Type Here to Get Search Results !

திருச்சபையில் சீர்திருத்தம் தேவையா❓

[1/14, 10:15 AM] ✳ *இன்றைய வேத தியானம் - 14/01/2017* ✳
👉 திருச்சபையில் சீர்திருத்தம் தேவையா❓

👉 திருச்சபைக்கு இக்காலத்துக்கும் வழிகாட்டிகள் தேவையா❓

👉 திருச்சபையின் உபதேசங்களில் மாறுபாடு இருக்கவில்லையா❓
                   *வேத தியானம்*

[1/14, 10:19 AM] Satish New VT: சீர்திருத்தம் என்று தாங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்

[1/14, 10:19 AM] Sam Jebadurai Pastor VT: மார்ட்டின் லூதர் செய்தது போல

[1/14, 10:25 AM] Apostle Kirubakaran VT: *சீர்திருத்தம் என்பது
வேத வசனத்துக்கு திரும்புவதே சீர்திருத்தம்*

[1/14, 10:26 AM] Apostle Kirubakaran VT: 2 நாளாகமம் 17:1-6,8-10
[1]அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.
[2]அவன் யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் தாணையங்களையும் வைத்தான்.
[3]கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,
[4]தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.
[5]ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது.

[6]கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினான்.
[8]இவர்களோடேகூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடேகூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான்.
*இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.*
[10]யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள்.

[1/14, 10:32 AM] Apostle Kirubakaran VT: அப்போஸ்தலர் 19:17-20
[17]இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
[18]விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.
[19]மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.
[20]இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
*சீர்திருத்தம் என்பது தேவ வார்த்தை நம்மை மேற் கொள்வதே சீர் திருத்தம்*
எபேசியர் 4:12-24
[12]பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
[13]அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
[14]நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
[15]அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
[16]அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
[17]ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.
[18]அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;
[19]உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
[20]நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.
[21]இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
[22]அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
[23]உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
[24]மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
* .

[1/14, 10:33 AM] Apostle Kirubakaran VT: தீத்து 2:1-15
[1]நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.
[2]முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.
[3]முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,
[4]தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
[5]தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
[6]அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி,
[7]நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,
[8]எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
[9]வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,
[10]தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.
[11]ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
[12]நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,
[13]நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
[14]அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
[15]இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.

[1/14, 10:47 AM] Apostle Kirubakaran VT: வழி ஏசு.
வழி நாட்டி நாம்.
நிச்சயம் இன்று சபைக்கு தேவ வார்த்தையால் வழி காட்டும் போத கள் தேவை

[1/14, 10:51 AM] Satish New VT: ஐயா நீங்க சொல்றதை பார்த்தால் சபைகளில் வேதவசனம் போதிப்பதே இல்லை  என்கிறமாதிரி இருக்கே

[1/14, 10:55 AM] Samson David Pastor VT: ஆவியானவரால் ஏவப்பட்டு உண்மையை சொல்லுகிறார், சொல்ல விடுங்களேன் Bro.👍🙏

[1/14, 10:57 AM] Bro In Christ VT: PTL. There are Bible plus.. Churches and Bible minus.. Churches..
Reformation should necessitate removing both and follow the Bible simply..

[1/14, 11:00 AM] Samson David Pastor VT: PTL means points to learn!! 🤔

[1/14, 11:02 AM] Samson David Pastor VT: We need Bible plus churches only bro.
👆why it needs reformation!?
Its the reformation we must insist.

[1/14, 11:03 AM] Elango: 2 இராஜாக்கள் 18:1-5
[1]இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
[2]அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.
[3]அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
[4] *அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்;*✅✅✅✅✅✅✅ அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
[5]அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.

[1/14, 11:04 AM] Elango: எபேசியர் 2:14-16
[14]எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
[15] *சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,*
[16] *பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.*

[1/14, 11:10 AM] Elango: *சீர்திருத்தம்* என்பதற்கு சாதாரணமாக மறுமலர்ச்சி அல்லது  சீராக இல்லாததை திருத்தி அமைத்தல் போன்ற பொது .வான அர்த்தங்கள் உள்ளன.

[1/14, 11:12 AM] Elango: 16-ம்  நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிராகப் போர்க்கொடி ஏந்தி மார்டின் லூதர், ஜோன் கல்வின், ஜோன் நொக்ஸ்👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼 போன்றோர் புறப்பட்டு திருச்சபை சீர்திருத்தத்திற்குப் பாடுபட்டதாலேயே ‘சீர்திருத்தம்’ (Reformed) என்ற பெயர் அவர்கள் நிறுவிய சபைகளால் பயன்படுத்தப்பட் டன.
 தன்னை சபையாக உலகில் பொய்யாகக் காட்டிக் கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தகர்த்ததால் அவர்களும் *‘சீர்திருத்த வாதிகள்’ (Reformers)* என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.

[1/14, 11:14 AM] Bro In Christ VT: Bible plus churches have Bible and Traditions equally important.

[1/14, 11:16 AM] Elango: எதில் தேவை சீர்திருத்தம்❓❓❓❓

*இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மக்களுக்கு ஆத்தும விடுதலை தேவை இன்று.*❗
*உணர்ச்சிகளுக்கு உணவூட்டி பரவசத்தை மட்டும் நாடி இருதயத்தைப் பாழடித்துக் கொண்டிருப்பவர்கள் கண்களைத் திறக்கக்கூடிய பிரசங்க சீர்திருத்தம் தேவை இன்று.*❗
 *பண ஆசையும், பதவி ஆசையும் இல்லாமல் சுத்த இருதயத்தைக் கொண்டு சிந்தித்து செயல்படும் சத்திய வாஞ்சையுள்ள போதகர்களும், இளைஞர்களும் அவசியமான இந்த சீர்திருத்தத்தில் இன்று ஈடுபட்டால் மட்டுமே*
 நாளைய நமக்குள் நல்ல சபைகளும் உருவாகும்.

[1/14, 11:16 AM] Samson David Pastor VT: சீர்திருத்தம் என்பது முடிந்து விடுகிற ஒன்றல்ல,
அவ்வப்போது தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று.
வீட்டை தினமும் பெருக்கி சுத்தம் செய்கிறோமே.
வருடம் ஒருமுறை வெள்ளை அடிக்கிறோமே!
சபை உலகத்தில் உள்ளவரை தொடர் சீர்திருத்தம் அவசியமே.

[1/14, 11:19 AM] Samson David Pastor VT: இன்றைய நடைமுறையிலேயே பழகி விட்டவர்கள், பலன் பார்ப்பவர்கள் சீர்திருத்தத்திற்கு சம்மதிப்பதில்லை
.
[1/14, 11:28 AM] Jeyachandren Isaac VT: சிறந்த வழிகாட்டி மற்றும் போதனையாளர்..பரிசுத்த ஆவியானவரே..எனவே  அவரை பெற்றுக் கொள்ளும்படியாக மக்களை ஊழியர் வழிநடத்த வேண்டும்

[1/14, 11:33 AM] Tamilmani Ayya VT: *பாரம்பரியம்* எதுவாயிருந்தாலும் வேதத்திற்க்கு எதிரானவைகள் நிறுத்தப்பட வேண்டும். அவைகள் தேவனுடைய கற்பனைகளை ஒன்றுமில்லாமல் பலனில்லாமல் பண்ணுகிறார்கள்.
*நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?*
(மத்தேயு 15: 3)
*உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.*
(மத்தேயு 15:6)
*லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபொகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.*
(கொலோசெயர் 2:8)

[1/14, 11:34 AM] Jeyachandren Isaac VT: இயேசு சீர்த்திருத்தவாதியாகவே  இருந்தார்...
யூதருடைய பாரம்பரியங்கள், தவறான வைராக்கியங்கள், தவறான புரிந்து கொள்ளுதல்கள் இவைகளை வெளிச்சத்திலே கொண்டு வந்தார்..
இன்றும் இப்படிபட்ட சீர்திருத்தங்கள் அதிகம் தேவை

[1/14, 11:39 AM] Jeyachandren Isaac VT: அன்று இயேசுவை, அவரின் சீர்த்திருத்த செயல்களை கண்டே பரிசயரும், சதுசேயரும் , வேதபாரகரும் எதிர்த்தனர்...
இன்றும் சீர்த்திருத்தங்களை பேசினால், அவர்களை குறை சொல்கிறவர்கள் என்ற முத்திரையை அழகாக குத்தி அவர்களை அலட்சியபடுத்துவது வெகுஜோராக நடந்து வருகிறது..
மாற வேண்டும்

[1/14, 11:52 AM] Samson David Pastor VT: 13 தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிவிட்டான், அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.
1 இராஜாக்கள் 15 :13

👆👆👆பெற்ற தாயாக இருந்தாலும்,
தேவனுக்கு துரோகம் செய்தால்,  தள்ளி வைப்பதே சீர்திருத்தம்.
இந்த உதாரணங்களை பார்க்க கூட நம் கண்கள் திறக்கப்படுவதில்லை.

[1/14, 11:53 AM] Jeyachandren Isaac VT: 👆👍no compromise✅

[1/14, 11:55 AM] Jeyachandren Isaac VT: வழிகாட்டிகளா...???
முன்மாதிரிகளா....???
தேவை...👇👇
முன்மாதிரிகளே

[1/14, 11:56 AM] Samson David Pastor VT: For God's sake, he hasn't compromised with his own mother.
Whereas, we are encouraging to have compromise with so called ஊழியர்கள் Who go against God's word.

[1/14, 12:00 PM] Jeyachandren Isaac VT: இன்று வழிகாட்டுபவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் ஏராளம்...ஏராளம்..ஆனால் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் முன்மாதிரிகளுக்கோ பெரும் பஞ்சம்🤔🤔

[1/14, 12:03 PM] Samson David Pastor VT: தெருவிற்கு தெரு சென்று,
வெளிச்சத்தைக் குறித்து பிரசங்கம் செய்வதல்ல,
வெளிச்சம் தரும் விளக்காக வாழ்ந்துக் காட்டுவதே சீர்திருத்தம்.

[1/14, 12:06 PM] Tamilmani Ayya VT: நாம் எல்லோருமே சீர்த்திருத்தத்தால் சீரானவர்கள்.
[1/14, 12:40 PM] Apostle Kirubakaran VT: பால் பிரதர்
என்னோட வாங்க வாழ்வும் வாழ்க்கையும் ஒன்றாக இருக்கும் அனேக ரை காட்டுகிறேன்

[1/14, 12:40 PM] Jeyachandren Isaac VT: எதில் தேவை சீர்திருத்தம்❓❓❓❓
*உணர்ச்சிகளுக்கு உணவூட்டி பரவசத்தை மட்டும் நாடி இருதயத்தைப் பாழடித்துக் கொண்டிருப்பவர்கள் கண்களைத் திறக்கக்கூடிய பிரசங்க சீர்திருத்தம் தேவை இன்று.*❗
👆✅👍
உண்மைதான் ஆராதனை என்ற பெயரில் மக்களை ஒரு பரவசத்தில் ஈடுபடுத்தி வருகிற இந்த தீமையிலிருந்து மக்கள் விடுபட சீர்திருத்தம் தேவை👍👍

[1/14, 12:42 PM] Apostle Kirubakaran VT: அப்போஸ்தலர் 18:28
[28]அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.
இப்படி இருக்கும் அனேகர் உண்டு

[1/14, 12:45 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 இன்று இந்த இடத்தைத்தான் ஆராதனை என்ற பெயரில் மக்களை பரவசநிலையில் வைத்திருப்போர் தக்கவைத்து உள்ளனர்....
குறிப்பு: .அனேகர்

[1/14, 12:50 PM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 4:5
[5]ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:13
[13]அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
ரோமர் 1:18
[18]சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
2 நாளாகமம் 16:9
[9]தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.*

[1/14, 12:51 PM] Satish New VT: பரவசநிலைனு எதை குறிப்பிடுகிறீர்கள்

[1/14, 12:56 PM] Apostle Kirubakaran VT: என்னை பொருத்த வரை
பரிசுத்த மே பரவசம்

[1/14, 12:58 PM] Samson David Pastor VT: சீர்திருத்தம் குறித்து பேச வந்துவிட்டு,
காலத்திற்கு முன்பாக தீர்ப்பு செய்யாதிருங்கள் என்று வசனம்.
எது தான் சீர்திருத்தம் என்று எப்படி தான் பேசுவது!?
பின்னாடியே, அறுப்பு வரை களையை விட்டு வையுங்கள் வசனம் வரும்.
சொல்லுங்க...
பேசாதே...
சொல்லுங்க...
பேசாதே...
சொல்லுங்க...
பேசாதே...
இப்படி இருக்கு ஐயா. 😢😢

[1/14, 12:58 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍உண்மைதான் ஐயா👍ஆனால் அதற்க்கு முக்கியம் கொடுக்கபடாதபடி மற்ற பரவசங்களுக்கு முக்கியம் கொடுக்கபட்டுவருகிறது

[1/14, 12:59 PM] Jeyachandren Isaac VT: ஐய்யோ...ஐய்யோ..என்ன இது சிறுபிள்ளதனமா இருக்கு...😀😀😀

[1/14, 1:00 PM] Apostle Kirubakaran VT: சீர்திருத்தம் என்பது வேறு.
நியாத் தீர்ப்பு என்பது வேறு.
குற்றம் வேறு
குறை வேறு

[1/14, 1:01 PM] Apostle Kirubakaran VT: உண்மைதான்.
இவை களை கண்டு மனம் எரிகிறது.,,

[1/14, 1:01 PM] Samson David Pastor VT: தவறு என்பதை "நியாயம் " என்று தீர்வுக்குள் வந்த பிறகு தான் அதை திருத்தம் செய்ய முடியும் ஐயா.

[1/14, 1:04 PM] Apostle Kirubakaran VT: தவறு என்பதற்க்கும்
துரோகம் என்பதற்க்கும் வித்தியாசம் உண்டு.
ஏசு தப்பி தங்களை மன்னிக்க கூறினார்
யாக்கோபு 3:2
*நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்;*ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.

[1/14, 1:07 PM] Elango: ✳ *இன்றைய வேத தியானம் - 14/01/2017* ✳
👉 திருச்சபையில் சீர்திருத்தம் தேவையா❓
👉 திருச்சபைக்கு இக்காலத்துக்கும் வழிகாட்டிகள் தேவையா❓
👉 திருச்சபையின் உபதேசங்களில் மாறுபாடு இருக்கவில்லையா❓
                   *வேத தியானம்*

[1/14, 1:08 PM] Sam Jebadurai Pastor VT: தவறான உபதேசங்களை அடையாளம் காட்ட வேண்டிய தேவ ஊழியர்கள் தனி மனிதர்களை குற்றச்சாட்டுவதை சீர்திருத்தம் என்று கூறக்கூடாது

[1/14, 1:11 PM] Jeyachandren Isaac VT: திருச்சபையின் உபதேசங்களில் மாறுபாடு இருக்கவில்லையா❓
  
  👆   வழிகளிலே மாறுபாடுகள் இருக்கலாம்...
ஆனால் உபதேசத்தில் மாறுபாடு கூடாது....
அப்படி இருந்தால் அதை விட்டு விலகும்படியாக வேதம் நம்மை எச்சரிக்கிறது

[1/14, 1:21 PM] Apostle Kirubakaran VT: தீத்து 3:10
[10]வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு.

[1/14, 1:30 PM] Johnson CSI VT: திருச்சபை யில் சீர்திருத்தம் வேண்டும் என் என்றால் திருச்சபையில் அரசியல் சன்டை ஜாதி சன்டை ஒருவருக்கொருவர் பொராமை இதனால் சபை பாதிக்கபடுகிறது அதனால் சபைக்கு சீர்திருத்தம் மிக தேவை

[1/14, 1:43 PM] Jeyachandren Isaac VT: எனக்கு தெரிந்த ஒரு கிராமபகுதியில் 4 சபைகள் இருக்கிறது..
ஆனால் அந்த சபை போதகர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்ல....
ஆனால் ஒருவருக்கொருவர் குற்றசாட்டுகளும் குறைகளும் அனேகம்...
அதேவேளையில் அநத 4 விசுவாசிகள் இடையிலே நல்ல அறிமுகம் மற்றும் பேச்சுவார்த்தைகள் உண்டு....
இந்த நிலை மாற வேண்டும்

[1/14, 1:43 PM] Jeyachandren Isaac VT: 👆அந்த 4 சபை விசுவாசிகள்

[1/14, 1:44 PM] Johnson CSI VT: இயேசு சபையை அதிகமாய் நேசிக்கிறார்

[1/14, 1:53 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍உண்மைதான் ஐயா👍 அதே வேளையில்👇👇
 நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங்காலமாயிருக்கிறது. முந்தி நம்மிடத்திலே அது துவங்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 1 பேதுரு 4 :17

[1/14, 2:11 PM] Satish New VT: இது நிறைய இடத்துல நடக்கற விஷயம்தான்
இந்த இடத்துல ஒரு விஷயம் என்னன்னா விசுவாசிகள் தெளிவா இருக்காங்க.
போதகர்கள் தான்.இன்னும் தெளியாம இருக்காங்க

[1/14, 2:35 PM] Samson David Pastor VT: இதை நீங்க சொல்லக் கூடாது சகோ.
குறை சொல்லக் கூடாதே!

[1/14, 2:51 PM] Satish New VT: இது குறை சொல்றது இல்லை ஐயா
ஆதஙகம்

[1/14, 2:55 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍👍நிச்சயமாக சீர்த்திருத்தம் அல்லது சீர்பொருந்த வேண்டியவர்கள் முக்கியமாக "தலைகளே"😊😊

[1/14, 3:00 PM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 11:19
[19]உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

[1/14, 4:16 PM] Elango: ✳ *இன்றைய வேத தியானம் - 14/01/2017* ✳
👉 திருச்சபையில் சீர்திருத்தம் தேவையா❓
👉 திருச்சபைக்கு இக்காலத்துக்கும் வழிகாட்டிகள் தேவையா❓
👉 திருச்சபையின் உபதேசங்களில் மாறுபாடு இருக்கவில்லையா❓
                   *வேத தியானம்*

[1/14, 4:28 PM] George VT: 3வது கேள்விக்கு
சரியான உபதேசம் இது தான்  என்பதை அறிந்தவர் யார்
2வது கேள்விக்கு
அவரே வழிகாட்டியாக இருக்க முடியும்
1வது கேள்விக்கு
அவரே சீர்திருதவும் முடியும்
இந்த காலத்தில் அதுவும் இந்த குழுவிலே ஒரு நிலைபாடு இல்லையே பிறகு எங்கே
ஒரே உபதேசம்
ஓரே வழிகாட்டி
சீர்திருத்தம் 🤔🤔🤔🤔🤔🤔

[1/14, 4:31 PM] Elango: இந்த உலகத்தில் நாம் பரிபூரண நிலையை எட்ட முடியாது ஆகவே, சபை சீர்திருத்தம் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தில் சிலர் இருக்கலாம்.❗❗
 ஆனால் சபை பரிபூரணத்தை இந்த உலகத்தில் அடைய முடியாவிட்டாலும் பரிபூரணமாகிய அந்த இலக்கை நோக்கி நடைபோடுவதையே நம் இலட்சியமாக எப்போதும் கொண்டிருக்க வேண்டும்
🙏🙏🙏🙏

[1/14, 4:32 PM] Elango: பிலிப்பியர் 3:12-15
[12]நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
[13]சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
[14] *கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.*

[15] *ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.*

[1/14, 4:36 PM] Elango: சபையை சீர்திருத்த எண்ணும் நாமும், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அனுதினமும் சீர்தூக்கி பார்ப்பது அவசியமாகிறது.
1 கொரிந்தியர் 9:23-27
[23]சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.
[24]பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
[25]பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
[26]ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.

[27] *மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.*

[1/14, 4:42 PM] Elango: [10/31, 5:48 PM] isaac jeba: *நம் குடும்ப கதை*
*திருச்சபையின் 2000* *ஆண்டு காலப் பயணம்*
*_ஆதித்திருச்சபை (1-3 நூற்றாண்டுகள்)_*
★ _இயேசு உயிர்தெழுந்து 50 நாளுக்கு பின்னர் வந்த பெந்தேகோஸ்தே நாளே சபை பிறந்த நாளாகும்_ (அப்.2) _இதன் மூலம் பூமியில் பரலோக ராஜ்யம் நிறுவப் பட்டது. சீஷர்கள் அந்த ராஜ்ஜியத்தின் குடிமக்கள், அவர்கள் "கிறிஸ்தவர்கள்" எனறு ஜனங்களால் அழைக்கப் பட்டார்கள்._
_யூதரல்லாத புறஜாதியாருக்கும் பரலோக ராஜ்யத்தின் வாசல் திறக்கப்பட்டது._
★ _ஆதித்திருச்சபை "அப்போஸ்தலர் காலம்"_ "அப்போஸ்தலருக்கு பிந்தைய காலம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
அப்போஸ்தலர் காலமே திருச்சபையின் பொற்காலமாகும்._
*அப்போஸ்தலரின் பொற்காலம்:*
*(முதல் நூற்றாண்டு)*
★ _உலக வரலாறு காணாத பொருளாதர நீதி சபையில் நிலவியது. சொத்துக்கள் பொதுவில் வைத்து அனுபவிக்கப் பட்டன
(அப்.4:32,35)
மாபெரும் அற்புதங்கள் சர்வசாதாரணமாக சபையில் நடந்தேறின_
★ _சபை அப்போஸ்தல அதிகாரத்தின்கீழ் இருந்தது. சபைகள் பல இடங்களில் இருந்தாலும் எங்கும் ஒருமனப்பாடு நிலவியது (அப். 4;32) விசுவாசிகளிடையே தூய்மையான ஐக்கியம் காணப்பட்டது._
★ *விசுவாசிகள் உலகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்களாய் வாழ்ந்தார்கள். அவர்களது சாட்சி மலைமேல் இருக்கும்சபைகள்மாக எல்லா ஜனத்துக்கும் முன்பாக பிரசித்தமாய் இருந்தது*(அப். 17;6)
★ _அக்காலத்தில் அச்சடிக்கப்பட்ட வேதாகமம் அவர்கள் கையில் இல்லை ஆனால் எபிரேயர் 8;10 சொல்லுகிறபடி வேதவசனம் அவர்கள் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டிருந்தது._
★ _அவர்கள் பெரும் உபத்திரவத்தின் மத்தியில் வாழ்ந்தார்கள். அதின்நிமித்தம் அவர்கள் இயேசுவின் வருகையை, நித்திய வீட்டை அடையும் நாளை ஒவ்வொருநாளும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்…_
_அப்போஸ்தலருக்குப் பிந்திய காலம்
(2-ஆம் 3-ஆம் நூற்றாண்டுகள்)_
★ _இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டு சபை அப்போஸ்தலரின் மாணவர்களால் நடத்தப்பட்டது. இவர்கள் "Apostolic Fathers" என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் முக்கியமானவர்கள் கிளமெண்ட், அந்தியோகியாவின் இக்னேஷியல், பாலிகார்ப் மற்றும் இரேனியஸ் போன்றவர்களாவார்._
★ _சபைகள் கண்காணிகளால்(பிஷப்புகள்) நடத்தப்பட்டது._
_உபத்திரவம் தொடர்ந்தது, புதிய ஏற்பாட்டின் பல பகுதிகள் தொகுக்கப்பட்டு சபைகளுக்குள் விநியோகிக்கப்பட்டது._
★ _சபையானது யூதமார்க்கத்தை விட்டு மெல்ல விலக தொதொடங்கியது, யூதமார்க்கத்துக்கு விரோதமான கருத்துக்கள் உள்ளே நுழைய துவங்கின._
*_ரோமச்சபையின் எழுச்சி_*
(4-ஆம் நூற்றாண்டு)
★ _கி.பி 312 ஆம் ஆண்டு ரோம பேரரசரான கான்ஸ்டாண்டைன், தான் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுகொண்டதாக அறிவித்ததிலிருந்து சபைகள் மீதான உபத்திரவத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க்ப் பட்டது. அதன் பின்பு 70 ஆண்டுகள் கழித்து தியோடோசியஸ் காலத்தில் கிறிஸ்தவம் அரசாங்க மதமாக அறிவிக்கப்பட்டது._
★ _விக்கிரக ஆராதனைக் காரர் வலுக்கட்டாயமாக கிறிஸ்தவர்கள் ஆக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் எல்லா பழக்க வழக்கங்களையும் தங்களுடனே சபைக்குள் எடுத்து வந்தனர், சபை முற்றிலுமாய் கறைப்பட்டுப் போனது._
★ _சபையின் அதிகாரம் பிஷப்புகள் கைக்கு வந்தது, அவர்களுக்கு அரசாங்கத்தின் உயர்ந்த பீடம் கொடுக்கப்பட்டது. ரோம் நகரின் பிஷப்பு தன்னை "போப்"(பிதா) என்று அழைத்துக் கொண்டார்._
*கிறிஸ்தவத்தின் இருண்ட காலங்கள்*
★ _பல தேவாலயங்கள் கட்டப்பட்டன, ஆண்டவர் அருவெறுக்கும் Clergy- Laity முறை சபைக்குள் ஆழமாகக் காலூன்றியது. போப் பாவமே செய்ய முடியாதவராக (Infallible) என்று கருதப்பட்டார். அவர் அரசனுக்கு நிகராக மதிக்கப் பட்டார்._
★ _வேதாகம மொழியும், ஆராதனை மொழியும் லத்தீன் என்று ஆக்கப்பட்டது. வேதத்தை மொழிபெயர்த்தல் தேவதூஷணமாக கருதப்பட்டு அதைச் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது._
★ _வேதத்துக்கு புறம்பான கணக்கிலடங்காத சடங்குகளும் போதனைகளும் கடைப்பிடிக்கப் பட்டன._
★ _பாவமன்னிப்பு சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது._
*விடியலுக்கான ஆரம்பம்*
(14-ஆம் & 15-ஆம் நூற்றாண்டுகளில்)
★ _ஜான் விக்ளிப்(1320-1384) முதன் முதலாக ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்க்க துவங்கினார். இவரே பதினோராம் நூற்றாண்டில் எழும்பிய மாபெறும் சீர்திருத்ததுக்கு அடிகோலியவர்._
★ _இவர் மீதான உக்கிரம் தணியாத போப் இவர் மரித்து 44 ஆண்டுகளுக்குப்பின் இவர் எழும்புகளைத் தோண்டி எடுத்து நொறுக்கி ஆற்றில் வீசும்படி உத்தரவிட்டார்._
★ _இவர் வழிவந்த ஜான்ஹஸ் சபையின் அக்கிரமத்தை எதிர்த்து குரல் கொடுத்தற்காக உயிரோடு கொளுத்தப்பட்டார்._
★ _கிரலாமோ சவனரோலா என்ற இத்தாலியத் துறவியார் சபை சீர்திருத்தத்துக்காகவும், பாவத்துக்கெதிராகவும் குரல் கொடுத்த காரணத்துக்காக ரோமத் திருச்சபையால் உயிரோடு கொளுத்தப் பட்டார்._
★வில்லியம் டிண்டேல் என்ற தேவ மனிதர் வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக படுகொலை செய்யப் பட்டு இரத்த சாட்சியாக மரத்தார்.
இந்த தேவதாசர்கள் மூலம் 16-ஆம் நூற்றாண்டில் வரப்போகும் எழுப்புதல் பெருமழைக்கு அடையாளமாக ஒரு உள்ளங்கையளவு மேகம் எழும்பினது._
*தொடர்ச்சி கீழே*👇🏾👇🏾

[10/31, 5:48 PM] isaac jeba: *சரித்திரத்தை மாற்றிய எழுப்புதல்*
(16-ஆம் நூற்றாண்டு)
★ _மார்டின் லூத்தர் என்ற ஜெர்மானிய கத்தோலிக்க துறவி பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனையையும் சபையின் மற்ற அக்கிரமங்களையும் கண்டித்து தனது 95 கோட்பாடுகள் அடங்கிய கடிதத்தை விட்டன்பர்க் தேவாலயக் கதவுகளில் ஆணியால் அடித்தார். எழுப்புதல் தீ பற்றிக்கொண்டது._
★ _சடங்குகளால் அல்ல விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற முழக்கத்துடன் சீர்திருத்த சபை (Protestant Church) பிறந்தது._
சபைக்குள் பல சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன, சபை வெகு வேகமாக விருத்தியடைந்தது.
★ _சீர்திருத்த சபையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க கத்தோலிக்க சபை எதிர் சீர்திருத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது._
*அனபாப்டிஸ்ட் இயக்கம்*
(16-ஆம் நூற்றாண்டு)
★ _அனபாப்டிஸ்ட் என்பது மறுமுழுக்கு என்று பொருள். இவர்கள் குழந்தை திருமுழுக்கை தீவிரமாக எதிர்த்தனர். மனந்திரும்பியே திருமுழுக்கு பெற வேண்டும் என்று வலியுருத்தினர்._
★ _இவர்கள் இயேசுவின் மலை பிரசங்கத்தை 100% பின்பற்றிய தீவிர சீஷர்கள்._
★ _கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக கடைபிடிக்கும் எந்த பழக்கத்தையும் இவர்கள் முற்றிலும் புக்கணித்தனர். உதாரணமாக திருமண மோதிரம் அணிவது, சத்திய பிரமானம் எடுப்பது, அரசு வேலைகளில் பணிபுரிவது போன்றவற்றை புக்கணித்து "பூமியில் நாம் அந்நியரும் பரதேசிகளும்" என்று வேதம் சொல்வதற்கேற்ப வாழ்ந்தார்கள்._
★ _இவர்கள் மத்தியில் அந்நியபாஷை, தீர்க்கதரிசனங்கள் போன்ற வரங்களும் அனேக அற்புத அடையாங்ளும் நடைபெற்றது. நம்மை போலல்லாமல் அந்நிய பாஷை பேசுவதால் இவர்களது வாழ்க்கையில் பிரதிஷ்டையும், பரிசுத்தமும் காணப்பட்டது._
★ _இவர்கள் 16-ஆம் நூற்றாண்டுகளில் மிகக் கொடூமாய் உபத்திரவப்படுத்தப்பட்டார்கள். கத்தோலிக்க சசபையாலும், சீர்திருத்த சபையாலும் கூட இவர்கள் கொடூரமாய் உபத்திரவப்பட்டார்கள்._
★ _இவர்கள் சபை நிறுவன மயமாக்கப் படுவதையும் (Churchianity), தேவன் அருவருக்கும் Clergy-Laity முறையையும் கடுமையாக எதிர்த்தார்கள்._
*ப்யூரிட்டன் இயக்கம்*
*(16-ஆம் நூற்றாண்டு)*
★ _ப்யூரிட்டன்கள் என்பவர்கள் Church of england-க்குள் இருந்த மிகவும் வைராக்கியமிக்க சர்திருத்தவாதிகள். இவர்கள் அனபாப்ஸடிஸ்டுகளைப் போல அல்லாமல் சபைக்குள் இருந்தபடியே சபை சுத்திகரிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பினார்கள்._
★இவர்கள் பரிசுத்தத்துக்கு அதி முக்கியத்தும்
 கொடுத்தார்கள்.
★ _இவர்கள் ஆற்றி இலக்கிய பணி குறிப்பிடத்தக்கது. அது இன்றளவும் நிலைத்து நிற்க்கிறது.(உதா: ஜான்பன்யனின் மோட்ச பயணம்)._
*முதலாம் மாபெரும் உயிர்மீட்சி*
*(18-ஆம் நூற்றாண்டு)*
★ _கி.பி 1700-ஆம் ஆண்டுகளில் அமரிக்காவில் ஏற்ப்பட்ட முதலாம் உயிர்மீட்சீயானது உலக சரித்திரத்தில் ஒரு மாபெறும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது._
★ _ஜூலை 1741-இல் யோனத்தான் எட்வர்டு அளித்த "கோபமுள்ள தேவன் கையில் பாவிகள்" என்ற செய்தியானது அமெரிக்காவையே ஓர் உலுக்கு உலுக்கியது. ஆயிக்கணக்கான ஜனங்கள் மனந்திரும்பி கிறிஸ்த்துவிம் வந்தனர்._
★ _இதே காலத்தில் ஜான்வெஸ்ஸி என்ற மனிதரைக் கொண்டு தேவன் இங்கிலாந்தில் ஒரு மாபெரும் அசைவை உண்டாக்கினார். இரே மெதடிஸ்ட் சபையின் ஸ்தாபகர் ஆவார்._
*இரண்டாம் மாபெரும் உயிர்மீட்சி*
*(19-ஆம் நூற்றாண்டு)*
★ _கி.பி 19-ஆம் நூற்றாண்டில் அமரிக்காவில் உண்டான மாபெரும் எழுப்புதல் அலையே இரண்டாம் மாபெரும் உயிர்மீட்சி என்றழைக்கபடுகிறது._
★ _இந் எழுப்புதல் பாப்டிஸ்ட், மெதடிஸ்ட் சபைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. அதே நேரத்தில் சென்த் டே அஅட்ன்டிஸ்ட், மார்மன் போன்ற உபதேச மாறுபாடுள்ள சபைகள் இக்காலத்திலேயே உருவாகியது._
★ _தற்கால எழுப்புதலின் முன்னோடி என்று வர்ணிக்கப்படும் சார்லஸ் பின்னி இக்காலத்தில் தான் ஊழிம் செய்தார். இவரது அடிச்சுவட்டை பின்பற்றி வந்தவர்ள்தாம் டி.எல். மூமூடி, ல்லி சண்டே ற்றும் பில்லி கிரஹாம் போன்றோர்._
*Welsh எழுப்புதல் (20-ஆம் நூற்றாண்டு)*
★ _அக் 31, 1904 ஆம் ஆண்டு இவான் ராபர்ட்ஸ் உள்ளிட்ட 16 வாலிபர்கள் ஜெபித்துக் கொடிருந்த ஒரு கிராமச்சபையில் இருந்து ஒரு மாபெறும் எழுப்புதல் வெடித்தது. இது வேல்ஸ் தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பற்றி எரிந்தது._
★ _மதுக் கடைகள் மூடப் பட்டன, களியாட்ட விடுதிகள். நாடகக் கூடங்கள் மூப்பட்டன, அரசியல் கூட்டங்கள் ஆட்களின்றி நடந்தது, சபைகளுக்குள்ளே கூட்டம் அலை மோதியது. வேல்ஸ் தேசம் முழுவதும் கிறிஸ்துவின் தொனி ஒலித்துக் கொண்டே இருந்தது._
*அசுசா தெரு எழுப்புதல்  (20-ஆம் நூற்றாண்டு)*
★ _இது பெந்தேகோஸ்தே சபைகள் உருவாக காரணமான எழுப்புதல் ஆகும். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அசுசா தெருவில் உள்ள ஒரு சபையில் சடுதியில் ஏற்ப்பட்ட வித்தியாசமான ஆவிக்குரிய அனுபவங்களே இதன் தொடக்கம். இந்த எழுப்புதலை முன்னின்று நடத்தியவர் வில்லியம் சைமோர் என்ற ஆப்பிரிக்க அமரிக்கர் ஆவார்._
★ _அந்நிய பாஷை, ஆவியில் விழுதல் போன்ற அனுபவங்களால் நிறைந்தது தான் இந்த எழுப்புதல். இது அக்கால சபைத் தலைவர்கள் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது._

[1/14, 4:49 PM] Apostle Kirubakaran VT: உண்மை சில நேரம் கற்பனையை விட
பயங்கரமாக இருக்கு

[1/14, 8:26 PM] Thomas VT: பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4:12, 13
மேற்கண்ட வசனம் சபை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறது. பரிசுத்தவான்கள் சீர் பொருந்த வேண்டும்.
 சீர்பொருந்துதல் = பரிசுத்தபடுதல்
அனால் இன்று இது  அநேக சபைகளில் இது கிடையாது.
இன்று அநேக ஊழியர்கள் ஆசிர்வாதத்தை மட்டுமே பிரசங்கம் பண்ணுகிறார்கள். பரிசுத்தம் அடைவதை பற்றி கொஞ்சம் கூட பேச மாட்டார்கள். காரணம் கூட்டம் வராது, காணிக்கை தசமபாகம் கிடைக்காது. இப்படி பட்ட சபைக்கு செல்லாமல் இருப்பது நல்லது.
மனஷரை பிரியப்படுத்த பிரசங்கம் பண்ணுவார்கள்
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலா 1:10

[1/14, 8:31 PM] Thomas VT: *சபைகளில் சீர்திருத்தம் தேவை →*
கடந்த மாதம் எனது வேலையின் நிமித்தம் ஞாயிறு அன்று வேறு ஒரு சபைக்கு சென்றேன். ஆராதனையை பாஸ்டர் அம்மா நடத்தினார்கள். அவர்கள் கூறினார்கள் பாடலாம் ஆடலாம். பாடல் பாடபட்டது, (ஆடும்படியான பாடல்) எல்லோரும் ஆட ஆரம்பித்தது விட்டார்கள். சகோதரிகள் பக்கம்  பார்த்தேன் அவர்களும் ஆட ஆரம்பித்தது விட்டார்கள். ஒரு குண்டு சகோதரி தனது கனமான உடலை வைத்து ஆட முடியாமல் ஆடி கொண்டு இருந்தார்கள்.
காலத்தின் கடைசி நாட்களில் இவ்விதமாய் குதித்து ஆடிப்பாடி ஆராதிக்கும் விசுவாசிகளின் எண்ணிக்கைக்கு பஞ்சம் கிடையாது. ஆராதனை இன்றைய நாட்களில் சபைகளில் திசை கெட்டு போய் கொண்டு இருக்கிறது. அவர்கள் இடம் கேட்டால் தாவீது ராஜா நடனம் பண்ணினார். ஆகையால் நாங்களும் நடனம் பண்ணுகின்றோம் என்று கூறுகின்றனர். நீங்கள் நடனம் பண்ண விரும்பினால் ஒர் அறைக்குள் பிரவேசித்து கதவை பூட்டி பாட்டு பாடி நடனம் ஆடுங்கள். 
சில வருடங்களுக்கு முன்பு கோவையில் திறந்த வெளி மைதானத்தில் நற்செய்தி கூட்டம் ஒன்று நடைபெற்றது. அடியேன் ஒரு ஓரமாக நின்று பார்த்து கொண்டு இருந்தேன். மேடையில் வாலிப பிள்ளைகள் பாட்டுக்கு தக்க நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு அருகில் இருந்த 2 புறஜாதியர் (இந்துக்கள்) கிறிஸ்தவர்களும் சினிமாகாரர்களை போல Disco dance   ஆட ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்லி சிரித்தார்கள். தேவ நாமம் புற ஜாதிகள் மத்தியில் தூஷிக்கபட்டது. சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. 1 கொரிந்தியர் 14:40
எங்கே  அந்தவிதமான நடனம் இருக்கின்றதோ அங்கே தேவன் விரும்பும் பரிசுத்த நிலை இருக்காது. எங்கே ஒரு பரிசுத்தமான வாழ்க்கை உண்டோ அங்கு அந்த நடனம் இருக்காது.
இன்றைக்கு அநேக ஊழியர்கள்  இந்த ஆட்டம், பாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ நோட்டீஸ் கிடைத்தது. அதன் தலைப்பு "ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்". பரிசுத்த பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் தனது பரிசுத்த வாழ்வை தாவீதை போன்ற நடனங்கள் மூலம் உலகுக்கு காண்பிக்க வில்லை. நடனம் பண்ணுவதையும், ஆவியில் நிரம்பி அங்கும் இங்கும் துள்ளி குதித்து கன்று குட்டி போல சாடுவதையும் அவர் விரும்பவில்லை. நாகர்கோவில் பட்டணத்தின் தெரு வழியாக சாது சுந்தர்சிங் நடந்து சென்று கொண்டு இருந்த போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு அம்மாள் தனது வீட்டிலிருந்து அவரை கண் ஏறிட்டுப் பார்த்த போது அவர்கள் தனது  பைத்தியம் முற்றிலுமாக நீங்கி சுகம் பெற்றார்கள். ஆ எவ்வளவு மேன்மையான பரிசுத்த ஜிவியம்.
 ஊழியர்கள் தேவையற்ற வெளியரங்கமான நாட்டிய நடனங்கள் மற்றும் உணர்ச்சி வசப்பட்ட ஆட்டங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பரிசுத்தம் ஒன்றிற்கு மாத்திரம் பிரதான இடத்தை கொடுப்போமாக
அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக்கடவோம். எபிரேயர் 12 :28
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங்கீதம் 2 :11
ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? 2 கொரி 11:29

[1/14, 8:31 PM] Jeyachandren Isaac VT: 👆உண்மைதான் ஐயா👍✅. இதற்கு அனேக காரணங்கள் இருந்திலும்...
மேலே சொல்லபட்ட எல்லா ஊழியங்களையும் பெரும்பாலும் ஒருவரே செய்வதும் ஒரு காரணமோ.......🤔🤔

[1/14, 8:33 PM] Sam Jebadurai Pastor VT: ✳ *இன்றைய வேத தியானம் - 14/01/2017* ✳
👉 திருச்சபையில் சீர்திருத்தம் தேவையா❓
👉 திருச்சபைக்கு இக்காலத்துக்கும் வழிகாட்டிகள் தேவையா❓
👉 திருச்சபையின் உபதேசங்களில் மாறுபாடு இருக்கவில்லையா❓
                   *வேத தியானம்*

[1/14, 8:36 PM] Jeyachandren Isaac VT: 👆✅அர்த்தமற்ற ஆராதனை முறைகளிலிருந்து விடுதலை பெற சீர்திருத்தம் அவசியமே👍👍

[1/14, 8:38 PM] Bro In Christ VT: சபைகளில் சீர்திருத்தம் தேவை →Post by Bro Thomas.. 👌🏼👌🏼👍🏽👍🏽

[1/14, 8:57 PM] Apostle Kirubakaran VT: நான் நடத்தும் சபைகளில் இவை உண்டு

[1/14, 9:00 PM] Apostle Kirubakaran VT: சீர் இல்லை என்பதால்  அவர்கள் பரிசுத்தவான்கள் இல்லை என்று பவுல் கூறுகிறாரா?
எபேசியர் 4:12
*பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு,* சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

[1/14, 9:02 PM] Apostle Kirubakaran VT: தாமஸ் ஐயா ஒரு ஊழியத்தை வைத்து எல்லாரையும் ஒரே மாதிரி மதிப்பிடுவது தப்பு

[1/14, 9:10 PM] Apostle Kirubakaran VT: ஊழியம் என்பது அனுபவத்தை வைத்து செய்வது அல்ல.
அனுபவம் ஒருவருக்கு ஒரு விதமாயும், இன்னொறு வருக்கு ஒரு விதமாயும் இருக்கும்.
எல்லா அனுபவமும் எல்லாருக்கும் சரிபடாது.
ஊழியம் விசுவாசம்.கிருபை இவைகளை மைமாக வைத்து செயல்படுவதே ஊழியம்

[1/14, 9:11 PM] Apostle Kirubakaran VT: அனுபவங்கள் ஒன்றுக்கும் உதவாது என்பதே எனது அனுபவம்

Post a Comment

0 Comments