Type Here to Get Search Results !

இயேசுவின் குணாதிசயங்கள் ( குணங்கள், பண்புகள் ) என்னென்ன❓

[6/20, 9:57 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 20/06/2017* ✝

1⃣ *இயேசுவின் குணாதிசயங்கள் ( குணங்கள், பண்புகள் ) என்னென்ன❓*

2⃣பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னை வெளிப்படுத்திய குணாதிசயத்திற்க்கும், புதிய ஏற்ப்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் குணாதிசங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/20, 10:07 AM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 3: 14
*அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன்*👍👍👍👍👍👍 என்று மோசேயுடனே சொல்லி, *இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார்* என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

Exodus 3: 14

And God said unto Moses, *I AM THAT I AM:* and he said, Thus shalt thou say unto the children of Israel, I AM hath sent me unto you.

[6/20, 10:08 AM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 3: 15
மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; *என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்*.

Exodus 3: 15
And God said moreover unto Moses, Thus shalt thou say unto the children of Israel, The LORD God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath sent me unto you: *this is my name for ever, and this is my memorial unto all generations*.

[6/20, 10:08 AM] Elango: எபேசியர் 2:12-13
[12]

அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும்,⛔🚫

 இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும்,

வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும்,

 நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.

[13] *முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள்*✝✝✝✝✝✝✝✝✝ கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

*இயேசுகிறிஸ்துவின் மூலமாக நாம் கிருபை பெற்றிருக்கிறோம்*💛💛💛💛

[6/20, 10:10 AM] Levi Bensam Pastor VT: எண்ணாகமம் 23: 19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; *மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல;* அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

Numbers 23: 19
God is not a man, that he should lie; neither the son of man, that he should repent: hath he said, and shall he not do it? or hath he spoken, and shall he not make it good?
[6/20, 10:11 AM] Elango: *பழைய ஏற்ப்பாட்டில் தேவன் வெளிப்பட்ட விதம்* 👇👇👇😩😫😫😫😫😫😫


எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:18-24
[18]அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,

[19]எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.
[20]ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் *சகிக்கமாட்டாதிருந்தார்கள்.*😧😰😰😰

[21]மோசேயும்: *நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.*😲😲😲😧😧😰😨😨😨

[6/20, 10:12 AM] Elango: *புதிய ஏற்ப்பாட்டில் தேவன் கிருபையாய், இரக்கமாய் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வெளிப்பட்ட தேவன்*💛💛💛👇👇👇


[22]நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம்பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,
[23] *பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,*👬👬👭👭👭👫👫👫

[24]புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்.

[6/20, 10:14 AM] Levi Bensam Pastor VT: யோவான் 1:9-12
[9]உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
[10]அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
[11] *அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை*😭😭😭😭😭😭😭😭😭😭.
[12]அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

[6/20, 10:15 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 5:6-10
[6]அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
[7]நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
[8]நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
[9]இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
[10] *நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.*👍👍👍👍👍👍

[6/20, 10:17 AM] Elango: *ஆண்டவர் இயேசுவை மட்டும் எனக்காக உங்களுக்காக பிதா அனுப்பாதிருந்தால், நம்முடைய பாவத்தால் நாம் அழுகி நாறியிருப்போம்*😰😰😰😰😭😭😭

யோவான் 1:17-18
[17]எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, *கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.*

[18]தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

*காணக்கூடாத, அதரிசமானதேவனின் காணக்கூடிய தரிசமாகக்கூடிய ரூபம் - ஆண்டவர் இயேசு*

[6/20, 10:18 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 8:32
[32] *தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?*🙏🙏🙏🙏🙏🙏

[6/20, 10:20 AM] Elango: ஆமேன்🙏🙏🙏

யாத்திராகமம் 20:6
[6] *என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.*

[6/20, 10:31 AM] Elango: உபாகமம் 23:17
[17] *இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது;*🤔🤔🤔🤔🤔🤔👇👇👇👇👇 இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.

பழைய ஏற்ப்பாட்டில் தேவன் கொடுத்த கட்டளை👆🏼👆🏼👆🏼

[6/20, 10:33 AM] Elango: *புதிய ஏற்ப்பாட்டில் கிருபையாக வெளிப்பட்ட தேவன்*👇👇👇💛💛💛

யோவான் 8:3,5,7,11-12
[3]அப்பொழுது *விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:*👆🏼👆🏼👇👇👇

[5]இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.

[7]அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்துபார்த்து: *உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்* 🤥🤥🤥🤥🤔🤔🤔🙄🙄🙄என்று சொல்லி,

[11]அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; *நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே*⚠⚠⚠⚠⚠⚠⚠⚠ என்றார்.

[12]மறுபடியும் இயேசு *ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்* என்றார்.

[6/20, 11:19 AM] Levi Bensam Pastor VT: *நம்ம யோனா தாத்தாவின் குமுறல்*👇👇👇👇👇👇👇👇 யோனா 4:1-3
[1]யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; *அவன் கடுங்கோபங்கொண்டு,*👇 👇 👇 👇 👇
[2] *கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.*
[3]இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

[6/20, 11:57 AM] Elango: உண்மையிலேயே அந்த வரியை படிக்கும்போது ஒரு பாசம் உரிமை தெரிகிறது.

யோனா 4:9
[9]அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: *நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான்*என்றான்.

[6/20, 12:05 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 20/06/2017* ✝

1⃣ *இயேசுவின் குணாதிசயங்கள் ( குணங்கள், பண்புகள் ) என்னென்ன❓*

2⃣பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னை வெளிப்படுத்திய குணாதிசயத்திற்க்கும், புதிய ஏற்ப்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் குணாதிசங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/20, 12:15 PM] Jeyaseelan Bro VT: பழைய ஏற்பாட்டில் தேவன் கோபமாகவும், புதிய ஏற்பாட்டில் அன்பாகவும் இருப்பதேன்?

பதில்:
அநேகர்களுக்கு பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது தேவன் கோபமானவர் என்றும், புதிய ஏற்பாட்டில் அன்பானவர் என்றும் எண்ணம் தோன்றுகிறது. உண்மையில் அப்படி அல்ல. (Just a wrong perception).

இந்தக் கேள்வியானது அநேக வருடங்களாக கிறிஸ்தவர்களின் மனதிலே தோன்றியது. சபையின் தந்தையர்களின் காலத்தில் "மார்சியன்(Marcion)" என்பவர் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டி பழைய ஏற்பாட்டிலுள்ள தேவன் என்பவர், இயேசு குறிப்பிட்ட பிதாவை விட குறைவாக இருந்தார் என்று சொல்லி, புதிய ஏற்பாட்டில் எங்கெல்லாம் சிருஷ்டிகர் என்பவர் தீமையானவர் என்ற தோற்றம் எழுகிறதோ அதையெல்லாம் நீக்கிப்போடவேண்டும் என்றார். கடைசியாக அவருக்கு லூக்கா எழுதின நிருபத்தின் சுருக்கம் ஒன்றே மிஞ்சியது. ஆனால் சபைகள் எல்லாம் மார்சியனின் மாறுபாடான உபதேசத்தை ஒதுக்கித்தள்ளியும், எல்லா ஆகமங்களும் ஒரே தேவனால் ஏவப்பட்டன (inspired). எனவே எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் முடிவு தெரிவித்தன.

உண்மை என்னவெனில் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தேவனின் பிம்பங்களுக்கும் (images) புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தேவனின் பிம்பங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. யோவான் 1:18ல் சொல்லும்போது மிகவும் சரியாக "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை; பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்." என்கிறார். குமாரனாகிய இயேசுவில் காணப்பட்ட சுபாவங்கள்/குணங்கள்தான் பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனின் சுபாவம். பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய கிறிஸ்துவுக்கும் அன்புகூரும் அளவில் மாற்றமில்லை. பிதாவைவிட குமாரன் அதிக கண்டிப்பாயிருப்பதுமில்லை. புதிய ஏற்பாட்டிலுள்ள புத்தகங்களை எழுதிவர்கள் அனைவரும் பழைய, புதிய ஏற்பாட்டுக்கும் ஒரேபோன்ற தொடர்ச்சியுள்ளது என்றும், பழைய ஏற்பாட்டின் தேவனுக்கும், கிறிஸ்து இயேசுவிடம் கொண்ட அனுபவத்திற்கும் ஒரே போன்றது என்று கண்டனர்.

இதைக்குறித்து மூன்று காரியங்களை விரிவாக பார்க்கலாம்:
[1] பழைய ஏற்பாட்டில் அன்பு இருக்கின்றது.
[2] புதிய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு இருக்கின்றது.
[3] நியாயத்தீர்ப்பில் வித்தியாசம் என்பது காலத்துக்குள்ளும், காலத்தின் முடிவிலும்.

[1] பழைய ஏற்பாட்டில் அன்பு இருக்கின்றது:
தேவன் தன்னைப்பற்றி தான் யார் என்று சொல்லும்போது முதலில் தான் ஒரு நியாயத்தீர்ப்பு செய்யும் தேவன் என்று சொல்லாமல், தான் அன்புள்ளவர் என்று சொல்லுகிறார். யாத்திராகமம் 34:6,7 "கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்."
இப்படித்தான் தன்னைப்பற்றி தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் அப்படிப்பட்டவரே! நன்றாக கவனியுங்கள் அந்த வசனத்தில், முதலில்: இரக்கம், கிருபை, அன்பு, உண்மையுள்ளவர் மற்றும் மன்னிக்கிறவர் என்று சொல்லி, பின்புதான்: தேவன் அன்பாயிருக்கிறார் என்று சொல்லி அதை தங்களுக்கு சாதமாக்கிகொண்டு அக்கிரமம் செய்பவர்களை நான் குற்றவாளியாக தீர்ப்பேன் என்று சொல்கிறார்.அப்படிப்பட்டவர்களை நியாயம்தீர்ப்பார்.

ஆதாம் பாவம் செய்தபின்பும் அன்பாகவே தேவன் தோட்டத்திலே வந்து உலாவுகின்றார். அங்கே அவர்கள் மனந்திரும்பவில்லை என்றாலும், அவர்களுக்கு தோலினால் உடைசெய்து கொடுக்கிறார். பழைய ஏற்பாடு முழுவதிலும், அவர் இஸ்ரவேல் ஜனங்களை அன்பின் நிமித்தமே தெரிந்துகொண்டார் என்று சொல்கிறார்; அவர்கள் அதற்கு தகுதியுடையவர்கள் என்பதால் அல்ல. அவர்கள் தகுதி அற்றவர்கள். எப்பொழுதெல்லாம் இஸ்ரவேல் ஜனங்கள் முரட்டாட்டம் செய்தனரோ அப்பொதெல்லாம் தம்முடைய தீர்க்கதரிசிகளை அவர் அனுப்பி எச்சரித்தார். அவர்கள் அதற்கு கீழ்ப்படியாத பட்சத்தில் அவர்கள் ஒடுக்கப்படும்படி விடுகிறார். அவர்கள் தேவனை நோக்கி கூப்பிடும்போது இரக்கமுள்ளவராக அவர்களை விடுவிக்கிறார்! அப்படியாக அவர்கள் கஷ்டப்படும்போதுகூட ஓசியா 11:8ல் "எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள்ளே திரும்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது." என்று தேவன் சொல்கிறார். ஒருபுறம் அவருடைய நீதி நியாத்தீர்ப்பையும், மறுபுறம் அவருடைய அன்பின் இருதயம் தம்முடைய ஜனங்களுக்காக உடைந்தும், அவர்கள் கஷ்டத்தை விரும்பாமலும் இருக்கிறது.

ஓசியாவிலே சொன்னதுபோல் அவர் விபச்சாரிகளுக்கு கணவர். இங்கே தேவனை விட்டு வேறுதேவர்களை பின்பற்றுதல் விபச்சாரம் செய்வதுபோல் ஆகும். இருப்பினும் அவர் அவர்களை தம்முடைய கரத்திலே அணைக்கும்படிதான் விரும்புகிறார்; அதே சமயம் அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் விடுவதும் இல்லை! அவருடைய நோக்கமும் திட்டமும் வெறும் நியாயத்தீர்ப்பு அல்ல; ஆனால் அவர்களுக்கு கொடுக்கும் நியாத்தீர்ப்பினால் அவர்களைத் தம்மிடம் ஒரு குடும்பத்தைப்போல மீட்கும்படி அப்படிச் செய்கிறார்.

இப்படி அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டும் பாரபட்சமாக செய்யாமல், யோனா-வில் வாசிப்பதுபோல் நினிவே பட்டணத்தாருக்கும் இரக்கமாயிருந்தார் என்று வாசிக்கிறோமே. யோனா சொல்லும்போது: இதோ நான் தர்ஷீசில் இருக்கும்போதே நான் சொல்லவில்லையா? நீர் கிருபையும், இரக்கமும், அன்புமிகுந்தவர் என்றும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற தேவன் என்றும் அறிவேன். யோனாவுக்கு தேவன் இரக்கமுள்ளவராக இருந்தது பிடிக்கவில்லை. நாற்பது நாளில் அழியும் என்று சொல்வதில் மகிழ்ச்சி. ஆனால் நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினபோது தேவன் மனதிரங்கி சீரியா தேசத்தார்களாகிய அவர்களை மன்னித்தது யோனாவுக்கு பிடிக்கவில்லை. நீர் ரொம்பத்தான் அன்பாயிருக்கிறீர், ரொம்பவே மன்னிக்கிறீர், என்று ஒரு குற்றச்சாட்டு. யோனாவும், ஓசியாவும் தேவன் நியாயத்தீர்ப்பு செய்யும் நோக்கில் இல்லை, மன்னிக்கும் செயலில் இருக்கிறார் என்று அறிவுறுத்துகின்றனர். மனம் திரும்பாதவர்களை மன்னிக்கமுடியாது. எனவே அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து எச்சரிக்கிறார். அந்த தீர்க்கதரிசிகளை கொலைசெய்தால், மேலும் சில தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். அவர்கள் மனந்திரும்பினால் அந்த நியாயத்தீர்ப்பானது அவர்கள்மேல் வராமற்போகும். மனந்திரும்பாவிடில் நியாத்தீர்ப்பை அவர்கள்மேல் அனுப்புவதை தேவன் விரும்பாவிட்டாலும், அவர் நியாயத்தீர்ப்பை அனுப்பியே ஆகவேண்டும். அநேகமுறை அப்படிப்பட்ட கஷ்டத்திலும் அவர்களை மீட்டுக்கொள்ள மீண்டும் ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்படுகிறது. ஒரு "நல்ல" பெற்றோர், தவறு செய்யும் தன் பிள்ளையை ஒரு தண்டனை கொடுத்து திருத்த முயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை.

[2] புதிய ஏற்பாட்டிலும் நியாயத்தீர்ப்பு இருக்கின்றது:
புதிய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு((judgment in NIV) என்னும் வார்த்தை 108 முறை வருகின்றது. அவைகள் எல்லாவற்றிலும் அதிகமாக இயேசுதான் நியாயத்தீர்ப்பைக் குறித்துச் சொல்கிறார். அவர் சொல்லும்போது: "உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்(மத் 5:29,30)".
மத்தேயு 7:13-29; 24:45; 25:46 ஆகிய வசனங்களில் எச்சரிக்கை கொடுத்தவரும் இயேசுதான். புதிய ஏற்பாட்டில் மற்றெல்லாரைக்காட்டிலும் அதிகமாக நியாயத்தீர்ப்பைக்குறித்து பேசியது இயேசுதான். வெளிப்படுத்தின விசேஷம் யோவானுக்கு இயேசுவால் கொடுக்கப்பட்டது. பலவிதமான நியாயத்தீர்ப்புகள் குறித்து புதிய ஏற்பாட்டில் உள்ளன. தன்னைத்தானே நியாயம்தீர்ப்பது(யோவான் 9:39; 12:47-49), தேவனின் நியாயத்தீர்ப்பு( யோவான் 8:50), தனிப்பட்டவர்களின் நியாயத்தீர்ப்பு( அப் 12:23) மற்றும் கடைசி நியாயத்தீர்ப்பு (யோவான் 5:22,27) என உள்ளன. மனிதர் செய்யும் சில காரியங்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது (1 கொரி 6:9-10; கலா 5:19-21) மேலும் விரிவான நியாயத்தீர்ப்பின் காட்சிகள் (வெளி 20:11-15). இங்கே எல்லாம் நியாயத்தீர்ப்பைக்குறித்தும், அவைகளில் பல இயேசுவை உள்ளடக்கியும் உள்ளது. இயேசு இந்தவிஷயத்தில் பிதாவைப்போலதான்.

புதிய ஏற்பாடு கிருபை, அன்பு குறித்து போதிக்கின்றது; ஆனால் அன்பையும் கிருபையையும் அநேகர் புறக்கணிக்கக்கூடும். புதிய ஏற்பாடு கடைசி நியாயத்தீர்ப்புநாள் குறித்தும் சொல்லுகிறது. புதிய ஏற்பாட்டின்படி ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்புக்கு பாத்திரர்தான், ஆனால் தேவன் இப்போது எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என்று கிருபைமிகுந்தவராய் இருக்கிறார். அந்த கிருபையை ஜனங்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டால், மிகவும் பயங்கரமான முடிவு அவர்களுக்காக உண்டு. எனவே இங்கே பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டதுபோலவே, புதிய ஏற்பாட்டிலும் காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் எச்சரித்தனர். புதிய ஏற்பாட்டில் தேவன் அப்போஸ்தலர்கள், போதகர்கள், சுவிசேஷகர் என்று அனுப்பி ஜனங்கள் மனந்திரும்பவேண்டும் என்றும் வரவிருக்கும் நியாயத்தீர்ப்புகுறித்தும் சொல்கிறார். எனவே இந்த விஷயத்தில் இரு ஏற்பாடுகளிலும் ஒற்றுமைதான் இருக்கின்றது.

[3] நியாயத்தீர்ப்பில் வித்தியாசம்:
பழைய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு [அவர்கள்] காலத்துக்குள் நடந்தது. இஸ்ரவேலர் பாவஞ்செய்தபோது அவர்கள் மரித்தெழுந்தபின் நரகத்துக்கு போவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. அவர்கள் மீதியானியராலும், அசீரியராலும் ஒடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். எனவே பழைய ஏற்பாட்டில் பல நியாயத்தீர்ப்புகளைக் காணலாம். நியாயாதிபதிகளின் புஸ்தகத்திலும், கானானியர், மோவாபியர், அம்மோனியர் மற்றும் பெலிஸ்தியர்கள் எல்லாரும் இஸ்ரவேலை தண்டித்தனர். பிற்காலத்தில் எகிப்தியர், அரேமியர, அசீரியர் மற்றும் பாபிலோனியர்கள் என்று வந்து ஒடுக்கினர். இவை எல்லாம் தாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்தேறின. நமக்கு தீர்க்கதரிசி சொல்லும் பஞ்சம், வாதைகள், ராணுவம் சூழ்ந்துகொள்ளும் என்னும் எச்சரிக்கைகளை படிக்கும்போது மகிழ்வற்ற செய்தியாயிருக்கலாம், ஆனால் அவை நிஜவாழ்வில் பின்வரும் சம்பவங்கள் (இன்று சில இடங்களில் இருப்பதுபோல). மேலும் மனிதர்கள் மனந்திரும்பவேண்டும் என்று இவைகளை அனுமதிக்கிறார்; அவைகளில் பிரியப்படுவதில்லை.

பழைய ஏற்பாட்டில் இறந்தபின்பு வாழ்க்கையைக்குறித்து கொஞ்சம்தான் வெளிப்படுத்தப்பட்டது, அதுவும் பழைய ஏற்பாட்டின் கடைசி கட்டத்தில். ஜனங்கள் மரணம் எனபதை ஷீயோல் (Sheol) என்னும் மறைவான உலகிற்கு செல்வது என்றும் அங்கே தேவனைத் துதிப்பது என்று எல்லாம் இல்லை என்றும், கொஞ்சம் வாழ்வு இருக்கும் என்று எண்ணினர். அவர்களைப் பொறுத்தமட்டில் முதிர்வயதில் மரிப்பதும், பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பதும், அந்த பிள்ளைகள் தங்கள் பேரையும் புகழையும் கட்டிகாக்கவேண்டும் என்பதும் நம்பிக்கையாக இருந்தது; சிறுவயதில் இறப்பது நியாயத்தீர்ப்பென்று எண்ணினர். ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவன் எதிர்காலத்தைக்குறித்து அதிகமாக சொல்லியுள்ளார். எனவே நியாயத்தீர்ப்பு என்பது காலத்தின் கடைசியில் என்றும், மரித்தோர் உயிர்தெழுதல், நித்தியஜீவன், நரகம் எல்லாம் காலத்தின் முடிவில். காலத்தின் முடிவு என்பது கிறிஸ்துவின் வருகையில் இந்த வரலாறு முடிந்துபோகும்.

எனவே, பழைய ஏற்பாட்டில் தேவன் நியாயம்தீர்க்கும் தேவனாகவும், புதிய ஏற்பாட்டில் அன்புள்ள தேவனாகவும் இருக்கிறாரா? இல்லை. இரு ஏற்பாடுகளிலும் தேவன் அன்பாயிருக்கிறார் என்றும் அவரே நீதியுள்ள தேவனாக இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இனி வரவிருக்கும் பயங்காரமான நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கொள்ள, தேவன் மனிதர்களுக்கு தன்னுடைய அன்பையும், மன்னிப்பையும் தருகிறார்.

http://tamilbibleqanda.blogspot.in/2011/01/68.html?m=1

[6/20, 12:23 PM] Elango: பழைய ஏற்ப்பாட்டில் பொதுவாக அநேக இடத்தில் கோபமாக தன்னை வெளிப்படுத்துவதை போல நமக்கு தெரியும்.😡😡😠😠

ஆனால் தேவன் அன்பாகவும் இரக்கமாகவும் இருப்பதை அவர்களின் கீழ்ப்படியாமையினாலேயே அவர்களால் அறிந்துக்கொள்ளமுடியவில்லை.🙃🙃🙃

2 சாமுவேல் 22:26-27
[26] *தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்.*❤❤❤❤

[27]புனிதனுக்கு நீர் புனிதராகவும், *மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.*🤥🤥🤔🤔🤔🤔

[6/20, 12:24 PM] Joseph VT: 1⃣பழைய ஏற்பாடு :
        👉  பாவம் செய்தால் உடனே தண்டனை கிடைத்தது...

2⃣ புதிய ஏற்பாடு:
                
        👉பாவம் செய்தால்
மன்னிப்பு கிடைத்தது...

[6/20, 12:34 PM] Elango: 2⃣பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னை வெளிப்படுத்திய குணாதிசயத்திற்க்கும், புதிய ஏற்ப்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் குணாதிசங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன

பழைய ஏற்ப்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்தால் தேவன் மகா கோபம் படுகிறார்.

புதிய ஏற்ப்பாட்டிலும் இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் பாவத்தில் வாழ்ந்துக்கொண்டிருந்தால் மனந்திரும்பாமல் இருந்தால் இயேசு தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.😡😡😡😡😠😠👇👇👇👇

வெளிப்படுத்தின விசேஷம் 2:21-23
[21] *அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.*🙄🙄🤥🤥🤔🤔😡😡😡👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

[22] இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
[23] *அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.*⚠⚠⚠⚠🙄🙄🙄🙄🤥🤥🤥🤥

[6/20, 12:47 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 20/06/2017* ✝

1⃣ *இயேசுவின் குணாதிசயங்கள் ( குணங்கள், பண்புகள் ) என்னென்ன❓*

2⃣பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னை வெளிப்படுத்திய குணாதிசயத்திற்க்கும், புதிய ஏற்ப்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் குணாதிசங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/20, 12:51 PM] Jeyaseelan Bro VT: *தேவனின் குணாதிசயங்கள்*

 தேவன் மூன்று நபர்களாய் இருந்தபொதிலும், அவர்கள் மூவரும் ஒரே தன்மையுடையவர்களும், அல்லது குணாதிசயங்களைக் கொண்டவர்களாய் இருக்கிறார்கள்.

  *ஏகாதிபதி:*

பிதா (எபேசியர் 1:11 , cf  ஏசாயா 40:8,  மத்தேயு 6:10,  எபிரெயர் 10:7, 9).
குமாரன் (யோவான் 5:21, வெளிப்படுத்தல் 19:16).
பரிசுத்த ஆவியானவர் (1 கொரிந்தியர் 12:11 , cf  எபிரெயர்  2:4).

 *நீதியுள்ளவர்:*

பிதா (யோவான் 17:25)
குமாரன் (லூக்கா 1:35, எபிரெயர் 7:26, 2 கொரிந்தியர்  5:21).
பரிசுத்த ஆவியானவர்

  *நியாதிபதி*

பிதா (யோபு 37:23, cf  8:3)
குமாரன் (அப்போஸ்தலர் 3:14, யோவான் 5:22, வெளிப்படுத்தல் 19:11).
பரிசுத்த ஆவியானவர் (நெகேமியா 9:20)

 *அன்புள்ளவர்:*

பிதா (யோவான் 3:16)
குமாரன்  (எபேசியர் 5:25, 1 யோவான்  3:16)
பரிசுத்த ஆவியானவர் (யோவான்  16:7-11, 1கொரிந்தியர் 2:10)

 *நித்திய ஜீவன்:*

பிதா (யோவான் 5:26)
குமாரன் (மீகா 5:2, cf  யோவான் 1:1-2, 1 யோவான் 5:11).
பரிசுத்த ஆவியானவர் (ஏசாயா 48:16)

 *எல்லாம் அறிந்தவர்:*

பிதா (எபிரெயர் 4:13, cf  மத்தேயு 11:27, 1 பேதுரு 1:2)
குமாரன் ( யோவான் 18:4, cf  மத்தேயு  9:4, யோவான்  2:25, 1 கொரிந்தியர்  4:5)
பரிசுத்த ஆவியானவர்  ( ஏசாயா 1:2, cf 1  கொரிந்தியர்  2:11).

  *எங்கும் இருப்பவர்:*

பிதா  (2 நாளாகமம் 2:6)
குமாரன் ( மத்தேயு 8:20, cf  எபேசியர் 1:23)
பரிசுத்த ஆவியானவர்  (சங்கீதம் 139:7)

  *சர்வ வல்லமையுள்ளவர்:*

பிதா (மாற்கு 14:36, cf 1 பேதுரு 1:5)
குமாரன் (எபிரெயர் 1:3, cf  மத்தேயு 24:30, 2 கொரிந்தியர்  12:9, பிலிப்பியர் 3:21)
பரிசுத்த ஆவியானவர் ( யோவான் 14:16)

 *மாறாதவர*

பிதா (எபிரெயர் 6:17, சங்கீதம் 33:11)
குமாரன்  (எபிரெயர் 13:8)
பரிசுத்த ஆவியானவர் (யோவான் 14:16)

 *சத்தியம்:*

பிதா (யோவான்7:28, யோவான் 17:3)
குமாரன் (1 யோவான்  5:20, cf  யோவான் 1:14, 14:6, வெளிப்படுத்தல் 19:11)
பரிசுத்த ஆவியானவர் (1 யோவான்  5:6, cf  யோவான்  14:17, 15:26, 16:13)
[6/20, 12:52 PM] Tamilmani Ayya VT: *கர்த்தரின் ஏழு குணங்கள் :*

1. இரக்கமும்

2. கிருபையும்

3. நீடிய சாந்தமும்,

4. மகா தயையும்

5. சத்தியமுமுள்ள தேவன்

6. ஏழு ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்

7. குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்
( யாத் 34: 6- 7)
[6/20, 1:21 PM] Elango: புதிய ஏற்ப்பாட்டில் இயேசு தாழ்மையாக கால்களை கழுவியது போல, பழைய ஏற்ப்பாட்டில் தேவனின் தாழ்மையாக வெளிப்பட்டிருக்கிறாரா?

வசனம் இருக்கிறதா

[6/20, 1:22 PM] Aji VT: If anybody know how to related new testimony and old testimony?

[6/20, 1:23 PM] Elango: மத்தேயு 11:29
[29] *நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்;* என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னை சாந்தமுள்ளவராக தாழ்மையுள்ளவராக வெளிப்படுத்தியுள்ளாரா?

[6/20, 1:27 PM] Sam Rakesh VT: Through Jesus Christ....In old testament all are given as foreshadows for Christ..Old testament speaks about law which insist man needs grace..In new testament grace appeared through Jesus Christ.in both testament salvation is by grace through faith

[6/20, 1:32 PM] Elango: புதிய ஏற்ப்பாடு என்பது பழைய ஏற்ப்பாட்டின் நிறைவேறுதல்...

இன்னும் நிறைய நிறைவேற்றப்பட வேண்டியது இருக்கிறது.

பழைய ஏற்ப்பாடு நிழல்
புதிய ஏற்ப்பாடு நிஜம்

[6/20, 1:54 PM] Elango: பழைய ஏற்ப்பாட்டில் மனத்தாழ்மையாக தேவன் வெளிப்பட்டதாக அவருடைய குணாதிசயங்கள் ஏதும் இருந்ததாக இல்லை

[6/20, 1:54 PM] Elango: சகரியா 9:9
[9]சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, *உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும்,✅❤ கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.*

[6/20, 1:57 PM] Tamilmani Ayya VT: *தேவனின் என்றும் மாறாத குணம்*

. . தேவன்தான் புதிய ஏற்பாட்டின் தேவன். உபாகமம் 6: 5 ம் லேவி 19: 18 ம் என்ன சொல்லுகிறது பாருங்கள்,
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூறுவாயாக.
உபாகமம் 6: 5.

லேவியராகமம் 19: 18
உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து அதை கற்பனையாக கூறுகிறார். இது ஐந்து ஆகமங்களை இணைத்து ஒன்றாக்கி விடுகிறது.

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது.
லூக்கா 10: 27

இதை பவுலடிகளார் பிறனிடத்தில் அன்பு கூறுகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான் என்கிறார். தேவன் அன்றும் இன்றும் அன்பாகவே இருக்கிறார்தேவன் அன்பானவர். பரலோகத்தின் தரிசனங்களில் மணிக்கணக்கில் கண்டு கேட்டு லயித்தவர்கர்கள்  சொல்லுகிறது
"இயேசு கிறிஸ்துவின் அன்பில் நாங்கள் நிலைத்துப்போனோம், அடுத்தது பரலோக காட்சிகளை விவரிக்கின்றனர். தேவனிடத்திலே நீதி கர்ஜிக்கிரதையும் அதனூடே சாந்தம் கலந்த அன்பான குரலை கேட்டு வியந்து நோக்குகிறார்கள்.
பூமியிலும் அப்படியே வாழ்ந்தும் காண்பித்தார்.

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள், பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
ரோமர் 13: 8

பரலோகத்திலே ஒரே ஒரு முறை நியாயத்தீர்ப்பு அடைகிறோம். மரிப்பதும் ஒரு முறை. பரலோக அனுபவத்தில் அவர்கள் கண்ட ஒரு நியாயத்தீர்ப்பு இடத்தில் வரிசையாக விசாரணைக்கார தேவ தூதர் தன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு இரண்டு கேள்விகளை கேட்கிறார்,

*"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடு அன்பு கூர்ந்தாயா?"*

*"அயலானிடத்தில் அன்பு கூர்ந்தாயா?"*

அன்று சொல்லியதைத்தான் இன்றும் கேட்கிறார். நீ என்று பிறந்தாலும் உன்னை அதையேதான் செய்ய சொல்லுவார். கேட்கவும் செய்வார். அவரின் குணம் மாறாது.

[6/20, 2:03 PM] Elango: புதிய ஏற்ப்பாட்டில் அநேக கற்பனைகள் மாற்றப்பட்டிருப்பதை போல் நமக்கு தோன்றினாலும், அவைகள் இன்னும் மெறுகேற்றப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மத்தேயு 5:17-19
[17]நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; *அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.*

[18]வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[19] *ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.*

[6/20, 2:12 PM] Christopher-jeevakumar Pastor VT: II பேதுரு 3:  9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

[6/20, 2:15 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 10:  10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

[6/20, 2:18 PM] Christopher-jeevakumar Pastor VT: லூக்கா 9:  54 அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55 அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56 மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

[6/20, 2:20 PM] Christopher-jeevakumar Pastor VT: ✝ *இன்றைய வேத தியானம் - 20/06/2017* ✝

1⃣ *இயேசுவின் குணாதிசயங்கள் ( குணங்கள், பண்புகள் ) என்னென்ன❓*

2⃣பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னை வெளிப்படுத்திய குணாதிசயத்திற்க்கும், புதிய ஏற்ப்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் குணாதிசங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/20, 2:22 PM] Christopher-jeevakumar Pastor VT: ஏசாயா 48:  9 என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன்.
12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.

[6/20, 2:41 PM] Elango: நியாயப்பிரமாணம் காலம்
கிருபையின் காலம்👌👍

[6/20, 2:43 PM] Elango: *நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.*

இந்த வசனம் உண்மையிலேயே ஆவிக்குள்ளாக தியானிக்கும் போது ஜீவநீருற்று ஓடும்.🙏💦💦💦

[6/20, 3:14 PM] Israel VT: எபிரெயர் 12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
9 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
[6/20, 4:02 PM] Elango: மல்கியா  3

மல்கியா 3:6 [தமிழ் வேதாகமம்]
6: *நான் கர்த்தர், நான் மாறாதவர்;*✅❤ ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.

Malachi 3:6 [New International Version]
6: " *I the LORD do not change*. So you, O descendants of Jacob, are not destroyed.

Malachi 3:6 [New King James Version]
6: " *For I am the LORD, I do not change*; Therefore you are not consumed, O sons of Jacob.

Malachi 3:6 [New Living Translation]
6: " *I am the LORD, and I do not change*. That is why you descendants of Jacob are not already completely destroyed.

Malachi 3:6 [New Revised Standard Version]
6: *For I the LORD do not change;* therefore you, O children of Jacob, have not perished.

Malachi 3:6 [AMPlified]
6: *For I am the Lord, I do not change;* that is why you, O sons of Jacob, are not consumed.

[6/20, 4:08 PM] Elango: தேவனின் கிருபை, தாழ்மை👇👇👇

ஏசாயா 57:15-16
[15]நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: *உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.*❤❤❤❤❤

[16] *நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.*👆🏼👆🏼❤😊😊😊👌👌

*ஆண்டவர் எப்படி யோசித்து சொல்றாரு பாருங்க*😀🙏👌

*கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பார்ப்போம்*💃💃💃💃

[6/20, 4:22 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 20/06/2017* ✝

1⃣ *இயேசுவின் குணாதிசயங்கள் ( குணங்கள், பண்புகள் ) என்னென்ன❓*

2⃣பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னை வெளிப்படுத்திய குணாதிசயத்திற்க்கும், புதிய ஏற்ப்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் குணாதிசங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/20, 4:33 PM] Elango: 2⃣பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னை வெளிப்படுத்திய குணாதிசயத்திற்க்கும், புதிய ஏற்ப்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் குணாதிசங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன

பழைய மற்றும் புதிய ஏற்ப்பாட்டில் தேவனின் குணத்தில் வித்தியாசம் போல் தோன்றினாலும், தேவன் இன்றும் என்றும் மாறாதவரே.

தானியேல் 9:14-15
[14]ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; *எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்;* ✅✅✅✅✅நாங்களோ அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.

[15]இப்போதும் உமது ஜனத்தைப்பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்குக் கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, *நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்.*🚶🚶🚶🚶

[6/20, 4:42 PM] Elango: *இந்த வசனத்தில் தேவனின் குணம் மாறுகிறது என்று தெரிந்தாலும், அவர் மிகுந்த இரக்கமுள்ளவர் என்பதையே காட்டுகிறது*❤❤❤❤👇👇👇👇


எரேமியா 18:6-10
[6]இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.


[7]பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

[8] *நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.*

[9] *கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.*🗣🗣🗣🗣🗣

[10]அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், *நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.*🙄🙄🙃🙃

[6/20, 4:48 PM] Levi Bensam Pastor VT: *தேவனுடைய இரக்கங்களை அளவிடவே முடியாது*👇👇👇👇👇👇👇👇👇👇👇 யோனா 3:10
[10]அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப்பார்த்து, *தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.*

[6/20, 4:48 PM] Levi Bensam Pastor VT: *மிகுந்த கிருபை உள்ளவர்*🙏🙏🙏

[6/20, 4:54 PM] Levi Bensam Pastor VT: *நெகேமியா கர்த்தர் மேல் வைத்த மனவுருக்கம்*👇👇👇👇👇👇👇👇👇👇 நெகேமியா 1:6-11
[6]உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.
[7] *நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்*😭😭😭😭😭😭😭; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.
[8]நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
[9] *நீங்கள் என்னிடத்தில் திரும்பி*👇👇👇👇👇👇👇👇👇 👇என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், *உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து*, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.
[10]தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.
[11] *ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன்.*🙏🙏🙏🙏🙏🙏 நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

[6/20, 4:56 PM] Elango: *நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.*🙏🙏🙏😭😭😭

[6/20, 5:31 PM] Levi Bensam Pastor VT: *தேவனுடைய அன்பை ருசிபார்த்தவர்கள், யாருமே👉 ஒரு தாலந்தை வாங்கினவன் போல தேவனை குறை சொல்லாமல், தாவிதை போல் நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும் என்று சொல்லுவார்கள்*🙏🙏🙏🙏🙏🙏

[6/20, 5:33 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 51: 8
*நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் 👉👉👉👉👉👉நொறுக்கின எலும்புகள் களிகூரும்.*

Psalm 51: 8
Make me to hear joy and gladness; that the bones which thou hast broken may rejoice.

[6/20, 5:37 PM] Levi Bensam Pastor VT: *ஒரு தலைமுறைக்கே நாம் எத்தனை பாடுகள், அப்பப்பா, ஆனால் 1000 தலைமுறைக்கு*👇👇👇👇👇👇👇👇👇 யாத்திராகமம் 20: 6
*என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ 👉 👉 ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.*

Exodus 20: 6
*And shewing mercy unto thousands of them that love me, and keep my commandments.*

[6/20, 7:24 PM] Elango: ஆமென்🙏🙏🙏

ஆமோஸ் 3:2
[2] *பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்;❤❤❤❤ ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.*😫😫😫😰😰😭😭👊👊👊🤜🤜🤛🤛✊✊

[6/20, 7:28 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 20/06/2017* ✝

1⃣ *இயேசுவின் குணாதிசயங்கள் ( குணங்கள், பண்புகள் ) என்னென்ன❓*

2⃣பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னை வெளிப்படுத்திய குணாதிசயத்திற்க்கும், புதிய ஏற்ப்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் குணாதிசங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/20, 8:36 PM] Elango: தேவனின் குணங்கள்👇

அன்பு
1 யோவான் 4:8-12
[8]அன்பில்லாதவன் தேவனை அறியான்; *தேவன் அன்பாகவே இருக்கிறார்.*❤

[9]தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

[10] *நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.*

[11]பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
[12]தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
[6/20, 8:38 PM] Elango: தேவனின் குணங்கள்👇

✨🌟 ஒளி

1 யோவான் 1:5
[5] *தேவன் ஒளியாயிருக்கிறார்,* அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.

யோவான் 8:12
[12]மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: *நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,*✨🌟 என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

[6/20, 8:42 PM] Elango: தேவனின் குணங்கள்👇

பரிசுத்தர்

லேவியராகமம் 11:45
[45]நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், *நான் பரிசுத்தர்;* ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

[6/20, 8:57 PM] Elango: தேவனின் குணங்கள்👇

தண்டித்து மன்னிக்கிற தேவனே.❤

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; *நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.*சங்கீதம் 99:8

வெளிப்படுத்தின விசேஷம் 3:19
[19] *நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்;* ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

[6/21, 7:55 PM] Elango: உங்களுடைய கருத்து என்ன🤔

Post a Comment

0 Comments