Type Here to Get Search Results !

கிறிஸ்தவர்கள் ஏன் ஏழையாக இருக்கிறார்கள்?

[8/4, 5:34 PM] Elango: ✳இப்போதைய வேத தியானம்

செழிப்பு தவறா இல்லையா என்பது கேள்வி அல்ல... ❌ 👉ஏன் இன்றைய கிறிஸ்தவர்கள் மிகவும் பொருளாதர வகையில் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்?  ஏன் ஏழையாயிருக்கிறார்கள்? ⁉

👉அவர்கள் நன்றாக படித்தவர்கள் ஆனாலும் அவர்கள் ஏன் பைனான்ஸில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்?  அவர்களில் ஊழியர்களும் உண்டு, விசுவாசிகளும் உண்டு.⁉
இதற்க்கு நாம் என்ன செய்யலாம்?⁉

*வேதத்தை தியானிப்போம்*
[8/4, 5:39 PM] Bensam Whatsapp: யாக்கோபு 2: 5
என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

[8/4, 5:40 PM] ‪+91 97881 24188: பாஸ்டர் லேவி அவர்கள் விதையை மையமாக வைத்த விளக்கம் மிக அருமை

[8/4, 5:42 PM] ‪+91 97881 24188: தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் செல்வந்தராக இருக்க அவசியமில்லை

[8/4, 5:44 PM] ‪+91 97881 24188: Romans          15:25-27 (TBSI)  இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.
மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம்செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;
"இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே."

[8/4, 5:45 PM] ‪+91 97881 24188: James           2:5 (TBSI)  "என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?"

[8/4, 5:50 PM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 8: 2
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
👉👆👆👆👆👆👆

[8/4, 5:51 PM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 8: 1
அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
👉இது பெரிய கிருபை 👆👆👆👆👆👆👆

[8/4, 5:51 PM] ‪+91 97881 24188: Proverbs        30:8-9 (TBSI)  மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
"நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்."

[8/4, 5:55 PM] ‪+91 97881 24188: செழிப்பு மாத்திரம் தான் ஆசிர்வாதம் என்பது வேதத்திற்கு எதிரானதாகும்

[8/4, 5:59 PM] ‪+91 97881 24188: கொடுக்கிறதிலே உண்மையில்லாததும் ஒரு காரணம்

[8/4, 6:01 PM] ‪+91 97881 24188: உழைக்காமல் இருப்பதும் ஒரு காரணம்

[8/4, 6:02 PM] ‪+91 97881 24188: Ephesians       4:28 (TBSI)  "திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்."

[8/4, 6:07 PM] ‪+91 97881 24188: செழிப்பு மாத்திரம் என்பதும் தவறு ..வறுமை மாத்திரம் என்பதும் தவறு

[8/4, 6:08 PM] Bensam Whatsapp: லூக்கா 16: 19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

[8/4, 6:08 PM] Bensam Whatsapp: லூக்கா 16: 20
லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,

[8/4, 6:09 PM] Bensam Whatsapp: லூக்கா 16: 21
அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

[8/4, 6:09 PM] Bensam Whatsapp: லூக்கா 16: 22
பின்பு அந்தத் 👉தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

[8/4, 6:14 PM] Charles Whatsapp: செழிப்பு மாத்திரம் என்பதும் தவறு ..வறுமை மாத்திரம் என்பதும் தவறு 👉 இதில் நீ எங்கிருந்தாலும் அங்கிருந்து தேவனை மகிமை படுத்தாவிட்டால் அதுவே மிக பெரிய தவறு

[8/4, 6:16 PM] Bensam Whatsapp: 1சாமுவேல் 2: 7
கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

[8/4, 6:17 PM] Bensam Whatsapp: 1சாமுவேல் 2: 8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

[8/4, 6:19 PM] Charles Whatsapp: ஐஸ்வரியம்,கனம் அவரால் வருகிறது/ யாரை உயர்த்த சித்தமாய் உள்ளாரோ அவனை உயர்த்துகிறார். இதில் உயர்த்தபட்டவன் மேண்மை பாரட்டவும் அதிகாரம் இல்லை. உயர்த்த படாதவன் ஏன் என்னை உயர்த்தவில்லை என கேட்க்கவும் அதிகாரமில்லை

[8/4, 6:20 PM] Bensam Whatsapp: உபாகமம் 8: 3
👉அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி👈🏼👉👉👉உன்னைப் பசியினால் வருத்தி👈🏼‼மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல‼👉 கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு👈🏼👉👉👉 நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்👈🏼

[8/4, 6:22 PM] ‪+91 97881 24188: தவறாக பணத்தை கையாள்வதும் ஒரு காரணம்

[8/4, 6:23 PM] ‪+91 97881 24188: ஊதாரித்தனமாக செலவு செய்வதும் தரித்திரத்தை தரும்

[8/4, 6:23 PM] Charles Whatsapp: தரித்திரனான யோபுவும் , ஐஸ்வரியவானாகிய யோபும் செய்ததை செய்ய நம் மனம் மறுப்பது ஏன்...? இதை சிந்திதாலே பதில் கிடைத்துவிடும்

[8/4, 6:27 PM] ‪+91 97881 24188: Proverbs        30:8-9 (TBSI)  மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
"நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்."

[8/4, 6:27 PM] Elango: *இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை*. 
உபாகமம் 8:4
[8/4, 6:32 PM] Bensam Whatsapp: நீதிமொழிகள் 22: 2
ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்
👉தேவனுடைய பிள்ளைகளுக்கு எது எப்போது தேவையோ, அதை அழகாக செய்வார் 🙏🏻

[8/4, 6:33 PM] Jeyaraj pastor: 9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
நீதிமொழிகள் 30 :9
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 6:38 PM] Bensam Whatsapp: லூக்கா 6: 20
அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: ‼தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது

[8/4, 6:43 PM] Bensam Whatsapp: நீதிமொழிகள் 14: 31
👉தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்👈🏼 ‼தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்🙏🏻
👉தேவனை கனம்பண்ணாலாம் அல்லவா

[8/4, 6:48 PM] Sasikumar Whatsapp: 14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
1 யோவான் 5 :14
  
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 6:52 PM] Samson Whatsapp: முதலாம் திருச்சபை, ஆதி திருச்சபை யில் உபத்திரவம் இருந்தது.
ஆனால், வறுமை, தரித்திரம் இல்லை.
ஏனேன்றார், ஆவியானவர் வழி நடத்துதலின்படி அவர்கள் எல்லாவற்றையும் பொதுவில் வைத்து அனுபவித்தனர்.
வறுமை, தரித்திரத்திரத்திற்கு காரணம், இந்த நிலையை மாற்றியதால் கூட இருக்கலாம்.

[8/4, 7:00 PM] Samson Whatsapp: வனாந்திரத்தில் மன்னா பொழிந்த போது, அதிகம் எடுத்தவருக்கு அதிகமும் இல்லை, குறைவாக எடுத்தவரூக்கு குறைவுபடவும் இல்லை.
எல்லோருக்கும் எல்லாம் சமமாக இருந்தது.
இந்த சமநிலை பிரமாணம் தான் ஆதி திருச்சபை யில் காணப்பட்டது.

[8/4, 7:02 PM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 5: 4
👉இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம் இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.

[8/4, 7:03 PM] Bensam Whatsapp: பிலிப்பியர் 4: 11
என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான்எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்

[8/4, 7:04 PM] Bensam Whatsapp: பிலிப்பியர் 4: 12
👉தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்👈🏼 👉வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்👈🏼 எவ்விடத்திலும்எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்‼‼👆👆👆👆👆👆👆

[8/4, 7:05 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 7: 13
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்?❓ எங்கேயிருந்து வந்தார்கள்?❓ என்று கேட்டான்.

[8/4, 7:06 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 7: 14
அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்:‼ இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்இவர்கள் தங்கள் அங்கிகளைத் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
👆‼👆👆👆👆👆

[8/4, 7:07 PM] Sasikumar Whatsapp: 2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். 
யோவான் 14 :2 
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 7:07 PM] Sasikumar Whatsapp: 3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
யோவான் 14 :3
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 7:08 PM] ‪+91 97881 24188: சபை தரித்திரரை நினைக்க உதவ மறந்ததும் தேவ பிள்ளைகள் கஷ்டப்பட ஒரு காரணம்

[8/4, 7:08 PM] Samson Whatsapp: மாம்சத்திலும், உலகத்திலும் நாம் உபத்திரவப்படுவது நல்லது.
அப்போது தான் பரலோகத்தின் அருமை நமக்கு புரியும்.
அதற்காக நாம் ஏங்கி தவிப்போம்.
எகிப்தில் இஸ்ரவேல் ஜனங்களூக்கு பாடுகள் இல்லாமல் சுகமான வாழ்வு இரூந்திருந்தால், அவர்கள் எகிப்திலிருந்து வெளியேற விரும்பியிருக்க மாட்டார்.

[8/4, 7:09 PM] Sasikumar Whatsapp: 22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
 ஏசாயா 40 :22
  
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 7:11 PM] Sasikumar Whatsapp: 11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார், உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார், ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும், செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
 பிரசங்கி 3 :11
 Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 7:13 PM] ‪+91 97881 24188: செழிப்பு மட்டுமே என்கிற எண்ணமே தேவ பிள்ளைகள் கஷ்டபடலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது

[8/4, 7:14 PM] Samson Whatsapp: செழிப்பு மட்டுமே என்கிற எண்ணமே தேவ பிள்ளைகள் கஷ்டபடலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது

[8/4, 7:21 PM] Bensam Whatsapp: யாக்கோபு 2: 5
என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

[8/4, 7:26 PM] Bensam Whatsapp: யாக்கோபு 2: 1
என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.

[8/4, 7:51 PM] Samson Whatsapp: 👉 வித்தியாசமாக ஒரு கேள்வி 😄 👇
 இந்த உலகத்தை விடும் போதும், பரலோகத்தில் பிரவேசிக்கும்போதும் நம்முடைய செல்வத்திற்கு நாம்,
Bye சொல்லப் போகிறோமா!?
Haai சொல்லப் போகிறோமா!?

[8/4, 7:57 PM] Elango: உலகத்தில் வந்தபோது ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, விட்டு போகும் போது ஒன்றும் கொண்டு போவதுமில்லை 
அந்த பரலோக மகிமைக்கு முன்னாலே உலக ஐசுவரியம் ஒன்னுமில்லை
 நான் பை சொல்லுவேன்😀

[8/4, 7:59 PM] Elango: Glory to God
 அருமையான அநேக தியானங்கள் இன்றைக்கு🙏🙏

[8/4, 8:02 PM] Elango: எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ, அவனிடத்தில் அதிகம் கேடகப்படும் 
அநேக சத்தியங்களையும், வேத இரகசியங்களையும் அறிகிறோம், தியானிக்கிறோம்.
 ஆவிக்குரிய கனியையும் அதிகமாக இயேசுவுக்குள் கொடுப்போம்
 நன்றி இயேசுவே🙏🙏🙏

[8/4, 8:11 PM] Elango: 👉👉 *அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.*👈👈
ரோமர் 8 :28
 👉👉 *தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல்👑 நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?* ⁉
  
ரோமர் 8 :33

[8/4, 8:21 PM] ‪+91 97881 24188: நான் இட்ட எல்லா மறு மொழிகளையும் இணைத்து படித்தால் நன்றாயிருக்கும். நமது ஆண்டவரோ நானோ பணத்திற்கு விரோதிகள் இல்லை. மீண்டும் மீண்டும் செழிப்பு தவறா இல்லையா என்ற கேள்வி வந்ததாலே நான் அந்த பதிவையிட்டேன் சகோதரரே.

[8/4, 8:25 PM] Samson Whatsapp: 👇👇👇👇👇👇👇👇
👉 வெள்ளியும், பொன்னும் என்னிடத்திலில்லை 😀👈
அப் 3:6
🤔 வேறு என்ன இருக்காம்
👍👏 இயேசுவின் நாமம் 👏👍
🗣 பொதுவாக உலகத்தில், பணத்தின் "அருமை " தெரியணும்னு சொல்லுவாங்க .
🤔 ஆனால் இங்கே வசனத்தில், வெள்ளி பொன்னல்ல,
"இயேசு " என்னும் நாமத்தின் "அருமை " அறிந்திருந்தபடியால் "அற்புதம் " நடக்கிறது. 😀
👉 இயேசுவின் நாமத்திற்குள் அற்புதம், அதிசயம் மாத்திரமல்ல வழி, சத்தியம், ஜீவன் என்னும் ஏராளமான ஐசுவரியம் இருக்கிறது. 👍😀
🗣 ஆகவேதான் அப்படிபட்ட இயேசுவின் நாமத்தை அறிய, சுதந்தரிக்க அப். பவுல், அவருக்கிருந்த உலகப் பிரகாரமான மேன்மை, நன்மைகள் எல்லாவற்றையும் நஷ்டமும், குப்பையுமாக எண்ணினார். 💥💥
பிலி 3:4-11
🙏👏 இயேசுவின் நாமத்தின் மகிமை, மகத்துவம் அறிந்தவர்,
அந்த நாமத்தினால் உலக மேன்மை, நன்மை அடைய நினைக்க மாட்டார் 👍🙏
மாறாக,
👉 குப்பையாக நினைப்பதில், நஷ்டமென்று இழப்பதில் பெரு 😀 மகிழ்ச்சி அடைவர் 👍👏🙏
அல்லேலூயா
👆👆👆👆👆👆👆👆

[8/4, 8:29 PM] Samson Whatsapp: நம்முடைய விசுவாசம் உலகத்தில் உண்டாகும் சோதனைகளை ஜெயிக்க மாத்திரமல்ல,
உலகத்தில் நம்முடைய நியாயமான தேவைகளையும் சந்திக்க போதுமானதாக உள்ளது. 🙏

[8/4, 8:31 PM] Samson Whatsapp: கவலைப்படாமல்,
எந்த நிலையில் இருந்தாலும்,
மனரம்மியமாக,
போதுமென்ற மனதுடன்,
தேவ பக்தியாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.
விசுவாசத்தில் பெலப்படுவோம்.👍🙏

[8/4, 8:31 PM] Apostle Kirubakaran: கிருபை என்பது என்ன?
தேவையான நேரத்தில் தேவையான உதவிகளை ஏறாலமாய் தாரலாமாய் தருவது தான் கிருபை

[8/4, 8:33 PM] Morris Whatsapp: *[[1Co 1:25]] தமிழ்* இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.

[8/4, 8:37 PM] Bensam Whatsapp: எரேமியா 9: 23
👉ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம்👈🏼 👉பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம்👈🏼 ‼ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம்

[8/4, 8:38 PM] Bensam Whatsapp: எரேமியா 9: 24
மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

[8/4, 9:26 PM] Elango: உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் ஏழையாக இருக்கின்றனர் என்ற கேள்விக்கு நாம் அநேக வேத வசனங்களையும், தேவனுடைய அநாதி தீர்மானத்தையும், திட்டத்தையும் எடுத்துகூறும் வேளையில் - 
அவர்களின் தரித்தர நிலைமைக்கு, நாமும் ஒருவேளை காரணமாக இருப்போமோ என்று ஆவியில் உணர்த்தப்படுகிறது😭
உன்னைப் போல பிறனை நேசி என்ற கற்பனையை கைக்கொள்ளாமல் இருப்பதால் தான் அவர்களின் இந்த ஏழ்மைக்கு காரணமோ என்று யோசிக்க வைக்கிறது😭
👉  *பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ*👈👈👈 எனக்கு உகந்த உபவாசம்.😭😭
 ஆண்டவர் இந்த வசனத்தை நம்மிடம் நியாத்தீர்ப்பில் நம்மைப் பார்த்து சொல்வாரோ என்றும் எச்சரிக்கை வைக்கிறது😳🤔😫  
👉👉  *அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை, வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை, வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை*
ஏழைகளுக்கு இரங்காமலிருக்கிற நாமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
  
*திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.*யாக்கோபு 1 :27
 தேவ கிருபையால் நாங்கள் ஒரு கிரம சபைக்கு அனுப்பவதுண்டு, கிறிஸ்தவ ஆனாதை பிள்ளைகளுக்கு தேவ கிருபையால் தேவைகளை அனுப்பி வைப்பதுண்டு.🙏
👉👉👉 *ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.*
யாக்கோபு 4 :17
 14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? 
யாக்கோபு 2 :14 
15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,
யாக்கோபு 2 :15 
👉👉👉 *உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?*👈👈👈👈 
யாக்கோபு 2 :16
 17 அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
யாக்கோபு 2 :17
ஏழைகளுக்கு இரங்குவோம், கர்த்தரிடத்தில் கடன் கொடுப்போம்.😭
  
*நம்மை நாமே நிதானித்தறிவோம்*

[8/4, 9:35 PM] Samson Whatsapp: மாம்சத்திலும், உலகத்திலும் நாம் உபத்திரவப்படுவது நல்லது.
அப்போது தான் பரலோகத்தின் அருமை நமக்கு புரியும்.
அதற்காக நாம் ஏங்கி தவிப்போம்.
எகிப்தில் இஸ்ரவேல் ஜனங்களூக்கு பாடுகள் இல்லாமல் சுகமான வாழ்வு இரூந்திருந்தால், அவர்கள் எகிப்திலிருந்து வெளியேற விரும்பியிருக்க மாட்டார்.

[8/4, 9:39 PM] Samson Whatsapp: 👆மேலுள்ள கருத்தை நன்றாக சிந்தித்து பாருங்கள்.
இரட்சிப்புடன் சேர்ந்து நமக்கு சரீர சுகமும், உலக ஐசுவர்யமும் கிடைத்து, ஓரு குறையும் இல்லாம இந்த உலக வாழ்க்கை இருந்தால்,
நமக்கு பரலோக வாழ்க்கை என்று ஒன்று ஏன்? 
மரணத்தையும் Cancel பண்ணிவிட்டால் உலகத்திலேயே நாம் நிரந்தரமாக வாழ்ந்து விடலாமே!!!

[8/4, 9:45 PM] Samson Whatsapp: இயேசுவை விசுவாசித்தால்,
பாவ மன்னிப்பு,
சரீர சுகம்,
ஐசுவரியம்
இவையெல்லாம் உண்டூ என்பது நிச்சயம் என்றால்,
உலகத்தில் எல்லோருக்கும் இயேசுவிடம் வருவதில் என்ன தடை!?
பசீ, பட்டினி, வறுமை, வியாதி இதிலிருந்து விடூபடதானே மனிதன் கடவுளை தேடூகிறான்!?

[8/4, 9:47 PM] Samson Whatsapp: யாக்கோபு 2: 5
என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

[8/4, 9:49 PM] Satish Whatsapp: 15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
லூக்கா 12 
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 9:50 PM] Samson Whatsapp: 👆தரித்திரமாக இருந்தாலும், அப்போதும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தில் ஐசுவரியவானாக இருப்பது, இதூதானே கிறிஸ்தவத்தின் சிறப்பு!? 👍👏🙏

[8/4, 9:55 PM] Samson Whatsapp: இயேசுவின் தியாகத்தால்,
உலகமும் வேண்டும்,
பரலோகமும் வேண்டூம்.
இதுவா விசுவாசம்?
இதுவா சிலுவை?
இதுவா இயேசுவின் அடிச்சுவடு?

[8/4, 9:59 PM] Samson Whatsapp: நேற்று தியானித்தோமே!
ஒரு மனிதன் பணம் பெரிதென்று, நித்திய ஜீவனையே வேண்டாமென்று போய் விடுகிறானே!
இயேசு ஐசுவரியம்மும் தருகிறார் என அவனுக்கு தெரியாமல் போய் விட்டதோ!!

[8/4, 10:16 PM] Sasikumar Whatsapp: 36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
ரோமர் 8 :36
  
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 10:17 PM] Sasikumar Whatsapp: 37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
ரோமர் 8 :37
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 10:17 PM] Sasikumar Whatsapp: 38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
ரோமர் 8 :38
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 10:17 PM] Sasikumar Whatsapp: 39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
ரோமர் 8 :39
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 10:18 PM] Satish Whatsapp: 4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான் 5 
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 10:29 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 4: 8
இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.

[8/4, 10:30 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 4: 9
எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

[8/4, 10:30 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 4: 10
நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.

[8/4, 10:30 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 4: 11
இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.

[8/4, 10:30 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 4: 12
எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

[8/4, 10:31 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 4: 13
தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

[8/4, 10:31 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 4: 14
உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.