Type Here to Get Search Results !

நமக்கு வாக்குதத்த தேசம் எது❓புனித யாத்திரை நாம் செல்வது ஏன்❓

[8/17, 9:52 AM] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 17/08/2017* 🙏

1⃣ நமக்கு வாக்குதத்த தேசம் எது❓

2⃣ தாய் மண்ணே வணக்கம் என கிறிஸ்தவர்கள் பாடலாமா❓

3⃣ புனித யாத்திரை நாம் செல்வது ஏன்❓ நமக்கு அது வாக்குதத்த பூமியா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/17, 10:04 AM] Jenkins VTT: பூமிக்குரிய சீயோன், எருசலேம் ஆகியவற்றின் நோக்கம்


   கிறிஸ்து தமது சிலுவை மரணத்தினால் தமது மாம்சமாகிய திரையைக் கிழித்து, பரலோகத்திலுள்ள மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் வரைக்கும் மனுஷர் உன்னத ஸ்தலங்களுக்குச் செல்லும்படியான மார்க்கம் இல்லாதிருந்தது. எனவே தேவனுடைய நித்திய வாசஸ்தலமாகிய சீயோனைக் குறித்த தரிசனம் அதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. தேவன் தமது மகிமை, சிங்காசனம், வல்லமை, அதிகாரம், பிரமாணம் இவற்றை வெளிப்படுத்தும்படி ஒரு பூமிக்குரிய சீயோனைத் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது.

  அவ்விதமாகவே தேவன் தமது ஆலயத்தை கட்டும்படியாகவும், தம்முடைய அன்பு, இரக்கம், மனதுருக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, தம்முடைய ஜனங்களை எல்ல ஜாதிகளுக்கும் மேலான ஒரு ராஜரீக ஆசாரியக் கூட்டமாக மாற்றும்படியாகவும் இப்பூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் எருசலேமைத் தெரிந்து கொண்டார்.  

     பூமிக்குரிய சீயோனும் எருசலேமும் இரு பகுதிகளாலான ஒரு இடம் அல்லது ஒரு பட்டணத்துக்குள் இருக்கிற ஒரு பட்டணமாகும் (IIநாளா 5:2). யூதா பென்னியமீன் கோத்திரத்தார் எருசலேமில் வசித்தார்கள், தாவீதும் அவன் குடும்பமோ, தெரிந்து கொள்ளப்பட்ட சில அதிபதிகளுடனும் ஆசாரியர்களுடனும் சீயோனில் வசித்தார்கள்.      

  இந்தப் பூமிக்குரிய இடங்கள், தாவீது ராஜாவும் அவனுடைய சந்ததியாரும் அரசாண்ட காலங்களில் உபயோகிக்கப்பட்டது போலவே மாகா உபத்திரவ காலத்திற்குப் பின்பு, கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியின்போது திரும்பவும் உபயோகிக்கப்படும் (ஏசாயா 2:3-4;4:2,5 ; யோவேல் 3:17-21 ; சகரியா 14:9,16). ஆயினும் நாம் அறிந்திருக்கிறபடி பரலோகத்திலுள்ள வாசஸ்தலத்திற்கு நிழலாட்டமாயிருந்த ஆசாரிப்புக்கூடாரத்தைப்போல இவை புதிய எருசலேம் சீயோன் ஆகியவற்றின் பூமிக்குரிய நிழலாட்டமாகவே அந்நாட்களில் (ஆயிர வருட அரசாட்சியில்) காணப்படும் (எபி 8:5; 9:8,11,12).

[8/17, 10:58 AM] Thomas - Brunei VTT: 1⃣ Heavenly Canaan Phil 3:20,21

2⃣ We do not worship anything other our God..
We are called to respect our country and obey the laws of the land.
Do we not sing our National Anthem?

3⃣ Holy Land Pilgrimage is deception.
We can visit Israel if get a chance but The Place God is..  Is the Holy Ground

[8/17, 11:26 AM] Johnshan VTT: நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.

Not as though I had already attained, either were already perfect: but I follow after, if that I may apprehend that for which also I am apprehended of Christ Jesus.

பிலிப்பியர் 3:12

[8/17, 11:26 AM] Johnshan VTT: சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி,

Brethren, I count not myself to have apprehended: but this one thing I do, forgetting those things which are behind, and reaching forth unto those things which are before,

பிலிப்பியர் 3:13

[8/17, 11:28 AM] Johnshan VTT: கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus.

பிலிப்பியர் 3:14

[8/17, 11:47 AM] Johnshan VTT: கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus.

பிலிப்பியர் 3:14

[8/17, 12:07 PM] Joseph Dhanaraj VTT: 31 சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன். நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன். நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.
யாத்திராகமம் 23:31

பழைய ஏற்பாட்டின் வாக்குத்தத்த நிலம்

[8/17, 12:12 PM] Elango: பரம கானான் தேசமே நம் வாக்குத்தத்த பூமி

[8/17, 12:13 PM] Sam Jebadurai Pastor VDM: Acts            7:5  "இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்."

[8/17, 12:15 PM] Sam Jebadurai Pastor VDM: Hebrews         11:13-16
13 "இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்."
14 இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
15 "தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே."
16 "அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே."

[8/17, 12:16 PM] Sam Jebadurai Pastor VDM: John            14:3  "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்."

[8/17, 12:18 PM] Thomas - Brunei VTT: It is not an obligation for every believer to visit Israel as we find in another religion about mekah.

[8/17, 12:19 PM] Thomas - Brunei VTT: How about economically weak believers?

[8/17, 12:20 PM] Jenkins VTT: ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததி

“…புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்திரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன் பங்காளிகளுமாயிருக்கிறார்களேன்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்” எபே 3:3

   ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தங்கள் செய்திருந்தார். இந்த வாக்குத்தத்தங்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம் – ஓன்று, உன் சந்ததி கடற்கரை மணலைப்போலிருக்கும் என்பதும், மற்றது, உன் சந்ததி ஆகாயத்து நட்சத்திரங்களைப் போலிருக்கும் என்பதுமாகும். பூமிக்குரிய சந்ததியும் ஆவிக்குரிய சந்ததியும் ஆபிரகாமிலிருந்து எழும்ப வேண்டும் என்பதே இவற்றின் கருத்தாகும். பூமிக்குரிய சந்ததி என்பது மாம்சத்தின்படியுள்ள யூதரைக் குறிக்கிறது. இந்தச் சந்ததியைப் பற்றிய எல்லா வாக்குத்தத்தங்களும், ஈசாக்கில் நிறைவேறியதாய் நாம் காணலாம். ஆனால் ஆவிக்குரிய சந்ததியைப் பற்றிச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்கள் ஈசாக்கில் நிறைவேற்றப்பட்டதாய் நாம் காண்பதில்லை. இந்த வாக்குத்தத்தங்களில் யூதர் மட்டுமல்ல புறஜாதியாரும் உட்பட்டிருக்கிறார்கள் என்று அப். பவுல் கூறுகிறார். ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்கள் புறஜாதியாருக்கு எப்படிச் சொந்தமாகக்கூடும்? ஆகவேதான் மாம்சத்தின்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆபிரகாமின் சந்ததியில் பிறக்கவேண்டியதாயிருந்தது. ஈசாக்கில் நிறைவேற்றப்பட முடியாத எல்லா ஆவிக்குரிய வாக்குத்தத்தங்களும் கிறிஸ்துவில் நிறைவேறின.

   ஆபிரகாமுக்கு உரைக்கப்பட்ட வாக்குத்தத்தங்களைப் புறஜாதியார் அடைந்துகொள்ளும்படியாக, அவர்கள் இயேசு கிறிஸ்துவினுடைய சரீரமாய் மாற்றப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஆகவேதான் அவர்களைப் பற்றி “ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய்” என்று எழுதப்பட்டிருக்கிறது. இக்காரணத்தைக்கொண்டே கலாத்தியர் 3:16 – இல் சந்ததிகள் என்று பூமிக்குரிய சந்ததியைப் பற்றிக் குறிப்பிடாமல், “சந்ததி” என ஆவிக்குரிய சந்ததியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தச் சந்ததி கிறிஸ்துவே. அதாவது, ஆபிரகாமுக்குக் கூறப்பட்ட எல்லாவித ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் நிறைவேற்றப்பட்ட சந்ததி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. இந்தச் சந்ததியாகிய தலையோடு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாய் புறஜாதியார் இணைக்கப்பட்டு ஒரே சரீரமாகும்போது தலைக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் சரீரமும் சுதந்தரித்துக்கொள்ளுகிறது. இவ்விதமாய் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் கிறிஸ்துவின் மூலமாய் புறஜாதிகளுக்கு வருகிறது.

   இஸ்ரவேலர்களுக்கு தேவன் ஒன்பது விதமான ஆசீர்வாதங்களை அளித்திருந்தார். இவைகள் அனைத்தும் ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியாகிய கர்த்தராகிய இயேசு மூலமாக புறஜாதியாரும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்

இஸ்ரவேலர்களின்
ஒன்பது ஆசீர்வாதங்கள் (ரோமர் 9:4-5)

1.இஸ்ரவேலர்கள்

2.புத்திரசுவிகாரம்

3.மகிமை

4.உடன்படிக்கைகள்

5.நியாயப்பிரமாணம்

6.தேவாராதனை

7.வாக்குத்தத்தங்கள்

8.பிதாக்கள்

9.கிறிஸ்து

[8/17, 12:20 PM] Thomas - Brunei VTT: Scripture does not say anything about 'Christian Pilgrimage' ...
[8/17, 12:42 PM] Sam Jebadurai Pastor VDM: இன்றைய தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத பதிவு இது

[8/17, 12:49 PM] Joseph Dhanaraj VTT: 12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.
எண்ணாகமம் 20:12

13 இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பபட்டது.
எண்ணாகமம் 20:13

[8/17, 12:50 PM] Joseph Dhanaraj VTT: அவிசுவாசமும் வாக்குவாதமும் கானானுக்கு நாம் செல்ல தடைகள்....

[8/17, 12:51 PM] Elango: True✅👍

யூதா 1:5
[5]நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில்,  *கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.*

[8/17, 1:06 PM] Thomas - Brunei VTT: Moses cannot and would not take the Israelites into the promised land...
You need a Joshua, A Saviour.. Not the Law

[8/17, 1:07 PM] Ebi Kannan Pastor VDM: 👍✅

Yes Moses purposely named Joshua

[8/17, 1:11 PM] Ebi Kannan Pastor VDM: எண்ணாகமம் 13:16
[16]தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே: நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

[8/17, 1:15 PM] Joseph Dhanaraj VTT: 20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
எசேக்கியேல் 18:20

21 துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
எசேக்கியேல் 18:21

பாவம் கானானின் வழி அடைக்கும்

[8/17, 1:19 PM] Thomas - Brunei VTT: Joshua and Jesus are same name.. In Hebrew and Greek

[8/17, 1:19 PM] Thomas - Brunei VTT: Like Saul and Paul...
Saul never changed his name..

[8/17, 1:21 PM] Thomas - Brunei VTT: Glad Bro Shan is back in the group.

[8/17, 1:55 PM] Elango: ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழிகளில் யோசுவாவும் இயேசுவும் ஒரே பெயர் தான்.

சவுல் மற்றும் பவுல் போலவே இதுவும்.

 கிரேக்கத்தில் சவுல் என்ற பெயர் பவுல் என்று அழைக்கப்பட்டது.

சவுல் அவருடைய பெயரை மாற்றவில்லை.

- Thomas ayya

[8/17, 1:57 PM] Elango: மோசே இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது .. உங்களுக்கு ஒரு யோசுவா, ஒரு இரட்சகர் வேண்டும் .. நியாயப்பிரமாண சட்டம் அல்ல

- Thomas ayya

[8/17, 2:08 PM] Elango: மற்றொரு மதத்தில் மக்காவைப் பற்றிய விசயத்தில் காணுவதைப்போல, நாம் ஒவ்வொரு விசுவாசியும் இஸ்ரேலைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற கடமையில்லை நமக்கு.

*பொருளாதரத்தில் பலகீனமானவர் என்ன செய்வார்கள்?*

-Thomas ayya

[8/17, 2:15 PM] Johnshan VTT: This is not compel but question is Wright or wrong

[8/17, 2:19 PM] Joseph Dhanaraj VTT: 14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
எபிரேயர் 12:14

கானான் செல்ல பரிசுத்தமும்,....சமாதனமும் வேண்டும்

[8/17, 2:21 PM] Levi Bensam Pastor VDM: 1யோவான் 2: 25
*நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.*

1 John 2: 25
*And this is the promise that he hath promised us, even eternal life.*

[8/17, 2:24 PM] Thomas - Brunei VTT: It is not wrong to go and see the places..
Saying ' Holy Tour' and Holy Pilgrimage is wrong

[8/17, 2:25 PM] Johnshan VTT: This is also one of ministry's like spread the gospel

[8/17, 2:27 PM] Levi Bensam Pastor VDM: *இவர்கள் எல்லாம் எந்த வாக்குத்தத்தத்தை அடைய முடியவில்லை*❓❓❓❓❓❓❓❓ எபி பிரெ 11:33-40
[33]விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
[34]அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.
[35]ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;
[36]வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;
[37]கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;
[38]உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.
[39] *இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும்,👇👇👇👇👇👇👇 வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.*👇👇👇👇👇👇👇👇
[40] *அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.*👍👍👍👍👍👍👍

[8/17, 2:29 PM] Elango: Holy tour போவதின் மூலம் Gospel ஐ அறிவிக்கலாமா?  எப்படி ஐயா

[8/17, 2:30 PM] Thomas - Brunei VTT: Every believer is on a Holy Land Pilgrimage.. as we are only sojourner on our way Home..

[8/17, 2:31 PM] Elango: சொந்த ஊருக்கு போகவே நம்மகிட்ட பணமில்லை... இதுல Holy tour க்கு எங்கங்க பணம்

[8/17, 2:31 PM] Johnshan VTT: This not holy tour just visiting Jesus only holy he is with us

[8/17, 2:33 PM] Thomas - Brunei VTT: Tamil nadu govt has a scheme for this..

[8/17, 2:33 PM] Thomas - Brunei VTT: If I'm not wrong..

[8/17, 2:39 PM] Johnshan VTT: எப்படியாவது  நமக்கு  கிடைச்ச  ரட்சிப்பை  உலகம்  அரியனும்  நான்  தெருவில  ட்ராக்ஸ் கொடுக்குற  என்னுடைய  மனைவி  ஜீப்ஸ்  மக்களுக்கு  ஏசுவை  பத்தி  சொல்லுறாங்க  ஏசுவின்  சித்தம்

[8/17, 2:40 PM] Thomas - Brunei VTT: Praise the Lord...
Salvation belongs to the lord...

[8/17, 2:42 PM] Jenkins VTT: அஸ்திபாரமுள்ள நகரத்தைக் குறித்து ஆபிரகாமின் வெளிப்படுத்தல்

“ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.” எபி 11:10

  அஸ்திபாரங்களுள்ள ஒரு நகரம் நித்தியத்தில் உண்டென்ற ஒரு வெளிப்படுத்தல் ஆபிரகாமுக்கு உண்டாயிருந்ததோடு அதற்காக அவன் காத்திருந்தான் என்று வேதம் கூறுகிறது (எபி 11:10). அவன் இந்த வெளிப்படுதலை பெற்றதினாலே கூடாரவாசியாய் மாறினான். ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்தின் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, தேவனே தம்முடைய கைகளால் கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள ஒரு நகரத்தை தூரத்தில் கண்டான், அல்லது அந்நகரத்தைப்பற்றிய வெளிப்படுத்தலின் ஒரு சிறிய ஒளிக்கதிர் அவன் கண்களில் விழுந்தது என்று நாம் கூறலாம். அதை அவன் கண்டபோது அதின்மேலுள்ள வாஞ்சையால் இவ்வுலகத்தை வெறுத்து, தன்னை அந்நியனும் பரதேசியும் கூடாரவாசியும் ஆக்கிக்கொண்டான். தான் எவ்விதத்திலும் அதை அடைய வேண்டுமென்ற ஏக்கத்தினால் அவன் வாஞ்சையோடு காத்திருந்து, விசுவாசத்தோடு மரித்தான்.

  ஆயினும் புதிய எருசலேம் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்கு உண்டாக்கப்படும் இடமல்ல. அதை அடைய மனசாட்சிக்கால நீதியோ, நியாயப்பிரமாண கால நீதியோ போதுமானதல்ல. புதிய எருசலேம் கிறிஸ்துவின் நீதியில் வளர்ந்து அவருடைய பூரணத்தை அடைந்த பரிசுத்தவான்கள் சுதந்தரிக்கும் இடமாகும். ஆபிரகாம் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டுக் காலத்திலும், இரட்சிக்கப்பட்டவர்களாயிருந்தாலும் உலக பிரபுக்கள் போல ஜீவித்து அற்புதங்கள் அடையாளங்கள் செய்தவர்களாயிருந்தாலும் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டு கிறிஸ்துவின் பூரண நீதியின் அளவுக்குத்தக்க வளராதவர்கள் புதிய எருசலேமாய்க் காணப்படமாட்டார்கள் என்பது மாறாத சத்தியமாயிருக்கிறது.

[8/17, 2:45 PM] Thomas - Brunei VTT: Bro do you mean to say Abraham and other Faithful are not destined to New Jerusalem?

[8/17, 2:48 PM] Thomas - Brunei VTT: May be we can meditate on this some other day.
🙏🏼🙏🏼

[8/17, 3:13 PM] Elango: 1⃣  பரலோக கானான் பிலி 3: 20,21

2⃣  நாம் நம் தேவனை தவிர வேறு எதையும் வணங்கவில்லை.
நாம் நம் நாட்டையும், நம் தேசத்தின் சட்டங்களையும் கீழ்ப்படியவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நம் தேசத்தின் தேசிய கீதத்தை நாம் பாடுகிறதில்லையா?

3⃣  புனித நில யாத்திரை என்பது ஒரு  மோசடி.
ஒரு வாய்ப்பு கிடைத்தால் நாம் இஸ்ரேலைப் பார்க்க முடியும், ஆனால் தேவனுடைய இடம் என்பது .. பரிசுத்த மைதானம்.

[8/17, 4:04 PM] Joseph Dhanaraj VTT: 3. மோசடி இல்லை சகோ

[8/17, 4:05 PM] Thomas - Brunei VTT: 3⃣ Thevan enge vaasamai irukindraro athuve punitha sthalam

[8/17, 4:05 PM] Thomas - Brunei VTT: There are some translation errors.. 🙏🏼🙏🏼

[8/17, 4:06 PM] Thomas - Brunei VTT: Deception differs from scams

[8/17, 4:08 PM] Thomas - Brunei VTT: Kovil... Kadavul vaasam seiyum illam.. That is you and i..

[8/17, 4:09 PM] Thomas - Brunei VTT: We are the Temple of God..

[8/17, 4:10 PM] Jenkins VTT: மணவாட்டி சபைக்குட்படாத பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வருகையில் எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள்

“அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.” எபிரெயர் 11:40

  கல்வாரி வரை ஜீவித்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கல்வாரியில் விலைக்கிரயமாக்கப்படவிருந்த பூரண பலியை எதிர்நோக்கியபடியே ஒன்றையும் பூரணமாக்காத நியாயப்பிரமாணத்தின் பலிகளை செலுத்தி தேவனிடத்தில் கிட்டிச்சேர்ந்தார்கள். முதலாம் உடன்படிக்கையின் காலத்திலேயே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும் பொருட்டு அவர் மரணமடைந்து (எபி 9:15) என்பதிலிருந்து கர்த்தராகிய இயேசு கல்வாரியில் மரிக்கும் வரைக்கும் இவர்களுடைய பாவம் பூரணமாய் நிவிர்த்தியாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

  கிரியைகளிலே அவர்கள் செய்த பாவங்கள் அல்லது மீறுதல்கள் மன்னிக்கப்பட்டன. எனினும் அவர்களுக்குள்ளே இருந்த பாவம் (பாவ சுபாவம்) மூடப்பட்டு இருந்தது. இது சீழ் பிதுக்கப்படாமலும் கழுவி சுத்தீகரிக்கப்படாமலும் காயத்தை மூடி வைப்பதை போன்ற நிலவரமாகும். வெளியரங்கமாக காயம் (பாவம்) தெரியாமல் மூடப்பட்டிருந்தாலும் அது இன்னும் கழுவி சுத்தீகரிக்கப்படாத நிலையிலே காணப்படுகிறது (சங் 32:1). இதனாலேயே அவர்கள் மரித்தவுடன் பாதாளத்திற்கு இறங்கவேண்டியதாயிருந்தது. கல்வாரி வரை அவர்கள் பாதாளத்திலே சிறைப்பட்டிருந்தார்கள்.
  கர்த்தராகிய இயேசுவின் கல்வாரி மரணம் வரை பரலோகத்தின் மகா பரிசுத்த ஸ்தலமாகிய பிதாவின் வலதுபாரிசம் திறக்கப்படவில்லை. முந்தின நித்தியத்தில் கர்த்தராகிய இயேசு பிதாவின் மடியிலே காணப்பட்டார். கல்வாரி மரணத்தின்போது கிறிஸ்துவின் மாம்சமாகிய திரை கிழிக்கப்பட்டதோடு பரலோகத்தின் மகா பரிசுத்த ஸ்தலமும் திறக்கப்பட்டது. எல்லா வானங்களும் மேலான இந்த ஸ்தலத்திற்கே கர்த்தராகிய இயேசு சீயோனில் மூலைக்கல்லாக உயர்த்தப்பட்டார். இதன் மூலம் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு மாத்திரமே பரலோகத்தின் திரைக்குள் (மகா பரிசுத்த ஸ்தலம்) போகும் பாக்கியம் உண்டாகிறது. பரலோகத்தில் மகா பரிசுத்த ஸ்தலமாகிய சீயோனும் புதிய எருசலேமும் பூரணராகும் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கே உரியது. இது விசேஷித்த நன்மை என்று அழைக்கப்படுகிறது. கல்வாரியின் தியாக பலியினால் உண்டாகும் பூரண ஜீவியத்தை பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பெற்றுக்கொள்ளவில்லை. இரகசிய வருகையானது ஜெயங்கொண்ட பூரணமாக்கப்பட்டவர்களுக்குரியது. இதில் பூரணராகாத பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் அர்மகெதோன் யுத்தத்திற்கு பின்பு உயிர்த்தெழுந்து நித்தியத்தில் புதிய வானத்தை சுதந்தரிப்பார்கள்.
   
  இரகசிய வருகையில் பூரணமாக்கப்பட்ட  மணவாட்டி சபையோடு  பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:

உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாக மாறும்படியான தேவனுடைய நோக்கமானது புதிய ஏற்பாட்டு சபையை மட்டுமே குறித்ததானது.

மனசாட்சியின் பிரமாணமும் நியாயப்பிரமாணமும் ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை எனவே சிங்காசனத்திற்கு எடுத்துகொள்ளப்படுவதற்குரிய பிரதான தகுதியான சுபாவங்களின் பூரணத்தை பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

இரகசிய வருகையானது அவரை பின்பற்றி அவரை போல் மாறியவர்களுக்கானது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றி கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியை அடையாதவர்கள்.

சபையை குறித்தும் அப்போஸ்தல உபதேசத்தை குறித்தும் அதற்கான ஜீவியத்தை குறித்தும் அவர்களுக்கு வெளியரங்கமாக்கபடவில்லை.

பலிகளிலும் அதற்குரிய ஆராதனை முறைமைகளிலும் மறைந்திருந்ததான வரப்போகிற நிஜத்தை அறிந்து கொள்ள முடியாமல் அவற்றின் நிழலை மாத்திரம் அறிந்து பின்பற்றியவர்கள்.

கிறிஸ்துவை பின்பற்றி அவருக்கு மணவாட்டியாக ஜீவித்து முடிவிலே அவருக்கு மனைவியாக்கப்படுகிற சபையின் பெரிய இரகசியத்தை அறிந்து அதை அனுபவமாக்கிக்கொள்ள முடியாதவர்கள்.
“முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.” எபிரெயர் 7:18-19

“இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப்பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?” எபிரெயர் 10:1-2

“அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.” எபிரெயர் 10:11

[8/17, 4:16 PM] Elango: yes வஞ்சகம், ஏமாற்றுதல்...

[8/17, 4:23 PM] Joseph Dhanaraj VTT: 25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
யோபு 19:25

யோபு இயேசுவின் வருகை யில் இருப்பார்

[8/17, 4:24 PM] Joseph Dhanaraj VTT: மன்னிக்கவும்

[8/17, 4:24 PM] Joseph Dhanaraj VTT: இவ்வசன அர்த்தம் என்ன

[8/17, 4:39 PM] Jenkins VTT: என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
யோபு 19:25

இவ் வசனத்தில் கடைசி நாள் என்பது கிறிஸ்து பூமிக்கு இறங்கிவந்து ஆயிர வருச அரசாட்சியை ஸ்தாபிப்பதாகும். இயேசுவின் வருகை என்பது மத்திய ஆகாயத்திலேயே நடைபெறும் அது பூமியிலல்ல.

[8/17, 4:47 PM] Johnshan VTT: This is the one is healthy topic today meditate the same

[8/17, 5:12 PM] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 17/08/2017* 🙏

1⃣ நமக்கு வாக்குதத்த தேசம் எது❓

2⃣ தாய் மண்ணே வணக்கம் என கிறிஸ்தவர்கள் பாடலாமா❓

3⃣புனித யாத்திரை நாம் செல்வது ஏன்❓ நமக்கு அது வாக்குதத்த பூமியா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/17, 5:18 PM] Joseph Dhanaraj VTT: 24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
மத்தேயு 7:24

ஊழியத்தை காட்டிலும் ஜீவியத்தில் கவனம் செலுத்துவோரே கானான் செல்வர்....

[8/17, 5:19 PM] Thomas - Brunei VTT: Patience and knowledge are important in a discussion.
Patience to hear others..
Reply shareing your knowledge about it will be helpful to all rather than simply deny outrightly.

[8/17, 5:20 PM] Thomas - Brunei VTT: Nithanam + arivu nithanitharithal

[8/17, 7:00 PM] Darvin Sekar Brother VTT: 10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
தானியேல் 6 :10

[8/17, 7:16 PM] Elango: மறுரூப மலையில் மோசே எப்படி காணப்பட்டார்...அவர் அது வரைக்கும் எங்கிருந்தார்..

[8/17, 7:17 PM] Elango: ஆபிரகாம் இப்போது எங்கிருக்கிறார்...

[8/17, 7:21 PM] Elango: புதிய எருசலேம் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்கு உண்டாக்கப்படும் இடமல்ல எப்படி சொல்றீங்க ஐயா...?

[8/17, 7:33 PM] Jenkins VTT: மணவாட்டி சபைக்குட்படாத பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வருகையில் எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள்

“அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.” எபிரெயர் 11:40

  கல்வாரி வரை ஜீவித்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கல்வாரியில் விலைக்கிரயமாக்கப்படவிருந்த பூரண பலியை எதிர்நோக்கியபடியே ஒன்றையும் பூரணமாக்காத நியாயப்பிரமாணத்தின் பலிகளை செலுத்தி தேவனிடத்தில் கிட்டிச்சேர்ந்தார்கள். முதலாம் உடன்படிக்கையின் காலத்திலேயே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும் பொருட்டு அவர் மரணமடைந்து (எபி 9:15) என்பதிலிருந்து கர்த்தராகிய இயேசு கல்வாரியில் மரிக்கும் வரைக்கும் இவர்களுடைய பாவம் பூரணமாய் நிவிர்த்தியாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

  கிரியைகளிலே அவர்கள் செய்த பாவங்கள் அல்லது மீறுதல்கள் மன்னிக்கப்பட்டன. எனினும் அவர்களுக்குள்ளே இருந்த பாவம் (பாவ சுபாவம்) மூடப்பட்டு இருந்தது. இது சீழ் பிதுக்கப்படாமலும் கழுவி சுத்தீகரிக்கப்படாமலும் காயத்தை மூடி வைப்பதை போன்ற நிலவரமாகும். வெளியரங்கமாக காயம் (பாவம்) தெரியாமல் மூடப்பட்டிருந்தாலும் அது இன்னும் கழுவி சுத்தீகரிக்கப்படாத நிலையிலே காணப்படுகிறது (சங் 32:1). இதனாலேயே அவர்கள் மரித்தவுடன் பாதாளத்திற்கு இறங்கவேண்டியதாயிருந்தது. கல்வாரி வரை அவர்கள் பாதாளத்திலே சிறைப்பட்டிருந்தார்கள்.

  கர்த்தராகிய இயேசுவின் கல்வாரி மரணம் வரை பரலோகத்தின் மகா பரிசுத்த ஸ்தலமாகிய பிதாவின் வலதுபாரிசம் திறக்கப்படவில்லை. முந்தின நித்தியத்தில் கர்த்தராகிய இயேசு பிதாவின் மடியிலே காணப்பட்டார். கல்வாரி மரணத்தின்போது கிறிஸ்துவின் மாம்சமாகிய திரை கிழிக்கப்பட்டதோடு பரலோகத்தின் மகா பரிசுத்த ஸ்தலமும் திறக்கப்பட்டது. எல்லா வானங்களும் மேலான இந்த ஸ்தலத்திற்கே கர்த்தராகிய இயேசு சீயோனில் மூலைக்கல்லாக உயர்த்தப்பட்டார். இதன் மூலம் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு மாத்திரமே பரலோகத்தின் திரைக்குள் (மகா பரிசுத்த ஸ்தலம்) போகும் பாக்கியம் உண்டாகிறது. பரலோகத்தில் மகா பரிசுத்த ஸ்தலமாகிய சீயோனும் புதிய எருசலேமும் பூரணராகும் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கே உரியது. இது விசேஷித்த நன்மை என்று அழைக்கப்படுகிறது. கல்வாரியின் தியாக பலியினால் உண்டாகும் பூரண ஜீவியத்தை பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பெற்றுக்கொள்ளவில்லை. இரகசிய வருகையானது ஜெயங்கொண்ட பூரணமாக்கப்பட்டவர்களுக்குரியது. இதில் பூரணராகாத பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் அர்மகெதோன் யுத்தத்திற்கு பின்பு உயிர்த்தெழுந்து நித்தியத்தில் புதிய வானத்தை சுதந்தரிப்பார்கள்.
 
  இரகசிய வருகையில் பூரணமாக்கப்பட்ட  மணவாட்டி சபையோடு  பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:

உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாக மாறும்படியான தேவனுடைய நோக்கமானது புதிய ஏற்பாட்டு சபையை மட்டுமே குறித்ததானது.

மனசாட்சியின் பிரமாணமும் நியாயப்பிரமாணமும் ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை எனவே சிங்காசனத்திற்கு எடுத்துகொள்ளப்படுவதற்குரிய பிரதான தகுதியான சுபாவங்களின் பூரணத்தை பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

இரகசிய வருகையானது அவரை பின்பற்றி அவரை போல் மாறியவர்களுக்கானது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றி கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியை அடையாதவர்கள்.

சபையை குறித்தும் அப்போஸ்தல உபதேசத்தை குறித்தும் அதற்கான ஜீவியத்தை குறித்தும் அவர்களுக்கு வெளியரங்கமாக்கபடவில்லை.

பலிகளிலும் அதற்குரிய ஆராதனை முறைமைகளிலும் மறைந்திருந்ததான வரப்போகிற நிஜத்தை அறிந்து கொள்ள முடியாமல் அவற்றின் நிழலை மாத்திரம் அறிந்து பின்பற்றியவர்கள்.

கிறிஸ்துவை பின்பற்றி அவருக்கு மணவாட்டியாக ஜீவித்து முடிவிலே அவருக்கு மனைவியாக்கப்படுகிற சபையின் பெரிய இரகசியத்தை அறிந்து அதை அனுபவமாக்கிக்கொள்ள முடியாதவர்கள்.

“முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.” எபிரெயர் 7:18-19

“இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப்பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?” எபிரெயர் 10:1-2

“அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.” எபிரெயர் 10:11

[8/17, 7:34 PM] Jenkins VTT: உயிர்த்தெழுதலின்  ஏழு வரிசைகள்

“அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” Iகொரிந்தியர் 15:23

“நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.” தானியேல் 12:13

   ஆபேலுடைய நாட்கள் முதல் ஆயிர வருஷ அரசாட்சி முடிய எல்லா காலத்திலும் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களின் சரீர உயிர்த்தெழுதலானது ஒரே சமயத்தில் நடைபெறுவதாயிராமல் தாங்கள் பெற்றுக்கொண்ட பிரமாணத்திற்கும் அதற்குரிய ஜீவியத்திற்கேற்றபடி தங்கள் தங்கள் சுதந்திர வீதத்தின் வரிசையினடிப்படையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உயிர்த்தெழுகிறார்கள். இது ஏழு வரிசையில் நடைபெறுகிறது. முதல் ஐந்து வரிசை உயிர்த்தெழுதல் முதலாம் உயிர்த்தெழுதல் என்றும் கடைசி இரண்டு வரிசை உயிர்த்தெழுதல் இரண்டாம் உயிர்த்தெழுதல் என்றும் அழைக்கப்படுகிறது.

A. முதலாம் உயிர்த்தெழுதல்

   முதல் ஐந்து வரிசை உயிர்த்தெழுதல் முதலாம் உயிர்த்தெழுதல் அல்லது மேன்மையான உயிர்த்தெழுதல் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பங்குள்ளவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் ஆயிர வருஷ அரசாட்சியில் கிறிஸ்துவோடு ஆளுகை செய்வார்கள் (வெளி 20:6).

1.கிறிஸ்து

   மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்த கிறிஸ்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலானது உயிர்த்தெழுதலின் முதலாம் வரிசையாகும்.

“கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; ...” Iகொரிந்தியர் 15:20, 23

2.பூரணமாக்கப்பட்ட மணவாட்டி சபை

  கிருபையின் காலத்தில் கிறிஸ்துவுக்குள் மரித்த பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்கள் இரகசிய வருகையில் உயிர்த்தெழுவார்கள். இது உயிர்த்தெழுதலின் இரண்டாம் வரிசையாகும்.  இரகசிய வருகையின்போது கிறிஸ்துவுக்குள் ஜீவித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு இமைப்பொழுதிலே மரணமும் உயிர்த்தெழுதலும் சம்பவித்து மறுரூபமடைந்து கிறிஸ்துவுக்கு எதிர்கொண்டு போவார்கள்.

“அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான்,..பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” Iகொரிந்தியர் 15:23

“ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” Iதெசலோனிக்கேயர் 4:16-17

3.உபத்திரவகால இரத்த சாட்சிகள்

  இரகசிய வருகையில் கைவிடப்பட்டவர்களில் அந்திகிறிஸ்துவை பின்பற்ற மறுத்து அந்திகிறிஸ்துவினால் உபத்திரவப்படுத்தப்பட்டு  உபத்திரவ கால இரத்த சாட்சிகளாய் மரிப்பவர்கள், முதல் மூன்றரை வருட உபத்திரவ காலம் முடியும் போது அதாவது எழுவருட உபத்திரவ காலத்தின் மத்தியில் உயிர்த்தெழுவார்கள். இது உயிர்த்தெழுதலின் மூன்றாம் வரிசையாகும்.

“வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.” மத்தேயு 24:31

“இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” வெளி 7:9,14


4.இரண்டு சாட்சிகள் - எலியா, ஏனோக்கு

  தங்கள் பூமிக்குரிய ஜீவிய காலத்தில் சரீர மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எலியாவும் ஏனோக்கும் மகா உபத்திரவ காலத்தின் ஆரம்பத்தில்  மூன்றரை வருடம் தீர்க்கதரிசனம் உரைக்க தேவனால் அனுப்பப்பட்டு தங்கள் ஊழியத்தின் முடிவிலே அந்திகிறிஸ்துவினால் கொல்லப்படுவார்கள். இவர்கள் அர்மகதொன் யுத்தத்திற்கு சற்று முன்பாக உயிர்த்தெழுவார்கள். இது உயிர்த்தெழுதலின் நான்காம் வரிசையாகும்.

“இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.” வெளி 11:12

5.பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், பொதுவான இரத்த சாட்சிகள்

  அர்மகெதொன் யுத்தத்திற்கு பின் ஆபேல் முதல் யோவான்ஸ்நானன் வரையுள்ள பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், பொதுவான இரத்த சாட்சிகளும் (தேவ வசனத்தினிமித்தம் கொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டு இரத்தசாட்சிகளும், இயேசுவினுடைய சாட்சியை உடைய பூரணமாக்கப்படாத புதிய ஏற்பாட்டு இரத்தசட்சிகளும்) உயிர்த்தெழுவார்கள். இது உயிர்த்தெழுதலின் ஐந்தாம் வரிசையாகும்.

“…நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.” தானியேல் 12:13

“..அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்” வெளி 20:4

“ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;” எபிரெயர் 11:35

B. இரண்டாம் உயிர்த்தெழுதல்

   கடைசி இரண்டு வரிசை உயிர்த்தெழுதல் இரண்டாம் உயிர்த்தெழுதல் என்று அழைக்கப்படுகிறது. இது ஆயிரவருட அரசாட்சிக்கு பின்பு நடைபெறும்.

6.இரட்சிக்கப்பட்டவர்கள்

     ஆபேலுடைய நாட்கள் முதல் ஆயிர வருட அரசாட்சி முடிய வரை உள்ள எல்லா காலத்திலும், அந்தந்த காலங்களின் பிரமாணங்களுக்கு ஏற்றவாறு இரட்சிப்பை மாத்திரம் பெற்று பூரணமாக்கப்படாமல் மரித்த நீதிமான்கள் வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புக்காக ஆயிரவருட அரசாட்சிக்கு பின் உயிர்தெழுவார்கள். எனவே இவர்கள் ஆயிரவருட அரசாட்சியில் கலந்து கொள்ளுவதில்லை. இது உயிர்த்தெழுதலின் ஆறாம் வரிசையாகும்.

“பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், ...விழித்து எழுந்திருப்பார்கள்.” தானியேல் 12:2

“இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், ... புறப்படுவார்கள்.” யோவான் 5:28-29

7.இரட்சிக்கப்படாதவர்கள்

     ஆபேலுடைய நாட்கள் முதல் ஆயிர வருட அரசாட்சி முடிய வரை உள்ள காலகட்டத்திலுள்ள எல்ல பாவிகளும் வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புக்காக ஆயிரவருட அரசாட்சிக்கு பின் உயிர்தெழுவார்கள். இது உயிர்த்தெழுதலின் ஏழாம் வரிசையாகும்.

“பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் ...,சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.” தானியேல் 12:2

“இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, ...,தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” யோவான் 5:28-29

[8/17, 7:42 PM] Thomas - Brunei VTT: Not to *pray* to anyone except the king....
Can this be compared to laws about national anthem and other patriotic songs?

[8/17, 7:44 PM] Thomas - Brunei VTT: If there is a law which prohibits believers from going to or gather as church...
I'm sure Bro Levi knows what to do and he is doing..

[8/17, 7:45 PM] Thomas - Brunei VTT: In many islamist and communist nations gather as church is unlawful..

[8/17, 7:50 PM] Thomas - Brunei VTT: தானியேல் 6: 7
எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

Daniel 6: 7
All the presidents of the kingdom, the governors, and the princes, the counsellors, and the captains, have consulted together to establish a royal statute, and to make a firm decree, that whosoever shall ask a petition of any God or man for thirty days, save of thee, O king, he shall be cast into the den of lions.

[8/17, 7:51 PM] Thomas - Brunei VTT: This was a law prohibiting Prayer to God

[8/17, 7:56 PM] Thomas - Brunei VTT: The theme of the bible is *Salvation by Faith*

[8/17, 7:56 PM] Thomas - Brunei VTT: Either OT saint or NT saint

[8/17, 7:57 PM] Thomas - Brunei VTT: OT saints by faith looked forward to the Cross...
NT saints by faith look backwards to the Cross

[8/17, 8:00 PM] Sam Jebadurai Pastor VDM: பயன் தராத தியானம் என்று எதுவுமே இல்லை.

[8/17, 8:00 PM] Sam Jebadurai Pastor VDM: கற்றுக் கொள்ள மனதில்லாவிடில் எல்லாம் அப்படியே தெரியும்

[8/17, 8:00 PM] Thomas - Brunei VTT: Bible says 'at the right time God send Jesus'..
God is impartial...
[8/17, 8:01 PM] Thomas - Brunei VTT: God saves saints in each dispensation according to their faith..

[8/17, 8:01 PM] Thomas - Brunei VTT: Where is Abel now?

[8/17, 8:02 PM] Elango: புதிய எருசலேம் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்கு உண்டாக்கப்படும் இடமல்ல என்று எப்படி சொல்றீங்க ஐயா...?

எனக்கு புரியவில்லை போதுமானதாக இல்லை ஐயா  மேலே கொடுக்கப்பட்ட விளக்கம்..

[8/17, 8:02 PM] Thomas - Brunei VTT: Where is Noah?

[8/17, 8:02 PM] Thomas - Brunei VTT: Where is Enoch, Abraham Isaac and Jacob?

[8/17, 8:03 PM] Thomas - Brunei VTT: This list can go on..

[8/17, 8:03 PM] Joseph Dhanaraj VTT: *மனிதன் இறந்தவுடன் கானான் செல்கிறானா?* அல்லது பிதாக்களண்டையில் சேர்ந்த்தான் என்ற அர்த்தம் என்ன??

[8/17, 8:05 PM] Joseph Dhanaraj VTT: பவுல் பரலோகிலா அல்லது பூமியின் தூளில் நித்திறையா??

[8/17, 8:05 PM] Thomas - Brunei VTT: The OT saints had to wait for the NT saints in order to be made perfect..
Hebrews 11:40

[8/17, 8:06 PM] Joseph Dhanaraj VTT: Where they are waiting?

[8/17, 8:07 PM] Thomas - Brunei VTT: It does not speak about personal spiritual perfection but the perfection of the New Jerusalem..
This is my understanding..

[8/17, 8:08 PM] Joseph Dhanaraj VTT: Where is new Jerusalem

[8/17, 8:08 PM] Thomas - Brunei VTT: The righteous shall live ( can also mean saved) by faith is first mentioned in OT...

[8/17, 8:09 PM] uma VTT: வாக்குத்தத்தம் தேவன் எப்படி வெளிப்படுத்துவார் மற்றும் அவர் நமக்கு தான்னு எப்படி உணர்த்துவார்?

[8/17, 8:09 PM] Thomas - Brunei VTT: Paul uses that in Romans 4 to pointing to Abraham (Before Law) and David (After Law)

[8/17, 8:20 PM] Jenkins VTT: மூன்றாம் வானத்திலுள்ள இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களின் ஆத்துமாக்களை கொண்டு வரும் கிறிஸ்து


“இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.” Iதெசலோனிக்கேயர் 4:14

   இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்கள் என்பது பெந்தெகொஸ்தே நாளுக்கும் கர்த்தராகிய இயேசுவின் இரகசிய வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில் இயேசுவுக்குள் மரித்த, பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களாகும். ஒரு பரிசுத்தவான் மரிக்கும்போது அவருடைய ஆத்துமா உடனடியாக தேவ சமூகத்திற்கு (மூன்றாம் வானம்) போகிறது; அவருடைய சரீரமோ சரீர உயிர்த்தெழுதலுக்காக பூமியில் காத்துக்கொண்டிருக்கிறது. கர்த்தராகிய இயேசு பூரணமாக்கப்பட்ட தமது சபைக்காக வரும்போது அவர் இந்த ஆத்துமாக்களை மூன்றாம் வானத்திலிருந்து கொண்டு வருவார். அப்போது அவர்கள் தங்கள் சரீரங்களோடு மறுபடியும் இணைக்கப்பட்டு முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருப்பவர்கள் மறுரூபப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.  

சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை
மரித்த பரிசுத்தவான்களின் ஆத்துமாக்கள் இளைப்பாறும் மூன்று வானங்கள்

“நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.” ஏசாயா 57:2

1.மூன்றாம் வானம்

“கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.” IIகொரிந்தியர் 12:2

“அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.” IIகொரிந்தியர் 12:3
  பெந்தெகொஸ்தே நாள் முதல் இரகசிய வருகை வரை கிறிஸ்துவுக்குள் பூரணமாக்கப்பட்டு மரித்தவர்கள் (பரிசுத்தவான்கள் மற்றும் விசுவாசிகள்), இரகசிய வருகையில் தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை மூன்றாம் வானத்தில் தங்கள் ஆத்தும சரீரத்தில் இளைப்பாறுகிறார்கள். இவர்கள் நித்தியத்தில் சீயோனையும், புதிய எருசலேமையும் பெற்றுக்கொள்ளுவார்கள்.

  அப்போஸ்தலனாகிய பவுல் மூன்றாவது வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளாப்பட்டார் என்பதிலிருந்து அதற்கு முன்பாக இரண்டு வானங்கள் இருக்கிறது என்பது தெளிவாயிருக்கிறது.

2.இரண்டாம் வானம்

  பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகவும், பொதுவான இரத்த சாட்சிகளாகவும் (பழைய, புதிய ஏற்பாட்டு பூரணமாக்கப்படாத இரத்த சாட்சிகள்) மரித்தவர்கள் அர்மகெதோன் யுத்தத்திற்கு பின் தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை இரண்டாம் வானத்தில் தங்கள் ஆத்தும சரீரத்தில் இளைப்பாறுகிறார்கள்.

A.பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்

“தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்;...” சங்கீதம் 68:18

  முதலாம் உடன்படிக்கையின் காலத்தில் நடந்த அக்கிரமத்தை நிவிர்த்தி செய்யும்பொருட்டு கர்த்தராகிய இயேசு நிஜமான பஸ்கா பலியான போது அவர் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார். அதுவரை   பூமியின் தாழ்விடங்களில் இருந்த தற்காலிக நரகத்தின் முதலாம் பகுதியான பாதாளத்தின் மேற்பரப்பாகிய ஆபிரகாமின் மடியில் இளைப்பாறிய அல்லது சிறைப்பட்ட பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை பூமியின் தாழ்விடங்களில் இறங்கிய இயேசு சிறையாக்கிக்கொண்டு உன்னதத்திற்கு ஏறி இரண்டாம் வானத்தில்  இளைப்பாற பண்ணியிருக்கிறார். இவர்கள் தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை இரண்டாம் வானத்தில் தங்கள் ஆத்தும சரீரத்தில் இளைப்பாறுவார்கள்.

“ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி,...” எபேசியர் 4:8

“ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?” எபேசியர் 4:9

“…என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றான்.” ஆதியாகமம் 42:38

“நீங்கள் இவனையும் என்னைவிட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடேபாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.” ஆதியாகமம் 44:29

“பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.” லூக்கா 16:22

“பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.” லூக்கா 16:23,26

B.பொதுவான இரத்த சாட்சிகள்

“அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே (Eng : Alter-தூப பீடம்) கண்டேன்.” வெளி 6:9

  ஆபேல் முதல் யோவான்ஸ்நானன் வரையிலான பழைய ஏற்பாட்டு இரத்த சாட்சிகளும், பெந்தெகொஸ்தே நாள் முதல் இரகசிய வருகை வரை மரித்த பூரணாமாக்கப்படாத புதிய ஏற்பாட்டு இரத்த சாட்சிகளாகவும் (இவ்விரு கூட்டத்தாரும் பொதுவான இரத்த சாட்சிகளாவார்கள்) மரித்தவர்கள், அர்மகெதோன் யுத்தத்திற்கு பின் தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை இரண்டாம் வானத்தில், தங்கள் ஆத்தும சரீரத்தில் இளைப்பாறுகிறார்கள். இவர்கள் நித்தியத்தில் புதிய வானத்தில் கண்ணாடிக் கடலை பெற்றுகொள்ளுவார்கள்.

C.உபத்திரவகால இரத்த சாட்சிகள்

  முதல் மூன்றரை வருட உபத்திரவகாலத்தில் இரத்த சாட்சிகளாக மரித்தவர்கள்,  ஏழு வருட உபத்திரவகால மத்தியில் தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை இரண்டாம் வானத்தில் தங்கள் ஆத்தும சரீரத்தில் இளைப்பாறுவார்கள். இவர்கள் நித்தியத்தில்  புதிய வானத்தில் அக்கினி கலந்த கண்ணாடிக் கடலை  பெற்றுகொள்ளுவார்கள்.

3.முதலாம் வானம்

“இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” லூக்கா 23:42-43

  மனசாட்சி கால முதல் ஆயிரம் வருஷ அரசாட்சி முடிய எல்ல காலத்திலும் இரட்சிப்பை மாத்திரம் பெற்று பூரணமாக்கப்படாமல் மரித்தவர்கள், அதாவது சிலுவைக் கள்ளனைப்போல் மறுபடியும் பிறத்தலாகிய இரட்சிப்பை மாத்திரம் பெற்று மேற்கொண்டு பூரணப்பட தருணம் கிடைக்கப்பெறாமல் மரித்தவர்கள், ஆயிரம் வருஷ அரசாட்சிக்கு பின் தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை முதலாம்  வானத்தில் தங்கள் ஆத்தும சரீரத்தில் இளைப்பாறுகிறார்கள்.

  மகா உபத்திரவகாலத்தில் முத்திரை போடப்பட 1,44,000 இஸ்ரவேலர்கள் ஆயிரம் வருஷ அரசாட்சியில் ஜீவித்து பின் மரித்து ஆயிரம் வருஷ அரசாட்சிக்கு பின்  தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை முதலாம் வானத்தில் தங்கள் ஆத்தும சரீரத்தில் இளைப்பாறுவார்கள்.

ஆயிரம் வருஷ அரசாட்சியின் போது 1,44,000 இஸ்ரவேலர்களின் சந்ததியினரிலும், புற ஜாதிகளிலும் இரட்சிக்கப்படுகிறவர்கள் ஆயிரம் வருஷ அரசாட்சியில் மரித்து ஆயிரம் வருஷ அரசாட்சிக்கு பின்  தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை முதலாம் வானத்தில் தங்கள் ஆத்தும சரீரத்தில் இளைப்பாறுவார்கள். இவர்கள் அனைவரும் நித்தியத்தில் புதிய பூமியை பெற்றுகொள்ளுவார்கள்.

சரீர உயிர்த்தெழுதல் உண்டாகி நித்திய அக்கினிக்கடலில் பங்கடைவது வரை மரித்த பாவிகளின் ஆத்துமாக்கள் வாதிக்கப்படும் பூமியின் தாழ்விடங்களிலுள்ள
தற்காலிக நரகத்தின் மூன்று பகுதிகள்

1
பாதாளம் (Eng:Grave, Gk:Hades, Heb:Sheol)

“பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது,...” லூக்கா 16:23

“அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; ...” எண்ணாகமம் 16:33

“அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்” வெளி 20:14

மனசாட்சி கால முதல் ஆயிரம் வருஷ அரசாட்சி முடிய எல்ல காலத்திலுமுள்ள பாவிகள் மரித்து பூமியின் தாழ்விடங்களில் உள்ள தற்காலிக நரகத்தின் முதலாம்  பகுதியான பாதாளத்தில், ஆயிரம் வருஷ அரசாட்சிக்கு பின் தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை தங்கள் ஆத்தும சரீரத்தில் வாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் நித்தியத்தில் அக்கினிக்கடலை பெற்றுகொள்ளுவார்கள்.

2
புறம்பான இருள் (Eng:Outer Darkness, Gk:Tartarus)

“ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” மத்தேயு 8:12

“…இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.” மத்தேயு 22:13

“பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.” மத்தேயு 25:30

மனசாட்சி கால முதல் ஆயிரம் வருஷ அரசாட்சி முடிய எல்லா காலத்திலுமுள்ள பின்மாற்றக்காரர்களும், ராஜ்யத்தின் புத்திரராகிய கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத இஸ்ரவேலர்களும் (மத்தேயு 8:12;22:13;25:30), மரித்து பூமியின் தாழ்விடங்களில் உள்ள தற்காலிக நரகத்தின் இரண்டாம்   பகுதியான புறம்பான இருளிலே தள்ளப்பட்டு  ஆயிர வருஷ அரசாட்சிக்கு பின் தங்களுக்குரிய சரீர உயிர்த்தெழுதல் உண்டாகும் வரை தங்கள் ஆத்தும சரீரத்தில் வாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் நித்தியத்தில் அக்கினிக்கடலை பெற்றுகொள்ளுவார்கள்.

3
பாதாளக்குழி / அகாதமான பாதாளம் (Eng: Bottomless pit, Gk: Abyss)

“ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்” ஏசாயா 14:15

“..அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.” வெளி 9:1

நான்கு வித ஊழியத்திற்காக பணிவிடை ஆவிகளாக ஐந்து வரிசையில் சிருஷ்டிக்கப்பட்ட தேவ தூதர்கள் தங்கள் பாவத்தினிமித்தம் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டு அகாதமான பாதாளமாகிய பாதாளக்குழியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆயிரம் வருஷ அரசாட்சிக்கு பின் நித்தியத்தில் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவார்கள்.

[8/17, 8:26 PM] Sam Jebadurai Pastor VDM: John            14:3  "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்."

[8/17, 8:43 PM] Sam Jebadurai Pastor VDM: வந்தே மாதரம் இந்து சமய பெண் தெய்வங்களை பாரத மாதாவாக பாவித்து எழுதப்பட்டது. இதனால் தான் இது தேசிய கீதமாக ஏற்கபடவில்லை.

[8/17, 8:44 PM] Sam Jebadurai Pastor VDM: வந்தே மாதரம்

சுஜலாம் சுபலாம் மலயஜ சீதளாம்

சஸ்யஷ்யாமளாம் மாதரம்

ஷுப்ரஜ்யோத்ஸ்னா புலகிதயாமினீம்

புல்லகுசுமித த்ருமதள ஷோபினீம்

சுஹாசினீம் சுமதுர பாஷினீம்

சுகதாம் வரதாம் மாதரம்

சப்தகோடி காந்த காலகால நிநாட கராலே
த்விசப்த கோடி புஜேர் த்ருதகர  கர்வாலே

அபல கேன மா ஏதா பலே

பகுபல் தாரிணீம் நமாமி தாரிணீம்

ரிபுடலவாரிணீம் மாதரம்

வந்தே மாதரம்

துமீ வித்யா துமீ தர்மா

துமீ ஹ்ரிதீ துமீ மர்ம

தவம் ஹி ப்ராணாஹ் சரீரே

பஹுதே துமீ மா ஷக்தி

ஹ்ருதயே துமீ மா பக்தி

தோமாராயிப்ரதிமா கரி

மந்திரே மந்திரே

த்வம் ஹி *துர்கா தசாப்ரஹார நாதாரிணீ*

கமலா கமலதள விஹாரிணீ

வாணீ வித்யாயினீ நமாமி த்வம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்

சுஜலாம் சுபலாம் மாதரம்

ஷ்யாமளாம் சரளாம் சுஷ்மிதாம் பூஷிதாம்

தாரணீம் பரணீம் மாதரம்

*முண்டாசு கவியின் மொழி பெயர்ப்பு:*

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்

குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்

வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்

தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்

புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்

வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்

கோடி கோடி புயத்துணை கொற்றமார்

நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,

கூடு திண்மை குறைந்தனை என்பதென்?

ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,

மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)

அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை

மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ

தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.

*ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச்சிலையெலா* ம*தேவி, இங்குனதே. (வந்தே)

பத்துப் படைகொளும் *பார்வதி தேவியும்*

கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்

அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!

தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை

மருவு செய்களின் நற்பயன் மல்குவை

வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை

பெருகு மின்ப முடையை குறுநகை

பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை.

இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,

எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவோம்! (வந்தே)

[8/17, 8:45 PM] Sam Jebadurai Pastor VDM: இந்தியாவை நான் நேசிக்கிறேன் ஆனால் அதை தெய்வமாக வணங்க தயாராக இல்லை.

[8/17, 8:59 PM] Thomas - Brunei VTT: Thanks Bro Sam for the wonderful meaning and explanation about Vanthe  Maatharam.

[8/17, 9:00 PM] Thomas - Brunei VTT: There is also a Tamil Thai song... I vaguely remember..

[8/17, 9:02 PM] Elango: இந்த பாட்டா ஐயா?

நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராடும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைதுலகும் இனபமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

[8/17, 9:10 PM] Elango: இந்த பாடலையும் நாம் பாடக்கூடாது என்று நினைக்கிறேன். *தமிழை தெய்வமாக உருவகப்படுத்தி எழுதப்பட்ட பாடல் இது.*

தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருள் : நீராரும் = நீர் ஆரும் - நீர் அலைகளாய் எழுந்து ஆர்ப்பரிக்கின்ற கடலுடுத்த = கடல் உடுத்த - கடல் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டுள்ள நிலமடந்தைக்கு = நிலம் என்னும் பெண்ணுக்கு நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு = நீரலைகள் ஆர்ப்பரிக்கின்ற கடலை ஆடையாக உடுத்திக்கொண்டுள்ள நிலம் என்னும் பெண்ணுக்கு. உலகில் உள்ள நிலப்பரப்புகள் யாவும் நீர்சூழ்ந்தவை. கடல்சூழ்ந்தவை. நிலமென்னும் மடந்தை நீரலைகள் ஆர்ப்பரிக்கின்ற கடலை ஆடையாகத் தன்னைச் சுற்றி உடுத்திக்கொண்டவள். எழிலொழுகும் = எழில் ஒழுகும் - அழகு கொஞ்சுகின்ற, அழகு வழிகின்ற சீராரும் வதனம் என = சீர் ஆரும் வதனம் என - சிறப்புகள் ஆர்த்து ஆடுகின்ற முகம் என திகழ்பரதக் கண்டமிதில் = திகழ் பரதக்கண்டம் இதில் - அவ்வாறெல்லாம் திகழ்கின்ற பாரதத் துணைக்கண்டமாகிய இதில். இப்போது இரண்டு வரிகளையும் சேர்த்துப் பொருள்கூட்டுவோம் ! நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் நீர் அலைகள் ஆர்த்தெழுகின்ற கடலை ஆடையாக உடுத்திக்கொண்டவளான நிலமென்னும் பெண்ணுக்கு அழகு கொஞ்சுவதாகவும் சிறப்புகள் நடமாடுகின்றதாகவும் திகழ்கின்ற பாரதத் துணைக் கண்டமாகிய இதில். உலகில் உள்ள நிலமெல்லாம் கடலை ஆடையாக உடுத்திக்கொண்ட பெண்ணாக உருவகித்துக்கொள்ளுங்கள். அந்தப் பெண்ணின் அழகிய முகமாக பாரதக் கண்டம் திகழ்கின்றது. உலகத்திற்கு முகமாவது பாரதத் துணைக்கண்டம் ! இதுதான் முதலிரண்டு வரிகளின் பொருள். தெக்கணமும் = பாரதத்தின் தென்பகுதியில் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் = அங்குச் சிறந்து விளங்குகின்ற திராவிடம் என்னும் செல்வச் செழிப்பான நாடும் தக்க சிறுபிறை நுதலும் = நுதல் என்றால் நெற்றி. தகுந்த வடிவில் சின்னஞ்சிறு பிறைபோல் அமைந்த நெற்றியும் தரிந்த நறுந்திலகமுமே = அந்நெற்றியில் இட்டுக்கொண்ட தோற்றத்திற் சிறந்த பொட்டு போன்றதே. மூன்றாம் நான்காம் வரிகளைச் சேர்த்துப் பொருள் காண்போம் ! தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநுறுந்திலகமுமே உலகத்து நிலங்கள் யாவும் கடலையுடுத்திய பெண்ணாள். அப்பெண்ணின் முகம்போன்றது பாரதக் கண்டம். அந்த முகத்தின் அழகிய நெற்றியைப் போன்றது தென்னிந்தியா. அந்தத் தென்னிலம் என்னும் பிறை நிலவு போன்ற நெற்றியில் இட்டுக்கொண்ட பேரழகு கொஞ்சும் குங்குமப் பொட்டுபோல் திகழ்வது திராவிட நாடு. அத்திலக வாசனைபோல் = அந்த மங்களத் திலகத்திற்கு எத்துணை நற்புகழ், நல்லியற்கை உண்டோ அதுபோல். அனைத்துலகும் இன்பமுற = எல்லா உலகங்களும் இன்பத்தில் திளைக்கும்படி எத்திசையும் புகழ்மணக்க = எட்டுத் திக்குகள் மட்டுமல்ல, எல்லாத் திக்குகளிலும் புகழ் என்னும் இன்ப வாசனை மணமணக்கப் பரவும்படி இருந்த பெரும் தமிழணங்கே = வாழ்ந்த பேராற்றல் வாய்ந்த தமிழ் என்னும் தெய்வமே ! உன் சீரிளமைத் திறம்வியந்து = தொன்றுதொட்டு வாழ்ந்தவள் என்றாலும் குன்றாத இளமையுடையவளாய்த் திகழும் உன் ஆற்றலை வியந்து செயல்மறந்து = செய்வதறியாது மெச்சியவராய் எங்கள் மெய்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே = வாழ்த்துகின்றோமே வாழ்த்துகின்றோமே வாழ்த்துகின்றோமே ! ஒட்டுமொத்தப் பாட்டுக்கும் பொருள் சொல்கிறேன், இதன்பின் பாடல் தெற்றென விளங்கும். நீரலைகள் எழுந்தாடுகின்ற கடலை ஆடையாக உடுத்திக்கொண்டவள் நிலம் என்னும் அழகிய பெண்ணாள். நிலமாகிய அப்பெண்ணுக்கு, அழகு கொஞ்சுகின்ற சிறப்புகள் சூழ்ந்தாடுகின்ற முகம்போன்று திகழ்வது பாரதக் கண்டம். அம்முகத்திற்கு அழகிய பிறைபோன்று அமைந்த நெற்றிதான் தெற்குப் பகுதி. அந்த நெற்றியில் சூடிக்கொண்ட அழகிய திலகம் போன்று புகழொளி வீசுகின்ற திருநாடுதான் திராவிட நாடு. அந்தத் திலகத்தின் புகழும் அழகும்போல, அனைத்து உலகத்தவர்களும் இன்பத்தால் திளைக்கும்படி, எல்லாத் திக்குகளுக்கும் பரவி வாழ்ந்து வருகின்ற *தமிழ் என்னும் தெய்வமே !*👆🏻 தொன்று தோன்றியவளாய், பெருவாழ்வு வாழ்ந்தவளாய் இருந்தும் இன்றும் புதுமைக்குப் புதுமையாய் என்றும் இளைமையாய்த் திகழ்கின்ற உன் பேராற்றலை வியந்து, ஊன் உடல் மனம் அனைத்தும் செயலற்றவர்களாய் மெய்ம்மறந்து வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம்

[8/17, 9:10 PM] Sam Jebadurai Pastor VDM: தமிழ் தாய் வாழ்த்து தமிழை பெண்ணாக உருவகபடுத்தி பாடப்பட்டது. ஆனால் வந்தே மாதரம் இந்து பெண் தெய்வங்களை பாரதத்தாயாக உருவகபடுத்தி பாடப்பட்டது

[8/17, 9:11 PM] Elango: இந்த பாட்டு இப்போதும் தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாடப்பட்ட வருகிறதா? யாராவது சொல்லுங்களேன்

[8/17, 9:13 PM] Sam Jebadurai Pastor VDM: ஆமாம் சகோதரரே

[8/17, 9:14 PM] Elango: இதன் பொருள் *தமிழை பெண்ணாகவும், தெய்வமாகவும்* உருவகப்படுத்தி *வாழ்த்தி* பாடுவதாம்.

[8/17, 9:14 PM] Sam Jebadurai Pastor VDM: இங்கே பதிவிடப்படும் பாடல் வரிகளை மட்டுமே பள்ளியில் பாடுகிறார்கள்
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

”“
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல்

அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

[8/17, 9:15 PM] Sam Jebadurai Pastor VDM: தெய்வ மகளான தமிழ் என்பதற்கும் தெய்வமான தமிழ் என்பதற்கும் வித்தியாசம் உண்டு

[8/17, 9:16 PM] Johnson VTT 1: Good explain brother

[8/17, 9:20 PM] Elango: எந்த தெய்வம் மகள்ன்னு அவர் பாடியிருப்பார் பாஸ்டர், அவர் மனோமனியம் சுந்தரனார்.

[8/17, 9:21 PM] Sam Jebadurai Pastor VDM: ஆனால் அதுவும் கூட அந்த பாடலில் விளக்கத்தில் தான் வருகிறது.

[8/17, 9:26 PM] Elango: மனோமணியம் சுந்தரனார் பிள்ளை என்பவர் இந்து சைவ பக்தராம்.

[8/17, 9:27 PM] Sam Jebadurai Pastor VDM: முழு பாடல் வரிகளை பார்க்கும் போது அங்கே தமிழை தெய்வமாக பாவித்து வார்த்தைகள் வருகிறது. ஆனால் அவை பள்ளியில் பாடும் பாடல் வரிகளில் இல்லை. முழு பாடலின் முதல் பகுதி மட்டுமே பள்ளியில் பாடப்படுகிறது.

[8/17, 9:29 PM] Elango: ஆங்கில மொழிபெயர்ப்பு👇🏻👇🏻ஆங்கிலத்தில் தெய்வமென்று மொழிபெயர்க்கப்படவில்லை*

(Oh Tamil Country!) you are beautifully clad in the wavy rivers and seas;

Your chiseled face shines amidst the famous Barath sub-continent;

You are the elite Dravidian country in the Deccan;

Your small forehead shines like the crescent with a distinct "thilagam";

Like the fragrance of the "thilagam" rejoiced by the entire world,

Your great name and fame is known in all directions;

Oh Tamil Angel! Oh Tamil Angel!

Your majestic, youthful industriousness makes us spell bound and wish all the best for you, all the best! all the best!

Govindarajan Vijaya Padma

[8/17, 9:33 PM] Johnshan VTT: ஏசு  மரணப்பரியந்தம்  கீழ்ப்பதலி  கற்று  கொண்டார்  பிறகு  ஏசு சொல்லுகிறா றோயனுக்கு   உரியத ராயனுக்கு   கொடுங்க   கீழ்  படிக்கிற  ஆவி கிறிஸ்துவுக்குள் இருக்கு  அதனால  அன்பு வரும்  பிசாசுக்கு  வேலை இல்ல .இந்த சரீரம்  ஒரு மண்ணு  உண்மயானன  ்நான் தேவா சுவாசத்தை  பெற்றவன்  இந்த சரீரம் மண்ணுக்கு  போய்விடும்  ஆனா என்னுடைய ஆவி  அவரோடு இருக்கும்  .பிளானெட்டுக்கு  போகிறவர்கள்  ஒரு உடை  போட்டு  இருப்பார்கள் அது  தான் அவர்களை வழிநடத்தும்  அது போல   நாமும் பரலோகம்  என்கிற  பரிசுத்த   கானானுக்கு  செல்லவேண்டும்  நாம்   படுவதாலோ  விவாதம்  பண்ணுவதாலோ   ஏசுவின்  வல்லமை  கூடவே  கூடாது   குறையவும்  குறையாது .நாம் கீழாய்  நோக்க்கமா  கழுகை  போல்  புரிந்து  கொண்டு  ஏசுவின்  வல்லமை ஏசுவின் உண்மை  கிறிஸ்துவுக்குள் சாட்சியாக இருப்போம்

[8/17, 9:34 PM] Elango: கால் மிதிக்கும் தேசமெல்லாம் நம் கர்த்தருக்கு சொந்தமாகட்டும்.

[8/17, 9:41 PM] Thomas - Brunei VTT: Yes Bro

[8/17, 9:42 PM] Elango: பாடாமல் இருந்தால் ஸ்கூலை விட்டு நீக்கமாட்டார்கள் தானே...

[8/17, 9:44 PM] Thomas - Brunei VTT: In my Christian school we used to have keerthanai and prayer

[8/17, 9:44 PM] Thomas - Brunei VTT: I think in govt schools these are compulsory

[8/17, 9:45 PM] Elango: Praise God 🙋‍♂

[8/17, 9:45 PM] Thomas - Brunei VTT: Seermiu vaanbuvi theva  sthothram.... 😄

[8/17, 9:47 PM] Elango: 👍😀

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,
ஏர்குணனே தோத்ரம், அடியர்க்-கு
இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா

[8/17, 9:47 PM] Thomas - Brunei VTT: Can a believer be in army?

[8/17, 9:48 PM] Thomas - Brunei VTT: ✅✅✅ once it was just a song but now a reality

[8/17, 9:52 PM] Elango: யோவான் 4:21
[21]அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

இந்த வசனத்தின்படி நாம் எந்த இடத்தில் இருந்து ஆண்டவரை தொழுதாலும் அது புண்ணிய அல்லது பரிசுத்த பூமி தானே

[8/17, 10:00 PM] Elango: *பழைய தியானம் - கிறிஸ்தவர்கள் எருசலேமிற்க்கு புனித பயணம் செய்வது சரி தானா❓*

படிக்க சொடுக்க - https://vedathiyanam.blogspot.in/search/label/Holy_Land_Tour

[8/18, 12:20 AM] Elango: தேவன் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற தேசம் எது?

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்த போது,  நான் போய் உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்பண்ணப் போகிறேன் என்று சொல்லி, திரும்பவும் உங்களை அழைத்துச்செல்வேன் என்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்.

John            14:3  "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்."

*ஆகவே நம் வாக்குத்தத்த தேசம் பரம கானானாக இருக்கிறது*

-.Pastor Sam

[8/18, 12:24 AM] Elango: இன்றைக்கும் Holy land அல்லது Promise land tour , வாக்குத்தத்த தேசத்திற்க்கு ஒரு புனித பிராயாணம் என்கிறரீதியில் அநேக விளம்பரங்கள் வருகிறது. இஸ்ரவேல் தேசத்தை அவர்கள் வாக்குத்தத்த தேசம் என்று சொல்லுகின்றார்கள்.

இஸ்ரவேல் / கானான் தேசம்  வாக்குத்தத் பூமிதான், ஆனால் அந்த கானான் தேசமானது பரலோகத்திக்கு ஒரு நிழலாக இருக்கிறது.

- Pastor Sam

[8/18, 12:39 AM] Elango: இந்த கானான் தேசம் பரம கானானிற்க்கு நிழலாக இருக்கிறது. பரம கானானை நாம் சுதந்தரிக்கப்போகிறோம் என்பதற்க்கு ஒரு நிழலாக இருக்கிறது.

நம்முடைய வாக்குத்தத்தம் தேசம் ஒன்று இருக்குமானால் அது பரலோகம் ஒன்று.

இன்னோரு வாக்குத்தத்தம் தேசம் என்று சொல்லும்போது, சுதந்தரிக்கப்படாத தேசம்.

*நாம் இந்தியாவில் வாழ்கிறோம், 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். ஆனால் இன்னும் நம் தேசத்திற்க்கு 2000 வருடத்திற்க்கு மேலாக ஆகிவிட்டது, இன்னும் இந்தியாவில் நாம் சுதந்தரிக்கப்படாத இடங்கள் உண்டு.சுவிஷேசம் அறிவிக்கப்படாத இடங்கள் உண்டு. அந்த இடங்கள் தான் வாக்குத்தத்த இடங்களாக இருக்கிறது.*

அதை நாம் இயேசுவின் நாமத்தில் சுதந்தரிக்க வேண்டும். ஆபிரகாமிற்க்கு கர்த்தர் சொன்னார், உனக்கும் உன் சந்ததிக்கும் இதை தருவேன் என்று சொல்லி, தேசத்தின் எல்லை எவ்வளவு தூரம் அவ்வளவு தூரம் நட என்று சொன்னார். அவன் நடந்தான் அவன் சுதந்தரித்துக்கொண்டான்.

*இந்த நடத்தல் என்பது முக்கியமான காரியம். It's not a phisical walk, it's a spiritual walk. வேதத்தில் பார்க்கும்போது, ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான், நடந்துக்கொண்டிருந்தான் என்று எழுதப்பட்டுள்ளது. தேவனோடு அவன் நடந்துக்கொண்டிருந்தான் அவன் காணப்படாமல் போனான், தேவனோடு நடந்துக்கொண்டிருக்கும் ஒரு அனுபவத்தை பெறும்போது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, சுதந்தரிக்கப்படாமல் இருக்கிற இந்த இந்தியா தேசத்தை நாம் சுதந்தரிக்க முடியும். இந்தியாவை தேவன் மிகவும் நேசிக்கிறார் அதனால் தான் இந்தியாவின் பெயர் இரண்டுமுறை வேதத்தில் வருகிறது.*

- Pastor Sam

[8/18, 1:12 AM] Elango: எப்படி சொந்த நாட்டை நேசிக்காமல் இஸ்ரவேல் நாட்டிற்க்காக இருதயம் துடித்துக்கொண்டிருக்கிறதோ, அதேப்போல நான் தமிழன் நான் இந்தியன் என்று சொல்லி ஆண்டவரை என்னவெல்லாமோ சொல்லி மாற்றி பேசக்கூடிய சமுதாயம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது கிறிஸ்தவத்தில்.

ஆதாம் ஏவாள் தமிழ் பேசினார்கள், இந்தியாவில் குமரி கண்டத்தில் வாழ்ந்தார்கள் என்று யூகங்கள் வந்துக்கொண்டிருக்கிறது. வேதத்தின் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு தவறு.

இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், இரண்டாவது கேள்வி, *தாய் மண்ணே வணக்கம் என்று கிறிஸ்தவர்கள் பாடலாமா?*

வந்த மாதாரம் பாடலை குறித்து ஒரு சர்ச்சை கூட வந்தது, இடையில் ஒரு கேஸ் போட்டார், அப்போது Judge சொன்னார் வந்தே மாதரம் பாடல் எல்லா கல்லூரி, பள்ளிகளில் பாட வேண்டும் என்றார். ஆனால் அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

*ஏன் எதிர்ப்பு தெரிப்பு தெரிவித்தார்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்*

வந்தே மாதரம் - வந்தே என்றால் வணக்கம் என்று அர்த்தம். மா என்றால் தாய் என்று அர்த்தம். தரம் என்றால் மண் என்று அர்த்தம்.

It's a Bengali song. இந்த பாடலை பாரதியார் மொழிப்பெயர்த்திருக்கிறார்.  இந்த பாடலில் துர்கா, இலட்சுமி போன்ற தெய்வங்ளோடு கூட பாரத மாதா என்று சொல்லப்பட்டிருக்கும். இந்துமதத்தை பொருத்தவரையில் இந்தியாவில், பல கடவுள்களை வணங்கக்கூடிய ஒரே கடவுள் நம்பிக்கையை கூறக்கூடிய மதம்.

*இந்தியாவை துர்காவாகவும், இலட்சுமியாகவும், பார்வதியாகவும் உருவகப்படுத்தி எழுதப்பட்ட ஒரு பாடல், இந்த பாடல்களில் பிண்ணனியம் பார்க்கும்போது இந்தியாவை ஒரு தெய்வமாக உருவகப்படுத்தி வணங்குவதை குறிக்கிறது. அது ஒரு தவறான காரியம் ஆகையால் இந்த காரியத்திற்க்காக இந்த வந்தே மாதரம் பாடலை நாம் பாட முடியாது*

1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, வந்தே மாதரம் தேசியகீதமாக மாற்ற வேண்டுமென்ற சர்ச்சை வந்தது. ஆனாலும் இதில் மத சம்பந்தமான காரியங்கள் இருந்த படியினால் ஏற்றுக்கொள்ள வில்லை. அதன் பிறகே ஜனகனமன ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஜனகனமன பாடலில் தேசமானது ஒரு நபரைப் போல உருவப்படுத்தப்பட்டிருக்கும். ஆனாலும் இதில் மதகலவை இல்லாமல் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆகவே தேசியகீதம் பாடுவதையும், இதையும் ஒன்றாக சேர்த்து பார்க்க முடியாது. வந்தேமாதரத்தின் கருத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். கர்த்தர் நல்லவர்.

-.Pastor Sam

[8/18, 4:51 AM] Thomas - Brunei VTT: When God created the world there were no continents and islands

[8/18, 4:52 AM] Thomas - Brunei VTT: God separated the water and the land

[8/18, 4:53 AM] Thomas - Brunei VTT: Even during the time of Noah the land was just one huge area.

[8/18, 5:02 AM] Thomas - Brunei VTT: It was during the time of Peleg that the land which was one huge continent was divided into many continents and continue to drift even today due to plate tectonics

[8/18, 5:04 AM] Thomas - Brunei VTT: We cannot brush aside some creational facts

[8/18, 5:06 AM] Thomas - Brunei VTT: I need to love my own country and my people

[8/18, 5:10 AM] Thomas - Brunei VTT: As Paul had burden for for the Jews we also need have such burden.
I'm sure and praise God many of in the group have such burden.

[8/18, 5:12 AM] Thomas - Brunei VTT: We support Israel because they are God's Olive Tree

[8/18, 5:22 AM] Thomas - Brunei VTT: Covenant people

[8/18, 5:24 AM] Thomas - Brunei VTT: A believer's relation to his own country is clearly stated in Romans 13

[8/18, 5:27 AM] Thomas - Brunei VTT: First of all... I'm a Christian and i love God
Secondly... I'm an Indian and i love India..
This is my opinion.

[8/18, 6:27 AM] Johnson VTT 1: தீத்து, Chapter 2

11. ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,

12. நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தௌpந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

13. நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

14. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

[8/18, 7:08 AM] Nesaraja VTT: கர்த்தர் நல்லவர்

Post a Comment

0 Comments