Type Here to Get Search Results !

பரிசுத்தமாவதற்க்கு நம்முடைய பங்கு, தேவனுடைய பங்கு என்ன❓

[2/9, 9:34 AM] : 🔥 *இன்றைய வேத தியானம் - 09/02/2017* 🔥
👉 தேவனுடைய பரிசுத்தம்,  மனிதர்களுடைய பரிசுத்தம்
இவைகளில் வித்தியாசம் உண்டா❓ ஆதார வேத வசனங்கள்❓

👉தேவனைப் போல, பரிசுத்தமாக மனிதன் தன்னை மாற்ற முடியுமா❓

👉பரிசுத்தமாவதற்க்கு நம்முடைய பங்கு மற்றும் தேவனுடைய பங்கு என்ன❓
                *வேத தியானம்*

[2/9, 10:11 AM] Elango: தேவனுடைய பரிசுத்தம்,  மனிதர்களுடைய பரிசுத்தம்
இவைகளில் வித்தியாசம் உண்டா என்று கேட்டுள்ளீர்கள்.
மனுஷன் பரிசுத்தமே கிடையாது.
இயேசு கிறிஸ்துவின் மூலமாகத் தான் நாம் பரிசுத்தமாகிறோம்.
 - பாஸ்டர் கிருபா

[2/9, 10:17 AM] Elango: 👉தேவனைப் போல, பரிசுத்தமாக மனிதன் தன்னை மாற்ற முடியுமா❓
மனிதன் தன்னைத்தானே பரிசுத்தமாக மாற்ற முடியாது.
நான் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்கள் பரிசுத்தராயிருங்கள் என்றே எழுதப்பட்டிருக்கிறது.
இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே நாம் மீண்டும் மீண்டும் பரிசுத்தத்தை அடைய முடியும்.
நம்மை நாமே பரிசுத்தமாக்க முடியாது. அதற்கு வழியே கிடையாது.

[2/9, 10:19 AM] Elango: - by pr. Kiruba

[2/9, 10:20 AM] Jeyachandren Isaac VT: 2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
1 கொரிந்தியர் 1 :2

[2/9, 10:20 AM] Jeyachandren Isaac VT: 1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயாநாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:
2 கொரிந்தியர் 1 :1

[2/9, 10:21 AM] Thomas VT: அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான் 1 யோவான் 3 :3

[2/9, 10:22 AM] Jeyachandren Isaac VT: 1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
எபேசியர் 1 :1
பரிசுத்தமானவராலே, நாம் பரிசுத்தம்க்கப் பட்டிருக்கிறோம்

[2/9, 10:23 AM] Jeyachandren Isaac VT: 1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில்கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:
பிலிப்பியர் 1 :1

👆கிறிஸ்துவிற்குள்ளாக

[2/9, 10:24 AM] Thomas VT: பரிசுத்தம் எங்கெல்லாம் காணப்பட வேண்டும் =
1) இருதயத்தில் - மத் 5-8
2) கைகளில் - சங் 24-4/யோபு 17-9
3) வழிகளில் - சங் 119-9
4) வார்த்தையில் - யோபு 11-4
5) ஆத்துமாவில் - 1 பேது 1-22
6) மனசாட்சியில் - 1 தீமோ 3-9
7) மனதில் - பிலி 1-16
8) பக்தியில் - யாக் 1-27
9) ஜெபத்தில் - யோபு 16-17

[2/9, 10:26 AM] Elango: யோவான் 17:19
[19] *அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, ☝☝அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.*

[2/9, 10:33 AM] Elango: பரிசுத்தத்திற்க்கு ஒரு எல்லையை வகுக்க மனுதனால் முடியுமானால் அந்த எல்லை இயேசுகிறிஸ்துவே.
இயேசுகிறிஸ்துவை தவிர பரிசுத்தத்திற்க்கு ஈடு இணையாக யாரையுமே சொல்ல முடியாது.
மனிதன் மனிதன் தான். தேவன் தேவன் தான்.
இயேசுவைப் போல பரிசுத்தமாக அவனால் முடியாது. ஆனால் இயேசுவின் கிருபையால் முடியும்.
என்னதான் மனிதன் பரிசுத்தவானாக மாறினாலும் அவன் இறைவன் ஆகவே முடியாது.
- Pr. Kiruba

[2/9, 10:35 AM] JacobSatish VT: தேவனையும மனிதனையும் சமப்படுத்தி பார்ப்பதே தவறு.
மனிதனை தேவசாயலாய்த்தான் படைத்தார்
தேவனாய் அல்ல

[2/9, 10:39 AM] JacobSatish VT: எந்த ஒரு வகையான உயிராய் இருந்தாலும்
பிறவி குணம் மாறாது.
மனிதனும அப்படியே ...
பாவத்தில் பிறந்தவன் மனிதன்
அவனை தேவனோடு ஒப்பிடுவது..ஒத்துக்கொள்ளமுடியாதது

[2/9, 10:42 AM] Elango: பரிசுத்தமாவதற்க்கு நம்முடைய பங்கு மற்றும் தேவனுடைய பங்கு என்ன❓

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், அவருடைய வசனத்தை கைக்கொள்வதிலும் கேட்பதினாலும் பரிசுத்தமாக்கப்படுகிறோம்.
அதேவேளையில்  பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்ற வார்த்தையின் பொருள் நாம் இன்னும் அதிகமாக பரிசுத்தத்தை அடைய வேண்டும் என்பது தான் பொருள்.
- பாஸ்டர் கிருபா

[2/9, 10:48 AM] Elango: தன்னைப்போல பரிசுத்தமாக மாற வேண்டும் என்று விரும்புகிறார் தேவன்
தன்னைப்போல இரக்கமாக மாற வேண்டும் என்று விரும்புகிறார் தேவன்
தன்னைப்போல அன்பாக மாற வேண்டும் என்று விரும்புகிறார் தேவன்
இதில் தேவனே தமக்கு இணையாக, தன்னுடைய சுபாவத்தையே தன் பிள்ளைகளும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பது இயல்புதானே.
இயேசுவோடு கூட நம்மையும் உயிர்ப்பித்து உன்னதத்தில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் என்று வேத வசனம் சொல்கிறதே.
பூலிக்கு பிறந்தது பூனையாகுமா❓
*தேவனால் பிறந்தவன் தேவர்களே*
சங்கீதம் 82:6
[6] *நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.*🔥🔥🔥🔥👍

[2/9, 10:49 AM] JacobSatish VT: அவரோட விருப்பத்தை மனிதன் நிறைவேற்றினானா. இளங்கோ அடிகளாரே...

[2/9, 10:51 AM] Elango: புதுசிருஷ்டியை நாம் பெற வில்லையா
பாவ மன்னிப்பை நாம் பெறவில்லையா
தேவ அன்பு இருதயத்தில் ஊற்றப்பட வில்லையா
1 கொரிந்தியர் 6:11,14
[11] *உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள*்.
[14]தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.

[2/9, 10:51 AM] Satya Dass VT: 26 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் *எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன் * 
லேவியராகமம் 20 :26

Shared from Tamil Bible 3.7

[2/9, 10:51 AM] JacobSatish VT: புலியே பூனை இனம்தான் இளங்கோ அடிகளே😜😜😜😜

[2/9, 10:52 AM] Satya Dass VT: 3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
1 தெசலோனிக்கேயர் 4 :3

Shared from Tamil Bible 3.7

[2/9, 10:52 AM] JacobSatish VT: கழுவப்பட்டவர்கள் எல்லாருமே பரிசுத்தத்தில் நிலைத்தார்களா

[2/9, 10:53 AM] Thomas VT: தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 1 தெசலோனிக்கேயர் 4 :7

[2/9, 10:54 AM] Elango: இதை ஏன் சகோ., பவுல் சொல்கிறார்.

1 கொரிந்தியர் 6:12
[12] *எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.*
பூனை கண் முடிக்கொண்டால் உலகம் இருட்டாகி விடுமா என்ன

[2/9, 10:55 AM] Elango: மற்றவர்களை ஏன் பார்க்க வேண்டும்
நான், நீங்கள் நிலைத்திருக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

[2/9, 10:55 AM] JacobSatish VT: யாரு பூனையை கண்ணை முடிக்கொள்ள சொன்னது

[2/9, 10:56 AM] Elango: இங்கே எல்லோரும் என்பது.
ஒருத்தருமே இல்லை என்று அர்த்தமா❓

[2/9, 10:56 AM] JacobSatish VT: ஆமா ஆமா யாரு இல்லை என்று சொன்னது.
அவர் நம்மேல் வைத்த நம்பிக்கை அது.ஆனால் அந்த நம்பிக்கைக்கு எத்தனேப்பெர் பாத்திரராய் இருக்கீறீர்கள்

[2/9, 10:57 AM] JacobSatish VT: அப்போ ஒரு சிலருக்காகத்தான் கிறிஸ்துவா

[2/9, 10:59 AM] Satya Dass VT: 4 *எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்,*  சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1 தீமோத்தேயு 2 :4

Shared from Tamil Bible 3.7

[2/9, 11:00 AM] Elango: எல்லாரும் சத்தியத்தை அறியவே தேவன் விரும்புகிறார்.

[2/9, 11:00 AM] Satya Dass VT: 19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 1 :19

Shared from Tamil Bible 3.7

[2/9, 11:02 AM] JacobSatish VT: 2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
லேவியராகமம் 19
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/9, 11:03 AM] JacobSatish VT: பரிசுத்தராயிரீங்கள என்று விரும்பினார்.நீங்கள் பரிசுத்தர் என்று சொல்லவில்லை

[2/9, 11:05 AM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:10
[10]இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, *அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.*🔥🔥🔥☝☝☝

[2/9, 11:06 AM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 22:11
[11]அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்;

👉 *பரிசுத்தமுள்ளவன்*👈 இன்னும் பரிசுத்தமாகட்டும்.

[2/9, 11:07 AM] Elango: ரோமர் 6:19
[19] *உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன்.*
 அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.

[2/9, 11:08 AM] Elango: மாற்கு 6:20
[20] *அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று* ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.

[2/9, 11:10 AM] Elango: யோவான் 13:10
[10]இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், *மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்;* நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.

[2/9, 11:10 AM] Elango: யோவான் 15:3-5
[3] *நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.*

[4]என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
[5]நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

[2/9, 11:12 AM] Elango: நீங்கள் அறிவிலை நம்புகிறீரா சகோ.
தேவன் தனித்தனியே படைத்த இனம் வகையை நம்புகிறீரா சகோ

[2/9, 11:12 AM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 09/02/2017* 🔥
👉 தேவனுடைய பரிசுத்தம்,  மனிதர்களுடைய பரிசுத்தம்
இவைகளில் வித்தியாசம் உண்டா❓ ஆதார வேத வசனங்கள்❓
👉தேவனைப் போல, பரிசுத்தமாக மனிதன் தன்னை மாற்ற முடியுமா❓
👉பரிசுத்தமாவதற்க்கு நம்முடைய பங்கு மற்றும் தேவனுடைய பங்கு என்ன❓
                *வேத தியானம்*

[2/9, 11:13 AM] JacobSatish VT: 15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
கலாத்தியர் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/9, 11:14 AM] Elango: 2 தீமோத்தேயு 2:20-22
[20]ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
[21] *ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.*👂👂👂👂👂👂👂👂
[22]அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.

[2/9, 11:16 AM] JacobSatish VT: அறிவியலின் ஆரம்பமே வேதம்தான் இளங்கோ அடிகளாரே😜😜😜

[2/9, 11:17 AM] JacobSatish VT: சரியா டைப் பண்ணுங்க பிரதர்.
அர்த்தம் வேற மாதிரி இருக்கு

[2/9, 11:17 AM] Elango: *பழைய ஏற்பாட்டில் பரிசுத்தம்*👇👇👇
யாத்திராகமம் 19:6,10-11,15-16
[6] *நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்* என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.
[10]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: *நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து.*
[11]மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின்மேல் இறங்குவார்.
[15] *அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.*
[16]மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.😪😥😢😕😕😯😧😧😧

[2/9, 11:18 AM] Elango: பூலியிலிருந்தா சகோ பூனையை தேவன் படைத்தார்🙃🙃

[2/9, 11:18 AM] Elango: பதில் தெரியலைன்னா
நல்ல மலும்பல்😧😧

[2/9, 11:20 AM] JacobSatish VT: பழைய ஏற்பாடை அப்பப்ப ஊறுகாய் மாதிரி எடுத்துக்கறீங்க 😂😂😂😂☝☝☝

[2/9, 11:22 AM] Elango: புதிய ஏற்பாடே பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதல் தானே சகோ

[2/9, 11:25 AM] Karthik-Jonathan VT: Praise the Lords Amen

[2/9, 11:27 AM] JacobSatish VT: திடிர்னு இயேசு தன் இரத்தம் சிந்தி மீட்டுவிட்டார்.
பழைய ஏற்பாட்டை நாம் பின்பற்ற தேவைஇல்வை என்று சொவ்லுகிறார்கள்😇😇😇😇😳😳😳😳😳

[2/9, 11:29 AM] Kenosis VT: Bro what do you mean by பழைய ஏற்பாட்டை?

[2/9, 11:29 AM] Satya Dass VT: .
5 யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
யோசுவா 3 :5

Shared from Tamil Bible 3.7

Shared from Tamil Bible 3.7

[2/9, 11:29 AM] Satya Dass VT: 10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி *நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.*
எபிரேயர் 10
Shared from Tamil Bible

[2/9, 11:33 AM] Jeyachandren Isaac VT: 30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்,எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
ரோமர் 8

[2/9, 11:52 AM] Jeyanti Pastor VT: சங்கீதம் 93:5, உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.
👆👆👆👆
 தேவனுடைய பரிசுத்தம்
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். ரோ; 6:22
நமது பரிசுத்தம்

[2/9, 12:18 PM] JacobSatish VT: 🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀ கொஞ்சம் இடைவெளிக்கு பின் வருகிறேன்🙏🙏🙏🏃♀

[2/9, 12:38 PM] Jeyanti Pastor VT: தேவனைப் போல பரிசுத்தம் ஆக முடியாது.  ஆனால் பரிசுத்தமாயிருக்க வேண்டும்

[2/9, 12:44 PM] Isaac Samuel Pastor VT: 31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
1 கொரிந்தியர் 1 :31

[2/9, 12:52 PM] Jeyachandren Isaac VT: நானல்ல கிறிஸ்துவே👍

[2/9, 1:04 PM] Stephen VT: யாத்திராகமம் 36
27 . வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
பரிசுத்த வேதாகமம்

[2/9, 1:06 PM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 09/02/2017* 🔥
👉 தேவனுடைய பரிசுத்தம்,  மனிதர்களுடைய பரிசுத்தம்
இவைகளில் வித்தியாசம் உண்டா❓ ஆதார வேத வசனங்கள்❓
👉தேவனைப் போல, பரிசுத்தமாக மனிதன் தன்னை மாற்ற முடியுமா❓
👉பரிசுத்தமாவதற்க்கு நம்முடைய பங்கு மற்றும் தேவனுடைய பங்கு என்ன❓
                *வேத தியானம்*

[2/9, 1:16 PM] Jeyanti Pastor VT: பரிசுத்தமாவதற்கு நம் பங்கு அர்பணிப்பது, 
👆👆👆👆👆👆
மல்கியா 3:3  அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
4  அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.

[2/9, 1:17 PM] Jeyanti Pastor VT: மல்கியா 3:3 👆👆👆 தேவனுடைய காரியம்,

[2/9, 1:29 PM] Jeyachandren Isaac VT: 24 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
யூதா 1 :24

[2/9, 1:30 PM] Jeyachandren Isaac VT: 25 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
யூதா 1

[2/9, 1:31 PM] Jeyachandren Isaac VT: 1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
யூதா 1 :1

[2/9, 1:52 PM] Elango: 1 தீமோத்தேயு 4:8
[8] *சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது;*
 தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

[2/9, 2:09 PM] Jeyanti Pastor VT: 1 கொரிந்தியர் 6:11  உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

[2/9, 2:51 PM] Levi Bensam Pastor VT: 1 இராஜாக்கள் 11:1-13
[1]ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
[2]கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; *அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்;*👇👇👇👇👇👇👇👇👇👇 சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.
[3]அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; *அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.*
[4] *சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.*
[5] *சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[6] *சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.*
[7]அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.
[8] *இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நிய ஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்*.
[9]ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டு விசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட��

[2/9, 2:57 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 11: 41
உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் *சுத்தமாயிருக்கும்.*
Luke 11: 41
But rather give alms of such things as ye have; and, behold, all things are clean unto you.

[2/9, 3:04 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 16: 15
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; *மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.*
Luke 16: 15
And he said unto them, Ye are they which justify yourselves before men; but God knoweth your hearts: *for that which is highly esteemed among men is abomination in the sight of God.*

[2/9, 3:05 PM] Elango: கர்த்தருடைய நாமத்தில் வரவேற்க்கிறோம் லேவி பாஸ்டரை😀🙋♂💐🌷

[2/9, 3:06 PM] Levi Bensam Pastor VT: 😁😁😁😁👏👏👏👏

[2/9, 3:07 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 23: 19
மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
Matthew 23: 19
Ye fools and blind: for whether is greater, the gift, or the altar that sanctifieth the gift?

[2/9, 3:10 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 23:25-28
[25]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
[26]குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் *வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.*
[27]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[28]அப்படியே *நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.*

[2/9, 3:14 PM] Elango: ஆழமான இரகசியம் தான் ஆண்டவர் சொன்னது.
41 உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். *அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்*
லூக்கா நற்செய்தி 11 :41

[2/9, 4:47 PM] Jeyachandren Isaac VT: ✅💯வெள்ளையடிக்கப்பட்ட கல்லரைகள்👍
உண்மை✅👍

[2/9, 6:02 PM] JacobSatish VT: Praise the Lord....🙏🙏🙏

[2/9, 6:36 PM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 09/02/2017* 🔥
👉 தேவனுடைய பரிசுத்தம்,  மனிதர்களுடைய பரிசுத்தம்
இவைகளில் வித்தியாசம் உண்டா❓ ஆதார வேத வசனங்கள்❓
👉தேவனைப் போல, பரிசுத்தமாக மனிதன் தன்னை மாற்ற முடியுமா❓
👉பரிசுத்தமாவதற்க்கு நம்முடைய பங்கு மற்றும் தேவனுடைய பங்கு என்ன❓
                *வேத தியானம்*

[2/9, 7:33 PM] Thomas VT: நம்மை பரிசுத்தபடுத்துபவை →
1) வேத வசனம் - யோ 17-17
2) தேவனுடைய ஆவி - 1 கொரி 6-11
3) இயேசுவின் இரத்தம் - எபி 13-12
4) உபதேசம் - யோ 15-3
5) சிட்சை - எபி 12-10
6) தேவபயம் - ஏசா 8-13
7) சுத்திகரிப்பு - 2 தீமோ 2-21
8) பலிபிடத்தை தொடுவதால் (பலிபிடம் = ஜெபம், பரிசுத்தம்) - யாத் 30-29
9) தேவனுக்கு அடிமை ஆவதால் - ரோ 6-22
10) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகுவதால் - அப் 2-40

[2/9, 7:33 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 119:9,11
[9]வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்?❓ ❓ ❓ ❓ ❓ ❓ *உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே*.
[11]நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.🙋🙋🙋🙋🙋

[2/9, 7:34 PM] Thomas VT: நம்மை பரிசுத்தபடுத்துபவை →
1) வேத வசனம் - யோ 17-17
2) தேவனுடைய ஆவி - 1 கொரி 6-11
3) இயேசுவின் இரத்தம் - எபி 13-12
4) உபதேசம் - யோ 15-3
5) சிட்சை - எபி 12-10
6) தேவபயம் - ஏசா 8-13
7) சுத்திகரிப்பு - 2 தீமோ 2-21
8) பலிபிடத்தை தொடுவதால் (பலிபிடம் = ஜெபம், ஆராதனை) - யாத் 30-29
9) தேவனுக்கு அடிமை ஆவதால் - ரோ 6-22
10) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகுவதால் - அப் 2-40

[2/9, 7:34 PM] JacobSatish VT: நீண்ட இடைவெளிக்கு பிறகு லேவி ஐயா🙏🙏

[2/9, 7:39 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 19: 9
*கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும்,* என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.
Psalm 19: 9
The fear of the LORD is clean, enduring for ever: the judgments of the LORD are true and righteous altogether.

[2/9, 7:41 PM] JacobSatish VT: 15 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
1 பேதுரு 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/9, 7:44 PM] Thomas VT: பரிசுத்தம் எங்கெல்லாம் →
1) நமது அவயங்களில் எல்லாம் பரிசுத்தம் - 1 தெச 5-23
2) குடும்பத்தில் பரிசுத்தம் - 1 தீமோ 2-8
3) சபையில் பரிசுத்தம் - 1 தெச 2-10
4) தேசத்தில் (மற்றவர்கள் முன்னால்) - பிலி 2-15

[2/9, 7:47 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 4: 8
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் *பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்* என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல்👍👍👍👍👍 சொல்லிக்கொண்டிருந்தன.
Revelation 4: 8
And the four beasts had each of them six wings about him; and they were full of eyes within: and they rest not day and night, saying, Holy, holy, holy, Lord God Almighty, which was, and is, and is to come.

[2/9, 7:53 PM] Levi Bensam Pastor VT: 2 பேதுரு 3:10-13
[10]கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.
[11]இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் *நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!*????????
[12]தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.
[13]அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

[2/9, 7:54 PM] Levi Bensam Pastor VT: 2 பேதுரு 3:14☝☝☝☝☝☝☝☝☝👁👁👁
[14]ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் *கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝

[2/9, 8:08 PM] Apostle Kirubakaran VT: யூதா 1:23-25
[23]மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
[24]வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
[25]தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

[2/9, 8:08 PM] Apostle Kirubakaran VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:11
[11]அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

[2/9, 8:09 PM] Apostle Kirubakaran VT: உபாகமம் 23:14
[14]உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது.

[2/9, 8:14 PM] Levi Bensam Pastor VT: . 2 இராஜாக்கள் 4:8-17
[8]பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.
[9], *அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.*👁👁👁👁👍👍👍👍👍👍👍👍👍🙋
[10]நாம் மெத்தையின்மேல் ஒருசிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
[11]ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறை வீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.
[12]அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.
[13]அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.
[14]அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.
[15]அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.
[16]அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒருகுமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டா�

[2/9, 8:27 PM] Thomas VT: *நமது பரிசுத்தத்தை கெடுக்கும் காரியங்கள் என்னென்ன  ?*

[2/9, 8:33 PM] Elango: 💥 நம்முடைய பழைய மனுஷன் தான், சுயம்.
எபேசியர் 4:21-24
[21]இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
*[22]அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,*
[23]உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
[24]மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

[2/9, 9:01 PM] Glory Joseph UP: 6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது,கர்த்தர் அவனுக்குச்சொப்பனங்களினாலாவது ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுஉத்தரவு அருளவில்லை.
1 சாமுவேல் 28 :6
Ithil ulla  OORIMINALAVATHU meaning enna pls sollunga

[2/9, 9:02 PM] Glory Joseph UP: OORIMINALAVATHUEMEANING

[2/9, 9:02 PM] Glory Joseph UP: Ooriminalavathu  meaning

[2/9, 9:06 PM] Elango: வாழ்க்கையில ஒரே தரம் தான் வாழப்போகிறோம்.
இந்த மாயமான உலகத்தில பரிசுத்தமாக வாழ ஆண்டவர் நமக்கு உதவுவாராக!
நாமும் பரிசுத்தமில்லாத காரியங்களை விட்டு ஓடுவோம்.
2 இராஜாக்கள் 4:8-10
[8]பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.
[9]அவள் தன் புருஷனை நோக்கி: *இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.*
[10]நாம் மெத்தையின்மேல் ஒருசிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
*சூனேம், எலிசாவை  பார்த்து பரிசுத்தவானாக காண்கிறேன் என்கிறாள்.* எலிசா எப்படிப்பட்ட உருவத்தில் இருந்தாரோ தெரியாது ஆனால் அவரை காணும் போது குழுந்தையில்லாத அந்த சூனேம் அவரை பரிசுத்தவானாக கண்டாள்.
இன்றைக்கும் எத்தனையோ ஊழியக்காரங்க,   பரிசுத்தவான்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய இருதயம் கள்ளனுடைய குகையைப் போல்,  கள்ளனுடைய கூடாரம், பிசாசுனுடைய பார்லிமெண்ட் போல் அல்லவா இருக்கிறது.
நிச்சயமாகவே நம்மை யாரென்று கர்த்தர் அறிவார்.
அப்படி எலிசாவுக்கு கிடைத்த பாக்கியம் நமக்கு கிடைக்குமா என்று சிந்தித்து பாருங்கள்.
நாம் யார்? தன்னை தானே சோதித்துப் பாருங்கள்.
நம் ஊழியத்தை, பணத்தை, பிள்ளைகளை, புருஷன், மனைவி, எல்லாவற்றைக் காட்டிலும் இயேசு பெரியவர்.
ஆனால் அநேகருடைய வாழ்க்கை கெட்டுப் போய் கிடக்கிறது இந்த கடைசிக் காலத்தில்.
வெளியில் ஒரு பரிசுத்தம், உள்ளே சொல்லவே முடியாத நிலைமை.
எல்லாப் பாவத்தையும் செய்துக்கொண்டும், எல்லாப் பழக்கத்தையும் வைத்துக்கொண்டும் வேதாகமத்தை வெட்கமில்லாமல், கூச்சமில்லாமல்  தூக்கிக்கொண்டு பிரசங்கிக்கிறார்கள்.
தேவையென்றால் மந்திரவாதியிடம் சென்று அற்புதம் நடக்க வேண்டும் என்றும் ஒரு கூட்டம் உண்டு.
மனுஷர் நம்மை என்ன சொன்னாலும் கவலையில்லை ஆனால் ஆண்டவர் நம்மைக் குறித்து என்ன யோசிப்பார் என்று உண்மையாக  வாழ்ந்தால்,  ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பார்.
பிரசங்கி 10:1
[1 ] *செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்;* ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
சில செத்த ஈக்களால் தான் ஆண்டவருடைய நாமம் தூசிக்கப்படுகிறது.
அந்தரங்கத்தில் பாவம் செய்கிற மனுஷன் திடிரென்று விபத்தில் இறந்துவிட்டால் மக்கள் அவரை பரிசுத்தவான் எப்படி இறந்தார் என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த விபத்தில் இறந்தவர்க்கே தெரியும்.
தாவீதின் பிள்ளையை ஆண்டவர் அடித்தபோது, வெளியே மக்கள் ஏன் தாவீது போன்ற பரிசுத்தவானுக்கு இப்படி நடக்கவேண்டும் என்று புலம்புவார்கள் ஆனால் தாவீதின் அந்தரங்க பாவத்தினால் வந்தது என்று அவன் அறிவான்.
*ஆண்டவருடைய நாமம் தூசிக்கப்படும்படியாக நாம் வாழக்கூடாது.*
- பாஸ்டர் லேவி

[2/9, 9:06 PM] Kenosis VT: Urim Thumim enbathu asaariyargal theva sithathai arinthu kolla payan paduthiyathu..

[2/9, 9:14 PM] Elango: 👍👍
யாத்திராகமம் 28:30
[30]நியாயவிதி மார்ப்பதக்கத்திலே *ஊரீம் தும்மீம்* என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.

[2/9, 9:16 PM] JacobSatish VT: சில ஜோசியர்கள் சோழிகளை உருட்டி சொல்வ்ர்களே அதுவோ

[2/9, 9:18 PM] JacobSatish VT: சொல்லுங்க ஐயா

[2/9, 9:22 PM] JacobSatish VT: http://paralogapathi.blogspot.in/2014/03/1-286.html?m=1

[2/9, 9:26 PM] Tamilmani Ayya VT: *தேவன் பரிசுத்தத்தில் முழுமை*
*கர்த்தர் நிற்கிற இடமே பரிசுத்தம்! !*
கர்த்தர்:  இங்கே கிட்டிச்சேராயாக. உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. *நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி* என்றார்.
(யாத்திராகமம் 3:5)
நாம் அவர் முன்னால் நிற்கிற பாக்கியவான், அவரோ நித்ய பரிசுத்தர்.
இயேசு பரிசுத்தமாக வாழ்ந்து காட்டினார்.
ஊழியத்தில்
1. ஆவியிலே பரிசுத்தம்
ஆத்மாவில் பரிசுத்தம்
சரீரரத்தில் பரிசுத்தம் வேண்டும்.
No boundary! 
ஏனென்றால் நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தமாக இருங்கள். இதற்க்கும் எல்லையில்லை. பரிசுத்தமாயிருக்கிறவன் இன்னும் பரிசுத்தமாயிருக்கட்டடும் என்றுதான் வேதம் சொல்லுகிறது. பரிசுத்தத்தில்
ஜெபிக்கலாம். தேவன் முன்னால் நிற்கலாம். தேவனை  தரிசிக்கலாம்.  தேவனோடு பேசலாம். ஊழியம் இவை இல்லாமல் செய்யலாம்.
ஊழியர்களுக்கு தேவை
1. பரிசுத்தம் - சாத்தான் நடுங்குவான்.  இல்லையேல் தியானத்தில் பொய் வெளிப்பாடுகளை தருவான்.
2. ஆவியிலே பரிசுத்தம்
 நாம் தீர்மானம் செய்ய வேண்டும். ஏனென்றால் அது வெளியரங்கமானதல்ல.
பாத்திரத்தின்  உட்பகுதி ஆவி. சுத்தமாக இருக்க வேண்டும். தங்களை தாங்களே பரிசுத்தம் பண்ணுதுல் கூடாது. அது வெளியரங்கம்.
 (ஏசாயா  66:17)
3. ஆவி முறியக்கூடாது. ஆவி பலவீனங்களை தாங்கும்.
சாத்தான் நம் பலவீனங்களை தாங்க முடியாத நிலையில் துக்கம் வரும்போது உள்ளே வந்து விடுவான். ஆவி அவ்வளவு சீக்கிரம் முறியாது. *இயேசு கிறிஸ்துவானர் சாத்தான் நமக்குள்ளே நுழைய நமக்கு  விதிக்கவில்லை.*

[2/9, 9:31 PM] Elango: *பரிசுத்தத்தில் நம்முடைய பங்கு என்ன என்பதை சொல்கிறேன். அதோடு தேவனுடைய பங்கைக் குறித்தும் நாம் சிந்திப்போம்*
பரிசுத்தத்தை நாம் காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக்கொள்வதனால்தான், தேவகிருபையினால் அநேக பாவங்களுக்கு நம்மை விலக்கி பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கர்த்தருடைய வசனம் நமக்கு கேடகமாக, இரட்சண்ய சந்தோஷமாக, தேவனுடைய கிருபையாக இருக்கிறது.
*பரிசுத்த ஆவியானவரின் உதவியில்லாமல் நாம் ஒரு நிமிடமும் பரிசுத்தமாக ஜீவிக்க முடியாது.*
அதே நேரத்தில் நாமும் பரிசுத்த ஆவியானவர் சத்தத்திற்க்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது பாவத்தை நாம் ஈசியாக ஜெயிக்கலாம்.
பாவத்துக்கு விரோதமாக இரத்தம் சிந்தும் அளவுக்கு நாம் போராட வேண்டிய அவசியமில்லை.
ஆண்டவரை முன்னே வைத்துக்கொண்டு, ஆண்டவர் வேண்டாமென்றும், வெறுக்க வேண்டியதென்றும் சொல்லும் காரியங்களை மட்டும் விட்டாலே போதும் -  கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
- பாஸ்டர் லேவி.

[2/9, 9:34 PM] Sam Jebadurai Pastor VT: அவை ஆசாரியன் மார்பில் உள்ள ஒளிரும் கற்கள்

[2/9, 10:07 PM] Elango: 1 பேதுரு 1:15-16
*[15]உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.*
[16]நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
தேவன் நமக்காக செய்ய வேண்டிய  காரியங்களை அவர் செய்கிறார், நாமும் நம் நடக்கை எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமாம்.
நம்முடைய அனுதின.வாழ்க்கையில் காலையிலிருந்து, மாலைவரை நம் நடக்கையில் எப்படியிருந்தோம் என்பதை ஆராய வேண்டும்.
யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் ஏறுவான் என்ற வசனத்தை நாம் பார்க்க வேண்டும்.
ஏசாயா 6:3-5
[3]ஒருவரையொருவர் நோக்கி: *சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது* என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
[4]கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.
[5] *அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்;*
 சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
1 கொரிந்தியர் 6:9-10
[9]அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
[10]திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் *தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.*
என்கிறது வேத வசனம்.
நம்முடைய நடக்கைகளில் நம்முடைய பரிசுத்தம் அவசியம்.
நம்முடைய சரீரத்தில் பல ஆசைகள் உண்டு. ஆனால் அப்படி ஆசைகள் இல்லையென்றால் அவன் மனுஷனே இல்லை.
கலாத்தியர் 5:24
[24]கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
தேவன் நம்முடைய குடும்ப வாழ்க்கைக்காக அநேக கிருபைகளை கொடுத்திருக்கிறார். அதையே நாம் தவறாக பயன்படுத்தும் போது நம்முடைய நடத்தையில் தவறிவிடுகிறோம். பரிசுத்தத்தை இழந்து விடுகிறோம்.
யாக்கோபு 1:14-15
[14]அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
*[15]பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.*
பரிசுத்த ஜுவியம் என்பது பரிசுத்தத்தோடு கலங்கமில்லாமல் வாழும் வாழ்க்கை.
2 கொரிந்தியர் 11:2
[2]நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
- பாஸ்டர் லேவி

[2/10, 5:41 AM] Thomas VT: *பரிசுத்தத்தை கெடுக்கும் காரியங்கள் →*
1) மற்றவர்கள் பேசும் பேச்சு (மற்றவர்கள் உடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்) - சங் 39-1
2) சமாதானக் கேடு - எபி 12-14
3) நமது அலங்காரம் - உபா 22-5
4) சிந்தனை - ரோ 1-21
5) நாம் பேசும் தேவையற்ற வார்த்தைகள் - யாக் 3-6
6) கண்களின் இச்சை - லூக் 11-34
7)  உலகம் - யாக் 1-27
8) பெருந்திண்டி (அதிகமாக சாப்பிடுவது, எப்போதும் சாப்பிட்டு கொண்டே இருத்தல்) -  லூக் 21-34
9) கசப்பு - எபி 12-15
10) இருதயத்தில் இருந்து புறப்படும் கெட்ட காரியங்கள் - மாற் 7:21,22
11) மாம்சத்தின் கிரியைகள் - கலா 5:19-21
12) துர்க்குணம் - 1 பேது 2:2-3
13) கபடம் - 1 பேது 2:2-3
14) வஞ்சனை - 1 பேது 2:2-3
15) பொறாமை - 1 பேது 2:2-3
16) புறங்கூறுதல் - 1 பேது 2:2-3
17) உலக கவலை - மத் 13-22
18) ஜசுவரியத்தின் மயக்கம் - மத் 13-22
19) சிற்றின்பம் - லூக் 8-14

Post a Comment

0 Comments