Type Here to Get Search Results !

நம் மறுகன்னம் என்றால் என்ன?

[29/09 10:30 am] Elango: ✨ *இன்றைய தியான கேள்விகள் - 29/09/2017*✨

*உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு.* லூக்கா 6:29

இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: *பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.*
23 இயேசு அவனை நோக்கி : *நான் தகாதவிதமாய் பேசினதுண்டானால், தகாதது ஒப்புவி ; தகுதியாய்ப்j பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.* யோவான் 18:22

1⃣ ஒரு கன்னத்தில் அடைந்தால் மறு கன்னத்தையும் கொடு என்று சொன்ன இயேசு  இந்த சம்பவத்தில் தன்னை அறைந்தவனுக்கு மறு கன்னத்தை கொடுக்கவில்லை ஏன்❓

2⃣ தகுதியாய் நாம் நடந்து கொள்ளும் போது வீணாக தண்டிக்கப்பட்டால் ஏதிர்த்து கேள்வி கேட்க சொல்கிறாரா இயேசு❓

3⃣ அல்லது இயேசு கொடுக்க சொன்ன மறு கன்னம் என்பது என்னவென்பதை நமக்கு இந்த சம்பவத்தில் சொல்லியிருக்கிறாரா?

4⃣ இயேசு கொடுக்க சொன்ன மறுகன்னம் என்பது உண்மையில் என்ன❓ லூக்கா 6:29 வசனத்தின் உண்மையாயான அர்த்தம் என்ன❓

5⃣ நாம் நீதியாக நடந்தால், நீதிக்காக நாம் எதிர்த்து பேசலாமா போராடலாமா அல்லது பணிந்து போக வேண்டுமா❓

6⃣ இந்த வசனத்தையும் தியானிக்கலாம் 👇

*ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; யாக்கோபு 1:19*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[29/09 11:21 am] Elango: அப்போஸ்தலர் 23:2-5
[2]அப்பொழுது பிரதானஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: *இவன் வாயில் அடியுங்கள்*🤜🤛✊👊✋✋✋ என்று கட்டளையிட்டான்.
[3]அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: *வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்;*👆🏻👆🏻👆🏻✋✋✋✋✋✋✋ நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.
[4]சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதானஆசாரியரை வைகிறாயா என்றார்கள்.
[5]அதற்குப் பவுல்: *சகோதரரே, இவர் பிரதானஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக* என்று எழுதியிருக்கிறதே என்றான்.

*ஆலோசனை சங்கத்தில் பவுலை அடிக்கும் படி சொல்லும் போது, இங்கே பவுலுடைய பதிலையும் கவினிக்க வேண்டும்*👆😁😄

[29/09 11:28 am] Elango: சுவிசேஷத்தின் நிமித்தம், சுவிசேஷ விரோதிகளின் மத்தியில் எல்லாவற்றையும் நாம் சகித்து போக வேண்டும் என்றும் அர்த்தப்படலாம்.

மத்தேயு 5:39-44
[39]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; *தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.*
[40]உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
[41] *ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.*
[42]உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
[43]உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
[44]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; *உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;* உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

*இங்கே ஆண்டவர் சொல்லிய முக்கிய நோக்கம் அன்பு, சத்துருவையும் சிநேகக்க வேண்டும், சபிக்கக்கூடாது*

[29/09 11:30 am] Elango: அதே வேளையில் கிறிஸ்தவத்திற்க்குள்ளாக ஒருபோதும் சுவிசேஷத்தின்  சத்தியத்தின் நிமித்தமாகவும்,  உபதேசத்திற்க்காகவும் ஒரு போதும் இணங்கி போகக்கூடாது

 கலாத்தியர் 2:5
[5] *சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.*

[29/09 11:46 am] Elango: மத்தேயு 10:16-18
[16]ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ,

*நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள்.*

[17]மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
[18]அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.

நம்மிடம் நம் ஆண்டவர் இரண்டு விதமான சுபாவங்களை எதிர்பார்க்கிறார்.

1. புறாவைப் போல கபடற்ற சுபாவம். கிறிஸ்துவின் தாழ்மையை, அன்பை, இரக்கத்தை, பரிசுத்தத்தை, நீதியை வெளிப்படுத்தும் சுபாவம்.

2. சர்ப்பத்தை போல வினா உள்ளவர்களாகவும் இருத்தல் அவசியம். பிசாசின் கண்ணியில் சிக்கியவர்களின் மணக்ககண்ணை திறக்கும் படியாகவும், அவர்களும் இயேசுவை அறிந்துக்கொள்ளும் படியாக ஞானமுள்ளவர்களாகவும், அந்தாகார கிரியைகளுக்கு எதிர்த்து நிற்கிறவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

அப்போஸ்தலர் 13:7-12
[7]அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். *அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.*
[8]மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான்.
[9]அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் *பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய்* அவனை உற்றுப்பார்த்து:
[10] *எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?*👿😈😈😈😈
[11]இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.
[12]அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, *கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.*👈💐🙏

[29/09 11:48 am] Elango: அப்போஸ்தலர் 6:8-10
[8] *ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.*

[9]அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.😱😱😱😱😱

[10]  *அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.*💪💪💪💪💪💪💪👍👍👍👍👍

[29/09 12:18 pm] Elango: 👍👍

ரோமர் 12:17-21
[17]ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
[18]கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
[19]பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
[20]அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
[21] *நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.*

[29/09 12:23 pm] Elango: 👍👍 பல பரிசுத்தவான்கள் சுவிசேஷத்திற்க்காக தங்களுடைய கன்னத்தை மட்டுமல்ல, தங்களுடைய ஜீவனையே கொடுத்தனர்👍👍

எபேசியர் 5:1-2
[1]ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,

[2]கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

[29/09 12:57 pm] Thatchana Moorthy 2 VTT: 1. உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
லுூக்கா 6:29    இந்த இடத்தில் இயேசு எதிரியை நேசிக்க கூறுகிறார்.   ஆனால் 2. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
யோவான் 18:23  _இங்கு சேவகன் ஒரு பணியாளன் இயேசுவின் எதிரி அல்ல,_ சேவகன் தன் வேலையை செய்தான். தன் பணியை செய்கிறவனுக்கு இயேசுவின் பதில் தான் இந்த வார்த்தை.  **** இயேசு எதிரியினிடத்தில் செய்ய வேண்டியதையும், தன் பணியை செய்கிறவனிடத்தில் செய்ய வேண்டியதையும் செய்கிறார்.*

[29/09 3:30 pm] Elango: 2⃣ *தகுதியாய் நாம் நடந்து கொள்ளும் போது வீணாக தண்டிக்கப்பட்டால் ஏதிர்த்து கேள்வி கேட்க சொல்கிறாரா இயேசு❓*

3⃣ அல்லது இயேசு கொடுக்க சொன்ன மறு கன்னம் என்பது என்னவென்பதை நமக்கு இந்த சம்பவத்தில் சொல்லியிருக்கிறாரா❓

[29/09 3:36 pm] Jeyaseelan Bro VDM: இயேசுவின் குற்றம், அவருடைய ஆள்த்துவம் மற்றும் அவரது உரிமை கோருதல் பற்றி ஆரம்பநிலை விசாரணை இருக்கவில்லை.

அது அவருடைய சீஷர்களைப் பற்றியும், அவரது போதனை முறைகள் பற்றியும் இருந்தது. அக்காலத்தில் அநேக இரகசிய குழுக்கள் அங்கே இருந்தன. அவரை விசாரித்தவர்கள் அவருடைய சீடர்கள் மூலம் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஆபத்து நேரிடுமோ என தீவிரமாக கண்டறிய விரும்பினார்கள். அதன் மூலம் அவர்கள் கலகம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

அப்படிப்பட்ட எந்த குழுவும் இருப்பதை இயேசு மறுத்தார். மேலும் அநேகர் வந்து கேட்கத்தக்கதாக தேவாலயத்திலும், ஜெப ஆலயங்களிலும் அவர் பகலில் வெளியரங்கமாக போதித்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். தலைவர்கள் அவரை அறிவதை நேர்மையுடன் விரும்பியிருந்தால், அவரது போதிக்கும் இடங்களுக்கு சென்று அவருடைய பேச்சுக்கள் மற்றும் அழைப்பு பற்றிய விவரங்களை கேட்டிருக்க வேண்டும். இவ்விதமாக பிரதான ஆசாரியனுக்கு இயேசு பயமின்றி பதிலளித்தார். திடீரென்று வேலைக்காரர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுக்கு சாதகமாக இயேசுவை அறைந்தான். இயேசு அவனை திருப்பி அடிக்கவில்லை அல்லது கோபத்தைக் காண்பிக்கவில்லை. அதே நேரத்தில் அவனது குற்றத்தின் ஆழத்தை அவர் குறைத்துவிடவில்லை. அடித்ததற்கான காரணத்தை கூறும்படி அவனை வினவினார். இயேசு நிரபராதியாய் இருந்தபடியால், அந்த வேலைக்காரன் மனந்திரும்புதலை காண்பிக்க தனது வருத்தத்தை தெரிவிப்பது அவசியமாய் இருந்தது.

வேலைக்காரனின் நடத்தைக்கு அன்னா பொறுப்பு என்பதால் இந்த சவாலானது மறைமுகமாக அன்னாவிற்கு கொடுக்கப்பட்டது.அவன் குற்றச் செயலை அனுமதித்திருந்தான். சரியான காரணமின்றி ஒருவனை அடிப்பது அல்லது நிரபராதியை பயமுறுத்தும் செயலைச் செய்ய தன்னுடைய அடிவருடிகளை அனுமதிப்பது போன்ற காரியங்களை இன்று செய்யும் அனைவருக்கும் விரோதமாக இந்த சவால் விடுக்கப்படுகிறது.

 நமது ஆண்டவர் சிறு செயலுக்கும் கணக்கு வைத்திருக்கிறார். அவர் கூறுகிறார், “இந்தச் சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்.”

இயேசு தன்னை நீதிபதியாக முன்னிறுத்தி, உண்மை மற்றும் நீதியைக் குறித்து வினவினார். தனது பயமுறுத்தல்களுக்கு இயேசு அடிபணியாததை உணர்ந்த அன்னா விசாரனையை முடிவுக்குக் கொண்டுவர சூது நிறைந்த நரியாகிய தனது மருமகன் காய்பாவிடம் அவரை அனுப்பினான்.

http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh107

[29/09 3:41 pm] Thatchana Moorthy 2 VTT: *2. யோவான் 18:23 ல் இயேசு செய்ததை நாமும் செய்யலாம், ஆனால் அவர் ஒரு முறை மறு உத்தரவு கூறினார் நாமும் அப்படி செய்யலாமே. 3. இந்த வசனத்தில் மறு கன்னம் இல்லை. மறு கன்னம் நம் எதிரியை நேசிக்க.*

[29/09 3:43 pm] Elango: 👍👍❤❤ *மறு கன்னம் என்பது நம் எதிரியை நேசிக்க.*

[29/09 3:48 pm] Jeyaseelan Bro VDM: "ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - மத்தேயு 5:39

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்று கூறிய கர்த்தரே அவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை என்று கீழுள்ள வசனங்களை சுட்டி இகழ்கிறார்கள்...

"ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - மத்தேயு 5:39

"இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்" - யோவான் 18,22,23

வேதவசனங்களை சற்று உற்று நோக்கினாலே இயேசு கிறிஸ்து என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - மத்தேயு 5:39

இவ்வசனத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய வாக்கியம் - "தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்" என்பதே. இந்த வாக்கியத்தை இருவாரியாக பொருள் கொள்ளலாம்.

1. தீமைக்கு எதிராக நிற்கவேண்டாம்

2. நம்மிடத்தில் தீமையை வைத்துகொண்டு எதிர்த்து நிற்கவேண்டாம்

இதில் இகழ்ந்து பதிவுகளை வெளியிடும் நண்பர்கள் எல்லாம் முதலாவது பொருளின்படி அவ்வசனத்தை நோக்குகிறார்கள். ஒருவன் எவ்வளவு அக்கிரமம் செய்தாலும், அவனை தட்டிக்கேளாமல் மறுகன்னத்தை காட்ட வேண்டும் என்பது இவர்களது கருத்தாகும். இது தவறு.

இயேசு இரண்டாவது பொருள்படவே அவ்வசனத்தை அருளியுள்ளார் என்பது அவரது செய்கையில் இருந்தே தெளிவாகும். நம்மிடத்தில் தீமையோடு எதிர்த்து நிற்க கூடாது. உன்னிடத்தில் தீமை உண்டு என்று கண்டாயாகில் ஒரு கன்னம் என்ன மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு என்கிறார் இயேசு.

இதனையே அவரது செய்கையும் விளக்குகிறது...

இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார் - யோவான் 18:23

இங்கே இயேசுநாதரிடத்தில் எவ்வித தீமையும் இல்லை. தீமை என்னிடத்தில் உண்டென்றால் அதனை ஒப்புவி என்கிறார். தீமை அவரிடத்தில் இல்லாத பட்சத்தில் அவர் ஏன் மறுகன்னத்தை காட்ட வேண்டும்? அவர் தன்னிடத்தில் தீமையோடு எதிர்த்து நிற்கவில்லை.

http://ivaryaar.blogspot.in/2013/08/?m=1

[29/09 3:54 pm] Elango: *தீமை அவரிடத்தில் இல்லாத பட்சத்தில் அவர் ஏன் மறுகன்னத்தை காட்ட வேண்டும்? அவர் தன்னிடத்தில் தீமையோடு எதிர்த்து நிற்கவில்லை.👍✅*

[29/09 3:58 pm] Elango: 1 பேதுரு 2:20-23
[20] *நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.*

[21]இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், *கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.*👣👣👣👣👣👣👣

[22]அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

[23] *அவர் வையப்படும்போது பதில்வையாமலும்,*👈 *பாடுபடும்போது பயமுறுத்தாமலும்,*👈 நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.😷😷🤐🤐🤐

[29/09 4:31 pm] Elango: 👍👍இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான விளக்கம்.

மறுகன்னம் இயேசுவின் அன்பின் சுபாவம்

[29/09 4:33 pm] Thatchana Moorthy 2 VTT: *மத்தேயு எழுதும் போது இப்படி கூறுகிறார் :*
*பழிவாங்குதல் பற்றிய போதனை*
38 ,“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ [f] என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.

*லூக்கா எழுதும் போது இப்படி கூறுகிறார் :*
*உங்கள் பகைவரை நேசியுங்கள்*
27 “என் போதனைகளைக் கேட்கிற மக்களே உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களை நேசியுங்கள். உங்களை வெறுக்கிற மக்களுக்கு நன்மை செய்யுங்கள்.28 உங்களிடம் தீயவற்றைக் கூறுகிற மக்களை ஆசீர்வதிக்குமாறு தேவனை வேண்டுங்கள். உங்களை இழிவாக நடத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்கள். 29 ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனை மறு கன்னத்திலும் அடிக்க அனுமதியுங்கள். உங்கள் அங்கியை யாரேனும் ஒருவன் எடுத்தால் உங்கள் சட்டையையும் அவன் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். 30 உங்களிடம் கேட்கிறவனுக்குக் கொடுங்கள். உங்களுக்குரிய பொருளை ஒருவன் எடுத்துக்கொண்டால் அதைத் திரும்பக் கேட்காதீர்கள்.31 உங்களுக்குப் பிறர் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள்
.
[29/09 4:54 pm] Thatchana Moorthy 2 VTT: கேள்வி
தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" என்று இயேசு சொல்லியுள்ளார். எனவே மறு கன்னத்திலும் அறை வாங்க வேண்டுமா?
பதில்
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என்பதன் அர்த்தமானது தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம் என்பதே ஆகும்.
துன்பப்படுத்துபவர்களுடன் எதிர்த்து நிற்க வேண்டாம்.
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" ( மத்தேயு 5:39 )
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்.(மத்தேயு 10:23).
என்று சொன்ன இயேசு அதன் படியே தனக்கு கொலை அச்சுறுத்தல் எற்பட்ட போதெல்லாம் அவ்விடம் விட்டு விலகிப்போனார்.( மத்தேயு 12:14-15 )(யோவான் 11:53-54).
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மேலும் அப்பட்டணத்திலே இருந்து துன்பப்படுங்கள் என்று இயேசு சொல்லாமல் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள் என்று சொன்னார்.
இயேசுவைக் குற்றம் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்றிருந்த பரிசேயர்களுடன் எந்த வித வாக்கு வாதத்திலும் ஈடுபடாமல் அவ்விடம் விட்டு இயேசு விலகிச் சென்றார்.
மோசேயினால் கொடுக்கப்பட்ட சில வெளித்தூய்மைக்கான நியாயப்பிரமானங்களை ஞாபகப்படுத்தி அதற்கு மாறாக ஒரு மனிதனின் உள்ளகத்தூய்மையின் அவசியம் பற்றி பேசும் போதே உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" எனும் இந்த வார்த்தையை இயேசு பிரசங்கித்தார்.
அதாவது விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.(மத்தேயு 5:27) எனும் நியாயப்பிரமான வார்த்தையை ஒரு மனிதனின் உள்ளகத்தூய்மையின் அவசியம் கருதி இச்சையோட பார்ப்பதே விபச்சாரம்.(மத்தேயு 5:28 ) என்று மாற்றியமைத்த இயேசு கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் பழி கொடுக்க வேண்டும். (மத்தேயு 5:38) எனும் நியாயப்பிரமாண வார்த்தையையும்
'' தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" ( மத்தேயு 5:39 ) என்பதாக மாற்றியமைத்தார்.
*அதாவது ஒருவன் எமக்கு கன்னத்தில் அறைந்தால் மீண்டும் அவனை அறைந்து பழி தீர்ப்பது என்பது நியாயப்பிரமாணமாகும். அவ்வாறு செய்யாமல் அதாவது தீமையோடு எதிர்த்து நிற்காமல் அவ்விடத்தை விட்டு சென்று விட வேண்டும் எனும் கருத்து கொள்ளும் விதத்திலேயே இயேசு அவ்வாறு பிரசங்கித்தார்.*
ஒரு கன்னத்தில் அறைவாங்கினால் உன்னுடைய மற்றக் கன்னத்திலும் அறை வாங்க வேண்டும் என்பதாக இயேசு தன்னுடைய பிள்ளைகளிற்கு ஒருபோதும் போதிக்கவில்லை.தன்னுடைய பிள்ளைகள் அடி வாங்கக் கூடாது என்பதற்காகதானே தான் அடிகளை ஏற்றுக் கொண்டார்.
சேவகரில் ஒருவன் இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்" ( யோவான் 18,22,23 ).
சேவகர் ஒருவரினால் அறை வாங்கிய இயேசு தன்னுடைய மறு கன்னத்திலும் அறைந்து விடு என்று சொல்லவில்லை.தீமை எதுவும் செய்யாத என்னை அறைவதற்குரிய காரணம் என்ன என்று கேட்டார்.
தீமையோடு எதிர்த்து நின்று போராடி இரத்தத்தை சிந்தப்பண்ணி அல்லது மற்றவர்களை வேதனைப் படுத்தி வெற்றி பெறுவதற்கு இயேசு வராமல் தன் இரத்தத்தை சிந்தி தன் சரீரத்தில் வேதனையை ஏற்றுக் கொண்டு விசேட முறையில் ஒரு போராட்டத்தை போராடி வெற்றி பெறவே இயேசு வந்தார்.

[29/09 5:27 pm] Elango: 5⃣ நாம் நீதியாக நடந்தால், நீதிக்காக நாம் எதிர்த்து பேசலாமா போராடலாமா அல்லது பணிந்து போக வேண்டுமா❓

[29/09 5:33 pm] Thatchana Moorthy 2 VTT: அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
ஏசாயா 53:7

[29/09 5:33 pm] Jeyanti Pastor VDM: நெகேமியா போல எப்போதும் கர்த்தரோடு உறவாடுபவர்கள்,  கேட்கலாம் என்பது என் கருத்து பாஸ்டர்.  நெகேமியா 13:14  என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
31  குறிக்கப்பட்ட காலங்களில் செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுடண்டாக என்னை நினைத்தருளும்.

[29/09 5:34 pm] Jeyanti Pastor VDM: விசுவாசத்தினாலும் கேட்கலாம்,
ரோமர் 10:10  நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
11  அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

[29/09 5:35 pm] Jeyanti Pastor VDM: தானியேல் 9

18  என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.
19  ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்.

[29/09 5:36 pm] Jeyanti Pastor VDM: 👆👆👆 விண்ணப்பித்து,  வேண்டியும் கேட்கலாம்

[29/09 5:37 pm] Elango: அப்போஸ்தலர் 8:32-33
[32]அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
[33] *அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது;* அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.

[29/09 5:40 pm] Jeyanti Pastor VDM: தூளும்,  சாம்பலுமாகிய நாம் எதிர்த்து பேச கூடாது,  பணிந்த ஆவியோடு,  கேட்கலாம்.  ஏசாயா 38

2  அப்பொழுது எசேக்கியா தன்முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
3  ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.
5  நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
கர்த்தர் விண்ணப்பம் கேட்டார்

[29/09 6:14 pm] Thatchana Moorthy 2 VTT: மத்தேயு 12                                                                                                                                                                       22. அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.

23. ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.

24. பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.

*25. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.

26. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

27. நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.*

[29/09 6:23 pm] Elango: அப்போஸ்தலர் 28:18-19
[18]அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
[19] *யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது,*

*நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது;*👈👈👆🏻👆🏻👆🏻 ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சொட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.

[29/09 6:26 pm] Thatchana Moorthy 2 VTT: யோவான் 8                                                                                                                                                                    45. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.

46. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.

47. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.

*48. அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.*

*49. அதற்கு இயேசு: நான் பிசாசுபிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்.*

50. நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.

51. ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

*52. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.*

53. எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.

*54. இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.*

55. ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

*56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.*

57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.

58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

*59. அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.*

[29/09 6:46 pm] Ebi Kannan Pastor VDM: 1 தெசலோனிக்கேயர் 5:15
[15]ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.

[29/09 8:29 pm] Elango: ✨ *இன்றைய தியான கேள்விகள் - 29/09/2017*✨

*உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு.* லூக்கா 6:29

இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: *பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.*
23 இயேசு அவனை நோக்கி : *நான் தகாதவிதமாய் பேசினதுண்டானால், தகாதது ஒப்புவி ; தகுதியாய்ப்j பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.* யோவான் 18:22

1⃣ ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு என்று சொன்ன இயேசு  இந்த சம்பவத்தில் தன்னை அறைந்தவனுக்கு மறு கன்னத்தை கொடுக்கவில்லையே ஏன்❓

2⃣ தகுதியாய் நாம் நடந்து கொள்ளும் போது வீணாக தண்டிக்கப்பட்டால் ஏதிர்த்து கேள்வி கேட்க சொல்கிறாரா இயேசு❓

3⃣ அல்லது இயேசு கொடுக்க சொன்ன மறு கன்னம் என்பது என்னவென்பதை நமக்கு இந்த சம்பவத்தில் சொல்லியிருக்கிறாரா❓

4⃣ இயேசு கொடுக்க சொன்ன மறுகன்னம் என்பது உண்மையில் என்ன❓ லூக்கா 6:29 வசனத்தின் உண்மையான அர்த்தம் என்ன❓

5⃣ நாம் நீதியாக நடந்தால், நீதிக்காக நாம் எதிர்த்து பேசலாமா போராடலாமா அல்லது பணிந்து போக வேண்டுமா❓

6⃣ இந்த வசனத்தையும் தியானிக்கலாம் 👇

*ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; யாக்கோபு 1:19*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[29/09 8:41 pm] Elango: [29/09 8:37 pm] Ebi Kannan Pastor VDM: 2 கொரிந்தியர் 11:20
[20]ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.

[29/09 8:40 pm] Ebi Kannan Pastor VDM: தீமையை சகித்தல் என்பது தீமைக்கு அடிபணிதல் என்பதாகாது.
தீமையை நியாயத்திற்காக எதிர்கொள்வதில் வரும் தீமைகளை அனுபவிப்பதே அதன் அர்த்தமாகும்.

[29/09 8:44 pm] Ebi Kannan Pastor VDM: 1 பேதுரு 2:19-22
[19]ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.
[20]நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
[21]இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
[22]அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

[29/09 8:50 pm] Ebi Kannan Pastor VDM: தீமையை சகித்தாலும்
தீமையை எதிர்த்தாலும்
பாவம் செய்யக்கூடாது என்பது தேவனால் நாம் பெற்ற நியதி

[29/09 9:02 pm] Ebi Kannan Pastor VDM: மத்தேயு 26:67-68
[67]அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
[68]கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

[29/09 9:05 pm] Ebi Kannan Pastor VDM: மறு கன்னத்தை மாத்திரமல்ல
பிதாவின் சித்தத்திற்காக தன் சரீரம் முழுவதையும் ஒப்புக்கொடுத்தவர்தான் நம்முடைய ஆண்டவர்

[29/09 9:50 pm] Ebi Kannan Pastor VDM: மத்தேயு 5:38-39
[38]கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
[39]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.

👆 இங்கு அறைகிறவன் நல்லெண்ணத்தால் அறையவில்லை
நமக்கு தீமைசெய்யும் நோக்கில்தான் அறைகிறான்

[29/09 9:57 pm] Thatchana Moorthy 2 VTT: ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
நொறுக்குதலுக்கு நொறுக்குதல், *கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினது போல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.*
மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
லேவியராகமம் 24:17-23 (TAM)

[29/09 9:58 pm] Thatchana Moorthy 2 VTT: 👆👆மத்தேயு 5:38
[38]கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

[30/09 7:57 am] Peter David Ayya: ஒருவர் நமக்கு விரோதமாக வந்து அவர் கோபம் கொண்டு எரிச்சல் குரூரமான முகத்தை பார்த்து நாமும் பதிலாக அதே முகத்தை காட்டாமல் அதற்கு மறுமுகமான.அன்பு சாந்தம் பொருமை இப்படி முகத்தை தான் காட்ட வேண்டும் பதிலாக எதிராக நிற்பவர் காட்டும் அதே காட்டும் முகத்தை நாமும் காட்டினால் மேலும் அங்கு ஓரு சமாதான சூழல் உருவாகாமல் பிரச்சினை தான் உருவாகும் எனவே நாம் இன்முகமான மறுமுகம் அங்கு ஒரு சாதாரண நிலை ஏற்படுத்தும்
மத்தேயு 5:39
[39]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.

[30/09 7:59 am] Peter David Ayya: நீதிமொழிகள் 15:1,18,33
[1]மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
[18]கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
[33]கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

[30/09 7:59 am] Peter David Ayya: ஏசாயா 53:7
[7]அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

[30/09 8:00 am] Peter David Ayya: லூக்கா 23:34
[34]அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

[30/09 8:00 am] Peter David Ayya: மத்தேயு 11:29
[29]நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

[30/09 9:24 am] Elango: மறுகன்னத்தை பற்றிய இதற்கு சம்பந்தமான வேறு ஏதாவது இருந்தால் குழுவிலுள்ளவர்கள் கேள்விகளை, சந்தேகங்களை கேட்கலாம் அதையும் சேர்த்து *மறுகன்னத்தை குறித்த தியானத்தை இன்றைக்கும் தொடரலாம்.🙏*

[30/09 9:29 am] Jeyakumar Toothukudi VTT: Praise the. Lord
ஒரு ஊரிலே ஜமீன்தார ஒருவர் இருந்தார்.இவருக்கு சுவிஷேசத்தை அறிவித்து   இரட்சிக்கப்படுவாரானால் அந்த ஊரே இயேசுவை ஏற்றுக்கொள்ளும் என நம்பி  கைப்பிரதியோடு அங்கு  ஒரு ஊழியர் சென்றார்.இதைக் கேள்விப்பட்ட  ஜமீன் எங்க ஊருக்கு இயேசுவை அறிவிக்க வராதே எனக் கூறி மரத்திலே  கட்டி வைத்து அடித்து  அனுப்பி விட்டார்.
மறுநாள்  அந்த ஊழியர் கைப்பிரதியோடு ஜமீனிடம் வந்து ஐயா, இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் என கூறினார்.ஜமீனோ  மிகுந்த கோபமடைந்து  உனக்கு  கால் இருப்பதினால்தானே  கைப்பிரதி கொடுக்க வருகிறாய் என கூறி இரண்டு கால்களையும் துண்டித்து அனுப்பிவிட்டார்.

சில மாதங்கள் கழித்து சக்கர நாற்காலி மூலம்  வந்து தன் இரு கைகளோடு  ஜமீனை  சந்தித்தார்.. அவருக்கோ  கோபம் அதிகரித்து  இனி இவன் ஒருபோதும் இங்கு வரக்கூடாது என்றவாறு  ஊழியரின்  இரண்டு  கைகளையும் துண்டித்து அனுப்பி விட்டார்.
ஒரு வருடத்திற்குப் பின்...
இனி அவன் இங்கு வ்ரவே மாட்டான் எனக் கூறி வீட்டாரோடு சிரித்து பேசிக் கொண்டிருந்தார் ஜமீன். திடீரென எல்லோரும் அமைதியாகிவிட்டனர். ஐமீன்  திரும்பி  பார்த்தார். அவரால் நம்பவே முடியவில்லை் ஆம்  அந்த  ஊழியரேதான்  கைப்பிரதியோடு வருகிறார். ஆமாங்க!  வாயிலே கைப்பிரதியை கவ்விக் கொண்டு சக்கர்நாற்காலியுடன்.

கைகளையும் கால்களையும் துண்டித்தும்  கைப்பிரதியோடு வருகிறான் என்றால்  அதிலே ஏதோ இருக்கிறது என சிந்தித்து ஊழியர் அருகே வந்து கைப்பிரதியை  வாங்கிக்கொண்டார்.
ஊழியர்க்கு ரொம்ப சந்தோஷம்.  தெளிவாக  இயேசுவை குறித்து அறிவித்து விட்டு  வீட்டிற்க்குசென்று விட்டார்.ஒரு சில வருடங்களுக்கு பிறகு  மீண்டும்  கைப்பிரதியோடு   சென்றார் பார்வை இழந்தவராய்  தன் மகனோடு.

இரட்சிக்கப்பட்ட  ஜமீன்  இயேசுவை ஏற்றுக்கொண்ட  தன்  ஊராரோடு சந்தித்தார்.

இப்படிப்பட்ட தியாகமுள்ள  ஊழியர்கள் இந்தியாவில்  இருப்பார்களானால் பரலோகம் எல்லாம் நிரம்பியிருக்கும்.
                                           Bro.R.Jeyakumar.

[30/09 9:38 am] Barnabas VTT: *பொறுமையாக இதை படித்தால் உங்களுக்கு புரியும் மறுகன்னம் என்பதை இயேசு ஏன் குறிப்பிட்டார் என்று*👇

நெடுவழிப்பாதையின் ஓரமாய் இருந்த 'ஓட்டலு’க்கு முன்பாக ஒருவர் தன் லாரியை நிறுத்திவிட்டு, உள்ளே சாப்பிடச் சென்றார். அவர் கேட்ட உணவை, பரிமாறுபவர் கொண்டுவந்து வைத்தார். அப்போது, ‘மோட்டார் சைக்கிள்’களில் வந்த ஆறு, அல்லது ஏழுபேர்,அவரது உணவுத் தட்டைப் பறித்து, அட்டகாசமான வெற்றிச் சிரிப்புடன், தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். எதுவும் பேசாத லாரி ஓட்டுனர், தன் உணவுக்குரியத் தொகையைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், "அவனுக்குப் பேசத்தெரியாதுன்னு நினைக்கிறேன். ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஓடிட்டான்" என்று சொல்லி உரக்கச் சிரித்தார். அந்தக் கும்பலைச் சார்ந்த மற்றொருவர், "அவனுக்குச் சண்டைபோடவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். கையை ஓங்காமலேயே ஓடிட்டான்" என்று கூறி, அவரும் பலமாகச் சிரித்தார். அப்போது ஓட்டலில் பரிமாறிக் கொண்டிருந்த ஒருவர் அவர்களிடம் வந்து, "அவருக்கு லாரி ஒட்டவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். நீங்க நிறுத்தி வச்சிருந்த மோட்டார் சைக்கிள் எல்லாத்தையும் லாரி ஏத்தி நொறுக்கிட்டுப் போயிட்டார்" என்று சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்கும்போது, நம் மனங்களில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி உண்டாவதை உணர்கிறோம். இவ்விதமான காட்சிகள் நம் திரைப்படங்களில் அடிக்கடி வந்து நம் கைத்தட்டைப் பெற்றுள்ளன. அந்த லாரி ஓட்டுனர், மோட்டார் சைக்கிள்‘தாதா’க்களுக்கு நல்ல பாடம் சொல்லித்தந்தார் என்ற மகிழ்ச்சியே கைத்தட்டலாக மாறுகிறது. 'பழிக்குப் பழி'யைப் பலவழிகளில் சொல்லும் கதைகளை, காட்சிகளை நாம் இரசிக்கிறோம்.

'பழிக்குப் பழி', 'பதிலுக்குப் பதில்', 'பல்லுக்குப் பல்' 'கண்ணுக்குக் கண்' ... இவை எதுவுமே கிறிஸ்தவ வாழ்வு முறை அல்ல என்பதை இன்றைய நற்செய்தி, ஆழமாய், மிக, மிக ஆழமாய் சொல்லித்தருகிறது. இந்தக் கண்ணியமான, அதேநேரம், கடினமானப் பாடத்தைக் கற்றுக்கொள்ள இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஒளியைத் தரவேண்டுமென்ற வேண்டுதலுடன் நம் சிந்தனைகளை இன்று துவக்குவோம்.

'காந்தி' என்ற திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அத்திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தியும் அவரது நண்பரான கிறிஸ்தவப் பணியாளர் சார்லி ஆண்ட்ரூஸும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழிமறைத்து நிற்கும். அவர்களைக் கண்டதும், "வாருங்கள், நாம் வேறுவழியில் சென்றுவிடுவோம்" என்று சார்லி, காந்தியிடம் சொல்வார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்." என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "இயேசு அப்படிச் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும், திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து, துணிவுடன் நிற்கவேண்டும்என்பதையே இயேசு சொல்லித்தந்தார் என்று நினைக்கிறேன்" என்று சொல்வார்.

இக்காட்சியில், காந்தியடிகள் கூறும் வார்த்தைகள், ஒன்று'ஹீரோ’த்தனமாகத் தெரியலாம், அல்லது பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். நம் திரைப்படங்களில் வரும் ஹீரோக்களும் காந்தியடிகள் சொல்வதுபோல் அடிகளைத் தாங்கிக் கொள்வார்கள்... ஆனால், சிறிது நேரம் கழித்து, தாங்கள் பெற்ற அடிக்கு பல மடங்கு திருப்பித் தருவார்கள். நம் கைத்தட்டலைப் பெறுவார்கள்.

‘மறுகன்னத்தைக் காட்டுங்கள்’ என்று சொன்ன இயேசுவின் கூற்று துணிச்சலா? மதியீனமா? புனிதமா? என்ற கேள்விகள்,இயேசுவின் காலத்திலிருந்து நம்மைத் தொடர்கின்றன. இன்றைய நற்செய்தி இக்கேள்வியை, இந்த விவாதத்தை மீண்டும் கிளறிவிடுகிறது. இயேசுவின் கூற்றுகளை, வெறும் மேற்கோள்களாகக் காட்டுவது எளிது. ஆனால், அவற்றை இயேசு கூறிய சந்தர்ப்பச் சூழ்நிலைகளுடன் பார்க்கும்போதுதான் அவரது வார்த்தைகளின் பொருளை ஓரளவாகிலும் புரிந்துகொள்ள முடியும்.

மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்று கூறிய இயேசு, தலைமைக் குருவின் காவலர் தன்னை அறைந்தபோது, மறுகன்னத்தைக் காட்டுவதற்குப் பதில், "ஏன் என்னை அடிக்கிறீர்?" என்று கேள்வி கேட்டார் (யோவான் 18: 22-23). அவர் போதித்தது ஒன்று, அவர் செய்தது ஒன்று என்று அவசர முடிவுகள் எடுப்பதற்குப் பதில், இயேசுவின் கூற்றுகளை, சூழ்நிலையுடன் பார்ப்பது நல்லது.

தலைமைக் குருவுக்கு முன் விசாரணை நடந்தபோது, உண்மைகள் புதைக்கப்படக் கூடாது என்ற வேட்கையில் இயேசு பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறிய சங்கடமான உண்மைகளை மௌனமாக்க காவலர் அறைந்தார். அந்தச் சூழலில் உண்மை வெளிவர வேண்டும் என்பது முக்கியம் என்று இயேசு உணர்ந்ததால், தன்னை மௌனமாக்க நினைத்த காவலரை எதிர்த்து கேள்வி கேட்டார்.

தன்னை அறைந்தவருக்கு மறுகன்னத்தைக் காட்டாமல் கேள்வி எழுப்பிய இயேசு, இன்றைய நற்செய்தியில், மறுகன்னத்தைக் காட்டச் சொல்கிறார்; உள்ளாடையைப் பறித்துச் செல்பவருக்கு மேலாடையையும் அவர் கேட்காமலேயே கொடுக்கச் சொல்கிறார்;நம்மை வலுக்கட்டாயமாக ஒரு மைல் தூரம் இழுத்துச் செல்பவருடன் இரண்டு மைல் தூரம் நடக்கச் சொல்கிறார். இவை அனைத்திற்கும் இயேசு சொல்லும் ஒரு முக்கியக் காரணம் இன்றைய நற்செய்தியில் தரப்பட்டுள்ளது. இப்பகுதியை மலைப்பொழிவின் உயிர்நாடி என்று விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

மத்தேயு 5 : 43-45

“‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக,பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.”

"மறுகன்னம்" (The Other Cheek) என்ற வார்த்தையைச் சுற்றி, நல்ல விளக்கங்கள், குதர்க்கமான விளக்கங்கள்,விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. கண்ணுக்குக் கண்... பல்லுக்குப் பல் என்பது பழையச் சட்டம். "கண்ணுக்குக் கண்" என்று உலகத்தில் எல்லாரும் பழிவாங்கும் படலத்தில் இறங்கினால், உலகமே குருடாகிப்போகும் என்று காந்தியடிகள் சொன்னார். பழிக்குப் பழி வேண்டாம். சரி... அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லி சொன்னதுபோல், அல்லது நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவதுபோல், "துஷ்டனைக் கண்டால், தூர விலகலாம்" அல்லவா?

துஷ்டனைக் கண்டு நாம் ஒதுங்கிப் போகும்போது, நமக்கு வந்த பிரச்சனை அப்போதைக்குத் தீர்ந்துவிடலாம். ஆனால்,அப்பிரச்சனையின் பிறப்பிடமான அந்த ‘துஷ்டன்’ மாறும் வாய்ப்பை நாம் தரவில்லையே. அதைத்தான் இயேசு தரச்சொல்கிறார். நமது மறுகன்னத்தைக் காட்டும்போது, நமது பகைவர் மாறும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.

மறுகன்னத்தைக் காட்டியதால் பகைவரிடம் உண்டான மனமாற்றங்கள், அவர்கள் பெற்ற மறுவாழ்வு இவற்றைக் கூறும் பல நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் உலகில் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புறநகர் பகுதியில் இரவு 8 மணிக்கு ஒரு பூங்காவில் ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் தினமும் வழங்கப்பட்டன. Nick என்ற இளைஞனும் இக்கூட்டத்தில் ஒருவர். அவர் கராத்தேயில் திறமைபெற்று, கறுப்புப்பட்டை பெற்றவர். பொருளாதாரச் சரிவால் அவரும் இக்கூட்டத்தில் சேரும் நிலைக்கு உள்ளானார். அவர் அன்றிரவு தன் உணவை முடித்த வேளையில், அவரைவிட பலம் மிகுந்த ஒருவர் திடீரென Nickஇடம் வந்து அவரது முகத்தில் குத்தினார். நிலை தடுமாறி விழுந்தார் Nick. சுதாரித்து எழுந்த அவர்,தன்னைக் குத்தியவரிடம், "மீண்டும் குத்துவதற்கு விருப்பமா?"என்று கேட்டார். அந்த பலசாலி மீண்டும் குத்தினார். மீண்டும் விழுந்து எழுந்த Nick, "மறுபடியும் குத்த விரும்புகிறாயா?" என்று அவரிடம் கேட்டார். இப்படி நான்கு அல்லது ஐந்து முறை குத்தியபின், அந்த பலசாலி கீழே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதார். Nick அவரருகே அமர்ந்தார். பலசாலி Nickஇடம், "நான் உன்னைக் குத்தினேன் என்று காவல் துறைக்குச் சொல்... அவர்கள் வந்து என்னைக் கைது செய்யட்டும்." என்று அழுதபடியே சொன்னார்.

அந்தப் பலசாலி பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். விடுதலை பெற்று வந்ததிலிருந்து உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாததால்,அவரால் வெளி உலகில் வாழ முடியவில்லை. மீண்டும் சிறைக்குத் திரும்புவதே மேல் என்று அவர் எண்ணினார். Nick அவரிடம், "சரி,வா. நாம் போய் காபி அருந்தியபடியே பேசுவோம்." என்று அவரை அழைத்துச்சென்றார். பலசாலியின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தன்னைச் சிறைக்குள் அடைத்துக்கொள்வதே மேல் என்று எண்ணிய அந்த மனிதர், தன்னைச் சுற்றி எழுப்பியிருந்தச் சிறைகளிலிருந்து அவரை வெளியே கொண்டுவந்தது Nick அவரிடம் தன் மறுகன்னத்தைக் காட்டிய அந்த நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து, Nick காட்டிய பரிவு.

பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன், மறுகன்னத்தைக் காட்டும் பல வீரர்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்களின் வீரச் செயல்களில் நூற்றில் ஒன்று அல்லது ஆயிரத்தில் ஒன்று என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி நமது பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை இரத்தத்தில் எழுதும் நம்மைப்பற்றி சொல்லப்படும் ஒரு சீனப் பழமொழி இது:"பழிக்குப் பழி வாங்க நினைப்பவன் இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."

பழிக்குப் பழி  என்று இவ்வுலகை ஒரு கல்லறைக்காடாக மாற்றும் உலக மந்திரத்திற்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக அங்கு துயருற்ற தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரையும், Philip, Timothy என்ற அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு சனவரி மாதம் உயிரோடு எரித்துக் கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு,கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியை நாம் அறிவோம். மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும் என்று Gladys சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம்.

மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களையும் மாற்றும் கனிவையும், துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

[30/09 9:42 am] Barnabas VTT: பழிக்குப் பழி', 'பதிலுக்குப் பதில்', 'பல்லுக்குப் பல்' 'கண்ணுக்குக் கண்' ... இவை எதுவுமே கிறிஸ்தவ வாழ்வு முறை அல்ல என்பதை நம் ஆண்டவர் இயேசு ஆழமாய், மிக, மிக ஆழமாய் சொல்லியிருக்கிறார்.

[30/09 9:45 am] Barnabas VTT: மறுகன்னத்தைக் காட்டுங்கள்’ என்று சொன்ன இயேசுவின் கூற்று துணிச்சலா? மதியீனமா? புனிதமா? என்ற கேள்விகள்,இயேசுவின் காலத்திலிருந்து நம்மைத் தொடர்கின்றன. இன்றைய நற்செய்தி இக்கேள்வியை, இந்த விவாதத்தை மீண்டும் கிளறிவிடுகிறது.

 இயேசுவின் கூற்றுகளை, வெறும் மேற்கோள்களாகக் காட்டுவது எளிது. ஆனால், அவற்றை இயேசு கூறிய சந்தர்ப்பச் சூழ்நிலைகளுடன் பார்க்கும்போதுதான் அவரது வார்த்தைகளின் பொருளை ஓரளவாகிலும் புரிந்துகொள்ள முடியும்.

[30/09 9:50 am] Barnabas VTT: பழிக்குப் பழி  என்று இவ்வுலகை ஒரு கல்லறைக்காடாக மாற்றும் உலக மந்திரத்திற்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக அங்கு துயருற்ற தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரையும், Philip, Timothy என்ற அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு சனவரி மாதம் உயிரோடு எரித்துக் கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு,கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியை நாம் அறிவோம். மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும் என்று Gladys சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம்.

[30/09 9:53 am] Barnabas VTT: நீ கிறிஸ்தவன் தானே உன் வேதத்தில் மறுகன்னத்தை காட்ட வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறதே என்று நம் கன்னத்தில் வேண்டுமென்றே நம் கன்னத்தில் அடிப்பவரிடம் நாம் மறுகன்னத்தை திரும்ப காட்ட வேண்டுமா???

[30/09 10:09 am] Elango: ✨ *இன்றைய தியான கேள்விகள் - 29-30/09/2017*✨

*உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு.* லூக்கா 6:29

இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: *பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.*
23 இயேசு அவனை நோக்கி : *நான் தகாதவிதமாய் பேசினதுண்டானால், தகாதது ஒப்புவி ; தகுதியாய்ப்j பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.* யோவான் 18:22

1⃣ ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு என்று சொன்ன இயேசு  இந்த சம்பவத்தில் தன்னை அறைந்தவனுக்கு மறு கன்னத்தை கொடுக்கவில்லையே ஏன்❓

2⃣ தகுதியாய் நாம் நடந்து கொள்ளும் போது வீணாக தண்டிக்கப்பட்டால் ஏதிர்த்து கேள்வி கேட்க சொல்கிறாரா இயேசு❓

3⃣ அல்லது இயேசு கொடுக்க சொன்ன மறு கன்னம் என்பது என்னவென்பதை நமக்கு இந்த சம்பவத்தில் சொல்லியிருக்கிறாரா❓

4⃣ இயேசு கொடுக்க சொன்ன மறுகன்னம் என்பது உண்மையில் என்ன❓ லூக்கா 6:29 வசனத்தின் உண்மையான அர்த்தம் என்ன❓

5⃣ நாம் நீதியாக நடந்தால், நீதிக்காக நாம் எதிர்த்து பேசலாமா போராடலாமா அல்லது பணிந்து போக வேண்டுமா❓

6⃣ இந்த வசனத்தையும் தியானிக்கலாம் 👇

*ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; யாக்கோபு 1:19*

7⃣ *நீ கிறிஸ்தவன் என்றால் நான் அடிக்கும் போது நீ உன் மறுகன்னத்தையும் காட்டு  என்று இடும்புக்கு வேண்டுமென்றே நம்  கன்னத்தில் அடிப்பவருக்கும் நம் மறுகன்னத்தையும் திரும்ப காட்ட வேண்டுமா❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[30/09 12:42 pm] Aa Sheeba Tiruthani VTT: 2017 ஆண்டுகளுக்கு முன் நடந்த கால சூழ்நிலைகளை நினைவுக்கு கொண்டு வருவோம் .... எஜமான் கட்டுண்டவராக அண்ணாவுக்கு முன் நிற்கிறார். காய்பா சங்க தலைவனாகையால் அவரை முதலாவது அவனிடத்தில் கொண்டு போக வேண்டியது. ஆகிலும் ஆண்டவரை கொலை செய்வதற்கு அதிக முயற்சியுள்ள வனாய்  இருந்தாலும். அவரை குற்றவாளியாக்ககூடிய தந்திரமும் சமர்த்தும் அவனுக்கிருந்தாலும் அவரிடத்திற்கு முதலாவது அவரைக் கொண்டு போனார்கள். சாட்சிகளை காணோம். அவருக்காகப் பேசுவதற்கு சீசர் ஆவது சினேகிதர்கள் ஆவது இல்லை. கப்படும் தந்திரமும் நிறைந்த அன்னா ஆசனத்தில் உட்கார்ந்திருக்கின்றான். பாதகனைப்போல் கட்டுண்டவராய்த் தனித்து நிற்கும் இரட்சகனோ எவருக்கும் அஞ்சாத நெஞ்ராய் மகா சாந்தத்தோடு அவனுக்குமுன்நிற்கிறார். அவருடைய வாய்ச்சொல்லைக் கொண்டு அவரைக் குற்றப்படுத்த ஆலோசித்த  அன்னா அவரைப் பார்த்து: உன் சிஷர்கள் எங்கே? அவர்கள் எந்த நாட்டார்? எதற்காக நீ அவர்களை உன்னோடு சேர்த்துவைத்திருந்தாய்? அவர்களுக்கு நீ சொல்லிக்கொடுத்த உபதேசம் என்ன? வீடுகளைப் பற்றி அறிய விரும்புகிறேன் என்றான். இருதயங்களின் ரகசியங்களை அறிந்திருக்கிற ஆண்டவர் அவன் நோக்கத்தை கண்டுகொண்டார். சிஷர்கள் என்கிற பேச்சையே விட்டுவிட்டார். தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாசை காட்டிக்கொடுக்க மனமில்லாத கருணாகரன். தம்மை நம்பி இருந்த ஏழை சீஷர்களை காட்டி கொடுப்பாரா? அவர்களும் பிடிக்கப்பட்டு மரண ஆக்கினை அடைய சகிப்பாரா? உலகத்தின் பாவங்களைப் சுமந்து தீர்ப்பவர் இவரை அல்லாமல் அவர்கள் அல்லவே. நீங்கள் என்னை தேடுவதுண்டானால் இவர்களை விட்டு விடுங்கள் என்று தோட்டத்தில் அவர் சொன்ன காரணமுமிதுவே.
            தொடரும்...

[30/09 12:44 pm] Aa Sheeba Tiruthani VTT: ஞானமுள்ள ஆண்டவர் சீஷர்கள் என்ற பேச்சை முற்றிலும் விட்டு மற்றக் கேள்விக்கு விடை பகர்ந்தார்.அன்னாவே! நான் அந்த காரத்துக்கும் இருளுக்கும் உரியவரல்ல. என் கிரியைகள் உங்களைப்போல் அந்தகாரத்தின் கிரியைகள் அல்ல. அந்தகாரக்  கிரியைகளை அழிக்கவே பிறந்தேன். நான் அந்தரங்கத்தில் ஒன்றும் பேசவில்லை.ஜெப ஆலயங்களிலும் யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்போதும் உபதேசித்தேன். நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன?
கைதி இடத்தில் நீர் விசாரிக்குமுன்னனே சாட்சிகளை நீர் விசாரிப்பது நியாயம்.
 ஆயிரம் ஆயிரம் பேர் என் உபதேசங்களைக் கேட்டிருக்கிறார்கள். அதிகாரிகளான வேதபாரகர் பரிசேயர் சதுசேயர் ஏரோதியர் போர்சேவகர் தேசத்தின் ஜனங்கள் எல்லோரும் என் உபதேசத்தை கேட்டுடிருக்கிறார்கள். அவ்வாறு கேட்டவர்கள் இங்கேயும் நிற்கிறார்கள் .அவர்களிடத்தில் விசாரியும் அவர்கள் சொல்வார்கள் என்றார்.
 சமர்த்தனெப் புகழ்பெற்ற அனனியா அசந்துப்போனான். என்ன பேசுகிறதென்று அவனுக்குத் தோன்றவில்லை மனக்கலக்கமும் வெட்கமும் அடைந்தான் *இச்சகம் பேசி வயிறு பிள்ளைக்கும் ஒரு கீழ்மகன் தன் எஜமானைப் பிரியப்படுத்தும் நோக்கமாய.*  பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்கிறதென்று ஞானக்களஞ்சியத்தைக் சற்றுங்கூசாமல் கன்னத்தில் ஒரு அறை அறைந்தான்.
இதிலிருந்து பொறுமை நாதன் படப்போகிற  *கணக்கற்ற அடிகளுக்கு இதுவே முதல் அடி.* அதிகாரப்பிரியனான அன்னா அதை தடுக்காது மகிழ்ச்சியடைந்தான். கைதியாக்கப்பட்டவரை  குற்றம்மின்னதென்று நிரூபிக்கும்முன் அடிப்பது நியாயமா? நியாயதிபதி அனுசரிக்கவேண்டிய விதிகளுக்கு ஏற்குமா?
*அன்பின் ஆண்டவர் தம்மை அடித்தவனைப் பார்த்து:  நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால் அதை எடுத்துக்காட்டு.* அப்படியில்லையென்றால் நீ என்னை அடித்தது நியாயமாவென்று  அன்னாவும் மற்றவர்களும் உணரும்படி பேசினார். ( அனனியாவென்னும் ஆசாரியன் பவுலை வாயிலடியுங்கள் என்று சொன்னபோது வெள்ளையடிக்கப்பட்ட சுவரே! கர்த்தர் உம்மை அடிப்பாரென்று பவுல் கோபத்துடன் சொல்ல, தேவனுடைய பிரதான ஆசாரியரை நிந்திக்கிறாயாவென்று பக்கத்தில் நின்றவர்கள் அதட்டவும்.  இவர் பிரதான ஆசாரிரென்று எனக்குத் தெரியாதென்று பவுல் மன்னிப்புக் கேட்க்க வேண்டியதாயிற்று.) நமது ஆண்டவருடைய காரியமோ அப்படியல்ல முதலில் இருந்து கடைசிவரை அவரை என்ன பாடுபடுத்தினாலும் எவ்வளவு அநியாயமாய் நடத்தினாலும் வார்த்தையிலோ செய்கையிலோ கொஞ்சமும் அவர் தவறின வரல்ல. ஒன்றைப் பதட்டமாய் பேசி அதற்காகப் பிந்தி மனஸ்தாபப்பட்டவருமல்ல. இந்த விசாரணைகளிலும் குரூரமான பாடுவகலிலும் அவரில் விளங்கின சாத்மீகமும் மன  அடக்கமும் பொறுமையும் கவனிக்கத்தக்கது. தனக்குப் திருப்தியான உத்தரவும் சொல்லவில்லை என்று கோபப்பட்டு சேவகரை நோக்கி: அவரே இவனைப் விசாரி்க்கத் தகுந்தவர். அநேகர் அழிந்து போவதை பார்க்கிலும் ஒருவன் அழிந்து போவது நல்லது என்று நமக்கு ஆலோசனை சொன்னவரும் அவரேயென்று பொறுமைநாதனை கட்டுண்டவராகக் காய்பாவிடம் அனுப்பினான். துஷ்ட புலிக்குமுன் நிறுத்தும்படி தூய ஆட்டுக்குட்டியைக் கொண்டுபோனார்கள்,
            ..........×.........
[30/09 2:20 pm] Thatchana Moorthy 2 VTT: *லூக் 6:29 - உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.*                                                                                                      * கற்பனை சம்பவம்:*
1⃣ ஒரு கிறிஸ்தவன் ஒரு திருமண வீட்டிற்கு தனது அலுவலக சக வேலையாளுடன் சென்றான், சக வேலையாட்கள் மது அருந்தி வந்திருந்தார்கள், அதில் ஒருவன் அந்த கிறிஸ்தவனை வேனும் என்றே ஓங்கி கன்னத்தில் அறைந்தான் சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் திரும்பி பார்த்தார்கள்.
அந்த கிறிஸ்தவன் பதிலுக்கு கீழே உள்ளவற்றில் ஓன்றை செய்வான்:
1. அறைந்தவன் கன்னத்தில் திரும்பி அறைதல்.(மாம்சத்தின்படி)
2. அமைதியாக அவனை பார்த்து சிரித்துவிட்டு ஏன் என்று கேள்வி கேட்டு விட்டு உடனே அந்த இடத்தை விட்டு கடந்து செல்லுதல் (ஆவியின்படி)
3. வேறு பதில் ?
2⃣ கன்னத்தில் அறைந்தவன் மீண்டும் நேரம் எடுக்காமல் மீண்டும் அடுத்த கன்னத்தில் திரும்ப அறைந்தாலும் கீழே உள்ளவற்றில் ஓன்றை செய்வான்:
1. அறைந்தவன் கன்னத்தில் திரும்பி அறைதல்.(மாம்சத்தின்படி)
2. முதல் முறையை போல் கோவப்படாமல் அமைதியாக இருந்தவன் இந்த முறை திரும்பி அறைதல் (மாம்சத்தின்படி)
3. முதல் முறையை போல் கோவப்படாமல் அமைதியாக அவனை பார்த்து சிரித்துவிட்டு ஏன் என்று கேள்வி கேட்டு விட்டு உடனே அந்த இடத்தை விட்டு கடந்து செல்லுதல் (ஆவியின்படி லூக்கா 6:29, மத் 5:39 – இயேசு கற்று கொடுத்தபடி).
4. வேறு பதில் ?”
*யோவான் 18:23 ல் இயேசு கைது செய்யப் பட்டதால் கடந்து செல்லாமல் இருந்தார்.*
மத் 18:21,22 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: *ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.*
[30/09 2:24 pm] Thatchana Moorthy 2 VTT: ஓருவன் கன்னத்தில் அறைந்தாலோ அல்லது அறைவது போல் எந்த சூழ்நிலையில் அகப்பட்டாலோ தீமையோடு எதிர்த்து போராடாமல்
1⃣ ஏன் என்று கேள்வி கேட்டு, உடனே அந்த இடத்தை விட்டு கடந்து செல்லுதல். அவனை மன்னித்து அவன் மேல் கோபப்படாமல் அவனை நேசித்து உதவுதல் (எத்தனை முறை அவன் வேண்டுமென்றே செய்தாலும் முதல் கன்னத்தை காண்பித்தது போல் செய்ய வேண்டும்)                                                                                                        ரோமர் 12:20 அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் *அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்*.
[30/09 9:18 pm] Levi Bensam Pastor VDM: 2 கொரிந்தியர் 10:2-5
[2]எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
[3] *நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆
[4] *எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.*💪💪💪💪💪💪💪💪💪💪👇👇👇👇👇👇👇👇
[5] *அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.*✅✅✅✅✅✅✅

[30/09 9:20 pm] Levi Bensam Pastor VDM: 1 கொரிந்தியர் 13:4-7
[4] *அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.*☝️ 👆 👆 👆 👆 👆
[5] *அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,*👇 👇 👇 👇 👇 👇 👇
[6] *அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில்😀😀😀😀😀😀😀😀 சந்தோஷப்படும்*.
[7] *சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.*

[30/09 9:20 pm] Barnabas VTT: ஏழாவது கேள்வியின் பதில் ப்ளீஸ்

[30/09 9:24 pm] Barnabas VTT: சாது சுந்தர் சிங் தான் ஆண்டவர் இயேசுவை ஏற்பதற்க்கு முன் அவருடைய கிறிஸ்தவ நண்பனிடம் இப்படி கேட்டு அடித்தாராம் ஆனால் அந்த கிறிஸ்தவ நண்பன் திரும்ப இவரை திரும்ப அடித்தானாம் யார் செய்தது சரி தவறு

[30/09 9:25 pm] Levi Bensam Pastor VDM: *(7வது கேள்வி)*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 1 பேதுரு 3:13-17
[13]நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?
[14] *நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;*👇👇👇👇👇👇
[15]கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; *உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.*
[16]கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடைவர்களாயிருங்கள்.
[17] *தீமைசெய்து பாடனுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடனுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.*🙏

[30/09 9:27 pm] Levi Bensam Pastor VDM: ரோமர் 12:14,17,21
[14] *உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.*
[17] *ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்*✅✅✅✅✅✅; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
[21]நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

[30/09 9:28 pm] Levi Bensam Pastor VDM: ரோமர் 13:3
[3] *மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே👂👂👂👂👂👂👂 பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.*

[30/09 9:29 pm] Levi Bensam Pastor VDM: 1 தெசலோனிக்கேயர் 5:15
[15] *ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்;👇👆👆👆👆👆👆 உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.*

[30/09 9:31 pm] Levi Bensam Pastor VDM: மத்தேயு 5:11
[11] *என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, 👉 👉 👉 👉 👉 👉 பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;*

[30/09 9:32 pm] Barnabas VTT: நீங்கள் இங்கே யாராவது கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நிமித்தம் மறுகன்னத்தை காட்டியதுண்டா?

[30/09 9:35 pm] Levi Bensam Pastor VDM: 1பேதுரு 4: 14
*நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடையய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.*

1 Peter 4: 14
*If ye be reproached for the name of Christ, happy are ye; for the spirit of glory and of God resteth upon you: on their part he is evil spoken of, but on your part he is glorified.*
[30/09 10:12 pm] Glory Joseph Sis VDM: ஏழு எழுபது தரம் என்ன கணக்கு pls say

[30/09 10:21 pm] Elango: தேவன் நம்மை எத்தனை முறை மன்னிக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ அத்தனை தடவை இருக்கலாமோ...

பெற்றோராக நாம் நம் பிள்ளைகளை இத்தனை முறைதான் மன்னிக்கப்பேன் என்ற தீர்மானம் வைப்பதில்லைதானே அதைப்போல் பிறரை மன்னிக்க வேண்டும்.

*ஏழு எழுபது தடவை என்பது பூரண அன்பை குறிக்கலாம்*❤👍

மத்தேயு 6:14-15
[14] *மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.*

[15] *மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.*
மன்னிப்பு இல்லாத இருதயம் தேவன் அன்பை ருசிக்காத இருதயம்.

[30/09 10:24 pm] Elango: பிறரை பூரணமாக மன்னித்ததற்க்கான சிரிப்போ இது😃🙏👍

[30/09 10:25 pm] Glory Joseph Sis VDM: 😀🙏🏻🙏🏻👑👑👑

[30/09 10:44 pm] Thatchana Moorthy 2 VTT: முதலாவது வசனம் 21ல் அப்போஸ்தலர் பேதுரு எத்தனை தடவை மன்னிப்பது என்ற கேள்வியைக் கேட்கின்றார், "ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்?".....

மன்னிப்பு என்பது மனித தன்மையின் உயரிய பண்பு. ஏனெனில் இது கடவுளைப் பிரதிபலிக்கின்றது. தேவன் நம்மை இலவசமாகவே மன்னிக்கின்றார். மேலும் நாம் பிறரை சீக்கிரமாகவே மன்னிக்கவும் எதிர்பார்க்கின்றார். இயேசு கிறிஸ்தவ மனதுருக்கம் மீண்டும், மீண்டும்......., ............., ..............., மீண்டும் மீண்டும் மன்னிக்கும் என போதித்தார்.

வசனம் 23-35ல், இயேசு கிறிஸ்து ஒரு ஈவிரக்கமற்ற ஒரு வேலைக்காரனைப் பற்றிய ஓர் உவமையைக் கூறுகின்றார். ஒருமனிதன் ஒரு அரசனிடம் கடன் (இன்றைய மதிப்பின்படி ரூ. 7,32,00,000/-) பட்டிருந்தான். அரசன் உடனே கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நெருக்கியபோது, கடன் வாங்கியவன் இரக்கத்துக்காக் கெஞ்சினான். அவன் கெஞ்சிக் கேட்டதையடுத்து, அரசன் அவன் கடன் முழுவதையும் மன்னித்து அனுப்பிவிட்டான். ஆனால் இந்தக் கடன்காரன், (7,32,00,000/- ரூபாய் மன்னிக்கப்பட்டவன்) தன்னிடம் ரூ.1220/- கடன் வாங்கியவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து, நீ பட்ட கடனை எனக்கு உடனே கொடுத்துத் தீர்க்க வேண்டும் என்றான். அப்பொழுது அவன், இவன் காலில் விழுந்து, என்னிடத்தில் பொறுமையாய் இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்கின்றேன், என்று அவனை வேண்டிக் கொண்டான். இவனோ சம்மதியாமல் போய், அவன் பட்ட கடனைக் கொடுத்து தீர்குமட்டும், அவனைக் காவலில் போடுவித்தான்.

இயேசு மிகச் சரியாக 'மன்னிக்காத தன்மை'யைக் கண்டித்தார். நமது பரலோக தேவனிடம் நாமனைவருமே எல்லையில்லா மன்னிப்பைப் பெற்றவர்கள். நமக்கு விரோதமாக செய்யப் படும் சின்ன குற்றங்களைக்கூட வேகமாக மன்னிக்க வேண்டும்.இந்தப் பகுதியில் (மத்தேயு 18ன் பிற்பகுதியில்) உண்மையான மன்னிப்பைப் பற்றி நாம் கற்றுக் கொள்ளுகின்றோம்.

1. உண்மையான மன்னிப்புக்கு எல்லை இல்லை: (18:21,22) நாம் ஏழு தரம் மாத்திரமல்ல, ஏழு எழுபது தரம் மன்னிக்க வேண்டும். யூதர்கள் மூன்று முறை மட்டுமே மன்னித்தனர். யூத மத போதகர்கள், 'ஒருவன் ஒருமுறை குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு, இரண்டாம் முறை குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு, மூன்றாம் முறையும் குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு. நான்காம் முறை குற்றஞ் செய்தால் மன்னிக்காதே' என போதித்தனர். இங்கே பேதுரு யூத முறைமையைக்காட்டிலும் மேலும் நான்கு முறையைச் சேர்த்து ஏழு தரம் குற்றஞ் செய்தால்.............' எனக் கேட்கின்றார். இங்கே இயேசு கூறுகின்றார், :*மன்னிப்புக்கு எல்லையே கிடையாது'* ஒரே மனிதன் மீண்டும் மீண்டும் குற்றமிழைத்தாலும் ஏழு எழுபது முறை (நானூற்று தொண்ணூறு முறை) நாம் மன்னிக்க வேண்டும். மன்னித்தல் என்பது நிலையான அடிப்படையாய் இருக்க வேண்டும்

[30/09 10:56 pm] Elango: https://vedathiyanam.blogspot.in/2017/04/blog-post_79.html?m=1

மன்னிப்பு பற்றிய பழைய தியானம்

[30/09 11:08 pm] Glory Joseph Sis VDM: Praise the lord brother 490 முறை என்பது தவறு என்றும்  (7ன் அடுக்கு 70) அதாவது  7×7×7×7×..(490)இப்படி கணக்கிட வேண்டும்  என்பது எனது சபையின் போதனை

[01/10 10:32 am] Glory Joseph Sis VDM: 👆🏻👍🏻 தவறுதலாக  7×7×7×(490)  என்று பதிவிட்டு விட்டேன்.7×7×7×....(70)இதுவே சரியானது

Post a Comment

0 Comments