Type Here to Get Search Results !

சங்கீதம் 3 தியானம்

[13/10 9:58 am] Elango: 🎼🎸 *இன்றைய (13/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 3⃣*🎼🎸

1⃣ சங்கீதம் 3 யாரால், என்ன சூழ்நிலையில் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 3 லிருந்து நீங்கள் கற்றது என்ன❓

3⃣ சங்கீதம் 3:1 - ல் சொல்லப்பட்ட சத்துருக்கள் என்பது யார்❓ சகோதரர்களா, நண்பர்களா, அல்லது உறவினர்களா❓

4⃣ சங்கீதம் 3:4 -ல் கூறப்பட்டுள்ள *பரிசுத்த பர்வதம் என்பது எதனை குறிப்பிடுகின்றது❓*பரிசுத்த பர்வதம் எங்கேயிருக்கிறது, வசன ஆதாரம் உண்டா❓

5⃣ எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன். சங்கீதம் 3 :6

*இங்கு பதினாயிரம் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டா*❓ குறிப்பிட்ட விகிதம் மட்டும் ஏன் சொல்லப்படுகிறது❓அந்த விகிதம் மட்டும் ஏதோ ஒன்றை மட்டும் மையப்படுத்தி சொல்வதாக தோன்றுகிறதே❓அவர் பதினாயிரங்களிலும் சிறந்தவர் என்ற வார்த்தையும் உள்ளது!
இது எது அந்த பதினாயிரம் பேர் யார்❓

6⃣ நான் படுத்து நித்திரை செய்தேன், விழித்துக்கொண்டேன், கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
சங்கீதம் 3:5

படுத்து நித்திரை செய்வது அன்றாடம் நடக்கும் ஒரு செயல்தானே... அதை ஏன் சொல்ல வேண்டும்❓

7⃣ நம்முடைய உண்மையான சத்துருக்கள் யார், மனிதர்களா அல்லது சாத்தானா❓

8⃣ *இரட்சிப்பு கர்த்தருடையது* என்பதன் அர்த்தம் என்ன❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam

[13/10 8:17 am] Charles Jebaraj VDM: சங்கீதம் 3 : 1 - ல் சொல்லபட்ட சத்துருக்கள் யார்❓❓ சகோதரர்களா❓ அல்லது நண்பர்களா❓ அல்லது உறவினர்களா❓

[13/10 8:19 am] Charles Jebaraj VDM: சங்கீதம் 3 : 4 --ல் கூறப்பட்டுள்ள பரிசுத்த பர்வதம் என்பது எதனை குறிப்பிடுகின்றது❓

[13/10 8:57 am] Bro David (Thirumal) VTT: யாத்திராகமம் 23:4
[4]உன் *சத்துருவின்* மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.

[13/10 8:58 am] Bro David (Thirumal) VTT: மத்தேயு 13:25
[25]மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய *சத்துரு* வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.

[13/10 8:59 am] Bro David (Thirumal) VTT: ரோமர் 5:10
[10]நாம் தேவனுக்குச் *சத்துருக்களாயிருக்கையில்*, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

[13/10 9:11 am] Bro David (Thirumal) VTT: தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு

[13/10 9:16 am] Charles Jebaraj VDM: நன்றி

[13/10 9:21 am] Kamal VTT: 6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.
சங்கீதம் 3 :6

இங்கு பதினாயிரம் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டா?

[13/10 9:23 am] Kamal VTT: ஏன்?  குறிப்பிட்ட விகிதம் மட்டும் சொல்லப்படுகிறது? அந்த விகிதம் மட்டும் ஏதோ ஒன்றை மட்டும் மையப்படுத்தி சொல்வதாக தோன்றுகிறது! விளக்கவும்

[13/10 9:23 am] Bro David (Thirumal) VTT: சங்கீதம் 3:8
[8] *இரட்சிப்பு கர்த்தருடையது* தேவரீருடைய ஆசீர்வாதம் *உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக*. (சேலா).

[13/10 9:25 am] Bro David (Thirumal) VTT: சங்கீதம் 91:7
[7]உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் *பதினாயிரம்பேரும் விழுந்தாலும்*, அது உன்னை அணுகாது.

[13/10 9:28 am] Kamal VTT: அவர் பதினாயிரங்களிலும் சிறந்தவர் என்ற வார்த்தையும் உள்ளது!
இது எது அந்த பதினாயிரம் பேர் யார்?

[13/10 9:33 am] Senthil Kumar Bro VTT: 4 நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவர் தமது *பரிசுத்த பர்வதத்திலிருந்து* எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)
சங்கீதம் 3:4

பரிசுத்த பர்வதம் எங்கே இருக்கிறது...?
வசன விபரம் உண்டா...?

[13/10 9:35 am] Ceous Joseph VDM: P salms          3:6 (TBSI)  எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.

தேவன் இப்படி பட்ட விசுவாசம் நம்மில் வளர கிருபை செய்வராக

ஆமென்.

[13/10 9:35 am] Senthil Kumar Bro VTT: 6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற *பதினாயிரம்* பேருக்கும் நா ன் பயப்படேன்.
சங்கீதம் 3:6

ஏன் இப்படி குறிப்பிட்டு  *பதினாயிரம்*  என்று சொல்ல வேண்டும்...
பைபிள் முழுவதும் இந்த இலக்கம் சொல்லப்படுவது ஏன்...‼‼⁉❓❓❓❓

நியாயாதிபதிகள 3: 29
அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் *பதினாயிரம்* பேரை வெட்டினார்கள்;

நியாயாதிபதிகள 20: 10
பென்யமீன் கோத்திரமான கிபியா பட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானிய தவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும், ஆயிரம் பேரில் நூறுபேரையும், *பதினாயிரம்* பேரில் ஆயிரம்பேரையும் தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
1சாமுவேல் 18: 7
அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது *பதினாயிரம்* என்று முறைமுறையாகப் பாடினார்கள்.

1நாளாகமம் 29: 7
தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், *பதினாயிரம்* தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.
எஸ்தர் 3: 9
ராஜாவுக்கு சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த *பதினாயிரம்* தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான்.

மத்தேயு 18: 24
அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, *பதினாயிரம்* தாலந்து கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
1கொரிந்தியர் 4: 15
கிறிஸ்துவுக்குள் *பதினாயிரம்* உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.

1கொரிந்தியர் 14: 19
அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் *பதினாயிரம்* வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 5: 11
பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் *பதினாயிரம்* *பதினாயிரமாகவும்* , ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

[13/10 9:36 am] Senthil Kumar Bro VTT: நான் படுத்து நித்திரை செய்தேன், விழித்துக்கொண்டேன், கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
சங்கீதம் 3:5

படுத்து நித்திரை செய்வது அன்றாடம் நடக்கும் ஒரு செயல்தானே... அதை ஏன் சொல்ல வேண்டும்......???

[13/10 9:36 am] Bro David (Thirumal) VTT: கர்த்தருடைய பரிசுத்த பர்வதம் என்பது எருசலேமிலுள்ள மோரியா மலை ஆகும். இதின் மேல் தான் சாலொமோன் தேவாலயம் கட்டினான். கர்த்தர் எங்கும் இருக்கிறார் எங்கிருந்து ஜெபித்தாலும் கேட்கிறார் என்றும் தாவீது அறிந்திருந்தான்.

[13/10 9:36 am] Ceous Joseph VDM: அநேகம் அநேகர் என்பதை வேதம் இப்படி கூறுகிறதோ??

[13/10 9:39 am] Ceous Joseph VDM: சத்ருக்கலால் உண்டான மன உளைச்சலில் தூக்கம் இல்லை...

ஆனாலும் அவர் தேவனை விசுவசித்தார்....

[13/10 9:39 am] Bro David (Thirumal) VTT: தூக்கம் என்பது மரணத்தின் நிழல் போன்றது. தூங்கும் போது நமது சுவாசம், இரத்த ஓட்டம், மூளையின் செயல்கள் எல்லாவற்றையும் கர்த்தர் நடத்துகிறார். அச்சமயத்தில் வரும் ஆபத்துகள் நாம் அறியமுடியாதவைகள். அவற்றினின்று நம்மை காப்பவர் கர்த்தர் ஒருவரே.

[13/10 9:41 am] Benjamin Prasad 2 VDM: தேவன் உன்னதங்களில் வாசம் பண்ணுகிறவர்.

பர்வதம் என்றால் உயரமான மலை என்று அர்த்தம்.

பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார் என்றால் தேவன் பரலோகத்திலிருந்து எனக்கு செவிகொடுத்தார் எனலாம் என்று நினைக்கிறேன் சகோ...

[13/10 9:41 am] Bro David (Thirumal) VTT: சங்கீதம் 3:8
[8]இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா).

வச.8ன் படி இரட்சிப்பு கர்த்தருடையது. எந்த சூழ்நிலையிலும் இது உண்மை.

அல்லேலூயா

[13/10 9:51 am] Benjamin Prasad 2 VDM: பதினாயிரம் என்றால் பத்து ஆயிரம் (Ten Thousand) - இதில் யாரும் குழப்பமடைய வேண்டாம்.

[13/10 9:53 am] Bro David (Thirumal) VTT: மூன்றாவது சங்கீதத்தை *காலை சங்கீதம்* என்றும் அழைக்கலாம்.

[13/10 9:54 am] Bro David (Thirumal) VTT: இதை போல் மூன்றாவது சங்கீதம்
திட்டவட்டமாக சொல்லுகிறது

*இரட்சிப்பு கர்த்தருடையது*

[13/10 9:55 am] Benjamin Prasad 2 VDM: அதெப்படி சகோ...

[13/10 9:56 am] Elango: *முக்கியமாக இன்றைக்கான வேத தியான கேள்விகளை பகிர்ந்த கிறிஸ்துவின் வாலிப சிங்கங்களுக்கு நன்றி. 👍👍👍🙏🙏*

தினந்தோறும் சங்கீத பகுதிக்கான நீங்கள் கேள்விகளை அனுப்புங்கள்🙏

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[13/10 10:00 am] Bro David (Thirumal) VTT: மிகவும் ஆபத்தான சூழலில் தாவீது கர்த்தரை நம்பியதால் நன்கு உறங்கினான். காலையில் இந்த பாடலை பாடினான்.

3:5 கவணி

[13/10 10:10 am] Benjamin Prasad 2 VDM: கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.  தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா).

▶ *ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.*◀
சங்கீதம் 3:1‭-‬3

தாவீது எவ்வளவு அழகாக தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிடுகிறார்.

நமக்கு துன்பம் வந்த போது தேவனை முறுமுறுத்திருக்கிறோமா அல்லது புலம்பியிருக்கிறோமா

அல்லது *தாவீதை போல விசுவாச வார்த்தைகளை* பேசியிருக்கிறோமா?

[13/10 10:11 am] Elango: ஆமென்👍👍💪💪💪💪

2 சாமுவேல் 22:30
[30] *உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.*

[13/10 10:16 am] Premraj 2 VTT: Any important about sixteen thousands if we see from the bible so many times it will come so please explain us

[13/10 10:17 am] Elango: சங்கீதம் 129:1-2
[1] *என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.*🤛🤜🤛🤜👊👊✊✊✊

[2]என் சிறுவயது தொடங்கி *அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.*👆🏻👆🏻👆🏻💪💪💪💪👆🏻👆🏻😁😁

சத்துருக்கள் மத்தியில் தேவன் நமக்கு தரும் பந்தியானது மிகவும் தேவ கிருபையே.

வெளிப்படுத்தின விசேஷம் 11:11-12
[11]மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, *அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்;💪💪💪 அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.*😳😳🤔🤔🤔
[12]இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; *அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.*😳😳👈👈😀😀😀

[13/10 10:22 am] Elango: மனிதர்கள் நம் சத்துருக்கள் அல்ல... மனிதர்களுக்குளிருந்து அசுத்த கிரியை செய்யும் பிசாசே நம் சத்துரு.

மத்தேயு 15:19
[19] *எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.*

சத்துருக்களாக மாறும் நம் நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகள்,  போதகர்கள், வீட்டார்கள் ...... இவர்கள் எல்லாம் நம் சத்துருக்கள் அல்ல...

மத்தேயு 5:44-48
[44] *நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.*

[45]இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; *அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.*

[46]உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

[47] *உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?*

[48]ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

[13/10 10:26 am] Elango: இந்த உலகத்தில் நீங்கள் எனக்கும், நான் உங்களுக்கு சத்துருவாக மாறலாம்.

ஆனால் நாம் ஒருவருக்கொருவர் சத்துரு அல்ல.

நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்.

ரோமர் 12:17-21
[17]ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.

[18] *கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.*

[19]பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.

[20]அன்றியும், *உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு;* நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.🔥🔥🔥🔥🔥🔥

[21] *நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.*

[13/10 10:29 am] Elango: *சங்கீதம் 3 விளக்கவுரை (Charles MSK)*

*தலைப்பு:-*

“இரட்சிப்பு கர்த்தருடையது”

*குறிப்பு:*

இந்த சங்கீதத்தை காலை சங்கீதம் என்றும் அழைக்கலாம்.

*வசனங்களுக்கான விளக்கம்:-*

(தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பாடின சங்கீதம்.)

1. கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.

2. தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)

3. ஆனாலும்கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

இந்த பகுதியில் தன் மகனும் தன் மக்களில் அநேகரும் தனக்கு எதிராக சதி செய்ததால் உயிர்தப்ப ஓடும் பொழுதும் கர்த்தர் அவனுக்கு எதிராக இருக்கிறார் என்று அநேகர் கருதும் போதும் தாவீது கர்த்தரை முற்றிலும் நம்பினார். யாவும் தமக்கு எதிராக இருந்தாலும் கர்த்தர் நம்மோடு நம் அருகில் இருக்கிறார் என்பதை மறவாதீர். அவரை குறை கூறாமல் அவர் மீது சார்ந்து தனது படை பலத்தை நம்பாமல் கர்த்தரை சார்ந்துக்கொண்ட தாவீதை பின்பற்றுவோம்.

*சேலா*

சேலா என்பது சங்கீதங்களில் 71 முறையும் ஆபகூ கில் 3 முறையும் வருகிறது. இது இசை குறியீடு என கருதபடுகிறது. இதன் பொருள் திரும்ப பாடு, குரலை உயர்த்தி பாடு என்றும் ஆமென், அல்லேலூயா போன்ற ஏதேனும் ஒன்று என்றும் கருதப்படுகிறது. திரும்பவும் பாடு என்பதை அநே பன்டிதர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை

இப்படி கூறுவது தேவன் தன்னை கைவிட்டுவிட்டார் என கருத தூண்டும் வார்த்தை ஆகும். இதன் மூலம் நம்பிக்கை ஞழக்க செய்வதே எதிரியின் நோக்கம். தேவன் நம்மை கைவிடுவதில்லை. நமக்கு பதிலாக கிறிஸ்துவை சிலுவையில் இமைபொழுது கைவிட்ட தேவன் (ஏசா 54:7-8; மத் 27:46) நம்மை கைவிடமாட்டார் (எபி 13:5).

4. நான்கர்த்தரைநோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)

கர்த்தருடைய பரிசுத்த பர்வதம் என்பது எருசலேமிலுள்ள மோரியா மலை ஆகும். இதின் மேல் தான் சாலொமோன் தேவாலயம் கட்டினான். கர்த்தர் எங்கும் இருக்கிறார் எங்கிருந்து ஜெபித்தாலும் கேட்கிறார் என்றும் தாவீது அறிந்திருந்தான்.

5. நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்;கர்த்தர்என்னைத் தாங்குகிறார்.

6. எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.

தாவீதை போல கர்த்தரை நம்பி நமக்கு எதிராக வருகிற எதற்க்கும் அஞ்சாமல் இருக்கும் படி இந்த வசனங்கள் கூறுகிறது.

மிகவும் ஆபத்தான சூழலில் தாவீது கர்த்தரை நம்பியதால் நன்கு உறங்கினான். காலையில் இந்த பாடலை பாடினான். தூக்கம் என்பது மரணத்தின் நிழல் போன்றது. தூங்கும் போது நமது சுவாசம், இரத்த ஓட்டம், மூளையின் செயல்கள் எல்லாவற்றையும் கர்த்தர் நடத்துகிறார். அச்சமயத்தில் வரும் ஆபத்துகள் நாம் அறியமுடியாதவைகள். அவற்றினின்று நம்மை காப்பவர் கர்த்தர் ஒருவரே.

கடைசியாக வச.8ன் படி இரட்சிப்பு கர்த்தருடையது. எந்த சூழ்நிலையிலும் இது உண்மை.

அல்லேலூயா

- http://charlesmsk.blogspot.in/2016/07/3-charles-msk.html?m=1

@Charles Pastor VDM

[13/10 10:36 am] Charles Pastor VDM: சங்கீதம் 3Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு

3 கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
    பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
2 பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.

3 ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
    கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!
4 நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
    அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.

5 நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
    இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
6 ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
    ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!

7 கர்த்தாவே, எழும்பும்!
    எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக!
நீர் வல்லமையுள்ளவர்!
    என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.

8 கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.
    கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.

[13/10 11:04 am] Jeyanti Pastor VDM: Yes,  நேராக பிசாசு வந்தால் கூட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே விரட்டினால் போய்விடும்,  மனுஷரின் மூலம் கிரியை செய்யும் சாத்தானோ நம் ஆவியைக் கலக்கி,  நம் முழு சமாதானத்தையும் விழுங்கி விடுவான்.

[13/10 11:10 am] Jeyanti Pastor VDM: ஆகவே நாம் பிசாசின் தந்திரங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

[13/10 12:09 pm] Elango: 1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:1
2 'கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்" என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா)

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:2
3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; *என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.*

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:3
4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா)

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:4
5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:5
6 *என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.*

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:6
7 ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்; என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:7
8 *விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;* அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா)

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:8

*வேறொரு மொழிப்பெயர்ப்பு*

[13/10 12:36 pm] Kishore VDM: சங்கீதம் 3:5
விழித்துக் கொண்டேன் என்கிறார்,
விழித்துக் கொள்ளுதல் என்பது
ஜெபநேரம் சங் 5:3
பாடல் பாடும் நேரம் சங்57:7;8  59:16
தேவனுடைய கிருபை திருப்தியடையும் நேரம் சங்90:14
துக்கம் நீங்கி களிப்பு உண்டாகும் நேரம்  சங்30:5

[13/10 1:58 pm] Silvaster VTT: சத்துரு என்பது சாத்தானை குறித்ததுதானே சகாேதரரே...?

[13/10 2:03 pm] Elango: இந்த 3 சங்கீதத்தில் சத்துரு என்பது மனுசரை தாவீது சொல்லுகிறார்.

[13/10 2:03 pm] Silvaster VTT: ஒருவனுக்கு அவன் வீட்டாரே சத்துரு என்று வேதம் சொல்லுகிறது  .
அப்படியென்றால்  சங்கீதம் 3 ல்  சொல்லியிருக்கும் சத்துரு யார் ?

[13/10 2:10 pm] Elango: சங்கீதம் 3 ல் சொல்லப்பட்ட சத்துரு என்பது அப்சலோமும் அவன் கூட்டாளிகளும்.

2 சாமுவேல் 15:14
[14] *அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.*

[13/10 2:12 pm] Elango: *அப்சலோமின் சூழ்ச்சியும், தாவீது ஓடிப்போகுதலும்*

2 சாமுவேல் 15:1-37
[1]இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.
[2]மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,
[3]அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.
[4]பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.
[5]எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.
[6]இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
[7]நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.
[8]கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியா தேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனை பண்ணினேன் என்றான்.
[9]அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான்.
[10]அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
[11]எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.
[12]அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.
[13]அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப் பற்றிப்போகிறது என்றான்.
[14]அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.
[15]ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்.
[16]அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள்; வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான்.
[17]ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள்.
[18]அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள்.
[19]அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனே கூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நிய தேசத்தான்; நீ உன் இடத்திற்குத் திரும்பிப் போகலாம்.
[20]நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா நான் போகக்கூடிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துகொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.
[21]ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
[22]அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
[23]சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.
[24]சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடேகூட இருந்து சுமக்கிற சகல லேவியரும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; ஜனங்கள் எல்லாரும் நகரத்திலிருந்து கடந்து தீருமட்டும், அபியத்தார் திரும்பிப்போயிருந்தான்.
[25]ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்.
[26]அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.
[27]பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.
[28]எனக்கு அறிவிக்கிறதற்கு உங்களிடத்திலிருந்து செய்தி வருமட்டும், நான் வனாந்தரத்தின் வெளிகளிலே தரித்திருப்பேன் என்றான்.
[29]அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.
[30]தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.
[31]அப்சலோமோடே கட்டுப்பாடு பண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.
[32]தாவீது மலையின் உச்சிமட்டும் வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.
[33]தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடேகூட நடந்துவந்தால் எனக்குப் பாரமாயிருப்பாய்.
[34]நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன் நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்,
[35]உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்.
[36]அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்
[37]அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.

[13/10 3:56 pm] Kamal VTT: தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுங்கள் இப்படி சொல்ல வேண்டாம்!
ஏன் தாவீதிக்கு  பதினாயிரம் பேர் மட்டும் தான் எதிரியா?
ஆண்டவர் பதினாயிரம் பேர்களில் மட்டும் தான் சிறந்தவரா?
இது சாதரமான கேள்வி இல்லை?  தயவு செய்து தெரியாமல் சொல்வதை தவிர்க்கவும்!
நாங்கள் ஞானமடைய விரும்புகிறோம்! புரிந்துக்கொள்ளுங்கள்!

[13/10 3:57 pm] Bro David (Thirumal) VTT: இந்த இலக்கத்தில் மறைந்துள்ள மறை பொருள்... என்ன?

தேவ சத்தியம் இதில் அடங்கியுள்ளாத

[13/10 4:12 pm] Bro David (Thirumal) VTT: சங்கீதம் 3:1
[1]கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் *அநேகர்*.

யார் அந்த *அநேகர்*???

[6]எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற *பதினாயிரம்பேருக்கும்* நான் பயப்படேன்.

யார்? அந்த *பதினாயிரம்பேர்பதினாயிரம்பேர்*????

தாவீது *அநேகர்* என்பவர்களே தான் *இந்த பதினாயிரம்பேர*
என்று சொல்லுகிறாற
🤔🤔🤔

[13/10 4:24 pm] Benjamin Prasad 2 VDM: பதினாயிரம் என்றால் பத்து ஆயிரம் என்று எனக்கே இன்றைக்கு தான் தெரியும் bro.

சிறிய குறிப்பாக தான் அதை சொன்னேன். மற்றபடி கேள்விக்கு அதையே முழுமையான பதிலாக நான் கூறவில்லை சகோ.

தப்பா நினைக்காதிங்க.

[13/10 4:24 pm] Benjamin Prasad 2 VDM: Good Question bro

[13/10 4:29 pm] Kamal VTT: அது 16000 சகோ

[13/10 4:30 pm] Benjamin Prasad 2 VDM: I will not be afraid of *ten thousands*of people, that have set themselves against me round about.
Psalms 3:6 KJV
http://bible.com/1/psa.3.6.KJV

[13/10 4:30 pm] Benjamin Prasad 2 VDM: இல்லை சகோ

[13/10 4:30 pm] Benjamin Prasad 2 VDM: 10 000

[13/10 4:34 pm] Kamal VTT: Psalms          3:6  எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.

Psalms 3:6  I am not afraid of the multitude of people who attack me from all directions.

[13/10 4:34 pm] Kamal VTT: பதினாயிரம் என்பது தமிழில் வேறு மதிப்பு சகோ

[13/10 4:34 pm] Benjamin Prasad 2 VDM: உன்னதப்பாட்டு 5 : 10 - என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; *பதினாயிரம்பேர்களில்* சிறந்தவர்.

My beloved is white and ruddy, the chiefest among *ten thousand.*
Song of Solomon 5:10

[13/10 4:34 pm] Benjamin Prasad 2 VDM: மற்றொரு ஆதாரம் சகோ

[13/10 4:35 pm] Elango: இந்த மொழிப்பெயர்ப்பில் *பல்லாயிரம்* என்று உள்ளது👆🏻😁

பல ஆயிரமாம் 1000 1000 1000 1000 1000 1000 .....👈😁

6 என்னைச் சூழ்ந்திருக்கும் *பல்லாயிரம்* பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:6

[13/10 4:36 pm] Kamal VTT: சகோ இப்ப எது சரி அது எதை குறிக்கிறது

[13/10 4:36 pm] Benjamin Prasad 2 VDM: அநேகர் என்பது பதினாயிரம் போன்ற அதிகமான எண்ணிக்கையை தான் குறிக்கிறது சகோ.....

[13/10 4:37 pm] Benjamin Prasad 2 VDM: ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு கருத்தை சொல்லுதோ 🤔

[13/10 4:37 pm] Benjamin Prasad 2 VDM: என்று நினைக்க தோன்றுகிறது

[13/10 4:40 pm] Elango: தமிழில் பதினாறாயிரம் என்பதற்க்கு ஆங்கிலத்தில் 10,000 என்று எப்படி மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது🤔❓

[13/10 4:42 pm] Benjamin Prasad 2 VDM: சின்ன திருத்தம் சகோ. பதினாறாயிரம் இல்ல. பதினாயிரம் சகோ

[13/10 4:45 pm] Kamal VTT: பதினாறாயிரம் என்பதும் பதினாயிரம் என்பதும் ஒன்றே தமிழில்

[13/10 4:46 pm] Kamal VTT: பதினாயிரம் என்பது சங்க தமிழ்

[13/10 4:49 pm] Elango: 10000 or 16000?

[13/10 4:51 pm] Elango: சங்கீதம்  3

சங்கீதம் 3:6 [தமிழ் வேதாகமம்]
6: எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற *பதினாயிரம்* பேருக்கும் நான் பயப்படேன்.

Psalms 3:6 [Newn International Version]
6: I will not fear the *tens of thousands* drawn up against me on every side.

Psalms 3:6 [New King James Version]
6: I will not be afraid of *ten thousands* of people Who have set themselves against me all around.

Psalms 3:6 [New Living Translation]
6: I am not afraid of *ten thousand* enemies who surround me on every side.

Psalms 3:6 [New Revised Standard Version]
6: I am not afraid of *ten thousands* of people who have set themselves against me all around.

Psalms 3:6 [AMPlified]
6: I will not be afraid of *ten thousands* of people who have set themselves against me round about.

10,000 என்கிறது நான்கு மொழிப்பெயர்ப்பும்👆🏻

[13/10 4:56 pm] Kamal VTT: 6 I will not be afraid of ten thousands of people, that have set [themselves] against me on all sides.

[13/10 4:58 pm] Kamal VTT: சரி சகோ அதற்கு சரியான விளக்கம் தர முயற்சி செய்கிறேன்

[13/10 4:59 pm] Kamal VTT: அது எதுக்கு அடையாளம்? ஏன் அந்த தொகை மட்டும்?

[13/10 5:03 pm] Benjamin Prasad 2 VDM: Yes bro. நாம் 10,000 என்றே ஏற்றுக்கொள்வோம். 👌🏿

[13/10 5:05 pm] Kamal VTT: Yes s accept

[13/10 5:05 pm] Elango: நான் தேடுகிறேன் சகோ பதினாயிரம் என்பதன் அர்த்தம் என்று தாவீது சொல்லுகிறார் என்று...

[13/10 5:07 pm] Jeyanti Pastor VDM: 10, 000 மிகவும் சரியே,

[13/10 5:08 pm] Benjamin Prasad 2 VDM: OK bro...

[13/10 5:10 pm] Jeyanti Pastor VDM: சவுலுக்கு ஆயிரம்,  தாவீதுக்கு பதினாயிரம் கொடுத்தார்கள்.  1 சாமுவேல் 18: 7,8. அந்நாளின் வழக்க சொல்லாக இருந்தது

[13/10 5:15 pm] Jeyanti Pastor VDM: சாலமொனும் பதினாயிரங்களில் சிறந்தவர் என்ற வார்த்தையை பயன் படுத்தியதாக உன்னதப் பாட்டில் உள்ளது

[13/10 5:17 pm] Kamal VTT: சரி தான் இது வழக்கு சொல்லாக கருத முடியாதே? அதன் பின் என்ன சத்தியம் ஒளிந்து உள்ளன? மிக நாளாக கேள்வி உள்ளது

[13/10 5:19 pm] Kamal VTT: ஏன் அவரை அத்துடன் ஒப்பிட வேண்டும்? ஏன் ஆயிரம் பல ஆயிரம் என ஒப்பிடலாமே?  யார் அந்த பதினாயிரம் பேர்கள்? ஒருவேளை விழுந்து போனவர்களை(பிசாசு கூட்டத்தை) குறிக்குமா?

[13/10 5:29 pm] Senthil Kumar Bro VTT: 4⃣ சங்கீதம் 3:4 -ல் கூறப்பட்டுள்ள *பரிசுத்த பர்வதம் என்பது எதனை குறிப்பிடுகின்றது❓*பரிசுத்த பர்வதம் எங்கேயிருக்கிறது, வசன ஆதாரம் உண்டா❓

சகரியா 8: 3
நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; *எருசலேம்* சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் *பரிசுத்த பர்வதம்* என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

[13/10 8:34 pm] Elango: 6⃣ நான் படுத்து நித்திரை செய்தேன், விழித்துக்கொண்டேன், கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
சங்கீதம் 3:5

படுத்து நித்திரை செய்வது அன்றாடம் நடக்கும் ஒரு செயல்தானே... அதை ஏன் சொல்ல வேண்டும்❓

மனிதர்களின் தூக்கத்தில் உறக்கத்தில் பல வகையுண்டு, சிலர் பல கவலைகளை மனதில் வைத்துக்கொண்டு உறங்குவார்கள், சிலர் தூங்கினாலும் நிம்மதியாக தூங்க மாட்டார்கள் அவர்கள் சேர்த்த பணத்தை குறித்து சிந்தைனையாக இருப்பார்கள்... அவைகள் முழுமையான உறக்கமாக இருக்காது.

நல்ல நிம்மதியான தூக்கம் என்பது தேவனின்  மேல் நாம் வைக்கும் விசுவாசத்தையும், அவருடைய கிருபையையும் பொறுத்ததே.

சங்கீதம் 127:3
[3]நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; *அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.*

வேதத்தில் மூன்று விதத்தில் *நித்திரை* என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
1. தூக்கம் / உறக்கம்

அப்போஸ்தலர் 12:6
[6]ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே *நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்;* காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

2. சரீர பிரகாரமான மரணம் / சாவு / இந்த உலகத்தை விட்டு கடத்தல்

1 தெசலோனிக்கேயர் 5:10
[10]நாம் விழித்திருப்பவர்களானாலும், *நித்திரையடைந்தவர்களானாலும்,* தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

3. நிர்விசாரமான பாவ வாழ்க்கை வாழ்தல், தேவனோடு உள்ள ஆவிக்குரிய உறவை இழந்த நிலை.

எபேசியர் 5:14
[14]ஆதலால், *தூங்குகிற நீ விழித்து,* மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

தாவீது சங்கீதம் 3 ல் குறிப்பிட்டிருக்கும் நித்திரை என்ற வார்த்தையான தூக்கம் உறக்கத்தை குறிக்கிறது.

 5 *நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;* ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:5

ஆண்டவர் கையில் நாம் எல்லாவற்றையும் ஒப்படைத்து அவரை சார்ந்து வாழும் போது அவரே நமக்கு இரவிலும் பகலிலும் முழு பாதுகாப்பு என்ற விசுவாசம் இருக்கும் போது நிம்மதியான தூக்கம் வரும்.

சங்கீதம் 4:8
[8] *சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்;* கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.

[13/10 8:37 pm] Elango: எத்தனை கிறிஸ்தவர்கள் உலக கவலைகளோடு, பாரத்தோடு தூங்குகிறார்கள் தெரியுமா?

சிலருக்கு சில பிரச்சனையை பற்றி நினைத்தாலே தூக்கம் வராது.

[13/10 8:38 pm] Elango: அன்றைன்றுக்கு தீமை செய்தால் தான் சிலருக்கு உறக்கமே வரும்ம்

நீதிமொழிகள் 4:16
[16] *பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோகும்.*

[13/10 8:40 pm] Benjamin Prasad 2 VDM: கரெக்ட் தான் சகோ

[13/10 8:43 pm] Benjamin Prasad 2 VDM: இப்படியும் சிலரா

[13/10 8:44 pm] Elango: சங்கீதம் 102:1-2,7-8
[1]கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.
[2]என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.
[7] *நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.*
[8]நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.

பிரச்சனைகள் நம்மை தூங்கவிடாமல் முழிக்க முழிக்க வைத்துவிடும்ம்.

நல்ல நிம்மதியான தூக்கத்திற்க்கும் தேவ கிருபையே.

சங்கீதம் 4:7-8
[7] *அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.*

[8] *சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.*

சங்கீதம் 127:1-3
[1]கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;
[2]கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
[3]நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; *அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.*

[13/10 10:49 pm] Elango: 6⃣ நான் படுத்து நித்திரை செய்தேன், விழித்துக்கொண்டேன், கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
சங்கீதம் 3:5

படுத்து நித்திரை செய்வது அன்றாடம் நடக்கும் ஒரு செயல்தானே... அதை ஏன் சொல்ல வேண்டும்❓

துன்பமான இக்கட்டான சூழலில் தேவனை நோக்கி கூப்பிடுகிறார் தாவீது. தேவன் அவருடைய ஜெபத்தை கேட்டு பதில் தருவார் என்று விசுவாசித்த தாவீதின் ஜெபத்தை தேவன் கேட்டார்.

சங்கீதம் 3:4
[4]நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; *அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் பதிலருளினார்.* (சேலா).

ஆதாலால் நான் நிம்மதியாக சமாதானமாக தூங்கி எழுவேன் என்கிறார் தாவீது.

இரவில் ஜெபத்தில் நாமும் தேவனை நோக்கி கதறினால் அவர் நம் ஜெபத்திற்க்கு பதில் தருவார் நம்முடைய தூக்கமும் இன்பமாக சமாதானமாக இருக்கும்.

 *சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.* அல்லேலூயா 🙋‍♂

[13/10 10:53 pm] Jeyanti Pastor VDM: கர்த்தர் வாசம் பண்ணும் இடம்.
சங்கீதம் 48:1  கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

[13/10 10:56 pm] Elango: சங்கீதம் 3:4
[4] *நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் பதிலருளினார்.*👈👈👈👆🏻👆🏻👆🏻👆🏻 (சேலா).

துன்ப நேரத்தில் தேவன் தேவனை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு தேவன் செவிக்கொடுக்கிறார் என்று இந்த சங்கீதம் வெளிப்படுத்துகிறது.

சங்கீதம் 50:15
[15]ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

நம்முடைய ஜெபத்திற்க்கு தேவன் செவிக்கொடுக்க நம்முடைய வாழ்க்கை தேவ வார்த்தையில் விசுவாசமாகவும், தேவனோடு உள்ள தனிப்பட்ட தேவப்பக்தியுள்ள ஆவிக்குரிய உறவை கொண்டிருப்பவர்களாக இருத்தல் வேண்டும். *தேவனுடைய உதவி ஆவலோடு தேட வேண்டும்ம்*

[13/10 11:04 pm] Elango: சங்கீதம் 48:1-2
[1] *கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.*

[2] *வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.*👈

[14/10 12:13 am] Saranya Sister VDM: பதின்ஒன்று 11
பதின்இரண்டு 12
பதின்மூன்று 13
பதின்நான்கு 14
...
...
...
பதின்ஆயிரம் 10,000
இருபதின்ஆயிரம் 20,000
முப்பதின்ஆயிரம் 30,000
நாற்பதின்ஆயிரம் 40,000
...
...
...

8 உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள், உங்களில் நூறுபேர் *பதினாயிரம்பேரைத்* துரத்துவார்கள்,; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

லேவியராகமம் 26

3 அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்தஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள். யோசுவா யுத்தவீரரான *முப்பதினாயிரம்* பேரைத் தெரிந்தெடுத்து, இராத்திரியிலே அவர்களை அனுப்பி,

யோசுவா 8

13 எறக்குறைய *நாற்பதினாயிரம்பேர்* யுத்தசன்னராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.

யோசுவா 4

10 சேபாவும் சல்முனாவும் அவர்களோடேகூட அவர்களுடைய சேனைகளும் எறக்குறைய பதினாயிரம்பேர் கர்கோரில் இருந்தார்கள். பட்டயம் உருவத்தக்க லட்சத்து *இருபதினாயிரம்பேர்* விழுந்தபடியால், கிழக்கத்தியாரின் சகல சேனையிலும் இவர்கள்மாத்திரம் மீந்திருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 8

4 அப்பொழுது சவுல் இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான். அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.

1 சாமுவேல் 15

18 அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான், அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்து *எண்பதினாயிரம்பேர்* இருந்தார்கள்.

2 நாளாகமம் 17

5 ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதினிடத்தில் கொடுத்தான், இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து *எழுபதினாயிரம்பேரும்* இருந்தார்கள்.

1 நாளாகமம் 21

Post a Comment

0 Comments