Type Here to Get Search Results !

நாம் தேவனிடம் கேட்காமல், அவர் நமக்கு எதையாவது கொடுப்பாரா❓

[1/21, 10:36 AM] ✝ *இன்றைய வேத தியானம் - 21/01/2017* ✝
👉 *மத்தேயு 7:7* வசனத்தின்படி நாம்  எதையாவது தேவனிடம் கேட்பதால் அவர் நமக்கு கொடுக்கிறாரா❓

👉 *லூக்கா 6:38* வசனத்தின்படி நாம் பிறருக்கு கொடுப்பதால், தேவன் நமக்கு  கொடுக்கிறாரா❓

👉 நாம் தேவனிடம்  கேட்காமல், அவர் நமக்கு எதையாவது கொடுப்பாரா❓

👉 *ரோமர் 8:32* வசனத்தின்படி தம்முடைய  குமாரனையே நாம் கேட்காமல் தந்தவர், நமக்கு தேவையான
மற்ற எல்லாவற்றையும் நாம் கேட்காமல் தர கூடாதா❓
      *வேத தியானம்*

[1/21, 12:19 PM] Apostle Kirubakaran VT: 1: மத்.7.7 லில் சொன்னது என்னா .?
லூக்கா 11:13
[13]பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
( ஆவியாைன வரை பெற விசுவாசத்தோடு கேக்க வேண்டும் )
2: லூக்.6.38:படி கொடுக்காமல் கொடுக்கப்படாது.
3. தேவன் தமது குமாரனை மட்டுமே கேட்க்காமல் கொடுத்தார்...
குமாரன் கேட்க்க கூறு றினார்.
மத்தேயு 21:22

[22]மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
4. வேதாகமம் இப்படி கூறுதிறது...
வெளிப்படுத்தின விசேஷம் 22:17
[17]ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

எனது கருத்து
விசுவாசத்தோடு கேட்க்கனும்,
விசுவாசத்தோடு கொடுக்கணும்
மத்தேயு 10:41-42
[41]தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
[42]சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[1/21, 1:23 PM] Elango: 💥💥 *தேவன் மேல் விசுவாசத்தில் பற்றுதலாக இருக்கிறவன் தான் விசுவாசித்ததை பெற்றுக்கொள்வதற்க்கு முன்பாகவே அவன் பெற்றுக்கொண்டதாக விசுவாசிக்கிறான்*💥💥
1 யோவான் 5:14-15
[14] *நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.*

[15] *நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.*

[1/21, 1:23 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6
[6]விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், *அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.*✨✨✨

[1/21, 1:31 PM] Elango: மதுரைக்கு வழி வாயின்னு சொல்லுவாங்க
அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்ன்னு சொல்லுவாங்க
நம் பரம தகப்பனோ நாம் கேட்காமலேயே நமக்கு அவருடைய குமாரனை தந்திருக்க, இரவும் பகலும் தேவனை நோக்கி கூப்பிடும் நம் மேல் நீடிய பொறுமையாயிராமல் சீக்கிரமாகவே நீதியை செய்து நம் விண்ணபத்திற்க்கு செவிசாய்கிறவராயிருக்கிறார்.
சங்கீதம் 34:15
[15] *கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.*

[1/21, 1:45 PM] Elango: 👉 நாம் தேவனிடம்  கேட்காமல், அவர் நமக்கு எதையாவது கொடுப்பாரா❓
💥 *தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு* சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிதென்று அறிந்திருக்கிறோம்.

💥 நமக்கு அவசியமான தேவை இருக்கிறதென்று தெரிந்தும், உலக மனிதர்களே இரங்கி நாம் கேட்காமலேயே செய்யும் இருதயம் இருக்கும் போது, இரக்க தகப்பன் நம் தேவையை ஏற்றக்காலத்தில் செய்கிறார்.
மத்தேயு 7:11
[11] *ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா❓*
💥ரோமர் 8:26
[2 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். *😑😐😑😒😒😟😟நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.*❗

[1/21, 2:06 PM] Elango: சாலமோன் இராஜா தான் கேட்ட ஞானத்தையும் தேவன் கொடுத்தார்😇😇😇😇😇

*தான் கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் சாலமோனுக்கு தந்தார்*💥💥💥💥💥✨✨✨✨✨🆕🆕🆕
1 இராஜாக்கள் 3:11-13
[11]ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,
[12]உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.
[13] *இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்;* உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.

[1/21, 4:55 PM] Elango: நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்,<<<< ----- >>>>>> <<<<< *நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.* >>>> யோவான் 15:7

[1/21, 4:58 PM] Elango: வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன என்றால் "நம்முடைய  ஜெபத்தை, வேண்டுதலுக்கு  பதில் கொடுக்கிறவர்"
 ஆதாம் கூப்பிட்ட போது தேவன் பேசினார்,
 யோசேப்போடு இயேசு பேசினார்,
 மோசேயோடு இயேசு பேசினார்,
 எஸ்தரொடு தேவன் பேசினார்,
 தாவீதோடு தேவன் பேசினார்,
 யோனாவோடு, எசாயாவோடு, எரெமியாவொடு, தானியேல், மத்தேயு, மார்க்கு, லூக்கா, 12 சீஷர்கள், பவுலோடு தேவன் பேசினதாக வேதாகமம் கற்று கொடுக்கிறது.
நம்முடைய ஆண்டவர்  நம்மோடு பேசுகிற தேவன்.
அதிகாலையில் என்னை தேடுகிறவன் என்னை கண்டடைகிறான் என்று வேதாகமம் கற்று கொடுக்கிறது.

[1/21, 5:00 PM] Elango: *பெற்ற தகப்பன் சிறுபிள்ளை என்ன கேட்டாலும் தரவேண்டும் என ஆசைப்படுவார். ஆனால் சிறு குழந்தை கார் ள்ளது லாரி கேட்டால் வாங்கி கொடுப்பாரா?* 👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼💥💥💥💥💥 அதற்க்கு பொம்மை வாங்கி கொடுப்பார். அதை போல நாம் பலவற்றிற்கு ஆசைப்படுகிறோம் யேசுவிடம் கேட்கிறோம். ஆனால் தேவனின் சித்தப்படி ஆகக்கடவது என்று ஜெபிக்கிறோமா❓❓❓❓❓

[1/21, 5:01 PM] Elango: *கையில் ஒன்றை வைத்து கொண்டு தேவனே இது உம்முடைய சித்தமாக இருக்கட்டும் என வற்புறுத்தும் கண்ணீரின் ஜெபம் பல உண்டு.* ❗❗
கையில் ஒன்றை வைத்து கொண்டு தேவனின் சித்தத்தை கேட்டு அது நடக்காமல் போனதும் "இயேசு கிறிஸ்து என்னை கைவிட்டுவிட்டார்" என்று புலம்புவர்களும் உண்டு.

[1/21, 5:03 PM] Elango: பலருக்கும் ஜெபித்தது நடந்திருக்கிறது. சிலருக்கு ஜெபிக்கும் வண்ணமாக நடப்பதில்லை. 
*சாத்ராக் மேஷாக் அபெத்நேகுவை பற்றி தெரிந்திருக்கும். எங்கள் தேவன் விடுவியாமற் போனாலும் விட்டுவிடமாட்டோம் என்று உறுதியாய் நின்றவர்கள்*
*ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.*

[1/21, 5:05 PM] Elango: எரேமியா 33:3. *என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து,* 🙋♂🙋♂ நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

[1/21, 5:15 PM] Thomas VT: எதற்காக ஜெபிக்க வேண்டும் →
1) ஆகாரத்திற்காக - மத் 6:11
2) ஞானம் உண்டாக - யாக் 1:5
3) விசுவாசம் வர்த்திக்கபட - லூக் 17:5
4) ஆபத்தில் இருந்து விடுவிக்கபட - சங் 50:15
5) வியாதியில் இருந்து சுகமாக - யாக் 5:14-16
6) திருமணத்திற்காக - ஆதி 24:11-19
7) புத்திர பாக்கியத்திற்காக - ஆதி 25:21
8) பிரசவத்தில் விடுதலைக்காக - ஆதி 25:22
9) அற்புதங்கள், அடையாளங்கள் நடக்கும்படி - அப் 4:30
10) அவிசுவாசிகளுக்கு தப்பும்படி - ரோ 15:30-32
11) நற்புத்தி உண்டாக - நீதி 30:8
12) தரித்திரம் வராமல் இருக்க - நீதி 30:8
13) ஜசுவரியம் வேண்டாம் என்று - நீதி 30:8
14) உங்கள் நிந்தை நீங்க - 1 சாமு1:10
15) வியாதி நீங்க - ஏரே 17:14
16) ஆசிர்வாதம் வேண்டி - 1 நாளா 4:10
17) உங்கள் எலலை பெருக - 1 நாளா 4:10
18) தீஙகு வராதிருக்க - 1 நாளா 4:10
19) தேச பாதுகாப்பிற்காக - எஸ்றா 8:21
20) மறை பொருள் வெளிபடுத்த பட - தானி 2:17-19
21) அந்நிய பாஷையின் அர்த்தம் சொல்ல - 1 கொரி  14:13
22) உலக எழுப்பதலுக்காக - சகரியா 10:1
23) இஸ்ரவேலர் இரட்சிக்கபட - ரோ 10:1
24) வேலை ஆட்களை அனுப்பும்படி - மத் 9:38
25) உங்கள் எதிராளிக்கு விரோதமாக - 2 இராஐ 18:20
26) பாவம் நீங்க - சங் 51:7
27) பரிசுத்த ஆவியை பெற்று கொள்ள - லூக் 11:13
28) வருகையில் எடுத்து கொள்ள பட - லூக் 21:36
29) எல்லாவற்றிற்காகவும் - பிலி 4:6
30) சோதனைக்குட்படாதபடி- மத் 6:13
31) வேதத்தில் உள்ள அதிசயங்களை பார்க்க - சங் 119:18
32) சமாதானம் நிலைக்க - சங் 122:6
33) பரிசுத்தமாக - யோ 17:17

[1/21, 5:23 PM] Thomas VT: பரமண்டலங்களில் இருக்கிற பிதாவே என்று ஜெபிக்க கற்று கொடுத்தவர் இயேசு

[1/21, 5:25 PM] Thomas VT: ஜெபத்துக்கு முன்மாதிரியாக இருந்தவர் இயேசு

[1/21, 5:26 PM] Thomas VT: அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? லூக்கா 18 :7

[1/21, 5:34 PM] ‪+91 70459 36662‬: சீக்கிரமாகவே நீதியை செய்வார் நம் தேவன்👍🏻👍🏻

[1/21, 9:04 PM] Darvin-ebin VT: ✝ *இன்றைய வேத தியானம் - 21/01/2017* ✝
👉 *மத்தேயு 7:7* வசனத்தின்படி நாம்  எதையாவது தேவனிடம் கேட்பதால் அவர் நமக்கு கொடுக்கிறாரா❓
👉 *லூக்கா 6:38* வசனத்தின்படி நாம் பிறருக்கு கொடுப்பதால், தேவன் நமக்கு  கொடுக்கிறாரா❓
👉 நாம் தேவனிடம்  கேட்காமல், அவர் நமக்கு எதையாவது கொடுப்பாரா❓
👉 *ரோமர் 8:32* வசனத்தின்படி தம்முடைய  குமாரனையே நாம் கேட்காமல் தந்தவர், நமக்கு தேவையான
மற்ற எல்லாவற்றையும் நாம் கேட்காமல் தர கூடாதா❓
      *வேத தியானம்*

[1/21, 9:16 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 59:1-3
[1]இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
[2]உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
[3]ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

[1/21, 9:17 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 1:15-17
[15]நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
[16]உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்.
[17]நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

[1/21, 9:19 PM] Apostle Kirubakaran VT: வெளிப்படுத்தின விசேஷம் 12:10
[10]அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.

[1/21, 9:23 PM] Apostle Kirubakaran VT: எனக்கு ஒரு கேள்வி?
மாற்கு 10:29
[29]அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
இதன் படி விட்டவன் ஜெபம் பண்ணினா தான் (அதாவது கேட்டால் தான் தருவாரா?)
இவனுக்கு லூக்.6.36. பொருந்தாதா?

[1/21, 9:24 PM] Apostle Kirubakaran VT: மாற்கு 10:29-30
[29]அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
[30]இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட *நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று* மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[1/21, 9:26 PM] Apostle Kirubakaran VT: இன்னொறு கேள்வி?
மத்தேயு 13:11-12
[11]அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
[12]உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
இவனும் கேட்டானா?
இவன் கேட்க்காமல் தந்தால் எப்படி சரி?

Post a Comment

0 Comments