Type Here to Get Search Results !

தேவ பிள்ளைகளுக்கு விபத்தை கர்த்தர் ஏன் அதை அனுமதிக்கிறார்❓

[10/18, 8:47 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 18/10/2016* ✝

👉 தேவ பிள்ளைகளுக்கு விபத்து வருமா❓ விபத்து வருமாயின் கர்த்தர் ஏன் அதை அனுமதிக்கிறார்❓

*கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். சங்கீதம் 121 :7*

👆👆 *சங்கீதம் 121:7*  வசனத்தின் விளக்கம் என்ன❓இதில் தீங்கு என்பதின் பொருள் என்ன❓

👉 *சங்கீதம் 121:7* இல் உள்ள வாக்குதத்தம் உண்மை எனில் தேவன் தம் பிள்ளைகளுக்கு விபத்துகளை அனுமதிப்பது ஏன்❓

*வேதத்தை தியானிப்போம்*



[10/18, 8:59 AM] Ragu Nathan Whatsapp: 11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91 :11

[10/18, 9:10 AM] Levi Bensam Pastor: சங்கீதம் 121: 7
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; *அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.*
Psalm 121: 7
The LORD shall preserve thee from all evil: he shall *preserve* thy *soul*
👉👉👉 இங்கே சொல்லப்பட்ட பாதுகாப்பு ஆத்துமாவை குறித்து 👏

[10/18, 9:17 AM] Ebi Kannan Pastor: இந்த  மூப்பர்கள்  என்பவர்கள் சபையில்  மூத்தவிசுவாசியல்ல மாறாக முழு நேரமும்  கர்த்தருடைய பணியில் உள்ள ஊழியர்கள்

[10/18, 9:17 AM] Levi Bensam Pastor: Tamil Bible. லூக்கா 13:1-5
[1]பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
[2]இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, *மற்ற எல்லாக் கலிலேயரைப்பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?*
[3]அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.
[4]சீலோவாமிலே *கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே;* எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும், *அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?*
[5]அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓

[10/18, 9:30 AM] Ebi Kannan Pastor: 2 கொரிந்தியர் 7:5
[5]எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.

[10/18, 9:42 AM] Levi Bensam Pastor: Tamil Bible. 1 கொரிந்தியர் 4:9-10
[9]எங்களுக்குத் தோன்றுகிறபடி *தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்;* நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.
[10]நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.💪💪💪💪💪

[10/18, 9:53 AM] Levi Bensam Pastor: Tamil Bible. 2 கொரிந்தியர் 1:9-10
[9]நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.
[10]அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.👍👍👍👍👍👍

[10/18, 10:18 AM] Isaac Pastor Punjab: 23. அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
24. யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;
25. மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
26. அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
27. பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

[10/18, 10:57 AM] Thomas Pastor: கடந்த வாரம் எனது நண்பர் (விசுவாசி)
வண்டியில் இருந்து கிழே விழுந்து விட்டார். அவரை பார்க்க சென்றிருந்தேன். தலையில் தையல் போட்டு இருந்தார்கள். எப்படி நடந்தது என்று கேட்டேன். நடந்த விதத்தை கூறினார். அதுமட்டுமல்ல "தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது" என்று கூறினார்.
இன்றைக்கு அநேக தேவனுடைய பிள்ளைகள் இந்த வசனத்தை தங்கள் பாடுகளில் கூறுகிறார்கள். நல்லதுதான்.
ஆனால் தேவனுடைய பிள்ளைகள் தங்கள் பாடுகளில் தங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது ஏன் வந்தது ? தேவனுடைய சிட்சையா ?  தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் எதுவும் என் வாழ்க்கையில் உண்டா ?
நாம் தேவனுடைய பிள்ளைகள் ஆன பிறகு சில சில தவறுகள் நம்முடைய வாழ்க்கையில் காணப்படும். அதை சரிபடுத்த சிட்சை. சிட்சையின் போது மனந்திரும்ப வேண்டும்.
சோதனை வேறு சிட்சை வேறு.
சிட்சை (தண்டனை) எந்த விதத்திலும் வரும் (வியாதி, கஷ்டங்கள், உபத்திரம்)
யோனா கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாத போது கடல் கொந்தளித்தது - யோனா கூறுவதை கேளுங்கள்:-
என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். யோனா 1:12
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. நீதி் 3 :11
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான். ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். யோபு 5 :17
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன். சங்கீதம் 119 :71
எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். எபிரேயர் 12 :11
சிட்சையினால் விபத்து கூட நேரிடும்

[10/18, 11:30 AM] Levi Bensam Pastor: Tamil Bible. 1 கொரிந்தியர் 4:9-10
[9]எங்களுக்குத் தோன்றுகிறபடி *தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்;* நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.
[10]நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.💪💪💪💪💪

[10/18, 11:30 AM] Levi Bensam Pastor: Tamil Bible. 2 கொரிந்தியர் 1:9-10
[9]நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.
[10]அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.👍👍👍👍👍👍

[10/18, 11:44 AM] Jeyanti Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 4
86  நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்ததுÉ வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
 யோபு 30:26
87  என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறதுÉ உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
 யோபு 30:27

[10/18, 11:56 AM] Tamilmani: விபத்து மனித தவறுகளால் வருவது. விசுவாசி & அவிசுவாசி யாராயிருந்தாலும். இதில் காக்கப்படுகிறது கர்த்தராலே மட்டுமே. முன் அறிந்தவர், தேவ தூதர்களை அனுப்பி காப்பாற்றுவார். ஏன் காப்பாற்றப்படவில்லை என்பதே கேள்வி.
சில விபத்துகள் சாத்தானால் வருகிறதை அறிகிறேன். ஆனால் நிச்சயமாக ஒன்று அறிவேன், தீடீர் ரயில் விபத்து - விமான விபத்து - இப்படி நடக்கும் விபத்துகளில் இரட்சிக்கப்பட்ட சகோ - சகோதரி இருந்தால் அவர்கள் எந்த வேதனையும் அறியாமல் உணராமல் Just இறந்து விடுவார்கள்.

[10/18, 12:06 PM] Elango: ஒரு தேவ மனிதர் மருத்துவமனைக்கு போகக்கூடாதென்று பிடிவாதமாக இருந்தவர்.
சில உடல்நிலை பிரச்சனையால் மருத்தவமனை சென்றார்.
மருத்துவமனையில் ஒரு ஆவிக்குரிய புத்தகத்தை எழுதி அனேகருக்கு பக்திவிருத்தியை கொண்டுவர தேவன் கிருபை செய்தார்.

[10/18, 1:11 PM] Tamilmani: *விபத்திற்க்கு முன் இரட்சிப்பு*
நான் சீனியர் செக்சன் பொறியாளாராக இரயில்வேயில் இருநதபோது
எங்களுடன் சீனியர் டெக்னீசியனாக இருந்தவர் ஹரி கிருஷ்ணன். என்மீது அன்பாக மரியாதையாக இருப்பவர். நான் கிறிஸ்துவுக்குள் வந்த சமயத்திற்க்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். ஒரே ஊரிலே குடியிருந்தோம். தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டார்.  என்னைப் பார்க்க வருவார். அவருடைய மனைவி கிறிஸ்தவ தேவாலயத்திற்க்கு (விஷேச நாட்களில்) செல்பவர். குழந்தை இயேசுவை வணங்குபவர். இவரோ தீவிர இந்து பக்தர். தினமும் காலையில் அவர் கோயிலுக்குச்சென்று வணங்கி விட்டுத்தான் வேலைக்குப்போவார். பக்திமயமாக இருப்பார்.
நான் ஐம்பது வயது வரை கடவுள் இல்லை என்று வாழ்ந்தவன், இவர் எப்படி கிறிஸ்தவனாக மாறினார் என ஆச்சரியப்பட்டு மற்றவர்களிடம் பேசுவார். நான் படிக்கிற புத்தகங்கள் மற்றும் ஆராதனைப் பாடல்கள் புத்தகங்களை எடுத்துப்பார்ப்பார். படிக்க மாட்டார். இவர் வேலை செய்கிற இடத்தில் கிறிஸ்தவ சகோதரி வாக்குத்தத்தம் கார்டை தந்திருக்கிறார். என்னிடம் வந்து படிக்க புத்தகங்கள் கேட்டார், நானும் பல ஊழியங்களின் இதழ்களை கொடுத்தேன். படிக்க ஆரம்பித்தார். ஆராயவும் ஆரம்பித்தார்.
என் குடும்பத்திற்க்கு ஜெப விண்ணப்பம் எழுதித்தாருங்கள், அதற்க்கு அனுப்ப வேண்டும் என்றார்.
நான் சொல்ல அவர் எழுதினார். அதை சரி செய்து கொடுத்தேன். பின்னர் பைபிள் படிக்க ஆரம்பித்தார். வேதத்தைப் பற்றி நிறைய நானும் பாஸ்டர்களைப்போல பேசனும் என்றார்.  கோயிலுக்குப்போறதை கொஞ்ச கொஞ்சமாக மறந்தார். பெரிய பொட்டு நெற்றியில் வைத்திருப்பார், அதையும் வைக்க மறந்தார். எங்க பாஸ்டரை அழைத்து அவருக்கு ஜெபிக்க வைத்தோம். சபைக்குச்சென்றார். கழுத்தில் எப்போதும் இருக்கும் வலி போய் விட்டது என்றார். தினமும் (கழுத்தைச்சுற்றி அணியும்) ஸ்கால்ப் அணிவதை எடுத்து விட்டார். அவர் தன் குடும்பத்திற்க்காக கடன் வாங்கியிருந்தார். அநியாய வட்டி கொடுத்துக்கொண்டு வந்தார். அவர்கள் எல்லாம் தனக்கு நெருக்கடி கொடுப்பதில்லை என ஆச்சரியப்பட்டார்.
கர்த்தரை அறிகிற அறிவில் வளர்ந்தார். எதார்த்தமாக எதையாவது கபடில்லாமல் பேசிக் கொண்டிருப்பவர் தேவையானதை அறிவாய் பேசி வேலைக்கு போய் வருவார்.
   ஒருநாள் காலையில் துயரமான செய்தி வந்தது. அவர் ஒரு சிறிய ஒலைக் குடிசை கடையில் (கம்பெனிக்கு எதிரே)
டீ குடித்துக் கொண்டிருந்தபோது ஒரு வளைவில் திருப்ப முயன்று கொண்டிருந்த பாரத்தை ஏற்றி வந்த லாரி டீக்கடைமீது சாய்ந்து விழுந்து விட்டது. கடையில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர். இவரும்தான். அதிர்ச்சியான செய்தி. தோழரை இழந்தேன்.
தக்க சமயத்தில் கர்த்தரை ஏற்றுக்கொண்டதால் பரலோகத்திற்க்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். நான் தினமும்  வேத வசன
எஸ். எம். எஸ்.இவர் உட்பட
40 பேருக்கு அனுப்புவேன்.
அன்று அனுப்பப்பட்ட வசனம்.
(நான் அனுப்புகிற வசனம் தினம் ஒவ்வொருவரைத் தொடும்.)
*"கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே.*
(கர்த்தர் உனக்காக மிகப்பெரிய விலை செலுத்தி உண்டாக்கினாரே)
*ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்."*
(1 கொரி 6: 20)

[10/18, 2:20 PM] Tamilmani: *ஏன் விபத்துக்கள் நடக்கின்றன?* *தவிற்க்கலாமா?*
*கர்த்தர் உதவுவாரா?*
சில விபத்துக்கள் மனித தவறுகளால் வருவது. விசுவாசி & அவிசுவாசி யாராயிருந்தாலும்.
இதில் நாம் காக்கப்படுவது கர்த்தராலே மட்டுமே. முன் அறிந்தவர்,
தேவ தூதர்களை அனுப்பி காப்பாற்றுவார். ஏன் காப்பாற்றப்படவில்லை என்பதே கேள்வி.
*விவேகி பாவத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.* (நீதிமொழிகள் 22 :3)
_மனித தவறுகளால் சில விபத்துக்கள் நடக்கிறது. ஏன் எதனால்? மனிதனுக்கு அறிவும் ஞானமும் குறைவு. ஏன் இவைகளை இன்னும் அதிகமாக பெற முடியாதா? முடியும்.  எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் ஜெபித்துப்பெற வேண்டும்.  மனிதன் ஞானமாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்._
*மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்.*
(யாத்திராகமம் 31: 5)
_என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,_
(நீதிமொழிகள் 2:1)
_சில விபத்துக்களின் காரணத்தை ஊகிக்கவே முடியாது.  நம் உறவு தேவனிடத்தில் ஆரோக்கியமாக இருந்தால் ஆவியானவர் நமக்கு வரக்கூடிய ஆபத்தை முன்பே எச்சரிப்பார்._
_சில விபத்துகள் சாத்தானால் வருகிறது, கர்த்தரால் வருகிறது, மனிதனால் வருகிறது, அல்லது மூன்றும் சேர்ந்து வருகிறது._
_சில நேரங்களில் நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும், நான் ரொம்ப ரிஸ்க் எடுக்கிறேனா, ஆபத்தை நோக்கி பயணம் செய்கிறேனா அப்படீன்னு. விளையாட்டுகளில் மோசமான பாதைகளில் பயணம் செய்கிறபோது மனசில கேட்கனும்.     ஆனால் நம்ம குணம் அப்ப எழும்பும்,  மீறின நம்பிக்கை - சொந்த பலம் வெளிப்படமா இருக்கனும். அப்படியில்லைன்னா பரவாயில்லை._
_சில நேரங்களில்  பாவத்திற்க்கும்  விபத்திற்க்கும் இணைப்பிருக்கும், இல்லாமலும் இருக்கும்._
_ஆனால் நிச்சயமாக ஒன்று அறிவேன், தீடீர் ரயில் விபத்து - விமான விபத்து - இப்படி நடக்கும் விபத்துகளில் இரட்சிக்கப்பட்ட சகோ - சகோதரி இருந்தால் அவர்கள் எந்த வேதனையும் அறியாமல் உணராமல் Just இறந்து விடுவார்கள்._

[10/18, 2:29 PM] Jeyanti Pastor: நீதிமொழிகள் 3
6  உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

[10/18, 2:44 PM] Charles Pastor: சங் 121:7 இதில் வரும் தீங்கு என்பது ஆத்துமாவுக்கு வரும் தீங்கு ஆகும். அதாவது சங் 121:1ன் படி ஒத்தாசை அனுப்பும் தேவனை நோக்கி இருக்கும் ஒருவருக்கு எல்லா சூழலிலும் அவர் ஆத்துமாவை பாதிக்ககூடிய அல்லது ஆத்துமாவை தேவனை விட்டுவிட்டு பிரிக்கும் எல்லா  தீங்குக்கும் விலக்கி காப்பேன் என கர்த்தர் வாக்குபன்னுகிறார். 👇

[10/18, 2:48 PM] Charles Pastor: சில சயத்தில் சரீரத்தை பாதிக்கும் வியாதி, விபத்து, சிறைவாசம், துன்புறுத்தபடுதல், இரத்த சாட்சி மரணம் போன்ற வற்றை தேவன் நமக்கு அனுமதிக்கலாம் 👇

[10/18, 2:51 PM] Charles Pastor: பவுல் இதை சந்தித்தார் “ஆறுகளின் மோசம்....., சமுத்திரத்தின் மோசம் 2கொரி 11:26,27.

[10/18, 2:53 PM] Charles Pastor: அப் 27:41-44 கப்பல் சேதம்

[10/18, 2:54 PM] Charles Pastor: நிச்சயமாகவே இவைகள் புவுலுக்கு

[10/18, 2:58 PM] Tamilmani: *கர்த்தர் விபத்தை தடுக்க முடியாதா?*
*அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:*
_நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும், ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்._
*அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.*
(மத்தேயு 4 : 5 -7)
_கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பவர்களுக்கு அவரின் வாக்குத்தத்தம் மிகப்பெரிய பாதுகாப்பும் அது பரந்து விரிந்ததாகும். அவரால் நாம் கல்லில் இடறாதடிக்கும் பாதுகாப்பார். இருந்தாலும் இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது எனவும் காட்டியிருக்கிறார்._

[10/18, 2:59 PM] Charles Pastor: நிச்சயமாகவே இவைகள் பவுலுக்கு இவைகள் சரீரபிரகாரமாக பாடுகளை கொண்டுவந்தது எனினும்  அவர் ஆத்துமா இச்சோதனையில் தேவனைவிட்டு பிரிக்கபடவில்லை. மாறாக அது அவரை தேவனோடுள்ள ஐக்கியத்திற்கு நேரகவே நடத்தியது.

[10/18, 3:02 PM] Charles Pastor: தேவன் நம் சரீரம் ஆத்துமாவை பாதுகாக்கிறவராய் இருந்தாலும் முதற்கரிசனை ஆத்துமாவுக்கு தான்

[10/18, 3:05 PM] Charles Pastor: அழிவுக்குரிய சரீரத்தை அவர் என்றென்றைகும் காக்காவிட்டாலும் நித்தியத்திற்கு ஆத்துமாவின் மீது  மிகுந்த கயிசனை கொண்டுள்ளார்

[10/18, 3:08 PM] YB Johnpeter Pastor: ரோமர் 1: 12
எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்கு 👉தேவனுடைய 👉சித்தத்தினாலே 👉எனக்கு 👉நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் 👉கிடைக்கவேண்டுமென்று 👉🙏வேண்டிக்கொள்ளுகிறேன்.
Romans 1: 12
That is, that I may be comforted together with you by the mutual faith both of you and me.

2கொரிந்தியர் 11: 26
👉அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்;👈 👉ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், 👉சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
2 Corinthians 11: 26
In journeyings often, in perils of waters, in perils of robbers, in perils by mine own countrymen, in perils by the heathen, in perils in the city, in perils in the wilderness, in perils in the sea, in perils among false brethren;

[10/18, 3:27 PM] Charles Pastor: தேவனால் சாட்சி கொடுக்கபட்ட நீதிமான் யோபு அவனுடை 10 பிள்ளைகளும் திடீர் விபத்தில் மரித்து போயினர் 👇

[10/18, 3:30 PM] Charles Pastor: யோபு 42:10-13 ஐ வாசிக்கும் போது எல்லாவற்றையும் கர்த்தர் இரட்டத்தனையாக ஆசீர்வதித்தார் மிருக ஜீவன்களில் இரட்டிப்பாய் தந்தவர் பிள்ளைகள் மட்டும் 10 தான் தந்தார் காரணம் 👇

[10/18, 3:31 PM] Charles Pastor: யோபுவின் பிள்ளைகளின் ஆத்துமாவை தேவன் காப்பற்றியதே ஆகும் எப்படி? 👇

[10/18, 3:33 PM] Charles Pastor: மிருகத்தின் ஆத்துமா பரலோகம் போவதில்லை ஆகவே அதை இரட்டிபாக மீண்டும் பூமியிலேயே கொடுத்து விட்டார். ஆனால் 👇

[10/18, 3:36 PM] Charles Pastor: யோபுவின் பிள்ளைகள் ஆத்துமா சேதம் இல்லாமல் தேவனிடத்தில் பாதுகாக்கபட்டது எனவே முதல் பிள்ளைகளின் ஆத்துமா பரத்தில் 10 மீண்டும் யோபுவின் பிள்ளைகள் பூமியில் 10 ஆக மொத்தம் இரட்டிபான பிள்ளை செல்வங்கள் 20

[10/18, 3:38 PM] Charles Pastor: நம் தேவன் ஆத்துமாவிற்கு தீங்குவராமல் காக்கும் தேவன்

[10/18, 3:43 PM] Charles Pastor: தேவனுடைய பிள்ளைகளுக்கு விபத்து வரலாம், வியாதிவரலாம், பிரச்சனை போராட்டம் வரலாம் ஏன் இரத்த சாட்சியாய் மரணம் கூட வரலாம் இதில் எது ஒன்றும் அவர்களின் ஆத்துமாவை சேதபடுத்த முடியாது காரணம் அதை காக்கிறவர் கர்த்தர்.

[10/18, 3:47 PM] Thomas Pastor: எனது நண்பர் ஒருவர் பைக் ஓட்டும் போது கீழே வீழுந்து கை எலும்பில் முடிவு ஏற்பட்டது.
அவரை பார்க்க சென்று இருந்தேன். அடியேன் கேட்ட முதல் கேள்வி வண்டி ஸ்டார்ட் பண்ணும் முன்னால் ஜெபம் செய்திர்களா ? இல்லை என்று கூறினார்.
2 wheeler or 4 wheeler வண்டி ஸ்டார்ட் பண்ணும் முன்னால்  ஜெபம் செய்து வண்டி ஓட்ட வேண்டும்
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் - மத்தேயு 6:13

[10/18, 3:49 PM] Charles Pastor: வாக்கு பன்னினவர் மாறிடார்
வாக்குதத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே
அழைத்தவர் உன்மையுள்ளவர்

[10/18, 3:53 PM] Elango: அன்றியும், *அவருடைய தீர்மானத்தின்படி*✍✝ அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் *சகலமும்💯 நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.*
ரோமர் 8 :28

[10/18, 3:54 PM] Charles Pastor: தானியேலின் இடைவிடா ஜெபம்  சிங்க குகைக்கு தூதனை கொண்டு வந்தது தீங்கு வராமல் காப்பாற்ற.... அல்லேலூயா

[10/18, 3:54 PM] Thomas Pastor: கர்த்தர் யோபுவ,ின் வீட்டை வேலி அடைத்து பாதுகாத்தார். வேலி பிடுங்கியவுடன் மேற்கண்ட காரியங்கள் நடந்தது. கர்த்தருடைய பாதுகாப்பு (வேலி) இருந்தால் ஒன்றும் நமக்கு நடக்காது

[10/18, 4:03 PM] Charles Pastor: சரீரத்தின் மீது அதிகாரமுள்ள பிசாசுக்கு ஆத்துமா மீது அதிகாரம் இல்லை.. இவ்வுண்மையை அறிந்த யோபு சரீரம் அழுகி நாற்றம் வந்த போதும் “என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்.... என் சொந்த கண்களால் பார்பேன்” என விசுவாச முழக்கமிட்டான். அவனுக்கு தெரியும் என் ஆத்துமாவை காக்க வல்லவர் என் கர்த்தர் என்று....

[10/18, 4:09 PM] Charles Pastor: ஆத்துமாவை குறித்த அறிவுள்ளவன், சரீரத்தை அற்பமாக என்னுகிறான்...! சரீரத்தை குறித்த அறிவில்லாதவனோ ஆத்துமாவை அற்பமாக என்னுகிறான்....!!

[10/18, 4:19 PM] Charles Pastor: பரலோகத்தில் நாம்  யாவரும் பேச  இருக்கும் பாஷையின் ஒரு வார்த்தை தான் அல்லேலூயா. இதன் பொருள் எல்லா துதி, கனம், மகிமை, புகழ், மாட்சி..... தேவனுக்கே என்பதாகும்.

[10/18, 4:22 PM] Tamilmani: *கர்த்தர் விபத்தை ஏன் அனுமதிக்கிறார்?*
_விபத்துகள் நம் வாழ்வை பெரிதளவு பாதிக்கும் என்பது நிதர்சனம். மிகக்கடினாமான ஒன்று. கர்த்தர் நம்மை ஏன் காபாற்றுவதில்லைன்னு நிச்சயமா கேட்போம். கர்த்தர் நீதியானவரும் நியாயமானவரும் என்பதை அறிவோம். ஆனால் விபத்துக்கள் முற்றிலும் நியாயமானதல்ல, மனம்போன போக்கில் நடப்பது. ஆனால் தவறான தீர்ப்பு நம் வாழ்வை ஒரு விநாடியிலே மாற்றிப்போடும். கர்த்தர் இந்த உலகத்தை விபத்துக்கள் ஏற்படுவதற்க்காக படைக்கவில்லை._
_தேவன் உங்களை விபத்துகளிலிருந்து காப்பாற்றதாக சொல்லவில்லை. கர்த்தர் தன்னை நினைப்பதற்கே தவிர்ப்பவர்களை எச்சரிக்கிறவர். நாம் அவர்மேல் வைக்கின்ற நம்பிக்கையின் அளவு எவ்வளவுன்னு யோசித்து பார்க்க வேண்டும். நாம் தேவனோடு நேரத்தை செலவிடாம அவருடைய முழு பாதுகாப்பதையும் எதிர்பார்க்கிறோமா? யோசித்துப்பாருங்க. நம் எதிர்பார்ப்பும் நியாயமான்னு பாருங்க._
_சிலருக்கு விபத்து நடக்கும்போது அவர்களை முழுதாக ஒரு சேதமில்லாமல் காப்பாற்றுவார். அதற்க்கு நியாயமான நீதியான காரணம் இருக்கும். சிட்சையாகக்கூட இருக்கும். அவர்களுடைய விசுவாசத்தை சோதிக்கிறதிற்க்கும், குணம் வளர்ச்சிக்கும் செய்வார்._
_அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்._
(ரோமர் 8 :28)
 நீ புதுவீட்டைக் கட்டினால், _ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்தி கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிச்சுவரைக் கட்டவேண்டும்._
(உபாகமம் 22 :8)
*கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.*
(சங்கீதம் 121 :7)
_பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்._
(யோவான் 9 :31)
_என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,_
*உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.*
(யாக்கோபு 1 :2- 3)

[10/18, 4:37 PM] Elango: இரட்சிக்கப்படாத சில கிறிஸ்தவர்களும் மருத்துவனை ஊழியத்தில் நாங்கள் காண்பதுண்டு.
ஜெபம் செய்து ட்ராக்ஸ் மற்றும் புதிய ஏற்பாடு கொடுத்துவிட்டு வந்த பிறகு அவர்கள் மனந்திரும்பி தேவனை ஏற்றுக்கொள்வார்கள்.
*தேவ பிள்ளைகளுக்கு தேவன் அனுமதிக்கும் விபத்தும் நன்மைக்கே*

[10/18, 8:48 PM] JacobSatish Whatsapp: 1 உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
சங்கீதம் 91 :1
2 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
சங்கீதம் 91 :2
3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
சங்கீதம் 91 :3
4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார், அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
சங்கீதம் 91 :4
5 இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
சங்கீதம் 91 :5
6 இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
சங்கீதம் 91 :6
7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
சங்கீதம் 91 :7
8 உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய்.
சங்கீதம் 91 :8
9 எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
சங்கீதம் 91 :9
10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
சங்கீதம் 91 :10
11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
சங்கீதம் 91 :11
12 உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.
சங்கீதம் 91 :12
13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய்.
சங்கீதம் 91 :13
14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
சங்கீதம் 91 :14
15 அவன் என்னை நோக்கிக் கூ

[10/18, 8:51 PM] Darvin-ebin Whatsapp: கர்தருடைய பரிசுத்தநாமத்திர்கு ஸ்தோத்திரமம் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே யாவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன் நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின் உங்கள் யாவரையும் சந்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தொடா்ந்து வேதத்தை தியானிப்போம்
           ✝ *இன்றைய வேத தியானம் - 18/10/2016* ✝
👉 தேவ பிள்ளைகளுக்கு விபத்து வருமா❓ விபத்து வருமாயின் கர்த்தர் ஏன் அதை அனுமதிக்கிறார்❓
*கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். சங்கீதம் 121 :7*
👆👆 *சங்கீதம் 121:7*  வசனத்தின் விளக்கம் என்ன❓இதில் தீங்கு என்பதின் பொருள் என்ன❓
👉 *சங்கீதம் 121:7* இல் உள்ள வாக்குதத்தம் உண்மை எனில் தேவன் தம் பிள்ளைகளுக்கு விபத்துகளை அனுமதிப்பது ஏன்❓
           முதலாவதாக நாம் இந்த வசனத்தின்மூலமாக அறிந்துகொள்ளவேண்டியது தேவன் விபத்திர்குமாத்திரமல்ல உலகத்தில் மனிதர்கள் மேல் வரும் எல்லா தீங்குக்கும் தம்முடைய பிள்ளைகளை விலக்கிக் காப்பதோடு விலையேரப்பெற்ற நம்முடைய ஆத்துமாவையும் காப்பார்.
               அடுத்ததாக தேவனுடைய பிள்ளைகளுக்கு விபத்து வருமானி கேட்டால் வராது என்றுதான் சொல்லுவேன் காரணம் அடுத்த வசனம் இப்படி சொல்லுகிறது சங்கீதம் 121:8 கர்த்தர் உன் போக்கையும் உன் வார்த்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார் என்று ஆகையால் விபத்துகள் நமக்கு வராது என்று ஆணித்தரமாக ஆண்டவருடைய வார்த்தையை விசுவாசித்து சொல்லுவேன் இந்த நாட்களில் பிரயாணம் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று அதோடு ஆபத்தானதும்கூட இந்த நெருக்கமான ஓட்டத்தில் நாம் ஒவ்வொருநாழும் பத்திரமாக வீடு திரும்புவதென்பது கர்த்தருடைய கிருபையே அவர் நம் வலப்புரத்தில் நிழலாயிருந்து நம்மை பாதுகாக்கிறார்
                       அடுத்து விபத்து வருமாயின் ஏன் இதை அனுமதிக்கிறார் என்பதை பாக்கும்முன் இதை விளங்கிகொள்ளும்படி வேதத்தில் இன்னொரு பகுதியை பார்ப்போம் யோசுவா 1:5 நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்ற வாக்குத்தத்தம் தேவன் யோசுவாவை பார்த்து சொல்லுகிறார் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்கிறார் ஆனால் அனேகர் அவனை எதிர்த்து நின்றனர் ஆனால் அவர்கள் எல்லாரையும் யோசுவா மேர்க்கொண்டான் அதற்க்கு அவன் எழுந்து போராடவேண்டியிருந்தது இப்படித்தான் நாமும் வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க சத்துருவை எதிர்த்துப் போராடவேண்டும் சிலவேளைகளில் போராடியும் தோற்றுப்போகிறோம் நாம என்னதான் கிரியைகளை செய்தாலும் கர்த்தர் நம்மோடில்லாவிட்டால் தீங்குகள் ஆபத்துகள் விபத்துகள் வரும் ஆண்டவர் வாக்குகொடுத்துவிட்டார் ஆயீ பட்டணத்தாரோடு யுத்தம் செய்கின்றனர் முரிந்தோடி முப்பத்தாறுபேர் மரித்துபோய்விட்டனர் வாக்குதத்தம் என்னவாயிற்று நீ தேவனுக்கு கீழ்படிந்தால் தேவனோடுநடந்தால் தேவபிள்ளைக்குறிய கிரியைகள் உன்னிடம் காணப்பட்டால் மட்டுமே வாக்குதத்தங்கள் நிறைவேருமே தவிர கிறிஸ்தவ குடும்பத்தில் பிரந்ததாலோ கிறிஸ்தவபெயர் வைத்துக்கொண்டாலோ இல்லை தேவாலயங்கழுக்கு செல்வதாலேயோ இந்த ஆசீர்வாதங்களை வாக்குதத்தங்களை சுதந்தரிக்க முடியாது
       ஒருவேளை நீங்கள் கேட்கலாம் ஆண்டவருடைய கிரியைகளை வல்லமையாய் நடப்பிக்கிறவர்களுடைய வாழ்வில் தேவன் ஏன் விபத்துக்களை அனுமதிக்கிறார் என்று அது ஆண்டவருக்கும் அவர்களுக்கும் உள்ள காரியம் இதைநாம் இல்லை நான் சொல்லமுடியாது என்வாழ்வில் மாத்திரமல்ல ஒவ்வொருவருடைய தனிபட்டவாழ்விலும் இது ஏன் ஏற்பட்டது என்று கர்த்தர் வெளிப்படுத்துவார் ஆண்டவர் ஆயீயில் ஏன் தோல்வி என்பதை தெளிவாக வெளிப்படுத்தினார் அப்படியே ஒவ்வொருவருடைய வாழ்விலும் இது ஏன் சம்பவித்தது என்று வெளிப்படுத்துவார் அந்த கர்த்தருக்கு பிரியமில்லாத வழிகளை நம் வாழ்விலிருந்து அகற்றும்போது அவர் நம்மோடிருந்து நம்மை அடுத்த கட்டத்திற்கு வெற்றியாய் நடத்துவார் ஆமேன்
                    அன்புடன் உங்கள் சகோதரன் இ.டாா்வின் சேகா்.

[10/18, 9:00 PM] Darvin-ebin Whatsapp: ஆண்டவருடைய வழியைவிட்டுவிலகி நம்முடைய சொந்வழிகளில் நடக்கும்போது ஆண்டவருடைய பாதுகாப்பு நம்மைவிட்டு விலகிவிடுகிறது தானாகவே இது தேவநீதி இதனால் ஆபத்து நம்மை சூழ்ந்துகொள்கிறது

[10/18, 9:01 PM] Samjebadurai Pastor: எல்லா இடங்களுக்கும் இது பொருந்தாது. தயவு செய்து பாஸ்டர் சார்லஸ் அவர்களின் முந்தைய பதிவுகளை பார்க்கவும்.

[10/18, 9:06 PM] Darvin-ebin Whatsapp: நான் தெளிவாக சொல்லிவிட்டேன் அது அந்தந்த மனிதனுக்கும் ஆண்டவருக்குமுரியது என்று என்னுடைய வாழ்வில் இந்த வசன அனுபவத்தை சொன்னேன்

[10/18, 9:21 PM] Darvin-ebin Whatsapp: யோபுவின் வாழ்க்கை ஆண்டவருக்கும் தேவனுக்கும் நடந்த ஒரு சேலஞ் ஆண்டவர் யோபுவின்மேல் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார் இந்தசோதனையை தேவன் எல்லாருக்கும் அனுமதிப்பார் என்று சொல்லமுடியாது இது வேதத்தில் சொல்லபட்டபடியால் நாம் அறிந்துகொண்டோம் இதேபோன்ற ஒரு சோதனை இன்று நம் மத்தியில் ஒரு விசுவாசிக்கு இப்படி நேர்ந்தால் நம்மிலும் அனேகர் யோபுவின் நண்பர்களைப்போல்தான் பேசுவோம் காரணம் ஆண்டவர் வேதத்தில் வெளிப்படுத்தினதுபோல் இந்தகாரியத்தை வவளிபடுத்தினால்தான் நமக்கு இந்த ரகசியங்கள் புரியும்

[10/18, 9:24 PM] Samjebadurai Pastor: விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த ஒரு போதகரை ஒரு போதகரும் அவருடைய மனைவியும் சந்திக்க சென்றனர். காயப்பட்ட போதகரை நோக்கி "நீங்கள் நன்றாக ஜெபிக்கவில்லை, அதனால் தான் இது நடந்து விட்டது" என்று சொன்னார். இது நடந்து சில மாதங்களில் அந்த போதகர் ஒரு பெரிய விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆகவே விபத்தில் சிக்கியவர்கள் எல்லாம் பாவிகள் அல்லது ஜெபக்குறைவுள்ளவர்கள் என்பது தவறு.
விபத்து கீழ்கண்ட காரணங்களால் நடக்கலாம்.யோபு ஜெபிக்கிறவன். நீதிமான் ஆனால் அவன் குடும்பத்தில் விபத்து நடந்ததே..
1. மனிதனின் கவனக்குறைவு
👉சுய கவனக்குறைவு
👉மற்றவர்களின் கவனக்குறைவு
2.தேவனின் அனுமதி பேரில் பிசாசு கொண்டு வரலாம்
3. நம்மை பக்குவப்படுத்த தேவன் ஏற்படுத்துவது
4.நம்மை சரிபடுத்த தேவன்  அனுமதிப்பது

[10/18, 9:26 PM] Darvin-ebin Whatsapp: ஆண்டவருடைய வாக்குதத்தங்கள் மாராதவைகள்

[10/18, 9:33 PM] Samjebadurai Pastor: 🕎விபத்தில் சிக்கியவர்களை நியாயம் தீர்ப்பதை விட நல்ல சமாரியர்களாக இருப்பது நல்ல கிறிஸ்தவராக கிறிஸ்துவின் அன்பை வெளிக்காட்ட வேண்டும். 🕎தேவ வார்த்தையின்படி நடப்பவர்கள் மட்டுமே தேவனின் வாக்குதத்தங்களை சுதந்தரிக்க முடியும்

[10/18, 9:38 PM] Apostle Kirubakaran: சங்கீதம் 41:1-3
[1]சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
[2]கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.
[3]படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.

[10/18, 9:39 PM] Samjebadurai Pastor: விசுவாசம் என்பதே தேவ சித்தத்திற்கு முழுமையாக ஒப்புக் கொடுப்பது தான்

[10/18, 9:41 PM] Darvin-ebin Whatsapp: இதில் முதல் மூன்று காரியங்ளை ஒரு கிறிஸ்தவனாய் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் அடுத்த மூன்று காரிங்கழும் ரொம்ப சரி. ஏன் முதல் மூன்றையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேனென்று சொன்னேன் என்றால் நாம எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் விபத்துகளை தடுப்பது நம் கையில் இல்லை ஏனென்றால் எனக்கு ஒன்றுமாத்திரம் நல்லாதெரியும் கர்த்தர் காவாராயில் காவலாளிகள் விழித்திருப்பது விருதா என்பது சரி எனக்குவெளிபட்டதை சொன்னேன் நாளை சந்திப்போம் Good night

[10/18, 10:16 PM] Elango: மனுஷரே, *இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும்⛴⛴⚒🛠 உண்டாயிருக்குமென்று காண்கிறேன்*என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான். அப்போஸ்தலர் 27 :10
11 *நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்.*😏😏😏 அப்போஸ்தலர் 27 :11

[10/18, 10:47 PM] Samjebadurai Pastor: தேவன் சகலத்தையும் முன்பதாகவே அறிந்தவர் ஆனால் மனிதன் தனது சுயசித்தத்தின் படி செய்ய அனுமதிக்கிறார். ஆகவே மனிதனின் கவனக்குறைவு விபத்தை ஏற்படுத்தும்.