[7/12, 9:12 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 11-12/07/2017* ☀
1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் இருக்கும் *ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை உடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்❓*
2⃣ஆசாரியனின் உடையின் மூலம் தேவன் நமக்கு கற்ப்பிக்க விரும்பும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்னென்ன❓
3⃣புதிய ஏற்பாட்டில் நாம் அனைவரும் ஆசாரியர்கள் என்றால், நாம் உடுக்கும் ஆடை எது❓
4⃣ *ஆரோனின் ஆசாரியத்துவத்தை பற்றி வேதம் என்ன கூறுகிறது❓ஆரோனுடைய ஆசாரியத்துவத்திற்க்கும், கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்திற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன❓*
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[7/12, 9:18 AM] Elango: நேற்றை தியான கேள்வியோடு, இன்றைய ஆசாரியத்துவத்தையும் தியானிக்கலாம் 🙏🏿
[7/12, 9:25 AM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 28: 4 அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.
5 அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக.
6 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.
7 அது ஒன்றாக இணைக்கப்படும் பொருட்டு, இரண்டு தோள்த்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.
8 அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும்.
9 பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக.
10 அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும்.
11 இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக.
12 ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியான கற்களாக வைக்கக்கடவாய்.
13 பொன்னினால் வளையங்களைப்பண்ணி,
14 சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும், பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.
15 நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
[7/12, 9:49 AM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 28: 25 அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்த்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக.
26 நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,
27 வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,
28 மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.
29 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.
30 நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.
31 ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய்.
[7/12, 9:58 AM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 6: 37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.
39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
[7/12, 9:59 AM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 10: 27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.
29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
[7/12, 10:22 AM] Elango: 👍🏿🙏🏿12 கற்களில் தான், எப்பிராயிம், யோசேப்பு பேர் இருந்ததா பாஸ்டர்
[7/12, 10:35 AM] Jeyaseelan Bro VT: ஆசாரியர்கள்: ஆசாரிய உடைகள்
1. பொதுவான வேத பகுதி: - (யத்திராகமம் 28)
2. இஸ்ரவேலரின் மகா பிரதாண ஆசாரியரின் ஆசாரிய உடையில் ஏழு விதமான பொருட்கள் அடங்கியிருக்கும்.
மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட வஸ்திரம்,
ஏபோத்திற்கான அங்கி,
எபோத்,
ஊரிம் மற்றும் தும்மீம்,
அரைக்கச்சை,
தலைப்பாகை / கிரீடம்,
மார்ப்பதக்கம்.
3. ஆசாரிய வஸ்திரம் தேவனால் வடிவமைக்கப்பட்டது மற்றும் அதன் ஒவ்வொரு விவரங்களும் கிறிஸ்துவின் கிரியைகள் மற்றும் அவரது ஆளத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. யாதிராகமம் 28 ல் இவ்வஸ்திரம் பரிசுத்த வஸ்திரம் என அழைக்கப்படுகிறது (வச 2) மெல்லிய பஞ்சு நூல் (வச 5) சுத்த பொன் (வச 4) விலை உயர்ந்த கற்கள் (வச 17-20)
விலை உயர்ந்த தைலத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது (வச 41) ஞான எழுப்புதல் அடைந்தவர்களால் (வச 3) இவ்வஸ்திரம் மிகச்சிறந்த உபகரணங்களைக்கொண்டு மிகக்கைதேர்ந்த வல்லுனர்களால் செய்யப்பட்டது.
4. மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட வஸ்திரம் (யாதிராகமம் 28:39-43).
எல்லா ஆசாரியர்களும் மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட வஸ்திரம் உடுத்திக்கொண்டனர். மெல்லிய பஞ்சு நூல் கிறிஸ்துவின் மெய்யான பூரணத்தன்மையை காட்டுகிறதாய் இருக்கிறது. பிரதான ஆசாரியரின் வஸ்திரம் வெண்மையான மெல்லிய பஞ்சு நூலால் ஆனது.
அடிப்படை சித்தாந்தம்:
கிறிஸ்தவ வாழ்க்கையின் எல்லா கிரியைகளும் கிறிஸ்து சிலுவையின் மீது ஆற்றிய கிரியையின் அடிப்படையில் இருக்கிறது. அவரது நீதியினால் மட்டுமே நாம் நீதிக்குட்பட்டு இருக்கிறோம்.
மெல்லிய பஞ்சு நூலால் உருவாக்கப்பட்ட வஸ்திரம் குறித்த குறிப்பு : இப்படிப்பட்ட வஸ்திரம் மரித்த எகிப்தியர்களுக்கு உடுத்தி அடக்கம் செய்வர். அருங்காட்சியத்தில் இப்படிப்பட்ட மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட வஸ்திரங்களை மம்மிகளுக்கு (mummies) உடுத்தப்பட்டு வைத்திருப்பதை இன்றைய அளவில் நாம் காணலாம். இப்படி செய்யப்பட்ட வஸ்திரம் மிக மென்மையுள்ளதாய் இருக்கும்.
அடிப்படை சித்தாந்தம்:
மெல்லிய பஞ்சு நூல் வஸ்திரம் அவரது பரிசுத்தம் மற்றும் அவரது நீதியைக்காட்டுகிறதாய் இருக்கிறது. இவ்வகை வஸ்திரம் வண்ண நூல்களால் பின்னப்பட்டது (வச 39)
பின்னும் விதங்கள் குறித்து இரு வார்த்தைகள் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்று அடிப்படையாய் உருவாக்கப்பட்ட வஸ்திரத்தில் வண்ணம் சேர்ப்பது, மற்றொன்று, நெய்வதன் மூலம் அடிப்படையான வஸ்திரத்தில் வடிவமைப்பது.
இரண்டாவதாய் கூறப்பட்ட வஸ்திரமே இவ்வசனத்தில் நாம் காண்கிறோம். தூரத்திலிருந்து நாம் காணும்பொழுது அது வெண்மையான அங்கி போன்று காணப்படும். அருகில் காணும்பொழுது மிக நேர்த்தியானதும் வண்ணங்கள் அமைந்ததுமாய் காணப்படும்.
அடிப்பாடை சித்தாந்தம்: தூரத்தில் இயேசுவைக் காணும்பொழுது சிறந்த ஆசிரியராகவும், அல்லது தீர்க்கதரிசியாகவும் காணக்கூடும், அருகில் தேவக்குமாரனாக முழு அழகுடன் வெளிப்படுகிறார்.
அங்கி:-
அங்கி என்னும் இப்பதம் வேதாகமத்தில் மற்றொரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது -
ஆதியாகமம் 3. ஆதாமும் ஏவாளும் தோல் உடையினால் (அங்கி) (ஒருமை வாக்கியம்) மூடப்பட்டனர். - ஒரு மரணம் ஆதாமுக்காகவும் ஏவாளுக்காகவும் நிகழ்ந்தது.
ஒப்பிடுதல்:
கிறிஸ்துவின் மரணம் எல்லா மனுக்குலத்திற்கும் கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது.
பிராயசித்த நாளில் பிரதான ஆசாரியன்:
இந்நாளில் பிரதான ஆசாரியன் மெல்லிய பஞ்சு நூலால் ஆன அங்கி, தலைப்பாகை, சணல் நூலால் செய்யப்பட்ட கால்சட்டை, இவைகளை அணிந்துகொண்டு, மகாப் பரிசுத்த ஸ்தலத்தில் பலி மிருகத்தின் இரத்தத்துடன் தனக்காய் பிராயசித்தம் செய்ய பிரவேசிக்க வேண்டும்.
ஒப்பிடுதல்: கிறிஸ்து தனது மனித சரீரத்தில் (மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட அங்கி) ஒரு முறை தனது சரீரத்தை முழு உலகின் பாவத்திற்காக அற்பணித்தார். அவர் நியாயந்தீர்க்கப்பட்டதன் மூலம் தேவனை திருப்திசெய்து, தனது உயிர்த்தெழுந்த சரீரமான, பிரதாண ஆசாரியருக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டார்.
5. ஏபோத்தின் கீழ் அங்கி: (யாத்திராகமம் 28:31-35).
ஏபோத்தின் கீழ் அங்கி இளநீல நூலால் செய்யப்பட்டு, மாதளம்பழங்கள் வடிவிலான பொன் மணிகள் அங்கியின் தொங்கள் முழுவதிலும் இருந்தன. இக்கீழ் அங்கி மற்ற அங்கியை போல் அல்லாது முக்கியம் வாய்ந்ததாய் இருந்தது. இக்கீழ் அங்கி ஏற்படுத்துதல் அல்லது அதிகாரம் அளித்தலின் உன்னத அழைப்பாயிருக்கிறது.
ஒப்பிடுதல்:
நமது பிரதான ஆசாரியர் நமக்கு பிரதான ஆசாரியராய் இருக்கும்படி அதிகாரம் அளிக்கப்பட்டது. கிறிஸ்து என்பதன் மற்றொரு பொருள் அதிகாரம் பெற்றவர் என்பதாகும். கீழ் அங்கி என்பது எப்பொழுதும் ராஜரீகத்துடன் சம்பந்தபட்டு இருப்பதை வேதத்தில் எப்பொழுதும் நாம் காணலாம். மெல்கிசேதேக்கின் முறைமையின்படி கிறிஸ்து ராஜரீக ஆசாரியராய் இருக்கிறார். (சங்கீதம் 110:4). நாமும் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டுள்ளபடியால் ராஜரீக ஆசாரியராய் இருகிறோம்.
மெல்லிய பஞ்சு நூலால் ஆன அங்கி கிறிஸ்துவின் பரிசுத்தத்தைக்காட்டுகிறது, இவ்வங்கி ஏபோத்தின் இளநீல கீழ் அங்கியால் மூடப்பட்டுஇருப்பது, கிறிஸ்து தெய்வீகத்தால் மூடப்பட்டு இருப்பதை இது காட்டுகிறது.
இதைப்போன்றே ஆசரிப்புகூடாரத்தில், உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கற்பலகைகள் மீது பொன்னால் மூடப்பட்ட கிருபாசனம் இருப்பதும் இருக்கிறது. பொன் தெய்வீகத்தை குறிப்பதாய் இருக்கிறது.
ஏபோத்தின் கீழ் அங்கி ஒரே அங்கியாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாதிருந்தது.
ஒப்பிடுதல்:
கிறிஸ்துவின் தெய்வீகம் நித்தியமானதாய் இருக்கிறது, அதற்கு ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாதிருக்கிறது.
(வெளிப்படுத்தல் 1:8). கிருபையின் உடன்படிக்கைகள் யாவும், இயல்பாய் நித்தியமாய் இருக்கின்றன.
கழுத்தை சுற்றிலும் கட்டப்படுவது சங்கிலியைக்காட்டிலும் பலமுள்ளதாயும், அங்கி கிழிந்து போகாத வண்ணம், இருக்கச்செய்கிறது.
ஒப்பிடுதல்:
நமது இரட்சிப்பு தேவ வல்லமை மூலம், பாதுகாக்கப்படுகிறது.
பழங்களின் அடையாளம்: மாதளம்பழம் = சமாதானம்; திராட்சைப்பழம் = மகிழ்ச்சி; (கிச்சிலி பழம்) ஆப்பிள் = அன்பு.
இப்பழங்கள் மூன்றும் பழைய ஏற்பாட்டில், இணைந்தே வருவதை காணலாம். புதிய ஏற்பாட்டில் இவைகள் (கலாத்தியர் 5:22) ஆவியின் கனியில், அன்பு, சந்தோஷம், சமாதானம் இம்மூன்று குணங்களும் முதற்கனியாக இருப்பது, பழைய ஏற்பாட்டு கனிகளுக்கு சமமாய் இருக்கிறது.
அங்கியில் தொங்கலில் தொங்கவிடப்பட்டுள்ள மாதளம்பழங்கள், சமாதானத்தின் ராஜாவை நமக்கு காட்டுகிறதாய் இருக்கிறது. - மெல்கிசேதேக்கு சாலேமின் (சமாதானத்தின்) ராஜாவாய் இருந்தார்.
அடிப்படை:
மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவம் ஆரோன் ஆசாரியத்துவத்துக்குள் காட்டப்படுகிறது. அதில் உள்ள மணிகள் பரிந்து பேசும் ஜெபத்தை பிரதிபலிக்கிறது. ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் சஞ்சரிக்கும்பொழுது அவைகள் தொனித்துக்கொண்டே இருக்கும் - கிறிஸ்து நாம்க்காய் தொடர்ந்து பரிந்துபேசி ஜெபித்துக்கொண்டே இருக்கிறார்.
6. ஏபோத்து (யாத்திராகமம் 28:6-14).
ஏபோத்து இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், மெல்லிய திரித்த பஞ்சுநூலால் செய்யப்பட்டது. இவைகள் பொன்னினால் பின்னப்பட்டவைகள், பொன் இயேசுக்கிறிஸ்துவின் தெய்வீகத்தை பிரதிபலிக்கிறது, மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள நிறங்கள் அவரது தன்மைகள் அனைத்தையும் ஒன்றாய் இணைப்பதையும் குறிக்கிறது.
இளநீல நூல் = தேவனைக்காட்டுகிறது - யோவான் சுவிஷேசம், இரத்தாம்பர நூல் = ராஜரீகத்தைக்காட்டுகிறது - மத்தேயு சுவிஷேசம், சிவப்பு நூல் = இரட்சகரைக் காட்டுகிறது - மாற்கு சுவிஷேசம், திரித்த மெல்லிய பஞ்சு நூல் = மனித அவதாரத்தைக்காட்டுகிறது - லூக்கா சுவிஷேசம். (நான்கு சுவிஷேசம் பகுதியைக் காண்க)
யாத்திராகமப்புஸ்தகத்தில், இந்நிறங்கள் 24 முறை திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளன.
7. ஊரீம் மற்றும் தும்மீம் (யாத்திராகமம் 28:30).
ஊரீம் - வெளிச்சம்,
தும்மீம் - பூரணம்.
நியாய விதி மார்ப்பதக்கத்திலே இவைகள் வைக்கப்பட்டிருந்தன. இவைகள் என்னவென்று அறியப்படவில்லை, இருப்பினும் இவகள் வெள்ளை மற்றும் கருப்புக்கற்கள் ஆகும், இவைகள் சீட்டுப்போடும் முகாந்தரத்தில் வெள்ளைகல் ஆம் என்பதற்கும், கருப்புக்கல் இல்லை என்பதற்கும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. (வெளிப்படுத்தல் 2:17).
தேவனுடைய சித்தம் ஆம் அல்லது இல்லை என கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாய் இருந்தது. ஊரீம் தும்மீம் இவைகளின் உபயோகம், பழைய ஏற்பாட்டில் எப்பொழுதும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்து வந்தது. அது ஒரு போதும் விவாதத்திற்குரியதாய் இருந்ததில்லை.
இன்றைய அளவில் நமது ஊரீம் மற்றும் தும்மீம், முழுமையாய் தொகுக்கப்பட்டு முழுமைபெற்ற பரிசுத்த வேதாகமம் ஆகும், இது மனிதனுக்கு முழுமையான தேவனின் வெளிப்பாடாய் இருந்து, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை செய்ய பயனுள்ளத்தய் இருக்கிறது.
(1 கொரிந்தியர் 2:16).
8. அரைக்கச்சை (யாத்திராகமம் 28:8).
இவ்வரைக்கச்சை மெல்லிய பஞ்சு நூல், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், பொன் இவைகளால் செய்யப்பட்டவை. இது பிரதான ஆசாரியரின் இடுப்பில் இறுக்கமாய் கட்டப்பட்டது, ஆசாரியன் உடுத்தியுள்ள அங்கிகள் நெருக்கமாய் அசாரியனைவிட்டு அகலாதிருக்க கட்டப்பட்டது.
அரைக்கச்சை மூன்று விதங்களில் பயன்படுத்தப்பட்டது:
செயல்படும்பொழுது -
கர்த்தர் சீஷர்களின் பாதங்களை கழுவின போது.
நடந்து செல்லும்போது - யாத்திராகம சந்ததி (யாதிராகமம் 12:11).
யுத்தத்திற்கு செல்லும்போது - சத்தியம் என்னும் இடைக்கச்சை (எபேசியர் 6:14).
1 பேதுரு 1:13 ல் நமது மனதின் அரையைக்கட்டிக்கொள்ள கட்டளை பெற்றுள்ளோம்.
9. தலைப்பாகை. (யாத்திராகமம் 28:36-38).
இத்தலைப்பாகையில் பொன்னினாலான பட்டத்தில் "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்ற வாசகத்தை முத்திரைவெட்டாக எழுதி, அதை இளநூலாலான நாடாவில் வைத்து முகப்பு நெற்றிக்கு மேல் இருக்குமாறு தலைப்பாகையை சுற்றிலும் கட்டப்பட்டது.
இது மூளையின் சிந்திக்கும் பகுதியின் மேலும் மற்றும் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியரியனின் ஆத்துமாவின் மீதும் கட்டப்பட்டது. (யோசுவா 1:8).
10. மார்பதக்கம். (யாத்திராகமம் 28:15-29).
மார்ப்பதக்கம் இளநீல நூலாலும், இரத்தாம்பரம் மற்றும் சிவப்பு நூலாலும், திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் செய்யப்பட்டு அதன் மீது பனிரெண்டு விதமான கற்களடங்கிய மார்ப்பதக்கம் அதில் பொருத்தப்பட்டது. பனிரெண்டு கற்களும் லேவி கோத்திரத்தைத் தவிர்த்து, பனிரெண்டு கோத்திரங்களை காட்டுகிறதாய் இருந்தது. அது 20 செ.மீ சதுரமாய் இருந்தது, அதில் ஊரீம் தும்மீம் வைக்கப்பட்ட பை இருந்தது. அது தோள் மேலிருந்து பொன் சங்கிலிகளால் கட்டப்பட்டு, அதன் அடியிலுள்ள இளநீல நாடாவினால் ஏபோத்தைச்சுற்றிலும் கட்டப்பட்டது.
பனிரெண்டு விதமான கற்களும் இஸ்ரவேல் கோத்திரங்களும்:
பத்மராகம் - யூதா; புஷ்பராகம் - இசக்கார்; மாணிக்கம் - செபுலோன்; மரகதம் - ரூபன்; இந்திர நீலம் - சிமியோன்; வச்சிரம் - காத்; கெம்பு - எப்ராயீம்; வைடூரியம் - மனாசே; சுகந்தி - பெஞ்சமின்; படிகப்பச்சை - தாண்;
கோமேதகம் - ஆசேர்; யஸ்பி - நப்தலி.
இரண்டு தோல்களின் மீது வைக்கப்படும் - இரண்டு கோமேதகக்கற்களில் (யாத்திராகமம் 28:9, 10) இஸ்ரவேலரின் நாமங்கள் மறுபடியும் எழுதப்படவேண்டும்,
யோசேப்பு, லேவி இவர்களுக்குப் பதிலாக எப்ராயீம், மனாசே என்பவர்களின் பெயர்கள் மறுபடியும் எழுதப்பட வேண்டும்.
தோல்களில் வைக்கப்படும் கற்களில் எழுதப்பட்ட பெயர்கள், அவர்கள் பிறப்பின் வரிசையில் இருந்தன (யாத்திரகாமம் 28:10) -
இது இரட்சிப்பைக் காட்டுகிறது - இரண்டு கற்களும் ஒரே வகையைச் சார்ந்தவை - இரட்சிப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது.
மார்ப்பதக்கத்தில் உள்ள கற்களில் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்கள் அவர்கள் மேன்மைக்கேற்ப பதிக்கப்பட்டிருந்தன. (எண்ணாகமம் 10:14-27). எல்லா கற்களும் வித்தியாசமானவைகள் - இது வித விதமான ஆவிக்குரிய வரங்களைக் காட்டுகிறது - கர்த்தரை சேவிக்க அவர்களுக்கு வித்தியாசமான தாலந்துகளைப் பெற்று இருந்தனர்.
அடிப்படை சித்தாந்தம்:
மார்பதக்கத்தில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் அனைத்தும் விலையேறப்பெற்றவை. நாம் அனைவரும் தேவனுடைய பார்வையில் விலையேறப்பட்டவர்களும், அவரது சேவையில் முக்கியம் வாய்ந்தவர்களுமாய் இருக்கிறோம். நாம் அனைவரும் கிறிஸ்துவின் சரீரத்திற்கு மிகவும் அவசியமானவர்கள். நாம் அனவரும் உயர்வுதாழ்வின்றி, வித்தியாசமானவர்கள்.
[7/12, 10:40 AM] Jeyaseelan Bro VT: ஆசாரியகள்: லேவிய ஆசாரியத்துவம்
1. லேவிய ஆசாரியத்துவத்தில் முதன் முதலாக நியமிக்கப்பட்ட ஆசாரியன் ஆரோன். (யாதிராகமம் 28:1, எண்ணாகமம் 18:7, 8).
2. லேவிய ஆசாரியத்துவத்தில் ஆசாரியரின் குமாரர்கள், அவர்களது ஆசாரியத்துவத்துக்கு அவர்கள் தகப்பனை பின் பற்றுகிறவர்களாய் இருக்கின்றனர்.
3. ஆரோனின் வம்சத்தாரில் சரீர அங்கவீனர்கள் ஆசாரிய ஊழியம் செய்யாது விலக்கி வைக்கப்பட்டனர். (லேவியராகமம் 21:21-23).
4. லேவிய ஆசாரியத்துவத்தின் செயல்பாடுகள்:
நியாயப்பிரமாணத்தை போதிப்பது (லேவியராகமம் 10:11).
பலி செலுத்துவது ( லேவியராகமம் 9).
ஆசரிப்புக்கூடாரத்தை பராமரிப்பது. (எண்ணாகமம் 18:3). (லேவியர்கள்)
பரிசுத்த ஸ்தலத்தின் பணிகளை செய்து, சமூகத்தப்பங்களை அவ்வப்போது மாற்றுதல், குத்துவிளக்கின் கருந்திரியை அகற்றுதல் போன்றவை. (யாத்திராகமம் 30:7-8, லேவியராகமம் 24:5-8).
வியாதிப்பட்ட நபர்களை பரிசீலனை செய்து அவர்கள் அசுத்தமுள்ளவர்கள் என அறிவிப்பது.. (லேவியராகமம் 13, 14).
அவர்கள் தேசத்தில் உயர் நீதிமன்றங்களாய் செயல்பட்டு, பெரிதான முறண்பாடுகளை நியாயந்தீர்த்தனர்.(உபாகமம்17:8, 19:17, 21:5).
ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள். (எண்ணாகமம் 6:22).
5. சில ஆசாரியர்கள் தீர்க்கரிசிகளாகவும்கூட பணியாற்றியிருக்கிறார்கள். உ.ம். எரேமியா, எசேக்கியேல், சகரியா.
6. லேவி கோத்திரம்.
லேவியர்கள் லேவி கோத்திரத்திலிருந்து தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு பரிசுத்த தளவாடங்களை பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஏற்படுத்தப்பட்டனர். (எண்ணாகமம் 3:5 ff, 8:14-19).
எல்லா கோத்திரங்களிலும் முதற்பிறக்கும் பிள்ளைகள் தேவனுக்கென்று பரிசுத்தம் செய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து சேக்கல் வெள்ளியை மீட்கும் கிரயமாய் லேவி கோத்திரத்தாருக்கு கொடுத்து அவர்களுக்கு பதிலாக லேவியரை ஏற்படுத்தினர்.
லேவியர் பணிசெய்யுங்காலம் 25 முதல் 50 ஆண்டுகளாகும் காரணம் ஆவிக்குரிய ஈடுபாடுகளில் அதிகமாய் இவர்கள் செயலாற்றுவதால்.
லேவியர்களின் பணி:
நியாயப்பிரமாணத்தைப் பாதுகாப்பதும், எதிர்கால சந்ததியினருக்கு அவைகளை எடுத்துச்செல்வதும், தொடர்ந்து அவைகளை எழுதி பாதுகாப்பதும் ஆகும். (லேவியராகமம் 10:11, நெகேமியா 8:9, எஸ்றா 44:23).
இவர்கள் ஆசரிப்புகூடார பணிகளிலும், பின்னர் தேவாலயப்பணிகளிலும் ஆசாரியர்களுக்கு உதவி செய்தனர். (எண்ணாகமம் 18:4).
இரண்டு பணிகள் லேவியர்கள் செய்யாதிருந்தனர்.
கிபியோனியர்கள் செய்த விறகு சேகரிப்பதும், தண்ணீர் சேகரிப்பதும். (யோசுவா 9:21).
வாயிலை காப்பது. (1 நாளாகமம் 26:1, 19).
iv) லேவியரின் வகைகள்:
கோகாத்தியர்: உடன்படிக்கைப்பெட்டி, சமூகத்தப்ப மேஜை, இரண்டு பலிபீடங்கள், குத்துவிளக்கு, பரிசுத்த பாத்திரங்கள், மற்று திரை.
கெர்சோமியர்: மூடுதிரைகள், தொங்குதிரைகள், வாயிற்கதவுகள்.
மெராரியர்: ஜமுக்காளம், பலகைகள், தூண்கள், வெள்ளிப்பாதங்கள, கொக்கிகள் மற்றும் கயிறுகள். (போன்றவகளை பாது காத்து, பராமறித்து, ஓரிடம் விட்டு மற்றோர் இடத்திற்கு செல்லும்போது அவைகளை சுமந்து செல்லும் பணி இவர்களது ஆகும்)
v) ஆசரிப்பு கூடாரம் இடம்பெயரும்போது லேவியர்களே அதை சுமந்து செல்பவர்கள்.
vi) இசைக்கருவிகளுக்கும் பொறுப்பாளிகள் லேவியரே ஆவர்.
7. ஆசாரியரின் உடைகள் (யாத்திரகாமம் 28)
முக்கியமான சபை ஆசரிப்பின் போதுமட்டுமே ஆசாரியர்கள் மற்றும் பிரதான ஆசாரியர் சிறப்பான ஆசாரிய வஸ்திரம் தரிப்பர், மற்ற சமயங்களில் சாதரணமாய் மற்றவர்கள் தரிக்கும் சாதாரண வஸ்திரங்களையே தரிப்பர். முக்கியமான சபை கூடும் சந்தர்ப்பங்களில் பிரதான ஆசாரியரின் உடை அலங்கரிப்பில் கீழ்க்கண்டவைகள் அடங்கியிருக்கும்.
மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட கால்சட்டை, மெல்லிய பஞ்சு நூலால் செய்யப்பட்ட அங்கி, அரைக்கச்சை இது தொங்குதிரையின் நிறங்களாகிய வெண்மை, இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிறங்களில் இருக்கும். தலைப்பாகை இதில் பொன்னினால் செய்யப்பட்ட கிரீடமும் அதில் "யெஹோவாவிற்கு பரிசுத்தம்" என எழுதப்பட்டிருக்கும். இளநீல செய்யப்பட்ட ஏபோத்தில் வண்ணநிறங்களில் பிண்ணப்பட்டு அதன் மீது பொன்னால் ஆன மார்பதக்கம் இருக்கும், இதில் பனிரெண்டு வகையான கற்கள் பனிரெண்டு கோத்திரங்களை குறிக்கும் பொருட்டு அவைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கோத்திர பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் (கீழே ஆசாரிய உடை என்னும் தலப்பைப்பார்க்க)
8. யாத்திராகமம் 29 ல் ஆசாரியர்கள் பிரதான ஆசாரியர்கள் இவர்கள் பரிசுத்த அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.
9. பிராயசித்த நாள் (லேவிராகமம் 16) உன்னதமான இப்பரிசுத்த நாளில் பிரதான ஆசாரியன் தனது பரிசுத்த ஆடைகளை உடுத்திக்கொண்டு ஆசாரிப்பு கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து பாவநிவிர்த்திக்காய் அடிக்கப்பட்ட காளையின் இரத்தத்தை தனக்காக கிருபாசனத்தின் மீது தெளிப்பான். (வச 6, 14). மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து அவர் உயிருடன் காணப்படுவாரேயானால், அவர் தொடர்ந்து ஓராண்டு பிரதாண ஆசாரியராய் இருக்க தகுதி பெறுவார். அவர் மறுபடியும் இரண்டாம் முறையாய், வெள்ளாட்டின் இரத்தத்துடன் இஸ்ரவேல் ஜனங்களின் பாவநிவிர்த்திக்காய் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பார். அவர் மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே வரும்பொழுது தேசம் மன்னிப்பைப்பெறும். இஸ்ரவேல் ஜனங்கள் காக்கப்படுவர். (வச 30).
[7/12, 10:40 AM] Jeyaseelan Bro VT: ஆசாரியர்கள்
1. ஆசாரியர் தனக்காகவும், பிறமனிதருக்காகவும், தேவனுக்கு முன்பாக பிரதிநிதியாய் இருப்பவர் ஆகும்.
2. மனித சரித்திரத்தில் மூன்று வகைப்பட்ட ஆசாரியத்துவம் இருக்கின்றன.
குடும்ப ஆசாரியர் - ஆதாம் முதல் லேவி வரை.
லேவிய ஆசாரியத்துவம் - மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள்.
ராஜரீக ஆசாரியத்துவம்.
மெல்கிசேதேக்கு - எருசலேமின் ராஜா, உன்னதமானவருக்கு ஆசாரியரகவும் இருந்தார். (ஆதியாகமம் 14:18).
இயேசுக்கிறிஸ்து - இராஜாதி ராஜாவும், மகாப் பிரதான ஆசாரியரும் (எபிரெயர் 10:17).
சபையுக விசுவாசி - நாம் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டுள்ளபடியால், அவரது ராஜரீக ஆசாரியத்துவத்தை பகிர்ந்துகொள்கிறோம். (1 பேதுரு 2:9)
.3. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படும்வரை ஒவ்வொரு குடும்பத்தலைவரும் அவர் குடும்பத்திற்கு ஆசாரியராய் இருந்தார். (ஆதியாகமம் 8:20, 26:25, 31:54).
4. நியாயப்பிரமாணம் ஏற்படுத்தப்பட்டபொழுது, முழு இஸ்ரவேலும் "தேவனுக்கு ஆசாரிய இராஜ்ஜியமாய்" இருந்தது. எப்படியிருப்பினும் இஸ்ரவேல் அவிசுவாசத்தால் தவறிபோய்விட்டது.
5. தேவன் லேவி கோத்திரத்தில் ஆரோனையும் அவன் குடும்பத்தாரையும் விஷேச ஆசாரியத்துவத்துக்கென நியமித்தார். (யாதிராகமம் 28:1).
6. சபை யுகத்தில் எல்லா விசுவாசிகளும், கிறிஸ்துவுக்குள் ஆசாரிய இராஜ்ஜியமாய் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
(1 பேதுரு 2:9, வெளிப்படுத்தல் 1:6).
7. ஒரு ஆசாரியராய் இருப்பதன் பிரதான சிலாக்கியம், தேவனோடு நேரடியாய் தொடர்பு கொள்ள முடியும். (எபிர் 4:14-16, 10:19-22).
8. ஆசாரியராயிருந்து விசுவாசிகள் அற்பணிப்பது:
தங்கள் சொந்த சரீரம் (ரோமர் 12:1, பிலிப்பியர் 2:17).
ஸ்தோத்திர பலி (எபிரெயர் 13:15-16).
பரிசுத்தவான்களின் குறைவில் அவர்களுக்கு நன்மைசெய்தல் . (ரோமர் 12:13, கலாத்தியர் 6:6).
மற்றவர்களுக்காய் பரிந்துபேசி ஜெபித்தல். (கொலோசெயர் 4:12,1 தீமோ. 2:1).
9. ஆசாரியன் பிரதிநிதித்துவம் வகிக்கும் மக்களின் தன்மையில் பங்கெடுக்க வேண்டும். இயேசுக்கிறிஸ்துவும் மனிதனாகி, மனிதர்களின் தனமையில் பங்கெடுத்தார். (எபிரெயர் 5:1, 7:4, 5, 7:14-28, 10:5, 10:10-14).
10. ஆசாரியத்துவத்தின் ஒப்புமை:
மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவம் கிரிஸ்துவின் ஆசாரியத்துவத்தை சித்தரிக்கிறதாய் இருந்தது. (எபிரெயர் 7:1-3).
லேவிய ஆசாரியத்துவம்.
நியாயப்பிரமாணத்தை அடிப்படையாய் கொண்டிருந்தது, அதனால் இரட்சிக்க இயலாது.
ஆரோனின் குடும்பத்தில் சரீரப்பிரகாரமான பிறப்பை அடிப்படையாய் கொண்டிருந்தது.
ஆசாரியத்துவம் ஆரோனின் குடும்பத்தாருக்கு மட்டும் கிடைக்கக்கூடியதாய் இருந்தது.
ஆசாரியர்கள் லேவி கோத்திரத்திலிருந்து வந்தனர். அரசர்கள் யூதா கோத்திரத்திலிருந்து வந்தனர் ஒரு நபரும் ஆசாரியராகவும், அரசராகவும் இருக்கமுடியாது.
ஆசாரியத்துவம் மனித அடிப்படையில் இருந்தது, அவர்கள் தங்கள் சொந்த பெலவீனத்துடனும், பாவத்துடனும் இருந்தனர்.
அவர்களது ஆசாரியத்துவம் அவர்கள் மரணத்துடன் முடிவடையும்.
c) கிறிஸ்துவின் ராஜரீக ஆசாரியத்துவம்:
கிறிஸ்துவின் தியாகபலியை அடிப்படையாய் கொண்டு இருக்கிறது. அவரது தியாகபலி எல்லா சமயங்களிலுமுள்ள எல்லா பாவங்களையும் அகற்றி விடுவதாய் இருக்கிறது.
இது ஆவிக்குரிய பிறப்பை அடிப்படையாய் கொண்டு இருக்கிறது, ஆவிக்குரிய பிறப்பு தேவனுடைய குடும்பத்தில் பிறப்பதாய் இருக்கிறது.
சபை யுகத்தில் உலகலாவிய அளவில் விசுவாசிகள் அனைவருக்கும் இது பொருந்தக்கூடியது.
இது ராஜரீக ஆசாரியத்துவமாய் இருக்கிறது - காரணம் இயேசுக்கிறிஸ்துவின் ராஜரீகம் மற்றும் ஆசாரியத்துவதத்தினால் விசுவாசிகளுக்கு கிடைத்த சிலாகியமாய் இருக்கிறது.
இது பூரண நபரான கிறிஸ்துவை அடிப்படையாய்க் கொண்டுள்ளது.
கிறிஸ்து நித்தியமாய் வாழ்கின்றபடியால், இது நித்தியமானது.
[7/12, 10:54 AM] Elango: 1 நாளாகமம் 5:1-2
[1] *ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல்,*😭😭😭😭 *அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.*
[2]யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியில் உண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.
[7/12, 10:59 AM] Elango: ஆசரிப்புக்கூடாரத்திலேயே மிகவும் விலையுயர்ந்தது இரத்தக்கற்கள் தான்👍🏿🙏🏿✍🏿
[7/12, 11:03 AM] Elango: 👍🏿👍🏿👍🏿
1 பேதுரு 2:4-5
[4]மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் *விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில்* சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
[5] *ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்,* இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
[7/12, 11:06 AM] Elango: இது உண்மைதான்... அனுபவ பூர்வமாக பார்த்ததுண்டு😀😀 *ஒரே இருட்டாக இருக்கிறது, உங்களுக்கு விரோதமாக பில்லிசூனியம்*
[7/12, 11:07 AM] Elango: சீட்டு குலுக்கி வேதத்தை வாசித்தல்...
*நீ இன்னைக்கு சாகவே சாவாய்* 😃
[7/12, 11:09 AM] Elango: ஊரீம் குறித்த விளக்கம்👍🏿✍🏿
[7/12, 11:12 AM] Antony Ayya VT: மிகவும் சந்தோஷமாயிருக்கு Pastor நிறைய விடயங்களை கற்றுகெள்கிறோம்🙏🏻🙏🏻
[7/12, 11:15 AM] Peter David Bro VT: ஆரோன். பாவத்தில் பிறந்தவர்.
இயேசு. பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்.
ஆரோன். மனிதன் குமாரன்.
இயேசு. தேவகுமாரன்.
ஆரோன் . வழி நடத்த வந்தவர்.
இயேசு. வழியாகவே வந்தார்.
ஆரோன். ஆசாரியனாக தெரிந்து கொள்ள ப்பட்டவர்.
இயேசு. ஆசாரியனாகவே அனுப்பப்பட்டவர்.
ஆரோன். ஆசாரியனாக பரிசுத்த படுத்த பட்டவர்.
இயேசு. பரிசுத்தராகவே வந்தவர்.
ஆரோன்.பலிகொடுப்பவர்.
இயேசு. பலியானவர்.
ஆரோன். மரித்தவர். இயேசு. உயிர்த்தெழுந்தவர் .
இன்னும் பல
[7/12, 11:22 AM] Christopher-jeevakumar Pastor VT: உன்னதப்பாட்டு 5: 10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.
[7/12, 11:23 AM] Christopher-jeevakumar Pastor VT: உன்னதப்பாட்டு 1: 16 நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.
[7/12, 11:25 AM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 28: 33 அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.
[7/12, 11:25 AM] Stanley Ayya VT: இது என்ன ஐயா..!
இப்படி குறி சொல்வதை போல் நம்மை மாற்றியது எது.
மனிதனாக உருவாகி வாழும்போது எதிர்கொள்ளும் போராட்டங்களை சந்தித்த உடன் அதை துன்பமாக கருதி விடுதலை தேட முயல்வதே அடிப்படை காரணம்.
லாசருவின் துன்பம் அவனை தேற்றபடுதலில் சேர்த்ததது.
பாவம் செய்யாமல் பரிபூரணமாக துன்பமில்லாமல் வாந்த பணகாரரோ ஆக்கினை அடைந்த கதை படித்தும் கேட்டும்....
தீங்கனுவிப்பதை தவிற்க்க முயலும் மனித தேடலே வாக்குதத்த கிறிஸ்தவனாக காரணம்.
( நான் என்னை பற்றி சொல்ககிறேன்)
வாழ்வில்
பல வசதிகளைள தியாகம் செய்து
சில பாடுகளை நாமே தேடிக்கொண்டால் துன்பம் வராது.
நம் ஓய்வை
பொழுது போக்கை
சௌரியத்தை விட்டு கொடுத்து
அதிகாலை ஜெபம்
குறித்த நேரத்தில் வேத வாசிப்பு
நமக்கு ககிடைத்ததில் தேவையானவருக்கு உதவி
போன்ற நம் மனதிற்கினிய பாடுகளை தேடி கொண்டால்
கொடும் துன்பம் நம்மை அனுகாது
நித்திய தேற்றுதலிலும் பங்குண்டு.
[7/12, 11:40 AM] Elango: 🙏🏿🙏🏿✍🏿✍🏿✍🏿👍🏿👍🏿 இளநீல நூல் = தேவனைக்காட்டுகிறது - யோவான் சுவிஷேசம்,,கிறிஸ்துவின் தெய்வீகத்தையும்.
இரத்தாம்பர நூல் = ராஜரீகத்தைக்காட்டுகிறது - மத்தேயு சுவிஷேசம்,
சிவப்பு நூல் = இரட்சகரைக் காட்டுகிறது - மாற்கு சுவிஷேசம், பாடுகள் நிறைந்த கிறிஸ்துவின் மனீஷீகத்தையும்
திரித்த மெல்லிய பஞ்சு நூல் = மனித அவதாரத்தைக்காட்டுகிறது - லூக்கா சுவிஷேசம்.,கிறிஸ்வின் பரிசுத்தத்தை காட்டுகிறது.
[7/12, 11:51 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 11-12/07/2017* ☀

[7/12, 11:56 AM] Christopher-jeevakumar Pastor VT: சகரியா 3: 8 இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.
[7/12, 12:01 PM] Elango: ஆசாரியனுடைய இடைக்கச்சை என்பது ஆயத்தத்தையும், பணிவிடையையும் காட்டுகிறது👍🏿✍🏿
[7/12, 12:09 PM] Elango: நாமும் இந்த காலத்தில் இயேசுவின் ஆவி பெற்றவர்களாக, பணிவிடை செய்கிறவர்கள் ஆவியுடையவர்கள் இருக்க வேண்டும். புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் நாம் எல்லோரும் ஆசாரியர்கள் என்பதால் நாமும் சத்தியம் என்கிற கச்சையை இடுப்பில் எப்போதும் கட்டிக்கொண்டு தேவனுக்கு தொண்டு செய்ய வேண்டும். 👍🏿👍🏿✍🏿✍🏿
[7/12, 12:14 PM] Elango: ஆரோனுக்கும், கிறிஸ்துவுக்கும் நல்ல ஒப்புமை👌🏿👌🏿✍🏿
[7/12, 12:21 PM] Elango: *ஆரோனின் முறைமை Vs மெல்கிசேதேக்கின் முறைமை*
1. ஆரோனின் முறைமையில் முதல் பிரதான ஆசாரியன் ஆரோன் ஆவான். மெல்கிசேதேக்கின் முறைமையில் முதல் பிரதான ஆசாரியர் கிறிஸ்து ஆவார்.
2. *ஆரோனின் முறைமையில், ஆசாரியத்துவம் ஆரோனின் குடும்பத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டது; அது பிறப்பினால் உண்டானது. ஆனால் மெல்கிசேதேக்கின் முறைமையிலான ஆசாரியத்துவம் பிறப்பினால் அல்ல, அழைப்பினால் உண்டாயிருக்கிறது (எபி7:11).*
3. ஆரோனின் முறைமை என்றென்றும் நிலைத்திருக்கவில்லை; மரணத்தினிமித்தம் மாற்றப்பட்டது (எபி7:23). மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியராகிய கிறிஸ்து மரித்தாலும் உயிர்த்தெழுந்து என்றென்றும் ஆசாரியராக நிலைத்திருக்கிறார் (எபி7:24,25). எனவே இம்முறைமைக்குட்பட்ட புதிய ஏற்பாட்டு ஊழியம் நித்தியத்திலும் தொடருகிறது.
4. *ஆரோனின் முறைமை ஆணையினாலே கொடுக்கப்படவில்லை; புதிய ஏற்பாட்டு ஆசாரியத்துவம் ஆணையினால் கொடுக்கப்படுகிறது (எபி7:20,21; சங்110:4).*
5. *ஆரோனின் முறைமை மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் உண்டானதாக இருந்தது. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி உண்டான பிரமாணம் அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே இருக்கிறது (எபி7:16,17).*
6. ஆரோனின் முறையில் ஆசாரியர்கள் அபிஷேக தைலத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டனர்; இத்தைலம் குறிக்கப்பட்ட அளவின்படியான சில பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டியதாயிருந்தது (யாத்.30:23-25,30). மெல்கிசேதேக்கின் முறைமையில், 'அளவில்லாமல்' கொடுக்கப்படுகிற பரிசுத்த ஆவியினால் நாம் அபிஷேகம்பண்ணப்படுகிறோம் (யோவான்3:34).
7. ஆரோனின் முறைமையின்படி உண்டான ஆசாரியத்துவம் எந்த மனுஷனையும் பூரணப்படுத்தவில்லை. ஏனெனில், அதன்படி உண்டான ஆசாரியர்கள் பெலவீனமுள்ள மனுஷராயிருந்தனர். மெல்கிசேதேக்கின் முறைமையின்படி உண்டான ஆசாரியத்தும் மனிதனைப் பூரணப்படுத்துகிறது. ஏனெனில் கர்த்தராகிய இயேசு பெலவீனர் அல்ல; அவர் சோதிக்கப்பட்டு, பாவமில்லாதவராய்க் காணப்பட்டார் (எபி7:28 ; 4:5).
8. *ஆரோனின் முறைமையின்படியான ஆசாரியத்துவம் கைகளினால் செய்யப்பட்ட கூடாரத்தில் செய்யப்படும் ஊழியமாயிருந்து; மெல்கிசேதேக்கின் முறைமையின்படி உண்டான ஊழியம் பெரிதும் உத்தமுமான கூடாரத்தில் செய்யப்படுகிறது (எபி9:11,12).*
9. ஆரோனின் முறைமையில் மரிக்கிற மனுஷர் தசமபாகம் வாங்கினார்கள். ஆனால் மெல்கிசேதேக்கின் முறைமையில், பிழைத்திருக்கிறார்கள் என்ற சாட்சி பெற்றவர்கள் (ஜெய ஜீவியம் செய்கிறவர்கள்) தசம பாகம் வாங்குகிறார்கள் (எபி7:8).
[7/12, 12:28 PM] Elango: 👌🏿👍🏿✍🏿
யாத்திராகமம் 39:24-26
[24]அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி,
[25] *பசும்பொன்னினால் மணிகளையும் பண்ணி, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதளம்பழங்களின் இடைஇடையே தொங்கவைத்தார்கள்.*
[26]கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய *அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது.*🍐🍐🍐🍐🍐
[7/12, 12:34 PM] Elango: நம்மை நாமே நிதானிக்க வைக்கும் நல்ல விளக்கம், 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
வெளிப்படுத்தின விசேஷம் 22:14
[14]ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் *அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள்* பாக்கியவான்கள்.
மத்தேயு 5:19
[19]ஆகையால், *இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.*
[7/12, 12:36 PM] Elango: பிரதான ஆசாரியன் இடுப்பில் கயிரு கட்டுவார்கள், மகா பரிசுத்த ஸ்தலத்தில் அவர் தவறுதலாக இறந்துவிட்டால், வெளிலிருப்பவர்கள் அவரை கயிறு மூலம் இழுப்பார்களா?
[7/12, 12:38 PM] Antony Abel 2 VT: மெல்கிசேதேக் யாரு❓
சொல்லுங்களேன்...
[7/12, 12:40 PM] Elango: https://vedathiyanam.blogspot.in/2017/04/blog-post_40.html?m=1
[7/12, 12:50 PM] Elango: இந்த தியானத்தில் ஒரு தரப்பு - மெல்கிசேதேக்கு இயேசு என்கின்றனர், மறு தரப்பு அவர் இராஜாவாக வாழ்ந்த மனிதன் என்கின்றனர்.
சில சபை - மெல்கிசேதேக்கு என்பது பரிசுத்த ஆவியானவர் என்பர்.
இந்த லிங்க் சொடுக்கி பாருங்க சகோ.
[7/12, 1:06 PM] Elango: *இந்த மெல்கிசேதேக் யார்?*
*இவர் பெயரின் அர்த்தம் "நீதியின் ராஜா"
*இவர் சாலேமின் ராஜா. (சமாதான அரசன் என்றும் பொருள்படும்)
*உன்னததேவனின் ஆசாரியன்.
*இவர் வம்சவரலாறு அற்ற, தொடக்கமும் முடிவுமில்லாதவர்.. (அல்பா, ஒமேகா)
*ஆபிரகாமுக்கு, அப்பம், திராட்சை ரசம் கொடுத்து, ஆபிரகாமின் சந்ததிக்கே, கிறிஸ்துவின் மரணத்தை முன்னறிவித்தவர்.
*பிதாவின் நாமத்தில் ஆபிரகாமை ஆசீர்வதித்தவர்.
*ஆபிரகாமிடம் தசமபாகம் பெற்றவர்.
*சங் 110:4 ன் படி மேசியா, மெல்கிசேதேக்கின் முறையில் நித்திய ஆசாரியராவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.
*தேவகுமாரனுக்கு ஒப்பானவராக அடையாளம் காணப்பட்டவர்.
*மிகவும் பெரியவர்.
*பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவர். (ஜீவிக்கிறவர்)
*ஆபிரகாம் வழியாக லேவியிடமும் தசமபாகம் பெற்றவர்.
[7/12, 1:18 PM] Sam Jebadurai Pastor VT: Exodus 28:36-37
36 "பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப்பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,"
37 அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
[7/12, 1:19 PM] Sam Jebadurai Pastor VT: Revelation 14:1 "பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்."
[7/12, 1:20 PM] Sam Jebadurai Pastor VT: Revelation 22:3-4
3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
4 "அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்."
[7/12, 1:29 PM] Jeyanti Pastor VT: நாம் கர்த்தருடைய நாமத்திற்கென்று பேரெழுதப்பட்டவர்கள்
[7/12, 1:36 PM] Elango: வெளி 9:4 பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், *தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத்* தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
[7/12, 1:37 PM] Elango: இந்த முத்திரை என்பது கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று எழுதப்பட்டது என்று அரத்தம் கொள்ளலாமா பாஸ்டர்... இல்லாட்டி இந்த முத்திரை மறைபொருளா...
[7/12, 1:38 PM] Jeyanti Pastor VT: ஆவியின் அச்சாரம், பரிசுத்த ஆவியின் முத்திரை என்றெடுக்கலாமா பாஸ்டர்ட்ஸ்
[7/12, 1:41 PM] Elango: எனக்கு தெரியலை அம்மா...😴
[7/12, 1:57 PM] Elango: Rev. 4:14. வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய *இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர்* நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
பாஸ்டர், பிரதான ஆசாரியனின் நெற்றியில் *"கர்த்தருக்குப் பரிசுத்தம்"* என்று எழுதப்பட்டிருக்க வேண்டுமென்பதால், நம்முடைய பிரதான ஆசாரியரான ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் நெற்றியிலும் இந்த "வாசகம்" இருக்குமா அல்லது அதன் ஆவிக்குரிய அர்த்தம் வேறையா? இயேசுகிறிஸ்துவின் நெற்றியில் அப்படி ஏதும் வாசகம் இருக்காதா?
[7/12, 2:17 PM] Tamilmani Ayya VT: தேவனும் கர்த்தரும் அவரே
[7/12, 2:20 PM] Sam Jebadurai Pastor VT: பிதாவின் நாமத்தில் இயேசு கிறிஸ்து வந்தார். இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியன் வேலையை செய்கிறார் என்பதால் அவர் அப்படி ஆடை அணிந்து இருப்பார் என அர்த்தம் ஆகாது
[7/12, 2:33 PM] Antony Abel 2 VT: Amen in the *MIGHTY* Name of *Jesus christ*🙏🏿🙏🏿
[7/12, 2:37 PM] Antony Abel 2 VT: அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
1 தீமோத்தேயு 6:15
[7/12, 2:52 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 11-12/07/2017* ☀

[7/12, 3:11 PM] Charles Jebaraj VM: என்னை இந்த குரூப்பில் சேர்த்து வைத்த இயேசப்பாவுக்கு நன்றி மற்றும் என்னை சேர்த்த அனைவருக்கும் நன்றி
[7/12, 3:13 PM] Elango: அங்கியின் மணிகள் விளக்கம்👍🏿✍🏿
[7/12, 3:16 PM] Elango: தூரத்தில் இருப்பவர்களுக்கு அவருடைய மணியோசை கேட்பதில்லை... அவருடைய பிராகாரத்தில், பலீபீடத்தில் வாசம் செய்பவர்களுக்கு மட்டுமே கேட்கும்.👍🏿👍🏿 *ஆவிக்குரிய விளக்கம்*
[7/12, 7:07 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 28: 6 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.

[7/12, 7:13 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 28: 9 பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக.

[7/12, 7:16 PM] Christopher-jeevakumar Pastor VT: ஏசாயா 63: 9 அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார் அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.
[7/12, 7:24 PM] Christopher-jeevakumar Pastor VT: I பேதுரு 1: 18 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
[7/12, 7:47 PM] Elango: கிறிஸ்துவின் தோளின் மேல் நாம் இருந்தால் நமக்கு இளைப்பாறுதல்👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿 *ஏபோத்திற்க்கு கிறிஸ்துவின் அன்பை ஒப்பிட்டு*👏🏿👏🏿👏🏿

Post a Comment
0 Comments