Type Here to Get Search Results !

கிறிஸ்தவம் என்பது மதமா அல்லது மார்க்கமா❓

[2/24, 7:24 AM]  ✝ *இன்றைய வேத தியானம் - 24/02/2017* ✝
👉 கிறிஸ்தவம் என்பது மதமா அல்லது மார்க்கமா❓

👉 மத்தேயு 23:15
[15]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, *ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்* - என்ற வசனத்தின் அர்த்தம் என்ன❓

                *வேத தியானம்*

[2/24, 8:43 AM] Elango: சட்டதிட்டங்களையும், சடங்குகளையும் அடிப்படைக் கொண்டதே மதம்.🚦
பாவத்திலிருந்து விடுதலையையும், நித்திய ஜீவனையும், தேவ அன்பையும் அறிவிப்பதே கிறிஸ்தவம்.✝✝✝

[2/24, 8:44 AM] Elango: லூக்கா 20:21
[21]அவர்கள் வந்து:
போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், *முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.*🗣🗣🗣

[2/24, 8:46 AM] Elango: மதம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை என்பதாக தெரிகிறது.
அப்போஸ்தலர் 22:4
[4] *நான் இந்த மார்க்கத்தாராகிய* புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.

[2/24, 8:59 AM] Elango: எல்லா மதங்களும்,  உண்மையான இறைவனை காட்டுவதாகவும், அவரை நாம் இந்த மதத்தின் மூலம் அறிய முடியும் என வாக்கு கொடுக்கிறது.
ஆனால் *இயேசு இங்கே சொல்கிறார் நானே வழி* / அதாவது இறைவனை அடைய மார்க்கம் / பாதை.
இறைவனை அடைய பல வழிகளில் இயேசுவும் ஒரு வழி அல்ல, *இயேசுவே ஒரே வழி*✝✝

[2/24, 9:01 AM] Jeyachandren Isaac VT: கிறிஸ்தவம் மதமல்ல
மார்க்கமே...
மதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதே!!!

[2/24, 9:03 AM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:19-22
[19]ஆகையால், சகோதரரே, *நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,*
[20]அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
[21]தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
[22]துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

[2/24, 9:03 AM] Jeyachandren Isaac VT: மதங்கள் என்று எடுத்துக்கொண்டால் உதாரணமாக👉
யூதமதம், கத்தோலிக்கமதம் என இவைகளை குறிப்பாக சொல்லலாம்

[2/24, 9:04 AM] Satish Jacob Bro VT: மதத்தை சார்ந்தவனுக்கும்....
மார்க்கத்தை சார்ந்தவனுக்கும் வித்தியாசம் என்ன தோழரே

[2/24, 9:04 AM] Elango: இந்து, சிக்கிய, இஸ்லாமும் மதம் தானே பாஸ்டர்

[2/24, 9:05 AM] Satish Jacob Bro VT: போதகம் என்பது மதத்தை சார்ந்ததா மார்க்கத்தை சார்ந்ததா

[2/24, 9:06 AM] Elango: மதம் பக்திவெறியை தூண்டும்.
மார்க்கம் பிறருடைய பக்திவிருத்தியை நாடும்.

[2/24, 9:08 AM] Elango: அப்படிதான் அவங்க சொல்லிக்கிடறாங்க😊

[2/24, 9:21 AM] Elango: மதுரைக்கு போக பல வழி...
குஜராத்துக்கு போக பல வழி...
டெல்லிக்கு போக பல வழி...
ஆனா...
ஆனா...
*பரலோகத்திற்க்கு போக ஒரே வழி...*
*அந்ந வழியே இயேசு*✝✝

[2/24, 9:22 AM] Satish Jacob Bro VT: நோ விதன்டாவாதம் சரியான பதில் வேனும்😡😡😡😡😡

[2/24, 9:25 AM] Satish Jacob Bro VT: பஸ்ல போறது....

டிரெய்ன்ல போறது...

ப்ளைட்ல போறது...
நடந்துபோறது....
போகாமயே இருப்பது. ....இதில் உங்க மார்க்கம் எது தோழரே

[2/24, 9:32 AM] Elango: சில நேரம் பஸ் ( கரடுமுரடான வாழ்க்கை)
சில நேரம் ட்ரெயின் ( மிதமான வாழ்க்கை)
சில நேரம் நடந்து ( உபத்திரம் வாழ்க்கை) 
*ஆனா வழி மட்டும் மாறாது, அந்த வழி இயேசு மட்டுமே.*
யோவான் 14:6
[6] *அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.*

[2/24, 9:34 AM] Satish Jacob Bro VT: கரடுமுரடான பயணம பஸ் பயணமா..

[2/24, 9:35 AM] Satish Jacob Bro VT: ரோட்லதான் பஸபோகும்..

[2/24, 9:35 AM] Satish Jacob Bro VT: காட்டில் போகாது

[2/24, 9:36 AM] Elango: நாம் வாழுகிற உலகம் கடினமான போராட்டம் நிறைந்த உலகம். அநேகர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, புண்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.😭😭😓😓😥😢😟
அப்படித்தானே? இப்போது நமக்கு என்ன தேவை?
மீட்பா அல்லது சாதாரண மதமா?
உயிருள்ள இரட்சகரா அல்லது செத்துப்போன தீர்க்கதரிசிகளில் ஒருவரா?
 அர்த்தமுள்ள ஒரு உறவா?
 அல்லது வெறுமையான சடங்காச்சாரங்களா?
 இங்கே நாம் இயேசுவைத் தவிர தெரிந்து கொள்ளப்படத்தக்கவர் வேறு யாரும் இல்லை.
*வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் மத்தேயு 11:28*😀🙏💁♂💁♂💁♂💁♂

[2/24, 9:39 AM] Satish Jacob Bro VT: நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க ...நான் தூக்கத்தை தொடர்கிறேன் 🤚

[2/24, 9:41 AM] Satish Jacob Bro VT: சொகுசான வாழ்க்கைதான் நீங்கள் சொன்ன மார்க்கமா😄😄😄😄

[2/24, 9:41 AM] Elango: 👉நீங்கள் மன்னிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், *இயேசுவே அந்த சரியான மதம்*
அப்போஸ்தலர் 10:43
[43 இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்
👉 நீங்கள் தேவனோடு அர்த்தமுள்ள ஒரு நல்ல உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால்,இயேசுவே அந்த சரியான மதம்.
யோவான் 10:10
[10]... *நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.*
 👉பரலோகத்தில் ஒரு நித்திய வீடு உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
 இயேசுவே அந்த சரியான மதம்.
யோவான் 3:16
[16] *தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.*
*உங்கள் இரட்சகராக இயேசுகிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வையுங்கள், நீங்கள் வருத்தப்படவேண்டிய மாட்டீர்கள். உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக அவரில் நம்பிகை வையுங்கள். நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.*✝💕💖💓💞❤💛💚💙💜

[2/24, 9:51 AM] Elango: மதம் மற்றும் மார்க்கத்தின் வித்தியாசம் ❓
மதத்தில் என்னென்ன செய்வார்கள்?
மதத்தில் என்னென்ன செய்வார்கள்?
பழைய ஏற்பாடு மதமா❓
புதிய ஏற்பாடு மார்க்கமா❓

[2/24, 9:52 AM] Elango: அது ஒழுங்குமுறைகளையே
சட்டத்திட்டங்கள் இல்லை ப்ரதர்

[2/24, 9:52 AM] Satish Jacob Bro VT: மதமும் மார்க்கமும் வேறவேறயா???🤔அப்படினா மதத்துக்கும் மார்க்கத்துக்கும் விளக்கம் தேவை

[2/24, 9:53 AM] Satish Jacob Bro VT: அதெல்லாம் ஒத்துக்க முடியாது.சரியான விளக்கம் கொடுங்க

[2/24, 10:12 AM] Samson David Pastor VT: மதம் என்பது இறைவனை வழிபடுதல்.
மார்க்கம் என்பது
இறைவனை பின்பற்றுதல்.
மதம் என்பது, தனக்கொரு தேவை என இறைவனை அணுகுதல்.
மார்க்கம் என்பது,
நீரே என் தேவை என இறைவனை அணுகுதல்.

[2/24, 10:26 AM] Samson David Pastor VT: யானையின் "மதம் " நாம் அறிந்ததே!
மதம் பிடித்த யானைக்கு தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது.
மதம் (பிடித்த)  பற்றுள்ள மனிதர்களும் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல்,
கல்லிலும் மண்ணிலும் கடவுளை வணங்கிக் கொண்டிருக்கின்றனர்.
உயிரற்ற கல் போன்றவைகளுக்காக, உயிரையும் தருகின்றனர். கோபம் வந்தால், பிறர் உயிரையும் அவைகளுக்காக எடுக்கின்றனர்.
கிறிஸ்தவமோ, இன்றைய, நாளைய, நித்திய வாழ்க்கையின் "மார்க்கம் " என்பது நாம் பெற்ற பாக்கியமே! 😄🙏

[2/24, 10:28 AM] Isaac VT: Super..Jesus is a only way..

[2/24, 10:33 AM] Evangeline VT: வழிபடுதல் கிறிஸ்தவ மார்க்கத்தில் இல்லையா ஐயா?

[2/24, 10:35 AM] Isaac Samuel Pastor VT: கொஞ்ச கால விருந்தாளிகள்😀😀😀🙏🏻🙏🏻🙏🏻

[2/24, 10:39 AM] Isaac Samuel Pastor VT: மதம் என்பது தெய்வதை சென்றடைய மனிதர்கள் தேடிய வழி....... ஆனால் கிறிஸ்தவம் என்பது மனிதன் தன்னை அடைய தெய்வம் தேடிய வழி.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[2/24, 10:42 AM] Jeyachandren Isaac VT: Fellowship is the main purpose of church gathering

[2/24, 10:43 AM] Samson David Pastor VT: 👆for bro. Satish.

[2/24, 10:44 AM] Jeyachandren Isaac VT: 👆JESUS CHRIST is our only mediator...
other elders are leading others in front

[2/24, 10:47 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍many are man made only...still not bad....
but fellowship is important to than so called worship

[2/24, 10:48 AM] Jeyachandren Isaac VT: 👆important than so called worship

[2/24, 10:52 AM] Isaac VT: மதத்தில்(எந்த மதமும்..including கிறிஸ்தவமும்) முரட்டாட்டம்..குருட்டாட்டம்..மூடநம்பிக்கை..கொடூர வைராக்கியம்..etc..
கண்டிப்பாக இருக்கும்..but கிறிஸ்தவ மார்க்கத்தில் கண்டிப்பாக கிடையாது.

[2/24, 10:53 AM] Isaac Samuel Pastor VT: கிறிஸ்தவம் எப்பொழுதும் மதத்தின் வகையில் வகுக்க முடியாது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[2/24, 10:57 AM] Isaac VT: நான் வகுக்க வில்லை..சிலர் அதை மதமாக ஆக்குகிறார்கள் நம்மில் சிலர்..அறியாமையில்..

[2/24, 11:25 AM] Samson David Pastor VT: இன்றைய சபையில் காணப்படும் Order of Service (ஆராதனை) முந்தைய தலைமுறை தேவ மனிதர்களால் ஒழுங்கும் கிரமத்திற்கென்று உண்டாக்கப்பட்டது. இது நாளடைவில் வழிபாடு ஆக மாறி,
வேத கூறும் " சபை கூடுதல் " நோக்கத்தை விட்டு விட்ட நிலையில் தான் இன்றைக்கு இருக்கிறது.

[2/24, 11:27 AM] Samson David Pastor VT: In Appostle days, Church was primarily a Work shop where Practical Christian life was preached and connected activities were carried out. It was secondarily a Worship place.
But as days went on, the prime one totally disappeared and the second one became the whole purpose of the Church.
Let us pray the days to come back🙏

[2/24, 11:29 AM] Samson David Pastor VT: 👆இதை முடிந்தால் யாராகிலும் தமிழில் எழுதி பதிவிட்டால் நல்லது. 🙋🏼♂🙏

[2/24, 11:46 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 24/02/2017* ✝
👉 கிறிஸ்தவம் என்பது மதமா அல்லது மார்க்கமா❓
👉 மத்தேயு 23:15
[15]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, *ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்* - என்ற வசனத்தின் அர்த்தம் என்ன❓
                *வேத தியானம்*

[2/24, 11:58 AM] Samson David Pastor VT: 15 இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார். எப்படியெனில்:
எபிரேயர் 10 :15
16 அந்த நாட்களுக்குப்பின் நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு,
எபிரேயர் 10 :16
17 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.
எபிரேயர் 10 :17
18 இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.
எபிரேயர் 10 :18
19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
எபிரேயர் 10 :19
20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
எபிரேயர் 10 :20
21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
எபிரேயர் 10 :21
22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
எபிரேயர் 10 :22
23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
எபிரேயர் 10 :23
24 மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,
எபிரேயர் 10 :24
25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10 :25

👆சபையின் தேவையும், நோக்கமும்.

[2/24, 12:03 PM] Samson David Pastor VT: 15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
எபிரேயர் 13 :15
16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள். இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
எபிரேயர் 13 :16

👆அன்றியும் என்பது, அதைக் காட்டிலும் என்பதே.

[2/24, 12:05 PM] Samson David Pastor VT: Satish Bro, கேள்விக்கு இதில் பதில் உண்டு.

[2/24, 12:07 PM] Samson David Pastor VT: 👆போதனையும், போதனைக்கேற்ற வாழ்க்கை முறைகளும், ஆராதனையும் உள்ளடக்கியதே, சபை கூடுதல்.  🙏

[2/24, 12:10 PM] Samson David Pastor VT: இயேசு நித்திய பலியானதால். 👍🙏

[2/24, 12:15 PM] Samson David Pastor VT: உலகிற்கு (இருளில் இருப்போருக்கு)  வெளிச்சமாக,
பூமிக்கு (வருத்தத்தினால் பாரமுள்ளோருக்கு)  உப்பாக இருப்பதே கிறிஸ்தவ மார்க்கம்.

[2/24, 12:22 PM] Stanley VT: நான் எந்த தேவனை தொழுது கொள்கிறேன் என்பதை குறிப்பிடும் சொல்லே வார்த்தையே 'மதம்'  .
'மார்கம் 'என்ற வார்த்தையும் இதையே குறிக்கிறது.
நாம் எந்த தேவனை ஆராதிக்கிறோம் என்பது மதம் என்ற சொல்.
நாம் நித்தியம் அடைய எந்த தேவன் காட்டிய வழியை பின் பற்றுகிறோம் என்பது மார்கம் என்ற சொல் .
சொல்லும், வார்த்தையும் மொழி சம்மந்தபட்டதே.
மதம் சொல்லை கொண்டே தமிழ் மொழியில் இயேசு கிறிஸ்த்து தேவனை தொழுதுகொள்பவர் என்று வெளிபடுத்தத முடியும்.

[2/24, 12:25 PM] Samson David Pastor VT: துதி, ஸ்தோத்திரம், பாடல், ஜெபம் தான் ஆராதனை என்றால், அது கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு சிறிய பகுதியே.
வெளிச்சமும், உப்புமே (வாழ்க்கையே ஆராதனையாக)  பெரும்பகுதி.
முக்கியமானதை விட்டு, சிறுபகுதியை முழுமையானதாக மாற்றி நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ, என்பதே என் அச்சம், பாரம்.

[2/24, 12:30 PM] Jeyachandren Isaac VT: ஒரு சாப்பாடு என்றால் சோறு, குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என பார்க்கிறோம்...
இதில் எதையாவது ஒன்றையே இலை முழுவதும் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இன்று சபைகள் ஆராதனை என்ற ஒன்றையே அதிகமுக்கியபடுத்தி உப்பவைத்து விட்டனர்.....

[2/24, 12:34 PM] Samson David Pastor VT: உலகிலுள்ள வழிகளெல்லாம், உலகத்தாருக்கு எளிதாக தெரிகிறது.
இயேசு என்னும் வழி (சத்தியம், ஜீவன்) என்பதையோ நாம்தான் அதில் நடந்து காண்பிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

[2/24, 12:39 PM] Samson David Pastor VT: சிந்தனைக்கு அருமையானது. 🙋🏼♂🙏

[2/24, 12:53 PM] Jeyachandren Isaac VT: 👆சீஷீர்களே சீஷர்கள் என்ற ஒரு கூட்டத்தை உருவாக்கமுடியும். அப்படி உருவாக்கப்பட்டவர்கள் முதலாவது தங்களையும் பின்னர் தங்களுடையதையும் ஆண்டவருக்கே ஒப்புக் கொடுப்பார்கள்...
இவர்களே அன்பிலும் , உபதேசத்திலும் நிலைத்து நிற்பவர்கள்👍
இவையல்லாமல் சீஷத்துவத்தை அறியாத பலர் இன்று தாங்களே இரட்சிப்பின் அனுபவததின் நிச்சயம் இல்லாமலும், அதற்க்கேற்ற சுபாவ மாற்றம் இல்லாதவர்களாகவும் இருக்கும் நிலையில் இவர்கள் ஊழியங்கள் மற்றும் போதனைகளின் படியே ஒன்று சேர்பவர்கள், சேர்ந்தபின் இவர்களை போலவே சுபாவமாற்றம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்...
மேலும் இவர்கள் தாங்கள் இரட்சிக்கபட்டதாகவே எண்ணிக்கொள்வதால் , இவர்கள் உண்மையான இரட்சிப்பை அசட்டை  செய்பவர்களாகவும்,  நரகத்திற்கு செல்ல அதிக பாத்திரவான்களாகவும் இருக்கிறார்கள்..
👆ஒரு மூத்த ஊழியரின் பகிர்வில் கண்டது

[2/24, 12:54 PM] Satish Jacob Bro VT: அப்படினா ஆராதனை அவசியம் இல்லையா

[2/24, 12:56 PM] Samson David Pastor VT: 👆Satish bro.

[2/24, 12:57 PM] Jeyachandren Isaac VT: இன்று சரியாக வேதம் தெரியாத அனேகர் இன்று பாஸ்டர்களாக வலம் வந்துக் கொண்டிருப்பதற்கு மிக முக்கிய சாதனமாக பயன்படுவது இந்த நவீன கால துதி ஆராதனை என்ற யுக்தியே...
உண்மையான ஆராதனைக்கு நான் எதிரானவன் அல்லஂ...

[2/24, 1:00 PM] Apostle Kirubakaran VT: உண்மையே ஐயா

[2/24, 1:01 PM] Jeyachandren Isaac VT: ஆசாரியர்கள் உதடுகளிலே வேதத்தை தேடுவது போய் இன்று நல்ல  இசைக் கருவிகள் மற்றும் நல்ல ஆடல் பாடல் உள்ள சபைகளையே மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்....

[2/24, 1:04 PM] Apostle Kirubakaran VT: ஆம் கலர் தான் இப்படி உண்டு
அனேக பரிசுத்த வான்கள் வேதமும் தேவ பாதமும் மாக வே இன்றும் உள்ளனர்

[2/24, 1:05 PM] Jeyachandren Isaac VT: 👍👏🙏 இன்றும் வேதத்தை அருமையாக போதிக்கிற சில நல்ல ஊழியர்களும் உண்டு👍
அவர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

[2/24, 1:06 PM] Jeyachandren Isaac VT: 👆 அருமையான போதகர்கள் நமது குழுவிலேயே இருக்கிறார்கள்..👍👏🙏

[2/24, 1:08 PM] Samson David Pastor VT: பாடத் தெரிந்து,
இசைக்கத் தெரிந்து,
இரண்டும் தெரிந்தால்,
ஜனங்களை அழகாக ஆராதனைக்குள் நடத்தி விடலாம்.
செய்தியின் நேரம் வரும்போது,
ஆடி பாடி, ஆர்ப்பரித்து ஆராதித்ததால் சோர்ந்து போய் தூக்க மயக்கத்திற்குள் போய் விடுகின்றனர்.
ஆகவே வேதத்தை எப்படி போதிக்கின்றனர் என்பதே பெரும்பாலும் கவனிக்க படுவதில்லை.
ஆராதனையில் தான் தேவன் மகிழுகிறார், நம்மை ஆசிர்வதிக்கிறார் என்கிற போதனை ஆராதனை இடையிடையே கொடுக்கப்படுவதால்,
ஜனங்களே செய்தி முக்கியமில்லை, ஆராதித்தால் போதும் என்கிற முதிர்ச்சி (!?)க்கு வந்து விட்டனர்.
ஆகவே வேத உபதேசம் அவசியமில்லை என்கிற நிலை.

[2/24, 1:08 PM] Apostle Kirubakaran VT: அருமையாக போதிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

[2/24, 1:08 PM] Jeyachandren Isaac VT: தங்கள் ஆட்சேபனை ஏற்றுக் கொள்ளப்பட்டது👍👏🙏😊

[2/24, 1:12 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 59:8-19,21
[8]சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.
[9]ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.
[10]நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.
[11]நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.
[12]எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
[13]கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்.
[14]நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.
[15]சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.
[16]ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.
[17]அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதி சரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.
[18]கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார்; தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.
[19]அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
*உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.*

[2/24, 1:13 PM] Samson David Pastor VT: மார்க்கம் என்பது ஏன் மார்க்கமாக இல்லை?
எப்படி மதமாகி விட்டது என்பதை விளக்கவே,
மார்க்கத்தில் எது மறைந்து போனது என்பதை விளக்கவுமே,
எது முக்கியம் என்பதை பகிர வேண்டியதாயிற்று. 😄🙋🏼♂🙏

[2/24, 1:14 PM] Jeyachandren Isaac VT: இயேசு ஆராதனை செய்தாரா....???
இல்லை!!!!!
ஆனால் அவர் வாழ்க்கையே ஆராதனையாக இருந்தது🙏
ஆம் 👍ஆராதனை என்றால் "தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தல் என்பதாகும்..
இயேசு அப்படியேதான் வாழ்ந்துக் காட்டினார்...
சபையில் ஆராதனை அல்ல...
வாழ்க்கையே ஆராதனை ஆதாவது தேவநாமம் மகிமைப்படும்படியாக வாழ்வது👍👏🙏

[2/24, 1:17 PM] Jeyaseelan VT: 🌹துதியும்
ஆராதணையும்🌹
☀1. ஆராதணை என்ற சொல்லுக்கு உபயோகப்படுத்தப்படும் எபிரெய சொல் "Shoko" ’ஷோக்கோ’ - இதன் பொருள் தாழக்குணிதல்.
☀2. கிரேக்க வார்த்தைகள் 👇கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:-
🎈proskueo ’ப்ராஸ்குஓ’ - தாழ விழுந்து பணிதல்
🎈sebomai ’செபோமாய்’ - பெருமையின்றி தாழ்மைப்படுதல்
🎈sebazomai ’செபஜோமாய்’ - பயபக்தியுடன் பணிதல்
🎈eusebeo ’யூசேபெஓ’ - தெய்வபயத்துடன் செயல்படுதல்.
☀3. ஆராதித்தல் என்பது ஒருவிசுவாசி தேவனிடம் சேரும்பொழுது மிகுந்த மரியாதையுடன், பயத்துடன் பக்தியுடன் காணப்படுதல் ஆகும் (1 நாளாகமம் 29:20, மத்தேயு 22:21, ரோமர் 13:17).
☀4. நாம் ஒருபோதும் தற்செயலாகவோ அல்லது பொறுப்பற்ற நிலையில் தேவனுடன் இருக்கக்கூடாது. (யோவான் 13:13, எபிரெயர் 10:19-21).
☀5. ஆராதணை என்பது ஒருவிசுவாசிக்குள் உள்ள வேத உபதேசங்களை செயல்படுத்துவது ஆகும். உபதேசங்கள் அணைத்தையும் வெளிப்படுத்துவதே ஆராதணை. (நெகேமியா 8:6-10, 9:3).
☀6. நாம் தேவனை ஆவியில் ஆராதிக்கவேண்டும், தேவ ஆவியினால் ஆண்டுகொள்ளப்பட்டு, சத்தியத்துடனும், உபதேசங்களை துள்ளியமாய் பிரதிபலிக்கிற நிலையில் அவரை ஆராதிக்க வேண்டும். (யோவான் 4:23-24).
☀7. இதினிமித்தம் வேதாகம உபதேசங்களை அநுசரித்து அவரை ஆராதிப்பது அதிக முக்கியமானதாய் இருக்கிறது. இதைப்போன்றே பாடும்பொழுதும் அதிக கவனம் செலுத்துதல் அவசியம், இனிய இசைக்கருவிகளுடன் பாடும் பொழுது பாடப்படும் பாடலின் பொருள், அர்த்தம் இவைகளை மறந்து பாடுதல் ஆராதணையில் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
☀8. கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை ஜனங்கள் ஆராதித்தனர். (மத்தேயு 2:11, 9:38).
☀9. ஜனங்கள் தேவனை ஆராதிக்கவில்லை எனில் அவர்கள் பிசாசுகளை ஆராதிப்பார்கள். (உபாகமம் 8:19-20, 11:16, 30:17-20, ரோமர் 1:25).
☀10. எல்லோரும் இயேசுக்கிறிஸ்துவுக்கு முன்பாக வணங்கி அவரை கர்த்தர் என அறிந்துகொள்ள் வேண்டும். ஆசீர்வதிக்கப்பட அல்லது நித்திய நியாயத்தீர்ப்புின் போது அவ்வாறு செய்தல் வேண்டும். (ஏசாயா 45:23, ரோமர் 14:11, பிலிப்பியர் 2:10).
☀11. நித்தியத்தில் பூரணமான ஆராதணை இருக்கும், மற்றும் உபதேசங்களைக்குறித்த பூரணமான அறிவு உண்டாயிருக்கும். (வெளிப்படுத்தல் 4:8-11).
☀12. ஆராதணை இரட்சிப்பில் துவங்குகிறது. (மாற்கு 5:1-10, 18-20).
☀13. ஆராதணை ஒரு விசுவாசி அவரது கர்த்தர் மீது தனது மனதை ஒருநிலைப்படுத்துவதை தெரிவிக்கிறது. (சங்கீதம் 29, 66, 96 , யோவான் 12:1-11).
☀14. ஆராதணையின் பாடல்கள். (1 நாளாகமம் 16:7-36).
☀15. நாம் 👇கீழ்க்கண்டவற்றின் மூலம் தேவனை ஆராதிக்கிறோம்:
🎈தேவனுடய வசனங்களை வாசிப்பதன் மூலம்
(கொலோசெயர் 4:16, 1 தெசலோனிக்கேயர் 5:27, 1 தீமோத்தேயு 4:13).
🎈தேவனுடைய வசனங்களை கற்றுக்கொள்வதன் மூலம். (2 தீமோத்தேயு 2:15, 3:15).
🎈தேவனுடைய வசனங்களை போதிப்பதன் மூலம். (அப்போஸ்தலர் 2:42, 6:7, 12:24, 18:28, 1 தீமோத்தேயு 4:6, 2 தீமோத்தேயு 1:13, 2:2).
🎈தேவனுடைய வசனங்களை பிரசிங்கிப்பதன் மூலம். (2 தீமோத்தேயு 4:2).
🎈துதிபலியின் மூலம். (எபிரெயர் 13:15).
🎈நமது நற்கிரியைகளாகிய பலியின் மூலம். (எபிரெயர் 13:16).
🎈நமது சரீரத்தை ஜீவபலியாய் அற்பணிப்பதன் மூலம். (ரோமர் 12:1).
🎈சுகந்த வாசனையாக உகந்த பலியாய் ஊழியத்திற்கென பணம், பொருட்களை படைப்பதன் மூலம். (4:18).
🎈அவருடைய குமாரனை ஏற்றுக்கொள்வதன் மூலம். (யோவான் 1:11-12).
🎈கட்டளைகளைக் கைக்கொண்டு ஆராதிப்பதன் மூலம் (1 கொரிந்தியர் 11:2)
🎈சங்கீதம், கீர்த்தனைகள், ஆவிக்குரிய பாடல்களை பாடுவதன் மூலம். (எபேசியர் 5:19, கொலோசியர் 3:16, யாக்கோபு 5:13).
🎈ஜெபம், பரிந்துபேசுதல், விண்ணப்பங்கள், மற்றும் நன்றி செலுத்துதல் மூலம் (அப்போஸ்தலர் 2:42, எபேசியர் 6:18, பிலிப்பியர் 4:6, கொலோசெயர் 4:2, 1 தெசலோனிக்கேயர் 5:17, 1 தீமோத்தேயு 2:1-2, 8).

[2/24, 1:20 PM] Apostle Kirubakaran VT: போதகர் சாம்சன் ஐயா மற்றும் ஐசக் J அவர்கள் கூற்று வாழ்வியல் உண்மைகள்..
வசனத்தை புறம் தள்ளுவதை கண்டு கண்ணீர் விடும் தேவ மனிதர்களுக்காக தேவனே உமக்கு நன்றி

[2/24, 1:20 PM] Samson David Pastor VT: Bro. Satish என் பதிவுகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கவனமாக, படியுங்கள் கேளுங்கள்.
ஆராதனை தேவை இல்லை என எங்காவது சொல்லியிருக்கிறறேனா!!?
பலியை அல்ல இரக்கமே என்று இயேசு சொன்னது போல,
வழிபாட்டைக் காட்டிலும், வாழ்க்கையே கிறிஸ்தவ மார்க்கம் என வலியுறுத்துகிறேன்.
Bro. Isaac ம் இதை தான் சொல்கிறார்.

[2/24, 1:20 PM] Satish Jacob Bro VT: 11 நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும், அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார்.
ஏசாயா 25
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/24, 1:21 PM] Apostle Kirubakaran VT: 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏼👏🏼👏🏼👆🏿👆🏿👆🏿

[2/24, 1:22 PM] Jeyachandren Isaac VT: 👆 ஆராதனை என்றாலே பாடுவது மற்றும் துதிப்பது என்று தப்பாக சித்தரிக்கபட்டுவிட்டது...
பாடல் மற்றும் துதி மட்டுமல்ல.... தேவநாமம் மகிமைப்படும்படியாக செய்கிற எல்லாமே ஆராதனையே..
சபையில் கைதட்டி  பாடுவது, இசைக்கருவிகள் இசைப்பது தவறில்லை ..
ஆனால் அவைகளே பிரதானமாக மையப்படுத்துவது  தவறு..
நாம் செய்யும் தானதர்மங்கள், சாட்சி வாழ்க்கை எல்லாமே ஆராதனைதான்...
ஆம் தேவநாமம் மகிமைப்படும் படியான எந்த நிகழ்வும் ஆராதனையே..
என்பது என் தனிபட்டக் கருத்து

[2/24, 1:22 PM] Satish Jacob Bro VT: பிரதானப்படுத்த சொல்லவில்லையே

[2/24, 1:23 PM] Samson David Pastor VT: தனிபட்ட அல்ல,
வேதத்தின் கருத்து.

[2/24, 1:23 PM] Apostle Kirubakaran VT: ரோமர் 12:1-9
[1]அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
[3]அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
[4]ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,
[5]அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
[6]நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
[7]ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
[8]புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
[9]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.

[2/24, 1:24 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:28-29
[28]ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
[29]நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

[2/24, 1:24 PM] Jeyachandren Isaac VT: 👆உண்மையான ஆராதனையை உணர்த்தும் வேதபகுதி

[2/24, 1:24 PM] Satish Jacob Bro VT: இங்கு யாரும் விக்கிரக ஆராதனை செய்பவர்கள் இல்லையே

[2/24, 1:24 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:16
[16]ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

[2/24, 1:25 PM] Apostle Kirubakaran VT: வேதம் மட்டு மே உயர்த்தப்பட வேண்டும்

[2/24, 1:26 PM] Satish Jacob Bro VT: ஆராதனை பாடல்கள் வேதத்திவ் உள்ள வார்த்தைகளிலீ தான் உள்ளது

[2/24, 1:26 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍
தேவநாமம் மகிமைப்படும் படியாக செயல்பட தேவை "தேவக்கிருபையே"

[2/24, 1:26 PM] Apostle Kirubakaran VT: ஆம்
இசையை மட்டும் முக்கிய படுத்துவது தப்பு

[2/24, 1:27 PM] Satish Jacob Bro VT: இங்கு எல்லாருமே தேவநாமம் மகிமைக்காகதான் இருக்கிறோம்

[2/24, 1:27 PM] Apostle Kirubakaran VT: Yes

[2/24, 1:27 PM] Apostle Kirubakaran VT: ஏன் ? சந்தேகம்?

[2/24, 1:28 PM] Jeyachandren Isaac VT: 👆 ✅👍இதுவும் ஆராதனையே🙏

[2/24, 1:28 PM] Satish Jacob Bro VT: நான் கொடுக்கிற செய்தியில்தான் தேவன் மகிமைப்படுவார் என்று நினைப்பதும்..
மனிதனின் மேட்டிமையே

[2/24, 1:29 PM] Jeyachandren Isaac VT: மேட்டிமையுள்ளவன் உண்மை ஊழியனே இல்லையே....

[2/24, 1:29 PM] Satish Jacob Bro VT: செய்தி கொடுப்பவர்தான் ஊழியம் செய்கிறார் மற்றவர்கள் அட்டுழியம் செய்கிறார்கள் என்ற நினைப்பதும் தவறு

[2/24, 1:34 PM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 1:21
*எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.*

[2/24, 1:37 PM] Satish Jacob Bro VT: 15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
பிலிப்பியர் 1 :15
16 சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
பிலிப்பியர் 1 :16
17 சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
பிலிப்பியர் 1 :17
18 இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையிலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
பிலிப்பியர் 1 :18

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/24, 1:41 PM] Satish Jacob Bro VT: 11 என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை. ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
பிலிப்பியர் 4 :11
12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
பிலிப்பியர் 4 :12
13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
பிலிப்பியர் 4 :13

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/24, 1:44 PM] Satish Jacob Bro VT: 28 அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும், தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
1 நாளாகமம் 15
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/24, 1:48 PM] Samson David Pastor VT: 👆போதனையும், போதனைக்கேற்ற வாழ்க்கை முறைகளும், ஆராதனையும் உள்ளடக்கியதே, சபை கூடுதல்.  🙏

[2/24, 1:49 PM] Samson David Pastor VT: 👆இதிலே ஆராதனையும் இருக்கிறதே Satish bro. 😄🙋🏼♂

[2/24, 1:54 PM] Samson David Pastor VT: 👆Bro. Satish, please 🙏

[2/24, 1:59 PM] Jeyachandren Isaac VT: 19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி
எபேசியர் 5 :19

16 கிறிஸ்துவின் வசனம் உங்களக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக. சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி, கொலோசெயர் 3-16
👆புதிய ஏற்பாட்டு பாடல்கள்....
வெறும் உதடுகளின் ஒசை, அல்லது இசைக்கருவிகளின் ஒசைமட்டும் அல்ல..
அது இருதயத்தின் ஒசையாக அதாவது இருதயத்திலிருந்து பாடபடும் பாடலாக இருக்கவே தேவன் விரும்புகிறவர்...
அப்படி பாடுகிறவர்களே பாடலுக்கேற்ற வாழ்க்கையும் வாழ்பவர்கள்..
இருதயத்தில் பாடும் பாட்டு என்பது ஒருகுறிப்பிட்ட இடம் ,ஒரு குறிப்பிட்ட நேரம் சம்பந்தபட்டது கிடையாது...
அது நேரம் காலம், இரவு பகல் என்று இல்லாமல் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்தக்கூடியது....
"நீதிமானோ பாடி மகிழ்கிறான்"
நீதி 29;6

[2/24, 2:05 PM] Apostle Kirubakaran VT: 2 தீமோத்தேயு 3:16-17
[16]வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
[17]அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

[2/24, 2:11 PM] Jeyachandren Isaac VT: மட்டுமே அல்ல என்பதே அதன் கருத்து பிரதர்..
அதுவும் தேவை👍
முக்கியமாக இதுவும் தேவை..👍🙏😊

[2/24, 2:21 PM] Samson David Pastor VT: ஆலயத்தைக் கட்டுவது, பக்தி (மதம்).
தேவன் தங்கும் ஆலயமாகவே வாழ்வது (வேதம் தரும்) புத்தி (மார்க்கம்) .
-- ஒரு நல்ல ஊழியர்.

[2/24, 2:22 PM] Satish Jacob Bro VT: அப்போ சபை கூடுதல்🤔🤔🤔😄😄😄

[2/24, 2:24 PM] Samson David Pastor VT: தேவன் தங்கும் ஆலயங்கள் எல்லாம் ஒன்று கூடுவதே, சபை.
ப.ஏ ஆலயத்தைக் காட்டிலும்,
பு.ஏ சபை மேலானது என்பது இப்படி தான்.
🙋🏼♂🙏😄

[2/24, 2:38 PM] Satish New VT: Praise the Lord

[2/24, 3:20 PM] Evangeline VT: Lunch break???

[2/24, 3:21 PM] Satish New VT: இல்லை சகோதரி சாப்டுட்டு ரெஸ்ட்

[2/24, 3:22 PM] Evangeline VT: hmmm..good..

[2/24, 3:24 PM] Satish New VT: அவங்களும் எவ்வளவுதான் பேசுவாங்க. வளைச்சு வளைச்சு கேள்வி கேட்டா🗣🗣

[2/24, 6:38 PM] Satish Jacob Bro VT: 14 உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன். அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து,
அப்போஸ்தலர் 24
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/24, 7:46 PM] Satish New VT: Praise the Lord....🙏🙏🙏

[2/24, 7:48 PM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏

[2/24, 7:49 PM] Satish Jacob Bro VT: ஸதோத்திரம்🙏

[2/24, 7:50 PM] Kumar Bro VT: இன்று. வரமுடியவில்லை. போன் கோளாரு. ஆகையால். முழுக்க. படிக்க. முடியவில்லை... 🙏

[2/24, 7:50 PM] Satish Jacob Bro VT: யூதர் ஏன் வரலை சகோ

[2/24, 7:51 PM] Kumar Bro VT: குரூப்  ரொம்ப அமைதியாக இருந்து வருகிறது காரணம் என்ன

[2/24, 7:52 PM] Satish Jacob Bro VT: அன்பு இருக்கும் இடம் அமைதியாய் இருக்கும்

[2/24, 7:53 PM] Satish Jacob Bro VT: அல்லது புயலுக்கு முன் இருக்கும் அமைதியா🤔🌊🌊🌊🌊

[2/24, 8:36 PM] Samson David Pastor VT: இன்றைக்கு நான் அதிகப் பிரசங்கி யாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். 👍😄🙋🏼♂

[2/24, 8:56 PM] Satish Jacob Bro VT: உண்மையே பாஸ்டர்🙇🙇🙇🙇

[2/24, 8:58 PM] Satish Jacob Bro VT: நாங்கள் உண்மையிலேயே மிகவும் அமைதியானவர்கள். ஆனால்__=

[2/24, 8:59 PM] Samson David Pastor VT: நான் பேசுவதை குழுவில் யாரும் விரும்புவதில்லை போல.
விரும்பாத குழுவில் நான் எதற்கு இருக்கணும்.
நான் வெளியேறுகிறேன்.

[2/24, 9:00 PM] Samson David Pastor VT: (ஒரு 5 நிமிடத்திற்கு 😜)

[2/24, 9:00 PM] Satish Jacob Bro VT: பாஸ்டர் அப்படி யார் சொன்து

[2/24, 9:50 PM] Satish Jacob Bro VT: யாரோ தப்பான தகவலை சொல்லி இருக்காங்க👍

[2/24, 9:50 PM] Kumar Bro VT: ஆமாம் சகோ

[2/24, 9:51 PM] Kumar Bro VT: நம்பள யார். தான் நல்லவங்க என்று கூறியுள்ளார் 🤣🤣🤣🤣
[2/24, 9:51 PM] Karthik-Jonathan VT: Hallelujahs Amen

[2/24, 9:52 PM] Satish Jacob Bro VT: கனி இருக்க மரத்துலதான் கல்லடி படும்னு தெரியாமய்யா சொன்னாங்க

[2/24, 9:52 PM] Kumar Bro VT: Welcome 🤡🤡🤡

[2/24, 9:53 PM] Satish Jacob Bro VT: பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் குமாரு ..ஶ்ரீ.
[2/24, 9:54 PM] Kumar Bro VT: அடி கனிக்கும் மட்டும் அல்ல. கிளைக்கும் தான். 🙏 😁😁😁

[2/24, 9:55 PM] Satish Jacob Bro VT: கிளை அடி தாங்கும்
கனி தாங்குமா🍎

[2/24, 9:59 PM] Jeyachandren Isaac VT: 👆அரசியிலில் இது எல்லாம் சகஜமப்பா...😊

[2/24, 10:00 PM] Satish Jacob Bro VT: தூற்றுவார் தூற்றட்டும்
போற்றுவார் போற்றட்டும்....

[2/24, 10:01 PM] Kumar Bro VT: ஆமாம் உண்மையான சத்தியம். என்றால் கசக்கும்

[2/24, 10:11 PM] Evangeline VT: இளங்கோ பிர்தர் எங்க போயிட்டீங்க.

[2/24, 10:11 PM] Kumar Bro VT: தெரியவில்லை

[2/24, 10:13 PM] Satish Jacob Bro VT: காணவில்லை

[2/24, 10:22 PM] PrinceDaniel VT: He changed his number

Post a Comment

0 Comments