Type Here to Get Search Results !

இரத்த சாட்சிகளின் குணங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓

[6/26, 10:37 AM] Elango: 🔵 *இன்றைய வேத தியானம் - 26/06/2016* 🔵

1⃣இரத்த சாட்சிகளின் குணங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓


2⃣ஸ்தேவான், தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகா, அந்திப்பா, யோவானின் சகோதரன் யாக்கோபு, யோவான் ஸ்நானன் - போன்றவர்களின் குணங்கள் மரிக்கும் நிலையிலும், மரிக்க ஒப்புக்கொடுப்பட்டபோது எப்படிப்பட்டதாக இருந்தது❓


3⃣ இவர்களுக்கு விடுதலை பெற சமயம்/தருணம் கிடைத்தும், எதனால் அவர்கள் விடுதலை பெற சம்மதியாமல் தங்களை வாதிக்கப்படுவதற்க்கு சம்மதித்தார்கள்❓காரணம் என்ன❓


4⃣இந்த வசனத்தை👇 தியானிப்போம் ⁉

*மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.வெளிப்படுத்தின விசேஷம் 12:11*

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/26, 10:48 AM] Stanley Ayya VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.

நாங்கள் பிறப்பாலும் ,
வாழ்வாழும் , சுயஞானத்தலும் , உணர்வாலும் , உணர்ச்சிகளாலும் , பாவிகளாய் இருப்பாதால்
நீதாமே எங்களை மீட்டு
 நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு
உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி
உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட
மாகா மேன்மையான இரக்கத்திற்க்காகக
கோடி ஸ்தோத்திரம்.

அன்பின் பிதாவே
நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.

நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.

நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.

ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.

உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.

ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.

ஆமென்.

[6/26, 11:04 AM] Levi Bensam Pastor VT: வெளிப்ப 6:9-11
[9]அவர் ஐந்தாம் முத்திரையை உடைந்தபோது, *தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் 👁👁கீழே கண்டேன்.*
[10]அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் *எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.*👇👇👇👇👇👇
[11]அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், *அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.*👍👍👍

[6/26, 11:18 AM] Levi Bensam Pastor VT: வெளிப்ப 20:4-5
[4]அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. *இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.*
[5]மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

[6/26, 11:20 AM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 3:1-4
[1]நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
[2]பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
[3]ஏனென்றால், *நீங்கள் மரித்தீர்கள்* , உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
[4]நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.

[6/26, 11:23 AM] Elango: 1⃣இரத்த சாட்சிகளின் குணங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓

✅ *பக்திவைராக்கியம்*

கலாத்தியர் 1:14
[14] *என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும்*👈☝ யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.☹😐😐😐

தீத்து 2:14
[14]அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, *தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி,* நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

[6/26, 11:24 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 8:35-39
[35], *உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇
[36]கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
[37]இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
[38]மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
[39]உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் *நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்*👍
,
[6/26, 11:26 AM] Elango: ஆமென். *கிறிஸ்துவின் அன்பினால் ஜெயம்*👏👏💪💪💪❤❤❤

[6/26, 12:10 PM] Tamilmani Ayya VT: *இரத்த சாட்சிகளின் குணங்கள் - பண்புகள்*

தானியேல் புத்தகம் 3 & 6 அதிகாரத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளை கூறலாம். மரிக்கும் நிலைக்கு அருகில் இருந்தவர்கள், தானியேல் மற்றும் அவரது நண்பர்கள் சாத்ராக் - மேஷாக் - ஆபேத் நேகே இவர்களே.

ஒன்று அக்கினிசூளையில் எரிந்து சாக துணிந்த தானியேல் நண்பர்களின் பயமின்மை - மற்றது தானியேல் பயமில்லாமல் சிங்ககெபிக்குப்போனது . மரணத்தை ருசி பார்க்காமல் திரும்பி வந்தவர்களே ஆயினும் பயமற்ற நிலையில்  இருந்தனர்.

*இரத்த சாட்சிகளின் குணங்கள் - பண்புகள் :*

★ஆட்டுக்குட்டியானவர்போல் சாந்த குணம்

★பழி வாங்கும் எண்ணம் கூடாது

★ தைரியம் வேண்டும்

வெ. விசேஷம் 6 அதிகாரத்தில் இரத்த சாட்சிகள் பேசுவதை கேட்கலாம். அவர்களை கொன்றவர்களை பழிவாங்கும் வரை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இயேசு கிறிஸ்துவும் மகா பெரிய இரத்த சாட்சியே. அதனால்தான் அவரை குத்தினவர்கள் கண்ணும் காணும்படியாக இரண்டாம்முறை வரப்போகிறார் என
வெ. வி 1: 7 சொல்லுகிறது.

இரத்த சாட்சியை எபிரேயத்தில்  Mar tus என்று சொல்லுவார்கள். அதன்
அர்த்தம்:

*i. நீதித்துறை சாட்சி*
*ii. சம்பவத்திற்க்கு உண்மை சாட்சி*
இது எப்படி நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பொருந்தும் என பார்த்தால், ஒரு இரத்த சாட்சி மரித்து பரலோகத்திலே தேவனின் சிம்மாசனம் முன்பு
(Judicial witness) நடந்த சம்பவத்திற்க்கு உண்மை சாட்சியாக நிற்பவர் -
மற்றும் சம்பவத்தை பார்த்த சாட்சியாக நிற்பவர்.

*தேவன் மரித்ததற்க்கான சாட்சியை சம்பவம் நடந்த இடத்திலுள்ள சபைகளின் போதகர்களை எல்லாம் கூட்டி விசாரிப்பார். இரண்டாவதாக அந்த இடத்தின் இரட்சிக்கப்படாத மக்களை விசாரிப்பார். இரண்டுபேரும் சொல்லுவார்கள்.இரத்த சாட்சி உண்மையை சொல்லுவார்.*

[6/26, 12:10 PM] Elango: மாற்கு 13:13 *என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.* முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

[6/26, 12:12 PM] Tamilmani Ayya VT: 👆🏾 *இரத்த சாட்சி இதற்க்கும் மேற்ப்பட்டவன்/ள்*
[6/26, 12:14 PM] Elango: லூக்கா 21:17 *என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.*

[6/26, 12:14 PM] Tamilmani Ayya VT: கிறிஸ்தவனுக்கு சாவு ஆதாயம். இரத்த சாட்சிக்கு ஒப்பு கொடுத்தவன் சாவை எதிர்பார்த்து காத்திருப்பவன்.

[6/26, 12:14 PM] Elango: யோவான் 15:18 *உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.*

[6/26, 12:15 PM] Tamilmani Ayya VT: கடைசி கால இரத்த சாட்சி

*உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,*
(ரோமர் 8 :35)

ரோமர் 8: 35 இரத்த சாட்சியாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர் அல்ல. இவர்கள் கடைசி கால இரத்த சாட்சிகளாக ஒப்புக் கொடுக்கப்பட்டிருப்பவர்கள். அவர்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை. ஐவ்வகை ஊழியக்காரர்களும் உள்ளார்கள். அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் (மூன்றரை வருஷங்கள்)  நடக்கப்போகும் உபத்திரவங்களுக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள். மூன்றரை வருட முடிவில் எடுத்துக் கொள்ளப்போகிறவர்கள். அவர்கள் மரணக்குழியில் இரண்டு, மூன்று, நான்கு வருஷங்களே இருப்பார்கள்.  இன்றைக்கு செத்துக்கொண்டிருக்கிற இரத்த சாட்சிகள் கடைசி நிமிட இரத்த சாட்சிகள். அது நாமாகவும் இருக்கலாம். கடைசி கால இரத்த சாட்சிகள் வீரமும் பலமும் ( சிங்கத்தின் குணம்) சாந்த குணமும் - தாழ்மை குணமும் (ஆட்டுக்குட்டியானவர் குணம்) பழிவாங்காத பண்பும் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

இப்போது வாழும் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதைப்போல, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிப்போல  எண்ணப்பட்டாலும்
ஜெயங்கொள்ளுகிறோம்.

என்ன  நேரிட்டாலும்,

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. (ரோமர் 36- 37)

அந்த இரத்தசாட்சிகள் இப்போதும் இதைப்போலவே இப்போது ஜெயங்கொள்கிறதாலே தேவன் அவர்களை தேர்ந்தெடுக்கிறார். நாம் ஒப்புக்கொடுத்தாலும் தெரிந்து எடுப்பது தேவனே. எப்போது கசாப்புக்கடைக்குப்போவோம் என்று இந்த ஆட்டுக்குட்டிக்கு தெரியாது.
___________________________

[6/26, 12:24 PM] Elango: யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; *நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது*😡😡😡

[6/26, 12:25 PM] Elango: லூக்கா 6:27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: *உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.*❤❤❤❤

[6/26, 12:26 PM] Elango: இந்த இரத்த சாட்சிகளின் வீடியோவை பாருங்கள். அழுதுவிடுவீர்கள். நம்முடைய விசுவாசம் எப்படிப்பட்டது.

https://www.youtube.com/watch?v=R22Rx48yMaQ

வேத தியானத்திற்க்கு சம்பந்தமான லிங்க்.

[6/26, 12:29 PM] Elango: இரத்த சாட்சிகளின் சரித்திதிரத்தை படிக்கும் போது... நமக்கு கண்ணீர் தான் மிஞ்சும்... நாம் நம் ஆண்டவருக்காக என்ன செய்தோம்... சிந்திப்போம்... 🙏

[6/26, 12:31 PM] Tamilmani Ayya VT: முதன் முதலில் உலகத்தில் மரித்த மனிதன் இரத்த சாட்சியான ஆபேல், கடைசியாக மரிக்கப்போகும் இரத்த சாட்சியின் மரணத்தை அடுத்து நியாயத்தீர்ப்புகள் ஆரம்பமாகப்போகிறது.

*தீர்க்கதரிசனம்:* 2017

ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டது. அது இரத்த சாட்சிகளின் சுருள்.

வெளிப்படுத்தின விசேஷம் 6: 9

அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.

*இரத்த சாட்சிகளின் மாநாடு* (உலகத்தில் இதுவரை நடத்தப்படாதது- முதன் முதலாக) கடந்த மாதம் மே ல் சென்னையில் நடைபெற்றது. கர்த்தரின் சித்தப்படி வெளி. விசேஷம் முதல் நிகழ்வு ஆரம்பமாகி விட்டது.

இரத்த சாட்சிகளிகளாக வாழ விரும்புவர்கள் கர்த்தரிடம் தங்கள் அர்ப்பணிப்பை அளியுங்கள்.

[6/26, 12:32 PM] Antony Ayya VT: மத்தேயு, Chapter 24

8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

9. அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

[6/26, 12:32 PM] Elango: மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; *உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.*🙏🙏🙏🙏

[6/26, 12:33 PM] Elango: கலாத்தியர் 4:29 *ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்துவருகிறது.*

[6/26, 12:33 PM] Elango: II தீமோத்தேயு 2:9 இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; *தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.💪💪💪💪💪*

[6/26, 12:34 PM] Elango: II தீமோத்தேயு 3:12 *அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்*😭😭😭😭😭😭

[6/26, 12:36 PM] Elango: *தேவன் மேலுள்ள விசுவாசமும், அவர் மேலுள்ள மிகுதியான அன்புமே காரணம், இரத்த சாட்சியாக மரிக்கவும், அவர்களை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவும். அதனால் தேவன் அவருடைய தேவன் எண்ணப்பட வெட்கப்படவில்லை* THANK YOU LORD!!!

33. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,

34. அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.

35. ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; *வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;*

36. வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;

37. *கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;*

38. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.

[6/26, 12:37 PM] Tamilmani Ayya VT: *இரத்த சாட்சிகள் யார்?*

கடைசி காலமான இப்போது வேதனை ஆரம்பம் ஆகி விட்டது.
(மத்தேயு 24: 8)
★இந்த வேதனை எபிரேயத்தில் பிரசவ வலி என்று அர்த்தம்.  குழந்தை பிறப்பதற்க்கு முன்பு உள்ள மாதங்களில் வருவது.

உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்  கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
-  மத் 24: 9

உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உயிர் இழப்பவர்களே இரத்த சாட்சிகள். இந்த இரத்த சாட்சிகளாக ஆபேல், மோசே காலத்து குழந்தைகள், இயேசு காலத்து 2 வயது குழந்தைகள், புதிய ஏறபாட்டில் யோவான்ஸ்நானன், 11 அப்போஸ்தலர்கள்,  ஸ்தோவான் என கடந்த 2015 ஆண்டுகளாக கர்த்தருக்காக மரித்தவர்களை சொல்லலாம். இன்று வரை
(லிபியா, சிரியா, ஈரான், ஈராக், இஸ்ரவேல் ....)
மரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
அவர்கள் பரலலோகத்திலுள்ள நமது
தேவனை நோக்கி கூப்பிடுகிறார்கள், .நாங்கள் எதுவரைக்கும் காத்திருப்போம்? எதுவரைக்கும் பூமியை நியாயத்தீர்ப்பு செய்யாமல் இருப்பீர்? என மகாசப்தமிட்டு  கூப்பிடுவார்களாம்.

வெளிப்படுத்தின விசேஷம்
6: 10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும்  கூப்பிட்டார்கள்.

அதற்கு தேவன் பதில் அளித்ததை படியுங்கள்.

அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

வருகின்ற அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் முத்திரை தரியாதவர்களை தேடிப்பிடித்து கொலை செய்வார்கள்.

[6/26, 12:38 PM] Elango: *அன்பிபில்லாமல் நம் சரீரத்தை சுட்டெரிக்க கொடுத்தாலும் அது வீண் தான்...தேவ அன்போபோடு தன் சரீரத்தை கொடுப்போம்*

[6/26, 12:38 PM] Elango: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும்  கூப்பிட்டார்கள். 😭😭😭😭😭😭😭

[6/26, 12:42 PM] Elango: 1⃣இரத்த சாட்சிகளின் குணங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓

💪 *உலகம் அவர்களுக்கு பாத்திரமாக இருக்காது.*

💪 *தரிசுத்து நடவாமல் விசுவாசித்து நடப்பார்கள்*

💪 *எகிப்தின் பொக்கிஷத்தை பார்க்கிலும் தேவ ஜனங்களோடு உபத்திரவத்தை அனுபவிப்பதை தெரிந்துகொள்வார்கள்*

💪 *தன்னுடைய தங்களை காப்பாற்ற இல்லைவென்றாலும், உயிரில்லா சிலைக்கு தன் தலைகளை தாழ்த்தாதவர்கள்*

[6/26, 12:44 PM] Elango: *தேவனுக்கு பிரியமான பாத்திரங்களும், இரத்தசாட்சிகளும்*👇👇👇👇👇👇

2 தீமோத்தேயு 2:20-21
[20]ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
[21] *ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.*✅✅✅✅🙏🙏🙏

[6/26, 12:48 PM] Elango: *அசைக்க முடியாத விசுவாசம்*👇👇👇

தானியேல் 3:15-18
[15]இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
[16]சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவுசொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
[17] *நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.*🙏🙏🙏🙏🙏

[18]  *👇👇👉👉👉👉விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது*😐😐😐😐😐😐👊👊👊👊👊👊 என்றார்கள்.

[6/26, 12:50 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:16
[16]அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்;

*ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை;*

( THANK YOU LORD)
 அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

[6/26, 12:54 PM] Raja VT: ஒருத்தர் இரத்தசாட்சியாய் மரிப்பதுன்னா அது தேவ திட்டமா இல்லாட்டி, நம்ம விருப்பமா

[6/26, 12:55 PM] Raja VT: நான் இப்போ வாலண்டியரா  முஸ்லீம் தேசத்தில தேவனுடைய சுவிஷேசம் அறித்து மறித்தால் அது இரத்தசாட்சின்னு தேவன் அங்கிகரிப்பாரா

[6/26, 12:55 PM] Tamilmani Ayya VT: *தீர்க்கதரிசனம்:*
_இரத்த சாட்சிகளின் எண்ணிக்கை ஜெர்மன் நாட்டின் தலைநகரமான பெர்லினில் 2017க்குள் நிறைவேறப்போகிறது._

(சாத்தானின் சிங்காசனம் வெ.வி. ப்படி பெர்கமு சபையில் இருந்தது. பின் அது வாடிகனுக்கு மாற்றப்பட்டது. தற்போது பெர்லினில் மியூசயத்தில்  இருக்கிறது. அந்த மியூசியத்தின் பெயர் பெர்கமு. எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.

[6/26, 12:59 PM] Sam Jebadurai Pastor VT: 👍..நான் விரும்புகிறேன் என்பதற்கு வேதத்தில் ஆதாரம் உண்டா???

[6/26, 1:00 PM] Antony Ayya VT: உண்மையா அருகில்தான் நாண் இருக்கிறேன்🏃🏃🏃🏃🏃😂😆😆

[6/26, 1:01 PM] Raja VT: இல்லாட்டி அது நான் உருவாக்கின தற்க்கொலையா

நான் சொந்தமாக தேவ சித்தமில்லாம முடிவெடுத்து மரித்தா அது தற்கொலையா இல்லாட்டி இரத்த சாட்சியா

[6/26, 1:02 PM] Raja VT: தேவ சித்தமுள்ளாமல் சுய சித்தத்தில் ஊழியத்தில் இறங்கி வரது சொன்னேன்

[6/26, 1:02 PM] Tamilmani Ayya VT: தேவ திட்டம். நாம் ரத்த சாட்சியாக ஒப்பு கொடுக்கலாம். தேவனே தீர்மானிப்பார்.

[6/26, 1:03 PM] Raja VT: சுய சித்தத்தில் ஊழியத்தில் இரத்தமாக மரித்தால் பரலோகம் கிடைக்குமா இல்லாட்டி தற்கொலை பிரிவா

[6/26, 1:03 PM] Sam Jebadurai Pastor VT: இன்று ரத்த சாட்சியாக மரிக்க வேண்டும் என குழந்தைகளிடம் பேசி பயிற்றுவிக்கும் நபர்கள் செய்வது சரியா??

[6/26, 1:04 PM] Raja VT: ஏஞ்சல் டீவியில பயிற்ச்சி கொடுக்கீறாங்க

[6/26, 1:05 PM] Tamilmani Ayya VT: some six million European Jews were killed by Adolf Hitler's Nazi Germany, and the World War IIcollaborators with the Nazis. *The victims included 1.5 million children,*

[6/26, 1:06 PM] Raja VT: முஸ்லீம் தீவிரவாதி பயிற்ச்சி.கும், ஏஞ்சல் டீவி பயிற்ச்சிக்கு வித்தியாசம் இருக்கா

[6/26, 1:06 PM] Sam Jebadurai Pastor VT: குழந்தைகளின் குழந்தை பருவத்தை இப்படிபட்ட நபர்கள் திருடுகிறார்கள்

[6/26, 1:07 PM] Sam Jebadurai Pastor VT: துப்பாக்கி மட்டும் கொடுக்கவில்லை இங்கு

[6/26, 1:08 PM] Raja VT: குழந்தைகளுக்கு இரத்தசாட்சியா மரிக்கனும்ன்னு இப்பவே சொல்றது நல்லது தானே. இது கடைசி நாள் தானே

[6/26, 1:09 PM] Sam Jebadurai Pastor VT: குழந்தை பருவத்தை அவர்களிடம் இருந்து நாம் திருடுகிறோமே...

[6/26, 1:09 PM] Raja VT: பாவத்தில் சாகக்கூடாதுன்னு சொல்ற நாம ஆண்டவருக்காக சாகன்னும்னு சொல்றது நல்லது தானே தப்புன்னா சொல்லுங்க ஏத்துக்குறேன்

[6/26, 1:11 PM] Tamilmani Ayya VT: தேவனிடம் கிட்டிச்சேருங்கள். தேவ திட்டத்தை அறிந்துக்கொள்ளுங்கள். ஐந்துவகை ஊழியங்களுக்கு மேற்ப்பட்ட கடைசி கால தீர்க்கதரிசன சுவிஷேசகர்கள்  அவசியமாகிறது. நாம் இன்று செய்கிற ஊழியம் தேவ சித்தமா? நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டறிய வேண்டும்.

[6/26, 1:12 PM] Raja VT: இந்த உலகத்தை அநுபவிக்க பிரகாரமாக நாம அநுபவிக்க கூடாதுதானே. பிள்ளைகளையும் தேவனுக்காக மரி.கன்னும்னு சாது சார் சொல்றது தவறா

[6/26, 1:13 PM] Tamilmani Ayya VT: ஆவிக்குரிய ஆயுதங்கள் பரலோகத்தில் உருவாக்கப்படுகிறது. உலக ஆயுதங்களுக்கும் அதற்க்கும் சம்பந்தமில்லை.

[6/26, 1:13 PM] Raja VT: Rss முஸ்லிம் காரங்க அவங்க குழந்தைகளையும் பயிற்ச்சிவிக்கிறாங்க
நாம நம்ம குழந்தைகளை பிறரை கொல்ல பயிற்றுவிக்கலையே.  தன் உயிர ஆண்டவர் அன்புக்காக தானே கொடுக்கிறோம். அநு தப்பா

[6/26, 1:15 PM] Sam Jebadurai Pastor VT: ரத்தசாட்சியாக நபர்களை நாமே ஆயத்தபடுத்தலாம் என்பது உங்கள் மறைமுக கருத்து

[6/26, 1:16 PM] Sam Jebadurai Pastor VT: இதிலே தேவ சித்தம் இல்லை என்பதும் உங்கள் கருத்து

[6/26, 1:16 PM] Raja VT: அப்படின்னா அது ஏகத்துவமா, நம்ம விரும்ப முடியாதா

[6/26, 1:17 PM] Raja VT: இரத்தசாட்சி என்பதுன்னா தேவனுடைய ஏகாதிபத்தியமா

[6/26, 1:19 PM] Sam Jebadurai Pastor VT: தேவ சித்தம் என்பது ஏகாதிபத்தியமா???

[6/26, 1:20 PM] Raja VT: இரத்த சாட்சி மனித விரும்ப கூடாதா ஆண்டவர் சித்தம் இருக்கலாம்

[6/26, 1:21 PM] Raja VT: மனித விரும்பியபடி நடக்காம தேவ விருப்பம் மட்டும் நடப்பது ஏகாதீபத்தியம்.

[6/26, 1:22 PM] Sam Jebadurai Pastor VT: இல்லை

[6/26, 1:23 PM] Raja VT: அப்படிடீன்னா

[6/26, 1:26 PM] Antony Ayya VT: வருகின்ற அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் முத்திரை தரியாதவர்களை தேடிப்பிடித்து கொலை செய்வார்கள்.

[6/26, 1:27 PM] Raja VT: ஏகாதிபத்தியம் என்றால் தனிஅரசாட்சி, நான் எடுத்துதான் முடிவுன்னு சொல்றது. One man embire

[6/26, 1:28 PM] Raja VT: தேவன் ஏகாதிப்பத்தீய தேவனில்லை, மனுசர்களின் வேண்டுதலையும் கேட்பவர். நம் கண்ணீர் கண்டு மனந்திலும்புகிறவர். தீங்குக்கு மனஷ்தாப படுகிறவர். யோனா வசனம்

[6/26, 1:31 PM] Raja VT: நீங்களாகவும் இருக்கலாம் அடுத்த இரட்தசாட்சி👍😓

[6/26, 1:35 PM] Raja VT: ஒருத்தர் இரத்தசாட்சியாய் மரிப்பதுன்னா அது தேவ திட்டமா இல்லாட்டி, நம்ம விருப்பமா

நான் இப்போ வாலண்டியரா  முஸ்லீம் தேசத்தில தேவனுடைய சுவிஷேசம் அறித்து மறித்தால் அது இரத்தசாட்சின்னு தேவன் அங்கிகரிப்பாரா

[6/26, 1:39 PM] Raja VT: ரெடியா

[6/26, 1:41 PM] Sam Jebadurai Pastor VT: தேவ சித்தம் குறித்த நமது தியானத்தை வாசித்து பின் இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிட்டால் நலம்

[6/26, 1:43 PM] Peter David Bro VT: அப்போஸ்தலர் 6:1,3,8
 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
 ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
அப்போஸ்தலர் 7:59-60
 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
  அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

தெரிந்து கொள்ளப்பட்ட நோக்கம் வேறு
பயன்படுத்தின விதம் வேறு
மரித்த விதம் வேறு
எல்லாம் தேவன் தீர்மானிப்பார்

[6/26, 1:46 PM] Sam Jebadurai Pastor VT: John            21:18, 23
18 "நீ இளயவதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்."
23 "ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்."

John 21:18, 23
18 Truly, truly, I say to you, when you were young, you used to dress yourself and walk wherever you wanted, but when you are old, you will stretch out your hands, and another will dress you and carry you where you do not want to go.”
23 So the saying spread abroad among the brothers that this disciple was not to die; yet Jesus did not say to him that he was not to die, but, “If it is my will that he remain until I come, what is that to you?”

நல்ல எடுத்துக்காட்டு பேதுரு மற்றும் யோவான்

[6/26, 1:47 PM] Raja VT: யோவான் இரத்தசாட்சியாய் மரிக்க வில்லையாம் இயற்கை மரணம் ஏய்தாராம்

[6/26, 1:47 PM] Sam Jebadurai Pastor VT: John            21:18, 22
18 "நீ இளயவதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." *பேதுரு*
22 "அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்."*யோவான்*

[6/26, 1:47 PM] Sam Jebadurai Pastor VT: ஆம்

[6/26, 1:48 PM] Sam Jebadurai Pastor VT: பேதுரு ரத்தசாட்சியாக மரிக்க சித்தம் கொண்ட ஆண்டவர் அதே காரியத்தை யோவானுக்கு கொடுக்கவில்லை

[6/26, 1:50 PM] Raja VT: யோவானை கொதிக்கும் எண்ணையில் போட்டார்களாம் ஆனா சாகவில்லையாம். இதுவும் இரத்த சாட்சிதானா

[6/26, 1:50 PM] Peter David Bro VT: யோவான் மரித்தாரா இந்த வசனத்தின் அடிப்படையில் நான் வருமளவும் இவனிருக்க சித்தமானால் உனக்கென்ன என்று கூறியதின் அர்த்தம் என்ன

[6/26, 1:51 PM] Sam Jebadurai Pastor VT: ஏஞ்சல் டிவி நிறுவனர் சகோ. செல்வராஜ் மற்றும் சகோ. வின்சென்ட் செல்வகுமார் இவர்களின் முன்னோடி அருமை ஐயா து.ஜாண் ரபீந்திரநாத் அவர்கள் தான் ரத்த சாட்சியாக தான் மரிப்பேன் என கூறி கடைசியில் மருத்துவமனையில் மரித்தார். இன்று மீடியாக்களின் தாக்கம் சபைகளில் அதிகம்

[6/26, 1:52 PM] Sam Jebadurai Pastor VT: பேதுருவை அவன் வேலையை மட்டும் பார்க்க இயேசு கிறிஸ்து கூறினார்

[6/26, 1:52 PM] Tamilmani Ayya VT: *தேவசகாயம் பிள்ளை-      1712-1752*

_இயேசுவின் மேல் கொண்டு உன்னதமான நம்பிக்கையின் வீரனாக அவருக்காக மடிய நான் தயார்....._

[6/26, 1:52 PM] Raja VT: நாம அடுத்தவர்களின் செருப்பில் நம்ம காலை விடக்கூடாது என்று ஆண்டவர் பேதுருவுக்கீ சொல்றாரு. mind your own business

[6/26, 1:53 PM] Sam Jebadurai Pastor VT: அனைவரும் இத்தகைய அன்பை கொண்டிருக்க வேண்டும்

[6/26, 1:54 PM] Raja VT: தீர்க்கதரிசனம் பொய்த்ததா

[6/26, 1:54 PM] Sam Jebadurai Pastor VT: அருமை ஐயா து.ஜாண் ரபீந்திரநாத் அவர்கள் ஒரு நல்ல தேவ மனிதர். ஆனாலும் இந்த கொள்கையினால் பிழை வந்தது

[6/26, 1:58 PM] Tamilmani Ayya VT: *உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,*
(ரோமர் 8 :35)

ரோமர் 8: 35 இரத்த சாட்சியாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர் அல்ல. இவர்கள் கடைசி கால இரத்த சாட்சிகளாக ஒப்புக் கொடுக்கப்பட்டிருப்பவர்கள்

[6/26, 2:13 PM] Stanley Ayya VT: ஒரு வேளை சுவிசேசத்திற்காக ஜீவனை  கொடுக்கும் நிலை ஏற்பட்டால்  நாம் நிம்மதியாக ஜீவனை கொடுக்க ஆயத்தபடுத்தபட்ட வசனமாகவே நான் கருதுகிறேன்.

உயிரை கொடுக்கும் போது நாம் உற்ச்சாக மடைய தேவன் கொடுத்த வசனமே அவைகள்.

மற்றபடி ஜீவனை காத்து கொடுப்பது தேவனால் குறைவாக என்னபடாது.

நமக்கு கொடுக்க படும் ஜீவநீட்டிப்பு காலமும் தேவ காரியத்திற்க்கே பயன்படும் என்றபோது தேவன் அதை குறைத்து மதிப்பிட மாட்டார்.

மனிதனின் மிக சிறந்த பணி அவனுடைய. ஜெப உழியமே. அதையும் படுக்கை நிலையில் கூட செயல் படுத்த இயலும்.அது உயிர் இருக்கும் வரை செய்ய இயலும்.
எனவே மிக அவசியமே அன்றி தேவன் ஜீவனை கொடுக்க அனுமதிக்கமாட்டார்.

உயிருக்கு பயந்து தேவனை மறுதலித்த பேதுருவை கூட தேவன் அற்ப்பமாய் பார்க்கவில்லை.

மனித பார்வையைவிட தேவனுடைய பார்வை வேறு.

எதையும் இழக்க தயாராகும் மன நிலை வரை காத்திருந்த தேவன் தன்னிடம் ஒப்படைக்க பட்ட சீடர்களை கூட விட்டுவிடவில்லை.

அந்தகாரம் தீமைக்கக கொண்டுவந்த இனைதளம் கூட இன்று நம்மால் சுவிசேசத்திற்க்கு பயன்படுவதை போல ஒராயிரம் வழிகளினால் தேவன் நம் பணிகளை செயல்படுத்த உதவுவார்.

விசுவாசம் + ஜெபத்தினால் ஞானமாய் சுவிசேசத்தில் ஜெயமெடுக்கும் திட்டங்களை கூட்டாக உண்டாக்குவோம்.

அனேகருடைய அன்பு தனியும் என்று கூறப்பட்டாலும் ஒருவரும் கெட்டுபோக சித்தமில்லை என்ற தேவ விருப்பமும் நமக்கு சாதகமே.

ஆக்கபூர்வ விசுவாச எண்ணங்களை கொண்டு சுவிசேச போராட்டத்தை ஏறெடுப்போம்.

நன்மையான சிந்தனை கொண்ட விசுவாசம் தோற்றுபோவாதக வேத வசனம் இல்லை என்பதும் நமக்கு சாதகமே

ஆமென்.

[6/26, 2:18 PM] Sam Jebadurai Pastor VT: நீங்கள் கூறுவதுதான் இந்த வசனத்தின் அர்த்தம் என்பதற்கு வேதவசன ஆதாரம் உண்டா?

[6/26, 2:19 PM] Raja VT: 16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

1 யோவான் 3

[6/26, 3:03 PM] Elango: 🔵 *இன்றைய வேத தியானம் - 26/06/2016* 🔵

1⃣இரத்த சாட்சிகளின் குணங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓

2⃣ஸ்தேவான், தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகா, அந்திப்பா, யோவானின் சகோதரன் யாக்கோபு, யோவான் ஸ்நானன் - போன்றவர்களின் குணங்கள் மரிக்கும் நிலையிலும், மரிக்க ஒப்புக்கொடுப்பட்டபோது எப்படிப்பட்டதாக இருந்தது❓

3⃣ இவர்களுக்கு விடுதலை பெற சமயம்/தருணம் கிடைத்தும், எதனால் அவர்கள் விடுதலை பெற சம்மதியாமல் தங்களை வாதிக்கப்படுவதற்க்கு சம்மதித்தார்கள்❓காரணம் என்ன❓

4⃣இந்த வசனத்தை👇 தியானிப்போம் ⁉
*மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.வெளிப்படுத்தின விசேஷம் 12:11*

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/26, 8:36 PM] Elango: 13. அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.

14. தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: *இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள்.* இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?

பச்சை மரத்திற்கு இந்த நிலை என்றால், பட்ட மரத்திற்கு எந்த நிலை....?

[6/26, 8:41 PM] Elango: உங்களை தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறவன் என்று சொன்ன கிருபையின் வார்த்தைக்காகவும், தேவ பாதுகாப்புக்காகவும், தேவ உத்திரவாத வசனத்திற்க்காவும் தேவன் ஸ்தோத்தரிப்போம்.

விசுவாசிகளை, கிறிஸ்துவர்களை ஒருவன் துன்பறுத்தினால் அவன் கிறிஸ்துவை தொடுகிறான், துன்புறுத்துகிறான். *சவுலே சவுலே என்னை ஏன் துன்புறுத்துகிறாய் என்று கர்த்தர் கேட்டார்"❓❓❓❓❓❓ பவுல் துன்புறுத்தியது யாரை? சபைதானே? வலித்தது யாருக்கு கர்த்தருக்கு!!!!!

நாம் அவர் சரீரத்தின் அவயவங்கள். கை காலில் அடிப்பட்டதென்றால் தலை தெரிந்துவிடும் அல்லவா? ❓❓❓❓❓❓❓

18. *அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்* 👂👂👂👂👂👂👂👂👂👂என்றார்.

[6/26, 8:45 PM] Elango: II தீமோத்தேயு 3:11 அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; *எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்;* இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

*இரத்தசாட்சிகளின் பிரதான சுபாவம் தேவ அன்பு, சகிப்பு, தேவனிடம் பாவிகளுக்காக பரிந்து பேசுதல்.......*

[6/26, 8:49 PM] Elango: 10. சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.

*நிச்சயப்பட்ட தீர்மானிக்கப்பட்ட இரத்த சாட்சிகளின் எண்ணிக்கை கண்டிப்பாக நிறைவேறும்*

[6/26, 8:55 PM] Elango: 13. *கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.*
14. *நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்;* ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

18. *ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.*

[6/26, 9:01 PM] Elango: 28. *ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்;* ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
30. *உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.*
31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

கர்த்தரின் ஆறுதலான, தைரியமூட்டும் வசனங்கள்.

சபைக்கு உள்ளே ஒரு வகையான உபத்திரம் என்றால், சபைக்கு வெளியே சரீரபிரகாரமான உபத்திரமும், ஆவியில் வியாகுல பயமும். ஆனால் கர்த்தர் கிருபையான வார்த்தை நமக்கு போது.

[6/26, 9:05 PM] Elango: 12. இவைகளை நாங்கள் கேட்டபொழுது,*எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.*

13. அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்?*எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்* என்றான்.

*சபை உபத்திரவப்படுத்திய பவுல், இப்பொழுது ஆண்டவருடைய கிருபை உணர்ந்த பிறகு, சாகவும் துணிந்து விட்டார்*

[6/26, 9:16 PM] Elango: 3⃣  இவர்களுக்கு விடுதலை பெற சமயம்/தருணம் கிடைத்தும், எதனால் அவர்கள் விடுதலை பெற சம்மதியாமல் தங்களை வாதிக்கப்படுவதற்க்கு சம்மதித்தார்கள்❓காரணம் என்ன❓

உபத்திரமும், கஷ்டமும், கண்ணீரும், பாடுகளும், துன்பங்களும்..... வரப்போகிற நாம் பெறப்போகிற மகிமைக்கு ஒப்பானவைகள் அல்ல.
நம்முடைய விசுவாசத்தை மறுதலிப்பதை விட தேவனுடைய கிருபையில் உபத்திரத்தை சகிப்பதே மேல். 🙏🙏🙏🙏

அவர்கள் உபத்திரவத்தை சம்மதிக்க:- தேவன் மேல் வைத்த விசுவாசம், பரமதேசம்,

-> *தாங்கள் விட்டுவந்த தேசத்தை அல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்;*👆👆👆👆👆👆

-> இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.🎊🎊🎊🎉🎉🎉🎉🎉

-> *வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;*

-> உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை;😭😭😭😭

❤❤❤❤❤  *ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை;* ❤❤❤❤❤

[6/26, 9:21 PM] Elango: 🔵 *இன்றைய வேத தியானம் - 26/06/2016* 🔵

1⃣இரத்த சாட்சிகளின் குணங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓

2⃣ஸ்தேவான், தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகா, அந்திப்பா, யோவானின் சகோதரன் யாக்கோபு, யோவான் ஸ்நானன் - போன்றவர்களின் குணங்கள் மரிக்கும் நிலையிலும், மரிக்க ஒப்புக்கொடுப்பட்டபோது எப்படிப்பட்டதாக இருந்தது❓

3⃣ இவர்களுக்கு விடுதலை பெற சமயம்/தருணம் கிடைத்தும், எதனால் அவர்கள் விடுதலை பெற சம்மதியாமல் தங்களை வாதிக்கப்படுவதற்க்கு சம்மதித்தார்கள்❓காரணம் என்ன❓

4⃣இந்த வசனத்தை👇 தியானிப்போம் ⁉
*மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.வெளிப்படுத்தின விசேஷம் 12:11*

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

Post a Comment

0 Comments