[3/23, 8:57 AM] : ☀ *இன்றைய வேத தியானம் - 23/03/2017* ☀
👉தேவ ஊழியக்காரர்களின் பிள்ளைகள் , ஏன் பெரும்பாலும் ஊழியத்திற்க்கு வருவதில்லை❓
👉சில ஊழியர்கள் தங்களுடைய பிள்ளைகளை டாக்டருக்கும், இன்ஞினியருக்கும், வெளிநாட்டு வேலைக்கும் அனுப்புவது ஏன்❓
👉தன் பெற்றோர்கள் செய்த தேவ ஊழியத்தை தானும் செய்ய வாஞ்சிக்காததின் காரணம் தேவன் அவர்களை ஊழியத்திற்க்கு அழைக்காதது தானா❓ அல்லது அவர்கள் தேவனுடைய அழைப்பை அறிந்துகொள்ள வாஞ்சிக்காமல் இருப்பதினால் தானா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[3/23, 9:06 AM] Evangeline VT: உலக மேன்மையை தேடிச்செல்வதினால் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை டாக்டர்,இஞ்சினியருக்கு படிக்க வைக்கிறார்கள்.
இன்றைய காலங்களில் என் மகன் ஒரு ஊழியக்காரன் என்று சொல்லிக்கொள்வதை விட டாக்டர் என்று சொல்லிக்கொள்வதையே பெருமையாக நினைக்கின்றனர்..இது உலக பெருமை.
[3/23, 9:29 AM] Jeyachandren Isaac VT: 👉தேவ ஊழியக்காரர்களின் பிள்ளைகள் , ஏன் பெரும்பாலும் ஊழியத்திற்க்கு வருவதில்லை❓

1. எல்லோரும் தேவ ஊழியரே👍
தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து, தேவசித்தத்திற்கு தங்களை ஒப்புக் கொடுத்து வாழ்பவர்கள் எல்லாரும் தேவ ஊழியரே👍
அவர் ஒரு சபைக்கு மேய்ப்பராக இருக்கலாம், போதகராக இருக்கலாம், டாக்டராக இருக்கலாம், இன்ஜினியராக இருக்கலாம், கூலித் தொழிலாளியாக இருக்கலாம், குடும்ப தலைவர் மற்றும் குடும்பத் தலைவியாக இருக்கலாம்....
அவரவர் அழைக்கப்பட்ட நிலைகளிலே தேவசித்தத்தை நிறைவேற்றுவதன் மூலம் தேவ ஊழியரே..👍👍
👇👇
வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து, எபேசியர் 6 :5
6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். எபேசியர் 6 :6
👆
★எனவே போதகர் மற்றும் மேய்ப்பர்கள் போன்ற ஊழியர்களின் பிள்ளைகள் அவர்களைபோலவே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை👍 ஒருவேளை தேவனால் அவர்கள் அழைக்கபட்டால்
அவர்கள் தாராளமாக தொடரலாம்...
★அது போலவே ஊழியம் செய்பவர்கள் தங்கள் பிள்ளைகளை ஊழியத்திற்கு ஒப்புக் கொடுத்தாலும் தவறில்லை👍
ஆசீர்வாதமே👍
அதேவேளையில் அவர்களை டாக்டராக, இன்ஜினியராகவோ அல்லது பிசினஸ்மேனாகவோ, அல்லது வெளிநாட்டில் படிக்கவைப்பது என இதில் எதுவுமே தவறில்லை என்பதுதான் என் புரிந்துக் கொள்ளல்...
கிறிஸ்துவுகேற்ப போதனையில் அவர்களை வளர்ப்பதே மிகச் சிறந்த காரியம்👍🙏
[3/23, 9:49 AM] Stanley VT: ஆம்
தேவனே அனுமதித்த நன்மையே.
[3/23, 9:52 AM] Elango: இரட்சிப்பு என்பது எல்லாருக்கும் தேவன் கொடுக்கும் அழைப்பு .... விசுவாசித்து கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கிருக்கிறவர் நித்தியஜீவன் பெறுவர்....
ஆனால் ஊழிய அழைப்பு என்பது சிலரை குறிப்பிட்டு அழைக்கும் Special Calling.
✅சகோதர்கள் மத்தியில் தாவீதை மட்டும் அழைத்தார்
✅இஸ்ரவேலரில் மோசேயை தெரிந்துகொண்டார்
✅ஆரோனை அழைத்தார்
✅பெஞ்சமின் கோத்திரத்தில் பவுலை அழைத்தார்.
ஊழியக்காரர்களை அக்கினி ஜுவாலையாக செய்கிறார்... 🔥🔥🔥🔥
எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:7
[7]தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், *தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார்* என்று சொல்லியிருக்கிறது.
[3/23, 9:58 AM] Jeyachandren Isaac VT: 👆👍 பழைய ஏற்பாட்டிலே ஊழிய அழைப்பும், அபிஷேகமும் ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கே அளிக்கப்பட்டது👍
ஆனால் புதிய உடன்படிக்கையிலே அது எல்லோருக்குமே👍 சீஷர்கள் எல்லாருமே தேவ ஊழியர்களே👍
அவருவருக்கு கொடுக்கபட்ட கிருபையின்படியே நிலைகளிலும், தகுதிகளிலும், பொறுப்புகளிலும் வித்தியாசம் இருக்குமே தவிர, எல்லோரும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கங்களே👍
[3/23, 9:59 AM] Elango: 👉தேவ ஊழியக்காரர்களின் பிள்ளைகள் , ஏன் பெரும்பாலும் ஊழியத்திற்க்கு வருவதில்லை❓
எல்லா ஊழிக்கார்களும் தன் பிள்ளைகள் ஊழியத்திற்க்கு வரவேண்டும் என்று விரும்புவார்கள் ஈடுபடுத்துவார்கள்
ஆனாலும் தேவனுடைய அழைப்பையும் அறிந்துக்கொள்வது அவசியமில்லையா
[3/23, 9:59 AM] Jeyachandren Isaac VT: 6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 1 :6
[3/23, 10:01 AM] Elango: 👍👍ஐயா, சீஷர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லையா ஐயா
[3/23, 10:05 AM] Jeyachandren Isaac VT: டாக்டரின் பிள்ளை டாக்டராக ஆகலாம் தவறில்லை...
ஆனால் அந்த பிள்ளை அதற்கேற்ற படிப்புகளை தானும் விருப்பத்தோடு படித்து சிறப்பாக தேறுவதே அதற்கேற்ற தகுதியாகும்...பிற ஸ்தானங்களும் அப்படியே👍
அதுபோலவே விஷேசித்த ஊழியம் செய்பவர்கள், முழுநேர ஊழியம் செய்பவர்களின் பிள்ளைகளும், தேவனுடைய காரியங்களில் தேறினவர்களாக, இருக்கும் பட்சத்தில் அவர்களும் அப்படிபட்ட ஊழியங்களை செய்வதில் தடையில்லையே👍
[3/23, 10:05 AM] Levi Bensam Pastor VT: 1 பேதுரு 2:9-10
[9]நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
[10] *முன்னே*👉 நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.
[3/23, 10:07 AM] Jeyachandren Isaac VT: முதலில் சீஷத்துவமே👍
பின்னர் சீஷர்களில் இருந்து அவரவருக்கு கொடுக்கப்பட்ட கிருபை மற்றும் வரங்களின் அடிப்படையிலே ஊழியம்👍
இதுவல்லாமல் வேறு வழி இருக்கமுடியாதே👍
[3/23, 10:28 AM] Elango: 👍🙏
அதாவது ஒருவர் முதலில் சீஷராக ஆன பிறகே ஊழிய அழைப்புக்கு தகுதியானவர் என்பது உங்க கருத்தா ஐயா...
சீஷத்துவமே முதற்படி
ஊழியத்திற்க்கு சீஷத்துவமே தகுதி என்கிறீர்களா ஐயா
இதனை வேதம் முன்மொழிகிறதா ஐயா
[3/23, 10:29 AM] Elango: ஊழிய அழைப்பின் படிகள் இதுவே என்று வேதம் சொல்கிறதா
அல்லது முதல்படியே ஊழிய அழைப்பாக இருக்கக்கூடாதா
[3/23, 10:30 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 28:19-20
[19]ஆகையால், *நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி,* பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
[20]நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
[3/23, 10:34 AM] Elango: 👍👍சகல ஜாதிகளையும் சீஷராக்க கட்டளையிட்ட தேவன் சிலரை மட்டும்தானே பாஸ்டர் ஊழியராக தெரிந்துக்கொள்கிறார்...
ஆரோனைப் போல் அழைக்கப்படாவிட்டால்...
ஊழிய அழைப்பின் Steps இப்படி என்று கீழ்க்கண்ட முறையில் வரை முறை படுத்தலாமா...
1. விசுவாசி
2. சீஷன்
3. ஊழியர்
இது வேதத்தின் படி சரியா
அல்லது ஊழியம் செய்வது சீஷத்துவத்தின் அடுத்த நிலையா
[3/23, 10:39 AM] Jeyachandren Isaac VT: 👍👍சகல ஜாதிகளையும் சீஷராக்க கட்டளையிட்ட தேவன் சிலரை மட்டும்தானே பாஸ்டர் ஊழியராக தெரிந்துக்கொள்கிறார்...

👆✅👍
இதில் விசுவாசி என்ற அழைப்போ அல்லது பிரிவோ கிடையாது👍
மனம்திரும்புதலே அழைப்பு👍
அதற்கு விசுவாசம் தேவை👍
எனவே இப்படியும் வரிசைப்படுத்தலாம்👇
1. மனம் திரும்புதல்
2.சீஷராகுதல்
3.ஊழியராகுதல்
👆என்னுடைய புரிந்துக் கொள்ளுதல்👏
[3/23, 10:43 AM] Jeyachandren Isaac VT: 👆இன்று அனேகர் தங்கள் மனதின்படியாகவும், சில சவுகரியங்களை முன்னிட்டு தங்களை "விசுவாசிகள்" என்று அழைத்து சில குறைவான காரியங்களத் தெரிந்துக் கொள்கிறார்கள்😰
ஊழியக்காரரும் அனேகர் இது தங்களுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டு😊 கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்😰
அவர்கள் மீதும் தவறு😰 இவர்கள் மீதும் தவறு😰
[3/23, 10:44 AM] Jeyachandren Isaac VT: 👆முன்னவர் சீஷராக வேண்டும்👍பின்னவர் சீஷராக்கவேண்டும்👍😊
[3/23, 10:48 AM] Elango: ✅👍👏ஊழியர், கண்காணியின் தகுதியென்று பவுல் பெரிய லிஸ்ட்டையே கொடுக்கிறாரே தீத்து, தீமோத்தேயுவில்....
அதுபோல புதிய ஏற்ப்பாட்டில் ... *தன்னை தானே வெறுத்து, சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் செல்ல வேண்டும்*
இது மட்டுமே 👆🏼👆🏼சீஷரின் ஊழியத்தகுதி
இதைத் தவிர சீஷரின் ஊழியத்தகுதி என்று வேறு இருந்தால் தயவாக சொல்லுங்க ஐயா🙏
12 சீஷர்கள் தானே அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
[3/23, 10:48 AM] Elango: Fully agreed 🙌🤝
[3/23, 11:04 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍
5 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. 1 கொரிந்தியர் 12 :5 மேலும் 1 கொரி 12 ல் சொல்லப்பட்ட படியே ஊழியங்கள் ஆவியாரவரின் வரங்களாகவே பகுத்துக் கொடுக்கப்படுகிறது👍
வரங்கள்👉ஞானத்தை போதிக்கும் வசனம்👉அறிவை உணர்த்தும் வசனம்.....
போன்றவை👍
இதில் விசுவாசமும் ஒரு ஆவிக்குரிய வரமாக இருப்பதை காணலாம்👍
[3/23, 11:13 AM] Jeyachandren Isaac VT: இன்று வேதத்தில் சொல்லப்படாத இன்னொரு வகை அல்லது வரிசை பெரும்பாலும் காணப்படுகிறது..
வேதத்தில் காணும் வரிசை👇
★மனம்திரும்புதல்
★சீஷராகுதல்
★ஊழியராகுதல்👍👍👍👍
மேலேக் குறிப்பிட்டவை இல்லாமல் ,
குறுக்கு வரிசை அல்லது வழி👇
★வேதாகம கல்லூரியில் படிப்பது
★ஏதேனும் ஒரு பட்டம் பெறுவது
ஊழியராவது😰😰
(குறிப்பு: வேதாகமக் கல்லூரி படிப்புக்கு நான் எதிரானவன் இல்லை👍அதில் படிப்பதும் தவறில்லை)
[3/23, 11:14 AM] Jeyachandren Isaac VT: 👆இன்றையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாத பதிவாக இருந்தால் மன்னிக்கவும்👏🙏
[3/23, 12:01 PM] Edward Nesan VT: ஆக மொத்தத்தில் இப்பொழுது தேவனுடைய பிளைகளாயிருக்கிறோம். 1'யோவான் 3:1 முதல் 3'ஆம் வசனம் வரை.🌱🌱 பேதுரு 2'ஆம் நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிறது : சகோதரரே (இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் நாம் யாவருமே கிறிஸ்துவுக்குள் சகோதரர்களே) உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருந்தால் நாம் ஒன்றிலும் இடறிவிழுவதில்லை.🌻🌻 அப்படியென்றால், நாம் தேவனால் எதற்காக முன் குறிக்கப்பட்டிருக்கிறோம்? தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறோம்? 🍇🍇🍇🍇🍇🍇🍇 ரோமர் 8:28 முதல் 30 வரையிலான வசனங்களில் பார்க்கும் போது: தேவ குமாரனாகிய (நமது மூத்த சகோதரனாகிய) இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாயிருப்பதற்கு தேவனால் முன் குறிக்கப்பட்டிருக்கிறோம் என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.🌱🌱🌱 குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவியை தான் (குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அபிஷேகம் பண்ணிண அதே தேவன் தாமே) தேவன் நமக்கும் கொடுத்திருக்கிறார் என்பதே பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் மறுக்க முடியாத (உண்மை) சத்தியம்.🌻🌻🌻🌻🌻 இதுல வித்தியாசமான அபிஷேகமோ, அழைப்போ புதிய ஏற்பாடு காலத்தில் வாழ்கிற நமக்கு கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.🌴🌴🌴🌴🌴
[3/23, 12:03 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக!
தரிசனம் கண்டு தேவனால் அழைக்கப்பட்ட பவுல், தாயின் வயிற்றில் இருக்கும் போதே தாயின் வயிற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பவுல்... தேவன் தன்னுடைய ஊழியத்திற்க்கென்று தேவன் பிரித்தெடுத்தார்.🙋♂👏👏இப்படி தெரிந்துக்கொள்ளுதலில் ஒரு விசேசம் ஒரு கிருபையாக இருக்கிறது ...
ஆனால் அப்படி தரிசனம் கண்டு... பெரிய பெரிய வேளைகளையெல்லாம் விட்டு வந்தவர்கள் ... இன்னைக்கு பரிலோக தரிசனம் எடுபடுகிற வேளையில் உலகத்துக்குரியவர்களாக மாற்றப்படுகின்றனர்.
அப்பா பாஸ்டர்ன்னா பிள்ளைகளும் பாஸ்டர் ஆக வேண்டும் என்று அவசியமில்லை... அப்பா ஒரு ஸ்தாபனத்திற்க்கு தலைவராக இருந்தால், அதே ஸ்தாபனத்திற்க்கு பிள்ளையையும் ஸ்தாபன தலைவாக்கக்கூடாதே தவிர ... மற்ற ஊழியங்களில் முழுமையாக தங்கள் பிள்ளைகளை பங்குகொள்ள செய்யலாம் ... பைபிள் பிரிண்ட் செய்கிற ஊழியம், மருத்துவமணை ஊழியம் என்று பலவிதமான ஊழியம் உண்டு ...
புதிய ஏற்ப்பாடு வாசுவாசிகளுக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது 👇👇
1 பேதுரு 2:9
[9] *நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.*
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[3/23, 12:04 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 23/03/2017* ☀

[3/23, 12:07 PM] David Charles VTT: நாம் கிறிஸ்துவினுடையவர்கள் எனில், அவரில் நிலைத்திருக்கவேண்டும்! நிலைத்திருப்பது மட்டும் போதாது.... கனி கொடுக்க வேண்டும்!
(யோவான் 15 ம் அதிகாரம்)
கனி கொடுக்க வேண்டும் என கிறிஸ்து கட்டளையிடுவது ஆத்தும ஆதாயமே என்பதில் சந்தேகம் இல்லை!
*எனவே அனைவருக்குமே அழைப்பு உண்டு* தனிப்பட்ட விதத்தில் வந்து அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது!
அனைவரையும் அவருக்காய் கனி கொடுக்க அழைக்கிறார் ஆண்டவர்!
நாம் எல்லோருமே சாட்சி சொல்ல விரும்புகிறோம்! (அதாவது... தேவனிடம் நன்மைகளைப் பெற்றுக்கொண்டு)
ஆனால், சாட்சியாயிருப்பதற்கு முன்பு இரண்டு படிகள் உண்டு....
1. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், *எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.*
யோவான் 15 :8
2. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், *என்சிநேகிதராயிருப்பீர்கள்.*
யோவான் 15 :14
3. நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் *எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.*
யோவான் 15 :27
எத்தனைவித ஊழியங்கள் இருந்தாலும், அதை செய்வதற்கு முன்பு,
சீஷனாயிருக்க வேண்டும்!
(ஊழியனாக இருத்தல்)
சிநேகிதனாயிருக்க வேண்டும்!
(நம் ஊழியம் கர்த்தரால் நேசிக்கப்பட வேண்டும்)
சாட்சியாயிருக்க வேண்டும்!
(நாம செய்யும் ஊழியத்தை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்)
[3/23, 12:14 PM] Edward Nesan VT: 🍇🍇 கனி கொடுப்பதென்றால்????? ஆத்தும ஆதாயம் செய்வது இல்லீங்க. ஆவியின் கனியோ, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்குமய்யா🍇🍇🍇🍇 ஆவியின் கனிகளாகிய ஒன்பது குணாதிசயங்களை கொண்டதுங்க.🍇🍇🍇 கனி கொடுப்பதென்றால் நல்ல குணநலன்களை வெளிப்படுத்துவது என்பதை புரிந்து கொள்வோம்.🙏
[3/23, 12:22 PM] David Charles VTT: ஆவியின் கனிகளை பிரதிபலித்து வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன ஐயா?
பலன் கொடுப்பது வேறு, கனி கொடுப்பது வேறா?
[3/23, 12:25 PM] David Charles VTT: ஆவியின் கனிகளைப் பிரதிபலித்து, நல்ல குண நலன்களை வெளிப்படுத்தி வாழும் மனிதன் ஒரு நல்ல நிலம் அல்லவா? தேவ வசனம், 30, 60, 100 ஆக பலன் கொடுக்க நம்மில் விதிக்கப்படுகிறது அல்லவா?
[3/23, 12:25 PM] Elango: 1 பேதுரு 2:9
[9]நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத்
✅தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும்,
✅ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும்,
✅ பரிசுத்த ஜாதியாயும்,
✅அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
பாரம்பரியமாக தொடர்ந்து தேவனுஊழீயத்தை செய்யலாம்... இராஜரீக ஆசாரிய கூட்டமாக .. அதாவது உசியா இராஜா தப்புபப்பண்ணியது ஆசாரியர்கள் செய்யவேண்டிய காரியத்தை இவர் செய்ததால் தான் இவர் நெற்றியில் குஷ்டம் வந்தது ..
ஆனால் இன்னைக்கு நமக்கு, தேவன் கொடுத்த மகா பெரிய கிருபை ... இயேசு யூதா கோத்திரத்தில் ... பிறந்து அவர் பிரதான ஆசாரியராக மாறினார் அந்த அடிப்படையில் ... மெல்கிசேதேக்கின் முறைமையின் படி தேவன் நமக்கு பெரிய சிலாக்கியத்தை கொடுத்திருக்கிறார். 👍🙏🙋♂✅
1 பேதுரு 2:10
[10] *முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.*
இப்படி சந்ததி சந்ததியாக ஆண்டவர் தெரிந்து கொண்டது பெரிய பாக்கியம் ....சபை நடத்துவது மட்டுமே ஊழியம் கிடையாதே... பலவகையான ஊழீயங்கள் உள்ளதே அதிலே நம்முடைய தலைமுறைகளில் இரண்டு இருந்தால் ஒன்றையாவது கொடுக்கலாமே ... இரண்டையும் கொடுத்தால் பாக்கியமே ...
சவூதியில் சொல்லுகிறார்கள் ... இந்த படிப்பு எல்லாம் படித்தால் நல்ல சம்பளம் என்று சொல்லுகிறார்கள் ... எனக்கே தெரியும் ஊழியம் என்றால் அது பெரிய கடின பாதை ... கண்ணீர் கஷ்டம் எல்லாம் உண்டு ... ஆனாலும் பல பெற்றோர் நினைப்பதுண்டு எவ்வளவு பிரச்சனை என்றாலும் தேவனுடைய ஊழியத்தை தான் பார்க்க வேண்டுமென்று ...
So தகப்பன் செய்ததால் பிள்ளையும் ஊழிய செய்யக்கூடாது என்று சொல்லாதீங்க ...தகப்பன் ஒரு சபைய பேர் எழுதிட்டார் இனி அந்த சபை தன் பரம்பரைக்கே என்று பெயர் எழுதினால் தான் தப்பு ...
தமிழ்ல ஒரு பழமொழி உண்டு - ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானாக வளரும் என்று ... இது உலகத்தாரின் பழமொழி So நம்ம ஆண்டவர்எப்படி செய்வார் ... அமுக்கி குலுக்கி ... பகிர்ந்து கொடுக்கிற கர்த்தர் தானே ...
ஊழியக்காரியங்களில் அவன் இவ்வளவு சம்பளம் பெற்று உண்மையாக இருந்தால் ... தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களை மறந்து விட மாட்டார்.👍🙋♂👏🙏
So இந்த காலத்தில் பிரச்சனைகள் எல்லாம் இருப்பதினால் தங்களையும் இந்த ஊழியத்தில் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள் ...
*விருப்பம் இருக்கிறவர்கள் ஆதாயத்தை பார்க்கிறார்கள் ... இல்லாதவர்கள் உலகத்துக்குரிய காரியங்களை பார்க்கிறார்கள் ஆனால் நாம் இரண்டையுமௌ பார்க்காமல் ஊழியம் ஆண்டவருக்காக செய்ய வேண்டும் ...ஆனா நாம் ஆண்டவருக்காக நம் பிள்ளைகளை பிரித்தெடுத்து ஆண்டவருக்காக ஊழியம் செய்ய வைத்தால் ஆசீர்வாதம் உண்டாகும்.👍🙋♂🙏✅*
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[3/23, 12:26 PM] David Charles VTT: ஆவியின் கனிகளைப் பிரதிபலித்து, நல்ல குண நலன்களை வெளிப்படுத்தி வாழும் மனிதன் ஒரு நல்ல நிலம் அல்லவா? தேவ வசனம், 30, 60, 100 ஆக பலன் கொடுக்க நம்மில் *விதைக்கப்படுகிறது* அல்லவா?
[3/23, 12:31 PM] Samson David Pastor VT: இவ்வித
வாஞ்சையும்,
பாரமும்
அருமை, அவசியம்.
🙋🏼♂🙏
[3/23, 12:35 PM] Elango: சொந்த சபையை உடைய தங்களின் பிள்ளைகளையே ஏற்ப்படுத்துவதுண்டு அப்படியில்லாமல் வேறு ஒரு ஆவிக்குரியவர்களை ஏற்ப்படுத்துவதுண்டு....
ஆனால் தேவனுடைய ஊழியத்தை சம்பளம் பெற்று ஊழியம் செய்பவர்கள் தங்கள் பிள்ளைகளையும் அதே ஊழியப்பாதைகளில் அழைக்க விருப்பப்படாமல் மற்ற உலக வேலைகளில் கவனம் செலுத்த சொல்லும் கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டிருக்கிறோமா?
இப்படி செய்வது என்பது ... ஊழிய ஆத்தும பாரமில்லாமையா அல்லது உழியப் பாதையில் வேதனையும், துக்கமும் பாரமும் காரணமா....
[3/23, 12:49 PM] Stanley VT: உழியம் தேவ அழைப்பே அது தேவனால் அவர் தெரிந்து கொள்ளபட்டவர்களுக்கு தேவனால் அங்கீகரிக்கபடுவது.
நமது பிள்ளைகளே ஆனாலும் அவர்களிடம் நாம் தினிக்க கூடாது.
மனவிருப்பத்திற்க்கு மாறக வளர்க்கபடுபவர்கள் தினமும் மனஅழுத்தம் என்ற துன்பத்தையே அனுபவிக்கிறார்கள்.
விருப்பமில்லாமல் கொடுக்கபடும் எதுவும் தேவனை துக்கபடுத்தும்.
ஊழியர்கள் தங்களிடம் வரும் ஊழியவாஞ்சை உள்ளவர்களுக்கு சகல உதவிகளையும் செய்யும் போது தேவ ராஜ்ஜியத்திற்க்கு உகந்த ஊழியர்கர் கிடைப்பார்கள்.
நாமக்கு நம்முடையவைகளை தியாகம் செய்ய உரிமை உள்ளது.
அடுத்தவர்களை (குடும்பத்தினரே ஆனாலும்)
நிர்பந்திக்க உரிமை இல்லை.
[3/23, 1:00 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 ஊழியம் என்பது அவரவர் தனிபட்ட அழைப்பும் தெரிந்துக் கொள்ளுதலுமே
தவிர வாரிசு முறை அல்ல...👍
[3/23, 1:51 PM] Jeyanti Pastor VT: Yes Pastor. Kattayam azhaipu petrirukanum.
[3/23, 1:53 PM] Jeyanti Pastor VT: கண்டிப்பா திணிக்க கூடாது
[3/23, 1:59 PM] Elango: சபையில் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட சகோதரர்களின் சோதனைக்குத் தம்மை ஒப்புக் கொடுக்க மறுப்பவர்கள் பிரசங்க ஊழியத்திற்கு தகுதியற்றவர்கள் என்றே கூற வேண்டும்.
சபையில் அல்லது உலக வேளையில் பாடுகள் இல்லாமல் எந்த வேலையும் இல்லை.
ஊழியத்தில் பாடுகள் என்று தன் பிள்ளைகளை அனுப்பாமல் இருந்தால், தேவன் அவரை ஏற்கனவே முன்குறித்திருந்தார் எப்படியாவது அடிக்கொடுத்தாவது பாடம் கற்ப்பித்து அவரை கொண்டு வந்து விடுவார்.
ஊழிய அழைப்பு வந்துவிட்டால், மாம்ச உறவுகளோடு யோசனை செய்ய மாட்டார்கள்.
கலாத்தியர் 1:16
[16] *தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;*
[3/23, 2:04 PM] Elango: ஊழிய அழைப்பைக்குறித்தும், ஊழியரின் தகுதியைக் குறித்தும் ஒரு அருமையான பதிவு 👇👇👇
ஊழிய அழைப்பு என்பது என்ன?
ஊழியத்திற்கான அழைப்பைக் குறித்து பேசுபவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும் வேதம் அதைக்குறித்து போதிக்கும் போதனைகளுக்கும் பெரும் வித்தியாசமுண்டு. வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு வசனத்தால் உந்தப்பட்டு கர்த்தர் தம்மை ஊழியத்திற்கு அவ்வசனத்தின் மூலம் அழைக்கிறார் என்று உணர்ச்சிவசப்பட்டு ஊழியத்திற்குப் போனவர்கள் அநேகர். அறையில் தனிமையில் இருக்கும்போது கர்த்தர் தன்னோடு பேசி அழைத்ததாகவோ, அல்லது ஊழியப்பணிக்குத் தான் போகத்தான் வேண்டும் என்று கர்த்தர் அழைப்பது தனக்குப் புலப்பட்டதாகவும் கூறி ஊழியம் செய்யப் போனவர்களின் தொகை எண்ணிலடங்காது.
ஊழிய அழைப்பை ஒருவர் உணர முடியாது என்று நான் வாதிடவில்லை. ஆனால் ஊழிய அழைப்பு என்பது வெறும் உணர்ச்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அது கர்த்தருடைய வார்த்தையைப் போதிக்க வேண்டும் என்ற, கர்த்தரால் நமக்குள் ஏற்படுத்தப்படும் உள்ளார்ந்த நம்பிக்கை. ஆனால், இத்தகைய நம்பிக்கையை கடவுள் ஒருவருக்குள் எவ்வாறு ஏற்படுத்துகிறார்? ஒருவரது உள்ளத்தில் ஊழிய வாஞ்சையை ஆழமாக விதைப்பதன் மூலமும், ஏனைய சகோதரர்களின் உள்ளத்திலும் அதைப்பதிய வைப்பதன் மூலமும், வேதம் போதிக்கும் ஊழியத்திற்கான அடையாளங்களையெல்லாம் கொண்டிருக்கும் அவரை சபையாரின் சோதனையில் தேர்ச்சிபெற வைப்பதன் மூலமும், கடவுள் ஒருவரை ஊழியத்திற்கு அழைக்கிறார். இவற்றில் சபையாரின் அங்கீகாரத்தை ஒருவர் பெறுவது மிக அவசியம். ஏனெனில் சுயநலநோக்கத்தோடு, பொருளாசையுடன் ஊழியத்தில் ஈடுபட முனைபவர்களை இதன் மூலம் தடை செய்யலாம். அத்தோடு, ஆணவம், தன்னலமுள்ள சுயநம்பிக்கை, பிறரின் பாராட்டை நாடும் மனப்பாங்கு, பிரசங்க ஊழியம் பற்றிய தவறான, குழந்தைத்தனமான எண்ணங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பவர்களையும் தவிர்க்கலாம். சபையில் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட சகோதரர்களின் சோதனைக்குத் தம்மை ஒப்புக் கொடுக்க மறுப்பவர்கள் பிரசங்க ஊழியத்திற்கு தகுதியற்றவர்கள் என்றே கூற வேண்டும்.
பிரசங்க ஊழியத்திற்கான தகுதிகள்
புதிய ஏற்பாட்டின் இரண்டு முக்கிய வேதப்பகுதிகள் (1 தீமோத்தேயு 3:1-7 தீத்து 1:6-10) இவ்வூழியத்திற்கான அடையாளங்களை விபரிக்கின்றன. ஊழியத்தை நாடுபவர்கள் இவ்விரண்டு பகுதிகளையும் கவனத்தோடு படிக்க வேண்டும். ஊழியத்தை நாடுபவர் சபையாரோடு சேர்ந்து இவ்வடையாளங்கள் தன்னில் காணப்படுகின்றனவா என்று மனச்சுத்தத்துடன் ஆராய்ந்து பார்த்தல் அவசியம். இது இலகுவான காரியமல்ல. உதாரணமாக ஊழியத்திற்கு பெரு மதிப்புக் கொடுக்கும் ஒருவர் தகுதிகள் இருந்தும் அதற்குத் தன்னை ஒப்புக் கொடுக்கத் தயங்கலாம். ஊழியப் பணிக்குத் தான் தகுதியானவனல்ல என்று எண்ணிப் பின்வாங்கலாம். இச்சந்தர்ப்பத்தில் முதிர்ச்சியுள்ள சபையாரின் எண்ணங்களுக்கு மேலான மதிப்புக் கொடுத்து பின்வாங்குபவர்கள் ஊக்கப்படுத்தப்படல் அவசியம். கடவுள் நமக்குக் கொடுத்திராதவைகளைக் கொண்டிருப்பதாகப் பெருமை பாராட்டுவது எவ்வளவு தவறோ அதேபோல், கர்த்தர் நமக்கு உண்மையில் கொடுத்துள்ள கிருபைகளையும் வரங்களையும் அங்கீகரிக்க மறுப்பதும் போலித் தாழ்மையாகும்.
கர்த்தருடைய சபை ஊழியங்கள் அனைத்திற்கும் அவசியமான இலக்கணங்களை வகுத்துக்கூறும் வேத பகுதிகள் 1 தீமோத்தேயு, தீத்து ஆகிய நிருபங்களில் அடங்கியுள்ளன. சிலர் அவை சபை கண்காணிகளுக்கும், உதவியாளர்களுக்கும் மட்டுமே உரித்தான இலக்கணங்களை எடுத்துக் கூறுவதாக எண்ணலாம். திருச்சபையில் இன்று காணப்படும் இரு நிரந்தரமான ஊழியங்கள் இவை இரண்டும் மட்டுமே. ஆனால் இவ்விலக்கணங்கள் அனைத்து ஊழியங்களுக்கும் உரித்தானவை. அந்நோக்கத்துடனேயே பவுல் இவற்றை இங்கு தந்துள்ளார்.
1 தீமோத்தேயு 3:1-7 உம் தீத்து 1:6-10 உம் அடங்கிய வேதப்பகுதிகள் ஊழியப்பணிக்கான இருபதுவகையான இலக்கணங்களை விபரிக்கின்றன. இவற்றில் பதினேழு இலக்கணங்கள் ஒருவரது நடத்தைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஏனெனில் ஒருவருக்கு திறமையும் கிருபை வரங்களும் அவசியமானதாக இருந்தாலும் அவரது நன்நடத்தை மிக முக்கியமானதாகும்.
இவ்விரு வேத பகுதிகளும் ஊழியப்பணிக்கான இலக்கணங்களை விளக்க ஆரம்பிக்கும்போது முக்கியமான ஒரு விடயத்தைக்கூறி ஆரம்பிப்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது,. 1 தீமோத், 3:2 இலும் தீத்து 1:7 இலும் இதைப்பார்க்கலாம். இவ்விருபகுதிகளும் ஊழியத்திற்கு வருபவர்கள் அனைவரும் இவ்விலக்கணங்களைத் ‘தவறாது’ கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகின்றன. கிரேக்க மொழியில் ‘dei’ என்று அழைக்கப்படும் இவ்வார்த்தை ஆங்கிலத்தில் ‘must’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வார்த்தை இவ்விலக்கணங்களின் தவிர்க்க முடியாத அவசியத்தை நமக்கு வலியுறுத்திக் காட்டுகின்றன. இவ்விலக்கணங்கள் ஒவ்வொன்றையும் விபரமாகப் பார்ப்போம்.
1. குற்றஞ்சாட்டப்படாதவனாக இருக்க வேண்டும். (1 தீமோ. 3:2; தீத்து 1:6, 7) – இது ஒரு ஊழியக்காரரின் வாழ்க்கையில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் குணாம்சம். அவரது வாழ்க்கை எக்குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அவலட்சணமான காரியங்களுக்கோ, அட்டூழியங்களுக்கோ இடமிருக்கக்கூடாது.
2. ஒரே பெண்ணை மனைவியாகக் கொண்டிருக்க வேண்டும். (1 தீமோ. 3:2; தீத்து 1:6) – இப்பகுதி ஒரு ஊழியக்காரர் திருமணம் செய்தவராகவோ அல்லது ஒரு முறை மட்டுமே திருமணம் செய்தவராகவோ இருக்க வேண்டும் என்பதைவிட அவர் தம் மணவாழ்வில் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. இன்று திருச்சபைப் பிரசங்கிகளையும், தலைவர்களையும் பெரிதாகப் பாதித்து வரும் தீங்கு முறையற்ற பெண் தொடர்பாகவே இருக்கின்றது. சபை சரித்திரத்தை ஆராய்ந்தால் போலிப் போதனைகளுக்கு அடுத்தபடியாக திருச்சபையின் சாட்சியையும், திருச்சபை மக்களையும் அதிகமாகப் பாதித்துள்ள கேடு சபைத்தலைவர்களுடைய முறையற்ற பெண் தொடர்பாகவே இருந்துள்ளது. போதகர்களும், சபைத் தலைவர்களும் தங்களுடைய மணவாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி தம் மனைவிமார்களுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அநேக போதகர்களும், ஊழியக்காரர்களும் ஊழியத்தைப் பெரிதாகக் கருதி தங்களுடைய குடும்பவாழ்க்கையில் இன்று அக்கறை செலுத்துவதில்லை. மணம் வீசும் மண வாழ்க்கையைக் கொண்டவர்கள் மற்ற பெண்களை நாட மாட்டார்கள்.
3. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனாயிருக்க வேண்டும். (1 தீமோ. 3:4-5; தீத்து 1:6) – அதாவது குடும்பத்தலைவனாகவிருந்து தன் மனைவி மக்களைக் கர்த்தரின் வார்த்தையின்படி வழி நடத்துகிறவனாயிருக்க வேண்டும். அவர்களது தேவைகளை அன்போடு கவனித்து, பராமரித்து வருபவராக இருக்க வேண்டும். ஊழியக்காரர்களின் பிள்ளைகள் கீழ்ப்படிவுள்ளவர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். குடும்பத் தலைவர்கள் நேரத்திற்கு மதிப்புக் கொடுத்து தங்கள் மனைவி, பிள்ளைகள் வீட்டிலும், சபையிலும் நேரப்படி காரியங்கள் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். போதகர்கள், சபைத்தலைவர்கள் இதில் ஏனையோருக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கின்றது. குடும்பத்தில் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கொண்டுவர இயலாதவர்கள் சபை நடத்தவோ பிரசங்கிக்கவோ தகுதியற்றவர்கள்.
4. தன் இஷ்டப்படி நடக்காதவனாக இருக்க வேண்டும். (தீத்து 1:7) – ஊழியக்காரர்கள் கர்த்தரால் அழைக்கப்பட்டு கர்த்தரின் மக்களை ஆவிக்குரிய செயல்களில் வழிநடத்தி அவர்களுக்குப் பாதுகாவலர்களாக இருக்க வேண்டியவர்கள். ஊழியக்காரர்கள் தம்மைத் தாமே தெரிவு செய்து கொள்ள கூடாது. தன் இஷ்டப்படி அதிகாரம் செலுத்தி தனது சுய இச்சைப்படியல்லாது கர்த்தருடைய வார்த்தையின்படி அவரது சித்தத்தை எப்போதும் செய்பவர்களாக இருக்க வேண்டும். ஊழியக்காரர்கள் கர்த்தரின் பிரதிநிதிகளாக இருந்து சேவை செய்ய வேண்டுமே தவிர சபையை ஆட்டிப்படைக்க முனையக்கூடாது.
5. முற்கோபமுடையவனாகவும், சண்டைக்காரனாகவும் இருக்கக்கூடாது. (1 தீமோ. 3:3; தீத்து 1:7) – வெகு சீக்கிரம் ஆத்திரமடைந்து, வம்புச் சண்டையிலிறங்குகிறவன் ஊழியத்திற்குத் தகுதியற்றவன். இது வாய்ச்சண்டையாக இருந்தாலும், கைச்சண்டையாக இருந்தாலும் போதக, பிரசங்க ஊழியத்திற்கு ஏற்றதல்ல. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில், கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாக இல்லாமல், எல்லாரிடத்திலும் சாந்தமுற்றவனும், போதக சமர்த்தனும் தீமையை சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும் என்று கூறுவதைப் பார்க்கலாம்.
6. மதுபானப்பிரியனாக இருக்கக்கூடாது. (1 தீமோத்தேயு 3:3; தீத்து 1:7) – இவ்வசனத்தின் மூல வார்த்தை மதுபானத்தின் பக்கத்திலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவனைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மதுபானத்தைத் தனது நண்பனாகக் கொண்டு, அதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறவன் ஊழியக்காரனாக இருக்க முடியாது. மதுபானத்தில் சுகத்தையும், தமது ஊழியத்திற்கான பலத்தையும் அடைய முயற்சிக்கிறவர்கள் கிறிஸ்தவர்களை வழி நடத்தத் தகுதியற்றவர்கள். இன்று கிறிஸ்தவ சுதந்திரத்தின் பெயரில் சில ஊழியக்காரர்கள் மதுபானத்தில் சுகம் காண முயற்சிக்கிறார்கள். இவர்களால் திருச்சபைக்கு ஆபத்து!
7. அடிக்கிறவனாக இருக்கக்கூடாது. (1 தீமோ. 3:3; தீத்து 1:7) – சுலபமாக கைநீட்டுவதை வழக்கமாகக் கொண்டவன் கர்த்தரின் சபையை ஆட்டிவைக்க முனையும் சண்டைக்காரன். ஆனால், கர்த்தரின் ஊழியக்காரன் பொறுமையுள்ளவனாய் எச்சந்தர்ப்பத்திலும் நிதானத்தை இழக்காது எக்காரியத்தையும் முறையாய்த் தீர்த்து வைக்க முனைவான்.
8. பண ஆசை உள்ளவனாய், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனாய் இருக்கக்கூடாது. (1 தீமோ. 3:3; தீத்து 1:7) – இன்று கிறிஸ்தவ ஊழியத்தைப் பலரும் நையாண்டி செய்யும் நிலைக்கு கொண்டுவந்து, வீழ்ந்திருக்கும் பல ஊழியக்காரர்களின் நிலைக்கு அவர்களுடைய பண ஆசையே காரணம். மேலைத்தேச வாழ்க்கைத்தரத்தால் பாதிக்கப்பட்டு தன் நிலைமையை மீறி, தான் ஊழியம் செய்யும் மக்களின் நிலைமையையும் மீறி வாழ்ந்து அநேகர் ஊழியத்தில் தவறிழைத்திருக்கிறார்கள். ஊழியத்தின் மூலம் எவ்வாறு பணம் சேர்க்கலாம் என்ற நோக்கம் கொண்டவர்கள் ஊழியத்தை நாடக்கூடாது. ஒருவன் பணத்திற்காக எதையும் செய்பவனாகத் தென்படுகிறானா? எந்நேரமும் பணத்திலேயே குறியாக இருக்கிறானா? தன் நிலைமையையும், தான் ஊழியம் செய்யும் மக்களின் நிலைமையையும் மீறி வாழ முயற்சிக்கிறானா? அடிக்கடி பணத்தைப் பற்றியே பேசுகிறானா? என்று ஊழியத்தை நாடுபவர்களை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பணத்தை கடவுளாகக் கருதும் ஒருவன் கர்த்தரைத் துதிக்கும் மக்களை வழி நடத்த முடியாது.
9. ஒருவன் புதிய விசுவாசியாக இருக்கக்கூடாது. (1 தீமோ. 3:6) – அதாவது ஒரு புதிதாக விதைக்கப்பட்ட விதையாக இருக்கக்கூடாது. புதிதாக விதைக்கப்பட்ட விதை சரியாக நிலத்தில் பதிந்து துளிர்விட காலமெடுக்கும். அதேவேளை பலவிதமான ஆபத்துகளையும் தாங்கக்கூடிய வல்லமையும் அதற்கு இல்லை. அதேபோல், ஒரு புதிய கிறிஸ்தவன் வளருமுன் அவனுக்குப் பெரும் பொறுப்புக்களைக் கொடுப்பதால் அவனுக்குத் தன்னைப்பற்றிய மேலான எண்ணம் ஏற்பட்டு ஆணவமுள்ளவனாக மாறிவிடும் ஆபத்து உண்டு. பொறுப்புக்களைக் காலம் வருமுன் ஒருவருக்குக் கொடுப்பதால் அவரை அழித்துவிடக்கூடிய ஆபத்து உண்டு. முறையான ஊழியத்திற்கு தாழ்மை பெரிதும் அவசியம். திருமறையின்படி, இதுவே கிறிஸ்தவ ஊழியத்தின் மிக விசேடமான அம்சமாகக் கருதப்படுகிறது (மாற்கு 10:35-45). இத்தகைய தாழ்மை வளர புதிய கிறிஸ்தவனுக்கு காலமும், கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சியும் மட்டுமே துணை புரிய முடியும். அதற்குமுன் பெரும் பொறுப்புக்களை அவன் மேல் திணிப்பது அவனுக்கோ அல்லது ஊழியத்திற்கோ நண்மை பயக்காது.
இதுவரை நாம் பார்த்த இலக்கணங்கள் எதிர் மறையானவை. அதாவது ஒருவன் எதைச் செய்யக் கூடாது? எப்படி இருக்கக்கூடாது என்று இவை எடுத்துக் கூறுகின்றன. ஊழியத்தை நாடுபவர்கள் சுத்த மனச்சாட்சியுடன் மனந்திறந்து இவ்விலக்கணங்கள் தனக்குப் பொருந்தி வருகிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அ. கர்த்தருடைய சித்தத்தின்படி வாழ்வதை மட்டுமே நான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றேனா?
ஆ. எனக்கு சுலபமாக கோபம் வருகிறதா?
இ. மதுபானத்தில் எனக்கு ஆசை உண்டா?
ஈ. மற்றவர்கள் என்னை நாடிவரப் பயப்படுகிறார்களா?
உ. எனக்குப் பண ஆசை உண்டா?
ஊ. மற்றவர்க்ளை வழி நடத்துமளவுக்கு எனக்கு முதிர்ச்சி உண்டா?
- https://biblelamp.me/2012/02/21/ஊழிய-அழைப்பு/
[3/23, 2:22 PM] Elango: ஊழியம் கர்த்தருடைய அதை கண்டிப்பாக யாரையாவது கொண்டு, அழைத்து தொடங்குவார், தொடர்ந்து கொண்டே இருப்பார்.
மோசேக்கே பிறகு யோசுவா
எலியாவிற்க்கு பிறகு எலிசா
பவுலுக்கு பிறகு தீமோத்தேயு...
.
[3/23, 2:29 PM] Edward Nesan VT: ✍ அன்பானவர்களே! 🍇 புதிய ஏற்பாடு காலத்தில் வாழ்கின்ற மற்றும் கிறிஸ்துவை பின்பற்றுகின்ற அல்லது கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற அனைவருக்குமே "அழைப்பு என்பது பொதுவானதே" ஆனால்🌱🌴🌿 தேவ தரிசனமும், தேவ நோக்கமும், இதயபாரமும், திட்டமிடுதலும் மற்றும் தகுதியுமே பிதாவின் சித்தத்தை செய்ய அடிப்படை தகுதிகளாகிறது.🌱🌱
[3/23, 2:46 PM] Levi Bensam Pastor VT: ஊழியத்தில் இரண்டு வகை உண்டு, No1-, *மகிமையான ஊழியம்* it mean பாடுகள் நிறைந்தது, இடிக்கமானது, No2- *அட்டூழியம்*விசாலமானது
[3/23, 2:46 PM] Levi Bensam Pastor VT: 👆இடுக்கமானது👆
[3/23, 2:48 PM] Elango: ✅👍
ஊழியமும் நற்கிரியைகளும் தேவனையே மையமாகவும் மகிமைப்படுத்தவது முக்கியம்
[3/23, 2:51 PM] Stanley VT: ஞானமே உதவும்
தொடர வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டவர்கள் . . .
தொலை நோக்கு பார்வையில் நிர்வாகம் கட்டமைப்பு வைத்துஇருப்பதே வாய்ப்பு.
சொந்த பிள்ளைகளை முதலில் நம் பார்வையில்லாமால் தனி முடிவெடூக்கும் திரனை கொள்ளும் வகையில் தனியாக போய் கற்றல் , நிர்வாக பயிற்சி , சமாளித்தல், சொந்த அனுபவம் பெற்று வர அனுப்புதல் மட்டுமே சிறந்த வழி.
அல்லது
நமது பிள்ளைகளை விட்டுவிடும் பட்சத்தில் நமக்கு சார்ந்து தொடரும் உண்மையுள்ள சிலரை சகல பணிகளையும் பயிற்றுவித்து அனுபவம் கொள்ள செய்தல்மூலம் அவரை நம் பணிகளை தொடரும் வாரிசாக்களாம்.
ஆனால் அவருக்கு சகல அதிகாரங்களும் நம்பி கொடுக்க பட்டு இருக்க வேண்டும்.
அவர் வளர்ந்நு நம் பணிளை பொறுப்பெடுத்தவுடன் நாம் அவர் நிர்வாகத்தில் தலையிடமாட்டோம் என்ற நம்பிக்கை அவருக்கு அவசியம்.
ஆனால் எப்போதும் அவர் நமக்கு விசுவாசத்தில் இருப்பார் என்ற நம்புதல் வேண்டவே வேண்டாம்.
[3/23, 2:52 PM] Elango: *எனக்கு ஊழியம் செய்வதற்கு அழைப்பு வந்தது. ஆனால் என் குடும்பம், என் பிள்ளைகளின் வாழ்க்கை நிலைவரப்பட்ட பின்னர் ஊழியம் செய்ய ஒப்புக் கொடுப்போம் என்று கூறும் சிலர் உள்ளனர்.*🙄🙄🙄😟😟😟😟
கலப்பையின் மேல் கைவைத்து பின்னிட்டு பார்ப்பவன் பரலோக ராஜ்யத்திற்கு உகந்தவனல்ல✝✝✝ என்ற வசனத்தை ஆதாரமாக சொல்பவர் உண்டு.
*அழைப்பு வந்தப்பின் தாமதிப்பது என்பது தாலந்தை மண்ணில் புதைத்து வைக்கும் ஊழியனுக்கு ஒப்பாக அல்லவா இவர்கள் இருக்கிறார்கள்....*‼
[3/23, 3:15 PM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 20: 30
*காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.*
Proverbs 20: 30
*The blueness of a wound cleanseth away evil: so do stripes the inward parts of the belly.*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[3/23, 3:59 PM] Elango: 🙏🙏ஊழியக்காரரை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது பாஸ்டர்.
நம்முடைய ஆத்ம பாரம் பக்திவைராக்கியம் ஆத்ம தாகம் பிள்ளைகளையும் ஆண்டவருக்கு தானாக ஒப்புக்கொடுக்க தூண்டுவதாக நம் சாட்சி இருக்க வேண்டும்.
ஊழியம் செய்ய கர்த்தர் நம் பிள்ளைகளை அழைத்தால் , ஆவர்கள் மேல் ஆவியை வைத்தால் நாம் பெற்றோர்கள் தடுக்காமல் இருக்க வேண்டும்.
எண்ணாகமம் 11:24-29
[24]அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
[25]கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
[26]அப்பொழுது இரண்டு பேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
[27]ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.
[28]உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.
[29] *அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.*
[3/23, 4:05 PM] Elango: ஊழியக்காரரின் பிள்ளைகள் ஊழியத்தில் வாஞ்சையில்லாமல் இருந்தால், நாமும் ஒரு காரணமாக இருக்கலாம்..
சாட்சியில்லாத வாழ்க்கை..
சோர்ந்துபோகும் ஊழிய பாதை..
சபையில் நெருக்கடி...
சபையில் பண நெருக்கடி..
1 கொரிந்தியர் 9:16-17
[16]சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; *அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.*
[17] *நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.*
[3/23, 4:15 PM] Ezra John VT: pl clarify, wine is an acceptable drink or not as per bible?
[3/23, 4:15 PM] Ezra John VT: Please bible words...
[3/23, 4:22 PM] Stanley VT: ஒப்புவிக்கபட்டதை செய்தால் பலன் உண்டு .
ஆனால் இஷ்டமில்லாமல் செய்தல் கண்டிப்பாக கட்டாயபடுத்துதலே.
பிள்ளைகள் மட்டுமே வாய்பில்லை.
சபையில் அழைக்கப்பட்டவர் அனேகர் உண்டு.
அவர்களை நம் நம் ஊழிய வாரிசாக சுவிகாரம் செய்யும் அடுத்த வாய்பை பயன் படுத்தலாமே.
[3/23, 4:23 PM] Jeyachandren Isaac VT: proverb 23:29-35
[3/23, 4:26 PM] Stanley VT: தனி ஊழிய வளர்ச்சியில் அனேக சொத்துகள் உண்டு அதை யாரோ பயன் படுத்திவிடுவார்கள் என்ற யோசனையில் தம் பிள்ளைகளை ஊழியராக வளர்த்தல் தேவ பார்வையில் பொருளாசையே.
அந்த பிள்ளை உண்மையில் அரசன் இல்லை.
அரசனை போல ஒப்பனை செய்த வேசாதாரியே.
[3/23, 4:29 PM] Stanley VT: உண்மையில் நம் பிள்ளை இரட்சிக்காப்பட்டால் பெற்றோர் இருந்த சொந்த ஊழியத்தை பிறர்க்கு விட்டு கொடுத்துவிட்டு தனக்கானவற்றைவிட்டு வெகுதூரம் விலகி தனக்கான ஊழிய ஆத்தும ஆதாயத்தை தன் சொந்த பக்தியால் பலத்தால் தேவ உதவியோடு உருவாக்கி நிலை நிறுத்துதலே சரியானது.
[3/23, 4:29 PM] Elango: 👍👍
ஊழியத்தை நாம் மனிதர்கள் பிறர் மீது கட்டாயமாக திணிக்க கூடாது என்பது சரிதான்....
ஆனால் நம் சர்வவல்ல தேவன் நம்மை யாரை வேண்டுமானாலும் அவர் கட்டாயப்படுத்தி அழைக்கலாம்.
யாத்திராகமம் 4:12
[12]ஆதலால், *நீ போ;*🗣🗣🗣🗣🗣🗣🗣🗣 நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.
ஆதியாகமம் 12:1
[1]கர்த்தர் ஆபிராமை நோக்கி: *நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.*
[3/23, 4:30 PM] Stanley VT: amen
துள்ளிய குறிப்பு,
ஆலோசனை
[3/23, 4:32 PM] Elango: 🙏🙏
தன் ஊழியத்தை பிறரை விட தன் பிள்ளைகள் மேல் நம்பிக்கையும், பொறுப்பும் இருப்பதாலும் அப்படி ஒருவேளை செய்பவர்களும் உண்டு ஐயா.
பரலோகமே நமது சொத்து
மற்றதெல்லாம் வெறும் வஸ்து🙋♂🙏👍
[3/23, 4:33 PM] Stanley VT: நான் - என்ற சுயம்
விருப்பம் - என்ற மாம்சம்
தேவைக்கு
மிஞ்சிய
வாழ்வு - என்ற பாவம்
இதை முன்றையும் உணர்தலே இரட்சிப்பு.
இது முன்றையும் பிறர்க்கு உணர வைக்க எடுத்து கொள்ளும் தியாகமே ஊழியம்.
இந்த இரண்டும் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு நிலை .
இதை ஒவ்வொருவரும் தனக்கான நிலைபாட்டை துள்ளியமாக புரிந்து கொள்ள முயற்ச்சிப்பதே
பக்தி வாழ்க்கை.
ஊழியர் தன் பிள்ளைகளை தேவ பக்தியில் கொண்டுவர மிகுந்த பிரயாசமும் தனி சிறப்பு கவனிப்பும் அவசியம்.
[3/23, 4:57 PM] Stanley VT: amen.
ஆனால்
சில விமர்சனங்களையும் தவிற்க மாற்று யோசனைகள் நன்மை தரும்
[3/23, 5:03 PM] Elango: கண்டிப்பாக 👍👍
குடும்ப அரசியல் போல...,குடும்ப சபை என்று மற்றவரின் விமர்சனத்தை தவிர்க்கலாம்🙋♂
[3/23, 5:07 PM] Elango: அனுபவ பூர்வமான விளக்கம்👏👍👆🏼👆🏼
[3/23, 5:25 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 23/03/2017* ☀

[3/23, 5:46 PM] Prabhu Ratna VT: எங்கள் பாஸ்டர் தன்னுடைய மூன்று பையன்களையும் ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
மூவருமே ஊழியத்தின் கடைநிலை வேலைகள் எல்லாவற்றையும் செய்வார்கள்.
என்னை விட மூன்று வயதே குறைவான கல்லூரியில் படிக்கும் அவரது மூத்த மகனைவிட மேடையில் எனக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படும். அவனும் நன்றாகப் பாடுவான். பிரசங்கிப்பான். ஆனால் யாருக்குமே மேடை ஆசை இருந்ததில்லை.
சபையின் வாலிபரில் ஒருவராக ஊழியத்திற்கு உதவி வருகின்றனர்.
[3/23, 5:51 PM] Stanley VT: எச்சரிக்கை மற்றும் ஞானம்
தேவன் தாமே அவரை சரியாய் வழி்நடத்துகிறார்.
[3/23, 5:55 PM] Prabhu Ratna VT: நான் அங்கு உதவி மேய்ப்பனாக இருக்கிறேன். நான் நினைத்தால் மட்டுமே அவரது பிள்ளைகளை மேடையேற்றவோ, ஊழியத்தின் நிர்வாக காரியங்களில் ஈடுபடுத்தவோ முடியும் என்கிற நிலையை பாஸ்டர் உருவாக்கியிருக்கிறார்.
அவரது மகன்களும் அதற்கு கீழ்ப்படிவது சிறப்பு
[3/23, 5:59 PM] Jeyachandren Isaac VT: 👆 "ஆயிரத்தில் ஒருவரையா நீர்"
(உங்கள் மேய்ப்பர்)👍👍👏🙏💐😊
[3/23, 6:00 PM] Elango: தேவனுக்கே மகிமை👏
[3/23, 6:00 PM] Jeyachandren Isaac VT: 👆உள்ளங்கை மேகமா....👍👍
பெருமழை எதிர்பார்க்கலாம் போல👍👏🙏😊
[3/23, 6:04 PM] Prabhu Ratna VT: தேவன் ஒருவரை அழைத்தால் யாராக இருந்தாலும் பயன்படுத்துவார்.
ஊழியரின் மகன் ஊழியரல்லாதோரின் மகன் என்ற பாகுபாடு தேவனின் பார்வையில் இருக்காது.
இரட்சிப்பும், அபிஷேகமும், அழைப்பும் என்றைக்குமே பிரத்யேகமானது தான்.
அநேக ஊழியரின் பிள்ளைகள் ஊழியம் செய்கின்றனர். ஊழியமே வேண்டாமென்று ஓடின ஊழிய வாரிசுகளும் பின் ஊழியம் செய்கின்றனர்.
ஊழிய வாஞ்சையை யாரிடமும் திணிக்க முடியாது.
தேவன் தனக்கேற்ற வேலையாளை நியமிக்கிறார். ஊழியக்காரரின் பிள்ளைகள் ஊழியம் செய்யவில்லையென்பது அவ்வூழியரின் தவறாகாது.
[3/23, 8:49 PM] Stanley VT: ஊழிய அழைப்பை உறுதிபடுத்தும் வெளிபாடுகள்
உணர்வுகள் என்ன. ?
வசனத்தின் படி கிடைத்தாலும். அனுபவத்தில் பகிறவும்.
[3/23, 8:50 PM] Jeyanti Pastor VT: 1. கிறிஸ்துவின் சிந்தை
[3/23, 8:51 PM] Jeyanti Pastor VT: 2. The focussing of Holy Spirit
[3/23, 8:52 PM] Jeyanti Pastor VT: Can take 1 corindians chap 2
[3/23, 8:53 PM] Stanley VT: தங்களின் சொந்த அனுபவத்தில் சிலவற்றை..
[3/23, 8:54 PM] Jebastin VT: முதலில் வசனத்தின் அடிப்படையில் உறுதியாக்கி கொள்ள வேண்டும்
[3/23, 8:55 PM] Jebastin VT: தேவன் 90% வேத வசனத்தின் மூலமாக பேசுவார்
[3/23, 8:56 PM] Stanley VT: amen
வசனமே சத்தியம்
[3/23, 8:56 PM] Jebastin VT: முதலில் நம்மோடு பேசுவார் பின்னர் அதே காரியத்தை மற்றவர்கள் மூலமாக உறுதி படுத்துவார்
[3/23, 9:00 PM] Elango: சிலர் ... எனக்கு தேவ அழைப்பு வந்தது. ஆனால் என் மனைவி, கணவன் என்னோடு ஊழியத்தில் செல்ல ஆயத்தமாக இல்லை, ஆதலால் அவர் ஒப்புக் கொடுக்கும் வரை ஊழியம் செய்ய ஒப்புக் கொடுப்பது கடினம் என்று சொல்வதை காண்கிறோம்.👆🏼👆🏼👆🏼👆🏼
*தேவ சமூகத்தில் அமர்ந்து முதலில் நீங்கள் ஒப்புக் கொடுங்கள். பின்னர் உங்கள் மனைவியை / கணவனை கர்த்தர் வழி நடத்தி வரும்படி ஜெபம் செய்யுங்கள்.🙏🙏🙏👏👏👏👏*
*எந்தவொரு நிலையிலும் கணவனோ மனைவியோ உங்கள் ஊழியத்தை ஏற்காதிருக்கும் போது, வாழ்க்கை கடினமாகும்.*😖😣😔😔😩😩😫😭😭😭
[3/23, 9:03 PM] Elango: ஊழிய அழைப்பை தெரிந்துக்கொள்ள ... ஊக்கமான ஜெபத்தை கர்த்தர் கேட்டு, அதற்கான பலனை கொடுக்கிறார். ஆச்சரியமாக காரியங்களை செய்ய கர்த்தர் வல்லவராக இருக்கிறார். ஆமென்.
நம் சபையில் அல்லது உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரியின் மூலமாக வெளிப்படுத்துவார்.👇👇👇👇
எண்ணாகமம் 12:6
[6]அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; *உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.*
[3/23, 9:05 PM] Amos John VT: கா்த்தருக்கு ஸ்தோத்திரம் ஜெப விண்ணப்பம்(ஏப்ரல் 26 ,27, புதன், வியாழன்) சுவிசேஷ ஊழியம் பண்டாபுரம் கிருபாசனம் கிறிஸ்துவின் சபை தூத்துக்குடி மாவட்டம், கிருபாசன கிளை ஊழியா்கள் ஜெபிக்கவும் கலந்து கொள்ளவும்
[3/23, 9:06 PM] Jeyachandren Isaac VT: 👆👍👍 The order should be like this👇
1. GOD
2.family
3.ministry👍
Any thing jumbled leads to disaster....
[3/23, 9:07 PM] Jebastin VT: முதலில் நம்மோடு பேசுவார் பின்னர் அதே காரியத்தை மற்றவர்கள் மூலமாக உறுதி படுத்துவார்
[3/23, 9:19 PM] Elango: சகோ. பக்தசிங் என்ற தேவ ஊழியரை பற்றி நம்மில் அநேகர் அறிந்திருக்கலாம். அவர் ஆசியாவிலுள்ள அளவற்ற மக்களுக்கு ஆவிக்குரிய தகப்பனாகவும், உலகின் பல பாகங்களிலுமுள்ள விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய ஒரு முன்மாதியாகவும், விளங்கினார். வேதத்தை நேசித்து, கர்த்தருக்கு வைராக்கியமாய் ஊழியஞ்செய்யும் ஒரு கூட்ட ஊழியர்களை உருவாக்கிய பரிசுத்தவான் அவர். தேவன் அவரை ஊழியத்திற்கு அழைத்த விதத்தை காண்போம்.
[3/23, 9:21 PM] Elango: இரட்சிக்கப்பட்ட புதிதில் கனடா நாட்டில் வின்னிபெக் என்ற நகரிலுள்ள ஒரு ஆராதனையில் கலந்து கொண்டு வெளியேறிய சமயத்தில்,
*முன்பின் தெரியாத ஒருவர் அவசரமாக ஓடி வந்து, அவருடைய கரத்தை கெட்டியாக பிடித்து கொண்டார். 'சகோதரனே, நீர் ஏன் இந்தியாவிற்கு திரும்பி சென்று அங்கே சுவிசேஷத்தை பிரசங்கிக்க கூடாது?' என்று கேட்டார்.*🤝🤝🤝👏👏👏👍👍👍
👉👉அதற்கு பக்தசிங், 'நான் ஒரு பொறியாளர், பொறியியலை கற்பதற்காக பல ஆண்டுகள் பயின்றிருக்கிறேன், மேலும் எனக்கு கொன்னலும் திக்கு வாயும் உண்டு.
ஒரு சிறிய கூட்டத்திற்கு முன்பாக கூட நின்று பேசுவதற்கு என்னால் முடியாது. மேடை பயமும், சபை கூச்சமும் நிறைந்தவன், என்னை போல ஒரு தொடை நடுங்கியும், திக்குவாயும் உடையவன் எபப்டி பிரசங்கியாக முடியும்?' என்று கூறினார். அதற்கு அவர் எந்த பதிலும் பேசவில்லை.
*ஆனால் இரண்டு ஆண்டுகள் இதே வார்த்தைகள் அவர் இருதய செவியில் தொனித்து கொண்டேயிருந்தது.*👂👂👂👂🗣🗣🗣🗣
[3/23, 9:23 PM] Elango: *இப்படி கர்த்தருக்கும் பக்தசிங் அவர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் தர்க்கமும், வாக்குவாதமும் நடந்தது.*
ஒவ்வொரு நாளும் ஒரு சாக்கு போக்கை சொல்லுவார்.
*ஆண்டவரே என்னுடைய பணத்தை எல்லாம் உமக்கு அர்ப்பணிக்கிறேன், என் சம்பாத்தியத்தின் மூலமாக நான் இன்னும் அநேக ஊழியர்களை ஆதரிக்கிறேன்,*
ஆனால் தயவு செய்து என்னை மாத்திரம் பிரசங்கியாக அழைக்க வேண்டாம்' என்று ஜெபத்தில் மன்றாடினார்.😟😟😟😥😢😰😨
ஆனால் தேவன் கூறிய பதில் என்ன தெரியுமா❓❓❓❓👇👇👇👇
*உன் பணம் எனக்கு ஒன்றும் வேண்டாம், நீ தான் எனக்கு வேண்டும் என்றார்.*
பின் ஒரு வழியாக தன்னை தேவப்பணிக்கு அர்ப்பணித்தார்.
*இது குறித்து அவர் கூறியதாவது, 'நம்முடைய தேவன் நம்மை ஏன் தெரிந்து கொள்கிறார் என்பது விளங்காத ஒரு புதிராகவே உள்ளது. அவருக்கு நம்மீது உரிமையிருப்பதால் அப்படி செய்கிறார். நாம் நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்பு கொடுத்து, அவருக்கு கீழ்ப்படிந்து அவரை பின்பற்றும்போது அவர் நம்மிலும், நம் மூலமாகவும் கிரியை செய்கிற அவருடைய வல்லமையையும், மகிமையையும் அதிகமான அளவில் அறிந்து கொள்வோம்' என்றார்.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[3/23, 10:34 PM] Elango: தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்!🙋♂
ஊழியக்காரர்களின் பிள்ளைகள் ஏன் ஊழியங்களை செய்வதில்லை என்று கேட்டால் ... என்னைக்கேட்டால் ... அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஊழியப்பயிச்சியை கொடுப்பதில்லை... நாம் படுகிற கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாது என்று சிந்திக்கிறார்கள் அதுவே தவறானது ... 👆🏼👆🏼‼
*பிள்ளைகளுக்கிடையே அப்படிப்பட்ட எண்ணத்தை வளர்ப்பதினாலே ஊழியக்காரர்களின் பிள்ளைகள், முன்மாதிரியாகவோ அல்லது ஊழியத்திற்க்கு ஏற்றப்படி வாழ முடியாமல் போகிறார்கள் , அது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது*😰😢😥😔
ஆகவே பிள்ளைகளை ஊழியக்காரர்கள், வளர்க்கும்போது ஆரம்பத்திலிருந்தே அவர்களின் உள்ளத்தில் ஊழியத்தின் வாஞ்சையை விருப்பத்தை வளர்த்து விட வேண்டும்.✅🙏🙋♂👍 அப்படி செய்தால் ... கண்டிப்பாக அவர்களுக்கு என்ன உபத்திரவம் வந்தாலும் அவர்கள் நிலை நிற்ப்பார்கள்.📚👍🙋♂✅
அவர்களின் சிந்தனையை கெடுப்பது ஊழியக்காரர்களே அல்லாமல் பிள்ளைகள் அல்ல‼
- பாஸ்டர் ஆமோஸ் ஜான் @Amos John VT
[3/23, 11:01 PM] Elango: ஆண்டவரை சேவிக்கிற ஒரு சந்ததி உண்டு, தாவீதுக்காக அவன் சந்ததியை நினைவு கூர்ந்து, அவனுடைய சந்ததி பாவம் செய்தாலும் தாவீது முகாந்திரம் அவனுடைய சந்ததியை நினைவுகூர்ந்து, அவருடைய இராஜரீக பிரமாணத்தை நிலைநாட்டினார்.‼🙋♂👍✅
1 இராஜாக்கள் 11:34
[34]ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான *என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.*
நான் இப்போது வேலைசெய்துகொண்டு ஊழியம் செய்கிறேன்... ஆனால் முழு நேர ஊழியனாக என்னை அவருடைய ஊழியத்திற்க்கு அழைக்கும் போது நான் வேலை செய்கிற காரியங்கள் எல்லாம் தோல்வியில் முடியும்.
பவுல் கூடார வேலை செய்தார் ஆனால் நேரத்திலும் செய்யவில்லை...சில சந்தர்ப்பதில் செய்தார்.
அநேக வேளைகளில் சிறைச்சாலை, பட்டினி, நாச மோசங்களில் அகப்பட்ட ஒரு மகனாக ஜீவித்தார்.
ஆண்டவர் உங்களை முழுமையாக ஊழியத்திற்க்கு தெரிந்துக்கொண்டால் உங்கள் வேலையில் நெருக்கம் வரும்.வேலை செய்யமுடியாது, அப்ப புரிந்துக்கொள்ள வேண்டும் தேவன் உங்களை ஏதோ விஷேச அழைப்புக்கு அழைத்திருக்கிறார் என்று.வேலைக்கு போய்வந்து ஆண்டவருடைய ஊழியத்தை செய்கிற பிள்ளைகள் உண்டு.
தாலந்து வாங்கினவனை பார்த்து சொன்னார் ... 5, 2, 1 தாலந்து... ஒரு தாலந்து பெற்றவன் புதைத்து அப்படியே கொடுத்து விட்டான் பாக்கி உள்ளவர்கள் சம்பாதித்து கொடுத்தார்கள்
So நம்மிடமும் ஆண்டவர் கொடுத்த தாலந்து இல்லையென்று சொல்லக்கூடாது, சிலருக்கு 1, 2, 5 இருக்கலாம்.. ஒன்றை வாங்கி புதைத்து வைத்தவனுக்கு இவ்வளவு தண்டனை என்றால் ... ஒரு தாலந்தை நஷ்டப்படுத்துகிறவர்களுக்கு எப்படி தண்டனை இருக்கும்‼😢😥😔😔
*நம்முடைய சந்ததி தலைமுறை ஆண்டருக்கு ஊழியம் செய்வதை காட்டிலும் வேறு என்ன சந்தோஷம் இருக்கப்போகிறது ...வேறு இடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட ஆண்டவர் சமூகத்தில் வாழும் ஒரு நாளே மேலானது.🙋♂👍✅👏*

Post a Comment
0 Comments