Type Here to Get Search Results !

சங்கீத புஸ்தகங்களின் முகவுரை


 [10/10 8:09 am] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 10/10/2017*☀

1⃣ *சங்கீதம் அல்லது திருப்பாடல்கள் என்றால் என்ன❓*

2⃣ சங்கீத புஸ்தகங்களை எழுதியது யார்❓

3⃣ சங்கீதம் புஸ்தகங்கள் எப்படியெல்லாம் பகுக்கப்பட்டிருக்கிறது❓

4⃣ சங்கீத புஸ்தகங்களின் அவசியமென்ன❓

5⃣ சங்கீத புஸ்தகங்களை எந்த காலத்தில் ஏன் எழுதினார்கள்❓

6⃣ சங்கீதங்கள் நாம் இன்றைக்கு பாடல்கள் பாடுவது போல, அந்த காலத்திலே எழுதப்பட்ட  பாடல்களா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[10/10 9:01 am] Elango: *சங்கீதம் புஸ்தகத்தை பற்றி சிறு குறிப்பு:-*✍✍✍

யாக்கோபு 5:13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; *ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.*  🎷🎷🎷🎷🎤🎤🎤🎻🎻🎸🎸🎺🎺

- 150 சங்கீதங்களை எழுதியவர்கள் பலர் ஆவார்கள். தேவ ஆவியினால் உந்தப்பட்டு தேவ மனிதர்களால் எழுதப்பட்டது.

II சாமுவேல் 23:2 *கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.*

- இந்த 150 சங்கீதங்களிலும் சந்தோஷம், துதி, சோகம், துக்கம், ஆராதனை, தீர்க்கதரிசனம், ஜெபம், துரோகம், அன்பு... எனறு பல அரிய சத்தியங்களை நாம் பார்க்கலாம்.

- பலர் சோகத்திலும், துக்கத்திலும் அமிழ்ந்து இருக்கும் போது சங்கீதம் புஸ்தகத்தை ஆறுதலான, தேறுதலான வசனத்தை வாசித்து விசுவாசித்து தன்னை தேற்றிக்கொள்ளுவார்கள்.

- சங்கீதங்கள் கவிதை நடை கொண்டது, இருதயத்தை ஊற்றி ஜெபத்தை வெளிப்படுத்தக்கூடியது உண்டு.

- புதிய ஏற்ப்பாட்டில் அநேக தேவ மனிதர்கள் சங்கீத புஸ்தகத்திலிருந்து மேற்க்கோள் காட்டுகின்றனர். ஆண்டவர் இயேசுகிறிஸ்துவும் சங்கீதம் புஸ்தகத்திலிருந்து வசனத்தை மேற்க்கோள் காட்டுகிறார்.

லூக்கா 20:43 கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று *தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.*
அப்போஸ்தலர் 13:35 அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று *வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.*
எபிரெயர் 4:7 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு *தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி* இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒருநாளைக் குறித்திருக்கிறார்.
ரோமர் 15:9 புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, *சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது*.

அநேகருக்கு சங்கீதத்தில் எல்லா தேவ வசனங்களும் பிடிக்கும் என்றாலும், மிகவும் நினைப்பூட்டும் சங்கீத வசனம் - சங்கீதம் 84:6 *அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.*😭😭😭😭😭😭😂😂😂😂💃💃💃💃💃💃💃

[10/10 9:04 am] Elango: 2⃣ சங்கீத புஸ்தகங்களை எழுதியது யார்❓

*எழுதியவர்கள் - தாவீதும், மற்றவர்களும்*

*மையக்கருத்து* 👇🏻

 ஜெபங்களும், துதிகளும்

*எழுதப்பட்ட காலம்*👇🏻

பெரும்பாலும் கி.மு 10-5 நூற்றாண்டுகள்

[10/10 9:09 am] Aasai Elavendan Pastor VDM: சங்கீதம்  வேதத்தில் உள்ள பாடல் புத்தகங்களில் ஒன்று.

[10/10 9:10 am] Elango: சங்கீதம் என்றாலே பெரும்பாலும் கிறிஸ்தவர்களுக்கு ஞாபகத்திற்க்கு வருவது 🤔🤔👇🏻👇🏻

*கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்...*

சங்கீதம் 53👈👇🏻

சங்கீதம் 51:1-3
[1]தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
[2]என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
[3]என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.

[10/10 9:12 am] Aasai Elavendan Pastor VDM: சங்கீதம் அனேக தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியது.குறிப்பாக மேசியாவின் சங்கீதங்கள்.

[10/10 9:46 am] Elango: *சங்கீதம் - முகவுரை*

பழைய காலங்கொண்டு 150 சங்கீதங்களும் ஐந்து புத்தகமாக அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொரு ஆசீர்வாதங்களோடிருந்தன. 👇🏻👇🏻

*சங்கீதம் - 1-41  ( முதல் புத்தகம் )*

ஆசிரியர் - முக்கியமாக தாவீது

மிக உயர்ந்த தெய்வீக நாமம் - யெகோவா ( கர்த்தர் )

தேவ பண்பு - சிருஷ்டிகள்

முக்கிய தலைப்பு - மனிதரும் சிருஷ்டிப்பும்

ஐந்து ஆகமங்களின் தோற்றத்தில் ஒற்றுமை - ஆதியாகமம்

[10/10 9:48 am] Elango: *சங்கீதம் -42-72 ( இரண்டாவது புத்தகம் )*

ஆசிரியர் - முக்கியமாக தாவீதும், கோராகின் புத்திரரும்

மிக உயர்ந்த தெய்வீக நாமம் - ஏல்/ ஏலோயீம் ( தேவன் )

தேவ பண்பு  - மீட்பர்

முக்கிய தலைப்பு - விடுதலையும் மீட்பும்

ஐந்து ஆகமங்களின் தோற்றத்தில் ஒற்றுமை - யாத்திராகமம்

[10/10 9:48 am] Elango: *சங்கீதம் - 73-89  ( மூன்றாவது புத்தகம் )*

ஆசிரியர் - முக்கியமாக ஆசாப்

மிக உயர்ந்த தெய்வீக நாமம் - ஏல்/ ஏலோயீம் ( தேவன் )

தேவ பண்பு  - தூய்மைப்படுத்துபவர்

முக்கிய தலைப்பு - ஆராதனையும், பரிசுத்த ஸ்தலமும்

ஐந்து ஆகமங்களின் தோற்றத்தில் ஒற்றுமை - லேவியராகமம்

[10/10 9:49 am] Elango: *சங்கீதம் -90-106  ( நான்காவது புத்தகம் )*

ஆசிரியர் -முக்கியமாக பெயர் தெரியாதவர்

மிக உயர்ந்த தெய்வீக நாமம் - யெகோவா ( கர்த்தர் )

தேவ பண்பு  - பராமரிப்பவர்

முக்கிய தலைப்பு - வனாந்தரமும், தேவனுடைய வழிகளும்

ஐந்து ஆகமங்களின் தோற்றத்தில் ஒற்றுமை - எண்ணாகமம்

[10/10 9:50 am] Elango: *சங்கீதம் - 107 - 150  ( ஐந்தாவது புத்தகம் )*

*ஆசிரியர் - முக்கியமாக தாவீது, அல்லது பெயர் தெரியாதவர்*

மிக உயர்ந்த தெய்வீக நாமம் - யெகோவா ( கர்த்தர் )

தேவ பண்பு  - போதிக்கும் துதிக்குரியவர்

முக்கிய தலைப்பு - தேவனுடைய வார்த்தையும், துதியும்

ஐந்து ஆகமங்களின் தோற்றத்தில் ஒற்றுமை - உபாகமம்

[10/10 9:52 am] Jeyaseelan Bro VDM: 🌹துதியின் புத்தகம் – சங்கீதம்🌹

☀எபிரேய மொழியில் “தெஹில்லீம்” (Tehillim) என்று
அழைப்பர். இதன் பொருள் “துதியின் பாடல்கள்”
என்பதாகும்.

☀ கிரேக்க மொழிப்பெயர்ப்பான
செப்தஜ்வெந்தில் இதனை “ப்சால்மொய்” (Psalmoi)
என்று அழைப்பர். இதன் பொருள் “இசைக்
கருவிகளுடன் பாடப்பட்ட பாடல்” என்பதாகும்.

☀இலத்தீன் மொழியில் இதன் தலைப்பு “லிபெர் ப்
சால் மோரம்” (Liber Psalmorum) என்பதாகும். இதன்
பொருள் சங்கீதங்களின் புத்தகம் என்பதே.

☀சங்கீதங்கள்
ஏறக்குறைய கி.மு 1500 முதல்
கி.மு.450 வரை உள்ள காலக்கட்டத்தில்
எழுதப்பட்டதாகும்.

☀ இவைகள் எழுதப்பட்ட இடம்,
இஸ்ரவேல், பாலஸ்தீணா மற்றும் பாபிலோன்
ஆகும்.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே
19-வது புத்தகமாக வருகிறது.

☀ சங்கீத
புத்தகத்தில் அடங்கியுள்ள அதிகாரங்களை
வரிசைப்படுத்துவதில் சில வேறுபாடுகள்
உள்ளன. மூல மொழியாகிய எபிரேய வேதாகம
வரிசை முறையிலிருந்து கிரேக்க
மொழிபெயர்ப்பு வரிசை முறை
மாறுபடுகின்றது. நம்முடைய வேதாகமத்திலே
பெரும்பாலும் எபிரேய வரிசைமுறையையே
கடைப்பிடித்துள்ளன.

☀ சங்கீதப் புத்தகம் ஐந்து
பாகங்கள் அல்லது பிரிவுகளாக
காணப்படுகின்றது. ஒவ்வொரு பகுதியின்
முடிவிலும் ஸ்தோத்திர வாழ்த்தோடு ஆமென்,
ஆமென் என்ற வார்த்தைகள் வருவதைப்
பார்க்கலாம்.

 ☀ ஒவ்வொரு பிரிவிலுமுள்ள
கடைசி சங்கீதத்தின் இரண்டு வசனங்களை
எடுத்து படியுங்கள். இந்த 5 பாகங்களும்
வேதாகமத்தின் முதல் 5 புத்தகங்களை போல
காணப்படுகின்றன.
 »1 - 41 (படைப்பு) »42 - 72
(மீட்பு) »73 - 89 (பரிசுத்தம்) »90 - 106 (அலைந்து
திரிதல்) »107 - 150 (தேவனைப் போற்றுதல்)

☀தமிழ் வேதத்தில் 150 சங்கீதங்களும் 2026
வசனங்களும் உள்ளன.

☀ 119-வது அதிகாரம்
பெரிய அதிகாரமாகவும் 117-வது அதிகாரம்
சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

 ☀ “கர்த்தர்”
என்று சங்கீத புத்தகத்தில் மட்டும் 650-க்கும்
மேலதிகமாக வருகின்றது.

☀ சங்கீத புத்தகத்தில்
5 அதிகாரங்கள் 5 வசனங்களைக் கொண்டுள்ளது –
சங் 15,70,93,100,125.

☀ தாவீது 73 சங்கீதங்களையும்,
மோசே 1-ம்,
சாலமோன் 2-ம்,
ஆகசாப் 12-ம்,
ஏமான்1-ம்,
ஏத்தான் 1-ம்,
 கோராகின் புத்திரர்கள் 10
சங்கீதங்களையும் எழுதி உள்ளனர்.
மீதமுள்ள 50
சங்கீதங்களின் ஆசிரியர்கள் யாரென்று
தெரியவில்லை.

☀ சங்கீதங்கள் 2 மற்றும் 95
தாவீதால் எழுதப்பட்டதாக இருக்கும் என்கிற (அப்
4:25, எபி 4:7, ஆகிய வசனங்களின் அடிப்படையில்)
கருத்து வெகு நாளாகவே உள்ளது.

☀ “சேலா”
என்கிற வார்த்தை சங்கீத புத்தகத்தில் 71
முறையும் ஆபகூக் புத்தகத்தில் 3 முறையும்
வருகிறது.

☀ “சேலா” என்கிற வார்த்தை,
வாத்தியங்களை ஒரு சில விநாடிகள்
வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியை
மறுபடியும் ஒரு முறை பாடவும், அந்த பாடல்
வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள்
தியானிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

☀சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை
குறித்து படிக்கலாம்.

☀ சங்கீத புத்தகத்தில்
ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97
வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.

☀ சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160
வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும்
ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற
வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

☀ புதிய
ஏற்பாட்டில் மட்டும் 36 தடவை சங்கீதங்களை
மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

 ☀ சங்கீதம் 119 –ல்
ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும்
தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள்
எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

☀ தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும்
எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.

 ☀சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட
வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும்
154 ஆகிய 4 சங்கீதங்கள் உள்ளன

[10/10 9:55 am] Elango: தெரியாத அநேக தகவல்👍👍

[10/10 10:10 am] Elango: *சங்கீத புத்தகங்களின் நோக்கம்*

சங்கீதங்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருந்த ஜெபங்களும், துதிகளுமாகும்.🙏🙏🙏👏👏👏 பொதுவாகக் கூறினால் இவை மனித இருதயத்தின் உள்ளான ஆழமான தேவனோடுள்ள உணர்வுகளை வெளிப்படுத்துவதாகும். ❤❤❤

1. அநேகமானவைகள் தேவனிடம் ஏறெடுக்கும் ஜெபங்களாக எழுதப்பட்டவைகளாகும். 🙏🙏🙏🙏

- *அவை நம்பிக்கை, அன்பு, ஆராதனை, நன்றி கூறுதல், துதி மற்றும் நெருக்கமான ஐக்கியத்துக்கான ஒரு வாஞ்சை இவற்றை வெளிப்ப்டுத்தின.*

- அதைரியம், ஆழ்ந்த மனக்கவலை, பயம், ஏக்கம், அவமானம், தாழ்மை, மற்றும் விடுதலை குணமாக்குதல் அல்லது நியாயத்தை நிலைநாட்டுவது ஆகியவற்றுக்கன ஒரு வேண்டுதலாக உள்ளது.

2. மற்றைவகள் துதி, நன்றி கூறுதல் மற்றும் தேவன் யாரென்பதை உணர்த்தி, அவர் செய்திருக்கிற வல்லமையான காரியங்களுக்காக ஆராதிப்பது ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்க்கு எழுதப்பட்டிருக்கின்றன.

3. *சில சங்கீதங்களில் மேசியாவைப்பற்றிய சத்தியங்கள் உள்ளன. எகா. சங்கீதம் 2, சங்கீதம் 22*

[10/10 10:13 am] Elango: *சங்கீத புத்தகங்களின் சிறப்பு அம்சங்கள்*

1⃣. வேதாகத்தின் மிகவும் பெரிய புஸ்தகம். மேலும் வேதாகமத்தின் மிகப்பெரிய அதிகாரம் அடங்கியிருக்கிறது. சங்கீதம் 119-1-176. மற்றும் மிகவும் சிறிய அதிகாரம் சங்கீதம் 117:1-2. மற்றும் மத்திய வசனம் சங்கீதம் 118:8

2⃣ *எபிரேய பாட்டுபுத்தகம் மற்றும் பக்திக்குரிய புத்தகமாக உள்ளன. அதன ஆவிக்குரிய ஆழம், அகலமானது அந்த சங்கீதங்களை அதிகமாக வாசிக்கும்படிச் செய்கிறது.* மேலும் அதிகமான விசுவாசிகளால் மிகவும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்படுகிற பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. 👑👑✨✨✨✨

3⃣. *அல்லேலுயா ( கர்த்தரை துதியுங்கள்  என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது )*

4⃣. *தேவனுக்கும், மனிதனுக்குமுள்ள தொடர்பினால் எழும் மனித உணர்வுகளையும், தேவைகளையும், முழு அளவில் வெளிப்படுத்துகிறது.*❤💛💛💚💙💜

5⃣. சுமார் பாதி சங்கீதங்கள் கடுமையான துன்ப நேரங்களில் ஏறெடுக்கப்படும் விசுவாசமுள்ள ஜெபங்களை கொண்டது. 😭😭😭😖😖😖😣😣

6⃣ அடிக்கடி புதிய ஏற்ப்பாட்டில் "மேற்கோள்"👇🏻👈☝ காட்டப்பட்டிருகின்ற பழைய ஏற்பாட்டின் புத்தகம் அதுவேயாகும்.

7⃣. தலைசிறந்த இலக்கிய அம்சமானது ஒரு கவிதை நடையில் இணையான கருத்துக்கள் என்று கூறப்படுகிறது. இதில் கருத்து இணைந்து வருகிறது. பிற செய்யுள்களைப் போல் எதுகை, மோனை, தாளம், ஓசை இவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.எனவே ஒரு மொழியிலிருந்து வேறு மொழியில் சிரமமின்றி மொழிபெயர்க்க முடிகிறது‼

[10/10 10:16 am] Elango: *சங்கீதத்தின் மேசியாவைப்பற்றின தீர்க்கதரிசன வசனங்கள் புதிய ஏற்பாட்டில் நிறைவேறுதல்*

மலை பிரசங்கத்தில் ஆண்டவர் இயேசுகிறிஸ்து சங்கீத பகுதியை பயனப்டுத்தியிருப்பதை பார்க்கலாம்.🗣🗣🗣 கிறிஸ்துவை பற்றின எல்லா தீர்க்கதரிசனங்களிலும் சங்கீதங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறவைகளாக இருக்கிறது.

1.  இயேசுவை தீர்க்கதரியாக, ஆசாரியராக மற்றும் இராஜாவாக

2. அவருடைய முதல் மற்றும் இரண்டாம் வருகை

3. அவருடைய குமாரத்துவத்தை பற்றியும்.

4. அவருடைய பாடுகளும், பாவ நிவாரண மரணமும்

5. அவருடைய உயிர்த்தெழுதல்

[10/10 10:19 am] Elango: *சங்கீதங்களின் உருவரை - Outline*👇🏻👇🏻

சங்கீதம் 1 - 41

1. வாழ்வின் இருவழிகள் ஒப்பீடு

2. அபிஷேகிக்கப்பட்டவரின் முடிசூடுதல்

3. தோல்வி முனையில் வெற்றி

4. விடுதலையின் இரவு ஜெபம்

5. விடுத்லையின் காலை ஜெபம்

6. தேவ இரக்கத்துக்காக ஜெபம்

7. துன்மார்க்கம் பெறு தீர்ப்பு

8. தேவ மகிமையும் மனித உயர்வும்

9. எதிரிகள் மேல் வெற்றிக்கு நன்றி

10. தேவ நியாயத்தீர்ப்புக்கு விண்ணப்பம்

11. மனுபுத்திரரைப் பரிசோதிக்கும் தேவன்

12. தேவனின் தூயச் சொற்கள்

13. தேவனின் உடனடி பதிலுக்கான ஜெபம்

14. நாத்திகரின் பண்பு

15. தேவப்பயமுடையோரின் பண்பு

16. சார்ந்து கொள்வோரின் நித்திய வாழ்வு

17. தேவச் சிறகில் மறைக்க ஜெபம்

18. தேவ விடுத்லைக்கு நன்றி

19. தேவனின் வார்த்தைய்ம் செயலும்

20. அரசரை விடுவியும்

21. அரசரின் வெற்றி

22. சிலுவையின் சங்கீதம்

23. தேவ மேய்ப்பரின் கீதம்

24. மகிமை அரசரின் கீதம்

25. போதனையின் அகர கீதம்

26. புடமிட்டுப் புனிதமாக்கும்

27. தேவ மார்பு சார்ந்து பயமற்றிரு

28. ஜெபப் பதிலால் வந்த ஆனந்தம்

29. தேவனின் வலிமைமிக்க சத்தம்

30. பிரதிஷ்டையின் பாடல்

31. திடமனதாயிரு

32. மன்னிப்பின் ஆசீர்வாதம்

33. தேவ பண்பையும், பணியையும் பாடும் புகழ்ப்பா

34. மிட்கப்பட்டவரின் அறிவுரை

35. தேவ உதவிக்கான மன்றாட்டு

36. தேவனின் மாட்சிமிக்க மனஉருக்கம்

37. தேவனில் இளைப்பாறு

38. நோயுற்றவனின் மன்றாட்டு

39. நம்பிக்கையற்றோரின் நம்பிக்கை

40. தேவ சித்தம் செய்ய விரும்பு

41. கைவிடப்பட்டோருக்கு ஆறுதல்

[10/10 10:27 am] Elango: *சங்கீதங்களின் உருவரை* - சங்கீதம் 42-72 -

42. தேவனுக்கான வாஞ்சை

43. தேவனில் நம்பிக்கை

44. நம்பிக்கை இழப்பில் தேசம்

45. அரச திருமண கீதம்

46. பரம் புகலிடமும் பெலனும்

47. பூமியின் தேவராஜா

48. சீயோனின் கீதம்

49. மிட்கத் திறனற்ற செல்வம்

50. அனைவருக்கும் நீதிபதி

51. பாவ அறிக்கையும் மன்னிப்பும்

52. வஞ்சகரைத் தட்டியெழுப்பும் காலம்

53. நாத்திகரின் நாசநிலை

54. தேவன் நமது உதவியாளர்

55. தேவனில் சுமையை இறக்கு

56. அலைச்சலில் அமர்ந்திரு

57. விடியலைத் தட்டியெழுப்பும் காலம்

58. அநியாயத் தீர்ப்புகள் தீர்ப்புபெறும்

59. நாசகார நாய்களுக்குத் தப்புவியும்

60. தேசத்தின் விடுதலைக்கான விண்ணப்பம்

61. இதயம் தொய்யும் நேர ஜெபம்

62. கர்த்தருக்கு காத்திரு

63. தேவனுக்காக தாகம்

64. தேவ பாதுகாப்புத் தேடி

65. இயற்கையால் பராமரிக்கும் தேவன்

66. கர்த்தர் செய்ததை நினைத்து

67. தேவன் உலகை ஆளுவார்

68. இஸ்ரவேலின் வெற்றியரசர்

69. தாழ்ச்சியில் ஒரு மன்றாட்டு

70. சீக்கிர விடுதலிக்காக ஜெபம்

71. முதுமையின் ஜெபம்

72. மேசியாவின் ஆளுகை

[10/10 10:28 am] Jeyakumar Toothukudi VTT: Praise the lord
,சங்கீத வசனத்தில் bracket _ல் சேலா  என்று அடிக்கடி வருகிறதே. அதற்கு என்ன அர்த்தம்?
         BRO.R.jeyakumar

[10/10 10:36 am] Elango: *சேலா என்பதன்  அர்த்தம் எபிரேய மொழியில் இரு வேறு அர்த்தமாக எண்ணப்படுகிறது.*

 அதை 7 வகையாகவும் தமிழில் பிரிக்கலாம்.

“சேலா” என்பதற்கு 7 வித கருத்து விளக்கங்கள் உண்டு. அவை…

1. இரண்டு கருத்துக்களையும் இணைத்தல் – சேலா.

2. பாடிக் கொண்டே இருக்கும்போது இடையில் நிறுத்துவது – சேலா.

3. எப்போதும் அதுதான் உண்மை என்று ஸ்தாபிப்பதற்கு என்று உபயோகப்படுத்துவது – சேலா.

4. திரும்பத் திரும்ப அதையே சொல்லுதல் – சேலா.

5. மெதுவாக பாடுகிறவன் சத்தத்தை உயர்த்திப் பாடுகிறான் – சேலா.

6. ஸ்பிரிதம் விடுதல் அல்லது பரப்பி விடுதல் அதாவது, இராகம் விடுதல் – சேலா. (உ.ம்) “நன்றி ராஜா… நன்றி ராஜா…”

7. பாடிக் கொண்டு இருக்கும்போதே வாத்தியக் கருவியில் ஒரு இடைச் சொருகல் – சேலா.

- தமிழ்மணி ஐயா @Tamilmani Ayya VDM

[10/10 10:37 am] Elango: *சங்கீதங்களின் உருவரை* - சங்கீதம் 73-89

73. நீதிமானின் அளவுகோல்

74. தேவன் நினைக்க வேண்டுதல்

75. தேவனே நீதிபதி

76. தேவனின் மகத்துவ வலிமை

77. தளர்ச்சியில், தேவ மகத்துவம் நினைத்தல்

78. இஸ்ரவேலின் அவிசுவாசத்திலும் தேவ உண்மைத்துவம்

79. எழுசலேமின் அழிவுக்குப் பழிவாங்கல்

80. சீர்படுத்த மன்றாட்டு

81. கீழ்ப்படிதலுக்குத தேவ அறிவுரை

82. இஸ்ரவேலின் நீதியற்ற நீதிபதிகள் பெறும் தீர்ப்பு

83. இஸ்ரவேலின் எதிரிகள் அழிவு பெற வேண்டுதல்

84. தேவனுடன் வாழ்வதன் இன்பம்

85. எழுப்புதலுக்கான ஜெபம்

86. உமது பாதையைப் போதியும்

87. தேவ நகரின் மகிமை

88. ஆழ்ந்த துயரின் அழுகை

89. தாவீதுக்கான வாக்குத்தத்தின் மேல் உரிமை கொண்டாடல்

[10/10 10:39 am] Elango: *சங்கீதங்களின் உருவரை*   சங்கீதம் 90-106

90. நாட்களை எண்ணும் அறிவு தாரும்

91. தேவச் சிறகின் நிழலில்

92. தேவனைத் துதிப்பது நலமானது

93. தேவனின் மாட்சிமை

94. பழிவாங்குதலுக்கு உரியவர்

95. இதயங்கள் பாறையாகக் கூடாது

96. தேவ அரசரை வாழ்த்துவோம்

97. தேவன் ஆள்கிறார், ஆனந்தமடைவோம்

98. புதுப்பாட்டைப் பாடுவோம்

99. தேவதேவனை உயர்த்துவோம்

100. ஆராதனைக்கு அழைப்பு

101. தூய வாழ்வுக்கான அற்பணம்

102. உலர்ந்த தூயனின் ஜெபம்

103. நன்மைகளை எண்ணிப் போற்றிடு

104. சிருஷ்டியைப் பார்த்துப் போற்றிடு

105. வாக்கைக் காக்கும் வல்லவர்

106. திரும்பிப் பார்த்து திகைத்தல்

[10/10 10:41 am] Elango: *சங்கீதங்களின் உருவரை*     சங்கீதம் 107-150

107. தேவனின் ஆச்சரிய செயல்கள்

108. கர்த்தரால் வெற்றிவாகை

109. துன்மார்க்கரைத் தண்டியும்

110. அரச ஆசாரிய நீதிபதியின் வருகை

111. தேவனின் அக்கறைக்கு நன்றி

112. தேவபயமுடையோரின் நல்வாழ்வு

113. இறங்கி வரும் தேவக் கிருபை

114. யாத்திராகமச் சங்கீதம்

115. செவிட்டூமை விக்கிரகங்களும் தேவனும்

116. அருமையான முடிவுகள்

117. அனைத்து நாடுகளின் துதி

118. பற்றிக் கொள்ளத்தகுந்த நல்ல தேவன்

119. வேதாகமத்தின் அகர சங்கீதம்

120. அழுகைப் பள்ளத்தாக்கின் குரல்

121. பராமரிக்கும் தேவகரம்

122. எருசலேம் சமாதானமாக வாழ் ஜெபம்

123. தேவ இரக்கத்துக்கான மன்றாட்டு

124. தேவன் எமது பக்கம்

125. பாதுகாப்பின் பாடல்

126. கண்ணீரைத் தூவி கம்பீரமாய் அறுத்தல்

127. பிள்ளைகள் என்னும் ஆசீர்வாதம்

128. உலகின் பரதீசு

129. த்யரப்படுவோனின் குரல்

130. கர்த்தருக்குக் காத்திருக்கும் ஆத்துமா

131. தாழ்மையின் கீதம்

132. தாவீதின் தேவன் மேல் பற்றுதல்

133. ஒற்றுமையின் அருமை

134. கர்த்தரைப் போற்றும் காவலர்

135. தேவ மகத்துவத்தைத் துதித்தல்

136. கர்த்தர் கிருபை என்றென்றும்

137. சிறையின் கண்ணீர்த் துளிகள்

138. தேவ வழிகளைப் புகழ்தல்

139. தேவனுடன் வாழ்தல்

140. கொடுமைக்கு விலக்கிக் காத்தருளும்

141. சோதனையிலிருந்து விடுதலை

142. நீரே என் அடைக்கலம்

143. உம் சித்தம் செய்ய்க் கற்றுத்தாரும்

144. கர்த்தரைத் தேவனாக கொண்ட சீர்பெற்ற ஜனம்

145. பெரிய காரியங்களின் தேவன்

146. பிரபுக்களை நம்பாதீர்

147. பாதுகாப்பும் பராமரிப்பும் தரும் பரமன்

148. படைப்புக்கள் யாவும் புகழும் தேவன்

149. பரமனின் ராஜ்யம்

150. கர்த்தரை துதிங்கள்

[10/10 10:43 am] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 10/10/2017*☀

1⃣ *சங்கீதம் அல்லது திருப்பாடல்கள் என்றால் என்ன❓*

2⃣ சங்கீத புஸ்தகங்களை எழுதியது யார்❓

3⃣ சங்கீதம் புஸ்தகங்கள் எப்படியெல்லாம் பகுக்கப்பட்டிருக்கிறது❓

4⃣ சங்கீத புஸ்தகங்களின் அவசியமென்ன❓

5⃣ சங்கீத புஸ்தகங்களை எந்த காலத்தில் ஏன் எழுதினார்கள்❓

6⃣ சங்கீதங்கள் நாம் இன்றைக்கு பாடல்கள் பாடுவது போல, அந்த காலத்திலே எழுதப்பட்ட  பாடல்களா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[10/10 11:16 am] Prabhu Sasirekha Bro VDM: சங்கீதம்  👌🏻சகோ

[10/10 11:44 am] Gideons VTT: ☀சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட
வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும்
154 ஆகிய 4 சங்கீதங்கள் உள்ளன.

ஐயா 151,152,153,154 அதிகாரங்களில் எதாவது ஒரு வசனம் கிடைக்குமா?

[10/10 12:18 pm] Senthil Kumar Bro VTT: கிறிஸ்துவின் வசனம் உங்களக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக. *சங்கீதங்களினாலும்* ஞானப்பாட்டுகளினாலும் *ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு,* உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி,
கொலோசெயர் 3:16

 *சங்கீதங்களினாலும்* கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் *ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு* , உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
எபேசியர் 5:19

இதை தியானமாய் படித்தால்தான் ஒருவருக்கு ஒருவர் புத்தி சொல்ல முடியும்.... .....


இதற்குத்தான் சங்கீதம் *எழுதப்பட்டதா* ....?

[10/10 12:27 pm] Silvaster VTT: தேவனுக்கே மகிமை 🙏🏽
அனேக விஷயங்களை  சொல்லியிருக்கிறீர்கள் .
கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக

[10/10 1:52 pm] Bhascaran Ayya VDM: ஆரோக்யமான தியானம்🙏🙏👍🏻

[10/10 2:25 pm] Kishore VDM: சங்கீதங்களின் உருவரை(outline)
மிகவும்  பயனுள்ளதாக இருக்கிறது .praise the LORD🙏🤝

[10/10 2:58 pm] Elango: *சங்கீதம் / திருப்பாடல் முன்னுரை*

 'திருப்பாடல்கள் ' என்னும் இந்நூல் விவிலியப் பக்திப் பாடல்கள், இறை மன்றாட்டுகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும்.

பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு கவிஞர்களால் இயற்றப்பட்ட இப்பாடல்களை இஸ்ரயேல் மக்கள் தங்கள் வழிபாட்டில் பயன்படுத்தினர். காலப் போக்கில் இவற்றின் தொகுப்பு அவர்களது திருமறை நூலின் முக்கியப் பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 இப்பக்திப் பாடல்கள் பல வகைப்படும்: அவையாவன :

 கடவுளைப் புகழ்ந்து வழிபடுவதற்கானவை. கடவுளிடம் உதவி, பாதுகாப்பு, மீட்பு வேண்டிப் பாடியவை. மன்னிப்பு வேண்டும் மன்றாட்டுகள்.

கடவுள் வழங்கிய ஆசிகளுக்கு நன்றி செலுத்தும் பாடல்கள். அரசர் பற்றிய பாடல்கள். அறிவுரை அளிக்கும் பாடல்கள்.

இவை தனி மனிதரின் வேண்டுதலாகவோ, நாட்டு மக்களின் மன்றாட்டகவோ அமைந்துள்ளன.

 இவற்றுள் பல, தனிப்பட்ட இறையடியாரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன; ஏனையவை இஸ்ரயேல் இனத்தின் நாட்டங்களையும் உணர்ச்சிகளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. கிறிஸ்து இயேசுவின் திருவாழ்விலும் திருப்பணியிலும், திருப்பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன.

புதிய ஏற்பாட்டிலும் இப்பாடல்கள்; மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இப்பாடல்கள் கிறிஸ்துவத் திருமறையிலும் திருச்சபையின் இறை வழிபாட்டிலும் தொடக்கத்திலிருந்தே சிறப்பிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*நூலின் பிரிவுகள்*

முதல் பகுதி 1 - 41 இரண்டாம் பகுதி 42 - 72 மூன்றாம் பகுதி 73 - 89 நான்காம் பகுதி 90 - 106 ஐந்தாம் பகுதி 107 - 150

[10/10 3:54 pm] Reethan Pastor VTT: சங்கீதம் தியானம் அருமை,மிகவும் பிரயோஜனமாக உள்ளது,

[10/10 5:26 pm] Senthil Kumar VTT: it is very useful for us  👌👌👌

[10/10 7:04 pm] Elango: *அநேகருக்கு இன்றும் மறக்காத, மறக்கமுடியாத சங்கீதம் 51 - பாவத்தை அறிக்கை செய்தல்*

1. மெய்யான உத்வேகத்துடன் உங்களை நீங்களே பரிசீலனை செய்யுங்கள் [2 கொரி. 13:5]

2. நீங்கள் எதைக் காண்கிறீர்களோ அதன்படி செயல்படுங்கள்  [ரோமர் 4:7-8]

3. அறிக்கை செய்வதன் மூலம் எப்படிப்பட்ட பாவமானாலும் அதனுடன் ஈடுபடுங்கள் [1 யோவா 1:9, சங். 66:18]

4. *நீங்கள் அறிக்கை செய்த பாவங்களை மறந்து விடுங்கள். அதைப் பற்றிய குற்ற மனசாட்சியை கொண்டிராதிருங்கள்.* [பிலிப்பியர் 3:13-14, சங்கீதம் 103:10-12]

5. உங்கள் தற்போதைய ஆவிக்குரிய நடக்கையை திரும்ப ஆரம்பியுங்கள். உங்களை எளிதாய் விழப்பண்ணுகிற பாவ சோதனைகளுக்கு விலகியிருங்கள். [எபிரெயர் 12:12-13]

6. தேவனுடன் ஒப்புரவான பின்னர், பிறருடனும் ஒப்புரவாகுங்கள். [யாக்கோபு 5:16]

7. தொடர்ந்து முன்னேறி, வளரப் பிரயாசப்படுங்கள். [2 பேதுரு 3:17-18]

துக்கம், சந்தோஷம், துதி, ஆராதனை, பாவ அறிக்கை.... என அநேக சத்தியங்களை நாம் சங்கீத புஸ்தகத்தில் காணலாம்.

*மிகுந்த துக்கமா, கடன் தொல்லையா, நட்பு தோல்வியா, அவமானமா...ஜெபிக்க முடியாத துக்கமா அநேகருக்கு ஆறுதல் அளிப்பது சங்கீத புஸ்தகம்*

[10/10 7:08 pm] Dinesh VDM: Super 👏👏👏👏👌👌👌

[10/10 7:10 pm] Elango: 6⃣ சங்கீதங்கள் நாம் இன்றைக்கு பாடல்கள் பாடுவது போல, அந்த காலத்திலே எழுதப்பட்ட  பாடல்களா❓

பெர்க்மான்ஸ் இன்று தேவனை துதித்து பாடல்கள் எழுதி பாடுவது எப்படியோ, அப்படியே அந்த காலத்தில் தாவீதும் பாடல்களை எழுதி தாளம் அமைத்திருப்பார். தாவீது ஒரு கவிஞர் ஆவார்.

2 சாமுவேல் 23:2
[2] *கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.*

[10/10 7:49 pm] Aasai Elavendan Pastor VDM: சங்கீதத்தின் வகைகள்.1. துதி யின் சங்கீதம்,2.மணந்திரும்புதலின் சங்கீதம், 3. சாபத்தின் சங்கீதம்(rating for the wicked  ),4. ஓய்வு நாள் சங்கீதம்,5. ஆரோகன சங்கீதம், 6. ஔரோகன சங்கீதம், 7. போதக சங்கீதம், 8.  கரந்துரை சங்கீதம், 9. மேசியாவின் சங்கீதம்,...என்று பல உண்டு. பகுத்துபிரித்து படிக்கலாம்.

[10/10 8:06 pm] Aasai Elavendan Pastor VDM: மேசியாவின் சங்கீதம் உட்பிரிவுகள் . 1. உருவக சங்கீதம், 2 . தீர்கதரிசன சங்கீதம், 3. மரைமுக   தீர்கதரிசன சங்கீதம், 4. நேர்முக  தீர்கதரிசன சங்கீதம், 5 . எதிர் காளராஜ்யத்தின் சங்கீதம் என பிரிக்கலாம்

[10/10 8:36 pm] Elango: *பாக்கியவான்கள்* என்ற வார்த்தை சங்கீத புஸ்தகத்தில் அதிகமாக உள்ளன. ( 20 க்கும் மேலாக உள்ளன)

இதேப்போல  *பாக்கியவான்கள்* என்ற வார்த்தை மற்ற புஸ்தகத்தை விட,  சுவிசேஷ நூல்களிலும் அதிகமாக பார்க்க முடியும்.

இங்கு முக்கியமாக நன்றாக கவனிக்க வேண்டும். *பாக்கியவான்* என்ற வார்த்தை எந்த இடத்தில் ஏன் வருகிறது என்று பார்த்தால் - தேவ பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த வார்த்தை பொருந்தும், அதாவது ஜீவ வார்த்தைகளை கைக்கொள்ளுகிறவர்கள், தேவ சமூகத்தை நாடுபவர்கள்.

சில வசனங்களை பார்க்கலாம்...👇🏻

சங்கீதம் 128:1
[1]கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் *பாக்கியவான்.*

சங்கீதம் 34:8
[8]கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் *பாக்கியவான்.*

சங்கீதம் 119:1
[1]கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் *பாக்கியவான்கள்.*

சங்கீதம் 84:4
[4]உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் *பாக்கியவான்கள்;* அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா).

சுவிசேஷ நூல்களில்👇🏻

லூக்கா 11:28
[28]அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக *பாக்கியவான்கள்* என்றார்.

யோவான் 13:17
[17]நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், *பாக்கியவான்களாயிருப்பீர்கள்.*

மத்தேயு 5:6
[6]நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் *பாக்கியவான்கள்;* அவர்கள் திருப்தியடைவார்கள்.

[10/10 8:44 pm] Robert Pastor VDM: ஸ்தோத்திரம் ஐயா,
      *இன்றைய தினத்தில் சங்கீதம் பற்றிய குறிப்புகள் விளக்கங்கள் தியானங்கள் மிகவும் அற்புதம் அனேகமான புதிய விசயங்களை நான் கற்றுக்கொண்டேன்* 💐💐💐💐👏👏👏👏👏👏🏻👍👍👍👍👍👍
  மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏\

[10/10 9:07 pm] Jeyakumar Toothukudi VTT: Praise the Lord

 Carnatic சங்கீத்த்திற்கு ராகங்கள் இருக்கின்றன. அதுபோல  DAVID சங்கீத்த்திற்கும் ராகங்கள் இருக்கிறதா? அப்படியிருந்தால் அதனை பட்டியலிட முடியுமா?
        BRO.R.jeyakumar

[10/10 10:50 pm] Elango: *சேலா*

சங்கீதத்தில் பலமுறையும், ஆபுகூக் நூலில் சில முறையும் பயன்படுத்தப்பட்ட *சேலா* வார்த்தை ஏ பயன்படுத்தப்பட்டது என்று சில அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன.

1. இது பாடகர்களுக்கும், இசை போடுவோருக்கும் வழங்கப்பட்ட ஓர் இசைக் குறிப்பாக இருக்கலாம்.

2. இதுகரங்களை உயர்த்தவோ, துதி குரலை உயர்த்தவோ, ஆசாரியர் ஆசீர்வாதம் வழங்கவோ கொடுக்கப்படும் குறிப்பாக இருக்கலாம்

3. இது ஆமென் ( அப்படியே ஆகக்கடவது)  போல பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாக இருக்கலாம்.

4. இது நின்று சிந்தித்து தொடரவும் என்ற குறிப்பை வழங்குவதா இருக்கலாம்.

இவற்றில் இசைக்குறிப்பு என்ற கருத்தே பெரும்பாலானோர் கருத்து.

[10/10 11:31 pm] Saranya Sister VDM: # *பாக்கியவான்* என்ற வார்த்தை எந்த இடத்தில் ஏன் வருகிறது என்று பார்த்தால் - தேவ பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த வார்த்தை பொருந்தும்#

Yes. True.

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
சங்கீதம் 33:12

[11/10 8:12 am] Elango: ஒவ்வொரு சங்கீதத்திற்க்கும் ஒவ்வொரு சம்பவம், பிண்ணணி உண்டு. அதுபோல ராகங்களும் பல ராகங்களில் பாடப்பட்டது சங்கீதம்.

எடுத்துக்காட்டாக...

சங்கீதம் 6 - செமினீத் ராகம்
சங்கீதம் 22 - அகிலேத் ஷகார் ராகம்

[11/10 11:13 am] Charles Pastor VDM: *சங்கீதங்களின் (எபிரேய) கவித்துவம்*

_நூற்தலைப்பு : சங்கீதங்களின் சத்தியங்கள்_

_நூலாசிரியர் : சகோ. எம்.எஸ்.வசந்தகுமார்_

_வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி_

சங்கீதங்கள் இஸ்ரவேல் மக்களின் பாடல் புத்தகமாக இருப்பதனால் இவை, எபிரேய மொழியில் கவிதைகளுக்கு உள்ள சிறப்பான தன்மைகளுடன் எழுதப்பட்டுள்ளன. தமிழ்மொழியில் மரபுக்கவிதைகள் “எதுகை, மோனையுடன்யுடன் எழுதப்பட்டிருப்பது போலவே, வேதாமத்திலுள்ள சங்கீதங்கள், எபிரேய மொழியில் உள்ள கவிதைகளின் சிறப்பம்பங்களுடன் எழுதப்பட்டுள்ளன. இதனால் இவற்றை அறியாத நிலையில் சங்கீதங்களைச் சரியான விதத்தில் வியாக்கியானம் செய்ய முடியாது. எபிரேயக் கவிதைகளில் இரண்டு முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. இவை இவ்வித்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன.

*(அ) சமத்தன்மை*

எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சம் அவற்றில் காணப்படும் சமத்தன்மை (Parallelism) ஆகும். இஸ்ரவேல் மக்கள் கவிதைகள் எழுதும்போது சமத்தன்மையுடனேயே எழுதுவது வழக்கம். சமதன்மை என்பது சங்கீதத்தின் வசனங்களில் இரண்டு வரிகளுக்கிடையில் இருக்கும் சிறப்பான தொடர்பாகும். (1) இத்தொடர்பினை அறியாத நிலையில் சங்கீதங்களை வியாக்கியானம் செய்வது பிழையான கருத்துக்கள் நமது உபதேசத்திற்குள் வருவதற்கு வழிவகுக்கும். “தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டுள்ள போதிலும், அது மானிட மொழியிலேயே நமக்குத் தரப்பட்டுள்ளமையால், மானிட மொழியின் தன்மைகளை அறிந்து தேவனுடைய வார்த்தையை நாம் வியாக்கியானம் செய்ய வேண்டும்.(2) மேலும், சங்கீதங்கள் மனிதர்கள் தேவனோடு பேசிய வார்த்தைகளாகவே இருப்பதனால், அவர்கள் தங்களுடைய மொழியில் கவிதைகள் எழுதப்படும் மொழியில் சங்கீதங்களை எழுதியுள்ளார்கள். எனவே. சங்கீதங்களை வியாக்கியானம் செய்வதற்கு எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சமான சமதன்மையை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

எபிரேயக் கவிதைகள் தனி ஒரு வரியில் ஒரு விடயத்தை சொல்லாமல் அதை இரண்டு அல்லது மூன்று தடவைகள் திருப்பிச் சொல்வது வழமை. எனினும், ஒரு வரியில் சொல்லப்பட்டதை அடுத்த வரியில் திருப்பிச் சொல்லும்போது அது முதல் வரியில் குறிக்கப்பட்டுள்ள வார்த்தைகளினாலேயே மறுபடியும் சொல்லாமல், வேறு வார்த்தைகளினால் எழுதப்படும். இவ்வாறு எபிரேயக் கவிதைகளில் முதல் வரிக்கும், அதனைத் தொடர்ந்து வரும் வரிகளுக்கும் இடையில் இருக்கும் சிறப்பான தொடர்பே சமதன்மை(3) ஆகும். இத்த்தைய தொடர்பைக் கருத்திற் கொள்ளாத நிலையில் சங்கீதங்களை வியாக்கியானம் செய்பவர்கள் முதல் வரிக்கும் அதனைத் தொடர்ந்து வரும் வரிகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை அறியாதவர்களாக ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு புதிய விடயங்கள் இருப்பதாகக் கருதி சங்கீதங்களின் கருத்தைச் சிதைத்து விடுகின்றனர். உதாரணத்திற்கு சங். 1:1 (துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்) இல் மூன்றுவிதமான மனிதர்களைப் பற்றி அல்ல. நீதிமான் எப்படிப்பட்டவனாக இருக்க மாட்டான் என்று என்று மூன்று விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எனவே, சங்கீதங்களை சரியான வித்த்தில் புரிந்து கொள்வதற்கு எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சமான சமதன்மையைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

எபிரேயக் கவிதைகளின் சிறப்பம்சமான சமதன்மையில் சில அம்சங்கள் உள்ளன. இவை சங்கீதத்தின் வரிகளுக்கிடையிலான தொடர்பை அடிப்படையாக்க கொண்டு வித்தியாயப்படுகின்றன. எனினும். பெரும்பாலான சங்கீதங்கள் “ஒத்தகருத்து சமதன்மை (Synonymous Parallelism) என்பது முதலாவது வரியில் எழுதப்பட்டுள்ள விடயம் இரண்டாவது வரியில் (சில நேரங்களில் மூன்றாம் நான்காம் வரிகளிலும்) வேறு வார்த்தைகளில் எழுதப்பட்டிருப் பதாகும். இது முதல் வரியில் சொல்லப்பட்டதை வலியுறுத்திக் கூறுவதற்காக அதை மறுபடியுமாக, ஆனால் வேறு வார்த்தைகளில் இரண்டாவது வரியில் எழுதும் முறையாகும். (4) (உறுதிப்படுத்தும் சமதன்மை (Affirming Parallelism எனவும் சில ஆய்வாளர்கள் கொள்வர்) (உதாரணத்திற்கு 49ம் சங்கீதத்தின் முதலிரு வசனங்களில், முதல் வசனத்தில் சொல்லப்பட்ட விடயம் இரண்டாவது வசனத்தில் வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். (49:1)

பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும்

ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள்

எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். (49:2)

இதில் முதலாம் வசனத்திலுள்ள “ஜனங்கள்“ என்பதே இரண்டாம் வசனத்தில் “பூமியின் குடிகளே“ என்று வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் முதலாம் வசனத்திலுள்ள “நீங்கள் எல்லோரும்“ என்பதே இரண்டாம் வசனத்தில் “, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும்“ என்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலாம் வசனத்திலுள்ள “இதைக்கேளுங்கள்“ என்பது இரண்டாம் வசனத்தில் “ஏகமாய் செவிகொடுங்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு வசனங்களிலும் ஒரு விடயமே இரண்டு தடவைகள், ஆனால் வித்தியாசமான வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு விடயம் இரண்டு வரிகளில் அல்லது இரண்டு வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதே “ஒத்த கருத்துச் சமதன்மை“ ஆகும். அதை அறியாத நிலையில். இரண்டு வசனங்களிலும் இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுவது தவறாகும். எபிரேயக் கவிதைகளில், “சொல்லப்படும் விடயத்தை விளக்குவதற்காகவும் வலியுறுத்திச் சொல்வதற்காகவும் இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது(5) ஒரு வசனத்திலேயே இரு தடவைகள் ஒரு விடயம் வித்தியாசமான வார்த்தைகளில் ஒத்தக்கருத்துச் சமதன்மையுடன் எழுதப்பட்டிருப்பதற்கு 3ம் சங்கீதம் 1ம் வசனம் ஒரு உதாரணமாக உள்ளது.

கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்!

எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.

இவ்வசனத்தில்முதலாம் வரியிலுள்ள , என் சத்துருக்கள் என்பதே இரண்டாவது வரியில் “எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, “பெருகியிருக்கிறார்கள்!“ என்று முதல் வரியில் உள்ளதே இரண்டாம் வரியில் “அநேகர்“ என்று உள்ளது. சங்கீதங்களில் உள்ள இத்தகைய ஒத்த கருத்துச் சமதன்மை பெரும்பாலான வசனங்களில் தெளிவாக தென்படும் விதத்தில் நம் தமிழ் வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் ஒத்தக்கருத்துச் சமதன்மை உள்ள பல வசனங்களில் இரண்டு வரிகளும் “உம்“ என்னும் வேற்றுமையுருப்பினால் ஒன்றாக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சங்கீதப் புத்தகத்திற்கு வெளியில் வேறு புத்தகங்களில் இருக்கும் கவிதைகளில் ஏசாயா 1:3 இல் உள்ள ஒத்தகருத்துச் சமதன்மை உள்ள வசனம் இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அண்மையில் வந்த திருவிவிலியத்தில் மூலமொழியில் உள்ள ஒத்தக் கருத்துச் சமதன்மை தெளிவாகப் புலப்படும் வித்த்தில் இவ்வசனம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை

என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை

இம்மொழிபெயர்ப்பில், முதலாம் வரியிலுள்ள “இஸ்ரயேல்“ (6) என்பது இரண்டாவது வரியில் “என் மக்கள்“ என்றும் முதல் வரியிலுள்ள “அறிந்து கொள்ளவில்லை“ என்பது இரண்டாவது வரியில் “புரிந்து கொள்ளவில்லை“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சங்கீதங்களை வாசிக்கும்போது, மூலமொழியில் இவை சமதன்மையுடனே எழுதப்பட்டுள்ளன என்பதை கருத்திற் கொண்டவர்களாக, ஒவ்வொரு வசனத்தையும் நாம் வாசிக்க வேண்டும். அப்போது சங்கீதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் சொல்லப்பட்டுள்ள விடயத்தை நம்மால் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

சமதன்மையில் ஒத்தகருத்து சமதன்மை மட்டுமல்ல இன்னும் சில அம்சங்களும் உள்ளன. பெரும்பாலான சங்கீதங்கள் ஒத்தகருத்துச் சமதன்மையுடன் எழுதப்பட்டிருக்கையில் சில சங்கீதங்களிலும், கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நீதிமொழிகள் புத்தகத்தில் சமன்மையின் இன்னுமொரு சம்சமான “எதிர்கருத்துச் சமதன்மை (Antithetic) உள்ளது. எதிர்கருத்துச் சமதன்மையில் முதலாவது வரியில் சொல்லப்பட்டதற்கு எதிரான விடயம் இரண்டாவது வரியில் குறிப்பிடப்பட்டிருக்கும். சங்கீதம் 37:21 இத்தகைய எதிர்க்கருத்தச் சமதன்மையை அவதானிக்கலாம்.

துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்;

நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.

முதலாம் சங்கீதத்தில் முதல் 3 வசனங்களும் ஒத்தக்கருத்துச் சமதன்மை எழுதப்பட்டுள்ள போதிலும் 4ம் 5ம் வசனங்கள் 5ம் வசனங்கள முதல் மூன்று வசனங்களுடன் எதிர்கருத்துச் சமதன்மையில் உள்ளன. எபிரேயக் கவிதைகளில் எதிர்கருத்துச் சமதன்மையுடன் எழுதப்படும்போது, வசனங்களின் இருவரிகளில் ஒரு வரிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே சங்கீதக்காரன் இரண்டு வரிகளிலும் இரண்டு விடயங்களை எழுதியுள்ளான் என கருதலாகாது. இவ்வாறு “எழுத்தாளர் தான் சொல்ல முற்படுவதை அதற்கு எதிரானதுடன் முரண்படுத்திக் காட்டும்போது சொல்லப்படும் விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. (7) மேலும் இரு விடயத்தின் இரு எதிரிடையான விளைவுகளும் இதில் காட்டப்பட்டுள்ளமையால், இரண்டில் எது சிறந்தது என்பதை அறிந்து சரியானதன்படி செயற்படுவதற்கு வாசகருக்கு ஆலோசனையளிப்பதற்கும் எதிர்கருத்து சமதன்மை முக்கியமாக உள்ளது.( உதாரணத்திற்கு நீதிமொழிகள் புத்தகத்தில் இத்தகைய எதிர்கருத்து சமதன்மையில் நீதியானதும் அநீதியானதுமான வழிமுறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.

சமதன்மையின் மற்றுமொரு அம்சம் “ஒன்றுசேர்க்கும் சமதன்மை (Synthetic Parallelism) ஆகும். சங்கீதத்தின் முதல் வரியில் சொல்லப்பட்ட விடயத்தை இரண்டாவது வரியில் பூரத்தி செய்யும் விதத்தில்  எழுதப்படும் வசனங்கள் ஒன்றுசேர்க்கும்  சமதன்மையுடன் உள்ளவையாகும்.

கர்த்தரே மகா தேவனும்,

எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். (9)

ஒன்றுசேர்க்கும் சமதன்மையில் முதலாவது வரியில் சொல்லப்பட்டுள்ள விடயத்திற்கான காரணத்தை அல்லது நோக்கத்தை அல்லது முதல் வரியின் விளைவை இரண்டாவது வரி அறியத் தரும் (10). சங்கீதம் 95:3 உள்ள மேற்குறிப்பிட்ட வசனத்தில் முதல் வரியின் காரணம் இரண்டாவது வரியில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கர்த்தர் மகாதேவனாயிருப்பதற்கான காரணம் இரண்டவது வரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சங்கீதம் 9.10 இல் “கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை“ என்னும் முதல் வரியின் விளைவு இரண்டாவது வரியில் “ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எபிரேயக் கவிதைகளில் ஒன்றுசேர்க்கும் சமதன்மையானது, ஒரு வசனத்தின் இரு வரிகளுக்கு இடையில் இருக்கும் தொடர்புடன் சம்பந்தப்பட்டதாகும். ஆனால், சில சங்கீதங்களில் முதல் வரியில் சொல்லப்பட்ட விடயத்தின் தொடர்ச்சி இரண்டாம் வரியில் மட்டுமல்ல அதனைத்  தொடர்ந்து வரும் மூன்றாவது வரியிலும் சில சந்தர்ப்பங்களில் அதற்கும் மேலதிகமான வரிகளிலும் இருக்கும். சங்கீதங்களில் உள்ள இத்தகைய தொடர்பு விரிவுபடுத்தப்பட்ட சமதன்மை அல்லது உச்சநிலையடையும் சமதன்மை“ (Climactic Parallelism) என்று  என்று அழைக்கப்படுகிறது. சங்கீதம் 34:4 இல் இத்தகைய சமதன்மை உள்ளது. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் இவ்வசனம் தனியொரு வாக்கியமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவிவிலியத்தில் இது மூன்று வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. (11)

துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்

அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்

எல்லாவகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார் (11)

எபிரேயக் கவிதைகளில் எழுதப்படும்போது உபயோகிக்கப்படும் இன்னுமொரு சமதன்மை உருவகச் சமதன்மை (Emblematic Parallelism) ஆகும். இத்தகைய வசனங்களில் ஒருவரியில் உபயோகிக்கப்பட்டிருக்கும் உருவகத்திற்கான விளக்கம் அடுத்த வரியில் இருக்கும். உதாரணத்திற்கு சங்கீதம் 21:16 இல் முதல் வரியில் உள்ள உருவக விபரணம் இரண்டாம் வரியில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது;

பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது;

இவ்வசனத்தின் முதல் வரியில் “நாய்கள்“ என்னும் பதம் இரண்டாம் வரியிலுள்ள பொல்லாதவர்களை வர்ணிக்கும் விபரமாக உள்ளது. (12) இதேவிதமாக இச்சங்கீதத்தின் 6ம் வசனத்தில் “நானோ ஒரு புழு“ என்னும் உருவகம் அடுத்த வரியில் சொல்லப்பட்டதை விளக்கும் விதத்தில் உருவகச் சமதன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. உருவகச் சமதன்மையுள்ள வசனங்களில் ஒருவரி உருவகமாகவும் மற்றவரி சொல்லர்த்தமாகவும் இருக்கும் என்பதை கருதிற் கொண்டு இத்தகைய வசனங்களை வியாக்கியானம் செய்ய வேண்டும். மேலும், உருவகமானது சொல்லர்த்தமான வரியில் சொல்லப்பட்டுள்ளதை விளக்குவதற்காக உபயோகிக்கப்பட்ட விபரணமாகவே இருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. உருவகச் சமதன்மையுள்ள வசனங்களில் உருவக விபரணம் இருப்பதை கருத்திற்கொள்ளாதுவிட்டால் அவ்வசனங்களைத் தவறாகவே விளங்கிக் கொள்வோம். உதாரணத்திற்கு 60ம்  சங்கீதம் 3ம் வசனத்தின் இரண்டாவது வரியில் தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்க கொடுத்தீர்.“ என்னும் வாக்கியம், முதலில் சொல்லப்பட்ட விடயத்தை விளக்கும் உருவகமாக, உருவகச் சமதன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. இதை அவதானிக்காவிட்டால் தேவன் மதுபானத்தைக் குடிக்க கொடுத்தார் என்னும் தவறான கருத்து உருவாகும்(13). எனவே, சங்கீதங்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு நாம் அவற்றின் சமத்தன்மையை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை

*(ஆ) முதலெழுத்தலங்காரம்*

சமதன்மைக்கு அடுத்ததாக எபிரேயக் கவிதைகளில் உள்ள இன்னுமொரு சிறப்பம்சம் “முதலெழுத்தலங்காரம்“ (Acrosticism)  ஆகும். இது அரிச்சுவடியின் ஒழுங்கில் ஆரம்ப எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். முதல் வரி “அ“ என்ற எழுத்தில் இரண்டாவது வரி “ஆ“ என்ற எழுத்தில் மூன்றாவது வரி “இ“ என்ற எழுத்தில் என்று அரச்சுவடியின் ஒவ்வொரு எழுத்தையும் ஆரம்பமாகக் கொண்டு எழுதப்படும் முறை இதுவாகும். இஸ்ரவேல் மக்கள் ஞானப் போதனைகளைக் கற்பிப்பதற்கு இம்முறையில் பாடல்களை எழுதுவதைத் தங்களுடைய வழக்கமாக்க் கொண்டிருந்தனர். சங்கீதப் புத்தகத்தில் 9,10,25,34,37,111,112,119,145 என்னும் சங்கீதங்கள் மூலமொழியில் இவ்வாறே எழுதப்பட்டுள்ளன. (14)

119ம் சங்கீதத்தில் முதல் எட்டு வசனங்களும் எபிரேய அரிச்சுவடியின் முதல் எழுத்திலும் அடுத்த 8 வசனங்களும் இரண்டாவது எழுத்திலும் அதற்கடுத்த 8 வசனங்களும் மூன்றாவது வரியிலுமாக எபிரேய அரிச்சுடியிலுள்ள 22 எழுத்துக்களையும் கொண்டு ஆரம்பிக்கும் 8 வசனங்களைக் கொண்ட பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. (15) ஒரு மொழியிலுள்ள முதலெழுத்தலங்காரத்தை இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது முடியாத காரியமாக இருப்பதனால். எந்தவொரு மொழிபெரய்ப்பும் முதலெழுத்தலங்காரத்துடன் இச்சங்கீதங்களை மொழிபெயர்க்கவில்லை. இதேவிதமாக ஒரேவித ஓசையுடைய சொற்களை ஆரம்ப வார்த்தைகளாகக் கொணடு எழுதப்பட்டுள்ள சங்கீதங்களும் பிறமொழிகளில் கவித்தன்மை இழந்த நிலையிலேயே உள்ளது. (16)
[11/10 11:17 am] Charles Pastor VDM: *சங்கீதங்களின் உருவகங்கள்*

இஸ்ரவேல் மக்களுடைய பாடல் புத்தகத்திலுள்ள சங்கீதங்கள் மூலமொழியில் கவிதை நடையிலேயே எழுதப்பட்டுள்ளமையால் இவற்றில் பலதரப்பட்ட உருவக விபரணங்கள் உள்ளன. இதனால் சங்கீதங்களை வாசிக்கும்போது அவற்றில் உபயோகிக்கப்ட்டுள்ள உருக விபரணங்களைக் கருத்திற்கொள்ளாவிட்டால் அவற்றை நாம் பிழையான வித்ததிலேயே விளங்கிக் கொள்வோம். உண்மையில் சங்கீதங்களில் மட்டுமல்ல, வேதாகமத்தின் ஏனைய பகுதிகளிலும் பலதரப்பட்ட உருவகங்கள் உள்ளன. சிலர் உருவக விபரணங்களுக்கும் சொல்லர்த்தமான விளக்கம் கொடுப்பதனால், வேதாகமத்தை முரண்படுத்தும் குழப்பமான பல உபதேசங்கள் உருவாகியுள்ளன. உதாரணத்திற்கு “மோர்மன் (Mormon) என்று அழைக்கப்படும். வேதப்புரட்டுக் குழுவினர் தேவனுக்கு மானிட அவயவங்கள் இருப்பதாக உருவகிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, தேவன் ஆவியாய் இருக்கின்றார். (யோவா. 4:24) என்னும வேதாகம சத்தியத்தை முரண்படுத்துகிறவர்களாக பரலோகத்தில் தேவன் மாம்ச சரீரத்துடன் உருவத்துடனும் இருக்கிறார்  என்று போதித்து வருகின்றனர். (1) இதுபோல் கடைசி இராப்போசனத்தின் போது இயேசுக்கிறிஸ்து அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் உவமிக்கும் அடையாளங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை ரோமன் கத்தோலிக்க சபையினர் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, திருவிருந்தின்போது ஆசீர்வதிக்கப்படும் அப்பமும் இரசமும் இயேசுக்கிறிஸ்துவின் மாம்சமாகவும் இரத்தமாகவும் மாற்றமடைகின்றது என்று போதிக்கின்றனர். (2) மறுபுறத்தில் சில கிறிஸ்தவ இறையியலாளர்கள் வேதாகமத்தில் சொல்லர்த்தமாக சொல்லப்பட்டவைகளை உருவக விபரணங்களாக வியாக்கியானம் செய்து வேதாகமத்தின் சில உபதேசங்களை மறுதலித்து வருகின்றனர். உதாரணத்திற்கு இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, உயிர்தெழுதல் என்பவற்றை மறுதலிப்பவர்கள் வேதாகமத்தில் இவற்றைப் பற்றி சொல்லப்பட்டவைகள் உருவக விபரணங்களாக இருப்பதாக கூறி இவை வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள விதமாக சொ்ல்லர்தமாக நடைபெற்ற சம்பவங்கள் அல்ல என்று கூறி வருகின்றனர்(3). இதைப்போலவே வேதவசனங்களில் மறைபொருள் அர்த்தங்கள் இருப்பதாக கருதுபவர்களும் சரித்திர சம்பவங்களை ஆவிக்குரிய அர்த்தங்கள் கொண்ட கதைகளாக மாற்றி அவை நிஜமாக நடைபெற்ற சம்பவங்களாக இருக்கும் உண்மையை மறுதலி்த்து வருகின்றனர். இதனால் வேதாகமத்தில் உருவக விவரணங்களைச் சரியான விதத்தில் இனங்கண்டு வேதாகம வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது மட்டுமே அவற்றைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்ள முடியும்.

சஙகீதங்களை மட்டுமல்ல வேதாகமத்தின் ஏனைய பகுதிகளை வியாக்கியானம செய்யும்போதும். வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் எவ்விதமாக உபயோகிக்கப்பட்டுள்ளன என்பதை முதலில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் வேதாகமத்தில் உள்ள வார்த்தைகள் இரண்டு விதமான முறைகளில் உபயோகிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வார்த்தைகள், மொழியில் அவ்வார்த்தைகளுக்கு இருக்கும் இயற்கையான அர்த்ததிலும், ஏனையவை உருவகமாகவும் உபயோகிக்கப்பட்டுள்ளன. வேதாகமத்திலுள்ள சில உருவகங்களை இலகுவாக இனங்கண்டு கொள்ளக கூடிய விதத்தில் அவற்றோடு “போல“ என்னும் பதம் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு முதலாம் சங்கீதத்தில நீதிமான் எப்படிப்பட்டவன் என்பதைக் விளக்குவதற்காக அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான் (சங்கீதம் 1:3) என்று குறி்ப்பிடப்பட்டுள்ளது. “போல“ என்னும் பதம் சேர்க்கப்பட்டுள்ள உருவங்கள் “ஒப்புவமை“ அல்லது “உவமையணி“ (Simile)  என்று அழைக்கப்படுகின்றது. எனவே,“போல“ என்னும் பதம் சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைகளும் வாக்கியங்களும் உருவக விபரணங்கள் என்பதைக் கருத்திற் கொண்டவர்களாக நாம் அவற்றை சொல்லர்த்தமாக அல்ல உருவக விபரணமாகவே வியாக்கியானம் செய்ய வேண்டும்.

வேதாகம உருவகங்களுக்கு “போல“ என்னும் பதம் சேர்க்கப்ப்ட்டுள்ள போதிலும், சில உருவகங்கள் மட்டுமே இத்தகைய முறையில் உள்ளன. இதனால் ஏனைய உருவகவிபரணங்களை இனங்கண்டுகொள்வதற்கு நாம் வேதவசனங்களை மிகவு்ம் கருத்தோடு ஆராயந்து பார்க்க வேண்டும். முதலில் நாம் வேதப்பகுதியின் சகல வார்த்தைகளும் அவற்றிற்கு சாதாரண மொழியில் உள்ள அர்த்தத்தின்படியே விளக்க வேண்டும். அப்பொழுது குறிப்பிட்ட ஒரு வார்த்தை அல்லது வாக்கியம் அது இடம்பெறும் வசனத்திற்குப் பொருத்தமற்றதாக இருந்தால், அது உருவகமாக உபயோகிக்ப்பட்டுள்ளது என்பதை அறிந்திடலாம். உதாரணத்திற்கு வெளிப்படுத்தல் 7:13-14 இல் அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.  அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு வசனங்களையும் புரிந்து கொள்வதற்கு முதலில் நாம் இவற்றில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் சாதாரணமாக மொழியில் அவற்றிற்குள்ள அர்த்தத்தின்படியே எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது “அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்“ முரண்பாடுடையதாக தென்படும். ஏனெனில் இரத்தத்தில் தோய்க்கும் செயல் ஆடைகளை வெண்மையாக அல்ல சிவப்பாகவே மாற்றும். எனவே, அங்கிகளை இரத்தத்தில் தோய்த்து“வெளுக்க“ முடியாது என்பதனால் இவ்வாக்கியம் உருவக விபரணமாக இருப்பதை அறிந்து கொள்கிறோம். இவ்விதமாக வேத வசனங்களில், மொழியில் உள்ள அர்த்தத்தின்படி உள்ள வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் எவை என்பதையும், உருவகமாக உபயோகிக்கப்பட்டுள்ளவை எவை என்பதையும் நாம் இனங் கண்டு கொள்ள வேண்டும்.

நாம் வாசிக்கும் வேதப் பகுதியில் உள்ள உருவகங்கள் எவை என்பதைக் கண்டு கொண்ட பின்னர் “ அவை எதற்கான உருவகம்?“ என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அவை எவற்றை உருவகிக்கின்றன என்று நாம் கண்டுகொள்ள வேண்டும். இதற்கு அவ்வுருவகம் இடம்பெறும் வசனத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு சங்கீதம் 92:12  இல் ”நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்” என்பதில் “பனை“, ”“கேதுரு“” என்பன நீதிமானை வர்ணிக்கும் உருவகங்களாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். இதேவிதமாக, உருவகமாக உள்ள ஒவ்வொரு வார்த்தையு்ம் (அல்லது வாக்கியம்) இடம்பெறும் வசனத்தை ஆராய்ந்து பார்த்து, ஒவ்வொன்றும் எதற்கான உருவகம் என்பதை நாம் கண்டறிய வேண்டும். எனினும் சில சந்தர்ப்பங்களில் உருவகம் இடம்பெறும் வசனத்தின் மூலம் அது எதற்கான உருவகம் என்பதை அறிந்துகொள்ள முடியாதிருக்கலாம். இத்தகைய சந்தரப்பத்தில் குறிப்பிட்ட உருவகம் உள்ள வசனத்திற்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை ஆராயந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு யோவான் 7:38 இல் இல் “ஜீவத்தண்ணீருள்ள நதிகள்“ பரிசுத்த ஆவியானவருக்கான உருவகம் என்பதை அதற்கு அடுத்த வசனத்தின் மூலமே அறியக்கூடியதாக உள்ளது. இதைப்போல் யோவான் 4:32 இல் இயேசுக்கிறிஸ்து “போஜனம்“ என்னும் உருவகத்தை எதனை விளக்க உபயோகித்துள்ளார் என்பதை 34ம் வசனமே அறியத் தருகிறது. இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது“ என்று தெரிவித்துள்ளார். இதனால் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு உருவகம் எதற்கானது (அதாவது எதனை உருவகிக்கின்றது?) என்பதை அறிந்து கொள்வதற்காக இவ்வுருவகம் இடம்பெறும் வசனத்தை மட்டுமல்ல. அவ்வசனம் இடம்பெறும் முழுப்பகுதியையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாக உள்ளது..

உருவகத்தை இனங்கண்டு அது எத்தனை உருவகம் என்பதை அறிந்து கொண்ட பின்னர் நாம் அது எத்தகைய அர்த்தத்துடனான உருவகம் என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்கு குறிப்பிட்ட உருவக விபரணத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஏசாயா 1.30 இல் “நீஙகள் தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்” என்னும் வாக்கியத்தில் “தண்ணீர் இல்லாத தோப்பு”என்பது உருவக விவரணமாக உள்ளது. எனவே தண்ணீரில்லாத தோப்பு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையில் தண்ணீரில்லாத தோப்பு செழிப்பற்றதாகி, காய்ந்து வறண்டு போகும் எனவே, “நீங்கள் தண்ணீரில்லாத தோப்பை போலிருப்பீர்கள்” என்று தீர்க்கதரிசி கூறும்போது உங்களுடைய வாழ்வு வறண்டு செழிப்பற்றதாகப் போகிறது என்பதை தெரிவித்துள்ளார். இதேபோல, ஒவ்வொரு உருவக விவரணத்தையும் ஆராய்ந்து பார்த்து அதனுடைய அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். எனினும் இவ்விடத்தில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயம் உள்ளது. அதாவது ஒரு உருவக விவரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு வசனத்தில் இருக்கும் அர்த்தமே அவ்வுருக விவரணம் உபயோகிக்கப்பட்டிருக்கும் சகல வசனங்களிலும் இருப்பதாக கருதுவது தவறாகும். ஏனெனில் ஒரு வசனத்தில் குறிப்பிட்ட ஒரு அர்த்தத்துடன் உள்ள உருவக விவரணம், இன்னுமொரு வசனத்தில் வேறு ஒரு அர்த்தத்துடன் உபயோகி்க்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு மாற்கு 1:10 இல் “புறா” பரிசுத்த ஆவியானவருக்கான அடையாளமாக இருப்பதனால் வேதாகமத்தில் “புறா“ என்னும் பதம் இடம்பெறும் இடங்களில் எல்லாம் இப்பதம் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது என்று கருதுவது தவறாகும். ஏனெனில் ஓசியா 7:11 இல் புறா“மதியீனத்திற்கான” உருவகமாகவும் உன்னதப்பாட்டு 2:14 இல் மேவாப் தேசத்தில் குடியிருப்பவர்களைக் குறிக்கும் விபரணமாகவும் ஏசாயா 38:14 இல் அழுதுபுலம்புவதற்கான உருவகமாகவும்வித்தியாசமான அர்ததங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது.

வேதாகமத்திலுள்ள உருவக விபரணங்கள் வித்தியாசமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டிருப்பதனால் ஒரு வசனத்தில் உள்ள அர்த்தத்தை இன்னுமொரு வசனத்திற்குக் கொடுப்பது தவறாகும். ஓசியா 6:4 இல் “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும் விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்துபோகிறது” என்று மக்களிடம் கூறப்பட்டுள்ளது. இவ்வசனத்தில், “காலை நேர மேகம்”“ “விடியற்காலைப் பனி“” என்பன மக்களுடைய பக்தியை வர்ணிக்கும் உருவக விபரணங்களாக உள்ளன. காலைநேர மேகமும் விடியற்காலைப் பனியும் சிறிதுநேரம் மட்டுமே இருப்பதனால், மக்களுடைய பக்தியும் சிறிது நேரம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது என்பதை விளக்கும் விவரணங்களாக உள்ளன. இதனால்ஓசியா 14:5 இலும் பனி என்னும் உருவகம் இதே அர்த்தத்துடனேயே உபயோகிக்கப்பட்டுள்ளது என்று கருதுவது தவறாகும். இவ்வசனத்தில் தேவன் மக்களிடம் “நான் இஸ்ரவேலுக்குப் “பனியைப் போலிருப்பேன்”“ என்று  தெரிவித்துள்ளார். ஓசியா 6:4 இல் “பனி“ என்பது “இஸ்ரவேல் மக்களுடைய பக்தியை“ உருவகிக்கும் விபரணமாக இருந்தாலும்ஓசியா 14:5 இல் இது தேவனுடைய செயலொன்றை” வர்ணிக்கும் உருவகமாக உள்ளது. மேலும் ஓசியா 6:4 இல்  பனியின் “சிறிது நேரம் மட்டும் இருக்கும் தன்மையே“ உருவக விவரணத்தின் அர்த்தமாக உள்ளது. ஆனால் ஓசியா 14:5 இல் “பசுமை“ அல்லது “ஈரலிப்புத்தன்மையே“ உருவக விபரணமாக உபயோகிக்கப்பட்டு்ளளது. அதாவது “மண்ணை ஈரமாக்கும் பனி, தாவரங்களுக்குச் செழிப்பைக் கொடுப்பது போல, தேவன் இஸ்ரவேலுக்கு ஆசிர்வாதமாக இருப்பார்”என்பதே இவ்வசனத்தில் “பனி“” என்னும் உருவகத்தின் அர்த்தமாக உள்ளது. இதனால் ஓசியா 14:5 இல் “நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்“ என்று தெரிவித்துள்ளார். எனவே, ஒரேவிதமான உருவக விபரணங்கள், பல வசனங்களில் உபயோகிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் அர்த்தம் வித்தியாசமானதாக இருப்பதனால், நாம் உருவக விபரணம் இடம்பெறும் வசனங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்து, அவ்வசனங்களுக்கு ஏற்ற அர்த்தத்தின்படி உருவகங்களை வியாக்கியானம் செய்யவேண்டும். இல்லையென்றால் வேத வசனங்களின் அர்த்தத்தை நாம் பிழையான விதத்தில் புரிந்து கொள்வோம். உதாரணத்திற்கு வேதாகமத்தில் “புளித்தமா“ என்பது பாவத்திறகும் தீமைக்குமான உருவகமாக (1 கொரி. 5:6-8) அல்லது பிழையான போதனைக்கான விவரணமாக (கலா. 5:8-9, மத். 16:6, 16:11-12, மாற். 8:15) இருந்தாலும்மத்தேயு 13:33லும் லூக்கா 13:21லும்இவ்விபரணம் தேவனுடைய இராட்சியத்தையேகுறிக்கின்றது. எனவே, வேதாகமத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு உருவகத்திற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உள்ளது எனக் கருதி, அவ்வுருவகம் இடம்பெறும் சகல வசனங்களையும் ஒரே அர்த்தத்தில் வியாக்கியானம் செய்யக் கூடாது. ஒவ்வொரு உருவகத்தையும் அது இடம்பெறும் வசனத்தையும் வேதப்பகுதியையும் கருத்தாய் ஆராய்ந்து பார்த்து அது எதற்கான உருவகம்? என்பதையும் எவ்வர்த்தத்துடனான உருவகம் என்பதையும் நாம் அறிந்த கொள்ள வேண்டும்”

வேதாகமத்திலுள்ள உருவக விவரணங்களுக்கான அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு, குறிப்பிட்ட உருவகம் இடம்பெறும் வசனத்தையும் அவ்வசனம் இடம்பெறும் வேதப்பகுதியையும் ஆராய்ந்து பார்ப்பது ஒரேயொரு வழியாக உள்ளது. இதைத் தவிர வேறு வழிகளில் வேதாகமத்திலுள்ள உருக விபரணங்களுக்கான அர்த்தங்களை அறிந்துகொள்ள முடியாதிருப்பதனால் வேறு முறைகளைக் கையாளுவது தவறானதாகும். சிலர் வேதாகம உருவகங்களுக்குத் தங்களுடைய கற்கனையினால் அர்த்தம் கற்பித்து , வேத வசனங்களின் அர்த்தங்களை குழப்பி, பிழையான விளககங்களைக் கொடுத்து வருகின்றனர். வேதாகமத்தில் உபயோகி்கப்பட்டுள்ள உருவக விபரணங்கள் வேதாகமம் எழுதப்பட்ட பிரதேசத்திலிருந்த பொருட்கள், காட்சிகள், சம்பவங்கள் என்பவற்றிலிருந்தே பெறப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு “கர்த்தர் என் மேய்பராய் இருக்கிறார்“(சங். 23:1) என்று ஆரம்பமாகும் பாடலை, சங்கீதக்காரன் தன்னுடைய பிரதேசத்திலுள்ள மேய்ப்பர்களின் தன்மையையும் பணிகளையும் கருத்திற்கொண்டே எழுதியுள்ளான். இதனால் பாலஸ்தீனப் பிரதேசத்து மேய்ப்பர்களின் தன்மையையும், பணிகளையும் பற்றி அறியாத நிலையில் 23ம் சங்கீதத்தைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்ள முடியாது. பாலஸ்தீன மேய்ப்பர்களைப் பற்றி அறியாத நிலையில் நாம் நம்நாட்டு மேய்ப்பர்களை அடிப்படையாகக் கொண்டு 23ம் சங்கீதத்தை முழுமையாகவும் சரியான விதத்திலும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருப்போம். எனவே வேதாகமக் காலத்தின் சூழலை அறியாதவர்களாக நாம் நம்முடைய கற்பனைகளையும் நாம் வாழும் சூழலையும் அடிப்படையாகக் கொண்டு வேதாகமத்திலுள்ள உருவகம் விபரணங்களுக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கக் கூடாது.

வேதவசனங்களில் சாதாரண உருவவிபரணங்கள் மட்டுமல்ல, சில சிறப்பான உருவகங்களும் உபயோகிக்ப்பட்டுள்ளன. இவற்றைக் கருத்திற் கொள்ளாமல் வேதவசனங்களை வியாக்கியானம் செய்யும்போதும், வேதவசனங்களையும் பிழையான விதத்திலேயே நாம் விளங்கிக் கொள்வோம். எனவே, வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வித்தியாசமான உருவக விபரணங்கள் எவை என்று இப்போது பார்ப்போம். சங்கீதங்களிலும் இத்தகைய உருவகங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன.

பின்வரும் விடயங்கள் இவற்றில் ஆராயப்படும்

(அ) உயிருருவகவணி (Personification)

(ஆ) ஆகுப்பெயரணி (Metonymy)

(இ) பிரதியீட்டணி (Synecdoche)

(ஈ) உயர்வுநவிற்சியணி (Hyperbole)

(உ) புனையுருவணி (Apostrophe)

(ஊ) வஞ்சிப்புகழ்ச்சியணி (Irony)

(எ) மனுவுருவகவணி (Anthropomorphism)

(ஏ) மிருகவுருவகவணி (Zoomorphism)

(அ) உயிருருவகவணி (Personification)

கவிதைகளில் சில சந்தர்ப்பங்களில் சாதாரண விபரணங்களிலும்) உயிரற்ற பொருட்களையும் பண்புப் பெயரால் குறிப்பிடப்படுகின்றவைகளையும் உயிருள்ள ஜீவிகளாகவும் நபர்களாகவும் வர்ணித்து எழுதும்போது உபயோகிக்கப்படும் உருவகங்கள்உயிருருவகவணி (Personification) என்று அழைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு “மலர்கள் சிரித்தன“ “நிலவு பேசியது“ “தென்றல் தொட்டது“ என்று கூறும்போது உயிரற்ற பொருட்கள் உயிருள்ள நபர்களாக வர்ணிக்கப்படுகி்னறன. சங்கீதங்களில்“ஆறுகள் கைகொட்டுவதாகவும்“ பர்வதங்கள் பாடுவதாகவும் (சங். 98:8) மலைகள் துள்ளுவதாகவும் (சங். 114:4) ஏசாயா 42:12 இல் மலைகள் கம்பீரமாக முழங்குவதாகவும்“ “மரங்கள் கைகொட்டுவதாகவும்“ ஏசாயா 35:1 இல் “வானந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்வதாகவும்“ எரேமியா 46:10 இல் பட்டயம் வெறித்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், வேதாகம ஆசிரியர்கள் உண்மைக்கு மாறான விதத்தில் எழுதியுள்ளதாகவே எண்ணத் தோன்றும். ஆனால் அவர்கள் உயிருவருவத்தின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள சூழல அவ்வாறு வர்ணித்துள்ளனர்.

வேதாமத்தில் உள்ள உயிருருவகங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்வது பிழையான உபதேசங்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இதற்கு சிறந்த உதாரணம் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில்  “ஞானம்“உயிருருவகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதிச்சபைப் பிதாக்கள் சொல்லர்த்தமாகக் வியாக்கியானம் செய்ததன் விளைவாக இயேசுக்கிறிஸ்துவின்  தேவத்துவத்தை மறுதலிக்கும் வேதப்புரட்டு உபதேசம் உருவானது.. நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் ஞானம் கூப்பிடுவதாகவும், சத்தமிடுவதாகவும் (8:5-11) பேசுவதாகவும் (8:5-11) மனிதர்களை நேசிப்பதாகவும் (8:17-20) குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஆதிச்சபை பிதாக்கள் இவ்வசனத்தில் உயிருருவகத்தில் ஞானம் வர்ணிக்கப்பட்டுள்ளது என்பதைக் கருத்திற் கொள்ளாமல், இவ்வசனங்களை உண்மையான ஒரு மனிதனைப் பற்றிய விபரணமாக எடுத்து, இவைஇயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய விவரணம் என்று கூறியமையால், பிற்காலத்தில் வேதப்புரட்டர்கள் இவ்வசனங்களை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய சில வேதப்புரட்டு உபதேசங்களை உருவாக்கியுள்ளனர். பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் நீதிமொழிகள் 8:22 இல் “ஞானம் சிருஷ்டிக்கப்பட்டுள் ளதாகக்“குறிபபிடப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு (6) கி.பி. 4ம் “ஏரியஸ்“ என்பவர் இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என போதித்தார். இப்பிழையான போதகத்தின் செல்வாக்கு தற்காலத்தில் “யெகோவா சாட்சிகளுடைய“ உபதேசத்தில் உள்ளது(7). இதனால், வேதாகமத்தில் உயிருருவகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள  பகுதிகளை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து வேதப்புரட்டு உபதேசங்கள் உருவாகுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.

(ஆ) ஆகுப்பெயரணி (Metonymy)

 ஒரு வார்த்தைகக்குப் பதிலாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இன்னுமொரு வார்த்தையை உபயோகிக்கும் போது அது ஆகுப்பெயரணியாக (Metonymy) உள்ளது. உதாரணத்திற்கு கீரை விற்பவரை “கீரை“ என்று கூபபிடும்போது கீரை எனும் பதம் கீரையை அல்ல கீரை விற்பனை அழைக்கும் பதமாகவே உள்ளது. இதேவிதமாக லூக்கா 16:29 இல் அவர்களுக்கு “மோசேயும் தீர்க்கதரிசளும் உண்டு“ எனும் கூற்று, புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் மோசேயும் தீர்க்கதரிசிகளும் மக்களோடு இருக்கிறார்கள் எனும் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவ்வாக்கியம் ஆகுபெயரணியாக, மோசேயும் ஏனைய தீர்க்கதரிசளும் மக்களோடு இருக்கிறார்கள் எனும் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. இவ்வாக்கியம் ஆகுபெயரணியாக மோசேயும் ஏனைய தீர்க்கததரிசிகளும் எழுதிய வேதவாக்கியங்களை குறிப்பிடும் விபரணமாகவே உபயோகிக்கப்பட்டுள்ளது. சங்கீதப்புத்தகத்தில் “கை“ என்னும் பதம் செயலைக் குறிப்பிடுவதற்கும் (சங். 7:3) (8 ) “நாமம்“ என்னும் பதம் தேவனைக் குறிப்பிடுவதற்கும் (சங். 9:10) “வாய்“ என்னும் பதம் பேச்சைக் குறிப்பிடுவதற்கும் (சங். 5:9) ஆகுப்பெயரணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது. (9) நாம் இத்தகைய உருவக விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், ஒன்றுக்குப் பதிலாக உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தை அது எதைக் குறிப்பிடுகிறது என்பதைக் கருத்திற் கொள்ளாமல், குறிப்பிடட வசனத்தில் சங்கீதக்காரன் சொ்ல்லும் விடயத்தைத் தவறாகவே புரிந்து கொள்வோம்.

(இ) பிரதியீட்டணி (Synecdoche)

பொருளின் ஒரு பகுதிக்குப் பதிலாக அதை முழுமையாக அல்லது அதன் முழுமைக்குப் பதிலாக அதன்ஒ ர பகுதியைக் கறிப்பிடுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள உருவகம் பிரதியீட்டணி (Synecdoche) என்று அழைக்கப்படுகின்றது. (10) அதாவது தனின். ஒரு பகுதியைக் குறிப்பிட முழு மனிதனைக் குறிப்பிட மனிதனின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிடும் முறை இதுவாகும். உதாரணத்திற்கு ஆதியாகமம் 42:38 இல்,  “நரைமயிர் பாதாளத்தில் இறங்குவதாக“ குறிப்பிடப்பட்டிருப்பது, நரை மயிர் மட்டும் பதாளதாதிற்கு செல்வதைப் பற்றி அல்ல, மாறாக, முழு மனிதனும் பாதாளத்திற்குச் செல்வதைக் குறிப்பிட அம்மனிதனின் ஒரு பகுதியை “நரைமயிர்“ மட்டும் இவ்வசனத்தில் பிரதியீட்டணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது(11) இதேபோல் நீதிமொழிகள் 1:15-16 இல் “கால்கள்“ரோமர் 16:4 இல் “கழுத்து(12)“ சங்கீதம் 35:10 இல்“எலும்புகள்“ என்னும் பதங்கள் முழு மனிதனையும் குறிப்பிடும் பிரதியீட்டணியாகவே உள்ளது. மேலும், சங்கீதங்களில் “ஆத்துமா”என்னும் பதம் பல இடங்களில் முழு மனிதனையும் குறிப்பிட்டும் பிரதியீட்டணியாகவே இருப்பதனால் மனிதனை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் உபதேசங்களுக்கு இவ்வசனங்களை உபயோகிக்கும்போது, சங்கீதக்காரன் சொல்லும் விடயத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. (13)பிரதியீட்டணியில் ஒரு பகுதியைப் பற்றி கூறுவதற்கு பிரதியீட்டணியில் ஒரு பகுதியைப் பற்றி கூறுவதற்கு அதை முழுமையாக்க குறிப்பிடுவது உண்டு. உதாரணத்திற்கு லூக்கா 2:1 இல் “உலகமெங்கும்“ என்பது முழு உலகத்தையும் அல்ல, அக்கால “ரோம சாம்ராட்சியம் எங்கும்“ என்பதைக் குறிக்கும் பிரதியீடடணியாகவே உபயோகிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிக்கும் ரோம சக்கரவர்த்தி அக்காலத்தில் ரோம இராட்சியத்திலேயே குடித்தொகை கணிப்பீட்டைச் செய்தான். இதனால் புதிய ஆங்கில வேதாகமங்களில் இவவ்சனத்திலுளள பிரதியீட்டணி “ரோம சாம்ராட்சியம் எங்கும்“ என்று விளக்கி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதேவிதமாக யோசுவா 7:11 இல் “இஸ்ரவேலர் பாவம் செய்தார்கள்“ என்பது, இஸ்ரவேல் மக்களில் பாவம் செய்த ஆகான் என்னும் ஒருவனைக் குறிப்பிட (யோசு. 7:1) ஒரு பகுதியைக் குறிப்பிட அதன முழுமையை உபயோகிக்கும் பிரதியீட்டணியாக உள்ளது. இதேவிதமாக சங்கீதங்களிலும் ஒரு பகுதியைக் குறிப்பிட அதன் முழுமையையும் முழுமையைக் குறிப்பிட அதன் ஒரு பகுதியையும் பிரதியீட்டணியாக உபயோகிக்கப்பட்டிருப்பதனால், நாம் இவற்றைக் கருத்திற் கொள்ளாது சங்கீதத்தின் வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது சங்கீதக்காரர்கள் சொல்லும் விடயங்களைச் சரியான விதத்தில் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

(ஈ) உயர்வுநவிற்சியணி (Hyperbole)

ஒரு விடயத்தை முக்கியப்படுத்திக் கூறுவதற்கு மிகைப்படுத்திக் சொல்வதற்கு உபயோகிக்கப்படும் உருவகம் “உயர்வுநவிற்சசியணி“ (Hyperbole) என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய உருவகங்களை உருவக விவரணமாக விளக்காமல் சொல்லர்தமாக எடுத்தால், குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பொய்யாகவே இருக்கும். ஆனால், இது மக்களை வஞ்சிப்பதற்காகச் சொல்லப்படும் பொய் அல்ல. ஆனால், சொல்லப்படும் விடயத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் அதை முக்கியப்படுத்துவதற்காகவும் மிகைப்படுத்திச் சொல்லும் ஒரு முறை சாதாரண மொழிவழக்கில் உள்ளது. உதாரணத்திற்கு விபத்தில் அகப்பட்ட வாகனம் பாரிய அளவில் உடைந்துபோனதைப் பற்றி குறிப்பிட வாகனம் “சுக்குநூறாக உடைந்துவிட்டதாக“ கூறுவதும் மக்கள் படுகாயமடைந்து கிடப்பதைச் சுட்டிக் காட்ட அவர்கள் “இரத்த வெள்ளத்தில் மிதப்பதாகவும்“ கூறும்போது இவற்றைச் சொல்லர்த்தமாக அல்ல உயர்வுநவிற்சியாகவே சொல்லுகிறோம். வேதாகம ஆசிரியர்களும் இத்தகைய உருவகத்தை உபயோகித்துள்ளனர். உதாரணத்திற்கு பெருந்திரளான மக்கள் இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றிச் சென்றதை குறிப்பிட்ட பரிசேயர்கள் “இதோ உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே“ என்று கூறினார்கள்.(யோவான் 12:19) உண்மையில் உலகத்திலுள்ள மனிதர்கள் அனைவரும் இயேசுக்கிறிஸ்துவின் பின்னால் போய்விட்டார்கள் என்று சொல்லர்த்தமாக இக்கூற்றை வியாக்கியானம் செய்தால் அது பொய்யாகவே இருக்கும். இவ்வாறு கூறிய பரிசேயர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவில்லை. மேலும், அச்சமயம் எருசலேமைத் தவிர வேறுபிரதேசங்களில்  இருந்தவர்களில் எவரும் இயேசுக்கிறிஸ்துவின் பின்னால் செல்லவில்லை. அப்படியிருந்தும் பரிசேயர்கள் “உலகமே அவர் பின்சென்றது“ என்று கூறுவதற்குக் காரணம், பெருந்திரளான மக்கள் அவர் பின்னால் சென்றதேயாகும். இதேவிதமாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட மிகவும் அதிகமான காரியங்களை இயேசுக்கிறிஸ்து செய்தார் என்பதை அறியத் தரும்போது “அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்களை உலகம் கொள்ளாது (யோவான் 21:25) என்று உயர்வுநவிற்சியணியில் தெரிவித்துள்ளார்.

சங்கீதங்களை எழுதியவர்களும் தாங்கள் சொல்வதை வலியுறுத்துவதற்கும் முக்கியப்படுத்துவதறகும் உயர்வுநவிற்சியணி என்னும் உருவகத்தை உபயோகித்துள்ளனர். உதாரணத்திற்கு, சங்கீதக்காரன் அதிகமாக அழுததைக் குறிப்பிட “என் கண்களிலிருந்து நீர்த்தரைகள் ஓடுகின்றன” (சங். 119:136) என்றும் “இராமுழுவதும் என் கண்ணீரால் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன் (சங். 6:6) என்றும் எழுதியுள்ளான். இதைப்போன்ற உயர்நவிற்சியணிகள் பல சங்கீதங்களில் உள்ளன. இவற்றை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், சங்கீதக்காரன் சொல்வதை தவறாகவே புரிந்து கொள்வோம். சிலநேரங்களில் அவன் பொய் சொல்வதாக கூட நாம் நினைக்கலாம். ஆனால் உயர்வுநவிற்சியணி உபயோகிக்கப்படும்போது சொல்லப்படுவதை உருவகமாகவே நாம் எடுக்க வேண்டும். எனவே, உயர்வுநவிறசியணி என்னும் உருவகத்தை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து வேதவசனங்களுக்கு பிழையான அர்த்தம் கற்பிக்க்க கூடாது.

உ) புனையுருவணி (Apostrophe)

இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகித்து அதனோடு பேசுவதற்காக உபயோகிக்கப்படும் உருவகம் “புனையருவணி (Apostrophe) என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, தான் எழுதுவதற்கு எவராவது மறுப்பு தெரிவித்தால் அதற்கும் பதிலளிப்பதற்காக அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வுருவகத்தை 1 கொரிந்தியர் 15:36-37 உபயோகித்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.  பவுல் இவ்வசனங்களில்  கற்பனையில் ஒரு எதிரியை உருவாக்கி அவனோடு பேசுகிறார் (15)

சங்கீதங்களில் உயிரற்ற சடப்பொருளோடு பேசுவதற்கும் இவ்வுருவகம் உபயோகிக்கப்பட்டுள்ளது. இச்சந்தரப்பங்களில் உயிரற்ற் பொருட்கள் ஒரு நபராக உவமிக்கப்பட்டு, சங்கீதக்காரர்கள் ஒரு நபரோடு பேசுவது போல் பொருட்களுடன் பேசுகிறார்கள் (16) உதாரணத்திற்கு சங்கீதம் 68.16 இல் “உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே ஏன் துள்ளுகிறீர்கள்? என்று சங்கீதக்காரன் கேட்கிறான். சங்கீதம் 114.5-7சங்கீதக்காரன் கடலுடனும் நதியுடனும் பூமியுடனும் பேசுகிறான். (17) இதேவிதமாக எரேமியா பட்டயத்தடனும் (எரே. 47:6) (18) பேசியுள்ளார். எனவே, இத்தகைய உருவக விபரணங்களை சொல்லர்த்தமாக எடுத்து ஆசிரியர்கள் பைத்தியக்காரத்தனமாக கற்பனைக் கதாபாத்திரங்களடனும் உயிரற்ற பொருட்களுடனும் பேசியுள்ளார்கள் என்று நாம் கருதலாகாது. இது அக்கால இலக்கியங்களில் உபயோகிக்கப்படும் உருவக விவரணத்தின்படியான பேச்சாகவே உள்ளது என்பதை நாம் கருத்திற் கொண்டு இத்தகைய வேதவசனங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

(ஊ) வஞ்சிப்புகழ்ச்சி (Irony)

உருவக விபரணங்களில் ஒருவனைப் புகழும் வார்த்தைகளில் அவனை இகழ்வதற்கு உபயோகிக்கப்படும் உருவகம் “வஞ்சிப் புகழ்ச்சியணி (Irony) என்று அழைக்கப்படுகின்றது. இதனைப் பேச்சுவழக்கில் வார்த்தைகள் உசசரிக்கப்படும் முறையைக் கொண்டு இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம். உதாரணத்திற்கு பொய் பேசும் ஒருவனைப் பார்த்து, “இவன் அரிச்சந்திரனுடைய பரம்பரையில் வந்தவன்“ எனறு கூறும்போது இவ்வார்த்தைகள் அவனைப் புகழ்வதாக இருந்தாலும், இவை அவனைப் பரிகசிக்கும் வார்த்தைகளாகவே உள்ளன. இதேவிதமாக வேதாகமத்திலும் புகழும் வார்த்தைகளில் இகழும் கூற்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு தாவீது நடனமாடியதைப் பரிகசிக்கும் அவனுடைய மனைவி, “இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார்“ (2 சாமு 6:20)என்று கூறியது வஞ்சிப்புகழ்ச்சியணி யாகவே உள்ளது(19) இதேவிதமாக 1 ராஜாக்கள் 18:27 இல் எலியா பாகால் தெய்வத்தை எள்ளிநகையாடினான். (20) மேலும், தங்களை ஞானிகளாகக் கருதி யோபுவுக்கு ஆறுதல் அளிப்பதற்காக வந்தவர்களின் வார்த்தைகள் எவ்வித ஆறுதலையும் தராதமையால் யோபு அவர்களிடம் “ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.“ (யோபு 12:2) என்று கூறியது வஞ்சிப்புகழ்ச்சியணியாகவே உள்ளது. உண்மையில், உருவகவிவரணத்தை இனங்காணாவிட்டால் இகழப்படுபவர் புகழ்பாடுவதாகத் தவறான எண்ணமுடையவர்களாகவே நாம் இருப்போம்.

(எ) மனுவுருவகவணி(Anthroponmorphism)

வேதாகமத்தில் தேவனையும் அவருடைய தன்மை மற்றும் செயல்களையும் மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக அவருக்கு மானிட அவயவங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். எபிரேய மொழிவழக்கில் உள்ள இத்தகைய உருவக விபரணம் மனுவுருவகவணி (Anthroponmorphism) என்று அழைக்கப்படுகிறது. கண்களால் காணமுடியாத ஆவியான தேவனை மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக அவரை இவ்வாறு வர்ணிப்பது எபிரேய மொழிமரபாகும். வேதாகமத்தில் தேவன் மனுவுருவக மொழியில் வர்ணிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் தேவனை அறிந்து கொள்வதற்கு  நமக்கு உதவுகின்றன. உதாரணத்திற்கு “அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன. (2 நாளா. 16:9) என்னும் விபரணம் தேவனுக்குப் பல கண்கள் இருப்பதாகவும், அவை மட்டும் தனியாக பூமியெங்கும் செல்வதாகவும் கூறவில்லை. மாறாக அவர் பூமியில் நடக்கும் காரியங்கள் அனைத்தையும் அவதானிப்பவராக இருக்கிறார்என்பதையே அறியத் தருகின்றன. இதேவிதமாக தேவனையும் அவருடைய செயல்களையும் நாம் இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக அவருக்கு முகம் (சங். 10:11, எரே 16:17, 2 நாளா 7:16), காதுகள் (சங். 10:17, தானி. 9:18) நாசி (சங். 18:15, யாத். 15:8) வாய் (ஏசா 34:16, மீகா 4:4) கரங்கள் (உபா 11:2, யாத் 33:23, ஏசா. 50:2), முதுகு (ஏசா. 38:17, எரே 18:17), இதயம் ஆத்துமாவும் (ஆதி. 6:6, 2 நாளா. 7:16) பாதங்கள் (யாத் 24:10, ஏசா 60:13) இருப்பதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விவரணங்களை வியாக்கியானம் செய்து தேவனுக்கு மானிட உருவமும் சரீரமும் நாம் கருதலாகாது.

(ஏ)  மிருகவுருவகவணி (Zoomorphism)

வேதாகமத்தில் தேவனை வர்ணிக்கும் இன்னுமொரு உருவகமும் உள்ளது. இது “மிருகவுருவகவணி“ (Zoomorphism) என்று அழைக்க்ப்படுகிறது. தேவனுடைய தன்மையை அல்லது அவர் மனிதர்களோடு நடந்துகொள்கின்ற முறையை விளக்குவதற்காக மிருகங்கள் அல்லது பறவைகளின் தன்மை அல்லது அவயவம் அவருக்கு இருப்பதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாம் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து தேவன் சிறகுகளுடனும் செட்டைகளுடனும் இருப்பதாக கருதலாகாது. இவ்வசனத்தில் தேவன் தம்முடைய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பளிக்கிறார். என்பதை விளக்குவதற்காக தாய்ப்பறவை தன்னுடைய குஞ்சுகளைத் தன்னுடைய செட்டைகளில் மறைத்து வைத்து அவற்றைப் பாதுகாக்கும் முறை உதாரணமாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

சங்கீதங்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள உருவக விபரணங்களை சரியான விதத்தில் இனங்கண்டு, அவற்றின் அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உருவக விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, அவை இடம்பெறும் வேத வசனங்களின் அர்த்தத்தைப் பிழையான விதத்தில் வியாக்கியானம் செய்வதை நாம் தவிர்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

[11/10 11:19 am] Charles Pastor VDM: *சங்கீதங்களின் கலைச்சொற்கள்*

சங்கீதங்களில் இடம்பெற்றிருக்கும் (அ) சேலா (ஆ) இகாயோன் (இ) சிகாயோன் (ஈ) மிக்தாம் (உ) மஸ்கீல் (ஊ) ஆரோகணம் போன்ற கலைசொற்கள் எதற்காக இடம்பெற்றுள்ளன. அவை எவற்றை உணர்த்துகின்றன. இக்கட்டுரை அதனை ஆராய்கின்றது. )

எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடு, கி.மு 2ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டபோது, சங்கீதப் புத்தகத்தில் உள்ள இசையோடு சம்பந்தப்பட்ட பல சொற்கள் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்படாமல், அவற்றின் எபிரேய உச்சரிப்பு முறை கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனால், பிற்கால மொழிபெயர்ப்புகளிலும் இச்சொற்கள் மொழிபெயர்க்கப்படாமல், எபிரேய உச்சரிப்பு முறையிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. கி.மு. 586 இல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன யூதர்கள் அங்கிருந்த காலத்தில் (70 வருடங்கள்) தங்களுடைய மொழியான எபிரேயத்தை மறந்து, பாபிலோனில் பேசப்பட்ட “அரமிக்“ என்னும் மொழியையே தங்களுடைய பேச்சுமொழியாகக் கொண்டிருந்தனர். இதனால் கிரேக்கத்திற்கு பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்தவர்கள், எபிரேய மொழியில் இசையோடு சம்பந்தப்ப்ட்ட சொற்களின் சரியான அர்த்த்தை அறியாதவர்களாக அவற்றை எபிரேய உச்சரிப்புக்கு ஏற்றவிதத்தில் கிரேக்கத்தில் எழுதியுள்ளனர். இதனால், பிற்காலத்தில் வேதாகமகால எபிரேய மொழியைக் கற்று தேர்ந்தவர்களின் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டே எபிரேய மொழியிலான இக்கலைச்சொற்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

(அ) சேலா (selah)

சங்கீதப்புத்தக்தில் 39 சங்கீதங்களில் 71 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ள இசையோடு சம்பந்தப்பட்ட ஒரு எபிரேயப் பதம் சேலா (selah) என்பதாகும். (1) சங்கீதப் புத்தகத்தில் பல தடவைகள் இடம்பெறும் இப்பதம், ஏனைய கலைச் சொற்களைப்போல சங்கீதங்களின் தலைப்புக்களில் சேர்க்கப்படவில்லை. சங்கீதங்களின் வசனங்களுக்கு இடையில் குறிப்பிடப்பட்டிருக்கும்  இப்பதம் '“இசையை மாற்றுவதற்கான ஒரு குறியீடாக“ அல்லது “இடையில் மீட்டப்படும் இசை“ பற்றிய குறிப்பாக உள்ளது. மேலும், பாடப்படும் சங்கீதத்தின் வசனத்திற்கு அல்லது வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அதை மறுபடியும் பாடும்படி அறிவிக்கும் குறியீடாகவும் இது இருந்துள்ளது. (2)

“சேலா என்னும் பதம் “உயர்த்துதல்“ என்று அர்த்தம் தரும் எபிரேயப் பதத்திலிருந்து உருவாகியுள்ளது. இதன்படி, சேலா என்பது உரத்த சத்தத்துடன் இசையை மீட்டும்படியான குறியீடாக உள்ளது(3). சில வேத ஆராய்ச்சியாளர்கள், இப்பதம் “குனிதல்“ என்று அர்த்தந்தரும் அரமிக் மொழிப் பதத்துடன் தொடர்புற்றுள்ளதாக கருதுகின்றனர். இவர்கள் “மிஷ்னா“ என்னும் யூதர்களுடைய மதநூலில் அன்றாட பலிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டே இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர் (4) அன்றாட பலிகள் செலுத்தப்படும்போது சங்கீதங்கள் பாடப்படுவதோடு, பாடல் நிறுதப்படும் இடங்களில் எக்காளம் ஊதப்படும் அச்சந்தரப்பத்தில் ஆலயத்தில் கூடியிருக்கும் மக்கள் முகங்குப்புற தரையில் குனிந்து தேவனை வழிபடுவார்கள். இத்தகைய அறிவிப்பைக் குறிக்கும் குறியீடாக “சேலா“ இருப்பதாக சில தேவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்ற போதிலும் (5) இசையை மாற்றும்படியான அல்லது இசையின் சத்தத்தை அதிகரிக்கும்படியான ஒரு இசைக் குறியீடாகவே “சேலா“ என்னும் பதம் சங்கீதப் புத்தகத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது. (6)

(ஆ) இகாயோன் (Hihhaion)

சங்கீதம் 9:16 இல் “சேலா“ என்னும் இசைக் குறியீட்டுக்கு முன் “இகாயோன்“ (Hihhaion) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சங்கீதம் 19:14 லும் 92:2 இலும் “தியானம்“ என்னும் அர்த்தத்துடன் இப்பதம் மொழிபெயர்க்கப்பட்டு சங்கீதத்தின் வசனத்தில் உள்ளது. இதிலிருந்து, இப்பதம் இசைக் குறியீடாக உபயோகிக்ப்படும்போது “தியானத்திற்கு ஏற்ற இசையை மீட்டும்படியான அறிவுறுத்தலாக“ இருப்பதாகக் கருதப்படுகின்றது. (7) எனினும், இச்சங்கீதங்களில் இப்பதம் உண்மையிலேயே இசைக்குறியீடாக உள்ளதா அல்லது சங்கீதத்தின் ஒரு வார்த்தையாக உபயோகிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியமுடியாமல் உள்ளது.

(இ) சிகாயோன்

ஏழாம் சங்கீதத்தின் தலைப்பில் “சிகாயோன் என்னும் சங்கீதம்“ என்னும் வார்த்தைகள் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இதேவிதமாக ஆபகூக் 1:1இல் “ஆபக்கூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “சிகாயோன் பாடின வி்ண்ணப்பம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “சிகாயோன்“ என்னும் பதம் “தவறுசெய்தல்“ அல்லது “அலைந்து திரிதல்“ என்று அர்ந்தந் தரும் எபிரேயப் பதத்திலிருந்து உருவாகியுள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், சிகாயோன் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் 7ம் சங்கீதமும் ஆபகூக் 3ம் அதிகாரமும் பாவமன்னிப்பிற்காக மன்றாடும் சங்கீதமாக இராதமையினால் உணர்ச்சிகள் அலைமோதும் விதத்தில் பாடப்படும் பாடல்களைப் பற்றிய குறிப்பாக சிகாயோன் இருப்பதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (8). அக்கால அரேபிய மற்றும் அசீரிய பாடல்களிலும் இவ்விதமாக மனஉணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பாடல்கள் இருப்பதை இதற்கான ஆதாரமாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். (9)

(ஈ) மிக்தாம்

சங்கீதப் புத்தகத்தில் 56 முதல் 60 வரையிலான சங்கீதங்கள் “மிக்தாம் என்னும் சங்கீதம்“ என்று அவற்றின் தலைப்புகள் அறியத் தருகின்றன. ஆங்கிலத்தில் “ஜேம்ஸ் அரசனுடைய மொழிபெயர்ப்பை“(10) அடிப்படையாகக் கொண்டு 16ம் சங்கீதத்தின் தலைப்பில் மிக்தாம் என்பதோடு “பொற்பணதிக்கீதம்“ என்னும் வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது (11) ஆனால், மிக்தாம்என்னும் பதம் மூலமொழியில் “பொன்“ (தங்கம்) என்னும் பதத்துடன் அல்ல “மூடுதல்“ என்று அர்த்தந் தரும் அங்காடிய மொழிப்பதத்திலிருந்தே உருவாகியுள்ளது(12). இதனால் சில வேத ஆராய்ச்சியாளர்கள் இச்சங்கீதங்களை பாவத்திற்கான பிராய்ச்சித்தப் பலியோடு சம்பந்தப்பட்ட பாடல்களாக கருதுகின்றனர். (13). ஏனென்றால் அக்காலத்தில் பாவத்திற்கான பலி செலுத்தப்பட்டு பாவங்கள் மன்னிக்கப்படுவதைக் குறிப்பிட “பாவங்கள் மூடப்படுதல்“ என்னும் சொற்பிரயோகத்தையே உபயோகி்த்து வந்தனர் (14) ஆனால் மிக்தாம் என்னும் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பவைகள், பாவத்தைப் பற்றியவையாக இராமல், சங்கீதக்காரன் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் துயரத்துடன் இருப்பதைப் பற்றிய விவரணங்களைக் கொண்டிருப்பதனால் இவை “உதடுகள் மூடப்பட்ட நிலையில்“ தாவீது மௌனமாகப் பாடிய படல்களாகக் கருதப்படுகிறது. (15) எனவே, “மித்தாம் என்னும் சங்கீதம்“ என்னும் தலைப்பைக் கொண்டுள்ள சங்கீதங்கள் “மௌனமான ஜெபங்களாகவே“ உள்ளன (16) ஜெபங்கள் உரத்த சத்தமாக மட்டுமல்ல மௌனமாகவும் ஏறெடுக்கப்பட்ட முடியும் என்பதை இச்சங்கீதங்கள் அறியத் தருகின்றன.

(உ) மஸ்கீல்

சங்கீதப் புத்தகத்தில் 12 சங்கீதங்கள் (அதாவது 32, 42, 44, 52, 53, 55, 74, 78, 88, 89, 142 எனும் சங்கீதங்கள்)  “மஸ்கீல் என்னும் சங்கீதம்“ என்னும் தலைப்பைக் கொண்டுள்ளன. “மஸ்கீல்“ என்னும் பதம் “ஞானவானாக்கு“ அல்லது “புத்திசாலி“ அல்லது திறமையுடனிருத்தல்“ என்னும் அர்த்தங்களைக் கொண்ட பதத்திலிருந்து உருவாகியுள்ளது. (17) இதனால் மஸ்கீல் என்னும் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில சங்கீதங்களின் தலைப்பில் “மஸ்கில் என்னும் போதக சங்கீதம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் “ஞான சங்கீதங்களே“ (18) எபிரேய மொழியில் மஸ்கீல் என்னும் சங்கீதம் என்னும் தலைப்பைக் கொண்டுள்ளது.

(ஊ) ஆரோகணம்

சங்கீதப் புத்தகத்தில் 120 முதல் 134 வரையிலான சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்கள் என்னும் தலைப்புடன் உள்ளன. இச்சங்கீதங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் தனியான ஒரு புத்தகமாகவும் ஆரோகண சங்கீதம் என்னும் தலைப்பு ஆரம்பத்தில் முழுப்புத்தகத்திற்கும் பொதுவான தலைப்பாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் பிற்காலத்தில் இச்சங்கீதங்கள் ஏனைய சங்கீதங்களுடன் சேர்க்கப்பட்ட காலத்திலேயே ஒவ்வொரு சங்கீதத்திற்கும் தனித்தனியாக இத்தலைப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (18)

ஆரோகண சங்கீதங்கள் ஆரம்பத்தில் ஒன்றாகத் தொகுக்கப்படதற்கான காரணம் யாது என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. சிலர் இச்சங்கீதங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இச்சங்கீதங்களில் “படிமுறையிலான சமதன்மை' (Step-like Parallelism) காணப்படுவதை கருத்திற் கொண்டே இச்சங்கீதங்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஆரோகண சங்கீதம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே இவர்களின் தர்க்கமாகும். இச்சங்கீதங்களில், ஒரு வரியில் உள்ள வார்த்தையை எதிரொலிக்கும் விதத்தில் இன்னுமொரு வார்த்தை அடுத்த வரியில் உள்ளதாகவும், அதை எதிரொலிக்கும் இன்னுமொரு வார்த்தை மூன்றாவது வரியில் இருப்பதாகவும் கூறும் இவர்கள், இவ்விதமாக ஒரு படிமுறையின் அடி்பபடையில் இச்சங்கீதங்களின் வரிகள் அனைத்தும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், இத்தகைய ஒழுங்குமுறையைக் கருத்திற் கொண்டே 15 சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சகல சஙகீதங்களிலும் இல்லை. அத்தோடு, இத்தகைய ஒழுங்கு முறையை நாம் வேறு சங்கீதங்களிலும் அவதானிக்கலாம்.

சில வேத ஆராய்ச்சியாளர்கள் ஆரோகணம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தை “மேன்மைப்படுத்துதல்“ என்னும் அர்த்தத்தில் மொழிபெயர்த்து, இச்சங்கீதங்கள், தேவனை மேன்மைப்படுத்திப் புகழும் பாடல்களாக இருப்பதனாலேயே தனியான ஒரு தொகுப்பாக உள்ளதாகக் கூறுகின்றனர். (19) ஆனால், ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்படிருக்கும் பாடல்களில் 15 சங்கீதங்களும், தேவனை மகிமைப்படுத்தும் பாடல்களாக இல்லை. இவற்றில வேறு விடயங்களும் இருப்பதனால் இவ்விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது. உண்மையில் ஆரோகணம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்படுள்ள பதம் “ஏறுதல்“ என்னும் அர்த்தமுடையது. அதாவது இசையில் “சுரவரிசையில் ஏறுவதைக்“ குறிக்கும் பதமே உபயோகிக்கப்பட்டள்ளது. பூகோள ரீதியாக எருசலேம் நகரம் உயரமான இடத்தில் இருப்பதனால், அந்நகரத்திற்கு வேறிடங்களிலிருந்து வருகின்றவர்கள் தாழ்வான இடத்திலிருந்து ஏறிவர வேண்டியதாயிருந்தது. இதனால் சில வேத ஆராய்ச்சியளர்கள், “ஏறுதல்“ என்பதை அடிப்படையாகக் கொண்டு, யூதர்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து தங்களுடைய சொந்த நாட்டுக“கு வரும்போது பாடிய பாடல்களாக இவற்றை கருதுகின்றனர். ஆனால், ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் சில சங்கீதங்கள் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போவதற்கு முற்பட்ட காலத்தைய சம்பவங்களோடு தொடர்புற்றிருப்பதனால் இவ்விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

யூதர்களுடைய பாரம்பரிய மதநூலான மிஷ்னா இச்சங்கீதங்களை எருசலேம் தேவாலயத்தோடு தொடர்படுத்தியுள்ளது. எருசலேம் தேவாலயத்தில பெண்களின் பிரகாரத்தில் இருந்து இஸ்ரவேலரின் பிரகாரத்திற்குச் செல்வதற்குப் 15 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். இந்தப் படிக்கற்களின் ஏற்றத்தையே ஆரோகணச் சங்கீதங்கள் குறிப்பதாகக் கருதும் மிஷ்னா இச்சங்கீதங்கள் இப்பதினைந்து படிக்கட்டுக்களிலிருந்தும் கூடாரப் பண்டிகையின் முதல்நாள் லேவியர்களினால் பாடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (20) ஆரோகணச் சங்கீதங்களை எண்ணாகமம் 6:24-26 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆரோனின் ஆசீர்வாதத்தோடு தொடர்புபடுத்தும் சில வேத ஆராய்ச்சியாளர்கள், இவ்வாசீர்வாதங்கள் ஆலயத்தின் முன் வாசலில் இருக்கும் படிகளிலிருந்து சொல்லப்பட்டதாக கருதுகின்றனர். (21) எனினும், ஆரோகணச் சங்கீதங்களில் 124ம், 126ம், 131ம் சங்கீதங்கள் எவ்விதத்திலும் ஆரோனுடைய ஆசீர்வாதத்தோடு தொடர்புபடுத்த முடியாத வசனங்களையே கொண்டிருப்பதனால் இவ்விளக்கமும் திருப்தியற்றதாகவே உள்ளது.

ஆரோகண சங்கீதங்களில் 132ம் சங்கீதத்தைத் தவிரந்த ஏனையவைகள் அனைத்தும் சிறிய பாடல்களாகும். இவை அனைத்தும் சீயோனை (எருசலேமைப்) பற்றிய சிந்தையுடன் எழுதப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். 15 ஆரோகண சங்கீதங்களில் 125, 126, 128, 129, 132, 133, 134 என்னும் 7 சங்கீதங்களில் சீயோனைப் பற்றிய குறிப்பு உள்ளது. 122ம் சங்கீதத்தில் எருசலேம் என்ற பெயர் உள்ளது. சங்கீதங்கள் 121, 123, 124 என்பவற்றில் சீயோனுடைய தொடர்புடைய சொற்பிரயோகங்கள் உள்ளன. 130ம், 131ம் சங்கீதங்கள் எருசலேமிலுள்ள தேவனை வழிபடும் மக்களுக்கான அழைப்பைக் கொண்டுள்ளன. 127ம் சங்கீதங்கீதத்தில் “வீடு“ “நகரம்” என்னும் இரு பதங்களும் பிற்காலச் சேர்க்கையாகக் கருதப்படுகின்றது. இவற்றுக்க்குப் பதிலாக ஆரம்பத்தில் ”ஆலயம்“, எருசலேம் என்னும் பதங்களே இருந்தாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து இச்சங்கீதங்கள் அனைத்தும் சீயோனைப (எருசலேமைப்) பற்றிய பாடல்களாக இருப்பதை அறிந்து கொள்கின்றோம் (22)

ஆரோகண சங்கீதங்கள் சீயோனைப் பற்றிய சங்கீதங்களாக இருப்பதனால் இவை, பண்டிகைகளுக்காக (23) தூர இடங்களிலிருந்து எருசலேமுக்கு வரும் யூதர்கள், வழியில் எருசலேமையும் தேவனையும் பற்றிய சிந்தித்தவர்களாகப் பாடும் சங்கீதங்களாக உள்ளன.(24) சில வேத ஆராய்ச்சியாளர்கள், பண்டிகைக்காக வரும் பக்தர்கள் ஊர்வலமாக எருசலேம் தேவாலயத்திற்கு ஏறிவரும்போது பாடும் பாடல்களாக இவற்றைக் கருகின்றனர். (25) பாடல்களுடனான இத்தகைய ஒரு ஊர்வலம் பற்றி ஏசாயா 30:29 குறிப்பிடப்பட்டுள்ளது. (26) எனவே, ஆரோகண சங்கீதங்கள் பண்டிகைக்காக வரும் பக்தர்கள் பாடும் பாடல்களாகவே இருந்துள்ளதை மறுப்பதற்கில்லை. 

Post a Comment

0 Comments