Type Here to Get Search Results !

சங்கீதம் 5 தியானம்

[16/10 10:17 am] Elango: 🎼🎸 *இன்றைய (16/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 5⃣*🎼🎸

1⃣ சங்கீதம் 5 யாரால், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது❓j

2⃣ சங்கீதம் 5 லிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன❓

3⃣ *தேவன் வெறுக்கும் காரியங்கள் எவைகள்*❓

4⃣ கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, *காருணியம்* என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.

இந்த *காருணியம்* என்றால் என்ன❓

5⃣ *பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்;* இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் *பொய்* பேசாமல் வாழ்வது என்பது முடியாத காரியமா❓
எந்த ஒரு தொழில் செய்தாலும்.. *பொய்* பேசவேண்டியுள்ளதா❓ மேலும் செல்போன் உபயோக படுத்தும் 100/95 நபர் *பொய்*தான் பேசுகிறோம்.... நாம்  அவரால் அழிக்கப்பட்டு விடுவோமா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[16/10 11:29 am] Elango: *சங்கீதம் 5 விளக்கவுரை (Charles MSK)*

*தலைப்பு:-*

“கக்த்ரை நம்புகிறவர்களும்
அக்கிரமகாரரும்”.

*உட்பிரிவு:-*

வச.1-3 காலை தியானமும், ஜெபமும்.

வச.4-6 அக்கிரமகாரரின்
நிலை.

வச.7 நான் எப்படி
இருப்பேன்.

வச.8 வழி நடத்துதலுக்காக
விண்ணப்பம்.

வச.9-10 துன்மார்கருக்கு எதிரான ஜெபம்.

வச.11-12 கர்த்தரை நம்புகிறவர்களின் ஆசீர்வாதங்கள்.

*குறிப்பு:-*

இந்த சங்கீதத்தை காலை நேர சங்கீதம் எனலாம்.

வசனங்களுக்கான
விளக்கங்கள்:-

வச.1-3:- தாவீது விண்ணப்பம் செய்கிறவராகவும், தியானிக்கிறவராகவும் இருந்தார். காலைதோறும் கர்த்தரின் பாதத்தில் காத்திருந்தார். நாமும் அப்படியே செய்வோமாக.

வச.4-6:- தேவன் வெறுக்கும் ஏழு காரியங்கள் இந்த பகுதியில் உள்ளது.

வச.7-12:- தனக்காவும் (வச.7-8) தனது எதிரிகளுக்காகவும் (வச.9-10) விண்ணப்பித்த தாவீது இறுதியில் தேவனை நம்புகிறவர்களுக்காகவும் விண்ணப்பித்தார்(வச.11-12). தேவனுடைய பிள்ளைகளுக்காகவும் வேண்டுதல் செய்வது நமது கடமை ஆகும்.

வச.7:- அ). தாவீதின் காலத்தில் உடன்படிக்கை பெட்டி இருந்த கூடாரத்தை ஆலயம் என குறிப்பிட்டனர். அதற்க்கு முந்தைய காலத்தில் சீலோவில் இருந்த ஆசரிப்பு கூடாரத்தை ஆலயம் என அழைத்தனர். (சங் 27:4; 1சாமு1:9)

ஆ). நானோ: வச.4-5ல் கர்த்தர் எவ்வாறு தீமையை வெறுக்கிறார் என கூறிய தாவீது “நானோ” இப்படி இருக்கிறேன் என கூறியுள்ளார். “மற்றவர் அனைவரும் பொய்யராய் இருக்கலாம், நனோ உண்மையாய் இருப்பேன். மற்றவர்கள் ஏமாறறலாம், கெட்ட வாழ்க்கை வாழலாம், அசுத்தமான நூல்களையும், காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் விரும்பலாம், நானோ அப்படி இராமல் வேதத்தை மட்டும் விரும்புவேன். மற்றவர்கள் கெட்ட வார்த்தை பேசலாம், கெட்ட சிந்தையோடு இருக்கலாம் நானோ அப்படி இருக்கமாட்டேன்” என்பவை போன்று “நானோ” கர்த்தருக்கு உகந்தவனாக நடப்பேன் என்று தீர்மானியுங்கள்.

இ). உமது மிகுந்த கிருபையினாலே: என்னுடைய நற்செயல்களால் அல்ல, நற்பண்புகளால் அல்ல, உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்க்குள் பிரவேசிப்பேன் என்பதை தியானியுங்கள்.

வச.8:- என்னுடைய நீதியும், வழியும் சிறந்ததல்ல. எனவே உம்முடைய நீதி, உம்முடைய வழி என்கிறார் தாவீது.

வச.9-12:- வச.9-10 ஐயும் வச.11-12 ஐயும் ஒப்பிட்டு தியானியுங்கள். தேவனை நம்புகிறவர்களின் ஆசீர்வாதங்களை ஒவ்வொன்றாக எழுதுங்கள். அவற்றிற்ககாக தேவனை துதியுங்கள்.

- https://charlesmsk.blogspot.in/2016/07/5-charles-msk.html?m=1 @Charles Pastor VDM
[16/10 12:01 pm] Premraj 2 VTT: Wonderful

[16/10 12:09 pm] Jeyakumar Toothukudi VTT: Praise the Lord
,தாவீதின. தியானிக்கும்  முறை  எப்படி?
          ,Bro. R. Jeyakumar

[16/10 12:15 pm] Jeyakumar Toothukudi VTT: ஆதி. 24:63 _ல்  சாயங்காலவேளையில் ஈசாக்கின் தியானம் அது  எப்படிப்பட்டது?   அது தேவனோடு பேசுவதா?

[16/10 12:17 pm] Jeyakumar Toothukudi VTT: தியானம் என்றால் வேத ஆராய்ச்சி மட்டும்தானா?

[16/10 12:19 pm] Jotham Brad VTT: சங்கீதம், Chapter 5

1. கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.

2. நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

[16/10 12:20 pm] Jeyakumar Toothukudi VTT: இந்தியாவில் தியானம் என்றால் YOGA , மட்டும்தான் என நினைக்கின்றார்களே?

[16/10 12:21 pm] Jotham Brad VTT: தேவன் என் வார்த்தைகளுக்கு செவிக்கொடுத்தார் என்பதை எப்படி அறிந்து கொள்வது??

[16/10 12:31 pm] Jeyakumar Toothukudi VTT: மௌனம்  ஒரு தியான அறிகுறிதான் . நம் இருதயம கர்த்தரோடு கூட சம்பாக்ஷிக்கிறது.
இன்றும்  எபிரேயர்கள்  முதலில் பாடல் பாடி  வேதம் வாசித்து நம்மைப்போல் தியானிப்பார்களோ?

[16/10 12:33 pm] Jotham Brad VTT: நாம் அநேக விண்ணப்பங்கள் செய்கிறோம் அந்த விண்ணப்பங்கள் தேவனிடம் சேர்ந்தனவா??? சேராமல் போக காரணம் என்ன??

[16/10 12:44 pm] Jotham Brad VTT: விண்ணப்பங்கள் எப்படி இருக்க வேண்டும் ...  விண்ணப்பங்கள் சத்தமாக இருக்க வேண்டுமா??

[16/10 12:44 pm] Elango: சங்கீதம் 39:3
[3]என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; *நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது;*🔥 அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.

[16/10 12:45 pm] Jeyakumar Toothukudi VTT: சமீப காலமாக  அநேக pastors கள்  ஒதிங்கியே  இருக்கிறார்களே ஏன் ?
இஸ்ரவேல் வரலாற்றை   மக்களின்   பழக்கவழக்கங்களை  அவர்கள் அல்லவா அருமையாக சுட்டிக்காட்டி நமக்கு போதித்தார்கள்.
Please  கனத்திற்குரிய  கர்த்தருடைய தாசர்களே!  உங்கள் வாய் மூலம்  கர்த்தர் பேச  அர்ப்பணியுங்கள்.

[16/10 12:49 pm] Elango: சங்கீதம் 5:9
[9]அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.

* எரேமியா 17:9
[9] *எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?*

[16/10 12:56 pm] Jeyakumar Toothukudi VTT: 1சாமுவேல் 1:11 அன்னாள் தன் இருதயத்தில் கர்த்தரோடு பேசினாள்.

[16/10 12:57 pm] Elango: 1 சாமுவேல் 1:13,15
[13] *அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை;* ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
[15]அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; *நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.*

[16/10 1:00 pm] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:7
[7]அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

இயேசுகிறிஸ்து *பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்😭😭😭😭😭 விண்ணப்பம் செய்தார்*

[16/10 1:02 pm] Elango: யாக்கோபு 4:2-3
[2]நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், *நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.*

[3]நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று *தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.*

சங்கீதம் 145:19
[19] *அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு,* அவர்களை இரட்சிக்கிறார்.

நீதிமானின் ஜெபத்தை கேட்கிறார் நம் தேவன்

[16/10 1:03 pm] Jeyakumar Toothukudi VTT: நீதி 14:10  இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்.  Explain ஐயா!

[16/10 1:08 pm] Jotham Brad VTT: தகாத விதமாய் விண்ணப்பம் எப்படி???

[16/10 1:11 pm] Jeyakumar Toothukudi VTT: தியான சமயங்கள்

சாயங்காலம்.   _ஆதி 24:63
அந்தி சந்தி மத்தி. _சங் 55:17
நாள்முழுதும்.        _சங் 119:97

[16/10 1:53 pm] Elango: 1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:1
2 என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்; ஏனெனில். நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:2
3 ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:3
4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:4
5 ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்; தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:5
6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:6
7 நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்; உம் திருத்தூயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன்;

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:7
8 ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால், உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்; உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:8
9 ஏனெனில், அவர்கள் வாயில் உண்மை இல்லை; அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்; அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி; அவர்கள் நா வஞ்சகம் பேசும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:9
10 கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு அளியும்; அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியுறட்டும்; அவர்களுடைய ஏராளமான தீச்செயல்களை முன்னிட்டு, அவர்களைப் புறம்பே தள்ளிவிடும். ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்த்துள்ளார்கள்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:10
11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:11
12 ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்; கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 5:12

வேறொரு மொழிப்பெயர்ப்பு

[16/10 2:07 pm] Elango: தேவ சித்தமில்லாமல் சுய விருப்பத்தை நிறைவேற்ற விண்ணப்பம் செய்வது *தகாத விதமாய் விண்ணப்பம்* செய்வது.

தகுந்த விண்ணப்பம்.👇🏻

1 யோவான் 5:14
[14] *நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே* அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

லூக்கா 22:42
[42]பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; *ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது* என்று ஜெபம்பண்ணினார்.🙏🙏🙏🙏

[16/10 2:07 pm] Silvaster VTT: தேவனுக்கே மகிமை 🙏🏽
 யார் நீதிமான் ?

  நீதிமான் எப்படியிருப்பான் ?

அப்படி நீதிமான்கள்  இருக்கிறார்களா ?

[16/10 2:20 pm] Elango: *நீதிமான் யார் - பழைய ஏற்பாடு*👇🏻

ஏசாயா 33:15-17
[15]நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

[16]அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.

[17]உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.


எசேக்கியேல் 18:6-9
[6]மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும் தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுபடுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,

[7]ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,

[8]வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ளவழக்கை உண்மையாய்த் தீர்த்து,

[9] *என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்;* அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

*நீதிமான் யார்?  - புதிய ஏற்பாடு*👇🏻

அப்போஸ்தலர் 13:39
[39] *மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும்☝ உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.*
1 கொரிந்தியர் 6:11
[11]உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்கள்...நீதிமான்.

[16/10 2:22 pm] Elango: நீதிமொழிகள் 14:10
[10] *இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்;* அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.

10 *ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே;* வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.

நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 14:10

காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்.

[16/10 2:28 pm] Elango: ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை தவிர, நம்முடைய துக்கங்களை, மகிழ்ச்சியை உணர வேறு எந்த ஒருவராலும் முடியாது.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:15
[15] *நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத* பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

ஏசாயா 53:4
[4]மெய்யாகவே *அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்;* நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

மத்தேயு 11:28-30
[28] *வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.*

[29]நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
[30]என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

[16/10 2:31 pm] Elango: ஆண்டவரை தவிர, நம் உள்ளான காயங்கள், வேதனைகள், மகிழ்ச்சிகள் நமக்கு மட்டுமே நாமே நன்றாக உணர்ந்தவர்கள்.

[16/10 8:16 pm] Benjamin Prasad 2 VDM: பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.
சங்கீதம் 5:6

இந்த வசனத்தில் எனக்கு ஒரு சந்தேகம்.

இரத்தப் பிரியன்?

சூதுள்ள மனுஷன்?

என்றால் என்ன? நண்பர்களே....

[16/10 8:20 pm] Benjamin Prasad 2 VDM: எபேசியர் 4 : 25 - அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், *பொய்யைக் களைந்து*, அவனவன் பிறனுடனே *மெய்யைப் பேசக்கடவன்.*
http://onelink.to/p7hdt5

[16/10 8:21 pm] Benjamin Prasad 2 VDM: கொலோசெயர் 3 : 9 - ஒருவருக்கொருவர் *பொய் சொல்லாதிருங்கள்;*....

[16/10 8:25 pm] Benjamin Prasad 2 VDM: மத்தேயு 5 : 37 - உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
http://onelink.to/p7hdt5

[16/10 8:28 pm] Benjamin Prasad 2 VDM: சூதுள்ள மனுஷன் யார் என்று கூட எனக்கு தெரியும்.
But இரத்த பிரியன் என்பது யாரை குறிக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

[16/10 8:29 pm] Elango: *இரத்த பிரியன் என்றால் அது பிசாசுக்குத்தான் சரியாக பொருந்தும், பிசாசின் ஆவீயை உடையவர்ளுக்கு அந்த வார்த்தை பொருந்தும்.*

தன் சகோதரனை பகைத்து, அவன் சாவை எதிர்ப்பார்ப்பவர்களும் இரத்தபிரியர்களே...❣❣❣

யோவான் 8:44
[44]நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; *அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்;* சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:24
[24] *தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.* ( பிசாசு) ☝👿👿😈😈😈

[16/10 8:31 pm] Benjamin Prasad 2 VDM: Oh, RC Bible மூலம் இரத்த பிரியன் என்பது யாரை குறிக்கிறது என்று எனக்கு புரிந்து விட்டது..... 👍🏿

[16/10 8:35 pm] Benjamin Prasad 2 VDM: என்னால் நூற்றுக்கு 90%பொய் பேசாமல் உண்மையை பேச முடிகிறது....

[16/10 8:37 pm] Benjamin Prasad 2 VDM: 100/100%உண்மையை மட்டும் பேசுவதும் சாத்தியமே....

[16/10 8:43 pm] Benjamin Prasad 2 VDM: பிசாசு கொலை வெறி பிடிச்சு அலையுறாங்க

[16/10 8:44 pm] Benjamin Prasad 2 VDM: But கர்த்தரிடத்தில் நமக்கு முழு பாதுகாப்பு உண்டு....

[16/10 8:50 pm] Elango: 7⃣ *தியானம் என்றால் வேத ஆராய்ச்சி மட்டும்தானா❓*

உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.சங்கீதம் 119:148

வேத வசனத்தை தியானிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவரும் செய்யவேண்டிய மிகமுக்கியமான ஆவிக்குரிய பயிற்சியாகும்.

 நேரமில்லையென்று சொல்லப்படும் இந்த நாட்களில் வேத தியானம் அதிகமாக புறக்கணிக்கப்படுவதால் அநேகர் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவதில்லை.

 உலகபிரகாரமான அநேக காரியங்களுக்கு அவர்கள் நேரத்தை அதிகம் செலவிடுகிறார்கள். ஆனால் வேத தியானத்திற்கு அதே அளவு நேரம் ஒதுக்குவதில்லை.

 *அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் நேரமில்லை என்பதுதான். இது மெய்யான காரணம் என்று நாம் எடுத்துகொள்ளமுடியுமா? இல்லை. எந்த ஒரு மனிதனும் எனக்கு சாப்பிட நேரமில்லை, ஆகவே ஒருவாரமாக சாப்பிடவில்லை என்று சொல்லுவார்களா?*❓ இல்லை! அப்படியானால் ஏன் அதே அளவு ஆவிக்குரிய காரியங்களுக்கு அக்கரை செலுத்தக்ககூடாது.

[16/10 8:57 pm] Benjamin Prasad 2 VDM: *வேதத்தை தியானிக்க இன்றே தீர்மானிப்போம்*

அது நிச்சயம் நமக்கு நன்மையே....

[16/10 8:58 pm] Elango: 7⃣ தியானம் என்றால் வேத ஆராய்ச்சி மட்டும்தானா❓

வேத தியானத்தை வேத ஆராய்ச்சியோடும் சரித்திரம் வரலாறு ஆதாரத்தை எடுத்து தியானித்தால் வேத ஆராய்ச்சியாகும்.

12 அப்போஸ்தலர்களின் மரணம் வேதத்தில் இல்லையெறாலும் வேத ஆராய்ச்சியின் மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது.

[16/10 9:19 pm] Elango: 4⃣ கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, *காருணியம்* என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.

இந்த *காருணியம்* என்றால் என்ன❓

காருணியம் என்றால் *கருணை* - Favor என்று பொருள்.

[16/10 9:26 pm] Elango: *8⃣ தேவன் என் வார்த்தைகளுக்கு செவிக்கொடுத்தார் என்பதை எப்படி அறிந்து கொள்வது❓*

1 யோவான் 5:15
[15] *நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.*

*பதில் அளிக்கப்படாத ஜெபத்திற்கான காரணங்கள்:*👇🏻👇🏻

விசுவாசக்குறைவு. (மத்தேயு 21:22).

சுய விருப்பங்களுக்காய் ஜெபித்தல் (யாக்கோபு 4:3).

அறிக்கை செய்யப்படாத பாவங்கள்  (சங்கீதம் 66:18).

மனதுருக்கமற்ற நிலை (நீதிமொழிகள் 21:13).

பெருமை மற்றும் சுய நீதி (யோபு 35:12-13).

ஆவியானவரின் நிறைவு இல்லாமை (எபேசியர் 6:18).

கீழ்ப்படியாமை
(1 யோவான் 3:22).

தெய்வீக சித்தத்தில் இல்லாது இருப்பது
 (1 யோவான் 5:14).

*பதிலற்ற ஜெபத்திற்கு பொதுவான காரணங்கள், ஏதோ ஒரு வகையில் பாவம் வாழ்வில் இருப்பதாகும்,* அறிந்த பாவங்களை
 1 யோவான் 1:9 ன் படி, அறிக்கை செய்வதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண இயலும்

[16/10 9:36 pm] Elango: *8⃣ தேவன் என் வார்த்தைகளுக்கு செவிக்கொடுத்தார் என்பதை எப்படி அறிந்து கொள்வது❓*

தேவன் நம்முடைய ஜெபத்திற்க்கு மூன்று வழிகளில் பதிலளிக்கிறார்...

(  1⃣ஆம்,
 2⃣இல்லை,
3⃣வெயிட் பண்ணு )

1. *YES  - நம் ஜெபத்திற்க்கு தேவன் பதிலளித்து விட்டார் என்றால் நாம் சந்தோஷமாகி விடுவோம். ... தேவனை துதிப்போம்.. பாடுவோம்... எல்லோரிடமும் கூறி மகிழ்வோம்... சாட்சியும் கூறுவோம்...*

எகா.  அன்னாள் ஜெபித்தாள் அவள் ஜெபத்தை கர்த்தர் கேட்டார்... கொண்டாட்டம் தான்....
எகா. பவுல், சீலாவும் ஜெப்த்தோடு பாடினார்கள் ... உடனை சிறை கதவு திறந்தது....

2. *NO - நம் ஜெபத்திற்க்கு பதிலளிக்கவில்லை என்றால் நாம் துக்கமாகிவிடுவோம்... இன்னும் பாரமாக போராடி ஜெபப்போம் ... அல்லது தேவன் வைத்திருக்கும் வேற திட்டத்தை ஆராய முற்ப்படுவோம்ம்.*

எகா. பவுல் ஜெபித்தார் முள் நீங்க வேண்டும்  என்று .... என் கிருபை உனக்கு போதும் என்று சொல்லிவிட்டார்.  பவுல் விருப்பத்தை விட தேவன் அவர் சித்தத்தையே செய்து முடித்தார்....
எகா.  ( *நீங்களே சொல்லுங்களேன்* )

3. *WAIT... நம் ஜெபத்திற்க்கு தேவன் கண்டிப்பாக செய்வேன் என்று வசனம் அல்லது தீர்க்கதரிசனம் அல்லது சொப்பனம் மூலம் ஆண்டவர் தெரிவித்து விட்டார் என்றால்... உடனே அதை செய்ய விட்டாலும் ... கண்டிப்பாக ஒரு நாள் அதை நிறைவேற்றுவார். ... அதற்க்கு நாம் பொறுமையோடு காத்திருந்து அவரை முழுமையாக நம்பி வாழ்வது சரிரி.*

எகா. ஆபிரகாமுக்கு குமாரனை வாக்குத்தத்தம் செய்தும்.... பல வருடங்கள் கழித்து தான் குழந்தையை கொடுத்தார்.
எகா. யோசேப்புக்கு அருமையான கனவை கொடுத்தார் ஆனால் பல வருடங்கள் பிறகு தான் அவனை உயர்த்தினார்

[16/10 9:48 pm] Jeyarani VTT: excellent explanation. Thank you.

[16/10 9:51 pm] Elango: 1⃣0⃣ நாம் அநேக விண்ணப்பங்கள் செய்கிறோம் அந்த விண்ணப்பங்கள் தேவனிடம் சேர்ந்தனவா❓சேராமல் போக காரணம் என்ன❓

*பதில் அளிக்கப்படாத ஜெபத்திற்கான காரணங்கள்:*

விசுவாசக்குறைவு. (மத்தேயு 21:22).

சுய விருப்பங்களுக்காய் ஜெபித்தல் (யாக்கோபு 4:3).

அறிக்கை செய்யப்படாத பாவங்கள்  (சங்கீதம் 66:18).

மனதுருக்கமற்ற நிலை (நீதிமொழிகள் 21:13).

பெருமை மற்றும் சுய நீதி (யோபு 35:12-13).

ஆவியானவரின் நிறைவு இல்லாமை (எபேசியர் 6:18).

கீழ்ப்படியாமை
(1 யோவான் 3:22).

தெய்வீக சித்தத்தில் இல்லாது இருப்பது
 (1 யோவான் 5:14).
 ‎
*எந்த ஜெபம் அருவருப்பு ஆனது? பாவமானது? கேட்கப்படாது?*

நீதிமொழிகள் 28: 9
வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

சங்கீதம் 109
7  அவன்
(தீமை செய்கிறவன்)
நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.

நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன், நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன், உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
- ஏசாயா 1 :15

புலம்பல் 3
1  ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.
8  நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

- @Tamilmani Ayya VDM

[16/10 10:03 pm] Elango: 1⃣ சங்கீதம் 5 யாரால், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது❓

*இந்த சங்கீதத்தை எழுதி பாடியது தாவீது*

இந்த சங்கீதத்தில் துன்மார்க்கரை பற்றியும், தேவன் அவர்களின் அக்கிர கிரியைகளை வெறுக்கிறார் என்பதையும், அவரை நம்புகிறவர்கள் எந்நாளும் கெம்பீரித்து மகிழ்வதையும் அவர்களை அவருடைய கிருபை பாதுகாப்பதை பற்றியும் எழுதுகிறார்.

Post a Comment

0 Comments