Type Here to Get Search Results !

கிறிஸ்துவோடு மோசேயும், எலியாவும் ஏன் காணப்பட்டார்கள்❓

[6/12, 10:14 AM] Elango: ✨ *இன்றைய வேத தியானம் - 12/06/2017* ✨

👉ஆண்டவர் இயேசு,  *மலையின்மேல் சீஷர்களுக்கு முன்பாக, மறுரூபமானதன் முக்கியத்துவம் / அர்த்தம் என்ன❓*மத்தேயு 17:1-3

👉இயேசுகிறிஸ்துவோடு மோசேயும், எலியாவும் ஏன் காணப்பட்டார்கள்அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள்

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/12, 10:35 AM] Levi Bensam Pastor VT: *மறுரூபமாக நாம் என்ன செய்ய வேண்டும்*❓❓❓👉 *மனம் புதிதாக வேண்டும்* 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 ரோமர் 12:1-2

[1]அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக,👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆 *உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.*

[6/12, 10:38 AM] Levi Bensam Pastor VT: 2 பேதுரு 1:17-18
[17]இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
[18] *அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.*

[6/12, 12:20 PM] Ebi Kannan Pastor VT: மாற்கு 9:2-4
[2]ஆறுநாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.
[3]அவருடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.
[4]அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

[6/12, 12:23 PM] Ebi Kannan Pastor VT: 1 யோவான் 1:1-2
[1]ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
[2]அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

[6/12, 12:26 PM] Ebi Kannan Pastor VT: 2 பேதுரு 1:17-18
[17]இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
[18]அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.

[6/12, 1:14 PM] Antony Ayya VT: [6/11, 23:10] 💐: மத்தேயு, Chapter 17

1. ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,

2. அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.

3. அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
[6/11, 23:13] 💐: 1 தெசலோனிக்கேயா;, Chapter 4

16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

[6/12, 1:56 PM] Stanley Ayya VT: சகோதரரே,

நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது. அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

1 கொரிந்தியர் 15 :50

[6/12, 1:59 PM] Stanley Ayya VT: 👆ஒரு வேலை
மாம்சமும் இரத்தமுமற்ற பிம்ப உருவமாக செல்ல வாய்ப்புள்ளதோ?

[6/12, 2:01 PM] Stanley Ayya VT: ஆனால்

ஆக்கினையில் வலியும் வேதனையும் உண்டு.
மாம்சம் உண்டு
மரணம் இல்லை.

[6/12, 2:02 PM] Levi Bensam Pastor VT: எபேசியர் 4:22-24
[22]அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற *பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,*👇👇👇👇👇👇👇
[23]உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
[24] *மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட 👉👉👉👉👉புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.*

[6/12, 2:04 PM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 3:10-11
[10] *தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட 👉👉👉👉புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.*👇👇👇👇👇👇👇
[11]அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.

[6/12, 2:05 PM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 4:15-16
[15]தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாகியிருக்கிறது.
[16]ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; *எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.*👍👍👍👍👍

[6/12, 2:10 PM] Elango: ஆவிக்குரிய சரீரம் உண்டல்லவா

1 கொரிந்தியர் 15:38,40-41
[38]அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
[40]வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
[41]சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.

[6/12, 2:10 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 6:4-8
[4]மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
[5]ஆதலால் *அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால்,🤝🤝🤝👍👍👍👍 அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.*
[6]நாம் *இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.*👍👍👍👍👍👍👍👍
[7]மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
[8]ஆகையால் *கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.*✅✅✅✅✅✅

[6/12, 2:11 PM] Elango: 👍👍👌

1 கொரிந்தியர் 15:42-44
[42]மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
[43]கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
[44]ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, *ஆவிக்குரிய சரீரமுமுண்டு.*

[6/12, 2:18 PM] Levi Bensam Pastor VT: *பிண்டமாக அல்ல, ஆவிக்குரிய சரீரம்*😄🙏

[6/12, 3:51 PM] Levi Bensam Pastor VT: 2 *அங்கே அவர்கள்முன் அவர் 👉👉தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.*

மத்தேயு நற்செய்தி 17 :2

[6/12, 3:53 PM] Levi Bensam Pastor VT: 1 சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்; *கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.*

உரோமையர் 12 :1
2 இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, *உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக!* அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

உரோமையர் 12 :2

[6/12, 3:57 PM] Elango: சுத்த தமிழ்... ✅👌

[6/12, 4:00 PM] Levi Bensam Pastor VT: *சுத்த தமிழில் படித்தும், விக்கிரகாராத்தை ஆராதிக்கிறார்களே*

[6/12, 4:06 PM] Antony Ayya VT: இது என்னப்பா உரோமை யர்
🤔 புரியவில்லை

[6/12, 4:06 PM] Ebi Kannan Pastor VT: ரோமர் இப்ப புரியுதா😂😂

[6/12, 4:07 PM] Antony Ayya VT: புரியுது😆😆🤣

[6/12, 4:37 PM] Elango: பிரசங்கி 12:7
[7] *இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி,*

 *ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும்* போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

சரீரம் மண்ணுக்கு திரும்பும்.
ஆவி தேவனிடத்திற்க்கு திரும்பும்.
ஆத்துமாவும் தேவனிடத்திற்க்கு திரும்பும்.

நியாத்தீர்ப்பில் நிற்க்கப்போவது ஆத்துமா தானே? அல்லது ஆவியா?

ஆண்டவர் சிலுவையில் தன் ஆவியை ஒப்புக்கொடுத்தாரா அல்லது ஆத்துமாவை ஒப்புக்கொடுத்தாரா?

Original text பார்த்தால் தெரிந்துவிடும்.🤔🤔

[6/12, 4:55 PM] Antony Ayya VT: மத்தேயு, Chapter 27

50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
[6/12, 6:02 PM] Elango: ✨ *இன்றைய வேத தியானம் - 12/06/2017* ✨

👉ஆண்டவர் இயேசு,  *மலையின்மேல் சீஷர்களுக்கு முன்பாக, மறுரூபமானதன் முக்கியத்துவம் / அர்த்தம் என்ன❓*மத்தேயு 17:1-3

👉இயேசுகிறிஸ்துவோடு மோசேயும், எலியாவும் ஏன் காணப்பட்டார்கள்அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள்

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/12, 7:23 PM] Satya Dass VT: God is fullfilling the Prophecy.

[6/12, 7:23 PM] Satya Dass VT: Moses.  __ Law                      & Elijah.  _Prophecy          this two things are fulfilled

[6/12, 8:12 PM] Stanley Ayya VT: தாய் மொழி விளக்கம் உயிரோட்டமே ..👍

நன்றி🙏🏻 ஐயா

[6/12, 8:14 PM] Stanley Ayya VT: நானும் பொதுமறையில் முயலுகிறேன்.

உங்கள் ஒலிபதிவை போல் தமிழ் மொழி பதிவும் ஆத்ம நிறைவே
.
[6/12, 8:33 PM] Stanley Ayya VT: நான் கத்தோலிக்க பின்னனியில் இருந்து வந்தவன் ஐயா.

1. ஆலயத்தில் சுருபம்.
2.அன்னை மரியாள் வணக்கம்.
3.புனிதர்களையும் வணங்குதல்.

போன்ற அடிப்படை தவறுகளால் தேவனை துக்கபடுத்தினாலும்

தொடர்ந்து அவர்களுடன் ஆராதனையில் பங்கு பெற்று பாருங்கள்.
மிகவும் தாழ்மை அன்பு மென்மையான கட்டுபாடுகள் புரியும்.

நான் வெளியேறி 23 ஆண்டுகள் ஆனாலும் அங்கே கிடைத்த அமைதியான பக்தி குறித்த ஏக்கம் என்னிடத்தில் உண்டு.

Rc யின் மனநிலை தெய்வ பயமும் தேவனுக்கு முன்பான தாழ்மையுமே

வெளியில் இருந்து பார்ந்த்தால் தவறுகளே தெரியும்.

தொடர்ந்து அலயம் சென்று பார்த்தால் அதன் சிறப்பு தன்மை புரியும்.

ரோமன் கத்தோலிக்கம் இந்திய தேசியத்தில் ஆதிகமாக ஊன்றியதன் காரணம் அவர்களின் இரக்கமும் அன்புமே.

ஆங்கிலேயருக்கு முன்னே ஐரோப்பாவில் இருந்து இறை அன்பை பரப்பியவர்கள்.

ஆங்கிலேயர் பலமானவராக இந்தியாவை ஆண்டும் அவர்களின் Protestant கள் ஆதிக்கம் செலுத்த இயலவில்லை.

போக்கு வரத்து வசதிகள் இல்லாத பல இடங்களில் அவர்கள் தியாகத்தோடு உள் நுலைந்து ஆலயம் பள்ளிகள் மருத்துவமனைகள் அமைத்து இறைபணியுடன் சமூகபணியையும் சாதித்தபடியினால் அவர்கள் வழி கிறிஸ்தவர்கள் அதிகமானார்கள்.

பின் நாளில்
சுருப ஆராதனைபோல் சாதியம் நுலைந்து கெடுத்துபோட்டது

[6/12, 8:45 PM] Darvin Sekar Brother VT: 16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான். அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது. கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.

2 பேதுரு 3 :16
பவுல் சொன்ன காரியங்களில் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறவைகள் எவைகள்? இவைகளைக் குறித்து தியானிக்கலாம்

[6/12, 10:40 PM] Darvin Sekar Brother VT: ✨ *இன்றைய வேத தியானம் - 12/06/2017* ✨

👉ஆண்டவர் இயேசு,  *மலையின்மேல் சீஷர்களுக்கு முன்பாக, மறுரூபமானதன் முக்கியத்துவம் / அர்த்தம் என்ன❓*மத்தேயு 17:1-3

👉இயேசுகிறிஸ்துவோடு மோசேயும், எலியாவும் ஏன் காணப்பட்டார்கள்அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள்

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

Post a Comment

0 Comments