்....?

[8/16, 5:32 PM] Charles Whatsapp: ஆதி 1:5,19 இதை கவனித்து பதில் கூறுங்கள் (முதல் நாள், நான்காம் நாள்)

[8/16, 5:51 PM] Elango Gopal: 23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை, தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது,🌟 ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.🔥
வெளிப்படுத்தின விசேஷம் 21 :23

[8/16, 5:58 PM] Elango Gopal: கேள்வி
நான்காம் நாளில் சூரியனும் சந்திரனும் உண்டாக்கப்பட்டது.(ஆதியாகமம் 1:16 ) ஆனால் அதற்கு முன்னதாகவே முதலாம் நாளில் வெளிச்சம் உண்டானது என்று வேதம் சொல்லுகிறது(ஆதியாகமம் 1:3)
நான்காம் நாளில் சூரியனும் சந்திரனும் உண்டாக்கப்பட்டால் முதலாம் நாளில் வெளிச்சம் எங்கேயிருந்து வந்தது?
பதில்
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.( ஆதியாகமம் 1:1)
ஆனால் இதற்கு அடுத்த வசனம் பூமியானது வெறுமையாய் இருந்தது என்று சொல்கிறது. (ஆதியாகமம் 1:2)
ஆனால் பூமி படைக்கப்படும் போது வெறுமையாய் படைக்கப்படவில்லை.( ஏசாயா 45;18)
ஆகவே ஆதியாகமம் 1:1 இற்கும் ஆதியாகமம் 1:2 இற்கும் இடைப்பட்ட கால இடைவெளி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்திருக்க வேண்டும்.
அதாவது தேவன் பூமிக்கு அத்திவாரம் இடுகின்ற போது விடியற் காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி தேவ புத்திரர் எல்லோரும் கெம்பீரித்தார்கள்.( யோபு 38:4-7)
ஆகவே ஆதியிலே பூமி படைக்கப்படுவதற்கு முன்னரே நட்சத்திரங்களும் தேவபுத்திரர்களும் படைக்கப்பட்டார்கள்.
.
ஆனால் ஆதியிலே படைக்கப்பட்டிருந்த தேவபுத்திரர்களில் காப்பாற்றுவதற்காய் கேருபினாக இருந்த தேவதூதன் தன் வியாபாரத்தின் மிகுதியினால் அவனுடைய கொடுமை அதிகரித்து பாவஞ்செய்தான். ஆகையால் அவன் தேவனுடைய பர்வத்தில் இருந்து தள்ளப்பட்டான்.( எசேக்கியேல் 28:16)
தேவனுக்கு எதிராகச் செயற்படுகிறவர்களுக்கு வெளிச்சம் தடுக்கப்பட்டு இருள் தண்டனையாகக் கொடுக்கப்படும்.(யாத்திராகமம் 10:21)
அவனுடைய பாவத்தின் நிமித்தமாய் தண்டனையாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பூமிக்கான நட்சத்திரங்களின் வெளிச்சத்தை தேவன் தடை செய்தார். அதாவது பூமியை இருளாக்கினார். அதனால் பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாக இருந்தது.(ஆதியாகமம் 1:2)
அதன் பின் மனிதனைப் படைப்பதற்கு சித்தம் கொண்ட தேவன் தடைப்பட்டிருந்த வெளிச்சத்தை மீண்டும் உண்டாகும் படி சொல்கிறார்.அப்போது முதலாம் நாளாகிறது (ஆதியாகமம் 1:3). பின்னர் நாலாம் நாளில் நட்சத்திரங்களில் பகலை ஆழ பெரிய சுடரும் இரவை ஆழ சிறிய சுடருமாக உண்டாகும் படி சொல்கிறார்(ஆதியாகமம் 1:16 ).
எனவே ஆதியிலே நட்சத்திரங்களின் வெளிச்சம் இருந்தது.அவை நாலாம் நாளில் தேவைக்கேற்ப பெரிய சுடர் என்றும் சிறிய சுடர் என்றும் தேவனால் உண்டாக்கப்பட்டது.

[8/16, 6:01 PM] Elango Gopal: ஆதியில் (orgin)  - வானம் பூமி (காலத்தின் தொடக்கம்)
முதல் நாள்          -  இருள்,வெளிச்சம்
இரண்டாம் நாள் - வானத்தில் உள்ள ஜலஇதற்கும் பூமியின் ஜலத்திற்கும் பிளவு உண்டாகுகிறார்.. (கற்பனை கூட செய்து பார்க்க இயலுமா!!)
மூன்றாம் நாள்    - செடி கொடிகள்
நான்காம் நாள்   - சூரியன் (பெரிய சுடர்  ),சந்திரன்(சிறிய சுடர் ) மற்றும்  நட்சத்திரங்கள்
ஐந்தாம் நாள்     -  மகா மச்சங்கள்,நீந்துவன,பறப்பன
ஆறாம் நாள்      - மனிதன் ,மனுஷி,சர்வ சேனை
ஏழாம் நாள்       - ஓய்வு நாள்

[8/16, 6:02 PM] Elango Gopal: வெளி 22:5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரேஅவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
சங்கீதம் 84:11 *தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்;*

[8/16, 6:11 PM] Charles Whatsapp: கிட்டதட்ட என்னுடைய கருத்தும் இதுவாக தான் இருக்கும் நான் கொஞ்சம்கூட விளக்கமாக தருகிறேன் அதற்கு முன் இந்த கருத்திற்கு மாற்று கருத்து இருந்தால் கூறுங்கள்

[8/16, 6:23 PM] Kumar Whatsapp: கேள்வி
நான்காம் நாளில் சூரியனும் சந்திரனும் உண்டாக்கப்பட்டது.(ஆதியாகமம் 1:16 ) ஆனால் அதற்கு முன்னதாகவே முதலாம் நாளில் வெளிச்சம் உண்டானது என்று வேதம் சொல்லுகிறது(ஆதியாகமம் 1:3)
நான்காம் நாளில் சூரியனும் சந்திரனும் உண்டாக்கப்பட்டால் முதலாம் நாளில் வெளிச்சம் எங்கேயிருந்து வந்தது?
பதில்
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.( ஆதியாகமம் 1:1)
ஆனால் இதற்கு அடுத்த வசனம் பூமியானது வெறுமையாய் இருந்தது என்று சொல்கிறது. (ஆதியாகமம் 1:2)
ஆனால் பூமி படைக்கப்படும் போது வெறுமையாய் படைக்கப்படவில்லை.( ஏசாயா 45;18)
ஆகவே ஆதியாகமம் 1:1 இற்கும் ஆதியாகமம் 1:2 இற்கும் இடைப்பட்ட கால இடைவெளி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்திருக்க வேண்டும்.
அதாவது தேவன் பூமிக்கு அத்திவாரம் இடுகின்ற போது விடியற் காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி தேவ புத்திரர் எல்லோரும் கெம்பீரித்தார்கள்.( யோபு 38:4-7)
ஆகவே ஆதியிலே பூமி படைக்கப்படுவதற்கு முன்னரே நட்சத்திரங்களும் தேவபுத்திரர்களும் படைக்கப்பட்டார்கள்.
.
ஆனால் ஆதியிலே படைக்கப்பட்டிருந்த தேவபுத்திரர்களில் காப்பாற்றுவதற்காய் கேருபினாக இருந்த தேவதூதன் தன் வியாபாரத்தின் மிகுதியினால் அவனுடைய கொடுமை அதிகரித்து பாவஞ்செய்தான். ஆகையால் அவன் தேவனுடைய பர்வத்தில் இருந்து தள்ளப்பட்டான்.( எசேக்கியேல் 28:16)
தேவனுக்கு எதிராகச் செயற்படுகிறவர்களுக்கு வெளிச்சம் தடுக்கப்பட்டு இருள் தண்டனையாகக் கொடுக்கப்படும்.(யாத்திராகமம் 10:21)
அவனுடைய பாவத்தின் நிமித்தமாய் தண்டனையாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பூமிக்கான நட்சத்திரங்களின் வெளிச்சத்தை தேவன் தடை செய்தார். அதாவது பூமியை இருளாக்கினார். அதனால் பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாக இருந்தது.(ஆதியாகமம் 1:2)
அதன் பின் மனிதனைப் படைப்பதற்கு சித்தம் கொண்ட தேவன் தடைப்பட்டிருந்த வெளிச்சத்தை மீண்டும் உண்டாகும் படி சொல்கிறார்.அப்போது முதலாம் நாளாகிறது (ஆதியாகமம் 1:3). பின்னர் நாலாம் நாளில் நட்சத்திரங்களில் பகலை ஆழ பெரிய சுடரும் இரவை ஆழ சிறிய சுடருமாக உண்டாகும் படி சொல்கிறார்(ஆதியாகமம் 1:16 ).
எனவே ஆதியிலே நட்சத்திரங்களின் வெளிச்சம் இருந்தது.அவை நாலாம் நாளில் தேவைக்கேற்ப பெரிய சுடர் என்றும் சிறிய சுடர் என்றும் தேவனால் உண்டாக்கப்பட்டது.

[8/16, 7:25 PM] Elango Gopal: படைப்பின் வரலாறு பாகம் 1
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள படைப்பின் நிகழ்ச்சிகளை கால
வரிசைப்படுத்துவதற்காக ஆராய்ந்து கற்று கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கம்
ஆகும்.
1. சூரியன் நான்காவது நாள் உண்டாக்கப்பட்டது என்றால் (ஆதி 1:14-19)
முதலாவது நாள் சாயங்காலமும் விடியற்காலமும் வந்தது எவ்வாறு (ஆதி 1:5)?
2. முதலாவது நாள் வந்தது எப்படி?
3. சூரியனும் நட்ச்சத்திரங்களும் இல்லாத போது வெளிச்சம் உண்டாகக்கடவது
என்று தேவன் கூறியதும் உண்டான வெளிச்சம் என்ன?
மேலே எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவைகளே. இவற்றிக்கு வேதத்தின்
அடிப்படையிலேயே பதில்கள் தேடுவோம் வாருங்கள்........
முதலாம் நாள் :-
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி 1:1). என்ற
வசனத்திலுள்ள ஆதியும் ஆதியாகம் 1:5 இல் கூறப்பட்டுள்ள முதலாம் நாளும்
ஒன்றாக இருக்க முடியாது. ஏனெனில் வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன்
சொன்ன பின்னர் தான் முதலாம் நாள் ஆயிற்று (ஆதி 1:2-5). ஆனால் பூமியின்
ஆழத்தில் இருள் இருந்ததும் ஜலத்தின் மீது தேவ ஆவியானவர் அசைவாடினதும்
இந்த முதலாம் நாளுக்கு முந்தையது (ஆதி 1:2). எவ்வளவு காலம் (ஆண்டுகள்)
அசைவாடினார் (பூமியை தயார்படுத்தினார்) என்று கூறப்படவில்லை. எனவே
"முதலாம் நாள் என்பது இந்த யுகத்தின் முதலாம் நாள் ஆகும்." " அது ஆதியின்
முதலாம் நாள் அல்ல."
பூமியை அஸ்திபாரப்படுத்தியது எப்போது? :-
(யோபு 38:4-7) இல் பூமியை தேவன் அஸ்திபாரப்படுத்தி அதின் கோடிகல்லை வைத்த
நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.
இதை சற்று ஆராய்ந்தால் அச்சமயத்தில் நட்ச்சத்திரங்களும் தேவ தூதர்களும்
இருந்தனர் என்று காண்கிறோம். ஏனெனில் தேவன் பூமியை
அஸ்திபாரப்படுத்துகையில் நட்ச்சத்திரங்கள் ஏகமாய்பாடி தேவபுத்திரர்
கெம்பிரித்தார்கள் (யோபு 38:7). அதாவது பூமியை படைக்கும் முன்னரே தேவன்
நட்ச்சத்திரங்களையும் தூதர்களையும் படைத்திருந்தார். நட்ச்சத்திரங்கள்
படைத்திருந்தால் ஒளி இருந்திருக்கும் அல்லவா? மேலும், சூரியனும்
நட்ச்சத்திரங்களில் ஒன்று என்பதாலும் விடியற்காலம் என்று
கூறப்பட்டிருப்பதாலும் சூரியனும் இருந்திருக்குமே? இதற்காண விளக்கத்த
பார்ப்போம்.
ஆதி என்றால் என்ன? :-
ஆதி 1:1 ல் கூறப்படும் ஆதி என்ற காலம் ஒரு குறிப்பிட்ட ஆண்டு, மாதம்,
தேதி, மணி என்பதில்லை. ஆதி என்பது ஒரு நீண்ட கால இடைவெளி என்பதை "முதலாம்
நாள்" என்ற தலைப்பில் மேலே பார்த்தோம். ஒரு மனிதனின் வாழ்நாள் என்பது பல
ஆண்டுகளை குறிப்பது போலவே ஆதி என்பதும் பல ஆண்டுகள் கொண்ட கால இடைவெளியை
குறிக்கிறது. மேலும், பூமியை படைப்பதற்கு முன்பே நட்ச்சத்திரங்கள்,
தூதர்களை தேவன் படைத்துவிட்டார் என்பதால் (யோபு 38:4-7) யாவற்றையும் ஒரு
நொடியில் படைக்காமல் படிப்படியாக படைத்தார் என்பது தெளிவு.
ஆதிகால யுகங்கள் :-
ஆதி என்கிற காலத்திலிருந்து ஆதி 1:5 இலுள்ள முதலாம் நாளுக்கு இடையில்
உள்ள காலத்தை மூன்று யுகங்களாக பிரிக்கலாம்.
1. ஆதிகால யுகம் ஒன்று :-
வின்மீன்களும் (சூரியனும்) தேவ தூதர்களும் படைக்கப்படுதல். இது எவ்வளவு
ஆண்டுகள் என்பது தெரியாது. பூமிக்கு அஸ்திபாரம் போடும் வரை இந்த யுகம்
இருந்தது (யோபு 38:4-7)
2. ஆதிகால யுகம் இரண்டு :-
பூமிக்கு கோடி கல்லை வைக்கும்போது இந்த யுகம் தொடங்கியது. யாவற்றையும்
"நல்லது என்று காணும்" தரத்தில் படைப்பது தேவனின் பண்பாகும். எனவே அவர்
படைக்கும் பொழுது பூமி ஒழுங்கின்மையும் வெறுமையாகவும் இல்லை (ஏசா 45:18).
பூமி படைக்கப்பட்ட போது ஆர்ப்பரித்த தேவ தூதரில் ஒரு பகுதியினர் பின்னர்
பூமியில் குடியிருக்கும்படி தேவன் செய்தார். அவ்வாறு பூமியில் இருந்த
தூதரில் ஒரு கேரூபான லூசிபர் தன்னுடன் ஒரு கூட்டம் தூதர்களை
சேர்த்துக்கொண்டு தேவனுக்கு எதிராக புரட்ச்சி செய்தான் (ஏசா 14:12-14;
எசே 28:12-19).
புரட்ச்சி தோற்க்கடிக்ப்பட்டு புரட்ச்சியாளர்கள் கீழே தள்ளப்பட்டனர்.
மேலும் அச்சமயத்தில் பெருவெள்ளம் உண்டாயிற்று என்றும் (2பேது 3:5-6) அதை
தொடர்ந்து தேவனின் தன்டனைகளின் (வாதை) ஒன்றான இருள் பூமியின் மீது
அனுப்பபட்டது என்பதையும் அறிகிறோம்.
இந்த நிகழ்ச்சியை "இருளை அதற்க்கு (பூமிக்கு) புடவையாக உடுத்தின போதும்"
என்று யோபு 38:9 கூறுகிறது. அதாவது சூரியன், நிலா, நட்ச்சத்திரங்களின்
ஒளி பூமியின் மீது விழாதபடி தேவன் தடைசெய்தார். இவ்வாறு எகிப்தியர் மீது
காரிருளை அனுப்பியதும் (யாத் 10:21-23) இயேசு சிலுவையில் இருந்த போது
பூமியெங்கும் காரிருள் உண்டானதும் (மத் 27:45) இன்னும் இவ்வாறு நடக்க
போகிறதும் (ஆமோ 8:9; வெளி 8:12; 9:2; 16:10) இத்தகய நிகழ்ச்சிகள் எடுத்து
காட்டாக உள்ளது. இருள் சூழ்ந்த உலகம் ஒழுங்கின்மையும் வெறுமையுமானது (ஆதி
1:2). பூமியின் படைப்பிலிருந்து லூசிபரின் வீழ்ச்சியின் காலம் வரை,
பூமியை இருள் மூடும் வரை "ஆதிகால யுகம் இரண்டு" என கருதலாம்..

[8/16, 7:27 PM] Elango Gopal: படைப்பின் வரலாறு பாகம் 2
3. ஆதிகால யுகம் மூன்று :-
பூமியின் மீது இருள் சூழ்ந்திருந்த காலத்தை ஆதிகால யுகம் மூன்று என
அழைக்கலாம். ஒளி இல்லாததால் வெப்பம் தனிந்து கடுங்குளிர் ஏற்ப்பட்டது.
உலகமெங்கும் உள்ள நீரின் மேல்பரப்பு பனிகட்டியாக உறைந்திருக்கும்.
காற்றில் இருந்த ஈரப்பதம் பனித்துளிகளாகி நிலத்தின் மீது வாழுந்து
பூமியெங்கும் பனிகட்டி படலம் இருந்திருக்கும். (பனிகட்டி படலத்தின் மீது)
நீரின் மீது ஆவியானவர் அசைவாடினார் என கருதலாம். மேலும் குளிரினால் மேகம்
தரைமட்டும் இறங்கி தரையை தொட்டுக்கொண்டு இருந்திருக்கும். தேவன் மேகத்தை
பூமிக்கு வஸ்திரமாக உடுத்தினார் என்று யோபு 38:9 கூறுகிறது.
வெளிச்சம் உண்டாகக்கடவது :-
வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன் கூறிய போது, பூமியின் மீது ஒளி
வீசுவதற்க்கு இருந்த தடையை தேவன் நீக்கியதால் பூமியின் மீது மீண்டும் ஒளி
வீசியது.
பூமியை சுற்றி ஆடையை போன்று மேகம் இருந்ததால் (யோபு 38:9) சூரிய ஒளி
பூமியின் மீது நேரடியாக விழாமல் மேகத்தின் மீது விழுந்து பூமியின் மீது
மங்களாக தெரிந்தது. எனவே சூரியன் நேரடியாக தெரியாத போதிலும் சாயங்காலமும்
விடியற்காலமும் இருந்தன. "இருள் நீக்கப்பட்ட புதிய யுகத்தின் முதலாம்
நாள் உண்டானது." "வெளிச்சம் உண்டாகக்கடவது" (Let there be light- ஒளி
தோன்றுவதாக) என்று தேவன் கூறினார். வெளிச்சம் படைக்கப்படகடவது என்று
கூறவில்லை.
"சிருஷ்டித்தார்" என்பதின் எபிரெய சொல் BARA இந்த சொல் ஆதி 1:1,21,27 இல்
மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிச்சம் உண்டாகக்கடவது என்று கூறும்
போது அந்த சொல் பயன்படுத்தப்படவில்லை.
இரண்டாவது நாளில், சூரிய ஒளி மேகங்கள் மீது படுவதால் வெப்பம் உண்டானதால்
பூமியை தொட்டுக்கொண்டிருந்த மேகம் மேலே எழும்பிய போது பூமியின் மீதிருந்த
நீருக்கும் (பனிபடலத்திற்கும்) மேகத்திற்கும் இடையே ஆகாய விரிவாகிய
இடைவெளி உண்டாயிற்று (ஆதி 1:6-8) இதற்கு வானம் என்று தேவன் பெயரிட்டார்.
மூன்றாவது நாளில, பூமியின் மீது இருந்த பனிகட்டி படலம் உருகிய போது
வெட்டாந்தரை காணப்பட்டது. செடிகள், மரங்கள், காளான்கள் போன்றவை
உண்டாகும்படி தேவன் செய்தார் மூன்றாவது நாளில, பூமியின் மீது இருந்த
பனிகட்டி படலம் உருகிய போது வெட்டாந்தரை காணப்பட்டது. செடிகள், மரங்கள்,
காளான்கள் போன்றவை உண்டாகும்படி தேவன் செய்தார் (ஆதி 1:9-13)
நான்காவது நாளில் மேகங்கள் சற்று விலகவும் சூரியன், நிலா,
நட்ச்சத்திரங்களின் ஒளி பூமியில் நேரடியாக விழும்படி தேவன் வழி
உண்டாக்கினார். இதுவும் படைப்பின் செயலன்று. உண்டாகக்கடவது (Let there
be.., made) என்று தான் தேவன் உரைத்தார் (ஆதி 1:14-19). ஏற்கனவே தேவனால்
படைக்கப்பட்டிருந்தவை, தேவன் இவ்வாறு கூறியதும் நேரடியாக பூமியின் மீது
செயல்ப்பட்டன. காலங்களை குறிப்பதறகென அவைகள் நியமிக்கப்பட்டன.
பறவைகளையும், மீன்களையும் மற்ற நீர்வாழ் இனங்களையும் தேவன் ஐந்தாம் நாள்
படைத்தார் (சிருஷ்டித்தார் - BARA ஆதி 1:20-23). பின்னர் ஆறாம் நாளில்
விலங்கினங்களையும் இறுதியில் மனிதனையும் படைத்தார் (சிருஷ்டித்தார் -
BARA ஆதி 1:24-27).
யாத் 20:11 இல் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் ஆறு நாட்களில்
படைத்தார் என்பது ஆகாய விரிவாகிய வானத்தையும் வெட்டாந்தரையையும் கடலையும்
அதிலுள்ள உயிரினங்களையும் ஆறு நாட்களில் உருவாக்கினதை கூறுகிறது

[8/16, 8:18 PM] Tamilmani: LIGHT CREATION
You need to understand even in the first day God created light and separate dark now in the fourth day God created the ruling entity for light that is sun and ruling party for dark is moon. You need to keep in mind that there are lots of stars and plantes have been there in the firmament creation but to govern those day and night sun and moons are created.. The light in the first day but governing body in the fourth day..it is amazing
 Light is not a single entity it is a components of many for such component sun is the governor likewise moon is the governor for darkness
So governors were created in the fourth day that's it.

[8/16, 8:19 PM] Tamilmani: தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். 👆🏾👆🏾👆🏾

[8/16, 8:27 PM] Tamilmani: ஒளி என்பது தனியானது அல்ல. பல கூறுகள் உள் அடங்கியது. சூரியன்    ஒர் ஆளுகை. பகலின் ஆளுகை.  அதேபோல் சந்திரன் ஓர் ஆளூகை.

[8/16, 8:28 PM] Tamilmani: இரவின் ஆளூகை சந்திரன்.

[8/16, 8:29 PM] Tamilmani: இந்த ஆளுகைகள்தான் 4ம் நாளில் சிரிஷ்டிக்கப்பட்டது.