Type Here to Get Search Results !

இரண்டு மாறாத விசேஷங்கள் என்றால் என்ன❓

[9/5, 11:04 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம்* ✝
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். எபிரெயர் 6:18

👉 *இதில் சொல்லப்பட்டிருக்கிற இரண்டு மாறாத விசேஷங்கள் என்றால் என்ன*❓
🔥வேதத்தை தியானிப்போம்🔥

[9/5, 11:05 AM] Samson David Pastor VT: 👉 கவனிப்போம் 👇🙏
நற்கிரியைகளால் ஒரு மனிதன் ஒரு போதும் இரட்சிப்படைவதில்லை.
ஆனால்,
இரட்சிப்படைந்தோர் நற்கிரியைகள் செய்யாமல் இருக்க முடிவதில்லை.
📖 மத்தேயு 5:16
எபேசியர் 2:10
🙏🙏

[9/5, 11:17 AM] Levi Bensam Pastor VT: Tamil Bible. எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:40
[40]அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த😀😀😀 நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

[9/5, 11:21 AM] Jeyanti Pastor VT: 2 மத்தேயு 6:3  அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
 மத்தேயு 13:11

இதுவும் சேர்த்துக் கொள்ளுங்கள். சீஷர்களுக்கு வெளிப்படுத்தப் பட்ட பரலோக விசேஷங்கள் என்ன?

[9/5, 11:23 AM] Levi Bensam Pastor VT: Tamil Bible. லூக்கா 2:25-32
[25]அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
[26]கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
[27]அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,
[28]அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
[29]ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
[30]புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
[31]தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.
[32]உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.👀👀👀👀👀👀👀👀👀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[9/5, 11:32 AM] Levi Bensam Pastor VT: நிச்சயமாக உங்களுடைய காரியம் எல்லாவற்றையும் நாம் பார்ப்போம், இந்த தியானம் முடியட்டும், இவ்வளவு நேரம் நீங்களும் நீடிய சாந்தமாயிருந்து கேட்டீர்கள், தொடர்ந்து கேட்கவும் 😀😀😀😀

[9/5, 11:39 AM] Isaac Samuel Pastor VT: அருமையான வி ளக்கங்கள் இந்த சகோதரர் கொ டுத்து இருக்கிறார்.....இந்த உள்ளம் மெய்யான ஒன்றை தேடும்......என்ன உங்கள் ஆதங்கம் ஈர்த்தது...நிச்சியமாக நா ம் ஆராயலாம்....மெய் பொருளை கண்டடைய.....பயணம் தொடருவோம் brother👍👍👍👍👏👏

[9/5, 11:39 AM] Elango: மாறாத பிரமாணம் இருக்கிகிறதென்றால் மாறுகிற பிரமாணமும் இருக்கிறதென்றுதானே அர்த்தம்
தியானிப்போம்😀🙏

[9/5, 11:46 AM] Levi Bensam Pastor VT: Tamil Bible. 1 கொரிந்தியர் 13:4,10-12
[4]அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
[10]நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
[11]நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
[12]இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏

[9/5, 12:04 PM] Jeyanti Pastor VT: 2 மத்தேயு 6:3  அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
 மத்தேயு 13:11
இதுவும் சேர்த்துக் கொள்ளுங்கள். சீஷர்களுக்கு வெளிப்படுத்தப் பட்ட பரலோக விசேஷங்கள் என்ன?

[9/5, 12:11 PM] Elango: 2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
ரோமர் 8 :2
ஜூவனுடைய ஆவியின் பிரமாணம் மறாத பிரமாணமா இருக்குமோ🤔
[9/5, 12:13 PM] Elango: மத்தேயு 7:12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே *நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.*

[9/5, 12:14 PM] Elango: பிரதான பிரமாணம் *அன்புபு*

[9/5, 12:21 PM] Elango: எபிரெயர் 7:18 *முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.*

[9/5, 12:22 PM] Elango: அப்படியென்றால் மாறாத பிரமாணம் இரண்டு என்ன?

[9/5, 12:24 PM] Jeyanti Pastor VT: என்ன பாஸ்டர் கேள்வி Harda? போரா இருக்கா? அக்கினி பறக்கலையே

[9/5, 12:25 PM] Kumary-james VT: இந்த இரண்டு மாறாத பிரமாணம்த்தை Pr.கிலாரட்டி சாலோமன் அவருடைய குறுப்பில் விவாதித்த காரியம் தானே?

[9/5, 12:29 PM] Elango: இயேசுகிறிஸ்து என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். *மாறாத பிரமாணம்*

[9/5, 12:30 PM] Apostle Kirubakaran VT: அன்பு என்றும்  மாறாத பிரமாணம்

[9/5, 12:31 PM] Elango: இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், *மனம்மாறாமலும்*  இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்

[9/5, 12:34 PM] Elango: *இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.*

[9/5, 12:37 PM] Elango: தீத்து 1:3 *பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி,* அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,

[9/5, 3:14 PM] Elango: ஒன்று

14 *நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!*
எபிரேயர் 9
Shared from Tamil Bible

[9/5, 3:17 PM] Elango: இரண்டு

17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, *கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே.*
ரோமர் 5 :17

Shared from Tamil Bible 3.5

[9/5, 3:23 PM] Elango: இரண்டு மாறாத விசேஷங்கள்.
1. சர்வலோகத்தின்  பாவங்களுங்களுக்காக ஒரேதரம் பலியிடப்பட்டு, நாம் பரிசுத்த ஸத்லத்திற்க்குள் பிரவேசிக்க இயேசுவின் மூலம் கிடைத்த புதிதும், ஜுவனுமான புதிய மார்க்கம்.
2. இயேசுகிறிஸ்து மூலமாய் நமக்கு கிடைக்கப்போகிற நித்திய ஜீவன்

18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, *ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.*
ரோமர் 5 :18

[9/5, 3:53 PM] Kumary-james VT: இரண்டு மாறாத விசேஷங்கள் என்ன ❓ *எபிரேயர் 6: 18 ல் வரும் வசனம் இது, இதை அநேகர் தவறாக விளக்கம் கொடுக்கிறார்கள், எபிரேய ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்றால்*      கவனியுங்கள் 👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
13. ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:
 17. அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது "ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப்" பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
18. நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி  *அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால்* நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.     கவனியுங்கள்👇🏽👇🏽👇🏽
*இதை தமிழில் வாசிக்கும் போது புரியாதது போல உள்ளது. 👉விளக்கம் என்னவெனில்*
*ஆபிரகாமுக்கு தேவன் வாக்கு பண்ணுகிறார்*.....👉 13 அதிகாரத்தில்👇🏽👇🏽
*அதை இரண்டு காரியங்களால் நிச்சயப்படுத்துகிறார் அந்த 2 காரியங்கள் என்ன*❓
(1) வசனம் 17 வரும் "தேவனுடைய ஆலோசனையின் மாறாத நிச்சயம்"  அர்த்தம் என்ன வென்றால்👉 *தேவன் ஒரு வார்த்தை சொன்னாலே அது மாறாதது, நிச்சயமானது , நடந்தே தீரும் என்பதே*....
(2.) *இரண்டாவது, வசனம் 13ல் வரும் ஆணையிடுதல். அர்த்தம் என்னவென்றால் தேவன் ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்கு கொடுத்தாலே அது நிச்சயமானதுதான் யாராலும் அதை மாற்ற முடியாது, ஆனாலும் தேவன் அதோடு விடாமல் தான் சொன்ன வார்த்தை நிச்சயமாய் நடக்கும் என்பதைக் காட்ட தன் மேலேயே ஆணையிட்டார் என்பதே இந்த வசனத்தின் அர்த்தம்*
இப்போது நமக்கு தேவனுடைய *வாக்குத்தத்தம்* நிச்சயம் நடக்கும் என்பதற்கு *இரண்டு உறுதி*, அல்லது மாறாத விசேஷங்கள் கிடைத்திருக்கிறது.
(1) ஒன்று அவருடைய மாற்றப்பட முடியாத ஆலோசனை *வார்த்தை *(GOD'S WORD)* இரண்டு இது நடக்கும் என்று தேவன் தன்மேலேயே இட்ட *ஆணை *(PROMISE)*            கர்த்தர் எனக்கு கெடுத்த வெழிப்பாடு

[9/5, 4:41 PM] Jeyaseelan VT: 👆👆👆வேதவிளக்கம்....
எபிரெயர் 6
18  நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
19  அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
20  நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
எபிரெயர் 7
1  இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
2  இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.