Type Here to Get Search Results !

வாசஸ்தலத்திலுள்ள மூடுதிரைகளை குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

[7/15, 10:13 AM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 15/07/2017* 🔷

1⃣ வாசஸ்தலத்திலுள்ள *மூடுதிரைகளை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

2⃣மூடுதிரைகள் எதினால் செய்யப்பட்டிருந்தது❓மூடுதிரைகள் எதையெல்லாம் மூடியிருந்தது❓

3⃣வாசஸ்தலத்திலுள்ள *மூடுதிரைகளை* இணைக்கும் *பொன் கொக்கிகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*

3⃣ *தொங்குதிரைகளை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

4⃣பரிசுத்த ஸ்தலத்திற்க்கும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் *திரைச்சீலையின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com









[7/15, 10:37 AM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 26:1-6
[1]மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து *மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக;,*👇 👇 👇 👇 👇 👇 அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.
[2] *ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்👇👇👇👇👇👇👇👇👇👇.*
[3] *ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.*👇👇👇👇👇👇👇👇
[4]இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக.
[5]காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.
[6] *ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.*

[7/15, 10:39 AM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 26:7-11
[7] *வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.*
[8]ஒவ்வொரு மூடுதிரை *முப்பது முழ நீளமும், நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்;* பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
[9]ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக.
[10]இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,
[11] *ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடுவாயாக,*👇👇👇👇👇👇👇👇👇👇👇

[7/15, 10:40 AM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 26:12-13
[12]கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதிமூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
[13]கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.

[7/15, 10:50 AM] Levi Bensam Pastor VT: யோபு 10:9-12
[9]களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
[10] *நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?*👇👇👇👇👇👇
[11] *தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.*
[12]எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.

[7/15, 10:51 AM] Levi Bensam Pastor VT: உன்னதப்பாட்டு 1:5
[5]எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், *சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்.*

[7/15, 10:53 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 12:22-26
[22]சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
[23]மேலும், *சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;*
[24]நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
[25] *சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்*.
[26]ஆதலால் ஒறு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.

[7/15, 10:58 AM] Levi Bensam Pastor VT: யோவான் 6: 63
ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; *நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.*

John 6: 63
It is the spirit that quickeneth; the flesh profiteth nothing: *the words that I speak unto you, they are spirit, and they are life.*

[7/15, 1:11 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 26:  1 மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.
15 வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
16 ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும்.
17 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.

[7/15, 1:14 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 2:  20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.
22 அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.

[7/15, 1:20 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 26:  31 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
32 சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
33 கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
34 மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;

[7/15, 1:39 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 15/07/2017* 🔷

1⃣வாசஸ்தலத்திலுள்ள *மூடுதிரைகளை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

2⃣மூடுதிரைகள் எதினால் செய்யப்பட்டிருந்தது❓மூடுதிரைகள் எதையெல்லாம் மூடியிருந்தது❓

3⃣வாசஸ்தலத்திலுள்ள *மூடுதிரைகளை* இணைக்கும் *பொன் கொக்கிகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*

3⃣ *தொங்கு திரைகளை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

4⃣பரிசுத்த ஸ்தலத்திற்க்கும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் *திரைச்சீலையின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/15, 1:59 PM] Levi Bensam Pastor VT: வெளிப் 21:3
[3]மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: *இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்*👇 👇 👇 👇 👇 👇 👇 ; *அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்*.

[7/15, 2:00 PM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 6:16
[16]தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? *நான் அவர்களுக்குள்ளே👇👇👇👇👇👇 வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே*,

[7/15, 2:02 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 26:  31 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
32 சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
33 கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.

[7/15, 2:04 PM] Charles Pastor VT: “…ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய். அதிலே விசித்திர வேலையால் செய்யப்பட்ட கேரூபீன்கள் வைக்கப்படவேண்டும்” (யாத்.26:31).

மரித்துப்போன ஒருவரின் இல்லத்தின் நுளைவாயிலில் கம்பிகளால் உருவமைக்கப்பட்ட சில வடிவங்களைக் கண்டோம். ஆனால் அவற்றை உற்று நோக்கியபோதுதான், அவை அவரது வாழ்வின் சில அம்சங்களைச் சித்திரிக்கின்ற வடிவங்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்.

ஆசரிப்புக் கூடாரத்தை நிறைவுசெய்ய மூடுதிரைகளைக் குறித்து கர்த்தர் விளக்கினார். சுற்றிலும் பத்து மூடுதிரைகள், அவைகளில் விசித்திர வேலையாக கேரூபீன்களைச் செய்யவேண்டும் (யாத்.26:1). பின்னர் ஸ்தலத்தின் மேலே போடுவதற்கு திரைகளையும், அவற்றை நிமிர்த்தி நிற்கச் செய்யத்தக்க ஒழுங்குகளையும் விபரித்தார். இத்திரைகள் யாவும் உயர்ரக நூல்களினால் செய்யப்பட வேண்டும். பின்னர் ஒரு திரைச்சீலை செய்யப்பட்டு, அதிலேயும் கேருபீன்கள் செய்யப்பட்டு வைக்கப்பட வேண்டும். இந்த விசேஷித்த திரைச்சீலை சாட்சிப்பெட்டி வைக்கப்படுகின்ற மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும், பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவு உண்டாக்கும்படி தொங்கவிடப்பட வேண்டும் (யாத்.26:33). பின்னர் வாசலை மூடிய ஒரு தொங்குதிரை காணப்பட்டது.

ஒரு அர்த்தமின்றி தேவன் எதையும் செய்கிறவர் அல்ல! சாட்சிப்பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்திலிருந்து இஸ்ரவேலுடன் பேசுவதாகக் கூறிய கர்த்தர், யாரும் அதனை நெருங்காதபடி திரைச்சீலையைத் தொங்கவிட்டு அதிலே கேரூபீன்கள் இடச்சொன்னது என்ன? பாவியாகிய மனிதன் பரிசுத்த தேவனைக் கிட்டிச்சேர முடியாது, பாவம் மனிதனையும் தேவனையும் பிரிக்கிறது என்பதை திரைச்சீலை உணர்த்தியது எனில், அந்தக் கேருபீன்கள் எதற்கு? அவை வெறும் அலங்காரமல்ல. பாவத்தில் விழுந்த மனிதன் ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்து, தம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிடாதபடி, அவனை வெளியே விட்டு, வழியைக் காவல்செய்ய ஏதேனுக்கு வெளியே கேருபீன்களை நிறுத்தினாரே, அது நமக்கு நினைவுக்கு வரவில்லையா! இத்திரைச்சீலையும் கேருபீன்களும் மனிதனுக்கு அவனது பாவநிலையை உணர்த்தின.

கர்த்தர் என்றும் மனிதனை நேசிக்கிறவர். வாசஸ்தல அமைப்பிலும், மனிதனுடைய அபாத்திர நிலைமையையும், அதேசமயம் அவனில் தாம் கொண்டுள்ள பிரியத்தையும் வெளிப்படுத்தினார். இன்றும் கர்த்தர் நம்மை நடத்துகின்ற ஒவ்வொரு வழியிலும் நம்மை நமக்கு உணர்த்தி, தமது அன்பையும் வெளிப்படுத்துகிறார். ஆனால் அதனை உணரும் நிலைமையில் நாம் இருக்கிறோமா?

“….ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களை…. வைத்தார்” (ஆதி.3:24).

சிந்தனைக்கு: இன்று நமது பாவநிலைமையை உணர்த்த கேரூபீன்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து கிறிஸ்துவின் பாதத்தில் பணிந்து நிற்போமா?
[7/15, 2:05 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 10:1-7
[1]இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்தவருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
[2]பூரணப்படுத்துமானால், ஆராதனைசெய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
[3]அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
[4]அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
[5] ஆகையால் *அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை👇👇👇👇👇👇👇, *ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்*;
[6]சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.
[7]அப்பொழுது நான்: தேவனே, *உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்*.
[7/15, 2:05 PM] Christopher-jeevakumar Pastor VT: எபிரெயர் 10:  19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

[7/15, 2:06 PM] Christopher-jeevakumar Pastor VT: கொலோசெயர் 1:  20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
21 முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.

[7/15, 2:07 PM] Christopher-jeevakumar Pastor VT: மத்தேயு 27:  51 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.

[7/15, 2:14 PM] Christopher-jeevakumar Pastor VT: சங்கீதம் 61:  4 நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)
[7/15, 2:14 PM] Charles Pastor VT: ஆசரிப்புக் கூடாரத்தின் அர்த்தங்கள்

எழுதியவர் :   சகரியா பூணன்வகைகள் :   திருச்சபை தேடுபவர்

(இந்தியாவின் பெங்களூரில், டிசம்பர்-26-28; 2000-ல் நடை பெற்ற கருத்தரங்குகளில் (கான்பரன்ஸ்) அளிக்கப்பட்ட வேதாகம பாடத்தின் தொகுப்பு).

படிக்க: யாத் 25 லிருந்து 31 மற்றும் 35 லிருந்து 40-ம் அதிகாரம்.

இஸ்ரவேல் புத்திரரின் மத்தியில், தேவன் வாசம் பண்ணும் ஸ்தலமாக பழைய ஏற்பாட்டிலே, ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. (யாத் 25:8).

இது இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டு, நமக்குள்ளே வாசம் பண்ணின காரியத்திற்கு நிழலாய் இருக்கிறது (யோவான் 1:14). தேவன் மனுஷருக்குள்ளே வாசம் பண்ணுவதும், தேவனுடைய முடிவான (நிறைவான) வாசஸ்தலமாகிய சபையையும் இந்த ஆசரிப்புக் கூடாரம் இன்னும் தெளிவாக நமக்கு விவரித்து காண்பிக்கிறது.


துல்லியமான மாதிரியின்படியே:

தேவன் தான் மோசேக்கு கற்பித்த மாதிரியின் படியே, ஆசரிப்புக் கூடாரத்தின் சகல பணிமுட்டுக்களும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் (யாத் 25:9).ஆசரிப்புக்கூடாரத்தின் அளவையும் சகல பணிமுட்டுகளையும், அவைகள் செய்யப்பட வேண்டிய பொருட்கள் ஆகியவற்றையும் குறித்த காரியத்தை தேவன் மோசேக்கு மிகவும் நுணுக்கமாக கொடுத்திருந்தார். நமது ஜீவியத்திலும், சபையிலும் தேவன் நமக்குத் தந்தருளின தமது வார்த்தையின்படியே, துல்லியமாக செய்யவேண்டும் என்பதை அநேக கிறிஸ்தவர்கள் அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள், தங்கள் புத்தி கூர்மையினால், எந்தமட்டும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியலாம் என்றும் அவருடைய கட்டளைகளை எப்படி எங்கே மாற்றி அமைக்கலாம் என்றும் தீர்மானிக்கிறார்கள்.

ஆனால், எகிப்தின் பிரமாண்டமான பிரமீடுகளையும் அவைகளின் கட்டிட அமைப்புகளையும் மோசே கண்டிருந்தும், மனுஷர்களுடைய கண்களுக்கு இணங்க (ஏற்றார்போல்) தேவனுடைய அந்த ஆசரிப்புக்கூடாரத்தின் எளிய வடிவமைப்பை மாற்றி அமைக்கவில்லை. சகலவற்றிலும், மோசே, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்பு கூடாரத்தைக் கட்டி முடித்தான் (யாத் 39:1-40:33). இதனிமித்தமே, மகிமை இறங்கி ஆசரிப்பு கூடாரத்தை நிரப்பிற்று.ஒருவேளை, மோசே 40 வயதாய் இருக்கும்போது, அந்த ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரி கொடுக்கப்பட்டிருந்தால், தன்னுடைய எகிப்தின் ஞானத்தை பயன்படுத்தி ஆசரிப்புக்கூடாரத்தை கட்டியிருப்பார். அதினால், ஒரு வேளை ஆசரிப்புக்கூடாரம் மேன்மையாக காட்சியளித்திருக்கும். ஆனால், தேவனுடைய மகிமையை அங்கே நாம் கண்டிருக்க முடியாது. இதே காரியம்தான் இன்று அநேக சபைகளுக்கு சம்பவித்திருக்கிறது.

நம் நினைவுகள், வழிகளைக் காட்டிலும், தேவனுடையது மிகவும் உயர்ந்திருக்கிறது (ஏசா 55:8,9).இவைகளை எல்லாம், யார் உணராதிருக்கிறார்களோ, அவர்கள் தங்கள் மனுஷீக யுக்திகளை தேவனுடைய பிரமாணத்தோடு கூட்டி கட்டுகிறார்கள்.

நமது ஆண்டவர், தன் பூமிக்குரிய முழு வாழ்க்கையையும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின்படியே, ஒவ்வொரு சிறிய காரியங்களிலும் கூட நிறைவேற்றுபவராகவே வாழ்ந்தார். அது அவருடைய பிறப்பு, வாழ்க்கை, மரணம் இவை எல்லாவற்றிலும் தம்மை குறித்து எழுதப்பட்டிருந்தபடியே சகலத்தையும் நிறைவேற்ற மிகவும் கவனமுள்ளவராக இருந்தார்(எபி 10:7).

பூமியிலே வாழ்ந்த இயேசுவின் முதல் 'கிறிஸ்துவின் சரீரம்' மூலம், நாம் அநேக காரியங்களை அறிந்து (கற்று) கொள்ளலாம். உதாரணமாக, ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, எளிய முறையில் வளர்ந்தார். நாம் அவரை பார்க்கும்போது , அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது (ஏசாயா 53:2). அவருடைய இரண்டாம் சரீரமாகிய சபையும் அப்படியே தான் இருக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால், இன்றைய சபையிலே சத்தியத்தை அறிந்து கொள்ளாதவர்கள் தங்கள் கவர்ச்சி மிகுந்த சபை கட்டிடங்கள் மற்றும் இன்னிசை முதலானவைகளைக் கொண்டு ஜனங்களை கவர்ச்சிக்க விரும்புகிறார்கள்.

நம் ஆண்டவருடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசியிலே, தேவன் தமக்கு செய்யும்படி பணித்த (நியமித்த) கிரியைகளை செய்து முடித்தேன் (யோவா 17:4; 19:30) என்று சொல்லமுடிந்தது. அதே போல, அப்போஸ்தலனாகிய பவுலும், தம்மை பற்றிய தேவனுடைய சித்தம் (திட்டம்) முழுவதும் நிறைவேற்றி முடித்தேன் என்று சொல்லமுடிந்தது (2 தீமோ 4:7). இன்றைய கிறிஸ்துவர்கள் தேவன் தங்களை என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறார் என்பதைக் கேட்க கவனம் கொள்ளாமல், தங்கள் ஜீவியத்தை தங்களுடைய ஞானத்தை கொண்டே திட்டம் பண்ணுகிறபடியால், தங்கள் ஜீவியத்திலும் ஊழியத்திலும் தேவனுடைய மகிமையை காண கூடாமல் இருக்கிறார்கள்.

மோசே ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றிய சிறுசிறு காரியங்களை விட்டு மனுஷீக ஞானத்தினால், ஆசரிப்புக் கூடாரத்தின் மிக இன்றியமையாத பகுதிகளின் அளவுகளோடு ஆரம்பம் பண்ணி இருந்திருக்கலாம். ஆனால், தேவன் முதலாவது, பிரதானமாக உடன்படிக்கை பெட்டியின் மாதிரியை மாத்திரமே, மோசேக்கு கொடுத்தார் (யாத் 25:10).ஆசரிப்புகூடாரத்தின் ஒரு சிறு அறையிலே, இருக்கிறதான மகா பரிசுத்த ஸ்தலத்தில் இந்த மரத்தாலாகிய உடன்படிக்கை பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலேதானே தேவனுடைய மகிமை காணப்படும். அதனிமித்தமே, ஆசரிப்பு கூடாரத்திலே, உடன்படிக்கை பெட்டி முதலாவதாக, ஸ்தாபிக்கபட வேண்டியதாக இருந்தது. நம் வாழ்க்கையின் சகலமும் தேவனை கொண்டே ஆரம்பிக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. வேதமும் 'ஆதியிலே தேவன்' என்றே ஆரம்பிக்கிறது. நம் வாழ்க்கையின் எந்த தீர்மானத்திலும் தேவனே முதலிடம் வகிக்க வேண்டும்.

தேவ மனுஷனாகிய மோசே நாற்பதுநாள் புசியாமலும் குடியாமலும் தேவனோடு தனித்திருந்த அந்த வேளையில்தானே ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியை தேவனிடத்தில் பெற்றுக்கொண்டான் (யாத் 24:40). தேவனிடத்தில் காத்திருக்கிறதிலே ஓர் அவசரம் அல்லது மனுஷர்களுடைய அபிப்ராயங்களுக்காகவே, வாழ்கிறவர்களாகிய இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய சித்தத்தை ஒருக்காலும் அறிந்துக்கொள்ளவேமாட்டார்கள்.

பெசலியேல் மற்றும் அகோலியாபையும் ஆசரிப்புக் கூடாரத்தை கட்டவும், வினோதமான வேலையை யூகித்து செய்கிறதற்கும் வேண்டிய ஞானத்தையும், இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட திறமையையும் அளித்ததைப்போலவே, இன்றைக்கு சபையைக் கட்ட பரிசுத்தாவியின் வல்லமையே நமக்கும் வேண்டியதாக இருக்கிறது (யாத் 31:1-3).

ஆசரிப்புக் கூடாரத்தத்தின் பகுதிகள்:


வெளிப்பிரகாரமானது 150- அடி நீளமும், 75 அடி அகலமும் கொண்டது. திரித்த, மெல்லிய, பஞ்சு நூலினாலான மூடுதிரை கிறிஸ்துவின் நீதியைக் குறிக்கிறதாய் இருக்கிறது. அது சபையின் உள்ளே இருக்கிறவர்களையும் வெளியே இருக்கிறவர்களையும் அவர்களுடைய மனுஷீக நீதியின் வித்தியாசத்தைக் கொண்டு பிரிக்காமல், சபையின் உள்ளே இருக்கிறவர்களின் வித்தியாசம் கிறிஸ்துவின் நீதியினாலே தரிப்பிக்கப்பட்டதினாலே, உண்டாகிறது என்பதை காண்பிக்கிறது. மெல்லிய திரித்த பஞ்சு நூல், சபையின் எளிய தன்மையைக் (தோற்றத்தை) குறிக்கிறதாக இருக்கிறது. ஆனால், அதற்கு மாறாக, பாபிலோன் என்னும் வேசியோ பகட்டாகவும், கவர்ந்து இழுக்கத்தக்கதான தோற்றத்தைக் கொடுக்கிறதாக இருக்கிறது என்று வெளிப்படுத்தின விசேஷத்திலே காண்கிறோம். (வெளி 17:4-ஐ 19:8-டோடு ஒப்பிட்டுப்பார்க்கவும்) இது எளிய தன்மையுள்ள கிறிஸ்துவின் சபைக்கு முற்றிலும் வித்தியாசமானது.

ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஒரே ஒரு நுழைவாசல்தான் உண்டு. அது 30அடி நீளமுடைய பல வருணநிறமுடைய திரையாக ஆசரிப்புக் கூடாரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும். அது, தேவனுடைய சபையையும், ஒரே வாசலை கொண்ட அந்த நுழைவாசல் கிறிஸ்துவின் வழியாகத்தான் சபைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதையும், அவராலேயன்றி ஒருவராலும் பிதாவினிடத்திற்கு வரமுடியாது என்பதையும் குறிக்கிறது (யோ 14:6).

ஆகவே, ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் ஒருவர் சூரியனுக்கு தன் முதுகை காண்பித்து நுழைவதின்மூலம் சூரியனை வழிபடும் காரியத்தை தள்ளுகிறதையே இது குறிக்கிறது. (எகிப்து மற்றும் உலக நாடுகளில் சூரியனை வழிபடுவது பொதுவான காரியமாக அந்த நாளின் வழக்கமாக இருந்தது).

வெளிப்பிரகாரத்திலே காணப்படும் முதல் பகுதி, பலிபீடம். இது கிறிஸ்து சிலுவையிலே நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதையே பிரகடனப் படுத்துகிறதாய் இருக்கிறது.

கழுவும் தொட்டி - ஒரு பெரிய தொட்டி நிறைய தண்ணீர். இது தேவனுடைய வார்த்தையினாலே வெளிப்புற சுத்திகரிப்பையும், மறுஜென்ம முழுக்கையும் குறிக்கிறது (எபே 5:26).

வெளிப்பிராகாரத்தின் கடைசியில் இரண்டு அறை கொண்ட கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அது பரிசுத்தஸ்தலம், மகாபரிசுத்தஸ்தலம் என்றும் சொல்லப்படுகிறது. கூடாரத்தில் இருக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் திரையின் வழியாக நுழைந்து, பின் பரிசுத்த ஸ்தலத்துக்கும், மகா பரிசுத்தஸ்தலத்திற்கும் இடையிலான தடித்த திரையின் வழியாக பிரவேசிக்கலாம் (எபி 10:19,20).

எவ்வாறு வெளிப்பிராகாரம் இஸ்ரவேலருக்காக மாத்திரமே (புறஜாதியாருக்கு அல்ல) திறக்கப்பட்டதோ, அதைப்போலவே, பரிசுத்தஸ்தலம் தேவனை சேவிக்கும் ஆசாரியர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டிருக்கிறது. அந்த பரிசுத்தஸ்தலத்திலே குத்துவிளக்கு, சமுகத்தப்பம், தூபகலசம் போன்றவை காணப்படும்.

மகா பரிசுத்த ஸ்தலத்திலோ, பிரதான ஆசாரியன் மாத்திரமே நுழைய முடியும். அதுவும் பாவ நிவர்த்திக்காக, இரத்தத்தோடு, வருடத்தில் ஒரேமுறை மாத்திரம் நுழைய முடியும். அங்குதான் உடன்படிக்கை பெட்டி வைக்கப்பட்டிருந்தது. கிருபாசனம் அதை மூடியிருந்தது. அங்கே, தேவனுடைய மகிமை காணப்படும்.

வாசஸ்தலமும், அதின் பலகைகளும்:


45 அடி நீளமுள்ள வாசஸ்தல கூடாரம் 15 அடி அகலமும் 15 அடி உயரமும் கொண்டதாயிருந்தது. பரிசுத்தஸ்தலத்தின் நீளம் 30 அடியும் அகலம் 15 அடியாகவும், மகா பரிசுத்த ஸ்தலம் 15 அடியிலான சதுர வடிவமாகவும் இருந்தது.

வாசஸ்தலத்தின் பலகைகள், சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு பொன் தகட்டால் மூடப்பட்டிருந்தது. அது, நமது ஆண்டவராகிய இயேசு, தேவனாகவும் (பொன்) மற்றும் மனிதனாகவும் (மரம்) இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது. அதுமாத்திரமல்லாமல், இன்று கிறிஸ்துவின் சபையிலும் மனிதர்களாக நாம் இருந்தாலும் கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும் அது குறிக்கிறது (2பேதுரு 1:4).

ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு வெள்ளியிலான பாதங்களும் அவைகள் நிலத்தில் ஸ்திரமாக பதித்து வைக்கும்வண்ணம் செய்யப்பட்டிருக்கும். அது விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் குறிக்கிறதாகவும், அது ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் அவர்கள் அசையாதவர்களாயும், இந்த வனாந்திர வாழ்க்கையில் உறுதியானவர்களாயும் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. கீழ்ப்படிதல் இல்லாத விசுவாசமுடையவர்கள் ஒரே காலுடைய பலகைக்கு ஒப்பாகவும் சமநிலை அற்றவர்களாயும் இருப்பதை இது காட்டுகிறது.

ஒவ்வொரு பலகையும், இடைவெளியேதும் இல்லாமல் ஒன்றொடொன்று இசைந்து இருக்கும்படி செய்யப்பட்டிருக்கும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே, ஒருவரோடு ஒருவர் நெருங்கிய ஐக்கியம் உள்ளவர்களாய் தேவனிடம் வாஞ்சைஉள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதையே இது குறிக்கிறது. ஒவ்வொரு பலகைக்கும் நான்கு வளையங்களும் இரண்டு பலகைகளும் ஒன்றோடொன்று இசைந்தும், அதில் தாழ்ப்பாள்கள் பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும். நடு தாழ்ப்பாள் (ஐந்தாவது) ஒருமுனை தொடங்கி மறுமுனை மட்டும் பலகைகளின் மத்தியில் உருவ பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும். இந்த ஐந்து தாழ்ப்பாள்களும் ஒவ்வொரு பலகைகளையும் இணைத்து வைத்துக்கொள்ளவும் அசையாதபடி காத்துக்கொள்ளவும் உதவும். இப்படி அசையாதவர்களாயும் உறுதிப்பட்டவர்களாயும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் இருக்க, விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலுக்கும் மேலாக ஒரு நெருக்கமான ஐக்கியம் உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.

வாசஸ்தலத்தின் மூடுதிரைகள்:

வாசஸ்தலத்தில் நான்கு மூடு திரைகள் உள்ளது. விசித்திர வேலையாய் செய்யப்பட்ட திரித்த மெல்லிய பஞ்சு நூல், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூலாலான ஒரு மூடுதிரை வாசஸ்தலத்தின் உட் பகுதியில் போடப்பட்டிருக்கிறது. அது கிறிஸ்துவினால் உண்டான நீதியின் சௌந்தர்யத்தை காட்டுகிறது. இரண்டாம் மூடுதிரை: (அதற்கு மேலாக) ஆட்டு மயிராலான ஒரு மூடு திரை போடப்பட்டிருக்கும். அது கிறிஸ்து நம் பாவங்களை சுமந்து பாளையத்துக்கு புறம்பே அனுப்பப்பட்ட போக்காட்டிற்கு (Scape Goat) அடையாளமாக சொல்லப்படுகிறது. மூன்றாம் திரை: சிவப்பு தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினாலானது. அது கிறிஸ்து நமக்கு பதிலாக, நமக்காக இரத்தம் சிந்தி மரித்ததைக் காட்டுகிறது. கடைசியாக, மேற்புறத்தின் மூடு திரை தகசு தோலிலானது. அது பார்க்கத்தக்க ரூபம் அவருக்கு இல்லாததையும் வனாந்திரத்தின் மண் ஒட்டிக் கொள்ளும் ஒரு வெளிப்புறமான அழகு இல்லாததையே காட்டுகிறது. வாசஸ்தலத்தின் உட்புறத்தில் மாத்திரமே அந்த பூரண அழகுள்ள மூடு திரையைக் காணமுடியும். அதைப்போலவே, ஒரு உண்மை கிறிஸ்தவனின் அழகு உள்ளான மகிமையே அல்லாமல் வெளிப்பிரகாரமான தோற்றத்தில் அல்ல.

தகசு தோலானது, "கிறிஸ்துவின் நிந்தையை" நமக்கு அறிவிக்கிறது. வெளிப்பிரகாரமாக, உண்மையான சபையானது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டும் கனவீனப்படுத்தப்பட்டும் நிந்தைக்குள்ளாக்கப்பட்டும் தான் இருக்கும். ஆனால், உலகத்திலோ காரியங்கள் முற்றிலும் எதிர்ப்பதமாக வெளியே அழகுள்ளதாகவும் உள்ளேயோ அசுத்தத்தால் நிறைந்ததாகவுமே இருக்கும்.

இயேசு இந்த பூலோகத்துக்கு வந்த போது, அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது (ஏசா 53:2).இந்த உலகம் அவரை அற்பமாக எண்ணி புறக்கணித்தது. தேவபக்தியை வாஞ்சித்தவர்கள் மாத்திரமே அவரிடத்தில் வந்தார்கள். அதைப்போலவே சபையும் இருக்கவேண்டும். வெளி உலகத்தில் காணப்படுகிற எந்த ஒரு கவர்ச்சியினிமித்தமும் ஜனங்கள் சபையில் இழுக்கப்படாமல் சபையின் ஜீவியத்தினாலும் ஐக்கியத்தின் அடிப்படையினால் மாத்திரமே அவர்கள் இழுக்கப்பட வேண்டும்.

இயேசுவுக்கு சொந்தமானவர்கள் அவரோடு கூட நிந்தையை சுமந்து பாளையத்துக்கு (உலகத்தின்) புறம்பே போவார்கள். ஆனால், திரைக்குள்ளாகவோ தேவனோடு ஐக்கியம் பெற்றிருப்பார்கள் (எபி 10:19,20;13:13). ஆனால், பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் பாளையத்துக்கு உள்ளேயும், திரைக்கு வெளியேயும் ஜீவிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.

பாளையத்திற்கு புறம்பே என்பதின் அர்த்தம், "உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையேயாகும்". இயேசு, தம் வாழ்நாட்களெல்லாம் இந்த பரிசேயரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டும், பெயல்செபூல் என்றும் அழைக்கப்பட்டிருக்க (வீட்டு எஜமானையே அப்படி சொல்வார்களானால் வீட்டிலிருக்கிறவர்களாகிய நம்மையும் இன்னும் அதிகமாக அப்படி சொல்வார்கள் என்றே சொன்னார். மத் 12:24) இன்றைக்கு ஏன் அநேக கிறிஸ்துவர்கள் உலகத்தில் பிரபல்யமாக இருக்கிறார்கள்? (இயேசுவுக்கு இல்லாத) மனுஷர்களை பிரியப்படுத்தியும், தந்திரமாய் ஒத்துப்போவதினிமித்தமே அவர்கள் பிரபல்யமாக இருக்கிறார்கள். ரோமர்களோ, அல்லது கிரேக்கர்களோ இயேசுவை எதிர்த்தவர்கள் அல்ல. மாறாக, யூதர்களே அவரை பகைத்தார்கள். ஏன்? ஒத்த வேஷம்தரியாமல், தேவனுடைய சத்தியத்துக்காக நின்றதினிமித்தமே. இன்றைக்கு அதேவிதமான மார்க்க கிறிஸ்துவர்களும் ஒத்துப் போகிறவர்களும் மற்ற வேறு மார்க்கத்தாருமே கிறிஸ்துவின் சபையை பகைக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

வெண்கல பலிபீடம்:

வெளிப்பிராகரத்தின் முதல் பகுதியில் பலிபீடம் வைக்கப்பட்டிருக்கிறது. வெண்கலத்தாலான பள்ளமான தொட்டி தரையிலே வைக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும். பலிபீடத்தின் உள்ளே தரையிலே பலிக்குரியவைகள் வைக்கப்பட்டிருக்கும். அது பூமிக்குரியவைகளில் ஒன்றிலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். (தேவன் உண்டாக்கியவைகளினாலே அல்லாமல் மனுஷனால் உண்டாக்கப்பட்டவைகளினால் அல்ல) அது கல்வாரி சிலுவையை (தேவனே உண்டாக்கின) குறிக்கிறது (யாத் 20:24,25).

பலிபீடத்துக்கு ஏறும்படிக்கு படிகள் அதற்கு இல்லை. மாறாக பலிபீடத்தின் உட்புறம் தாழ இறங்கும் (சரிவு பாதை) விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அது இரட்சிப்புக்கு ஏறும் படிகள் இல்லை என்பதையே குறிக்கிறது (யாத் 20:26).

சீத்திம் மரத்தால் பலிபீடம் உண்டாக்கப்பட்டு, வெண்கல தகட்டால் மூடப்பட்டிருக்கும். வெண்கலம் நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாக இருக்கிறது. பலிபீடத்திலிருக்கும் அக்கினியினால் பலிபீடம் கருகும்போது, உட்புறமாகிலும், வெளிபுறமாகிலும் காணப்படாதபடிக்கு உண்டாக்கப்பட்டிருக்கும். அது கிறிஸ்து மாம்சத்தில் படும் பாடுகளை ஒருவரும் காணக் கூடாததற்கு அடையாளமாக இருக்கிறது (1பேதுரு 4:1).

அநேக கிறிஸ்துவர்கள் இயேசுகிறிஸ்து சிலுவையில் பட்ட வெளிப்பிரகாரமான பாடுகளை மாத்திரமே அறிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இயேசு தம் பூமிக்குரிய வாழ்க்கையில் பட்ட உள்ளான பாடுகளை குறித்து ஒன்றும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சூழ்நிலைகளையும் சோதனைகளையும் சகித்தபோது அவர் ஒருக்காலும் துக்கப்பட்டு கண்ணீர்விடவில்லை. நம்முடைய துக்கங்களுக்காகவே அவர் கண்ணீர்விட்டார். தேவமனிதர்கள், கூட அப்படிதான் வாழ்ந்தார்கள். பவுல் கொரிந்து சபைக்கு தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தை நிலைநாட்ட தான் அடைந்த அநேக பாடுகளை விவரித்து காண்பித்தார். ஆனால், தான் அடைந்த உள்ளான பாடுகளை குறித்தோ ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவரது முழு ஊழியமும் அவர் அடைந்த உள்ளான பாடுகளினாலே உண்டானது.

பலிபீடத்தின் நான்கு முனைகளிலும், நாலு கொம்புகள் உண்டாக்கப்பட்டிருந்தது. பலியிடப்பட வேண்டிய பலி, கொல்வதற்கு முன், கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும். அது, தாம் எருசலேமுக்கு போகும் போது(சிலுவையில் மரிக்க) இருந்த உறுதியான மன நிலையை காட்டுகிறது. (லூக்கா 9:51). இந்த நிலையான உறுதியை பெற்றுக்கொள்ள, அனுதினமும் சிலுவையை சுமக்கிறதிலே (சுயத்திற்கு மரிக்க) நாமும் விருப்பமுள்ளவர்களாகவும் கட்டப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும்.

வெண்கல கழுவும் தொட்டி:


வாசஸ்தலத்தின் வெளிப்பிரகாரத்திலே இந்த கழுவும் தொட்டி வைக்கப்பட்டு இருக்கும். தேவனுடைய வார்த்தையினாலே நாம் கழுவப்பட வேண்டும் என்பதையும் வசனத்தைக் கேட்டு அதன்படி செய்கிறவர்களாகும் போது, நாம் தேவனுடைய வார்த்தையினால் சுத்திகரிக்கப்படுவோம் என்பதையும் தண்ணீர் ஞானஸ்நானத்தையும் இது குறிக்கிறது (எபே 5:26).

தேவன் முதலாவது, தண்ணீரினாலும் பின்பு பரிசுத்தாவியின் அக்கினியினாலும்; பொன்னை எப்படி தண்ணீரினாலும் அக்கினியினாலும் சுத்திகரிக்கிறது போல நம்மையும் சுத்திகரிக்கிறார் (எண்ணா 31:21-23).

பழைய உடன்படிக்கை வாசிக்கிறவர்களும் அதற்கு கீழ்ப்படிகிறவர்களும் வெளிப்புறமான எல்லா பாவத்தினாலும் சுத்திகரிக்கப்படுகிறார்கள். இப்படித்தான் நியாயப்பிரமாணம் தண்ணீரால் நம்மை சுத்திகரிக்கிறது. ஆனால், இயேசு, பாவத்தைக்குறித்து, "பாவம் என்பது வெளிப்பிரகாரமான செயலை காட்டிலும் ஆழ்ந்த உள்ளான ஜீவியத்தில் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சனை" என்று சுட்டிக்காட்டினார். "ஓர் ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு தன இருதயத்திலே விபச்சாரம் செய்தாயிற்று" என்றார் (மத் 5:28). இங்குதான் பரிசுத்த ஆவியானவர் நம்மை சுத்திகரிக்கிறார். அந்தரங்க ஜீவியத்தில் உதவி செய்கிறார்.

பரிசுத்தாவியானவரை நாம் நம்முடைய ஜீவியத்தில் ஆளுகை செய்ய அனுமதிக்கும்போது, இன்னும் வேறுவிதமான ஆழமான காரியங்களான - வேறொருவரின் மனைவியின் சமையலை, தன் மனைவியைக்காட்டிலும் பாராட்டுகிறதிலே காணப்படுகிற வேசித்தனத்தையும், பணத்தின் மேலுள்ள ஆசையையும், இன்னும் வெவ்வேறான காரியத்திலே இருக்கிற வேசித்தனத்தையும் காண்பிக்கிறார். ஓர் வெங்காயம் அது நடு தண்டுவரை தோலுரிக்கப்படுவதுப்போல படிப்படியாய் ஆவியானவர் நமக்கு உணர்த்துவார்.

வெளிப்பிரகாரத்தின் தண்ணீராகிய வசனத்தினாலே நாம் (வெளிப்புறமான பாவங்களிலிருந்து) சுத்திகரிக்கப்படும்போது, மனுஷர்களுக்கு முன்பாக நல்லதொரு சாட்சியை நமக்கு கொடுக்கும். ஆனால், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாக போய் பரிசுத்த அக்கினி நம்மை அந்தரங்க ஜீவியத்தில் சுத்திகரிக்க அனுமதித்தாலொழிய, உண்மையான ஆவிக்குரியவர்களாக மாறாமல், மார்க்க சம்பந்தமானவர்களாகவே, தேங்கி நின்று விடுவோம்.

பொன்னாலான மேஜையும், சமுகத்தப்பங்களும்:

பரிசுத்தஸ்தலத்திலே, பொன்னாலான மேஜையும் அதிலே இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாருக்கு அடையாளமாக பன்னிரண்டு சமூகத்தப்பங்களும் வைக்கப்பட்டிருந்தது. ஆசாரியர்கள் மாத்திரமே அதை புசிக்கலாம்.

இது, இயேசுவே ஜீவ அப்பமாகவும் தேவனுடைய வார்த்தையாகிய அப்பத்தினால் மாத்திரமே மனுஷன் பிழைப்பான் என்பதையும் குறிக்கிறது (மத் 4:4).

பழைய உடன்படிக்கையிலே தனித்தனியே பன்னிரண்டு அப்பங்கள் இருந்தது. ஏனென்றால், இஸ்ரவேலர் ஒரே சரீரமாக மாறமுடியவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களை விட தெளிவான வேறுபாடு கொண்டவர்களாகவே இருக்க தீர்மானித்திருந்தனர். ஆனால், நாமோ புது உடன்படிக்கையிலே உலகமெங்கும் பல ஆயிரம் கோத்திரங்களாக இருந்தாலும் ஒரே அப்பமாக; கிறிஸ்துவின் சரீரமாக கர்த்தருடைய பந்தியிலே இருக்கிறோம்.

இதிலே, நாமெல்லாரும் தலையாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருப்பதால் நாமெல்லோரும் இந்த அப்பத்தில் புசிக்கிறோம். பழைய உடன்படிக்கைக்குரிய ஒரு தலைவர் மூலமாக அல்ல, கிறிஸ்துவோடு (தலையாகிய) தனித்தனியாக நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதால் அப்படி ஆகும்.

பொன்னாலாகிய குத்துவிளக்கு:

ஒரு தனிப்பட்ட சாட்சியுள்ள வாழ்க்கையும் ஸ்தலசபையின் சாட்சியுள்ள வாழ்க்கையையுமே இந்த குத்து விளக்கு பிரகடனப்படுத்துகிறது.

குத்துவிளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருப்பதை ஆசாரியன் உறுதி செய்வது போல, நம்முடைய பொதுப்படையான சாட்சியுள்ள வாழ்க்கை எப்போதும் பிரகாசமாய் இருந்திட வேண்டும்.

பழைய உடன்படிக்கையிலே, ஒரே ஒரு குத்து விளக்கும் , அதிலே ஏழு கிளைகளும் இருந்தன. இது,இஸ்ரவேலர் பல கிளைகளைக் கொண்ட ஒரே ஸ்தாபனமாக இருந்தனர் என்பதை குறிக்கிறது.

ஆனால், புது உடன்படிகையிலே,ஒவ்வொரு சபையும் தனித்தனியே குத்து விளக்குகளாய் காட்டபடுகிறது(வெளிப்படுத்தின விசேஷம்). இந்த குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்தவராய் கர்த்தர் உலாவி வருகிறதாக பார்க்கிறோம் (வெளி 1:13,20).

புதுஉடன்படிக்கையின் ஒவ்வொரு சபைக்கும், கிறிஸ்துவே நேரடியான தலையாக இருந்து நடத்துகிறார் என்பதை (இஸ்ரவேலர்கள் போல் அல்லாத) போதிக்கிறது. ஆனால், இன்றைய அநேக சபைகள் இன்னும் பழையஏற்பாட்டின் முறைமையின்படியான மிகப்பெரிய ஒரே ஒரு குத்துவிளக்கு மாதிரியான ஸ்தாபனமாகவே இருக்கின்றன.

ஒவ்வொரு குத்துவிளக்கும் (சபையின் ஒவ்வொரு அங்கமும்) பிரகாசமாக எரிந்திட வேண்டும். சபையின் ஏதோ ஒரு அங்கத்தினன் பாவம் செய்யும்போது, (வெளிச்சம், இருளாகும் போது) காரியங்களை சரிப்படுத்தியும், கிடைக்கும் சந்தர்ப்பத்திற்குள்ளாக மங்கி எரிகிற திரியை சீர்படுத்தவும் வேண்டும். இல்லையெனில், அப்படிபட்டவனிமித்தம் கர்த்தரின் சாட்சி சபையிலே கனவீனபடாதிருக்கும்படி அவனை அகற்றி விடலாம்.

தேவனுடைய மாதிரியின்படியே பின்பற்றும் பட்சத்தில் மாத்திரமே தேவனுடைய மகிமை அந்த ஸ்தல சபையை நிரப்பிட முடியும்.

பொன்னால் செய்யப்பட்ட தூபவர்க்கம்:


பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படும் தூபகலசம் இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கப்படும் (வெளி 5:8) ஜெபத்தை குறிக்கிறதாக இருக்கிறது. ஜெபமானது, நாம் தேவன் மேலே சார்ந்துக்கொள்ளும் காரியத்தையும் குறிக்கிறது. இயேசுவின் நாமத்தினாலாகிய ஜெபம் (தூபவர்க்கமாகிய) எப்போதும் நம்முடைய இருதயங்களிலிருந்து தேவனை நோக்கி நித்தியதூபமாய் ஏறெடுக்க பட வேண்டும் (யாத் 30:8; லூக்கா 18:1) நம்முடைய ஜெபம் கர்த்தருக்கு தூபமாய் ஏறெடுக்கபடப் வேண்டும்.

இதை குறித்து கர்த்தர் மோசேயிடம், "இந்த சுகந்த தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறைமையின்படி தேவனுக்கு மாத்திரமே அல்லாமல் எந்த மனுஷனுக்காவும் இதை செய்யாலாகாது" என்றார் (யாத் 30:37). இது இரண்டு காரியங்களுக்கு அடையாளமாக இருக்கிறது.

முதலாவதாக, நம் சொந்த தகுதியினால், தேவனுக்கு ஜெபத்தை ஏறெடுக்கமுடியாது. தேவனுக்கு முன்பாக நின்றிட இயேசுவின் நாமம் ஏதோ மாயஜால வார்த்தை கிடையாது. ஆனால், இயேசுவின் நாமத்தினால் மாத்திரம்; அவர் நமக்களித்த தகுதியினால் மாத்திரம், அப்படி தேவனுக்கு முன்பாக நின்றிடவும் ஜெபிக்கவும் முடியும். பதில் கிடைக்க பாத்திரமானவர்கள் என்ற எண்ணத்திலும் நாம் ஜெபிக்க முடியாது. ஏனென்றால், அந்த ஜெபம் இயேசுவின் நாமத்தினால் ஏறெடுக்கபடவில்லை. அவ்வளவுதான். (யாராயிருந்தாலும்) யாதொருவன் தன் சொந்த தகுதியில்லாமல் இயேசுவின் நாமத்தில் ஜெபத்தை ஏறெடுக்கிறானோ அவனையல்லாமல் வேறொருவராலுமே தேவனிடத்திலிருந்து பதிலை பெறமுடியாது.

இரண்டாவதாக, நாம் ஜெபிக்கும்போது நம் சொந்த ஆதாய நோக்கோடு ஜெபிக்கக்கூடாது. நாம் எதை செய்தாலும் தேவனுடைய நாமம் மகிமைப்படவே செய்கிறவர்களாக இருக்கவேண்டும் (1கொரி 10:31)."பிதாவிவின் நாமம் மகிமைபடவும் அவருடைய இராஜ்யம் பூமியிலே ஸ்தாபிக்கப்படவும் அவருடைய சித்தம் செய்யப்படவும்" என்றே இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். நமக்காக நாம் ஏறெடுக்கும் எல்லா ஜெபங்களும் கூட பிதாவின் நாமம் மகிமைக்காகவே ஏறெடுக்கப்பட வேண்டும். இதினிமித்தமே, நீதிமான் செய்யும் ஊக்கமானஜெபம் அதிக பெலனுள்ளதாக இருக்கிறது என்று பார்க்கிறோம். ஏனென்றால், அவன் செய்கிற எல்லாவற்றிலும் தேவநாம மகிமை ஒன்றேயே நாடுகிறான் (யாக் 5:16).

பரிசுத்த ஸ்தலத்திற்குள் போகும் வழி:

ஆசரிப்புக் கூடாரமானது, (வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்) ஒரு மனிதனின் ஆவி, ஆத்துமா, சரீரம் என்பதை விளக்கும் படமாக இருக்கிறது (1 தெச 5:23).

நம் சரீரமானது, எப்படி வெளிப்படையாக பார்க்க முடிகிறதோ, அது போலவே, ஆசரிப்புக் கூடாரத்தில், வெளிப்பிராகாரம் மாத்திரமே வெளிப்படையாய் பார்ப்பதற்கு திறந்தளிக்கப்பட்டு இருக்கிறது. நம்முடைய ஆவி, ஆத்துமாவை போலவே பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலமும் வெளிப்பிரகாரமாய் பார்க்க கூடாததுபோல மூடப்பட்டு இருக்கும்.

நாம் ஏற்கனவே, கண்டபடி மகா பரிசுத்த ஸ்தலமானது, சதுரவடிவிலானது. புதிய எருசலேமும் சதுரவடிமாயிருந்தது (வெளி 21:16). அதில் அகலமும் நீளமும் சமமாயிருந்தது.

தங்களின் வெளிப்படையான ஜீவியம் உள்ளான ஜீவியத்திற்கு ஒத்தில்லாதிருக்கிறவர்கள், தேவ சமூகத்துக்கு முன்பாக வாழாமல் மற்றவர்களுக்கு முன்பாக வாழுகிறவர்கள், மற்றவர்களுக்கு முன்பாக மாத்திரம் தங்களை ஆவிக்குரியவர்களாக காண்பிக்க விரும்புகிறவர்கள் மற்றும் உள்ளான ஜீவியத்தோடு ஒத்திராத வெளிப்படையான ஜீவியம் செய்கிற மாய்மாலகாரர்கள் யாவரையும் தேவன் புறக்கணிப்பார்.

தேவனுடைய வார்த்தையானது, ஆவியையும் ஆத்துமாவையும் பிரிக்கிறதாய் (எபி 4:12) இருக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, முதலாவது அது நம் சரீரத்தின் மூலம் (கண்,காதுகள் மூலம்) நுழைந்து பின்பு அது நம் ஆத்துமாவில் நுழைந்து, (மனம், சித்தம், உணர்வு) மனதுக்கு போதித்து, நம் உணர்வுகளை கிளர்ச்சியூட்டும். ஆனால், அது அங்கே தேங்கி நின்று நம் சித்தத்தை கீழ்ப்படிய செய்யவில்லையானால், அந்த வார்த்தை நம் ஆவியில் நுழைய முடியாது. நாமும் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரவும் முடியாது.

உதாரணமாக, "நீ ஜெபிக்கும்போது, உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்றும், உன்னிமித்தம் மனம் புண்பட்டிருக்கிறான் என்று அறிந்தும், நீ அதை சரிசெய்யாத பட்சத்தில் நீ ஏறெடுத்த ஜெபம், காணிக்கையை தேவன் அங்கிகரிப்பதில்லை" என்பதையும் வேதத்திலே வாசிக்கிறோம் (மத் 5:23,24). இதை நாம் புரிந்துக்கொண்டும், சவாலூட்டப்பட்டு இருந்தாலும், அந்த சம்பந்தப்பட்ட சகோதரனிடம் மன்னிப்பு கேளாதபட்சத்தில், நம் ஆவி இன்னும் செத்ததாகவே இருக்கிறது. இது எல்லா வசனத்துக்கும் பொருந்தும். வார்த்தையை புரிந்து கொண்டும் சவாலூட்டபட்ட வார்த்தை மாம்ச திரையை ஊடுருவி, பரிசுத்த ஸ்தலத்திலிருக்கும் ஆத்துமாவிலும் ஊடுருவி, மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் ஆவியில் செயல்பட்டு பிரித்துவிடும்.

இயேசுவும் தம் சித்தத்தின்படியல்ல, தன் பிதாவின் சித்தத்தை செய்யும்படியே வானத்திலிருந்து இறங்கி வந்தார் (யோவா 6:38). இப்படியாக, தன்னுடைய ஆத்துமாவிற்கும், ஆவிக்கும் இடையே இருந்த திரைசீலையை கிழித்து (தன் சுய சித்தத்தை) தன் பூமிக்குரிய ஜீவியம் முழுவதிலும், "ஆகிலும் என் சித்தம் அல்ல. உம் சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்றார்.

இப்படிதான், இயேசுவை பின்பற்றும்படி நாமும் அழைக்கப்பட்டு இருக்கிறோம். நம்மில் அநேகர் ஆவிக்குரியவர்களாய் இன்னும் மாறாமல் இருப்பதற்கு தாங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்திருந்தும் சவாலூட்டப்பட்டும், தேவனுடைய சித்தத்தை செய்யும் பொருட்டு, தங்கள் சுய சித்தத்தை விட்டு விட மனதில்லாது இருப்பதே அதற்கு காரணம்.

பரலோகத்திலே, பிதாவோடு இயேசு இருந்தபோது, பிதாவின் சித்ததை போலவே, அவருடைய சித்தமும் இருந்தது. ஆனால், பூமிக்கு வந்து நம்மை போல மாம்சத்தை உடையவரானபோது, தம்முடைய சொந்த சித்தத்தை (விருப்பத்தை) உடையவராய் மாறினார். பிதாவின் சித்தத்தை செய்யும் பொருட்டு, தன் சொந்த சித்தத்தை மறுதலித்து வாழ வேண்டியதாய் இருந்தது.

தன் இளம் பிராயத்திலே, தன் பெற்றோர்களான, யோசேப்புக்கும், மரியாளுக்கும் கீழ்ப்படியவேண்டும் என்பதை அவ்வளவு எளிதான காரியமாக உணர்ந்தார். அவர்கள் பூரணமில்லாமலும் அவர் பூரணராயும் இருந்தார். ஆனாலும், இயேசு அந்த வருடங்களிலேயே தன் சுயசித்தத்துக்கு மரித்து தன்னை ஒப்புக்கொடுத்தார்.

இதே காரியத்தைதான் வீட்டிலே அநேக மனைவிமார்களும் கையாள வேண்டும். இரக்கமில்லாத, தேவனுக்கு கீழ்ப்படியாத கணவன்மார்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். அதைப்போலவே, தங்களுக்கு ஒவ்வாத மூத்த சகோதரர்களிடத்திலும் இதே விதத்திலே கீழ்ப்படிய ஒப்புக்கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கெத்சேமனேயிலும் பிதா அருளின பாத்திரத்திலே பானம் பண்ண விருப்பமில்லாதவராகவே இயேசு இருந்தாலும், தன்னுடைய சுயசித்தத்தை விட்டு கொடுத்து, முடிவிலே, அதை பானம் பண்ணினார்.

மெய்யான ஆவிக்குரிய தன்மையின் ரகசியமே, ஒருவன் தன் சுய சித்தத்தை மறுத்து பிதாவின் சித்தத்தை செய்வதுதான்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையானது, ஒருபோதும் உணர்வுகளின் அடிப்படையாக கொண்டதாக இருக்க கூடாது. நம்மை சுற்றி நடக்கும் காரியங்கள், நாம் எதிர்பார்த்தவிதத்தில் நடக்காதிருக்கும் போது நாம் தைரியமிழந்து இருக்க சோதிக்கப்படுகிறோம். ஆனால், நம் சித்தத்தை தேவனை துதிக்க தீர்மானிக்க செய்ய வேண்டும்,

1.ஏனென்றால், இவ்வுலகின் சகல காரியங்கள் மேலும் கட்டுபாடு வைத்திருப்பவராக நம் தேவன் இருக்கிறார். (விரிவாக்கம் 1தீமோ 6:15).

2.ஏனென்றால், சாத்தான் கல்வாரியிலே தோற்கடிக்கப்பட்டதால்,

3. ஏனென்றால், நம் வாழ்க்கையில் சகலத்தையும் நன்மையாக மாற்றுவதால்.

ஒருவேளை, நம் ஜெபத்திற்கு பதில் கிடைக்கவில்லையானாலும் நம் உணர்வுகளின் அடிப்படையில் வாழ மறுத்து தேவனை துதிக்கணும். இவ்வழியில் தொடர்ந்து நிலைத்திருந்தால், மாத்திரமே உண்மையான ஆவிக்குரியவர்களாய் மாறமுடியும்.

ஒருவேளை, இயேசு தம் சுயசித்தத்திற்கு தொடர்ச்சியாக மரித்திருக்காவிட்டால், தன் ஜீவிய காலமுழுவதிலும் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியாக இருந்திருக்கமாட்டார். ஒரேமுறை கூட தன் சுய சித்தத்தை செய்திருப்பாரென்றால், நம் பாவங்களுக்கேற்ற பூரண பலியாகவும் இருந்திருக்கமாட்டார். மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு போகிறதுக்கு திரைசீலையும் கிழிந்திருக்காது.

இப்போது, இயேசு நமக்காக புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை திறந்து வைத்ததால், அதிலே ஒவ்வொருநாளும் நாமும் நடக்க முடியும் (எபி 10:19,20).

இது ஏதோ ஒரேமுறை நுழையும் வாசல் அல்ல. ஆனால், நம் ஜீவிய காலமுழுவதும் நாம் நடக்ககூடிய வழியாக அது இருக்கிறது. அப்போது மாத்திரமே, நாம் எப்போதும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஜீவிக்கிறவகளாய் இருக்கமுடியும்.

பொன்னால் செய்யப்பட்ட உடன்படிக்கை பெட்டி:

மகா பரிசுத்த ஸ்தலத்திலே, உடன்படிக்கை பெட்டியும், அதைசுற்றி கிருபாசனமும் வைக்கப்பட்டிருந்தது. உடன் படிக்கை பெட்டி மற்றும் கிருபாசனம் தேவனுக்கும் மனிதனுக்கும், புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாக சொல்லப்படுகிறது.

பாவ நிவர்த்தியின் நாளிலே கிருபாசனத்தின் மேலே இரத்தம் தெளிக்கப்படும். பொன்னால் செய்த இரண்டு கேருபீன்கள் அதின் மேல் நிழலிட்டிருக்கும். முற்காலத்திலே ஏதேன் தோட்டத்திலே ஜீவ விருட்சத்துக்கு போகும் வழியை காக்கும்படி சுடரொளிபட்டயத்தை பிடித்திருந்தவைகள் இவைகளே. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த போது அந்த பட்டயம் முதலாவது, இயேசுவின் மேலே விழுந்தது. நாமும் அவரோடு கூட சிலுவையில் அறையப்பட்டதால் (கலா 2:20)நம்மேலும் அது விழுந்தது. இப்போது நம் சுய சித்தத்தை பட்டயத்தால் கொல்லப்பட நாம் அனுமதிப்பதின் மூலமே அல்லாமல் ஒருவரும் ஜீவ விருட்சமாகிய இயேசுவினிடத்தில் வரமுடியாது.

உடன்படிக்கைப் பெட்டியிலே இரண்டு கற்பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. (பத்து கட்டளைகள் எழுதப்பட்டிருந்தது) பொற்பாத்திரம் (மன்னா வைக்கப்பட்ட) ஆரோனின் துளிர்த்த கோல் (பூத்துக்காய்த்திருந்த).

வானத்திலிருந்து மன்னா விழுந்திருந்தாலும் ஒரு சில இஸ்ரவேலர்கள் இராமுழுவதும் அதை வைத்திருந்த படியால், அது பூச்சிபிடித்து நாற்றம் எடுத்தது. ஆனால், அதே மன்னா தேவ சமூகத்தில் வைக்கப்பட்டு வனாந்திரத்திலே, நாற்பது வருடங்களாகியும் நாற்றமெடுக்காதிருந்தது அது தேவனுடைய சத்தியத்தை வெறும்தலையறிவிலே (மூளை) மாத்திரம் வைத்திருந்தால், அது மரணத்தை பிறப்பிக்கும். ஆனால், அதை தாழ்மையோடு தேவ சமூகத்திலே வைத்திருந்தால், அது தொடர்ச்சியாக (நீண்ட காலமானாலும்) புத்தம் புதியதாகவே இருக்கும். தேவ சமூகத்தில் தரித்திருக்கும் ஒரு மனிதனின் வார்த்தை எப்போதும் புதியதாகவே இருக்கும். ஆனால், அதே செய்தியை அப்படியே வேறொருவர் அதேப்போல செய்ய முயலும் போது, உலர்ந்த மரித்த எலும்புகள் போலவே இருக்கும்.

ஒருசமயம் மோசே, ஆரோன் என்பவர்களுடைய அதிகாரத்தை குறித்து ஜனங்களால் கேள்வி எழுந்தபோது, ஒவ்வொரு கோத்திர பிரபுக்களிடமிருந்தும் ஒவ்வொரு கோலாக பன்னிரண்டு கோல் வாங்கப்பட்டு தேவசமூகத்திலே, இரா முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. அதிலே ஆரோனின் கோல் மாத்திரம் துளிர்விட்டு, பூபூத்து வாதுமை பழங்களை கொடுத்தது (எண் 17) காய்ந்து போயிருந்த அந்த கோல்களுக்காக தேவன் உயிரை கொடுத்ததின் மூலம் தேவன் தம்முடைய அதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டு சாட்சி பகருகிறார். அந்த கோலும் நாற்பது ஆண்டுகளாக புத்தம் புதியதாகவே இருந்தது. தேவ சமூகத்திலே அப்பியாசிக்கப்பட்ட அதிகாரமே மதிப்பு நிறைந்ததாக காணப்படும்.

சாமுவேலின் நாட்களிலே, சில ஆர்வமுள்ள இஸ்ரவேலர்கள் உடன்படிக்கை பெட்டியினுள் இருப்பதை பார்க்கும் ஆர்வத்தினால் கிருபாசனம் திறக்கப்பட்டது. கர்த்தர் அப்படி செய்தவர்களை உடனடியாக அடித்ததினிமித்தம் செத்தார்கள்.

(1சாமு 6:19). இது கிறிஸ்து எப்படி தேவனும் மனிதனுமாயிருந்தார் என்பதை குறித்து அலசி பார்ப்பது எவ்வளவு ஆபத்தும், மதியீனமான காரியம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. அதேப்போல, அவர் எப்படி நம்மை போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டிருக்க முடியும்? இப்படி அநேக காரியங்களை நாம் புரிந்து கொள்ளவில்லையானாலும் பரவாயில்லை. நமக்கு தேவையாயிருப்பது எல்லாம் தேவன் தம்முடைய வார்த்தையில் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறவர்களாக இருப்பதே நம்முடைய தேவையாய் இருக்கிறது.

பிரதான ஆசாரியர்களின் வஸ்திரம்:

பிரதான ஆசாரியரான ஆரோன், இயேசுவுக்கு மாதிரியாக இருக்கிறார். அவருடைய வஸ்திரத்தில் மூன்று பொருட்கள் காணப்படும்.


முதலாவதாக, தலைப்பாகை: மெல்லிய பஞ்சு நூலில் தயாரிக்கப்பட்ட அது இயேசுவின் நீதியை குறிக்கிறதாக இருக்கிறது.

அதற்கு மேலே ஒரு இளநீல அங்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதின் கீழ்ப்பாகம் சுற்றிலும் மாதுளம்பழம் மற்றும் இடைஇடையே சுற்றிலும் பொன்மணிகள் அதின் ஓரங்களில் தொங்கும்படி செய்து வைக்கப்பட்டிருந்தது. நீல நிறம் உன்னதத்தையும், மாதுளம்பழம் ஆவியின் கனியையும் பொன்மணிகள் ஆவியின் வரங்களையும் குறிக்கிறது. தேவனை சேவிக்க இவைகள் இரண்டும் தேவையாயிருக்கிறது.

அவன் இந்த வஸ்திரத்தின் மேலே ஏபோத்தை அணியவேண்டும். அது பலவர்ண மேலங்கியைப் போல இருக்கும் அதிலே மூன்று விசேஷித்த பொருட்கள் இருக்கும். அது,

1. இரண்டு தோள் துண்டுகளும், அதிலே இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திர நாமங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

2. மார்பதக்கம் - அதிலே பன்னிரண்டு கற்கள் . அது இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திரத்தை குறிக்கிறதாயிருக்கிறது.

3. ஊரீம், தும்மிம் - நியாயவிதி மார்பதக்கத்திலே வைக்கப்பட்டிருக்கும்.

இந்த மூன்று பொருட்களும் நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவின் வல்லமையும் நம்மை அரவணைக்கும் அவருடைய அன்பையும், நம்மை நடத்தும் அவருடைய ஞானத்தையும் குறிக்கிறது. இந்த மூன்றும் 2தீமே 1:7-ல் சொல்லப்பட்ட தேவ ஆவியின் மூலம் தொடர்புடைய நற்ப்பண்புகளையும் ஆவியின் வரங்களையும் குறிக்கிறது. தேவனுக்கு சேவை செய்ய இவைகள் இரண்டும் அவசியமானதாக கருதப்படுகிறது.

பிரதான ஆசாரியரின் தலையிலே பாகையும், அதற்குமேல் பரிசுத்த காணிக்கையிலே, காணப்படும் குற்றத்தை ஆரோன் சுமக்க வேண்டும். நம்முடைய "பரிசுத்த காணிக்கையிலும்" கூட பாவம் இருக்கும்.

பாவநிவர்த்திக்காக, வருஷந்தோரும் செலுத்தப்படும் பலி பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும் முன் விசித்திர ஆடைகளை கழற்ற வேண்டும். வெள்ளை ஆடையை அணிந்து உள்ளே போகவேண்டும். வெளியே வந்து ஜனங்களுக்கு முன்பு போகும் முன்னே இந்த விசித்திர ஆடையை அணியவேண்டும்.

அது, நாம் தேவனுக்கு முன்பாக போகும்போது எளிய தோற்றமுடனும், தாழ்மை மற்றும் நொறுங்குதலோடும் போக வேண்டும். ஜனங்களிடத்தில் திரும்பி வரும்போது, முகத்துக்கு எண்ணெய் பூசி, நம்முடைய ஜெபம் உபவாசம், தியாகம் எல்லாம் மறைக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவ ஜீவியத்தின் மூன்று நிலைகள்:

ஆசரிப்பு கூடாரத்தின் மூன்று பாகங்கள். வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். கீழ்கண்டவாறு அடையாளமாக இருக்கிறது.

நிலையான வளர்ச்சியின் மூன்றுபடிகள்:

1. தேவனால் மன்னிக்கப்படுதல்.

2. தேவனை சேவிப்பது.

3. தேவனோடு (உறவு) ஐக்கியம் கொள்வது.

மூன்று வகையான கிறிஸ்துவர்கள்:

1)மாம்சீக கிறிஸ்துவர்கள் 2)மனுஷீக கிறிஸ்துவர்கள் 3)ஆவிக்குரிய கிறிஸ்துவர்கள்.

பரிசுத்த ஆவியானவரின் மூன்று ஊழியங்கள்:

1. பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறத்தல்.

2.பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்.

3. அனுதினமும் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுதல்.

தேவன் மீது நமக்கிருக்க வேண்டிய மூன்று மனப்பான்மைகள்:

நன்றி சொல்லுதல், துதி செலுத்துதல், ஆராதனை.

1. நன்றி சொல்லுதல்:

நாம் பெற்றுக்கொண்டதும், ஆசிர்வதிக்கப்பட்டதுமான தேவனுடைய ஈவுகளை நினைத்து வாழுதல்.

2. துதித்தல்:

நமது, நிமித்தம் செயல்பட்ட தேவனுடைய மகத்துவம் மற்றும் சர்வ வல்லவரின் பெலனை நினைத்து வாழுதல்.

3. ஆனால், ஆராதனையிலோ நம் கண்ணோட்டம் எல்லாம் தேவனாக அவர் நம் வாழ்க்கையில் எப்படி பட்டவராய் இருக்கிறார் என்பதற்காய் அவரை பணிந்து கொள்ளுவதேயாகும்.

வெளிச்சத்தின் மூன்றுபடிகள்:

1. சுயபுத்தி. (மனுஷீக காரண யுக்தி).

2. தேவ வார்த்தையின் போதனை.

3. தேவனின் சுபாவம்.

மேற்கண்ட இந்த மூன்று ஆதாரங்களில் ஏதோ ஒன்றின் அடிப்படையிலே நாமெல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம் இவைகளில் காணப்படும் ஒளி (அல்லது) வெளிச்சம், உண்டாக்கப்பட்டவைகள் மூலமாக இருந்து வருகிறது. வெளிப்பிரகாரத்துக்கு சூரிய வெளிச்சமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு குத்துவிளக்கிலிருந்தும் வருகிறது. ஆனால், மகா பரிசுத்த ஸ்தலத்திலோ உண்டாக்கப்பட்ட வெளிச்சமாயில்லாமல், தேவனுடைய பிரசன்னத்தினாலேயே வருகிறதாய் இருக்கிறது.

கனியுள்ள வாழ்க்கையின் மூன்று படிகள்:

1. முப்பது மடங்கு.

2. அறுபது மடங்கு.

3. நூறு மடங்கு.

விதைக்கிறவனுடைய உவமையில் மூன்று நல்ல நிலங்களும், மூன்று கெட்ட நிலங்களும் (மாற் 4:1-8)சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நல்ல நிலத்திலிருந்து கிடைக்கும் பலனின் அளவு எவ்வளவு முழு இருதயம் கொண்டவர்களாய் இருக்கிறோம் என்பதை பொறுத்தே அளவிடப்படும்.

கிறிஸ்துவ வாழ்க்கையின் முதிர்ச்சியில் காணப்படும் மூன்று படிகள்:

1. குழந்தைகள்.

2. வாலிபர்.

3. பிதாக்கள்.

பிள்ளைகள் எப்போதும், மற்றவர்களையே சார்ந்து இருப்பார்கள். வாலிபர் வைராக்கியம் உள்ளவர்களாய் இருப்பார்கள்.

பிதாக்கள் ஞானத்தினால் நிறைந்திருப்பார்கள்.

நாம், மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர், தமது மாம்சமாகிய திரையின் வழியாக புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உண்டு பண்ணினபடியால், (எபி 10:20). இன்று மீண்டும் திரை கிழிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால், அனுதினமும் இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திலே தைரியமாக நடக்க அநேக சந்தர்ப்பங்கள் நமக்கு உண்டு.

தேவ சமூகத்திலே, நாம் அனுதினமும் ஜீவிக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது. அநேகர் வெளிப்பிரகாரத்திலோ அல்லது பரிசுத்த ஸ்தலத்திலோ தங்கி இருக்கிறவர்களாயிருப்பதால், எப்போதும் அபிஷேகம் அவர்கள் மேல் தங்கி இருப்பதில்லை. மகா பரிசுத்த ஸ்தலத்திலே அனுதினமும், சிலுவையை சுமந்து திரையின் ஊடாக பிரவேசிக்கிறவர்களாக இருக்கவேண்டும் (எபி 10:20).

சிலுவையின் பாதை என்பது ஒரு இலக்காக இல்லாமல், ஓர் பாதையாகவே நம் நினைவிலிருக்கட்டும் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிதாவோடு உறவாடும் ஐக்கியமே நமது இலக்காக இருக்கட்டும். அதன்மூலம் சிலுவையின் செய்தியைவிட பிதாவோடுள்ள ஐக்கியம் பிரகாசித்து ஓங்கட்டும்!

நம் ஜீவிய காலமெல்லாம், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஐக்கியத்திலேயே, ஜீவிக்க நாடுவோம்!

ஆமென்! ஆமென்!

காதுள்ளவன் எவனோ அவன் கேட்க கடவன்!

[7/15, 2:16 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 5:  23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.
27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

[7/15, 2:24 PM] Levi Bensam Pastor VT: எபிரெய 9:11-12
[11] *கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, 👉👉பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும்,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇
[12] *வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, 👉 👉 👉 👉 👉 நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.*

[7/15, 2:27 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 10:19-22
[19]ஆகையால், சகோதரரே, *நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது👍👍👍👍👍👍👍👇👇👇👇👇 மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்*,👇👇👇👇👇👇👇👇👇👇
[20] *அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,*👇 👇 👇 👇 👇 👇 👇
[21], *தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 ,
[22], *துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.*✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅

[7/15, 2:28 PM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 16:  5 இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
6 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,
7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
8 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
9 கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக் கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;

[7/15, 2:29 PM] Levi Bensam Pastor VT: *நாம் எப்படி பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பது*❓❓❓❓❓❓❓❓❓👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

[7/15, 2:31 PM] Levi Bensam Pastor VT: *நாம் இப்போது எந்த கூடாரத்தின் வழியாக பிரவேசிக்க முடியும்*❓❓❓❓❓❓❓👆👆👆👆👆👆👆👆

[7/15, 2:36 PM] Christopher-jeevakumar Pastor VT: மத்தேயு 25:  32 அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

[7/15, 2:42 PM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 1:  3 அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து,
4 அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

[7/15, 2:51 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 26:  14 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.

[7/15, 2:58 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 29:  7 அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.

[7/15, 2:59 PM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 8:  23 பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.

[7/15, 3:00 PM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 8:  22 பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
23 பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.
24 பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
25 கொழுப்பையும், வாலையும், குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,
26 கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,
27 அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,
28 பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப் பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.

[7/15, 3:05 PM] Christopher-jeevakumar Pastor VT: எபிரெயர் 8:  4 பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;

[7/15, 3:23 PM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 11:  1 பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
2 ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.

[7/15, 3:23 PM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:  11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

[7/15, 3:24 PM] Christopher-jeevakumar Pastor VT: எபேசியர் 3:  18 சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;
19 அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

[7/15, 3:24 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 3:  34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

[7/15, 3:29 PM] Christopher-jeevakumar Pastor VT: ஏசாயா 54:  10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

[7/15, 3:33 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 26:  14 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.

[7/15, 3:33 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 36:  19 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.

[7/15, 3:55 PM] Elango: *தேவ பிள்ளைகள் தேவனிடம் வைக்கும் அன்பிற்க்கும் அளவில்லை...*❤💛💚💚

புறம்பே இருக்கிறவர்களாக அல்ல, வாசஸ்தலத்தில் ...கூடாரத்தில் இருக்கும் போதுதான் பரிபூரண ஆசீர்வாத்தை பெறுவோம்.💐💐💐🙏🏻🙏🏻

*நாம் வாசஸ்தலத்திற்க்கு வெளியே👈 காணப்படக்கூடாது என்பது தான் தேவனுடைய சித்தம்* 👌👌👍

வெளிப்படுத்தின விசேஷம் 22:11
[11]அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; *பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.*

- பாஸ்டர் கிறிஸ்டடோபர் @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

[7/15, 3:59 PM] Jeyanti Pastor VT: Yes.  Amen கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் சமீபமானோம்
[7/15, 4:05 PM] Elango: நாம் புதிய ஏற்ப்பாட்டில் ஆசாரியர்கள் தானே பாஸ்டர்,  கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக நாம் தேவனுக்கு சமீபமாகி விட்டோமே... இன்னும் கூடாரத்தில் பிரவேசிக்க வேண்டுமா நாம்?

[7/15, 4:06 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 26:  15 வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
15 வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.

[7/15, 4:14 PM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 3:  11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

[7/15, 4:15 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 38:  25 சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது.
26 எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.
27 அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று.
28 அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண்களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான்.

[7/15, 4:30 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 26:  17 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.

[7/15, 4:44 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 26:  26 சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
27 வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.
28 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
29 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடக்கடவாய்.
30 இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.

[7/15, 4:51 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 14:  16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

[7/15, 4:52 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 16:  13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

[7/15, 4:55 PM] Christopher-jeevakumar Pastor VT: எசேக்கியேல் 16:  3 கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி.
4 உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.
5 உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்.
6 நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.

[7/15, 5:09 PM] Christopher-jeevakumar Pastor VT: உன்னதப்பாட்டு 5:  10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.
11 அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.

[7/15, 5:09 PM] Christopher-jeevakumar Pastor VT: உன்னதப்பாட்டு 1:  16 நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.

[7/15, 5:12 PM] Christopher-jeevakumar Pastor VT: மத்தேயு 22:  16 தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
17 ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
18 இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
19 வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
20 அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
21 இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
22 அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

[7/15, 6:04 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 15/07/2017* 🔷

1⃣வாசஸ்தலத்திலுள்ள *மூடுதிரைகளை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

2⃣மூடுதிரைகள் எதினால் செய்யப்பட்டிருந்தது❓மூடுதிரைகள் எதையெல்லாம் மூடியிருந்தது❓

3⃣வாசஸ்தலத்திலுள்ள *மூடுதிரைகளை* இணைக்கும் *பொன் கொக்கிகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*

3⃣ *தொங்கு திரைகளை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

4⃣பரிசுத்த ஸ்தலத்திற்க்கும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் *திரைச்சீலையின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/15, 7:07 PM] Elango: பாஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம்.

வாசஸ்தலமும், ஆசரிப்புக்கூடாரமும் ஒன்றா  இல்லாட்டி வேற வே அர்த்தம் கொண்டவைகளா சொல்லுங்களேன்...

[7/15, 7:16 PM] Elango: எபேசியர் 4:11-13,16
[11]மேலும் நாம் அனைவரும் *தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,*

[12]பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

[13]அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
[16]அவராலே சரீரம் முழுவதும், *அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு,* ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.

*வாசஸ்தலத்தில் கொக்கிகள் திரையை இணைப்பது போல, விசுவாசிகள் நாம் பல அவயவங்களாக இருந்தும், ஒரு சரீரமாக இணைப்பதற்க்கு ஒப்பாக தோன்றுகிறது*

ஆவிக்குரிய கொக்கிகள்❓

[7/15, 7:28 PM] Elango: *எப்படி  சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்,*

சபையில் ஒருவர் சுத்தம் பண்ணுகிறேன், பாய் போடுகிறேன், ஜெபிக்கிறேன் என்று பல காரியங்கள் உண்டு...

எப்படி ஆசரிப்புக்கூடாரத்தில் கொக்கி இருக்கிறதோ அதைப்போல இப்போது பல கொக்கிகளினாலேயே சபை இணைக்கப்பட்டு,

சங்கீதம் 133:1
[1] *இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?*

எபேசியர் 2:14-18
[14]எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, *இருதிறத்தாரையும் ஒன்றாக்கி*, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,

[15]சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, *இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,*

[16] *பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.*
[17]அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
[18] அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.

ரோமர் 6:5
[5] *ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.*

அதுபோல ஆசாரியக்கூடாரத்தில் கொக்கிகள் சிறிய காரியமாக இருந்தாலும் அது பெரிய காரியத்தை முடிக்க உதவுகிறது

- பாஸ்டர் லேவி @⁨Levi Bensam Pastor VT⁩

[7/15, 7:38 PM] Elango: *வாசஸ்தலத்தின் கொக்கிகளை குறித்து நாம் தியானிக்கிறோம்*

கர்த்தருடைய வேத வசனத்தில் நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம். இணைக்கப்பட்ட வேத வசனத்தில் நாம் கட்டப்பட்டு வருகிறோம்.

இணைக்கப்படாமல் ஆண்டவர் நம்மை கண்டவே மாட்டார். நான் சொல்லுகிற வேத வசனம் ஆவியாயும் ஜீவனுமாயிருக்கிறது.

*விதைக்குள்ள ஜீவன் உண்டு அதை எடுத்து பிளாஸ்டிக் பாக்கெட்டில் வைத்தால் அது பலன் கொடாது, அதை எடுத்து மண்ணுக்குள் வைத்து, தண்ணீர் ஊற்றினால் தான் அது வளரும்*

இந்த மண்பாண்டமான சரீரத்தில் வேத வசனத்தை விதைத்தால் 30, 60, 100 மாக பலன் கிடைக்கும்.

- பாஸ்டர் லேவி @⁨Levi Bensam Pastor VT⁩

[7/15, 7:46 PM] Elango: ஆசரிப்பு கூடாரத்தின் வெளிப்பிரகார மறைவுக்காய் திரித்த மெல்லிய பஞ்சு நூலால் ஆன *மூடுதிரைகள்* இருந்தன. *திரித்த மெல்லிய பஞ்சு நூல் தேவனுடய நீதியைப் பிரதிபலிக்கிறது.*

[7/15, 7:46 PM] Elango: >> *ஆசரிப்பு கூடாரம் தேவனுடைய வாசஸ்தலமாய் வருணிக்கப்படுகிறது மற்றும் கிருபையில் தேவன் மனிதனுடன் வாசம் பண்ணுவதையும் வருணிக்கிறது.*

>> *ஆசரிப்பு கூடாரம் மனிதன் தேவனை சந்திக்கும் இடமாய் இருக்கிறது மற்றும் இது கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவை பிரதிபலித்து, தேவன் ஜனங்களை சிலுவையில் சந்திப்பதையும் காட்டுகிறது.*

>> *ஆசாரியர்கள் மட்டுமே ஆசரிப்பு கூடாரத்தில் பிரவேசிக்க முடிந்தது. இன்றைய அளவில் விசுவாசிகள் மட்டுமே தேவனுடன் ஐக்கியம் கொள்ள முடியும்.*

[7/15, 7:50 PM] Elango: *ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரை மெல்லியதாய் இருந்தது இது குறைந்த பட்ச விசுவாசம் இருந்தால் உட்பிரவேசிக்க போதுமானது என்பதை பிரதிபலிக்கிறது.* பெலவீனமான மக்கள் கூட அத்திரையை விலக்கி உட்பிரவேசிக்க முடியும்.

அதில் நான்கு வண்ணங்கள்  இடம் பெற்று இருந்தன, அவை இளநீலம்,  இரத்தாம்பரம், சிவப்பு, வெள்ளை:
இளநீலம் = கிறிஸ்துவின் தெய்வீகம்,
இரத்தாம்பரம் = கிறிஸ்துவின் ராஜரீகம்,
சிவப்பு = கிறிஸ்துவின் மீட்பின் கிரியை,
வெள்ளை = கிறிஸ்துவின் முழுமையான நீதி. இவ்வாறு *ஆசரிப்பு கூடாரத்துள் பிரவேசிக்கும் பொழுது, கிறிஸ்துவின் நீதி சுற்றிலும் முழுவதுமாய் மறைத்துக்கொள்ளும்*

36. *இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,* Exodus&Chapter=26

[7/15, 7:51 PM] Elango: வெளி 3:8 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், *உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்*
[7/15, 7:57 PM] Elango: *ஆசரிப்பு கூடாரத்தின் கூரைப்பகுதி நான்கு வித பொருட்களால் ஆனது.* யாத்திராகமம் 26:1-14

வெளியே -  தகசுத்தோல் என்பது  மனுஷீகம் குறிக்கிறது.
சிவப்பு தீர்ந்த ஆட்டுக்கடா தோல் என்பது  மீட்பை குறிக்கிறது.
வெண்மையான ஆட்டுக்கடா உரோமம் என்பது  பாவமற்றத்தன்மையை குறிக்கிறது.
உள்ளே இருந்த திரித்த மெல்லிய பஞ்சு நூல் என்பது நீதியை குறிக்கிறது.

[7/15, 8:00 PM] Elango: ஆசரிப்பு கூடாரத்துக்கு ஒரே வாசல் இருந்தது. தேவனிடம் செல்வதற்கு ஒரே வாசல் மட்டுமே உண்டு.

அது இயேசுக்கிறிஸ்து மூலம் மட்டுமே. வாசல் திரை இளநீல வண்ணத்தில் 35 அகலமாய் இருந்தது. *ஒரு முறை வாசல் வழியாய் உட்பிரவேசித்தால் ஆசரிப்பு கூடாரத்தின் உள்ளே செல்லலாம், இது தேவ நீதியால் மூடப்பட்ட நிலையை பிரதிபலிக்கிறது. அதன் நீண்ட அகலம், எல்லோரும் பிரவேசிக்கலாம் என்பதை பிரதிபலிக்கிறது.*

[7/15, 8:20 PM] Elango: *வாசஸ்தலத்தின் மூடுதிரைகள்*

யாத்திராகமம் 25:4-5
[4]இளநீலநூலும், இரத்தாம்பர நூலும், சிவப்பு நூலும், மெல்லிய பஞ்சு நூலும், வெள்ளாட்டு மயிரும்,
[5]சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,

10 மூடுதிரைகள்... 5 ... 5 ஆக. பிரித்து வைத்தார்கள்... *ஒவ்வொரு மூடுதிரையும் 28 முழ நீளமும், 4 முழ அகலமுமாய் இருந்தது.*

மொத்தம் 48 அடி நீளம், 6 அடி அகலமாய் இருந்தது.
வாசஸ்தலத்திற்க்கு நேராக குறுக்காக மூடுவதற்க்காகவும், இரு பக்கமும் மடிப்பில் இருக்கும்...

இளநூலால் காதுகளை உண்டு பண்ண வேண்டும்...பொன் கொக்கிகளை அதில் இணைத்திருக்கும்.

யாத்திராகமம் 26:1
[1]மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், *சிவப்பு நூலினாலும்* நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.

*தேவன் தங்குகிற ஸ்தலம் தான் வாசஸ்தலம் எனப்படுகிறது*

வாசஸ்தலம் எதற்கு அடையாளமாக இருக்கிறது என்றால் 👇👇👇

யோவான் 2:19-21
[19]இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: *இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன*் என்றார்.
[20]அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
[21] *அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.*

இயேசு இந்த பூமியில் வாழ்ந்த போது அவரே வாசஸ்தலமாக இருந்தார், தேவன் தங்கும் வாசஸ்தலமாக இருந்தார்.👌👌👌👌👍👍👍

- பாஸ்டர் கிறிஸ்டோபர் @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

[7/15, 8:32 PM] Elango: ஆசரிப்புக்கூடாரத்தில் - பிராகாரம், பரிசுத்த ஸ்தலத்தை தவிர்த்து... *மகா பரிசுத்த ஸ்தலத்தை வாசஸ்தலம் என்று வேதம் சொல்கிறதா* பாஸ்டர்.?

[7/15, 8:53 PM] Elango: மகா பரிசுத்த ஸ்தலத்திற்க்கும் ( வாசஸ்தலம் ), பரிசுத்த ஸ்தலத்திற்க்கும் இடையில் ஒரு திரை காணப்பட்டது.

இந்த திரை எதற்கு அடையாளமென்றால் மனிதனுடைய பாவத்தினால் தேவனிடத்தில் கிட்டி சேர முடியாது என்பதை காட்டுகிறது...

*மகா பரிசுத்த ஸ்தலத்தில் வருஷத்திற்க்கு ஒரு முறை பிரதான ஆசாரியன் நுழைவான், அங்கு எல்லோரும் பிரவேசிக்க முடியாது... அதில் எல்லோரும் பிரவேசிக்க வேண்டுமென்றால் ... அந்த திரைச்சீலை கிழிக்கப்பட / அகற்றப்பட வேண்டும்...அப்படி செய்தால் எல்லோரும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து அவரை தரிசிக்க ஆராதிக்க முடியும்*

இயேசுகிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்தி அவருடைய் சரீரம் கிழிக்கப்பட்டதன் நிமித்தமாக...இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் ஒவ்வொரு தேவனுடைய விசுவாசிகளும் பிள்ளைகளும்...மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க முடியும்...

*அந்த திரைச்சிலை என்பது இயேசுகிறிஸ்துவின் சரீரம்*

மாற்கு 15:38
[38]அப்பொழுது,  *தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.*

- பாஸ்டர் கிறிஸ்டோபர் @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

[7/15, 9:16 PM] Satya Dass VT: எபிரேயர் 4:16<br>ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

[7/15, 9:21 PM] Satya Dass VT: அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,

[7/15, 9:22 PM] Satya Dass VT: எபிரேயர் 9:12
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் *ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து*நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

Hebrews 9:12
Neither by the blood of goats and calves, but by his own blood he entered in once into the holy place, having obtained eternal redemption for us.
[7/15, 9:35 PM] Elango: ஆசரிப்புக்கூடாரத்தில் வாசலில் நுழையும் போது... பிராகாரத்தில் ஒரு திரைச்சீசீலையும், பரிசுத்த ஸ்தலத்தைதையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் ஒரு திரைச்சீலையும்....

36. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு *தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,*

யாத்திராகமம் 26:33 கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; *அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.*
[7/15, 9:38 PM] Elango: 19. ஆகையால், சகோதரரே, *நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும்* ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
21. *தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,*
22. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.Hebrews&Chapter=10

[7/15, 9:41 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 15/07/2017* 🔷

1⃣வாசஸ்தலத்திலுள்ள *மூடுதிரைகளை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

2⃣மூடுதிரைகள் எதினால் செய்யப்பட்டிருந்தது❓மூடுதிரைகள் எதையெல்லாம் மூடியிருந்தது❓

3⃣வாசஸ்தலத்திலுள்ள *மூடுதிரைகளை* இணைக்கும் *பொன் கொக்கிகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*

3⃣ *தொங்கு திரைகளை* குறித்து வேதம் என்ன சொல்கிறது❓

4⃣பரிசுத்த ஸ்தலத்திற்க்கும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் *திரைச்சீலையின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/15, 11:39 PM] Elango: *திரித்த, மெல்லிய, பஞ்சு நூலினாலான மூடுதிரை கிறிஸ்துவின் நீதியைக் குறிக்கிறதாய் இருக்கிறது.அது சபையின் உள்ளே இருக்கிறவர்களையும் வெளியே இருக்கிறவர்களையும் அவர்களுடைய மனுஷீக நீதியின் வித்தியாசத்தைக் கொண்டு பிரிக்காமல், சபையின் உள்ளே இருக்கிறவர்களின் வித்தியாசம் கிறிஸ்துவின் நீதியினாலே தரிப்பிக்கப்பட்டதினாலே, உண்டாகிறது என்பதை காண்பிக்கிறது.*

 மெல்லிய திரித்த பஞ்சு நூல், சபையின் எளிய தன்மையைக் (தோற்றத்தை) குறிக்கிறதாக இருக்கிறது.

 ஆனால், அதற்கு மாறாக, பாபிலோன் என்னும் வேசியோ பகட்டாகவும், கவர்ந்து இழுக்கத்தக்கதான தோற்றத்தைக் கொடுக்கிறதாக இருக்கிறது என்று வெளிப்படுத்தின விசேஷத்திலே காண்கிறோம். (வெளி 17:4-ஐ 19:8-டோடு ஒப்பிட்டுப்பார்க்கவும்) இது எளிய தன்மையுள்ள கிறிஸ்துவின் சபைக்கு முற்றிலும் வித்தியாசமானது.

[7/15, 11:48 PM] Elango: *வாசஸ்தலத்தின் மூடுதிரைகள்:*

வாசஸ்தலத்தில் நான்கு மூடு திரைகள் உள்ளது.

1⃣ *விசித்திர வேலையாய் செய்யப்பட்ட திரித்த மெல்லிய பஞ்சு நூல், இளநீல நூல், இரத்தாம்பர நூல்,சிவப்பு நூலாலான ஒரு மூடுதிரை வாசஸ்தலத்தின் உட் பகுதியில் போடப்பட்டிருக்கிறது. அது கிறிஸ்துவினால் உண்டான நீதியின் சௌந்தர்யத்தை காட்டுகிறது.*

2⃣ இரண்டாம் மூடுதிரை: (அதற்கு மேலாக) ஆட்டு மயிராலான ஒரு மூடு திரை போடப்பட்டிருக்கும். அது கிறிஸ்து நம் பாவங்களை சுமந்து பாளையத்துக்கு புறம்பே அனுப்பப்பட்ட போக்காட்டிற்கு (Scape Goat) அடையாளமாக சொல்லப்படுகிறது.

 3⃣மூன்றாம் திரை: சிவப்பு தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினாலானது. அது கிறிஸ்து நமக்கு பதிலாக, நமக்காக இரத்தம் சிந்தி மரித்ததைக் காட்டுகிறது. கடைசியாக, மேற்புறத்தின் மூடு திரை தகசு தோலிலானது. அது பார்க்கத்தக்க ரூபம் அவருக்கு இல்லாததையும் வனாந்திரத்தின் மண் ஒட்டிக் கொள்ளும் ஒரு வெளிப்புறமான அழகு இல்லாததையே காட்டுகிறது. *வாசஸ்தலத்தின் உட்புறத்தில் மாத்திரமே அந்த பூரண அழகுள்ள மூடு திரையைக் காணமுடியும். அதைப்போலவே, ஒரு உண்மை கிறிஸ்தவனின் அழகு உள்ளான மகிமையே அல்லாமல் வெளிப்பிரகாரமான தோற்றத்தில் அல்ல.*

4⃣தகசு தோலானது, "கிறிஸ்துவின் நிந்தையை" நமக்கு அறிவிக்கிறது. வெளிப்பிரகாரமாக, உண்மையான சபையானது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டும் கனவீனப்படுத்தப்பட்டும் நிந்தைக்குள்ளாக்கப்பட்டும் தான் இருக்கும். ஆனால், உலகத்திலோ காரியங்கள் முற்றிலும் எதிர்ப்பதமாக வெளியே அழகுள்ளதாகவும் உள்ளேயோ அசுத்தத்தால் நிறைந்ததாகவுமே இருக்கும்.

*இயேசு இந்த பூலோகத்துக்கு வந்த போது, அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது (ஏசா 53:2).இந்த உலகம் அவரை அற்பமாக எண்ணி புறக்கணித்தது. தேவபக்தியை வாஞ்சித்தவர்கள் மாத்திரமே அவரிடத்தில் வந்தார்கள். அதைப்போலவே சபையும் இருக்கவேண்டும். வெளி உலகத்தில் காணப்படுகிற எந்த ஒரு கவர்ச்சியினிமித்தமும் ஜனங்கள் சபையில் இழுக்கப்படாமல் சபையின் ஜீவியத்தினாலும் ஐக்கியத்தின் அடிப்படையினால் மாத்திரமே அவர்கள் இழுக்கப்பட வேண்டும்.*

இயேசுவுக்கு சொந்தமானவர்கள் அவரோடு கூட நிந்தையை சுமந்து பாளையத்துக்கு (உலகத்தின்) புறம்பே போவார்கள். *ஆனால், திரைக்குள்ளாகவோ தேவனோடு ஐக்கியம் பெற்றிருப்பார்கள் (எபி 10:19,20;13:13).* ஆனால், பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் பாளையத்துக்கு உள்ளேயும், திரைக்கு வெளியேயும் ஜீவிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.

பாளையத்திற்கு புறம்பே என்பதின் அர்த்தம், "உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையேயாகும்". இயேசு, தம் வாழ்நாட்களெல்லாம் இந்த பரிசேயரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டும், பெயல்செபூல் என்றும் அழைக்கப்பட்டிருக்க (வீட்டு எஜமானையே அப்படி சொல்வார்களானால் வீட்டிலிருக்கிறவர்களாகிய நம்மையும் இன்னும் அதிகமாக அப்படி சொல்வார்கள் என்றே சொன்னார். மத் 12:24) இன்றைக்கு ஏன் அநேக கிறிஸ்துவர்கள் உலகத்தில் பிரபல்யமாக இருக்கிறார்கள்? (இயேசுவுக்கு இல்லாத) மனுஷர்களை பிரியப்படுத்தியும், தந்திரமாய் ஒத்துப்போவதினிமித்தமே அவர்கள் பிரபல்யமாக இருக்கிறார்கள். ரோமர்களோ, அல்லது கிரேக்கர்களோ இயேசுவை எதிர்த்தவர்கள் அல்ல. மாறாக, யூதர்களே அவரை பகைத்தார்கள். ஏன்? ஒத்த வேஷம்தரியாமல், தேவனுடைய சத்தியத்துக்காக நின்றதினிமித்தமே. இன்றைக்கு அதேவிதமான மார்க்க கிறிஸ்துவர்களும் ஒத்துப் போகிறவர்களும் மற்ற வேறு மார்க்கத்தாருமே கிறிஸ்துவின் சபையை பகைக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

[7/15, 11:57 PM] Elango: யாத்திராகமம் 26:31
[31]இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே *விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.*

வெள்ளை திரைசீலையில் கேருபீன்கள் சித்திரம் எதற்கு அடையாளம் என்றால், தேவனுடைய அதிகாரத்திற்க்கும், வல்லமைக்கும் வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது.

கேருபீன்கள் அங்கே ஊழியம் செய்யும் ஆசாரியர்களை தேவ பிரசனத்தை கவர்ந்து இழுக்கத்தக்கதாக இருந்தது. அவர்கள் மிகுந்த கவனத்தோடு, பயத்தோடு வேலையை ஊழியத்தை செய்தார்கள். அதனால் மகிமையான ஊழியத்தை செய்யும் நாமும் ஆண்டவர் ஊழியத்தை கவனத்தோடு செய்ய வேண்டும்.

எரேமியா 48:10
[10] *கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்;* இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.

- பாஸ்டர் கிறிஸ்டோபர். @⁨Christopher-jeevakumar Pastor VT⁩
[7/16, 12:10 AM] Elango: எசேக்கியேல் 16:4-13
[4] *உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.*

[5]உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்.
[6]நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, *உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்;* ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.
[7]உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன் ஸ்தனங்கள் எழும்பின, உன் மயிர் வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தாய்.
[8]நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து,, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கைபண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.
[9]நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம்பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி,
[10]சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச்சால்வையையும் உனக்குக் கொடுத்து,
[11]உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,
[12]உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்.
[13] *இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய்.*

*வானாந்தரத்தில் இருந்த சீத்திம் மரத்தை தங்கத்தினால் மூடியது போல,  நம்மையும் ஒன்றுக்கும் உதவாத புறக்கணிக்கப்பட்ட நம்மையும் தேடி வந்தார்...*

பலகையின் மேல் மூடுதிரை இருந்தது மாதிரி,  தேவன் தமது இரட்சிப்பின் வஸ்திரத்தை விரித்து வைத்திருக்கிறார். பலகை எப்படி நிமிர்ந்து நிற்க்கிறதோ அதைப்போல நாமும் விசுவாசத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

பலகைகள் ஒன்றோடொன்று ஐக்கியமாக இருப்பது போல, நாமும் விசுவாசிகளும் ஐக்கியமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பலகைகளையும்  இணைக்கக்கூடிய தாழ்ப்பாள்கள் இருந்தன.. அது ஊழியர்களை குறிக்கிறது...அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்.

1 பேதுரு 5:5
[5] *அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.*

- பாஸ்டர் கிறிஸ்டோபர் @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

[7/16, 12:18 AM] Elango: வெள்ளாடுகள் - பாவிகளை குறிக்கிறது
செம்மறி ஆடுகள் - நீதிமான்களை குறிக்கிறது

வெள்ளாடு ரோமம் ஆண்டவருடைய சிலுவையை குறிப்பதாக இருக்கிறது.

மத்தேயு 25:33
[33]செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

[7/16, 12:21 AM] Elango: யாத்திராகமம் 26:32
[32]சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; *அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும்,* அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

[7/16, 12:28 AM] Elango: லேவியராகமம் 8:23-24
[23]பின்பு அது கொல்லப்பட்டது; *மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.*

[24]பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

*இதன் மூலம் மனிதன் மூழுவதும் தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்படுகிறான் என்பதை காட்டுகிறது*

*ஆசாரியன் மாத்திரமல்ல அவனுடைய பிள்ளைகளும் தேவனுக்கென்று பிரதிஷ்டை பண்ணப் படுகிறார்கள்*

*கிறிஸ்து நம்முடைய ஆசாரியர் என்றால், கிறிஸ்துவின் பிள்ளைகளான நாமும், தேவனுக்கென்று பிரதிஷ்டைப் பண்ணப்பட்டவர்கள்*

- பாஸ்டர் கிறிஸ்டோபர். @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

Post a Comment

0 Comments