Type Here to Get Search Results !

லேவியைக் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

[11/09 9:33 am] Elango: 🕎  *இன்றைய வேத தியானம் - 1109/2017* 🕎

1⃣ *மூன்றாவது கோத்திரமான லேவியைக் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*

 2⃣ லேவி கோத்திரத்தை குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் என்ன❓

3⃣ லேவிக் கோத்திரத்தாரிடமிருந்து நாம் என்ன கற்கிறோம்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[11/09 11:23 am] Elango: லேவி என்பதன் பொருள்  ’இணைக்கப்படுதல்’ என்பதாகும் (ஆதி. 29:34).

ஆதியாகமம் 29:34 பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் *அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.*

[11/09 11:25 am] Elango: *கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.* உபாகமம் 10:8 ( பின்பகுதி )

9. ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம். உபாகமம் 10:9.

[11/09 11:45 am] Elango: 1. லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.

2. *அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம்*

3. ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.

4. உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும்.

5. *அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.* உபாகமம் 18:1-5

[11/09 11:45 am] Elango: *இவர்கள் ஜனங்களால் ஆதரிக்கப்பட்டனர், இதினிமித்தம் இவர்கள் ஊழியத்திற்கென தங்களை அற்பணித்துக் கொண்டனர்.*  (உபாகமம் 18:1-5).

*மோசே லேவி கோத்திரத்தானாய் இருந்தான், ஆரோனும் லேவிகோத்திரத்தான், ஆரோனின் வம்சத்திலிருந்து லேவிய ஆசாரியர்கள் ஆசாரிய ஊழியம் செய்து வந்தனர்.* தேவன் அவர்களை உபாகமம் 33:8-11 ல் ஊரீம் தும்மீம் இவற்றை பயன்படுத்தும் தெய்வீக ஞானத்தினால் ஆசீர்வதித்தார்.

*லேவியர்கள் நீதியினிமித்தம் வைராக்கியமுள்ளவர்களாய் இருந்தனர்* (யாத்திராகமம் 32:28,29)  மற்றும் *இவர்கள் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்க ஆரம்பித்தனர்*  (உபாகமம் 10:8).

[11/09 11:49 am] Aa Thomas Pastor Brunei VDM: Levi and Simeon both expressed their anger by killing the people... This zeal for family honour was used by Levi to guard God's honour..

[11/09 11:50 am] Aa Thomas Pastor Brunei VDM: The Kingdom of God suffereth violence and the violence take it by force...

[11/09 11:53 am] Aa Thomas Pastor Brunei VDM: Our strong characters can be used in the purpose of the expansion and glory to the Kingdom of God..

[11/09 11:54 am] Aa Thomas Pastor Brunei VDM: we can also take the example of Paul in strong resolutions..

[11/09 11:55 am] Elango: யாத்திராகமம் 32:26 பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.

மோசே, கர்த்தருடைய பக்கமாக நிற்ப்பவர்கள் யார் என்று முழக்கமிட்டபோது... லேவி கோத்திரத்தார் அவர் பக்கமாக சேர்ந்தனர்.

சங்கீதம் 4:3 *பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்;* நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

[11/09 11:55 am] Aa Thomas Pastor Brunei VDM: I have personally come across many wonderful servants of God who are so meek as well as so strong in their commitments..

[11/09 11:57 am] Aa Robert Pastor VDM: ஐயா தயவு செய்து உங்கள் பதிவுகளை தமிழில் போடுங்கள்.🙏🙏
 இந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை 🙏🙏🙏

[11/09 11:59 am] Aa Justin VTT: லேவி....லிவியத்தான்..இரண்டிற்கும் சம்பந்தம் ஏதேனும் உண்டா. யாராவது தயவாய் விளக்குங்கள்

[11/09 12:03 pm] Elango: கலாத்தியர் 1:14 *என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.*

பிலிப்பியர் 3:6 *பக்திவைராக்கியத்தின்படி* சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.

தேவன் பவுலை தம்முடைய ஊழியத்திற்க்காக தெரிந்துக்கொண்டது, பவுலுடைய பக்திவைராக்கியமே காரணாமாக இருக்கலாமோ? 

லேவி, சிமியோன் எப்படி பக்திவைராக்கியத்தில், கோபத்தில் சீகேம் பட்டணத்தாரை வெட்டி வீழ்த்தினார்களோ.. அதேப்போல பவுலும் தேவனுக்காக பக்திவைராக்கியாமக இருந்தார்...ஸ்தேவன் கொலை செய்யப்படவும் பவுல் சம்மதித்திருந்தார்.

[11/09 12:03 pm] Elango: நாம் எப்படிப்பட்ட பக்திவைராக்கியம் உடையவர்களாக இருக்க வேண்டும்....

தீத்து 2:14 அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், *நற்கிரியைகளைச் செய்ய *பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்*

[11/09 12:08 pm] Elango: I இராஜாக்கள் 19:14 அதற்கு அவன்: *சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்;* இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

எலியாவின் பக்திவைராக்கியத்தை பாருங்கள்... எல்லா தேவ மனிதர்களுக்கும் பக்திவைரக்கியம் அவசியம்...

பாவம் செய்யாமலிக்கும் பக்திவைரக்கியாம்
பரிசுத்தமாக வாழ தீர்மானிக்கும் பக்திவைரக்கியம்.
தேவ சித்தத்தை செய்வதில் பக்திவைரக்கியம்
தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்வதில பக்திவைராக்கியம்
ஆத்துமாவை ஆதாயம் செய்வதில் பக்திவைராக்கியம்.

[11/09 12:15 pm] Aa Thomas Pastor Brunei VDM: லேவி....லிவியத்தான்..இரண்டிற்கும் சம்பந்தம் ஏதேனும் உண்டா. யாராவது தயவாய் விளக்குங்கள்.... Levi means 'join, joined'... the description of Leviathan in Job 41 seems fitting to  'Joined" meaning Levi..

[11/09 12:23 pm] Aa Thomas Pastor Brunei VDM: LEVIATHAN

From lewiy (OT:3878) "joined" (referring to its joined, plate armour like scales) and than a monster drawn out, i.e. long; or else Arabic lavah "to twist." So Job 41:15-17. The crocodile. The whale having a smooth skin and no scales cannot be meant. The crocodile's teeth, 30 on each side of each jaw, lock into each other. Lips are wanting, so that the teeth are seen even when the mouth is closed, illustrating Job 41:14, "who can open the doors of his face? his teeth are terrible round about." As behemoth is the hippopotamus, so leviathan is the crocodile, both found in Egypt along the Nile.
(from Fausset's Bible Dictionary, Electronic Database Copyright (c)1998 by Biblesoft)

[11/09 12:27 pm] Aa Robert Pastor VDM: மிருகம்

Lewiy (OT: 3878) இருந்து "இணைந்தது" (அதன் இணைந்த, தட்டுகளைப் போன்ற தட்டுக் கவசத்தை குறிப்பிடுவது) மற்றும் அசுரன் வரையப்பட்டதை விட, அதாவது நீண்ட காலம்; அல்லது அரபு அரபி "திருப்ப வேண்டும்." யோபு 41: 15-17-ஐ வாசியுங்கள். முதலை. ஒரு மென்மையான சருமம் மற்றும் செதில்கள் கொண்ட திமிங்கிலம் குறிக்கப்படவில்லை. ஒவ்வொரு தாடையின் ஒவ்வொரு பக்கத்திலும் முதன்மையானது முதன்மையானது. இடுப்புக்கள் மூடப்பட்டாலும் கூட, வாய் மூடப்பட்டிருக்கும்போது கூட, யோபு 41:14, "அவருடைய முகத்தின் கதவுகளைத் திறக்க வல்லவர் யார்? நீரோடையைப் போன்றது, அதனால் லிவியாதான் முதலை, நைல் நெடுகிலும் எகிப்தில் காணப்படுகிறது.
(ஃபோஸெட்டஸின் பைபிள் டிக்சனரிலிருந்து, எலக்ட்ரானிக் டேட்டாபேஸ் பதிப்புரிமை (சி) 1998 பைபிஸ்ஓஃப்ட் மூலம்)

[11/09 1:05 pm] Aa Thomas Pastor Brunei VDM: Thanks Bro Robert for the Tamil post.. 🙏🙏

[11/09 1:35 pm] Aa Justin VTT: லிவியத்தான் என்பது முதலையா....

ஏசாயா 27:1 அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார், சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்று போடுவார்.

இவ்வசனத்தில் லிவியாதானை பாம்பு என சொல்லப்பட்டிருக்கிறதே

[11/09 2:11 pm] Elango: 🕎  *இன்றைய வேத தியானம் - 11/09/2017* 🕎

1⃣ *மூன்றாவது கோத்திரமான லேவியைக் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*

 2⃣ லேவி கோத்திரத்தை குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் என்ன❓

3⃣ லேவிக் கோத்திரத்தாரிடமிருந்து நாம் என்ன கற்கிறோம்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[11/09 3:08 pm] Aa Levi Bensam Pastor VDM: சங்கீதம் 135: 20
*லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்*.

Psalm 135: 20
*Bless the LORD, O house of Levi: ye that fear the LORD, bless the LORD.*

[11/09 3:10 pm] Aa Levi Bensam Pastor VDM: எசேக்கியேல் 48:29-31
[29]சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[30]நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
[31]நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், *லேவிக்கு ஒரு வாசல்*, ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

[11/09 3:12 pm] Aa Levi Bensam Pastor VDM: எரேமியா 33:22
[22] *வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.*

[11/09 3:17 pm] Aa Justin VTT: லேவி கோத்திரம் பட்டயத்திற்கும், பரிசுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்,

சீகேம் பட்டணத்தாரை சிமியோனுடு சேர்நது இந்த லேவியும் பட்டயத்தால் கொன்று போட்டார்கள்,
மத்தேயு26:52ன் படி பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

அதே நேரத்தில் தேவனுக்கென்று ஊழியம் செய்ய கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ஆசாரியர்களும் இந்த கோத்திரமே.
1பேதுரு2:9ன் படி நாமும் ராஜரீக ஆசாரியர்களே.

தேவனுக்கென்று பரிசுத்த வைராக்கியம் காட்ட நாமும் எபிரெயர் 4:12ன்படி எந்த பட்டயத்திலும் கருக்கானதாயுமுள்ள அவருடைய வார்த்தையாகிய பட்டயத்தைதான் எந்த பாவ மனுஷனையும் கொல்ல பயன்படுத்த வேண்டும். பழைய பாவ மனுஷன் கொல்லப்பட்டாலொழிய ஒருவன் புது சிருஷ்டியாக முடியாது.

வெளி.13:10 ....பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.

உபாகமம்33:8 ல் லேவி கோத்திரத்தை பரிசுத்த புருஷன் என்றும் அவன் வசமே தும்மீம் ஊரீம் இருப்பதாக எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

உபா.33:8ல்,ஆதி.495ல் லேவியை பற்றி சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனம் வெளி. 13:8ல் நிறைவேறுகிறது

[11/09 9:43 pm] Elango: யாக்கோபுடைய மூன்றாவது குமாரனான லேவியை குறித்து தியானிக்கிறோம்.

லேயாள் அருமையான பிள்ளையை பெற்றெடுத்து என் புருஷன் என்னோடு சேர்ந்திருப்பார் என்று லேவி என்று பெயரிட்டாள். லேவி என்றால் இணக்கம்.

லேவியைக் குறித்து தன் தகப்பனாகிய யாக்கோபு இப்படியாக சபிக்கக்கூடிய காரியமாக பேசுகிறார்.

ஆதியாகமம் 49:5-7
[5]சிமியோனும், *லேவியும்* ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.

[6]என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.

[7]உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன்.

சில சந்தர்ப்பத்தில் இஸ்ரவேலர் பாவம் செய்தபோது, கர்த்தர் பட்சத்தில் யாருண்டு என்று மோசே கேட்கும்போது , மோசேக்கூட நின்ற லேவி கோத்திரத்தாரை விசேஷமாக  காணமுடிகிறது.

தேவன் தெரிந்துக்கொண்டார், ஆகாத கல்லாக தள்ளின கல்லே பிரதான கல்லாக மாறின பிரகாரம், ஆண்டவரை இயேசுகிறிஸ்துவை மேன்மையை  அறியாதவர்களுக்கு அது தெரியாது.

வேதத்தில் பார்க்கிற வேளையில், ஆசரிப்புக்கூடாரத்தில் பிரதான வேளைகளை செய்யும்படியாக லேவிக்கோத்திரத்தாரை தேவன் தெரிந்துக்கொண்டார்.

லேவிக்கு பங்கும், பாகமும் கிடையாது. அநேக காரியங்களை சுதந்திரமாக கர்த்தர் கொடுத்தார். லேவி தசமபாகம் வாங்கும்படியாக கிருபை செய்தார்.

பத்து சதவீதத்தில் 1 ஐ லேவிக்கு கொடுக்க வேண்டும்.அப்ப 90 தான் அவர்களுக்கு கிடைக்கும் மற்ற கோத்திரத்தாருக்கு. ஆனால் லேவிக்கு 11 கோத்திரத்திரத்திரிடமிருந்து 110 கிடைக்கிறது. அப்ப எல்லா விதத்திலும் கர்த்தர் விசேஷமாக ஆசீர்வதித்தார்.

உபாகமம் 33:8-11
[8]லேவியரைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.
[9]தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நீ உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; *அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.*
[10] *அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் போதித்து, உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் இடுவார்கள்.*
[11] *கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின்மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான்.*

*தகப்பன் யாக்கோபு, லேவியை சபித்தார் ஆனால் மோசே இங்கே இவர்களை ஆசீர்வதிக்கிறார். சில சமயங்களிலே சில பெற்றோர் தன் பிள்ளைகளை பார்த்து நினைப்பார்கள் , இவன் வேண்டாவே வேண்டாமென்று, ஆனால் அவன் எங்கேயோ தேவபிள்ளைகளின் கைகளில் அகப்பட்ட விலையேறின பாத்திரமாக வைத்திருக்கிறார்.*

- பாஸ்டர் *லேவி*

[11/09 10:00 pm] Elango: ஆண்டவருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமையும், கிருபையும் உண்டாகுவதாக.

லேவி கோத்திரத்தை சேர்ந்தவர்கள், ஆண்டவரின் பணியை செய்வதற்க்காக முழுமையாக தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

*இவர்கள் மனிதனையும், தேவனையும் இணைக்கும் ஒரு மாபெரும் பணியை தேவனுக்கு பிரியமாக செய்துவந்தார்கள், பிறரை சபிப்பதற்க்கு அல்ல .. தேவ சமூகத்தை யாரெல்லாம் தேடி வருகிறார்களோ அவர்களை ஆசீர்வதிக்கக்கூடிய கோத்திரத்தார்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்*

லேவி கோத்திரத்தாரை போல நாமும் புத்தியுள்ள ஆராதனை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவ பணியை செய்கிறவர்களை தேவன் போஷிக்கிறார். இரவும், பகலும் தம் ஊழியர்களை கவனமாக கவனிக்கின்றார். அவர்களுக்கு தேவையானவைகளை சந்திக்கும்படியாக யார்மூலமாகவோ உதவிகளை செய்கிறார்.

ஆம் பிரியமானவர்களே, நாமும் லேவிக்கோத்திரத்தாரை போல், ஊழியத்திற்க்கு அழைக்கப்பட்டபடியினால் உண்மையாகவும், பயபக்தியுடனும், பரிசுத்தத்தோடும் அவருடைய சமூகத்திலேயே அனுதினமும் நிற்க வேண்டும். பயபக்தியாக நாம் வேண்டுதல் செய்யும் போது தேவன் கேட்பார். வேதமாகிய கர்த்தருடைய பெட்டியை நாம் சுமக்கின்ற போது, அந்த பெட்டியாகிய பரிசுத்த வேதம் எங்கெல்லாம் கொண்டு போகிறாரோ, அங்கெல்லாம் அற்புதங்கள், அபிஷேகங்கள், வெற்றி வாய்ப்புகள், இரட்சிப்பும் பாவமன்னிப்பும் உண்டாகிறது.

லேவியர்கள் இந்த பெட்டியை பின்பற்றி சென்றது போல, இப்போதும் நம் கையிலிருக்கிற கர்த்தருடைய பெட்டியை சுமந்து சென்றால், மாபெரும் அதிசயங்களை நம் கண்கள் பார்க்கும். அந்நிய கண்கள் அல்ல, நம் சொந்த கண்களாலே பார்க்க முடியும்.

 திறப்பின் வாசலில் நிற்க தகுதியுடையவர்களாக லேவி கோத்திரத்தார் இருந்தது போல, நாமும் திறப்பின் நிற்க்கூடிய மனிதர்களாக காணப்படுவோமாக ஆமென்.

- ஐயா *சங்கர்*

[11/09 11:11 pm] Aa Rooban Pastor VDM: யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த மூன்றாவது குமாரன் லேவி. லேவிக்கு மூன்று குமாரர்கள் பிறந்தார்கள் ,அவர்களுடைய பெயர் கெர்சோன் ,கோகாத் ,மெராரி இதைப்பற்றிய ஆதியாகமம்: 29: 34 ,46: 11 இல் வாசிக்கலாம். லேவியும் சிமியோனும் சீகேமியரை கொன்று போட்டதினிமித்தம் இவர்களுக்கு வரவிருக்கும்  கெடுதியை யாக்கோபு முன்னறிவித்தார் இதைப்பற்றி ஆதியாகமம் :34 :25 ,49 :5 இல் வாசிக்கலாம் ,ஆனால் இவனுடைய சந்ததியார் தேவனிடத்தில் மிகுந்த பக்தி வைத்ததினால் மோசே இவர்களே ஆசிர்வதித்தார். லேவியினுடைய கோத்திரத்தார் இஸ்ரவேலிலே மற்ற கோத்திரங்களை போல தங்களுக்கு ஒரு நாட்டை சுதந்தரித்துக் கொள்ள வில்லை ...
இவர்கள் ஆசாரியர்களும் , தேவாலய பணிவிடைகார்களுமாய் இருந்தார்கள் ,வனாந்தர பிரயாண காலத்தில் இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தையும் அதின் பணிமுட்டுகளையும் பாதுகாத்து வந்தார்கள் ,இவர்கள் சாலமோனின் தேவாலயத்திற்கு காவலாளிகளும், பணிவிடைக்கார்களுமாய் இருந்தார்கள். இவர்கள் இஸ்ரவேலருக்கு வேதத்தை போதித்து ,நியாய பிரமாணத்தின்படி அவர்களை நியாயம் விசாரித்தார்கள். இவர்களுக்கு மற்றவர்கள் தசமபாகம் கொடுத்தனர், இவர்கள் ஆசாரியர்களுக்கு தசமபாகம் கொடுத்தனர் .
லேவி கோத்திரமானது கெர்சோனியர், கோகாத்தியர், மொராரியர் ஆகிய மூன்று குடும்பங்களின் வழியாக பிரிக்கப்பட்டது ,இதைப்பற்றி
1 நாளாகமம் :23 :26 இல் வாசிக்கலாம். ஒரு லேவியன் தன் 25 வயதில் ஊழியத்தை கற்க ஆரம்பித்து முப்பதாம் வயதில் லேவியர் குறிய முழு கடமையை தொடங்குவான் இதைப்பற்றிய எண்ணாகமம் எட்டாம் அதிகாரம் 24 ஆம் வசனத்தில் வாசிக்கலாம் ஆனால் தாவீது இவர்கள் தங்கள் இருபதாம் வயதில் தங்கள் ஊழியத்தை கற்று 50 வயதிற்குப் பின் ஊழியம் செய்ய அவசியமில்லை என்பது ஏற்பாடு செய்தார் இதைப்பற்றி 1 நாளாகமம் 21 ம் அதிகாரம் 24 வசனத்தில் வாசிக்கலாம் ,இவருடன் தேவாலய பணிவிடை செய்யும்படி வகுப்பு வகுப்பாக எருசலேமுக்கு வந்து ஒரு வாரம் ஊழியத்தை நிறைவேற்றி திரும்புவார்கள் ,இதைப்பற்றி
 1 நாளாகமம்  9 ஆம் அதிகாரம்  25 வசனத்திலும்,  2 நாளாகமம் 23வது அதிகாரம் நான்காம் வசனத்திலும், ,31 ஆம் அதிகாரம் 17ஆம் வசனத்திலும்,எஸ்றா 3  ம் அதிகாரம் எட்டாம் வசனத்திலும் வாசிக்க முடியும். சிறையிருப்பிலிருந்து வந்தவர்களில் லேவியர்கள் அநேகர் எஸ்றா 2ம் அதிகாரத்தையும் நெகேமியா பதினோராம் அதிகாரத்தையும் வாசித்தால் தெளிவாய் அறிந்து கொள்ளலாம் புதிய ஏற்பாட்டிலே வருகின்ற வேதபாரகரும் நியாய சாஸ்திரிகளும் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே....
 லேவியர்களுடைய மற்றும் ஆசிரியர்களுடைய ஆலய செயல்பாட்டு சடங்கு முறைகளையும் ,கடமைகளையும் பற்றி தெளிவாய் அறிந்துகொள்ள நம் சகோதரர்கள் படித்த உடனே தூங்க கூடிய "லேவியராகமம்" புத்தகத்தை தியானிப்பது மிகமிக அவசியம்..😇😇😇👋👋👋👋நன்றி

Post a Comment

0 Comments