Type Here to Get Search Results !

இரட்சிக்கபட நான் என்ன செய்ய வேண்டும்❓

[11/28, 10:22 AM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 28/11/2016* ✝
1.இரட்சிப்பு என்றால் என்ன❓

2.இரட்சிக்கபட நான் என்ன செய்ய வேண்டும்❓

3.இரட்சிக்கபடாமல் ஞானஸ்நானம் எடுத்திருந்தால் என்ன செய்வது❓

4.கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இரட்சிப்பு எப்படி கிடைக்கிறது❓

5.சுவிஷேசம் கேட்டவுடன் இரட்சிப்பு வருமn❓பெந்தேகோஸ்தே நாளில் நடந்தது போல.இன்று ஏன் இது நடைபெறவில்லை

6.இரட்சிப்பின் திட்டத்தில் தேவனுடைய பங்கு என்ன❓

7.தலைவிதியும் தேவ சித்தமும் ஒன்றா❓இரட்சிப்பு தேவ சித்தபடி தானா❓

*வேதத்தை தியானிப்போம்*

[11/28, 10:45 AM] Joseph Karthikeyan VT: 12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4 :12

[11/28, 10:51 AM] Joseph Karthikeyan VT: 16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன், முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. ரோமர் 1 :16

[11/28, 10:55 AM] Joseph Karthikeyan VT: ☝நாம் இரட்சிக்கப்பட விசுவாசம் மிகவும் தேவையாய் இருக்கிறது

[11/28, 10:57 AM] Jeyanti Pastor: பாவ, சாப, கட்டுகளிலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் விடுவிக்கப்பட்டு,  நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளும் தகுதியே இரட்சிப்பாகும்.

[11/28, 11:07 AM] Sam Jebadurai Pastor VT: இரட்சிப்பு என்றால் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை பின்பற்ற தீர்மானம் எடுப்பது.

[11/28, 11:08 AM] Sam Jebadurai Pastor VT: பழைய பாவங்களை செய்ய மாட்டேன் என பாவங்களை அறிக்கை செய்து விட்டு விட்டு இயேசு காண்பித்த பாதையில் நடப்பது இரட்சிப்பு.

[11/28, 11:09 AM] Sam Jebadurai Pastor VT: இரட்சிப்பு என்பது கிறிஸ்துவை மட்டும் தெய்வமாக கொண்டு வேதத்தின்படி நடப்பது...

[11/28, 11:22 AM] Samson David Pastor VT: பாவத்தை உணர்ந்து,
அதனை அறிக்கையிட்டு,
மனம் திரும்பி,
பாவத்திற்கு மரித்து,
நீதிக்கு பிழைக்கிறேன் என்ற அர்ப்பணிப்போடு "மறுபடி பிறத்தலே", இரட்சிப்பு.
🙏

[11/28, 11:26 AM] Sam Jebadurai Pastor VT: கிறிஸ்தவ குடும்பத்தில் சிறு வயதிலிருந்தே இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டு வளரும் குழந்தைகளுக்கு இரட்சிக்கபட்ட நாள் என்று தனியாக ஒருநாள் உண்டா?

[11/28, 11:37 AM] Elango Gopal: 16 *விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்,* விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
மாற்கு 16 :16

Shared from Tamil Bible 3.7

[11/28, 11:38 AM] Elango Gopal: 8 *இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது, இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.*
ரோமர் 10 :8
9 என்னவென்றால், *கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.*
ரோமர் 10 :9
10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
ரோமர் 10 :10
11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
ரோமர் 10 :11

Shared from Tamil Bible 3.7

[11/28, 11:41 AM] Joseph Karthikeyan VT: நான் இட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்கிறதான உனர்ந்துகொள்ளும் பக்குவத்தை அடையும்போது அதை சுதந்திரத்து கொள்கின்றனர்.மற்றபடி தேவனுடைய கரம் எப்பொழுதும் அவர்கள் மீது இருப்பதால் குறிப்பிட்ட நாள் ஒன்று இல்லையென்பது எனது கருத்தாகும்

[11/28, 11:44 AM] Elango Gopal: *நான் இட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்கிறதான உனர்ந்துகொள்ளும் பக்குவத்தை அடையும்போது அதை சுதந்திரத்து கொள்கின்றனர்.*👍👍👍👍👍✝✝✝✝✍✍❤❤

மற்றபடி தேவனுடைய கரம் எப்பொழுதும் அவர்கள் மீது இருப்பதால் குறிப்பிட்ட நாள் ஒன்று இல்லையென்பது எனது கருத்தாகும்

[11/28, 11:48 AM] Samson David Pastor VT: உண்டு.
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தாலும்,
கிறிஸ்தவத்தின் வழியில் பெற்றோரால் வளர்க்கப்பட்டிருந்தாலும்,
ஒவ்வொருவரும் மனம் திரும்பி, மறுபடி பிறப்பது வேதத்தின்படி அவசியமே.
(கிறிஸ்தவ பிள்ளைகளுக்குதான் இன்றைக்கு இரட்சிப்பு அவசியம் தேவைப்படுகிறது 😥)

[11/28, 11:58 AM] Joseph Karthikeyan VT: அணைத்து குழந்தைகளையு தேவன் ஒன்றாகவே பார்க்கிறார்

[11/28, 12:18 PM] Joseph Karthikeyan VT: 3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18 :3.  இந்த வசனத்தின்படி குழந்தைகள் ப.ராஜ்ஜியத்திற்கு சொந்தமானவர்கள் என்பது தெளிவாகிறது.சிறு வயதிலேயே மறித்துபோகும் குழந்தை இரட்சிப்பபில்லை எனில் எங்கே செல்லும்.

[11/28, 12:33 PM] Samson David Pastor VT: பொதுவாக நான் கிறிஸ்தவ குடும்பத்தின் வாலிப பிள்ளைகளைக் குறித்து எழுதியுள்ளேன் Bro.

[11/28, 2:05 PM] Joseph Karthikeyan VT: கிருஷ்தவ குடும்பத்தில் பிறந்திருப்பினும் தனிப்பட்ட முறையில் தேவனோடு கொன்டிருக்கும் உறவின் அடிப்படையிலேயே ஒருவர் இரட்சிப்பை பெற முடியும்.4ம் கேள்விக்கான எனது கருத்து.

[11/28, 2:14 PM] Sam Jebadurai Pastor VT: மூன்று விதங்களில் இரட்சிப்பு ஒரு நபரில் உண்டாகலாம்.
*1.ஒரே நாளில் மனந்திரும்பி நடப்பது*
Acts            9:5-6 (TBSI)  "அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்."
"அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்."
*2.படிப்படியாக நடப்பது(குடும்பத்தின் வழியாக)*
2 Timothy       1:5 (TBSI)  அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
*3. ஒருவருக்கு தெரியாமல் நடப்பது*

[11/28, 2:15 PM] Joseph Karthikeyan VT: 8 இரட்சிப்பு கர்த்தருடையது, தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.) சங்கீதம் 3 :8.  6ம் கேள்விக்கு

[11/28, 2:29 PM] Tamilmani VT: *இரட்சிபபை பெறுவது எப்படி?*
_கிறிஸ்தவனாக ஆவது எப்படி?_
_இரட்சிப்பை பெறுவது எப்படி?_
_கிறிஸ்தவன் என்பவன் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவனாக
இருக்க வேண்டும். அவரை
விசுவாசிக்க வேண்டும்.
கிறிஸ்தவனா என அறிய
வேதாகமம் தெளிவான பதிலை தருகிறது._
_ஒரு மனுஷன் இயேசு கிறிஸ்துவிடம் கேட்கிறான்  நித்ய ஜீவனை பெறுவது எப்படி என்கிறான்._ _அதற்க்கு இயேசு கிறிஸ்து "மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொல்லி விவரித்து, தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3: 16). இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் நித்ய ஜீவனை பெறுவான்._
_இயேசு கிறிஸ்துவை எப்படி விசுவாசிப்பது?_
_வேதம் இதற்க்கும் பதில் தருகிறது.
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்._ (ரோமர் 10: 9)
_விசுவாசத்தில் இரண்டு பகுதிகள் உள்ளது, முதலாவது, இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொள்வது. அவர் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து சிலுவையிலே மரித்து, நாம் பரலோகம்
செல்ல வழி அமைத்தார்.
இரண்டாவது, அவர்  மரித்து உயிரோடு எழுந்தார் என்று உன் இருதயத்திலே விசுவாசிப்பது. அவர் சிலுவையிலே மரித்தார், ஆனால் அவர் மறுபடியும் உயிரோடு வந்தார், பல பேர்களுக்கு தரிசனம் ஆனார். பல பேர்கள் பார்க்க பரலோகத்திற்க்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டார்._
_கிறிஸ்தவனாக இப்பொழுதே ஜெபியுங்கள் :_
_கீழே இருக்கிற வார்த்தைகளைச் சொல்லி ஜெபித்து நித்ய ஜீவனை பெற்றுக்கொள்ளுங்கள்._
_கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே,
நான் பாவி என்பதை ஒத்துக்கொள்கிறேன். என்னையே நான் இரட்சிக்க முடியாது என்பதை நான் அறிவேன் கர்த்தாவே,  நீர் என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததற்க்கு நன்றி ஆண்டவரே!
நீர் எனக்காகவே மரித்தீர் என விசுவாசிக்கிறேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆண்டவரே!
உம்முடைய நிபந்தனையற்ற தியாகத்தை என் சார்பாக பெற்றுக்கொண்டேன். உமக்காக நான் செய்யப்போகிற என்னில் சிறந்த எல்லாவற்றையும் உம்மிடத்தில் வழங்குகிறேன். என் வாழ்க்கை கதவை நான் திறந்து வைக்கிறேன். உம்மை நான் முழுமையாக நம்புகிறேன் கர்த்தாவே!  விசுவாசத்தினாலே உம்மை என் சொந்த இரட்சகராகவும் என் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கிறேன்.
என் பாவங்களை மன்னித்தற்க்கு நன்றி கோடி கர்த்தாவே! எனக்கு நித்ய ஜீவனை தருவதற்க்கும் எண்ணிலா நன்றி கர்த்தாவே! ஆமென்._
_ஜெபித்ததால் கிறிஸ்தவன் ஆகி விட்டீர்களா?_
_வேதம் சொல்லுகிறது உங்களுக்கு தெரியும் நித்ய ஜீவன் இருக்கிறது என்று. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்._ (யோவான் 5: 13)
_ஆம் நான் ஜெபித்தேன்._
_நீங்கள் இன்று இரட்சிக்கப்பட்டீர்கள். எப்படி?_
_கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்;
இது உங்களால் உண்டானதல்ல,
இது தேவனுடைய ஈவு;
ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;_
(எபேசியர் 2: 8-9)

[11/28, 2:33 PM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 28/11/2016* ✝
1.இரட்சிப்பு என்றால் என்ன❓
2.இரட்சிக்கபட நான் என்ன செய்ய வேண்டும்❓
3.இரட்சிக்கபடாமல் ஞானஸ்நானம் எடுத்திருந்தால் என்ன செய்வது❓
4.கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இரட்சிப்பு எப்படி கிடைக்கிறது❓
5.சுவிஷேசம் கேட்டவுடன் இரட்சிப்பு வருமா❓பெந்தேகோஸ்தே நாளில் நடந்தது போல இன்று ஏன் இது நடைபெறவில்லை❓
6.இரட்சிப்பின் திட்டத்தில் தேவனுடைய பங்கு என்ன❓
7.தலைவிதியும் தேவ சித்தமும் ஒன்றா❓இரட்சிப்பு தேவ சித்தபடி தானா❓
*வேதத்தை தியானிப்போம்*

[11/28, 2:47 PM] Tamilmani VT: ☄☄☄☄☄☄☄☄☄☄☄
*நீங்கள் இரட்சிப்புகென்றே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்*
_தேவன் மனிதனை எதற்க்காக அழைத்தார்?_
*இயேசு கிறிஸ்து மூலம் அழைத்தார்*
_மத்தேயு 9 : 13  பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்._
*சுவிஷேசம் மூலம் அழைத்தார்*
_2 தெசலோனிக்கேயர் 2 : 14_  _நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்._-
*பரிசுத்த ஆவியானவர் மூலம் அழைத்தார்*
_ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்._
(வெளி. விசேஷம் 22 :17)
_தேவன் உங்களை தேர்ந்து எடுத்தது இரட்சிப்பை பெறுவதற்க்காக. சுவிஷேசத்தை பயன்படுத்தி உங்களை தேர்ந்தெடுத்தார். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதே இயேசு கிறிஸ்துவின் மகிமையை பகிர்ந்துக்கொள்ளவே._-

[11/28, 3:10 PM] Angel-Raja VT: மறுபடி பிறத்தல் என்பது என்ன??
ஞானஸ்நானம் எடுப்பதா???

[11/28, 3:12 PM] Ebi Pastor TN: 👍 நல்ல  கேள்வி

[11/28, 3:19 PM] Angel-Raja VT: உண்டு.
16 *விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்,* விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
மாற்கு 16 :16
👆🏻👇🏻👆🏻👇🏻👆🏻
💥மறுபடி பிறத்தல் 💥
➡ இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் *ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
 யோவான் 3 :5
📢ஜலத்தினால் பிறப்பது ஞானஸ்நானத்தை குறிக்கிறது.
➡கொலோசெயர் 2:12
*ஞானஸ்நானத்திலே* அவரோடே கூட *அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும்,* அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட *எழுந்தவர்களாகவும்* இருக்கிறீர்கள்.
அடக்கம் - செத்து
எழுந்து - உயிர்பெற்று.
👆🏻👇🏻👆🏻👇🏻👆🏻👇🏻
➡மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல, *அவர் பரிசுத்த ஆவியினாலும்* அக்கினியினாலும் உங்களுக்கு *ஞானஸ்நானம் கொடுப்பார்.*
மத்தேயு 3 :11
📢ஆவியினால் பிறப்பது - பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுவது.
👆🏻👇🏻👆🏻👇🏻👆🏻👇🏻
➡அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி; யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான். நீங்கள் சில நாளுக்குள்ளே *பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.*
 அப்போஸ்தலர் 1 :4
👆🏻👇🏻👆🏻👇🏻👆🏻👇🏻
 அவர்களெல்லாரும் *பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு,* ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
 அப்போஸ்தலர் 2 :4

[11/28, 3:36 PM] Sam Jebadurai Pastor VT: நீங்கள் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவரா?

[11/28, 3:39 PM] Sam Jebadurai Pastor VT: இன்று கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் குறிப்பிட்ட வயதுவரை உலகத்தை அனுபவித்து பாவத்திலே வாழ்ந்து பின்னர் ஒரு நற்செய்தி கூட்டத்திலே இரட்சிப்பு என்ற அனுபவத்தை பெற வேண்டும் என்பது போல போதனைகளும் சாட்சிகளும் உள்ளது. இது தவறு குழந்தைகள் பாவத்திலே விழும் முன்பே அவர்களை ஆதாயப்படுத்த வேண்டும்.

[11/28, 3:41 PM] Sam Jebadurai Pastor VT: ஒரு மனிதனுக்கு எத்தனை வயது தீர்மானம் எடுக்க சரியான வயது?
நீங்கள் கூறுவது எல்லாம் அவன் பாவத்திலே விழுந்து பின்னர் எழ வேண்டும் என்பதாக உள்ளது.
குழந்தை பருவத்திலே நாம் அவர்களை சரியாக ஆதாயபடுத்தவில்லை என்பது உண்மை

[11/28, 3:42 PM] Sam Jebadurai Pastor VT: நேற்று ஒரு சகோதரர் கேள்வி கேட்டாரே..அவரை எங்கே
[11/28, 3:49 PM] Sam Jebadurai Pastor VT: சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என பழைய ஏற்பாட்டு முழுவதும் பார்க்கலாம்.
வேதாகமம் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் அதை தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க மறந்ததே இன்று குழந்தைகள் மறுபிறப்பு என்பது பாவத்திலே விழுந்து பின்னர் எழ வேண்டும் என விழக்காரணம்.

[11/28, 3:52 PM] Sam Jebadurai Pastor VT: குழந்தைகளுக்கு ஆண்டவரை காட்ட வேண்டிய பெற்றோர்கள் ஆண்டவரை காட்டுவதற்கு பதிலாக குருமார்களை, ஞாயிறு பள்ளி ஆசிரியர்களை, போதகர்களை  காட்டி அவர்களை நல்வழிப்படுத்த நினைப்பது தவறு

[11/28, 3:53 PM] Sam Jebadurai Pastor VT: சிறு வயதிலிருந்தே கிறிஸ்துவுடன் நடக்கும் குழந்தைகளுக்கு இரட்சிப்பு  என்பது அனுதின அனுபவம் அது ஒரு நாளில்  நடப்பது இல்லை

[11/28, 3:57 PM] Sam Jebadurai Pastor VT: பாரம்பரிய ஆவிக்குரியவர்கள் தொகை இன்று பெருகி விட்டது. குழந்தைகளுக்கு ஜெபம் வேதவாசிப்பு மற்றும் சபையின் ஐக்கியம்  இவைகளை பாரம்பரிய அனுசரனைகளாக கற்று கொடுக்கும் பாரம்பரிய ஆவிக்குரியவர்கள் இத்தகைய கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு உறவாக கற்றுக் கொடுக்காதது இன்றைய இளம் தலைமுறை சீரழிவுக்கு காரணம்.

[11/28, 3:58 PM] Sam Jebadurai Pastor VT:எல்லோருக்கும் இரட்சிப்பு ஒரேநாளில் நடப்பது இல்லை...

[11/28, 4:46 PM] Sam Jebadurai Pastor VT: ஏதோ காரணத்தினால் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்தவர்கள் பின்பு இரட்சிக்கபட்டால் திரும்ப ஞானஸ்நானம் எடுக்க அவசியமில்லை என்பது என் கருத்து
[11/28, 4:49 PM] JacobSatish VT: 10 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான், நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
யோவான் 13
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/28, 4:51 PM] Sam Jebadurai Pastor VT: எல்லோருக்கும் சுவிஷேசத்தை கேட்டவுடன் இரட்சிப்பு வருவது இல்லை. சிலர் பக்குவப்பட சிலர் தீர்மானிக்கும் நிலைக்கு வர நாட்கள் வருடங்கள் ஆகலாம். பல்வேறு சவால்களை இன்றைய சுவிஷேசம் அறிவிப்பவர்கள் சந்திக்கின்றனர். ஆகவே எல்லா இடங்களிலும் பெந்தேகோஸ்தே நாளிலே நடந்தது நடக்கவில்லை என்பது தவறு

[11/28, 4:54 PM] JacobSatish VT: 30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்,எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
ரோமர் 8
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/28, 4:55 PM] JacobSatish VT: என்ன குழப்பம் குமார் பிரதருக்கு

[11/28, 4:57 PM] Sam Jebadurai Pastor VT: தேவ சித்தம் அல்லது தேவ முன்குறித்தல் விதி அல்ல..

[11/28, 4:57 PM] Sam Jebadurai Pastor VT: *தலைவிதி

[11/28, 4:58 PM] Kumar VT: இரட்சிக்க பட முன் குறித்து..  ஏன்.

[11/28, 4:58 PM] JacobSatish VT: 👆👆👆👆 புரியலை

[11/28, 5:17 PM] Samson David Pastor VT: உள்ளான மனிதன் விரும்பினால் எடுக்கலாம்.
இரட்சிப்பிற்கு முன்பே துணிகரமாகவோ அல்லது அறியாமையினாலோ எடுத்து விட்டோமே என்கிற குற்ற உணர்விலிருந்து விடுதலை ஆகலாம்.

[11/28, 5:18 PM] Sam Jebadurai Pastor VT: கட்டாயம் இல்லை என்பது தான் எனது கருத்தும்

[11/28, 6:24 PM] Tamilmani VT: *தேவ சித்தம் - விதி என்ன?*
_தேவன் நம் வாழ்விக்குரிய தனிப்பட்ட சிந்தனையை நம்மேல் வைத்திருக்கிறார். உதாரணமாக, ஒரு ரட்சிக்கப்பட்ட பெண்ணிற்க்கோ ஆணிற்க்கோ திருமண விசயத்தில் மாப்பிள்ளை - பெண்ணை நிர்ணயம் செய்திருப்பார். நாம் தே சித்தம் தேடும்போது காட்டுவார். நாம் தேடாமல் வேறு ஒருவரை தேடும்போது உணர்த்துவார். இதில் நம் விதியை விட அவர் சித்தமே மோலோங்கும். இப்படியே எல்லா விசயங்களுக்கும். சித்தமும் விதியும் இவையே._
ஒரு சகோதரி கர்த்தரிடம் அண்டாமலே விலகி சபைக்கு வருவது போவது என்ற அடிமட்ட நிலையிலேயே இருந்திருக்கிறார். கர்த்தர் அந்த மகளைப்பற்றி ஊழியக்காரரிடம்
“அந்த மகள் ஒருவனால் கெடுக்கப்பட்டிருக்கிறாள். அதன் வேதனையில் அப்படி இருக்கிறாள். மகளிடம் சொல்லு நான் புதிய சுத்தமான இருதயத்தை தருகிறேன். இப்போது அவள் ஒரு பையனை திருமணம் செய்ய நினைத்திருக்கிறாள். வேண்டாம் என்றுச்சொல். திருமணம் செய்தால் வாழ்க்கை துன்பமாகவே இருக்கும் என்றுச்சொல்” என்றார். ஊழியக்காரர் அழைத்து நீ ஒருவனால் கெடுக்கப்பட்டிருக்கிறாய் என கர்த்தர் சொல்லுகிறார் என சொல்ல ஆரம்பித்தவுடனே அந்த சகோ 20 நிமிசத்திற்க்குமேல் அழுதிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டப்பிறகு ஊழியக்காரர் ஜெபித்தார். கர்த்தர் அபிஷேகத்தை பொழிய அவள் இருதயம் புதிதாவதை உணர்ந்திருக்கிறார். மனதிலே பெரிய சந்தோஷம். புதிய மனுஷியானாள். அல்லேலூயா.
இன்று கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாய் வாழ்கிறார்.
*கீழே உள்ள வசனங்களை படியுங்கள்,  அவை இருபுறம் குருக்குள்ள பட்டயமும் ஆவியையும் ஆத்மாவைவையும் பிரிக்க வல்லது. இதைப்படித்து உங்கள் மனம் வசனத்தை விட்டு பிடிக்காமல் தாண்டினால் உங்களை நீங்கள் ஆராந்து பார்க்க வேண்டியிருக்கும். விதி சம்பூரணமாக முடியும்.*
_நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே._
(எரேமியா 29 :11)
_குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை._
(ஆபகூக் 2 :3)
_கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார், கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது, உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக._
(சங்கீதம் 138 :8)
_மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்._
(கலாத்தியர் 6 :7)
_அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்._
(ஏசாயா 55 :11)
_தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்._
(ரோமர் 8 :29)
_கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்._
(எரேமியா 17 :10)
_ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்._
(எபேசியர் 2 :10)
_அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்._
(ரோமர் 8 :28)
_உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி, அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்._
(நீதிமொழிகள் 16 :3)
_அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன், என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,_
(ஏசாயா 46 :10)
_உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்._
(நீதிமொழிகள் 19 :20)
*_உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்._*
அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
(1 கொரிந்தியர் 2 :7- 9)
நீ உத்தமனை நோக்கி செம்மையானவனைப் பார்த்திரு, அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
(சங்கீதம் 37 :37:37)
_தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்._
(1 தெசலோனிக்கேயர் 5 :9)

[11/28, 6:33 PM] Ebi Pastor TN: இரட்சிக்கவே படாமல் ஞானஸ்நானம் என்ற  ஒரு முழுக்கை  எடுத்திருந்தால்
அவர் இரட்சிக்கப்பட்ட பின்னர்  ஞானஸ்நானம்  ( இதுதான்  ஞானஸ்நானம் ) பெறுவது அவசியம்

[11/28, 6:35 PM] Immanuel VT: இதில் எது தேவசித்தம்?
 விதி? அவள் கெடுக்கப்பட்டதா? கட்டிய மாப்பிள்ளை ஏமாற்றப்பட்டதா?

[11/28, 6:35 PM] Ebi Pastor TN: மாற்கு 16:16
[16]விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

👆 முதலில்  இரட்சிப்பிற்கேற்ற விசுவாசம்
அப்புறம்தான்  ஞானஸ்நானம்

[11/28, 6:38 PM] Ebi Pastor TN: நம்மைக் குறித்த ஆண்டவருடைய  சித்தமென்பது இரண்டு வகையில்  உண்டு  அதை நன்றாக  கவனிக்க வேண்டும்
1. தேவனுடைய பரிபூரண  சித்தம்.
2. அனுமதிக்கப்பட்ட  தேவ சித்தம்

[11/28, 6:42 PM] Ebi Pastor TN: எ.கா
1. தாவீது பட்சேபாளிடத்தில் பாவம் செய்திருக்கக் கூடாது  இது தேவனுடைய பரிபூரண  சித்தம்.
2. மனந்திரும்பும்போது  ஆண்டவர் தாவீதையும் பட்சேபாளையும் ஏற்றுக்கொண்டு சாலமோனையும் அவன் சந்ததியில்  கிறிஸ்து பிறக்க தேவன்  சித்தங்கொண்டது அனுமதிக்கப்பட்ட தேவசித்தம்

[11/28, 6:43 PM] Ebi Pastor TN: தலைவிதி என்று  ஒன்றுமில்லை
மனிதனுடைய இயலாமையைதான் பெரும்பாலும்  தலைவிதி என்கின்றனர்  உலகத்தார்

[11/28, 6:44 PM] Apostle Kirubakaran VT: ரோமர் 11:22
[22]ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.

[11/28, 6:51 PM] Ebi Pastor TN: சுவிசேஷம் கேட்கும்போது அவனுக்கு  இரட்சிப்பிற்கேற்ற விசுவாசத்தைதான் தேவன் அவனுக்குள் உருவாக்குகிறார்.
அந்த  தேவநடத்துதலுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும்போதுதான் அவன் இரட்சிப்படையும் வாய்ப்பைப் பெறுகிறான்.

ரோமர் 10:9-10
[9]என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
[10]நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

[11/28, 7:12 PM] Tamilmani VT: நாமே நம் வழியை தேர்ந்தெடுப்பது தேவ சித்தம் அல்ல. கர்த்தரிடத்தில் அண்டி வேண்டி பெற்று செய்வது தேவ சித்தம்.  கெடுக்கப்பட்டதால் அவள் உபத்திரவப்பட்டாள். கர்த்தர் புதிய வாழ்வு தந்தார். வேதத்திலே இஸ்ரவேலர்கள் கோத்திரத்தின் சகோதரி தீனாள் கூட கெடுக்கப்பட்டாள்.
 *கட்டிய மாப்பிள்ளை கர்த்தர் கொடுத்த மாப்பிள்ளை.* புதிய ஆவி புதிய இருதயம் தந்தவர் கர்த்தர். குற்ற உணர்ச்சியில்லாத புதிய மனசு.

[11/28, 7:39 PM] Ebi Pastor TN: தேவனருளும் வாழ்க்கை  துணையைத் தேடி அவரை மணமுடிப்பது  தேவசித்தமாகும்
தேவனுக்கு  விருப்பமில்லாத ஒருவரை தனக்கு  பிடித்ததால் திருமணம் செய்து கொண்டார் பின்னாலில்  மனவருந்தினாலும் அந்த  நபரை தள்ளி விடாமல் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கும்படி தேவகிருபையை நாடும்பொழுது தேவன் அவர்கள்  இருவரையும் ஆசீர்வதித்தாரென்றால் அது அனுமதிக்கப்பட்ட தேவசித்தமாகும்

[11/28, 7:40 PM] Ebi Pastor TN: தீமையை நன்மையாக மாற்றும் தேவனை புரிந்து கொள்ளும் நல்ல உள்ளம்  நமக்கு  அவசியம்

[11/28, 7:48 PM] Kumar VT: அதுவே இல்லையெனில் ❓❓❓⁉

[11/28, 7:54 PM] Ebi Pastor TN: இரட்சிப்பில் தேவனுடைய பங்கு
1. சுவிசேஷகர்களை நம்மிடத்தில்  அனுப்புகிறார்.
மத்தேயு 28:19-20.
2. அந்த சுவிசேஷ வார்த்தைகளை  விசுவாசிக்கும்படி அவர் நம்முடைய  இருதயத்தை  திறக்கிறார்.
அப்போஸ்தலர்16:14

3. அவன் தன் வாயினால்  அறிக்கை  செய்ய அவனை  வழிநடத்துகிறார்.
1 யோவான் 4:2

4. அவனைத் தன் பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார்.
யோவ1:12

5.  அவன் பெற்ற  இரட்டிப்பு  அவனுக்கு நிரந்தரமாக தமது ஆவியினால் அவனை முத்திரையிட்டு  உறுதிப்படுத்துகிறார்.

எபேசியர் 1:13
[13]நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

[11/28, 7:56 PM] Ebi Pastor TN: 1 கொரிந்தியர் 7:11-14
[11]பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.
[12]மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.
[13]அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.
[14]என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.

[11/28, 7:56 PM] Sam Jebadurai Pastor VT: பூரண சித்தத்தின்படி ஒருவரை நான் மணம் முடிக்க வேண்டும். அந்த நபர் எனக்கு பதில் மற்றொருவரை திருமணம் செய்து விட்டால் எனக்கு பூரண சித்தம் நடக்கவில்லையே.
1. இங்கே எனது தவறு ஏதுமில்லையே ஆனால் நான் தேவ ஆசிர்வாதத்தை  இழக்க வேண்டுமா?
2.நான் திருமணம் செய்யும் நபர் இன்னோருவரின் பூரண சித்தம் என்றால் நான் பாவம் செய்கிறேனா?
விளக்கம் தரவும்

[11/28, 7:56 PM] Ebi Pastor TN: இந்த வசனம்  அனுமதிக்கப்பட்ட தேவசித்தத்தைக் குறித்தே கூறுகிறது

[11/28, 7:57 PM] Ebi Pastor TN: 2 கொரிந்தியர் 6:14-17
[14]அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
[15]கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
[16]தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே,
[17]ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

[11/28, 7:58 PM] Ebi Pastor TN: இந்த வசனம் தேவனுடைய பரிபரிபூசித்தத்தைக் கூறுகிறது

[11/28, 7:59 PM] Ebi Pastor TN: பரிபூரண சித்தம்

[11/28, 8:02 PM] Kumar VT: வெறும் திருமண காரியத்திற்கு மட்டும்  ஞானஸ்நானம் எடுத்து  பிறகு கஷ்டபடுவது சரியா.... விளக்கம் அளியுங்கள் ஐயா....

[11/28, 8:03 PM] Sam Jebadurai Pastor VT: எனக்கு பதில் தரவும்
[11/28, 8:03 PM] George Whatsapp: சாலமோன் பிறப்பு தேவனால் முன் குறிக்கபட்டதா கருவில் தோன்றும் முன்பே உன்னை அறிந்துருக்கிறேன் என்ற தேவ வார்த்தை யாருக்கு சொல்லபட்டதோ அவருக்கு மட்டுமா இல்லை அனைவருக்குமா ??? பாஸ்டர் விளக்கம் தேவை

[11/28, 8:04 PM] Sam Jebadurai Pastor VT: எனக்கு பதில் தரவும்

[11/28, 8:11 PM] Ebi Pastor TN: திருமணத்திற்காக ஞானஸ்நானம் என்ற முழுக்கை புரியாமல்  பெறுவது ஞானஸ்நானம்  ஆகாது
அவர் அடிப்படை  விசுவாசம் பெற்றுப் பெறுவதே  ஞானஸ்நானம்  ஆகும்

ஒரு நபர்  மெய் மனந்திரும்புதலைப் பெற்று  ஞானஸ்நானம்   பெறுவதே மெய் ஞானஸ்நானம்  ஆகும்

[11/28, 8:11 PM] Ebi Pastor TN: 👌👍 உண்மை

[11/28, 8:15 PM] Ebi Pastor TN: திருமணத்தில்  தேவசித்தமென்பது

[11/28, 8:19 PM] Ebi Pastor TN: அனைவருக்கும்தான்

சாலமோனைத் தந்ததும் கர்த்தரே
சாலமோனின் அண்ணனை சாகவிட்டதும் கர்த்தரே ( குழந்தை )

[11/28, 8:24 PM] George Whatsapp: தாவீது தவறு செய்வதும் தேவ சித்தம் என்று வருகிறதே பாஸ்டர்( சாலமோனின் அண்ணன் பிறப்பு )

[11/28, 8:29 PM] Ebi Pastor TN: தாவீது பாவம் செய்தது  தேவசித்தமல்ல
பாவத்தில் விழுந்த பின்னர்  மனந்திரும்பியதே தேவ சித்தமாகும்

[11/28, 8:30 PM] George Whatsapp: சாலமோனின் அண்ணன் பிறப்பு தேவனால் முன் குறிக்கபடாததா????

[11/28, 8:31 PM] Ebi Pastor TN: எனக்கெனவே ஒருவள் பிறப்பதில்லை  என் தேவன் எனக்கு  கொடுக்க சித்தமான ஒருவளை தேர்ந்தெடுப்பதே
தேவசித்தமாகும்

[11/28, 8:32 PM] Kumar VT: மெய்ஞானஸ்நானம்  பொய்ஞானஸ்நானம். இப்படி எல்லாம் இருக்கோ தெரியலை ஐயா கொஞ்சம் விளக்கம் தாரும் ஐயா....

[11/28, 8:34 PM] Ebi Pastor TN: மெய்ஞானஸ்நானம் என்பதே ஞானஸ்நானமாகும்
பெயரளவில்  பெரும் முழுக்கே ஞானஸ்நானமல்லாததாக ஆகிறது

[11/28, 8:34 PM] Ebi Pastor TN: கொஞ்ச நேரம்  கழித்து  வருகிறேன்

[11/28, 8:34 PM] Kumar VT: அப்படி னா மனம் மாறி இரட்சிக்க படும் வரையில் திருமணம் செய்யாமல் இருக்கலாமோ...

[11/28, 8:35 PM] Ebi Pastor TN: எல்லாரும்  அப்படி  இருப்பதில்லையே

[11/28, 8:36 PM] Kumar VT: கொஞ்சம் வருடம் சுமார் ஓர் 20 ஆண்டு கழித்து இரட்ச்சித்தால் அவருக்கு ஞானஸ்நானம் திரும்ப  தரலாமா

[11/28, 8:37 PM] Kumar VT: பொதுவான பதில் வேண்டாம் ஐயா....

[11/28, 8:41 PM] George Whatsapp: தேவ வார்த்தைக்கு கீழ் படிந்து அவரை அறிந்து  மனபூர்வமாய் எடுப்பது மெய் ஞானஸ்நானம்
மற்றவர்களுக்கு கீழ்படிந்து அவர் எடுத்ததால் நானும் எடுக்கிறேன் என்றால் பொய் ஞானஸ்நானம்
பொய்யை மெய்யாக்குவது
 உங்கள் வாழ்க்கை நடவடிக்கையில் தேவனை அறிந்தால் அதை தேவன் விருப்பட்டால் மெய்யாக்குவதை தடுக்க யாராலும் முடியாது

[11/28, 9:05 PM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 28/11/2016* ✝
1.இரட்சிப்பு என்றால் என்ன❓
2.இரட்சிக்கபட நான் என்ன செய்ய வேண்டும்❓
3.இரட்சிக்கபடாமல் ஞானஸ்நானம் எடுத்திருந்தால் என்ன செய்வது❓
4.கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இரட்சிப்பு எப்படி கிடைக்கிறது❓
5.சுவிஷேசம் கேட்டவுடன் இரட்சிப்பு வருமா❓பெந்தேகோஸ்தே நாளில் நடந்தது போல இன்று ஏன் இது நடைபெறவில்லை❓
6.இரட்சிப்பின் திட்டத்தில் தேவனுடைய பங்கு என்ன❓
7.தலைவிதியும் தேவ சித்தமும் ஒன்றா❓இரட்சிப்பு தேவ சித்தபடி தானா❓
*வேதத்தை தியானிப்போம்*

[11/28, 9:29 PM] Ebi Pastor TN: அறிந்தோ அறியாமலோ அநேகம்பேர் ஞானஸ்நானத்தைத்தான் பெற்றுக் கொள்கின்றனர்

[11/28, 9:31 PM] Ebi Pastor TN: புரியல

[11/28, 9:31 PM] Kumar VT: அதென்ன பெந்தேகோஸ்து சபையில் மட்டும்
எடுத்தால் ஞானஸ்நானம்.  மற்ற சபைகள் எடுக்ககூடாத ஐயா எடுத்தால் என்னவாகும்..

[11/28, 9:33 PM] Ebi Pastor TN: எதற்காக முன் குறிக்கப்படுகிறான் என்பது மாறுபடுகிறது
ஆனாலும்  இவன் பிறவாதிருந்தால் நலமென்று தேவனுக்கு  தோன்றும் சில பிறப்புகளும் உண்டு

[11/28, 9:37 PM] Ebi Pastor TN: அவர்கள்   நடத்தும் வழிமுறைகள்  அப்படி  உள்ளது
ஆடியோவ்ல  விளக்கம்  உள்ளது

[11/28, 9:37 PM] Ebi Pastor TN: திரும்ப தெளிப்பா??
முழுக்கா??

[11/28, 9:37 PM] Kankani VT: தலை என்பது இயேசு
இரச்சிக்க பட்டவர்களுக்கு இயேசுதான் தலைவிதி

[11/28, 9:40 PM] Ebi Pastor TN: தெளிப்பு
ஞானஸ்நானம் அல்ல

[11/28, 9:42 PM] George Whatsapp: யூதாஸ் போலவா 🤔🤔🤔🤔🤔

[11/28, 9:44 PM] Ebi Pastor TN: ஆமாம்  அவனும் ஒருவன்

[11/28, 9:45 PM] Ebi Pastor TN: துர்உபதேசிகள் கொடுப்பது ஞானஸ்நானம்  இல்லை

[11/28, 9:45 PM] Kumar VT: முழுக்கு ஞானஸ்நானம் ஏன்.... 🙏 🙏

[11/28, 9:45 PM] Kankani VT: திருமணத்திர்க்கும் ஞானஸ்தானத்திற்க்கும் சம்மந்தம் ஏது

[11/28, 9:46 PM] JacobSatish VT: இதை நீங்கள் கேட்கலாமா

[11/28, 9:46 PM] JacobSatish VT: நன்றி பாஸ்டர்🙏

[11/28, 9:46 PM] George Whatsapp: யூதாஸ் முன் குறிக்கபட்டவன் ஆயிற்றே ஐயா🤔🤔🤔🤔🤔

[11/28, 9:46 PM] Kumar VT: சொல்லூம் நான் சொல்கிறேன்

[11/28, 9:48 PM] Ebi Pastor TN: எதற்காக  முன்குறித்தார் என்பது மாறுகிறது
சில நேரம்  தேவனுடை முன்குறித்தலில் மனிதனுடைய ஒத்துழைப்பு  இல்லாததால் அது தவறிவிடுகிறது

[11/28, 9:50 PM] Ebi Pastor TN: எ.கா
காப்பாற்றுவதற்காக  ஏற்படுத்தப்பட்ட  கேருப்
சாத்தானாக ஆனதைப் போல

[11/28, 9:51 PM] JacobSatish VT: பிரதர் நீங்க முழுக்கு ஞானஸ்நானம் எடுத்தவர்தானே

[11/28, 9:52 PM] Kumar VT: ஆமாம் சகோ

[11/28, 9:55 PM] Ebi Pastor TN: கொலோசெயர் 2:12
[12]ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

ரோமர் 6:4
[4]மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

கொலோசெயர் 2:12
[12]ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

1 பேதுரு 3:20-21
[20]அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
[21]அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.

[11/28, 10:00 PM] Ebi Pastor TN: தெரிந்தே செய்தால்
இந்த உலகத்தில்  சில சிறு தண்டனைகள் மூலமாக தீர்க்கப்படுதல் என்று  ஒன்று  உள்ளது  கவனிக்கவும்

[11/28, 10:01 PM] Ebi Pastor TN: 1 பேதுரு 4:17-18
[17]நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
[18]நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

[11/28, 10:01 PM] JacobSatish VT: 8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/28, 10:01 PM] Ebi Pastor TN: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:6-8
[6]கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
[7]நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
[8]எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

[11/28, 10:01 PM] Kumar VT: 😳😳😳😳 அதற்காக தெரிந்தும் செய்யமுடியுமோ

[11/28, 10:03 PM] Ebi Pastor TN: தவறினால்  திருத்துவதும்
தப்பு  செய்தால்  தண்டிப்பதும்  தகப்பனுக்கும் பிள்ளைக்குமுள்ள உறவில் உண்டு

[11/28, 10:03 PM] JacobSatish VT: 12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1 :12
13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1 :13
14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக்கோபு 1 :14
15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1 :15
16 என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
யாக்கோபு 1 :16
17 நன்மையான எந்த இவையும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
யாக்கோபு 1 :17
18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.
யாக்கோபு 1 :18
21 ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
யாக்கோபு 1 :21

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/28, 10:04 PM] Ebi Pastor TN: தெரியாமல் செய்தால் அது தவறு
தெரிந்தே செய்தால் அது தப்பு
👆 இது அனுபவசாலிகள்  வார்த்தை

[11/28, 10:05 PM] JacobSatish VT: 17 மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
கலாத்தியர் 5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/28, 10:05 PM] Kumar VT: மின் சக்தி குறைவு காரணமாக வெளியேறுகிறேன் மன்னிக்கவும் நாளைக்கு விவாதிக்காலம்... 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 நன்றி ஐயா 🙏 🙏 🙏 🙏 🙏

[11/28, 10:06 PM] Ebi Pastor TN: இங்கு  யாரும்  விவாதிக்கக்கூடாது😂😂
வேதத்தை  ஆராயலாம்
நன்றி 🙏😆

[11/28, 10:07 PM] JacobSatish VT: Fuse poiducha😃😃😃😃

[11/28, 10:07 PM] Kumar VT: சரிங்க ஐயா நன்றி ஞாபக படுத்தியதற்க்கு🙏🙏🙏😀😀😀
[11/28, 10:13 PM] Ebi Pastor TN: ஐசக்  ஐயா
லேவி ஐயா
கிருபாகரன்  ஐயா
இப்படி  பல ஐயாக்கள்
உன்னதபாடல்களை ஆராய்வதற்காகவே அதிக நேரம்  கொடுப்பதாக தெரிய வருவதால்  நாளை முதல்  இந்த  குழுவில்  வருவதற்காக  இந்த குழுவின் பெயரை உன்னதப் பாடல்கள்  என்று  பெயர் மாற்றம்  செய்யலாம்னு நினைக்கிறேன் 😂😂😂😂
நீங்க  என்ன சொல்றீங்க

[11/28, 10:21 PM] Kumar VT: இதுவே நல்ல இருக்கே இதையேன் மாற்றலாம் நினைக்கிறீர்கள்....

[11/28, 10:22 PM] JacobSatish VT: இந்த குரூப் எக்காரணத்தை கொண்டும் பெயர் மாற்ற வேண்டாம்

[11/28, 10:24 PM] Manimozhi Ayya VT: இதை தேவ சித்தம்

[11/28, 10:25 PM] Kumar VT: அப்புறம் வெளிபடுத்தின விசேஷம் னு  மாற்ற வேண்டிய சூழல் வரும் பிறகு மாறி மாறி கடைசி யா.....  நா... .......

[11/28, 10:26 PM] Kumar VT: நான்கு ஐந்து பேர் மாற்றம் செய்ய வேண்டும்...  🙏 🙏 🙏

[11/28, 10:38 PM] Jeyaseelan VT: 💥சுயசித்தம் 💥
1. சுயசித்தம் என்பது தேவனுக்கு முன்பாக தெரிந்து கொள்ளும் செயல்பாட்டின் கடமையாய் இருக்கிறது.
2. தேவன் ஆதாமுக்கு ஏதேன் தோட்டத்தில் தெரிந்து கொள்ளும் ஆற்றலை அளித்தார். (ஆதியாகமம் 2:16-17).
3. தெரிந்துகொள்ளும் ஆற்றல் விசுவாசி மற்றும் அவிசுவாசியில் இருக்கிறது. (யோவான் 7:17)
4. கிறிஸ்தவத்தில் சுயசித்தம் ஒருபோதும் வற்புறுத்தப்படுவதில்லை. கீழ்ப்படிதலே காரியமாய் கொள்ளப்படுகிறது
 (2 கொரிந்தியர் 5:10)
5. மனிதன் தனது செயல்கள் ஒவ்வொன்றிற்கும், உத்திரவாதியாய் இருக்கிறான். மற்றும் அவன் ஒவ்வொன்றிற்கும் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். (வெளிப்படுத்தல் 20:11-15).
6. ஏனெனில் மனிதன் நியாயத்தீர்ப்புக்கு கீழ்பட்டிருக்கிறான். குறிப்பிட்ட காலக்கட்டத்தில், பிள்ளைகள் அனைவரும் தங்களது கிரியைகள் ஒவ்வொன்றிற்கும். தேவனிடம் கணக்கொப்புவித்தாக வேண்டும்.
7. வேதாகமம் சுயசித்தம் குறித்த மூன்று பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது.
சுவிஷேசத்தை கேட்குமுன்னர் மரிக்கும் சிசுக்களின் நிலை என்ன? அல்லது மனோரீதியான நிலையில் தீர்மானிக்க இயலாதவர்கள் நிலை என்ன? 
 தீர்வு: (2 சாமுவேல் 12:18) தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த ஏழு நாள் சிசு இறந்துபோனது, எட்டாவது நாளில் உடன்படிக்கை உறவுக்குள் வருமுன்னர் அதாவது, விருத்தசேதனம் செய்வதற்கு முன் மரித்துப்போனது.
தாவீது சொல்கிறார். நான் அந்த சிசுவினிடத்திற்கு செல்வேன், இதன் பொருள் அந்த சிசு உடன்படிக்கை அவசியமில்லாமல் இயல்பாகவே இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சரீர அங்கவீனம் ஒரு நபரில் சுயசித்தத்திற்கு தடை கொண்டு வரக்கூடுமா?  
தீர்வு: (யோவான் 9:1-7) பிறவியிலேயே குருடனாய் பிறந்த நபர் கண்பார்வையடைந்தார்.
 இயேசு ஒருபோதும் சுயசித்தத்தை மீறவில்லை, அனால் குருடனுக்கு கண்பார்வை அளித்தார்.
 அவர் ஒரு நபர் தேவசித்தம்  செய்வதை தடைசெய்யும் தடைகளை தகர்க்கிறார்.
 ஆனால் ஒரு நபரின் சுயசித்தம் செயல்படாதிருக்கச் செய்வதில்லை.
ஆவிக்குரிய நிலையில் சேதம் அடைந்துள்ள நபரின் சுயசித்தம் குறித்து வேதம் கூறுவது என்ன?
 தீர்வு:   (ஆதியாகமம் 3:8)
மனிதனின் வீழ்ச்சிக்குப்பின்னர்,  தோட்டத்தில் தேவனை விட்டு ஒளிந்து கொண்டிருந்த ஆதாமையும், ஏவாளையும் தேவன் கண்டு பிடித்தார்.
 தேவன் எல்லா மனிதரையும் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு இரட்சிப்பின் தருணங்களை அளிக்கிறார்.
8. உங்களது இருதயத்தை விசுவாசிக்கவோ, அல்லது மனந்திரும்பவோ இயலாது, கடினப்படுத்த உங்களால் கூடும்.
*வேதாகமத்தில் இதற்கான உதாரணங்கள்:*
யோசுவாவின் நாட்களில் இருந்த அமோரியர்களும், கானானியர்களும். (ஆதியாகமம் 15:16).
யாத்திராகமத்தின் பார்வோன் (யாத்திராகமம் 7- 11).
சிருஷ்டிகரை தொழுது சேவியாமல், சிருஷ்டிகளை தொழுது சேவிப்பவர்கள் (ரோமர் 1:1-32).
மிருகத்தின் முத்திரையை தரித்துகொள்பவர்கள் (வெளிப்படுத்தல் 13:8).
இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவிசுவாசிகளின் பிரதிக்கிரியைகள் (வெளிப்படுத்தல் 6:16).
9. தேவனைத்தேட வாஞ்சையுள்ள நபர் அவரைக் கண்டுகொள்வார்கள். (யோவான் 7:17).
10. சுயசித்தம் ஒருபோதும் நடுநிலை வகிப்பதில்லை - நீங்கள் ஒன்று தேவனுக்குக் கீழ்ப்படிகிறவராய் இருக்கவேண்டும் அல்லது அவருக்குக் கீழ்ப்படியாதவராய் இருக்கவேண்டும்.
 (ஏசாயா 55:7-9).

[11/28, 10:53 PM] Manimozhi Ayya VT: சோம்பேரியினுடைய சுய திருப்தி விதி.
இயலாமையை விதி என கூறி தனது தவறுக்கு நியாயம் கற்பிக்க உபயோகப்படுத்தும் வார்த்தை விதி.
தோற்றவர்கள் தன்னை தேற்றிக்கொள்ள விதி எனும் வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.
தேவ சித்தம்
விதி
இரண்டும் ஒன்றா

[11/28, 10:54 PM] Manimozhi Ayya VT: தேவ சித்தம் தான் விதியா

[11/28, 10:56 PM] Kankani VT: அது  நமக்கு நிதி ஐயா

[11/28, 10:57 PM] Manimozhi Ayya VT: நமது வாழ்க்கையை நாம் முடிவு செய்கிறோமா
தேவன் முடிவு செய்கிறாரா

[11/28, 10:57 PM] Karthik-Jonathan VT: Intha naalaai Aashirvaadhamai nadadhi Jeevan Sugam Pelanodu kaathukonduvandha Kartharukku kodanakkodi is this Hiram kala I yerrudukkiran  Hallelujahs Amen

[11/28, 10:58 PM] Manimozhi Ayya VT: பதில் ❓❓❓🙏

[11/28, 10:59 PM] Manimozhi Ayya VT: இரண்டு நிமிடங்கள் மட்டுமே உள்ளது

[11/28, 10:59 PM] Karthik-Jonathan VT: Sorry isthodhirankalai

[11/28, 10:59 PM] Manimozhi Ayya VT: யாராவது இருக்கிறீர்களா