[12/10 10:40 am] Elango: 🎼🎸 *இன்றைய (12/10/2017) வேத தியானம் - சங்கீதம் 2*🎼🎸
1⃣ சங்கீதம் 2 யாரால், என்ன நோக்கத்திற்க்காக எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 2 லிருந்து நீங்கள் கற்றது என்ன❓
3⃣ இன்று நான் உம்மை *ஜநிப்பித்தேன்* எனபதன் அர்த்தம் என்ன❓
4⃣ தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன், கர்த்தர் *என்னை* நோக்கி: நீர் என்னுடைய குமாரன், *இன்று* நான் உம்மை ஜநிப்பித்தேன், சங்கீதம் 2:7
இது யார் யாரிடம் சொன்னது❓
5⃣ பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், *நடுக்கத்துடனே* களிகூருங்கள்.
சங்கீதம் 2:11
களிகூரும் போது நடுக்கம் வருமா❓
6⃣ *இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்* என்று சொன்னார்.
இதன் அர்த்தம் என்ன❓
7⃣குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை *முத்தஞ் செய்யுங்கள்,* கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
சங்கீதம் 2:12
முத்தஞ் செய்யுங்கள்...எப்படி❓
8⃣ சங்கீதம் 2 ல் சொல்லப்பட்டது ஏற்கனவே நிறைவேறிய தீர்க்கதரிசனமா அல்லது இனி நிறைவேறப்போகிற சம்பவமா❓
9⃣ சங்கீதம் 2 :1 ல் எதை எல்லாம் விருதாக்காரியங்கள் என்று சொல்லலாம்❓விருதாக்காரியங்கள் நன்மைக்காகவா❓அல்லது தீமைக்காகவா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[12/10 11:03 am] Elango: 3⃣ இன்று நான் உம்மை *ஜநிப்பித்தேன்* எனபதன் அர்த்தம் என்ன❓
*ஜெநிப்பித்தேன் என்பதற்க்கு உயிர்ப்பித்தேன், உயிரோடெழுப்பினேன் எழுப்பினேன் என்பதே சரியான அர்த்தம்.*
கள்ள கூட்டாத்தாரான ஜெகோவா சாட்சிகள் சொல்லுவது போல ஜெநிப்பித்தேன் என்பது பிதாவினால் இயேசு பிறப்பிக்கப்பட்டவர் அல்ல.
இயேசுவானர் பிதாவுக்கு சமமானவர், அவரே ஆதியும் அந்தமுமானவர்.
இதைத்தான் பவுல் விளக்கமாக கூறுகிறார்.
அப்போஸ்தலர் 13:32-33
[32]நீர் என்னுடைய குமாரன், *இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,*
[33] 👉 *இயேசுவை எழுப்பினதினாலே*👈 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
[12/10 11:04 am] Bro David (Thirumal) VTT: அப்போஸ்தலர் 13:32
[32]நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,
[12/10 11:11 am] Charles Pastor VDM: *சங்கீதம் 2 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)*
2 யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?
ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
2 அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும்,
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
3 அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.
அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.
4 ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர்,
அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5-6 தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
“நான் இம்மனிதனை அரசனாகத் தேர்ந்தெடுத்தேன்!
அவன் சீயோன் மலையில் அரசாளுவான்.
சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார்.
அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.
7 இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.
கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!
நீ எனக்கு மகன்.
8 நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.
பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
9 இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல
நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.
10 எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.
அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள்.
ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.
[12/10 11:12 am] Elango: 7⃣குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை *முத்தஞ் செய்யுங்கள்,* கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
சங்கீதம் 2:12
முத்தஞ் செய்யுங்கள்...எப்படி❓
*குமாரனை முத்தம் செய்யுங்கள் என்பதன் அர்த்தம் - கிறிஸ்துவை நம் சொந்த இராட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.*
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
ரோமர் 10:9-11
[9]என்னவென்றால், *கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.*
[10]நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
[11]அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
யோவான் 3:36
[36] *குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.*
[12/10 11:16 am] Senthil Kumar Bro VTT: 3⃣ இன்று நான் உம்மை *ஜநிப்பித்தேன்* எனபதன் அர்த்தம் என்ன❓
*ஜெநிப்பித்தேன் என்பதற்க்கு உயிர்ப்பித்தேன், உயிரோடெழுப்பினேன் எழுப்பினேன் என்பதே சரியான அர்த்தம்.
*இன்று* நான் உம்மை **ஜநிப்பித்தேன்**
இன்று.... என்றால்....???
[12/10 11:17 am] Elango: *சங்கீதம் 2 விளக்கவுரை*
*அறிமுகம்:-*
மேசியாவை குறித்த சங்கீதத்தில் இது முதலாவதாகும். மேசியாவை குறித்த சங்கீதங்கள் 2, 8, 16, 21, 22, 23, 24, 40, 41, 45, 55, 68, 69, 72, 96, 98, 102, 110, 118, 129. இந்த 2ஆம் சங்கீதத்தை தாவீது எழுதினார் என்று அப் 4:25-26 கூறுகிறது.
*தலைப்பு:-*
“அபிஷேகம் பன்னப்பட்ட அரசர் (இராஜா)”.
*உட்பிரிவு:-*
* வச.1-3 கர்த்தருக்கும் மேசியாவுக்கும் எதிர்ப்பு.
* வச.4-6 ஆண்டவரின் பதில்.
* வச.7-9 குமாரனை நோக்கி பிதா கூறியது.
* வச.10-12 உலக மக்களுக்கு ஆலோசனையும், எச்சரிப்பும், வாக்குறுதியும்.
*சிறப்பு:-*
இந்த சங்கீதம் குமாரன் கூறியது போல அமைந்துள்ளது. இதன் பகுதிகள் அப் 4:25-26; 13:32; எபி 1:5;5:5; வெளி 19:15 ஆகிய இடங்களில் மேற்கோல் காட்டப்பட்டுள்ளன. தேவன் தம்முடைய குமாரனை உயர்த்தி, எல்லாவற்றையும் ஆளச்செய்யும் நோக்கத்திற்கு எதிரான இவ்வுலக மக்களின் கலகத்தை இந்த சங்கீதம் கூறுகிறது.
*வசனத்திற்கான விளக்கம்:-*
1. ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்
காரியத்தைச் சிந்திப்பானேன்?
2.கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்
பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
3. அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்து
போடுவோம் என்கிறார்கள்.
இந்த இங்கீதத்தின் முதல் இரண்டு வசனங்களும் ஒரு தடவை நிறைவேறியதாக அப் 4:25-26 குறிப்பிடுகிறது. இந்த வசனங்கள் மீண்டும் மீண்டும் நிறைவேற கூடியதாக உள்ளது. பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய இயேசுவுக்கும் எதிராக அநேகர் எழும்பினார்கள். இன்னும் எழும்புவார்கள்.
வச.2-3 இந்த வசனங்கள் தேவனுடைய திரித்துவத்தில் பிதாவும் குமாரனும் தனித்தனி நபர்கள் என்பதை தெளிவாக விளக்கி காட்டுகிறது.
வச.3 எந்த ஒரு மனிதனும் இரட்சிகப்படும் முன் இருளின் அந்தகாரத்தில் இருக்கிறான். பாவத்திலும் இச்சைகளிலும் கட்டப்பட்டு இருக்கிற அவன், கர்த்தருக்குள் வாழ்வதை கட்டப்பட்டிருபதாக கருதுகிறான். உண்மையில் கர்த்தருடைய பிள்ளைகள்தான் விடுதலை பெற்றவர்கள் (யோவா 8:32,36; ரோம 6:22; கொலோ 1:13). கர்த்தருக்கு பயந்து நல்வழியில் நடப்பது அடிமை வாழ்க்கை அல்ல, அது மிகவும் சமாதானம் மகிழ்ச்சி தரும் விடுதலை வாழ்க்கை ஆகும்.
4. பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
5. அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக்
கலங்கப்பண்ணுவார்.
6. நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
கிறிஸ்துவை எதிர்பவர்களுக்கு பிதாவாகிய தேவன் தரும் பதில் இது. இயேசுவுக்கு எதிராக எழும்பினவர்களும் அவர்களின் இராஜ்ஜியங்களும் அழிந்து போயின. இயேசுவுக்கு எதிராக வருகிறவர்கள்
மனந்திரும்பாவிடில் அவர்கள் தேவ
கோபாக்கினைகுள்ளாகுவது நிச்சயம். இயேசுவையும் அவரின் ஊழியரையும் அவருடைய மக்களையும் எதிர்த்து எதையும் செய்யாதபடி கவனமாய் இருப்பீராக.
எந்தவொரு அதிகாரமும் தேவனிடமிருந்து வருகின்றன. இதை உணராமல் பெருமை கொண்டு ஆளும் தலைவர்களும் அதிகாரிகளும் இந்நாள்வரை
இருந்திருக்கின்றனர். இவர்களின் ஆற்றலும் அதிகாரமும் குறுகிய காலத்திற்குள் அழிவதை நாம் அறிவோம். கர்தருடைய பிள்ளைகளுக்கு எதிராக எழும்பும் எவருக்கும் அஞ்சாதீர்.
7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;கர்த்தர்என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
இந்த வசனங்கள் மேசியா கூறுவதாக அமைந்துள்ளது. வச.7 மற்றும் 12 கிறிஸ்துவை குமாரன் என்பதை விளக்கும் ஆதார வசனங்கள் ஆகும் இவற்றுடன் வச.2ஐ ஒப்பிட்டு படியுங்கள் புரியும். வச.8ன் படி உலக மக்கள் யாவரும் கிறிஸ்துவன்டைக்கு வர ஊக்கமாக ஜெபிப்பது நமது கடமை. வச.9ன் நிறைவேறுதல் வெளி 19:15இல் கூறப்பட்டுள்ளபடி இனி நடக்கபோகிறது. வெளி 2:27; 12:5 ஐயும் படியுங்கள்.
10. இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
11. பயத்துடனேகர்த்தரைச்சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
12. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
உலக மக்களுக்கு குமாரனின் எச்சரிக்கைகள் இந்த பகுதியில் அடங்கியுள்ளன. அவரை முத்தஞ்செய்யுங்கள் என்றால் அவரிடம் சதணடைந்து அடங்கியிருங்கள் என்று பொருள். இயேசு சீக்கிரம் வரபோகிறார் அவரை சார்ந்து கொள்வோர் பாக்கியவான்கள். மற்றவர்கள் அவர் கோபத்தை சந்திக்க நேரிடும். அவர் இன்று இரட்ச்சகர் நாளை நியாயாதிபதி. அழிவை விரும்பாத எரும் அவரை ஏற்றுகொண்டு அவரை சார்ந்து வாழுங்கள் (முத்தஞ்செய்யுங்கள்). அல்லேலூயா…..!
- https://biblicaltreasures.wordpress.com/2016/12/05/சங்கீதம்-2-விளக்கவுரை/
- @Charles Pastor VDM
[12/10 11:35 am] Elango: இன்று என்பது கிறிஸ்துவை பிதாவானவர் உயிரோடெழுப்பின அந்த நாளை குறிக்கலாம்.
அப்போஸ்தலர் 13:32-33
[32]நீர் என்னுடைய குமாரன், *இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,👇🏻👇🏻👇🏻👇🏻👆🏻👆🏻👆🏻*
[33] *இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை👈 அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார்*என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
[12/10 11:41 am] Ceous Joseph VDM: Psalms 2:3 (TBSI) "" *அவர்கள்* கட்டுகளை அறுத்து, *அவர்கள்* கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்" என்கிறார்கள்."
http://www.bibleforandroid.com/v/b7eebcd40f9c
இங்கு பன்மையில் சொல்லப்படுவது யாரை....
[12/10 11:45 am] Ceous Joseph VDM: நீர் என்னுடைய குமாரன்
இங்கு பிதா குமாரன் என்று எழுதப்பட்டுள்ளது நமது புரித்தாலுக்காகவா ??
இந்த இரண்டிக்கும் ஆவிக்குரிய அர்த்தம் ஏதாகிலும் உள்ளதா ??
[12/10 11:47 am] Ceous Joseph VDM: மேலே குறிப்பிட்ட பிதா குமாரன் என்னும் பதங்களை யதார்த்தத்தில் வரும் மகன் தந்தை உறவுடன் ஒப்பிடுவது சரியாக இருக்குமா??
[12/10 11:47 am] Bro David (Thirumal) VTT: தேவனுடைய தன்மையை நாம் புரிந்து கொள்ளுவதற்க்காக...
இப்படி எழுதி இருக்காலம் என்று நினைக்கிறேன்
[12/10 11:49 am] Bro David (Thirumal) VTT: தேவனுக்கும் சபைக்கு இடையே உள்ள தொடர்பை...
விவாகம் என்கிற உறவோடு ஒப்பிட்டு இருக்கிறதோ
[12/10 11:52 am] Ceous Joseph VDM: விவாகம் (2ம் வருகை )= கிறிஸ்து + சபை
பிதா + குமாரன் + பரிசுத்த ஆவி = தேவன்
இரண்டும் ஒன்ற குமா ??
[12/10 11:53 am] Ceous Joseph VDM: வானம் = heavan
பரலோகம் = heavan
எப்படி புரிந்து கொள்வது சரி...
[12/10 11:56 am] Bro David (Thirumal) VTT: வேறு வேறு
ஆனால்....
சங்கிதம் 2ல பிதா தன்னுடைய திரித்துவம் தன்மை சொல்லுகிறார்.
[12/10 11:57 am] Bro David (Thirumal) VTT: மொழி பெயர்ப்பில் உள்ள குறைபாடு
[12/10 11:58 am] Bro David (Thirumal) VTT: யோவான் 1:3
[3]சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
[12/10 12:18 pm] Ceous Joseph VDM: திரித்துவத்தை சங்கீதம் 2 ல் சுட்டி கட்டுவீர்களா ??
[12/10 12:27 pm] Bro David (Thirumal) VTT: சங்கீதம் 2:7
[7]தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்.
இது லா குமாரன் யாரு🤔🤔
அப்ப இது திரித்துவம் லா வராதா😇😇
[12/10 12:29 pm] Elango: 1⃣ சங்கீதம் 2 யாரால், என்ன நோக்கத்திற்க்காக எழுதப்பட்டது❓
*சங்கீதம் 2 - தாவீதினால் எழுதப்பட்ட பாடல், மேசியாவைக்குறித்து தீர்க்கதரிசனமாக பாடப்பட்ட சங்கீதம்.*
அப்போஸ்தலர் 13:32-37
[32] *நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,*
[33]இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
[34]இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.
[35]அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
[36] *தாவீது* தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
[37]தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
[12/10 12:45 pm] Elango: குமாரன் என்பது மேசியா இயேசுவை குறிக்கிறது.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:5-6,8
[5]எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; *நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார்* என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
[6]மேலும், *தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது:* தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
[8]குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
[12/10 12:49 pm] Ceous Joseph VDM: பரிசுத்த ஆவியானவர் குறிப்பிட்டுள்ளது என்று எண்ணினேன்....
[12/10 12:51 pm] Ceous Joseph VDM: மூவரையும் குறிப்பிட்ட வசனம் உள்ளது அதை காண்பிபீர் என்று நினைத்தேன்..
[12/10 12:54 pm] Bro David (Thirumal) VTT: என்ன வசனம் சகோ
கொஞ்சம்
எனக்கு சொல்லுங்க
[12/10 12:56 pm] Ceous Joseph VDM: Some thing mis understood....
[12/10 12:58 pm] Ceous Joseph VDM: Ingu holy spirit mention seiyya padavillai anal trinity ullathu endru sonneengalea athu eppadi endru keatean....
[12/10 1:03 pm] Ceous Joseph VDM: Psalms 2:7 (TBSI) "தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, "நீர் என்னுடைய குமாரன், *இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;"*
http://www.bibleforandroid.com/v/8461a5967129
இது கிறிஸ்துவின் பிறப்பை குறிகிறதா இல்லை அவரது உயித்தெழுதலை குறிகிறத?
ஆதியும் அந்தமும் இல்லாத தேவனின் பூமியில் மாம்சத்தில் அவரது ஆதி யை குறிக்கிறது.
சரி தானே??
[12/10 1:07 pm] Bro David (Thirumal) VTT: உயிர்தெழுதலை குறிக்கவில்லை... அவர் பிறப்பை நமக்கு முன் அறிவிக்கிறது வசனம் என்று நான் நினைக்கிறேன்
[12/10 1:08 pm] Elango: பிதா குமாரனை பெற்றெடுத்தாரா❓😳
[12/10 1:11 pm] Ceous Joseph VDM: Acts 13:33-34 (TBSI) இயேசுவை *எழுப்பினதினாலே* தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை *மரித்தோரிலிருந்து எழுப்பினார்* என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.
http://www.bibleforandroid.com/v/b7b88796f448
[12/10 1:12 pm] Bro David (Thirumal) VTT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:2-5
[2]இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
[3]இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.
[4]இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.
[5]எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
[12/10 1:21 pm] Elango: எப்படி பிதா குமாரனை பெற்றெடுத்தார் என்று நினைக்கிறீங்க?
[12/10 1:22 pm] Elango: அங்கே ஜெநிப்பித்தல் என்பது உயிர்ப்பித்தல் என்ற அர்த்தமே.
33 இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், "நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்" என்று எழுதப்பட்டுள்ளது.
திருத்தூதர் பணிகள் 13:33
34. *மேலும் இறந்த அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார்.* இதுபற்றித்தான் "நான் தாவீதுக்கு அருளிய தூய, மாறாத வாக்குறுதிகளை உங்களுள்ளும் தருவேன்" என்றும் கூறியிருக்கிறார்.
திருத்தூதர் பணிகள் 13:34
[12/10 1:24 pm] Bro David (Thirumal) VTT: ❓❓❓😇😇😇
யோசிக்கிறேன் சகோ
குழப்பமாகவே இருக்கு எனக்கு
[12/10 1:28 pm] Kishore VDM: சங்கீத-2
சங்கீதத்தின் வகை ராஜரீக சங்கீதம்
எழுதியவர்: அப்போலஸ்தர்கள் தாவீது எழுதியதாக விசுவாசித்தனர். அப்4:24-27
2ஆம் சங்கீதம் , 1ஆம் சங்கீதத்துடன் எவ்விதத்தில் தொடர்புடையது?
முதலாம் சங்கீதம் ஆசீர்வதிக்கப்பட்டவன்(பாக்கியவான்) என்பதில் முடிகிறது.
1ஆம் சங் வேதத்தை ஆராய்பவர் பாக்கியவான்கள் என்றும்,
2ஆம் சங் வேதம் காண்பிக்கும்( லூக் 24:27;44 மத்17:5) இயேசுவை அண்டிக்கொள்வோர் பாக்கியவான்கள்.
சங்கீதம் 2 உருவரை
THE APOSTATES vs 1-3
THE ALMIGHTY vs4-6
THE ANOINTED vs7-9
THE ADVICE vs10-12
கிறிஸ்துவுக்கு விரோதமாக எழும்புவர் மூவர் புறஜாதிகள் பூமியின் ராஜக்கள் அதிகாரிகள்
இவர்களின் செயல் கொந்தளித்தல் சதித்திட்டங்கள் விரோதமாக எழும்புதல் துர்ஆலோசனை
வச6 கிறிஸ்து
சத்துருக்களின் மீது ராஜா
ராஜாக்களுக்கொல்லாம் ராஜா
தம்முடைய பரிசுத்தவான்களுக்கு ராஜா
பிதாவினால் உண்டாக்கப்பட்ட ராஜா
[12/10 1:30 pm] Elango: குமாரன் பிதாவினால் உண்டாக்கப்பட்டவரா?
[12/10 1:33 pm] Kishore VDM: 🙏மனுகுலத்திற்கு பூமியில் மக்களுக்காக பிதாவினால் நியமிக்கபட்ட ராஜா
[12/10 1:39 pm] Bro David (Thirumal) VTT: யோவான் 3:16
[16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
[12/10 1:45 pm] Elango: குழப்பம் வேண்டவே வேண்டாம்.
குமாரன் பிதாவினால் பெற்றெடுக்கப்பட்டவர் அல்ல.
குமாரன் பிதாவானவருக்கு சமமானவர் என வசனைம் சொல்லுகிறது, அவர் மகா தேவன் என தீத்தில் வசனம் சொல்லுகிறது.
அவன் நித்திய பிதா என ஏசாயா கூறுகிறது.
காணாத அதரிசமான தேவனின் காணக்கூடிய ரூபம் - இயேசுகிறிஸ்து.
[12/10 1:47 pm] Bro David (Thirumal) VTT: ஏசாயா 9:6
[6]நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
[12/10 1:49 pm] Benjamin Prasad 2 VDM: குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; *கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்*; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
சங்கீதம் 2:12
*இயேசு கிறிஸ்துவின் கோபம் பற்றியெரியக்கூடிய நாட்கள் வரப்போகுது,*
*கர்த்தர் உலகத்தை நியாயந்தீர்க்கும் நாட்கள் வரப்போகுதுன்னு இந்த வசனம் சொல்லுதுங்க*
[12/10 1:54 pm] Bro David (Thirumal) VTT: வரப்போகிறவர் யார்/?
யோவான் 14:3 இயேசு என்றும்
1யோவான் 3:1-2 பிதா என்றும் சொல்ல பட்டிருக்கிறது
[12/10 1:55 pm] Bro David (Thirumal) VTT: 1 யோவான் 3:1-2
[1]நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
[2]பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
[12/10 1:55 pm] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 1:5
[5]உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து *முதற்பிறந்தவரும்,* பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ஜெநிப்பித்தல் என்பது மரித்தோரிலிருந்து பிறந்தவர் என்று அர்த்தம்.
[12/10 1:58 pm] Ceous Joseph VDM: மாம்சத்தில் வந்த குமாரன் ??
[12/10 2:01 pm] Bro David (Thirumal) VTT: யோவான் 1:14
[14]அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
[12/10 2:03 pm] Elango: தேவனுக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை.
தேவன் இருக்கிறவராகவே இருக்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:8
[8] *இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்* என்று திருவுளம்பற்றுகிறார்.
[12/10 2:06 pm] Bro David (Thirumal) VTT: அல்பாவும் ஒமேகாவுமாக இருப்பவர் யார்/?
வெளி 1:8 இயேசு என்றும்
வெளி 21:6-7பிதா என்றும் சொல்ல பட்டிருக்கிறது
[12/10 2:07 pm] Elango: இயேசுவை நீங்கள் தேவனென்று விசுவாசிக்கின்றீர்களா இல்லையா?
யோவான் 1:1-2
[1]ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, *அந்த வார்த்தை தேவனாயிருந்தது.*
[2] *அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.*
[12/10 2:12 pm] Ceous Joseph VDM: Matthew 1:20 (TBSI) "அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் *உண்டானது."*
http://www.bibleforandroid.com/v/22588891853e
[12/10 2:13 pm] Ceous Joseph VDM: சங்கீத த்யானம் திசை மாறி விட்டதோ??
[12/10 2:17 pm] Benjamin Prasad 2 VDM: ஜெநிப்பித்தேன் என்கிற வார்த்தை தான் திசை மாறினதற்கு காரணம்
[12/10 2:18 pm] Bro David (Thirumal) VTT: சரியாக sonniga brother
[12/10 2:20 pm] Benjamin Prasad 2 VDM: But ஜெநிப்பித்தேன் என்பதற்கு bro. Elango சரியான விளக்கம் கொடுத்துள்ளார் சகோ
[12/10 2:23 pm] Elango: *2⃣ சங்கீதம் 2 லிருந்து நீங்கள் கற்றது என்ன❓*
[12/10 2:26 pm] Bro David (Thirumal) VTT: ஜெநிப்பித்தேன் என்கிற வார்த்தையின்
புதுவிளக்கம் கற்றுக்கொண்டேன்
[12/10 2:27 pm] Elango: என்ன அது புதுவிளக்கம் கற்றுக்கொண்டீங்க😀🤔
[12/10 2:29 pm] Elango: இந்த ஆடியோவை கேளுங்க சகோ டேவிட். ஜெநிப்பித்தேன் என்பதற்க்கு நல்ல விளக்கம் கொடுக்கிறார்ர
[12/10 2:30 pm] Bro David (Thirumal) VTT: ஜெநிப்பித்தேன் என்பது
படைத்தல் சிருஷ்டிபபு என்று நினைத்து இருந்தேன் ஆனால்...
ஜெநிப்பித்தல் உயிர்ப்பித்தல் என்ற அர்த்தம் தெரிந்து கொண்டேன்
[12/10 2:32 pm] Senthil Kumar Bro VTT: 9⃣ சங்கீதம் 2 :1 ல் எதை எல்லாம் விருதாக்காரியங்கள் என்று சொல்லலாம்❓விருதாக்காரியங்கள் நன்மைக்காகவா❓அல்லது தீமைக்காகவா❓
நாம் கர்த்தரை மகிமைப்படுத்தாமல் பிரியப்படுத்தாமல்,
அவர் மேல் நம்பிக்கை இல்லாமல்.
நமது சுய பெலத்தாலும், புத்தியாலும் செய்யும் எந்த செயலும்... யோசனைகளும் நமக்கு வெற்றியாக முடியாது...
நாம் செய்யும் எல்லா செய்கையிலும்
தேவன் நம்மோடு இராவிட்டால் அந்த காரியம் முடிந்தாலும் அதனால் நமக்கு ஒரு பலனும் இருக்காது...
இதைத்தான் விருதாக்காரியம் என்கிறோம்.....
சங்கீதம் 127: 2
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது *விருதா* .
சங்கீதம் 127: 1
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் *விருதா* ;
சங்கீதம் 108: 12
இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி *விருதா* .
நீதிமொழிகள் 1: 17
எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது *விருதா* .
1கொரிந்தியர் 15: 14
கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் *விருதா* , உங்கள் விசுவாசமும் *விருதா* .
[12/10 2:32 pm] Tamilmani Ayya VDM: *தேவ கோபம் - (1) - சங்கீதம் 2: 12*
மத்தேயு 3: 7- 8
விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
கர்த்தரின் இயற்கையான கோபம்
• அவருடைய கோபம் சீக்கிரமாக எழும்பும் (சங்கீதம் 2: 12)
• அவருடைய கோபத்திற்க்கு முன்னால் யாரும் நிற்க முடியாது
• அவருடைய கோபம் அக்கினியைப்போல் பற்றி எரியும்
(சங்கீதம் 89: 46)
தேவ கோபத்தின் விளைவுகள்
• அழிவுகள்
(எரேமியா 4: 27- 29)
• சிதறியடுக்கப்படுவார்கள்
(புலம்பல் 4: 16)
• நோய்கள்
(சங்கீதம் 38: 3)
கர்த்தரின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்வது எப்படி?
• எசேக்கியா தாழ்த்தினான்
(2 நாளா 32:26)
• ஆகாப் தாழ்த்தினான்
(1 ராஜா 21: 27- 29)
• மனாசே தாழ்த்தினான்
(2 நாளா 33: 12)
• யோசுவாவும் இஸ்ரவேல் வம்சத்தாரும் தாழ்த்தினார்கள் (யோசுவா 7: 6)
- சகோ. வின்சென்ட் செல்வகுமார்
[12/10 2:35 pm] Aa Muthukumar Moses VTT: பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன்.
ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுக்களும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன் அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்: அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்
உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுக்களை அடைத்து வைக்கையிலும்,
சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்
நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

[12/10 2:35 pm] Tamilmani Ayya VDM: *தேவ கோபம் - (2) சங்கீதம் 2:12)*
மத்தேயு 3: 7-8
வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

தேவ கோபத்திற்க்கு தூண்டுதல்களும் பின்விளைவுகளும்
1. குறை கூறுதல், முறுமுறுப்புகள்
பின் விளைவுகள்: பெரியளவில்
மரணங்கள் (எண்ணாகமம் 11: 1 - தேவ அக்கினிக்கு இரையானார்கள்)
2. தேவ ஜனங்களுக்கு எதிராக பேசுவது , பின்விளைவுகள்: திடீர் பேரிழப்பு, கொள்ளை நோய்கள் (எண்ணாகமம் 12:2, 9 - மிரியம் குஷ்டரோகியானாள்)
3. சிலை வழிபாடு, பின்விளைவுகள்: நம் சத்துருகளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவோம்
( உபாகமம் 32:21 - இஸ்ரவேல் ஜனங்கள் புறஜாதியினரிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டனர்)
4. நம் பாவங்களை மறைத்தால், பின்விளைவுகள்: நம் சத்துருகளுக்கு எதிராக நிற்க முடியாது
(யோசுவா 7: 1, 7, 11,12 - எதிரிகள் இவர்களை ஜெயித்தனர்)
5. உங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து பின்வாங்குதல், பின்விளைவுகள்: நம் சத்துருகளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவோம்
(நியாதிபதி 3: 7- 8, இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் புறஜாதிகளுக்கு ஒப்புக்கொடுத்தார்)
6. தேவையில்லாத விசயங்களில் தலையிடுவது, பின்விளைவுகள்: தீடீர் மரணம் (2 சாமு 6:7, ஊசா இறந்தான்)
7. பெருமையுள்ளவன் (மனமேட்டிமை) ஆகுதல், பின்விளைவுகள்: தேவன் எதிர்ப்பார் (2 நாளாகமம் 32: 25 - எசேக்கியா ராஜா)
- தீர்க்கதரிசி. சகோ. வின்சென்ட் செல்வகுமார்
[12/10 2:39 pm] Tamilmani Ayya VDM: *தேவ கோபம் தொடர்ச்சி .... (3)*
சங்கீதம் 2: 12
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
*எப்படி கர்த்தரின் கோபத்திற்க்கும் தண்டனைகளுக்கும் தப்பித்துக்கொள்வது?*
எப்போதும் விழித்துக்கொண்டும் ஜெபித்துக்கொண்டிருப்பதும்
(லூக்கா 21:36)
*A. விழித்திருங்கள் என்பது எதை சொல்லுகிறது?*
• தேவனோடு தங்கி தேவனோடவே விழித்திருப்பது (மத்தேயு 26: 38)
• அவனவனுக்கு புத்திச்சொல்லி கொண்டு வந்ததை நினைத்து விழித்திருங்கள்
(அப் 20:31)
• சரியான (நீதி) உணர்வுக்கு வந்து பாவ வாழ்வை நிறுத்துங்கள்
(1 கொரி 15: 34)
• ஆவி நடத்துகிற பிரகாரமே எப்போதும் ஜெபித்துக்கொண்டிருங்கள் (எபே 6:18)
*B. நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது நமக்குள் என்ன நிலைத்திருக்க வேண்டும்?*
• விசுவாசம்
(2 தீமோ 1:5)
• தேவனுடைய வார்த்தை (1 யோ 2:14)
• கர்த்தர் உங்களுக்கு போதித்தபடியே சத்தியத்தில் தொடருங்கள்.
( 1 தீமோ 3: 14)
*C. விழித்திருப்பவர் தன் வாழ்க்கையை எப்படி வழிநடத்த வேண்டும்?*
• தூக்கத்திலிருந்து விழித்து மரித்தோரை விட்டு எழ வேண்டும் (எபேசியர் 5: 14)
• தெளிந்தவர்களாயிருக்க வேண்டும் (நிதானமான எண்ணமுடையவர்)
(1 தெச 5: 6)
• தவறுகளை திருத்திக்கொள்பவராக
(வெ. வி 3:2)
• நம் இரட்சிப்பை குறித்த அக்கறையோடு இருக்க வேண்டும் (எபி 2: 4)
• நம் இறுதி பரியந்தம் நிலை நின்று இரட்சிப்பை காத்துக்கொள்ள வேண்டும். (மத்தேயு 10:22 & 42:13)
- தீர்க்கதரிசி. வின்சென்ட் செல்வகுமார்
[12/10 3:09 pm] Elango: 8⃣ *சங்கீதம் 2 ல் சொல்லப்பட்டது ஏற்கனவே நிறைவேறிய தீர்க்கதரிசனமா அல்லது இனி நிறைவேறப்போகிற சம்பவமா❓*
[12/10 5:57 pm] Senthil Kumar Bro VTT: 5⃣ பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், *நடுக்கத்துடனே* களிகூருங்கள்.
சங்கீதம் 2:11
களிகூரும் போது நடுக்கம் வருமா❓
[12/10 6:00 pm] Elango: 11 *அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அக மகிழுங்கள்!*
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 2:11
[12/10 6:04 pm] Senthil Kumar Bro VTT: திருப்பாடல்களில் தனியாக சொல்லப்பட்டிருக்கு....
ஆனால் இங்கே சேர்த்து அல்லவா...? சொல்லப்பட்டிருக்கு.... நடுக்கத்துடனே களிகூறுங்கள்....
[12/10 6:07 pm] Elango: *இயேசுவை நீங்கள் தேவனென்று விசுவாசிக்கின்றீர்களா இல்லையா❓*
மேலே கேட்ட கேள்விக்கு பதில் தரவில்லையே சகோ.
[12/10 6:11 pm] Senthil Kumar Bro VTT: யோபு 21: 6
இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.
சங்கீதம் 119: 53
உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.
[12/10 6:13 pm] Senthil Kumar Bro VTT: நடுக்கம் மாமிசத்தை பிடிக்கும் போது எப்படி களி கூர முடியும்....???
[12/10 6:45 pm] Silvaster VTT: தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
சங்கீதம் 2:11 ல் பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது
பயம் எப்படிப்பட்ட பயம் ( அனேகவிதமான பயங்கள் இருக்கிறதே.....!
இதில் உங்கள் விளக்கம் என்ன சகோதரரே...
[12/10 7:31 pm] Elango: *வேதாகமத்தில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது தேவபயம்.*
நம்முடைய ஆவிக்குரிய முற்பிதாக்களின் சிந்தனைகளிலும் பிரசங்கங்களிலும் இந்த விஷயமே அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது.
ஒருவன் மெய்யான தேவபக்தியுள்ளவன் என்பதை விளக்குவதற்கு, நம்முடைய ஆவிக்குரிய முற்பிதாக்கள் “கடவுளுக்கு பயப்படும் மனிதன்” என்றே அவனைப் பெரும்பாலும் அழைத்தார்கள்.
இந்தப்பதம் எதைப் பிரதிபலிக்கிறதென்றால், தேவபயமுள்ள எந்தவொரு மனிதனும் தன் ஆத்துமாவின் தேவபக்தியை வெளிப்படுத்துவது தேவபயம் என்பதை உணர்ந்தவனாக இருப்பதைத்தான்.
*சரீரத்திலிருந்து ஆவியை எடுத்துவிட்டால், கொஞ்ச நாட்களில் மிஞ்சுவது வெறும் நாற்றமெடுக்கும் பிணமே. தேவபக்தியிலிருந்து தேவபயத்தை எடுத்துவிட்டால், பரிசேயத்தனமும், வெறும் மதமும், மாய்மாலமுந்தான் நாற்றமெடுக்கும் பிணத்தைப் போல மிஞ்சும்.*
[12/10 7:33 pm] Elango: தேவபயத்தைப் பற்றிய அநேக குறிப்புகளைப் பார்க்கலாம்.
இதைக்குறித்து சங்கீதம் 2ல், தேவன் தம்முடைய குமாரனை அவருடைய மேசியாவின் பணிக்கான அரியனையில் அமர்த்தி, அங்கிருந்து கிருபையையும் நியாயத்தீர்ப்பையும் அவர் செயல்படுத்துவதாகிய தம்முடைய நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். அந்த நோக்கத்தை அறிவித்துவிட்டு, தேவன் கீழ்வரும் கட்டளையைத் தருகிறார்.
*இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.* (சங்கீதம் 2.10-11)
தேவன் சொல்லுகிறார், “என் குமாரனைப் பற்றி நான் சொல்லிய கூற்றும் அவருக்கு நான் நிர்ணயித்திருக்கிற முக்கியமான இடமும் எதைக் காட்டுகிறதென்றால், அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய ஒரே மறுமொழி, தேவபயத்துடன் அவரைத் தொழுதுக்கொள்ளுவது மட்டுந்தான்.” *“பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்”. அப்படியானால், கிறிஸ்துவைப் பற்றிய நம்முடைய பார்வையும் பிதாவினுடைய ஆணையின்படியான அவருடைய உயர்த்துதலும் தேவபயத்துடன் அவருக்கு ஆராதனை செய்யும்படி நம்மைத் தூண்டாவிட்டால்,* பிதாவினுடைய ஆணையின்படியான அவருடைய குமாரனின் உயர்த்துதலை நாம் சரியாக விளங்கிக்கொள்ளவும் இல்லை, அதற்கேற்ற பதில் நடவடிக்கையை செய்யவும் இல்லை என்றே அர்த்தமாகும்.
[12/10 8:56 pm] Senthil Kumar Bro VTT: Bro.... நான் குறிப்பிட்டது தேவ பயத்தை அல்ல....
நடுக்கம் மாமிசத்தை பிடிக்கும் போது எப்படி களி கூர முடியும்....???
[12/10 9:08 pm] Elango: 5⃣ பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், *நடுக்கத்துடனே* களிகூருங்கள்.
சங்கீதம் 2:11
களிகூரும் போது நடுக்கம் வருமா❓
தேவ பயத்தோடு நாம் அவரை சேவித்து, அவருக்குள் களிகூற வேண்டும்.
*குளிரில் நடுங்கிக்கொண்டு இருப்பது போன்றதான மாம்ச நடுக்கம் அல்ல... ஆவிக்குரிய பயத்தோடு தேவனை சேவிக்க வேண்டும் என்பதை காட்டுகிறது*
பிலிப்பியர் 2:12
[12]ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், *அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும்* உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
[12/10 9:41 pm] Elango: 3⃣ இன்று நான் உம்மை *ஜநிப்பித்தேன்* எனபதன் அர்த்தம் என்ன❓
*இயேசுகிறிஸ்து பிறப்பிக்கப்பட்டவரா?*
யூத சிந்தனையில் *ஜெநிப்பித்தல்* என்பது , வெறும் *பெற்றெடுத்தல்* என்பதற்க்கும் மேலாக அர்த்தங்களும் உண்டு.
ஒரு ரபி தான் கற்பிக்கும் மாணவனை மகன் என்று அழைப்பதுண்டு.
பிலேமோன் 1:10
[10]என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் *நான் பெற்ற என் மகனாகிய* ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
1 கொரிந்தியர் 4:15
[15]கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; *கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.*
ஒரு மனிதன் பருவமடைந்த நிலையும், அரசரின் முடிசூடுதலும், திருமண வாழ்வுக்குள் நுழைவதும், உள்ளான மனிதன் புதிதாவதும் புதிய பிறப்பாக கருதப்படுவதுண்டு. இந்த மாற்றதின் அனுபவத்தை புரியமுடியாது.
- கிறிஸ்து தேவகுமாரன்.
- அவரின் குமாரத்துவம் நித்தியமானது.
- கிறிஸ்துவுக்கு தோற்றமுமில்லை, முடிவுமில்லை
- கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர்
- கிறிஸ்து தேவத்துவத்தின் பரிபூரணத்தை கொண்டிருந்தார். எபிரேயர் 1:3, கொலேசேயர் 1:15
- *குமாரன் என்பது அவரது ஆள்த்தத்துவத்தை குறிப்பிடுவதே தவிர, அவரது பிறப்பை குறிப்பது அல்ல. அவர் ஒருபோதும் தேவனுக்கு குழந்தை அல்ல.*
- அவர் மனிதனாக அவதரித்த போதும், அவர் உடலளவில் குழந்தையாக இருந்தபோதும் , தீர்க்கதரிசி சொல்லுகிறார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்று தான் சொல்லுகிறார். ஏசாயா 9:6
[12/10 9:57 pm] Elango: 3⃣ இன்று நான் உம்மை *ஜநிப்பித்தேன்* எனபதன் அர்த்தம் என்ன❓

பழைய ஏற்பாட்டில் சங்கீதத்தில் 2:7 ல் சொல்லப்பட்ட *ஜநிப்பித்தல்* என்பதற்க்கு புதிய ஏற்பாட்டில் எந்த இடத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
1. அப்போஸ்தலர் 13:33 ல் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறிப்பிட அந்த வசனம் பயன்படுத்தப்படுகிறது.
2. எபிரேயர் 1:5 ல் - கிறிஸ்துவானார் தூதர்களை விட மேலானவர் என்பதை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.
3. எபிரேயர் 5:5 ல் - கிறிஸ்துவானவர் பிரதான ஆசாரியராக அறிக்கையிடப்படுகிறதை குறிப்பிட பயன்ப்படுத்தப்படுகிறது.
கிறிஸ்து என்பவர் திரியேக தேவனில் ஒரு ஆள்த்தத்துவம்.
ஆள்த்தத்துவ அடிப்படையில் தான் குமாரன் என குறிப்பிடப்பட்டார்.
[12/10 10:13 pm] Elango: தேவன் நமக்கு ஒரு தகப்பன் என்று காட்டும் வசனங்கள்: 👇🏻👇🏻👇🏻
யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கம் இறைவனை தங்கள் தந்தையாகக் கூறுவதற்கான அடிப்படை வசனங்களை காண்போம். வேதத்தின் தேவன் உண்மையில் தன்னுடைய ஜனங்களுக்கு தகப்பனாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டிலிருந்தும் புதிய ஏற்பாட்டிலிருந்தும் தேவன் தன்னை தன் ஜனங்களுக்கு பிதாவாக வெளிப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்.[5]
1) உபாகமம் 32:6
விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள்.உன்னை ஆட்கொண்ட பிதா அவரல்லவா?உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?
2) சங்கீதம் 2:7
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்.
3) ஏசாயா 63:16
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.
4) மத்தேயு 6:9
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது:பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
5) யோவான் 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
6) ரோமர் 8:15
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்

Post a Comment
0 Comments