[25/09 9:09 am] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 25/09/2017 🔥*
1⃣ அந்நியபாஷை என்றால் என்ன❓
2⃣ அந்நியபாஷை அடையாளமாக இருக்கிறதா அல்லது வரமாக இருக்கிறதா❓
3⃣ இன்றும் அந்நியபாஷையின் வரம் செயல்படுகிறதா❓ அந்நியபாஷை வரத்தை இன்று நாடுவது சரியானதா❓
4⃣ எதற்காக அந்நியபாஷை வரம் கொடுக்கப்பட்டது❓
5⃣ *அந்நிய பாஷையில் பேசுகிறவன், மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்* என்பதன் அர்த்தம் என்ன❓
5⃣ *எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா..* என்று சொன்ன புவுல், *நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்* என்று பவுல் ஏன் கூறுகிறார்❓
6⃣ *அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.* என்பதன் அர்த்தம் என்ன❓
7⃣ வேதத்திலே அந்நியபாஷையில் யார் பேசினார்கள்❓ஏன் பேசினார்கள்❓
8⃣ அந்நியபாஷைகளை எல்லாரும் பேசும்படி ஏன் பவுல் விரும்பினார்❓
9⃣ 1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட, *“நிறைவானது”, "ஓய்ந்துபோம்” என்பதின் அர்த்தம் என்ன?*
1⃣0⃣ அந்நியபாஷையில் பேசுதல் ஆவிக்குரிய முதிர்ச்சியைக் காண்பிக்கிறதா❓
1⃣1⃣ அந்நியபாஷை,பற்பல பாஷை, தூதர் பாஷை, மனுஷ பாஷை போன்றவைகளுக்கு விளக்கம் தருக⁉
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
[25/09 9:17 am] Thomas Pastor Brunei VDM: 1⃣ அந்நியபாஷை is a form of speech or utterance that is not known or understood by that person
[25/09 9:18 am] Thomas Pastor Brunei VDM: 2⃣ It is both a sign as well as a gift
[25/09 9:20 am] Thomas Pastor Brunei VDM: 3⃣ Yes for both questions in 3⃣
[25/09 9:22 am] Thirumurugan VDM: *"அந்நியபாஷை என்றால் என்ன?"*
*“குளோசோலாலியா” (glossolalia)* என்கிற கிரேக்க பதத்தில் இருந்து *“அந்நியபாஷை”* என்கிற அர்த்தம் வருகிறது. *“குளோசா” (glossa)* என்றால் *“பாஷை”* என்றும் *“லாலியா” (lalia)* என்றால் *“பேசுதல்”* என்றும் பொருள்படும். அதாவது "குளோசோலாலியா" என்றால் அந்நியபாஷையில் பேசுவது அல்லது வேறே பாஷையில் பேசுவது அல்லது பற்பல பாஷையில் பேசுவது என்று பொருள்படும்.
*“குளோசா”* என்கிற பதம் புதிய ஏற்பாட்டிலே ஏறக்குறைய 50 முறை வருகிறது. யாக்கோபு 3:5 ல் வாசிப்பது போல உடலுறுப்பை *(நாவு / நாக்கு)* சுட்டிக்காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்.2:3 ல் *(அக்கினிமயமான நாவுகள்)* பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்ததையும் கூடியிருந்த யாவர்மேலும் அமர்ந்ததையும் குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் அப். 2:26 ல் உருவகமாக *(என் நாவு களிகூர்ந்தது)* பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே மேலே குறிப்பிட்டிருக்கிற மூன்று வேத பாகங்களை தவிர மீதமுள்ள அனைத்து வேத குறிப்புகளும் *“பாஷை / மொழி”* என்பதையே குறிக்கிறது.
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அந்நியபாஷை வரத்தைக்குறித்து முன்னறிவித்தபோது (நான்கு சுவிசேஷங்களில் ஒரு முறை மட்டும்), விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாக கூறியவற்றில் *“நவமான பாஷைகளைப் பேசுவார்கள்”* என்று கூறினார் (மாற்கு 16:17).
*“நவமான”* என்கிற பெயரடைச்சொல் (adjective) *“கைனோஸ்” (kainos)* என்கிற கிரேக்க பதத்திலிருந்து வருகிறது. இதன் பொருள் அவர்கள் பேசப்போகிற பாஷைகள் அவர்களுக்கு புதியவைகள் என்பதாகும். அதாவது அந்த புதிய பாஷைகளை அவர்கள் இதற்குமுன் பேசியதும் இல்லை கற்றதும் இல்லை.
உதாரணமாக ரஷ்ய பாஷை எனக்கு நவமான/புதிய பாஷை என்று கூறும்போது, ரஷ்ய பாஷை என்றொரு பாஷை இருப்பதே எனக்கு தெரியாது என்கிற அர்த்தமல்ல; மாறாக எனக்கு ரஷ்ய பாஷையிலே பேசுவது புதிய அனுபவம் என்பதாகும். காரணம் எனக்கு ரஷ்ய பாஷை பேசத்தெரியாது, அதுமட்டுமல்ல, யாராவது ரஷ்ய பாஷையிலே பேசினால் அதை புரிந்து கொள்ளவும் முடியாது. அதே சமயம் தமிழ் பாஷையை என்னால் எழுதவும் படிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்.
(தொடரும்...)
[25/09 9:22 am] Thomas Pastor Brunei VDM: 4⃣ Given for two purposes. 1. To show the glory of God for the unbelievers and 2. Edification of a believer
[25/09 9:23 am] Thirumurugan VDM: Not true. But something else.
[25/09 9:26 am] Thomas Pastor Brunei VDM: 5⃣ The Tongues mentioned in 1 Cor 12 is different from that in Chapter 14.
[25/09 9:28 am] Thirumurugan VDM: அப். 2:4-ல் எழுத்தாளர் மருத்துவர் லூக்கா வேறுபட்ட பெயரடைச் சொல்லை (adjective) பயன்படுத்துகிறார். அதாவது, _“அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே *வெவ்வேறு* பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.”_
இங்கே *“வெவ்வேறு”* என்கிற பதம் *“ஹெட்டேரோஸ்” (heteros)* என்கிற கிரேக்க பதத்தில் இருந்து வருகிறது. இவ்வார்த்தையின் பொருள் *அவர்கள் தாங்கள் வழக்கமாக பேசுகிற பாஷையில் அல்லாமல் தங்களுடையது அல்லாத வேறு பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள் என்பதாகும்*.
அவர்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசிய சந்தர்ப்பமும் இதை உறுதிப்படுத்துகிறது. அன்று பெந்தெ கொஸ்தே நாளில் கூடிவந்தவர்கள் இவர்கள் (பெந்தெகொஸ்தே நாளில் அந்நியபாஷைகளில் பேசினவர்கள்) வெவ்வேறு பாஷை களை பேசுவதைக் கேட்ட பொழுது ஆச்சரியப்பட்டதையும் மாறுத்திரம் மொழிந்ததையும் நன்றாய் கவனியுங்கள்.
*“எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?”* (அப். 2:7-8).
ஒவ்வொருவரும் அவர் களுடைய சொந்த பாஷைகளிலே இவர்கள் பேசுவதை கேட்டார்கள் (அப். 2:6). இங்கே *“பாஷை”* என்கிற பதம் *“டையலெக்டோ” (dialekto)* என்கிற பதத்தின் மொழியாக்கமாகும். இதிலிருந்துதான் *“டையலெக்ட்”* என்கிற பதம் வருகிறது, பொருள் *பேச்சுவழக்கில் உள்ள மொழி* என்பதாகும்.
ஆகவே இரண்டு பதங்களாகிய *“குளோசா”* (பாஷை அல்லது மொழி) மற்றும் *“டையலெக்டோஸ்”* (பாஷை அல்லது மொழி) ஒரே பொருளுடைய பதங்காளாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தெளிவாக கூறவேண்டுமானால், *சீஷர்கள் அன்று பேச்சுவழக்கில் உண்டாயிருந்த அதே சமயம் தங்களுடையதல்லாத வேறே பாஷைகளிலே அல்லது மற்றவர்களுடைய பாஷைகளிலே பேசினார்கள்*.
(தொடரும்...)
[25/09 9:34 am] Thirumurugan VDM: அப். 2:9-11 வரையுள்ள வசனங்களின் அடிப்படையில் பேசப்பட்ட எல்லா பாஷைகளும் கேட்டவர்களாலே புரிந்துகொள்ளப்பட்டதை நாம் அறிந்துகொள்ளலாம். மெய்யாகவே இது ஒரு வியக்கத்தக்க சம்பவம். அவர்கள் இந்த பாஷைகளை கற்றதில்லை; இதற்குமுன் பேசினதுமில்லை; ஆனாலும் அன்று பேசினார்கள். பரிசுத்த ஆவியாகிய தேவன் தாமே அவரவர்களுக்கு தந்தருளின பாஷைகளின்படியே அவர்கள் பேசினார்கள்.
இவ்விடத்திலே வெளிப்படுத்தின விசேஷத்தில் வருகிற *“பாஷை அல்லது பாஷைக்காரர்”* என்கிற பதத்தை மிக கவனமாக ஆராய்வது அவசியமாகும் (வெளி. 5:9; 7:9; 10:11; 11:9; 13:7; 14:6; 17:15). இங்கே *“பாஷை”* என்று வருகிற பதங்களெல்லாம் வெவ்வேறு நாடுகளில் கோத்திரங்களில் பேசப்படுகிற பாஷையைக் குறிக்கிறது. எந்த ஒரு தர்க்கமுமின்றி அனைவராலும் ஒருமனதாக இது ஒப்புக் கொள்ளப்படுகிறது.
ஆச்சரியத்தை கவனியுங்கள், இன்றைய நாட்களில் ஒருவரும் *மாற்கு*, *அப்போஸ்தலருடைய நடபடிகள்* மற்றும் *வெளிப்படுத்தின விசேஷத்தில்* கூறப்பட்டிருக்கிற பாஷை களைக் குறித்து கேள்வி எழுப்புவதில்லை. ஆனால் *1கொரிந்தியர்* புத்தகத்தில் 12 முதல் 14 வரையுள்ள அதிகாரங்களில் ஏறக்குறைய 21 வேதக்குறிப்புகள் அடங்கிய “பாஷை” என்கிற பதத்தை புரிந்து கொள்வதிலும் வியாக்கியானம் செய்வதிலும் தான் எத்தனை எத்தனை குழப்பங்கள், மெய்யாகவே இது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
(தொடரும்...)
[25/09 9:35 am] Thomas Pastor Brunei VDM: 6⃣ Self edification is building up our personal relationship with God
[25/09 9:38 am] Thirumurugan VDM: இன்று அந்நியபாஷையில் பேசுகிறேன் என்று சொல்பவர்களும் பேசுகிறவர்களை காண்கின்றவர்களும் பரவசமாகி மெய்மறந்த நிலையில் (ecstatic utterances) தங்களையே மறந்து பேசுகிற பாஷை; ஒருவருக்கும் தெரிந்திராத அதே சமயம் உலகின் எந்த பாகத்திலும், தேசத்திலும், மனித சமுதாயத்திலும் பேசப்படாத ஒரு பாஷை. இதை யாரும் மறுக்கமுடியாது.
இவர்கள் இப்படிப்பட்ட பாஷைக்கு கொடுக்கும் வேத ஆதாரம் தான் *“தெரியாத பாஷை” (unknown tongues)* என்பதாகும். 1கொரிந்தியர் 14:2, 4, 13, 14, 19 மற்றும் 27 ல் (KJV ஆங்கில வேதாகமத்தில் காணலாம்) காணலாம்.
ஆனால் மேற்கூறிய வசனங்களை வாசிக்கிற அல்லது தியானிக்கிற எந்த ஒரு நபரும் தவறாது கவனிக்க வேண்டிய விஷயம், *“தெரியாத” (unknown)* என்கிற பதம் வருகிற எல்லா இடங்களிலும் *“வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவத்தை” (italicized letters)* கொண்டு வருகிறது (இது தமிழ் வேதாகமத்திலே காண இயலாது மாறாக ஆங்கில வேதாகம மொழிப்பெயர்ப்புகளில் காண முடியும்).
அச்சுருவம் இப்படி வருவதற்கு காரணம், இந்த பதம் மூலபாஷையாகிய கிரேக்கத்தில் இல்லை என்பதாகும். இந்த பதம் மூலபாஷையில் இல்லை என்றபோதிலும் மூலபாஷையில் இருந்து மொழிப்பெயர்த்த மொழிப்பெயர்ப்பாளர்கள் மூலமாக இவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இங்கே சத்தியம் என்னவென்றால் பரிசுத்த ஆவியாகிய தேவன் அப்போஸ்தலனாகிய பவுலை அறியப்படாத, புரியாத அல்லது தெரியாத பாஷை என்று எழுதும்படி ஏவவில்லை அல்லது நடத்தவில்லை.
(தொடரும்...)
[25/09 9:43 am] Thomas Pastor Brunei VDM: 7⃣ The Apostles spoke in Tongues... Believers in Corinth Church spoke in tongues ( certainly must be in other churches too)..
[25/09 9:47 am] Thomas Pastor Brunei VDM: This question cannot be answered by 1.---- 2.--- and so on. He who is Holy let him be Holy still... can you have definite answer 'in which way'?
[25/09 9:48 am] Thomas Pastor Brunei VDM: I think it is better to avoid lengthy messages here.. Each question can be discussed seperately..
[25/09 9:49 am] Thomas Pastor Brunei VDM: We should not tell a person to read all this lengthy messages to clear doubts on particular issue..
[25/09 9:50 am] Loay VT1: தனக்கே பக்திவிருத்தி உண்டாக்கும் அந்நியபாஷை எல்லோருக்கும் வேண்டும். ஆதலால் தான் பவுலடிகளார் எல்லாரும் ந்நியபாஷை பேச விரும்புகிறார்.
[25/09 9:52 am] Thomas Pastor Brunei VDM: 8⃣ Paul wants all believers to be edified.. Personal or as a Church..
[25/09 9:56 am] Elango: 👍 தான் பக்திவிருத்தி, பலப்படாமல் பிறரை எப்படி தூக்கிவிட இயலும். பலப்பட்டவனே பிறரையும் பலப்படத்த முடியும். ஸ்திரப்பட்டவனே பிறனை ஸ்திரப்படுத்த முடியும்.
எந்த வரங்களையும் அற்ப்பமாக எண்ணக்கூடாது.
[25/09 9:57 am] Elango: தேவன் கொடுக்கும் ஒவ்வொரு வரங்களும், சபைக்கும், விசுவாசிகளுக்கும் அதாவது சபையின் அவயவங்களுக்கு பிரயோஜனமானது
[25/09 9:58 am] Elango: சில சபைகளில் விசுவாசிகளும், போதகர்களும் அந்நியபாஷைகளை குறித்து சபையில் பிரசங்கம் பண்ணுவதும், பேசுவதே இல்லை...
அந்நியபாஷை ஒழிந்துவிட்டது என்பர்.
[25/09 9:59 am] Rooban Pastor VDM: சகோதரரே தயவுசெய்து தமிழில் பதிவிடுங்கள் நாம் மட்டும் வேதத்தை தியானிப்பதால் பிரயோஜனமென்ன எல்லோரும் ஓர் இந்து வேண்டுமல்லவா நன்றி
[25/09 9:59 am] Rooban Pastor VDM: Sry spelling mistake புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா
[25/09 10:00 am] Elango: எந்த வரங்களையும் நாம் ஒதுக்கிவிடுதல் என்பது வேதத்தை முழுமையாக ஏற்காததற்க்கு அடையாளம்.
[25/09 10:00 am] Thomas Pastor Brunei VDM: 9⃣ I believe it speaks about 'we shall be like Him when we see Him' Perfection of every believer. This does not say about speaking in tongues alone, but about all gifts..
[25/09 10:01 am] Elango: 1 தெசலோனிக்கேயர் 5:21
[21]எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
[25/09 10:06 am] Loay VT1: கள்ள தீர்க்கதரிசனங்களையும், கள்ள அந்நியபாஷைகளையும் அடையாளம் காணவும் வேண்டும்.
[25/09 10:06 am] Thomas Pastor Brunei VDM: 🔟 No.. Tongues as a Gift or as a Sign has to merge with 13.. 12 ➡ 13 ⬅ 14
[25/09 10:07 am] Elango: சில சபைகள் வரங்களை விட கனிகளை அதிகமாக முக்கியப்படுத்துவார்கள், சில சபைகள் கனிகளை விட வரங்களை முக்கியப்படுத்துவார்கள்... வரங்களும், கனிகளும் இரண்டும் வேண்டும்.
[25/09 10:09 am] Elango: கள்ளத்தீர்க்கதரிசனங்களையும், கள்ள அந்நியப்பாஷைகளையும் அடையாளம் காணும் வேண்டும் வேளையில், தேவனிடத்திலிருந்து வரும் தீர்க்கதரிசனத்தையும் நாம் ஏற்றுக்க்கொக்கொள்ள வேண்டும். அது தேவனோடு இரகசியமாக பேசும் அந்நியபாஷைகளையும் தடை பண்ணக்கூடாது..
[25/09 10:10 am] Elango: வரங்களை ஏற்க்காத சபைகளும், கனிகளை அங்கிகரிக்காத சபைகளும் முழுமையான சபை அல்ல, இரண்டும் வேண்டும்.
[25/09 10:10 am] Levi Bensam Pastor VDM: 1 கொரிந்தியர் 14:2
[2]ஏனெனில், *அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.*🤝🤝🤝
[25/09 10:10 am] Levi Bensam Pastor VDM: அருமை 👌
[25/09 10:12 am] Elango: அந்நியபாஷைகளை அங்கிகரிக்காத சபைகளும், வரங்களும், அந்நியபாஷைகளும் ஒழிந்து போனது என்று சொல்லும் சபைகளும் இன்று பெருகி விட்டன. இன்றைய சபைகளுக்கு வரங்களும், கனிகளும் இரண்டும் இருந்தால் தான் சபை பக்திவிருத்திதியாகும், ஆடுகள் மந்தைகயில் சேரும். கால் மிதிக்கும் தேசமெல்லாம் கர்த்தருக்கு சொந்தமாகும்..
[25/09 10:13 am] Elango: அந்நியபாஷைகளை பேசக்கூடாது என்றும், அந்நியபாஷை ஒழிந்துவிட்டது என்று சொல்லுபவர்களின் ஆவியை நாம் நிறுத்து நிதானிக்கப்பார்க்கவேண்டும்.
[25/09 10:14 am] Thomas Pastor Brunei VDM: 1⃣1⃣ அந்நியபாஷை language or utterance unknown to that person, பற்பல பாஷை Languages that could understood by others but not understood by that person, தூதர் பாஷை Cannot be understood by anyone.. speaking mysteries, மனுஷ பாஷை known language..
[25/09 10:14 am] Loay VT1: அந்நிய பாஷை பிறருக்கு புரியவில்லை என்றால் அதை அந்நிய பாஷை என்று சொல்லலாமா கூடாதா?
[25/09 10:15 am] Jeyaseelan Bro VDM: *அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்*
நன்மையான
எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அவரிடத்தில் யாதொரு மாறுதலும், வேற்றுமை நிழலும் இல்லை"என யாக்கோபு 1:17 -ல் கூறுவதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம்.
தேவன் ஒருபோதும் தவறு செய்வதேயில்லை! அவர் ஒன்றை கொடுத்தால் அது "பூரணமான வரமாய்த்தான்" (Perfect Gift)) எப்போதும் இருக்கும். இந்த அவருடைய குணாதிசயங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும், அதில் அவர் மாறுவதில்லை என யாக்கோபு கூறினார். ஆகவே, பெந்தெகொஸ்தே நாளில் தேவன் சபைக்கு "அந்நியபாஷை பேசும் வரத்தை" (Tongues) அளித்தபோது, தான் சபைக்கு செய்திருக்கும் செயலை நன்கு அறிந்திருந்திருந்தார்."இப்படி இந்த வரத்தைத் தந்துவிட்டோமே! "என சிந்தித்து அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளவேயில்லை! ஆம், அவர் என்றென்றும் மாறாதவராகவே இருக்கிறார். ஆகவே, அந்நியபாஷைவரம்திட்டமும் தெளிவுமான "பூரணமான வரமேயாகும்!".
இந்தவரத்தின் பின்னணியில், அதுவும் குறிப்பாக நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏராளமான குளறுபடிகள் இவ்வரத்தினிமித்தம் உண்டாகும் என்பது தேவனுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், சபை தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு இந்த வரம் மிக தேவையானது என்பதையும் தேவன் அறிந்திருந்தார்.
பிரதான சத்தியங்களாகிய திரித்துவம், கிறிஸ்துவின் தெய்வத்தன்மை, கிறிஸ்துவின் மனிதத்தன்மை, பரிசுத்தாவியின் ஆள்தன்மை... போன்ற சத்தியங்கள் கிறிஸ்துவ சரித்திரத்தில் பலவிதத்தில் எதிர்க்கப்பட்டு குளறுபடிகளைச் சந்தித்திருக்கிறது. ஆகவே, தேவன் தந்த வரமாகிய "நவ நாவுகளும்"(Tongues)குளறுபடியாகிருப்பது, எந்த ஆச்சரியத்தையும் நமக்குத் தந்துவிட நாம் அனுமதிக்கவே கூடாது.
இது போன்ற எல்லா உபதேச சத்தியங்களிலும், அவைகளை குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதே மிக முக்கியமானதாகும். ஆகவே, "அந்நியபாஷை பேசுவதைக்குறித்து" இதுவரை நீங்கள் கொண்டிருந்த மனப்பான்மையை சற்று தள்ளி வைத்துவிட்டு, இதைக்குறித்து வேதாகமம் சொல்லும் ஒவ்வொரு வசனத்தையும் மிகுந்த கவனமாய் இப்போது பார்க்கக்கடவோம்.
(தொடரும்)
http://tamil.cfcindia.com/ta/article/the-truth-about-speaking-in-tongues
[25/09 10:15 am] Loay VT1: அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளமென்று பவுல் ஏன் சொல்லுகிறார்?
[25/09 10:19 am] Jeyaseelan Bro VDM: *அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்*
*சத்தியம் எண்:-1*
மாற்கு 16:17 - ஆம் வசனத்தில் இயேசு கூறும்போது, "விசுவசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என கூறினார்.
இவ் வசனத்தில் இயேசு குறிப்பிட்டது என்னவென்றால், "சில அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களால் (Those who have belived ) நடைபெறும்" என்பதுதான். இவ்வாறு நடைபெறும் பிசாசுகளைத் துரத்துதல், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்குதல் போன்ற அடையாளங்களில் நவமானபாஷைகளை (New Tongues) பேசுவதும் ஒன்றாகும். இங்கு இயேசு குறிப்பிடும்போது, இந்த எல்லா அடையாளங்களும் ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் (Every Believer) நடைபெறும் எனக் கூறவேயில்லை. அதற்கு மாறாக, இந்த அடையாளங்கள் "விசுவாசிக்கிறவர்களால்"நடைபெறும் என்றே கூறினார்.
ஆகவே, இங்கு குறிப்பிடப்பட்ட எல்லா வரங்களையும் ஒவ்வொரு விசுவாசியும் பெற்றிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அதேப்போல், ஒவ்வொரு சபையும் இந்த எல்லா வரங்களையும் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமில்லை. ஆனால், இந்த வரங்கள் யாவும் "உலகம் தழுவிய" முழு சபையிலும் காணப்படும் என்பது உறுதி! எந்த வரத்தை யாருக்கு தரவேண்டும் என்பதை பரிசுத்த ஆவியானவரே தம்முடைய சர்வ ஞானத்தின்படி தீர்மானிக்கிறார்.
*சத்தியம் எண்:- 2*
அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்... எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து.. நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்கிறோமே என்றார்கள்" என அப்போஸ்தலர்கள் நடபடிகள் 2:4,7,11 -ஆம் வசனங்களில் காண்கிறோம்.
முதல் தடவையாய் விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது, அவர்கள் "எல்லோரும்" (All) நவமான பாஷைகளைப் பேசினார்கள். இங்கு குறிப்பிடப்பட்ட நவமான பாஷைகள் (New Tongues) அதைக்கேட்ட மற்றவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய வெவ்வேறு மொழிகளாகவே (Languages) இருந்தது. ஆகவே, இந்த இடத்தில் "வியாக்கியானம் செய்யும் வரம்" அவசியமாய் இருக்கவில்லை.
நான்காம் வசனத்தில் "அவர்களெல்லோரும்... வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்" என குறிப்பிடப் பட்டிருப்பதைப் பாருங்கள். அதாவது "அவர்கள்தான்" அந்நியபாஷைகளில் பேசத் தொடங்கினார்கள்... பரிசுத்த ஆவியானவர் அல்ல! ஆம், பரிசுத்த ஆவி அவர்களுடைய நாக்குகளைப் பிடித்து அசைக்கவில்லை! அதற்கு மாறாக, ஆவியானவர் வரத்தைத் தந்தருள... "அவர்கள்" வெவ்வேறு பாஷைகளில் பேசத்தொடங்கினார்கள்.
எந்த வரத்திலும், "தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தை" பரிசுத்த ஆவியானவர் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்வதேயில்லை. இன்னமும் சொல்லப் போனால் ஆவியின் கனியானது "சுய அடக்கமே" (Self Control) (கலாத்தியர் 5:23) ஆகும். தமிழில் இச்சையடக்கம் எனக் கூறப்பட்டிருப்பது ஆங்கிலத்தில் "சுய அடக்கம்" என்றே கூறப்பட்டுள்ளது. பிசாசின் ஆவி பிடித்த ஜனங்கள் மாத்திரமே தங்கள் சுய-அடக்கத்தை இழக்கிறார்கள். பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்டவர்களோ, யாரைக்காட்டிலும் தங்களை அடக்கியாளுவதற்கு அதிக திறன் பெற்றிருப்பார்கள். " தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது" என்றே வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 14:32).
(தொடரும்)
http://tamil.cfcindia.com/ta/article/the-truth-about-speaking-in-tongues
[25/09 10:26 am] Elango: அந்நியபாஷை என்பது தனக்கே பக்திவிருத்தி உண்டாக்கும் என்று சொல்லும்போது, பிறருக்கும் இவர்கள் பேசுவது புரிய வேண்டும் என்ற அவசியமில்லையே... பவுல் சொல்லுகிறார் அந்நியபாஷைகளை பேசுவர்களை தடை பண்ணாதீர்கள் என்றார்.
[25/09 10:29 am] Elango: அந்நியபாஷை வரங்கள் இன்றும் இருக்கிறது. ஆண்டவர் வரும் வரை அந்நியபாஷை, தீர்க்கதரிசன வரமும், மற்ற எந்த வரங்களும் இன்றும் இருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு சபையில் ஒருவர் அந்நியபாஷையில் பேச, இன்னொருவர் அதற்க்கு வியாக்கினம் செய்தார்.
[25/09 10:29 am] Thomas Pastor Brunei VDM: Bro Thiru can you share the truth?
[25/09 10:29 am] Elango: I think he may be in class
[25/09 10:31 am] Thirumurugan VDM: Sure...👍 why not. I had a class. I am free for next one hour. Let me answer the 1st question first.
[25/09 10:33 am] Thirumurugan VDM: திறந்த மனதோடும் தெளிந்த புத்தியோடும் தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிப்போமானால் பாஷை அல்லது பாஷைகள் என்கிற பதத்திற்கு 1 கொரிந்தியர் புத்தகத்தில் மட்டும் வேறு புதிய அர்த்தம் வருவதை நம்மால் காண இயலாது; அதை ஒப்புக்கொள்ளவும் நம் மனம் ஒத்துழைக்காது. மாற்கு எழுதின சுவிசேஷத்தில் நமதாண்டவர் முன்னறிவித்ததும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் சம்பவித்ததும், கொரிந்து சபையில் நடைமுறைப்படுத்தியதும் ஒன்றே. அதாவது எல்லா இடங்களிலும் வருகிற பாஷை அல்லது பாஷைகள் (tongues) என்கிற பதம் ஒரே அர்த்தத்தையே குறிக்கிறது.
இருப்பினும் எப்படி 1 கொரிந்தியரில் வருகிற அந்நியபாஷைக்கு மட்டும் அர்த்தம் மாறியது? வேதம் அனுமதிக்காத இந்த புதிய அர்த்தத்திற்கும் நடைமுறைப் படுத்துதலுக்கும் உரிமை (license) வழங்கியது யார்? இது மெய்யாகவே வியப்பாக தான் இருக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் உபயோகித்த அந்நியபாஷை என்கிற அனைத்து பதத்திற்கும் ஒரே பொருள் தான். அதோடு மட்டுமில்லாமல் பவுல் உபயோகித்த அந்நியபாஷை என்கிற பதம் வேற்றுமொழி அல்லது அந்நியமொழி (foreign languages) என்பதையே குறிக்கிறது. அதனால்தான் பவுல் 1 கொரிந்தியர் 14:9-10 ல், *“அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படி தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே. உலகத்திலே எத்தனையோ விதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல”* என்று கூறுகிறார்.
(தொடரும்...)
[25/09 10:33 am] Thirumurugan VDM: ஆகையால் அந்நியபாஷையில் பேசுதல் என்கிற பெயரில் அர்த்தமற்ற சத்தத்தை உச்சரித்து உண்டாக்குவதும் அர்த்தமில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி ஒலி எழுப்புவதும் வேதத்திற்கு புறம்பானதும் வேதத்தில் கூறப்படாததும் வேதம் அனுமதிக்காதது மாகிய ஒரு செயலாகும். கிரேக்க பதம் *“லாலேயோ” (laleo)* என்பதின் அர்த்தம் *“நான் பேசுகிறேன்” (I speak)* என்பதாகும். இந்த பதம் ஒருபொழுதும் *“சப்தம்”* அல்லது *“ஒலி”* என்று பயன்படுத்தப்பட வில்லை. மேலும் இந்த பதம் முணுமுணுத்தலையோ, புரியாப் பேச்சையோ, தெளிவில்லாத பொருளற்ற ஒலியையோ (mumbling or muttering of unintelligible gibberish) குறிப்பிடவில்லை.
இதிலிருந்து தெளிவாகிற காரியத்தின் கடைத்தொகை இதுதான்:
“புதிய ஏற்பாடு எடுத்துரைக்கிற அந்நியபாஷை என்பது மனிதர்கள் பேசியதும் அந்நாட்களில் பேச்சு வழக்கில் உண்டாயிருந்ததுமான பாஷைகளாகும். அல்லாமல் வேறொரு பாஷையைக் குறித்து குறிப்பிடவில்லை. இந்த உபதேசத்தை அல்லது சத்தியத்தை அல்லாத வேறே எந்த ஒரு விளக்கவுரையானாலும் அது அவரவர் சொந்த மனவிருப்பத்தின்படி (arbitrary) உண்டானதும், தேவனுடைய வார்த்தைக்கு அந்நியமானதுமாகும் (strange thing to the scriptures). முற்றிலும் புரிந்துகொள்ள இயலாத தொடர்பற்ற பேச்சை வேதம் ஒருநாளும் பொறுத்துக்கொள்வதில்லை (scripture never tolerates incoherent and incomprehensible babbling).
[25/09 10:35 am] Elango: அவரவருக்கு வரங்களை பகிர்ந்து கொடுக்கும் உரிமை பரிசுத்த ஆவியானவருக்கு உண்டு.
[25/09 10:37 am] Jeyakumar Toothukudi VTT: Why do they speak that languages
[25/09 10:37 am] Elango: இங்கே மும்பையில், ஏன் உலகத்தில் அநேக சபைகள் உண்டு... அவர்கள் சொல்லுவது என்னவென்றால் அந்நியபாஷை, தீர்க்கதரிசன வரங்கள் ஒழிந்துவிட்டது என்பதே. 😳😳😳😳
[25/09 10:37 am] Elango: For self edification
[25/09 10:37 am] Thomas Pastor Brunei VDM: This must be your understanding Bro..
[25/09 10:37 am] Elango: yes
[25/09 10:38 am] Thomas Pastor Brunei VDM: 1 Cor 14:2 says something different..
[25/09 10:39 am] Elango: அந்நியபாஷைகளை ஏற்க்காதவர்களின் சபை பிரிவுகளை கேட்டுப்பார்த்தால் அவர்களின் உபதேசமும் புரிந்துதுவிடும்.
[25/09 10:39 am] Thomas Pastor Brunei VDM: 1 Cor 14:9-10 is given as an example for the importance of interpretation of tongue when spoken publicly
[25/09 10:41 am] Thirumurugan VDM: *"பெந்தெகொஸ்தே நாளில் எத்தனை பேர் அந்நியபாஷைகளில் பேசினார்கள்? 12 பேரா அல்லது 120 பேரா?"*
அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் ஏறக்குறைய மூன்று அதிகாரங்களில் மூன்று தரத்திலுள்ள வெவ்வேறு மக்கள் பிரிவினர் அந்நியபாஷைகளில் பேசினதாக மருத்துவர் லூக்கா குறிப்பிடுகிறார். இவைகளைக்குறித்து நான் விளக்கமாக கூறுவதற்கு முன் Kenosis அவர்களுக்கு நேரமில்லாமையால், அவர் இருக்கும்போதே சில கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தின் இரண்டாம் அதிகாரத்தை இங்கே நாம் மீண்டும் தியானிக்கப்போகிறோம். அதாவது *பெந்தெகொஸ்தே நாளில் எத்தனை பேர் அந்நியபாஷைகளில் பேசினார்கள்? பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மட்டும் பேசினார்களா? இல்லை 120 சீஷர்கள் பேசினார்களா?* மெய்யாகவே இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இதிலே அநேக சத்தியங்கள் அடங்கி இருக்கிறது. நான் மேலே குறிப்பிட்டதுபோல இரண்டு தரத்தில் இச்சம்பவம் கிறிஸ்தவர்கள் மத்தியில் விசுவாசிக்கப்படுகிறது. ஒன்று, 12 அப்போஸ்தலர்கள் மட்டும் தான் பேசினார்கள்; இரண்டு, 12 பேர் மட்டுமல்ல 120 பேர் பேசினார்கள்.
*கவனிக்கவும்:* 120 பேர் பேசினார்கள் என்று கூறுவோமானால் பெண்களும் அந்நியபாஷைகளில் பேசினார்கள் என்று நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும், காரணம் 120 பேர் கூடுகையில் பெண்களும் இருந்தார்கள் (அப். 1:13-15). மேலும் நாம் கவனிக்க வேண்டிய காரியம் அப்.1:5-ல் எருசலேமை விட்டுப் போகாமல் இயேசுவினிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருக்க வேண்டும் என்கிற கட்டளைப் பெற்றிருந்தாலும், 13 முதலுள்ள வசனங்களில் அவர்கள் கூடிவந்தது காத்திருப்புக்காக அல்ல மாறாக வசனம் 15 முதல் வாசிக்கும் போது அவர்கள் கூடி வந்தது 12-வது அப்போஸ்தலனை தெரிந்தெடுப் பதற்காக என்று தெளிவாக அறிந்துகொள்ளலாம். அந்தப்படியே 15-வது வசனத்தில் 120 பேர் கூடியிருந்த கூட்டத்தில் எழுந்து நின்று பேசுவதையும் பின்பு 26-ஆம் வசனத்தில் மத்தியாவின் பேரில் சீட்டு விழுந்ததால் பதினோரு அப்போஸ்தலருடனே அவனும் சேர்த்துக் கொள்ளப்பட்டதையும் அறிந்துக்கொள்ள முடியும்.
ஆகையால் வேதத்தை திறந்தமனதோடு வாசித்து ஒவ்வொரு வேத வாக்கியங்களையும் கருத்தோடு வாசித்து தியானிப்போமானால் அப்போஸ்தலருடைய நடபடிகள் இரண்டாம் அதிகாரத்தில் பேசியவர்கள் 120 பேர் அல்ல மாறாக 12 அப்போஸ்தலர்கள் மட்டும் தான் என்பதை எவ்வித சந்தேகமுமின்றி தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
இதற்குரிய சான்றுகளும் திருமறை விளக்கங்களும் கீழே கொடுக்கிறேன்.
(தொடரும்...)
[25/09 10:41 am] Thomas Pastor Brunei VDM: I know few church groups ( they do not like to be called Denomination) which do not believe in speaking in tongus..
[25/09 10:42 am] Jeyaseelan Bro VDM: *அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்*
சத்தியம் எண்:- 3
"அவர்கள் பல பாஷைகளைப் (Tongues) பேசி தேவனைப் புகழ்ந்தார்கள்" என அப்போஸ்தலர்கள் 10:46 -ல் வாசிக்கிறோம்.
கொர்நெலியு வீட்டில் கூடியிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றார்கள். இவர்கள் மனந்திரும்பிய அதே சமயத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்று விட்டார்கள். இவர்கள் தாங்கள் பெற்ற அந்நிய பாஷையினால் (Tongues) தேவனைத் துதித்து புகழ்ந்தார்கள் என்று காண்கிறோம். அதாவது, அன்று பெந்தேகொஸ்தே நாளில் அபிஷேகம் பெற்ற நிகழ்ச்சியைப் போல் "ஜனங்களிடத்தில் அந்நியபாஷையினால் பேசவில்லை" என்பதைக் கவனியுங்கள்!
சத்தியம் எண் :- 4
"பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்போழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசி தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்"என வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 19:6 ).
பவுல் எபேசு விசுவாசிகளின் மீது கைகளை வைத்தவுடன் அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கினார். இங்கு குறிப்பிடப்பட்ட அந்நியபாஷை "தீர்க்கதரிசனம் சொல்லுவதாய்" இருப்பதை நாம் காண்கிறோம
(மேற்கண்ட அப்போஸ்தலர் நடபடிகளின் சம்பவங்களில் கீழ்காணும் உண்மைகளை நாம் கவனிப்பது நல்லது).
(1) அப்போஸ்தலர் 2 -ஆம் அதிகாரத்தில், தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப்போஸ்தலர் 10 -ஆம் அதிகாரத்தில் தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்பே பரிசுத்தஆவியைப் பெற்றுவிட்டார்கள்!
(2) அப்போஸ்தலர் 2 -ஆம், 10 -ஆம் அதிகாரங்களில் யாரும் கைகளை வைக்காமலே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள். அப்போஸ்தலர் 19ம் அதிகாரத்தில், பவுல் அவர்கள் மேல் கை வைத்த பின்பு பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்கள்.
(பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு, இப்படிதான் பெற வேண்டுமென்ற ஓர் நிலையான வரையறை எதுவும் இல்லை என்பதையே இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன. அதாவது, தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்போ அல்லது பின்போ; கைகளை வைத்தோ அல்லது வைக்காமலோ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.)
(3) அப்போஸ்தலர் 8:16-18வசனங்களில் சமாரியா சீஷர்கள் பரிசுத்தஆவியைக் பெற்றுக்கொண்டபோது,அந்நிய பாஷையைப் பேசியதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவ்வாறு பரிசுத்தஆவி தந்தருளப்படுவதை மாயவித்தைக்காரனான சீமோன் கண்டான் என வாசிக்கிறோம். அப்படி அவன் 'எதைக் கண்டான்' என்பதை வேதம் குறிப்பிடவில்லை. ஆனால், தான் கண்ட ஒன்று, தானும் அந்த வரத்தைப் பேதுருவைப்போல பெறவேண்டுமென்ற ஆவலை அவனுக்குள் தூண்டியது என நாம் காண்கிறோம், அவ்வளவுதான்!
(தொடரும்)
http://tamil.cfcindia.com/ta/article/the-truth-about-speaking-in-tongues
[25/09 10:43 am] Elango: பவுல் எபேசு விசுவாசிகளின் மீது கைகளை வைத்தவுடன் அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கினார். இங்கு குறிப்பிடப்பட்ட அந்நியபாஷை "தீர்க்கதரிசனம் சொல்லுவதாய்" இருப்பதை நாம் காண்கிறோம்👆👆👆👍
[25/09 10:43 am] Thomas Pastor Brunei VDM: Does it mean women cannot speak in tongues???
[25/09 10:43 am] Thirumurugan VDM: Kindly avoid bringing denominations here. They have nothing to do with what scripture says. Please posts what you understand from scriptures or what scripture says. Comparision can be done some other time...when we take a topic like *"Diverse Christian Denominations"*.
[25/09 10:44 am] Thirumurugan VDM: please wait till I finish my answer....
[25/09 10:48 am] Elango: [25/09 10:44 am] *Aa Sam Jebadurai Pastor VDM:* //நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அந்நியபாஷை வரத்தைக்குறித்து முன்னறிவித்தபோது (நான்கு சுவிசேஷங்களில் ஒரு முறை மட்டும்), விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாக கூறியவற்றில் *“நவமான பாஷைகளைப் பேசுவார்கள்”* என்று கூறினார் (மாற்கு 16:17). //
இங்கே அன்னிய பாஷையை மட்டுபடுத்த சகோதரர் திரு முற்படுவது போல தெரிகிறது.சுவிஷேசங்களில் மாற்கு சுவிஷேசத்தில் மட்டுமே நவமான பாஷையை குறித்து கூறப்படுகிறது என்பது சரி. ஆனால் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு தடவை தான் அதை பேசினார் என எதை வைத்து நிர்ணயம் செய்கிறார்??
சமநோக்கு சுவிஷேசம் என்பதை பற்றி அறியாமல் திரு பதிவிடுகிறாரா??
[25/09 10:48 am] Thomas Pastor Brunei VDM: (பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு, இப்படிதான் பெற வேண்டுமென்ற ஓர் நிலையான வரையறை எதுவும் இல்லை என்பதையே இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன. அதாவது, தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்போ அல்லது பின்போ; கைகளை வைத்தோ அல்லது வைக்காமலோ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.) Bro Jeyaseelan i want to share the reason why God poured out the Holy Spirit on those Gentiles in Cornelius house....
[25/09 10:48 am] Thirumurugan VDM: 👉👉 பிதாவின் வாக்குத்தத்தம் 12 அப்போஸ்தலர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அருளப்பட்டது (அப்.1:4).
👉👉 அப்.2:1ல் உடனடியாக அடுத்து வருகிற “அவர்கள்” என்னும் மறுபெயரினைவினை (nearest antecedent) அப்.1:26ல் குறிப்பிடப்பட்டிருக்கிற அப்போஸ்தலர்களையே குறிக்கிறது.
👉👉 அந்நியபாஷைகளில் பேசப்படுவதைக்கேட்ட கூடியிருந்தவர்கள் யாவரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு , ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? என்று கூறினார்கள் (அப்.2:7). இந்த கலிலேயர் என்கிற அழைப்பு அடைச்சொல் அப்போஸ்தலர்களைக் குறிப்பதற்காக மட்டும் பிரத்யேகமாக (விசேஷமாக) பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டு கொள்ளலாம் (லூக்கா 22:59; அப்.1:11).
👉👉 அப்.1:26 மற்றும் 2:1 வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிற பெயர்ச்சொல், மறுபெயர்ச்சொல் மற்றும் பெயரடைச்சொல் (Noun, Pronoun, Adjective) யாவும் ஆண்பாலில் மட்டுமே (Masculine Gender) பயன்படுத்தப்பட்டிருக்கிறது (அப்.2:1-ல் “அவர்களெல்லாரும்” என்கிற வார்த்தை “பாண்டேஸ்” (pantes) என்கிற கிரேக்க பதத்தில் இருந்து வருகிறது, இதுவும் ஆண்பாலில்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது (Adjective, Masculine, Plural, Nominative). அதேபோல, அப்.1:26-ல் “சீட்டுப்போட்டார்கள்” என்கிற வார்த்தை “க்லேரோஸ்” (kleros) என்கிற கிரேக்க பதத்தில் இருந்து வருகிறது, இதுவும் ஆண்பாலில்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது (Noun, Masculine, Plural, Accusative).
(தொடரும்...)
[25/09 10:49 am] Thirumurugan VDM: 👉👉 பிதாவின் வாக்குத்தத்தம் 12 அப்போஸ்தலர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அருளப்பட்டது (அப்.1:4).
👉👉 அப்.2:1ல் உடனடியாக அடுத்து வருகிற “அவர்கள்” என்னும் மறுபெயரினைவினை (nearest antecedent) அப்.1:26ல் குறிப்பிடப்பட்டிருக்கிற அப்போஸ்தலர்களையே குறிக்கிறது.
👉👉 அந்நியபாஷைகளில் பேசப்படுவதைக்கேட்ட கூடியிருந்தவர்கள் யாவரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு , ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? என்று கூறினார்கள் (அப்.2:7). இந்த கலிலேயர் என்கிற அழைப்பு அடைச்சொல் அப்போஸ்தலர்களைக் குறிப்பதற்காக மட்டும் பிரத்யேகமாக (விசேஷமாக) பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டு கொள்ளலாம் (லூக்கா 22:59; அப்.1:11).
👉👉 அப்.1:26 மற்றும் 2:1 வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிற பெயர்ச்சொல், மறுபெயர்ச்சொல் மற்றும் பெயரடைச்சொல் (Noun, Pronoun, Adjective) யாவும் ஆண்பாலில் மட்டுமே (Masculine Gender) பயன்படுத்தப்பட்டிருக்கிறது (அப்.2:1-ல் “அவர்களெல்லாரும்” என்கிற வார்த்தை “பாண்டேஸ்” (pantes) என்கிற கிரேக்க பதத்தில் இருந்து வருகிறது, இதுவும் ஆண்பாலில்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது (Adjective, Masculine, Plural, Nominative). அதேபோல, அப்.1:26-ல் “சீட்டுப்போட்டார்கள்” என்கிற வார்த்தை “க்லேரோஸ்” (kleros) என்கிற கிரேக்க பதத்தில் இருந்து வருகிறது, இதுவும் ஆண்பாலில்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது (Noun, Masculine, Plural, Accusative).
(தொடரும்...)
[25/09 10:51 am] Sam Jebadurai Pastor VDM: 1 Corinthians 14:2
ABP ο γαρG3588 G1063 For the one λαλώνG2980 speaking γλώσσηG1100 a language, ουκG3756 [2 not ανθρώποιςG444 3 to men λαλείG2980 1 speaks], αλλάG235 but τωG3588 θεώG2316 to God. ουδείς γαρG3762 G1063 For no one ακούειG191 hears, πνεύματι δεG4151 G1161 but in spirit λαλείG2980 he speaks μυστήριαG3466 mysteries.
BBE For he who makes use of tongues is not talking to men but to God; because no one has the sense of what he is saying; but in the Spirit he is talking of secret things.
EasyEnglish Anyone who speaks in a special language speaks only to God. That person is not speaking to other people, because the other people do not understand him. The Spirit is causing him to speak about secret things, but other people do not understand.
ETCBC
HiSB
ISV For the person who speaks in a foreign language is not actually speaking to people but to God. Indeed, no one understands him, because he is talking about secrets by the Spirit.
KJV For G1063 he that speakethG2980 in an unknown tongue G1100speaketh G2980 not G3756 unto menG444, but G235 unto God G2316: forG1063 no man G3762 understandethG191 him; howbeit G1161 in the spiritG4151 he speaketh G2980 mysteriesG3466. note
KJVLite For he that speaketh in an unknown tongue speaketh not unto men, but unto God: for no man understandeth him; howbeit in the spirit he speaketh mysteries. note
NET For the one speaking in a tongue does not speak to people but to God, for no one understands; he is speaking mysteries by the Spirit.
NHEB For he who speaks in another language speaks not to men, but to God; for no one understands; but in the Spirit he speaks mysteries.
Tamil ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
WEB For he who speaks in another language speaks not to men, but to God; for no one understands; but in the Spirit he speaks mysteries.
[25/09 10:52 am] Thomas Pastor Brunei VDM: Peter and co who was so staunch in his belief that Salvation is ONLY for the JEWS and reluctant to accept that even Gentiles could be accepted into the KOG has to shown clearly that what God has cleansed, they cannot call unholy..
[25/09 10:52 am] Thomas Pastor Brunei VDM: This is rather a vindicative action of God..
[25/09 10:52 am] Sam Jebadurai Pastor VDM: கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 14:2 (ERV-TA) ஏனென்று உங்களுக்கு விளக்குகிறேன். வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்றவன் மக்களிடம் அதனைப் பேசவில்லை. அவன் தேவனிடம் பேசுகிறான். வேறு எவரும் அவனைப் புரிந்துகொள்வதில்லை. அவன் ஆவியானவர் மூலமாக இரகசியங்களை வெளிப்படுத்துகிறான்.
[25/09 10:53 am] Thomas Pastor Brunei VDM: This is the ONLY incident where people were baptized with Holy Spirit before water baptism
[25/09 10:53 am] Thirumurugan VDM: 👉👉 பெந்தெகொஸ்தே நாளில் அப்போஸ்தலர்கள் ஆவியினால் நிறைந்து அவரவர்களுக்கு தந்தருளப்பட்ட படியே வெவ்வேறு பாஷைகளில் பேசினதைக் கேட்ட கூடியிருந்த ஜனங்கள்: *“இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று பரியாசம்பண்ணினார்கள்”*, இதைக்கண்ட அப்போஸ்தலனாகிய பேதுரு *பதினோருவரோடுங்கூட எழுந்து நின்று* பிரசங்கம் தொடங்குவதை அறிந்துக்கொள்ளலாம் (அப்.2:14). இங்குள்ள வித்தியாசத்தை கவனியுங்கள் *அப்.1:15-ல் நூற்றிருபதுபேர் கூடியிருந்த போது, அவர்கள் நடுவில் பேதுரு எழுந்து நின்று*. ஆனால் இங்கே *அப்.2:14-ல் பதினோருவரோடுங்கூட பேதுரு எழுந்து நின்று*.)
👉👉 பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் முடிவில் தங்களுடைய *“இருதயத்தில் குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்”* என்று கேட்பதைக் கவனியுங்கள் (அப்.2:37). நூற்றிருபது பேரைப்பார்த்து அல்ல; சகோதர சகோதரிகளே என்றும் அல்ல. (கவனியுங்கள் *இங்கேயும் ஆண்பால் (masculine gender) தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது: கிரேக்க பதங்கள் “அன்றேஸ்” மற்றும் “அடேல்ஃபோய்” (men and brothers)*.
👉👉 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 16:18-ல் *“என் சபையைக் கட்டுவேன்”* என்று கூறியிருந்தாலும், இயேசு கிறிஸ்து உயிரோடு இருந்த நாள் வரையிலும் மட்டுமல்ல உயிர்த்தெழுந்து பரமேறிச்செல்லும் நாள் வரையிலும் சபை ஸ்தாபிக்காப்பட்டதாக நமக்கு எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக எல்லா தரப்பினராலும் அங்கீகரிக்கப்படுகிற (ஒப்புக்கொள்ளப்படுகிற) காரியம் பெந்தெகொஸ்தே நாளில் ஆவியானவரின் வருகையின் போது நிகழ்ந்த அற்புதம், அடையாளம் மற்றும் ஜனங்களின் மனமாற்றம் மூலம் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் *அஸ்திபாரம் அப்போஸ்தலர்களே தவிர பிற சீஷர்களோ அல்லது விசுவாசிகளோ அல்ல (எபேசியர் 2:20)*. நாமெல்லாரும் அப்போஸ்தருடைய அஸ்திபாரத்தின் மேல் ஜீவனுள்ள கற்களாக கட்டப்பட்டு சபையானது கட்டப்படுகிறது (1பேதுரு 2:5). எனவே அன்று சபை ஸ்தாபிக்கப்பட்ட பெந்தெ கொஸ்தே நாளில் கூடி வந்ததும் அந்நிய பாஷைகளிலே பேசினதும் கிறிஸ்துவின் ஜீவனுள்ள சபைக்கு அஸ்திபாரமானதும் அப்போஸ்தலர்களே அல்லாமல் 120 பேர் இல்லை.
[25/09 10:56 am] Sam Jebadurai Pastor VDM: திருத்தூதர் பணிகள் 2:4, 6 (ERV-TA)
4 அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
6 ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.
[25/09 10:57 am] Sam Jebadurai Pastor VDM: Acts 2:4 (TBSI) "அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்."
[25/09 10:59 am] Thirumurugan VDM: Kindly avoid bringing denominations here. They have nothing to do with what scripture says. Please posts what you understand from scriptures or what scripture says. Comparision can be done some other time...when we take a topic like *"Diverse Christian Denominations"*.
[25/09 11:02 am] Thirumurugan VDM: Please read my complete post and make comments with reference if you differ. Other assumptions and your personal openions can be avoided if you dont have have evidences.
[25/09 11:03 am] Levi Bensam Pastor VDM: யோவேல் 2:28-29
[28]அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; *அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்*; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
[29] *ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.*
[25/09 11:03 am] Elango: எந்த சபை போதனைகளையும் தியானத்தில் திணிக்காமல், வேதத்தை ஆராய்வது நல்லது.
[25/09 11:05 am] Levi Bensam Pastor VDM: அப்போஸ்தலர் 2:16-18
[16]தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
[17]கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் *குமாரத்திகளும்* தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;
[18]என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய *ஊழியக்காரிகள்மேலும்* அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.
[25/09 11:06 am] Levi Bensam Pastor VDM: *வசனத்தின்படி வாங்க பேசலாம்*🤔
[25/09 11:07 am] Elango: yes✅👍
[25/09 11:12 am] Elango: 👍👍👍
I கொரிந்தியர் 14:2 ஏனெனில், *அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே,👈👈👈👈👈 அவன் மனுஷரிடத்தில் பேசாமல்,👈👈👈👈 👉👉👉👉👉 தேவனிடத்தில் பேசுகிறான்*🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
[25/09 11:12 am] Sam Jebadurai Pastor VDM: நான் வேதத்தில் இருந்தே பதிவிடுகிறேன். பிரதரன் சபை பரிசுத்த ஆவியானவர்,வரங்கள் குறித்து துர் போதனைக்குள் நடத்துபவர்கள்
[25/09 11:13 am] Levi Bensam Pastor VDM: 1 கொரிந்தியர் 14:4
[4] *அந்நியப்பாஷையில் பேசுகிறவன் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்;* தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.
[25/09 11:14 am] Thirumurugan VDM: 120 பேர் அல்ல 12 பேர்தான் பேசினார்கள் என்பதற்கான 7 காரணங்களை நான் உங்கள் முன் வைத்தேன். இவற்றில் எது தவறு என்கிறீர்கள்? அவற்றை வசன ஆதாரத்துடன் கொண்டு வாருங்கள் தியானிப்போம். *பிரதரன்* மற்றும் *பெந்தேகோஸ்தே சபைகளை* கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திருமறை கூறுவதை மட்டும் தியானிக்கலாமே.
[25/09 11:16 am] Jeyaseelan Bro VDM: பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டது ஏறக்குறைய 120 பேர் என்பது எனது கருத்து,..
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1
13 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதானாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
**எதற்காகவென்றால்**
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1
4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
எனவே ......👇
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1
14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2
1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
அப்போது அங்கிருந்த ஜனங்கள்...👇
12 எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
14 அப்பொழுது
🍁 பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று,🍁
அவர்களை நோக்கி: உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
👆👆என்றுகூறினார்.
ஏக்குறைய 120 பேர் அந்த இடத்தில் இருந்ததால் தான் ...பேதுருவோடு மற்ற11 சீடர்களும் அங்கிருந்த ஜனங்களிடம்
இவ்வாறு கூறினார்.
[25/09 11:17 am] Elango: 12 பேர்கள் மட்டுமே பேசினார்கள் என்பது தவறான கருத்துது. 3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு *அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது*
4. *அவர்களெல்லாரும்* பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
[25/09 11:20 am] Jp Solomon VDM: ஐயா
1. பதிவு செய்கிறவர்கள்
எழுத்து வடிவத்தில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
2. ஆங்கிலத்தில் பதிவு செய்கிறவர்கள் தமிழ் லிழலும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
[25/09 11:25 am] Levi Bensam Pastor VDM: *யூதாஸ்காரியோத்தை சேர்த்து 12பேரா*😳😳😳
[25/09 11:27 am] Thomas Pastor Brunei VDM: All were filled with the Holy Spirit. we cannot say only the men spoke in tongues and were in public.. The Jewish culture prohibited the women from coming out in public in that state.. Drunken state as the verse says..
[25/09 11:27 am] Sam Jebadurai Pastor VDM: நீங்கள் மட்டும் தான் வேதத்தில் இருந்து பேசுகிறீர்களா என்ன?? தேவையான காரியங்களை மட்டுமே பேசுகிறேன்
[25/09 11:28 am] Elango: 👍👍 28. உடனே மோசேயினிடத்தில் உள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.
29. அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, *கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.* Numbers&Chapter=11
[25/09 11:28 am] Jeyanti Pastor VDM: Mm. Yes Pastor
[25/09 11:32 am] Sam Jebadurai Pastor VDM: Luke 8:3 (TBSI) "ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்."
Acts 1:14 (TBSI) "அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்."
Acts 2:17-18 (TBSI)
17 "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் *குமாரத்திகளும்* தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;"
18 "என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய *ஊழியக்காரிகள்*மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்."
[25/09 11:33 am] Thirumurugan VDM: after having decided for the topic today... I kept preparing and typing...you will not find these points in any tamil books...these are purely mine and my understandings of the Bible. But I think you have considered me coming from Brethren or Baptist Church... which is not true. I am a Biblicalist. So take me as man who reads, studies the Bible, thats all. If you have come from any particuler denomination and palanning to believe only what you teach let me know.
[25/09 11:35 am] Sam Jebadurai Pastor VDM: I too believe the Bible alone but I never insert my own understanding in the Word as you do.
[25/09 11:35 am] Thomas Pastor Brunei VDM: Please read my post carefully.. When all of them were filled with the Holy Spirit it appeared to others that they were drunk..
[25/09 11:36 am] Sam Jebadurai Pastor VDM: What is your understanding of Drunk?? (
[25/09 11:36 am] Thirumurugan VDM: நீங்கள் கூறும் logic சரி. ஆனால் நான் முன் வைத்த காரணங்களையும் அதன் தெளிவுகளையும் கொஞ்சம் பாருங்கள். அது தவறு என்கிறீர்களா???
[25/09 11:36 am] Sam Jebadurai Pastor VDM: Please post that notes as one clip.
[25/09 11:37 am] Thomas Pastor Brunei VDM: I did not say that women were prohibited in public services and please do not jump to conclusion.
[25/09 11:37 am] Levi Bensam Pastor VDM: ரோமர் 16:1-6
[1]கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
[2]எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.
[3]கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
[4]அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
[5]அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
[6]எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.
[25/09 11:38 am] Sam Jebadurai Pastor VDM: வசனமே வசனத்தை விளக்கும். அப்போஸ்தலர் 2 ஐ புரிய யோவேல் தீர்க்கதரிசனம் தேவைப்படுகிறது.
[25/09 11:39 am] Elango: கெங்கிரேயா சபை பெண் பாஸ்டர்👍👍
[25/09 11:39 am] Sam Jebadurai Pastor VDM: Acts 2:13 (TBSI) மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
என்பதை தாங்கள் புரிந்து கொண்ட விதம் என்ன??
[25/09 12:02 pm] Elango: 🔥 இன்றைய வேத தியானம் - 25/09/2017 🔥
1⃣ அந்நியபாஷை என்றால் என்ன❓
2⃣ அந்நியபாஷை அடையாளமாக இருக்கிறதா அல்லது வரமாக இருக்கிறதா❓
3⃣ இன்றும் அந்நியபாஷையின் வரம் செயல்படுகிறதா❓ அந்நியபாஷை வரத்தை இன்று நாடுவது சரியானதா❓
4⃣ எதற்காக அந்நியபாஷை வரம் கொடுக்கப்பட்டது❓
5⃣ அந்நிய பாஷையில் பேசுகிறவன், மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான் என்பதன் அர்த்தம் என்ன❓
5⃣ எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா.. என்று சொன்ன புவுல், நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன் என்று பவுல் ஏன் கூறுகிறார்❓
6⃣ அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான். என்பதன் அர்த்தம் என்ன❓
7⃣ வேதத்திலே அந்நியபாஷையில் யார் பேசினார்கள்❓ஏன் பேசினார்கள்❓
8⃣ அந்நியபாஷைகளை எல்லாரும் பேசும்படி ஏன் பவுல் விரும்பினார்❓
9⃣ 1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட, “நிறைவானது”, "ஓய்ந்துபோம்” என்பதின் அர்த்தம் என்ன?
1⃣0⃣ அந்நியபாஷையில் பேசுதல் ஆவிக்குரிய முதிர்ச்சியைக் காண்பிக்கிறதா❓
1⃣1⃣ அந்நியபாஷை,பற்பல பாஷை, தூதர் பாஷை, மனுஷ பாஷை போன்றவைகளுக்கு விளக்கம் தருக⁉
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[25/09 12:11 pm] Elango: *அந்நிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியின் வரமாகும். அந்நிய மொழியில் பேசும் ஒருவர் தேவனுக்கு நன்றி செலுத்தவும், துதி செலுத்தவும், விண்ணப்பிக்கவும் ஆரம்பிப்பார்கள்.*
மகிழ்ச்சியும் துதியும் நிறைந்து அந்நிய மொழிகளினால் அப்போஸ்தலர்கள் துதித்துக்கொண்டிருந்த தைக் கண்ட யூதர்களுடைய இருதயத்தை பேதுருவின் வாயிலிருந்து புறப்பட்ட பரிசுத்த ஆவியின் பிரசங்கம் உணர்த்தியது.
[25/09 12:12 pm] Premraj 2 VTT: Bro your explanation about tongues is so nice & very useful ,now I have a one clarification what is God's willing about tongues some will we know but what is main purpose
[25/09 12:13 pm] Elango: சில நாட்களுக்கு முன்பு மற்றவர்களுக்குப் பயந்து அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளிருந்த பேதுரு இப்போது தைரியமாகப் பேசத்தொடங்கினார்.
தேவனுடைய வல்லமை அவர்களை நிரப்பியபோது அவர்களுடைய நாவுகள் சரளமாகப் பேசத்தொடங்கின.
பரிசுத்த ஆவியிடமிருந்து வந்த வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தை நிரப்பியதால் அவர்கள் மூலமாக தேவன் பேசத்தொடங்கினார்.
[25/09 12:14 pm] Jeyaseelan Bro VDM: *அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்*
*சத்தியம் எண்:- 5*
"ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு வியாக்கியானம் பண்ணுதலும் அளிக்கப்படுகிறது" என 1 கொரிந்தியர் 12: 7,8,10 -ஆம் வசனங்களில் வாசிக்கிறோம்.
இவ் வசனங்களில், "'அவனவனுடைய பிரயோஜனம்" என்பது ஆங்கிலத்தில் COMMON GOOD "பொது நன்மை" என்றே கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அந்நியபாஷைவரம் "சபையின் நன்மைக்காகத்" தரப்பட்டிருக்கிறது என்பதே இதன் பொருளாகும். கொரிந்தியர்களுக்கு எழுதப்பட்ட இந்த நிருபம் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும். இன்றும் ஆவியானவரால் தரப்படும் அந்நியபாஷை வரம் "சபையின் பொது நன்மைக்காகவே" தரப்படுகிறது.
*சத்தியம் எண் :-6*
"இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்" என 1 கொரிந்தியர் 12:11- ல் வாசிக்கிறோம்.
அந்நியபாஷை வரம் உட்பட்ட ஒவ்வொரு வரத்தையும் யார் யாருக்குத் தர வேண்டுமென்பதை ஆவியானவரே தம்முடைய சர்வ ஞானத்தின்படி தீர்மானிக்கிறார் என்பதை இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆகவே, யார் யாருக்கு எந்தெந்த வரத்தைக் கொடுக்க வேண்டுமென்பதை நாம் ஆவியானவருக்கு ஒருபோதும் கட்டளையிட முடியவே முடியாது.
*சத்தியம் எண் :- 7*
"தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும் பின்பு அற்புதங்களையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்" என 1 கொரிந்தியர் 12:28 -ல் வாசிக்கிறோம்.
ஆகவே, குறிப்பிட்ட தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சபையில் அந்நியபாஷை பேசும் வரத்தை தேவனே ஏற்படுத்தினார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, நாம் தேவனுக்கு எதிர்த்து நிற்காதபடி, இந்த வரத்தையும் நாம் ஒருபோதும் எதிர்த்து நிற்கவே கூடாது. நம்மை விட தேவனுக்கு அதிக ஞானம் உண்டு என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்!!
(தொடரும்)
http://tamil.cfcindia.com/ta/article/the-truth-about-speaking-in-tongues
[25/09 12:14 pm] Elango: I கொரிந்தியர் 14:4 *அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்;*
[25/09 12:15 pm] Premraj 2 VTT: Apart from this
[25/09 12:18 pm] Premraj 2 VTT: In this period of church will speak same tongue like Apostles of first centurion church bro, please teach me
[25/09 12:19 pm] Sam Jebadurai Pastor VDM: சகோதரர் சகரியா பூணன் அந்நிய பாஷையை பேச மாட்டாரே..அதை விசுவாசிக்கிறாரா என்ன???
[25/09 12:20 pm] Elango: Zac poonen அந்நிய பாஷை பேசுவார் பாஸ்டர் அவரே சொன்னது.... ஆனா விசுவாசிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளாளார்...
[25/09 12:22 pm] Elango: ஞானஸ்நானம் அவர் கொடுக்கும்போபோது... அமைதியாக நிற்க வேண்டும்... கை கால்களை ஆட்டக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் அவர் வைத்துள்ளார்.
[25/09 12:23 pm] Thomas Pastor Brunei VDM: Bro i have seen people being filed and speak in tongues in CFC
[25/09 12:23 pm] Elango: பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்களில் அவர் தனியாக ரூமில் அந்நியபாஷையில் பேசி தேவனை துதிப்பதாக அவ்ருடைய பிரசங்கள் சொன்னதுண்டு....
[25/09 12:23 pm] Elango: Yes, I've seen...
[25/09 12:27 pm] Jeyaseelan Bro VDM: Pastor,,,,
Link,,அனுப்பியுள்ளேன்,,,,,முழுமையாக படியுங்கள்,,,,
எனக்கு பிரயோஜனமாக இருந்ததாலேயே,,,,குழுவில் அனுப்புகிறேன்,,,,ஐயா,,,,🙏
[25/09 12:29 pm] Elango: தேவன் தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்தாவி என்று நாம் வாசிப்பதால் அனைவரும் தேவனிடம் கேட்டு அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன என்பதில் *நவமான பாஷைகளைப் பேசுவார்கள்* என்றும் வாசிக்கிறோம்.
[25/09 12:31 pm] Elango: அந்நியபாஷையில் பேசினால் அதற்கு அர்த்தம் சொல்லவேண்டுமா❓ அநேகமாக நீங்கள் பேசும் அந்தபாஷைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதான் அந்நியபாஷை ஆயிற்றே😊
அருகில் இருக்கும் ஒருவருக்கு அதின் அர்த்தம் தெரிந்தால் அவர் சொல்லலாம். *வியாக்கியானம் என்னும் வரம் இருப்பவர்களுக்கு அதின் அர்த்தம் தெரிய வாய்ப்புகளுண்டு.*
1 கொரிந்தியர் 14:6 ல் நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால் மற்றவர்களுக்கு பிரயோஜனம் இல்லை என்று பவுல் சொன்னதின் அர்த்தம் நீங்கள் பேசுவது புரியாது எனவே அதினால் மற்றவர்களுக்கு பிரயோஜனமில்லை, *உங்களுக்கோ பிரயோஜனம்தான்; உங்களுடைய உள்ளான மனுஷன் பெலப்படவும் தேவனுடைய ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படவும் அவசியம்தான்.*💪💪💪💪💪💪💪🌟🌟✨✨✨✨✨
[25/09 12:34 pm] Elango: அப்போஸ்தலர் 19:6 பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, *பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்*
சில சபைகளில் அந்நியபாஷைகளில் பேசும் அனுபவம் இல்லை.
*அவர்கள் சொல்லுவார்கள்நீங்கள் எப்பொழுது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களோ அப்பொழுதே பரிசுத்தாவியினை பெற்றுவிட்டீர்கள், அபிஷேகமும் பெற்றுவிட்டீர்கள் என்று சொல்லுகின்றார்கள். இது தவறாகும்.*
[25/09 12:38 pm] Thomas Pastor Brunei VDM: Yes Bro Elango.. We had messages supporting this a couple of days ago..
[25/09 12:39 pm] Elango: பரிசுத்த ஆவியை பெறுதல், அந்நியபாஷையில் பேசுதல், அபிஷேகம் பெறுதல் போன்ற நிகழ்வுவுகளை - சில சபைகள் , இவைகள் அனைத்தும் நாம் என்றைக்கு ஆண்டவரை விசுவாசிக்கிறோமே அன்றே கிடைக்கிறது என்று சொல்லுவதுண்டு.. இது தவறாகும்.
எபேசு விசுவாசிகள் ஆண்டவர் இயேசுவை விசுவாசித்தார்கள் ஆனால் ஆரம்பத்தில் பரிசுத்த ஆவியை ஏன் பெறவில்லை... பிறகு பவுல் அவர்கள் மேல் கையை வைத்தபோது தானே பரிசுத்த ஆவியை பெற்றார்கள்.
2. *நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா* என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
3. அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
4. அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
5. அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6. *அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். Acts&Chapter=19*
[25/09 12:39 pm] Thirumurugan VDM: *"எதற்காக அந்நியபாஷை வரம் கொடுக்கப்பட்டது?"*
அந்நியபாஷை வரம் அருளப்பட்டதற்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உண்டு:
(1) முதலாவதாக, அந்நியபாஷை வரம் கொடுக்கப்பட்டதின் நோக்கம் *“சுவிசேஷ செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக” (to communicate the message of the gospel)*. 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில் பவுல் அப்போஸ்தலன் இதை அருமையாக விளக்கி யிருக்கிறார் (1 கொரி. 14:22). தேவனுடைய சுவிசேஷத்தைப் பகிர்ந்துக் கொள்ள கொடுக்கப்பட்ட ஒரு அடையாளம் தான் அந்நியபாஷை வரம். ஏசாயா 28:11 மற்றும் யோவான் 20:30, 31 வசனங்கள் இதை உறுதிப்படுதுகிறது. இதையே தான் அப்போஸ்தலனாகிய பவுல் மீண்டும் எடுத்துரைத்து வலியுறுத்துகிறார்: *“மறுபாஷைக்காரராலும், மறு உதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவி கொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே”* (1 கொரி. 14:21). இங்கே பவுல் ஏசாயா தீர்க்கதரிசனத்தில் இருந்து இஸ்ரவேலருடைய வாழ்க்கையை சித்தரிக்கிறார். அதாவது சொந்த பாஷையிலே பேசின தங்களுடைய தீர்க்கதரிசிகளுக்கு செவிகொடுத்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாத இஸ்ரவேல் ஜனத்தோடு; *“பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்”* என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் முன்னறி வித்தார் (ஏசாயா 28:11). எனவேதான் எவ்வித சந்தேகமுமின்றி பவுல் அந்நியபாஷையில் பேசுவதை இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுக்கப் பட்ட அடையாளமாகப் பார்க்கிறார். *“இந்த ஜனத்தோடே”* என்று குறிப்பிட்டது இஸ்ரவேல் ஜனத்தை மட்டுமே குறிக்கிறது.
கவனிக்கவும்: அன்று கொரிந்து சபையில் அந்நியபாஷையைக் குறித்தோ அல்லது அந்நியபாஷையில் பேசுவதைக் குறித்தோ குழப்பம் உண்டாகவில்லை; மாறாக அவர்கள் கடைபிடித்த விதத்திலும், செயல்முறைப்படுத்தின விதத்திலும், ஒழுங்குமுறையிலும் தான் குழப்பங்கள் ஏற்பட்டன.
இரண்டாவது முறை அந்நியபாஷையில் பேசின சம்பவத்தை அப். 10:46-ல் லூக்கா குறிப்பிடுகிறார். இங்கும் புறஜாதிகள் (கொர்நேலியுவும் அவனது வீட்டாரும்) அந்நியபாஷையில் பேசினது யூதர்களுக்கு (பேதுரு மற்றும் அவனோடு சென்றவர்கள்) அடையாளமாக கொடு க்கப்பட்டது. பேதுரு இதைக்குறித்து பின்பு சாட்சியளிக்கிறார்; “நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோல, அவர்கள் மேலும் இறங்கினார்” (அப். 11:15). எனவே எவ்வித சந்தேகமுமின்றி கொர்நேலேயு வீட்டிலே அந்நியபாஷையிலே பேசின சம்பவம், பேதுரு சுவிசேஷம் பகிர்ந்துகொண்ட வேளையிலே யூதர்களுக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டது (அப். 10:44-46).
மூன்றாவது முறையாக அப். 19:6 ல் அந்நியபாஷையிலே பேசின சம்பவம் வருகிறது. மீண்டும் இங்கே அந்நியபாஷையில் பேசுவது சுவிசேஷத்தோடும் அதைப்பகிர்ந்துகொள்வதோடும் (missionary and evangelistic purpose) ஒத்து வருவதை காண முடியும். யோவான் ஸ்நானனுடைய சீஷர்களின் விசுவாசத்தில் இங்கே தெளிவாக புரிந்து கொள்ள கூடிய சத்தியம்: “இரட்சிப்பிற்கு ஏதுவான விசுவாசம் ஒன்று உண்டு என்பதும், இவர்களுடைய விசுவாசம் இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்தவில்லை என்பதுமாகும்.” எனவே சந்தேகமின்றி இங்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்ட அடையாள வரம் தான் இந்த அந்நியபாஷை.
(தொடரும்...)
[25/09 12:40 pm] Elango: *பரிசுத்த ஆவியை பெறுதல், அந்நியபாஷையில் பேசுதல், அபிஷேகம் பெறுதல் போன்ற நிகழ்வுவுகளை - சில சபைகள் , இவைகள் அனைத்தும் நாம் என்றைக்கு ஆண்டவரை விசுவாசிக்கிறோமே அன்றே கிடைக்கிறது என்று சொல்லுவதுண்டு.. இது தவறாகும்*
[25/09 12:40 pm] Thomas Pastor Brunei VDM: When we were dueling for two days about the Baptism and Anointing... 😄
[25/09 12:43 pm] Thirumurugan VDM: (2) இரண்டாவதாக, அந்நியபாஷை வரம் கொடுக்கப்பட்டதின் நோக்கம் *“சுவிசேஷ செய்தியை உறுதிப்படுத்துவதற்காக” (to confirm the message of the gospel)*. தேவனுடைய சுவிசேஷத்தைப் பகிர்ந்துக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட ஒரு அடையாள வரம் மட்டுமல்ல மாறாக சுவிசேஷ செய்தியை உறுதிப்படுத்துவதற்காகவும் கொடுக்கப்பட்டதுதான் இந்த அந்நியபாஷை வரம்.
இன்று நமக்கு இருக்கிறதுபோல அல்லது கிடைத்திருக்கிறதுபோல பூர்த்தியாக்கப்பட்ட பரிபூரணமான தேவனுடைய வார்த்தை (the completed word of God) அன்று ஆதி அப்போஸ்தலர் காலத்தில் இல்லை, அதாவது கி.பி. 100 ஆம் ஆண்டு வரை. காரணம் ஏறக்குறைய கி.பி. 100 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் வெளிப் படுத்தின விசேஷம் எழுதியாகிவிட்டது. அதனால் தான் அப்போஸ் தலர்களுக்கு அடையாள வரங்கள் கொடுக்கப்பட்டது (sign gifts). ஆதித்திருச்சபையின் அப்போஸ்தலர்களும் பிற விசுவாசிகளும் (உதாரணம்: கொரிந்து சபை விசுவாசிகள்) தேவனுடைய சுவிசேஷ வசனத்தை பிரசங்கித்த வேளைகளிலெல்லாம் அடையாளங்களும் அற்புதங்களும் பின் தொடர்வதை நம்மால் வாசிக்க முடியும். மத்தேயு 12:38, 16:1, யோவான் 2:18; 6:30, மாற்கு 16:20, 1 கொரி. 1:22, 2 கொரி. 12:12 மற்றும் எபிரெயர் 2:3, 4 ஆகிய வேதவாக்கியங்கள் இதை தெள்ளத் தெளிவாக்குகிறது.
[25/09 12:44 pm] Thomas Pastor Brunei VDM: We seem to conveniently set aside the verses which seem to contradict our belief..
[25/09 12:46 pm] Thirumurugan VDM: *"வேதத்திலே அந்நியபாஷையில் யார் பேசினார்கள்?"*
நாம் கர்த்தருடைய வேதத்தை கவனத்தோடு வாசித்து ஆராய்வோமானால், புதிய ஏற்பாட்டிலே ஏறக்குறைய நான்கு இடங்களில் அந்நியபாஷையில் பேசினதை நம்மால் அறிந்துக் கொள்ளமுடியும். அந்த நான்கும் கீழ்வருமாறு:
*1. பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் (அப். 2:1-13)*
*2. கொர்நேலியு மற்றும் வீட்டார் (அப். 10:44-46)*
*3. யோவான்ஸ்நானனுடைய 12 சீஷர்கள் (அப். 19:1-7)*
*4. கொரிந்து சபையார் (1 கொரி. 12-14 அதிகாரங்கள்)*
[25/09 12:48 pm] Thomas Pastor Brunei VDM: Bro Thiru i would not stop with Corinth Church alone...
[25/09 12:49 pm] Ebi Kannan Pastor VDM: கணக்கில் பிழைகள் உள்ளன
[25/09 12:49 pm] Elango: அப்போஸ்தலர் 2:4 4. *அவர்களெல்லாரும்* பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
[25/09 12:49 pm] Elango: 12 பேர்கள் மட்டுமல்ல... அங்கிருந்தத 120 பேர்களும் அந்நியபாஷையில் பேசினார்கள்
[25/09 12:50 pm] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 1:15
[15]அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:
அப்போஸ்தலர் 2:1-3
[1]பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
[2]அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
[3]அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
[25/09 12:50 pm] Thomas Pastor Brunei VDM: It must have happened in other early churches also.. If you ask me to quote verse... i cannot.. because the necessity of explaining about tongues was not there in other churches.. Corinth had problems about it..
[25/09 12:51 pm] Charles Pastor VDM: எனக்கு அதிலும் ஒருபடி மேல
[25/09 12:52 pm] Ebi Kannan Pastor VDM: 1 கொரிந்தியர் 14:5
*நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்;*
👆 பவுலினுடைய விருப்பங்களில் இதுவும் ஒன்று
[25/09 12:53 pm] Elango: யெஸ், தேவனுடைய விருப்பமும் கூட...
[25/09 12:54 pm] Ebi Kannan Pastor VDM: 👍✅
என்னுடைய விருப்பமும் கூட😃😃
[25/09 12:54 pm] Thomas Pastor Brunei VDM: Paul is not dealing with law in Corinth but does in Galatia.. Each epistle addresses their own problems...
[25/09 12:54 pm] Charles Pastor VDM: பவுல் பேசினான்
18 உங்களிலெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
1 கொரிந்தியர் 14:18
[25/09 12:55 pm] Ebi Kannan Pastor VDM: தமிழில் பதியவும் இல்லையென்றால் அமைதியாக இருக்கவும்
[25/09 12:55 pm] Thomas Pastor Brunei VDM: நாம் கர்த்தருடைய வேதத்தை கவனத்தோடு வாசித்து ஆராய்வோமானால், புதிய ஏற்பாட்டிலே ஏறக்குறைய நான்கு இடங்களில் அந்நியபாஷையில் பேசினதை நம்மால் அறிந்துக் கொள்ளமுடியும். அந்த நான்கும் கீழ்வருமாறு:
[25/09 12:56 pm] Thomas Pastor Brunei VDM: Can Bro Thiru change this statement?
[25/09 12:56 pm] Charles Pastor VDM: சரியாக கவனித்தால் 5 இடங்கள்
[25/09 12:57 pm] Thirumurugan VDM: *அப்போஸ்தலருடய நடபடிகள் புத்தகத்திலிருந்து சிந்திக்க வேண்டியவைகள்:*
👉 அன்று அவர்கள் பேசிய அந்நியபாஷைகள் அப்போஸ்தர்கள் காலக்கட்டத்திலே பேச்சுவழக்கில் இருந்த பாஷைகள் (2:6-8).
👉 அன்று அந்நியபாஷைகளிலே பேசினதை கேட்ட வெவ்வேறு பாஷைகளை சேர்ந்தவர்கள் எல்லாரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் (2:12). காரணம் அந்நியபாஷையிலே பேசினதை அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.
👉 அன்று அந்நியபாஷைகளிலே பேசினவர்கள் அனைவரும் தேவனுடைய மகத்துவங்களைப் பேசினார்கள் (2:11).
👉 அன்று அவர்கள் அந்நியபாஷைகளிலே பேசினபோது மொழிப்பெயர்ப்பாளருடைய அவசியம் இல்லாதிருந்தது (2:6,11,12).
👉 அன்று அந்நியபாஷைகளிலே பேசினவர்கள் தேவனோடல்ல மனுஷர்களோடு தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பேசினார்கள் (2:11).
👉 அன்று பெந்தெகொஸ்தே நாளில் கூடியிருந்தவர்கள் யாவரும் வெளியரங்கமான அடையாளங்களையும் சத்தத்தையும் கேட்டார்கள் (2:2-4).
👉 அன்று அந்நியபாஷைகளிலே பேசினவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள் (10:46).
👉 அன்று அந்நியபாஷைகளிலே பேசினவர்கள் தீர்க்கத்தரிசனஞ் சொன்னார்கள் (19:6).
👉 அன்று அந்நியபாஷைகளிலே பேசினவர்கள் பிரசங்கித்த பிறகு ஏறக்குறைய 3000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள் (2:41).
[25/09 12:59 pm] Ebi Kannan Pastor VDM: 2 கொரிந்தியர் 13:1
சகல காரியங்களும் இரண்டுமமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
[25/09 1:01 pm] Ebi Kannan Pastor VDM: சகோதரா அந்நியபாஷை என்பது தேவனருளும் இயற்கைக்கு அப்பாற்பட்பட்ட நிகழ்வா ❓ அல்லது மற்ற மொழிகளை பேசும் திறமையா❓
[25/09 1:03 pm] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 2:13
[13]மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
[25/09 1:06 pm] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 2:14-16
[14]அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
[15]நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
[16]தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
👆 அவர்களுக்கு புரிந்ததென்றால் அவர்களுக்கு விளக்க பேதுரு எழுந்து பேச அவசியமில்லை
[25/09 1:07 pm] Thirumurugan VDM: அப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்??? பேசுவது யாருக்கும் புரிய கூடாதா???
[25/09 1:08 pm] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 2:11
[11]கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே *இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.*
அவர்கள் எந்த மனிதரிடத்திலும் பேசவில்லை
[25/09 1:14 pm] Thirumurugan VDM: இது உங்களுடைய தவறான புரிந்து கொள்ளுதல். இங்கே கூறுகிற காரியமும் நீங்கள் குறிப்பிடுகிற காரியமும் என்ன என்பதை கொஞ்சம் மீண்டும் வாசித்து விட்டு பதில் கூறுங்கள். என்னத்தை பேதுரு விளக்குகிறார் இங்கே??? அந்நியபாஷையையா???
[25/09 1:18 pm] Elango: அன்னியபாஷை பேசுவது தவறா?
இல்லை.
அந்நியபாஷையை பற்றி தேவன் குறித்துவைத்திருப்பதினால் அது தவறல்ல. *தவறென்று சொல்பவர்கள் வேதத்திற்கு விரோதமானவர்கள்.* மாற்கு 16:14 ல் அந்நிய பாஷை விசுவாசிகளின் அடையாளம் என்று போடப்பட்டுள்ளது.
[25/09 1:19 pm] Sankar Sir Madurai VDM: Yes
[25/09 1:19 pm] Elango: 1 கொரிந்தியர் 12 il தேவன் தம்முடைய தீர்மானத்தின்பாடு ஒருவருக்கு சுகமளிக்கும் வரத்தையும், மற்றொருவருக்கு தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்தையும், மற்றொருவருக்கு நவமான பாஷைகள் பேசும் வரத்தையும் கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 12: 7. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. *உங்களுக்கு அந்நிய பாஷை பிரயஜோனமாய் இருக்காதென்றால் தேவன் அதை கொடுக்க மாட்டார்*.
[25/09 1:21 pm] Elango: அன்னியபாஷை பேசுவது தவறல்ல. ஆனால் அதை எப்படி கையாள வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் தெளிவாக கூறியிள்ளார்.
எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? ஆதலால் முக்கியமான வரத்தை நாடுங்கள்.
*யாரையும் அந்நிய பாஷை பேச சொல்லி வற்புறுத்தாதீர்கள். அந்நிய பாஷை பேசுபவரை தடை செய்யாதிருங்கள்.*
அது தேவன் கொடுத்த வரம். தேவனோடு ரகசியம் பேசுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள வரம். யாரும் இதை குறைவாக மதிப்பிட வேண்டாம், கிண்டல் நக்கல் அடிக்கவேண்டாம்.
[25/09 1:39 pm] Glory Joseph Sis VDM: அந்நியபாஷையில் அநேகர் பேசுவது எந்த மொழியிலும் சேராதவையா⁉ ஆனால் அநேகர் பேசும் அந்நியபாஷை ஒன்று போல் உள்ளதே அது எப்படி⁉
[25/09 1:43 pm] Elango: இவ்வுலகத்தில் உன்னதமான கிறிஸ்தவர்களாய் திகழ்ந்தவர்கள், அந்நியபாஷை பேசினார்களோ இல்லையோ....ஆனால், இவர்கள் தங்கள் ஆண்டவராகிய இயேசுவின் மீது முழு இருதயமான சொல்லிமுடியாத நேசம் கொண்டிருந்தார்கள்!
பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல் போன்ற சீஶர்கள் அந்நியபாஷை பேசினார்கள்!
ஆனால், நமக்குத் தெரிந்தவரை ஜான்வெஸ்லி, சார்லஸ் பின்னி, D.L.மூடி, A.B. சிம்ஸன், வில்லியம்பூத், C.T.ஸ்டட், வாட்ச்மேன் நீ போன்ற தேவ மனிதர்கள் ஒருபோதும் அந்நியபாஷை பேசியதேயில்லை!
ஆனால், அவர்கள் அனைவரும் சிலுவையின் வழியில் நடந்து சென்றார்கள்,இவைகள்தான் அவர்கள் வாழ்வின் மையமாய் இருந்தது... மற்ற அனைத்தும் அவர்களுக்கு இரண்டாவதாகவே இருந்தது!!
*கனிகளும் நம் வாழ்க்கையில் வேண்டும், வரங்களையும் வெளிப்படுத்த வேண்டும்*
*வரங்கள் என்பது நமக்கும், பிறருக்கும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அவயவங்களாகிய நமக்கு பக்திவிருத்திக்காகவும், பல வகையான நன்மைக்காகவும் கொடுக்கப்படுகிறது, நாம் கிறிஸ்துவுக்குள் தேறினர்வர்களாவும், எந்த நற்கிரியைகள் செயய வல்லமையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதே தேவனது சித்தம், நாம் பூரண தேறின் புருஷனாகும் வரைக்கும் வரங்கள் அவசியம்.*
நமக்கு பிடித்த வரங்களை ஏற்ப்பது, நமக்கு பிடிக்காத வரங்களை அவமதிப்பதும், கிண்டல், நக்கல் செய்வதும் கூடாது.
தேவன் அவருடைய பிள்ளைகள் மேல் சாந்தமாகவும், இரக்கமாவும், தட்டி தட்டி அவர்களின் அவிக்குரிய வளர்ச்சியை நேர்த்தியாக கொண்டு செல்கிறார். அவருக்கு தெரியும் நமக்கு எந்த வரம் கொடுக்க வேண்டும் என்று...
ஆகையால் வரங்களை தேவனிடத்தில் கேளுங்கள்.
*16. அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். யோவன் 1:16*
[25/09 1:44 pm] Don Singapore VDM: 1 Corinthians 12:10 talks about the gift of tongues and also interpretation of tongues
[25/09 1:45 pm] Dinesh 3 VDM: 1 கொரிந்தியர் 14
28: அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
If there is no interpreter, the speaker should keep quiet in the church and speak to himself and God. (NIV)
27: யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
If anyone speaks in a tongue, two--or at the most three--should speak, one at a time, and someone must interpret. (NIV)
[25/09 1:46 pm] Dinesh 3 VDM: 1 கொரிந்தியர் 14
28: அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
If there is no interpreter, the speaker should keep quiet in the church and speak to himself and God. (NIV)
[25/09 1:47 pm] Don Singapore VDM: So there is no prohibition on speaking in tongues because it is the same Holy Spirit who gives that grace to speak
[25/09 1:51 pm] Jeyaseelan Bro VDM: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2
14 அப்பொழுது
🍁 பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று,🍁
அவர்களை நோக்கி: உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
☝ஐயா 12 பேர் என்பதற்கு இந்த வசனம் உங்களுக்கு தெரிகிறது,,,,,
ஆனால்,,,,,அதற்கு பின்பு வரும் வசனங்களில்👇👇👇
15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
*16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.*
*18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.*
☝இந்த வசனத்தின் படி ஏறக்குறைய 120 பேர் என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்,,,,,🙏
தாங்கள் கூறுவதுதான் சரி என்று நீங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம்,,,,,,
குழுவினரை நிர்பந்திக்க வேண்டாம்,,,,🙏
[25/09 1:55 pm] Jeyaseelan Bro VDM: *அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்*
*சத்தியம் எண் :-8*
"எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷை பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?" என 1 கொரிந்தியர் 12:30 - ல் வாசிக்கிறோம்.
இந்த வசனம் கூறுகிறபடி, எல்லா விசுவாசிகளுக்கும் குணமாக்கும் வரங்கள் தரப்படாதது போலவே, எல்லா விசுவாசிகளும் அந்நியபாஷை பேசுவதுமில்லை! ஆகவே, பரிசுத்த ஜீவியத்திற்கோ அல்லது அவருடைய ஊழியத்திற்கோ "அந்நியபாஷையை" ஓர் அத்தியாவசியமான வரமாக தேவன் கருதவில்லை என்பதை இந்த வசனம் வெளிப்படையாக நமக்கு கூறுகிறது. அதற்கு மாறாக, இதை முக்கியமான வரமாக தேவன் கருதியிருந்தால் இந்த வரத்தை தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் கொடுத்திருப்பார்!.
*சத்தியம் எண்:- 9*
"நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைதாளம் போலவும் இருப்பேன்" என 1 கொரிந்தியர் 13:1 -ல் வாசிக்கிறோம்.
அன்பில்லாமல் அந்நியபாஷை பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை! அந்நியபாஷை பேசுபவர்களிடத்தில் காணப்படும் பெருமையும், அந்நியபாஷை பேசாதவர்களை இவர்கள் தாழ்வாக காணும்மனப்பான்மையும். இவர்களின் அன்பின் தாழ்ச்சியையே காட்டுகிறது. பேரோசை கொண்ட வெண்கல சப்ததிற்கு நாம் காதைப் பொத்திக் கொள்வதைப் போலவே, தேவனும் இவ்வித அன்பற்ற விசுவாசிகள் பேசும் அந்நியபாஷை சப்ததிற்கு தன் காதைப் பொத்திக் கொள்கிறார்!!
*சத்தியம் எண்;- 10*
"தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோம். அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்துபோம்" என 1 கொரிந்தியர் 13:8-10 வசனங்களில் வாசிக்கிறோம்.
கிறிஸ்துவின் வருகையில் நிறைவானது வரும்போது, அந்நியபாஷை பேசவேண்டிய அவசியமேயிருக்காது. பரலோகத்தில் வேத அறிவும், தீர்க்கதரிசனமும் எவ்வாறு தேவையில்லையோ அதைப் போலவே "அந்நிய பாஷையும்"தேவையாய் இருக்காது!
ஆகவே, இந்த பூமியில் நிலவும் குறைவான நிலைமைக்காக, அந்நியபாஷை தற்காலிகமாகத் தரப்பட்ட ஓர் வரமேயாகும். இந்த அந்நியபாஷை வரம் ஏன் இயேசுவிற்கு ஒருபோதும் தேவையாயிருக்கவில்லை என்பதற்கு இந்த வசனமே தெளிவான பதில் அளிக்கிறது. அவருடைய மனம் நிறைவான பரிசுத்தம் கொண்டதாயும், அவருடைய ஜீவியம் பிதாவோடு நிறைவான ஐக்கியம் கொண்டதாயும் எல்லா நேரங்களிலும் இருந்தபடியால்... குறைவான சூழலுக்குத் தேவையான அந்நியபாஷை இயேசுவிற்குத் தேவையற்றதாயிருந்தது!
(தொடரும்)
http://tamil.cfcindia.com/ta/article/the-truth-about-speaking-in-tongues
[25/09 1:56 pm] Jeyaseelan Bro VDM: *அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்*
*சத்தியம் எண்:- 11*
"அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியால், அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்" என 1 கொரிந்தியர் 14:2 -ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
இங்கு குறிப்பிடபட்ட அந்நியபாஷை வரம், பெந்தெகோஸ்தே நாளில் வெளிப்பட்ட வரத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது என்பதை வெளிப்படையாகவே காண்கிறோம். பெந்தெகோஸ்தே நாளில் அவர்கள் அந்நியபாஷையில் ஜனங்களிடத்தில் பேசினார்கள், அதை அவர்கள் விளங்கி கொண்டார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்ட அந்நியபாஷைவரமோ, மனுஷரிடத்தில் பேசுவதாயிராமல் தேவனிடத்தில் பேசுவதாயிருக்கிறது. இவ்வாறு தேவனிடத்தில் அவன் பேசுகிறபடியால், அவன் என்ன பேசுகிறான் என்பதை ஒருவனும் அறிந்து கொள்ள முடியாது!
*சத்தியம் என்:- 12*
"அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்" என 1 கொரிந்தியர் 14:4 -ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
ஒரு விசுவாசி ஆவிகுரியதன்மையில் ஸ்திரப்படுவதற்கு அந்நியபாஷை வரம் அவனுக்கு உதவுகிறது.
*சத்தியம் எண்:-13*
"நீங்களெல்லாரும் அந்நியபாஷைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்.... சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?" என பவுல் 1 கொரிந்தியர் 14:5,6 வசனங்களில் வினவினார்.
எல்லாரும் அந்நியபாஷை பேசும்படியே பவுல் விரும்பினார்! அதாவது, எல்லா விசுவாசிகளும் அந்நியபாஷை பேசவில்லை என்பதையே இந்த வசனம் மீண்டும் நமக்கு உறுதிப்படுத்தபடுகிறது!
இதே போன்ற விருப்பத்தை 1 கொரிந்தியர் 7:7 -ல் பவுல் குறிப்பிடும்போது "எல்லா மனுஷரும் என்னைப்போலவேயிருக்க (திருமணமாகாதிருக்க) விரும்புகிறேன்" எனக் கூறினார். இவ்வாறு திருமணமாகாமல் தனித்திருப்பதிலுள்ள சில நன்மைகளைப் பவுல் கண்டிருந்தார். அதேப்போல், அந்நியபாஷை பேசுவதாலுண்டாகும் நன்மைகளையும் பவுல் கண்டிருந்தார். ஆனால், தேவன் தன்னுடைய சர்வ ஞானத்தின்படி சில விசுவாசிகளுக்கு மட்டுமே "திருமணமாகாமல் தனித்திருக்கும்வரத்தைத்"தந்ததுபோல், "அந்நியபாஷை பேசும் வரத்தையும்" இவ்விதமே சில விசுவாசிகளுக்கே தேவன் தந்திருக்கிறார் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.
எல்லா விசுவாசிகளும் "பிரம்மச்சாரியாய்" இருக்கும்படி எதிர்பார்ப்பது எவ்வளவு மதியீனமோ, அதேபோல, எல்லா விசுவாசிகளும் அந்நியபாஷை பேசும்படி எதிர்ப்பார்ப்பதும் மதியீனமேயாகும்!
சபைகூட்டங்களில் தீர்க்கதரிசனம் சொல்லுவதே அதிக பயனுள்ளதாயிருக்கும். தீர்க்கதரிசனம் சொல்லுவதென்பது, ஒருவன் தேவனுடைய வார்த்தையின் மூலமாய் பிறருக்கு "பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகப் பேசுவதேயாகும்" (1 கொரிந்தியர் 14:3). இருப்பினும் சபையில் பேசப்படும் அந்நியபாஷை, வியாக்கியானம் செய்யப்பட்டால், அதுவும் தீர்க்கதரிசனத்தைப் போலவே சபைக்கு பக்திவிருத்தியுண்டாக்கும் என பவுல் கூறினார்.
(தொடரும்)
http://tamil.cfcindia.com/ta/article/the-truth-about-speaking-in-tongues
[25/09 1:56 pm] Elango: "அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்" என 1 கொரிந்தியர் 14:4 -ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
*ஒரு விசுவாசி ஆவிகுரியதன்மையில் ஸ்திரப்படுவதற்கு அந்நியபாஷை வரம் அவனுக்கு உதவுகிறது.*✅✅👆👆
[25/09 1:58 pm] Ebi Kannan Pastor VDM: விளக்கத்தில் அநேக பிழைகள் உள்ளன
[25/09 2:00 pm] Jp Solomon VDM: ஐயா
எனக்கு ஒரு சில கேள்விகள் இருக்கிறது
1.அன்னியா பாஷை எதர்க்கு கொடுக்கப்படுகிறது
2.அன்னியா பேசுகிறார்
அதன் அர்த்தத்தை
ஏன் புரிந்து கொள்ள முடிய இல்லை
3.ஒரு சிலர் அன்னிய பாஷை முன்று நான்கு வார்த்தை மட்டுமே
பேசுகிறார்கள்
4.ஒரு சிலர் தொடர்ந்து பேசுக் கொண்டே இருப்பார்கள்
5.பிசாசு பிடித்தவர்கள் கலும் அன்னிய பாஷை
பேசுகிறார்கள்
எப்படி ?
6. ஒரு சிலர் பரிசுத்த ஆவியை பெற்று இருப்பார்கள் ஆனால் அன்னியா பாஷை பேசுவது இல்லை
7.பரிசுத்த ஆவி பெற்றவர்களும் அன்னிய பேசுகிறார்கள்
பிசாசு பிடித்தவர்களும் அன்னிய பாஷை பேசுகிறார்கள் இதை எப்படி கண்டு கொள்வது
[25/09 2:02 pm] Elango: நல்ல கேள்விகள் சகோ...👍
[25/09 2:03 pm] Jeyaseelan Bro VDM: அப்படியா,,,,,ஐயா....
பிழையையும் அதற்குரிய சரியான விளக்கத்தையும் தயவாய்,,,,,பகிருங்கள்,,,,🙏
[25/09 2:13 pm] Thirumurugan VDM: கொரிந்து சபையாருக்க பரிசுத்த ஆவியானவர் சபைக்கு அருளிய அடையாள வரங்களில் ஒன்றான அந்நியபாஷைகளில் பேசின அவர்களின் அதீத ஆசைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் தடையாக இருக்கவில்லை. எனவேதான், அவர்கள் அந்நியபாஷைகளிலே பேசுவதற்கு சில விதிமுறைகளைக் குறிப்பிடுகிறார். அதாவது 1 கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம் 26 முதல் 40 வரையுள்ள வசனங்களில் ஏறக்குறைய 8 நிபந்தனைகளை பவுல் முன் வைக்கிறார். மீண்டும் கூறுகிறேன் உங்கள் சிந்தனைகளை சிதற விடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி மிக கவனமாக குறிப்பிடப்பட்டிருக்கிற எல்லா வேத வசனங்களையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வாசித்து தியானியுங்கள், தேவன் மெய்யாகவே உங்களுக்கு தமது வார்த்தையை சரியாக அறிந்துக் கொள்ள போதுமான வெளிச்சத்தை தருவார்.
இதோ 8 நிபந்தனைகள்:
👉 பக்திவிருத்திக்கு ஏதுவாக பேசப்பட வேண்டும் (14:26).
👉 இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் பேச வேண்டும் (14:27).
👉 ஒவ்வொருவராய் அதாவது ஒருவருக்குப்பின் ஒருவராய் பேச வேண்டும் ஒரே நேரத்தில் அல்ல (14:27, 30).
👉 அர்த்தத்தை சொல்லுகிறவன் இருந்தால் மட்டுமே பேசவேண்டும் பேசும்போது அதன் அர்த்தமும் சொல்லப்பட வேண்டும் (14:27, 28).
👉 இரண்டு அல்லது மூன்று பேர் தவிர மீதமுள்ளவர்கள் கூறப்படுகிற செய்தியை/தேவனுடைய வார்த்தையை நிதானிக்க வேண்டும் (14:29).
👉 ஸ்திரீகள் பேசாமல் இருக்க வேண்டும், சபையிலே பேசுகிறது அவர்களுக்கு அயோக்கியமானதாகும் (14:34, 35).
👉 இப்படிப்பட்ட முறைகளைக் ஒருவர் கடைப்பிடிக்கும்போது அந்நியபாஷை பேசுவதற்கு தடைபண்ணக் கூடாது (14:39).
👉 அந்நியபாஷைகளில் பேசும்போதும் சபையின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் ஒவ்வொருவரும் நல்லொழுக்கத்தையும் கிரமத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் (14:40).
மேற்கண்ட இந்த முறையைக் கைக்கொண்டு செயல்படுத்தியிருந்தால் அது வீணான பிரச்சனைகளையும் குழப்பத்தையும் அன்று கொரிந்து சபையிலே ஏற்படுத்தி இருந்திருக்காது.
அந்நியபாஷை வரம் இன்றும் இருக்கிறதா என்பது ஒருபுறம் இருந்தாலும் இன்று அந்நிய பாஷைகளிலே பேசுகிறவர்கள் மேற்கூறப்பட்டிருக்கிற நிபந்தனைகளின்படி தான் பேசுகிறோமா என்று ஆராய்ந்து பார்ப்பது மிக நல்லது.
[25/09 2:14 pm] Elango: அந்நியபாஷை வரம் இன்றும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகின்றீர்களே ஐயா... எந்த வரங்கள் எல்லாலாம் இப்போது இருப்பதாக நீங்கள் நம்புகின்றீர்கள்?
[25/09 2:14 pm] Thirumurugan VDM: தற்பரிசோதனைக்காக
நாங்கள் அந்நியபாஷைகளிலே பேசுகிறோம் என்று கூறிக் கொள்பவர்களும் தங்களை அந்நியபாஷைகளிலே பேசுகிறவர்களாக காண்பித்துக் கொள்ளுகிறவர்களும், கீழே கொடுக்கப்பட்டிருக்கிற கேள்விகளைத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வாசித்து தற்பரிசோதனை செய்தால் மெய்யாகவே மிக நலமாய் இருக்கும்.
👉 நான் பேசுகிறது ஏதோ ஒரு தேசத்தில் இன்றும் பேச்சு வழக்கில் இருக்கிற மனிதர்கள் பேசுகிற பாஷையா (குளோசா - glossa)?
👉 நான் பேசுகிற பாஷை எனக்குப் புரிகிறதா? (அதி.14).
👉 நான் பேசுவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டு வருகிறதா? (அப்.2:11).
👉 நான் பேசுவதைக் கேட்கிறவர்கள் தங்களுடைய பாவ வாழ்வை உணருகிறார்களா? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப் படுகிறார்களா? (அப்.2:14,37).
👉 நான் பேசுகிறபொழுது கேட்கிறவர்கள் புரிந்து கொள்வதற்காக அந்நியபாஷை மொழியாக்கம் செய்யப்படுகிறதா? (1கொரி. 14:5,13,28).
👉 நான் பேசுகிற அந்நியபாஷை மெய்யாகவே அர்த்தமுள்ள பாஷைதானா என்று இரண்டு அல்லது மூன்று பேரால் நிதானிக்கப்படுகிறதா?
[25/09 2:15 pm] Thirumurugan VDM: ஆரம்பிக்கும் முன்பே கடைத்தொகையைக் கேட்கிறீர்களே. கொஞ்சம் பொறுங்கள், பதிவிடுகிறேன்.
[25/09 2:16 pm] Elango: இல்லையென்றால் இன்றைய காலத்தில் வரங்களே ஏதும் இல்லையா?
[25/09 2:17 pm] Elango: ஆரம்பத்திலிருந்தே நீங்கள் அதை தானே சொல்லிவருகின்றீகள் பாஸ்டர்...😀
[25/09 2:22 pm] Thirumurugan VDM: அந்நியபாஷை ஒன்று மட்டும் தான் வரம் என்று கூறுகிறீர்களா? 25க்கும் மேற்பட்ட வரங்களின் பட்டியல் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுள் ஒன்றுதான் *அந்நியபாஷை*.
நான்கு அதிகாரங்களில் இவைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
1. ரோமர் 12
2. 1 கொரி. 12
3. எபேசியர் 4
4. பேதுரு 4
இந்த அதிகாரங்களில் குறிப்பிட்டுள்ள வரங்களை எண்ணி மொத்தமான வரங்களை பதிவிடுங்கள்.
[25/09 2:22 pm] Elango: என் நண்பர்கள் வேறு சில சபைகளுக்கு செல்கின்றனர்.. அவர்கள் சொல்லுவதுண்டு... வரங்கள் எதுவும் இக்காலத்தில் இல்லை.. எல்லாம் ஒழிந்துப்போய் விட்டது என்று...
[25/09 2:23 pm] Thirumurugan VDM: *1 கொரிந்தியர் 14 ஆம் அதிகாரத்தில் இருந்து சிந்திக்க வேண்டியவைகள்...*
👉 அந்நியபாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளம் (22).
👉 சபையின் பக்தி விருத்திக்கு ஏதுவாக பேசப்பட வேண்டும் (26).
👉 இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் பேச வேண்டும் (27).
👉 ஒருவர் பின் ஒருவராக பேச வேண்டும் (27).
👉 அர்த்தம் சொல்லப்பட வேண்டும் (27).
👉 அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் பேசக்கூடாது (28).
👉 ஸ்திரீகள் (பெண்கள்) பேசக்கூடாது (34,35).
👉 தீர்க்கத்தரிசன வரம் அந்நியபாஷையை விட மேலானது (1-4).
👉 அனைத்தும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் பேச வேண்டும் (40).
[25/09 2:24 pm] Thirumurugan VDM: தவறு.
[25/09 2:24 pm] Elango: அந்நியபாஷை?
[25/09 2:27 pm] Thirumurugan VDM: *இன்றைய காலத்தில் வரங்களே ஏதும் இல்லையா?* என்கிற கேள்விக்கு நான் கூறிய பதில், அந்நியபாஷை மட்டும் தான் வரமா என்று. அந்நியபாஷை வரம் இன்றும் உண்டா இல்லையா என்கிறதான கடைத்தொகைக்கு நாம் இன்னும் வரவில்லை.
[25/09 2:28 pm] Levi Bensam Pastor VDM: *அருமையான பதிவுகள்*🤝🤝🤝🙏
[25/09 2:29 pm] Prabhu Sasirekha Bro VDM: 1 கொரி 13
8 . அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.
[25/09 2:31 pm] Levi Bensam Pastor VDM: 1 கொரிந்தியர் 13:8-13
[8]அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.
[9]நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.
[10] *நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.*👇👇👇👇👇👇👇
[11]நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
[12]இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், *அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.*✅✅✅✅✅👍👍👍👍👍👍👍👍👍
[13]இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
[25/09 2:36 pm] Levi Bensam Pastor VDM: *நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம், இயேசு கிறிஸ்துவை முகமுகமாய்ப் பார்க்கும் போது அநேக காரியங்கள் ஒழிந்துபோம், நிறைவானவர் வரட்டும்🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝*
[25/09 2:38 pm] Prabhu Sasirekha Bro VDM: 1 கொரி 14
39 . இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்
[25/09 2:40 pm] Thirumurugan VDM: *“நிறைவானது” என்றால் என்ன?"*
அப்போஸ்தலனாகிய பவுல் 1கொரிந்தியர் 13-ஆம் அதிகாரம் முழுவதிலும் அன்பை பிரதானமான மையப்பொருளாக வைத்து அன்பினுடைய நிலையான தன்மையை விளக்கி கூறுகின்றபோது, மூன்று ஆவிக்குரிய வரங்களையும் (தீர்க்கதரிசனம், அந்நியபாஷை, அறிவு) சுட்டிக்காட்டி அவைகள் இல்லாமற்போகும் காலம் வரும் ஆனால் அன்பு மட்டும் தான் நிலைத்திருக்கும் என்கிறார்.
அந்தப்படியே, 8 முதல் 10 வரையுள்ள வசனங்களில், *“அன்பு ஒருக்காலும் ஒழியாது, தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறையுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்”* என்று கூறுகிறார்.
எனவே பரிபூரணமானது வரும்போது பரிபூரணமற்றது காணாமல் போய்விடும் *(“When the perfection comes the imperfect disappears”, NIV. “When the complete comes, that is the end of the incomplete”, J.B. Phillips’ translation).
அப்படியானால் *“நிறைவானது”* அல்லது *“பரிபூரணமானது”* என்பது என்ன என்கிற கேள்வி நம்மெல்லாருடைய மனதிலும் எழுகிறது. நிறைவானது எது என்பதை நாம் கண்டறிந்து விட்டால் பிறகு எப்பொழுது குறைவானது இல்லாமற்போனது என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இங்கே இதற்கான பதிலை வேத வசனத்தின் ஆதாரத்திலே ஆராய்வோம் வாருங்கள்.
(தொடரும்...)
[25/09 2:43 pm] Levi Bensam Pastor VDM: *இது தான் பரலோக பாஷை, பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நிய பாஷை பேசும் போது சாத்தானுக்கும் தெரியாது, தேவனை தவிர ஒருவருக்கும் தெரியாது, அது தான் இரகசியம்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 2 கொரிந்தியர் 12:2-3
[2]கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
[3]அந்த மனுஷன் *பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும்👆👇👆👇👆👇👆👇 வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.*
[25/09 2:49 pm] Thirumurugan VDM: நிறைவானதைக் குறித்து வேத ஆராய்ச்சியாளர்களிடையே வெவ்வேறு கருத்து பாங்குகள் உள்ளன, அவைகளை முதலில் குறிப்பிடுகிறேன் பின்பு எது சரியானது என்பதை ஆராயலாம். ஏறக்குறைய ஐந்து கருத்து பாங்குகள் உள்ளன, அவைகள் இதோ:
1. நிறைவானது என்பது *“கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை”* குறிக்கிறது. அவர் வருகையின் போது குறைவானது ஒன்றுமே இருக்காது.
2. நிறைவானது என்பது *“பரலோகத்தை”* குறிக்கிறது. பரலோகம் மட்டுமே நிறைவானது மற்றவை யாவும் நிறைவானதல்ல.
3. நிறைவானது என்பது வரப்போகிற *“நித்தியத்தை”* குறிக்கிறது. அங்கே சகலமும் பரிபூரணமாயும் நிரந்தரமாயும் இருக்கும்.
4. நிறைவானது என்பது *“விசுவாசிகளின் ஆவிக்குரிய முதிர்ச்சியை”* குறிக்கிறது. (இது ஒரு ஒப்புநோக்கு முறையிலான வாக்குவாதம். It is relative or supportive argument).
5. நிறைவானது என்பது *“தேவனுடைய வார்த்தையை”* குறிக்கிறது. அதாவது 66 புத்தகங்கள் அடங்கிய தேவனுடைய பரிபூரண வெளிப்பாடான பரிசுத்த வேதாகமத்தை குறிக்கிறது.
மேலே கூறப்பட்டிருக்கிற ஐந்து கருத்துகளில் எது சரியானது என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஐந்துமே சரியானது தான் என்பது போல தோன்றினாலும் ஐந்தில் ஒன்று மட்டுமே சரியானது. ஆகவே குழப்பத்திற்கு இடங்கொடாமல், குறிப்பிட்டிருக்கிற வேத ஆதாரங்களையும் கூறப்பட்டிருக்கிற கருத்துக் களையும் கருத்தோடு வாசித்து தியானியுங்கள்.
மேலே கூறப்பட்டிருக்கிற ஐந்து கருத்துகளில் *ஐந்தாவது தான் சரியானது*. உடனே மல்லுக்கட்டிக் கொண்டு பதிவுகளை போட வேண்டாம். காரணங்களை முழுவதும் வாசித்து விட்டு பிறகு பதிவிடுங்கள்.
அதாவது நிறைவானது என்பது *“பரிபூரணமான அல்லது நிறைவான தேவனுடைய வார்த்தையை”* குறிக்கிறது *(the completion of the written word of God)*. அதாவது 66 புத்தகங்கள் அடங்கிய தேவனுடைய பரிபூரண வெளிப்பாடான பரிசுத்த வேதாகமத்தை குறிக்கிறது.
[25/09 2:51 pm] Thirumurugan VDM: நாம் இங்கே இந்த நிருபம் (1 கொரிந்தியர்) எழுதப்பட்ட சந்தர்ப்பத்தையும், நோக்கத்தையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். பவுல் இந்த அதிகாரத்தில் அன்பையும் அதனுடைய மேலான தன்மையையும் குறித்து கூறுகிறார். அதற்காக அவர் கொண்டு வரும் ஒப்பீடு தான் மூன்று வரங்கள். இந்த வரங்கள் எல்லாம் ஒருநாள் ஒழிந்துபோம் ஆனால் அன்பு ஒருநாளும் ஒழிந்துபோகாது எனக் குறிப்பிடுகிறார்.
ஆகையால், இயேசு கிறிஸ்துவின் வருகையையோ, பரலோகத்தையோ, நித்தியத்தையோ, விசுவாசிகளின் முதிர்ந்த நிலையைப் பற்றியோ பவுல் குறிப்பிடவில்லை.
மாற்கு சுவிசேஷம் 16:20-ம் இதையேதான் உறுதிப்படுத்துகிறது: *“அவர்கள் புறப்பட்டுப் போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங் களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்.”*
தேவனுடைய வசனத்தை உறுதிப்படுத்துவதற்காக அடையாளங்கள் கொடுக்கப்பட்ட தென்றால், பரிபூரணமான நிலையிலே வசனம் கிடைத்தபிறகு அல்லது வசனம் உறுதிப்படுத்தப்பட்டபிறகு அடையாளங்கள் தேவையா? மெய்யாகவே அதனின் அவசியம் இல்லை.
எனவே “நிறைவானது” என்பது முழுமையான நிலையில் 66 புத்தகங்களாக பரிசுத்த வேதாகமம் நமக்கு கிடைத்ததையே காட்டுகிறது.
மேலும், இதையல்லாமல் (5-வது கருத்து) பிற கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இயலாத மற்றொரு காரணம், *“நிறைவானது”* என்கிற வார்த்தையின் கிரேக்க மொழி இலக்கணமும் அதன் பயன்பாடும் இதை நமக்கு தெளிவாக்குகிறது. *“நிறைவானது” (“டெலியோன்” teleion)* என்னும் பதம் மூல பாஷையிலே அதாவது கிரேக்க பாஷையிலே *“பலவின்பாலில்” (neuter gender)* பயன்படுத்தப் பட்டிருக்கிறது (adjective, neuter, singular, nominative). *“நிறைவானது” இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறிப்பதாக இருந்தால் ஆண்பாலில் தான் இலக்கண பயன்பாடு அமைந்திருக்க வேண்டும்*.
மேலும், நமக்கு தெரியும் பரலோகம் நம்மிடம் வராது நாம் தான் அங்கே போகவேண்டும். அதுமட்டுமல்லாமல் *“நிறைவானது” என்கிற பதம் புதிய ஏற்பாட்டிலே ஏறக்குறைய 18 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது; ஒரு இடத்திலேயும் இயேசுவின் வருகையைக் குறித்தோ அல்லது பரலோகத்தின் வருகையைக் குறித்தோ கூறவில்லை*.
[25/09 2:53 pm] Thirumurugan VDM: சபையானது குழந்தை பருவத்தில் இருந்த நாட்களில் அதுவும் புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் முழுவதும் இல்லாத நாட்களில் அற்புதங்களும் அடையாளங்களும் தேவைப்பட்டது; அதனால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்படவும் சபையிலே அங்கம் பெற்று ஒருமித்து கர்த்தருக்குள்ளாக வளரவும் அது வழி வகுத்தது.
புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் முழுமையாக இல்லாமல் இருப்பினும் அற்புதங்களும் அடையாளங்களும் கேட்போரை விசுவாசிக்கும்படி செய்தது. அதனால்தான் பவுல் *அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது* என்று கூறினார் (1கொரி.14:22).
இதில் நாம் குழப்பமடைவதற்கு ஒன்றுமில்லை, புதிய ஏற்பாட்டின் பிற வேதப்பாகங்களில் வரக்கூடிய *“நிறைவானது” “பூரணமானது” “பரிபூரணமானது”* ஆகிய பதங்களை வாசித்தால் நாம் அறிந்து கொள்ளலாம் அவையாவும் *“தேவனுடைய வார்த்தையை”* மட்டுமே குறிக்கிறது (யாக்கோபு 1:25; 2 தீமோ. 3:16-17).
மேற்கூறியவைகள் எல்லாவற்றிலிருந்தும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளும் சத்தியம் இதுவே:
*“நிறைவானது” வரும் போது என்பது கர்த்தருடைய வார்த்தை பரிபூரணமாக தொகுக்கப்படும் போது என்பதாகும். வெளி.22:18-20-ல், வாசிப்பதுபோல எழுதி தொகுக்கப்பட்டு இருக்கிற புஸ்தகத்தில் இருந்து இனி யாரும் கூட்டவும் கூடாது எடுக்கவும் கூடாது. உள்ளதை உள்ளபடியே விசுவாசித்து ஏற்றுக்கொண்டு கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். எபிரெயர் முதலாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களும் இதையே வலியுறுத்துகின்றன; பூர்வ காலங்களில் (பழைய ஏற்பாட்டு காலத்தில்) பங்குபங்காகவும் வகை வகையாகவும் கிடைக்கப்பெற்ற தேவனுடைய வெளிப்படுத்துதல் இந்த இறுதி நாட்களில் (புதிய ஏற்பாட்டு காலத்தில்) இயேசு கிறிஸ்துவில் பரிபூரணமானது.”*
[25/09 2:54 pm] Ebi Kannan Pastor VDM: உங்கள் சுய புரிந்துகொள்தலை உபதேசமாக கூறக்கூடாது.
1 கொரிந்தியர் 14:39
இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், *அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள*்.
[25/09 2:54 pm] Ebi Kannan Pastor VDM: உங்கள் சுய புரிந்துகொள்தலை உபதேசமாக கூறக்கூடாது.
1 கொரிந்தியர் 14:39
இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், *அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள*்.
[25/09 2:55 pm] Sam Jebadurai Pastor VDM: 1 Corinthians 13:8-10 (TBSI)
8 "அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்."
9 "நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது."
10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
நிறைவான வேதம் வந்து விட்டது.
நிறைவானது வரும் போது அறிவும் ஒழிந்து போகும். சரி அறிவு இல்லாதவர்கள் கையை தூக்குங்கள்.
[25/09 2:57 pm] Sam Jebadurai Pastor VDM: சகோதரர் திரு உங்கள் சபை,தலைமையகம் இவைகளை கூற இயலுமா?? இன்னும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்
[25/09 2:58 pm] Elango: பற்பல பாஷை என்பது பிறருக்கு புரிகிற பாஷை... அந்நிய பாஷை என்பது பிறருக்கு புரியாத பாஷை என்பது உங்கள் கருத்தா பாஸ்டர்..
எபி பாஸ்டர் ப்ளீஸ்👆
[25/09 3:04 pm] Levi Bensam Pastor VDM: *தேவன் தருகிறது நாம் வேண்டாம் என்று சொல்ல கூடாது*🙏
[25/09 3:05 pm] Thirumurugan VDM: உங்களது வியாக்கியான முறை தவறு, முழு பின்னணியையும் கருத்தில் கொண்டு தான் கூறவேண்டும். *தடை பண்ணாதிருங்கள்* என்று கூறப்பட்டால், உடனே அதை மட்டும் பிடித்து கொள்வதா? அதே அதிகாரத்தில் மற்ற வசனங்கள் கூறுவதை எடுத்துக் கொள்ள கூடாதா??? இது என்ன முறை? சொல்லுங்கள்!
[25/09 3:09 pm] Levi Bensam Pastor VDM: *இதை அதிகாரத்தில் அந்நிய பாஷையை பேச வேண்டும் என்று வாசிக்கிறமே*
[25/09 3:10 pm] Thirumurugan VDM: உங்களால் திருமறை கூறும் காரியங்களுக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை என்றால் உடனே bio data வேண்டும் என்று கேட்பீர்களா???
[25/09 3:11 pm] Ebi Kannan Pastor VDM: ஒழுங்குகள் சபையில் கடைபிடிக்க வேண்டியவைகள்
[25/09 3:12 pm] Sam Jebadurai Pastor VDM: போதுமான விளக்கம் பாஸ்டர் எபி மற்றும் மற்றவர்கள் கொடுத்து உள்ளனர். நான் இன்னும் அறிந்து கொள்ளவே சபை விவரம் கேட்டேன். உங்கள் biodata கேட்கவில்லை
[25/09 3:12 pm] Sam Jebadurai Pastor VDM: அறிவானலும் ஒழிந்து போகுமே...
[25/09 3:13 pm] Thirumurugan VDM: இதே அதிகாரத்தில் எப்படி பேச வேண்டும் என்றும் கூறி இருக்கிறதே... ஏன் அதை விட்டு விட்டீர்கள்????
[25/09 3:14 pm] Sam Jebadurai Pastor VDM: ஒழிந்து விட்டது என்பவருக்கு பேசவேண்டும் என கூறப்பட்டதை தானே முதலில் காட்ட வேண்டும்
[25/09 3:22 pm] Levi Bensam Pastor VDM: *அந்நிய பாஷை மட்டும் தான் வேண்டாமா,👇👇👇👇இதில் உள்ள எதுவுமே வேண்டாமா* 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 1 கொரிந்தியர் 14:26
[26] *நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, (1)உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், (2)ஒருவன் போதகம் பண்ணுகிறான், (3)ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், (4)ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், (5)ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.*
[25/09 3:23 pm] Thirumurugan VDM: *"நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன் என்று ஏன் பவுல் கூறினார்?"*
எல்லோருக்கும் அந்நியபாஷை வரம் அருளப்படவில்லை என்று ஏற்கனவே 1கொரி.12:30, 31-ல் கூறியிருக்கிற அப்போஸ்தலனாகிய பவுல், இங்கே 1கொரிந்தியர் 14:5-ல் நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன் என்று கூறியிருப்பது நமக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் தோன்றும்.
ஏன் பவுல் அப்படி கூறினார் என்று நமக்கு சிறிது குழப்பம் அடையத்தோன்றும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இருப்பினும் இதை புரிந்து கொள்வது அவ்வளவு கடினம் இல்லை. இது பவுலின் ஒரு சொந்த விருப்பம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதாவது *நீங்கள் எல்லோரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறீர்கள் என்றல்ல* மாறாக *நீங்கள் எல்லோரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்* என்றுதான் பவுல் கூறுகிறார்.
இங்கே புரிந்து கொள்வதற்கு அவ்வளவு சிரமம் ஒன்றுமில்லை. உதாரணமாக ஒரு நிறுவனத்தில் அதன் மேலாளர் அனைத்து தொழிலாளர்களையும் பார்த்து: *“நீங்கள் எல்லோரும் இந்த வருடம் ஒவ்வொருவரும் 10000000 ரூபாய் (ஒரு கோடி) வருமானம் ஈட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்”* என்று கூறுகிறார். மேலாளருக்கும் தொழிலாளர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும் அது இயலாத காரியம் என்று; காரணம் மாதம் ஒன்றுக்கு 8 லட்சத்திற்குமேல் சம்பாதித்தால் தான் ஒரு வருடத்தின் முடிவில் ஆண்டு வருமானமாக ஒரு கோடி ரூபாய் ஈட்டமுடியும். இருப்பினும் தனது விருப்பமாக மேலாளர் அப்படி தெரிவிக்கிறார்.
அதேபோல 1கொரிந்தியர் 12:30-ஆம் வசனத்தில் எல்லோரும் அந்நியபாஷையில் பேசவில்லை என்றும் எல்லோருக்கும் அந்நியபாஷை வரம் அருளப்படவில்லை என்றும் கூறிய பவுலுக்கு மிக நன்றாக தெரியும் எல்லோரும் அந்நியபாஷைகளில் பேசமுடியாது என்று, இருப்பினும் தனது விருப்பமாக இதை தெரிவிக்கிறார். அதனால் தான் இது பவுலின் ஒரு சொந்த விருப்பம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதாவது *நீங்கள் எல்லோரும் அந்நியபாஷைகளைப் பேசியிருந்தீர்கள் அல்லது பேசுகிறீர்கள் என்றல்ல; மாறாக நீங்கள் எல்லோரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்* என்றுதான் பவுல் கூறுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் ஏற்கனவே இதே நிருபத்தில் எல்லோரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார் (1கொரி.7:7,8). இதன் அர்த்தம் கொரிந்து சபையில் எல்லோரும் விவாகம் பண்ணாதவர்கள் என்பதல்ல; மாறாக விவாகம் பண்ணாதவர்களும் கைம்பெண்களும் (விதவைகளும்) விவாகத்தில் பிணையப்பட்டு தேவனுக்காக தேவனுடைய காரியங்களில் அதிக கவனமில்லாமையில் போய்விடாதபடிக்கு பவுல் அப்படி கூறினார்.
அங்கே தானே 1கொரி.7:7-ல் பவுல், *“ஆகிலும் அவனவனுக்குத் தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு”* என்று கூறுகிறார். அதாவது பவுல் நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன் என்று கூறினாலும், எல்லோருக்கும் ஒரு அல்லது ஒரே குறிப்பிட்ட வரம் அளிக்கப்படுவதில்லை. ஆவியானவர் தமது விருப்பத்தின்படி சிலருக்கு சில வரங்கள் என்று பகிர்ந்தளிக்கிறார் (1கொரி.12:8,9,10,11). கவனமாய் வாசித்துப்பாருங்கள், எல்லோருக்கும் ஒரு வரம் என்று அல்ல மாறாக ஒருவனுக்கு அல்லது வேறொருவனுக்கு என்று தான் வாசிக்கிறோம்.
[25/09 3:33 pm] Elango: anniyapaasai avisuvaasigalukku enraal... paul En sollukiraar "ellorum anniyapaasai peasa veanddum enru virumbugiren endru"?
[25/09 3:35 pm] Elango: பவுல் பரிசுத்த ஆவியானரின் உந்ததலின் நிருபங்களை எழுதுகிறாரா? அல்லது சுயமாக எழுதுகிறா? பரிசுத்த ஆவியானவருக்கு 66 புத்தகங்களும் தெரியாதா?
[25/09 3:36 pm] Elango: தவறான கருத்து... அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது... பிறகு ஏன் பவுல் சொல்லுகிறார். "எல்லோலோரும் அந்நிய பாஷையை பேசு விரும்புகிறேன்" என்று?
[25/09 3:38 pm] Elango: அந்த பாயிண்ட்ஸ் அனைத்துதும் தவறானது..
[25/09 3:42 pm] Thirumurugan VDM: பவுலுக்கு எல்லாம் தெரியும்...என்பதை குறிப்பிட்டு கூறினேன்... ஆவியானவரிடம் செல்ல வேண்டாம்.
[25/09 3:44 pm] Thirumurugan VDM: அவிசுவாசிகளுக்கு அந்நியபாஷையா???
[25/09 3:45 pm] Elango: அந்நியபாஷையை பேசுகிறவன் மனுசரித்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறவன் அவிசுவாசியா? தேவனிடத்தில் மற்ற பாஷையில் பேசினால் அவன் அவிசுவாசியா?
[25/09 3:45 pm] Ebi Kannan Pastor VDM: 1 கொரிந்தியர் 12:10
[10]வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், *வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை* வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
[25/09 3:45 pm] Elango: அவிசுவாசிகளுக்கு ஏன் அந்நியபாஷை தேவை என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?
[25/09 3:47 pm] Elango: அந்நிய பாஷை, தனக் கும் தேவ னுக்கும் தெரியப் பேசுவ தாகும். குற்றம் பிடிக்குகும், கிண்டல் பண்ணும், பரியாசம் பண்ணுணுபவர்களுக்கும் அந்த பாஷை புரிய வேண்டுமென்பது அவசியமில்லை...
[25/09 3:50 pm] Levi Bensam Pastor VDM: 1 கொரிந்தியர் 1:18-23
[18], *சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, 🤔🤔🤔🤔இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.*👍👍👍👍
[19]அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.
[20] *ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?*
[21]எப்படியெனில், *தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.*
[22] *யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;*
[23]நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.
[25/09 3:52 pm] Elango: *என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் - ஒருவரின் சாட்சி*
2000ம் வருடம் சில நாட்களாக ஒரு மனதில் ஒரு சந்தேகம். தேவன் என்னை கண்டுகொள்வது இல்லையே, அப்படியானால் நான் ஒருவேளை தேவனுடைய பிள்ளை இல்லையோ என்று ஒரு எண்ணம் என்னை வாட்டியது. அடுத்த நாள் நான் வழக்கமாக வேலைக்குச் செல்ல ஜெபித்துவிட்டு என்னுடைய காரில் சென்றேன். பொதுவாக தெற்கு கலிஃபோர்னியாவில் ரோட்டின் ஓரத்தில் ஜனங்களை அதிகமாக காணமுடியாது (எல்லாரும் காரில் செல்வதால்). ஆனால் அன்று மேகமூட்டமாக இருந்தது.
ரோட்டின் ஓரத்தில் ஒருவர் நன்கு உடையணிந்து நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏதோ உதவி தேவைப்படுமோ என்று எனக்கு தோன்றியது. அவரும் தனக்கு முன் செல்லும் வாகனங்களை ஏதோ எதிர்பார்ப்புடன் நோக்கினார். நான் உடனே காரை நிறுத்தி அதை பின்னே-செல்லும்படி(Reverse) செய்து அவரிடம் நிறுத்தி "Do you need any help?" (ஏதேனும் உதவி தேவையா?) என்று கேட்டேன். அவர் ஆம் வீட்டுக்கு போகவேண்டும். பேருந்து இனி வர மணிநேரம் ஆகும் என்றார். உடனே நான் வாருங்கள் நான் கொண்டுபோய்விடுகிறேன் என்றேன்.
நாங்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, தான் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் செய்பவர் என்று சொல்லிவிட்டு, என்னுடைய காரில் இருந்த "God cares for you" (தேவன் உங்களைக் குறித்து அக்கறை உள்ளவராயிருக்கிறார்) என்று பெரிதாக ஒட்டப்பட்டிருந்த வாசகத்தைப் பார்த்து, நீங்கள் தேவனுடைய பிள்ளையா என்றார். நான் ஆம் என்றேன். உடனேயே அவருக்கு ஒரு மகிழ்ச்சி, *உடனே தன்னுடைய இரு கரங்களை உயர்த்தி தேவனை துதிக்க ஆரம்பித்தார். அடுத்த சில வினாடிகளில் அவர் பரிசுத்த ஆவியினால் நிரம்பி அந்நிய பாஷைகளில் பேசினார்.*
எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. மேலும் அவர்: தேவனுடைய பிள்ளை ஒருவரை கொண்டுவந்து எனக்கு உதவிசெய்யும் ஆண்டவரே என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்ததாக கூறினார். தான் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவுக்கு வந்ததாகவும் கூறினார். *ரஷ்யாவிலே வீட்டிலே நானும் என் மனைவியும் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அந்நிய பாஷையுடன் பெற்றோம் என்றார்.*
ரஷ்யாவில் யாரும் இவருக்கு போய் ஜெபிக்கவில்லை தேவனே இவரை பரிசுத்த ஆவியால் நிரப்பியிருக்கிறாரே என்று எண்ணி ஆச்சரியமடைந்தேன். நானும் நாங்கள் எப்படி இந்துக்களாயிருந்து இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தோம் என்று எங்களுடைய சாட்சியையும் சொன்னேன்... நான் அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்து பைபிளை திறந்து இவைகளை நினைத்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய விழிகளில் சில கண்ணீர் துளிகள்; காரணம் தற்செயலாக வேதத்திலிருந்து தேவன் ஒரு வசனத்தைக் கொடுத்தார் "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்". (ரோமர் 8:14) இதுவும் தேவன் பேசும் வழிகளில் ஒன்று.
[25/09 3:58 pm] Elango: பிறகு எப்படி விசுவாசிகள் பேசும் அந்நிபாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளமாகிறது.. இதுவும் வேத புரட்டு என்று நானும் பதிலுக்கு பதில் சொல்லலாமா ஐயா?
[25/09 4:00 pm] Elango: அந்நிய பாஷை பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாக பேசுகிறான் என்று தேவ ஆவியினால் பவுல் எழுதும்போது...இதை எப்படி புரிந்துக்கொள்ளுகிறீர்கள் ஐயா?
[25/09 4:01 pm] Sam Jebadurai Pastor VDM: இந்த குழுவில் அந்நிய பாஷைக்கு எதிரானவர்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
[25/09 4:02 pm] Elango: ஆமாம் கண்டிப்பாக பதிவிடுங்கள்... அமைதியாகயிருக்க வேண்டாம்..
[25/09 4:03 pm] Elango: *நாம் அந்நியபாஷை பேசுவதால் நமக்கு ஏற்படும் காரியங்கள்*
- தேவனோடு இரகசியம் பேசலாம்
- தேவனுடைய பெலன் நம்முடன் இருக்கும்
- தேவனுடைய பிரசன்னம் நம்முடன் இருக்கும்
- பரிசுத்தத் ஆவியானவர் ஏவுதலும் உணர்த்துதலும் எப்பொழுது இருக்கும்
[25/09 4:04 pm] Elango: *நாம் அந்நியபாஷை பேசும் பொழுது அந்த பாஷையின் அர்த்தம் பெரும்பாலும் நமக்கு தெரியாது ஆனால் உண்மையாகவே
நாம் நமக்கு இருக்கும் பொல்லாத குணங்கள் மற்றும் நமக்கே தெரியாமல் இருக்கும் சில அசுத்த காரியங்களை பரிசுத்த ஆவியானவர் தாமே நம் வாயினால் தேவனோடு மன்றாடி நமது பரிசுத்த வாழ்க்கைக்கு தேவையானதை நாம் பெற்று கொள்ள உதவி செய்கின்றார்*
[25/09 4:04 pm] Elango: நாம் அந்நியபாஷை அதிகம் பேசும்பொழுது தேவனுடைய பெலன் நம்மில் அதிகமாய் இருப்பதை உணரமுடியும்
அதாவது அதை தெம்பு என்று கூட கூரலாம் அந்த அளவுக்கு இருக்கும் மற்றும் எந்த தேவைகள் இருந்தாலும் அந்த தேவைகள் நமக்கு ஒரு கவலையாகவே தெரியாது💪💪💪💪💪💪💪💪💪
[25/09 4:14 pm] Dinesh 3 VDM: வேதம் சொல்வதை நாம் செய்யவேண்டும் நீங்கள் அந்நியபாஷை பேசுங்கள் அதை சபையிலே பேசினால்.தயவுசெய்து உங்களால் அர்த்தஞ்சொல்ல முடியுமா.1கொரி.14:28
[25/09 4:15 pm] Dinesh 3 VDM: தயவு செய்து விளக்குங்கள்
[25/09 4:16 pm] Levi Bensam Pastor VDM: *அந்நிய பாஷை மட்டும் தான் வேண்டாமா,👇👇👇👇இதில் உள்ள எதுவுமே வேண்டாமா* 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 1 கொரிந்தியர் 14:26
[26] *நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, (1)உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், (2)ஒருவன் போதகம் பண்ணுகிறான், (3)ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், (4)ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், (5)ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.*
[25/09 4:18 pm] Levi Bensam Pastor VDM: 1 கொரிந்தியர் 14:2,4,39-40
[2]ஏனெனில், *அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.*
[4] *அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.*
[39]இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், *அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.*
[40]சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.
[25/09 4:18 pm] Thirumurugan VDM: *“அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோம்”
என்பதின் அர்த்தம் என்ன?*
அப்போஸ்தலனாகிய பவுல் 1கொரிந்தியர் 13-ஆம் அதிகாரம் முழுவதிலும் அன்பை பிரதானமான, நிலையான காரியமாக மேற்கோள் காட்டி கூறும்போது, மூன்று ஆவிக்குரிய வரங்களை மட்டும் சுட்டிக்காட்டி அவைகள் இல்லாமற்போகும் அன்பு மட்டும் தான் நிலையானது என்கிறார். 1கொரி. 13:8-10-ல், “அன்பு ஒருக்காலும் ஒழியாது, தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நியபாஷை களானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறையுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்” என்று கூறுகிறார். அப்படியானால், “ஓய்ந்துபோம்” என்பதின் அர்த்தம் தான் என்ன? எப்பொழுது அந்நியபாஷை ஓய்ந்துபோம்? என்கிறதான கேள்விகள் நம் சிந்தனைகளில் எழுவது சாத்தியமே. இவைகளைக் குறித்து நாம் இங்கே ஆராய்வோம்.
நிலைத்திருக்க கூடியதும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இல்லாமற்போக கூடியதுமாகிய காரியங்களை இந்த அதிகாரத்திலே (1கொரிந்தியர் 13) பவுல் குறிப்பிடுவதை நாம் அறிந்துகொள்ளலாம். அவைகளில், பவுல் *நிலைத்திருப்பதாக மூன்று காரியங்களையும் (விசுவாசம், நம்பிக்கை, அன்பு – வசனம் 13)*, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு *இல்லாமற்போக கூடியதுமாக மூன்று காரியங்களையும் (தீர்க்கதரிசனம், அந்நியபாஷை, அறிவு – வசனம் 8)* குறிப்பிடுகிறார்.
தீர்க்கதரிசனம் மற்றும் அறிவு “ஒழிந்துபோம்” என்று கூறப்பட்டி ருக்கிறது; இவை எடுத்துரைப்பது என்னவென்றால் தீர்க்கதரிசன நிறை வேறுதலும், சத்தியத்தை அறிகிற அறிவுமாகும்.
(“if there are prophecies they will be fulfilled and done with…if there is knowledge it will be swallowed up in truth” 1Cor. 13:8).
பவுல் இங்கே அந்நியபாஷையைக் குறித்து கூறும்போது வேறே பதத்தை உபயோகிக்கிறார். அதாவது தீர்க்கதரிசனம் மற்றும் அறிவை குறித்து கூறும்போது *“ஒழிந்துபோம்”* என்றும் அந்நியபாஷையைக் குறித்து கூறும்போது *“ஓய்ந்துபோம்”* என்றும் குறிப்பிடுகிறார். கிரேக்க மொழியில் *“பாசோண்டாய்” (pausontai)* என்கிற வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கிறது; *இந்த பதம் செய்வினையும் அல்ல செயப்பாட்டு வினையும் அல்ல மாறாக இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவினையாக வருகிறது (neither active voice nor passive voice but middle voice)*.
இந்த பயன்பாடு அபூர்வம், இது கிரேக்க மொழியின் சிறப்பாகும். இங்கே பயன்படுத்தப்பட்ட வார்த்தையின் அர்த்தம் *“நிரந்தரமாக நின்று போகும் அல்லது செயலிழந்து போகும்”* என்பதாகும். அதாவது *“தன்னிச்சையாகவே அது நின்று போகும் மீண்டும் எழுந்திராது”* என்பது பொருள்.
(Pauo-means “to cease permanently”. It implies that when tongues ceased, they would never start up again. Pauo, however, appears in the Greek middle voice, which here seems to signify a reflexive action: The gift of tongues will “stop itself” or “Tongues shall cut themselves off”. It is very interesting to note that here for the tongues, Paul has used another word and also changed the voice. It is the future middle form, “pausontai” meaning “shall stop (themselves)” or “shall cease (themselves)”. Thus “pausontai” very strongly implies that the tongues will stop by themselves, without the activity of an outside agency; they would never start up again and “it shall cut themselves off”.)
இப்பொழுது நீங்கள் “ஓய்ந்துபோம்” என்பதின் அர்த்தத்தை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
[25/09 4:22 pm] Dinesh 3 VDM: பக்தியாக நடக்கவில்லைஅதுதான் இங்கே கேள்வி
[25/09 4:23 pm] Dinesh 3 VDM: பேசுகிறவர்கள் மட்டுமா பரிசுத்த ஆவியானவரை பெற்றுள்ளார்கள்
[25/09 4:24 pm] Dinesh 3 VDM: பேசாதவர்களை ஏன் குறை சொல்லவேண்டிம்?
[25/09 4:27 pm] Dinesh 3 VDM: அதற்க்குதான் பவுல் சொன்னார் அன்பாய் இருங்கள் என்று அனபு சகலத்தையும் தாங்கும் எல்லாம் அழிந்தாலும் அனபு அழியாது
[25/09 4:27 pm] Elango: எல்லா வரங்களும் ஓய்ந்துப்போகும் சரிதான் அது இப்போதே ஓய்ந்துவிட்டாதா ஐயா?
[25/09 4:28 pm] Elango: யாரும் பேசாதவர்களை குறை சொல்லலையே ப்ரதர்.
பேசாதவர்கள் தான் பேசுபவர்களை குறை சொல்லுகின்றனர்
[25/09 4:29 pm] Jp Solomon VDM: ஏன் அந்நியபாஷை கிடைக்க வில்லை
[25/09 4:31 pm] Dinesh 3 VDM: என்னுடைய கேள்ளி?1கொரி.14:5
[25/09 4:31 pm] Thirumurugan VDM: எல்லா வரங்களும் அல்ல வேத புரட்டு வேண்டாம் விளையாட்டும் வேண்டாம்...வசனம் கூறுவதை கூறுங்கள்.
[25/09 4:32 pm] Elango: தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவார்.
[25/09 4:33 pm] Elango: இப்போது எந்த வரம் ஓய்ந்துவிட்டது நீங்கள் வேத புரட்டுவதாக தெரிந்துக்கொள்ளலாமா ஐயா?
[25/09 4:35 pm] Elango: எந்த வரங்களெல்லாம் ஓய்ந்துவிட்டது... எந்த வரங்களெல்லாம் இன்னும் இருக்கிறது.. சொல்லுங்கள் ஐயா... நீங்கள் மட்டும் வேதத்தை புரட்டினால் *வேத புரட்டு* என்று சொல்லலக்கூடாதா ஐயா? பிறருக்கு நீங்கள் மட்டும் தான் அந்த வார்த்தையை சொல்லுவீர்களா? இரண்டு முறைக்கு மேலாக வேத புரட்டு, குழுப்பம் என்று இன்றைறைக்கு பதிவிட்டுள்ளீர்கள்...
[25/09 4:35 pm] Jp Solomon VDM: 26 How is it then, brethren? when ye come together, every one of you hath a psalm, hath a doctrine, hath a tongue, hath a revelation, hath an interpretation. Let all things be done unto edifying.
26 நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
[25/09 4:40 pm] Jp Solomon VDM: 7 But the manifestation of the Spirit is given to every man to profit withal.
7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
7 t'lH QlSglgk^™ @šlijs‚ YedlCrA selfk YeSulwr^j'luj rh\\ds~mk™;
8 For to one is given by the Spirit the word of wisdom; to another the word of knowledge by the same Spirit;
8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
8 Qgk^™ @šlijrlH Ðlr^js‚ ivrikA asMlgk^™ LSf @šlijrlH egjÒlr^js‚ ivrikA rh\\ds~mk™‹
9 To another faith by the same Spirit; to another the gifts of healing by the same Spirit;
9 வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
9 Sisylgk^™ LSf @šlijrlH ijCIlcA" asMlgk i™ LSf @šlijrlH SglzCl#jdxksm igA‹
10 To another the working of miracles; to another prophecy; to another discerning of spirits; to another divers kinds of tongues; to another the interpretation of tongues:
10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
[25/09 4:42 pm] Jp Solomon VDM: 19 Again, think ye that we excuse ourselves unto you? we speak before God in Christ: but we do all things, dearly beloved, for your edifying.
19 நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.
[25/09 4:42 pm] Loay VT1: சாகாதவரை செத்தவர் சொல்லி, இந்த பதம் அந்த பதம் என்று சொல்லுவது இப்போது பார்க்கிறேன்.
[25/09 4:44 pm] Jp Solomon VDM: 12 For the perfecting of the saints, for the work of the ministry, for the edifying of the body of Christ:
12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
[25/09 4:44 pm] Loay VT1: சாகாதவரைக்கூட செத்துட்டார் என்று எபிரேய பதம், கிரேக்க பதத்தை காட்டி சாகாத ஒருவரை நீங்கள் அடக்கம் செய்தாலும் ஆச்சரியமில்லை...😁
[25/09 4:46 pm] Elango: செத்தவர்களை ஆண்டவர் எழுப்பினால், இன்று சிலர் உயிரோடிப்பவர்களை செத்துதுட்டார் என்று சொல்லுவதை பார்க்கிகிறேன்... *இது வரைக்கு ஒரு வரமும் சாகவில்லை உணர்க*
[25/09 4:46 pm] Rooban Pastor VDM: அப்படி என்றால் வேதாகமம் நீங்கள் பேசுகிற மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்😁🤔
[25/09 4:49 pm] Loay VT1: என்னங்க சொல்றறது.. அநேக பரிசுத்தவான்கள் பேசும் அந்நியபாஷையை...இவர் அந்த பதம் இந்த பதம் என்று சொல்லி உயிரோடிருக்கும் ஒருவரை செத்துட்டார் என்று எப்படி சொல்லலாம். அன்றைக்கு ஆண்டவர் செத்தவர்களை உயிரோடெழுப்பினார்.. இன்றைக்கு உயிரோடிருக்கும் வரங்களை செத்துட்டு என்க்கிகிறார்... இது தான் ஞானமோ.... உங்கள் ஞானம் உங்களோடு சாகுமோ?
[25/09 4:50 pm] Loay VT1: நீங்க என்ன சொல்றீங்க... அவர் செத்துட்டாரா? உயிரோடிக்கிறாரா?
[25/09 4:55 pm] Rooban Pastor VDM: சகோதரரே ஞானம் என்பது வேறு, அவர் கூறின கருத்து வேதத்தின் அடிப்படையில் இல்லாமல் உள்ளது என்கிறீர்களா இல்லை மூல மொழியில் அவை தவறு என்கிறீர்களா இங்கு கருத்துக்களை வைத்து முடிவு எடுக்க முடியாது வேத வசனத்தை அடிப்படையாக வைத்து தான் முடிவு எடுக்க முடியும் ஏனென்றால் நம் வேத தியானக் குழு சபை பாகுபாடில்லாமல் அனைவரையும் இணைத்துள்ளது சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக அவர் கூறிய கிரேக்க எபிரேய பதம் தவறு என்றாள் கூறுங்கள் நன்றி
[25/09 4:57 pm] Rooban Pastor VDM: யார் செத்து விட்டாரா என்று கேட்கிறீர்கள் சகோதரரே
[25/09 5:05 pm] Thirumurugan VDM: 1 கொரி. 13 ல் பவுல் குறிப்பிட்ட மூன்று வரங்களும் அல்லது காரியங்களும் இப்பொழுது நிலவில் இல்லை.
[25/09 5:05 pm] Sam Jebadurai Pastor VDM: அறிவும் இல்லை அப்படி தானே???
[25/09 5:08 pm] Thirumurugan VDM: ரொம்ப நல்லா இருக்கு உங்க பதில் தொடருங்கள்.
[25/09 5:08 pm] Charles Pastor VDM: அந்நிய பாஷையில் இரண்டு வகை இருக்கிறது
1). மனிதர்களுக்காக மனிதர்களிடத்தில் பேசுவது
2). ஒவ்வொருவரும் தங்களுக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு தேவனிடத்தில் பேசுவது
இங்கு மனிதனுக்காக பேசக்கூடிய அந்நியபாஷை களுக்கு வியாக்கியானம் அவசியம் இல்லை என்றால் அதன் அர்த்தம் வேறாக இருக்கும் அதற்குத்தான் வியாக்யானம் தேவை.
ஆனால் தேவனிடத்தில் பேசுவதர்க்கு வியாக்யானம் அவசியம் இல்லை தேவன் யாவற்றையும் அறிந்தவர்.
அந்நிய பாஷை பேசுகிறவன் தேவனிடம் ரகசியம் பேசுகிறான் *ரகசியம் என்பது இரண்டு நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று மூன்றாம் நபருக்கு அது தெரிய வேண்டுமானால் அதற்கு பெயர் ரகசியம் அல்ல*
[25/09 5:12 pm] Thirumurugan VDM: knowledge (அறிவு) என்பதை என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நமக்கு இருக்கிற அறிவா??? அதுதான் இங்கே கூறப்பட்டிருக்கிறது என்று நினைத்தால். தவறு.
[25/09 5:12 pm] Sam Jebadurai Pastor VDM: அறிவு சார்ந்த வரங்கள் இல்லை அப்படி தானே
[25/09 5:13 pm] Loay VT1: அவர் சொல்லுகிறார் அந்நியபாஷை ஓய்ந்துவிட்டதாம். அந்நிய பாஷை என்பது இப்போது இல்ல்லலையாம். அவருடைய எபிரேய கிரேக்க பதத்தை நீங்கள் ஏற்க்கும்பட்சத்தில் நீங்களும் அந்நியபாஷை ஓய்ந்துவிட்டது என்ற் நம்புகின்றீர்களா?
[25/09 5:13 pm] Loay VT1: பூனை கண்ணை மூடிக்கொண்டால், அது என்ன சொல்லுகிறதோ அது தான் சரியாம்.
[25/09 5:13 pm] Loay VT1: வேதத்தை புரட்ட அறிவு வேண்டுமல்லவா அதனால் அறிவு ஓய்ந்துபோகவில்லை என்பார்.
[25/09 5:15 pm] Loay VT1: ஓ அந்த குழுவில் ஞானத்தை பற்றி தியானத்தை தொடங்கிவிட்டீர்கள் தானே.. நாம் ஞானத்தை பற்றி அங்கே பேசலாம்.
[25/09 5:15 pm] Thirumurugan VDM: *அறிவானாலும்* என்று கூறப்பட்டது என்னவென்று ஆராயாமல்... உங்களுக்கு இப்போ அறிவில்லையா என கேட்காதீர்கள்!!!
[25/09 5:16 pm] Thirumurugan VDM: அப்போ நீங்கள் கண்களை மூடாத பூனையோ????
[25/09 5:17 pm] Sam Jebadurai Pastor VDM: γνῶσις -அறிவு தானே..அதை ஒரு வாரமாக தான் பார்க்க வேண்டுமா என்ன??
[25/09 5:18 pm] Loay VT1: ???? நாலு கேள்வியா கோபம் வேண்டாம். ? ஒன்று போதும்.
[25/09 5:21 pm] Rooban Pastor VDM: சகோதரரே அந்த கிரேக்க எபிரேய பதங்கள் தவறு என்றால் அவரிடம் நேரடியாக அல்லது பொதுவாக தவறு என்று குறிப்பிட்டு பதிவிடுங்களேன் அப்படி உங்களுக்கு அந்த மொழியை அடிப்படையாக வைத்து விளக்கத் தெரியவில்லை என்றால் அதனை விலக்கி கூறுபவர்களை உங்கள் கருத்துக்கு இசைவாகச் செல்ல வேண்டுமென்று இழுக்காமல் வேதத்தின் படி அவரிடம் பேசுங்களேன் அதைவிட்டுவிட்டு அந்நிய பாஷையை ஒரு நபராக பாவித்து பேசுவது சரியானதா
[25/09 5:22 pm] Thirumurugan VDM: *1 Corinthians13:8:*
Following this elaboration of the preeminence (13:1-3) and perfections (13: 4-7) of love, Paul concluded with a discussion of its permanence (13: 8-13).
Love never fails, in the sense it will never come to an end. Positively stated, *it is eternal*. But this is not true of the spiritual gifts. Some of the gifts were *foundational (e.g., prophecies and knowledge; Eph. 2:20)* and *confirmatory (e.g., tongues; 2 Cor. 12:12; Heb. 2:4)*.
Every gift is linked in some way to building up the church to maturity—some (prophecy, knowledge, tongues) functioning in the early years of the Church Age and others continuing on till the church is perfected.
When that perfection is achieved, the gifts will have served their purposes and will be rendered obsolete. But this will not happen to love.
[25/09 5:23 pm] Loay VT1: நீங்கள் தான் என்ன சொல்றீங்க..அந்நிய பாஷை ஓய்ந்துவிட்டதா?
[25/09 5:23 pm] Rooban Pastor VDM: சகோதரரே ஞானத்தைப் பற்றி முதலில் பேசியது தாங்களே அந்த தியானத்தைப் தொடங்கியதும் தாங்களே அதை புரிந்துகொள்ளுங்கள் நன்றி
[25/09 5:23 pm] Charles Pastor VDM: 4 தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு. அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், *அறிவும் பெருகிப்போம் என்றான்.*
தானியேல் 12
[25/09 5:24 pm] Charles Pastor VDM: கடைசிக் காலத்தில் தான் மனிதனுடைய அறிவு பெருகிப் போகும் என்று வசனம் கூறுகிறது
[25/09 5:25 pm] Thirumurugan VDM: 1 Corinthians 12:8
*"ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்*
அப்போ இந்த வசனம் என்னதான் சொல்லுகிறது... நமக்கு இருக்கிற சாதாரண அறிவா???
[25/09 5:26 pm] Rooban Pastor VDM: அதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் தர இயலுமா
[25/09 5:27 pm] Loay VT1: அதை பற்றி எனக்கு தெரியும். இப்போது புரிகிறது நீங்களும் அந்நியபாஷை ஓய்ந்துவிட்டது என்று நம்புகின்றீர்கள்.
[25/09 5:34 pm] Rooban Pastor VDM: பதில் தர இயலவில்லை என்பதால் சற்று நேரத்தில் தீர்க்கதரிசி ஆகிவிட்டீர்களா சகோதரரே
[25/09 5:34 pm] Thirumurugan VDM: அப்படியென்றால் நீங்களும் யாருக்கும் புரியாத அந்நியபாஷையை தினமும் தேவனோடு பேசுகிறீர்கள். சபாஷ்!!! ஆண்டவருக்கு புரிந்தால் சரி!!!
[25/09 5:35 pm] Rooban Pastor VDM: உங்கள் தீர்க்கதரிசனம் தவறானது
[25/09 5:35 pm] Sam Jebadurai Pastor VDM: Ephesians 3:19 (TBSI) "அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்."
Romans 15:14 (TBSI) "என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்."
1 Corinthians 1:5 (TBSI) "நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,"
*இங்கும் நாஸ்சிஸ் என்ற வார்த்தை அறிவை குறிக்க பயன்படுத்தபட்டுள்ளது. 1 கொரி 13:8 ல் மட்டும் வரங்களா???
[25/09 5:36 pm] Sam Jebadurai Pastor VDM: சிலருடைய வேத விளக்கங்களே தவறே
[25/09 5:39 pm] Rooban Pastor VDM: அய்யா அவரிடம் பேசி முடிக்கும்வரை கொஞ்சம் பொறுத்திருங்கள் பிறகு உங்களிடம் பேசுகிறேன் ஏனென்றால் நாம் இன்று தியானிப்பது விடை கிடைக்கும் எளிதான கேள்வி அல்லவே
[25/09 5:40 pm] Elango: மாற்கு 16:17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
[25/09 5:40 pm] Elango: விசுவாசிகளின் அடையாளம்👆
[25/09 5:42 pm] Charles Pastor VDM: அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளமாக காட்டப்படுகிறது என்பதன் பொருள் *மாற்கு 16 இல் அது விசுவாசிகளுக்கு அடையாளம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் பேசாதவர்கள் அவிசுவாசிகள் என அடையாளம் காட்டப்படுகிறது. பேசாதவர்கள் தாங்கள் இன்னும் விசுவாசிகள் அல்ல என்பதை உணர்ந்து விசுவாசிகளுக்கு அடையாளமான அந்நியபாஷையை பேசுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதே இதன் விளக்கமாக இருக்கிறது*
[25/09 5:43 pm] Elango: மாற்குவில் சொல்லப்பட்ட பற்பல பாஷையும், அந்நிய பாஷையும் ஒன்றா பாஸ்டர்?
[25/09 5:44 pm] Charles Pastor VDM: விசுவாசிகளுக்கு அந்நிய பாஷை என்பது புரிந்து கொள்ள கூடிய ஒன்று. அவிசுவாசிகளுக்கு அது புரியாத புதிர்
[25/09 5:45 pm] Thirumurugan VDM: 👉👉 In chapters 13 and 14, Paul's preference regarding the gifts was *prophecy*, but the Corinthians favored *tongues* and *knowledge*.
👉👉 The verb Paul used to describe what will happen to prophecy and knowledge is in the passive voice in Greek and means "shall be terminated" (from katargeo; 2:6).
👉👉 The verb he used to describe what will happen to tongues is in the middle voice and means *"automatically cease of themselves"* (from pauo).
👉👉 The passive voice points to God terminating prophecy and knowledge when the whole revelation of God gets completed "the Word of God".
👉👉 The middle voice suggests that tongues will cease by itself. Church history testifies that this is what happened to the gift of tongues shortly after the apostolic age.
[25/09 5:45 pm] Jeyaseelan Bro VDM: தாங்களே விடை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள்,,,,,,,
அந்நியபாஷை இன்றும் உண்டு என்று இன்னும் பல பதிவுகள் அனுப்பினாலும்,,,,ஏற்றுக்கொள்ளப்போவதில்லை,,,,,,
உங்கள் முடிவு உங்கள் மட்டும்,,,,,,
[25/09 5:45 pm] Don Singapore VDM: Even 1 Corinthians 12:10 uses the same words. The original term used in Greek or Hebrew will help in this case
[25/09 5:47 pm] Jp Solomon VDM: ஐயா கடைசியாக முடிவுக்கு வாருங்கள்
[25/09 5:48 pm] Elango: இப்படி original என்று சொல்லி சொல்லிதான், ஒன்லி ஜீஸஷ் , ஜெகோவா விட்னஸ் காரங்க ஆண்டவர் இயேசுவை தவறாக போதிக்கிறாங்க.. ஜெபத்தோடு தியானிப்போம்... ஆவியானவர் வெளிப்படுத்துவார்..
[25/09 5:48 pm] Charles Pastor VDM: விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர்,
[25/09 5:49 pm] Thirumurugan VDM: உங்கள் கருத்துப்படி *அந்நியபாஷை* என்கிற சொல்லுக்கு பயன்படுத்தும் எல்லா சொற்களும் அந்நியபாஷை தான். அப்படியென்றால் இதே வார்த்தை தான் யாக்கோபு நம்முடைய சரீர நாவுக்கு பயன்படுத்துகிறார் (யாக். 3). அப்படியென்றால் யாக்கோபு அந்நியபாஷையைப் பற்றி கூறுகிறாரா? என்ன கூறுகிறீர்கள் ஜெபத்துறை அவர்களே... கினோஸிஸ் என்கிற வார்த்தைகள் எல்லாம் ஒரே அர்த்தம் என்று 13:8 யும் முடிவு கட்டிவிட்டீர்களோ??? யோசியுங்கள்.
[25/09 5:52 pm] Rooban Pastor VDM: அதை தாங்கள் முடிவெடுக்கக் கூடாது சகோதரரே உங்களை ஏற்றுக் கொள்ள யார் கட்டாயப்படுத்தினார்கள் நான் எவ்வித கருத்துக்களையும் உங்களிடம் கூறவே இல்லையே விடை கிடைக்காது என்று நான் அதில் பதிவிடவும் இல்லையே நான் எழுதின வார்த்தைகளை நீங்கள் இவ்வாறு தவறாக புரிந்து கொண்டாள் வசனத்தை நீங்கள் எப்படி வியாக்யானம் செய்வீர்கள் என்று இப்பொழுது புரியவைத்து விட்டீர்கள் அவரிடம் நான் பேசி முடிக்கும்வரை தயவுசெய்து காத்திருங்கள் நன்றி
[25/09 5:54 pm] Don Singapore VDM: We cannot completely ignore that just because of contradicting teachings. Yes, completely agree that we have to meditate prayerfully and go by the leading of Holy Spirit 👍
[25/09 5:55 pm] Thirumurugan VDM: எங்கிருந்து இந்த விளக்கங்களை எல்லாம் கண்டு பிடித்தீர்கள்??? சபைக்கு பேசும்போது மற்றும் மற்றவர்களிடம் பேசும்போது???? ஆகா பிரமாதம்!!! அருமை, கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு தொடர்ந்து கூறுங்கள். யாரோடு பேசும்போது வியாக்கியானம் வேண்டும்....இன்னும் list இருக்கிறதா???? அந்நியபாஷையை சும்மா பிச்சி எடுக்குறீங்க போங்க!!!
[25/09 5:57 pm] Elango: நீங்கள் சொல்லும் விளக்கம் மட்டும் வேதத்திலிருந்து வருகிறது... மற்றவர்கள் சொன்னால் வேறு எங்கிருந்தோ வருகிறாதா ஐயா? நியாயமா?
[25/09 5:58 pm] Elango: உங்களிடம் தான் 100 பதிவு அந்நியபாஷையை பற்றி இருப்பதாக சொன்னீனீர்கள் ஐயா.
[25/09 6:00 pm] Thirumurugan VDM: *"அந்நியபாஷை இன்று"*
இன்று அந்நியபாஷைகளில் பேசுகிறவர்கள் அந்நியபாஷையின் வரத்தைக்குறித்து தேவனுடைய வார்த்தை அளிக்கும் விளக்கங்களில் இருந்து விலகி வெகுதூரம் சென்று விட்டார்கள்.
அநேக போதகர்கள் கர்த்தருடைய வேதத்தை நிதானித்து அறியாமல் தங்களுக்கு உகந்த வகையில் வியாக்கியானம் செய்து கொண்டு திருமறையின் அடிப்படை உபதேசங்களிலிருந்து விலகிச்சென்று மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறார்கள்.
இவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் கர்த்தருடைய வேதம் என்ன சொல்லுகிறது என்று ஆராய்ந்து அறியாமல் காண்கின்றதையும் கேட்கின்றதையும் அப்படியே ஏற்றுக்கொண்டு முழுமனதோடே அநேகர் விசுவாசிக்கிறார்கள்.
தேவனாலே மறுபடியும் பிறந்த எந்த ஒரு தேவனுடைய மனுஷனும் தேவன் அருளும் சத்தியத்தின் வெளிச்சத்திலே அந்நியபாஷை வரம் இன்று நடைமுறையில் இல்லை என்பதை நிதானித்தறிந்து அந்நிய பாஷையில் பேசுகிற அனைத்து சம்பவங்களையும் செயல்களையும் பகுத்து அறியக்கூடியவனாகவும் காணப்படவேண்டும்.
முதலாம் நூற்றாண்டின் இறுதியிலே அந்நியபாஷை வரம் நின்று போனது என்று கூறும்போது, இன்றும் நடைமுறையில் அந்நியபாஷை வரம் இருக்கிறது என்று கூறுபவர்களிடமும் நம்மோடு மெய்யான சந்தேகத்தோடு கேட்கும் விசுவாசிகளுக்கும் சரியான பதிலளிக்க நாம் எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
*இன்று பேசப்படுகிற அந்நியபாஷை வேதத்தில் கூறப்பட்டிருக்கிற அந்நியபாஷை இல்லையென்றால், பிறகு இந்த செயல் எப்படி உருவானது? யார் இதைக் கொண்டு வந்தது? இதற்கு மூல காரணம் என்ன? என்கிற கேள்விகளுக்கு நாம் பதில்களை அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமானதொன்றாகும். எனவே இந்த கேள்வி களுக்கான பதில்களை ஆராய்வோம்.*
[25/09 6:03 pm] Elango: முதலாம் நூற்றாண்டின் இறுதியிலே அந்நியபாஷை வரம் நின்று போனது என்று கூறும்போது,// ஏன் அந்நியபாஷை வரம் நின்றுபோனது ஐயா? ஏன் நின்று போனது ? காரணங்களும் உங்களிடம் இருக்குமே?
[25/09 6:04 pm] Thirumurugan VDM: *இன்றைக்கு பேசப்படும் அந்நியபாஷை தோன்றிய வரலாறு...*
இது பொய்யென்றால், இவற்றிற்கு மாற்றுக்கருத்து இருந்தால், அந்நியபாஷை பேசுகிறவர்களே....பதிவிடுங்கள்!!!
1901 ஆம் ஆண்டு புதுவருட பெருநிகழ்ச்சியின் முன்னனை பொழுதிலே, டொபெகாவில் உள்ள *“பெத்தேல் வேதாகம கல்லூரியில்”* மாணவியாக படித்துக்கொண்டிருந்த *ஆக்னஸ் ஓஸ்மான்* என்னும் பெயருடைய சகோதரி, கல்லூரியின் முதல்வர் *சார்லஸ் பர்காம்* அவர்களிடம் தான் பரிசுத்த ஆவியானவருடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவருடைய கைகளை தன்மேல் வைத்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அவர் அப்படி கைகளை வைத்து ஜெபித்தபோது, உடனே ஆக்னஸ் ஒஸ்மான் ஒருவரும் புரிந்துகொள்ள இயலாத உச்சரிப்புகளை உச்சரிக்க ஆரம்பித்தார். உச்சரிப்பை கேட்ட ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை எல்லாமே அறியாததாக இருந்தது. பின்பு சகோதரி ஆக்னஸ் ஒஸ்மான் அவர்களுக்கு விளக்கமாக கூறினார்: *அதாவது பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் வந்ததாகவும், அதன் பலனாக அவர் ஒருவருக்கும் புரியாத (இது அவருக்கும் புரியவில்லை என்பது கூடுதல் விவரம்) உச்சரிப்புகளினாலே அந்நியபாஷையில் பேசினதாகவும் கூறினார்*.
மேலும் அவருடைய கல்லூரி படிப்பின் போது அவருடைய வகுப்பில் உள்ள அனைவருக்கும் “பரிசுத்த ஆவியானவருடைய ஞானஸ்நானம்” என்கிற தலைப்பிலே வீட்டு பாடம் (Home Work) கொடுக்கப்பட்டது. ஆக்னஸ் ஒஸ்மான் சகோதரியும் வீட்டு பாடம் செய்துகொண்டு போனார்; அதிலே அவருடைய முடிவுரையில் அந்நியபாஷையில் பேசுதல்தான் பரிசுத்த ஆவியானவருடைய ஞானஸ்நானம் பெற்றதன் அடையாளம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்காக அவர் கல்லூரி நிர்வாகத்தினாலே பரிசு பெற்றதோடு அனைவராலும் சக மாணவர்களாலும் வெகுவாக கவுரவிக்கப்பட்டார்.
[25/09 6:05 pm] Thirumurugan VDM: அஸ்திபாரம் போட்டபிறகு மீண்டும் எதற்கு அந்த அஸ்திபார கற்கள்???? என்ன சரிதானே???? அந்நியபாஷை அஸ்திபார வரங்களுள் ஒன்று.
[25/09 6:06 pm] Thirumurugan VDM: one of the foundational gifts
[25/09 6:06 pm] Elango: எதை அஸ்திபாரம் என்று சொல்லுகின்றீர்கள்... எதை கட்டிடம் என்று சொல்லுகின்றீர்கள்?
[25/09 6:07 pm] Elango: தவறான கருத்து.
[25/09 6:08 pm] Thirumurugan VDM: தீர்க்கதரிசன வரம், அந்நியபாஷை வரம் போன்றவைகள்.
[25/09 6:09 pm] Elango: தவறு. யார் சொன்னது ? காரணங்கள் சொல்ல முடியுமா? என்ன அஸ்திபாரம் போடப்பட்டது? அதில் என்ன கட்டிடம் நிலைநிறுத்தப்பட்டது?
[25/09 6:10 pm] Rooban Pastor VDM: இது வரலாற்று உண்மை தான் மறுப்பதற்க்கு ஒன்றுமில்லை
[25/09 6:11 pm] Elango: ஐயா, நீங்களும் அந்நியபாஷை ஒய்ந்துதுவிட்டது என்பபதை நம்புவதாக தெரிகிறது.
[25/09 6:12 pm] Rooban Pastor VDM: No i don't say that but I accept that history of tongues
[25/09 6:13 pm] Elango: இப்போது உங்களின் நிலைப்பாடு, அந்நியப்பாஷை ஓய்ந்துவிட்டது என்பதை நீங்கள் ஏற்கின்றீறீர்கள்.
[25/09 6:17 pm] Elango: நம்முடைய @Aa Darvin Sekar Brother VDM ஐயா, CSI சபை தான் அவர் அந்நிய பாஷை பேசுகிறாரே...
[25/09 6:20 pm] Elango: எனக்கு தெரிந்த பலர் CSI சபையில் இருக்கின்றார்கள், அவர்கள் அந்நியபாஷையை பேசுகின்றாறார்கள். சிலர் அந்நியபாஷையை பேசவில்லை என்பபதால் அந்நியபாஷை ஒய்ந்துவிட்டது என்ற தீர்மானத்திற்க்கு வரமுடியாது.
[25/09 6:22 pm] Elango: அந்நியபாஷை ஓய்ந்துவிட்டது என்று சொல்லுவதன் ஆதாரம் என்ன?
[25/09 6:23 pm] Elango: மேட்டர் அதுவல்ல, அந்நியபாஷை ஓய்ந்ததா என்பதே தியானம் இப்போது
[25/09 6:25 pm] Elango: அநேக துருபதேசங்கள் வரலாற்றை சான்றாக காட்டிதான் வருகிறது.
[25/09 6:28 pm] Elango: நீங்கள், இங்கேயும், அங்கேகேயும் இல்லாமல் ஒரு புறமாக இருந்தால் நல்லது. என்னை பொறுத்தவ்ரையில் நீங்கள் அந்நியபாஷையை ஓய்ந்துவிட்டது என்று நம்புகின்றீறீர்கள்.
[25/09 6:31 pm] Levi Bensam Pastor VDM: 1 கொரிந்தியர் 2:9-16
[9]எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
[10] *நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.*
[11]மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? *அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.*
[12] *நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.*
[13] *அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆
[14] *ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப்👇👉👉👉 பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.*
[15] *ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.*
[16]கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
[25/09 6:31 pm] Thirumurugan VDM: *இதற்கு பதில் கூறுங்கள்...ஒரே ஒரு உதாரணம் காண்பியுங்கள்...*
இரண்டாம் நூற்றாண்டில் இருந்து 1901 ஆம் ஆண்டு வரை அநேக நூற்றாண்டுகளாக சபையின் வரலாற்றிலே அந்நிய பாஷையில் பேசினதாக வாசனைச்சுவடுகள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*Since 2nd century A.D. till the 1901 A.D there was not even a smell of speaking in tongues down through the centuries.*
இப்படியாக அந்நியபாஷைகளில் பேசக்கூடிய நவீன பெந்தெகொஸ்தே புரட்சி உண்டானது. இது படிப்படியாக வளர ஆரம்பித்தது.
முதலாவது டொபெகாவில் தோன்றி பின்பு ஹவுஸ்டன், டெக்சாஸ், லாஸ் ஏஞ்செல்ஸ் என்று ஒரு பெரிய சமஸ்தானமாக உருவெடுக்க ஆரம்பித்தது. இன்று உலகின் நாலா பாகங்களிலும் படர்ந்து விரிந்து மலிந்து கிடக்கிறது.
[25/09 6:34 pm] Elango: ஆதி சபையில் இருந்தது அந்நியபாஷை... இடையில் கத்தோலிக்க சபை வந்தது.. அப்படியென்றால் கத்தோதோலிக்கம் தான் உண்மையான திருச்சபை.. என்று வேதத்தை ஆராயமல் அதில் சேர்ந்துவிடலாமே?
[25/09 6:36 pm] Elango: சில சபைகள் தங்களுக்கு ஆதாரமாக எதையாவது காட்டவேண்டுமென்று ... எப்படி ஜெகோவா விட்னனஸ் காரர்கள் வரலாற்றை ஆதாரமாக வைத்துக்கொண்டும், எபிரேய கிரேக்கம் என்று சொல்லிக்கொண்டு இயேசுவை மெய்யான தேவன் இல்லைவே இல்லை என்று சொல்லுகின்றார்களோ.. அது போல தான் இதுவும். அந்நியபாஷை ஓய்ந்துவிட்டது என்று சொல்லுவது.
[25/09 6:39 pm] Thirumurugan VDM: நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே...!!!
[25/09 6:40 pm] Elango: அவைகள் எல்லாம் பொய். ஜெகோவா என்பவர்கள் கூட இயேசு தேவன் இல்லை என்று சொல்லுகின்றார்கள்.. அப்படியென்றால் வரலாறை ஏன் தூக்கிப்போடுகிறீர்கள்... அவர்கள் கூறும் வரலாறையும் ஏற்றுக்கொண்டு... இயேசு தேவன் இல்லை என்று நீங்கள் சொன்னாலும் சொல்லுவீர்களா ஐயா?
[25/09 6:40 pm] Elango: ஆராய்ந்தால் பதில் நீங்களே யோசிப்பீர்கள்.
[25/09 6:41 pm] Thirumurugan VDM: ஏறக்குறைய 2000 ஆண்டுகள் இன்று நீங்கள் பேசுகிற இந்த அந்நியபாஷை எங்கே தூங்கி கொண்டிருந்தது??? 2000 ஆண்டுகள் லீவுல இருந்ததா???? இல்லை இதையும் தவறு என்று கூறப்போகிறீர்களா???
[25/09 6:41 pm] Elango: நீங்கள் கூறும் வரலாறும் அனைத்தும் தவறானது. அது எல்லம் பொய்.
[25/09 6:42 pm] Elango: ஐயா, ஜெகோவா விட்னஸ் கார்களும் வரலாறையே காண்பிக்கிறார்கள்.. அந்த வரலாறை ஏன் ஐயா ஏற்க் மறுக்கின்றிகள்?
[25/09 6:42 pm] Thirumurugan VDM: நான் கேட்டகற்கு மட்டும் பதில் சொல்லுங்கள். யெகோவா சாட்சிகளை குறித்து வேறொரு நாள் தியானிக்கலாம். 2000 வருட மௌனம் இந்த அந்நியபாஷை வரத்திற்கு என்ன சத்திய சோதனை.
[25/09 6:43 pm] Levi Bensam Pastor VDM: உங்களிடம் கேட்டு தான் 2000 வருடமாக அந்நிய பாஷை பேசினார்களா🤔
[25/09 6:47 pm] Levi Bensam Pastor VDM: *இந்த வசனத்துக்கு பதில் தரவும்*👇👇👇👇👇👇 1 கொரிந்தியர் 14:2,4
[2]ஏனெனில்,, *அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.*👇👇👇👇👇👇👇
[4] *அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்;* தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.
[25/09 6:50 pm] Elango: பொய்யான வரலாறும் உண்டு.
[25/09 6:54 pm] Elango: வேதத்திதிற்க்கு ஒத்துதுப்போகாத எந்த வரலாறு ஏற்க்காலாது. மேலும் உங்களுடைய நிலைப்பாடை குறித்து ஆம் இல்லை என்று தெரிவித்தால் .. உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம்.
[25/09 6:56 pm] Elango: அந்நியபாஷை தீர்ந்தது என்பது பொய்யான வரலாறு.
[25/09 6:59 pm] Levi Bensam Pastor VDM: *கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக, கர்த்தருக்கு சித்தமானால் நடு இராத்திரி வந்து பார்ப்பேன்*🚶🚶🚶
[25/09 7:00 pm] Elango: உங்கள் நிலைப்பாடை சொன்னால் மட்டுமே எல்லாம் பதிலும் கிடைக்கும்..
[25/09 7:03 pm] Elango: அந்நிய பாஷை உண்டா இல்லையா என்ற கேள்விக்கும், அந்நிய பாஷை ஓய்ந்ததா என்ற கேள்விகளுக்கும் உங்கள் நிலைப்பாடை தெரிவிக்கலாமே...
[25/09 7:05 pm] Elango: ஜெகோவா காரங்களும் மூல மொழியில் தான் இயேசுவை தேவன் இல்லை என்கின்றீறீகள்..
[25/09 7:06 pm] Elango: தோமா சபைக்காரர் சிலை வழிபாடு செய்தார்கள் என்ற வரலாறு இருக்கிறது.. அப்படியென்றால் தோமா சிலைவழிபாட்டை ஆதரித்தார?
[25/09 7:08 pm] Elango: உங்கள் நிலைப்பாட்டை சொன்னால் அனைத்துக்கும் ஆதாரம் கிடைக்கும்.
[25/09 7:22 pm] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 25/09/2017 🔥*
1⃣ அந்நியபாஷை என்றால் என்ன❓
2⃣ அந்நியபாஷை அடையாளமாக இருக்கிறதா அல்லது வரமாக இருக்கிறதா❓
3⃣ இன்றும் அந்நியபாஷையின் வரம் செயல்படுகிறதா❓ அந்நியபாஷை வரத்தை இன்று நாடுவது சரியானதா❓
4⃣ எதற்காக அந்நியபாஷை வரம் கொடுக்கப்பட்டது❓
5⃣ *அந்நிய பாஷையில் பேசுகிறவன், மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்* என்பதன் அர்த்தம் என்ன❓
5⃣ *எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா..* என்று சொன்ன புவுல், *நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்* என்று பவுல் ஏன் கூறுகிறார்❓
6⃣ *அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.* என்பதன் அர்த்தம் என்ன❓
7⃣ வேதத்திலே அந்நியபாஷையில் யார் பேசினார்கள்❓ஏன் பேசினார்கள்❓
8⃣ அந்நியபாஷைகளை எல்லாரும் பேசும்படி ஏன் பவுல் விரும்பினார்❓
9⃣ 1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட, *“நிறைவானது”, "ஓய்ந்துபோம்” என்பதின் அர்த்தம் என்ன?*
1⃣0⃣ அந்நியபாஷையில் பேசுதல் ஆவிக்குரிய முதிர்ச்சியைக் காண்பிக்கிறதா❓
1⃣1⃣ அந்நியபாஷை,பற்பல பாஷை, தூதர் பாஷை, மனுஷ பாஷை போன்றவைகளுக்கு விளக்கம் தருக⁉
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1j
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[25/09 7:40 pm] Rooban Pastor VDM: அப்படி என்றால் csi சமூகத்தார் லூத்தரன் சபை யார் மற்ற அந்நியப் பாஷையில் வழி நடத்தப்படாத விசுவாசிகள் எல்லாம்
அ விசுவாசிகளே அவர்கள் பரலோகம் செல்லமாட்டார்கள் என்பது தான் உங்களுடைய கருத்து வரலாறும் தேவை இல்லை வசனமும் தேவையில்லை உங்கள் வார்த்தையை மேலானது என்று உறுதிப்படுத்தி விட்டீர்கள் நன்றி
[25/09 7:43 pm] Elango: நீங்கள் உங்கள் விசுவாசத்தை சொல்ல தயக்கமேன்...? இன்றைய கேள்வி CSI சபையை பற்றி இருந்தால்... அவர்கள் பரலோகம் போவார்களா இல்லாயா என்பதை குறித்த கருத்தைதை நான் நிச்சயம் தெரிவித்திருப்பேபேன். வருகிற நாளில் அதையும் தியானிக்கலாம்.
[25/09 7:43 pm] Elango: நீங்களும் CSI என்பதால் நீங்களும் பரலோகம் செல்லமாட்டீர்கள் என்று விசுவாசிக்கீறீர்களா ஐயா?
[25/09 7:44 pm] Rooban Pastor VDM: சகோதரரே கேள்வி கேட்பது இடறல் அல்ல உங்களிடம் நேரத்தை விண் அடிப்பதற்காக நான் பேசவில்லை நான் கேட்ட கேள்வி யாரையும் இடர்களுக்கு உண்டாக்கும் கேள்வியும் அல்ல இன்றைய தியானத்தின் முடிவு வேத வசனத்தின்படி சபை பாகுபாடில்லாமல் இருக்கட்டும் நன்றி
[25/09 7:46 pm] Elango: சபை பாகுபாடு என்பதை விட வேத வசனத்தை புரட்டலை அனுமதிக்கமுடியாது.
[25/09 7:48 pm] Elango: அந்நிய பாஷை என்பது தேவன் நமக்கு கொடுக்கும் வரங்களில் ஒன்று. தேவனின் ஒர் வரத்தை ஏற்க்காதவர்களை ஆவிக்குரியர்கள் என்று சொல்லமுடியாது.
[25/09 7:49 pm] Elango: நீங்கள் பரலோகத்திற்க்கு போவீர்களா போகமாட்டீர்களா என்பதை தேவன் அறிவார். அந்நியபாஷையை ஏற்காதவர்கள் ஆவிக்குரியவர்கள் அல்ல என்பேன்.
[25/09 7:50 pm] Elango: உங்களுடைய நிலைப்படான அந்நிய பாஷை ஓய்ந்தது என்பது தவறான சுயபோதனையே.
[25/09 7:52 pm] Elango: தேவனின் வரங்ககளில் ஒன்றான அந்நிநிய பாஷையை ஒதுக்குபவர்கள் எந்த ஆவியை பெற்றவர்கள் என்று நிதானிக்க முடியாதா?
[25/09 7:53 pm] Rooban Pastor VDM: நான் அப்படி ஒன்றும் கூறவே இல்லை அந்நிய பாஷை ஓய்ந்து விட்டது என்று நான் கூறியதாக ஒரு பதிவை காட்டிவிட்டால் இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன் காட்டுங்கள்
[25/09 7:54 pm] Elango: அதுதான் உங்கள் நிலைப்பாடு. அதை மறுக்க முடியுமென்றால்... இதோடு நிறுத்திதிக்கொளகிறேன்..முடியுமா?
[25/09 7:54 pm] Rooban Pastor VDM: நீங்கள் நிதானித்து அறிவது விடை அல்ல நீங்கள் கூறுவதற்கு வேத ஆதாரத்தை காண்பிக்காமல் ஒருவரும் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் நன்றி
[25/09 7:55 pm] Elango: அந்நிநிய பாஷையான தேவனின் வரங்களில் ஒன்றை ஏற்காதது சுயமே அங்கு ஆளுகிறது.
[25/09 7:56 pm] Rooban Pastor VDM: அப்படி என்றால் நான் கூறாத ஒன்றை கூறுவது எவ்விதத்தில் நியாயம் என் அன்பு சகோதரரே
[25/09 7:57 pm] Elango: நான் கூறுவதை நீங்கள் மறுக்காதது ஏனோ?
[25/09 7:57 pm] Rooban Pastor VDM: வேத வசனத்தை அடிப்படையாக வைத்து பேசாத எந்தவொரு கருத்தும் தவறான போதனையை நான் நீங்கள் தவறான போதனையை போதிக்கிறார்கள் என்று கூறுவதாக நினைக்க வேண்டாம்
[25/09 7:58 pm] Rooban Pastor VDM: நான் எதையும் மறுக்கவில்லை
[25/09 7:58 pm] Elango: அதேப்போல வேதத்தை ஆதாரமாக கொள்ளாமல், வரலாற்றை முக்கியப்படுத்துவதை ஏற்க்கயியலாது. அதுவும் தவறான போதனையே..
[25/09 7:59 pm] Elango: அப்படியென்றால் ஏற்கின்றீர்கள் என்று அர்த்தம்.
[25/09 7:59 pm] Rooban Pastor VDM: நான் வரலாற்றில் இருந்தா உங்களிடம் கேள்வி கேட்டேன் நான் கேட்ட கேள்வி வேறு
[25/09 8:00 pm] Elango: நானும் உங்களிடம் வரலாற்றில் இருந்தா கேள்வி கேட்கிறேன்... வேதத்திலிருந்து தான் உங்கள் நிலைப்பாட்டை கேட்கிகிறேன்..
[25/09 8:04 pm] Elango: உங்களுடைய நிலைப்பாடும் தவறு. உங்களுடைய சுய போதனைக்கு வேத ஆதாரம் கொடுக்க முடியுமா?
[25/09 8:12 pm] Charles Pastor VDM: அபிஷேகம் ஆவியானவரின் ஞானஸ்நனம் பெற்றவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள் என்பதற்கு ஆதாரம் 👇
[25/09 8:13 pm] Elango: *-கர்த்தர் எல்லோர்மீதும் ஆவியை ஊற்றும் காலம் இது*
யோவேலில் 2 ம் அதிகாரத்தில்,
"நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை."
என்று கி. பி. 835 ம் வருஷத்தில் (2850 .வருஷத்திற்க்கு முன்பு) கர்த்தர் யோவேல் தீர்க்கதரிசியிடம் உரைத்தார்.
இது எப்போது நடக்கும் என்று ஆராய்ந்து பார்த்தால் இயேசு வாழ்ந்த காலத்தில் நிச்சயமாய் இல்லை, ஏனென்றால் அப்போது யூதர்கள் ரோமர் ஆட்சியில் கீழ் இருந்தார்கள். சுதந்திரம் இல்லை. சம்பூரணம் இல்லை, திருப்தி இல்லை.
(பெந்தேகொஸ்தே நாளிலும் இல்லை. ஏனென்றால் அன்று எல்லோரும் அந்நிய பாஷைகளை மாத்திரம் பேசினார்கள்.)
பின் எப்போது அது?
அடுத்த வசனத்தைப் பாருங்கள்.
"நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை".
இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தப் பிறகு அவர் யூதரல்லாத நமக்கும்
அந்த ஆசீர்வாதங்களை கொடுத்தார். இப்போது நாம் அன்று முதல் இன்று வரை அனுபவித்து வருகிறோம்.
சம்பூரணமும் திருப்தியும் பெற்று வாழ்ந்து வருகிறோம். யாருக்கும் அடிமை இல்லை. சுதந்திரவாளிகள்.ஆகவே அது இந்தக்காலம்.
பின் அடுத்த வசனத்தைப் பாருங்கள்,
"அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் (மகன்) உங்கள் குமாரத்திகளும் (மகள்) தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் (முதியோர்) சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்."
அதற்க்குப் பின்பு என்று சொல்லுகிறார்.மேலும் சொல்லுகிறார்.
"வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்."
கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் "வருமுன்னே"
என்கிறார்.அதாவது இரண்டாம் வருகைக்கு முன்பு. மேலும் சொல்லுகிறார்,
'அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்கள் இடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்."
(யோவேல் 2: 26- 32)
இதையே அப்போஸ்தலர்
2 அதிகாரத்தில் 17- 21 வரை
பேதுரு சொல்லி நிரூபித்து இருக்கிறார். ஆகவே,
"கேளுங்கள் கொடுக்கப்படும்."
இது சபையார் யாவரும்
கேட்கக்கூடிய நேரம் அது இந்த நாட்களே.
[25/09 8:13 pm] Elango: *அந்நிய பாஷை என்பது தேவ பாஷை*
[25/09 8:13 pm] Elango: *அந்நிய பாஷை தேவனோடு பேசும் பாஷை*
[25/09 8:13 pm] Charles Pastor VDM: பெற்றவர்கள் மட்டுமே பேசினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
[25/09 8:14 pm] Rooban Pastor VDM: வேத தியான குழுவில் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுவது விடை அல்ல வேதத்திலே அதற்கு ஆதாரம் இல்லை நீங்கள் கூறுவது வேதத்தின் அடிப்படையில் வசன ஆதாரம் இல்லாத தவறான போதனையை இதை நான் பதிவிட்டதால் உங்களுடைய கருத்தும் தவறான போதனை என்று மாறு பதி விடாதீர்கள் நான் எவ்வித போதனையும் செய்யவில்லை நான் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை உங்களுடைய அந்நிய பாஷை பேசுகிறவன் ஆவிக்குரியவன் அந்நிய பாஷை பேசாதவன் ஆவி இல்லாதவன் என்ற கருத்தை மாத்திரம் நான் ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் நன்றி
[25/09 8:14 pm] Elango: *ஆவியானவர் கிரியை செய்யும்போதுதான் அந்த வரம் பெற்றவன் பேசமுடியும்.*
[25/09 8:15 pm] Elango: அந்நியபாஷையை ஏற்க்காக்காதவர்கள் ஆவிக்குரியவர்கள் அல்ல.
[25/09 8:15 pm] Rooban Pastor VDM: வசன ஆதாரம் அற்ற கருத்து சகோதரரே
[25/09 8:15 pm] Levi Bensam Pastor VDM: இதற்கு யாராவது பதில் தர முடியுமா❓❓❓❓
[25/09 8:16 pm] Elango: வேதத்தில் தேடுங்களேன்... உங்களுடைய நிலைப்பாடை சொல்லாதவரை நான் வேத ஆதாரம் கொடுக்கப்போவதில்லை.😀
[25/09 8:17 pm] Elango: அந்நிய பாஷை என்றால் என்ன?
அந்நிய பாஷையில் ஜெபிப்பது எல்லாம் சர்ச்சைக்குள்ளானதாகவும்,
துரதிஷ்டவசமாக தவறாகவும் புரிந்துக்கொள்ளப்படுகிறது.
அந்நிய பாஷை ஒரு அபிஷேகம்,
★ தேவன் அருளிய பாஷை
★ ஆவியானவரின்
அடையாளம்
★ சாத்தானுக்கு புரியாத
பாஷை
★ தேவனோடு பேசும் பாஷை
அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாது இருக்கிறபடியினாலே,
அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். (1 கொரி 14:2)
★அந்நிய பாஷையின் அர்த்தம் புரிந்துக் கொள்கிறவன் பாக்கியவான். அந்நிய பாஷையில் தேவனிடம்
தன் மனதின் ஆழமானவைகளை விண்ணப்பிக்கிறான்.
அந்நிய பாஷையை ஒருமுறை பேசுகிறவன் பலவிதமான அனுபவங்களைப் பெறுகிறான். இது ஒருமுறை அனுபவம் அல்ல.
அந்நிய பாஷை பேசி ஜெபிப்பதால் என்ன பயன்?
★இயற்க்கைக்கு மேற்பட்ட புரிதலால் - புத்தியால் (Supernatural understanding) தேவ ரகசியங்கள் வெளிப்படும்.
1 கொரிந்தியர் 2: 10
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
★பரிசுத்த ஆவியானவரின் மற்ற வரங்களை அணுகிப் பெற முடிகிறது.
1 கொரிந்தியர் 12
8 ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
10 வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
யோவான் 16: 13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல்,
★தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
★ தேவனோடு நேரடியாக பேசுகிறோம்.
"மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்." (1 கொரி 14:2)
★ ஆவிக்குரிய யுத்த போர்முறையில் அதிகாரம் செலுத்தி வெற்றிக் கொள்ளச்செய்கிறது.
எபேசியர் 6: 10- 18 வசனங்கள் ஆவிக்குரிய யுத்தத்தை சொல்லுகிறது.
எபேசியர் 6
18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
★மற்றவர்களுக்காக அந்நிய பாஷையில் ஜெபிக்கும்போது அவர்களின் உண்மையான வேண்டுதல் வெளிப்பட்டு தேவன் அதை அறிந்து விடுதலை தருகிறார்.
[25/09 8:19 pm] Elango: ஆவிக்குரிய வாழ்க்கையில் கனி எவ்வளவு முக்கியமோ அதேப் போல நாம் பரிசுத்தமாகிறவன் இன்னும் பரிசுத்தமாகுவதற்க்கு அந்நியபாஷை முக்கியம். 👍👍👍
கனியும் வரமும் இரண்டும் முக்கியம் ! எனக்கு வலது கை, அல்லது வலது கண் என்று சொல்லவே முடியாது.
[25/09 8:20 pm] Rooban Pastor VDM: அதை வேதத்திலிருந்து எடுத்து கொஞ்சம் சொல்லுங்களேன் காலையில் இருந்து பதிவு செய்த உங்களுக்கு ஒரு வசனத்தை போடுவது பெரிய காரியம் இல்லை சகோதரரே நான் வேதத்தின் படி உறுதியாய் கூறுகிறேன் அப்படி சொல்லும் ஒரு வசனம் கூட வேதத்தில் இல்லை தாங்களே உங்களுடைய வேதத்தில் தேடிப்பாருங்கள் என்னுடைய வேதத்தில் அப்படி ஒன்றும் இல்லை நன்றி
[25/09 8:20 pm] Elango: கனியும் வரமும் இரண்டும் முக்கியம் ! எனக்கு வலது கை, அல்லது வலது கண் என்று சொல்லவே முடியாது.
தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த ஆவிகயில் நிரம்புகையில் கனிகள் மட்டும் கிடையாது, மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிறார்கள், நிழல்ப்பட்டு சுகமடைதல் என்பது ஆவிக்குரிய அனுபவம். இதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
என்னுடைய வாயிலே சாக்லேட் சாப்பிடும்போது அதன் ருசியைப் பற்றி எனக்கு சொல்லத் தெரியாது ஆனால் அந்த ருசியை அனுபவிக்கிறேன்.
அதேப்போல ஆவிக்குரிய பிள்ளைகக்குத் தான் அனுபவிக்கிற காரியங்கள் தெரியும்.
மனுஷன் எப்படி பேசினா என்ன ... அவரவர் ஆண்டவரிடம் கணக்கு ஒப்புவிக்கிற நாள் வரும்.⚠
அதனால யாரு ஒருவர் தப்பாக போகும் போது, நமக்கு அந்நியபாஷை வேண்டாம் என்று சொல்லவேக் கூடாது.
புதிய ஏற்ப்பாடு விசுவாசிகளுக்கு தேவன் கொடுத்த மகா பெரிய கிஃப்ட் தான் அந்நியபாஷை. 🗣🗣
அதே கொரிந்து சபையில் அந்நியபாஷயை மாத்திரம் சொல்லவில்லையே. ஒன்பது வித வரங்களினால் நிறைந்த சபைதானே கொரிந்து சபை. ✅✅
அங்கேயே பவுல் சொல்கிறார் ஒருத்தர் சங்கீதம் பாடுகிறான், ஒருத்தர் பிரசங்கம் செய்கிறார் என்று கலகம் பண்ணாமல் ...,சகலம் ஒழுங்கும் கிரமமுமாக நடக்க வேண்டும் என்று பவுல் எச்சரிக்கிறார்.
கொரிந்து சபையில் உள்ள விசுவாசி தகப்பன் மனைவியை வைத்திருக்கிறார் என்று சொல்லி சபையே வேண்டாம் என்று ஒதுங்கக்கூடாது அல்லவா?✅✅
ஆவிக்குரிய மனுஷர்களான நாம் தெளிவாக பார்க்க வேண்டும் ... 12 அதிகாரத்தில் கிருபைகளை, வரங்களை சொல்கிறார், 13 அதிகாரத்தில் பிதானமான அன்பை குறித்து சொல்கிறார், தீர்க்கதரிசனத்தைக் குறித்தும் சொல்கிறார் 🌟⭐👏👏✨✨
மனுசர்களுடைய பிரசங்கங்களை கேட்டு ஜீவிக்கிறவன் அல்ல.... வேத வசனங்களின் ஆழங்களை கண்டு ஜீவிக்கிறவன்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[25/09 8:21 pm] Elango: ஒரு வசனம் உங்களுக்கு கொடுக்கப்போவதில்லை பாஸ்டர். 😃
[25/09 8:21 pm] Charles Pastor VDM: இப்பொழுது அந்நிய பாஷை இல்லை என்பவர்கள் எண் ஆடியோ 👆 கேட்டு பதில் கொடுங்கள்.
[25/09 8:24 pm] Elango: இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக❗🙏
அந்நியபாஷையில் வந்து சபையில் நடத்துவதற்க்கு அதாவது மிகவும் சத்தமாக சபையாருடைய அனைவருடைய கவனத்தை ஈர்க்கும் படியாக பேசுவதை தான் அங்கு குறிக்கிறது. 👍✅
சபையிலே தேவனை துதிப்பதற்க்கும் ஆராதனை செய்வதற்க்கும் பவுல் தடை சொல்லவில்லை. அதனால்தான் அந்நியபாஷை பேசுகிறவனை தடை பண்ணாதிருங்கள் என்றே வசனம் சொல்கிறது.சபையில் அந்நியபாஷை பேசக்கூடாது என்று பவுல் சொல்லவில்லை.
சபையில் தனக்கும் தேவனுக்கும் தெரிய பேசுக்கடவன் என்று சொல்வதன் காரணம் ... ஏதோ வீட்டில் போய் தான் அந்நியபாஷை பேச வேண்டும் என்று அர்த்தமில்லை.
எல்லாருக்கும் தெரிவிக்க அல்லது காண்பிக்க அதாவது ஏதோ சொல்லவருவது போல, அதாவது தீர்க்கதரிசனம் என்பது சபையில் எல்லாருக்கும் தெரியும்படியாக தீர்க்கதரிசனம் சொல்வார்கள், அது போல எல்லாருக்கும் கேட்கும்படியாக அந்நியபாஷை பேசக்கூடாது. 🗣🗣🗣🗣
அதாவது எல்லோருக்கும் தெரியும்படியாக தீர்க்கதரிசனம் பேசுவதுபோல அந்நியபாஷை பேசக்கூடாது.அவங்க அதற்க்குரிய அர்த்தத்தையும் சொல்ல வேண்டும்✅🗣👍
1 கொரிந்தியர் 14:28
[28]அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், *சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.*
இதுதான் 👆🏼அந்த வசனத்தின் நோக்கம்.
ஆனால் தனக்கும் தேவனுக்கும் தெரிய துதிப்பதோ ஜெபிப்பதோ எந்த பிரச்சனையும் இல்லை.🗣🗣🗣✅✅👍👍
பொதுவாக சபையில் நாம் அந்நியபாஷை பேசி தேவனை துதிப்போமாக என்று சொல்கிறார்கள். தேவனை துதிக்கும் போது அந்நியபாஷையில் பேசுவது ஒரு தவறும் கிடையாது.எல்லாமே ஒழுங்கும் கிரமுமாக நடக்க வேண்டுமென்பதே பவுலுடைய யோசனையே தவிர, அந்நியபாஷையே பேசக்கூடாது தேவனை துதிக்கக்கூடாது என்பது அவருடைய நோக்கமல்ல.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VDM
[25/09 8:25 pm] Rooban Pastor VDM: சகோதரரே ரொம்ப சந்தோசம் நீங்கள் கொடுக்க தேவையில்லை வேதத்தில் அப்படி கூறுகிற வசனம் இல்லை என்பது தான் உண்மை உங்களுடன் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி😁👍✔
[25/09 8:27 pm] Elango: உங்கள் நிலைப்பாட்டை சொல்ல ஐயப்படுவது புரிகிறது. யாருக்காக நீங்கள் சொல்ல தயங்குகிறீர்கள் என்பது.
[25/09 8:32 pm] Rooban Pastor VDM: என் நிலைபாட்டை கேட்பதைவிட நீங்கள் சொன்ன கருத்துக்கு உங்களுடைய வேதத்தில் வசனம் இருக்கிறதா என்று தேடுங்கள் யார் தயங்குகிறார்கள் என்று உங்கள் மனம் உங்களுக்கு பதில் கொடுக்கும் நன்றி
[25/09 9:12 pm] Elango: அந்நியபாஷையை ஏற்க்காத நீங்கள், உங்கழை எப்படி பெந்தேகோஸ்தே ஊழியர் என்று சொல்ல முடியும்?
[25/09 9:13 pm] Rooban Pastor VDM: நான் அந்நியபாஷையை ஏற்கவில்லை என்று எப்போதும் உள்ள இடத்தில் கூறினேன் தவறான பதிவை பதிவிட வேண்டாம்
[25/09 9:18 pm] Justin VDM: அருமை...சகோ. சரியான மேற்கோள்.
ஸ்திரீயின் உபதேசம் இது
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
பவுல் சொன்ன "புருஷராயிருங்கள்" என்ற உபதேசமே திடமான ஆகாரமாகும், மற்றவையெல்லாம் பால் குடிக்கிற குழந்தைகளுக்கும், கணக்கில் வராத ஸ்திரீகளுக்குமானது. அந்நியபாஷை இவர்களை போன்றவர்களுக்கு கடைசி வரை அந்நியம்தான், சகல ரகசியங்களையும் அறியக்கூடிய சொந்தமானதாக இவர்களால் உணரவே முடியாது
[25/09 9:18 pm] Paul 3 VDM: எல்லாரும் அந்நிய பாஷை பேசுவதை பார்க்கிறேன் எல்லாரும் 1ரே மரியான பேசுற மாரி தெரியலையா நா
[25/09 9:20 pm] Ebi Kannan Pastor VDM: மத்தேயு 22:11-13
[11]விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:
[12]சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
[13]அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
[25/09 9:20 pm] Jeyanti Pastor VDM: ஒரு சில வசனம்தா உங்க கண்ல படுமா?
[25/09 9:21 pm] Charles Pastor VDM: சபை பிரிவின் உபதேசங்களை அல்ல வேத உபதேசத்தை பார்கிறவனே விசுவாசி. சபை போதனை ஆவியானவர், அபிஷேகம், அந்நிய பாஷை இல்லை எனலாம் ஆனால் அதை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதே முக்கியம். வேதத்தில் ரட்சிக்க பட்ட அனைவரும் ஆவியானவரின் ஞானஸ்நனம் பெறவேண்டும் என போதிக்கிறது. அப்படி ஆவியானவரின் ஞானஸ்நானம் பெற்றதற்கான அடையாளமாக அந்நிய பாஷை பேசினார்கள் என கூறுகிறது. இந்த அனுபவம் இல்லை என்றால் பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்.
[25/09 9:22 pm] Jeyanti Pastor VDM: பெந்தகோஸ்தே நாள்ல மாடில ஆண்கள் மட்டும்தா இருந்தாங்கலா, உங்க பைபிள்ல அப்டி போட்ருக்கா
[25/09 9:23 pm] Jeyanti Pastor VDM: Pls read Bible, with Light of God. K
[25/09 9:23 pm] Ebi Kannan Pastor VDM: யூதா 1:19-20
[19]இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், *ஆவியில்லாதவர்களுமாமே.*
[20]நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, *பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,*
[25/09 9:24 pm] Justin VDM: நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போம்.
நிறைவானது வந்து விட்டதா இல்லையா, அல்லது நிறைவானது என்பது இனி வரக்கூடிய ஒன்றா?
[25/09 9:25 pm] Jeyanti Pastor VDM: பரிசுத்த ஆவியானவர் வரவிட்டால், ஒரு நிறைவும் வராது
[25/09 9:25 pm] Ebi Kannan Pastor VDM: லூக்கா 11:11-13
[11]உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?
[12]அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
[13]பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் *தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.*
[25/09 9:26 pm] Jeyanti Pastor VDM: Ya, Pastor this is told for both Men n Women.
[25/09 9:27 pm] Paul 3 VDM: ப்ரோ அவர் நாமம் எங்கனா பேசுறோம் மோ அங்க அவர் இருப்பார்
[25/09 9:33 pm] Charles Pastor VDM: 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
*இந்த வசனத்தில் 👆 விசுவாப்பவர்கள் தேவனுடைய பிள்ளைகள் ஆகும்படி அதிகாரம் கொடுக்கிறார்* பிள்ளைகள் அல்ல.
ஆனால்👇
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
ரோமர் 8
*இந்த வசனத்தின் படி பிள்ளைகள் ஆகிறார்கள்*
ஆவியணவரால் நிரப்பப் படாமல் எப்படி அவரால் நடத்தப்பட முடியும்.....?
[25/09 9:40 pm] Ebi Kannan Pastor VDM: யூதா 1:19
[19]இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.
[25/09 9:41 pm] Justin VDM: 1கொரி.4:7,8
அன்றியும் உன்னை விசேஷித்தவனாக்கும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாரட்டுகிறாய்?
இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐஸ்வர்யவான்களாயிருக்கிறீர்களே....
கர்த்தருக்குள் மேன்மைபாராட்டுதல் என்பது நிறைவானது. திருப்தி அடைந்த ஜீவ வாழ்க்கை வாழ்வது.
எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு விட்டு, பெற்றுக்கொள்ளாததை போல மேன்மை பாராட்டுவது ஐஸ்வரியவானாக இருந்தும் தரித்திரனாகவே வாழும் குறைவுபட்ட வாழ்க்கை வாழ்வதாகும்.
[25/09 9:44 pm] Justin VDM: யோவான் 10:10
.....நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
[25/09 9:46 pm] Jeyanti Pastor VDM: Oh, not like that கர்த்தர் கொடுத்துள்ள அத்தனை உன்னதத்திற்குரிய அத்தனை ஆசீர்வாதங்களும் என்னிடத்திலுண்டு, இது மேன்மைப்பாராட்டுதலில்லை. கிருபையென்று ஒப்புக் கொள்கிறேன்
[25/09 9:48 pm] Charles Pastor VDM: இரட்சிப்பு என்பது வேறு ஆவியின் ஞானஸ்நானம் என்பது வேறு இதற்கான ஆதாரம் 👇
[25/09 9:58 pm] Ebi Kannan Pastor VDM: 1 கொரிந்தியர் 14:16-17
[16]இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.
[17]நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.
[25/09 10:28 pm] Charles Pastor VDM: இரட்சிப்பு என்பது ஒரு மனிதன் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புப் பெற்று இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது ஆகும். இதற்கு ஆவியானவர் உதவி செய்கிறார். பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துகிறார் அவரே (யோவா 16:8) அதுமட்டுமின்றி இரட்சிக்கப்படு கிறவர்களின் உள்ளத்தில் சாட்சி கொடுக் கிற வரும் அவரே (ரோ 8:16). இவ்வாறு அந்த மணிதன் இர ட்ச்சிக்கப்படும்போது சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கம் ஆகிறான். இதை ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள் ளாக ஞானஸ்தானம் பெறுதல் என்று (1கொரி 12:13) கூறுகிறது. ஆவியானவர் கிறிஸ்துவுக்குள் ஞானத்தாலும் தருவதான இரட்சிப்பை கிறிஸ்துவுக்குள் முக்கிய யிடபடுதல் என்று (எபே 1:13) கூறுகிறது.
ஆனால்,
பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் கிறிஸ்து நாமக்கு தருகிறார் (மத் 3:11). ஆவியானவர் கிறிஸ்துவின் சரீரதிற்குள் ஞானஸ்நானம் தருவதும் (1கொரி 12:13), கிறிஸ்து ஆவியானவர்குள் ஞானஸ்நானம் தருவதும் (எபே 1:13) ஒரே நிகழ்வு அல்ல.
அப்போ 8:12 இல் சமாரியர் தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றனர். ஆனால் அதன் பின்னர் பேதுருவும் யோவான்னும் பார்க்கும் போது அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருக்க வில்லை (அப் 8:14 -17). விசுவாசித்து போது அல்ல (இரட்சிக்கப்பட்ட பொது), தண்ணீர் ஞானஸ்நானம் பெற்ற போதும் அல்ல, பேதுருவும் யோவான்னும அவர்கள் மீது கைகளை வைத்தபோது தான் பரிசுத்த ஆவியை பெற்றார்கள் (அப் 8:18). எனவே இரட்சிப்பு என்பது வேறு ஆவியின் ஞானஸ்நானம் என்பது வேறு.
தே கருத்தை
அப் 19:1-6; 10:44-48 விவரிக்கிறது.
[25/09 10:32 pm] Charles Pastor VDM: இந்த அனுபவம் பெரும் யாவரும் அந்நிய பாஷை பேசினர்.
[26/09 1:54 am] Levi Bensam Pastor VDM: *பாலசீர் லாரியையும் சேர்த்து அழகாக சொன்னீர்கள், பாகாலுக்கு முடங்காத 7000பேரை தேவன் மீதி வைத்தாலும் பாகால் தீர்க்கதரிசிக்கே சவால் விடுகிற வெளிப்படையான எலியாவும் தேவைதான்*
[26/09 6:06 am] Charles Pastor VDM: நான் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கிறேன் "வேதத்தில் தண்ணீர் ஞானஸ்நனம் எடுத்தவர்கள் ஆவியின் திருமுழுக்கு பெற்று அந்நிய பாஷை பேசினர். ( இது உடனே நடைபெறவில்லை என்றாலும் அந்த அனுபவம் கட்டாயம் பெற வேண்டும் என்பதனால் அப்போஸ்தலர்கள் அதை குறித்து போதித்து ஜெபித்தார்க கள்).
ஆவியினால் பிரவாதவன் தேவ இராஜியதில் பிரவேசிப்பதில்லை
அப்படி இருக்க ஒருவன் தான் அவியில் பிறந்தேனா என்பதை எப்படி அடையாளம் காண்பது என்றால்,
வேதத்தில் ஆவியினால் பிறந்தவர்கள் அந்நிய பாஷை பேசினர் அதுவே அடையாளம்.
அந்த அடையாளம் இல்லை என்றால் தான் இன்னும் ஆவியின் பிறக்கவில்லை என்பதை உணர்ந்து அதற்காக பிரயாச படவேண்டும்.
அந்நிய பாஷை பேசும் அனுபவம் இல்லாதது ஏதோ ஒரு குறையாகவே ஆதி திருச்சபையினர் கருதினர் என்பதை அப் 8:15-17; 19:1-6 கூறுகிறது.
[26/09 6:12 am] Rooban Pastor VDM: அனைத்து சபை போதகர்களுக்கும் தெரியும் உங்களுக்கு தெரிய வில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம்
[26/09 6:59 am] Thomas Pastor Brunei VDM: ஆவியினால் பிரவாதவன் தேவ இராஜியதில் பிரவேசிப்பதில்லை
அப்படி இருக்க ஒருவன் தான் அவியில் பிறந்தேனா என்பதை எப்படி அடையாளம் காண்பது என்றால்,
வேதத்தில் ஆவியினால் பிறந்தவர்கள் அந்நிய பாஷை பேசினர் அதுவே அடையாளம்.
அந்த அடையாளம் இல்லை என்றால் தான் இன்னும் ஆவியின் பிறக்கவில்லை என்பதை உணர்ந்து அதற்காக பிரயாச படவேண்டும். ❌❌❌❌❌
[26/09 7:11 am] Thirumurugan VDM: நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து ஆராயும் முன்பு, ஒரு காரியத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து, உங்கள் மனதில் இருத்தி வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதென்னவெனில்,
1. *”பரிசுத்த ஆவியின் வாசம்”* (Indwelling of the Holy Spirit) யோவான் 14:16,17; 16:13.
2. *”பரிசுத்த ஆவியின் முத்திரை”* (Sealing of the Holy Spirit) எபேசியர் 1:13,14; 4:30.
3. *”பரிசுத்த வியின் ஞானஸ்நானம்”* (Baptism of the Holy Spirit) 1 கொரி. 12:13.
4. *”பரிசுத்த ஆவியின் அபிஷேகம்”* (Anointing of the Holy Spirit) 1 யோவான் 2:20.
5. *”பரிசுத்த ஆவியின் புதிதாக்குதல்”* (Regeneration of the Holy Spirit) தீத்து 3:5.
ஆகிய மேலே குறிப்பிட்டுள்ள பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள் ஒருவிசை மாத்திரம் விசுவாசிகளாகிய நம்முடைய வாழ்வில் நிகழும் நிகழ்வாகும்.
மாறாக எபேசியர் 5:18 ல் கூறப்பட்டுள்ள *”பரிசுத்த ஆவியின் நிறைவு”* (Filling of the Holy Spirit) ஒன்று மட்டும் தான் தொடர்மானமாக நிகழக்கூடிய நிகழ்வாகும். *”பரிசுத்த ஆவியின் நிறைவு”* நாம் மரிக்கும்வரை வரை அல்லது நாம் பரிசுத்த ஆவியானவரோடு கிறிஸ்துவின் வருகையில் எடுக்கப்படும் வரை தொடர்ச்சியாக நம்முடைய அனுதின கிறிஸ்தவ வாழ்வில் காணப்படவேண்டிய ஒரு நிகழ்வாகும்.
(தொடரும்...)
[26/09 7:15 am] Thomas Pastor Brunei VDM: Being Baptized in the Holy spirit is different from being baptized BY the Holy Spirit into one body as mentioned in 1 Cor 12:13
[26/09 7:20 am] Thomas Pastor Brunei VDM: When we are born again ( Regeneration, born anew by the Holy Spirit) we are Baptized into the Body of Christ by the Holy Spirit..
[26/09 7:28 am] Thirumurugan VDM: Please bring the distniction with references and explain please
[26/09 7:28 am] Rooban Pastor VDM: அங்கு குறிப்பிட்ட வசனத்திற்கும் அங்கு குறிப்பிடப்பட்ட கருத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது
[26/09 7:28 am] Thomas Pastor Brunei VDM: all visuvaasigal aaviyinaal piranhavargal.... Every Born again believer is born by the Holy Spirit..
[26/09 7:29 am] Rooban Pastor VDM: சகோதரரே நாம் எழுத்து பதிவிலே பேசுவோம் நான் அவ்வாறு உங்களிடம் பேச விரும்புகிறேன்
[26/09 7:30 am] Thomas Pastor Brunei VDM: But.. anaal ella visuvaasiyum aaviyinal niramba vendum.. intha irandum different
[26/09 7:40 am] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 8:15-18
[15]இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
[16]அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
[17]அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.
[18]அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
அப்போஸ்தலர் 19:1-7
[1]அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
[2]நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
[3]அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
[4]அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
[5]அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
[6]அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.
[7]அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்.
[26/09 7:41 am] Ebi Kannan Pastor VDM: இது உங்களுக்கு வசன ஆதாரமில்லையா நண்பர்களே❓
[26/09 7:43 am] Ebi Kannan Pastor VDM: இங்கு உங்கள் அந்நியபாஷைக் கேள்விகளை நேர்மறையாக கேட்கவும்
ஆங்கிலம் அவசியப்படாமல் பயன்படுத்தக்கூடாது
[26/09 7:43 am] Rooban Pastor VDM: எந்த வசனத்தில் அந்நிய பாஷை என்பது அடையாளம் என்ற வார்த்தை இடம்பெறுகிறது மற்றும் அந்நியபாஷையை கட்டாயப்படுத்தி அதைப் பேசாதவர்கள் ஆவியினால் பிறக்கவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறதா
[26/09 7:44 am] Rooban Pastor VDM: எந்த spelling mistake இந்த
[26/09 7:44 am] Rooban Pastor VDM: இடம்பெருகிறதா spelling mistake
[26/09 7:45 am] Ebi Kannan Pastor VDM: நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல வேதம் சொல்லாது
வேதத்தில் சொல்லப்பட்டவைகளை நாம் கருத்தாக கவனித்தால்தான் புரியும்
[26/09 7:46 am] Ebi Kannan Pastor VDM: முதல்ல சம்மந்தமே இல்லாத வசனம் என்ற நீங்கள் குறைகூறினது தவறா ❓ இல்லையா
[26/09 7:48 am] Rooban Pastor VDM: நீங்கள் கூறின கருத்துக்கு அந்த வசனம் சம்பந்தம் அற்றது நான் கூறியதில் எவ்வித தவறும் இல்லை
[26/09 7:48 am] Ebi Kannan Pastor VDM: இதை வாசிக்க இயலவில்லை நண்பா
[26/09 7:49 am] Rooban Pastor VDM: கருத்துகள் தேவையல்ல வசனமே தேவை அந்த வசனத்தை கருத்தாய் கவனித்தால்தான் உங்களிடம் இந்த கேள்வியை எழுப்பினேன்
[26/09 7:50 am] Ebi Kannan Pastor VDM: அவர் பேசினதற்கு சம்மந்தமாகதான் அவர் பதிந்துள்ளார்
நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் மறுக்கிறீர்கள்
[26/09 7:50 am] Ebi Kannan Pastor VDM: என்ன கவனித்தீர்கள்❓
[26/09 7:51 am] Senthil Kumar Bro VTT: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவருடைய 12 சீடர்கள், பவுல், யோவான் இப்படி யாரும் அந்நிய பாஷை பேசியதாக வசனம் உண்டா....?????
[26/09 7:51 am] Rooban Pastor VDM: நீங்களே அந்த வசனத்தை தெளிவாய் கருத்தாய் வாசித்துப் பாருங்கள் அந்தக் கருத்து தவறு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும் கொடுத்த வசனத்திற்கு தவறான வியாக்கியானம் செய்யக்கூடாது சகோதரரே
[26/09 7:52 am] Rooban Pastor VDM: நீங்கள் சொன்ன கருத்துக்கள் அதில் இடம்பெறவில்லை என்பதே கவனித்தேன்
[26/09 7:53 am] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 2:1-4
[1]பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
[2]அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
[3]அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
[4]அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
👆 இதில் அந்த பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் அடக்கமே
[26/09 7:53 am] Aasai Elavendan Pastor VDM: ஐயா இப்படி புத்தகங்களில் ஒரு எழுதப்பட்டதாம் எழுதப்பட்டது எல்லாம் அந்த எழுத்தாளரின் சொந்த கருத்துக்களாக இருக்கலாம் நேற்றைய தினம் கூறினீர்கள் வேதத்தை விட்டு வெளியில் இருந்து இருக்கக்கூடியது எல்லாமே தவறானது என்றும் பொய்யானது என்றும் கூறினர் அதுமட்டுமன்றி இதை வாசிக்க இயலவில்லை
[26/09 7:54 am] Rooban Pastor VDM: எழுத்தக்கள் மங்கிய நிலையில் உள்ளன
[26/09 7:54 am] Ebi Kannan Pastor VDM: குளப்பக்கூடாது சகோ
அதில் என்ன கவனித்தீர்கள் என்று சொல்லவும்
[26/09 7:55 am] Charles Jebaraj VDM: எழுத்துக்கள் தெரியும் படி பதிவு செய்கிறேன்
[26/09 7:55 am] Ebi Kannan Pastor VDM: அவர் என்ன தவறான வியாக்கியானம் பண்ணினார்
[26/09 7:57 am] Thirumurugan VDM: Please explain the differences...பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் and பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் with reference please
[26/09 7:59 am] Rooban Pastor VDM: நான் குழப்பவில்லை சகோதரரே நீங்கள் குழம்பாமல் இருந்தால் நலம் நீங்கள் கூறிய கருத்தை மறுபடியும் சொல்லுகிறேன் நீங்க சொல்லியிருக்கிறீர்கள் வேதத்தில் ஆவியினால் பிறந்தவர்கள் அந்நிய பாஷை பேசினார் அதுவே அடையாளம் அந்த அடையாளம் இல்லையென்றால் தான் இன்னும் ஆவியின் பிறக்கவில்லை என்பதை உணர்ந்து அதற்காக பிரயாசப்பட வேண்டும் என்று இந்த கருத்துக்கு நீங்கள் கோடிட்ட வசனம் அப்போஸ்தலர் எட்டுஆம் அதிகாரம் பதினைந்தாம் வசன முதல் 17ம் வசனம் வரை பத்தொன்பதாம் அதிகாரம் ஒன்றாம் வசனம் முதல் ஆறாம் வசனம் வரை இந்த வசனத்தை அந்த கருத்துக்கு சம்மந்தப் படுத்துவது தவறான கருத்து அந்த வசனம் கூறுவது வேறு நீங்கள் கூறுவது வேறு
[26/09 7:59 am] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 19:2
[2]நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
[26/09 8:00 am] Ebi Kannan Pastor VDM: விசுவாசிகள் அனைவரும் பரிசுத்தாவியைப் பெற்றவர்கள் அல்ல
[26/09 8:01 am] Rooban Pastor VDM: அய்யா தயவாய் பொருத்துங்கள் அவரிடம் பேசி முடித்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன் நன்றி
[26/09 8:01 am] Senthil Kumar Bro VTT: அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே *வெவ்வேறு* *பாஷைகளிலே* பேசத்தொடங்கினார்கள்.
அப்போஸ்தலர் 2:4
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஐனங்கள் கூடிவந்து, *தங்கள்* *தங்கள்* *பாஷையிலே* அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:6
கிரேத்தரும், அரபியருமாகிய நாம் *நம்முடைய* *பாஷைகளிலே* இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
அப்போஸ்தலர் 2:11
இது அந்நிய பாஷை என்று எழுதப்படவில்லை....
[26/09 8:02 am] Ebi Kannan Pastor VDM: அந்த வசனம் என்ன கூறுகிறது அதை தெளிவாக சொல்லவும்
[26/09 8:03 am] Rooban Pastor VDM: இன்று பேசப்படும் தலைப்பு வேறு பரிசுத்த ஆவி அல்ல அந்நியப் பாஷை என்பது தான் தலைப்பு
[26/09 8:04 am] Ebi Kannan Pastor VDM: பேசினவர் அந்த பாஷைகளுக்கு அந்நியமானவர்களா❓
இல்லையா❓
[26/09 8:05 am] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 2:13-15
[13]மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
[14]அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
[15]நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
👆 பெரும்பாண்மை மக்கள்கள் இவர்கள்தான்
[26/09 8:05 am] Rooban Pastor VDM: அந்த வசனம் நீங்கள் கூறும் கருத்தை கூறவில்லை
[26/09 8:06 am] Ebi Kannan Pastor VDM: இரண்டுமே ஒன்றையொன்று பிரிக்க இயலாது
[26/09 8:07 am] Ebi Kannan Pastor VDM: நான் கேட்டது அந்த வசனம் கூரும் பகுதிகளுக்கான உங்கள் விளக்கத்தை
[26/09 8:08 am] Senthil Kumar Bro VTT: அப்படியானால்.... தமிழனாகிய நான் ஹிந்தி இல் பேசினால் அது எனக்கு அந்நிய பாஷை..... அந்நிய பாஷை *தேவனிடத்தில்* *ரகசியம்*பேசுவது .... ரகசியம் யாருக்கும் தெரிய கூடாதே.... அங்கே பேசிய பாஷைகள் நிறைய பேருக்கு புரிந்ததே..... அது அந்நிய பாஷையா....???
[26/09 8:09 am] Senthil Kumar Bro VTT: அந்நிய பாஷை என்றால் என்ன....?
[26/09 8:10 am] Rooban Pastor VDM: அந்த வசனங்கள் பரிசுத்த ஆவியை பெறுவதை பற்றி பேசுகிறது அந்நிய பாஷை அடையாளம் இல்லை என்கிறவர்கள் ஆவியினால் பிறக்கவில்லை என்ற கருத்துக்கான ஆதாரம் கிடையாது
[26/09 8:11 am] Rooban Pastor VDM: அப்படி என்றாள் தலைப்பை நீங்கள் பரிசுத்த ஆவியாக வைத்திருக்க வேண்டும் ஆனால் அந்நிய பாஷை என்ற தலைப்பில் பேசுகிறோமே
[26/09 8:11 am] Ebi Kannan Pastor VDM: அவர்களுக்கு புரிய தேவன் அநிகிரகித்ததினால் அந்நியபாஷை அந்நியபாஷை இல்லாமல் போய்விடுமா?
[26/09 8:12 am] Ebi Kannan Pastor VDM: ஆம் அந்நியபாஷையைதான் தேவனைப் புகழ்வதற்காக பேசினார்கள்
[26/09 8:14 am] Ebi Kannan Pastor VDM: நான் கேட்டதற்கு பதில் நீங்கள் கூறவே இல்லையே
நான் கேட்டது அந்த வசனம் கூரும் பகுதிகளுக்கான உங்கள் விளக்கத்தை
[26/09 8:17 am] Rooban Pastor VDM: அதைத்தான் நான் கூறி விட்டேனே நான் எழுதினதை வாசித்துப் பாருங்கள் பரிசுத்த ஆவியானவர் பெருவது பற்றி பேசுகிறது உங்கள் கருத்துக்கு அந்த வசனத்தில் எவ்வித இணைப்பும் இல்லை
[26/09 8:17 am] Ebi Kannan Pastor VDM: பரிசுத்தாவிதான் தலைப்பே
அந்த பரிசுத்தாவியின் நிறைவை பெற்றவர்கள்தான் அந்நியபாஷைகளில் பேசுவார்களா இல்லையா என்பதுதான் அதன் சாரம்சம்
[26/09 8:18 am] Ebi Kannan Pastor VDM: பரிசுத்தாவியை யார் பெற்றார்கள்❓
எப்படி பெற்றார்கள்❓
பெற்றபோது என்ன நடந்தது❓
விளக்கம் சரியாக தரவும்
[26/09 8:19 am] Rooban Pastor VDM: அந்நிய பாஷை பேசுவார்களா இல்லையா என்பதை பற்றி நான் கேட்கவில்லை போட்ட அந்த பதிவு வேதத்தில் இல்லாத ஒன்று
[26/09 8:20 am] Ebi Kannan Pastor VDM: வேதத்தில் இல்லாத பதிவாக எது பதியப்பட்டது❓
[26/09 8:22 am] Elango: கள்ள சரித்திரத்தை ஆதாரத்தை முன்வைக்கும் தாங்கள், இப்போது வேத ஆதாரத்தை கேட்பது ஏன்?
[26/09 8:22 am] Elango: வேத வாக்கியங்களில் இங்கேயாவது அல்லது வேறேங்காவது *முதல் நூற்றாண்டின் முடிவில் வரங்களில் மூலமாக உள்ள ஆவியானவரின் வெளிப்பாடு நின்று போகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா*❓
[26/09 8:24 am] Rooban Pastor VDM: சகோதரரே பரிசுத்த ஆவி என்ற தலைப்பை நாம் முன்பே தியானித்து முடித்து விட்டோமே நீங்கள் போட்ட பதிவு அந்நிய பாஷை பெற்றவன் ஆவியினால் பிறந்தவன் அந்நியபாஷையை பேசாதவன் ஆவி இல்லாதவன் என்பது
[26/09 8:25 am] Elango: ஆவிக்குரியவன் மட்டுமே ஆவிக்குரியவைகளை ஏற்பான், மாம்சத்திற்க்குரியவனுக்கு பைத்தியமாக இருக்கும்.
[26/09 8:26 am] Elango: அந்நியபாஷை ஓய்ந்தததற்க்காக ஒரு வேத ஆதாரத்தை காட்ட வேண்டும். மேலும் கள்ள வரலாற்றை முன் வைக்கக்கூடாது.
[26/09 8:27 am] Ebi Kannan Pastor VDM: பரிசுத்தாவியை யார் பெற்றார்கள்❓
எப்படி பெற்றார்கள்❓
பெற்றபோது என்ன நடந்தது❓
விளக்கம் சரியாக தரவும்
[26/09 8:29 am] Rooban Pastor VDM: நான் உங்களுக்கு முன்பதாக ஒரு வரலாற்றையும் முன்வைக்கவில்லை ஒரு சாதாரண கேள்விக்கே உங்களால் பதில் கொடுக்க முடியவில்லை என்பதால் ஏதேதோ சொல்லி கள்ள உபதேசம் என்று ஆதாரமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் இதிலிருந்து அதுதான் தெளிவாகத் தெரிகிறது
[26/09 8:30 am] Elango: கள்ள சரித்தரத்தை இருக்கிறதா முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் அந்நிய பாஷை ஓய்ந்துப்போகும் என்று எங்கிருக்கிது?
[26/09 8:30 am] Ebi Kannan Pastor VDM: வேதத்தின் சத்தியங்களை வேதத்திற்கு சம்மந்தமற்றதாக மாற்ற முயல்வது பாவமாகும்
[26/09 8:31 am] Ebi Kannan Pastor VDM: 👌 சூப்பர் கேள்வி
[26/09 8:32 am] Sam Jebadurai Pastor VDM: குழந்தை ஞானஸ்நானம் குழந்தைதனமாக பேச வைக்கிறது
[26/09 8:32 am] Elango: முற்றிலும் தவறான துருஉபதேசம்.
[26/09 8:33 am] Rooban Pastor VDM: சீஷர்கள், தேவனால், அந்நிய பாஷை பேசி தீர்க்க தரிசனம் சொன்னார்கள் இதை வைத்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் இந்த வசனம் அந்நிய பாஷை பெற்றவன் ஆவியைப் பெற்றவன் பேசாதவன் ஆவியைப் பெறாதவன் என்று சொல்கிறது என்று கூறுகிறீர்களா
[26/09 8:33 am] Ebi Kannan Pastor VDM: வேதாகமம் எங்கு ஒருங்கிணைக்கப்பட்டது வேதாமம் வந்த உடனேயே வரங்கள் வல்லமைகள் ஒழிந்து போகனுமா❓❓
கண்டிப்பாக இவைகள் அறிவற்ற பதிவுகள் ஆகும்
[26/09 8:34 am] Elango: ரோமர் 8:14
[14] *மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.*☝️
[26/09 8:34 am] Sam Jebadurai Pastor VDM: நேற்று பெந்தேகோஸ்தே இயக்கம் குறித்து சகோ. திரு பதிவிட்ட வரலாறு இந்திய வரலாற்றை மற்றும் இடைக்கால பெந்தேகோஸ்தே அனுபவங்களை மறைத்து கொடுக்கப்பட்ட பொய்
[26/09 8:35 am] Sam Jebadurai Pastor VDM: வேதாகமத்தை விக்கிரகம் போல வணங்கும் நபர்கள் இருக்கிறார்கள்...
[26/09 8:36 am] Elango: *தனக்கே பக்திவிருத்தி உண்டாக்கும் அந்நிபாஷை*👍👍👍👍💪💪💪💪💪💪🌟🌟🌟🌟🌟🌟😀😀😀😀
அர்த்தம் கூறப்படாத அந்நிய பாஷை பேசுகிறவருக்கு பக்திவிருத்தி உண்டாகச் செய்கிறது, அதாவது ஒருவருடைய விசுவாசத்தையும்,💪💪 ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஊன்றக்கட்டுகிறது.
எனென்றால் அது அவனை அல்லது அவளை உள்ளன மனதினால் இல்லவிட்டலும் ஆவியில் தேவனோடு நேரிடையாத் தொடர்புக்கொள்ள செய்கிறது எபே 3:16, யூதா 20, தான் இந்தவிதமாகவும்ந், உள்ளான மனதிலும் தேவனோடு ஜெபத்திலும், ஐக்கியங்கொள்வதிலும் ஈடுபடுவதாக ப்வுல் கூறுகிறான். வச 14-15👆👆👆👆💪💪💪
[26/09 8:37 am] Sam Jebadurai Pastor VDM: கோவில்பட்டியில், நீலகிரியில் 1901 க்கு முன்பே அன்னியபாஷை அனுபவங்கள் இருந்தது வரலாறு
[26/09 8:37 am] Ebi Kannan Pastor VDM: ஆமாம் அங்கு அப்படிதான் போட்டுள்ளது
அந்த வசனத்திற்கு சம்மந்தப்பட்ட இன்னும் சில கேள்விகளுக்கு பதில்கள் சொல்லவும்.
அங்கு சீஷர்களாக இருந்தவர்கள் மறுபிறப்படைந்த இயேசுவின் விசுவாசிகளா❓ இல்லையா❓
[26/09 8:37 am] Elango: அப்ப திரு ஐயா சொல்லும் வரலாறை கள்ள ஆதாரம் என்று நீங்கள் ஏன் ஏற்க மறுக்கவில்லை. அதைத்தானே நேற்று முன்வைத்தீர்கள்❓
[26/09 8:38 am] Aasai Elavendan Pastor VDM: ஐயா வேதத்திலேயே ஆதாரத்தை கேட்டால் அதையும் நீங்கள் கொடுக்க மாட்டீர்கள் பின்னணி யத்தை கேட்டால் அதையும் கொடுக்க மாட்டீர்கள் வரலாற்றை கேட்டாள் அது பொய்யானது என்று சொல்லுவீர்கள் இயேசு கிறிஸ்துவினுடைய சீடன் தோமா இந்தியாவிற்கு வரவே இல்லை அதுவும் பொய்யான வரலாறு என்று கூறுவீர்கள் இப்படியிருக்க எப்படி நான் உங்களுக்கு பதிலாகக் கொடுப்பது?
[26/09 8:38 am] Thirumurugan VDM: 100க்கு 1000 சதவிகிதம் தவறு!!!
[26/09 8:39 am] Elango: நீங்கள் முன்வைக்கும் கள்ள வரலாறும் 10000000 சதவீம் தவறு
[26/09 8:39 am] Ebi Kannan Pastor VDM: வேதத்தில் இல்லாதவைகளை வைத்துதான் வேதத்தை வேதமென்று நிரூபிக்கனுமா❓
[26/09 8:40 am] Elango: முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் அந்நிய பாஷை ஓய்ந்துப்போகும் என்று கள்ள உபதேசத்தை வேதத்திலிருந்து காட்ட முடியுமா?
[26/09 8:40 am] Ebi Kannan Pastor VDM: 100 க்கு 1000 சதவிகிதமென்று நீங்கள் கூறுவதுதான் தவறு😂😂😂
[26/09 8:40 am] Rooban Pastor VDM: வேதத்தை தலைகீழாக திருப்பி வாசித்தாலும் நீங்களும் கூறிய கருத்து அதில் இல்லை என்பது அனைத்து வேத அறிஞர்களுக்கும் தெரிந்ததே நீங்கள் சொல்லும் கருத்து புதிய commentary எழுதிதான் சேர்க்க முடியும்
[26/09 8:42 am] Elango: அதேப்போல வேதத்தை நீங்கள் ஒழுங்காக வாசித்தாலும் குழந்தை ஞானஸ்நானம், முதல் இரண்டாம் நூற்றாண்டில் அந்நியபாஷை ஓய்ந்துப்போகும் என்ற ஆதாரமும் இல்லை
[26/09 8:43 am] Elango: நானும் சும்மா கேட்கிறேன் ஐயா, பைபிளிள் கூறப்படாத ஒன்றை வரலாற்றை முன்வைத்து ஆதாரத்தை வைப்பது சரிதானா?
[26/09 8:43 am] Rooban Pastor VDM: நீங்கள் திரு சகோதரரை என்னுடன் கொண்டுவந்து கோர்க்காமல் நேற்று நீங்கள் பதிந்த கருத்து வேகத்தின் அடிப்படையில் தவறு என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் வேதத்தில் இல்லாத கருத்தைக் தாங்கள் கூறிவிட்டு மற்றவர்களைக் தவறான கருத்து கூறுகிறார்கள் என்று கூறுவது தவறு
[26/09 8:45 am] Aasai Elavendan Pastor VDM: உங்களால் அப்போஸ்தலர்கள் எல்லோரும் இதையேமுக்கிய படுத்தி போதித்தார்கள் என்று கூறமுடியுமா சகோ
[26/09 8:46 am] Rooban Pastor VDM: அந்நிய பாஷை ஓய்ந்து போகும் ஓய்ந்து போக வில்லை என்று நான் ஒரு கருத்தும் கூறவில்லை சகோதரரே நேற்றிலிருந்து நான் கேட்ட உங்கள் பதிவு தவறு என்று கேட்ட கேள்விக்கு பதில் கூற இயலாமல் அங்கும் இங்கும் ஒவ்வொருவராய் இழுத்து பேசுவது தாங்களே
[26/09 8:47 am] Elango: அப்போஸ்தலர்கள் அந்நியபாஷை முதல் இரண்டாம் நூற்றாண்டில் ஓய்ந்துபோகும் என்று சொன்னார்களா? வேத ஆதாரம் உண்டா?
[26/09 8:50 am] Elango: நல்ல சரித்திரத்தை சொல்லும் ஒரே ஆதாரம் வேதாகம்.
*கள்ள சரித்திரமும் உண்டு*
முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் அந்நிய பாஷை ஓய்ந்துப்போகும் என்று கள்ள உபதேசத்தை வேதத்திலிருந்து காட்ட முடியுமா?
[26/09 8:50 am] Rooban Pastor VDM: நான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தாள் நான் அவர் கூறியதே தவறு என்று கூறுகிறனா சரி என்று கூறுகிறேனா என்பதை தாங்கள் தெரிந்துகொள்ளமுடியும் பதில் தர உங்களால் இயலுமா
[26/09 8:51 am] Elango: அப்ப நீங்களும் சகோ திரு வைக்கும் வேதம் முன்சொல்லாத ஆதாரத்தை ஏற்றதாக அர்த்தம் கொள்ளலாமா?
[26/09 8:51 am] Rooban Pastor VDM: நான் ஏற்றுக்கொள்வது, மறுப்பு சொல்வது என்பதை தாங்கள் முடிவெடுப்பது தவறு
[26/09 8:52 am] Rooban Pastor VDM: திரும்பத் திரும்ப பதிலளிக்க முடியாமல் திரு சகோதரரை என்னிடம் கோர்ப்பது உங்களிடம் பதில் இல்லை என்று நான் அர்த்தம் கொள்ளலாமா
[26/09 8:54 am] Ebi Kannan Pastor VDM: நீங்கள் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலுமா❓
[26/09 8:54 am] Elango: அந்நியபாஷை என்ற தேவ வரத்தை தேவனுடைய வரம் இப்போதும் செயல் படுகிறது என்று ஏற்கிர்களா என்ற உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக முதலில் கூறவும்
[26/09 8:54 am] Aa Darvin Sekar Brother VDM: சாப்பிட்டவனுக்குதான் தெரியும் ருசி நான் அனுபவபூர்வமாய் பேசுகிறேன் உங்களுக்கு தெரியாது
[26/09 8:58 am] Rooban Pastor VDM: நான் கேட்கும் கேள்விகளுக்கு தாங்கள் பதில் தர இயலவில்லை என்றால் உங்களுக்கு இயேசு கிறித்துவை வந்து கூறினாலும் அவரைப் நம்ப மாட்டீர்கள் நீங்கள் பதில் தராமல் என்னால் பதில் தர இயலாத ஒன்று நீங்கள் கூறுவது போல் அந்நிய பாஷை பேசினவன் ஆவியை பெற்றவன் அந்நிய பாஷை பேசாதவன் ஆவி இல்லாதவன் என்று இதுவரை தேவனால் வழங்கப்பட்ட வேத வசனங்களில் ஒரு ஆதாரம் கூட இல்லை புதிதாய் வேண்டுமென்றால் ஒரு நிருபத்தை எங்களுக்கு எழுதி கொடுத்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்
[26/09 8:59 am] Rooban Pastor VDM: உண்மைதான் சகோதரரே நான் அதைப்பற்றி ஒரு வாதமும் வைக்கவில்லையே
[26/09 8:59 am] Ebi Kannan Pastor VDM: அந்நியபாஷை அடையாளத்துடன் ஆவியானவரைப் பெறாதவன் ஆவியில்லாதவன்தான்
[26/09 9:01 am] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 19:2
[2]நீங்கள் விசுவாசிகளானபோது, *பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான்.?*
எதற்காக இந்த கேள்வி கேட்டார்
[26/09 9:01 am] Ebi Kannan Pastor VDM: 1 கொரிந்தியர் 13:8-10
[8]அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.
[9]நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.
[10]நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
[26/09 9:02 am] Rooban Pastor VDM: அதைத்தான் நான் சொல்லுகிறேன் இந்தக் கருத்தை வேத வசனம் இல்லாத ஆதாரமற்ற கருத்து என்று முன்பே கூறிவிட்டேன் வேண்டுமென்றால் இதை புதிய commentry எழுதி சேர்த்து கொள்ளலாம்
[26/09 9:02 am] Thirumurugan VDM: டைப் செய்து போட்டாலும் வாசிக்க மனமில்லை. ஆடியோ பதிந்தாலும் கேட்க மனமில்லை...வேறு என்ன செய்ய சொல்லுங்க. உங்களிடம் நான் கேட்ட ஒரு கேள்விக்காவது பதில் கொடுத்திருக்கிறீர்களா???
[26/09 9:03 am] Ebi Kannan Pastor VDM: நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விளக்கம் சகோதரா
[26/09 9:04 am] Rooban Pastor VDM: சகோதரரே கற்றுக்கொள்ளும் அளவிற்குcomparision is not correct brother
[26/09 9:05 am] Ebi Kannan Pastor VDM: உங்களுக்கு சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லை ஆதலால் இப்படி பொய்யைக் கூறி மழுப்புகிறீர்கள்
[26/09 9:06 am] Ebi Kannan Pastor VDM: அப்படி நீங்களாக கனிப்பது தவறு
வேதத்தை நன்றாக வாசித்துக் கற்றுக்கொள்ளவும்
[26/09 9:12 am] Rooban Pastor VDM: நீங்கள் சொல்லுவதுபோல் அந்நிய பாஷை பேசும்படி வழி நடத்தப்படாத மற்ற சபை விசுவாசிகள் விசுவாசிகள் அல்ல முன்பு அந்த சபைகளில் நாட்பட்டு மரித்துப் போன விசுவாசிகளும் பரலோகம் செல்ல மாட்டார்கள் இதுவரை அவர்களை வழிநடத்துகிற போதகர்கள் அனைவரும் கள்ளப் போதகர்கள் அவர்கள் வேதத்தைப் படிக்க வில்லை நீங்கள் மாத்திரம்தான் வேதத்தை வரலாற்றோடு வசனத்தோடு அனுபவத்தில் உறுதி செய்திருக்கிறார்கள் மிகவும் தவறான கருத்து இது நான் கணித்து பேசவில்லை அப்படி பேச நான் ஜோசியம் பார்ப்பவனும் இல்லை வேதத்தை வேத வசனத்தின் அடிப்படையில் உங்களிடம் பேசுகிறேன் நன்றி
[26/09 9:16 am] Ebi Kannan Pastor VDM: வேதத்தின் சத்தியங்களை ஜோசியத்தோடு சமமப்படுத்துவது முற்றிலும் தவறு
அந்நியபாஷை பேசாதவன் பரலோகத்திற்கு வரமாட்டான் என்று நான் எங்காவது கூறினேனா❓
அந்நியபாஷையில் பேசாதவன் ஆவியற்றவன் என்பதுதான் என் பதில்
[26/09 9:17 am] Thirumurugan VDM: இது தெளிவு அல்ல உங்களது யூகம்... நான் குறிப்பிட்டது போல சரியான வரலாறை கொண்டுவாருங்கள்..
[26/09 9:18 am] Rooban Pastor VDM: தாங்கள் தான் என்னுடைய கணிப்பு தவறு என்று குறிப்பிட்டுள்ளது ஜோசியம் பார்க்கிறவன் மாத்திரமே கணித்து பேசுவான்
[26/09 9:20 am] Rooban Pastor VDM: அந்நியப் அந்நியபாஷையை பேசாதவன் ஆவி இல்லாதவன் என்று கூறும்போது ஆவி இல்லாதவன் பரத்திற்கு எவ்வாறு செல்வான் என்ற கேள்வியும் சேர்த்து எழும்புகிறது
[26/09 9:20 am] Ebi Kannan Pastor VDM: வேத வசனத்தை புரிந்து பேசுங்கள் சகோதரா
[26/09 9:21 am] Ebi Kannan Pastor VDM: அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்😂
[26/09 9:21 am] Rooban Pastor VDM: சகோதரரே அதை தாங்கள்தான் செய்ய வேண்டும் புரியாமல் பேசுவது தாங்களே
[26/09 9:22 am] Charles Pastor VDM: என்னுடைய கடைசி (அந்நிய பாஷை குறித்த) பதிவு 👇
[26/09 9:23 am] Rooban Pastor VDM: அந்த பதிவை பதில் விட்டது தாங்கள்தான் என்னிடம் ஏன் பதில் கேட்கிறீர்கள் அதை நான்தான் உங்களிடம் கேட்கிறேன் அது வேத வசனங்களின் அடிப்படையில் தவறான கருத்து
[26/09 9:24 am] Ebi Kannan Pastor VDM: சகோதரா உங்களுக்கு வேதம் புரிந்தால் பதில் சொல்லவும்
ஆவியிலே விண்ணம் பண்ணுதல் என்றால் என்ன❓
[26/09 9:26 am] Ebi Kannan Pastor VDM: பரிசுத்தாவியைப் பெறாதவர் இயேசுவை விசுவாசிப்பதில் பலவீனர்களும் பரலோகம் வர வாய்ப்பிருக்கு ஆனால் உறுதியாக சொல்ல முடியாது
[26/09 9:27 am] Rooban Pastor VDM: அய்யா இன்றைய தியானத்தை விட்டுவிட்டு வேறு தியானத்தை என்னிடம் நீங்கள் போட்ட அந்தப் பதிவு வேதத்தின் அடிப்படையில் தவறு அதைப்பற்றி கூறுங்கள் நீங்கள் கொடுத்த வசனத்தை படித்து புரிந்ததால் தான் அது தவறு என்கிறேன்
[26/09 9:28 am] Ebi Kannan Pastor VDM: அன்றைய தலைப்பில்தான் கேள்வி கேட்டுள்ளேன் பதில் தரவும்
சகோதரா உங்களுக்கு வேதம் புரிந்தால் பதில் சொல்லவும்
ஆவியிலே விண்ணம் பண்ணுதல் என்றால் என்ன❓
[26/09 9:28 am] Ebi Kannan Pastor VDM: இன்றைய தலைப்பில்தான் கேள்வி கேட்டுள்ளேன் பதில் தரவும்
சகோதரா உங்களுக்கு வேதம் புரிந்தால் பதில் சொல்லவும்
ஆவியிலே விண்ணம் பண்ணுதல் என்றால் என்ன❓
[26/09 9:29 am] Rooban Pastor VDM: இப்பொழுது நீங்கள் பதிந்த பதிவு முன்பே கூறியது போல புதிய நிருபத்தை எழுதிதான் சேர்க்க வேண்டும் இப்பொழுது நம் கையில் வைத்திருக்கும் வேகத்தில் ஒரு ஆதாரமும் கிடையாது வேண்டுமென்றால் bible சொசைட்டியில் பேசி பாருங்கள்
[26/09 9:29 am] Charles Pastor VDM: *எச்சரிக்கை* *எச்சரிக்கை*
*எச்சரிக்கை* *எச்சரிக்கை*
இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், *அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.*
1 கொரிந்தியர் 14:39
31 *ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும், ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.*
மத்தேயு 12:31
32 *எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.*
மத்தேயு 12:32
[26/09 9:32 am] Rooban Pastor VDM: நான் கேட்ட கேள்விக்கு தாங்கள் எவ்வித பதிலையும் தராமல் என்னிடம் வேறு ஒரு கேள்வியை ஆரம்பித்தால் அது நேர்மையான விவாதம் அல்ல உங்களுக்கு வேதம் புரிந்தால் நீங்கள் கொடுத்த அந்த வசனத்தின் கருத்து தவறு என்பதை புரிந்துகொள்ளுங்கள்
[26/09 9:33 am] Ebi Kannan Pastor VDM: இது உங்களின் தனிப்பட்ட பரியாசம் சகோதரா
வேதத்தில் உள்ள காரியங்களை நாங்கள் விளக்கி கூறும்போது அதை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வேண்டும்
[26/09 9:35 am] Rooban Pastor VDM: வேதத்தின் படி நீங்கள் எடுத்துக் கூறினால் நான் ஏற்க மாட்டேன் என்று நினைக்காதீர்கள் வேதத்தின் படி தவறு என்பதால் மாத்திரமே
[26/09 9:35 am] Ebi Kannan Pastor VDM: மழுப்பாதீர்கள்
வேதம் புரிந்த நீங்கள் உங்களிடம் கேட்ட கேள்விக்கு ஏன் பதில் தரவில்லை❓
[26/09 9:36 am] Ebi Kannan Pastor VDM: எது வேதத்தின்படி தவறு❓
[26/09 10:03 am] Elango: அந்நியபாஷையை தேவனுடைய வரம் என்று ஏற்க்காத தேவனுடைய ஆவியில்லாதவர்களே
[26/09 10:18 am] Prabhu Sasirekha Bro VDM: 1 கொரி 14
5 . நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்
[26/09 10:19 am] Ebi Kannan Pastor VDM: ரூபன் சகோதரா
ரோமர் 8:26
[26]அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
👆 இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா❓
[26/09 10:20 am] Rooban Pastor VDM: ஆம்
[26/09 10:20 am] Jeyanti Pastor VDM: Yes, 1 கொரிந்தியர் 2
11 மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
16 கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
[26/09 10:21 am] Ebi Kannan Pastor VDM: கொஞ்சம் அந்த அனுபவத்தை விளக்க முடியுமா❓
[26/09 10:26 am] Ebi Kannan Pastor VDM: உங்கள் அனுபவத்தை மாத்திரம் விளக்கிவிட்டுட்டு அப்புறம் அமைதியாக இருக்கலாம்
[26/09 10:27 am] Rooban Pastor VDM: என்னுடைய கேள்விக்கு பதில் வராமல் நான் எதையும் விளக்கிக் கூறுவதாக இல்லை சகோதரரே நன்றி
[26/09 10:30 am] Ebi Kannan Pastor VDM: உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் தந்தாகிவிட்டது
இப்பொழுது தாங்கள்தான் விளக்கம் சொல்லவேண்டும்
ரூபன் சகோதரா
ரோமர் 8:26
[26]அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
👆 இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா❓
உங்கள் பதில்
ஆம்
என் கேள்வி
அந்த அனுபவத்தை விளக்கவும்
[26/09 10:31 am] Elango: அந்நிய பாஷைகளை பேசுவதால் மனிதனுடைய ஆவியும், தேவனுடைய ஆவியும் ஒன்றாகக் கலந்து இணைகிறது
ஆகவே விசுவாசி தேவனிடம் நேரிடையாக ஐக்கியம் கொள்கிறார். ( அதாவது ஜெபத்திலும், ஸ்தோத்திரத்திலும், ஆசீர்வதிப்பிலும், நன்றி செலுத்துவதிலும் ) அவர் தன் மனதிலிருந்து பேசாமல், அவருடைய ஆவியின் மட்டத்திலிருந்து வேளியிடவோ அல்லது பேசவோ செய்கிறார் 1 கொரி 14:2,14 ). அவர் தன் மனதளவில் செயல்படாமல் பரிசுத்தாவியின் நேரிடையாக தூண்டுதலினால் ஒருவருக்காகவோ, அல்லது மற்றவர்களுக்காவோ ஜெபிப்பார். 1 கொரி. 14:2, 4, 15:28; யூதா 20
[26/09 10:33 am] Elango: நீங்களெல்லாரும் அந்நியபாஷையை பேசு விரும்புகிறேன் என்கிறார் பவுல்.
தேவனோடு தனிப்பட்ட முறையில் ஐக்கியம் கொள்ளும்போது, அநிய பாஷைகளில் பேசுவது பவுலின் விருப்பம் என்று இங்கு குறிப்பிடுகிறார்.
திட்டமாக அப்படிப்பட்ட அந்நிய பாஷைகள் தனிப்பட்ட கிறிஸ்தவனின் சொந்த ஆராதனையிலும், ஜெப்த்திலும் நன்மையுண்டாக்குகின்றன. 👂👂👂👈👈
[26/09 10:36 am] Elango: *அவன் மனுசரிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறான்*🗣🗣🗣🗣🗣
சபையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ, அந்நியபாஷைகள் பேசுவதன் முக்கிய உபயோகம் , சிறப்பாக தேவனிடம் பேசுவதும், மனிதரிடம் பேசுவதல்ல என்று இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறதாக சிலர் விசுவாசிக்கிறார்கள். ❌❌😳😳
*அந்நியபாஷைகள் தேவனுக்கு நேராய் ஏறெடுக்கப்படுவதால் பேசுகிறவர் பரிசுத்தாவியினால் ஜெபம், ஸ்தோத்திரம், பாட்டு, பாடுதல், ஆசீர்வதித்தல், நன்றி செலுத்துதல் ஆகிய முறைகளில் தேவனோடு தொடர்பு கொள்கிறார்.*
26/09 10:42 am] Elango: *அந்நியபாஷை ஓய்ந்துபோகாது கிறிஸ்துவின் வருகை வரை*🗣🗣🗣🗣🗣
*ஆவிக்குரிய வரங்களாகிய தீர்க்கதரிசனம், அந்நிய பாஷைகள், அறிவு, ஆகியவை இந்த காலத்தின் முடிவில் நின்று போகும் என்பது காலம் நிறைவானது வரும்போது என்று விவரிக்கப்படுகிறது.*👇👇👇👇👇
அதாவது சரித்திரத்தின் முடிவில், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப்பின் விசுவாசியின் அறிவு, நடத்தை ஆகியவை நித்தியத்தில் பூரணப்படும்போது🗣🗣🗣🗣✅✅✅✅ வச 12:1:7 அதுவரை நம் சபைகளில் நமக்கு பரிசுத்தாவியும், அவருடைய வரங்களும் தேவைப்படுகிறது.✅✅✅✅✅✅
[26/09 10:43 am] Elango: எல்லோரும் அந்நியபாஷை பேசவேண்டுமென்று விரும்புகிறார். அவருடைய சுயபோதனை அல்ல.
அவர் தேவாவியினால் ஊந்தப்பட்டு எழுதுகிறார்.
[26/09 10:45 am] Justin VDM: எல்லாரும் அந்நியபாஷை பேசுகிறார்களா?
அந்நியபாஷை என கருதி எல்லாராலும் பேசப்படும் இந்த அந்நியபாஷை உண்மையில் வேதம் குறிப்பிடும் அந்நியபாஷை என்ற வரையறைக்கு உட்பட்டதுதானா?
ஏனெனில் தமிழில் அல்லது கேட்பவருக்கு புரியும்படி பேசப்படும் மொழியில் பேசும்போதே சிலவற்றை அது கள்ள உபதேசம், பொய் தீர்க்கதரிசனம் என நிதானிக்கிறோம். இப்படியிருக்க தேவனோடு இரகசியங்களை பேசுவதாக சொல்லிக்கொண்டு இங்கு பேசப்படும் அந்நியபாஷைகளில் ஏன் கள்ள அந்நியபாஷை கலந்திருக்க முடியாது ...
வியாக்கியானம் இல்லாத இடத்தில் பேசப்படும் அந்நியபாஷைகளில் வேத ஒழுங்கு இல்லையே, இப்படிப்பட்ட அந்நியபாஷைகளை ஏன் இன்றைக்கு பரிசுத்த ஆவியின் அடையாளம் என வரவேற்று அங்கீகரிக்க வேண்டும்?
[26/09 10:46 am] Elango: ஆவியானவரின் இந்த வெளிப்பாட்டைக் குறித்ஹு மரியாதையோடும்,நன்றியறிதலோடும், அவர் பேசுகிறான். கொரிந்தியரைவிட பவுல் அநேக மொழிகளைக் கற்றிருந்தான் என்ற் உசிலர் இந்த வசனத்தை அர்த்தப்படுத்துகிறார்கள். எனின்)ும் வியாக்கியானம் சரியானதல்ல. எப்படி என்றால் அதிகமாய் என்ற வார்த்தை கே. மல்லன் "அந்நியபாஷை என்ற பெயர்ச்சொல்லைத் தழுவி வரும் பண்புத்தொகை அல்ல, ஆனால் பேசுதல் என்ற வினைச் சொல்லைத் தழுவி, ஒப்பிடுவதற்கு உபயோகப்படுத்தப்படும் வினைத்தொகையாகும். ஆகவே, பவுல் நான் அதிகமான பாஷைகளை பேசுகிறேன் என்று சொல்லாமல் நான் உங்களெல்லாரிலும் அதிகமாய் அந்நிய பாஷைகளை பேசுகிறேன் ( அதாவது அடிக்கடி ) என்று கூறினான்.aa
[26/09 10:51 am] Elango: பிறகு ஏன் பவுல் எல்லோரையும் அந்நியபாஷை பேச விரும்புகிறார்❓
[26/09 10:58 am] Elango: பற்பல பாஷைகளை என்னும்போது தற்போது பேசப்படும் ஒரு மொழியாகவோ( அப் 2:4:6 ) அல்லது பூமியில் அறியப்படாத ஒரு மொழியாகவோ,தூதர் பாஷையாகவோ இருக்கலாம். அப்படிப்பட்ட பேச்சு கற்றுக்கொள்ளப்பட்ட iன்றல்ல. *ஆனால் பற்பல பாஷைகளை பேசுகிறவர்களுக்கும் 14:1, அதை கேட்கிறவர்களுக்கும் 14:16 பொதுவாக புரியாததாகும்.*
[26/09 10:59 am] Elango: ஒரு விசுவாசி தேவனுடன் தனித்து பேசுவதற்கு அந்நிய பாஷையைப் பயன்படுத்த்லாம். இப்படிப் பேசுவதன் மூலம் அவன் தன் ஆவிக்குரிய வாழ்க்கையைக் க்ட்டியெழுப்ப முடியும். 1 கொர் 14:4, அதாவது ஆவியின் நிலையில் இருந்து பேசுவது 14:2,14, ஜெபிப்பதற்காகப் பேசுவது 14:2, 14,15, 28 நன்றி கூறுவது 14:16,17 அல்லது பாடுவது 14,15; 1 கொரி. 14.
[26/09 10:59 am] Elango: அந்நிய பாஷையில் பேசுதல் ஒரு வரம் - அந்நிய பாஷை பேசுதல் விசுவாசிக்குப் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் ஒரு கிருபை வரம் என்று விளக்கப்படுகிறது. 1 கொரி. 12:4-10
[26/09 11:00 am] Elango: அந்நிய பாஷைகளில் பேசுவதைப் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பேறுவதோடு தேவன் ஆரம்பத்திலேயே இணத்துப் பேசியுள்ளார். அப் 2:4. இதன் மூலம் பெந்தெகொஸ்தே நாளில் கூடியிருந்த 120 விசுவாசிகளும், அதன்பின் திருச்சபைகளிலும் உள்ள விசுவாசிகளும் தாங்கள் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இதைக்கொண்டுள்ளனர். அப் 10:45,46 . இவ்விதமான இந்த னுபவம் அதைப் பெற்றுக்கொள்ளும் நேரம், இடம் இவற்றை வைத்து அறிந்து கொள்ளப்படும். திருச்சபையின் வரலாறு முழுவதிலும் அந்நிய பாஷை பேசுதல் பரிசுத்த ஆவியின் நிறைவின் அடையாளம் அன்பது மறுக்கப்பட்ட போதெல்லாம், அல்லது மறக்கப்பட்ட போதெல்லாம் பெந்தெகொஸ்தே பற்றிய சத்தியமும் அனுபவமும் குலைக்கப்பட்டுவிட்டது அல்லது முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று காண்கிறோம்.
[26/09 11:05 am] Justin VDM: எல்லாரையும் மனந்திரும்பவே இயேசு அழைத்தார்.
இங்கு மனந்திரும்பியிருக்கிறேன் என கருதும் எல்லாருமே இயேசு சொன்ன மனந்திரும்புதலுக்குள் இருக்கிறார்களா என்றால்...பதில் இல்லையென்றே சொல்ல முடியும். மனந்திரும்பியிருக்கிறேன் என நினைத்து கொண்டு பாவத்தில் வாழும் ஒருவனை பார்த்து இயேசு இப்பவும் சொல்வார்..நீ மனந்திரும்பு என்று.
அது போலதான் அந்நியபாஷை பேசுகிறேன் என கருதி உண்மையில் வேற ஏதோ ஒரு பாஷையை பேசுபவர்களை பார்த்து இப்பவும் பவுல் சொல்லும் காரியம்..நீங்கள் எல்லாரும் அந்நியபாஷை பேச வேண்டும்..என்று.
எல்லாரும் அந்நியபாஷை பேசுகிறார்களா...பதில் இல்லை, ஏனெனில் எல்லாரும் பேசுவது உண்மையில் அந்நியபாஷையே இல்லை.
எல்லாரும் என்ற எண்ணிக்கையில் சிலரை தவிர பெரும்பாலானோர் பேசுவது கள்ளத்தனமான அந்நியபாஷைதான் என்றே நிதானிக்க முடியும். ஆனால் இன்றைக்கு கள்ளத்தனமான அந்நியபாஷைக்குத்தான் கைதட்டல் அதிகம். இதைத்தான் ISI முத்திரை பெற்ற அந்நியபாஷை எனவும் இங்கு மாய்மாலமாக நம்பவைக்கப்படுகிறது
[26/09 11:06 am] Prabhu Sasirekha Bro VDM: [அந்நியபாஷையும் என் அனுபவமும் - இறைவன்] is good,have a look at it! http://www.lord.acti
veboard.com/t46335826/topic-46335826/
[26/09 11:06 am] Elango: மனந்திரும்பி ஆண்டவரை ஏற்றவர்களுக்கு பக்திவிருத்திக்காக கொடுக்கப்படும் வரமே அந்நியபாஷை. அதை ஒதுக்கத்தள்ளினால் வேதத்தையே ஒதுக்கித்தள்ளுவது போன்று
[26/09 11:08 am] Prabhu Sasirekha Bro VDM: [அந்நியபாஷையும் என் அனுபவமும் - இறைவன்] is good,have a look at it! http://www.lord.activeboard.com/t46335826/topic-46335826/
[26/09 11:08 am] Justin VDM: கள்ளத்தனமான அந்நியபாஷையை வரவேற்பதும் வேதத்திற்கு விரோதமானது.
[26/09 11:09 am] Elango: மிகவும் அருமையானது சுந்தர் சகோ எழுதியது
[26/09 11:10 am] Prabhu Sasirekha Bro VDM: Kandipa kedakum bro கேட்கிற எவனும் பெற்று கொள்கிறான்
[26/09 11:11 am] Elango: அந்நியபாஷையை தேவனுடைய வரம் என்று ஏற்காத சபை சபையே இல்லை
[26/09 11:11 am] Elango: நாம் அந்நியபாஷை பேசுவதால் நமக்கு ஏற்படும் காரியங்களை கிழே குறிப்பிட்டு உள்ளேன்
(1 ) தேவனோடு இரகசியம் பேசலாம்
(2 ) தேவனுடைய பெலன் நம்முடன் இருக்கும்
(3 ) தேவனுடைய பிரசன்னம் நம்முடன் இருக்கும்
(4 ) பரிசுத்தத் ஆவியானவர் ஏவுதலும் உணர்த்துதலும் எப்பொழுது இருக்கும்
(1 ) தேவனோடு இரகசியம் பேசலாம்
நாம் அந்நியபாஷை பேசும் பொழுது அந்த பாஷையின் அர்த்தம் பெரும்பாலும் நமக்கு தெரியாது ஆனால் உண்மையாகவே
நாம் நமக்கு இருக்கும் பொல்லாத குணங்கள் மற்றும் நமக்கே தெரியாமல் இருக்கும் சில அசுத்த காரியங்களை பரிசுத்த ஆவியானவர் தாமே நம் வாயினால் தேவனோடு மன்றாடி நமது பரிசுத்த வாழ்க்கைக்கு தேவையானதை நாம் பெற்று கொள்ள உதவி செய்கின்றார் இதில் இன்னும் மறைவான காரியங்கள்
பல உண்டு
1 கொரிந்தியர் : 12
2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்
(2 ) தேவனுடைய பெலன் நம்முடன் இருக்கும்
நாம் அந்நியபாஷை அதிகம் பேசும்பொழுது தேவனுடைய பெலன் நம்மில் அதிகமாய் இருப்பதை உணரமுடியும்
அதாவது அதை தெம்பு என்று கூட கூரலாம் அந்த அளவுக்கு இருக்கும் மற்றும் எந்த தேவைகள் இருந்தாலும் அந்த தேவைகள் நமக்கு ஒரு கவலையாகவே தெரியாது
1 கொரிந்தியர் : 12
2 . அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்
(3 ) தேவனுடைய பிரசன்னம் நம்முடன் இருக்கும்
நான் ஒரு முறை இரவு நேரத்தில் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து அந்நியபாஷை பேசிக்கொண்டு இருந்தேன் அடுத்த நாள் காலையில் நான் வேலைக்கு சென்று ஒரு சகோதரிக்கு இயேசு கிறிஸ்து பற்றி சொல்லும் பொழுது அந்த சகோதரி சுருண்டு மயங்கி விழுந்தார்கள்
நான் மிகவும் பயந்து உங்களுக்கு என்ன ஆனது என்று கேட்ட பொழுது நீங்கள் பேச பேச எனக்கு தலை சுற்றியது என்று கூறினார்கள் தேவனுடைய பிரசன்னம் ஆவிகளை நடுங்க வைக்கும் மற்றும் தேவனுடைய பிரசன்னம் நம்முடன் இருந்தால் நம்முடைய முகம் பிரகாசமாய் இருப்பதை காண முடியும்
(4 ) பரிசுத்தத் ஆவியானவர் ஏவுதலும் உணர்த்துதலும் எப்பொழுது இருக்கும்
நாம் அந்நியபாஷை அதிகமாக பேசு பொழுது நமக்குள் அதாவது நம் இருதயத்துக்குள் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாய் இருக்கும்
நான் பாவம் செய்கின்ற சூழ்நிலைகள் வரும் பொழுது எனக்கு பரிசுத்த ஆவியானவர் சிக்னல் கொடுத்து விடுவார்
அதாவது எனக்கு உணர்த்தி விடுவார் எனக்கு அது என்னவென்று தெரியாது ஆனால் நாம் ஜாக்கிரதியாய் இருக்க வேண்டும் என்று மட்டும மனதில் நினைத்து கொண்டு அந்த பிரச்சனையை ஜெய்த்து இருக்கின்றேன் அதே போல அதிக நேரம் ஜாக்கிரதையாய் இருப்பேன் அதிகநேரம் அவருடைய ஏவுதலுக்கு கீழ்படியாமல் போய்விடுவேன்1 கொரிந்தியர் : 14
39 . அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்
ஆம் சகோதர்களே நாம் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டு இருப்பது நமக்கு மிகவும் நல்லது தான் அதைவிட அதிகமாக அவரை சும்மா விடாமல் அலட்டி கொண்டே இருக்க வேண்டும் நீங்கள் அந்நியபாஷை மூலமாகவும் அப்படி செய்யலாம் சாதாரணமாக கூட அப்படி செய்யலாம்
அதற்காக அந்நியபாஷை வரம் இருந்தால் மட்டும் போதாது அதுனுடன் சேர்ந்து பரிசுத்தமும் இருக்க வேண்டும் ஏனென்றால் வேதம் சொல்கின்றது
வேதத்தை கேளாதபடி தன செவியை விளக்குகின்றவனுடைய ஜெபம் எப்படி இருக்கும் அருவருப்பாய் இருக்கும் இந்த வார்த்தையை எல்லா இடத்திலும் போட்டு கொள்ளுங்கள்
அதாவது வேதத்தை கேளாத படி தன செவியை விளக்குகின்றவனுடைய அந்நியபாஷை அருவருப்பாய் இருக்கும்
வேதத்தை கேளாத படி தன செவியை விளக்குகின்றவனுடைய போதனைகள் அருவருப்பாய் இருக்கும்
ஆம் சகோதர்களே இப்படியே நாம் என்ன செய்தாலும் இந்த வசனத்தை முன்பு எடுத்து கொள்ள வேண்டும்
அந்நியபாஷை பற்றி அனுபவம் இருப்பவர்கள் தங்களுடைய அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே.....
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 30th of November 2011 09:35:26 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
[26/09 11:17 am] Justin VDM: தீர்க்கதரிசனமும் தேவனிடத்திலிருந்து வந்ததுதான், அதற்காக எல்லா தீர்க்கதரிசனமும் தேவனுடையது என்றாகி விடுமா?
அதுபோலவே பேசப்படுவதெல்லாம் தேவனிடத்திலிருந்து வந்த அந்நியபாஷை இல்லை
[26/09 11:17 am] Elango: பவுல் வேதத்திற்க்கு விரோதமானவரா❓
அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்
*நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்;*
அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.🗣🗣🗣🗣👈
[26/09 11:18 am] Elango: நீங்க எந்த அந்நியபாஷையை நம்புறீங்க சகோ❓
[26/09 11:19 am] Prabhu Sasirekha Bro VDM: [அந்த பாஷைக் குழப்பம் டாக்டர்] is good,have a look at it! http://www.biblebank.org/Tamil/Booksphp/tongueconfussion.htm
[26/09 11:20 am] Justin VDM: பவுல் அல்ல,
பவுல் சொன்னதை தவறாக அர்த்தம் கற்பிப்பதுதான் தேவனுக்கு விரோதமானது.
[26/09 11:22 am] Sam Jebadurai Pastor VDM: அந்த டாக்டருக்கு குழந்தை ஞானஸ்நானம் கண்ணுக்கு தெரியாதே
[26/09 11:24 am] Justin VDM: தேவன் என்றால் அது தேவனை மட்டுமே குறிக்கும்.
வானத்திலேயும் பூமியிலேயும் இருக்கிற தேவர்கள் எண்ணப்படுபவர்கள் எல்லாம் தேவன் இல்லை.
அந்நியபாஷை என்றால் அது (வேத ஒழுங்கின்படி பேசப்படும்) அந்நியபாஷைதான்.
அந்நியபாஷை என்று இங்கு வேத ஒழுங்கிற்கு மாறாக பேசப்படும் அந்நியபாஷையை நான் பேசுவதில்லை
[26/09 11:29 am] Elango: எங்களுக்கு தெரியாமல் நாங்கள் கேட்கவில்லை.. உங்கள் நிலைப்பாடை சொல்லாத வரைக்கு நீங்கள் வேதாகம ஆசிரியர் என்று சொல்லவே கூடாது
[26/09 11:31 am] Rooban Pastor VDM: அதை சொல்லக்கூடாது நான் உங்களிடம் வேலை பார்க்கவில்லை நீங்கள் தெரியாமல் கேட்கிறீர் என்றும் நான் கூறவில்லை
[26/09 11:33 am] Elango: அந்நியபாஷையை பற்றிய நிலைப்பாடை இங்கு சொல்லாதவரை உங்களுடைய ஆவிக்குரிய விசுவாசமும், வேதாகம ஆசிரியர் தகுதியும் சந்தேகத்துக்குரியதே
[26/09 11:34 am] Levi Bensam Pastor VDM: 1 பேதுரு 3:15
[15]கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; *உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.*
[26/09 11:35 am] Rooban Pastor VDM: அதை உங்களுக்கு நான் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை அதனை நான் தேவனிடத்தில் நிருபித்துக் கொள்கிறேன்
[26/09 11:36 am] Rooban Pastor VDM: ❌❌❌அவசியமில்லை உங்களுக்கு நிரூபிக்கவேண்டும் என்று
[26/09 11:37 am] Edwin Devadoss Ayya VDM: தலைப்பு செய்திகள்: இரண்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை இயேசுவின் சத்தம் யாரும் கேட்டதில்லை என்று வரலாறு கூறுகிறது.
எனவே ஒரு குறிப்பிட்ட அளவு கிறித்தவ சமயத்தைத் தழுவும் கிறித்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
[26/09 11:39 am] Charles Pastor VDM: என் கேள்விக்கு பதில் கூற உங்களில் யாரேனும் உண்டா?
கேள்வி 1:
யோவேல் 2:28 நிறைவேறி விட்டதா?
ஆம் என்றால் எப்பொழுது?
இல்லை என்றால் எப்போ நிறைவேறும்?
[26/09 11:42 am] Edwin Devadoss Ayya VDM: 1. நிறைவேறியது
2. யார் சொன்னது, நிறைவேறியது என்று வரலாறு கூறுகிறதா?
[26/09 11:42 am] Elango: பவுல் வேதத்திற்க்கு விரோதமானவரா❓
அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்
*நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்;*
அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.🗣🗣🗣🗣👈
[26/09 11:44 am] Rooban Pastor VDM: ❌❌❌உங்கள் கோபத்தில் நான் செய்யும் ஊழியத்தை நியாயம் தீர்ப்பது அநியாயமான நியாயத்தீர்ப்பு நன்றி
[26/09 11:46 am] Justin VDM: பவுல் வேதத்திற்கு விரோதமானவரா?
அர்த்தம் சொல்கிறவன் இல்லாவிட்டால் சபையிலே பேசக்கூடாது என சொல்கிறாரே?
[26/09 11:50 am] Thirumurugan VDM: பதில் ஏற்கனவே கொடுத்தாயிற்று. எல்லோருமா அந்நியபாஷை பேசுகிறார்கள் என்று கேள்வி கேட்ட பவுல் எல்லோரும் பேச வேண்டுமென விரும்பியது ஏன் என்று பதில் தந்து போட்டேன்.
[26/09 11:53 am] Edwin Devadoss Ayya VDM: இந்த காலத்தில் இயேசுவின் /பரிசுத்த ஆவியானவர் தந்த வேத வார்த்தைகளை விட வரலாறு மற்றும் வரலாற்று கதைகளையும் அத்துடன் கட்டுக்கதைகளையும் முக்கிய படுத்தி வயிற்றுப் பிழைப்புக்காக ஊழியம் செய்ய புறப்பட்டிருக்கும் அழைக்கப்படாத வேதபுரட்டர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர் க்ஷ
[26/09 11:53 am] Elango: அந்நியபாஷை பேசுகிறவனை தடை பண்ணாதிருங்கள் என்கிறாரே?
[26/09 11:54 am] Elango: பிரதரன் சபை போன்ற அநேக சபைகளே இந்த கள்ள போதகத்தை ஆதரிக்கிறது
[26/09 11:55 am] Justin VDM: அர்த்தம் சொல்கிறவன் இல்லையென்றால் சபையிலே பேச வேண்டாம் என்கிறாரே
[26/09 11:55 am] Rooban Pastor VDM: உங்களிடம் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாதிருக்க நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு நான் உங்களுக்கு பதில் தர இயலாத ஒன்று உங்களது கோபத்தில் ஊழியத்தை நியாயந்தீர்க்க வேண்டாம் தேவன் உங்களுக்கு அப்படி எந்த ஒரு அதிகாரத்தையும் கொடுக்கவில்லை உங்களிடம் இதற்கு மேலே பேசுவதில் எந்தப் பலனும் இல்லை என்று புரிந்துகொண்டேன் நன்றி
[26/09 11:55 am] Elango: அப்ப வூட்டுக்குள்ள தனியா போய் பேசினால் உங்களுக்கு ஓகேவா❓
[26/09 11:56 am] Edwin Devadoss Ayya VDM: வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
தீத்து 3: 10
[26/09 11:57 am] Elango: அந்நியபாஷை ஏற்காதவர்களை பார்த்து எட்வின் ஐயா அந்த வசனத்தின் மூலமாக சொல்லுகிறார்
[26/09 11:58 am] Edwin Devadoss Ayya VDM: ஆம் ஐயா
[26/09 11:59 am] Rooban Pastor VDM: அது உங்கள் சிந்தனையில் உருவானது என் சிந்தனையில் தேவன் இப்பொழுது வேறொருவருக்கு அதை வெளிப்படுத்தியதால் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
[26/09 11:59 am] Justin VDM: ரோமர் 14:22
உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்து காரியத்தில் தன்னை குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்
[26/09 12:00 pm] Elango: அந்நியபாஷையை குறித்த உங்கள் சிந்தையை சொல்லவும்.
[26/09 12:06 pm] Thirumurugan VDM: தூதர் பாஷையா???? இது என்ன அடுத்த twist ஆக இருக்கு????
[26/09 12:07 pm] Elango: அந்நியபாஷையை ஏற்காவர்களுக்கு அப்படியே தெரியும்.
[26/09 12:09 pm] Thirumurugan VDM: *"தூதர் பாஷைகள் என்றால் என்ன?"*
அப்போஸ்தலனாகிய பவுல் 1கொரிந்தியர் 13:1-ல் இவ்வாறு கூறுகிறார்: *“நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.”*
இங்கே அர்த்தத்தோடு பேசுகிறவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் புரியக்கூடிய நிலையில் பேசப்படுகிற அந்நியபாஷைகளை பவுல் குறைக்கூறவோ கண்டிக்கவோ இல்லை. மாறாக தனக்கு மாத்திரமே தெரிந்த, கேட்பவர்களுக்கு தெரிந்திராத அல்லது புரிந்துக்கொள்ள முடியாத பற்பல பாஷைகளைப் பேசுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் அர்த்தமில்லாத ஓசைகள் மற்றும் சத்தம் மூலம் என்ன பிரயோஜனம்; அன்பே பிரதானம் என்பதையும் எடுத்துரைத்து கண்டிக்கிறார்.
அதாவது மெய்யாகவே அப்படி ஒரு தூதர் பாஷைகள் இருப்பதாகவோ அந்த பாஷைகள் தனக்கு தெரியும் என்றோ பவுல் இங்கே கூறவில்லை; மாறாக கருத்துப்புனைவியல் பாங்கில் வினையுருக்களைப் (stating hypothetical statements by using subjunctive mood) பயன்படுத்தி புனைவுகோள் மூலம் அன்பே பிரதானம் என மேற்கோள் காட்டுகிறார் (A standard Greek grammar explains, “while the indicative assumes reality, the subjunctive assumes unreality”).
1கொரிந்தியர் 13-வது அதிகாரம் முழுவதும் நாம் வாசிப்போமானால், அந்நியபாஷை வரமோ அல்லது தீர்க்கத்தரிசன வரமோ முதன்மையான கருத்து அல்ல என்பதை தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம். அந்நியபாஷை வரம் மற்றும் தீர்க்கத்தரிசன வரத்தைப் பவுல் மேற்கோள் காட்டி, அன்பை பிரதானமாக எடுத்துரைப்பதைக் காணமுடியும். அதனால் தான் இறுதி வசனத்தில் தனது முடிவாக பவுல் கூறுகிறார்: “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.”
(தொடரும்...)
[26/09 12:28 pm] Ebi Kannan Pastor VDM: இதிலிந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
அன்பிருந்தால் போதும் அவர்கள் பரலோகத்திற்கு போய்விடுவார்களோ❓
தேவ அன்பிலே ஒருவன் நிலைத்திருக்கிறான் என்பதை எதை வைத்து அளவிடுவீர்கள் நண்பா😃
[26/09 12:29 pm] Ebi Kannan Pastor VDM: தூதர் பாஷைக்கு இங்கு விளக்கம் ஒன்றுமே தரப்படவில்லையே
[26/09 12:35 pm] Paul 3 VDM: சிலுவையில் கடைசியா ஒரு கல்லனுக்கு எப்படி பரலோகம் கிடைத்தது
[26/09 12:39 pm] Elango: 1 கொரிந்தியர் 14:2
[2]ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், *அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே,* அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
[26/09 12:43 pm] Elango: பேசுகிறவனுக்கு புரியாது
[26/09 12:47 pm] Elango: 1 கொரிந்தியர் 14:2
[2]ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், *ஆவியினாலே* 👈 இரகசியங்களைப் பேசினாலும், *அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே,* அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
[26/09 12:49 pm] Ebi Kannan Pastor VDM: பேசுகிறவனுக்கு தான் கர்த்தரிடத்தில் விண்ணப்பண்ணுவதாக அவரை ஸ்தோத்தரிப்பதாகதான் தெரியும் அந்த வார்த்தைகளின் அர்த்தம் அனைத்தும் புரியாது
[26/09 12:51 pm] Ebi Kannan Pastor VDM: அந்நியமொழி அந்நியபாஷையல்ல தேவன் அருளும் மற்ற யாரும் அறியாத மொழியாகும்.
1 கொரிந்தியர் 14:2
[2]ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
[26/09 12:53 pm] Ebi Kannan Pastor VDM: 1 கொரிந்தியர் 12:13
[13]நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
*உங்களுக்கு தாகம் தீர்க்கப்படும் அனுபவம் உண்டா?*
[26/09 12:54 pm] Ebi Kannan Pastor VDM: யூதா 1:20
[20]நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
👆 *ஆவிக்குள் ஜெபம் பண்ணும் அனுபவங்கள் உங்களுக்கு உண்டா?*
[26/09 12:56 pm] Ebi Kannan Pastor VDM: 1 தெசலோனிக்கேயர் 5:19
[19]ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
👆 *ஆவியை அவித்துப்போடுதல் என்றால் என்னா?*
[26/09 12:57 pm] Ebi Kannan Pastor VDM: 1 கொரிந்தியர் 14:9-11
[9]அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
[10]உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
[11]ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
[26/09 12:59 pm] Aa Pradeesh Arun Kumar VTT: Praise the Lord brother. நாம் அறிந்து பேசும் வார்த்தைகளுக்கு நமக்கு தெரிந்த மொழி மற்றும் நம் சிந்தனை போதும். ரோமர் 8:26 26அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
[26/09 1:01 pm] Justin VDM: அருமை சகோ.
டைத்தேன் நானும் கேட்டுகிட்டே இருக்கேன்,
ஒழுங்கும் கிரமமாய் பேசப்படவேண்டிய அந்நியபாஷை ஏன் இன்றைக்கு சபைகளில் கடைபிடிக்க படுவதில்லை
[26/09 1:02 pm] Aa Pradeesh Arun Kumar VTT: Sorry brother I have not completed my sentence. I am typing it....
[26/09 1:02 pm] Thirumurugan VDM: *கவனிக்கவும்:*
1 கொரிந்தியர் 12 முதல் 14 வரையுள்ள அதிகாரங்களில் கிருபையின் ஆவிக்குரிய வரங்களைக் குறித்தும் அதன் பயன்பாட்டைக் குறித்தும் பவுல் விளக்குகிறார். சகல ஆவிக்குரிய வரங்களும் அன்போடு தான் பயன்படுத்தப்பட வேண்டும் அன்பு இல்லையென்றால் ஒன்றுமே இல்லை என்கிற நிலையை விவரிக்கிறார்.
the emphasis in chapter 13 as well as in all 12 through 14 chapters, the unavoidable in using of spiritual gifts is love).
*“தூதர் பாஷைகள்” என்று பவுல் இங்கே குறிப்பிட காரணம் என்ன? மெய்யாகவே தூதர் பாஷைகள் உண்டா? மெய்யாகவே பவுல் தூதர் பாஷைகளைப் பேசினாரா?*
நான் ஏற்கனவே கூறியதுப்போல இந்த அதிகாரம் முழுவதும் விசேஷமாக முதல் மூன்று வசனங்களில் அன்பை மட்டும் தான் பவுல் பிரதானப்படுத்தி அல்லது மிகைப்படுத்திக் கூறுகிறார். அதை தெளிவு படுத்துவதற்காக பவுல் எடுத்துக்காட்டாக கூறுபவைதான் இந்த தூதர் பாஷைகள். அதாவது உயர்வுநவிற்சியாக ஏகதேச உருவக அணியைப் பயன்படுத்துகிறார் பவுல் (This usage is called “Hyperbole” (Rhetorical exaggeration). It is permitted exaggeration in Greek. The author’s aim was to emphasize a truth in an illustrated way.)
*பவுல் நான் தூதர் பாஷைகளைப் பேசினேன் என்று கூறவில்லை மாறாக பேசினாலும் என்று கூறுகிறார்*. பேசினேன் என்பதற்கும் பேசினாலும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது (If I speak-NIV; Though I speak-NKJV).
அப்போஸ்தலனாகிய பவுல் அன்பு மிக முக்கியம்; அன்பில்லை என்றால் எல்லாம் வீண் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக தூதர் பாஷைகளைக் கொண்டுவருகிறார்.
இரண்டு காரியங்களை மனதில் இருத்த மறவாதீர்கள்:
(1) கொரிந்து சபையிலே ஏற்பட்ட பிரச்சனைகளில் ஆவிக்குரிய வரங்களை பயன்படுத்துவதும் ஒன்றாகும், விசேஷமாக அந்நியபாஷை வரம். அதனால் தான் பவுல் இந்த நிருபத்திலே அதை சீர்ப்பொருந்தும் வண்ணமாக எடுத்துரைக்கிறார்.
(2) எத்தனை வரங்களையுடையவர்களாக இருந்தாலும் அன்பில்லை என்றால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பவுல் எடுத்துரைக்கிறார்.
அடுத்தபடியாக, தூதர் பாஷைகளில் பேசுகிறோம் என்பவர்களும், அப்போஸ்தலனாகிய பவுல் தூதர் பாஷைகளில் பேசினார் என்பவர்களும் சான்றாக கொண்டு வருவது 2 கொரிந்தியர் 12:2,3,4 வசனங்கள். இங்கே மூன்றாம் வானம் வரை எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு மனுஷனையும் அது பரதீசு எனவும் அங்கே மனுஷர் பேசப் படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டான் என்றும் பவுல் கூறுகிறார். (“அர்ரேட்டா” மற்றும் “ரேமாட்டா” என்கிற இரண்டு கிரேக்க பதங்களில் இருந்துதான் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய என்கிற மொழிப்பெயர்ப்பு வருகிறது. It is being translated as “inexpressible words,” unutterable words” and unspeakable words.) பவுல் இரண்டு முறை “அதை அறியேன்; தேவன் அறிவார்” என்று கூறுகிறார். கவனியுங்கள் 1கொரிந்தியர் 14:28-ல் அர்த்தஞ்சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன். அதாவது தேவனுக்கு மாத்திரம் தெரிந்தால் போதாது மாறாக பேசுகிறவர் களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். எனவே அந்நிய பாஷைகளில் பேசுகிறோம் என்று கூறிக்கொள்பவர்கள் தூதர் பாஷைகளில் பேசுகிறோம் என்றாலும் பவுலும் பேசினாரென்று 1கொரிந்தியர் 13:1 மற்றும் 2கொரிந்தியர் 12:2,3,4 வசனங்களை எடுத்துக்கூறினாலும் அது மிக மிக தவறானதாகும். காரணம் பவுல் தூதர்களுடைய பாஷையை குறித்து இங்கே கூறவில்லை. மேலும் மூன்றாம் வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட மனுஷனுக்கு கேட்டது ஒன்றும் விளங்கவில்லை, தேவன் அறிவார் என்று கூறுகிறார்.
[26/09 1:03 pm] Thirumurugan VDM: *சிந்தியுங்கள்:*
ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையுள்ள 66 புத்தகங்களிலும் எங்கெல்லாம் தூதர்கள் தோன்றி பேசினார்களோ அவ்விடங்களில் எல்லாம் மனிதர்கள் பேசின பாஷைகளை பேசினார்களேயல்லாமல் வேறொரு பாஷைகளை அவர்கள் பேசவில்லை. அப்படி அவர்கள் அவர்களுடைய பாஷைகளில் பேசியிருந்தால் கேட்டவர்களாகிய ஆபிரகாம், ஆகார், யாக்கோபு மற்றும் யாவரும் எப்படி புரிந்துகொள்ள முடியும். (The charismatic and Pentecostal groups in order to justify their “ecstatic” ununderstandable utterings; they say that they speak in angelic languages. Nowhere in the scripture is it written that angels spoke in such a language which is extremely difficult to understand. Even our Lord never used any such language, which is incomprehensible).
[26/09 1:06 pm] Justin VDM: தேவனிடத்தில் இரகசியங்களை பேசுவது முக்கியமா அல்லது கல்லாதவர்களையும், அவிசுவாசிகளின் இருதயத்தை உணர்த்துவிக்கப்படுதல் முக்கியமா?
பவுல் இங்கு எதை முக்கியத்துவப்படுத்துகிறார்
[26/09 1:12 pm] Ebi Kannan Pastor VDM: கேட்டதாகதான் கூறுகிறார் அந்த பாஷைகளை நான் அறியவில்லையென்று கூறவில்லை
[26/09 1:15 pm] Justin VDM: நம்முடைய வரங்கள் தேவ அன்பை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது தேவனிடத்தலேயே இரகசியங்களை பேசிக்கொண்டிருப்பதா அல்லது அவிசுவாசிகளையும், கல்லாதவர்களையும் அன்பு செலுத்தும் விதமாக அவர்களின் இருதயத்தை உணர்த்துவிப்பதா
[26/09 1:18 pm] Levi Bensam Pastor VDM: *இது யார் பேசுகிற பாஷை*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 2 கொரிந்தியர் 12:3
[3]அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, *மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.*
[26/09 1:24 pm] Ebi Kannan Pastor VDM: இரண்டுமே
தேவனிடத்தில் அன்புகூறுவதற்காக தேவனிடத்தில் பேசுகிறேன்
மனிதனிடத்தில் அன்புகூறுவதற்காக மனிதனிடத்தில் பேசுகிறேன்
[26/09 1:31 pm] Justin VDM: மனிதனித்தில் பேசும்போது அவனுக்கு தெரிந்த, புரியும்படியான மொழியில்தானே பேச வேண்டும்.
தேவனிடத்தில் இரகசியங்களை பேசுபவர்களை பைத்தியம் பிடித்தவர்கள் என சொல்வது கல்லாதவர்களும், அவிசுவாசிகளுமாய் இருக்கிறார்களே...இவர்களை பவுல் குற்றப்படுத்தவில்லை, இவர்களும் சகல ரகசியங்களையும் அறிந்து கொள்ளும்படி கிரியை நடப்பிக்க வேண்டும் என்பதே பவுலின் விருப்பம்
[26/09 2:01 pm] Elango: அது பிரதரன் சபையில் கள்ளப்போதனை
[26/09 2:02 pm] Charles Pastor VDM: அந்நிய பாஷை பேசலாமா ? அந்நிய பாஷை குறித்து வேதம் என்ன சொல்கிறது?
கேள்வி: அந்நிய பாஷை பேசலாமா ? அந்நிய பாஷை குறித்து வேதம் என்ன சொல்கிறது ? பேசினால் அதன் பொருள் சொல்ல வேண்டுமா ? 1 கொரிந்தியர் 14:6 விளக்கவும் ?
பதில்:
அந்நிய பாஷை பேசவேண்டும். "புதிய ஏற்பாட்டில்" பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றதற்கு அடையாளமாக இப்படியே அநேக இடங்களில் வாசிக்கிறோம். நீங்கள் உன்னதத்தின் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங்கள் என்று இயேசு சொல்லிவிட்டுச் சென்றபின்பு, அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் இப்படியாக வாசிக்கிறோம்: பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலேபேசத்தொடங்கினார்கள்.
பேதுரு கொர்நேலியு சம்பவம்:
அப்போஸ்தலர் 10:44-46 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
பவுல்:
அப்போஸ்தலர் 19:6 பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்
சில சபைகளில் அந்நியபாஷைகளில் பேசும் அனுபவம் இல்லை. அவர்கள் நீங்கள் எப்பொழுது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களோ அப்பொழுதே பரிசுத்தாவியினை பெற்றுவிட்டீர்கள் என்று சொல்லுகின்றார்கள். இது தவறாகும்.
ஜெபிக்க ஆரம்பித்தால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நியபாஷைகளில் பேசவேண்டும். அப்படி அந்த அனுபவம் இல்லையெனில் ஒரு ஆவிக்குரிய சபைக்கு செல்லுங்கள். அநேகர் தேவனின் வல்லமையினால் தொடப்படும்போது தங்களைக் கட்டுப்படுத்தமுடியாமல் போக நேரிடும். நான் முதன் முதலில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற நாள் மே மாதம் முதல் தேதியாகும். இந்தியாவில் அன்று நடந்த ஜெபக்கூட்டத்துக்கு உபவாசத்துடன் சென்றிருந்தேன். முழங்காலில் நின்று பாடல்களை உற்சாகமாக கைகளைத்தட்டி பாடிக்கொண்டிருக்கும்போது அந்த உன்னதமான ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது. அப்பொழுது நான் தேவனுடைய வல்லமையினால் துள்ளி நிரப்பட்டவனாக வேறெங்கோ சென்றுவிட்டேன். கண் திறந்தபோது நான் இருந்த இடம் ஒரு 15 அடி தள்ளி இருக்கும். நாவு வேறு ஏதோ பாஷையில் பேசியது. இதுவே பரிசுத்த ஆவி பெற்ற ஒருவருக்கு அடையாளமாகும்.
என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம்:
2000ம் வருடம் சில நாட்களாக ஒரு மனதில் ஒரு சந்தேகம். தேவன் என்னை கண்டுகொள்வது இல்லையே, அப்படியானால் நான் ஒருவேளை தேவனுடைய பிள்ளை இல்லையோ என்று ஒரு எண்ணம் என்னை வாட்டியது. அடுத்த நாள் (அமெரிக்காவில்) நான் வழக்கமாக வேலைக்குச் செல்ல ஜெபித்துவிட்டு என்னுடைய காரில் சென்றேன். பொதுவாக தெற்கு கலிஃபோர்னியாவில் ரோட்டின் ஓரத்தில் ஜனங்களை அதிகமாக காணமுடியாது (எல்லாரும் காரில் செல்வதால்). ஆனால் அன்று மேகமூட்டமாக இருந்தது. ரோட்டின் ஓரத்தில் ஒருவர் நன்கு உடையணிந்து நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏதோ உதவி தேவைப்படுமோ என்று எனக்கு தோன்றியது. அவரும் தனக்கு முன் செல்லும் வாகனங்களை ஏதோ எதிர்பார்ப்புடன் நோக்கினார். நான் உடனே காரை நிறுத்தி அதை பின்னே-செல்லும்படி(Reverse) செய்து அவரிடம் நிறுத்தி "Do you need any help?" (ஏதேனும் உதவி தேவையா?) என்று கேட்டேன். அவர் ஆம் வீட்டுக்கு போகவேண்டும். பேருந்து இனி வர மணிநேரம் ஆகும் என்றார். உடனே நான் வாருங்கள் நான் கொண்டுபோய்விடுகிறேன் என்றேன். நாங்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, தான் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் செய்பவர் என்று சொல்லிவிட்டு, என்னுடைய காரில் இருந்த "God cares for you" (தேவன் உங்களைக் குறித்து அக்கறை உள்ளவராயிருக்கிறார்) என்று பெரிதாக ஒட்டப்பட்டிருந்த வாசகத்தைப் பார்த்து, நீங்கள் தேவனுடைய பிள்ளையா என்றார். நான் ஆம் என்றேன். உடனேயே அவருக்கு ஒரு மகிழ்ச்சி, உடனே தன்னுடைய இரு கரங்களை உயர்த்தி தேவனை துதிக்க ஆரம்பித்தார். அடுத்த சில வினாடிகளில் அவர் பரிசுத்த ஆவியினால் நிரம்பி அந்நிய பாஷைகளில் பேசினார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. மேலும் அவர்: தேவனுடைய பிள்ளை ஒருவரை கொண்டுவந்து எனக்கு உதவிசெய்யும் ஆண்டவரே என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்ததாக கூறினார். தான் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவுக்கு வந்ததாகவும் கூறினார். ரஷ்யாவிலே வீட்டிலே நானும் என் மனைவியும் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அந்நிய பாஷையுடன் பெற்றோம் என்றார். ரஷ்யாவில் யாரும் இவருக்கு போய் ஜெபிக்கவில்லை தேவனே இவரை பரிசுத்த ஆவியால் நிரப்பியிருக்கிறாரே என்று எண்ணி ஆச்சரியமடைந்தேன். நானும் நாங்கள் எப்படி இந்துக்களாயிருந்து இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தோம் என்று எங்களுடைய சாட்சியையும் சொன்னேன்... நான் அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்து பைபிளை திறந்து இவைகளை நினைத்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய விழிகளில் சில கண்ணீர் துளிகள்; காரணம் தற்செயலாக வேதத்திலிருந்து தேவன் ஒரு வசனத்தைக் கொடுத்தார் "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்". (ரோமர் 8:14) இதுவும் தேவன் பேசும் வழிகளில் ஒன்று.
இங்கே முதலாவதாக என்னுடைய சந்தேகத்தை நீக்கும்படி, நான் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறேன் என்று காட்டும்படி ஒரு தேவனுடைய பிள்ளைக்கு நான் உதவியிருக்கிறேன். இரண்டாவதாக ஒரு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நிய பாஷைகளில் பேசுகிறார். பரிசுத்த ஆவியை அவர் பெற்றிருந்தார் என்பதற்கு அவர் அன்று அந்நியபாஷையில் பேசியதே எனக்கு அடையாளமாகும் என்று நான் ஒரு உண்மை சம்பவத்தை இன்று முன்வைக்க முடிகிறது.
ஏசாயா 28:11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். என்று வாசிக்கிறோம். இதுவே பரிசுத்த ஆவியின் பொழிந்தருளுதலின் முன்னுரைப்பு அல்லது தீர்க்கதரிசனம் ஆகும். மேலும் கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று யோவேல் தீர்க்கதரிசி சொன்னபடி இன்றும் நடை பெறுகின்றது. சீனாவில் அநேகர் பரிசுத்த ஆவியில் நிரம்பி அந்நியபாஷைகளை பேசுகின்றார்கள்.
அடுத்ததாக அந்நியபாஷையில் பேசினால் அதற்கு அர்த்தம் சொல்லவேண்டுமா? அநேகமாக நீங்கள் பேசும் அந்தபாஷைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (அதான் அந்நியபாஷை ஆயிற்றே). அருகில் இருக்கும் ஒருவருக்கு அதின் அர்த்தம் தெரிந்தால் அவர் சொல்லலாம். வியாக்கியானம் (interpretation) என்னும் வரம் இருப்பவர்களுக்கு அதின் அர்த்தம் தெரிய வாய்ப்புகளுண்டு. 1 கொரி 14:6 ல் நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால் மற்றவர்களுக்கு பிரயோஜனம் இல்லை என்று பவுல் சொன்னதின் அர்த்தம் நீங்கள் பேசுவது புரியாது எனவே அதினால் மற்றவர்களுக்கு பிரயோஜனமில்லை, உங்களுக்கோ பிரயோஜனம்தான்; உங்களுடைய உள்ளான மனுஷன் பெலப்படவும் தேவனுடைய ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படவும் (Sanctification through the Spirit) அவசியம்தான்.
எனவே அந்நிய பாஷையில் பேசவேண்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதுவே முதன்முதல் பரிசுத்தாவி பெற்ற அனைவருக்கும் உண்டான அனுபவம் என்று வேதத்தில் மேலே வாசித்ததுபோல், இன்றும் நீங்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவேண்டும்.
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க ஆவியினால் பிறக்கவேண்டும். அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவேண்டும். கர்த்தருடைய வருகையில் போகவும் பரிசுத்த ஆவியில்ன் அபிஷேகம் பெற வேண்டும் . ஏனெனில் "நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்"(எபேசியர் 4:30 )என்று வாசிக்கிறோமே. மேலும் "கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்..." என்றும் வாசிப்பதால், நம்முடைய சரீரம் கண்ணிமைக்கும் பொழுதில் மறுரூபமடைய பரிசுத்த ஆவி அவசியம்.
-------
Part II (updated 28 Apr 2010)I கொரி 12:30 ல் "எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? " என்று வாசிக்கிறோம். மேலே சொல்லப்பட்டது ஆவியின் வரங்கள் (Charisma) ஒன்பதில் ஒன்றாகிய பற்பலபாஷைகளை பேசுவதைக்குறித்து (diverse of tongues) சொல்லப்பட்டுள்ளது. 1 கொரி 12 முழுவதிலும் Charisma என்னும் கிரேக்க வார்த்தையும், பரிசுத்த ஆவியின் வரம் என்று அப் 2:38ல் dorea என்னும் கிரேக்க வார்த்தையும் பவுல் பயன்படுத்தியுள்ளார். எனவே எல்லாருக்கும் ஒன்பது வரங்களும் உண்டா? ஆவியானவர் தமக்கு இஷ்டமானபடியே அளந்து கொடுக்கிறார் என்று சொல்கிறார். எனவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆவியின் வரங்களில் ஒன்றாகிய diverse of tongues என்பதைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.பரிசுத்த ஆவியின் வரத்தைப் (dorea) பெறும்போது அதற்கு அடையாளமாக அந்நிய பாஷைகளில் நீங்கள் பேசுவீர்கள். ஆனால் அந்த ஆவியிலே நீங்கள் நிரப்பபடும்போது ஆவியானவர் உங்களுக்கு ஆவியின் வரங்கள் (charisma) ஒன்பது என்பதில் ஒன்றாகிய பற்பல பாஷைகளில் பேசும் வரத்தை உங்களுக்கு தரமுடியும். இதையும் அந்நியபாஷையையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.பவுல் பரிசுத்த ஆவியில் நிறையும்போது அந்நியபாஷையில் பேசினாரா என்று கேட்கும்போது, ஆனால் "உங்கள் எல்லாரைக் காட்டிலும் அதிமாக அந்நியபாஷை பேசுகிறேன் என்கிறார்" (1 கொரி 14:18)
தேவன் தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்தாவி என்று நாம் வாசிப்பதால் அனைவரும் தேவனிடம் கேட்டு அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன என்பதில் "நவமான பாஷைகளைப் பேசுவார்கள்" என்றும் வாசிக்கிறோம்.
1. முதல்படியாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது ஏதோ ஒரு வல்லமை [மின்சாரம்போன்றோ அல்லது தங்கள் மயிர்சிலுக்கும் ஒரு அனுபவம் போன்றோ] தங்களை தொடுவதை உணருகின்றார்கள்.
2. அடுத்த நிலையாக அந்நியபாஷைகளை பேசுகின்றார்கள்.
ஒருவர் தன்னுடைய வாழ்வில் பரிசுத்தாவியினால் நிரம்பி அந்நியபாஷை பேசும் அனுபவம் இல்லாதவராயின் அவர் பரிசுத்தாவியினை பெற்றிருக்க வாய்ப்பில்லை. இப்படி அந்நியபாஷைபேசும் அனுபவமில்லாதவர்கள் இக்கருத்துக்கு மறுப்புதெரிவிக்கிறார்கள். நீங்கள் ஒரு நல்ல ஆவிக்குரிய சபைக்கு சென்றால் அங்கே நான் சொல்லும் அனுபவங்களை காணவும் உணரவும் பெறவும் முடியும்.
*ஒரு ஆராய்ச்சி இங்கே செய்தியாக :*
👇
[26/09 2:03 pm] Charles Pastor VDM: https://youtu.be/NZbQBajYnEc
[26/09 2:03 pm] Elango: என்றைக்கு ஒருவன் ஆண்டவரை விசுவாசிக்கிறானோ அன்றைக்கே அபிஷேகம், பரிசுத்த ஆவியை பெகிறான் என்பது பிரதரன் சபையின் கள்ளப்போதனையே...
[26/09 2:06 pm] Elango: இதற்கு 1 யோவான் 2:27 ஆதாரமாக வைப்பதும் துருஉபதேசம்.
[26/09 2:07 pm] Elango: அந்நியபாஷையை தேவனுடைய வரம் என்று ஏற்காத சபை சபையே அல்ல
[26/09 2:08 pm] Charles Pastor VDM: அந்நிய பாஷை என்றால் என்ன?
இந்த அந்நிய பாஷையில் ஜெபிப்பது சர்ச்சைக்குள்ளானதாகவும்,
துரதிஷ்டவசமாக தவறாகவும் புரிந்துக்கொள்ளப்படுகிறது.
அந்நிய பாஷை ஒரு அபிஷேகம்,
★ தேவன் அருளிய பாஷை
★ஆவியானவரின்
அடையாளம்
★ சாத்தானுக்கு புரியாத
பாஷை
★ தேவனோடு பேசும் பாஷை
அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாது இருக்கிறபடியினாலே,
அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். (1 கொரி 14:2)
★அந்நிய பாஷையின் அர்த்தம் புரிந்துக் கொள்கிறவன் பாக்கியவான். அந்நிய பாஷையில் தேவனிடம்
தன் மனதின் ஆழமானவைகளை விண்ணப்பிக்கிறான்.
அந்நிய பாஷையை ஒருமுறை பேசுகிறவன் பலவிதமான அனுபங்களைப் பெறுகிறான். இது ஒருமுறை அனுபவம் அல்ல.
அந்நிய பாஷை பேசி ஜெபிப்பதால் என்ன பயன்?
★இயற்க்கைக்கு மேற்ப்பட்ட புரிதலால் (Supernatural understanding) தேவ ரகசியங்கள் வெளிப்படும்.
1 கொரிந்தியர் 2: 10
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
★பரிசுத்த ஆவியானவரின் மற்ற வரங்களை அணுகிப் பெற முடிகிறது.
1 கொரிந்தியர் 12
8 ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
10 வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
யோவான் 16: 13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல்,
★தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
★ தேவனோடு நேரடியாக பேசுகிறோம்.
“மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.” (1 கொரி 14:2)
★ ஆவிக்குரிய யுத்த போர்முறையில் அதிகாரம் செலுத்தி வெற்றிக் கொள்ளச்செய்கிறது.
எபேசியர் 6: 10- 18 வசனங்கள் ஆவிக்குரிய யுத்தத்தை சொல்லுகிறது.
எபேசியர் 6
18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்
.
[26/09 2:11 pm] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 8:15-18
[15]இவர்கள் வந்தபொழுது *அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,*
[16]அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
[17]அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.
[18]அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
👆 எல்லா விசுவாசிகளும் பரிசுத்த ஆவியைப் பெறவேண்டும் ஆனால் எல்லாரும் பரிசுத்தாவியைப் பெற்றவர்களல்ல
[26/09 2:16 pm] Ebi Kannan Pastor VDM: உங்கள் திருமறை உங்களுக்கு அதை கூறவில்லையென்றால் அது திருமறையே அல்ல
பாஸ்டர் சார்ல்ஸ் கூறினது
வேதாகமம் கூறின உண்மை
[26/09 2:21 pm] Charles Pastor VDM: அபிஷேகம், அந்நிய பாஷை குறித்த சில கேள்விகளுக்குப் பதில்கள்
ஆவியினால் நிரப்பப்படுதலும் ஆவியினால்திருமுழுக்குப் பெறுதலும் ஒன்றுதானா?
ரு தம்ளரின் விளிம்புவரை தண்ணீர்ஊற்றப்படுதலைப்போன்றது ஆவியினால்நிரப்பப்படுதல். தம்ளர் தண்ணீருக்குள் முற்றிலும்மூழ்கடிக்கப்படுவதைப்போன்றது (அமிழ்ந்துபோவதைப்போன்றது) ஆவியினால் திருமுழுக்கு(அபிஷேகம்) பெறுதல். இது ஒரு நிரம்பி வழியும்அனுபவம் என்றுகூட கருதலாம்.
ஆவியினால் திருமுழுக்குப் பெறும்போதுநிரப்பவும் படுகிறோம். ஆனால் நிரப்பப்படும் போதெல்லாம் திருமுழுக்குப் பெறுவதில்லை. புதியஏற்பாட்டுக் காலத்திலும், அதற்குப் பின்னும்(இக்காலம் வரை) ஒரு மனிதன் முதல் முறையாகஆவியானவரைப் பெறுதலை ஆவியினால்திருமுழுக்குப் பெறுதல் என்று கூறுகிறோம். அதன்பின்னர் அந்த மனிதன் மீண்டும் மீண்டும்ஆவியானவரால்; நிரப்பப்படலாம். அப்:2:4 இல்ஆவியினால் திருமுழுக்குப் பெற்றவர்கள், மீண்டும்நிரப்பப்படுவதை அப்:4:31 இல் காண்கிறோம்.எப்பொழுதும் ஆவியினால் நாம் நிரம்பியிருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (எபே:5:18-19).
சீடர்கள்மேல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துஊதியபோது (யோவா:20:22) அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால்அவர்கள் பரிசுத்த ஆவியின் திருமுழுக்கைஅப்பொழுது பெற்றுக் கொள்ளவில்லை. ஆகவேஅதைப் பெறுவதற்காக எருசலேமில்காத்திருக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார். (லூக்-24:49,அப்-1:4-5) அவ்வாறு காத்திருந்தஅவர்கள் பெத்தெகொஸ்தே நாளன்றுதான்ஆவியினால் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே ஆவியானவரைப்பெற்றுக்கொள்ளுதலும் ஆவியினால்திருமுழுக்கைப் பெறுதலும் வெவ்;வேறுநிகழ்ச்சிகளாக இருந்து வந்தன. ஆனால்பெந்தகொஸ்தே நாளுக்குப் பின்னர்ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுதல் என்பதுஆவியினால் திருமுழுக்குப் பெறுதலின்மூலமாகவே அமைந்திருந்தது.
எனவே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்களாஎன்று கேட்பதையே குறிக்கும். இவ்வாறுபெற்றவர்கள் மீண்டும் மீண்டும் நிரப்பப்படும்அனுபவத்தை அடைவது தேவையானது.
தண்ணீர்த் திருமுழுக்குப் பெறாதவர்கள்ஆவியினால் திருமுழுக்குப் பெற முடியுமா?
முடியும் என்பதை வேதம் காண்பிக்கிறது.கொர்நேலியு வீட்டார் அவ்விதம்பெற்றுக்கொண்டார்கள் (அப்:10:44-48)இக்காலத்திலும் அநேகர் தண்ணீர்த் திருமுழுக்குப்பெறும் முன்பே ஆவியினால் திருமுழுக்குப்பெறுகிறார்கள். இவர்கள் கொர்நேலியு வீட்டாரைப்போல தண்ணீர்த் திருமுழுக்கைச் சீக்கிரத்தில்பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏன் பலர் இதைப் பெறவில்லை?
தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்குத்திரும்பாதவர்களுக்கு இது கிடைக்காது என்று(நீதி:1:23) இலிருந்து புரிந்துகொள்ளலாம்.அதாவது பாவத்திலிருந்துமனந்திம்பாதவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர்அருளப்படமாட்டார்.
மனந்திரும்பியதாகக் கூறியபோதிலும் ஜென்மசுபாவம் கொண்டிருப்பவர்கள்ஆவிக்குரியவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்(1கொரி:2:14) இவர்களுக்கும் ஆவியின்அருள்மாரி கிடைக்காது. ஆவியானவரின்அருள்மாரியின் உண்மையை ஏற்றுக்கொள்ளஇவர்கள் மறுப்பார்கள். வேதத்தைத் திறந்தமனதுடன் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் சுபாவத்திற்குஏற்ப திரித்துக் கூறுவார்கள். இப்படிப்பட்டவர்களின்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுதல் சரியல்ல.
மனந்திரும்பியபோதிலும் பின்னர் தேவனுக்குக்கீழ்ப்படியாமலிருப்போர் ஆவியின் அருள்மாரியைஅடையாமற்போகலாம். (அப்:5:32) இலிருந்துஇதை அறிகிறோம்.
ஆவியானவரைக் குறித்துச் சரியாகஅறியாமையால் பலர் அவரைப்பெற்றுக்கொள்வதில்லை (அப்:19:1-2).விசுவாசிப்போருக்கே ஆவியானவர்அருளப்படுகிறார் (கலா.3:14). எனவேவிசுவாசிக்காததால் ஆவியின் அருள்மாரியைப்பெறும் வாய்ப்பைச் சிலர் இழக்கிறார்கள்.
கள்ளப் போதகங்களால் இழுப்புண்டு,ஆவியானவரின் அருள்மாரியைக் குறித்துத்தவறான எண்ணமுடையவர்களுக்கு அதுகிடையாது. வேதத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால்இக் கள்ளப் போதகங்களினின்று தப்ப ஏதுவாகும்.வேதமே நமக்கு ஆதாரம்.
மேற்கண்டதைப் போன்ற ஏதேனும் ஒருகாரணத்தால் பெற்றுக் கொள்ளாத சிலர் பரிசுத்தஆவியினால் திருமுழுக்குப் பெறும் அனுபவத்தைமறுக்கவும் குறைகூறவும் முற்படுகின்றனர்.இவ்வாறு செய்வது மிகவும் தவறான செயல் ஆகும்.
பரிசுத்த ஆவியினால் திருமுழுக்குப் பெறுவதற்குக்கைகளை வைத்தல் சரியா?
அப்போஸ்தலராகிய பேதுருவும், யோவானும்ஜெபம்பண்ணி, கைகளை வைத்தபோது சமாரியர்பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள்(அப்.8:16-17) அப்போஸ்தலனாகிய பவுல்கைகளை வைத்தபோது எபேசு சபையின்விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்தார்(அப்.19:6). எனவே இவ்வாறு செய்வது கைகளைவைப்பது வேதத்தின் படி சரிதான்.
இவ்வாறு பரிசுத்த ஆவியானவர் அருளப்படும்படிஜெபித்துக் கைகளை வைப்பது ஒரு வரம் என்பதை(அப்.8:17-20) இல் காண்கிறோம். இந்த வரம்அப்போஸ்தலருக்கு மட்டுமன்றி சாதாரணசீடர்களில் சிலருக்கும் அருளப்பட்டிருக்கிறது.எடுத்துக்காட்டாக சவுல் பரிசுத்த ஆவியைப்பெற்றுக்கொள்ளும் படி அனனியா என்ற சீடர்சவுலின்மீது கைகளை வைத்ததை அப்.9:17 இல்காண்கிறோம்.
இவ்விதம் பரிசுத்த ஆவியானவரின்அருள்மாரிக்குள் நடத்தும் வரம் பெற்றவர்கள்கைகளை வைத்து ஜெபித்தல் முறையானதுதான்.
ஆவியில் நிறையும் போது உடல் அசைவு, கூச்சல்ஏன்?
அந்நிய மொழிகளில் பேசும் போது சிலர் சிறிதுஆடுகிறார்கள், சிலர் கைகளை அசைக்கிறார்கள்,சிலர் கைகளைத், தட்டுகிறார்கள், சிலர் மிகவும்சத்தமாக பேசுகிறார்கள். இது வேதத்தின் படிசரியானதே. பெந்தகொஸ்தே நாளில் ஆவியினால்நிறைந்தவர்களை மற்றவர்களை பார்த்த போதுஅவர்கள் குடித்திருக்கிறார்களோ என்றுகருதுமளவிற்கு நிகழ்சிகள் நடந்தன (அப்.2:13)ஆனால் உடல் அசைவு இல்லாதவாறும்ஆவியானவரின் திழுமுழுக்கைப்பெற்றுக்கொள்பவர்கள் உண்டு. உணர்ச்சி வசப்படும்அளவானது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறதுஅல்லவா?
அந்நிய மொழியில் பேசுவதைக் கட்டுப்படுத்தமுடியுமா?
முடியும். நாமாக நிறுத்தத் தீர்மானித்தால் உடல்இயக்கத்தையும், அந்நிய மொழி பேசுவதையும்நிறுத்த முடியும். கைகளை அசைக்கும் போதுஆவியானவரின் வல்லமையை உணர்ந்துதான்அசைகிறோம். நாமாகக் கைகளை ஆட்டுவதில்லை.எனினும் நாம் நிறுத்தத் தீர்மானித்தால் நிறுத்தமுடியும். இதுவும் வேதாகமத்தின்படியே உள்ளது.ஏனெனில், தீர்க்க தரிசிகளுடைய ஆவிகள்தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது என்றுவேதம் கூறுகிறது (1கொரி.14:32)
போலியாக அந்நிய மொழிகளைப் பேசுகிறவர்கள்உண்டா?
தேவனுடைய பிள்ளைகள் தேவனிடம் கேட்டுப்பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரியைப் பெற்று,பின்னர் அந்நிய மொழிகளில் பேசுவது நமக்குத்தெரிந்ததே.
இதேவிதமாக ஏமாற்றுக்காரர்கள் பேச முயற்சிப்பதுசாத்தியம்தான். அவ்விதம் பேசுமாறுபிசாசு மக்களைஏவுவதும் நடக்கக்கூடியதே. கள்ள தீர்க்கதரிசிகளும்,கள்ளப் போதகர்களும், கள்ளக் கிறிஸ்துக்களும்இருக்கும் இக்காலத்தில் இது நடைபெற ஏதுவுண்டுவானத்திலிருந்து அக்கினியை இறக்கும்படியான அற்புதம் செய்யத் துணியும் பிசாசு எந்தப் போலிஅற்புதத்தையும் செய்ய முடியும் அல்லவா(வெளி.13:13)?
ஆனால், போலிகள் இருக்கின்றன என்பதற்காகஉண்மையானதைப் புறக்கணித்தல் தவறு.கத்தருடைய பிள்ளைகள் பரிசுத்த ஆவியினால்நிரம்பி அந்நிய மொழிகளில் பேசுவது வேதத்தின்படி சரியானதே.
அந்நிய மொழிகளை சிலர் தவறாகப்பயன்படுத்துகிறார்களே?
சிலர் ஒரு காரியத்தைத் தவறாகப் படுத்துகிறார்கள்என்பதற்காக அதை மறுப்பதும் வெறுப்பதும்சரியல்ல. நாம் சரியாகப் பயன்படுத்துவதே சரியானமுறையாகும்.
'தவறாகப் பயன்படுத்தலுக்கும், குறை கூறுதலுக்கும்பரிகாரம் பயன்படுத்தாமை அல்ல. சரியாகபயன்படுத்துதலே பரிகாரம் ஆகும். நாம் சரியானமுறையில் அந்நிய மொழிகளைப் பயன்படுத்ததீர்மானிப்போம்.
தியானிக்க… மத்-12:22-37, அப்-10:44-48
Dr.Alfred devadasan அவர்கள் எழுதிய “பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி,வரங்கள், கனி நூலிலிருந்து.......
[26/09 2:31 pm] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 19:6
[6]அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.
[26/09 2:33 pm] Stanley Ayya VDM: உண்மை.
ஆனால் ஞானத்தின் படி
பிறர்க்கு புரியாமல் பேசுதலை கட்டாய படுத்துவது நிச்சயமாக சரியானதாக தெரியவில்லை.
அவர் அவர் விசுவாசம் அவருக்கானதே.
யார் பிறர்ருக்காக தியாகம் செய்கிறார்களோ அவர்களே அன்றி வேறு யாரையும் தேவன் "அப்பாலே போங்கள்" என்றே சொல்ல போகிறார் என்பதே திட்டம்.
அந்நிய பாசை அவர் அவருக்கான அடையாளமாக கூடும்.
அனால் புரியாதவருக்கு சங்கடமே
அதை தேவன் நன்கு உணர்வார்.
[26/09 2:35 pm] Stanley Ayya VDM: அந்நிய பாசையை
உணர்ந்தவர்கள்
அதை மட்டும் தேவபக்தியின் அடையாளம் என்பதோடு மட்டுமில்லாமல் கட்டாயபடுத்துவது
சரியானதாக தெரியவில்லை.
[26/09 2:40 pm] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 2:38
[38]பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
[26/09 2:42 pm] Ebi Kannan Pastor VDM: அப்போஸ்தலர் 2:39
[39]வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
[26/09 2:45 pm] Stanley Ayya VDM: அந்நிய பாசையை மட்டும் பரிசுத்த ஆவியின் அடையாளமாக தொடந்து முக்கயபடுத்துவதால்
ஆத்ம ஆதாயமே பெரும் ஆபத்தாகி போய்விட்டது- - - - - -
+ உள்ளானமனிதனை
யாராளும் அடையாளம் காண முடியாதால் உள்ளத்தால் பாவமான மனிதன் தன் பரிசுத்தமின்மையை மறைத்து வெளியில் அந்நநிய பாசையை கத்தி கூச்சலிட்டு தன்னை இரட்சிக்க பட்டவன் என்று காட்டி தப்பிப்பதோடு அவரின் பாவமறிந்த புற மனிதர்கள் நம் இரட்சிக்க பட்ட முழு சமுதாயத்தையும் தவறா க நினைப்பதோடு அவர்களை போல் அனேக இரட்சிப்பையும் தடை செய்யும் தகவல்களை பரப்பிவிட முடியும்.
சுகமளிக்கும் வரத்தை நாம் ஏன் பரிசுத்த ஆவியின் அடையாளமாக கட்டாயபடுத்துவது இல்லை.
ஏனெனனில் சுகமளிக்கும் வரத்தை பெரும்பாலாரால் பயன்படுத்தவே முடியாது.
[26/09 2:48 pm] Elango: என்றைக்கு ஒருவன் ஆண்டவரை விசுவாசிக்கிறானோ அன்றைக்கே அபிஷேகம், பரிசுத்த ஆவியை பெகிறான் என்பது பிரதரன் சபையின் கள்ளப்போதனையே...
[26/09 2:49 pm] Rooban Pastor VDM: சொல்லோவியம் வேதமும் தவறானதா😭😭😭😭😳அருமை
[26/09 2:50 pm] Elango: கண்டிப்பாக.. அது பிரதரன் சபையினர் எழுதியது
[26/09 2:50 pm] Levi Bensam Pastor VDM: அப்போஸ்தலர் 2:1-3,6,14
[1]பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
[2]அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற *முழக்கம்போல,* வானத்திலிருந்து சடிதியாய் ஒரு *முழக்கமுண்டாகி,* அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
[3]அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
[6] *அந்தச் சத்தம் உண்டானபோது,* திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
[14]அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
[26/09 2:51 pm] Stanley Ayya VDM: புரியாத சத்தத்தில் கத்திவிட்டு பரிசுத்த ஆவி பெற்றதாக காட்டிவிட்டு ஆனேகர் பழையவாழ்க்கையே வாழ்ந்து தேவனை துக்கபடுத்திவிட்டு ஆத்ம ஆதாயவளர்ச்சியை சீர்குழைத்து வருவதால்
அந்நியபாசையை சற்று சிந்தித்து தனக்குமட்டும் பக்திவிருத்தியாக அறைக்குள்ளாக முடித்துவிட்டு
நித்திய ஜீவனை அடையும் அடையாளமாக சிறுமைபட்டவருக்கு ஓடி உதவும் தியாக வாழ்வை அடையாளபடுத்தலாம்.
அந்நியபாசை பலர்பார்க்க கூச்சல் இடுவது - - -
தேவன் பார்வையில் பலருக்கு முன்பாக தன்னை பக்தி உள்ளவராக காட்ட மட்டுமே உதவுமே தவிர தேவனுக்கு மனநிறைவை தரும் வாய்ப்பு குறைவானவையே.
[26/09 2:54 pm] Levi Bensam Pastor VDM: எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:7
[7]அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, *பலத்த சத்தத்தோடும்* கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
[26/09 2:55 pm] Charles Pastor VDM: *தெய்வத்தைப் பற்றிய எழுதும் நூல்களைப் வேதம் என்றும், தெய்வீக நூல்கள், சட்ட நூல்கள் , தூய நூல்கள் போன்றவற்றை ஆகமங்கள் என்றும் அழைப்பது தமிழ் மரபு. இச்சொற்களை இணைத்து வேதாகமம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. வேதாகமம் தேவனால் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட புத்தகமாகும். எனவே இதை மறைக்கப்பட்டது என்று பொருள் கொள்ளும் திருமறை என்று அழைப்பதும் எந்த மொழியிலும் இல்லாத வார்த்தையாகிய விவிலியம் என்று அழைப்பதும் பொருத்தமானது அல்ல.*
[26/09 2:56 pm] Ebi Kannan Pastor VDM: 1 கொரிந்தியர் 14:21-22
[21]மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
[22]அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
[26/09 2:57 pm] Charles Pastor VDM: மற்றவரை பாராமல் நாம் சரியாக உள்ளோமா என கவனித்து வாழ்வதே கால சிறந்தது
[26/09 2:58 pm] Levi Bensam Pastor VDM: *பிசாசு ஒருவனை விட்டு போகும் போது அலைக்கழித்து விட்டு போகும், பரிசுத்த ஆவியானவர் ஒருவருக்குள் வரும் போது பலத்த சத்தம் உண்டாகும், இடமே அசைந்து ஆர்ப்பரிப்பு உண்டாகும்*👍👍👍
[26/09 2:59 pm] Charles Pastor VDM: தெய்வத்தைப் பற்றிய எழுதும் நூல்களைப் வேதம் என்றும், தெய்வீக நூல்கள், சட்ட நூல்கள் , தூய நூல்கள் போன்றவற்றை ஆகமங்கள் என்றும் அழைப்பது தமிழ் மரபு. இச்சொற்களை இணைத்து வேதாகமம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. *வேதாகமம் தேவனால் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட புத்தகமாகும். எனவே இதை மறைக்கப்பட்டது என்று பொருள் கொள்ளும் திருமறை என்று அழைப்பதும் எந்த மொழியிலும் இல்லாத வார்த்தையாகிய விவிலியம் என்று அழைப்பதும் பொருத்தமானது அல்ல.*
[26/09 3:01 pm] Thirumurugan VDM: அப்படி ஒன்றும் இன்றைக்கு அசைகிற மாதிரி தெரியலையே!!! இருந்திருந்தால் newsல வந்திருக்கும்!????
[26/09 3:03 pm] Levi Bensam Pastor VDM: 1 தீமோத்தேயு 6:20-21
[20]ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, *சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு*.
[21]சிலர் அதைப் பாராட்டி, *விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள்.* கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
[26/09 3:04 pm] Levi Bensam Pastor VDM: 2 தீமோத்தேயு 2:23
[23] *புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.*
[26/09 3:06 pm] Levi Bensam Pastor VDM: தீத்து 3:9-11
[9] *புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.*
[10] *வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு ❌❌❌❌❌⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕அவனை விட்டு விலகு.*
[11] *அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.*
[26/09 3:08 pm] Levi Bensam Pastor VDM: வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16
[15]உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; *நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.*
[16]இப்படி *நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.*
[26/09 3:12 pm] Levi Bensam Pastor VDM: வெளிப்பட 19:5-6
[5]மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, *நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.*👇👇👇👇👇👇👇👇👇👇
[6] *அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி:👇👇👇👇👇👇👇 அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்*.
[26/09 3:17 pm] Ebi Kannan Pastor VDM: தேவன் கிரியை செய்கிறார் என்பது அவர்களுக்கு அடையாளமாகிறது
அந்த அடையாளத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ அல்லது நிராகரிக்கிரார்களோ
[26/09 3:17 pm] Levi Bensam Pastor VDM: *பரலோகத்தில் ஆரவாரம் சத்தம் கேட்குமே, அப்படி என்றால் பரலோகம் வேண்டாமா*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 வெளிப்படுத் 19:1,5-6
[1]இவைகளுக்குப்பின்பு, *பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன்.*👇👇👇👇👇👇👇👇 அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
[5]மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, *நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.*👇 👇 👇 👇 👇 👇 👇 👇
[6]அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் *ஆரவாரம்போலவும்,* பெருவெள்ள *இரைச்சல்போலவும்,*👇 👇 👇 *பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி:*👇👇👇👇 *அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.*
[26/09 3:19 pm] Elango: *அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது என்பதன் அர்த்தம் என்ன❓*
சபையில் அந்நிய பாஷைகளில் பேசுவது அவிசுவாசி தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றது அது காண்பிப்பதாலும் அங்கு நடக்கிறது என்னவென்று அவன் அறியாதபடியாலும், வசனம் 21,23 அது அவிசுவாசிகளுக்கு எதிர்மறையான ஒரு அடையாளமாயுள்ளது.👈👈👆👆
எப்படியென்றால், அது பரிசுத்தாவியானவராலுண்டாகும் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு கிரியை என்றும், சபையில் தேவன் கிரியை செய்கிறார் என்பதற்கு அத்தாட்சி என்றும் அவர்கள் ஏற்றுக்கொள்ளுகிறார்.
[26/09 3:28 pm] Rooban Pastor VDM: யாரையும் நியாயம் தீர்க்க கூடாது அது தேவனுடைய வேலை,
[26/09 3:28 pm] Jeyanti Pastor VDM: இதோடு வியாக்கியானம் அவசியம் தேவை
[26/09 3:32 pm] Ebi Kannan Pastor VDM: அப்படியானால் ஏழை எளியவர்களுக்கும் அம்பானியும் அதானியும் பக்திமான்களென்று ஏற்பீர்களோ.
அந்நியபாஷை பேசுகிறவர்களல் நற்கிரியை செய்யாதவர்போல் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் தவறுகிறீர்கள் நண்பா
[26/09 3:42 pm] Joseph Dhanaraj VDM: அறையின் கதவைப்பூட்டி முழங்காலிட்டு தேவனே உம் ஆவியால் என்னை நிரப்பும் என்று... விசுவாசித்து கேட்டால் நாம் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளலாம்....
[26/09 3:43 pm] Joseph Dhanaraj VDM: கேட்கிறவன் எவனும் இலவசமாக பெற்று கொள்ளுகிறான்...பேச முயற்ச்சிப்பவன் அல்ல....
[26/09 3:44 pm] Ebi Kannan Pastor VDM: ✅சபையிலும்கூட
[26/09 3:45 pm] Ebi Kannan Pastor VDM: கேட்க வேண்டியது மிகவும் அவசியம்
மத்தேயு 7:8
[8] *ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்;* தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
[26/09 3:49 pm] Rani VTT 3: At which time pastor
[26/09 3:52 pm] Rani VTT 3: I tried in the noon time
[26/09 3:53 pm] Joseph Dhanaraj VDM: Before a person die...any time...தாகம் இருக்கும் ஒருவன் தண்ணீர் குடிக்க சமயம் பார்ப்பதில்லை....
[26/09 3:54 pm] Ebi Kannan Pastor VDM: Super answer bro
[26/09 3:55 pm] Joseph Dhanaraj VDM: Kindly do not try...just only ask...he will come near you and fill you... Amen..
[26/09 3:55 pm] Ebi Kannan Pastor VDM: Wait on God with faith and prayers
And lets avoid English comments
[26/09 3:57 pm] Ebi Kannan Pastor VDM: வெளிப்படுத்தின விசேஷம் 22:17
[17]ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் *ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.*
யோவான் 7:38-39
[38]வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
[39] *தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.*
[26/09 3:57 pm] Elango: ஏசாயா 44:3
[3]தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
[26/09 4:00 pm] Rani VTT 3: No pastor I prayed to God with tears and asked him lovingly !
[26/09 4:03 pm] Elango: 5⃣ அந்நிய பாஷையில் பேசுகிறவன், மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான் என்பதன் அர்த்தம் என்ன❓
தேவனிடத்தில் நம்முடைய சொந்த பாஷையில் பேச முடியாதா?
[26/09 4:03 pm] Joseph Dhanaraj VDM: கிடைக்கும் வரை கேளுங்கள்.....suddenly... திடீரென நிரப்படுவீர்கள்...ஆமென்
[26/09 4:05 pm] Joseph Dhanaraj VDM: பிசாசுக்கு புரியாத மொழி அன்னிய பாஷை.....எனவே...அன்னிய பாஷையில் இரகசியமாக பேச வேண்டும்....
[26/09 4:06 pm] Edwin Devadoss Ayya VDM: மன்னிக்கவும் சகோதரி. நாங்கள் ஜெபிக்கலாம்,
[26/09 4:06 pm] Edwin Devadoss Ayya VDM: விடாமல் ஜெபிக்கலாம்
[26/09 4:07 pm] Edwin Devadoss Ayya VDM: இன்று , இப்போதே கர்த்தர் தருவார்
[26/09 4:08 pm] Elango: 2⃣ அந்நியபாஷை அடையாளமாக இருக்கிறதா அல்லது வரமாக இருக்கிறதா❓
இரண்டும் தானே?🤔
[26/09 4:14 pm] Jeyanti Pastor VDM: சாத்தானுக்கு தெரியாமல் தேவனோடு ் ரகசியங்களை பேச கொடுக்கப்பட்ட பாஷை
11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
ஏசாயா 28
[26/09 4:16 pm] Stanley Ayya VDM: இது என்ன வாதம்?
எல்லோரும் பார்வைக்கு செயல்படுவதை தியானிப்பபதால் அல்லவா அதை பற்றி பேச வேண்டியுள்ளது.
ல்லோருக்கும் புரியும்படி தேவபக்த்தி இருந்தால் மட்டுமே விசுவாசம் வளரும்.
என் வாதம்
எது உண்மை
எது தவறு
என்பதை புரிந்து கொண்டால் தான் அடுத்த அடி வைக்க முடியும் என்பதே.
வேதம் விளக்கம் தருவதன்படி உங்களின் அந்நிய பாசை தேவனுக்கு மட்டுமே புரியும் என்பதால் அதை சபையில் பேசுவதை விட்டு உங்களின் ஜெப அறையில் பேசாலாம்.
அனைவரும் கூடிவருகிற இடத்தில் பலதரபப்ட்ட வளர்ச்சியுள்ளவர்களே.
சிலரால் உணரமுடிமானால் பலர் புரியாத நிலையில் மன ரீதீயாக தாக்கப்பபட்டு தேவபக்தியின் வளர்ச்சி குறைவு ஏற்படவே வாய்ப்பாகும்.
தேவனை மகிழ வைக்கிறேன் என்று தேவனை துக்கபடுத்தவே வழி வகுக்கும் என்பதையும் கணக்கில் கொண்டால் நலமே..
[26/09 4:21 pm] Elango: 8⃣ அந்நியபாஷைகளை எல்லாரும் பேசும்படி ஏன் பவுல் விரும்பினார்❓
[26/09 4:26 pm] Stanley Ayya VDM: முதலில்
அந்நிய பாசை பேசுபவர் அனைவரும் பரிசுத்த ஆவி பெற்றவரே என்பதற்க்கு என்ன அடையாளமும் அளவீடும் உள்ளது?
பொய்யானவர்களையும் தவறானவர்களையும் நடிக்கிறவர்களையும் நம்மமோடு வைக்க உதவும் வழியே அந்நிய பாசை.
அந்நிய பாசை பேசுபவர்கள் தேவ நாமத்தால் சில காரியங்களை நிகழ்த்தினால் மட்டுமே அவர்கள் பரிசுத்த ஆவி பெற்றவர்கள் என்று சான்று தரும் வசதிகள் நம்மிடத்தில் உள்ளதா?
பொய் தீர்க்கதரசிகள்
பொய் ஊழியர்களை போல்
பொய் ஆத்துமாக்களை நிறப்ப வழி வகுக்காமல் பார்த்து கொள்வது தேவ பிள்ளைகளின் அடிப்படை தேவ எதிர்பார்பல்லவா.
எவ்வளவு நன்மை செய்தாலும் ஓரு தவறினால் சகலமும் கெட்டு போகும்.
ஆந்நிய பாசைக்கு எச்சரிக்கை அவசியம்.
தவறான முன்னுதாரனம் எதிர் விளைவுகளை தரும்.
ஆண்டவர் கிறிஸ்த்து அந்நிய பாசை பேசாமால் மலைகாடுகளில் தனிமையில் ஜெபபக்தியை நடத்தியது போல் நாமும் நம் அந்நிய பாசையை பேசினால் இடரல் தவிற்க்கலாம்.
( எது அந்நநிய பாசை என்பதற்க்குள் நான் வரவில்லை)
[26/09 4:30 pm] Stanley Ayya VDM: நற்கிரியைகள் அற்ற தேவபக்தியை குறித்த வேத விளக்கம் என்ன?
கர்த்தாவே
கர்த்தாவே என்பவர்களுக்கும்
நற்கிரியைகள் செய்தவர்களுக்கும் தேவன் என்ன செய்வார் என்ற ஆண்டவர் கிறிஸ்த்துவின் பதிலே
பரிசுத்த ஆவியானவரின் அடையாளமாக இறுதி
இறுதியான விளக்கம்
[26/09 4:32 pm] Stanley Ayya VDM: ஆம்
இரகசியமாக பேசுவதில் ஏந்த
இடரலும் இல்லை.
[26/09 4:40 pm] Elango: 8⃣ அந்நியபாஷைகளை எல்லாரும் பேசும்படி ஏன் பவுல் விரும்பினார்❓
[26/09 4:48 pm] Joseph Dhanaraj VDM: தேவனோடு பேசுகிறவன் அவரோடு இசைங்து இருப்பான்....
[26/09 4:51 pm] Levi Bensam Pastor VDM: *தேவனுடைய ஆவியை அனுபவித்த மோசேக்கு இருந்தது தான் பவுலுக்கும் இருக்கும், ஏன் எனக்கும் அதே விருப்பம் தான்*👇 👇 👇 👇 👇 👇 👇 3எண்ணாகமம் 11:28-29
[28]உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: *என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.*🤔🤔🤔🤔😀😀😀😀😀😀😀
[29]அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? *கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால்👍👍👍👍👍👍👍 நலமாயிருக்குமே என்றான்.*👌👌👌👍
[26/09 4:56 pm] Joseph Dhanaraj VDM: அன்னிய பாஷை தனக்கே பக்தி உண்டாக பேசுவது.... பவுல் சொன்ன நோக்கம் முதலாவது பேசுபவர் பக்தி விருத்தி .....பின்பு...மற்றவர்களுக்கு தீர்க்க தரிசன ஊழியம்...
[26/09 4:58 pm] Levi Bensam Pastor VDM: லூக்கா 22:32
[32]நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; *நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.*✅✅✅👍
[26/09 5:06 pm] Joseph Dhanaraj VDM: பேசுவது (சபையில் மட்டும்) வேறு....அதிகமாக (எப்பொழுதும்) பேசுவது வேறு..... *பவுலைபோல அதிகமாக பேசினவர்களே ஆண்டவரால் வல்லமை யாக பயன்படுத்தப்படுகிறார்கள்...*
[26/09 5:07 pm] Elango: 1⃣0⃣ அந்நியபாஷையில் பேசுதல் ஆவிக்குரிய முதிர்ச்சியைக் காண்பிக்கிறதா❓
[26/09 5:29 pm] Ebi Kannan Pastor VDM: இரகசியம் பேசுதல் இரகசியமாக பேசுவதா😂😂😂❓
[26/09 5:29 pm] Ebi Kannan Pastor VDM: ரோமர் 9:29
[29]அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
👆 தேவனில் இடறாமல் இருப்பது அவசியம்
[26/09 5:30 pm] Ebi Kannan Pastor VDM: 100% உண்மை சகோதரா
மார்ட்டின் லூத்தர்கூட அந்நியபாஷை பேசினதாக குறிப்பு இருக்கிறது
[26/09 5:35 pm] Justin VDM: 😄😄😄...சத்தமா பேசாதீங்க சகோ, சட்டதிட்டங்கள் எல்லாம் குழு உறுப்பினர்களுக்குதான், அட்மின்களுக்கு இல்லை
[26/09 5:38 pm] Ebi Kannan Pastor VDM: https://web.archive.org/web/20061101124830/http://www.highandliftedup.com/outline%20of%20evidence.htm
[26/09 5:46 pm] Ebi Kannan Pastor VDM: நேரமிருந்தால் ஆங்கிலம் தெரிந்தால் வாசிக்கவும்
[26/09 5:46 pm] Joseph Dhanaraj VDM: *கனிகளை* வைத்தே நாம் ஆவியில் முதிர்ச்சியை கண்டுகொள்ள முடியும்...தூதர் பாஷை பேசினாலும் *அன்பு* இல்லாவிட்டால்....வெறும் ஒசை தான் அன்னிய பாஷையும்......
[26/09 5:49 pm] Levi Bensam Pastor VDM: *ஆவிக்குரிய முதிர்ச்சியோ இல்லையோ, ஆனால் ஆவிக்குரிய வளர்ச்சியை காண்பிக்கிறது*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👂👂👂👂👂👂👂👂
[26/09 5:51 pm] Joseph Dhanaraj VDM: முதிர்ச்சி... Vs...வளர்ச்சி என்ன வித்தியாசம் பாஸ்டர்....?
[26/09 6:09 pm] Ebi Kannan Pastor VDM: ரோமர் 9:33
[33]இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
👆 தேவனில் இடறாமல் இருப்பது அவசியம்
[26/09 7:42 pm] Senthil Kumar Bro VTT: அந்நிய பாஷை பேசுவதால் என்ன பயன்.....???? பேசுபவர்கள் ஏதாவது உணர்கிறார்களா....???
[26/09 7:43 pm] Senthil Kumar Bro VTT: ஒரு சபையில் 10, 20 பேர் அந்நிய பாஷை பேசும் போது யாருக்கு என்ன பிரயோஜனம்....???
[26/09 7:47 pm] Edwin Devadoss Ayya VDM: குருடனுக்கு பழங்கள் சாப்பிட்டால் தான் இன்னும் பழம் என்று உணர்ந்து கொள்ள முடியும். அதுபோல அந்த உணர்வு மற்றும் சந்தோஷம் , பரலோக அனுபவம்.... அந்நிய பாஷையில் ஜெபிக்கிறவருக்குத் தான் தெரியும்.
[26/09 7:50 pm] Senthil Kumar Bro VTT: குருடன் சாப்பிட்ட பழங்களின் சுவை இப்படி இருந்தது என்று சொல்வானே....???
அப்படி யாரும் சொல்வது இல்லையே... ஏன்..???
[26/09 8:00 pm] Rooban Pastor VDM: என்ன பதிவுக்கு like போட்டேன் என்று அந்த ஆடியோவை கேட்டுவிட்டு பேசுங்கள் மற்றபடி யாரையும் நியாயம் தீர்க்கும் நிலையில் உங்களை தேவன் ஏற்படுத்தவில்லை லைக் போடுவதற்கும் குழுவில் சட்ட திட்டங்கள் உள்ளதா முன்பே தெரியப்படுத்தி இருக்கலாமே...தேவையிலாமல் என் பின் சுற்றும் வேலையை நிறுத்திக்கள்ளுங்கள்....குழந்தை போல நடந்துகொள்ளாதிருங்கள்..நான் உங்களை தவறான போதகர் என்று கூறவில்லை ..அந்த வசனதின் விளக்கத்தை தான் கூறினேன் நன்றி சகோதரரே😇😇👍
[26/09 8:56 pm] Thomas Pastor Brunei VDM: Doctrine of Christ not the teachings of Christ
Kiristhuvai pattriya ubathesam. Kiristhuvin pothanaigal alla..
[26/09 8:58 pm] Tamilmani Ayya VDM: *THE SHOCKING TRUTH ABOUT TONGUES*
What does the Bible teach about this gift of speaking in tongues? That’s what we are going to talk about today on the BEAT.
Hey what’s up everyone my name is Allen Parr and so today we are tackling the touchy subject of speaking in tongues. What is the gift of tongues? What are some misconceptions of tongues? How should it be used in the church?
*What is the Gift of Tongues?*
1) The gift of tongues originally was the supernatural ability to share the gospel in another known dialect without the speaker having previous knowledge of this language (like me speaking Japanese) – Acts 2:1-12
2) Some also believe it is the ability to speak and/or pray in an unknown language.
*So What are some of the Misconceptions?*
1) Everyone can learn to speak in tongues – The Bible teaches that tongues is a spiritual gift. It also teaches that the Holy Spirit is the one who distributes spiritual gifts to believers AS HE WILLS. So just like any other gift you cannot choose your gifts they are given to you. So I don’t how a Christian can learn to speak in tongues any more than they can learn to possess the gift of pastoring of healing or miracles.
2) The second misconception is…People who speak in tongues have more spiritual power than those that don’t – I don’t see anywhere in Scripture where a person who spoke/prayed in tongues was able to accomplish more spiritually than those that didn’t.
a. This type of mentality merely divides the church more than it already is into the haves and the have-nots and makes those that don’t have the gift feel inferior.
*How should this Gift be used in the Church?*
1) There must be an interpreter – So if you’re in church and everyone is speaking in tongues Paul says, what if someone who isn’t familiar with the gift or an unbeliever comes in? (Put yourself in their shoes) They will think they’ve just entered into a crazy place. (14:23) So the question is, “Why would you want to take a chance of offending, confusing or turning off an unbeliever from church simply because you feel the need to speak/pray in tongues in church?” Which is why Paul said, “I CAN speak in tongues but IN CHURCH I would rather speak in a language that EVERYONE can understand.” So even Paul said he doesn’t speak in tongues in church unless there is a KNOWN interpreter present.
2) Experience should never contradict Scripture – Sometimes people will say, “well I just felt the Spirit.” Saints, the same Spirit who empowers us to use our gifts is the same Spirit who inspired the writing of the Bible and He cannot contradict Himself by leading you to have an experience in church that goes against the writing of Scripture. finally, because a Christian’s view on this subject has nothing to do with salvation.
It is my prayer that your views and experiences with this will be based on scripture
Always remember to be sensitive to unbelievers when in a church…
Finally, be careful not to adopt the mentality that people who have the gift are more spiritual or more powerful than those that don’t.
I would love to know your experience with this as it relates to the church so please leave your comments below I’d love to hear them.
We should be focused more on exemplifying the fruit of the Spirit than we are with the gifts of the Spirit.
https://youtu.be/e15Hqwtq78E
[26/09 9:01 pm] Tamilmani Ayya VDM: இந்த அந்நிய பாஷையில் ஜெபிப்பது சர்ச்சைக்குள்ளானதாகவும்,
துரதிஷ்டவசமாக தவறாகவும் புரிந்துக்கொள்ளப்படுகிறது.
அந்நிய பாஷை ஒரு அபிஷேகம்,
★ தேவன் அருளிய பாஷை
★ஆவியானவரின்
அடையாளம்
★ சாத்தானுக்கு புரியாத
பாஷை
★ தேவனோடு பேசும் பாஷை
அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாது இருக்கிறபடியினாலே,
அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
(1 கொரி 14:2)
★அந்நிய பாஷையின் அர்த்தம் புரிந்துக் கொள்கிறவன் பாக்கியவான். அந்நிய பாஷையில் தேவனிடம்
தன் மனதின் ஆழமானவைகளை விண்ணப்பிக்கிறான்.
அந்நிய பாஷையை ஒருமுறை பேசுகிறவன் பலவிதமான அனுபங்களைப் பெறுகிறான். இது ஒருமுறை அனுபவம் அல்ல.
அந்நிய பாஷை பேசி ஜெபிப்பதால் என்ன பயன்?
★இயற்க்கைக்கு மேற்ப்பட்ட புரிதலால் (Supernaturaly understanding) தேவ ரகசியங்கள் வெளிப்படும்.
1 கொரிந்தியர் 2: 10
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
★பரிசுத்த ஆவியானவரின் மற்ற வரங்களை அணுகிப் பெற முடிகிறது.
1 கொரிந்தியர் 12
8 ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
10 வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
யோவான் 16: 13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல்,
★தாம் கேள்விப்பட்டவைகள்' யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
★ தேவனோடு நேரடியாக பேசுகிறோம்.
“மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.”
(1 கொரி 14:2)
★ ஆவிக்குரிய யுத்த போர்முறையில் அதிகாரம் செலுத்தி வெற்றிக் கொள்ளச்செய்கிறது.
எபேசியர் 6: 10- 18 வசனங்கள் ஆவிக்குரிய யுத்தத்தை சொல்லுகிறது.
எபேசியர் 6
18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
[26/09 9:23 pm] Joseph Dhanaraj VDM: *ஆவியின் வரங்களும், ஆவியின் கனியும்*
1] ஆவியின் வரம் ஒரு நொடிப்பொழுதில் பரிசுத்த ஆவியானவரால் தரப்படும் நிகழ்வு
ஆவியின் கனியோ ஒரு நொடியில் பெற்றுக்கொள்ள முடியாது அது கொஞ்சம் கொஞ்சமாக உருவாகக்கூடியது
2] ஆவியின் வரங்களில் எல்லோரும் எல்லா வரத்தையும் பெற்றுக்கொள்ளமுடியாது (1கொரி 12:29-30)
ஆனால் ஆவியின் கனியை எல்லோரும் வெளிப்படுத்தவேண்டும் என்பது தேவசித்தம்
3] ஆவியின் வரங்கள் நம்மிடம் இல்லாவிட்டால் அது நம்முடைய தவறு இல்லை, ஆனால் ஆவியின் கனியில்லாவிட்டால் அதற்கு நாமே முழுப்பொறுப்பு (1கொரி 12:11)
4] ஆவியின் வரங்கள் நம்மை பாவத்திலிருந்து தடுக்கமுடியாது, வேண்டுமானால் வரம் இருக்கும் ஒருவர் இன்னும் அதிக இறுமாப்பாக பெருமையாக நடந்து பாவத்தை கட்டிக்கொள்ளமுடியும். ஆனால் ஆவியின் கனி ஒருவரிடம் பூரணமாக இருந்தால் அவரால் பாவம் செய்ய இயலாது. (மத் 7:22, அப் 8:20)
5] ஆவியின் வரங்கள் மற்றவர்களை இரட்சிப்பில் நடத்த அதிகம் பயன்படுகின்றன, ஆவியின் கனியோ நம்மை பரலோக பொகிஷங்களை பெற்றுக்கொள்ள தகுதிப்படுத்துகின்றன.
6] ஆவியின் வரங்கள் ஒருபோதும் அதை உடையவரின் ஆவிக்குறிய வாழ்வின் வெளிப்பாடு அல்ல, ஆனால் ஆவியின் கனியே ஒருவரின் ஆவிக்குறிய வாழ்வின் வளர்ச்சிக்கான அடையாளம். (மத் 7:16,22,23)
7] கள்ளப்போதகர்களை அவர்களுடைய வரங்களினால் அல்ல, ஆவியின் கனியினால் மட்டுமே சோதித்தறியமுடியும்.
வரங்களின் மிகமுக்கிய நோக்கமே, கனியுள்ள வாழ்க்கைக்கு நேராக நம்மை நடத்துவதே!. உதாரணமாக சபையில் உள்ள வரங்களில் மிக முக்கியமான வரங்கள் என்னவென்றால் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷர்கள், போதகர்கள், மூப்பர்கள் போன்ற வர ஊழியமே! ஆனால் இங்கு அப்போஸ்தல தீர்க்கதரிசன வரங்கள் ஏன் தேவனால் கொடுக்கப்பட்டன, ஒரே காரணத்திற்காக, அதாவது சபையானது குமாரனைப்பற்றும் அறிவில் பெருகி பக்திவிருத்தி அடைவதே! (எபே 4:11..13). இதைத்தான் கனி என்கிறோம்.
கனிகளே நமது பிரதானமான நோக்கம் ஆக வரங்களை கண்டு மயங்கி ஒரு இடத்தில் உட்கார்ந்ததுவிடாமல் வரங்களின் நோக்கமான கனியுள்ள வாழ்க்கையை நோக்கி பயணிப்போம்.
இந்த பதிவின் மூலம் வரங்களை மட்டுப்படுத்துவது நமது நோக்கமல்ல, வரங்களை கனியைவிட முக்கியத்துவப்படுத்தி தேவனுடைய சித்தத்தை குலைத்துப்போடும் சாத்தானுக்கு எதிரான பதிவு , கர்த்தர் நமக்கு நிதானத்தை அளிப்பாராக. ஆமென்.]
[26/09 9:25 pm] Tamilmani Ayya VDM: பகிர்வு பதிவு : (அனுபவித்தவரின் சாட்சி)
அந்நிய பாஷை பேசலாமா ? அந்நிய பாஷை குறித்து வேதம் என்ன சொல்கிறது ? பேசினால் அதன் பொருள் சொல்ல வேண்டுமா ?
1 கொரிந்தியர் 14:6 விளக்கவும் ?
பதில்:
அந்நிய பாஷை பேசவேண்டும். "புதிய ஏற்பாட்டில்" பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றதற்கு அடையாளமாக இப்படியே அநேக இடங்களில் வாசிக்கிறோம். நீங்கள் உன்னதத்தின் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங்கள் என்று இயேசு சொல்லிவிட்டுச் சென்றபின்பு, அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் இப்படியாக வாசிக்கிறோம்: பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
பேதுரு கொர்நேலியு சம்பவம்:
அப்போஸ்தலர் 10:44-46 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
பவுல்:
அப்போஸ்தலர் 19:6 பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்
சில சபைகளில் அந்நியபாஷைகளில் பேசும் அனுபவம் இல்லை. அவர்கள் நீங்கள் எப்பொழுது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களோ அப்பொழுதே பரிசுத்தாவியினை பெற்றுவிட்டீர்கள் என்று சொல்லுகின்றார்கள். இது தவறாகும்.
ஜெபிக்க ஆரம்பித்தால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நியபாஷைகளில் பேசவேண்டும். அப்படி அந்த அனுபவம் இல்லையெனில் ஒரு ஆவிக்குரிய சபைக்கு செல்லுங்கள். அநேகர் தேவனின் வல்லமையினால் தொடப்படும்போது தங்களைக் கட்டுப்படுத்தமுடியாமல் போக நேரிடும். நான் முதன் முதலில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற நாள் மே மாதம் முதல் தேதியாகும். இந்தியாவில் அன்று நடந்த ஜெபக்கூட்டத்துக்கு உபவாசத்துடன் சென்றிருந்தேன். முழங்காலில் நின்று பாடல்களை உற்சாகமாக கைகளைத்தட்டி பாடிக்கொண்டிருக்கும்போது அந்த உன்னதமான ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது. அப்பொழுது நான் தேவனுடைய வல்லமையினால் துள்ளி நிரப்பட்டவனாக வேறெங்கோ சென்றுவிட்டேன். கண் திறந்தபோது நான் இருந்த இடம் ஒரு 15 அடி தள்ளி இருக்கும். நாவு வேறு ஏதோ பாஷையில் பேசியது. இதுவே பரிசுத்த ஆவி பெற்ற ஒருவருக்கு அடையாளமாகும்.
என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம்:
2000ம் வருடம் சில நாட்களாக ஒரு மனதில் ஒரு சந்தேகம். தேவன் என்னை கண்டுகொள்வது இல்லையே, அப்படியானால் நான் ஒருவேளை தேவனுடைய பிள்ளை இல்லையோ என்று ஒரு எண்ணம் என்னை வாட்டியது. அடுத்த நாள் (அமெரிக்காவில்) நான் வழக்கமாக வேலைக்குச் செல்ல ஜெபித்துவிட்டு என்னுடைய காரில் சென்றேன். பொதுவாக தெற்கு கலிஃபோர்னியாவில் ரோட்டின் ஓரத்தில் ஜனங்களை அதிகமாக காணமுடியாது (எல்லாரும் காரில் செல்வதால்). ஆனால் அன்று மேகமூட்டமாக இருந்தது. ரோட்டின் ஓரத்தில் ஒருவர் நன்கு உடையணிந்து நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏதோ உதவி தேவைப்படுமோ என்று எனக்கு தோன்றியது. அவரும் தனக்கு முன் செல்லும் வாகனங்களை ஏதோ எதிர்பார்ப்புடன் நோக்கினார். நான் உடனே காரை நிறுத்தி அதை பின்னே-செல்லும்படி(Reverse) செய்து அவரிடம் நிறுத்தி "Do you need any help?" (ஏதேனும் உதவி தேவையா?) என்று கேட்டேன். அவர் ஆம் வீட்டுக்கு போகவேண்டும். பேருந்து இனி வர மணிநேரம் ஆகும் என்றார். உடனே நான் வாருங்கள் நான் கொண்டுபோய்விடுகிறேன் என்றேன். நாங்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, தான் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் செய்பவர் என்று சொல்லிவிட்டு, என்னுடைய காரில் இருந்த "God cares for you" (தேவன் உங்களைக் குறித்து அக்கறை உள்ளவராயிருக்கிறார்) என்று பெரிதாக ஒட்டப்பட்டிருந்த வாசகத்தைப் பார்த்து, நீங்கள் தேவனுடைய பிள்ளையா என்றார். நான் ஆம் என்றேன். உடனேயே அவருக்கு ஒரு மகிழ்ச்சி, உடனே தன்னுடைய இரு கரங்களை உயர்த்தி தேவனை துதிக்க ஆரம்பித்தார். அடுத்த சில வினாடிகளில் அவர் பரிசுத்த ஆவியினால் நிரம்பி அந்நிய பாஷைகளில் பேசினார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. மேலும் அவர்: தேவனுடைய பிள்ளை ஒருவரை கொண்டுவந்து எனக்கு உதவிசெய்யும் ஆண்டவரே என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்ததாக கூறினார். தான் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவுக்கு வந்ததாகவும் கூறினார். ரஷ்யாவிலே வீட்டிலே நானும் என் மனைவியும் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அந்நிய பாஷையுடன் பெற்றோம் என்றார். ரஷ்யாவில் யாரும் இவருக்கு போய் ஜெபிக்கவில்லை தேவனே இவரை பரிசுத்த ஆவியால் நிரப்பியிருக்கிறாரே என்று எண்ணி ஆச்சரியமடைந்தேன். நானும் நாங்கள் எப்படி இந்துக்களாயிருந்து இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தோம் என்று எங்களுடைய சாட்சியையும் சொன்னேன்... நான் அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்து இவைகளை நினைத்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய விழிகளில் சில கண்ணீர் துளிகள்; காரணம் தேவன் ஒரு வசனத்தைக் கொடுத்தார் "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்". (ரோமர் 8:14)
இங்கே முதலாவதாக என்னுடைய சந்தேகத்தை நீக்கும்படி, நான் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறேன் என்று காட்டும்படி ஒரு தேவனுடைய பிள்ளைக்கு நான் உதவியிருக்கிறேன். இரண்டாவதாக ஒரு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நிய பாஷைகளில் பேசுகிறார். பரிசுத்த ஆவியை அவர் பெற்றிருந்தார் என்பதற்கு அவர் அன்று அந்நியபாஷையில் பேசியதே எனக்கு அடையாளமாகும் என்று நான் ஒரு உண்மை சம்பவத்தை இன்று முன்வைக்க முடிகிறது.
ஏசாயா 28:11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். என்று வாசிக்கிறோம். இதுவே பரிசுத்த ஆவியின் பொழிந்தருளுதலின் முன்னுரைப்பு ஆகும். மேலும் கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று யோவேல் தீர்க்கதரிசி சொன்னபடி இன்றும் நடை பெறுகின்றது. சீனாவில் அநேகர் பரிசுத்த ஆவியில் நிரம்பி அந்நியபாஷைகளை பேசுகின்றார்கள்.
அடுத்ததாக அந்நியபாஷையில் பேசினால் அதற்கு அர்த்தம் சொல்லவேண்டுமா? அநேகமாக நீங்கள் பேசும் அந்தபாஷைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (அதான் அந்நியபாஷை ஆயிற்றே). அருகில் இருக்கும் ஒருவருக்கு அதின் அர்த்தம் தெரிந்தால் அவர் சொல்லலாம். வியாக்கியானம் (interpretation) என்னும் வரம் இருப்பவர்களுக்கு அதின் அர்த்தம் தெரிய வாய்ப்புகளுண்டு. 1 கொரி 14:6 ல் நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால் மற்றவர்களுக்கு பிரயோஜனம் இல்லை என்று பவுல் சொன்னதின் அர்த்தம் நீங்கள் பேசுவது புரியாது எனவே அதினால் மற்றவர்களுக்கு பிரயோஜனமில்லை, உங்களுக்கோ பிரயோஜனம்தான்; உங்களுடைய உள்ளான மனுஷன் பெலப்படவும் தேவனுடைய ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படவும் (Sanctification through the Spirit) அவசியம்தான் என்று அர்த்தமாகும்.
எனவே அந்நிய பாஷையில் பேசவேண்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதுவே முதன்முதல் பரிசுத்தாவி பெற்ற அனைவருக்கும் உண்டான அனுபவம் என்று வேதத்தில் மேலே வாசித்ததுபோல், இன்றும் நீங்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவேண்டும்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறாவிட்டால் கர்த்தருடைய வருகையில் போக இயலாது.
"நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்"
(எபேசியர் 4:30 ) என்று வாசிக்கிறோமே. மேலும் "கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்..." என்றும் வாசிப்பதால், நம்முடைய சரீரம் கண்ணிமைக்கும் பொழுதில் மறுரூபமடைய வேண்டுமானால் பரிசுத்த ஆவி பெற்றிருக்க வேண்டும்.
Part II (updated 28 Apr 2010)
I கொரி 12:30 ல் "எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? " என்று வாசிக்கிறோம். மேலே சொல்லப்பட்டது ஆவியின் வரங்கள் (Charisma) ஒன்பதில் ஒன்றாகிய பற்பலபாஷைகளை பேசுவதைக்குறித்து (diverse of tongues) சொல்லப்பட்டுள்ளது. 1 கொரி 12 முழுவதிலும் Charisma என்னும் கிரேக்க வார்த்தையும், பரிசுத்த ஆவியின் வரம் என்று அப் 2:38ல் dorea என்னும் கிரேக்க வார்த்தையும் பவுல் பயன்படுத்தியுள்ளார். எனவே எல்லாருக்கும் ஒன்பது வரங்களும் உண்டா? ஆவியானவர் தமக்கு இஷ்டமானபடியே அளந்து கொடுக்கிறார் என்று சொல்கிறார். எனவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆவியின் வரங்களில் ஒன்றாகிய diverse of tongues என்பதைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பரிசுத்த ஆவியின் வரத்தைப் (dorea) பெறும்போது அதற்கு அடையாளமாக அந்நிய பாஷைகளில் நீங்கள் பேசுவீர்கள். ஆனால் அந்த ஆவியிலே நீங்கள் நிரப்பபடும்போது ஆவியானவர் உங்களுக்கு ஆவியின் வரங்கள் (charisma) ஒன்பது என்பதில் ஒன்றாகிய பற்பல பாஷைகளில் பேசும் வரத்தை உங்களுக்கு தரமுடியும். இதையும் அந்நியபாஷையையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.
பவுல் பரிசுத்த ஆவியில் நிறையும்போது அந்நியபாஷையில் பேசினாரா என்று கேட்கும்போது, ஆனால் "உங்கள் எல்லாரைக் காட்டிலும் அதிமாக அந்நியபாஷை பேசுகிறேன் என்கிறார்" (1 கொரி 14:18)
தேவன் தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்தாவி என்று நாம் வாசிப்பதால் அனைவரும் தேவனிடம் கேட்டு அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன என்பதில் "நவமான பாஷைகளைப் பேசுவார்கள்" என்றும் வாசிக்கிறோம்.
1. முதல்படியாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது ஏதோ ஒரு வல்லமை [மின்சாரம்போன்றோ அல்லது தங்கள் மயிர்சிலுக்கும் ஒரு அனுபவம் போன்றோ] தங்களை தொடுவதை உணருகின்றார்கள்.
2. அடுத்த நிலையாக அந்நியபாஷைகளை பேசுகின்றார்கள்.
ஒருவர் தன்னுடைய வாழ்வில் பரிசுத்தாவியினால் நிரம்பி அந்நியபாஷை பேசும் அனுபவம் இல்லாதவராயின் அவர் பரிசுத்தாவியினை பெற்றிருக்க வாய்ப்பில்லை. இப்படி அந்நியபாஷைபேசும் அனுபவமில்லாதவர்கள் இக்கருத்துக்கு மறுப்புதெரிவிக்கிறார்கள். நீங்கள் ஒரு நல்ல ஆவிக்குரிய சபைக்கு சென்றால் அங்கே நான் சொல்லும் அனுபவங்களை காணவும் உணரவும் பெறவும் முடியும்.
[26/09 9:40 pm] Senthil Kumar Bro VTT: அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் *அந்நியபாஷைகளைப்* *பேசித்தீர்கதரிசனஞ்* *சொன்னார்கள்* .
அப்போஸ்தலர் 19:6
்தீர்க்கதரிசனம் சொல்ல அந்நிய பாஷை பேச வேண்டும்......
அந்நிய பாஷை பேசும் நிறைய பேர் ஏன் ்தீர்க்கதரிசனம் சொல்வது இல்லை...
[26/09 10:32 pm] Tamilmani Ayya VDM: அந்நிய பாஷை பெற்றவர்கள் வியாக்யான அபிஷேகம் பெற கற்க வேண்டுமென்று தேவ மனுஷர்கள் சொல்லுகிறார்கள். ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தங்களது அந்நிய பாஷை மிக உதவுகிறது என்கின்றனர். அந்நிய பாஷையில் ஜெபித்த ஒரு சகோதரி தன் ஆழ்மனது எண்ணணங்களை தெரிவிப்பதை வியாக்யானத்தில் அறிய முடிகிறதென அறிந்துள்ளனர். ஏனென்றால் சகோதரியின் வேறு, அந்நிய பாஷையில் கர்த்தரிடம் சொன்னது வேறு.
[26/09 11:43 pm] Aa Muthukumar Moses VTT: சூப்பர்..!!!
மிகவும் அருமை.
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ..!!!
ஆமென்.
தேவனுக்கே மகிமை.
Post a Comment
0 Comments