Type Here to Get Search Results !

வாட்ஸ்அப்/ பேஸ்புக் ஊழியம் பிசாசா❓

[11/15, 8:52 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 15/11/2016* ✝
👉 மொபையில் போனில் வேதத்தை வைத்துக்கொண்டு  பிரசங்கிக்கலாமா❓ அல்லது வேத புத்தகம் வைத்து தான் பிரசங்கிக்க வேண்டுமா❓

👉 வாட்ஸ்அப்/ பேஸ்புக் ஊழியம் பிசாசா❓

👉 ஓரு தேவ செய்திக்காக இணையதளத்தை நாடுவது 
சரியா❓தவறா❓

*வேதத்தை தியானிப்போம்*


[11/15, 9:16 AM] Benjamin VT: வாட்ஸ் ஆப் /பேஸ்புக் ஊழியம் என்பது என்ன ❓

[11/15, 9:23 AM] Benjamin VT: தேவ செய்திக்கு கர்த்தரை தான் நாட வேண்டுமே தவிர இணையதளத்தை நாடக்கூடாது.
கர்த்தரை நாடினால் மட்டுமே அந்த தேவ செய்தி பலன் தரும்.
இணையதளத்தில் இருந்து குறிப்புகளை (Notes) எடுக்க கர்த்தர் வழிநடத்தினால் தவறில்லை......

[11/15, 9:41 AM] Manimozhi Ayya VT: இணைய தளத்தில் இருந்து வந்த கருத்து தவறா

[11/15, 9:42 AM] Manimozhi Ayya VT: இணைய தளத்தில் பதிவிடுபவர்களும் தேவ மனிதர்கள் தானே

[11/15, 9:45 AM] Benjamin VT: போதகர்கள் ஏன் மொபைல் போனில் உள்ள பைபிள் கொண்டு போதிக்க வேண்டும்.
ஏன் தேவையற்ற சர்ச்சை.
வேதப்புத்தகத்தை வைத்து பிரசங்கிப்பது கடினமான காரியமா ❓இல்லை. *எளிதான காரியம் தானே*.
*அப்படியிருக்க வேதப்புத்தகத்தை கொண்டு பிரசங்கிக்கலாம்*.
▶நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் *இடறலற்றவர்களாயிருங்கள்*.
1 கொரிந்தியர் 10:33 தமிழ்
http://bible.com/339/1co.10.33.தமிழ்

[11/15, 9:59 AM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 1:21
[21]எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

[11/15, 10:20 AM] JacobSatish VT: புரியலை..நீங்க இப்ப வாடஸ்அப்ல இந்த குரூபல இருக்கறதும் இணையத்துலதானே🤔🤔🙁🤔

[11/15, 10:26 AM] Benjamin VT: ஊழியம் செய்பவர்கள் பற்றி கூறியுள்ளேன் பிரதர்

[11/15, 10:32 AM] Benjamin VT: பாஸ்டர் நீங்கள் பிரசங்கிக்க மொபைல் போனில் உள்ள பைபிள் பயன்படுத்துவது சபையாருக்கு இடறல் உண்டாக்காமல் இருந்தால் சரி......

[11/15, 10:33 AM] Jeyachandren Isaac Whatsapp: சுயஞானம் தேவை இல்லை✅👍

[11/15, 10:40 AM] Elango: *முகநூல், ஊழியம் மற்றும் எந்த சமூக வளைத்தளங்களையும் தேவ நாமத்திற்க்காக பயன்படுத்தினால் தவறில்லை. நாமும் அதற்க்கு அடிமையாகி விடக்கூடாது.*
இந்த சமூக வலைத்தளம் ஊழியத்தின் மூலம் இயேசுவை புதிதாக அறிந்துகொண்ட சில ஆத்துமாக்களுக்கு வேதாகமத்தையும் அனுப்பியதுண்டு.

[11/15, 10:43 AM] Elango: டெக்னாலாஜியை நம்முடைய அனுதின வாழ்வில் தவிர்க்கவே முடியாது, சபையிலும் தவிர்க்கமுடியாது.
அப்படி தவிர்க்க தீர்மானித்தால் மைக், மியுசிக்கை உபயோகித்தல் கூட தவறுதான்.

[11/15, 10:46 AM] Tamilmani VT: _சமூக வலைதளங்களை எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கே என பயன்படுத்துபோது அது நாம் சொல்ல அது வேலை செய்கிறது. மாற்றிச்செய்தால் அதன் கையில் நாம் அகப்படுவது உறுதி!!_

[11/15, 10:50 AM] Tamilmani VT: *எல்லாவற்றிலும் ஆவியே மேலோங்கி இருக்க மாம்சத்தை கீழ்படுத்துவதே  கிறிஸ்தவனின் பாணி!!*
[11/15, 10:53 AM] Benjamin VT: வாட்ஸ் ஆப் /பேஸ்புக் ஊழியம் கிறிஸ்தவர்களுக்கு ஊழியம் செய்ய உகந்தது.
ஆனால் மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய உகந்ததா? என்றால் கேள்வி குறி தான்

[11/15, 10:54 AM] Elango: சமூக வலைதளங்கள் மூலம் நான் பல நன்மைகளை பெற்றுயிருக்கிறேன், பல தேவ காரியங்களை செய்துவருகிறேன்.
✅பாவத்தில் விழுந்தவர்களை தேவ கிருபையால் ஆலோசனை தந்து பலப்படுத்திய துண்டு.
✅அநேக தேவ சத்தியங்களை கற்றதுண்டு.
✅வேதாகமும் , ஆவிக்குரிய புத்தகங்களை சில ஆத்துமாக்களுக்கு அனுப்பியதுண்டு.
✅ கிடியோன் ஊழியத்தை தொடங்க உற்சாக பட்டதும் இங்கே தான்.
✅ ஆவிக்குரிய சபைக்கு செல்ல ஆரம்பித்ததும் சமூகவலை தளத்தில் உள்ள தேவ மனிதர்கள் மூலமாகதான்.
✅பிரிந்த தேவ மனிதர்களை இணைத்ததுண்டு.
✅ என் சுயத்தை தோலுரித்துக்காட்டியதும் இந்த சமூகவலைத்தளம் தான்.என்னை தேவ சுபாவத்தால் மீண்டும் பிணைத்ததும் தேவ அன்பால்தான்.
*எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.1 கொரிந்தியர் 6:12*

[11/15, 11:04 AM] Elango: டெக்லாஜியை எதிர்க்கும் என்ற நோக்கம் கொஞ்சம் கூட நம் மனதில் இருக்கக்கூடாது. நாம் அதற்க்கு அடிமை படுவது தான் தவறு.
ஆரம்பத்தில் இயேசுவை அறிந்த புதிதில், சபைக்கு போகிறதில்லை.
இந்த தளத்தில் தான் சத்தியங்களை படித்துக்கொண்டிருப்பேன்.
*http://answers.yahoo.com* இந்த தளத்தில் ஒரு அமெரிக்கா அப்போஸ்தலர் எனக்கு அருமையாக சத்தியத்தை கடிந்து கொண்டு போதித்தார், இன்றும் என் முகநூல் பக்கத்தில் சத்தியங்களை போதிப்பவராயிருக்கிறார்.
ஆரம்பத்தில் கூகுளில் அநேக காரியங்களை சமூக வலைத்தளத்தில் அநேக காரியங்களை கற்றுக்கொள்ள உதவி செய்தார் தேவன்.

[11/15, 11:07 AM] Elango: *சமூகவலைத்தளங்களில் அடிமையாகிறவர்களும் உண்டு*
💥வீட்டில் - இஞ்சி தின்ற குரங்காய் இருப்போம்;
முகநூலில் - கொஞ்சி குலாவி சிரிப்போம்!!!
💥நேரில் பார்த்தால் சிடுமூஞ்சி;
சாட்டில் பேசுகையில் ஒரே ஸ்மைலி!!!
💥இண்டர்நெட்டில் ஞானிபோல பிரசங்கம்;
சொந்தகுடும்பத்தில் தீராத பிரச்சனையில் புலம்புவோம்!!!
💥பக்கத்துவீட்டில் வாழ்பவர்களை சுயநலமாய் பார்ப்போம்;
வாட்ஸ்அப்பில் முகந்தெரியா நபரிடம் சுகநலம் விசாரிப்போம்!!!
💥விபத்து தனக்கு வந்தால் படபடத்துப் போவோம்;
ஆபத்து பிறருக்கு என்றால் படமெடுத்து அனுப்புவோம்!!!
💥உண்மை ஸ்டேட்டஸ பார்த்தா நாள்தோறும் மாசகடைசி;
ஒட்டுன ப்ரோபைல்  போட்டோவை பார்த்தால் நானொரு இலட்சாதிபதி!!!
*உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2 :17*‼
*சமூகவலைத்தளங்களில் அடிமையாகிறவர்களும் உண்டு*

[11/15, 11:12 AM] Tamilmani VT: 3 வாரங்களுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு சகோதரி என்னிடம் Chat ல்  பாஸ்டர்கள் பொருளாதாரத்தில் சிரமப்படுவதால் நாங்கள் Online business கொடுக்கிறோம். என் கணவர் இப்போதும் மதுரையில் இருக்கிறார். இது நாங்கள் கஷ்டத்தில் இருந்தபோது கர்த்தர் இந்த வழியைக்காட்டினார் என உருக்கமாக பேசினார்.
நான் சொன்னேன், சகோதரி உங்களுக்கு கர்த்தர் காட்டின கிருபைக்கு நன்றி சொல்லுகிறேன், இன்னும் நீங்கள் வளர ஜெபிக்கிறேன். ஆனால் தயவு செய்து பாஸ்டர்மார்களை இந்த தொழிலில் புகுத்தாதீர்கள், அவர்கள் முழுநேர ஊழியக்காரர்கள், கர்த்தருக்கென்றே ஊழியம் செய்கிறவர்கள், விசுவாசிகளுக்கு Job யை கொடுங்கள் என்றேன். நான் விசுவாசிதான், ஆனால் என்னால் செய்ய முடியாத நிலை என்றேன்.  அவர்களுக்கு ஷாக். புரிய வைத்தேன். சரி என ஏதோ தலையாட்டினார்கள். பாஸ்டர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்.

[11/15, 11:15 AM] Manimozhi Ayya VT: Brother
நீங்க தான் அப்படி
எல்லாரும் அல்ல

[11/15, 11:35 AM] Elango: உண்மையை ஒத்துக்கொள்வதில் ஏன் தயக்கம் ஐயா😀😀

37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
மத்தேயு 5
Shared from Tamil Bible

[11/15, 1:26 PM] Tamilmani VT: _Presence of God is Heaven_

[11/15, 1:28 PM] Tamilmani VT: பலர் வீடுகளிலும் - அறைகளிலும்  கூடுகையிலும் தேவ பிரசன்னத்தை  காண்கின்றனர்.

[11/15, 1:30 PM] JacobSatish VT: அதனால சபைகூடுதல் வேண்டாம் என்கிறீர்களா

[11/15, 1:36 PM] Levi Bensam Pastor VT: ஐசக் ஐயாவை காண்பது அரிதாகவே இருக்கிறது 😃🙏

[11/15, 1:44 PM] Levi Bensam Pastor VT: *Thank you Aya, நல்ல ஆலோசனை* 🙏🙏🙏🙏

[11/15, 1:51 PM] Levi Bensam Pastor VT: *தேவ சித்தம் நடக்கட்டும், அருமையான ஆலோசனை*👍👍👍👍

[11/15, 2:02 PM] Levi Bensam Pastor VT: *எச்சரிக்கை ‼❌❌‼ஆனாலும் ஞானத்தோடு உபயோகப்படுத்தலாம்*☝☝☝☝☝☝☝☝☝☝☝☝

[11/15, 2:05 PM] Jeyanti Pastor: Mm.  Pastor

[11/15, 2:10 PM] Elango: சபைக்கு கண்டிப்பாக போனும் ப்ரதர்.
*டிவிய நெட்ட பார்த்து சண்டே ஆராதனை செய்வது சரியில்லை ப்ரதர்*
25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10
Shared from Tamil Bible

[11/15, 2:22 PM] Elango: அருமையான சாட்சி அம்மா.👍🙏👏
எனக்கு கம்யூட்டரில் 40 வரை நல்ல ஸ்பீடு, ஆங்கிலத்தில் 50 வரை வரும்.

*அடிமைப்படாத வரை பிரச்சனையில்லை*

[11/15, 2:29 PM] Elango: ஆமென்👍🙏👏
் கண்டிப்பாக சபை கூடிவருவதை விட்டுவிடக்கூடாது

[11/15, 2:40 PM] Apostle Kirubakaran VT: நான் அடிக்கடி வர முடியாது( வெளிப்படுத்தல் குழுவை ஆரம்பித்ததினால்) இக்குழுவில் நேரம் கிடைக்கும் போது வருவேன்.....
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

[11/15, 2:48 PM] Apostle Kirubakaran VT: மண்ணியுங்கள் எங்கள் yb
ஐயா

[11/15, 2:49 PM] JacobSatish VT: இதுல கடுகளவும் கருணை கூடாது.சபைக்கு கண்டிப்பா போகனும்

[11/15, 2:53 PM] JacobSatish VT: தேவையில லாத காரியங்கள வேண டாம் பாஸ டர்🙏

[11/15, 2:56 PM] YB Johnpeter Pastor VT: நான் அடிக்கடி வர முடியாது( Happiness in Christ 2 குழுவை ஆரம்பித்ததினால்) இக்குழுவில் நேரம் கிடைக்கும் போது வருவேன்.....
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

[11/15, 2:59 PM] JacobSatish VT: டிரெய்ன்ல இருக்கேன் அதான் வாய்ஸ் சரியா கேக்கல🙏

[11/15, 3:12 PM] Apostle Kirubakaran VT: ஐயா வேண்டாம் இருங்க இந்த குழுவில்

[11/15, 3:34 PM] Elango: சகிப்புத்தன்மையை அதிகப்படுத்தும் படியாக ஒருநாள் தியானிப்போம்.
குழுவை விட்டு வெளியேறுவதை தவிர்க்கலாம்.🙏😀
சகிப்போம் எல்லாவற்றையும்
சுதந்தரிப்போம்
நமக்கானவயை யாவையும்

2 *அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.*
எபிரேயர் 12
Shared from Tamil Bible

[11/15, 3:51 PM] Charles Pastor VT: சன்டை எல்லாம் குழுவில் சாதாரனமப்பா..... கூல்... கூல்....

[11/15, 3:52 PM] Elango: *சண்டை இல்லாத உறவுகளா*
*சண்டே இல்லாத வாரங்களா*
Take it easy😂😂😂

[11/15, 3:57 PM] Charles Pastor VT: செம பன்ச் 👊👊

[11/15, 4:00 PM] Charles Pastor VT: இதல ஒய்.பி. ஐயா இல்லாம குழுவா.. னு சேருங்க இருக்கும் இன்னும் சிறப்பு

[11/15, 5:15 PM] Kumar VT: மொபைல் போனில் வைத்து பேசகூடாது என்பது என் கருத்து.

[11/15, 5:32 PM] Kumar VT: பைபிள் இல்லாமல் சர்ச்க்கு போனால் எப்படி இருக்கும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.... 🙏 🙏

[11/15, 5:54 PM] Kumar VT: சில நேரங்களில் நாம் மொபைலில் வேதத்தை படிக்கும் போது தேவையில்லாத விளம்பரங்கள் வந்து கொண்டுருக்கும்.... மேலும் சில வாரத்தைகளும் விடுபட்டு இருக்கிறது...

[11/15, 5:58 PM] Kumar VT: மொபைலில் படிக்கும் போது ஏதோ ஒரு புத்தகம் போலத்தான் தோன்றுகிறது...

[11/15, 5:59 PM] Kumar VT: வீட்டில் வேததிற்கு என்று ஒரு இடம் ஒதுக்கிருப்போம் ஆனால் மொபைலில்...

[11/15, 6:13 PM] JacobSatish VT: இதுக்குதான் குமார்பிரதர் வேணும்👏👏👆👆👆

[11/15, 6:31 PM] Charles Pastor VT: யோவா 5:22 இதை யாராவது உங்க மொபைல் பைபிள் ஆப்பிலிருந்து பதிவிடுங்கள்

[11/15, 6:33 PM] JacobSatish VT: 22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
யோவான் 5 :22

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/15, 6:34 PM] Charles Pastor VT: ஒருவர் கையிலுள்ள வேத புத்தகத்திலிருந்து அந்த வசனத்தை எழுதி அனுப்புங்களேன்

[11/15, 6:46 PM] Charles Pastor VT: வேறொரு தமிழ் பைபிள் ஆப் இருந்தாலும் அதிலிருந்தும் இந்த வசனத்தை பதிவிடுங்கள்

[11/15, 6:47 PM] Charles Pastor VT: காரணம் 1

[11/15, 6:49 PM] Charles Pastor VT: சில ஆன்ராய்ட் ஆபில் “குமாரனையும் கனம் பன்னும்படிக்கு” என்ற வார்த்தையை எடுத்து விட்டு வேறொரு வார்த்தை எழுதபட்டிருக்கும்.

[11/15, 6:49 PM] Charles Pastor VT: காரணம் 2

[11/15, 6:52 PM] Charles Pastor VT: நான் சொன்னவுடன் அதில் என்ன இருக்கிறது என தெரியாமலே பதிவிட்டாயிற்று. புத்தகத்திலிருந்து படித்து எழுதுங்கள் என்றதும் போட்டோ எடுத்து அனுப்பியாயிற்று. இது எதை காட்டுகிறது...?

[11/15, 6:58 PM] Elango: வாட்ஸ்அப் ஊழியத்தை VMM, VVM மற்றும் சில ஊழியங்களும் அருமையாக செய்கின்றனர் கர்த்தர் கிருபையால்.
வாட்ஸ்அப் ஊழியம் பிசாசு அல்ல.

[11/15, 6:59 PM] JacobSatish VT: நான் டிரெய்ன்ல போறேன்.டைப் பண்ண கஸ்டமா இருக்குனு காட்டுது

[11/15, 6:59 PM] Charles Pastor VT: ஒரு வசனத்தை அனுப்ப மொபைல் பயன்பாட்டில் “தேடு” என்ற இடத்தில் வார்த்தை  எழுதி உடனடியாக அனுப்பிவிடுகிறோம் அந்த வசனத்தை படிக்காமலேயே. ஆனால் ஒருவர் வேதாகமத்தை பயன்படுத்தினால் படிக்காமல் எழுதவே முடியாது. ஆக மொபைல் பயன்பாடு அடுத்தவர் படிக்கவே அதிகமாக பயன்படுகிறது. ஆனால் வேத புத்தகம் உன்னை படிக்க வைக்க பயன்படுகிறது. அடுத்தவர் படிப்பதால் நமக்கென்ன பலன்? நாம் படித்தால் தானே ஜீவன் உண்டாகும்.

[11/15, 7:01 PM] JacobSatish VT: உண்மையான ஊழியம் எதுல வேனாலும் செய்யலாம்

[11/15, 7:03 PM] Elango: *கர்த்தருக்காக அவருடைய  சமூகத்தில் அமர்ந்து ஜெபித்து, செய்யும் எந்த ஊழியமும் கர்த்தருடைய ஊழியம்.*
அது பிசாசுக்கு செய்யும் ஊழியமல்ல.‼
அழியும் ஆத்துமாக்களை கரைசேர்க்கும் ஊழியம், பிறரை கரை சேர்க்க பிரயாசப்படும் நாம் கவனமாக தேவ நடத்துதலில் இல்லாவிட்டால் விழுந்து போவோம்.
பிறகு நம்மை கரைசேர்க்க வேறு ஒருவர் தேவைப்படலாம்😀😀

[11/15, 7:05 PM] JacobSatish VT: எதையும் தேவனுக்கு என்று செய்தாலும் பிரச்சனை இல்லை

[11/15, 7:05 PM] Kumar VT: தெரியாம தேடமுடியுமா ஐயா....

[11/15, 7:06 PM] Elango: 🙏👍👏

24 *எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.*
கொலோசெயர் 3
Shared from Tamil Bible

[11/15, 7:09 PM] Elango: தெரிந்துதான் தேடுறோம்
ஆனா
படிக்காம போடுறோம்😀😀

[11/15, 7:10 PM] Kumar VT: படிக்காத யாரும் அனுப்பவில்லை ஐயா...  🙏எ.கா.  தாவீது என்று தேடுவோம் என்றால் நாம் நினைக்கின்ற வசனம் வருவதில்லை நிறையவே வருகிறது நாம் தான் படித்து அனுப்புகிறோம் 🙏👇

[11/15, 7:11 PM] Kumar VT: ஏன் பிரதர் உங்களுக்கு பைபிள் வசனம் கண்ணை மறைத்திடுமோ....

[11/15, 7:12 PM] Elango: *வாட்ஸ்அப், முகநூல் ஊழியம் செய்கிறோம் என்று தேவன் நமக்கு கொடுத்த ஊழியத்திலிருந்து விலகிவிடாமல் இருப்போம்.*

[11/15, 7:14 PM] Elango: 👍🙏👏
ஞாயிறு அன்று போனை சுவிட்செய்வது நல்லது அல்லது ஸைலண்ட் பண்ணுவது நல்லது.

[11/15, 7:17 PM] Elango: பனைமரத்தின் அடியில் நின்று பாலைக்குடித்தாலும் பார்க்கிறவருக்கு கள் குடிப்பது போல் தோன்றலாம்.
ஆதலால் எங்கும் வேதாகமே சிறந்தது.
4 *அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.பிலிப்பியர் 2:4*

[11/15, 7:18 PM] Charles Pastor VT: நீங்கள் படித்து தான் போடுகிறோம் என்றால் நல்லதே.

[11/15, 7:18 PM] JacobSatish VT: இன்னைக்கு பெரும்பாலும் ஊழியர்கள வசனம் ரெப்ரென்ஸ் மொபைல் ஆப்லதான் எடுக்கறாங்க

[11/15, 7:19 PM] Kumar VT: எல்லோரும்... தான் ஐயா..

[11/15, 7:19 PM] Charles Pastor VT: மொபை நிரந்தர மற்றது வேத புத்தகம் நிறந்தரமானது.

[11/15, 7:21 PM] Charles Pastor VT: மின் சக்தி இல்லை, கீழை விழுந்து தொடுதிரை இயங்கவில்லை போன்ற நேரத்தில் அதை நம்பியவரின் நிலை.....?

[11/15, 7:22 PM] JacobSatish VT: வேத வசனம் மொபைல்ல இருந்தாலும் வேஸ்ட்.புத்தகமா இருந்தாலும் வேஸ்ட்.ஒவ்வொரு வசனமும் நம் மனதில் நிலைத்திரீக்கனும் அதுக்கு நீங்க மொபைல்ல படிச்சாலும் ஒகே.புத்தகத்தில படிச்சாலும் சந்தோஷமே

[11/15, 7:23 PM] Kumar VT: இன்று நீங்களும் நானும் உரையாடல், பதிவுகள், என்று பரிமாற்றம் செய்வது வேதகம் என்ற  மொபைலில் ஆப் ல் தானே ஐயா...

[11/15, 7:23 PM] JacobSatish VT: எப்படி புக்ல இருந்தா நம்ப மண்டைல ஏறாது.படிக்கனும் முழுஇருதயத்தோடு

[11/15, 7:26 PM] Kumar VT: ஆனால் மொபைலில் இருப்பது   நல்லது தான் ஆனால் அது ஊழியநேரத்திலோ சபைகளிளோ  உபயோகிக்ககூடாது  என்பது என் கருத்து.... 🙏 🙏 🙏

[11/15, 7:28 PM] JacobSatish VT: நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்க எதுவா இருந்தாலும் சரி.ஆனால் சபைக்கோ அல்லது ஜெபக்கூட்டத்துக்கோ செல்லும்போது வேதபுத்தகம் கட்டாயம🙏🙏🙏🙏

[11/15, 7:46 PM] JacobSatish VT: இதையேதான் நானும் சொல்றேன்

[11/15, 7:46 PM] JacobSatish VT: தமிழ்நாட்டுக்குவந்துட்டேன்😃😃😃😃😃😃😃

[11/15, 7:47 PM] JacobSatish VT: After 1 year.  🙏🙏🙏 தேவனுக்கு ஸ்தோத்திரம்

[11/15, 8:25 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 149: 8
அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
Psalm 149: 8
To bind their kings with chains, and their nobles with fetters of iron;

[11/15, 8:25 PM] YB Johnpeter Pastor VT: எபேசியர் 6: 17
இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
Ephesians 6: 17
And take the helmet of salvation, and the sword of the Spirit, which is the word of God:

[11/15, 8:26 PM] YB Johnpeter Pastor VT: யோவான் 1: 1
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
John 1: 1
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

[11/15, 8:26 PM] YB Johnpeter Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 19: 13
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
Revelation 19: 13
And he was clothed with a vesture dipped in blood: and his name is called The Word of God.

[11/15, 8:29 PM] YB Johnpeter Pastor VT: மல்கியா 2: 6
சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.
Malachi 2: 6
The law of truth was in his mouth, and iniquity was not found in his lips: he walked with me in peace and equity, and did turn many away from iniquity.

[11/15, 8:31 PM] YB Johnpeter Pastor VT: மல்கியா 2: 7
ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.
Malachi 2: 7
For the priest's lips should keep knowledge, and they should seek the law at his mouth: for he is the messenger of the LORD of hosts.

[11/15, 8:32 PM] YB Johnpeter Pastor VT: மத்தேயு 4: 4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று 👉எழுதியிருக்கிறதே என்றார்.👈
Matthew 4: 4
But he answered and said, It is written, Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God.

[11/15, 10:34 PM] Elango: பிரசங்கிக்கும் போதகர், மேடையில் நின்று மொபைல் போனை உபயோகித்து பிரசங்கம் பண்ணும் போது, வாலிப சின்ன பசங்களும் சபைக்குள் மொபைல் போனை உபயோகிக்க துணிவதுண்டு.
அவர்கள் சபை நேரத்தில் மற்ற தேவையில்லாத காரியங்களில் கவனம் செலுத்த வாய்ப்பு வரலாம்.
நாமே பையில் மொபைல் உபயோகிக்கும் போது, பிறரை மொபைல் உபயோகிக்க கூடாது என்று சொல்வது என்பது அசட்டை செய்வார்கள் மக்கள்.
டெக்லாஜியை உபயோகிப்பது தவறில்லை, ஆனால் அது பிறருக்கு இடறலாக ஆகிவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
நான் நோட்புக் கொண்டு போகாத நேரத்தில், மொபைலில் சபை செய்தி டைப் செய்வதுண்டு.
*உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.ரோமர் 14:16*

[11/15, 10:46 PM] Saravanan-Jesus Whatsapp: ஊழியம் ஒன்று ஆரம்பிக்க வேண்டுமென்றால் அந்த ஊழியத்தின் நிபந்தனைகள் என்னவாக இருக்க வேண்டும் என்று யாராவது சொல்ல முடியுமா?

[11/15, 11:00 PM] Kumar VT: நல்ல ஜெபமும் உன்மையான தேவஊழியம் தான் வேண்டும் 🙏🙏🙏🙏🙏💐💐💐

[11/15, 11:04 PM] Ebi Kannan Pastor VT: இப்போதைக்கு எந்த  தமிழ் மொபைல் வேதாகமமும் முழுமையானதாக  இல்லை  என்பதை வருத்தத்துடன்  தெரிவித்துக்  கொள்கிறேன்

[11/15, 11:22 PM] Jc Raja UP: ஜெபம் என்பது தேவணோடு பேசுவது or மற்றவருக்காக பரிந்து பேசுவது.

[11/15, 11:22 PM] Jc Raja UP: ஆம். இருப்பினும் this app is really very useful one.