Type Here to Get Search Results !

வேதத்தின் படி ஜல்லிக்கட்டு சரியா❓

[1/17, 9:58 AM] ❇ *இன்றைய வேத தியானம் - 17/01/2017* ❇
👉 விலங்குகளை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓

👉விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்❓

👉 விலங்குகளை வதைத்து வேலை வாங்கலாமா❓

👉 வேதத்தின் படி ஜல்லிக்கட்டு சரியா❓கிறிஸ்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓
                 *வேத தியானம்*

[1/17, 10:03 AM] Satish New VT: 4 எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்: காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
நீதிமொழிகள் 14
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/17, 10:13 AM] Elango: ஆதியாகமம் 1:28
[28]பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, *அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்*🐷🐷🐸🐸🐒🐮🦁🐻🐙🐔🐛🐁🐁🐇🐈🐩🐂🐫🐫🐡🐃🐃 என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

[1/17, 10:14 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 9:9-10
[9]போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. *தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?*❓❓❓❓❓❓❓
[10]நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝

[1/17, 10:17 AM] Elango: ஆதியாகமம் 1:26
[26]பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;
*அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும்,*🐫🐂🐃🐩🐈🐇 *பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.*

[1/17, 10:17 AM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 27:23,26-27
[23]உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.
[26] *ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.*
[27]வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.

[1/17, 10:25 AM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 12: 10
*நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்;* துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.
Proverbs 12: 10
A righteous man regardeth the life of his beast: but the tender mercies of the wicked are cruel.

[1/17, 10:32 AM] Levi Bensam Pastor VT: யோபு 36:33
[33]அதினால், *அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.*

[1/17, 10:34 AM] Thomas VT: *மான்* →
1) துஷ்ட மிருகங்கள் மானை சுற்றி இருக்கிறது = இந்த உலகில் நம்மை சுற்றிலும் பொல்லாத மனிதர்கள் சூழ்ந்து உள்ளார்கள். என்னை சூழ்ந்து கொள்ளுகிற என் பிராண பகைஞருக்கு மறைவாக என்னை காப்பாற்றும் (சங் 17-9). எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னை சூழ்ந்து கொண்டது (சங் 40-12)
என்கிறான் தாவீது பக்தன். பொல்லாத மனிதர்கள் நம்மை சுற்றி இருந்தாலும் அவர்களால் நாம் கறை படக்கூடாது
2) இதனுடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்த வாழ்க்கை (எப்போது வேண்டுமானாலும் சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய் இதனை தாக்கலாம்) = இந்த உலகில் நாமும் யுத்த களத்தில் இருக்கிறோம். பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6 :12. மாம்சத்தோடும், இரத்தத்தோடும் நமக்கு போராட்டம் உண்டு (எபேசி 6-12).  நல்ல போராட்டத்தை போராடினேன் (2 தீமோ 4-7)
3) தீமையோடு எதிர்த்து நிற்காது (தன்னை தாக்க வரும் மிருகங்களுக்கு எதிர்த்து நிற்காது) = இந்த உலகில் நாமும் நமக்கு தீமை செய்கிற மக்களோடு எதிர்த்து நிற்க கூடாது. அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் (மத் 5-39)
4) மான்களின் கால் உறுதியானது (2 சாமு 22-34) = நாமும் ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டும் (ரோ 12-12) விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் (1 பேது 5-9)
5) வேட்டைகாரன் கைக்கு தப்பும் (நீதி 6-8) = நாமும் பிசாசின் வலையில் சிக்காதபடி  ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும் (1 பேது 5-8)
6) காட்டில் தங்க (குடியிருக்க) இடம் கிடையாது = இந்த பூமியில் வாழும் நாமும் பரதேசி.  நமக்கு சொந்தம் கொண்டாட ஒரு இடம் கூட உலகில் இந்த பூமியில் கிடையாது. நான் பரதேசியாய் தங்கும் வீட்டில் உமது பிரமாணங்கள் எனக்கு கீதங்களாயின (சங் 119-54). நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது (பிலி 3-20)
7) பயந்த சுபாவம் கொண்டது = நாமும் இந்த உலகத்தில் தேவ  பயத்தோடு வாழ வேண்டும். தேவ பயம் இருந்தால் பாவம் செய்ய மாட்டோம். பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடு பூரண படுத்தகடவோம் (2 கொரி 7-1)
8) அழகானது = உன் முகருபம் அழகாயிருக்கிறது (உன் 2-14). மோசே முகம் பிரகாசித்தது (யாத் 34-29) தானியேல் & அவனுடைய நண்பர்கள் முகம் களையுள்ளதாக காணப்பட்டது (தானி 1-15). என் முகத்துக்கு இரட்டிப்புமாய் இருக்கிற தேவனை இன்னும் துதிப்பேன் (சங் 42-11)
9) வேகமாக ஓடக்கூடியது (2 சாமு 2-18) = நாமும் இந்த உலகில் பண ஆசையை விட்டு ஓட வேண்டும் (1 தீமோ 6:9-11) பாலியத்திற்கு இச்சைகளை விட்டு ஓட வேண்டும் (2 தீமோ 2-22). இயேசுவை நோக்கி ஒட வேண்டும் (எபி 12-1)
10) சாதுவானது = நான் சாந்தமும், மனத்தாழ்மையும் உள்ளவன் என்றார் இயேசு (மத் 11-29).  நாமும் இப்படிபட்ட சுபாவத்தை வெளிப்படுத்த வேண்டும்.
11) மான் நிரோடையை வாஞ்சித்து கதறும் (சங் 42-1) மான் கதற 2 காரணங்கள் உள்ளது (1) தாகத்தால் கதறும் (2) துஷ்ட மிருகங்கள் (செந்நாய்) மானை கடித்தவுடன் மான்  தப்பி ஓடும். கடிபட்ட இடத்தில் இரத்தம் வரும். இந்த இரத்த வாடையை மோப்பம் பிடித்து செந்நாய் பின் தொடரும். மான் தண்ணீர் உள்ள ஆறு, ஓடையை கடந்து விட்டால் செந்நாயினால் அதை கண்டு பிடிக்க முடியாது. (கொலை செய்கிறவர்கள் இந்த முறையை பின்பற்றுவார்கள். அவர்கள் நதியை கடந்து விட்டால், மோப்ப நாயால் அவனை கண்டு பிடிக்க முடியாது) = இந்த மானை போல நமது ஆத்துமா தேவ சமுகத்தை (ஆலயம், ஜெபம், வேத வாசிப்பு) வாஞ்சிக்க வேண்டும்.

[1/17, 10:35 AM] Levi Bensam Pastor VT: ஏசாயா 1:3
[3] *மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்;* இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.

[1/17, 10:36 AM] Elango: நோவா காலத்திற்க்கு முன்பாக விலங்குகளை புசிப்பதில்லை.
நோவா காலத்திற்க்கு முன்பாக விலங்குகளை புசிக்கப்பட்டது.
விலங்குகளுக்கு ஆத்துமா இல்லை.
விலங்குகளை அடித்து துன்புறுத்துவதற்க்கு நமக்கு   அனுமதியில்லை.
👌👍🙏

[1/17, 10:38 AM] Satish New VT: விலங்குகள் இல்லை என்றால் ஆரோக்கியமான விவசாயம் இல்லை.
எல்லாம் செயற்கை முறையில் செய்துதானா இப்பொழுது நாம் செத்து செத்து பிழைக்கிறோம்

[1/17, 10:39 AM] Kumar VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக ✅✅✅✅

[1/17, 10:40 AM] Kumar VT: ஒரு நாளைக்கு  மாட்டு ஏர் உழ மட்டும் 600ரூபாய்

[1/17, 10:41 AM] Satish New VT: இதுக்கு காரணம் என்ன சகோ

[1/17, 10:42 AM] Levi Bensam Pastor VT: உபாகமம் 22: 10
மாட்டையும், கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.
Deuteronomy 22: 10
Thou shalt not plow with an ox and an ass together
.
[1/17, 10:42 AM] Thomas VT: *வேதத்தில் உள்ள ஆடுகள் →*
1) அடிக்கபடுகிற ஆடு (சங் 44-22) = தேவ ஜனங்கள் அடிக்க படுகிற ஆடு போல காணப்பட வேண்டும். இது பாடுகளின் பாதையை காட்டுகிறது. கசாப்பு கடைக்கு செல்லும் ஆடுகள் கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லபடும். இயேசு சென்ற பாதை இது (அப் 8-32). தம்முடைய அடிச்சுவடியை  தொடர்ந்து வரும் படி மாதிரியை வைத்து போனார்( 1 பேது 2-21) தேவ ஐனமே எனக்கு ஏன் பாடுகள் என்று நினனக்காதே. அநேக உபத்திரவங்களின் வழியாக தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் (அப் 14-22)
2) சத்தமிடாத ஆடு (அப் 8-32, ஏசா 53-7) = வீட்டில் சண்டை, பிரச்சினை வரும் போது வாயை முட வேண்டும். காது கேளாதவர்கள் போல் இருக்க வேண்டும். பேச்சினால்தான் அநேக பிரச்சினை வருகிறது. பாடுகளில் நாம் மெளனமாக இருக்க வேண்டும். அவரே அதைத் தன் மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன் - புலம்பல் 3 :28
3) மேய்ச்சலின் ஆடுகள் (சங் 100-3) = ஆடுகள் நல்ல மேய்ச்சல் உள்ள நிலத்தை தேடி செல்லும். அது போல நாமும் சத்தியத்தை போதிக்கிற சபையை தேடி செல்ல வேண்டும். சபை என்பது நம்மை charge பண்ணும் இடம். தினம் தமது phone யை charge செய்வது போல வாரம் ஒரு முறை சபைக்கு சென்று நமது ஆத்தமாவை charge செய்து வர வேண்டும். தேவ பிள்ளைகள் தங்கள் ஆத்துமாவுக்கு ஏற்ற செய்திகள் கிடைக்கும் சபைக்கு செல்ல வேண்டும். கடமைக்கு (Sunday) சபைக்கு செல்ல கூடாது
4) ஆடுகள் அசை போடும் (தியானம்) = ஆடுகள் வழியில் புல்லை வேகமாக உண்டு செல்லும். மாலையில் புல்லை வாய்க்கு கொண்டு வந்து அசை போடும். அது போல தேவ பிள்ளைகள் சபையில் கேட்ட சத்தியங்களை வீட்டிற்கு சென்று தியானிக்க வேண்டும். இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1-2) அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் சங் 1-3)
5) பழுது இல்லாத ஆடு (லேவி 22-21) = இது பரிசுத்தத்தை குறிக்கிறது. நமது பேச்சு, சிந்தனை, கிரியை எல்லாம் பரிசுத்தமாக காணப்பட வேண்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி 22-11)
6) கர்த்தருடைய கரத்தில் உள்ள ஆடு (யாத் 9-3) = இது பாதுகாப்பை குறிக்கிறது. ஒருவனும் (பிசாசு) அவைகளை என் கரத்தில் இருந்து பறித்து கொள்ளுவதில்லை (யோ 10-28)
7) சர்வாங்க தகனபலியான ஆடு (யாத் 9-3) = நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் - ரோ 12-1
8) ஜீவன் உள்ள ஆடு (யோ 10-10) = ஜீவன் = இரட்சிப்பு. நமது இரட்சிப்பு நஷ்டம் அடையாதபடி பார்த்து கொள்ள வேண்டும். இரட்சிப்பு நிறை வேற பிரயாச பட வேண்டும் (பிலி 2-12)
9) மேய்ப்பனை குறித்து அறிந்த ஆடு (யோ 10-15) = ஆட்டுக்கு தன் மேய்ப்பனை குறித்து நல்ல அறிவு உண்டு. கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார். நான் தாழ்ச்சி அடையேன் (சங் 23-1) என்ற அறிவு ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு வேண்டும்
10) மேய்ப்பன் சத்தத்திற்கு செவி கொடுக்கும் ஆடு (யோ 10-3) = அவர் சித்தப்படி, சொற்படி நடக்க வேண்டும்
11) பூரணத்தை நோக்கி வளரும் ஆடு (யோ 10-10) = நாமும் இயேசுவை போல பூரணம் அடைய வேண்டும். கிறிஸ்து நம்மில் உருவாக வேண்டும் (கலா 4-19)
12) ஆடுகள் கூட்டம் கூட்டமாக செல்லும் = இது பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை குறிப்பிடுகிறது. சகல பரிசுத்தவான்களோடு கூட கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் (எபேசி 3-18). வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஆகிய இந்த மூன்றும் நமக்கு சந்தோஷத்தை தருகிறது.
13) தொழுவத்தில் இல்லாத வேறே ஆடுகள் (யோ 10-16) = இது இரட்சிக்க படாத ஐனங்களை  குறிக்கிறது. இவர்கள் இயேசுவின் தொழுவத்தில் சேர்க்கபட நாம் இவர்களுக்கு சுவிஷேம் சொல்ல வேண்டும், இவர்களுக்காக ஜெயிக்க வேண்டும்.

[1/17, 10:44 AM] Kumar VT: காரணம்  விவசாயம் இயந்திரங்கள்  மூலம் செய்வதால் , மற்றும்  உடம்பை  கஷ்டப்படமல் வியாபாரம் செய்ய...

[1/17, 10:45 AM] Kumar VT: சகோ ஸ்தோத்திரம்  இன்றைய  தியானம்  ஆடு அல்ல மாடு...

[1/17, 10:45 AM] Levi Bensam Pastor VT: எண்ணாகமம் 22:23-33
[23] *கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு,* வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.
[24]கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
[25]கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.
[26]அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.
[27]கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.
[28]உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
[29]அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
[30]கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.
[31]அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.
[32]கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான்

[1/17, 10:46 AM] Satish New VT: விவசாயத்தை வியாபார நோக்கத்தோடு என்னைக்கு செய்ய ஆரம்பித்தோமோ அன்றே .ஆரோக்கியமான தானியங்களின் உற்பத்தி நின்றுவிட்டது

[1/17, 10:46 AM] Levi Bensam Pastor VT: 2 பேதுரு 2:15-16
[15]செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி,
[16]தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம். கடிந்து கொள்ளப்பட்டான்; *பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝

[1/17, 10:47 AM] Kumar VT: ஆதாவது மனிதனோட கஷ்டப்படும்  மிருகங்களை க்குறித்து... 🙏🙏

[1/17, 10:48 AM] Thomas VT: இன்றைய தியானம் விலங்குதானே ?

[1/17, 11:01 AM] Elango: ❇ *இன்றைய வேத தியானம் - 17/01/2017* ❇
👉 விலங்குகளை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்❓
👉 விலங்குகளை வதைத்து வேலை வாங்கலாமா❓
👉 வேதத்தின் படி ஜல்லிக்கட்டு சரியா❓கிறிஸ்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓
                 *வேத தியானம்*

[1/17, 11:36 AM] Elango: லூக்கா 13:15-16
[15]கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, *உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?*

[16] *இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.*
மிருகங்களுக்கு இரங்கும் மனிதன், மற்ற மனிதர்களுக்கு இரங்காமல் இருக்கும் மாய்மாலத்தை தோலுரித்துக்காட்டுகிறார் இயேசு👆🏼👆🏼👆🏼

[1/17, 11:39 AM] Elango: யோபு 11:12
[12] *புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.*

[1/17, 11:41 AM] Elango: *விலங்குகள், பறவைகளைவிட மனிதர்கள் விசேஷித்தவர்கள்*👇👇👇👇👇👇👇

மத்தேயு 6:25-26
[25]ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
[26] *ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?*

[1/17, 11:47 AM] Elango: சங்கீதம் 34:9-10
[9]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
[10] *சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.*
தேவன் மிருகங்களை விட, முக்கியமாக  மனிதர்களை தேவைகளை சந்திக்கிறவராயிருக்கிறார்👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

[1/17, 11:51 AM] Thomas VT: சிங்கம் →
1) சிங்கம் கெர்ச்சிக்கிற ஒரு மிருகம் (வெளி 10-3) =  பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பரிப்பார்கள் (துதி) (சங் 132-16). நீதிமான்களின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு (சங் 118-15).
2) பின்னடையாது (நீதி 30-30) - தேவ ஜனங்கள் அவிக்குரிய  வாழ்க்கையில் பின்னடைய கூடாது.
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் - எபிரேயர் 10:38. பாடுகளில், உபத்திரங்களில் பின் வாங்கி போய் விட கூடாது.
3) தைரியமான மிருகம் (நீதி 28-1) = நாமும் சிங்கத்தை போல தைரியமாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயம் குற்றமற்றதாக இருந்தால் தைரியம் காணப்படும் (1 யோ 3-21). விசுவாசத்தினால் நமக்கு தைரியம் கிடைக்கும் (எபேசி 3-12)
4) பலமானது (நியாதி 14-18) = நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பலத்தின் மேல் பலன் அடைந்து தேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள் - சங் 84-7
5) அதனுடைய கெபி ஆகாரத்தினால் நிரம்பி இருக்கும் (நாகூம் 2-12) = தேவபிள்ளைகளுக்கு ஆகாரம் வேத வசனம் (உபா 8-3). வேத வசனங்களை நமது உள்ளத்தில் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும். அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய் காத்து கொண்டேன் (யோபு 23-12)
6) சிங்கம் தன் குட்டிகளுக்கு ஆகார குறைவு இல்லாதபடி பார்த்துக் கொள்ளும் = அது போல நமது பரம தகப்பன் நமது தேவைகளை எல்லாம் தருகிறார், சந்திக்கிறார். (பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது - மத் 7-11)
7) பயப்படாது = தேவ பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்தில் பயப்பட கூடாது. ஏன் இப்படி பயப்பட்டிர்கள், ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று என்றார் (மாற்கு 4-40). விசுவாசம் குறைந்தால் பயம் வரும்.
8) மறைவிடத்தில் தங்கும் (புலம்பல் 3-10) = மறைவிடம் தாழ்மையை குறிக்கும். நமது பேச்சு, உடை, கிரியை அனைத்திலும் தாழ்மையை வெளி படுத்த வேண்டும்
9) பிசாசு சிங்கம் போல நம்மை விழுங்க சுற்றி வருகிறான் = சிங்கங்கள் வாயை அடைத்தார்கள் (எபி 11-33). சிங்கத்தின் வாயில் இருந்து இரட்சிக்கபட்டேன் (2 தீமோ 4-17). பிசாசை நாம் ஜெயிக்க வேண்டும்
10) காட்டுக்கு ராஜா = நாமும் 1000 வருஷ அரசாட்சியில் ராஜாவாக இந்த உலகத்தை ஆளுவோம் (வெளி 1-6)

[1/17, 11:52 AM] Jeyaseelan VT: Thomas..bro...👌👌👍👍👏

[1/17, 11:55 AM] Kumary-james VT: *வேதாகம வசனத்தின் படி மனிதன் விசேஷித்தவன்தான் அதில் எந்த வித சந்தேகம் இல்லை*
*ஆனால்!*

இந்த சமுதாயத்தில் பார்க்கும்போது

மனிதனுக்கு மிருகத்தைவிட மதிப்பு குறைவு🤔
*உதாரணத்துக்கு*
கர்நாடாகா மாநிலத்தில் சரி
இலைங்கையிலும் சரி மனிதனை சுட்டு கென்றனர்
*யாரை* ❓
*தமிழரை*
*தக்க தண்டனை இல்லை*
 *விசாரிப்பு இல்லை*

*ஆனால் இதே காட்டில் வாழும் மான்களை வேட்டை ஆடினால் 14 வருடம் சிறை தண்டனை*

*ஒரு மலை பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டால் Forster office வந்து அதை பிடித்து பாதுகாப்பாக காட்டில் கெண்டு விடுகின்றனர்*
*ஆனால் மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை*

❓❓❓❓❓❓❓

[1/17, 1:48 PM] Elango: உலக சட்டத்திற்க்கும், வேத சட்டத்திற்க்கும் தலைகீழ் வித்தியாசம்

[1/17, 1:51 PM] Elango: ரோமர் 8:22
[22]ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் *சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.*
எல்லா விலங்குகளும் அந்த நாளை எதிர் நோக்கி தவிக்கின்றன😩😫😖😣😲😲😲😲😲

ஏசாயா 11:6-9
[6] *அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.*

[7] *பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.*
[8] *பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.*

[9]என் பரிசுத்தu பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
🙄🙄🙄🙄🙄🙄🙏🙏🙏🙏✝✝✝✝✝✝

[1/17, 1:53 PM] Satish New VT: அப்போக்கூட மனுசன் ஒற்றுமையா இருக்கமாட்டான்😂😂😂😂
[1/17, 2:09 PM] ‪+91 70459 36662‬: வேத ஆதாரங்கள் இல்லை👆🏻
அப்போழுது *ஒரே ஆவிதான்*.இருக்கும்.
எபேசியர் 4:3
[3] *சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.*

[1/17, 2:24 PM] ‪+91 70459 36662‬: _மாடுகளை காப்பாற்ற ஜல்லிக்கட்டு தேவையா?_
*ஜல்லிக்கட்டின்* மூலம் *நூறு* மாடுகளை காப்பாற்ற முடியுமானால், திரும்பவும் *மாட்டுவண்டிக்கு* மாறுவதன்மூலம் *ஒரு கோடி* மாடுகளை காப்பாற்றலாம். மாட்டுவண்டிக்கு மாறுவது கஷ்டமானால் ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்புக்குள் சிக்கி சாவது இலகுவானதா என்ன?

[1/17, 2:33 PM] ‪+91 70459 36662‬: *ஜல்லிக்கட்டு*👇👇👇
வேறொன்றுமில்லை மாட்டினத்தை காப்பதற்காக மனித இனத்தை  அழித்துக் கொள்ளும்     ் ஒரு விளையாட்டு!!
*மாடா?மனிதனா??
*எல்லா விளையாட்டில் ஆபத்து உள்ளதே அதே மாதிரி    தானே ஜல்லிக்கட்டு என்பவர்களுக்கு என்னுடைய கேள்வி!!!
*மற்ற விளையாட்டுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்துகிற நீங்கள் உங்கள் பிள்ளைகளை ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தலாமே??
*ஜல்லிக்கட்டில் சாகிறவன் எவனோ தானே?வேடிக்கை பார்ப்பவர்களுக்கு!!
*நம்ம வீட்டில் 4 பேர் மாடுகிட்ட நாலு முட்டு வாங்கினதற்கு அப்புறம் தான் தெரியும் !! சப்போர்ட்டா??எதிர்ப்பா?என!!*
*ஜல்லிக்கட்டிற்கு எதிர்ப்பு*

[1/17, 2:34 PM] ‪+91 70459 36662‬: ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கு தெளிவான காரணம்!! இவ்வசனமே!! சகோ >>>>>>    
   *தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும்,அவன் அதைக் கட்டி வைக்காததினால்,அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்பட வேண்டும்! ! அதின் எஜமானும் கல்லெறியப்பட வேண்டும்! !( யாத் 21;29) இது வழக்கமாய் முட்டுகிற மாட்டுக்கும்,அதின் எஜமானுக்கும் கொடுக்கப்பட வேண்டிய தண்டையின் நீதியாக இருந்தது*👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻

[1/17, 2:37 PM] ‪+91 70459 36662‬: *ஜல்லிக்கட்டை தடை செய்!!!
*ஜல்லிக்கட்டு
மிகவும் பழமையான விளையாட்டுகளுள் ஒன்று! !  சீறி பொங்கி நிற்கிற  மாட்டை   வாலிபர்கள் அடக்க முற்படுகிறார்கள்!!
 *மாட்டை அடக்க முற்படும் போது மரணங்களும்,பலத்த காயங்களும் ஏற்படுவது சகஜம்!!!
*கடந்த 20 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட மரணங்கள் ஜல்லிக்கட் டில் நடந்துள்ளது!!
 *1000 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்!!இப்படிப்பட்ட ஒரு விளையாட்டு தேவையா??தமிழனுக்கு! !
 *அவ்வீரர்களின் மரணத்தினாலும்,காயத்தினாலும் பாதிக்கப்படும் குடும்பங்களின் நிலை என்ன? அக்குடும்பத்தின் கண்ணீர் தேவையா??தமிழனுக்கு!!!
 *மாடுபிடி வீரர்களின் வீரத்தை கண்டு ரசிக்கிற தமிழ ர்கள், எத்தனை பேர் மாடுபிடி வீரர்களின் காயத்திலும்,மரணத்திலும் அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்கிறார்கள்? ? ஒருவனை காயப்படுத்தி,மரணப்படுத்தி ரசித்து, பார்க்கும் மரண விளையா ட்டு தேவையா?தமிழனுக்கு! !
 *இதுல வேற கிறிஸ்துவ நண்பர்கள் நிறைய support ஜல்லிக்கட்டிற்கு!! முகநூலில் நிறைய நண்பர்கள் பொங்கி எழுகிறார்கள்? ?ஏன் தெரியவில்லை!!
*பராம்பரிய விளையாட்டை எப்படி விட்டு கொடுக்க முடியும் என ஒரே தொனி !!தமிழர்களிடையே!!
*மாட்டையும் பாடாய்படுத்தி,மனுசனையும் பாடாய்ப்படுத்தி ரசிக்கிற ரசனை தேவையா?தமிழனுக்கு!!
 *என்ன கலாச்சாரம், என்றிருந்தாலும் கூட, ஆயிரங்காலத்து கலாச்சாரம் என்றிருந்தாலும் கூட" மனித உயிர் "இது மிக முக்கியம்!!
*கலாச்சாரம் மனித உயிரை எடுப்பவைகளாக இருந்தால் அந்த கலாச்சாரத்தை தூக்கி எறிவதே சிறந்தது!!
*மனித நேயத்துடன் ஜல்லிக்கட்டிற்கு என் எதிர்ப்பும்,தடை செய்ய விருப்பமும்!!
*உங்கள் விருப்பம்??
*தமிழா!! உன் நெஞ்சை நிமிர்த்தி வீரத்தை காட்டி சாகிறதைக் காட்டிலும்,
*உன் நெஞ்சத்தில் ஈரத்தைக் காட்டி அநேகரை வாழ வைக்கலாமே??
*3 தலைமுறைக்கான அடையாளம், பற்றிபேசுகிற நாம் நம்ம வீட்டில இரண்டு பேரை ஜல்லிக்கட்டிற்கு அனுப்பி அவர்களுக்காக என்ன ஆனாலும் பரவாயில்லை   என எண்ணி  ! கலாச்சார அடையாளத்தை நிலைநிறுத்த எண்ணுகிறோமா??

[1/17, 2:40 PM] George VT: சகோ நீங்க மிலிட்டரி போலீஸ் இதிலே வேலைக்கு சேர்ந்துறாதிங்க 😀😀😀😀😀😀😀

[1/17, 2:47 PM] George VT: எந்த விளையாட்டு போட்டிகளிலும் கலந்துக்காதிங்க வீட்டுலையே இருந்து வீடியோ கேம் விளையாடுங்க

[1/17, 2:50 PM] ‪+91 70459 36662‬: நீங்க ஜல்லிக்கட்டு ஆதரவாளரா 🤔
[1/17, 2:53 PM] Elango: ❇ *இன்றைய வேத தியானம் - 17/01/2017* ❇
👉 விலங்குகளை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்❓
👉 விலங்குகளை வதைத்து வேலை வாங்கலாமா❓
👉 வேதத்தின் படி ஜல்லிக்கட்டு சரியா❓கிறிஸ்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓
                 *வேத தியானம்*

[1/17, 3:00 PM] George VT: விளையாட்டுகளுக்கு ஆதரவாளன்

[1/17, 3:02 PM] ‪+91 70459 36662‬: ஐல்லிக்கட்டுக்கு❓🤔

[1/17, 3:14 PM] Prabhu Ratna VT: ஜல்லிக்கட்டு பற்றி முழுதும் அறியாமல் ஜல்லிக்கட்டை எதிர்த்தவன் நான். ஆனால் தெரிந்த பிறகு தமிழர்களின் ஒட்டுமொத்த போராட்டத்தைக் கண்டு வியக்கிறேன். ஜல்லிக்கட்டை விட மோசமாக நடக்கும் பல விளையாட்டுக்ளுக்கு தடையில்லை. மனித உயிரைப் பறிப்பதில் முதலிடம் வகிக்கும் மதுவுக்கு தடையில்லை. மாட்டிறைச்சிக்கி தடையில்லை. ஸ்பெயினில் மாட்டுப் போட்டியில் மாடு அல்லது மனிதன் கொல்லப்படவேண்டும். அதற்கு தடையில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு மட்டும் தடை. நாமும் விவரம் தெரியாமல் தடையை ஆதரிக்கிறோம்.
தடையின் காரணம் நம் நாட்டு மாட்டு இனத்தைக் கூண்டோடு அரித்தொழிப்பதே. ஜெர்சி என்ற பசுவகையை அறிமுகம் செய்த மேலை நாட்டவன் பசுவின் மூலமும் பணம் பெற்றான். அந்த பாலைக் குடித்து நமக்கு வந்த வியாதிக்கு மருந்து மூலமும் பணம் பெற்றான். இப்போது கொகோகோலா கம்பெனி பால் வியாபாரம் ஆரம்பித்திருக்கிறது. மேலைநாட்டு மாட்டு வாணிபத்திற்கு நமது காளை மாடு தடையாக இருக்கிறது. இந்த காளை இனம் தமிழகத்தில் மட்டும் இருக்கிறது. அதுவும் இனவிருத்திக்காகவும்,  ஜல்லிக்கட்டிற்காகவும் மட்டுமே பயன்படுகிறது. ஜல்லிக்கட்டு ஒழித்தால் இந்த நாட்டு மாட்டினம் பிரயோஜனமற்றதாகிவிடும். எனவே தடையாய் நிற்கும் இந்த மாட்டினமும் அழிந்துவிடும். இதுவே அவர்கள் இலக்கு. அதற்குத் தான் இத்தனை போராட்டமும்.
நாட்டு நாய்கள் நம் வீட்டு பிள்ளைபோல சோறு தின்று வளர்ந்தது நம்மோடு. வெளிநாட்டு நாய் வந்ததும், நம் நாட்டு நாய்கள் தெரு நாய்களாயின. வெளிநாட்டு நாய் சாப்பிடும் உணவையும் அவர்களிடமே வாங்கினோம். இதே யுக்தி தான் நம் மாட்டை அழிக்க கிளம்பியிருக்கிறார்கள்.
விபரம் தெரியாத கிறிஸ்தவர்கள் போராடாவிட்டாலும் பரவாயில்லை. தடையை ஆதரிக்காதீர்கள். இணையத்தில் இது குறித்து பல தகவல்கள் இருக்கிறது.

[1/17, 3:20 PM] Elango: கிறிஸ்தவர்களான நமக்கு கலச்சாரம் முக்கியமா ப்ரதர்.
கலாச்சாரத்தை விட தேவன் தந்த  ஜீவன் முக்கியமில்லையா

[1/17, 3:21 PM] Prabhu Ratna VT: பொதுவாக ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால் என்ன நிகலும் என்று கேட்டால் நம் அனைவரும் கூறும் ஒரே பதில்
ஜெர்சி மாடுகள் மூலம் அந்நியர்கள் வியாபாரம் செய்ய உள்ளே நுழைவார்கள் என்றுதான் கூறுவோம்
ஆனால் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடையும்படியான வேறொரு தகவல் இருக்கிறது.

எய்ட்ஸ், சிக்கன்குன்னியா, கேன்சர், போன்றவைகள் நாம் நினைப்பதுபோல் மிகப்பெரிய நோய்கள் எல்லாம் இல்லை அது சில மனிதர்களால் உலகம் முழுவதும் திட்டமிட்டு பறப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது
அதை குணப்படுத்த தமிழகத்தில் ஏகப்பட்ட மருந்துகள் இருக்கிறது ஆனால் அவைகளை எல்லாம் அவர்கள் அங்கீகாரம் செய்ய மறுக்கிறார்கள்
காரணம் ஒரே ஒரு கேன்சர் நோயை உலகத்தில் பரப்புவதன்மூலம் 60 பில்லியன் டாலர்கள் அமேரிக்காவின் தொழிலதிபர்களுக்கு வருமானமாகச் செல்கிறது
60 பில்லியன் என்றால் இந்திய மதிப்பில் எவ்வளவு என்று கேட்கிறீர்களா
கூகிளில் சென்று "60 billion dollars in rupees" என்று தேடிப்பாருங்கள் வாயைப்பிளப்பீர்கள்
இதற்கும் ஜல்லிக்லட்டிற்கும் என்ன சம்மந்தம் ?
ஜெர்சி மாட்டுப்பால்களால் கேன்சர் நோயை நம் உடலில் எளிமையாக வரவழைக்க முடியும் .

[1/17, 3:27 PM] Jeyachandren Isaac VT: 👆seems to be fake news i suppose...
Generally our country people are motivated by anty-american thoughts

[1/17, 3:28 PM] Prabhu Ratna VT: அன்பு சகோதரரே நான் கலாச்சாரத்தைக் குறித்து ஒரு வார்த்தை கூட எழுதவில்லையே

[1/17, 3:28 PM] Prabhu Ratna VT: We are addicted to american thoughts

[1/17, 3:29 PM] Elango: அநேக செய்திகள் சொல்றீங்க ப்ரதர்.
மாட்டை அடக்குவதினால் என்ன பலத்தை காட்டிவிடப்போகிறோம் ப்ரதர்.
ஆவியின் கனி *இச்சையடக்கம்*

[1/17, 3:30 PM] Elango: ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலச்சாரம் அதை தடைசெய்யக்கூடாது என்ற கருத்து இருக்கிறது ப்ரதர்.
அதுதான் சொன்னேன் ப்ரதர்

[1/17, 3:33 PM] Prabhu Ratna VT: மாட்டை அடக்குவது வீரம் என்று நான் சொல்லவில்லை சகோ. இதற்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கிறது. அதைத் தான் சொன்னேன். இவ்வளவு நாள் நாம் ஏமாந்தோம். இப்போது எல்லாரும் விழித்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுத் தடை இனஅழிவு சம்பந்தப்பட்டது. இவ்வகை மாடு தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கப்படுகிறது. இதை தடை செய்தால் இந்த இனம் அழிக்கப்படும். ஒரு இனம் அழிவதை தேவன் விரும்புவாரா சகோ?

[1/17, 3:34 PM] Prabhu Ratna VT: நம்முடைய கருத்து கலாச்சாரம்,  வீரம் என்பது போன்றதல்ல. பின் இருக்கும் அரசியலே

[1/17, 3:35 PM] Jeyachandren Isaac VT: i think india is addicted to anty-americans thoughts only

[1/17, 3:36 PM] Elango: அதுக்காக கிறிஸ்தவர்களும் ஜல்லிக்கட்டு நடத்திதான் ஆகனுமா ப்ரதர்😀

[1/17, 3:36 PM] Prabhu Ratna VT: நம்ம அமைதியா இருந்தா போதும் பிரதர்.

[1/17, 3:38 PM] Prabhu Ratna VT: American thoughts are against indian environment.

[1/17, 3:38 PM] Elango: ஆனா வேதம் மாடு முட்டி மரிப்பதை ஆதரிக்கவில்லையே ப்ரதர்.
தேவன் நம் ஜீவனை உயர்வாக கருதுகிறாரே.
1 கொரிந்தியர் 15:32
[32] *நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்;*

அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?

[1/17, 3:39 PM] Jeyachandren Isaac VT: this kind of false news usually spread by some fanatics

[1/17, 3:41 PM] Prabhu Ratna VT: No one teaches this to me bro....I'm from village environment. We are formers. We know something bro.

[1/17, 3:42 PM] Prabhu Ratna VT: We can't make you to understand this.

[1/17, 3:43 PM] Jeyachandren Isaac VT: you know or heard...?? but i dont think so...
all anti-american thoughts are ill motivated and baseless which is designed by anti-christian movements

[1/17, 3:45 PM] Elango: *நம்முடைய ஒரே விசுவாச ஜல்லிக்கட்டு*‼‼👇👇👇
பிலிப்பியர் 3:13-16
[13]சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,

[14] *கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.*🚶🚶🚶🏃🏃🏃🏃🏃🏃

[15]ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; *எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

[16]ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.

[1/17, 3:45 PM] Prabhu Ratna VT: Brother, there is no relationship with Americans & Christians.  Americans are Americans. Indians are Indians. Christians arw Christians

[1/17, 3:45 PM] Jeyachandren Isaac VT: 👆✅✅Fools game only

[1/17, 3:45 PM] Prabhu Ratna VT: Amen

[1/17, 3:47 PM] Elango: ஆவிக்குரிய கிறிஸ்தவல்களின் ஜல்லிக்கட்டு என்பது மாம்சத்திற்க்கும், ஆவிக்கும் இடைப்பட்ட போராட்டமே.‼‼‼‼‼‼

கலாத்தியர் 5:17
[17] *மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.*😩😩😫😫😖😖😣😣😣😣😣😣😣😖😖😖😖😣😣
[1/17, 3:50 PM] Elango: *மாம்ச மற்றும் ஆவிக்குரிய ஜல்லிக்கட்டில் இரத்தசாட்சியாக மரித்தாலும் ஜீவகிரிடத்தை பெறலாம்.*
👑👑👑

[1/17, 3:51 PM] Thomas VT: 23 எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. 1 கொரிந்தியர் 10 :23

[1/17, 3:51 PM] Jeyachandren Isaac VT: how they are now , i dont know..
but still America is a christian country..
even in their currency  one find  the words "IN GOD WE TRUST"
thats why its a blessed country also....

[1/17, 3:53 PM] Prabhu Ratna VT: எல்லா விளையாட்டுகளிலும் இழப்பும் இறப்பும் மரணமும் உண்டு. சாலையில் சென்றாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஆனால்  ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடைகோரி இவ்வளவு போராட்டம் நடப்பதற்கு பின்புலம் உண்டு. ஊழியர்கள் தயவுகூர்ந்து அதனை ஆராய்ந்து ஜெபிக்கும்படி மிக கனிவோடு கேட்டுக்கொற்கிறேன். இது இனம் சார்ந்த பிரச்சனை. 
மனிதனை பலிகொடுக்கும் மதுவை எதிர்க்காதவர்கள்.
பீப்ஃ சாப்பிடுபவர்கள் எல்லாம் இதற்கெதிராய்ப் போரடுவது தான் வேதனையா உள்ளது.

[1/17, 3:55 PM] Jeyachandren Isaac VT: its not the business of christians to do research in this

[1/17, 3:57 PM] Thomas VT: மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அப்போ 2 :40

[1/17, 3:59 PM] Jeyachandren Isaac VT: we are called to pray for all men only👍

[1/17, 3:59 PM] Prabhu Ratna VT: ஒரு விஷயத்தை ஆராய்ந்து சொன்னாலும் பொய் என்கிறீர்கள். ஆராயுங்கள் என்றாலும் மாட்டோம் என்கிறீர்கள்.
பின் எதற்காக இந்த தலைப்பில் தியானம் வைத்தீர்கள். உங்கள் கருத்தை மட்டும் சொல்வதற்கா?
ஒன்று புரியுங்கள். ஜல்லிக்கட்டு தடையை விரும்பியவன். ஜெபித்தவன் தான் நானும்

[1/17, 4:00 PM] Apostle Kirubakaran VT: அதற்க்காக விசுவாசிக்கு கரண்ட் பில் கட்டினாரா?
லூக்கா 12:13-14
[13]அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
[14]அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
ஏன்? செத்து பிரித்து கொடுக்க போகல?
நன்மை செய்யும் ஏசு ஏன்? செய்யல?

[1/17, 4:02 PM] Thomas VT: 27 நன்மைசெய்பும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதிமொழிகள் 3 :27

[1/17, 4:02 PM] Elango: எல்லோரும் தங்கள் தங்கள் கருத்துக்களை பகிரலாம் ப்ரதர் 🙏😀

[1/17, 4:03 PM] Jeyachandren Isaac VT: bro, we are here to agree to disagree....👍👍🙏

[1/17, 4:04 PM] Apostle Kirubakaran VT: கலாத்தியர் 5:19-21
[19]மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
[20]விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்.
[21]பொறாமைகள், கொலைகள், வெறிகள், *களியாட்டுகள்* முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[1/17, 4:05 PM] Prabhu Ratna VT: ஆராய்ந்து ஜெபியுங்கள் என்று கனிவோடு விவாதத்தை முடிக்கலாம் என்றால், ஆராய்வது எங்கள் வேலையல்ல என்று சொன்னால் நான் என்ன பிரதர் செய்வது?

[1/17, 4:06 PM] Jeyachandren Isaac VT: i disagree to pray for jallikattu ..thats all bro

[1/17, 4:06 PM] Prabhu Ratna VT: தமிழர் என்பதற்காகவும், கலாச்சாரம் என்பதற்காகவும் நான் பேசவில்லை ஐயா

[1/17, 4:08 PM] Prabhu Ratna VT: I didn't ask you to pray for jallikattu...

[1/17, 4:10 PM] Prabhu Ratna VT: நிச்சயமாக உங்கள் கருத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

[1/17, 4:10 PM] Prabhu Ratna VT: இதன் பின்புலம் பற்றி பேச விழைந்துத் தோற்றுப் போனேன்.

[1/17, 4:11 PM] Prabhu Ratna VT: ஒரு நாள் இதன் வீரியம் புரியும். அப்போது தமிழகத்தில் நாட்டுக் காளைகள் என்ற இனம் இருக்காது. நன்றி விடைபெறுகிறேன்.

[1/17, 4:13 PM] Prabhu Ratna VT: யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள். ஜெபிப்போம் தேவன் வெளிப்படுத்துவார். நன்றி
🙏🏻

[1/17, 4:17 PM] Jeyachandren Isaac VT: வீரத்தைக் காட்ட மிலிடிரியில் சேரலாம்...
வாயில்லா ஜீவன்களோடா காட்டவேண்டும்😊

[1/17, 4:18 PM] Elango: கோபத்தை, நாக்கை கட்டுப்படுத்த முடியவில்லை, மாட்டை அடக்க போறாங்களாம்.
👌🙏👍😀😀

[1/17, 4:18 PM] Jeyachandren Isaac VT: யார் மனதையும் நீங்கள் புண்படுத்தவில்லை சகோதரரே..உங்கள் கருத்துகளைதான் சொன்னீர்கள்👍👍🙏

[1/17, 4:22 PM] Benjamin VT: ஜல்லிக்கட்டில் எனக்கு உடன்பாடில்லை

[1/17, 4:23 PM] Elango: *பவுல் எபேசுவில் சுவிஷேசத்திற்க்காக ஜல்லிக்கட்டில் போராடினார்*👇👇👇👇👇👇👇
1 கொரிந்தியர் 15:32
[32] *நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்;* அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?

[1/17, 4:27 PM] Jeyachandren Isaac VT: தமிழகத்தில் எத்தனையோ இளம் பெண்கள் பொது இடங்களில் பாழாக்கபடும் போது, கொலை செய்யபடும் போது, இன்னும் கண்முன் நடக்கும் பல அராஜகங்களை பார்க்கும் போது,👇👇👇
இந்த ஜல்லிகட்டு வீரர்களும், இதை ஆதரிக்கும் தமிழ் சமுதாயமும் பொதுவாக என்ன செய்கிறது....
கையை கட்டி..வாயை பொத்தி கொள்கிறது...
இங்கேயல்லாம் அவர்கள் வீரத்தை காட்டினால் பாராட்டலாமே...
இதையெல்லாம் விட்டு விட்டு...
ஜல்லிகட்டு, சேவல்கட்டு, நரிகட்டு....🤔🤔

[1/17, 4:28 PM] Benjamin VT: ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் என் கிறிஸ்தவ நண்பருக்கு நான் அளித்த பதில் 👇🏿

[04/01 5:10 am] 👑Benjamin Prasad👑: ஜல்லிக்கட்டு
கொழுத்துப்போய்,சும்மா இருக்கும் காளையை அடக்குகிறேன் என்று சொல்லி முட்டு வாங்கி சாவது தான் வீரமா?
காளையை துன்புறுத்துவது பிரச்சினை அல்ல. ஜல்லிக்கட்டால் மனித இரத்தம் சிந்துப்படுவது தான் பிரச்சனை

[05/01 7:28 am] 👑Benjamin Prasad👑: வீரம் வீரம் என்று சொல்லிட்டு சாகனுமா

[05/01 7:30 am] 👑Benjamin Prasad👑: அது முட்டாள்தனம் தானே

[05/01 7:35 am] 👑Benjamin Prasad👑: உலகத்திலே எத்தனையோ பிரச்சனைகள், விவசாயம் போன்ற பல
அதுக்கெல்லாம் குரல் கொடுக்க மாட்டிங்க, அதை கவனிக்க கூட மாட்டிங்க
ஆனால் ஒன்றுக்கும் உதவாத ஜல்லிக்கட்டை வேணும் வேணும் என்று கூச்சல் போடுவீங்க.
நான் பீட்டாவை support பண்ணல அண்ணா. எனக்கு ஜல்லிக்கட்டில் உடன்பாடு இல்லை .
பாரம்பரிய விளையாட்டு என்று சொல்கிற ஜல்லிக்கட்டு பிசாசின் தந்திரம் என்று மோகன் சி லாசரஸ் கூட சொல்லி உள்ளார். காரணம் மனித இரத்தம் சிந்துப்படுவது, மனித மரணம்.

[1/17, 4:31 PM] Jeya Vijayan VT: அதி மேதாவிகளுக்கு வணக்கம்
சல்லிக்கட்டு பற்றி இதில் பேசியிருக்கவே கூடாது

[1/17, 4:32 PM] Sam Jebadurai Pastor VT: ஒருகாலத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபித்ததை கேட்டிருக்கிறேன். ஏனெனில் பல அப்பாவிகள் இறந்து போனதால்.
இப்போது பலர் அதற்கு ஆதரவு தெரிவிப்பது விநோதமே.

[1/17, 4:33 PM] Elango: எல்லாரும் அதிமேதாவிகளா ஐயா🤔

[1/17, 4:34 PM] Sam Jebadurai Pastor VT: காளைகளை காப்பாற்றும் எண்ணம் மனிதர்களை காப்பதிலும் இருக்க வேண்டும்

[1/17, 4:34 PM] Apostle Kirubakaran VT: தியானத்தில் வார்த்தைகள் கவணமாய் கையாலனும்pls

[1/17, 4:44 PM] Elango: ❇ *இன்றைய வேத தியானம் - 17/01/2017* ❇
👉 விலங்குகளை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்❓
👉 விலங்குகளை வதைத்து வேலை வாங்கலாமா❓
👉 வேதத்தின் படி ஜல்லிக்கட்டு சரியா❓கிறிஸ்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓
                 *வேத தியானம்*

[1/17, 4:55 PM] JacobSatish VT: தமிழர்கள அனைவரும் ஆதரவுதான் ஒருசிலரை தவின

[1/17, 4:57 PM] Elango: ஜல்லிக்கட்டுக்கு இந்த 👇👇👇👇வேத வசனங்களை ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் கிறிஸ்தவர்கள் எப்படி பார்க்கின்றனர்.

யாத்திராகமம் 21:28-29,36
[28] *ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும்,*
 அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.
[29] *தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும்,*
 அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.
[36] *அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்;*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼 செத்ததோ அவனுடையதாக வேண்டும்.

[1/17, 4:58 PM] Apostle Kirubakaran VT: அப்போஸ்தலர் 2:40-44
[40]இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
[41]அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
[42]அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
[43]எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
[44]விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

[1/17, 5:00 PM] JacobSatish VT: இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு குறைவதற்க்கு இதுபோன்ற காரியங்களும் முக்கிய பங்கு

[1/17, 5:01 PM] JacobSatish VT: நான் கிறிஸ்தவன் ஆனால் என் கலாசாரமும் நான் பாதுகாக்கனும்.
இல்லை என்றால் தமிழர் என்ற ஒரு அடையாளம் அழிந்துவிடும்

[1/17, 5:02 PM] Elango: கொலோசெயர் 3:1-2
[1]நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
[2] *பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.*

[1/17, 5:08 PM] JacobSatish VT: வேத வசனங்களை இதுபோல திரித்து
கூறுவதால்தான் கிறிஸ்தவர்களை கண்டால் நிறையப்பேர வெறுக்கிறார்கள்

[1/17, 5:09 PM] Elango: மத்தேயு 15:6
[6] *உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.*
உயிரை கொல்லும் ஜல்லிக்கட்டை வேதம் அனுமதிப்பதில்லை

[1/17, 5:10 PM] JacobSatish VT: எனக்கு இது போன்ற பிற்ப்போக்கான கருத்துக்களில் உடன்பாடு இல்லை.ஏன் தேவை இல்லாமல் பேசனும்

[1/17, 5:12 PM] JacobSatish VT: நீங்க எத்தனைப்பேர் யூதர்கள் பண்டிகைகளை அனுசரிக்கறீங்க.....

[1/17, 5:14 PM] Sam Jebadurai Pastor VT: இன்னும் பாதுகாப்பான முறையில் முறையாக இதை நடத்தி கொள்ளலாம். தடை செய்ய அவசியமில்லை. நமது நாட்டு மாட்டினங்கள் அழிவிலிருந்து காக்கப்பட வேண்டும். மனித உயிரும் காக்கப்பட வேண்டும்.

[1/17, 5:14 PM] JacobSatish VT: நீங்க எல்லாருமே வேதத்திலுள்ள சட்டதிட்டங்கள்.கட்டளைகளை எல்லாம் ஒன்று விடாம பின்பற்றுகிறீர்களா

[1/17, 5:15 PM] JacobSatish VT: அவர்கள் மட்டும் பேசுங்க

[1/17, 5:16 PM] Elango: அப்படி ஒருவமில்லை ப்ரதர்

[1/17, 5:18 PM] Elango: நாம் பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்கள் ஐயா🙏

[1/17, 5:18 PM] JacobSatish VT: நான் ஒரு படம் போடறேன் இதுதான் எங்க நிலைமை

[1/17, 5:19 PM] JacobSatish VT: எதுக்கு பிரித்தெடுத்தாங்க ஒரு சமூகத்தோட பாரம்பரியத்தை அழிக்கவா

[1/17, 5:21 PM] Sam Jebadurai Pastor VT: கண்மூடித்தனமாக சிலர் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கிறார்கள். இதன் பின் பல அப்பாவிகளின் மரணங்கள் உள்ளன என்பதை மறுக்க இயலாது

[1/17, 5:26 PM] JacobSatish VT: இதோட இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையை முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்

[1/17, 5:28 PM] JacobSatish VT: இன்னமும் நான் வெயில் காலத்தில் கூழ் குடிக்கும் தமிழன் நான். எனக்கு இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துக்களுக்கு உடன்பாடு இல்லை

[1/17, 5:30 PM] JacobSatish VT: இளங்கோ பிரதர்.  நாட்டு மருந்துகள் கூட உபயோகபடுத்த மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.
ஏன்னா அதுவும் நம்ப பாரமபரிய வைத்திய முறைதானே

[1/17, 5:33 PM] Jeyachandren Isaac VT: நாம் கற்பனைகளை கைக்கொள்ளும்படியாக அழைக்க்ப்பட்டிருக்கிறோம்...
பாரம்பரியங்களை அல்லவே

[1/17, 5:34 PM] JacobSatish VT: நான் கிறிஸ்தவனா வாழ்வேன்
மற்றவர்களுக்காக நடிக்கமாட்டேன்....

[1/17, 5:34 PM] Elango: எத்தனையோ குடும்பங்கள்  கதறுகிறது.
இதில் என்ன கட்டுப்பாடு கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த ஆர்வம்.
நம் குடும்பத்திலிருந்து ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு துணிந்து அனுப்புவோமா
நம் மகனையோ, சகோதரனையோ
ஜல்லிக்கட்டு பார்த்து கைக்கொட்ட ரெடி
களத்தில் இறங்க ரெடியா🤔

[1/17, 5:35 PM] Jeyachandren Isaac VT: 👆✅நல்லதுதானே👍

[1/17, 5:36 PM] JacobSatish VT: சிலம்பாட்டம்  எத்தனைபேருக்கு தெரியும்.

[1/17, 5:39 PM] Elango: ஜல்லிக்கட்டில் உயிரிழந்த குடும்பத்தில் விசாரிங்க ப்ரதர்.
அழுகை, அனாதை
தேவையா ப்ரதர்.
நம் வீட்டிலிருந்து ஆட்களை ஜல்லிக்கட்டுக்கு அனுப்ப ரெடியா🤔

[1/17, 5:39 PM] JacobSatish VT: நான் தமிழன் கண்டிப்பா செய்வேன்.

[1/17, 5:40 PM] JacobSatish VT: ஜல்லிக்கட்டுல மட்டும்தான் மரணமா சகோ

[1/17, 5:40 PM] Thomas VT: காளைக்கு பதிலாக

சிங்கம், புலி களத்தில் இறக்கினால் எத்தனை பேர் நிற்பார்கள்

[1/17, 5:42 PM] Thomas VT: ஒரு நல்ல பாம்பை களத்தில் இறக்கினால் ஒரு ஆளும் இருக்க மாட்டார்கள்

[1/17, 5:47 PM] Sam Jebadurai Pastor VT: ❇ *இன்றைய வேத தியானம் - 17/01/2017* ❇
👉 விலங்குகளை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்❓
👉 விலங்குகளை வதைத்து வேலை வாங்கலாமா❓
👉 வேதத்தின் படி ஜல்லிக்கட்டு சரியா❓கிறிஸ்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓
                 *வேத தியானம்*

[1/17, 5:49 PM] JacobSatish VT: நீங்க இந்த விவாதத்தை முடித்தவுடன் வருகிறேன்🙏🙏🙏🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽🏃🏽

[1/17, 6:02 PM] Jeyachandren Isaac VT: ஜல்லிகட்டு கிறிஸ்தவர்களின் கலாசாரமா..🤔🤔🤔

[1/17, 6:03 PM] Elango: 2 இராஜாக்கள் 2:23-24
[23]அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்துபோகையில் *பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ* 😜😜😝😛😂😂😃😃என்று சொல்லி நிந்தித்தார்கள்.
[24]அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: *கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்;* 😡😠☹☹😱😱உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.

[1/17, 6:09 PM] JacobSatish VT: ஐயா கிறிஸ்தவர்கள் போடற மாறிதான் எப்போதும் உங்கள் உணவு உடை இருக்குமா

[1/17, 6:11 PM] Karthik Whatsapp1: காட்டைக் கெடுக்கும் சிறு நரிகளைக் குறித்து உன்னதப்பாட்டு புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம். செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். (பிரசங்கி 10:1 )
நம் வாழ்க்கையில் உள்ள சிறிய காரியங்கள் தானே என்று நாம் எண்ணுபவை கூட நம் சாட்சி வாழ்வைக் கெடுத்துப் போடுகின்றன.

[1/17, 6:12 PM] JacobSatish VT: சாம்பார்.ரசம்.இட்லி.தோசை மீன்குழம்பு எல்லாம் ஐயா வீட்ல சமைக்கமாட்டாங்க போல

[1/17, 6:13 PM] Sam Jebadurai Pastor VT: Psalms          84:3 (TBSI)  "என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே."

[1/17, 6:14 PM] JacobSatish VT: நீங்களாம் என்னை நரினு சொன்னாலும் நாய்னு சொன்னாலும்கூட நான் கவலைப்படமாட்டேன்

[1/17, 6:15 PM] JacobSatish VT: நாங்க காட்டை கெடுக்கறோம் நீங்க நாட்டை கெடுக்கறீங்க அவ்வளவுதான் வித்தியாசம்

[1/17, 6:16 PM] Elango: பாராம்பரியத்தை விட, வேத வசனம் தான் முக்கியம் பாஸ்டர் 👍👍👍😀😀
மத்தேயு 15:6
[6] *உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.*

[1/17, 6:16 PM] Apostle Kirubakaran VT: சதீஷ் என்னாச்சு ? உங்களுக்கு?

[1/17, 6:16 PM] JacobSatish VT: ஒன்னும் ஆகலை ஐயா?

[1/17, 6:16 PM] Elango: ஒழுங்கும், கிரமுமே கிறிஸ்தவ ரூல்

[1/17, 6:20 PM] JacobSatish VT: பாரம்பரிய உணவுவகைகளை நீங்கள் எல்லாம் சாப்பிடுவதே இல்லை அப்படித்தானே

[1/17, 6:22 PM] Apostle Kirubakaran VT: கொலோசெயர் 2:21-23
[21]மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
[22]இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
[23]இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.

பாரம்பரியத்துக்கு மரிப்பதே கிறிஸ்தவம்

[1/17, 6:22 PM] Elango: *பாரம்பரியத்துக்கு மரிப்பதே கிறிஸ்தவம்*👌👍🙏🙏🙏🙏🙏🙏

[1/17, 6:27 PM] JacobSatish VT: நம்ப சங்கத்தலைவரை காணலையே

[1/17, 6:27 PM] Elango: மறப்போம், மன்னிப்போம் ப்ரதர் 😀👍

[1/17, 6:28 PM] Kumar VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

[1/17, 6:29 PM] Karthik Whatsapp1: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் 🙏

[1/17, 6:29 PM] JacobSatish VT: நம்ப சட்ட ஆலோசகர் இல்லாம ரொம்ப கஸ்டமா இருக்கு😩😩😩😩

[1/17, 6:30 PM] Elango: ❇ *இன்றைய வேத தியானம் - 17/01/2017* ❇
👉 விலங்குகளை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்❓
👉 விலங்குகளை வதைத்து வேலை வாங்கலாமா❓
👉 வேதத்தின் படி ஜல்லிக்கட்டு சரியா❓கிறிஸ்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓
                 *வேத தியானம்*

[1/17, 6:31 PM] JacobSatish VT: ஸ்பெயின்ல கிறிஸ்தவர்கள் இருக்காங்களா அப்போஸ்தலர் ஐயா

[1/17, 6:32 PM] JacobSatish VT: குமாரு இதெல்லாம் கேக்கக்கூடாது☝☝☝

[1/17, 6:32 PM] JacobSatish VT: கிருபா ஐயா.......

[1/17, 6:34 PM] Apostle Kirubakaran VT: ஏன் இல்லையா?
உண்டு

[1/17, 6:34 PM] JacobSatish VT: ஸ்பெயின்ல புல்பைட் நடக்குது அங்க எந்த ஒரு மகா பரிசுத்தவானும் ஆட்சேபனை தெரிவித்ததா தகவல் இல்லையே

[1/17, 6:35 PM] Apostle Kirubakaran VT: கிறிஸ்தவன் யார்?
பிலிப்பியர் 3:10
[10]இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், *அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும்,* அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

[1/17, 6:37 PM] JacobSatish VT: என்ன ஐயா.500;1000ரூபாய் நோட்டு பிரச்சனைய மோடிகிட்ட கேட்ட மாதிரி பதில் சொல்றீங்களே ஐயா😂😂😂

[1/17, 6:38 PM] Prabhu Ratna VT: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் ஏன் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று கொஞ்சமாவது புரிந்துகொண்டு,  பிறகு அதைப் பற்றி பேசுங்கள். நான் வீரம், கலாச்சாரம்,  தமிழ் இவற்றைத் தாண்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என விளக்கிக் கூறியும் யாரும் அதைப்பற்றி பேசவே இல்லை. தயவுசெய்து கிறிஸ்தவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்பதை மாற்றுங்கள். பகுத்தறிவோடு இயேசுவை சேவியுங்கள்.

[1/17, 6:38 PM] Apostle Kirubakaran VT: நான் மோடி அல்ல
கிறிஸ்துவின் பாடி

[1/17, 6:41 PM] Prabhu Ratna VT: ஏன் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என நான் வைத்த ஆதாரக் கருத்தை வைத்து,  ஒருவரும் பேசவில்லை. அதை மறுக்கவும் இல்லை.
ஜல்லிக்கட்டு தடை என்பது வெளிநாட்டவரின் சதி.  கிறிஸ்தவர்களே அதற்கு உடன்படாதீர்கள். ஒரு இன மாட்டை அழிக்க முயற்சிக்கிறார்கள் அவர்கள்.

[1/17, 6:44 PM] Prabhu Ratna VT: கிறிஸ்தவர்களை ஏன் மற்றவர்கள் இவ்வளவு மோசமாக வெறுக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது. அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால், நம்மை உயிரோடு வைத்திருப்பதே பெரிது போல் தெரிகிறது.

[1/17, 6:44 PM] Apostle Kirubakaran VT: மாட்டை விட
மனிதனே முக்கியம்.மத்தேயு 6:26
[26]ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; *அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?*

[1/17, 6:45 PM] Apostle Kirubakaran VT: ஆதியாகமம் 1:26-28
[26]பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
[27]தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
[28]பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

[1/17, 6:46 PM] Prabhu Ratna VT: மனிதன் இறப்பது தான் பிரச்சனை என்றால், மதுவிற்கு தடை போடலாமே? அது தானே அனைவரையும் கொல்கிறது

[1/17, 6:46 PM] Charles Pastor VT: பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருஸாளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.

பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.
பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

[1/17, 6:46 PM] Prabhu Ratna VT: கிறிஸ்தவர்களை நினைத்தால் விநோதமாக இருக்கிறது.

அர்த்தமற்ற ஆங்கிலத்தில் பெயர் வைப்பார்கள்; அர்த்தமுள்ள தமிழ்ப்பெயரை அகற்றிவிடுவார்கள்.
வேதத்தில் எங்குமில்லாத ஆங்கில புத்தாண்டையும், கிறிஸ்துமஸ் என்ற பெயரிலிருக்கும் ரோம பண்டிகையையும் விழுந்து விழுந்து கொண்டாடுவர். தமிழ் புத்தாண்டையும், தமிழர் இனம் சார்ந்த மரபு பண்டிகைகளையும் அறவே வெறுப்பார்கள்.
நகையை கழட்டியே தீர வேண்டும் எனும் ஆங்கில கலாச்சாரத்தை ஏற்பார்கள். விருந்தோம்பல் முதலிய தமிழ்ப் பண்பாட்டை அசட்டை செய்வர்.
பொட்டு வைப்பது தவறென்று வசனமே எடுக்காமல் மணிக்கணக்கில் பேசுவர். அளவிற்கு மேல் துட்டு வைப்பது தவறென்று வசனம் சொன்னாலும் ஏற்கமாட்டர்.
ஆங்கில நாகரீகத்தை சபைக்குள் எல்லாவிதத்திலும் திணிப்பர். தமிழ் பெருமை  பற்றி பேசினால் உலகத்தான் என்பர்.
தேவன் படைத்த இயற்கை பூ வைத்தால் தவறாம். பிளாஸ்டிக்கில் தலையில் ஏதாவது மாட்டிக்கொண்டால் சரியாம்.
கிறிஸ்தவர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? இங்கிலாந்துக்கு முன்னே இந்தியாவுக்கு வந்தது சுவிசேஷம் , தோமா மூலம்.
வேதம் தான் நம் மாதிரி. ஆங்கிலேயக் கொள்கைகள் அல்ல.
உலகமே மேல் நாட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்க, நீயும் அங்கிருக்கும் கொள்கையையே ஆதரிக்கிறாயே ஏன்?
இயேசு ஒரு யூதனாக பிறந்து யூத ஒழுங்கை கடைபிடித்து யூதனாகவே மரித்தார். கிறிஸ்தவனோ தமிழனாகப் பிறந்து ஆங்கிலக் கொள்கை பயின்று அரை ஆங்கிலனாக மரிக்கிறான்.
ஆங்கிலத்தின் மேல் வைத்திருக்கும் வைராக்கியத்தை ஆண்டவர்மேல் வைத்திருந்தால் தமிழர்கள் என்றோ இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.
இப்படிக்கு,
*கிறிஸ்தவன்*

[1/17, 6:47 PM] Apostle Kirubakaran VT: ஐயா தேவ வார்த்தை புரியாமையே அனைவரையும் கொல்லுது

[1/17, 6:51 PM] Prabhu Ratna VT: ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசுபவர்கள் தயவு செய்து ஏன் அது நடத்தப்படுகிறது?  யாரால் நடத்தப்படுகிறது? ஏன் தடுக்கப்படுகிறது? யாரால் தடுக்கப்படுகிறது? அதன் பிண்ணனி என்ன என எல்லாம் ஆராய்ந்த பிறகு பேசுவது நல்லது.

[1/17, 6:53 PM] Prabhu Ratna VT: யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன். 1 கொரிந்தியர் 9 :20

[1/17, 7:13 PM] Thomas VT: ஒரு காளைக்கு
ஒரு ஆள் என்று இறங்கினால் அது வீரம்
ஒரு காளை பின்னால் 100 பேர் ஒடுவதா வீரம் ?

[1/17, 7:21 PM] Elango: அப்போஸ்தலர் 17:21
[21] அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய *வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.*
ஜல்லிக்கட்டு என்பது தமிழருடைய கலச்சாரம் என்று சொன்னாலும், பொழுதுபோக்குதலே முக்கியமான காரணம்.👆🏼👆🏼👆🏼👆🏼💨💨💨💨💨

[1/17, 7:23 PM] Elango: ஜல்லிக்கட்டு என்பது வேதத்தின் படி நலமானதா🤔
அடுத்த வசனத்தையும் கவனிக்கவும்! ஐயா.
1 தெசலோனிக்கேயர் 5:21-22
[21]எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
[22] *பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼💨💨💨💨💨

[1/17, 7:23 PM] JacobSatish VT: ஒரு விதத்துல ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுக்கும் கிறிஸ்தவர்கள்.மறைமுகமாக.பிஜே.பி.ஆர்.எஸ்.எஸ். போன்ற ஜனநாயக விரோத இயக்கங்களுக்கு துணை போகிறார்கள் என்பதே உண்மை😡😡😡😡😡

[1/17, 7:26 PM] George VT: ஆம் சகோ அவர்கள் மருந்து பால் குடிச்சே பழகிட்டாங்க  அதுனால இருக்கலாம்

[1/17, 7:26 PM] Apostle Kirubakaran VT: நீதிமொழிகள் 3:27
[27]நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் . செய்யாமல் இராதே.
நன்மைக்கு பாத்திர வான்னுக்கே செய்யாமல் போனால் தான் பாவம்.
*
யூதா 1:22
*அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம்பாராட்டி, சிலரை* அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,
சிலருக்கு என்பதை தாமஸ் ஐயா கவணிக்கவும்,
லூக்கா 7:1-9
[1]அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
[2]அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
[3]அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.
[4]அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு *அவன் பாத்திரனாயிருக்கிறான்.*
[5]அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
[6]அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
[7]நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
[8]நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
[9]இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
தாமஸ் ஐயா இதை கவனித்து பதில் தரவும்.
மத்தேயு *இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.*
இரக்கம் காட்டும் மனிதனுக்கே இரக்கம்

[1/17, 7:27 PM] JacobSatish VT: இவர்கள் தேசியகீதத்துக்கும் இதே போன்றே இருப்பார்களா😬😬😬😬

[1/17, 7:27 PM] JacobSatish VT: தமிழனுக்கு எதிரி தமிழனே

[1/17, 7:27 PM] JacobSatish VT: தமிழ் மெல்ல சாகும் என்று சொன்னது தவறு.இந்த பிறப்போக்கு கிறிஸ்தவ கூட்டம் சீக்கிரமே கொன்னுடும்

[1/17, 7:31 PM] Elango: கிறிஸ்துவர்களும் பொழுதுபோக்குக்காக விழாக்களை கொண்டாடினால் தப்புதான் பாஸ்டர்.
தேவனையே மகிமைப்படுத்துவோம்👍😀✝👑

[1/17, 7:31 PM] JacobSatish VT: உங்களை கட்டாயபடுத்தலையே நீங்களும் கலந்து கொள்ளுங்கன்னு

[1/17, 7:31 PM] JacobSatish VT: மாட்டாமயா போவீங்க😡😡😡

[1/17, 7:33 PM] Apostle Kirubakaran VT: சங்கீதம் 90:12-16
[12]நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
[13]கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.
[14]நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
[15]தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.
[16]உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.சங்கீதம் 90:12-16
[12]நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
[13]கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.
[14]நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
[15]தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.
[16]உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.

[1/17, 7:33 PM] JacobSatish VT: நம்பளும் செய்யமாட்டோம்
செய்யறவங்களையும் செய்யவிட மாட்டோம்
நல்லா இருக்குய்யா உங்க கிறிஸ்தவம்😪😪😪

[1/17, 7:35 PM] Apostle Kirubakaran VT: 2 இராஜாக்கள் 5:26
[26]அப்பொழுது அவன் இவனைப்பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
ரோமர் 13:11-13
[11]நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
[12]இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
[13]களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.

[1/17, 7:37 PM] Elango: நம்முடைய வீரத்தை பரிசுத்தத்தில், விசுவாசத்தில் காட்டலாம்.
மாட்டுகிட்ட போய் ஏன் உங்க. வீரத்தை காட்டுறீங்க ப்ரதர் குமார்.
👍👌🙏

[1/17, 7:39 PM] JacobSatish VT: 😂😂😂😂😂 நல்லவேளை புதிய ஆத்துமாக்கள் இல்லை...இருந்திருந்தால். ...

[1/17, 7:42 PM] JacobSatish VT: உங்க சொந்த கதை எங்களுக்கு எதுக்கு அப்போஸ்தலர் ஐயா.   😃😃😃😃😃😃

[1/17, 7:43 PM] Apostle Kirubakaran VT: வீரன் யார்?
மாட் அக்குபவனா?
மனைவியிடம் அங்குபவனே உண்மையான வீரன் / அவனே சூரன் /

[1/17, 7:44 PM] JacobSatish VT: கடைசில.டாபிக் மாடா மனைவியானு ஆகிடுச்சி

[1/17, 7:45 PM] JacobSatish VT: ஆமாய்யா நானும் உங்க ஊர்ல பொண்ணை கட்டி.ரொம்ப.அவஸ்தைப்பட்டுட்டேன்......

[1/17, 7:51 PM] JacobSatish VT: ☝☝☝நீங்களூமா

[1/17, 7:54 PM] Apostle Kirubakaran VT: மாவீரன் என்பவன் மாட்டை அடக்கிறவன் அல்ல.
மனைவியிடம் அடங்குபவன்

[1/17, 7:55 PM] Apostle Kirubakaran VT: மாவீரர்கள் எல்லாம் என்னோடு சேர்வார்கள்

[1/17, 7:55 PM] JacobSatish VT: நாங்க மாவீரர்கள் இல்லை ஐயா

[1/17, 7:56 PM] Apostle Kirubakaran VT: அப்ப அடங்க மாட்டிங்க

[1/17, 7:57 PM] Apostle Kirubakaran VT: காலமே உங்களுக்கு விடை தரும்

[1/17, 7:57 PM] JacobSatish VT: ஏன்னா ஜல்லிக்கட்டு வருஷத்துக்கு  ஒரு தடவை தான்.அதனால நாங்க சாதாரண வீரர்களாகவே இருந்துட்டுப்போறோம்

[1/17, 7:59 PM] Apostle Kirubakaran VT: இந்த மாடு முட்டினால் உயிர் தப்பலாம்
வீட்டு பசு முட்டினால் ஊருக்கு போக வேண்டியது தான்

[1/17, 8:01 PM] Apostle Kirubakaran VT: த தக்கா பு தக்கா 4 காலு
தானா நடந்தா 2 காலு
உச்சி வெலுத்தா 3 காலு
போகும் போது 4. காலு

[1/17, 8:01 PM] JacobSatish VT: ஜல்லிக்கட்டு காளைகளுடன் விளையாடும் வீரவிளையாட்டு
இங்க பசுமாட்டுக்கு வேலையே இல்லை ஐயா

[1/17, 8:03 PM] Apostle Kirubakaran VT: உங்களுக்கு புரியாது
நீங்க களத்துள
நாங்க வெற்றி தளத்துள

[1/17, 8:04 PM] Prabhu Ratna VT: அடங்காநல்லூர்   -வைரமுத்து
----------------------
போதும்
எங்களை முட்டாதீர்
இதற்குமேலும் எங்கள்
வால் முறுக்காதீர்
தயவுசெய்து
எங்கள் கொம்புகள் மீது
அரசியல் சாயம் பூசாதீர்
மூக்கணாங் கயிறுருவி
நைலான் கயிறு பூட்டாதீர்
திமிலில் ஒட்டிய ஈயோட்டுவதாய்
ஈட்டி எறியாதே சட்டமே
இனியும் தடுத்தால்
பூம்பூம் மாடாகி விடுவதன்றி
வேறு வழியில்லை
உங்களுக்கு ஆகஸ்ட் 15
எங்களுக்கு இன்றுதான்
ஆண்டெல்லாம் எங்களை
அடிமைகொண்ட மனிதனை
ஒருநாள் வென்றெடுக்கும் வாய்ப்புக்காக
வாடி வாசலில் காத்திருக்கிறோம்
ஏறு தழுவுதல் என்ற தமிழன் எப்படி எங்களைக் காயம் செய்வான்?
தழுவுதல் குற்றமெனில்
காதலுமில்லை; காளையுமில்லை
 அடிமாடு லாபம்
 பிடிமாடு பாவமெனில்
 பிள்ளைக்கறி லாபம்
 பிள்ளைதழுவல் பாவமோ?
ஒவ்வொன்றாய் இழந்த தமிழா
அன்னம் இழந்தாய்
அன்றில் இழந்தாய்
சிட்டுக் குருவிகளையும்
வானில் தொலைக்கிறாய்
கடைசியில் காளையினத்தையும்                 தொலைத்துவிடாதே!
வேளாண்மைக் கலாசாரத்தின்
உயிர் விஞ்ஞானம் நாங்கள்
எங்களைக்
கட்டித்தழுவிக்
காப்பாற்றுங்கள்!

[1/17, 8:04 PM] JacobSatish VT: அந்த பட்டமும் வெற்றிக்கோப்பையும் அப்போஸ்தலர்  ஐயாவுக்கே உரித்தாகுக🙏🏆🏆🏆🏆🏆

[1/17, 8:11 PM] Elango: ❇ *இன்றைய வேத தியானம் - 17/01/2017* ❇
👉 விலங்குகளை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்❓
👉 விலங்குகளை வதைத்து வேலை வாங்கலாமா❓
👉 வேதத்தின் படி ஜல்லிக்கட்டு சரியா❓கிறிஸ்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓
                 *வேத தியானம்*

[1/17, 8:15 PM] Jeyachandren Isaac VT: இதுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்...🤔

[1/17, 8:17 PM] Prabhu Ratna VT: வேதத்தின்படி தான் நாம் எல்லாமே செய்கிறோம். சாப்பிடுவது, தூங்குவது எல்லாம்

[1/17, 8:19 PM] Jeyachandren Isaac VT: 24 அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது. இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத்தவிர, யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள்.
நெகேமியா 13 :24
👆யூதர்களின் பிள்ளைகளின் பேச்சுவழக்கங்களிலே மாற்றம் உண்டானதற்கு காரணத்தை சிந்திப்பது நல்லது

[1/17, 8:20 PM] Kumar VT: 13 எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும், எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.
சங்கீதம் 144
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/17, 8:20 PM] Jeyachandren Isaac VT: நமக்கு பெயரே "வெளிச்சத்தின் பிள்ளைகள்"
வேதமே வெளிச்சம்👍👍

[1/17, 8:22 PM] Apostle Kirubakaran VT: கொலோசெயர் 2:20
[20]நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,

[1/17, 8:23 PM] JacobSatish VT: பொங்கல்.ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு

[1/17, 8:23 PM] Apostle Kirubakaran VT: கொலோசெயர் 2:20
[20]நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,

[1/17, 8:24 PM] Jeyachandren Isaac VT: அவர்களுக்குள்ளேயே எதிர்ப்பு....
நமக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை

[1/17, 8:25 PM] Apostle Kirubakaran VT: வெளிப்படுத்தின விசேஷம் 2:14-15
[14]ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
[15]அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.

[1/17, 8:26 PM] JacobSatish VT: சம்பந்தம் இல்லாமயா சகோ குருப்ல இருக்கிற அட்மின்கள் நிறையப்பேர் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க

[1/17, 8:26 PM] Jeyachandren Isaac VT: நமக்கு சம்பந்தமில்லாத பண்டிகைகள், விழாக்களை குறித்து நாம் கவலைபட ஒன்றுமில்லை...அவர்களின்  அறியாமையை குறித்து பரிதாபபபடலாம்...அவர்கள் இரட்சிப்பிற்காக ஜெபிக்கலாம்👍

[1/17, 8:27 PM] JacobSatish VT: புரியலை ஐயா...
காளை மாட்டை நாங்க கும்பிட சொல்லலை

[1/17, 8:28 PM] Jeyachandren Isaac VT: நம்முடைய அபிப்பிராயங்களை தெரிவிப்பது அதுவும் இன்றைய விவாதத்தின் கீழ் இந்த குரூப்பில சொல்வது தவறில்லை...
நாம் மற்றவர்களை போல வீதிகளுக்கோ, வேறு களத்திற்க்கோ செல்ல வில்லையே😊

[1/17, 8:29 PM] Kumar VT: 22 மோசே எகிப்த்தியருடைய சகல சாஸ்த்திரங்களிலும் கற்ப்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
அப்போஸ்தலர் 7 :22

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/17, 8:30 PM] JacobSatish VT: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா பேசறவங்களை வேறமாதிரி பாக்கறீங்களோனுதான்

[1/17, 8:31 PM] JacobSatish VT: சாப்பிட்டு தூங்குவோம் பரதர்.

[1/17, 8:36 PM] Jeyachandren Isaac VT: இந்த குருப்பில நம்ம எல்லாரும் கிறிஸ்துவுக்குள் சகோதரர்களே...
எனவே நாம் வேறுபிரித்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை...
மேலும் ஜல்லிக்கட்டு நடந்தாலும், நடக்காவிட்டாலும் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லையே

[1/17, 8:49 PM] JacobSatish VT: தமிழ்நாட்டுக்கு உள்ள இருக்கற உங்களுக்கு பாதிப்பு இருக்கோ இல்லையோ வெளிமாநிலங்களில் இருக்கற எங்களுக்கு இது ஒரு பெரிய அவமானம்

[1/17, 8:54 PM] Jeyachandren Isaac VT: 41 அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
அப்போஸ்தலர் 5 :41

[1/17, 8:54 PM] JacobSatish VT: ஜல்லிக்கட்டு நடக்காதது

[1/17, 8:58 PM] Samson David Pastor VT: -----------------------
PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.
(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.
அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
அதிர்ச்சி அடைய வேண்டாம்...
35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!
இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...
நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!
பீட்டா - மிருகவதை வியாபாரம்
-----------------------------------------------
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?
அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!
அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.
எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
சரி.
அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.
நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.
போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!
சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?
பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
-----------------------------------------------------------------
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.
பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.
நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.
காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.
இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.
பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?
மூன்றரை இலட்சம் கோடிகள்!
சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?
இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.
அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.
இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.
சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.
ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.
வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!
எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.
உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.
அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.
அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !
* பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்...
👆அறிந்துக் கொள்ளவே.

[1/17, 8:59 PM] Jeyachandren Isaac VT: அப்போஸ்தலர்கள் எதினிமித்தம் அவமானபட்டார்கள்...அதை எப்படி எதிர்கொண்டார்கள்.👍👍

[1/17, 9:00 PM] Apostle Kirubakaran VT: யோவான் 17:16
*நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல*

[1/17, 9:04 PM] Jeyachandren Isaac VT: 8 அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவைப் நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள். அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது. அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை. ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.
எஸ்தர் 3 :8
வித்தியாசம்👆

[1/17, 9:04 PM] JacobSatish VT: ஜல்லிக்கட்டுக்கு மதச்சாயம் ஏன் பூசப்பார்க்கீறீர்கள்

[1/17, 9:06 PM] Apostle Kirubakaran VT: உயிரை பரிக்கும் எதையும் ஏற்க்க முடியாது

[1/17, 9:07 PM] JacobSatish VT: இந்த கருத்தை நீங்கள் வெளியிலும் பிரசங்கம் பண்ணுவீர்களா

[1/17, 9:07 PM] Jeyachandren Isaac VT: நாம் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இலலையே....கிறிஸ்துவையே பின்பற்றுபவர்கள்...

[1/17, 9:08 PM] Ezra John VT: 🗣 *வாழ்வியல் வேதம்*
1. வேத ஞானம் எனக்கு எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல, வேதத்தை எவ்வளவு பின்பற்றுகிறேன் என்பதே முக்கியம்.
How much you follow the words in bible is more important than the biblical knowledge you have.
2. எவ்வளவு ஜெபிக்கிறேன் என்பது முக்கியமல்ல, தேவனுடைய பிரசன்னத்தோடு ஜெபிக்கிறேனா என்பதே முக்கியம்.
How much you pray is not important
How much do we pray with the presence of God  according to His will is important
3. எத்தனை அழகாய் நான் பிரசங்கிக்கிறேன் என்பது முக்கியமல்ல, எத்தனை அந்த பிரசங்கத்தின்படி வாழ்கிறேன் என்பதே முக்கியம்
How well I preach is not important.
How much I live as I preach is important
4. எவ்வளவு நான் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தினேன் என்பது முக்கியமல்ல, எந்த மனதோடு செலுத்தினேன் என்பதே முக்கியம்.
How much offering I give is not important
Our hearts intentions while offering is important
5. நான் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன் என்பது முக்கியமல்ல, என் மூலமாய் எவ்வளவு பேர் ஆசீர்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
How much I'm blessed is not important
How many are blessed through me is important

6. தேவன் எனக்கு என்ன தந்திருக்கிறார் என்பது முக்கியமல்ல, தேவனுக்கு நான் என்ன தந்திருக்கிறேன் என்பதே முக்கியம்.
What we receive from God is not important
What we give to God is important
7. நான் எவ்வாறு இரட்சிக்கப்பட்டேன் என்பது முக்கியமல்ல, எத்தனை பேர் இரட்சிக்கப்பட நான் காரணமாய் இருந்திருக்கிறேன் என்பதே முக்கியம்
How I got saved Or my testimony is not important
Am I a reason for others to be saved is important
 8. நான் என் தேவனுக்குள் எவ்வாறு இருந்தேன் என்பது முக்கியமல்ல, இப்போது எப்படி இருக்கிறேன் என்பதே முக்கியம்.
How I was close with God is not important
Now how I'm close with God is important
9. எவ்வளவு நான் சம்பாதிக்கிறேன் என்பது முக்கியமல்ல, எவ்வளவு நான் கொடுக்கிறேன் என்பதே முக்கியம்.
How much I earn is not important
How much I give is important
10. மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, நான் என் தேவனுக்குள் எப்படி இருக்கிறேன் என்பதே முக்கியம்.
Seeing others life is not important
How I live in Christ is important. 🗣 🤔🙄☹...

[1/17, 9:08 PM] Apostle Kirubakaran VT: இப்ப கிறிஸ்தவர்கள் ஆதரிக்கலாமா என்பது தான் பிரச்சனை

[1/17, 9:08 PM] Jeyachandren Isaac VT: கிறிஸ்துவை அறிவிப்பவர்களுக்கு ஜல்லிகட்டு பற்றி பேச என்ன இருக்கிறது

[1/17, 9:09 PM] JacobSatish VT: உயிரை பறிக்கும் விளையாட்டை எதிர்ப்போம் என்றீர்களே

[1/17, 9:10 PM] Jeyachandren Isaac VT: இப்பொழுது குழூவில் நம் அபிப்பிராயங்களை தெரிவிக்கும் நாம்...வெளியில் அதை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ கூடாது...
அமைதிகாத்தலே ஞானம்

[1/17, 9:11 PM] JacobSatish VT: இந்த விஷயத்தை மத்தவங்களுக்கும் புரிய வைக்கலாமே

[1/17, 9:12 PM] Kumar VT: நீங்க  என்ன அரமிக் பாஷையில்  பேசுபவரா சகோ...

[1/17, 9:12 PM] Jeyachandren Isaac VT: வேதமே நம்மை அறிவுறுத்துகிறது.....நமக்கு சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிடவேண்டாம் என்று...
நீதிமொழிகளில் இருக்கிறது என நினைக்கிறேன்

[1/17, 9:13 PM] Kumar VT: அப்படி என்றால் உங்க உணவு முறை...

[1/17, 9:14 PM] JacobSatish VT: ஜல்லிக்கட்டு குரூப்ல இவர்களை இணைக்கவா

[1/17, 9:15 PM] Apostle Kirubakaran VT: 2 தீமோத்தேயு 3:16-17
[16]வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
[17]அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
தேவ மனுவினுக்கு வேதம்

[1/17, 9:16 PM] Charles Pastor VT: *ஜல்லிகட்டு இதை வேதம் எவ்வாறு எதிர்க்கிறது என்பதை விளக்குக?*

[1/17, 9:17 PM] JacobSatish VT: கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தான் போதனையா

[1/17, 9:17 PM] Samson David Pastor VT: பொருள் "ஜல்லிகட்டு " என்பதால்,
ஆதரித்தோ எதிர்த்தோ குழுவிற்குள் பேசிக்கொள்ளலாம் தவறில்லை.
மனதைதானே பகிர்ந்துக் கொள்கிறோம்!!? 😄😄

[1/17, 9:18 PM] Jeyachandren Isaac VT: 14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
2 கொரிந்தியர் 6 :14

[1/17, 9:19 PM] Jeyachandren Isaac VT: 15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
2 கொரிந்தியர் 6

[1/17, 9:19 PM] JacobSatish VT: Nama edhuvaraikum evulavo dare vachurukoam but ipa neenga jallikattu ku support na intha dp ya 24hrs vainga unite Tamil nadu people👆🏻👆🏻 so students power👍🏼👍🏼👍🏼

[1/17, 9:19 PM] Samson David Pastor VT: ஐல்லிக்கட்டில் நுகமில்லாத மாட்டைதான் அடக்குவார்கள் Bro. 😄

[1/17, 9:19 PM] JacobSatish VT: இது ஜல்லிக்கட்டு குருப்ல இப்ப வந்த செய்தி

[1/17, 9:20 PM] Jeyachandren Isaac VT: 16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
2 கொரிந்தியர் 6
👆இந்த தேவனுடைய ஆலயங்கள் எல்லாம் மாடுபிடிப்பதை கற்பனை செய்யவே .....😂

[1/17, 9:21 PM] Jeyachandren Isaac VT: 17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 கொரிந்தியர் 6 :17

[1/17, 9:21 PM] Jeyachandren Isaac VT: 18 அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்
2 கொரிந்தியர்

[1/17, 9:22 PM] Kumar VT: ஐயா  அப்படி என்றால்  மாட்டுப்பால் கூட  சாப்பிட முடியாது.. போல

[1/17, 9:23 PM] Charles Pastor VT: இது யாருக்கான பதில்

[1/17, 9:25 PM] Elango: *விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே*‼
*இயேசு ஜல்லிக்கட்டு விளையாடுவாரா*⁉
*அவர் நடந்தபடியே நாம் நடக்க வேண்டும்*
பிசாசோடு போராட வேண்டிய நாம், மாட்டோடு போறாடுவதா❓❓
1 தீமோத்தேயு 1:3
[3] *வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,*‼

[1/17, 9:26 PM] Jeyachandren Isaac VT: இல்ல பிரதர் ஆவின் பால் இல்லைனா...ஆரோக்கியா பால் சாப்பிடலாம்😊😊

[1/17, 9:27 PM] JacobSatish VT: எங்களுக்கு பவுடர்பால் வேண்டாம்

[1/17, 9:28 PM] Jeyachandren Isaac VT: நீங்கள் பாலை உண்பவர்களாக இல்லாமல் பலமான ஆகாரத்தை உண்ணுங்கள்👍👍😊✋

[1/17, 9:28 PM] Samson David Pastor VT: நண்பர்களே,
என் பாரம் என்னவென்றால்,
பணத்துக்காக 3,4 மணி நேரம் Bank queue ல நின்னு பல முதியோர் இறந்தார்கள்.
விவசாயம் பொய்த்து போனதால் 100க்கு மேல் விவசாயிகள் இறந்தனர்.
இதற்கெல்லாம் தமிழர்கள் போராடவோ, ஏதாகிலும் உதவி செய்யவோ ஒன்றுகூடவில்லை.

[1/17, 9:28 PM] Elango: ஜல்லிக்கட்டில் உயிரிழந்த குடும்பத்தில் விசாரிங்க ப்ரதர்.
அழுகை, அனாதை
தேவையா ப்ரதர்.
நம் வீட்டிலிருந்து ஆட்களை ஜல்லிக்கட்டுக்கு அனுப்ப ரெடியா🤔

[1/17, 9:29 PM] Jeyachandren Isaac VT: நிர்விசாரமான ஜனங்கள்....

[1/17, 9:29 PM] Charles Pastor VT: மற்ற மதத்தினரோடு சாப்பிட, வேலை (அரசாங்க வேலை)  பார்க்க நேர்ந்தால் விட்டு விடுவீர்களா?

[1/17, 9:31 PM] Kumar VT: எப்படி  piza bargr

[1/17, 9:31 PM] Elango: ஐக்கியம் வேறு
பழகுதல் வேறு
1 கொரிந்தியர் 5:10
[10]ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை;
*அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.*‼👆🏼

[1/17, 9:32 PM] JacobSatish VT: ஜல்லிகட்டை தடை செய்வதால் பீட்டாக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் ஏதோ ஆதாயம் இருக்குனு தோனுது.

[1/17, 9:32 PM] Kumar VT: ஏனென்றால்  கிருஸ்த்தவ கம்பெனிகள்

[1/17, 9:32 PM] Elango: ❇ *இன்றைய வேத தியானம் - 17/01/2017* ❇
👉 விலங்குகளை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்❓
👉 விலங்குகளை வதைத்து வேலை வாங்கலாமா❓
👉 வேதத்தின் படி ஜல்லிக்கட்டு சரியா❓கிறிஸ்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓
                 *வேத தியானம்*

[1/17, 9:32 PM] JacobSatish VT: அது டுட்டி பிரதர்.ஜெபம் பண்ணா சரியாய்டும்

[1/17, 9:33 PM] JacobSatish VT: உண்மை. கிறிஸ்தவத்தை வியாபாரமாக்கியவர்களின் பங்கு இருக்கிறது

[1/17, 9:38 PM] Kumar VT: 7 எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?
1 கொரிந்தியர் 9 :7

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/17, 9:44 PM] Kumar VT: 4 புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?
1 கொரிந்தியர் 9 :4
8 இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
1 கொரிந்தியர் 9 :8
9 போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
1 கொரிந்தியர் 9 :9

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/17, 9:45 PM] Samson David Pastor VT: நம்முடைய சத்துருவின் மாடு காணாமல் போய், நம்முடைய வழியில் நாம் காண நேர்ந்தால்,
வீணா போகட்டும்னு கண்டும் காணாமல் போகாமல்,
அதை பிடித்துக்கொண்டூ, அவன் வீட்டில் போய் விடனும் என்று வேதம் சொல்கிறது.
எவ்வளவு பொறுப்பும், கரிசனையும் உடையவர் நம் ஆண்டவர்!!?

[1/17, 9:45 PM] JacobSatish VT: இதே அமெரிக்கா காரன் ஜல்லிக்கட்டு நடத்தலாம்னு சொன்னா .எத்தனை சபைகள் காளையை அவிழ்த்துவிடுவார்கள் என்பது தெரியாது

[1/17, 9:46 PM] Satya Dass VT: 7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான்.
யாக்கோபு 4
Shared from Tamil Bible

[1/17, 9:46 PM] Kumar VT: நம்சகோதரர் அல்லவா

[1/17, 9:47 PM] JacobSatish VT: சில போதகர்களே மாடுபிடித்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை

[1/17, 9:47 PM] Satya Dass VT: 11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 6 :11
12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
எபேசியர் 6 :12
13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 6 :13

Shared from Tamil Bible 3.7

[1/17, 9:50 PM] JacobSatish VT: ஜல்லிக்கட்டுக்கு ஆண்டவர் தடைசொல்லலை.அமெரிக்காகாரன் சொன்னதுதான் பிரச்சனை

[1/17, 9:51 PM] Satya Dass VT: நம்முடைய யுத்தம் பிசாசோடு தான.

[1/17, 9:52 PM] JacobSatish VT: ஆமா ஆமா யாரு இல்லைனு சொன்னது சகோ

[1/17, 9:56 PM] Kumar VT: 21 நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
1 கொரிந்தியர் 9 :21
22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
1 கொரிந்தியர் 9 :22
24 பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
1 கொரிந்தியர் 9 :24
25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.அவர்கள் அழிவுள்ள கீரிடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
1 கொரிந்தியர் 9 :25
26 ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
1 கொரிந்தியர் 9 :26

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/17, 9:57 PM] JacobSatish VT: அப்ப கிறிஸ்தவர்கள் சிலம்பாட்டம் ஆடலாம்😂😂😂😂

[1/17, 10:02 PM] Bro In Christ VT: ஜல்லிக்கட்டுக்கு ஆண்டவர் தடைசொல்லலை.அமெரிக்காகாரன் சொன்னதுதான் பிரச்சனை?????

[1/17, 10:03 PM] Jeyachandren Isaac VT: இப்ப எல்லாம் அமெரிக்காவிற்கே சுவிஷேசம் இங்கிருந்துதான் செல்கிறது.....மாறிய நிலை

[1/17, 10:04 PM] Bro In Christ VT: I don't think the Americans are against Jallikattu... It is the Indians in the PeTA who advise to ban Jallikattu..

[1/17, 10:04 PM] Bro In Christ VT: Please do not unnecessarily bring in Americans..

[1/17, 10:05 PM] JacobSatish VT: பீட்டாவைத்தான் குறிப்பிட்டோம்

[1/17, 10:05 PM] Bro In Christ VT: They support almost 80% of the missionary work worldwide..

[1/17, 10:06 PM] Jeyachandren Isaac VT: இங்கே அதன் முக்கிய ஆள் மேனகா காந்தி

[1/17, 10:06 PM] Kumar VT: உங்களுக்கு  தமிழ்  பேச தெரியாது  போல

[1/17, 10:07 PM] JacobSatish VT: ஐயா நான் சுத்ததமிழன் இதில் குமாருக்கு சந்தேகம் வேண்டாம்.🙏🙏🙏

[1/17, 10:08 PM] Bro In Christ VT: Me too.. 😃😃😃100%

[1/17, 10:08 PM] Kumar VT: நான்  சென்னை  தமிழன்

[1/17, 10:09 PM] JacobSatish VT: நானும்தான் நைநா.

[1/17, 10:09 PM] Jeyachandren Isaac VT: பச்சைத் தமிழர் உண்டா😊

[1/17, 10:10 PM] JacobSatish VT: புரியறமாதிரியே கேளுங்க...

[1/17, 10:10 PM] Kumar VT: பாவம்... ஆங்கிலம்

[1/17, 10:10 PM] Manikandan VT: Ethu enna question

[1/17, 10:11 PM] Apostle Kirubakaran VT: இன்றைய தியானத்தின் முடிவு என்ன?

[1/17, 10:11 PM] Charles Pastor VT: அஞ்சலி
6008
புக் மார்க்
ஆங்கிலத்தில்
இடக்கை புதிய பதிப்பு
சிறுகதை நூற்றாண்டு
உயிர்மை
டிஸ்கவரி புக் பேலஸ்
பாரதி புத்தகாலயம்
விகடன் வெளியீடு
வம்சி பதிப்பகம்
காணொளி
அந்திமழை இதழில்
இன்றைய புத்தகம்
இன்றைய புத்தகம் Ramayana Stories in Modern South India -Paula Richman படிக்க வேண்டிய புத்தகம்
இன்றைய சினிமா
இன்றைய சினிமா How the West Was Won அவசியம் காண வேண்டிய திரைப்படம்
இணையதளங்கள்
# எனது ஏழு உலகஇலக்கியப்பேருரைகளின் டிவிடி வாங்க தொடர்புகொள்க discoverybookpalace@gmail.com or Cell +91 9940446650
அறியப்படாத ஆளுமை
அறியப்படாத ஆளுமை Sebastião Salgado – world best photographer.Traveled over 120 countries for his photographic projects
« எனது நூல் வெளியீட்டு விழாஇது வேறு சினிமா »
ஜல்லிக்கட்டு
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பர் ராம்நாராயண் எனும் ராம்ஜி ஹோம்டிவி என்ற நியூடெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஜல்லிகட்டு பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்க முனைந்தார். அப்போது நான் அவருடைய அறைத்தோழனாக இருந்தேன்.
ராம்ஜி பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். இன்று தொலைக்காட்சி தொடர்கள், விவாத நிகழ்வுகள் என்று விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது முதல் ஆவணப்படமது என்பதால் நாங்கள் சிறிய குழுவாக செயல்பட்டு அதை சிறப்பாக உருவாக்கலாம் என்று முனைந்தோம்.
பிசினஸ் இந்தியா இதழில் பணியாற்றும் புகைப்படக்கலைஞரான ரமேஷ், சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்ற மணிஸ்ரீதர், பூனாவில் ஒலிப்பதிவு படித்த இளங்கோ, ராம்ஜியோடு பூனாவில் ஒளிப்பதிவு துறையில் பயின்ற சசிகாந்த் என்று திறமையான தொழில்நுட்பக்குழு ஒன்று சேர்ந்தது. எதையாவது செய்து சாதித்து காட்ட வேண்டும் என்ற பொறி யாவருக்குள்ளும் இருந்தது. அதற்கான முன்திட்டமிடல், நேரடி ஆய்வு என்று செயல்படத்துவங்கினோம்.
நான் அந்த ஆவணப்படத்தின் ஆதார ஆய்வை மேற்கொண்டேன். அதற்காக மதுரையைச் சுற்றி ஜல்லிகட்டு நடைபெறும் இருபதிற்கும் மேற்பட்ட ஊர்களைப் பார்வையிட்டேன். நேரடியாக ஜல்லிகட்டு மாடு வளர்ப்பவர்கள், மாடுபிடிப்பவர்கள், கோவில் சடங்குகள், ஜல்லிகட்டு பற்றிய கதைகள், நம்பிக்கைகள்,கிராமத்து மக்களின் நினைவுகள் என்று சேகரித்து கொண்டிருந்தேன். அது  வளர்ந்து  ஆயிரம்பக்கமுள்ள பெரிய புத்தகம் எழுதுமளவு சேர்ந்து போனது. அதில் இருந்து முக்கிய விபரங்களாகத் தேர்வு செய்து தொகுத்துக் கொண்டேன்.
தமிழ் அறியாத வேறுமாநில மக்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி விளக்கிச் சொல்ல இருக்கிறோம் என்பதே எங்களின் பிரதான குறிக்கோள். அந்த முனைப்பிலே ஆவணப்படம் பெரிதும் உருவாக்கபட்டது. அதே நேரம் மிக ஆதாரப்பூர்வமான தகவல்கள்,நேர்காணல்கள் இடம்பெற வேண்டும் என்றும் விரும்பினோம்.
ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்று  அந்த நாட்களில் தான் முழுமையாகப் புரிந்தது.
ஜல்லிகட்டு மாடு வளர்க்கபடுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணத் தருகிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை.

மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக்கூடியவை.ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கிவந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடிபோட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். அது போன்ற மாடுகளைக் கேலி செய்வார்கள். இது போலவே மாடுகளுக்கு ஊர்வாகும் சேர்ந்தேயிருக்கிறது.
சில ஊர் மாடுகள் இயல்பிலே சற்று முறைப்பு கொண்டேயிருக்கின்றன. சிறாவயல் ஜல்லிகட்டில் ஒரு மாட்டினைக் கண்டேன். அது ஒரு கண் இல்லாத மாடு. வயதும் அதிகமானது போலிருந்தது. அடங்கிய கொம்புகள், காய்ந்து உலர்ந்த குளம்புகள். குறைந்த மயிர் கொண்ட வால், நெற்றிமேடு துருத்திக் கொண்டிருந்தது. அந்த மாடு நின்றவாகு ஒரு சாமுராய் வீரன் நிற்பதை போல கம்பீரமாகவே இருந்தது. அதன் பார்வையில் சலனமேயில்லை. அது ஒற்றைக் கண்ணால் பார்த்தபடியே நிற்கிறது. அதன் சீற்றம் பெருமூச்சென எழுவதும் அடங்குவதுமாக இருந்தது.
விடைத்த காதுகள் எழும்பி நின்றன. மாட்டின் கால் நுனி பாயத் தயாராக நிற்கிறது. அதன் உடலில் யாரோ மஞ்சள் பூசியிருக்கிறார் என்பது போல லேசாக ஒரு திட்டு படிந்திருந்தது.  அது தன்னை பின்னால் இருந்து யாரும் வந்து பிடித்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது. ஆகவே பின்னால் நடந்து வரும் அரவம் கேட்டாலே அது சட்டென சுழித்துத் திரும்பி விடுகிறது. அது போலவே மாட்டின் இருள் அடைந்து போன கண் பக்கம் ஆள் வரும் போது அது தன்னை அவமதிக்கிறான் என்பது போலத் தலையை சாய்ந்துக் கொண்டு பார்க்கிறது.
முப்பது வயதுள்ள ஒரு மனிதன்  அதை லாவகமாகப் பிடிக்க பதுங்கிப் பதுங்கி போகிறான். அரங்கம் அவனை வேடிக்கை பார்க்கிறது.காக்கிடவுசரும் வெற்றுடம்புமாக அவன் ஒட்டப்பந்தய வீரன் துப்பாக்கி சப்தத்திற்கு காத்திருப்பது போல விறைப்பாக நிற்கிறான். அவன்  தொடும் தூரத்தில் போய் நிற்கும் வரை மாடு சலனமற்று  நின்றபடியே இருந்தது.
அவன் மாட்டின் கண்களை ஊடுருவிப் பார்க்கிறான். அது இன்னமும் களைத்துப் போகவில்லை என்பது தெரிகிறது. அதை ஒடவிட்டு களைத்துப் போக விட வேண்டும் என்பது போல சீண்டுகிறான். அது பாயத்தயாராகிறதே அன்றி ஒட மறுக்கிறது. அவன் விடவில்லை. அதன் வால்பக்கம் போய்ச் சீண்டுகிறான். அப்போதும் அது காலால் புழுதியை பறக்கவிடுகிறது. கொம்பை ஆட்டித் துள்ளுகிறது. ஆனால் ஒடவில்லை.
அவன் விடவில்லை. மாட்டின் மீது பாய்வது போல பொய்பாய்ச்சல் காட்டுகிறான். மாடு ஆவேசம் கொள்கிறது. ஆனால்  அவன் தப்பிவிடுகிறான். இந்த நாடகம் அதன் உச்சத்தை அடைகிறது. மாடு இப்போது அவன் தன்னை ஏன் பாய்ந்து அடக்க மறுக்கிறான் என்பது போல குமுறுகிறது. அவன் அதன் கொம்புகளைப் பார்த்தபடியே நிற்கிறான். அதன் கண்களில் வெறுமை தென்படுகிறது.

அவன் மாட்டின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் பாய்கிறான். அவன் கைகளில் மாட்டின் கொம்பு சிக்கிக் கொள்கிறது. மாடு திமிறுகிறது. அவன் கால்கள் இழுபடுகிறது. மாடு ஒடத்துவங்குகிறது. அவன் அதை எதிர்பார்த்தவன் போல ஒலமிடுகிறான். அது அவனை இழுத்துக் கொண்டு ஒடி உதற எத்தனிக்கிறது. அவன் விடவேயில்லை. மாடு தரையில் அவனை போட்டு தேய்த்துவிட முயற்சிப்பது போல  முயற்சிக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. மாடு ஆவேசம் அடங்காமல் இழுக்கிறது. அவன் மாட்டின் கொம்புகளைத் திருக்குகிறான்.
மாட்டின் கண்கள் மேலோங்குகின்றன. அவன் கால்கள் மாட்டின் அடிவயிற்றுள் போய் பிணைந்து கொண்டது போலிருக்கிறது. மாடு துள்ளுகிறது. அவன் கொம்பை விடவேயில்லை. மாடு தன் இயலாமையை உணர்ந்து கொண்டதைப் போல மெல்ல சீற்றம் அடங்குகிறது. மாட்டின் குதம் வெளியே தள்ளுகிறது. அவன் மாட்டின் கொம்பின் பிடியை மேலும் இறுக்குகிறான். அது தடுமாறுவது போல சுழல்கிறது.
மாட்டினை அவன் வீழ்த்திவிட்டதாக நினைக்கிறான். வெற்றி அவன் கண்களுக்கு தெரிகிறது. அவன் மெல்ல தன்பிடியைத் தளர்த்துகிறான். இதற்காகவே காத்திருந்தது போல அந்த மாடு ஆவேசமாக சீறித் துள்ளுகிறது. அவன் நிலைதடுமாறுகிறான். மறுபடி பிடி வலுவாக கிட்டவில்லை. அவன் தடுமாறி கிழே விழுகிறான். கூட்டம் கத்துகிறது. மாடு புழுதி எழும்ப அவனை தூக்கி மேலே வீசுகிறது. அவன் பறக்கிறான். தரையை அவன் தொடும்முன்பாக மாடு மறுபடியும் தாக்க கொம்பை முட்டுகிறது. அவன் புரள்கிறான். ஒரு குத்து விழுகிறது. அவன் எழுந்து கொள்ள முயன்று முடியாமல் புரள்கிறான். அதற்குள் தொலைவிலிருந்து நாலைந்து பேர் அவனைக் காப்பாற்ற ஒடிவருகிறார்கள்.
மாடு கிழே விழுந்துகிடந்தவன் அருகே போகிறது. அவன் பூமியில் விழுந்து கிடக்கிறான். அவனது அரைடவுசர் கிழிந்து புழுதியோடு விதைக்கொட்டைகள் வெளியே தெரிகின்றன. அவன் வயிற்றை மாடு குத்திகிழிக்கப் போகிறது குடல் சரிய அவன் சாகப்போகிறான் என்றே கூட்டம் நினைத்தது.
ஆனால் அந்த மாடு விழுந்துகிடந்தவனின் முன்பு வந்து ஒரு சுற்றுசுற்றிவிட்டு நின்று கொண்டது. அவன் விழுந்துகிடந்தபடியே மாட்டையேப் பார்த்து கொண்டிருந்தான். யாரும் மாட்டை நெருங்க முடியவில்லை. பிறகு மாடு தானாக விலகி சற்றுத் தள்ளிப்போய்நின்று கொண்டது. நாலைந்து பேர் பாய்ந்து அவனைத் தூக்கினார்கள். அவன் மைதானத்தில் இருந்துவெளியேறி போகும்வரை அந்த மாட்டையே பார்த்து கொண்டேயிருந்தான்.  அவனது குருதி வழிந்து மணலில் உறைந்து போயிருந்தது. அந்த மாட்டை மூன்று பேர் சேர்ந்து பிடித்து அடக்கினார்கள். அவ்வளவு ஆவேசமான பொருந்துதலை என் வாழ்வில் அன்று தான் கண்டேன்.

அவன் பல வருசமாக அந்த மாட்டைப் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என்றும் இன்று ஒரு பழைய கணக்கு தீரக்கபட்டிருக்கிறது என்றும் உள்ளுர் பூசாரி சொன்னார். என்னால் நம்பவேமுடியவில்லை. தன்னை பலமுறை வென்ற மனிதனை ஏன் மாடு குடலை கிழிக்காமல் வெளியே விட்டது ? என்ன உறவு அது. அந்த மாட்டினை அந்த மனிதன் மிகவும் நேசித்தான் என்கிறார்கள்.  அவன் ஜல்லிகட்டில் பிற மாடுகளைப் பிடிப்பதை விட இதற்காகவே வருகிறான் என்றும் அவனது ஊர் சிங்கம்புணரி என்றும் சொன்னார்கள். அவன் என்ன வேலை செய்கிறான் என்று கேட்டேன்.
ரிசர்வ் போலீஸில் வேலை செய்கிறான் என்றார்கள். ஜல்லிகட்டில் பெரும்பான்மை மாடுபிடிப்பவர்கள் காவல்துறையில் வேலை செய்யும் இளைஞர்களே. அந்த மாட்டின் ஒரு கண் போனபிறகும் அதை எப்படி ஜல்லிகட்டில் அனுமதிக்கிறார்கள் என்று கேட்டேன். அதை வளர்ப்பவர் ஒரு சாராயவியாபாரி என்றும், அந்த மாட்டினை அவரது வீட்டு பெண்கள் தான் தயார்படுத்தினார்கள் என்றும்  சொன்னார்கள்.
ஜல்லிக்கட்டிற்கு மாடு கொண்டுவரும்போது மட்டுமே அதை லாரியில் ஏற்றிக் கொண்டுவருகிறார்கள். ஜல்லிகட்டு முடிந்தபிறகு அந்த மாடு தன் வீட்டினைத் தேடி தானே போய்விடுகிறது. எனக்கு அந்த மாட்டின் வீட்டிற்குப் போய் காண வேண்டும் போலிருந்தது. மறுநாள் சிங்கம்புணரியில் உள்ள அந்த மாட்டின் உரிமையாளர் வீட்டிற்குப் போயிருந்தேன்.
அதே மாடு தொழுவத்தில் நின்றிருந்தது. மாடு ஜல்லிகட்டில் இருந்து வந்தவுடன் அதற்கு மஞ்சள் பத்து போட்டு விசேசமாக அரைக்கபட்ட தானியங்கள், அரிசி அரைத்த கலவை கலந்த உணவை தந்திருக்கிறார்கள். நேற்று பார்த்த அந்த ஆவேசம் இன்று மாட்டிடம் இல்லை. அது தளர்ந்திருந்தது. அடுத்த வருசம் அதை அனுப்பமுடியுமா என்று தெரியவில்லை.  இந்த வருசமே சண்டை போட்டு தான் அதை சேர்த்தேன் என்றார் உரிமையாளர்.
அந்த மாட்டினை ஜெயித்த ஆளைப் பற்றி கேட்டேன். அவன் பலமுறை இந்த மாட்டினை அடக்கியிருக்கிறான். தோற்றுபோய் திரும்பும் மாடுகள் சில நாட்களுக்கு ஒடுங்கியே இருக்கும். வீட்டுப் பெண்கள் அதை கடுமையாக திட்டுவார்கள். மாட்டிற்கு அது புரியவே செய்கிறது என்றார். மாட்டின் கண்களில் முந்திய நாளின் ரௌத்திரமில்லை. அது ஈரம் ததும்பியிருந்தது. அதை அடக்க முயன்று காயம்பட்டவன் மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்தான். அது ஒரு பந்தம். மாடுகளுக்கும் இது விளையாட்டு என்று தெரியும் என்றாள் வீட்டுப்பெண்மணி.
சிங்கம்புணரி கோவிலில் கூட ஜல்லிகட்டு மாடுகள் உள்ளன. அந்த மாடுகளை ஜல்லிகட்டில் யாரும் பிடிக்க கூடாது என்பது ஜதீகம். அவை பந்தயத்தின் முதலாக அனுப்படுகின்றன.கோவில் அருகாமையிலே அம்மாடுகள் வளர்க்கபடுகின்றன.

ஜல்லிகட்டு பார்க்க ஒன்று போல இருந்தாலும் ஒவ்வொரு ஊருக்கும் அது ஒருவிதமாகவே நடக்கிறது. பொதுவிதிகள் ஒன்று போலவே இருக்கின்றன. வெற்றி தோல்வி குறித்து அரிதாகவே சர்ச்சைகள் வருகின்றன. சாதீயம் சார்ந்த கொந்தளிப்புகளும் இதன் பின்புலத்தில் இருக்கவே செய்கின்றன.
அலங்காநல்லூரில் பார்க்கும் ஜல்லிகட்டு ஒரு சர்க்கஸ் போல மாறியிருக்கிறது. ஆனால் கொடிக்குளம், சிறாவயல், பாலமேடு, கண்டுபட்டி, வேந்தன்பட்டி, அவனியாபுரம், மேட்டுபட்டி என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் வேறுவிதமானவை. ஜல்லிகட்டில் இரண்டுவிதமாக உள்ளது. ஒன்று வாடிவாசல் கொண்டது.அதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. இந்தவகையில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும். யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு போர்களம் போலிருக்கும்.
நாங்கள் இப்படியான ஒரு வெளிவிரட்டினைப் படம்பிடிக்க முனைந்தோம். அதற்காக மூன்றுகேமிராகள் பயன்படுத்தபட்டது. அதில் ஒரு கேமிராவை கையாண்டவர் ராஜிவ் மேனனின் உதவியாளராக இருந்த ராஜசேகர். இன்று அவர் காக்க காக்க உள்ளிட்ட பல கௌதம் மேனன் படங்களில் ஒளிப்பதிவு செய்து திரைப்படத்துறையில் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக உயர்ந்து நிற்கிறார். அவர் ஒரு வேனின் மீது நின்றபடியே படமாக்கிக் கொண்டிருந்தார்.
இன்னொரு கேமிரா ஒரு மேடை மீதிருந்தது. அதை ரமணி படமாக்கிக் கொண்டிருந்தார். மூன்றாவது கேமிராவை கையில் வைத்து கொண்டு சசிகாந்த் மாடுகளின் நடுவில் ஒடிக் கொண்டிருந்தார். நாங்கள் ஒரு வேன்மீது நின்றபடியே எந்தப் பக்கம் எந்த மாடு வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தோம். எதிர்பாராமல் பாய்ந்து வந்த ஒரு முரட்டு மாடு ஒன்று ராஜசேகர் நின்றிருந்த வேன் மீது மோதியது. அவர் தூக்கி எறியப்படுகிறார் என்று  நினைத்தோம். அப்போதும் கூட அவர் படப்பிடிப்பை நிறுத்தவேயில்லை. அவர் நிலைதடுமாறி தன்னை சுதாரித்து கொண்டுவிட்டார். ஆனால் ஒரு அற்புதமான காட்சி கேமிராவில் பதிவாகியிருந்தது.
மதுரையை சுற்றிலும்  ஒரு மாத காலத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடந்தது. அதை நேர்த்தியான ஒரு ஆவணப்படமாக  எடிட் செய்து பின்னணி இசை சேர்த்து ஜல்லிகட்டு குறித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படக்காட்சியும் இணைத்து. எம்.ஜி.ஆர் படங்களில் காணப்படும் ஜல்லிகட்டு முரட்டுகாளையில் வரும் ஜல்லிகட்டு என்று சிறிய காட்சிகள் ஒன்றிணைக்கபட்டு ஒரு மணி நேர அளவில் உருவாக்கபட்டது. அந்த ஆவணப்படம் தேசிய அளவில் தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பபட்டு மிக பெரிய வரவேற்பையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது.
அப்போது ஜல்லிகட்டு குறித்து விரிவாக எழுதலாம் என்று நினைத்து நிறையக் குறிப்புகள், புகைப்படங்கள் யாவும் சேகரித்து வைத்திருந்தேன். பின்னாளில் வீடு மாறும்போது அவை காணாமல் போய்விட்டன. அந்த நாட்களும் மனதின் ஆழத்தில் போய் புதையுண்டுவிட்டிருந்தது.

ஜல்லிகட்டு பற்றி தமிழில் அருமையான ஒரு நாவல் வந்துள்ளது. அது சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல். 1950களில் செல்லப்பா நேரடியாக பல ஜல்லிகட்டுகளைப் பார்த்து தானே புகைப்படம் எடுத்திருக்கிறார். அவர் எவ்வளவு தேர்ந்த புகைப்படக்கலைஞர் என்பதற்கு அவர் எடுத்த ஜல்லிகட்டு புகைப்படங்களே சாட்சி. ஹெமிங்வே ஸ்பானிய காளைச் சண்டையைப் பற்றி எழுதிய குறுநாவலை தோற்காதவன் என்ற பெயரில் செல்லப்பா தனது எழுத்து இலக்கியஇதழில் வெளியிட்டிருக்கிறார்.
அது போல தனது ஜல்லிகட்டு அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டு வாடிவாசலை எழுதியிருக்கிறார். உண்மையான காளைச்சண்டையைக் காண்பது போன்ற அற்புதமான எழுத்துமுறை கொண்டது. தற்போது அதன் புதிய பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சி.சு. செல்லப்பாத் தவிர வேறு நவீன எழுத்தாளர்கள் எவரும் ஜல்லிக்கட்டு பற்றி தனித்து எழுதியதாகத் தெரியவில்லை.
இன்றும் ஜல்லிகட்டு நடந்தக்கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வாதபிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. ஜீவகாருண்ய நிறுவனங்கள் போராடுகின்றன. ஆனால் இந்த விளையாட்டின் பின்உள்ள மனப்போக்கும், மாடுகளைச் சண்டைகளுக்குத் தயார் படுத்தும் விதமும் அதன் தொன்மையான நினைவுகளும் இது வெறும் வெறியூட்டும் விளையாட்டில்லை என்றே என்னை உணர வைத்துள்ளது.
அதே நேரம் வெளிநாட்டவருக்கான கண்காட்சிப் பொருள் போல ஜல்லிகட்டு உருமாற்றபட்டு ஸ்பான்சர்களின் மூலம் அது காட்சிசண்டையாக நடைபெறுவதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஸ்பெனியில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன.  குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தபடியே தானிருக்கிறது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தபட்டிருக்கின்றன. மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் குறைவாகவே உள்ளன. எல்லா வீரக்கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.
மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்துவிடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள்  பரிசுப்பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள்.

ஜல்லிகட்டு என்ற விளையாட்டின் பின்னால் சொல்லித்தீராத கதைகள் புதைந்திருக்கின்றன. தன் இளம்பிராயத்தில் பிடித்த மாடு ஒன்றினைப் பற்றி பாலமேட்டில் ஒரு பெரியவர் சொல்லும் போது அவரது கண்களில் அந்த நாளின் வெளிச்சம் பீறிட்டது. அவர் தன் சட்டையை அவிழ்த்து தனது அடிவயிற்றை  காட்டினார். அங்கே ஒரு விரல்நீள தழும்பு இருந்தது. மாடு கிழித்தது என்று சொல்லியபடியே. ரத்தம் ரொம்ப ஒழுகி எனக்கு கண்ணைக் கட்டிகிட்டு வந்துச்சி. ஆனாலும் நான் பிடியை விடவேயில்லை. கடைசியில் நான் தான் ஜெயிச்சேன் என்றார்.
அதற்கு பரிசாக என்ன கிடைத்தது  என்று கேட்டேன். அவர்  ஒரு ரூபா என்று பெருமையாக சொன்னார். ஒரு ரூபாய்க்காக உயிரோடு போராடியிருக்கிறீர்களே என்றேன். அப்பிடியில்லை தம்பி. நம்ம உடம்பு எம்புட்டுக் கெதியா இருக்குனு எப்படி தெரிஞ்சிகிடுறது. மாட்டை பிடிச்சி பார்த்தா நம்ம உடம்பு எப்படியிருக்குனு தானா தெரிஞ்சிகிடலாம். என்று சொல்லிச் சிரித்தார்.
அந்த நினைவுகளைத் தொடரும்படியாக சொன்னேன்.அவர் பெருமூச்சிட்டபடியே சொன்னார்
அந்த வருசம் மாடுபிடிச்ச ராமு ஆள் எப்படியிருப்பான் தெரியுமா. உலக்கை மாதிரி உறுதியான உடம்பு. மாட்டை பிடிச்சான்னா உடும்பு மாதிரி விடவே மாட்டான். அவனை பாத்தா மாடுகள் பயப்படும். எங்கே போனாலும் ஜெயம் தான். ரெண்டு பேரும் ஒண்ணா தான் சுத்துவோம்.
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ராமுவைப் பாத்தேன். பெத்தபிள்ளைகளே வேண்டாம்னு துரத்தி விட்டுட்டாங்களாம். குடல்புண்ணாகி சிகிட்சை பண்ணிகிட்டு இருந்தான். உடம்பு ஈர்க்குச்சி மாதிரி இருந்துச்சி. தலைமயிர் கொட்டி போய் சிரட்டை மாதிரி தலை துருத்திகிட்டு இருந்துச்சி. என் மனசு கேட்கலை. பக்கத்தில போயி என்னய்யா ராமு இப்படியிருக்கேனு கேட்டேன்.
அவனுக்கு என்னை அடையாளம் தெரியலை. அவன் வயிற்றில பதினெட்டு தையல் போட்டு இருக்கு. அதை காட்டி நாம ஒண்ணா மாடு பிடிச்சமே என்று சொன்னேன். அவன் பதிலே பேசவில்லை. பச்சைப்பிள்ளை போல பொலபொலனு அழ ஆரம்பிச்சிட்டான்.  எனக்கும் தாங்கமுடியவில்லை.
அன்னைக்கு பூரா அந்தக் காலத்தில நடந்த ஜல்லிக்கட்டு ஒவ்வொன்னா பேசிகிட்டு இருந்தோம். இப்போ அவன் செத்துப் போயிட்டான். ஆனா வருசம் வருசம் நானும் ஜல்லிகட்டு போய் பாக்குறேன். அப்படி ஒரு பய இன்னும் வரவேயில்லே. என்றார். அந்த நினைவுகள் வெறும் கடந்தகால சுவடுகள் மட்டுமில்லை. அது ஒரு தீராத வலி. மறக்கமுடியாத இழப்பு என்று உணர முடிந்தது.

சில தினங்களுக்கு முன்பு எதையோ தேடிக் கொண்டிருந்தபோது ஜல்லிகட்டு நிகழ்விற்காக அலைந்த நாட்களின் ஒரு பழைய புகைப்படம் கையில் கிடைத்தது. அதை வைத்து பார்த்தபடியே இருந்தேன். காலம் எவ்வளவு வேகமானது. எவ்வளவு கடந்து போயிருக்கிறது. இன்று அந்த புகைப்படத்தில் உள்ள நாங்கள் யாவரும் ஏதேதோ துறைகளில் இருக்கிறோம். அவரவர் அளவில் சாதித்திருக்கிறோம். நாங்கள்  இப்போதும் சந்தித்துக் கொள்வதுண்டு. தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் அன்றிருந்த நெருக்கம் இன்றில்லை. அந்த ஆவணப்பட நிகழ்வு ஒவ்வொரு மனதிலும் ஒரு பிம்பமாக பதிந்து போயிருக்க கூடும்.
இந்த புகைப்படத்தை பார்த்த போது ஜல்லிக்கட்டு பற்றி எழுதாமல் விட்டதை மறுபடி தொடர வேண்டும் என்று மனது ஏக்கம் கொள்ளத் துவங்கியது. கணிப்பொறியில் சேகரித்து வைத்திருந்த செல்லப்பாவின் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள் ஒன்றிரண்டை தேடி எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் எழுத நினைப்பது தரும் வசீகரம் எழுதிய எந்த படைப்பிலும் இருப்பதேயில்லை.
காலத்தின் போக்கில் மனதில் உறங்கிகிடந்த ஜல்லிக்கட்டின் நினைவுகள் பீறிடுகின்றன. காளையின் மூச்சு சீறும் சப்தம் நினைவு அடுக்குகளில் கேட்க துவங்கியுள்ளது. இசை, நடனம் நாடகம், வீரவிளையாட்டுகள், நுண்கலைகள் என தமிழின் மரபுக்கலைகள் சார்ந்த நவீன சிறுகதைகள், கட்டுரைகள், நினைவலைகள் என யாவையும் ஏன் தொகுத்து ஒரே தொகுதியாக கொண்டுவரக்கூடாது என்றும் எண்ணம் உருவாகி உள்ளது.
ஒற்றைக்கண் கொண்ட அந்தக் காளையின் மனஇயல்பு இன்றைக்கும் வியப்பூட்டிக் கொண்டேதானிருக்கிறது. ஜல்லிகட்டின் பின்னால் இது போன்ற புதிர்மைகள் நிறையவே இருக்கின்றன. அதற்காகவே அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டியிருக்கிறது.

[1/17, 10:12 PM] JacobSatish VT: நம் மூதாதையர்கள் தமிழறா என்று கேட்கிறார் என்று கேட்கிறார் போல

[1/17, 10:18 PM] Jeyachandren Isaac VT: இப்படிபட்ட அறியாமையில் இருப்பவர்கள் இரட்சிக்கபட ஜெபிக்க வேண்டும்....

[1/18, 7:46 AM] Sam Jebadurai Pastor VT: Psalms          106:19-20 (TBSI)  "அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்."
தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.

Post a Comment

0 Comments