Type Here to Get Search Results !

குத்தினவர்களும் அவரை காண்பார்கள் இது எப்படி சாத்தியமாகும்❓

[12/15, 10:32 AM] Elango: 🔆 *இன்றைய வேத தியானம் - 15/12/2016* 🔆
👉 வெளிப்படுத்தின விசேஷம் 1 :7 - இல் *கண்கள் யாவும் காணும்* மற்றும் எபிரேயர் 9 :28 - இல் *தரிசனம்* இவை இரண்டும் ஒரே அர்த்தமா அல்லது வேற வேற அர்த்தமா❓ அல்லது வருகையின் வித்தியாசத்தை 👆🏼 காண்பிக்கிறதா❓

👉 எபிரேயர் 9 :28 இல் *காத்து கொண்டிக்கிறவர்களுக்கு இரட்சி்ப்பு* என்பது 👆🏼எதை குறிக்கிறது❓

👉 குத்தினவர்களும் அவரை காண்பார்கள் இது எப்படி சாத்தியமாகும்❓

👉 பூமியின் கோத்திரத்தார் அவரை கண்டு புலம்ப காரணம் என்ன❓

👉 இயேசுவின் இரண்டாம் வருகையில் பூமியின் கோத்திரத்தார் யாவருக்கும் புலம்பல் உண்டாகும் என்பதால் அக்காலத்தில் பரிசுத்தவான்கள் எவருமே இல்லை என பொருள் கொள்ளலாமா❓
*வேதத்தை தியானிப்போம்*

[12/15, 11:11 AM] Elango: கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கியிருக்கிற நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.👇👇

மத்தேயு 10:23
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; *மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*👆🏼👆🏼👆🏼
சிஷர்கள் இன்னும் இஸ்ரவேலருடைய பட்டனங்களை சுற்றிக்கொண்டிருகிறார்களா❓

மத்தேயு 24:34
*இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*
4, இயேசு சொன்ன அந்த சந்ததி இன்னும் உயிரோடு இருக்கிறார்களா❓

வெளிபடுத்துதல் 1:7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், *அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்;* பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
அவரை குத்தினவர்கள் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களா❓

வெளிபடுத்துதல் 2:25
உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
தியாத்தீராவில் இன்னும் அந்த சபை இருக்கிறாதா❓

[12/15, 12:27 PM] Tamilmani Ayya VT: இயேசு கிறிஸ்துவை குத்தினவர்கள் இஸ்ரவேலர்கள் பொய் -சாட்சியால் - குற்றங்களால் ரோமர்கள் குத்தினார்கள், அடித்தார்கள், காறி உமிழ்ந்தார்கள், அறைந்தனர், ஆடையை பங்கிட்டனர், நிர்வாணம் ஆக்கினர் (ரோம வழக்கம்).
இப்படி செய்த இப்ப உள்ள இஸ்ரவேலரும் ரோமர்களும் பார்ப்பார்கள்.
*இஸ்ரவேலர்களே இந்த ரத்தப்பழி எங்கள்மேல் சுமறட்டும் என்று தானாகவே கேட்டுப்பெற்றுக்கொண்டார்களே!.*

[12/15, 12:30 PM] Tamilmani Ayya VT: தியாத்தீரா சபை இப்போது இருக்கிற மத்திய கால சபைகளை (Medievall குறிக்கிறது.

[12/15, 12:30 PM] Tamilmani Ayya VT: யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
(வெளி. விசேஷம் 1 :4)

யோவான் 7 சபைகளுக்கு (எழுதுகிறவைகள்) ஆதி மைனர் ஆசியாவிலுள்ள சபைகளுக்கானாலும் அதில் கூறப்பட்டுள்ள புத்திமதிகள் இப்போதுள்ள பல பிரிவுகளான
சபைகளை சீர்படுத்திக்கொள்ள சொல்லப்பட்டவைகள். அனைத்து புத்திமதிகளையும் மேற்க்கொண்டால் பரலோக கிரீடம் நிச்சயம்.

எபேசு சபை -- ஆதி திருச்சபை
(Apostolic Church)

சிமிர்னா சபை  --- வன்கொடுமைக்குள்ளான சபை
(Persecuted church)

பெர்கமு சபை --- மணவாட்டியான சபை
(Married Church)

தியாத்தீரா -----  மத்திய கால சபை
(Medieval church)

சர்தை ---- பிரிவுகளான சபை
(Denominational church)

பிலதெல்பியா ---- மிஷினரி சபை
(Missionary Church)

லவோக்கியா ----- எதிர்ப்பு சபை- விசுவாச துரோக சபை (Apostate church)

[12/15, 12:43 PM] Tamilmani Ayya VT: மத்தேயு 24: 34 சந்ததி இயேசு வாழ்ந்தபோது இருந்த பல நாட்டு மக்களை குறிக்கிறது.  இயேசு கிறிஸ்து காலத்தில் ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா கண்டங்களே இருந்தன. தானியேல் காலத்திலே 605 வருடம் முன்பு 127 நாடுகள் இருந்தன. எல்லாம் சந்ததிதான்.

[12/15, 12:53 PM] Tamilmani Ayya VT: இயேசு கிறிஸ்து வருகையின்போது பன்னிரண்டு அப்போஸ்தலர்களாலும் சீசர்களாலும் - பின் இவர்கள் மூலம் உலகில் உருவாக்கப்பட்ட சீசர்களினாலும் *அதாவது நாம்* இந்த உலகத்திலுள்ள பட்டணங்களுக்கு இன்னும் சுவிஷேசம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். முடியவில்லை. 850 கோடிக்குமேல் மக்களுள்ள உலகம். போகாத இடங்கள் அதிகமாக உள்ளது.  இன்னும் சொல்ல முடியவில்லை என்பதால் தீர்க்கதரிசனம் நிறைவேறியுள்ளது.

[12/15, 4:51 PM] Tamilmani Ayya VT: கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
(எபிரேயர் 9 :28)
★ தரிசனமாவார் என்பது இறைவன் இந்த உலகத்திற்க்கு வருவார் என்பதை சொல்லுகிறது. தேவ தரிசனம் !!

[12/15, 5:55 PM] Elango: 🔆 *இன்றைய வேத தியானம் - 15/12/2016* 🔆
👉 வெளிப்படுத்தின விசேஷம் 1 :7 - இல் *கண்கள் யாவும் காணும்* மற்றும் எபிரேயர் 9 :28 - இல் *தரிசனம்* இவை இரண்டும் ஒரே அர்த்தமா அல்லது வேற வேற அர்த்தமா❓ அல்லது வருகையின் வித்தியாசத்தை 👆🏼 காண்பிக்கிறதா❓
👉 எபிரேயர் 9 :28 இல் *காத்து கொண்டிக்கிறவர்களுக்கு இரட்சி்ப்பு* என்பது 👆🏼எதை குறிக்கிறது❓
👉 குத்தினவர்களும் அவரை காண்பார்கள் இது எப்படி சாத்தியமாகும்❓
👉 பூமியின் கோத்திரத்தார் அவரை கண்டு புலம்ப காரணம் என்ன❓
👉 இயேசுவின் இரண்டாம் வருகையில் பூமியின் கோத்திரத்தார் யாவருக்கும் புலம்பல் உண்டாகும் என்பதால் அக்காலத்தில் பரிசுத்தவான்கள் எவருமே இல்லை என பொருள் கொள்ளலாமா❓
*வேதத்தை தியானிப்போம்*

[12/15, 5:59 PM] YB Johnpeter Pastor VT: கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் பாவமில்லாமல்  காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் தரிசனமாவார்.
(எபிரேயர் 9 :28)
👍👍👍👍👍 it should be read like this.

[12/15, 6:17 PM] Tamilmani Ayya VT: ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
_*ரகசிய வருகை* இல்லை என்று சொல்லுபவர்கள் இயேசு கிறிஸ்து அந்த நிகழ்வைப்பற்றி வேத வார்த்தையை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் எனப்பாருங்கள்._
_திருடனைப்போல வருவதும் பரிசுத்தவான்களையும் ரட்சிக்கப்பட்டவர்களையும் எடுத்துக்கொள்வது ரகசிய வருகை என்கிறது._
_கிரேக்க மொழி ரகசிய வருகையை துல்லியமாக சொல்லுகிறது._
_மத்தேயு 24: 40 ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான் மற்றவன் கைவிடப்படுவான்._
_கிரேக்கத்தில் paralambanō என்றால்  (Taken)_
_- to take with one’s self, to join to one's self as a friend or companion._
_ஒருவன் சுயமாக எடுக்கப்படுதல்,  ஒருவன் சுயத்தை நண்பனாகவோ கூட்டாளியாகவோ ஒன்று சேர்._
_இதில் இன்னொருவரோடு சேருகிறான். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து._
_(கைவிடப்படுவான் Left)_
_- aphiēmi..to send away - of a husband divorcing his wife_
_விட்டு அனுப்புவது - ஒரு கணவன் தன் மனைவியை மணவிலக்குவது_
_மணவாளன் இயேசு கிறிஸ்து._
_இன்னொரு வசனம் :_
_சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்,_ _அதென்னவெனில், புறஜாதியாருடைய (யூதரல்லாதவர்) நிறைவு உண்டாகும்வரைக்கும் (Come in) இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்._
(ரோமர் 11 :25)
_eiserchomai..to go out or come in: to enter into a house or a city._
_யோவான் 14:3 வசனத்தில் paralambanō என்ற கிரேக்க வார்த்தையை பொருத்திப்பாருங்கள்._
_நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்._
_(Receive).. paralambanō (யோவான் 14 :3)_
_இன்னொரு வசனம்:_
_பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,_
(1 தெசலோனிக்கேயர் 4 :17)
_இதில் harpazō என்ற வார்த்தை வருகிறது. இதற்க்கு அர்த்தம்,  பற்றிக்கொள், வலிமையுடன் தூக்கிக்கொள், வெடுக்கென பற்றி எறிதல்_
 - harpazō...to seize, carry off by force; to snatch out or away (Rapture)
_Rapturo என்பது லத்தீன் மொழியில் அதே வார்த்தை கிரேக்கத்தில் harpazō._
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

[12/15, 6:29 PM] Tamilmani Ayya VT: *ஆம், நமக்காக பாவமானார்*
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை *நமக்காக பாவமாக்கினார்.*
(2 கொரிந்தியர் 5:21)

[12/15, 6:52 PM] YB Johnpeter Pastor VT: 1யோவான் 1: 8
நமக்குப்  👉🏻பாவமில்லை யென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 John 1: 8
If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us.

1யோவான் 3: 8
👉🏻பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 John 3: 8
He that committeth sin is of the devil; for the devil sinneth from the beginning. For this purpose the Son of God was manifested, that he might destroy the works of the devil.

Ithiley Yesu entha characterla ullar unga karuthu padi?

[12/15, 7:31 PM] Elango: ரோமர் 8:3
[3]அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, *தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி,* மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

[12/15, 10:37 PM] Darvin-ebin VT: இதில் யாருமே ரகசியவருகை இல்லை என்று பகிரங்கமாக இன்னும் செல்லவில்லை அதனால் மௌனம் சம்மதம் அதாவது இருக்கு என்று அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று எடுத்துக் கொள்வோம். அப்படி இல்லை என்றால் அவர்கள் விளக்கம் தரட்டும் பின்பு பதில் சொல்வோம் பின்னானவைகளை விட்டு முன்னானவைகளை நாடி ஓடுவோம் குட் நைட்

[12/16, 11:00 AM] Elango: வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை.
-(Pr.Charles MSK)
வெளி
1 அதிகாரம்
வசனம் 7
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தார் எல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
விளக்கம்:-
மேகங்கள் மேல் எடுத்துக் கொள்ளப்பட்ட கர்த்தர் அப்படியே மறுபடியும் வருவார் (அப் 1:9-11)
அப்போஸ்தலர்
1 அதிகாரம்
9. இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
10. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:
11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறிக்கிறது.
கண்கள் யாவும் கானும்:-
உலக மக்கள் யாவரும் அவரை காண்பது நடக்க கூடியதல்ல என்று பலர் கூறினர். கடந்த நூற்றாண்டில் தொலைகாட்சிப் பெட்டி கண்டுபிடிக்கும் முன்பாக உலக மக்கள் யாவரும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை காண்பது கூடாத காரியமாய் இருந்தது.
உலகின் ஒரு பகுதியில் நடக்கும் போர், விளையாட்டு, விழா ஆகியவற்றை அச்சமயமே உலகெங்கும் தொலைகாட்சியில் காணும் காலம் இது.
கிறிஸ்துவின் வருவதை தொலைகாட்சியில் காட்டவேண்டும் என்று சில குழுக்கள் ஆயத்தமாக இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்.
எனவே, உலகின் எல்லா பகுதி மக்களும் நேரில் அல்லது தொலைகாட்சியில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை காணப்போகிறார்கள். கண்டு புலம்ப போகிறார்கள்.
குத்தினவர்களும் காண்பார்கள்:-
குத்தினவர்கள் என்பது குத்தினவர்களின் பின் சந்ததினரையும் பாவத்தில் இருப்பவர்களையும் குறிக்கும் (சகரி 12:10)
சகரியா
12 அதிகாரம்
10. நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
மேலும்,
குத்தினவர்கள் என்ற வார்த்தை கிறிஸ்துவர்களை துன்பப் படுத்துகிறவர்களையும் கிறிஸ்துவ ஊழியர்களுக்கு எதிராக செயல் படுகிறவர்களையும் குறிக்கும்.
எப்படி என்றால்,
அப் 9:5 வசனங்களை வாசிக்கும் போது
அப்போஸ்தலர்
9 அதிகாரம்
1. சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;
2. இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.
3. அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;
4. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
5. அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
இந்த வேத பகுதியில் சவுல் கிறிஸ்துவை அல்ல, கிறிஸ்துவர்களை தான் துண்பபடுத்தினான் ஆனால், இயேசு கூறிம் போது "நீ துண்பப்படுத்துகிற கிறிஸ்து நானே" என்றார்.
இந்த வசனங்களின் அடிப்படையில் "குத்தினவர்கள்" என்பதை கிறிஸ்தவர்களை எதிர்கிறவர்கள், துண்பப் படுத்துகிறவர்கள், கொலை செய்கிறவர்கள் போன்றை குறிக்கும் என கருதலாம்
By - @Charles Pastor VT.

[12/16, 11:08 AM] Elango: ரகசிய வருகை – பகீரங்க வருகை விளக்கம்
 tamilmani146
7 months ago

ரகசிய வருகை என்று  வேதத்தில் இல்லாவிடினும் ★திருடனைப்போல வருகிற
    வசனங்கள் மற்றும் ★மறுபடியும் வருகிறேன்  ★கடைசி நாளில் அவனை
    எழுப்புவேன்
★கர்த்தருக்கு  
   எதிர்கொண்டுபோக
★அவரிடத்தில்
    சேர்க்கப்படுவோம்  ★இமைப்பொழுதிலே,
    நாமெல்லாரும்
   மறுரூபமாக்கப்படுவோம்  ★அவர் வெளிப்படும்போது
★மகிமையின் பிரசன்னமாகுதல்
★ஒருவன் ஏற்றுக்
    கொள்ளப்படுவான்,
     மற்றவன்
     கைவிடப்படுவான்
★ விழித்து
     எழுந்திருப்பார்கள்.
இப்படி இவை எல்லாம்
இயேசு கிறிஸ்துவின்
ரகசிய வருகையே குறிக்கிறது. ரகசிய வருகையில் நாம் அவரை காண முடியாது.
அதேபோல “இயேசு கிறிஸ்து  பூமியின் மேல் நிற்பார்” என்பதும் ரகசிய வருகையே.
யோபு 19:25
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
என்றும், அவர்
கடைசிநாளில்
“பூமியின்மேல் நிற்பார்’ என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
பகீரங்க வருகையில் வருவதை – வருகிறதை காண்பீர்கள் – வருகிறார்  என்றே உள்ளது.  வந்துக்கொண்டேதான் இருப்பார். நிற்க மாட்டார்.
ஆகையால் நிற்பார் என்பது ரகசிய வருகை. (இதில் சிலர் கருத்து மாறுபடலாம்.)
★பகீரங்க வருகை :
★மத்தேயு 19:28; 23:39 ;
    24:3—25:46 ;
★மாற்கு 13:24-37;  17:22-37 ;
   18:8 ; 21:25-28 ;
★அப்போஸ்தலர்  1:10-11;
    15:16-18 ;
★ ரோமர் 11:25-27;
★1 கொரி 11:26;
★2 தெச1:7-10; 2:8 ;
★2 பேதுரு 3:3-4;
★யூதா 1:14-15;
★வெ. வி 1:7-8; 2:25-28 ; 16:15.   19:11-21 ; 22:20 ).
பகீரங்க வருகையின் முக்கிய வசனங்கள் :
மாற்கு 13
26  அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
மத்தேயு 24
30  அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
லூக்கா 21
27  அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
வெளி. விசேஷம் 1: 7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென
யூதா 1: 15
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
★ரகசிய வருகையின் வசனங்கள் :
யோவான் 14: 3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.
★ஸ்தலம் என்ற வார்த்தை எபிரேய மொழியில் அதன் அளவுகளையும் சொல்லுகிறது.
யோவான் 6:44
என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
1 தெசலோனிக்கேயர் 4: 17
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
2 தெசலோனிக்கேயர் 2: 1
அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
1 கொரிந்தியர் 15: 51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
1 யோவான் 2: 28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.
1 யோவான் 3: 2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாய் இருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
தீத்து 2: 13
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
ரோமர் 8: 18-19
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
பிலிப்பியர் 3: 20- 21
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
லூக்கா 17
34  அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
35  திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
36  வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
தானியேல் 12
1  உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
2  பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
லூக்கா 12
39  திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
40  அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையை யாரும் தெரிந்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் யாரும் அறியாத நிமிடத்திலே வரப்போகிறார். அதேபோல் ரகசிய வருகை எப்போது?  உபத்திரவ காலத்திற்க்கு முன்பா இல்லை பின்பா இல்லை மத்தியிலியா என்ற கருத்துகள் நிலவி வருகிறது. அது வேதத்தில் சொல்லப்படவில்லை.
ஆகவே எதற்க்கும் ஆயத்தம் முக்கியம். ஆயத்தமாய் இருப்போம்.
By @Tamilmani Ayya VT

[12/16, 11:18 AM] Elango: சகரியா 12:10-14
[10]நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்;
*அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி,*😣😖😫😩😧😦😯😢😥😪😓😭😭😓😓

 ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

[11]அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும்.
[12]தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,
[13]லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,
[14] *மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள்* 😭😭😓😓😪😪😢😢😪😪😓

[12/16, 11:23 AM] Elango: *எதற்க்காக ஆண்டவரின் வருகையை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்.👇👇👇👇👇👇*

ரோமர் 8:23
[23]அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட
 *நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து,*‼‼‼⚠⚠⚠⚠
 நமக்குள்ளே தவிக்கிறோம்.
1 தெசலோனிக்கேயர் 1:10
[10]அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும்,
👇👇👇👇👇👇👇👇
*இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற*❗❗❗❗❗❗❗❗☝☝☝☝
அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.

[12/16, 1:51 PM] Kankani VT: இயேசுவின் இரகசிய வருகையாகிய 2 ம் வருகையில் அல்ல புலம்பல்...
3 வது வருகையில் புலம்பல் உண்டாகும்...✅

[12/16, 2:12 PM] Elango: இரகசிய வருகைக்கு பிறகு புலம்பல் இருக்குமா பிஷப் ஐயா

[12/16, 2:43 PM] Kankani VT: பூமியன் கோத்திரத்தார் ஏன் புலம்புகிறார்கள் என்றால் இயேசுவின் இரண்டாவது வருகையோடு இரட்சிப்பு பூமியில் நிறுத்தபடுவதால்

[12/16, 2:44 PM] Charles Pastor VT: இரகசிய வருகையில் யாருக்குமே புலம்பல் இல்லை. காரணம் அதை மனவாட்டியாகிய சபை மட்டுமே அறியமுடியும். சபையை தவிற வேறு எவருமே அதை அறிவதில்லை அறிந்தால் தான (கைவிடபட்டதை) புலம்பல் வரும். இரகசிய வருகை முடிந்தவுடன் அதற்க்கு பிறகு தான் தாங்கள் கைவிடபட்டதை அறிந்து புலம்புவார்கள் என்றாலும் இது புலம்பல் அல்ல புலம்பலுக்கான ஆரம்பம். ஆனால் வெ.வி 1:7ல் சொல்லபடுவது புலம்பலின் உச்ச கட்டம். எனது புரிதல் இயேசுவின் இரண்டாம் வருகையில் (பகிரங்க வருகை) பூமியில் இரட்சிப்பின் திட்டம் முடிவுக்கு வந்திருக்கும். இரட்சிக்கபட கொடுக்கபடும் கால அவகாசம் பகிரங்க வருகைக்கு முன்பே முடிகிறது. இயேசுவின் பகிரங்க வருகைக்கு முன்பே இரட்சிக்கபடுகிறவர்கள் எடுத்துக்கொள்ளபடுவர் அல்ல இரத்த சாட்சியாக மரிப்பர். அவர் வருகையின் நேரத்தில் உயிரோடு இருக்கும் யாவரும் இரட்சிப்பை இழந்தவர்கள் அல்லது இரட்சிக்கபடாதவர்கள். எனவே தான் அவரை கண்ட யாவரும் புலம்புகின்றனர். அவர் வருகை இரட்சிக்கபட்டவனுக்கு புலம்பலை அல்ல மகிழ்ச்சியை தான் தரும். இதிலிருந்தே புலம்பும் இவர்கள் யார் என்பதை அறியலாம். தவறாயின் சரியானதை கற்று தாருங்கள்.

[12/16, 2:50 PM] Charles Pastor VT: இரகசிய வருகைக்கும் பகிரங்க வருகைக்கும் இடைபட்ட காலத்தில் இரட்சிப்பு இருக்கும். இது எனது புரிதல்.

[12/16, 2:51 PM] Darvin-ebin VT: இதுதான் உண்மையும் இதுபற்றி இன்னொருசமயம் பேசுவோம்

[12/16, 2:52 PM] Charles Pastor VT: இந்த இரட்சிபின் திட்டம் பகிரங்க வருகைக்கு சற்று முன் முடிவடையும். அந்த நேரத்தில் இரட்சிப்பு இருக்காது இதுவும் எனது புரிதல்.

[12/16, 4:22 PM] Elango: 🙏👍✍
அப்போஸ்தலர் 10:40-41
[40]மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.
[41]

*ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.*

[12/16, 4:23 PM] Elango: யோவான் 14:22-23
[22]ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, *நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன*❓❓❓ என்றான்.
[23]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

[12/16, 5:04 PM] Kankani VT: இருக்காது ...இருந்தால் வசன ஆதாரத்தை பதிவிடவும்

[12/16, 5:05 PM] Elango: உபத்திர காலத்தில், கைவிப்பட்ட மக்கள் இரட்சிக்கப்பட மாட்டார்களா பிஷப் ஐயா

[12/16, 5:18 PM] Elango: ரோமர் 11:25-27
[25]மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்;
*அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.*☝☝☝

[26] *இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்.* மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்;
[27]நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.

[12/16, 5:20 PM] Kankani VT: இரட்ச்பின் காலம் முடிந்த பின் எங்கிருந்து இரட்சிப்பு உண்டாகும்

[12/16, 5:21 PM] Elango: அப்படியென்றால் உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சியாக மரித்தவர்களுக்கு பரலோகம் கிடையாதா ஐயா.

[12/16, 5:22 PM] Kankani VT: இது உபத்திரவ காலத்தில் கைவிட பட்டவர்களுக்கு விராதமாக தனது முகத்தை திருப்புகிற இஸ்ரவேலைக்குறிக்கிறது

[12/16, 5:25 PM] Kankani VT: 26 இது மஹா உபத்திரவ காலத்தில் நடக்கும் இஸ்ரயேல் மக்களுக்கு மாத்திரம் கொடுக்க படுகிற இரட்சிப்பு...
புற ஜாதிகளின் இரட்சிப்பு வருகையின் முன்பே முடிவுக்கு வந்து விடுவோம்

[12/16, 5:25 PM] Kankani VT: அவர்கள் இரட்சிக்க பட்டவர்களே

[12/16, 5:28 PM] Kankani VT: இங்கே கைவிட பட்டவர்களே இரட்சிக்க பட்டவர்கள் தான்...ஏனென்றால் புறஜாதிகள் மத்தியில் கைவி பட்டவர்கள் என்று குறிக்கிற குறிக்கிற வார்த்தை கிறிஸ்த்தவர்களை குறிக்கிறது.

[12/16, 5:28 PM] Elango: இரட்சிப்பு உபத்திரவ காலத்தில் யூதர்களுக்காவது உண்டு தானே பிஷப் ஐயா

[12/16, 5:28 PM] Kankani VT: மஹா உபத்திரவ காலத்தில் நடக்கும்

[12/16, 5:30 PM] Elango: அப்படியென்றால் மகா உபத்திர காலத்தில் பரிசுத்த ஆவியானவர் பூமியில் இருப்பார் தானே

[12/16, 5:30 PM] Kankani VT: இருக்கமாட்டார்

[12/16, 5:32 PM] Kankani VT: மணவாட்டியாம் சபை இந்த பூமியில் இருக்கும் வரைதான் பரிசுத்த ஆவியானவர் பூமியில் இருப்பார்

[12/16, 5:32 PM] Elango: பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் இரட்சிப்பு எப்படி பிஷப் ஐயா

[12/16, 5:35 PM] Kankani VT: அவர் கொடுக்க பட்டது  புறஜாதிகளுக்காக

[12/16, 5:35 PM] Jeyaseelan VT: உபத்திரவகாலத்தில் யூதருக்கு இரட்சிப்பு👇👇
ரோமா;, Chapter 11
25. மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
26. இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;
27. நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.

உபத்திரகாலத்தில் இரட்சிக்கப்படும் புறஜாதியார்👇👇
11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 12 :11

[12/16, 5:38 PM] Jeyaseelan VT: உபத்திரவகாலத்தில் இரத்தசாட்சியாய் மரிப்பவர்கள்.....மற்றும் யூதர்கள் இரட்சிக்கப்படுவார்கள்....

[12/16, 5:41 PM] Jeyaseelan VT: சபை எடுத்துக்கொள்ளப்பட்டபிறகு...இரத்தசாட்சியாய் மரித்தால் தான்.....இரட்சிக்கப்படமுடியும்......

[12/16, 5:42 PM] Kankani VT: மீண்டும் முதல்லையே இருந்தா...
உஙகளுக்கு ஒரு கேள்வி இரகசிய வருகை என்று ஒன்று உண்டெண்றால் அப்பொழுது எடுத்து கொள்ள படுகிறவர்கள் யார்?

[12/16, 5:45 PM] Kankani VT: ⁉இந்த காரியம் இந்த குரூப்புக்கு புரிய வேண்டும் எனறால் இதை குறித்ததான கேள்வி பதிவிட்ட பின்    அடியேன் பேசின பதிவுகளை கேளுங்கள்

[12/16, 5:47 PM] Jeyaseelan VT: சபை எடுத்துகௌகொள்ளப்படும்.
மற்றவர்கள் உண்மையை உணருவார்கள்...ஆனால் கிருபையின்காலம் முடிவடைந்துவிடும்....
ஆகவே அவர்களின் கடைசிவாய்ப்பு இரத்தசாட்சியாய் மரிப்பதுதான்.....

[12/16, 5:48 PM] Kankani VT: அவர்கள் இரத்த சாட்சியாய் மரிப்பதர்க்கே காரணம் கைவிட படுவதால் தான்

[12/16, 5:49 PM] Jeyaseelan VT: ஆகவே சபையின் காலத்தில் வருகைக்கு ஆயத்தமாய் இருப்பது நல்லது.

[12/16, 6:03 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 9:6
[6] *அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போகும்.*
இரத்தசாட்சிக்கும், இந்த வசனமும் முரண்படுகிறதா

[12/16, 6:20 PM] Charles Pastor VT: ஜெகன் ஐயா கவனத்திற்க்கு கைவிடபடுவோரில் இரட்சிப்பை காத்து கொள்ளாத கிறிஸ்துவ கூட்டம் மட்டும் அல்ல உலகின் மற்ற மதத்தவர்களும் அதில் அடங்குவர். இரட்சிகப்படாமலே வேதாகமத்தை நன்கு அறிந்த நாத்திகரும், சன்மார்கரும் அக்காலத்தில் உண்மையை உணர்ந்து இரட்சிப்பை விரும்பி இரத்தசாட்சியாய் மரிக்க வாய்ப்பு உண்டு தானே. இஸ்ரவேலர் அதுவரை இரட்சிப்பை பெறவே இல்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

[12/16, 6:22 PM] Charles Pastor VT: பரிசுத்த ஆவி இஸ்ரவேருக்காகவும் அருளப்பட்டார் என்பதையும் அறியுங்கள். பேதுரு யாருக்கு ஊழியம் செய்தான் புறஜாதிக்கா? இஸ்ரவேலுக்கா? சபை வளர்ச்சியில் அநேக இஸ்ரவேருக்கும் பங்கு உண்டு அவர்கள் யாவரும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்களே

[12/16, 6:56 PM] Charles Pastor VT: மரணம் நேரிடுவதாயினும் 666 முத்திரையை பெறாதவர்களின் கூட்டத்ரில் மனந்திரும்பிய மற்ற மாதத்தார் இடம்பெறுவதில்லை என்பதை வேதம் கூறுகிறதா? விளக்கம் தாருங்கள்

[12/16, 6:56 PM] Charles Pastor VT: நீங்கள் எனக்கு அருகில் இருந்தால் கட்டாயம் சந்திப்பேன். (1மணி நேரத்திற்க்குள் பயண தூரம் இருக்க வேண்டும். ) ஏனென்றால் நாளை ஆயத்த நாள்

[12/16, 8:11 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 3:10-11
[10]என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால்,
*பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.*👍👍👍🙋♂🙋♂🙋♂✝✝👆🏼👆🏼👆🏼👆🏼

[11]இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.

[12/16, 8:14 PM] Elango: அந்திகிறிஸ்துவின் ஆட்சியில், இப்போது சுவிசேசம் அறிவிப்பது போல, அப்போது சுவிஷேசம் அறிவிக்கமுடியாது.
உபத்திரவ காலம் என்பது விழுந்து போன கிறிஸ்தவர்களுக்கு மனந்திரும்ப கொடுக்கப்பட்ட ஒரு காலம்.
- பிஷப் ஐயா.
👍🙏✍

[12/16, 8:19 PM] Elango: மீன் பிடிக்கும் பேதுருவை மனுசரை பிடிக்கும் மனிதனாக மாற்றினார், இப்படிப்பட்ட மனிதர்களுக்கே தன்னை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறார் ஆண்டவர்.
- Darvin ayya.
👍🙏✍
யோவான் 21:15-17
[15]அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
[16]இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
[17]மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

[12/16, 8:28 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 1 :7 - இல் *கண்கள் யாவும் காணும்* மற்றும் எபிரேயர் 9 :28 - இல் *தரிசனம்* இவை இரண்டும் ஒரே அர்த்தமா அல்லது வேற வேற அர்த்தமா❓ அல்லது வருகையின் வித்தியாசத்தை 👆🏼 காண்பிக்கிறதா❓
இரண்டும் வெவ்வேறு தரிசனங்கள்.
வெ.வி 1:7 பகிரங்க வருகை,  எபிரேயர் 9:28 - இரகசிய வருகை.
அன்று குத்தினவர்களை அல்ல, அவர்களுடைய சந்ததியான யூதர்களைதான் குத்தினவர்களும் அவரை காண்பார்கள் என்று வேதம் சொல்கிறது.
ஏசாயா 66:8-9
[8]இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? *ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ?* ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.
[9]பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
என்ற தீர்க்கதரிசனம், பகிரங்க வருகையில் நிறைவேறும்.
- கிருபா பாஸ்டர்.
👍🙏✍

[12/16, 8:45 PM] Elango: 👍👍
யோவான் 14:3
[3]நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, *நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.*

[12/16, 8:49 PM] Charles Pastor VT: இரகசிய வருகைக்கு பின்னான ஏழு வருடங்களை குறித்து எனக்கு மற்றுமொரு கண்ணோட்டமும் உண்டு

[12/16, 8:50 PM] Charles Pastor VT: அதை தெரிந்தவர்கள் தவறு என்றால் விவரியுங்கள்

[12/16, 8:51 PM] Apostle Kirubakaran VT: இந்த குழுவில் தேவ ரகசியம் வெளிப்படுகிறது
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

[12/16, 8:52 PM] Elango: இரகசிய மற்றும் பகிரங்க வருகையை குறித்த நம்முடைய கருத்துக்களை முன் வைப்போம்.
நம்மிடைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வேதத்தை இன்னும் ஆழமாக ஆராய்ந்து, கருக்கான சத்தியங்களை பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு வெளிப்படுத்தும் படியாக ஜெபத்தோடு அனைவரும் தியானிக்கலாம்.🙏😊

[12/16, 9:04 PM] JacobSatish VT: யாருக்கும் தெரியாம வருவதுதான் ரகசியவருகை.ஆனால் நாம் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.அப்படினா அது ரகசிய வருகையா?😇😇😇😇

[12/16, 9:06 PM] Elango: அப்படின்னா நீங்க பகிரங்க வருகையையாவது பேசுவோம்🙏😀

[12/16, 9:08 PM] Charles Pastor VT: தானியேலின் 70 வாரங்கள் எருசலேமின் அலங்கம் கட்டுவதிலிருந்து (நெகேமியா காலம்) மேசியா சங்கரிக்கும் வரை 69 வாரங்கள் செல்கிறது. கடைசி வாரமாகிய 70ஆம் வாரம் உடனே தொடங்காமல் சபையின் காலம் தொடங்குகிறது. 69ஆம் வாரத்திற்க்கும் 70ஆம் வாரத்திற்க்கும் இடைப்பட்ட காலம் சபையின் காலம் ஆகும். இந்த சபையின் காலத்தில் இஸ்ரவேலரை முக்கியத்துவம் படுத்தவில்லை தேவனும் வேதமும். அதேபோல 69 வாரங்களில் புறஜாதியை பற்றி முக்கியத்துவம் கொடுக்கவில்லை தேவனும் வேதமும். 70ஆம் வாரம் என்பது புறஜாதியாருக்குரியது அல்ல அது இஸ்ரவேலருக்குரியது. இந்த 70ஆம் வாரத்தில் (அந்திகிறிஸ்துவின் 7ஆண்டு) புறஜாதியாருக்கு சம்மந்தம் இல்லை. அதில் புறஜாதியார் நிலையை (இதில் கைவிடபட்ட கிறிஸ்தவரும் அடங்குவர்) ஒரு பொருட்டாக என்ன வாய்பில்லை. 69வாரங்களில் புறஜாதியாரின் நிலை எப்படி இருந்ததோ அப்படியே 70ஆம் வாரத்திலும் இருக்கும். இந்த 70ஆம் வாரத்தில் இரட்சிப்பு புறஜாதியாருக்கு அல்ல இஸ்ரவேலருக்கே.

[12/16, 9:11 PM] Apostle Kirubakaran VT: மத்தேயு 13:11-17,23,34-35,51-52
[11]அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
[12]உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
[13]அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
[14]ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
[15]இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
[16]உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
[17]அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[23]நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.
[34]இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.
[35]என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
[51]பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
[52]அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.

[12/16, 9:11 PM] Charles Pastor VT: இதை குறித்த விமர்சனங்களை பதிவிடுங்கள்

[12/16, 9:12 PM] Isaac Samuel Pastor VT: It's one of the view that's all

[12/16, 9:13 PM] Isaac Samuel Pastor VT: It's one of the view that's all......but what bible teaches....we can search more

[12/16, 9:17 PM] Apostle Kirubakaran VT: தேவ ரகசியம் தேவ பாதத்தில் வீழ்ந்து கிடக்கிறவர்களுக்கு விலங்கும்.
1 கொரிந்தியர் 2:9-12
[9]எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
[10]நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
[11]மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
[12]நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
சங்கீதம் 25:14
*கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்*
மத்தேயு 13:23
*நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.*
மத்தேயு 13:11
*அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை*கொலோசெயர் 1:25-29
[25]ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,
[26]உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
*புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்;* கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
[28]எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்.
[29]அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

[12/16, 9:18 PM] Apostle Kirubakaran VT: 1 பேதுரு 1:10-12
[10]உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்;
[11]தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
[12]தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.

[12/16, 9:20 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 45:11
[11]இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய *கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்;* என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்.

[12/16, 9:27 PM] Apostle Kirubakaran VT: சதீஷ் எப்படி இருக்கீங்க?
ஊழியம் எப்படி இருக்கு ?
ரொம்ப நாளாச்சு பார்த்து

[12/16, 9:30 PM] Charles Pastor VT: எனது இரண்டு கண்ணோட்டத்தையும் வைத்திருக்கிறேன். இதில் என் முடிவு சபையின் காலம் முடியும் போதே எனக்கும் இந்த மாம்ச தேகத்திலிருந்து முடிவு பெற பிரயாசபடுவது ஆகும். 70ஆம் வாரம் எனக்கு தூரம் இருப்பதாக... அது எனக்குரியது அல்ல.. அதிலே பிரவேசியாமல் இருப்பதற்க்கு பிரயாசபடுவது ஆகும்.

[12/16, 9:34 PM] Apostle Kirubakaran VT: உபாகமம் 33:2-3
[2]கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
[3]மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய *பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்*
எபேசியர் 3:10-11,20-21
*உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக,*
[11]இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
[20]நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
[21]சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
தேவ பாதத்தில் வீழ்ந்து கிடக்கும் மனிதன் தேவனின் ரகசியம் அவனுக்கு வெளியரங்கம் .
என்னுடைய தனிப்பட்ட கருத்து
ஒரு தேவ மனிதன் சொத்து
1. வேதம்.
2. தேவ பாதம்
இவைதான்