[3/9, 7:58 AM] ⚖🔵 *இன்றைய வேத தியானம் - 09/02/2017* ⚖🔵
*வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள். மத்தேயு 5 :20*
👉பரிசேயர், வேதபாரகர் என்பவர்களுடைய நீதிகள் எவையெவைகள்❓
👉நாம் எப்படி பரிசேயர், வேதபாரகர் என்பவர்களுடைய நீதிகளைவிட அதிக நீதிகளை கைக்கொள்ள முடியும் / வேண்டும்❓
*வேத தியானம்*
[3/9, 8:20 AM] Stanley VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.
நாங்கள் பிறப்பாலும் வாழ்வாழும் சுயஞானத்தலும் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் பாவிகளாய் இருப்பாதால் நீதாமே எங்களை மீட்டு நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட மாக மேன்மையான இரக்கத்திற்க்காகக கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு கொடுத்தத இன்றய தலைப்பில் நீரே தகுந்த உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.
[3/9, 8:24 AM] Ebi Kannan Pastor VT: 2 பேதுரு 1:1-2
[1] *நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால்* எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
[2]தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
[3/9, 9:21 AM] Charles Pastor VT: பரிசேயரின் நீதி என்பது *அவார்கள் தேவனுக்காக செய்யும் கிரியை மற்றும் பக்தி வைராக்கியத்தை குறிக்கிறது*
பரிசேயரின் கிரியை:-
லூக்கா 18: 11
பரிசேயன் நின்று: தேவனே! நான் *பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால்* உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
Luke 18: 11
The Pharisee stood and prayed thus with himself, God, I thank thee, that I am not as other men are, extortioners, unjust, adulterers, or even as this publican.
லூக்கா 18: 12
*வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன்* என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
Luke 18: 12
I fast twice in the week, I give tithes of all that I possess.
[3/9, 9:35 AM] Stanley VT: மேட்டிமையாய் ஜெபித்துவிட்டதாக தேவனால் நினாதிக்கபட்டதென்றாலும்
நீதியை பற்றிய தகவல்.---
---அநீதி விபச்சாரம் வெறுத்து விலக்கி வாழ்ந்தனர்.
--நல்ல வாழ்விற்க்காய் ஸ்தோததரித்தல்
--வாரத்தில் இரு முறை உபவாசிக்கும் ஒழுங்கு
--தன் சம்பாதியத்தில் 10ல் ஒரு பங்கை சரியாக ஆலத்தில் செலுத்தியது (சபை ஒழுங்கை கடைபித்தல்)
-- ஜெபித்தல்
நீதியாக கணக்கில் கொள்ளலாமா !
[3/9, 9:41 AM] Stanley VT: பவுல் நியாய பிரமானத்தின் படி பரிசேயன் என்று தன்னை குறிப்பிட்டுள்ளார்.
நியாய பிரமானத்தில் பரிசேயர் நியமன ஒழுங்கை குறித்த குறிப்பை அறிந்தவர்கள் பதிவிட்டால் நலம்.
மேலும் வேதத்தில் சொல்ல படாத வேத தகவல்களை தெரிந்தவர்கள் குறிப்பு தருக.
[3/9, 9:49 AM] Jeyachandren Isaac VT: 27 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
மத்தேயு 23 :27
[3/9, 9:49 AM] Jeyachandren Isaac VT: 28 அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
மத்தேயு 23 :28
[3/9, 10:01 AM] Jeyachandren Isaac VT: 28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்,அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.
யோவான் 18 :28
"தீட்டுபடாமல் பஸ்காவை புசிக்கத்தக்கதாக"
👆நியாயப்பிரமாண ஒழுங்கை நிறைவேற்ற மிக கவனமாகவும், ஆனால் அதில் சொல்லபட்ட மேசியாவையோ மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கும் அளவிற்கு அறியாமையுள்ளவர்களுமாய் இருந்தது வியப்புக்குரியதே🤔
[3/9, 10:03 AM] Charles Pastor VT: பரிசேயன் - *புறம்பான அலங்காரம்*
இன்றைய கிறிஸ்தவன் - *உள் அலங்காரம்*
இந்த இரண்டுமே தவறானது
*-உள்ளும் புறமுமான அலங்காரமே தேவன் விரும்புவது*-
[3/9, 10:08 AM] Jeyaseelan VT: *வேதபாரகர், பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இராவிட்டால்....*
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் வாயில் இருந்து புறப்பட்ட உலகை நியாயம் தீர்க்கப்போகும் வார்த்தைகளில் "யார் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது" என்பது சம்பத்தப்பட்ட இரண்டாவது வார்த்தை:
"வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்(மத்:5:20)
வேதபாரகர் பரிசேயர் என்பவர்கள் ஆண்டவராகிய இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பழைய ஏற்ப்பட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தாங்கள் அனைத்தும் அறிந்தவர்கள் என்ற நோக்கில் போதனை செய்த பெரிய மனிதர்கள் என்று அறிய முடிகிறது. இவர்களை பற்றி ஆண்டவர் பல இடங்களில் "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்பதில் ஆரம்பித்து நீங்கள் பிசாசின் பிள்ளைகள் எனவே உங்கள் தகப்பனின் கிரியையை செய்ய விருப்பமாயிருக்கிறீர்கள் என்பது வரை" மிக அதிகமான விமர்சனங்களை கூறி கடிந்துகொண்டுள்ளர்.
கடைசியில் ஆண்டவரை மரண ஆக்கினைக்குள் தீர்த்தவர்களும் அந்த மகா கணம் பொருந்திய வேதபாரகர் பரிசேயர்கள் தான்! (மத் 20:)
அப்படி அவர்களை கடுமையாக கடிந்து கொண்ட ஆண்டவர் அவர்களை கடிந்துகொள்ளும்போது அனைவருக்கும் போதனையாக சொன்ன வார்த்தைதான் மத்தேயு 5:20.
வேதபாரகர் பரிசேயரை விட நாம் அதிக நீதி செய்யவேண்டுமென்றால் முதலில் அவர்களின் நீதி என்ன என்பதை நாம் அறிய வேண்டும்.
🎈1. அவர்கள் வேத வாக்கியங்களை நன்றாக அறிந்திருந்தனர்.
வேதபாரகரும் பரிசேயரும் வேதவாக்கியங்களை நன்றாக அறிந்து வைத்திருந்தனர் என்பதை அவர்கள் மோசேயின் நியமனங்களை சுட்டி காட்டியதிலும், ஆபிரகாம் பற்றி மோசே பற்றி கேள்விகள் எழுப்பியதிளுமிருந்து அறிந்துகொள்ள முடியும். அதுபோல் நாமும் நம் கையில் உள்ள வேதாகமத்தில் முழுமையாக பலமுறை படித்து, ஆண்டவர் வேதத்தின் மூலம் நமக்கு என்ன சொல்கிறார் எதை செய்யலாம் எவற்றை செய்யக்கூடாது என்ற பொதுவான சத்தியத்தை அறியவில்லை என்றால் ஒருகாலும் அவர்களை விட அதிக நீதி செய்ய முடியாது. எனவே முதலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் கையில் உள்ள பரிசுத்த வேதாகமத்தை தொடக்கம் முதல் முடிவுவரை கிரமமாக படித்து ஆண்டவரின் மனவிருப்பம் என்ன என்பதை முதலில் அறியவேண்டும் அதை அறிவயும் வாஞ்சை வர வேண்டும். அரைகுறை படிப்பு, அங்கொன்றும் இங்கொன்றும் படிப்பு போன்றவற்றின் மூலம் வேதத்தின் உண்மை செய்தியை அறிவது கடினம்!
🎈2. அவர்கள் வேத வார்த்தைகளின்மேல் வைராக்கியம் உள்ளவர்கள்.
ஆம்! வேதபாரகரும் பரிசேயரும் வேத வாக்கியங்களின் மேல் மிக அதிக வைராக்கியம் உள்ளவர்களாக இருந்தனர் எனவேதான் ஆண்டவராகிய இயேசு அதில் சிறிய மாற்றம் செய்வதைக்கூட அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை! முக்கியமாக ஒய்வு நாளில் ஆண்டவர் சுகமாக்கியதைகூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாமும் நமது கையில் உள்ளவேத வார்த்ததைகள் மீது அறிவுக்கேதுவான வைராக்கியம் உள்ளவர்களாக இருப்பது நல்லது. நமது இஸ்டத்துக்கு ஏற்றாற்போல் வேத வார்த்தைகளை புரட்டாமல், நமக்கு சாதகமாக இருக்கு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிராக இருக்கும் வசனங்களை கண்டுகொள்ளாமல் விடுதல் போன்ற புரட்டுகள் இல்லமால், வேத வார்த்தைகளுக்காக எதையும் இழக்க தயாராக இருக்கும் ஒரு வைராக்கியத்துடன் வாழ்கிறோமா? என்று நம்மை நாமே ஆராய்வது நல்லது!
🎈3. அவர்கள் பழைய ஏற்ப்பாட்டில் தேவனிட்ட கட்டளைகளை சரியாக கைகொண்டனர்!
"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி," மேற்கண்ட வார்த்தைகளை ஆண்டவர் வேதபாரகர்களை நோக்கி சொல்வதன் மூலம் அவர்கள் பழைய ஏற்ப்பட்டு கட்டளையாகிய விருத்த சேதனம் பண்ணுதல், தசமபாகம் செலுத்துதல் போன்ற கட்டளைகளை சரியாக கைகொண்டனர் என்பதை அறியமுடியும்.
நாம் எப்படி? புதிய ஏற்ப்பாட்டில் ஆண்டவராகிய இயேசு சொன்ன போதனைகளில் எத்தனை போதனைகளை நமது வாழ்க்கையில் கைகொள்கிறோம்? என்மேல் அன்பாயிருக்கிரவன் என் வார்த்தைகளை கைகொள்வான் என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்கிறாரே!
அவர் கட்டளையிட்டதுபோல் பிறருக்கு சுவிசேஷம் அறிவிக்கிறோமா?
அல்லது நான் நரகத்துக்கு தப்பித்துவிட்டேன் என்று சுய திருப்தி அடைந்துவிட்டு சும்மா இருக்கிறோமா?
ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
இப்படி வேதபாரகரும் பரிசேயரும் தேவனுடைய வார்த்தைகளை நன்றாக அறிந்து, அதன்மேல் வைராக்கியமாய் இருந்து, அவற்றை கைக்கொண்டு நடப்பதெல்லாம் சாதாரண நீதி என்று இயேசு சொல்லிவிட்டார் ஏனெனில் அவர்களைவிட நம்மிடம் இயேசு அதிக நீதியை எதிர்பார்க்கிறார்.
உங்கள் நீதி அவர்கள் நீதியைவிட அதிகமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்
சரி இப்பொழுது வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத விஷேசித்தவைகள் எது என்று இயேசு குறிப்பிடார் என்பதை இங்கு👇 பார்க்கலாம்
நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும். (மத்:23)
நீதி, விசுவாசம், இரக்கம் இவை மூன்றும் வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத விசேஷித்தவைகள் என்று இயேசு குறிப்பிட்டுள்ளார் அவற்றை பற்றி சற்று ஆராய்வோம்.
🌷நீதி
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; (சங்:89:14)
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.(சங் 97:2) தேவனுடைய சினகசானத்தின் ஆதாரமே நீதியும் நியாயய்மும்தான் என்று சங்கீதக்காரன் இருமுறை சொல்கிறான். எனவேதான் கர்த்தர் வேதத்தில் அனேக இடங்களில் "நீதியாய் நடவுங்கள்" "நீதி செய்ய படியுங்கள்" "நீதியும் நியாயமும் செய்யுங்கள்" (நீதி 29:3,எரே:22:3) என்று திரும்ப திரும்ப சொல்கிறார்.
உண்மையான நீதி எப்படிப்பட்டது தனக்கு லாபமா நட்டமா, தன் பிள்ளையா பிறர் பிள்ளையா? தன் ஜாதியா பிற ஜாதியா? தன் மதமா, தன் சபையா, தனக்கு வேண்டியவரா? என்றெல்லாம் ஆராய்ந்து நியாயத்தை புரட்டாமல் பணத்தையும் அந்தஸ்த்தையும் அழகையும் பார்த்து மயங்காமல் இவற்றுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு, நியாயமாக செயல்படுவதுதான் நீதியாக நடப்பது ஆகும். வேத பாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த நீதி நம்மிடம் உள்ளதா என்று ஆராய்ந்து பார்ப்போம்.
🌷இரக்கம்!
"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" (புல:3:22) என்று வேதம் சொல்கிறது. "இரக்கப்ப்ட்டுகிறவர் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" என்று இயேசு கூறியுள்ளார். உண்மையான இரக்கம் எப்படிப்பட்டது நல்ல சமாரியன் கதையில் வரும் சமாரியனை பாருங்கள், யாரோ ஒரு அறியாதவனுக்காக தன் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க முன்வந்தான். ஆண்டவரின் இரக்கத்தை பாருங்கள் நாம் பாவி என்று அறிந்திருந்தும் நமக்காக ஜீவனை கொடுக்க முன்வந்தார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நம்மிடம் தேவையுடன் வரும் ஜனங்களுக்கு நம்மாலியன்ற உதவி செய்கிறோமா? உதவி செய்ய முடியாவிட்டாலும் நமது முடியாமைக்காக வருந்துகிறோமா? அல்லது "தனக்கு போகத்தான் தானம்" என்ற நல்ல உலக கோட்பாடில் வாழ்கிறோமா? என் காதுகள் கேட்க ஒரு பெரிய சபையின் பாஸ்டர் "என்னை யாராவது தேடி வந்துவிட்டால் ஏதாவது உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது" என்ற சொன்ன வார்த்தையை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை! என்னை பொறுத்தவரை என்னிடம் அனுப்பப்படும் ஒவ்வொருவரும் ஆண்டவரால் அனுப்பபடுகிரவராகவே நான் கருதுகிறேன். வருபவர் மோசமானவர் என்று நாம் அறியாத பட்சத்தில், நமக்கு உதவே செய்ய திராணி இருந்தும் நிராகரிப்பது சரியான சரியான செயல் அல்ல என்றே கருதுகிறேன். நாம் என்ன நோக்கத்தோடு உதவி செய்கிறோம் என்பதை வைத்துதான் ஆண்டவர் அதை அங்கீகரிக்கிராறேயன்றி மற்றபடியல்ல!
இரக்கம் என்பது மஹா பெரியாது! எக்காலத்திலும் யாருக்காகவும் அதவாது தனக்கு அனேக தீங்குகள் செய்த ஒருவனுக்கு கூட மனமுருகுவதுதான் இரக்கம்! விபச்சாரம் செய்தவர்களை கல்லெறிந்து ந்து கொல்லவேண்டும் என்று கூடி நின்ற வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த இரக்கம் உங்களிடம் உள்ளதா? என்று நம்மை நாமே ஆராய்வோமாக!
🌷விசுவாசம்!
தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். (ஆப:2:4)
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.(கலா 3:11)
☝இந்த வேத வார்த்தைகளை ஆராய்ந்து பார்ப்போமானால் இங்கு "விசுவாசித்தவர்கள் எல்லாம் பிழைப்பார்கள்" என்று எழுதவில்லை எழுதவில்லை. விசுவாசத்தோடு நீதிமானாய் இருப்பவர்கள்தான் பிழைப்பார்கள் என்றே கூறுகிறது. அதாவது நீதிமானாய் இருக்கிறவன் தன் விசுவாசத்தால் பிழைப்பன் என்பதே சரியான பொருள் என்று கருதலாம்.
இறைவன் என்று ஒருவர் இருக்கிறார், இயேசு நமக்காக மரித்தார், ஆண்டவர் வார்த்தைகள் சத்யமானது, அவர் சொனதை செய்வார் என்றெல்லாம் விசுவாசம் இன்று கிறிஸ்த்தவர்கள் எல்லோருடமும் உள்ளது
தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. (யாக:2:19)
அது தேவைதான்! ஆனால் ஆனால் கிரியை இல்லாத வெறும் விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை என்பதை யாக்கோபு தன் நிருபத்தில் திருப திரும்ப சொல்வதை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.
வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? (யாக:2:20)
ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. (யாக 2:26)
இன்றைய காலகட்டங்களில் விசுவாசிகளும் பாஸ்டர்களும் எவ்வகையான விசுவாசம் வைத்துள்ளனர் என்றே புரியவில்லை! எதாவது ஒரு சிறு தலைவலி வந்தால் கூட உடனே உலகிலேயே பெரியவியாதி எதுவோ அது வந்திருக்குமோ என்று பயப்படுவதையும் தடுமாறுவதையும் பலமுறை பார்க்க முடிகிறது. அவர்கள் பயந்தது போலவே மிகபெரிய வியாதிகள் அவர்களை தாக்குகிறது. இது ஏன? விசுவாசமின்மை அல்லவா? தேவன் மேலுள்ள விசுவாசம் எங்கே போனது?
பயம் இருக்கும் இடத்தில் விசுவாசம் இல்லை! அசைக்க முடியாத மிக உயர்ந்த விசுவாசந்த்தை ஆண்டவர் ஒருவரால் மட்டுமே தரமுடியும். அதை அடைய நாம் அவர் சித்தப்படி வாழ வேண்டும். அவருக்கு முழுமையாக கீழ்படிய வேண்டும் அப்பொழுது மட்டுமே வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உன்னத விசுவாத்தை நாம் பெறமுடியும்.
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவா 15:5) என்று நமக்காக பரிதபித்து, ஜீவனை கொடுத்து ஆண்டவர் பெற்றுதந்துள்ள பரிசுத்த ஆவியின் பெலத்துடன் இன்றே முயற்சி செய்வோம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கும் உன்னத நிலயை அடைவோம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
http://karthar.blogspot.in/2009/02/blog-post_11.html?m=1
[3/9, 10:13 AM] Elango: ஆமென்.
லூக்கா 11:40
[40]மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் *உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?*
[3/9, 10:16 AM] Elango: ஆமென் 👏
ரோமர் 4:5
[5] *ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.*
[3/9, 10:38 AM] Elango: ⚖🔵 *இன்றைய வேத தியானம் - 09/02/2017* ⚖🔵

[3/9, 10:50 AM] Stanley VT: மேட்டிமையாய் ஜெபித்துவிட்டதாக தேவனால் நினாதிக்கபட்டதென்றாலும்

[3/9, 10:51 AM] Stanley VT: பவுல் நியாய பிரமானத்தின் படி பரிசேயன் என்று தன்னை குறிப்பிட்டுள்ளார்.

[3/9, 10:58 AM] Stanley VT: நியாய பிரமானத்தின் படி பரிசேயன் என்று எழுதியதன் பொருள் என்ன.
பரிசேயம் ஒரு நியமன பதவியா?
[3/9, 10:58 AM] Levi Bensam Pastor VT: போதகர் 👆
[3/9, 10:59 AM] Levi Bensam Pastor VT: யோவான் 3:1,10
[1]யூதருக்குள்ளே அதிகாரியான *நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன்* ஒருவன் இருந்தான்.
[10] *இயேசு அவனை நோக்கி: *நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும்* இவைகளை அறியாமலிருக்கிறாயா?
[3/9, 11:02 AM] Stanley VT: நன்றி
பரிசேயன் என்றால் போதகர்.
நியாய பிரமானம் மமுற்றிலும் கற்று மக்களுக்கு போதிப்பவர்.
[3/9, 11:04 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 13: 52
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.
Matthew 13: 52
Then said he unto them, Therefore every scribe which is instructed unto the kingdom of heaven is like unto a man that is an householder, which bringeth forth out of his treasure things new and old.
👍👍👍
[3/9, 11:05 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 13: 52
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், *பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற* வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.

[3/9, 11:08 AM] Stanley VT: பரிசேயர் =
1. போதகர்.
2. நியாய பிரமானம்
கற்றுனர்ந்தவர்
3. தேவனை
ஸ்தோத்தரிப்பவர்.
4. அநீதி விபாச்சாரம்
வெறுத்து விலக்குபவர்.
5. வாரம் இரு முறை
உபவாசிப்பவர்.
6.பாவிகளுக்கு விலகியே
இருப்பவர்.
7. வருமானத்தில்
தசம பாகத்தில் மிகச்
சரியாக இருப்பவர்.
8. ஆலயம் வந்தும்
ஜெபிப்பவர்
மேலும்....
[3/9, 11:13 AM] Elango: இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக❗
*பொதுவாக பரிசேயர், சதுசேருடைய நீதி நியாயத்தைப் பார்க்கிலும், அதிக நீதி என்பது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தில் தான் துவங்குகிறது.*‼✝✅
குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை ஒருவன் விசுவாசித்தால் ... அதுதான் பரிசேயர் சதுசேயர் நீதியைப் பார்க்கிலும் அதிக நீதியை கொண்டது.
சதுசேயர் பரிசேயர் என்பவர்களுடைய நீதி என்பது கிரியைகளினால் உண்டான நீதி அதாவது பாரம்பரியமான சடங்காசாரமான கிரியைகளினால் தங்களை நீதியுள்ளவர்களாக காட்டிக்கொண்டார்கள். 🕎🕎🕎 அது விசுவாச கிரியைகள் அல்ல❗
ஆனால் அதை பார்க்கிலும் மேலான நீதி என்பது குமாரனாகிய இயேசுவை விசுவாசிப்பதால் உண்டாகும் நீதி.
அதைதான் ஆண்டவர் இயேசீகிறிஸ்து சொல்கிறார் ....குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நீதியை நாம் எப்படியெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்? பரிசேயர்கள் நீதியைப் பெற்றுக்கொள்ள என்னவெல்லாம் செய்தார்கள்? என்பதை சொல்ல வேண்டும்.
யாக்கோபு பொதுவாக சொல்கிறார் ... நீ விசுவாகிறேன் என்கிறாய் ... அவனோ விசுவாசத்தை கிரியையின் மூலமாக காண்பிக்கிறேன் என்கிறான்....
விசுவாசிக்கிறவனை விட, கிரியையை காண்பிக்கிறவன் பரவாயில்லையே என்கிறார் யாக்கோபு.
விசுவாச கிரியையின் மூலமாக நாம் கிறிஸ்துவின் நீதியை எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் பின்னாளில் நாம் பார்க்கலாம்.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT
[3/9, 11:25 AM] Stanley VT: தேவன் தன் விசுவாச
பிள்ளைகளுக்கு தான்
இப்படியான கட்டளை ஆலோசனை
வைக்கிறார்.
ஏற்றகனவே தேவ குமாரனை ஏற்று கொண்டு அவர் பின்னே சென்றவர்களை நோக்கி தான்
பரிசேயன் செய்யும் எந்த காரியத்தை காட்டிலும் நம் நீதியின்கிரியைகள் சற்று அதிகமாகவே இருந்தாலே நித்திய ஜீவனை கொள்ள முடியும் என்பதே ஆண்டவரின் கருத்து.
நீதியின் பிள்ளைகள் பிரபத்தின் பிள்ளைகளைவிட நீதியில் தேவபக்தி சிரத்தையில் கூடுதலாக இருக்க வேண்டியதை வலியுருத்துகிறார்.
நான் ஆண்டவராகிய இயேசப்பாவை தேவகுமாரன் என்று விசுவசிப்பது போதுமானதன்று
உலக மக்களை காட்டிலும் தேவபக்தியில் நீதியின் கிரியையயில் கூடுதலாக இருப்பது நித்திய வாழ்வின் தகுதிக்கு கட்டாயமே
இது தேவனால் இடப்பட்ட கட்டளையே.
இதில் வேத வசனத்தின்படி No compromise.
[3/9, 11:26 AM] Stanley VT: கிரியை இல்லா விசுவாசம் இறந்ததே
[3/9, 11:32 AM] Elango: ஏசாயா 64:6
[6] *நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது,**⃣*⃣*⃣*⃣ நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.
[3/9, 11:38 AM] Elango: 👏👍👍👍👍👍
மத்தேயு 19:22-24
[22]அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
[23]அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: *ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*😭😭😭😭😭😭😭
[24]மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
[3/9, 12:54 PM] PrinceDaniel VT: Indraya vetha thiyanam???
[3/9, 12:56 PM] Elango: ⚖🔵 *இன்றைய வேத தியானம் - 09/02/2017* ⚖🔵

[3/9, 1:45 PM] Jeyaseelan VT: *பரிசேயர் என்பவர் யார்??????*
பரிசேயர்கள்கலிலேயாவில் வாழ்ந்தவர்கள். கிரேக்கச்சொல் "பாரிசெயாச்". எபிரேயச் சொல் "பெருசீம்". பரிசேயர் கிரேக்கச் சொல்ஒருமையில் "பாரிசேயாச்" என்றும், பன்மையில்
"பாரிசேயாய்" என்று
கூறலாம்.
பரிசேயர்கள் மற்றவர்களைக் காட்டிலும்தங்களை வேறுபடுத்திக்கொண்டவர்கள். பரிசேயன் என்றால், "பிரித்தெடுக்கப்பட்டவன்"
என்றுபொருள்.
கி.மு.இரண்டாம் நூற்றாண்டின்ஆரம்பத்திலும் மூன்றாம் நூற்றாண்டின்கடைசி பகுதியிலும் பாலஸ்தீனாவில்உள்ள 'ஹாசிடிம்' (Hasidim) என்றபக்திக்குரிய மக்கள் வாழ்ந்தார்கள்.
மக்கபேயர் புரட்சியின்போது இந்தஹசிடியர்கள் - மக்கபேயர்களுக்குஆதரவாக இருந்தார்கள்.
இவர்கள் "காசீடிம்" என்றவகுப்பாரிலிருந்து வந்தவர்கள்.
'ஹசிடிம்' என்ற சொல்லை சிலர் 'சாசிடிம்' (Chasidim)
என்று உச்சரிக்கிறார்கள். இச்சொல்சங்கீத புத்தகத்தில் 23 தடவைவருகின்றது.
அங்கு இச்சொல் "பரிசுத்தவான்கள்" என்றுமொழிபெயர்த்துள்ளது. நடுத்தரகுடும்பத்தைச் சார்ந்தவர்கள். மதப்பிரகாரமாக சுத்தமில்லாதகரியங்களிலிருந்து
தங்களை பரிசேயர்வேறு
படுத்திக் கொண்டார்கள்.
பின்னர், ஹாஸ்மோனியர்ஆட்சியாளர்கள் யுத்தம்
செய்ய வேண்டியமனநிலையில் இருந்ததால்
பரிசேயர்தங்களுடைய
படைஉதவியைபின்வாங்கிக் கொண்டார்கள்.
இந்த 'பரிசேயர்' என்ற
பெயர் 'ஜான்கிர்ஹேனஸ்'
என்பவர் யூதேயாவை
ஆண்டபோது, இவர்களுக்கு இப்பெயர்கொடுக்கப்பட்டது.
மகா ஏரோது ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய
சுமார் 6000 பரிசேயர்
இருந்தனர் எனசொல்லப்படுகிறது.
ஜான் கிர்ஹேனஸ்
(கி.மு.135கி.மு105)
காலத்திலும்,
அலெக்சாண்டர் ஜேன்னஸ் (கி.மு.103
கி.மு76) காலத்திலும்பரிசேயர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.
ராணிசலோமி அலெக்சாண்டிரா (கி.மு76 முதல்
கி.மு67) காலம் "பரிசேயர்களின்பொற்காலம்" எனலாம்.
சாலமோனின்சங்கீதம்
ராணி அலெக்சாண்டிராவைபுகழ்ந்து பாடியது.
எருசலேமின் அழிவுக்குப்பின்பரிசேயர்கள் இந்த யூதமதத்தைஉயிர்ப்பித்தார்கள். அதற்கு 'ரபியோகன்னா பென்சாகி' (Rabbi Johannan Benzakkai) என்பவர் இந்த யூத
மதம்உயிர்ப்பிக்க
தலைமைத்துவம் வகித்தார்.
இவர்கள் வேதப்பிரமாணத்திற்கு(Interpreters) விளக்கம் கொடுப்பவர்கள். ஜெப ஆலயங்களில் முக்கிய பங்குவகித்தவர்கள். கிறிஸ்துவின் நாட்களில்இவர்கள் மிகுந்த செல்வாக்குஉடையவர்களாய் இருந்தனர்.
இவர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள். யூதர்களின் நியாயப் பிரமாணத்தின்ஒவ்வொரு வார்த்தையையும்கவனமாகக் கடைபிடிக்க முயன்றவர்கள். எனவே, இவர்களை பக்தி கூட்டத்தார்எனவும் அழைப்பார்கள். ஆபிரகாமைப்போல தேவனை நேசிப்பவர்கள்.இருப்பினும், பரிசேயரில்பெரும்பான்மையினர்சுயநீதியுள்ளவர்கள்.
இவர்கள் தங்களை நீதிமான்கள் என்றுகருதியவர்கள். உண்மையில்,கிறிஸ்துவின் நாட்களில் இவர்கள்புறம்பாக மட்டுமே நீதிமான்கள் போல்தோன்றினர். உள்ளேயோ தீமையினால்நிறைந்திருந்தனர். மாய்மாலக்காரராய்இருந்தனர். (மத்தேயு: 23:13-32).
என்றாலும், எல்லாப்
பரிசேயர்களுமே மாய்மாலக்காரர்கள் என்று சொல்லிவிடமுடியாது.
நிக்கொதேமுவும், கமாலியேலும் பரிசேயர்கள்தான்என்றாலும், நேர்மையான,
நீதியுள்ளமனிதர்களாயிருந்தனர். (யோவான்: 3:1; அப்போஸ்தலர்: 5:34). அப்போஸ்தலனாகிய பவுலும் கூட ஒருபரிசேயனே! (அப்போஸ்தலர்: 26:5; பிலிப்பியர்: 3:5).
பரிசேய இனம் இன்னும் அழியவில்லை. பரிசேய சமயம் தான் இன்றைய யூதமதத்தின் அஸ்திபாரமாகும்.
பரிசேயர்களில் 7 வகை
உண்டு.
🔅1. தோள் பட்டை
பரிசேயர்:
காணிக்கை போடும்போது மற்றவர்கள்காணும்படி விளம்பரப்படுத்தி போடுவது.
🔅2. சற்று நில் என்று
சொல்லுகிறபரிசேயர்
கூட்டம்:
தர்மம் செய்யும்போது வழியருகேபோகிறவர்களை சற்று நில் என்றுசொல்லி பார்க்க வைத்து போடுபவர்கள்.
🔅3. குருட்டுப் பரிசேயர்:
தாம் போகும்போது பெண்கள் எதிரில்வந்தால், கண்களை மூடி நடந்துசெல்வார்கள். இவர்கள் சுவரில் முட்டிமோதி இரத்தம் வந்தாலும் கண்களைத்திறக்க மாட்டார்கள்.
🔅4. குனிந்த பரிசேயர்:
இவர் சோதனைகளுக்குத் தப்பும்படிகுனிந்துதான் நடப்பார்.
🔅5. எப்போதும் தங்கள்
நற்கிரியைகளைஎண்ணிக் கொண்டிருக்கும் பரிசேயர்:
தங்கள் குறைகளை மூடும்படி தங்கள்நல்ல காரியங்களை நினைவுபடுத்திக்கொண்டிருப்பார்கள்.
🔅6. தேவனுக்குப்
பயப்படும் பரிசேயன்:
யோபுவைப் போல் உண்மையாய்நீதியாய் வாழ்பவர்கள்.
🔅7. தேவனை நேசிக்கும் பரிசேயன்:
ஆபிரகாமைப் போல தேவனைநேசிப்பவர்கள். இருப்பினும், பரிசேயரில்பெரும்பான்மையினர்சுயநீதியுள்ளவர்கள்.
http://waytoheaven2011.blogspot.in/2013/11/blog-post.html?m=1
[3/9, 2:15 PM] Elango: *கிறிஸ்து நமக்காக செய்த நீதி*‼👇👇👇👇
கொலோசெயர் 2:11-15
[11]அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.♦♦
[12]ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.✝✝✝✝
[13]உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;❤💛💚💙💜
[14]நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;🔨🔨🔨🔨🔨🔨
[15] *துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.*💪💪💪💪
[3/9, 2:30 PM] Jeyanti Pastor VT: ஆம் கர்த்தர் நம்மை நீதிமான்களாக்கி வைத்திருக்கிறார்.
நம்மிடமும் நீதியான காரியங்கள் உண்டு என்பதும் அவசியம். அவ்வித அபிஷேகத்தை கர்த்தர் நிச்சயம் நமக்குத் தந்திருக்கிறார்
[3/9, 2:32 PM] Stanley VT: பரிசேயர் பலர் காண வெளிப்படையாக நீதி செய்தார்கள்.
நீதியாய் நடந்தார்கள்
அனால் மனிதர் கானும்படி பலர் முன்னிலையில் செய்தபடியால் அதன் பலனை பூலோகத்திலேயே அடைந்து தீர்த்தார்கள் என்பதே குறை.
மற்றபடி தேவன் நீதியின் கிரியையை அவர்களை காட்டிலும் அதிகம் எதிர்பார்கக்கிறார்.
[3/9, 2:38 PM] Stanley VT: முடிந்த அளவு
- ஸ்தோத்ததரித்தல்
- ஜெபித்தல்
- உபவாசித்தல்
- காணிக்கை கொடுத்தல்
-பாவம் முற்றிலும்
வெறுத்தல்
பரிசேயரிலும் அதிகம் செய்ய முயலுதல்.
மனிதர் பாராட்ட செய்யாமல்
தேவன் விரும்பும் படி செய்தல்.
[3/9, 2:38 PM] Stanley VT: ஊழியம் செய்தல்
[3/9, 2:47 PM] Jeyachandren Isaac VT: பரிசேயர் வெளியே தங்களை நீதிமான்களாக காட்டிக் கொண்டவர்கள்..
மற்றவர்களை அற்பமாக எண்ணியவர்கள்.
மேலும்,
அவர்கள் உள்ளமோ அநீதியால் நிறைந்தது....
பொறாமை, வாக்குவாதம் மற்றும் இயேசுவை கொலை செய்யும்படி எல்லா வஞ்சகத்தினாலும், பொய்சாட்சிகளினாலும் நிறைந்திருந்தது....
[3/9, 2:53 PM] Jeyachandren Isaac VT: 25 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
mathew 23
[3/9, 2:53 PM] Jeyachandren Isaac VT: 27 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
மத்தேயு 23
👆about their inside...
[3/9, 3:14 PM] Jeyaseelan VT: *"சதுசேயர்"*
(Sadducee)
'சதுசேயர்' என்ற பதம் 'சாதோக்' (Zadok) என்ற பதத்திலிருந்து வந்திருக்கலாம். சாதோக் தாவீது ராஜாவின் காலத்தில் பிரதான ஆசாரியனாக இருந்தவன். (1இராஜாக்கள்: 2:35). சதுசேயர் என்பதற்குரிய கிரேக்கச் சொல் "சாடுக்கை". ஒருமையில் "சாடுக்கையாச்". இதற்கு 'பழமைப் பற்றாளர்' என்று பொருள்.
சதுசேயர்கள் கிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த ஒரு முக்கியமான யூத மதப் பிரிவினர். பெரும்பாலான யூதப் பிரதான ஆசாரியர்கள் சதுசேயர்களே. ஆனால், எல்லா ஆசாரியர்களும் சதுசேயர்கள் அல்ல. சதுசேயர்கள் சரீர உயிர்த்தெழுதலையோ நித்திய ஜீவனையோ நம்பாதவர்கள். பரிசேயரைப் போலவே, இவர்களும் கிறிஸ்துவையும் அவரது சீஷர்களையும் எதிர்த்தனர்.
'யோவான் கிர்ஹேனஸ்' (John Hgircanous) காலத்தில் சதுசேயர்கள் முக்கிய இடத்திற்கு வந்தனர். யோவான் கிர்ஹேனஸ் பரிசேயர்களை வெறுத்து சதுசேயர்களை நேசித்ததினால் இவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
யூத கலாச்சாரமும், கிரேக்கக் கலாச்சாரமும் கலப்பதற்கு "ஹெலனாசேஷன்" (Hellenization) என அழைக்கின்றனர். கிரேக்கக் கலாச்சாரமும், யூதக் கலாச்சாரமும் சேர்ந்த இராஜா 'அந்தியோகஸ் எபிபனேஸ்' (Antiochus Epipanas) (அதாவது, ஹெலனாசேஷன்) என்பவன் யூதர்களை ஒடுக்கினான். இதனால், உண்மையான சதுசேயர்கள் மறைந்து போனார்கள். இந்த ஹெலனாசேஷன் வந்ததும் ஆசாரியர்கள் வழிகள் மாறி, சீர்கெட்டுப் போயின.
'அந்தியோகஸ் IV' (Antiochus IV) என்பவன் காலத்தில் சாதோக்கிய வழிவந்த பிரதான ஆசாரியனாகிய 'ஒனியாஸ் III' (Onias III) சை பதவியிலிருந்து விலக்கினான். அதனால் ஒனியாஸின் மகன் பயந்து போய் எகிப்திற்கு ஓடிப்போய்விட்டான்.
இப்படியிருந்த சதுசேயர்கள் இராஜாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். சதுசேயர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள். அரசியலில் இவர்கள் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததினால், அதிகாரத்தையும், ஆட்சியையும் விரும்பியதாலும் மிக ஞானத்துடன் நடந்து கொண்டார்கள். சமய நெறியை கடைபிடித்து வாழ ஆட்சியாளர்கள் தடை செய்யாவிட்டால் அவர்கள் அரசியலை, ஆட்சியாளர்களை எதிர்ப்பதில்லை. ரோம ஆட்சியாளர்கள் ஆன்மீக வாழ்வில் தலையிட்டபொழுதுதான் அவர்கள் எதிர்த்தார்கள்.
பாரசீக மன்னர் காலத்திலிருந்து அயல் நாட்டினர் யூத நாட்டை ஆண்ட பொழுதெல்லாம் அவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களுடைய பழக்கவழக்கங்களுக்கு தக்கவாறு தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்வதற்குச் சிறிதும் பின்வாங்கவில்லை. சமயக்கருத்துக்கள், சடங்குகளில் கூட, பரிசேயரைப்போல கண்டிப்பாயிராமல், எவ்வளவுக்கெவ்வளவு வளைந்து கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தனர்.
காலத்துக்கேற்றப்படி தங்களை மாற்றிக் கொண்டார்கள். பரிசேயரோ, அவ்வாறு காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள மறுத்தார்கள்.
'ராணி சலோமி அலெக்சாண்டிரா' ஆட்சிகாலத்தில் மட்டும் இவர்களுடைய அரசியல் ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை. தீத்துராயன் கி.பி.66 முதல் கி.பி. 70 வரை எருசலேமை முற்றிக்கையிட்ட காலத்தில் இவர்கள் சமாதானத்தை விரும்பினர். இருப்பினும், எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.
இதனால், தங்கள் விசுவாசத்தை கட்டி எழுப்பும் மதிப்பு பரிசேயருக்குப் போனதே ஒழிய சதுசேயர்களைப் பற்றி சரித்திரம் எதுவும் சொல்வதில்லை.
சதுசேயர்கள் கிரேக்கக் கலாச்சாரத்தைப் பின்பற்றினார்கள். பரிசேயர்களுக்கு இவர்கள் எதிரானவர்கள். மோசேயின் நியாயப் பிரமாணத்தை வெறும் சடங்காச்சாரமாகக் கைக் கொண்டவர்கள். இவர்கள் தோராவின் எழுத்தின்படி வியாக்கியானம் கொடுத்தவர்கள். இந்த மார்க்கம் அறநெறி கொள்கையுடையது. அரசியல் நிலைமைக்கு ஏற்ப மாறுபவர்கள். எருசலேம் அழிவுக்குப் பின் 'சதுசேய சமயம்' அழிந்து போனது.
*இயேசுவும் சதுசேயரும்:*
இயேசுவுக்கும் சதுசேயருக்கும் உள்ள தொடர்பில் உயிர்த்தெழுதலைக் குறித்து கேள்வி கேட்டனர். உயிர்த்தெழுதலில் ஒருத்திக்கு ஏழு கணவர்களைக் கொண்டவள் பரலோகில் யாருக்கு உடையவளாவாள்? என்ற கேள்விக்கு - இயேசு பிரதியுத்தரமாக: "கொள்வனையும் கொடுப்பினையும் இல்லை. தேவதூதர்களைப் போல இருப்பார்கள்" என கூறுகிறார். (லூக்கா: 20:27 - 36). இதிலிருந்து இவர்களுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கையற்றவர்களாய் இருந்தனர் எனத் தெரிகிறது.
http://nesarin.blogspot.in/2012/09/blog-post_192.html?m=1
[3/9, 3:49 PM] Satyadas Pastor VT: Amen
[3/9, 5:03 PM] Kumar Bro VT: 14 மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்க்கும், ஸ்திரிகளிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்க்கும், அவன் எம்மாத்திரம் ?
யோபு 15 :14
16 அநியாயத்தை தண்ணீரைப் போல குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாய் இருக்கிறான் ?
யோபு 15 :16
[3/9, 5:21 PM] Elango: ⚖🔵 *இன்றைய வேத தியானம் - 09/02/2017* ⚖🔵

[3/9, 6:22 PM] Stanley VT: ஊழியம் செய்தல்
[3/9, 6:47 PM] Kumar Bro VT: 15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
கலாத்தியர் 2
22 விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.
யாக்கோபு 2 :22
23 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று. அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
யாக்கோபு 2 :23
24 ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
யாக்கோபு 2 :24
[3/9, 9:54 PM] Elango: இயேசுவே நம்முடைய நீதி.
1 கொரிந்தியர் 1:31
[31] *அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.*
[3/9, 9:56 PM] Elango: ரோமர் 4:2-8
[2]ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
[3] *வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.*✝❤✅
[4]கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.

[6]அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு:
[7]எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
[8] *எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.*
[3/9, 9:57 PM] Kumar Bro VT: 1 அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
மத்தேயு 18 :1
2 இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
மத்தேயு 18 :2
3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18 :3
4 ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
மத்தேயு 18 :4
6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 18 :6
7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
மத்தேயு 18 :7
10 இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18 :10
11 மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்.
மத்தேயு 18 :11
[3/9, 10:25 PM] Elango: வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் நம்முடைய நீதி அதிகமாக வேண்டும்‼
*பரிச்சேயன் :-*👇👇👇
✅வாரத்தில் இரண்டு தடவை உபவாசம் செய்கிறான்
✅சம்பாத்தியத்தில் தசம பாகம் கொடுக்கிறான்
...
பரிச்சேயன் இவ்வளவு பக்திவைராக்கியமாக ஜீவிக்கிறானே.
பழைய ஏற்ப்பாட்டில் மகன் என்ற உரிமையே இல்லாத போது ... *என் தாசனாகிய மோசே* என்று தேவன் சொல்கிறார்.
ஆனால் புதியஏற்ப்பாட்டில் அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தை தந்த, நம்முடைய நீதி எப்படி இருக்க வேண்டும்⁉
அவர்களை காட்டிலும் அதிகமாக அல்லவா நாம் ஜீவிக்க வேண்டும், ஆனால் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதது பெரிய தோல்வி.
ஆனா நமக்கு இயேசுவை ஏற்றுக்கொண்டதால மனம்போல வாழலாம் என்றும் சிந்திக்கவே முடியாது. 😟😟😟
இவர்கள் செய்ததலிலும் அதிகமாக நாம் செய்ய வேண்டும் ... உபவாசமோ தசமபாகமோ ... ஜெபமோ... எதுவாகவும் இருக்கட்டும்.👏👏🙏🙏
இதனை தேவன் ஒரு நீதியாக கணக்கிட்டிருக்கிறார். அவர்களுடைய நீதியிலும் நம்முடைய நீதி அதிகமாக இருக்க வேண்டும்.✍✍
யோசேப்பு.. கூடி வருவதற்க்கு முன்பாகவே மரியாள் கர்ப்பமாகியிருக்கிறாள் என்று கண்ட போது ... இரகசியமாக தள்ளிவிட நினைத்தான்; அவன் ஒரு நீதிமான் நீதி செய்கிறவன், அவளை அவமானப்படுத்த துணியாமல்....
யூதா ... தன் மருமகள் கர்ப்பமான போது ... அவளை சுட்டெரிக்க வேண்டும் என்று சொன்னான் ... ஆனால் கடைசியில் ... இவனால் தான் அவள் கர்ப்பமாகினாள் என்று தெரிந்த பிறகு ... என்னை விட இவள் நீதிமான் என்கிறான்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[3/9, 11:06 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக‼

நியாயப்பிரமாண காலத்தின் சட்டத்திட்டங்களில் வாழக்கூடிய வேதப்பாரகரும், பரிச்சேயரும் அவர்கள் இப்படிப்பட்ட நீதியான காரியங்களை செய்கிற வேளையில் ... நம்முடைய நீதி இவைகளை விட அதிகமாக இருக்க வேண்டுமென்று கர்த்தருடைய வசனம் கூறுகின்றது.
ஆண்டவர் இயேசு சொல்கிறார் யோவான் ஸ்நானகனிடம் ....
மத்தேயு 3:15
[15]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, *இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது* என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
ஞானஸ்நானம் என்பது தேவனுடைய நீதியை வெளிப்படுத்துகிறது. ✝✅
*நாம் முதலாவது தேட வேண்டியது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும்*.
*நீதியின் நிமித்தம் பசித்தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்*
மாற்கு 10:17-23
[17]பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: *நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.*
[18]அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
[19] விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
[20]அதற்கு அவன்: *போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.*
[21]இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: *உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.*✝✝✝✝✝✝✝
[22]அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.
[23]அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.
நன்றாக யோசித்துப்பார்க்க வேண்டும் - என்னால அந்த எல்லா கற்ப்பனைகளையும் கைக்கொள்ள முடிகிறதா⁉
இப்படி அநேக கற்பனைகளை என்னால் கைக்கொள்ளவே முடியவில்லையே.
எவ்வளவு உத்தமனான மனிதன் அவன்... ஆண்டவர் அவனை பாராட்டுகின்றார்.
*இவைகளை யெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.* அப்பொழுது இயேசு - இன்னும் ஒரு குறை உண்டு என்கிறார்
*உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்* என்கிறார்.
அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.
உடனே இயேசு சொல்கிறார் -
*ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.*
பரிச்சேயரும் வேதபாரகரும் எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டிருந்தும் இப்படி சின்ன கற்பனையை கைக்கொள்ளாததினாலே...ஒட்டகம் ஊசியின் காதில் நுழைய முடியாதது போல ... பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியாமல் இருக்கிறார்கள்.
ஆனாலும் மனுஷனாலே கூடாதது ... தேவனாலே கூடும் என்கிறார்.
*எவ்வளவு பெரிய காரியம் செய்த மனிதன் துக்கத்தோடு போய்விட்டானே.*
நாமும் மண்ணாண ஆசையில சிக்கி தவித்து மேலானவைகளை தேட மறக்கிறோம்.
உண்மையிலேயே இதில் நீதி என்னவென்று பார்த்தால் ... அது கடினமான சூழல்தான் ... அது இடுக்கமான வாசல்தான்.
பரிச்சேயர் நீதியிலும் நம்முடைய நீதியை அதிகமாக நம் ஜீவியத்தில் காட்ட வேண்டும்.

Post a Comment
0 Comments