Type Here to Get Search Results !

ஜெயங்கொள்கிறவன் என்பவன் யார்❓

[3/31, 8:18 AM] : 👑 *இன்றைய வேத தியானம் - 31/03/2017* 👑
*ஜெயங்கொள்கிறவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனி  Rev. 2:7*

*ஜெயங்கொள்கிறவனுக்கு மறைவான மன்னா Rev. 2:17*

*ஜெயங்கொள்கிறவனுக்கு ஜாதிகளின் மேல் அதிகாரம் Rev. 2:26*

👉👆🏼 வெளிப்படுத்தின விசேஷத்தில் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட *ஜெயங்கொள்கிறவன்*  என்பவன் யார்❓ வெளிப்படுத்தின விசேஷம் 2:7, 11, 17, 2:26; 3:5, 12, 21; 21:7

👉 *ஜெயங்கொள்கிறவன்* என்பவனுடைய தகுதிகள் என்னென்ன❓ அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓

  🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 📚🌏

[3/31, 10:20 AM] Elango: *ஜெயிக்கிறவன் யார் என்றால் 👉  இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.👈👍💪*
1 யோவான் 5:4
[4] *தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.*

[3/31, 10:24 AM] Elango: *ஜெயிக்கிறவன் ... கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தின் மூலம் அவன்  தேவனால் பிறக்கப்பிக்கப்பட்டவன், அவன் ஜெயங்கொள்கிற தேவனுடைய சுபாவத்தை கொண்டிருப்பவன்.*👇👇
1 யோவான் 5:5
[5]இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்❓❓❓👍💪

[3/31, 10:30 AM] Elango: 2 கொரிந்தியர் 5:17
[17]இப்படியிருக்க, *ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்;* பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.
கிறிஸ்துவுக்குள் இருக்கும் சுபாவமானது... நாம் இந்ந உலகத்தை ஜெயிக்கும் படியாகவும், தேவ சுபாவத்தை தரிக்கும்படியாகவும், எப்போதும் ஜெயக்கொள்கிறவனாகவும் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சுபாவம்.

[3/31, 10:37 AM] Elango: முதலாவது இந்த உலகத்தில்.. ஜெயங்கொண்ட மனிதன் யாரென்றால் ... தேவ குமாரனே - கிறிஸ்து இயேசுவே....👑👑👑
வெளிப்படுத்தின விசேஷம் 3:21
[21] 👉 *நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல,*👈👑👑👑👑👑👑👑👑✝✝✝✝ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

[3/31, 10:47 AM] Elango: 2 கொரிந்தியர் 2:14
[14] *கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி👑👑👑👍💪சிறக்கப்பண்ணி,* எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
கிறிஸ்த்துவுக்குள்ளே நாம் இருந்தால்  மட்டுமே நமக்கு ஜெயம் 👑👑👑உண்டு.
*கிறிஸ்து கொடுக்காத, கிறிஸ்துவின் மூலம் வராத, கிறிஸ்துவுக்கும் வெளியே நடப்பிக்கும் காரியங்கள் அல்லது கிரியைகள் தேவனுக்கு முன்பாக வெற்றியாக கணக்கிடப்பட மாட்டாது.✝✝✝✝✝👑👑👑👑*
கிறிஸ்துவுக்குள் இருப்போம்,
ஜெயிக்கிறவர்களாக இருப்போம்.👍💪👑✝

[3/31, 10:56 AM] Elango: நீதிமொழிகள் 21:31
[31] *குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.*
எப்போதும் தேவனை விசசுவாசிக்க வேண்டிய நமக்கு கொடுக்கப்பட்ட புதுசிருஷ்டியின் ஜீவியம் ... ஜெயம், வெற்றி என்பது கர்த்தரால் நமக்கு வருகிறதாயிருக்கிறது.
*தேவனுக்காக இரத்தசாட்சியாக மரித்தவனை இந்த உலகம் அவனை கோழை, பிழைக்கத்தெரியாதவன், வாழத்தெரியாதவன் என்கும் ஆனால் தேவன் கொடுக்கும் பட்டமோ ஜெயிக்கிறவன்*, ஜெயவீரன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:26-28
[26] *ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.*
[27]அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
[28]விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.

[3/31, 11:13 AM] Elango: கொலோசெயர் 2:13-15
[13]உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
[14]நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;🔩🔩🔩🔩🔩🔩🔩🔩
[15]துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, *அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.*💪💪🙏🙏👍👍✝✝✝👑👑👑👑👏👏👏
*பூமியின் இராஜாவுக்கு அதிபதியான 👇👇👇👇 நம் ஆண்டவரின் வெற்றி,  சிலுவையில் வெற்றி சிறந்தார்*👆🏼👆🏼👏👑

[3/31, 11:46 AM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்த்தோத்திரம்🙋♂
ஜெயங்கொள்ளுவதை பற்றி உலகம் கற்றுக்கொடுக்கிற காரியங்கள்...அதாவது இந்த உலக வாழ்க்கையில் எல்லா தடைகளையும் தாண்டி ...ஓடுகிறவர்களோடு ஓடி எல்லோரையும் மேற்க்கொண்டு ...முதலாவதாக ஓடி ... நல்ல உழைத்து   , நல்ல படித்து ... வேலை பெற்று ... பணம் புகழ் பட்டம் பெற்று மாட மாளிகையை 👆🏼👆🏼 􏀠*சம்பாதித்துக் கொள்வதையே இன்று உலகம் வாழ்க்கையில் ஜெயம்*  என்று உலகம் கற்றுக்கொடுக்கிறது.‼🌏🌍💐💐
*ஆனால் வேதம் கற்றுக்கொடுக்கிற ஜெயம் என்னவென்றால் வாழ்க்கையை ஜெயிப்பது*👑🙋♂🙏👍✝✝
💪அதாவது இந்த உலக வாழ்க்கையை ஜெயிப்பது...
💪மாம்ச வாழ்க்கையை ஜெயிப்பது
தேவனுடைய பெலத்தினாலே...,ஆவியானவர் அருளும் பெலத்தினாலே ..நாம் உலகத்தை, மாம்சத்தை, இச்சையை, சுயத்தை ,பாவத்தை, சாத்தானை  ஜெயிக்க வேண்டும். 👑👑👑👏👏
ஆகவே உலகம் கற்றுக்கொடுக்கிற ஜெயத்திற்க்கும், வேதம் கற்றுக்கொடுக்கிற ஜெயத்திற்க்கும் வித்தியாசம் இதுதான்.✅🙏👍
ஆனால் நாம் இன்று உலகத்தை ஜெயக்கிறவர்களாக அல்ல ..👉 *உலகத்தில்* ஜெயிக்கிறவர்களாகவே இருக்கிறோம்.அதாவது உலகத்தாரை போலவே இந்த உலகத்திலே எல்லாம் பெற்று சுகமாக சௌக்கியமாக நல்ல பணமுள்ளவர்களாக பேரும் புகழும் அந்த வழியை தான் நாம் தெரிந்துக்கொள்கிறோம்.‼‼
ஆகையால் அந்த உலக ஆசீர்வாதத்திற்க்காக வாக்குத்தத்தத்தை கேட்கிறவர்களாகவும், தேடுகிறவர்களாகவும் ... ஏறக்குறைய கிறிஸ்தவர்களும் உலகத்தாரைப் போல உலக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளும்படியாக ... உலகத்தை ஜெயிக்கிறவர்களாக இல்லாமல் ... உலகத்தில் ஜெயிக்கிறவர்களாக இல்லை.
எனக்கு இந்த உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது என்று பவுல் அப்போஸ்தலன் சொன்னார்.
கலாத்தியர் 5:24
[24] *கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.*🔩🔩🔩🔩🔩🔩💪💪👍👍👏✅✅
*நாமும் நம்முடைய மாம்சத்தை சிலுவையில் அறைவதற்க்கு பதிலாக நம்முடைய மாம்சத்தை சுகபோகமாக வாழ்வற்க்கு தீணிப்போடுகிறவர்களாகவும், மாம்சத்தில், உலகத்தில் ஜெயிக்கிறவர்களாகவும் இருக்கிறோமே தவிர உலகத்தை மாம்சத்தை ஜெயிக்கிறவர்களாக நாம் மாறும் போதுதான் அது ஆண்டவரின் பார்வையில் ஜெயங்கொள்கிறதாக இருக்கும்.*💪👍✅👑👑
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.🙋♂
- பாஸ்டர் சாம்சன் @Samson David Pastor VT

[3/31, 11:59 AM] Elango: 👑 *இன்றைய வேத தியானம் - 31/03/2017* 👑
*ஜெயங்கொள்கிறவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனி  Rev. 2:7*
*ஜெயங்கொள்கிறவனுக்கு மறைவான மன்னா Rev. 2:17*
*ஜெயங்கொள்கிறவனுக்கு ஜாதிகளின் மேல் அதிகாரம் Rev. 2:26*
👉👆🏼 வெளிப்படுத்தின விசேஷத்தில் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட *ஜெயங்கொள்கிறவன்*  என்பவன் யார்❓ வெளிப்படுத்தின விசேஷம் 2:7, 11, 17, 2:26; 3:5, 12, 21; 21:7
👉 *ஜெயங்கொள்கிறவன்* என்பவனுடைய தகுதிகள் என்னென்ன❓ அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓
  🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 📚🌏

[3/31, 12:03 PM] Stanley VT: நம்மை துன்பபடுத்தும் எதையும் தாங்கி அப்போதும் மனரம்மியத்தோடு
தேவனை ஆராதிக்கும் போது
ஜெயம் கொள்கிறோம்.
ஆண்டவர்  விலக்கவிரும்பியதை விலக்கி
அண்டவர் விருப்பமே நம் விருப்பமாக இருக்க தேவனிடத்தில் ஜெபிக்கும் போது
தேவனோடு சேர்ந்து நாமும் ஜெயமெடுக்கிறோம்.
ஆமென்.

[3/31, 12:12 PM] Elango: 😔👎 ஆதாம் தோற்றுப்போனார்
😔👎சிம்சோன் தோற்றுப்போனார்
😔👎சாலோமோன் தோற்றுப்போனார்.
😔👎சவுல் தோற்றுப்போனார்.
😀👍நம் ஆண்டவர் ஜெயங்கொண்டார்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:2
[2] *அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.*
தேவன் நம்மை முன்குறித்த நோக்கம் நாம் வெற்றியாளறாக முடிசூட்டப்பட வேண்டும் என்பதற்க்காகவே...👑👑👑👑
ஆனால் முடிவுபரியந்தம் நிலை நிற்ப்பவனே வெற்றியாளன்,  ஜெயிக்கிறவன்.👇👇
வெளிப்படுத்தின விசேஷம் 2:26
[26] *ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் 👈👈என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.*

[3/31, 12:45 PM] Darvin Sekar Brother VT: 👑 *இன்றைய வேத தியானம் - 31/03/2017* 👑
*ஜெயங்கொள்கிறவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனி  Rev. 2:7
👉 *ஜெயங்கொள்கிறவன்* என்பவனுடைய தகுதிகள் என்னென்ன❓ அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்*

[3/31, 1:14 PM] Elango: ஆமென், நாம் ஜெயிக்கிற ஜெயம் அன்பை பொருத்து காணப்படுகிறது.👍👍

நீதிமொழிகள் 10:12
[12]பகை விரோதங்களை எழுப்பும்; *அன்போ சகல பாவங்களையும் மூடும்.*

[3/31, 1:23 PM] Elango: நன்றி ஆண்டவரே... ✝✝✝👏🙋♂👍ஆழமான விளக்கம்
இரவு வந்து அனைத்து ஆடியோக்களையும் எழுத்து வடிவில் எழுது விடுகிறேன்.✍🙏

[3/31, 1:49 PM] Elango: ஜெயங்கொள்கிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.👍👑 *மரணபரியந்தம் உண்மையாய் இரு. அப்பொழுது ஜீவ கிரீடம் உனக்கு தருவேன்.* என்ற ஆண்டவரின் வார்த்தையின் படி ... இறுதிவரை ஆண்டவரின் மேலுள்ள விசுவாசத்தை உண்மையாய் பற்றிக்கொண்டு வாழ்வதே விசுவாச ஜீவிதம்.

மரணத்திற்கு எதிரானது ஜீவன்.❤♥
வெற்றிக்கு அடையாளமானது கிரீடம்.👑
*மரணத்தின்மீது கொண்ட வெற்றியை காட்டுவதே இந்த ஜீவ கிரீடம்.*
முதல் மரணம் என்பது நம்  சரீரத்தில் இருந்து ஆத்மா பிரிந்து செல்லுதல்.
 இரண்டாம் மரணம் என்பது நம்முடைய  ஆத்துமா தேவனை விட்டு  நித்தியமாய் நிரந்தமாய்  பிரிக்கப்படுதல்.
இந்த பாக்கியம் நித்திய நித்தியமாக வாழக்கூடிய பாக்கியத்தை பெற்ற நம்மை தேவன் முடிவுபரியந்தம் நடக்க நம் விசுவாசத்தை வர்த்திக்க செய்வாராக.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:38-39
[38] *விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.*
[39]நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.

[3/31, 2:05 PM] Elango: 2 தீமோத்தேயு 4:7-8
[7] *நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.*👍✅👏

[8]இதுமுதல் நீதியின் கிரீடம்👑👑👑👑👑👑 எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
விசுவாச வீரனின், வெற்றியாளனின்,  ஜெயங்கொள்கிறவனின் போராட்ட ஜீவியத்தின் கடைசியான விசுவாச உறுதியான குரல்👆🏼👆🏼

[3/31, 2:07 PM] Darvin Sekar Brother VT: 👑 *இன்றைய வேத தியானம் - 31/03/2017* 👑
*ஜெயங்கொள்கிறவனுக்கு இரண்டாம் மரணம் இல்லை Rev. 2:11
👉 *ஜெயங்கொள்கிறவன்* என்பவனுடைய தகுதிகள் என்னென்ன?

[3/31, 2:15 PM] Elango: 1 சாமுவேல் 17:26,45
[26]அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; *ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.*👆🏼👆🏼👆🏼☹☹☹😠😠😠
[45]அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: *நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.*
ஜெயங்கொள்கிறவன் தேவனை சார்ந்து வாழ்பவன், தேவனுக்காக பக்திவைராக்கியம் கொள்பவன்💪💪👏👏

[3/31, 3:07 PM] Darvin Sekar Brother VT: கர்தருடைய பரிசுத்தநாமத்திர்க்கு ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் இனிதானநாமத்தினாலே யாவருக்கும் எனது வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெருவித்துக்கொள்கிறேன்
        ஜெயம்கொள்வதர்கு முன்பு நாம் எதை ஜெயிக்க போகிறோமோ அதைக்குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். நமக்கு நன்கு தெரியும் மரணம் அப்படின்னா என்ன என்பது ஒருமனிதன் இந்த மண்ணில் வாழ்ந்த வாழ்வின் முடிவு சரிதானே,ஆனால் வேதம் சொல்கிறது இது முடிவில்லையென்று இதற்குப் பின் ஒரு வாழ்க்கை இருக்கிறதாம் அதைபெற்றுக்கொள்ள நாம் ஜெயிக்கிறவர்களாய் காணப்படவேண்டும். எபிரேயரில் பார்த்தால் அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, எபிரேயர் 9 :27 ஒரு நியாயதீர்பு இருக்கிறது இதன்பின்தான் இரண்டாம் மரணம், அப்படின்னா என்ன  மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20 :12
13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 20 :13
14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
வெளிப்படுத்தின விசேஷம் 20 :14 தொடரும் அன்புடன்  கிறிஸ்துவின் பணியில் உங்கள் சகோதரன் இ. டார்வின் சேகர்

[3/31, 3:41 PM] Jeyanti Pastor VT: நம் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்

[3/31, 4:27 PM] Jeyanti Pastor VT: ரோமர் 8
35  உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
36  கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
37  இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

[3/31, 4:28 PM] Jeyanti Pastor VT: சங்கீதம் 84
6  அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
7  அவர்கள் பலத்தின்மேல் பலமடைந்து சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
இதுவே ஜெயங்கொள்வோன் செய்ய வேண்டியது

[3/31, 4:37 PM] Jeyanti Pastor VT: யோசுவா போல சுதந்தரித்துக் கொள்ளும் அனுபவம் வேண்டும்

[3/31, 5:49 PM] Elango: ஆமென்🙋♂

[3/31, 6:30 PM] Darvin Sekar Brother VT: ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
வெளி 20 :15

[3/31, 6:56 PM] Tamilmani Ayya VT: 👑👑👑👑👑👑👑👑👑👑
*ஜெயங்கொள்ளுகிறவன் யார்❓*
ஓரே வரியில் பதில் சொன்னால் ,
 *முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.*
மத்தேயு 24:13
அதாவது இயேசு கிறிஸ்து வருகை வரை. அதற்கடுத்து ஆயிரம் வருட ஆட்சி.  இந்த ஆட்சியில் நமக்கு பங்குண்டு. விரிவாக ...
*நம் நித்ய அழைப்பு என்ன?*
வசனங்களின்படி மூன்று வானங்களே சொல்லப்பட்டிருக்கின்றன.
👉 முதலாவது நாம் காணும் வானம்.
👉 இரண்டாவது எபேசியர்  6: 12 படி (வான மண்டலங்களிலே இருக்கின்ற) பொல்லாத ஆவிகளின் (சாத்தானின்) சேனை. (தானி 10:13)
* பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி என்பவன் சாத்தானால் அந்த நாட்டிற்க்கான அதிபதி (சாத்தானின் பிரதிநிதி)
👉 மூன்றாம் வானம் பவுல் சென்றது
இரண்டாம் முறையாக வானத்திற்க்கு பரதீசுக்கு போனார். மனுசன் பேசப்படாத பேச்சை கேட்டார். இது எங்கே என்பது எல்லோருக்கும்  யூகம்தான் உள்ளது.
பரதீசு ஜீவ விருட்சம் மரம் இருக்கிற இடம். (வெ.வி 2: 7) நிச்சயம் பரலோகமே. ஏனென்றால் ஜெயங்கொள்கிறவனுக்கு ஜீவ விருட்ச மரத்தின் கனியை கொடுப்பேன் என்கிறார்.  கனியை சாப்பிடுகிறவனுக்கு மரணமில்லை. நாம் நித்யமாய் வாழப்போகிறது  வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு பின்பே. ஆக  ஆயிரம் வருட அரசாட்சிக்கு பின்பே ஜெயங்கொள்ளுகிறவன் ஜீவக்கனியை புசிப்பான். நித்ய ஆட்சியில் பங்கு பெறுவான். அரசாளுவோம்.
இப்படிப்பட்ட ஒரு நித்ய ஜீவனை தன் பிள்ளைகளுக்கு தருகின்ற கர்த்தர் வேறு ஸ்தானத்தையும் தருகிறார். நாம் அழைக்கப்ட்டதற்க்கான நோக்கம் பரலோக ப.ஏ. பரிசுத்தவான்களோடு இணைவதால் பூரணம் ஆகிறது. இது கர்த்தர் நியமித்தது.
அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
(எபிரேயர் 11: 40)
நமக்கு பிதாவாகிய தேவன் அனுப்பிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் பெற்ற இரட்சிப்பும் அவர் கற்பித்தவைகளும் அவர் அருளிய அபிஷேகத்தில் நிலைத்திருப்பதுனாலேயே
நாம் ஜெயங்கொள்ளப்போகிறோம். அதனால் நாம் அவர்களை பூரணம் ஆக்குகிறோம். கர்த்தர் எவ்வளவு பெரிய திட்டத்தை நம்மேல் வைத்துள்ளார் என்பதை இப்போது இந்த நாட்களில் தெரிந்துக்கொள்ள வேண்டும். கடைசி காலங்களான இப்போது நமக்கு வரும் உபத்திரவங்களில் பொறுமையாயும் தாழ்மையாயிருந்து கிழ்படிதலுக்கு நம்மை அர்ப்பணித்து ஆட்டுக்குட்டியானவரின் சுபாவத்தை அணிந்துக்கொண்டு ஜெயங்கொள்ளுவோம்.
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
அங்கே இராக்காலமிராது, விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை, தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
(வெளி.  விசேஷம் 22 :3, 5)
இங்கே அவர்கள் என குறிப்பிடப்பட்டிருப்பது யாரை? பன்மையிலுள்ளது. _தேவனின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிற நாம்தான் அரசாளுவோம்.

[3/31, 7:09 PM] Darvin Sekar Brother VT: இந்த இரண்டாம் மரணத்தில் பங்கடைபவர்கள் யார் யார் என்று வெளிபடுத்தல் 21:8 சொல்லுகிறது
8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று
        இதில் அனேக காரணங்கள் சொல்லப்ட்டிருந்தாலும் முதலாவதாக சொல்லப்பட்டுள்ள பயப்படுகிறவன் என்ற காரணம் கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது மற்றவை எல்லாம் பாவபட்டியலில் வந்துவிடும் பயபடுதல் நல்லவிசம்தானே என்று நினைக்கலாம் இங்குதான் நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது, அப்படியென்றால் இது எப்படிப்பட்ட பயம் என்று பார்ப்போம் இந்த பயத்தை புறம்பே தள்ளுவதில்தான் நாம் ஜெயிக்கும் ஜெயம் இருக்கிறது ஜெயம்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தில் சேதமடைவதில்லை
      வேதம் சொல்லுகிறது  மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்: கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
நீதிமொழிகள் 29 :25 மனுசனுக்கு பயப்படும் பயம் நமக்கு என்ன கண்ணியை வருவிக்கிரது இரண்டாம் மரணத்தை அது எப்படி என்று கேட்பீர்கள் சற்று நேரம் கழித்து மீண்டும் தொடரலாம். அன்புடன் கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பு சகோதரன் இ. டார்வின் சேகர்

[3/31, 7:14 PM] Elango: 👑 *இன்றைய வேத தியானம் - 31/03/2017* 👑
*ஜெயங்கொள்கிறவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனி  Rev. 2:7*
*ஜெயங்கொள்கிறவனுக்கு மறைவான மன்னா Rev. 2:17*
*ஜெயங்கொள்கிறவனுக்கு ஜாதிகளின் மேல் அதிகாரம் Rev. 2:26*
👉👆🏼 வெளிப்படுத்தின விசேஷத்தில் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட *ஜெயங்கொள்கிறவன்*  என்பவன் யார்❓ வெளிப்படுத்தின விசேஷம் 2:7, 11, 17, 2:26; 3:5, 12, 21; 21:7
👉 *ஜெயங்கொள்கிறவன்* என்பவனுடைய தகுதிகள் என்னென்ன❓ அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓
  🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 📚🌏

[3/31, 7:22 PM] Jeyanti Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 21
7  ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

[3/31, 7:23 PM] Jeyanti Pastor VT: எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுபவனே ஜெயங்கொள்பவன்

[3/31, 9:34 PM] Stanley VT: amen

[3/31, 10:02 PM] Elango: 👉 *ஜெயங்கொள்கிறவன்* என்பவனுடைய தகுதிகள் என்னென்ன❓ அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓
💪👑 தேவ ஆவியினால் நடத்தப்படுகிறவனாக இருக்க வேண்டும். ரோமர் 8:14
ரோமர் 8:14
[14]மேலும் *எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.*
💪👑 அனுதினமும் தன் சிலுவை எடுத்துக்கொண்டு,  இயேசுவை பின்பற்றுபவனாக இருக்கவேண்டும்.
மாற்கு 8:34
[34]பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: *ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.*
💪👑 கிறிஸ்துவானவர் எங்கே நம்மை இருக்க விரும்புகிறாரோ அவரையே பின்பற்றி வாழ்கிறவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:4
[4]ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; *ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே;* இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
💪👑 மாம்சத்தையும், இச்சையையும் சிலுவையில் அறைந்தவர்கள்.
கலாத்தியர் 5:24
[24] *கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.*
💪👑தீமையை சகிக்கிறவர்கள், தீமையை   நன்மையினால் ஜெயிக்கிறவர்கள்

2 தீமோத்தேயு 2:24
[24]கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், *தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.*
💪👑 கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகள்.
2 தீமோத்தேயு 2:12
[12] *அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;* 👑👑👑👑நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
இன்னும் ....

[3/31, 10:06 PM] Kishore VT: ஜெயம் பெற அருமையான  சத்தியம் thank you LORD

[3/31, 10:07 PM] Darvin Sekar Brother VT: மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும் அது நம்மை இரண்டாம் மரணத்தில் கொண்டுபோய்விடும் என்று சொல்லியிருந்தேன் ஆமாம் நாம் ஜெயிக்கிறவர்களாய் காணப்படவேண்டும் என்றால் கர்த்தருக்கு மாத்திரம் பயப்படுகிறவர்களாய் காணப்படவேண்டும் வேதம் சொல்லுகிறது  ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம், ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
மத்தேயு 10 :28
 உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. மத்தேயு 10 :30 நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள், ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 12 :5
   ஏனெனில் கடேநாட்கள் மிகவும் கொடிதாகிகொண்டிருக்கிறது உண்மை கிறிஸ்தவனுக்கு பெரிய அச்சுறுத்தல் உலகமெங்கும் உண்டாக துவங்கிவிட்டது இதற்கு நீ அஞ்சவேண்டாம் பயப்படவும் வேண்டாம் உன் ஜீவனை கொடுக்க வேண்டிவந்தாலும் கொடு உன் சரீரத்தை மாத்திரம்தான் அவர்களால் கொல்ல முடியும் ஆத்துமா அழிவிலிருந்து தேவனால் தப்பிவிக்கபடும் மனுஷனுக்குப் பயப்படும் பயம் ஆண்டவரை மருதலிக்கச் செய்யும் வேதம் சொல்லுகிறது அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
லூக்கா 22 :55
அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.
லூக்கா 22 :56
அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
லூக்கா 22 :57 சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
லூக்கா 22 :58
ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன் தான் என்று சாதித்தான்.
லூக்கா 22 :59
அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
லூக்கா 22 :60
     மருதலிக்கிறார் ஏன் பயம் இயேசுக்கே இந்த கதி எனக்கு என்ன சம்பவிக்குமோ என்று பயந்ததால் வந்த விளைவு வேதம் சொல்லுகிறது நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே, இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான், பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2 :10  அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
மத்தேயு 24 :9
அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
மத்தேயு 24 :10
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 24 :13 இதெல்லாம் இப்பம் நடக்குது பயபடாதுங்க இவைகள்மேல் ஜெயம்கொள்ளுங்கள் ஆமேன் தேவன்தாமே இந்த தூயதிருவார்த்தைகளை ஆசீர்வதிபாராக. அன்புடன் கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பு சகோதரன் இ. டார்வின் சேகர்

[3/31, 10:09 PM] Ebi Kannan Pastor VT: யோசுவா 1:7-8
[7]என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.
[8]இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.

[3/31, 10:17 PM] Elango: மேலும் அன்பை குறித்து சொல்லும் போது ... அன்பு சகல பாவங்களையும் மூடும் என்று வேதம் சொல்கிறது.
ஒரு மகன் செய்கிற தவறுகளை தகப்பன் உடனே தண்டித்து விட மாட்டான், மற்றவர்களிடத்தில் வந்து காட்டிக்கொடுக்க மாட்டான் .. அவன் செய்த தப்பை எல்லாம் மன்னித்துவிடுவான் ..அன்பு இதைதான் செய்யும்..❤♥❤💚💙💜💛
அன்பு உடனே தண்டிக்காது, அன்பு உடனே நியாயந்தீர்த்துவிடாது ...அன்பு அரவணைத்து செல்வதாக காணப்படும்.

1 பேதுரு 4:8
[8]எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; *அன்பு திரளான பாவங்களை மூடும்.*💜💙💙💛❤
நம் மகனில் நாம் வைத்திருக்கிற பாசம் அந்த தவறை பெரிதாக எடுத்துக்கொள்ளாது .. அது மறைந்துவிட்டது.. அது மூடப்பட்டது ...
இதே அன்பு ... பிறர் தவறு செய்யும் போது நாம் எகிறுவர்களாக காணப்படுகிறோம்.😠😠☹☹☹அந்த அன்பு எங்கே போய்விட்டது என்று சிந்திக்க வேண்டும்.
ஆண்டவர் சொல்கிறார் ...முதலாவது நீ தேவனை நேசி பிறகு நீ உன்னை நேசிப்பது போல  பிறனையும் நேசி...❤💙💛
நம்மிடம் இப்படிப்பட்ட அன்பு, நேசம் இருக்கிறதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
*நாம் ஜெயிக்கிற ஜெயம்.. பிறரிடத்தில் வைக்கும் அன்பை பொறுத்து காணப்படுகிறது என்பதை நான் இந்த இடத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்* 👑👍❤✝
- சகோ. டார்வின் சேகர் @Darvin Sekar Brother VT

[3/31, 10:40 PM] Elango: நாம் எவ்வளவுதான் ஆண்டவருக்கு ஓடி ஓடி ஊழியம் செய்தாலும் ... எவ்வளவு தான் நாம் கள்ளப்போதகர்களை கண்டுப்பிடித்தாலும்...இளைப்பின்றி நாம் ஓடினாலும் .. அதையெல்லாம் அன்பில்லாமல் செய்தால் அது எல்லாம் வீண் என்று சொல்கிறது‼
ஏன் ஆண்டவர் .. இப்படி சொல்கிறார் என்று பார்த்தோமானால் ...நல்ல சமாரியனை குறித்து வேதம் சொல்கிறது ...
மூன்று விதமான மனிதர்கள் கடந்து போகிறார்கள் .. ஒருவன் லேவியன், இன்னொருவன் பரிச்சேயன் ... மூன்றாவது சமாரியன்.
*இவர்களெல்லாம் கற்ப்பனையை கைக்கொள்கிறவர்கள் ...தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்கள் ஆனால் அன்பில்லாதவர்கள் ...*‼
அன்பில்லாததின் நிமித்தம் ... அவர்களுக்கு .. குற்றுயிருமாக, குலையிருமாக கிடப்பனை பார்ப்பதற்க்கு கூட விருப்பமில்லை...
*அவர்களுக்கென்ன ...,ஆண்டவரை தேட வேண்டும் ... ஆண்டவரை தேடுவதற்க்கு அடையாளம் இதுவல்ல ...நாம் முதலாவது அன்புள்ளவர்களாக காணப்பட வேண்டும்...*❤♥💚💛💙
ஒருவன் தண்ணீர் இல்லாமல் இருக்கிறான் , ஒருவன் ஆகாரமில்லாமல் இருக்கிறான் அவர்களை விட்டுவிட்டு நாம் ஆண்டவருக்காக ஓடிக்கொண்டிருந்தால் அந்த ஓட்டத்தில் ...பிரயோஜனம் அற்றதாக காணப்படும்.
கிறிஸ்து இந்த உலகத்திலே எல்லா மனிதர்களுக்காகவும் வந்தார் ...எல்லா மனிதரையும் நேசித்தார், எல்லா மனிதருக்காகவும் இரத்தம் சிந்தினார் ...
*அந்த சமாரியன் ... அவனுக்கு எல்லா உதவிகளையும் செய்தான் ...அவன் ஏற்ப்புடையவனாக ... ஜெயங்கொள்கிறவனாக காணப்பட்டான்*💪👍✅🙋♂🙏👏👑
கிறிஸ்தவர்கள்,  ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறேன் என்று சொல்லப்படுகிற ...அவர்கள் ஜெயிக்க முடியாமல் தோற்றுப்போனவர்களாக காணப்பட்டார்கள் ...👏👑👍🙏
ஆகையால் நம்முடைய அன்பு எப்படிப்பட்டதாக காணப்பட வேண்டும், நம்முடைய அன்பு சோதிக்கப்பட வேண்டும் ... நாம் எப்படியிருக்கிறோம் என்று ஆராய வேண்டும்.
இவைகளில் நாம் ஜெயித்தால் தான் ... ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க முடியும்.👆🏼👑🙏👍❤
- சகோ. டார்வின் சேகர் @Darvin Sekar Brother VT

[3/31, 11:01 PM] Elango: 1 கொரிந்தியர் 13:3
[3] *எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.*
அன்னதானம் செய்கிறார்கள் ... அவர்களைப் பார்த்து நாம் நினைப்போம் ... இவர்கள் அன்பில்லாமலா அன்னதானம் செய்கிறார்கள் என்று 👆🏼👆🏼👆🏼
ஆனால் அதனை ஆமாம் என்று பவுல் சொல்கிறார்..
*அவர்கள் எப்படி செய்தார்கள் என்றால் ... தற்பெருமை☹☹, தன் பெயரை உயர்த்தவும், மக்களிடம் அந்தஸ்த்தை பெறவும்...பேர் புகழ் பெறவும்.. அன்பில்லாமல் அன்னதானம், சரீரத்தையும் சுட்டெடுக்க கொடுக்கிறார்களாம்.
அவர்கள் அன்பில்லாமல் அப்படி செய்கிறார்கள்... அவர்களுக்கு ஆண்டவரைக்குறித்து பயமில்லை...தேவ நாமம் மகிமைப்பட வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு கிடையாது... இப்படிப்பட்டதான காரியங்ள் என்பது அன்பை வெளிப்படுத்த மாட்டாது .. தண்டனையையே கொண்டு வரும் ...ஜெயங்கொள்கிறவர்களாக நாம் மாற முடியாது ...👆🏼👆🏼👆🏼👆🏼
*நாம் எப்படி இருக்கிறோம், நம்முடைய ஊழியம் எப்படிப்பட்டதாக காணப்படுகிறது ... நம்முடைய புகழ்ச்சிக்காக ஊழியம் செய்கிறோமா? தேவன் மேல் வைத்த அன்பினால் செய்கிறோமா அல்லது ஜனங்கள் மேல் வைத்த ஆத்ம பாரத்தினால் செய்கிறோமா என்பதை நாம் சிந்திக்கப்பார்க்க வேண்டும்.*🙏👍👏❤❤❤💚♥👑👆🏼👆🏼🙋♂🙋♂
அப்படி நாம் நம் தவறுகளை உணர்ந்து உண்மையான அன்பை வெளிப்படுத்தி ...செயல்ப்பட்டால் நாம் ஜெயிக்கிறவர்களாக காணப்படுவோம், அப்பொழுது நாம் பரதீசின் மத்தியிலிருக்கிற  ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிப்போம் என்பதை இந்த இடத்தில் தாழ்மையாக சொல்லிக்கொள்கிறேன்.🙋♂💚🙏👑❤
வெளிப்படுத்தின விசேஷம் 2:7
[7] *ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.*
- சகோ. டார்வின் சேகர் @Darvin Sekar Brother VT

[3/31, 11:25 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்,  இயேசுகிறிஸ்துவின் இனிதான நாமத்திலே குழுவினர் யாவரையும் வாழ்த்துதலையும், வணக்கத்தையும் முதலாவதாக தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🙋♂
இந்த ஜெயங்கொள்கிற மனுசனுக்கு கிடைக்கும் பரிசு என்வென்றால் ...ஜீவ விருட்சத்தின் கனி...🍏🍎🍊🍋🍊
இந்த ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்கும் அதிகாரம் ஆதிமனிதனாகிய ஆதாமுக்கு கொடுக்கப்பட்டிருந்தது...
ஆனால் அந்த கனீயை புசிப்பதற்க்கு முன்பாக அவனிடம் ஒரு பரிட்சை நடத்தப்பட்டது அந்த பரிட்சையில் அவன் தோற்றான் ...👎👎👎
ஏதேன் தோட்டத்தில் தேவன்... ஆதாமை படைத்து அவனுக்கு துணையையும் ஏற்ப்படுத்தி ... பின்பு தேவன் கட்டளையாக கொடுக்கும் போது ... எல்லாவற்றையும் அநுபவியுங்கள் புசியுங்கள் ... ஆனால் இந்த தோட்டத்தின் மத்தியிலிருக்கிற ... நன்மை தீமை அறியயத்தக்கதான விருட்சத்தின் கனியை ...மாத்திரம் நீங்கள் புசிக்க வேண்டாம் புசிக்கிற நாளில் நீங்கள் சாவீர்கள் ... என்றார்
இது தான் அவனுக்கு தேவன் கொடுத்ததான பரிட்சை ...ஆனால் தேவனால் வைக்கப்பட்ட அந்த பரிட்சையிலே அவன் தோற்றுவிட்டதாக காணப்பட்டான் ... இவன் தேவனுடைய வார்த்தைக்கு செவிக்கொடுத்து ...ஆண்டவர் வைத்த பரிட்ச்சையிலே அவன் தோற்றுப்போனவனாக காணப்படுகிறான் ...👎👎😔😔😔

இந்த தோற்றதின் நிமித்தம் அவனுக்கு கொடுக்கப்படுகிற தண்டனை என்ன என்று பார்த்தால் அவன் தோட்டத்தை விட்டு துரத்தப்படுகிறான் ...

ஆதியாகமம் 3:24
[24] *அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.*
ஆதியாகமம் 3:22
[22]பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; *இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,*
ஆனால் அடுத்து ஆதாம் இந்த பரிட்சையில் தோற்றுவிட்டான்... யார் ஜெயிக்கிறவனாக காணப்படுகிறானோ அவனுக்கு இந்த ஜீவ விருட்சதௌதின் கனியை கொடுப்பேன் என்கிறார்.
*ஜெயிக்கிறவனுக்கான தகுதி*👇👇👇👇

வெளிப்படுத்தின விசேஷம் 2:2-5
[2]உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
[3]நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
[4]ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
[5]ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
எபேசு சபை ஒரு நல்ல ஆக்டிவான சபை, ஆண்டவருக்காக ஓடுகிற சபை.. இப்படிப்பட்டதான. ஒரு திருச்சபைக்கு ஆண்டவர் சொல்கிறார் ... ஒரு குறை இருக்கிறது என்று ...
*ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வானால் நீ தோற்க்கிறவனாக இராமல் ஜெயிக்கிறனாக இருப்பாய் என்று ஆண்டவர் சொல்லுகிறார்*🙋♂🙏💪👍👏👑👑👑👑
- சகோ. டார்வின் சேகர் @Darvin Sekar Brother VT

Post a Comment

0 Comments