[9/24, 11:17 AM] Pr Samjebadurai Whatsapp: 📋 *இன்றைய வேத தியானம் ( 24/09/2016 )* 📋
👉 உப்பு சாரமற்று போகுமா❓
👉 ஒருவரோருவர் எப்படி உப்புள்ளவர்களாயிருப்பது⁉சாரமேறின உப்பாய் இருப்பது என்றால் என்ன❓
👉 பழைய ஏற்பாட்டில் உப்பின் பயன்பாடு என்ன❓புதிய ஏற்பாட்டில் உப்பின் தன்மையை என்ன❓
👉 உப்பின் உடன்படிக்கை என்றால் என்ன❓
*Mark 9:50 (TBSI) "உப்பு நல்லதுதான், உப்புu சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்."*
*வேதத்தை தியானிப்போம்*
[9/24, 11:22 AM] Evangeline Whatsapp: எஸ்றா 6: 9
பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.
Ezra 6: 9
And that which they have need of, both young bullocks, and rams, and lambs, for the burnt offerings of the God of heaven, wheat, salt, wine, and oil, according to the appointment of the priests which are at Jerusalem, let it be given them day by day without fail:
[9/24, 11:23 AM] Evangeline Whatsapp: லலேவியராகமம் 2: 13
நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
Leviticus 2: 13
And every oblation of thy meat offering shalt thou season with salt; neither shalt thou suffer the salt of the covenant of thy God to be lacking from thy meat offering: with all thine offerings thou shalt offer salt.
[9/24, 11:24 AM] Evangeline Whatsapp: 2இராஜாக்கள் 2: 21
அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
2 Kings 2: 21
And he went forth unto the spring of the waters, and cast the salt in there, and said, Thus saith the LORD, I have healed these waters; there shall not be from thence any more death or barren land.
[9/24, 11:25 AM] Evangeline Whatsapp: மாற்கு 9: 49
எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
Mark 9: 49
For every one shall be salted with fire, and every sacrifice shall be salted with salt.
[9/24, 11:26 AM] Evangeline Whatsapp: கொலோசெயர் 4: 6
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
Colossians 4: 6
Let your speech be alway with grace, seasoned with salt, that ye may know how ye ought to answer every man.
[9/24, 11:27 AM] Evangeline Whatsapp: எசேக்கியேல் 16: 4
உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.
Ezekiel 16: 4
And as for thy nativity, in the day thou wast born thy navel was not cut, neither wast thou washed in water to supple thee; thou wast not salted at all, nor swaddled at all.
[9/24, 11:34 AM] Pr Samjebadurai Whatsapp: பண்டைய நாட்களில் உப்பானது சுத்திகரிக்கவும், மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்பட்டது. உணவை பதப்படுத்தவும் உப்பு பயன்பட்டது..
[9/24, 11:48 AM] Pr Ebeneser Whatsapp: தமிழ் காய்கறிகள் பெயரெல்லாம் மறந்திடுச்சே
[9/24, 11:50 AM] Pr Ebeneser Whatsapp: மத்தேயு 5:13
[13]நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
[9/24, 12:11 PM] Pr Ebeneser Whatsapp: நியாயாதிபதிகள் 9:45
[45]அபிமெலேக்கு அந்நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.
👆 இது சாரமற்ற உப்பு
தானும் கெட்டதல்லாமல் தான் இருக்கும் இடத்தையும் கெடுக்கும்
[9/24, 12:12 PM] Pr Samjebadurai Whatsapp: ஐயா சாரமற்ற என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டா???
[9/24, 12:14 PM] Pr Ebeneser Whatsapp: சொன்னதில் ஏதும் தவறா
ஐயா
[9/24, 12:15 PM] Pr Ebeneser Whatsapp: யோபு 6:6
[6]ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
👆 ருசியில்லாத பதார்த்தங்களையும் சாப்பிட வைக்கும் சாரமுள்ள உப்பு
[9/24, 12:16 PM] Pr Samjebadurai Whatsapp: BBE You are the salt of the earth; but if its taste goes from the salt, how will you make it salt again? it is then good for nothing but to be put out and crushed under foot by men.
HiSB
ISV “You are the salt of the world. But if the salt should *lose its taste,*how can it be made salty again? It’s good for nothing but to be thrown out and trampled on by people.
KJVLite Ye are the salt of the earth: but if *the salt have lost his savour,* wherewith shall it be salted? it is thenceforth good for nothing, but to be cast out, and to be trodden under foot of men.
NET “You are the salt of the earth. But if *salt loses its flavor*, how can it be made salty again? It is no longer good for anything except to be thrown out and trampled on by people.
NHEB “You are the salt of the earth, but if the *salt has lost its flavor*, with what will it be salted? It is then good for nothing, but to be cast out and trodden under the feet of men.
WEB “You are the salt of the earth, but if the *salt has lost its flavor,* with what will it be salted? It is then good for nothing, but to be cast out and trodden under the feet of men.
[9/24, 12:16 PM] Pr Samson Whatsapp: எப்போதாவது யோசித்தது உண்டா!!?
நாம் இரட்சிக்கப்பட்டவுடன் தேவன் நம்மை பரலோகம் கொண்டு போய் விடாமல்,
ஏன் இந்த பூமியிலேயே இன்னும் வைத்திருக்கிறார்!?
"உப்பில்லா பண்டம் குப்பையிலே "
உலகச் சொல்தான்.
ஆனால் எனக்கு இதிலிருந்து ஆவிக்குரிய அர்த்தம் வெளிப்படுகிறது.
இந்த பூமி (உலகம்) குப்பைக்கு (நரகத்திற்கு) போகாமல்,
உப்பாகிய நம்மைக் கொண்டு சுவை சேர்த்து,
தேவனுக்கு இந்த பூமியை (உலகத்தை, ஜனங்களை) பிரயோஜனப்படுத்தவே! 👍😀🙏
[9/24, 12:18 PM] Pr Ebeneser Whatsapp: லேவியராகமம் 2:13
[13]நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
👆 போஜன பலியைதான் உப்பினால் சாரமேற்ற சொன்னார் ஏன் என்பதை அப்புறம் பார்க்கலாம்
[9/24, 12:19 PM] Pr Samjebadurai Whatsapp: கெடுப்பதா சாரமற்ற உப்பு.சுவை இழப்பதல்லவா சாரமற்று போதல். அறிவியல் பூர்வமாக உப்பு சுவையை இழக்குமா???
[9/24, 12:22 PM] Pr Ebeneser Whatsapp: நாள் சென்றுவிட்டால் இழக்கும்( அதாவது உணவில் பயன்படுத்த முடியாதபடி).
அபிமெலேக்கு உப்பு விதைத்ததின் காரணம்
அந்த நிலத்தை கெடுக்கதானே
[9/24, 12:24 PM] JacobSatish Whatsapp: உப்பளத்தில் செடிகொடிகள் இருந்து நீங்கள் யாராவது பார்த்ததூண்டா
[9/24, 12:25 PM] JacobSatish Whatsapp: ஒரு விதை முளைக்கவேண்டும் என்றால் விதை மக்க வேண்டும்.உப்பு அதிகமாக உள்ள பூமியில் போட்டவிதை போட்டதுபோலவே இருக்கும்.ஊறுகாய் போல
[9/24, 12:28 PM] Pr Ebeneser Whatsapp: CHEMISTRYCan salt lose its saltiness?Answer by Peter Stotereau | Asked by Grace from Torquay
July 10, 2010
Common salt comprises a very stable, simple chemical compound called sodium chloride, which has a salty flavour. As table salt, it typically also contains minor amounts of additives to keep it free-flowing.
As it is so chemically stable, sodium chloride will not lose its saltiness, even after being stored dry for many years. However, there are ways in which salt may appear to lose its saltiness.
Historically, salt has been obtained from crude sources such as salt marshes, and minerals such as rock salt. This contains the stable sodium chloride plus other components. Sodium chloride is readily water-soluble, so if this crude salt were exposed to condensation or rain water, the sodium chloride could be dissolved and removed, and the salt could in effect lose its saltiness.
Also, the salty flavour is detected by our sense of taste. If there were a physiological change in the functioning of our taste buds, salt consumed may no longer taste the same, but this would not be due to any inherent change in the salt itself.
In summary, salt, i.e. sodium chloride, is a very stable material which retains its properties when stored dry.
10 Comments - Leave your own
T
tayo
July 19, 2013 at 3:09 pm
I am satisfied with that answer.
Reply
S
Simon
February 4, 2014 at 9:52 pm
Thanks for that!
Reply
L
Lois Souvenir
April 29, 2014 at 5:06 pm
This was real clear and blessed my life
Reply
N
Nicole Dybdahl
April 17, 2015 at 2:51 am
Cool!
Reply
K
Ken Kukuk
December 8, 2014 at 4:49 am
Salt can only loose it’s saltiness when it is thrown into the fire.
Reply
G
Gayle Mocabee
December 22, 2014 at 7:08 pm
When salt is burned, does it retain it’s salty taste?
Reply
N
Nicole Dybdahl
April 17, 2015 at 2:50 am
Salt CAN lose its saltiness very easily! I would know.
Reply
C
Carl Swanson
September 4, 2016 at 9:38 pm
Sorry Nicole, you are wrong. Salt (NaCl) cannot loose it’s saltiness unless it is transformed into something else (some other chemical) in which it is no longer salt (Nacl).
Reply
D
Dennis S.
May 1, 2016 at 1:07 pm
This will preach…
Reply
M
Max Jayson
August 10, 2016 at 6:09 pm
Wow isn’t science wonderful
Reply
2 TrackbacksTweets that mention Can salt lose its saltiness? – Ask a scientist -- Topsy.comYou Are The Salt Of The Earth… | soulspartan
Leave a Reply
SUBSCRIBE VIA EMAIL
Sign up to be notified weekly when we post new articles. We won't send you anything else.
RELATED ANSWERSWhat is salinity?Why are salt levels around the world’s oceans different?How does gritting roads work?Why is the sea salty?
ExploreTrending TodayAsk a QuestionAboutAuthorsGet InvolvedPrivacy Policy
TwitterFacebookYouTubeRSS Feed
© 2016 Ask a scientist. All Rights Reserved.
[9/24, 12:29 PM] JacobSatish Whatsapp: வேதத்தில் குறிப்பிட்டுள்ளது சாதாரண உப்புதான்
[9/24, 12:33 PM] JacobSatish Whatsapp: உப்ப என்பது ஆவிக்குரிய வாழ்க்கையையும் குறிக்கும்
[9/24, 12:33 PM] Pr Ebeneser Whatsapp: ஆழமான கருத்துள்ள கேள்வி
[9/24, 12:36 PM] Pr Ebeneser Whatsapp: மாற்கு 9:49-50
[49]எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
[50]உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.
🤔 யம்மா படுபயங்கரமான காரியம்
[9/24, 12:36 PM] Joseph-Anthony Whatsapp: உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் சொண்ணிர்ள் அதை நாண் வரவேற்கிறேண் pastor
[9/24, 12:37 PM] Pr Ebeneser Whatsapp: நன்றி ஐயா
[9/24, 12:38 PM] JacobSatish Whatsapp: உப்பு இல்லாத உணவு
தேவனை அறியாத வாழ்வு
இரண்டும் ஒன்றுதான்🙏
[9/24, 12:40 PM] JacobSatish Whatsapp: உப்பு போடாமல் நீங்கள் எவ்வளவு விலை உயர்ந்த உணவு தயாரித்தாலும் அது பிரயோஜமில்லாதுதான்
[9/24, 12:41 PM] Pr Ebeneser Whatsapp: உப்பு அதிமாச்சுனா???😂😂😂
[9/24, 12:42 PM] Pr Ebeneser Whatsapp: உப்பின் அளவல்ல
உப்பின் தன்மையே பாராட்டத்தக்கது
[9/24, 12:42 PM] JacobSatish Whatsapp: அது சிலரோட அறியாமை.பதப்படுத்தபடும் பொருளில்தான் உப்பு அதிகம் இட வேண்டும்
[9/24, 12:44 PM] JacobSatish Whatsapp: தேவன் என்ற உப்பு நம் மனதில் இருந்தால் நம் மனம் கெட்டுப்போகாதே.இந்த இடத்தில் உப்பு அதிகமாய் இருப்பதே நல்லது
[9/24, 12:46 PM] Pr Isaac Whatsapp: சுவை இல்லாத உப்பை பார்த்தது உண்டா??
[9/24, 12:48 PM] Pr Ebeneser Whatsapp: நான் பார்க்கவில்லை
ஆனால் சுவைக்கு பயன்படாத உப்பை பார்த்து இருக்கேன்
ஐயா
[9/24, 12:49 PM] JacobSatish Whatsapp: கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் உப்புக்கு சுவை உண்டு.ஆராய்ச்சிகூடங்களில் பயன்படுத்தப்படும் சில இரசாயனங்களுக்கும் salt என்றுதான் அழைக்கிறார்கள்.அந்தமாதிரி உப்புகளில் சுவை இல்லாததும் உண்டு
[9/24, 12:49 PM] Pr Isaac Whatsapp: உப்பின் சாரம் என்றால் என்ன?
[9/24, 12:50 PM] Bro. Elango Gopal🙏😀: சுவை
[9/24, 12:50 PM] JacobSatish Whatsapp: உணவை சுவையூட்டுவது.
உணவை பதப்படுத்துவது
[9/24, 12:51 PM] JacobSatish Whatsapp: சாரம் என்றால் உபயோகம் என்றும் அர்த்தம் கொள்ளளாம் ஐசக் ஐயா..
[9/24, 12:52 PM] JacobSatish Whatsapp: என்ன உபயோகம்/சுவையூட்டுவதுதானே
[9/24, 12:53 PM] George Whatsapp: நேற்று தியானத்தில் ஐயா டென்ஷன் ஆகிவிட்டார் அவர் மட்டும் அல்ல அப்போஸ்தல அய்யாவும் தான், இருவருக்கும் தாழ்மையான வேண்டுகோள் தியானத்தின் படி சில கேள்விகளை வைக்கிறோம் மற்ற படி தனி மனித தாக்குதலுக்கோ போதகர்களை குறை சொல்லுவதற்க்கோ இல்லை
இந்த குரூப்பில் அந்த மாறி ஆட்கள் இல்லை என்றே கருதுகிறேன்
சில வனங்கா கழுத்துள்ள ஜனங்களுக்கு நாங்களும் பதில் சொல்ல கடமை பட்டுருக்கிறோமே அதை உங்களிடம் தானே பெற முடியும்
அதனால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்
[9/24, 12:55 PM] Joseph-Anthony Whatsapp: எறிய வேண்டியதுதாண்
[9/24, 1:02 PM] Pr Isaac Whatsapp: Mathew 5:13,14............Look like light,taste like salt.......light in the world.....salt in the earth .. very deep subject
[9/24, 1:02 PM] Pr Samson Whatsapp: சில அறிவாளிகள் (!?), சமுத்திரத்தில் கடவுள் உப்பை போடாமலிருந்தால்,
தண்ணீர் பஞ்சமே மனிதருக்கு இருக்காதே என்கின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 🤔
[9/24, 1:02 PM] Pr Samson Whatsapp: சாரம் என்றால்,
ஒரு பொருள் உண்டாக்கப் பட்டதின் நோக்கம்.
[9/24, 1:03 PM] Pr Samson Whatsapp: தேவ பிள்ளைகளாகிய நம்ம பொருத்தவரை, நமக்குள் இருக்கும் வசனமே நம்முடைய சாரம்.
[9/24, 1:07 PM] JacobSatish Whatsapp: கடல் நீர் உப்புதண்மை இல்லாதிருந்தால் என்ன ஆகியிருக்கும்
[9/24, 1:08 PM] Kumar Whatsapp: கூவாகம் போல ஆயிருக்கும்
[9/24, 1:08 PM] Pr Samson Whatsapp: உப்புக்கு எங்கே போவோம் என்கிற பதிலே இதில்,
வேறு ஏதாவது!?
[9/24, 1:08 PM] JacobSatish Whatsapp: உலகம் நாறிப்போய்விடும்
[9/24, 1:09 PM] Pr Samson Whatsapp: மனிதர்களை வாழ விடாமல் சாகடித்திருக்கும்.
[9/24, 1:10 PM] JacobSatish Whatsapp: டிரெய்னேஜ் சிஸ்டம். கடல்நீரின் உப்புதண்மை கொண்டே உருவாக்கப்பட்டது
[9/24, 1:12 PM] Joseph-Anthony Whatsapp: ஆவிகுரிய விதத்தில் தியாணிப்போம் வழிமாறி போகவேண்டாம்
[9/24, 1:13 PM] Pr Isaac Whatsapp: 👍👍👍👍👍exactly
[9/24, 1:13 PM] JacobSatish Whatsapp: இதில் வழிமாற ஒன்றும் இல்லை
[9/24, 1:14 PM] JacobSatish Whatsapp: உப்பு சாரமற்றுபோனால்/அதாவது அதன் உபயோகதன்மையை இழந்துவிட்டால். ......
[9/24, 1:15 PM] Pr Samson Whatsapp: தேவனின் படைப்பின் மகத்துவமும் ஆவிக்குரியதே 👍
[9/24, 1:15 PM] JacobSatish Whatsapp: இதான் முதல் கேள்வியாய் விவாதிப்போம்
[9/24, 1:16 PM] JacobSatish Whatsapp: உப்பு எப்படி சாரமற்று போகும்?
[9/24, 1:17 PM] Pr Samson Whatsapp: சமூத்திரமும் அதில் உள்ள உப்பும் மனிதன் மேல் தேவன் வைத்த அன்பை விளங்கப் பண்ணுகிறது.
[9/24, 1:20 PM] JacobSatish Whatsapp: 👍👍👍👍 எவ்வளவு முயன்றாலும் தேவன் நம்மேல் வைத்த அன்பை மாற்றமுடியாது
[9/24, 1:21 PM] Pr Isaac Whatsapp: Amen amen wounderfull👏👏👏👏
[9/24, 1:27 PM] Pr MBLevi Bensam Whatsapp: உப்பு சாரமற்று போகாது👆👆👆👆👆👆👆👆👆
[9/24, 1:40 PM] JacobSatish Whatsapp: இனிப்பு திண்பண்டங்கள் செய்யும் போது சிறிதளவு உப்பு போடனும்.இல்லை என்றால் இனிப்பு சுவை முழுதும் தெரியாது
[9/24, 1:47 PM] Pr MBLevi Bensam Whatsapp: உப்பு பார்க்க வெள்ளையாக இருக்கும், குழம்பில் போட்டால் கரைந்து போகும், ஆனால் ருசியில்லாத பொருட்களை ருசிகொடுத்து, தன்னை மறைத்து மற்ற எல்லா பொருட்களையும் வெளிப்படுத்தும், இது போலவே ஒரு தேவ பிள்ளை இருப்பார்கள் 👏
[9/24, 1:48 PM] Kumary-james Whatsapp: *உப்பு என்ற பதம் ஆவிகுரிய கோளத்தில் யாரை குறிக்கிறது*❓❓❓ 👇🏽👇🏽
*விசுவாசிகளை குறிக்கிறது*
*இந்த உப்பு உலக பிரகாரமாக எதர்க்கு பயன் படுத்த படுகிறது*❓
பார்ப்போம்👇🏽👇🏽
1)👉🏽உணவின் சுவைக்கு முக்கியமானது.
2)👉🏽பொருட்களைபாதுகாக்கபயண்படுத்துவர்
3)👉🏽மீன்களை கருவாடாக்க பயண்படுத்துவர். 4)👉🏽பனிக்கட்டிகளைகுளிரூட்டபயண்படுத்துவ5)👉🏽ஊறுகாய் கெடாமல் இருக்க பயண்படுத்துவர்.
6)👉🏽மருத்துவ குணமும் உண்டு, தொண்டை வலி, பல்வலிக்கு தண்ணீரில் கரைத்து கொப்பளிப்பர்.
7)👉🏽 வேதியல் பொருட்கள் தயாரிக்க பயண்படுத்துவர், சோடா உப்பு, பேதி உப்பு போன்றவை. வேதியல் உப்பு
8)👉🏽 வயலில் வளரும் சில பயிர்களுக்கு உரமாக இடுவார்கள். விலங்கின் தோலை பதப்படுத்த பயண்படுத்துவர்.
9)👉🏽ஆனால் தாவரங்களுக்கு சமையல் உப்பு நஞ்சு. அதிகப்படியான உப்பு நம் உடம்பிற்க்கு ஆபத்து.
👆👆👆👆👆👆 *மேலே குறிப்பிட்டு உள்ள உலக காரியத்திர்க்கு உப்பானது பயன்படுகிறது*
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
👉🏽 *ஏன் இயேசு கிறிஸ்து உப்பு சாரமற்றுப் போவதை சொன்னார் என்பதையும் பார்ப்போம்*.
👉🏽 *பலியிடல் முறைமைக்கு பயண்படுத்திய முக்கியத்துவம்*:👇🏽👇🏽👇🏽
👉🏽நறுமணப்பொருளோடும் எல்லாவற்றோடும் உப்பை சேர்த்து பலியிட்டனர். உப்பு சேர்ப்பதால் சீக்கிரம் வெப்பம் அதிகமாகும்.
எசேக்கியல் 43:24
👉🏽நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனின் உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறைவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
லேவியராகமம் 2 : 13
*👉🏽உடன்படிக்கைக்காக உப்பு*
எண்ணாகமம் 28:17-19,லேவி 2:13, 2 நாளா 13: 4-5
👉🏽 *விசுவாசிகள் உலகிற்க்கு உப்பு*
👉🏽நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. மத்தேயு 5 : 13
*எதை குறிக்கிறது*👇🏽👇🏽
இந்த போதனை நாம்👉🏽 *உலகத்திற்க்கு உபயோகமாய்* இருக்கவேண்டியதையும் *உலகை காக்க* வேண்டியதை குறிக்கிறது.
👉🏽 *உப்பு சாரமே போகாது*👇🏽👇🏽
அக்காலத்திலே *உப்பை நெருப்பு சட்டிக்கும்* மேலே வைக்கப்பட்ட பாத்திரத்திற்க்கும் இடையே வைப்பார்களாம். சூடு பண்ணும்போது *உப்பு சூடாகி அதிக நேரம் சூட்டை வைத்துக்கொள்ளும்*. குறித்த நாட்களுக்குப் பின் (50 நாட்கள்) எதற்க்கும் உபயோகிக்க முடியாது. வெளியேதான் கொட்டுவார்கள்.
👉🏽 *இந்த உப்பைத்தான் கர்த்தர் உதாரணமாகச்சொன்னார்*✅.
மாற்கு 9:50, லூக்கா 14: 34-35
*வாழ்கையில் சாரம் அற்ற உப்பு*👇🏽
லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆனாள்
ஆதி 19: 23-26
👉🏽 *சவக்கடல் ஒரு உப்புள்ள நீர்* 👇🏽👇🏽
ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.
எசேக்கியேல் 47 : 11
*சுவைக்காக உப்பு*👇🏽
ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
யோபு 6: 6
👉🏽 *குழந்தை பிறந்தவுடன் உடலில் தேய்க்கப்படும் உப்பு* 👇🏽👇🏽👇🏽
உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால்: நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை, 👉🏽 *நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை, உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை*, துணிகளில் சுற்றப்படவுமில்லை.
எசேக்கியல் 16 :4
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் *வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக*.
கொலோசெயர் 4 :6
இந்த அளிந்து போகிற 🌍உலககாரியத்திர்க்கு
*உப்பு எத்தனையோ விதத்திர்க்கு பயன் படுகின்றது*
*நம்முடைய வாழ்கை எப்படி காணபடுகிறது*
👉🏽சாரம் இருக்கா ❓
👉🏽அல்லது இல்லையா❓
சிந்தியுங்கள் செயல் படுங்கள் ஆமென்🙋🏻
கர்த்தருடைய பணியில் என்றும்
🗣 *குமரி ஜேம்ஸ்*
[9/24, 1:51 PM] JacobSatish Whatsapp: சமையலில் பெண்களைவிட ஆண்களே திறமைசாலிகள்
[9/24, 1:52 PM] Pr MBLevi Bensam Whatsapp: கர்த்தருக்கு சித்தமானால் இன்று இராத்திரி புறப்பட்டு நாளை காலை 7:15 இந்தியா👏
[9/24, 1:53 PM] Kumary-james Whatsapp: எந்த Hotel போனாலும் சுவையாக சமைப்பது ஆண்கள் காரணம் முதல்படைப்பு *ஆதாம்*😄😄
[9/24, 2:00 PM] JacobSatish Whatsapp: ஆமாம் {ஐயா.. நான் சமையல் வேலை செய்வேன்.சபை விசேசங்களில்
[9/24, 2:03 PM] Manimozhi Whatsapp: நம்ம தான் உப்பு
[9/24, 2:14 PM] Kumary-james Whatsapp: Sis இலை உதிராத மரம் என்றால் என்ன❓
👉🏽எந்த மரத்தை குறிக்கிறது
[9/24, 2:14 PM] Pr Samson Whatsapp: சாரம் என்றால்,
ஒரு பொருள் உண்டாக்கப் பட்டதின் நோக்கம்.
[9/24, 2:14 PM] Pr Samson Whatsapp: தேவனின் படைப்பின் மகத்துவமும் ஆவிக்குரியதே 👍
[9/24, 2:14 PM] Pr Samson Whatsapp: சமூத்திரமும் அதில் உள்ள உப்பும் மனிதன் மேல் தேவன் வைத்த அன்பை விளங்கப் பண்ணுகிறது.
[9/24, 2:15 PM] Pr Samson Whatsapp: சமுத்திரத்தின் ஜலம் கெடாமல் காக்க, அதிலே உப்பு.
கெடாத ஜலம் ஆவியாகி மேகமாக,
மேகம் மழையாக,
மழை மனிதனுக்கு குடி தண்ணீராக,
விளையும் பயிருக்கு உயிராக.
உப்பு மனிதனுக்கு தாகம் தீர்க்கவும்,
பசியாற்றும் உணவாகவும்,
அந்த உணவை சுவையாக்கவும்,
உப்பின் படைப்பின் நோக்கத்தில் தேவ அன்பு ஊற்றாக பொங்குகிறதே!
அல்லேலூயா 👏👏👏🙏🙏🙏
[9/24, 2:18 PM] Pr Ebeneser Whatsapp: எரேமியா 17:6
[6]அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
👆 உவர் நிலத்தை உருவாக்க காரணம் உப்புதானே
[9/24, 2:20 PM] Kumary-james Whatsapp: வேதத்தை தியானிப்போம் குறுப்பில் இருக்கும் அங்கத்தின அன்பு தேழன் *ஜெயசீலன்* அவர்களுக்கு *பிறந்தநாள்* 👇🏽👇🏽👇🏽
*என்னாலே உன் நாட்கள் பெருகும், உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்*. நீதிமொழிகள் 9 :11
Happy Barath day 🎂
[9/24, 2:29 PM] Tamilmani: உப்பின் தன்மை
உப்பு என்றைக்கும் சாரம் போகாது. உணவின் சுவைக்கு முக்கியமானது.
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். மற்ற பொருட்களை பாதுகாக்க பயண்படுத்துவர். பதப்படுத்த பயண்படுத்துவர். இறந்த மீன்களை கருவாடாக்க பயண்படுத்துவர். பனிக்கட்டிகளை குளிரூட்ட பயன்படுத்துவர். ஊறுகாய் கெடாமல் இருக்க பயன்படுத்துவர். மருத்துவ குணமும் உண்டு, தொண்டை வலி, பல்வலிக்கு தண்ணீரில் கரைத்து கொப்பளிப்பர். வேதியல் பொருட்கள் தயாரிக்க பயண்படுத்துவர், சோடா உப்பு, பேதி உப்பு போன்றவை. வேதியல் உப்பை வயலில் வளரும் சில பயிர்களுக்கு உரமாக இடுவார்கள். விலங்கின் தோலை பதப்படுத்த பயண்படுத்துவர். ஆனால் தாவரங்களுக்கு சமையல் உப்பு நஞ்சு. அதிகப்படியான உப்பு நம் உடம்பிற்க்கு ஆபத்து.
எப்ப சாரமில்லாமல்லாமல் போகும்? கீழே ஒரு பதிவு 👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
[9/24, 2:30 PM] Tamilmani: வேதாகமத்தில் உப்பு
உப்பை வேதாகம காலங்களில் எதற்க்காக உபயோகித்தார்கள்?
ஏன் இயேசு கிறிஸ்து உப்பு சாரமற்றுப் போவதை சொன்னார்?
வேதாகம காலத்தில் உப்பு உணவுக்கு அடிப்படையான பொருளாகும். உணவிற்க்கு சுவை கூட்டுவதற்க்கும், உணவை பாதுகாப்பதற்க்கும் வேதாகம காலத்தில் உபயோகித்தனர். உப்பு என்ற வார்த்தை 47ந் தடவை சொல்லப்பட்டுள்ளது.
*ஆனால் முதன்மையாக உலகத்திற்க்கு உப்பாக இருங்கள். ஆம்.* (மத் 5: 13)
*விசுவாசிகள் உலகிற்க்கு உப்பு*
மத்தேயு 5 : 13
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
இந்த போதனை நாம் உலகத்திற்க்கு உபயோகமாய் இருக்கவேண்டியதையும் உலகை காக்க வேண்டியதை குறிக்கிறது.
மேலும் மாற்கு 9:50, லூக்கா 14: 34-35 ம் அதையே குறிக்கிறது.
உப்பு சாரமே போகாது, இருந்தும் பைபிளில் மேற்கோள் காட்டியிருப்பது ஏனென்றால்
அக்காலத்திலே உப்பை நெருப்பு சட்டிக்கும்
மேலே வைக்கப்பட்ட பாத்திரத்திற்க்கும் இடையே வைப்பார்களாம். சூடு பண்ணும்போது உப்பு சூடாகி அதிக நேரம் சூட்டை வைத்துக்கொள்ளும். விறகை குறைந்தளவு வைத்தால் போதும். ஆனால் இந்த சூட்டிற்க்கு பயண்படுத்தின உப்பு குறித்த நாட்களுக்குப் பின் (50 நாட்கள்) எதற்க்கும் உபயோகிக்க முடியாது. வெளியேதான் கொட்டுவார்கள். இந்த உப்பைத்தான் கர்த்தர் உதாரணமாகச்சொன்னார்.
• பலியிடல் முறைமைக்கு பயண்படுத்திய முக்கியத்துவம்:
நறுமணப்பொருளோடும் எல்லாவற்றோடும் உப்பை சேர்த்து பலியிட்டனர். உப்பு சேர்ப்பதால் சீக்கிரம் வெப்பம் அதிகமாகும்.
லேவி 2: 13, யாத் 30: 34-35, எஸ்ரா 6: 6-10,
7: 21-23, எசக்கி 43: 22-24
லேவியராகமம் 2 : 13
நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனின் உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறைவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
• உடன்படிக்கைக்காக உப்பு : ↑↑
எண்ணாகமம் 28:17-19,
லேவி 2:13, 2 நாளா 13: 4-5
• உப்பு பள்ளம் பாழ்பட்ட நிலம் :
செப்பானியா 2: 9, உபாக 29: 23-25,
யோபு 39 :5-6, சங்கீதம் 107: 33-34,
எரேமியா 17: 5-8, நியாயதிபதிகள் 9: 45
செப்பனியா 2 : 9
ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்;
• லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆனாள்.
ஆதி 19: 23-26
• சவக்கடல் ஒரு உப்புள்ள நீர் :

• சுவைக்காக உப்பு :

• குழந்தை பிறந்தவுடன் உடலில் தேய்க்கப்படும் உப்பு : எசக்கியேல் 16: 4
உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால்: நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை, நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை, உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை, துணிகளில் சுற்றப்படவுமில்லை.
(உப்பால் சுத்திகரிப்பு ஆதிகால குழந்தை பராமரிப்பு முறையாகும். தற்கால ஆராய்ச்சியில் அது தோலை பலப்படுத்தவே என அறிந்துள்ளனர்)
• குறியீடுயாக உப்பு:
2 இராஜா 2: 19 -22
2 இராஜாக்கள் 2 : 20
அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டு வந்தபோது,
21 அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
• உருவகப்படுத்தி சொல்லப்பட்ட உப்பு :
மாற்கு 9: 49, கொலேசி 4: 6
கொலோசெயர் 4 : 6

• இடங்கள் பெயரில் உப்பு : யோசுவா 12: 3

சவக்கடல் – உப்புக்கடல் எனப்பட்டது. உப்பாய் இருப்பதால் மிதக்கத்தான் முடியும்,நீந்த முடியாது.
மேலும்…. ஆதி 14:3; எண் 34:3-4,10-12; உபாக 3:16-17;
யோசுவா 3:15-16; 15:2-3,5-6; 18:19
• உப்பு பள்ளத்தாக்கு :
2 சாமுவேல் 8:13 ;
2 இராஜா 14:7 ;
2 உபாகமம் 25:11; 1உபாகமம் 18:12
2 சாமுவேல் 8 : 13
தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.
• உப்பு நகரம் :
யோசுவா 15: 62
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும்……
~ த. ம
https://tamilmanicbe.wordpress.com/2014/10/16/%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/
[9/24, 2:50 PM] Jeyaseelan Whatsapp: *உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். லூக்கா 14:34-35.*
இயேசுவின் இந்த போதனையானது ......
மத்தேயு (5:13),
மாற்கு (9:50) மற்றும் லூக்கா (14:34)
என்ற மூன்று நற்செய்தி நூல்களில் வருவதிலிருந்து ஆதித்திருச்ச்பை மக்கள் இயேசுவின் இந்த போதனைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நன்கு அறிய முடிகின்றது. இது இயேசு கூறிய கடுமையான போதனைகளில் ஒன்று ஆகும். ஆனால் ஒவ்வொரு கிறிஸ்த்துவ விசுவாசியும் கடைபிடிக்க வேண்டிய கட்டாய போதனை ஆகும். அதினால் தான் வேதத்தில் இதை மூன்று எழுத ஆவியானவர் அனுமதித்து உள்ளார்.
உப்பு நல்லது தான், ஆனால் அது தூய்மையாக வெண்மையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குப்பையில் கொட்டப்படும் என்ற இயேசுவின் கருத்தை எல்லா மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் எவ்வளவு விலை உயர்ந்த உப்பாக இருந்தாலும் அதில் சிறிதளவு தூசி கிடந்தால் உடனடியாக அதை குப்பையில் கொட்டி விடுவார்கள். சமையல் அறையில், சாப்பாட்டு மேசையில் என எல்லா இடத்திலும் மேன்மையான நிலையில் இருந்த உப்பு, தன்னிடத்தில் சிறிய தூசியை அனுமதிக்கும் பொழுது குப்பை தொட்டிக்கு செல்கின்றது, அதேபோல இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நாமமும் கூட, பல்வேறு ஆசீர்வாதங்களைப் பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், பழைய பாவத்தை சிறிதளவு செய்து வந்தால், பரலோக ராஜ்யத்திற்கு வெளியே கொட்டிப் போடப்டுவோம் என்று இயேசு ஆணித்தரமாக கூறியுள்ளார்.
இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொள்பவர்கள் முதலில் திருச்சபைக்கு பரிசுத்தமனவர்களாக (உப்பாக) இருக்க வேண்டும். இரண்டாவது உலகத்திற்கு பரிசுத்தமனவர்களாக இருக்க வேண்டும். மூன்றாவது தங்களுக்குள்ளே பரிசுத்தமனவர்களாக இருக்க வேண்டும். அதைக் குறித்து இந்த செய்தியில் தியானிக்கலாம்.
*நீங்கள் திருச்சபைக்கு உப்பாயிருக்கிறீர்கள*்
“நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனின் உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக”
(லேவியராகமம்2:13).
போஜனபலி எனபது சர்வாங்க தகன பலியாக நெருப்பிலே தகனிக்கப்படும் இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகும். இவைகள் நெருப்பிலே தகனிக்கப்படுவதற்கு முன் அது உப்பினால் சாரமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேவன் மோசே மூலமாக இஸ்ரயேல் மக்களுக்கு கட்டளையிட்டார். ஒருவன் தன்னை அர்ப்பணித்து தேவனை ஆராதிக்க ஆலயத்திற்கு வந்தால் அவன் முதாலாவது உப்பினால் சாரமாக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது தனக்கான பரிசுத்ததை காத்துக் கொண்டவனாக தேவனுடைய பலிபீடத்திற்கு முன்பும் இயேசுவுக்கு முன்பும் வரவேண்டும். “கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்” (Iநாளா 16:29). ஆகவே ஆலயத்திற்கு செல்லும் உங்களுடைய பரிசுத்தத்தை காத்துக் கொண்டவர்களாக திருச்சபைக்கு செல்லுங்கள்.
*இஸ்ரயேல் மக்கள் தேவனுடைய ஆலயத்திற்கு வரும் பொழுது, இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் என ஏழு வகையான காணிக்கைகளை கொண்டு வருவார்கள் (எஸ்றா 6:9). இதில் ஐந்தாவது காணிக்கை உப்பு ஆகும்.*
பழைய ஏற்ப்பாட்டு காலத்தில் ஆலயத்திற்கு வருபவர்கள் உப்பை காணிக்கையாய் கொண்டு வந்தார்கள். புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் திருச்சபை விசுவாசிகளாகிய நாம், ஆலயத்திற்கு செல்லலும் பொழுது உப்பைப் போல பரிசுத்ததோடு செல்ல வேண்டும். அநேக நேரங்களில் நாம் பரிசுத்தம் அடைய விரும்பி பரிசுத்ததிற்க்காய் ஆலயத்திற்கு செல்கின்றோம். ஆனால் வேதமோ நாம் பரிசுத்ததோடு ஆலயத்திற்கு வரவேண்டும்மென்று நம்மை எச்சரிகின்றது. பரிசுத்த உப்பாக நீங்கள் திருச்சபைக்கு சென்று, அந்த சபையில் உருவாக்கப்படும் திட்டங்களுக்கு சுவையைக் கொடுங்கள்
[9/24, 2:57 PM] Jeyaseelan Whatsapp: *நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்*
🌷நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. மத்தேயு 5:13 🌷
உப்பு மனித உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள் மற்றும் மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று பழமொழியாக சொல்வார்கள். சமையல் கலையில் உப்பிடும் அளவு மிகவும் அறிவு சார்ந்த செயலாக கருதப்படுகின்றது. உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து பெறப்படுகிறது. மேலும் நிலக்கரி எடுப்பது போல பூமியில் சுரங்கம் அமைத்து பூமிக்குளிருந்து உப்பை வெட்டியெடுபார்கள். இதை தரை உப்புகள் என்பார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற இடங்களில் உப்பு நீர்க் கிணறுகள் தோண்டி உப்பு தயாரிக்கின்றனர். இதைக் கிணற்று உப்புகள் என்பர். இஸ்ரயேல் நாட்டில் இருக்கும் உப்புக்கடல் என்று அழைக்கபடும் சவக்கடலில் இருந்து தான் உலகின் முதல் தரமான உப்பு தயாரிக்கப்டுகின்றது. இந்த ஏரியிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 116 கோடி டன் உப்பு எடுக்கலாம் என கணக்கிட்டுள்ளனர். இவற்றை ஏரி உப்புகள் என்பர். பூமியெங்கும் இந்த நான்கு முறையில் தான் உப்பை தயாரிகின்றார்கள்.
நான்கு முறைகளில் உப்பு நமக்கு கிடைக்க பெற்றாலும், உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து தான் பெறப்படுகிறது. நீரை பிரித்தெடுத்து பாத்தி என்று சொல்லப்படும் இடத்திற்கு கொண்டு வருவார்கள். பின்னர் அதை சூரிய ஒளியில் நன்கு காயவிடுவார்கள். கடல்நீரானது வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாக துவங்கும். அந்த சமயத்திலே கடல் நீரில் காணப்படும் உப்பு ஆவியாகாமல் நீரின் மேலேயே உப்பு படிமங்களாகப் படிந்துவிடும். இதை உப்பளங்கள் என்று அழைப்பார்கள்.
உலகில் கடல் போன்று பாவமும் அதை செய்பவர்களும் பெருகியிருந்தாலும் நீங்கள்ளும் நானும், “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் (பேதுரு 2:9).
கடலில் இருந்து அந்த பாதிகளுக்கு கொண்டுவரப்பட்ட வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரைப் போன்று இருகின்றீர்கள். வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரோடு ஒருகாலும் பழைய கடல் தண்ணீரை சேர்க்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த பழைய கடல் நீர், இந்த வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரின் உவர்ப்பு தன்மையை குறையபண்ணி அதிலிருக்கும் உப்பை வெளிப்படுத்த விடாமல் மறைத்துவிடும். வேறுபிரிக்கப்பட்ட நாமும் பழைய பாவங்களை செய்து வந்தால் நம்மிடம் இருந்து பரிசுத்தம் வெளிப்படாது. இவ்வாறு வேறுபிரிக்கப்பட்ட தண்ணீர் சூரிய ஒளியில் காயும் பொழுதுதான் உப்பு வெளிப்படுகின்றது. அது போல நம்முள் மறைந்திருக்கும் பரிசுத்தத்தை வெளிப்படுத்த நமக்கு ஒருசில உபத்திரவங்களும், சோதனைகளும் வருகின்றது. அந்த நேரத்தில் பொறுமையோடு கர்த்தரின் கரத்தில் அடங்கியிருக்க வேண்டும். நம்மிலிருந்து பரிசுத்த உப்பு வெளிப்படும் பொழுது அது உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்படும்.
ஏற்ற நேரத்தில் இந்த வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரானது தனது உப்பைக் கொடுக்க வேண்டுமென உப்பளத்தின் எஜமான் ஆவலோடு காத்திருப்பார். பிரித்தெடுக்கப்பட்ட அந்த தண்ணீர், ஏற்ற சமயத்தில் தனக்கான உப்பைக் கொடுக்காத பட்சத்தில், எஜமான் அந்த தண்ணீரை குப்பைக்கு நேராகவும், சாக்கடைக்கு நேராகவும் கொட்டிப் போடுவார். நீங்களும் நானும் தேவனுக்காய் பரிசுத்தமாய் வாழ அழைக்கப்பட்டவர்கள். நம்மிடத்திலிருந்து பரிசுத்தம் வெளிப்படா விட்டால் தேவன் நம்மை குப்பையாகிய அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கும், சாக்கடையாகிய அக்கினி கடலுக்கும் நேராய் நம்மை கொட்டிப் போடுவார். ஆகவே தான் அருள்நாதர் இயேசு சொல்கின்றார், “ உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்” (லூக்கா 14:34-35).
உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே (பிரசங்கி 5:6) என்று வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்க இன்றைக்கு அநேக கிறிஸ்த்தவர்கள் பிறரை பற்றி பேசுவதையே பொழுது போக்காக கொண்டுள்ளனர். “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்“ (மத்தேயு 6:22) என்று இயேசு கிறிஸ்த்து சொல்லியிருக்க இன்றைக்கு நாம் பரிசுத்த கண்களினால் சினிமாக்களை பார்கின்றோம். பிறரை இச்சையோடு பார்கின்றோம். இவைகளை பாவம் என்று அறிந்திருந்தாலும் அனுதினமும் இவைகளை செய்யும் கிறிஸ்த்தவர்களே, “இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6: 21-23) என்ற வேத வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? என்று இயேசு எவ்வளவு வேதனையுடன் சொல்லியிருப்பார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் கிறிஸ்த்துவுக்கு பிரியமானவர்களே. நீங்கள் உங்களுடைய பரிசுத்தத்தை இழந்தால் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவ மாட்டீர்கள் என்று இயேசு தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார். பாவம் செய்தால் இயேசு மன்னிப்பார் என்று சொல்லி தொடர்ந்து பாவம் செய்யாதிருங்கள். உங்களை இயேசு பூமிக்கே பயன்படக்கூடிய உப்பாக பரிசுத்தத்தின் பிள்ளையாக அழைத்திருக்கின்றார். பாவங்களை விடுத்து பரிசுத்தம்மாக வாழ்ந்து பூமிக்கு உப்பாக இருக்க உங்களை ஒப்புகொடுப்பீர்களா?
[9/24, 2:57 PM] Jeyaseelan Whatsapp: *நீங்கள் உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள்*
உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.
மாற்கு 9:50.
உலகின் உயிரோட்டம் உப்பில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மனிதனின் உயிரோட்டமும் உப்பில் தான் உள்ளது. மனித உடலில் காணப்படும் செல்களிலும் உப்பு காணப்படுகின்றது. ஆகவே தான் வியர்வையானது உப்புத் தன்மை உடையதாக உள்ளது. ஒவ்வொரு மனித உடலிலும் சராசரியாக 250 கிராம் உப்பு இருகின்றது. நீங்கள் உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருக்க அதாவது பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். மனித உடலின் செல்களில் உப்புத் தன்மை குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் ஏற்ப்படும். அதே போல உங்களுடைய உள்ளான மனிதனில் பரிசுத்தம் இல்லையென்றால், பிசாசை எதிர்க்கும் சக்தி உங்களில் குறைவுபட்டு பல்வேறு நெருக்கங்களும் பாடுகளும் உங்கள் வாழ்வில் ஏற்ப்படும். நீங்கள் ஒரு வேளை பலவேறு போராட்டத்தின் மத்தியில் இதை வாசித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் ஒரு நிரந்தர விடுதலையைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், முதலில் உங்களுடைய உள்ளான மனிதனைப் பரிசுத்தப்படுத்துங்கள்.
உப்பு பலவிதமான அளவுகளில் நமக்கு கிடைக்கும். கல் உப்பு பெரிதாக இருக்கும், தூள் உப்பு பொடியாக இருக்கும். எந்த அளவு உப்பாக இருந்தாலும், அதை திரவ உணவு பொருட்களில் சேர்க்கும் பொழுது அது உணவு பொருளோடு முற்றிலுமாக கரைந்து விடுகின்றது. மேலும் அந்த உணவுப் பொருளை மேன்மைப்படுத்தி சுவையுட்டுகின்றது. சமையல் அறையில் மிக முக்கியமான இடத்தில் இருப்பது உப்பு ஆகும். அதோடு அல்லாமல் சாப்பிடும் இடத்திற்கும் உப்பு வந்துவிடும். இந்த உப்பை மூன்று சதவீதம் தான் எந்த உணவிலும் சேர்ப்பார்கள். இந்த சிறிய அளவு உப்பு, முழு உணவிற்க்குமே தேவையான சுவையை கொடுக்கின்றது.
அதே போல நீங்கள் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாக, பரிசுத்தமானவர்களாக இருந்தால், சுவையற்று காணப்படும் உங்கள் வாழ்வு முழுமையான சுவையுள்ளதாக மாறும். பெரும்பாலும் நாம் பெரிய பாவங்கள் செய்வதில்லை. அதே நேரத்தில் சிறிய பாவங்களை செய்வதற்கு தயங்குவதில்லை. நீங்கள் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென இயேசு விரும்புகின்றார் (மத்தேயு 25:23). ஏனென்றால் அவர்கள் தான் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்க முடியும் அதாவது பரலோக ராஜயத்திற்குள் நுழைய முடியும் என்று தெளிவாக கூறியுள்ளார். மேலும் நாம் பரிசுத்தமாக வாழ்ந்தால் தான் பிறரை பரிசுத்தராம் இயேசுவிடம் வழிநடத்த முடியும்.
[9/24, 4:51 PM] JacobSatish Whatsapp: 12 திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது, மாதளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின, சந்தோஷம் மனுபுத்திரரை விட்டு ஒழிந்து போயிற்று.
யோவேல் 1
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[9/24, 4:58 PM] JacobSatish Whatsapp: 19 பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது, தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.
2 இராஜாக்கள் 2 :19
20 அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப்போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான், அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,
2 இராஜாக்கள் 2 :20
21 அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன், இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
2 இராஜாக்கள் 2 :21

[9/24, 6:55 PM] Bro. Elango Gopal🙏😀: 10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான், நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.
ஏசாயா 26
[9/24, 7:13 PM] Bro. Elango Gopal🙏😀: உப்பாய் இருக்கிற நாம்
உலகத்திற்க்கு ஒத்த வேஷம் தரிக்காமல் இருப்போம்.
இயேசுவை நோக்கியே நடப்போம்
பின்னிட்டு பாராமல் முன்னோக்கியே ஓடுவோம்.
*அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.*
ஆதியாகமம் 19 :26
[9/24, 7:19 PM] Bro. Elango Gopal🙏😀: நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
யோவான் 15 :5
*ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்,* அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள், அவைகள் எரிந்துபோம். யோவான் 15 :6
*இயேசு திராட்சைச் செடி - நானோ*
*இயேசுவின் கொடி* 🌷🌸🌺🌻
உப்பு சாரமற்று போகலாம் பாஸ்டர்.
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.மத்தேயு 5:13
*இயேசுவே நமக்கு உப்பு - அவர்*
*இல்லாவிட்டால் எல்லாம் சப்பு*📢📢📢📢
[9/24, 7:34 PM] Bro. Elango Gopal🙏😀: செடியில் நிலைத்திராத கொடி உலர்ந்து போகும்
சாரத்தை இழந்த உப்பு
ஒன்றுக்கும் உதவாமல் போகும்.
*இயேசு கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.கொலோசெயர் 3*
[9/24, 8:02 PM] George Whatsapp: குமரி ஜேம்ஸ் ஐயா அவர்கள் உப்பு சாரம் அற்று போகுமா என்ற கேள்விக்கு விளக்கம் குடுத்தார் நன்றி ஐயா
உப்பாகி நாம் சாரம் என்ற வாழ்வை தேவனின் கட்டளைகளை கைகொண்டு நடந்தால் தேவையான இடத்தில் தேவன் நம்மை பயன்படுத்துவார்
[9/24, 8:15 PM] Samuel-chinnaraj Whatsapp: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். வெளிப்படுத்தின விசேஷம் 22 :18
யாரோ ஒருவர் அனுப்பினார் என்று நானும் அனுப்ப கூடாது .... கர்த்தருடைய வார்த்தை
[9/24, 8:17 PM] Samuel-chinnaraj Whatsapp: கர்த்தர் என் மேப்பராயிருக்கிறார் .... இவ்விடத்திலே கர்த்தருடைய மகிமை கலங்க படுகிறது
[9/24, 8:59 PM] Pr Samson Whatsapp: இயேசுதான் நமக்கு உப்பு, 👍
அவர் இல்லாமல் நாம்,
ரொ.....ம்ப தப்.....பு.👎👎
(உதவி - Bro. Elango 🙏)
[9/24, 9:09 PM] Pr Isaac Whatsapp: 49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். மாற்கு 9 :49 50 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார். மாற்கு 9 :50
[9/24, 9:11 PM] Pr Isaac Whatsapp: 34 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? லூக்கா 14 :34 35 அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். லூக்கா 14 :35
[9/24, 9:12 PM] Pr Isaac Whatsapp: 13 நீ படைக்கிகற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்ககப்படுவதாக, உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக. லேவியராகமம் 2 :13
[9/24, 9:16 PM] Pr Isaac Whatsapp: 4 உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால்: நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை, நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை, உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை, துணிகளில் சுற்றப்படவுமில்லை. எசேக்கியல் 16 :4
[9/24, 9:35 PM] Bro. Elango Gopal🙏😀: *கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்?*
கடலில் வந்து கலக்கும் பல ஆறுகள் மலை, சமவெளி என அதன் பயணத்தில் தங்களுடன் நிறைய உப்பைக் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.
[9/24, 9:38 PM] JacobSatish Whatsapp: ஆதியிலே வார்த்தையாய் இருந்த தேவன்
பின்பு மனுசகுமாரன்
கிருபையின் காலத்திலே ஆவியானவர்
[9/24, 9:39 PM] Bro. Elango Gopal🙏😀: உப்பு
*உப்பு சிலசமயங்களில் மிகவும் குறைவான இதயத் துடிப்பு இருந்தாலும், பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், உப்புள்ள உணவுகளை சாப்பிட்டால், சீராக வைக்கலாம். ஆனால், அதிகமான இதயத் துடிப்பு உள்ளவர்கள், உப்பை சேர்க்கவே கூடாது*
[9/24, 9:44 PM] JacobSatish Whatsapp: பாஸ்டர் நார்த் இண்டியால கருப்பு உப்பு.பிரபலம்
[9/24, 9:46 PM] Bro. Elango Gopal🙏😀: ✝✝✝ இயேசுவின் காலத்தில் ஏழைகள் பாவிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் நோயாளிகள் தேவனால் சபிக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டார்கள்.📢📢📢 வாழ்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்கள் தேவனின் கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று கூறப்பட்டார்கள்.👆👆👆 இதனால் இவர்கள் எல்லோரும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, ஊருக்கு வெளியே வாழ்ந்தார்கள். துன்பச்சுமையே இவர்கள் வாழ்க்கையின் நியதியாய் இருந்தது.💥💥💥
☀☀ உணவுப் பொருள் அழுகவிடாமல் பாதுகாக்க உதவுவது உப்பு. அதிலுள்ள நீரை உறிஞ்சி வெளியேற்றி சுண்ட வைத்து, நீண்ட நாள் மக்களுக்குப் பயன்பட வைக்கிறது. *மக்களின் நல் வாழ்வுக்காக உப்பு தன்னையே அழித்துக் கொள்ளுகிறது.* ✅✅✅✅✅✅அது போல இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பிறருடைய நல் வாழ்விற்காக தன்னைத் தேய்த்துக் கொள்ள வேண்டும். "உலகிற்கு நீங்கள் உப்பாய் இருக்கீறீர்கள். உப்பானது சாரமற்றுப் போனால் வேறு எதனால் சாரம் பெறும்" என்று இயேசு கேட்கிறார். *பிறருடைய வாழ்க்கையை உயர்த்த வந்த மனிதனே பயனற்றுப் போனால், அவன் இருந்தென்ன, இறந்தென்ன?*☝☝☝ உலகின் ஒளியாய் இருந்து, பிறருக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டிய மனிதனே, இன்னொருவனைக் கொல்லலாமா? இது மனித நேயத்துக்கு முரணானதல்லவா?☝☝☝☝
[9/24, 9:48 PM] Pr Ebeneser Whatsapp: மத்தேயு 5:13-16

[14]நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
[15]விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
[16]இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
[9/24, 9:50 PM] Pr Isaac Whatsapp: Mathew 5:13,14............Look like light,taste like salt.......light in the world.....salt in the earth .. very deep subject
[9/24, 9:53 PM] Pr Samson Whatsapp: இப்படி தான் கடல் நீர் உப்பாக இருக்கிறதா!?
மற்றபடி இயற்கை யாகவே கடல் நீரில் உப்பு கிடையாதா!?
[9/24, 9:56 PM] Pr Isaac Whatsapp: https://en.m.wikipedia.org/wiki/Seawater
[9/24, 9:57 PM] JacobSatish Whatsapp: 5 கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனை துவக்கி,
யோசுவா 15

[9/24, 9:57 PM] Bro. Elango Gopal🙏😀: உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறோம் பாஸ்டர்😄😀
[9/24, 10:03 PM] Pr Samson Whatsapp: எனக்கு தெரியாது Bro.
நான் இயற்கையிலேயே இருக்கிறது என நினைத்தேன்.
[9/24, 10:04 PM] JacobSatish Whatsapp: 3 சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்சிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.
யோசுவா 12

[9/24, 10:05 PM] Pr YBJohnpeter Whatsapp: 2இராஜாக்கள் 2: 19
பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; 👉 தண்ணீரோ கெட்டது, ???👈 👉நிலமும் பாழ்நிலம் ?????👈 என்றார்கள்.
2 Kings 2: 19
And the men of the city said unto Elisha, Behold, I pray thee, the situation of this city is pleasant, as my lord seeth: but the water is naught, and the ground barren.
[9/24, 10:05 PM] JacobSatish Whatsapp: உப்பக்கடல் என்று குறிப்பிட காரணம் என்னவாய் இருக்கும்🤔🤔🤔🤔👆👆👆
[9/24, 10:05 PM] Pr YBJohnpeter Whatsapp: 2இராஜாக்கள் 2: 20
அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே 👉 உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள்👈 என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,
2 Kings 2: 20
And he said, Bring me a new cruse, and put salt therein. And they brought it to him.
[9/24, 10:05 PM] Pr YBJohnpeter Whatsapp: 2இராஜாக்கள் 2: 21
அவன் நீரூற்றண்டைக்குப் போய், 👉உப்பை அதிலே போட்டு👈: இந்தத் 💯👍தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; ✝ இனி இதினால் சாவும் வராது, 😄 நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

[9/24, 10:06 PM] Pr YBJohnpeter Whatsapp: 2இராஜாக்கள் 2: 22
எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் 👉இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.👈👏👏👍✝❤
2 Kings 2: 22
So the waters were healed unto this day, according to the saying of Elisha which he spake.
[9/24, 10:06 PM] Bro. Elango Gopal🙏😀: கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது..
சில நாட்களுக்கு முன், இங்கு ஹிஸ்டரி சேனல் பார்க்கும்போது, உப்பை பற்றி ஒரு பெரும் தொகுப்பை பார்த்தேன்..அதில் சொல்கிறார்கள், கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்று..
கேட்டவுடன் ஆச்சரியப்பட்டேன்..
*கடல் நீர் முதலில் உப்பற்றுதான் இருந்திருகிறது. பின், பல ஆறுகள் பூமியில் ஓடி, கடலில் கலக்கும்பொழுது, பூமியில் படிதின்ருக்கும் உப்பினை சிறிது சிறிதாக கொண்டு கடலில் சேர்த்திருக்கிறது. இன்றும் அது நடக்கிறது. இப்படி சேர்ந்த உப்பு அப்படியே கடல் நீரில் கரைந்து நீரை உப்பாக்கியிருக்கிறது. வெயிலினால் ஆவியாகும் கடல் நீரில் உப்பு ஆவியாவதில்லை. ஆகையால் உப்பு அப்படியே கடல் நீரில் தங்கிவிடுகிறது. இதனால்தான் கடல் நீர் உப்பாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாக சொன்னார்கள்.*
[9/24, 10:27 PM] Pr Ebeneser Whatsapp: பூமியின் எடை ஒருநாளும் கூடவுமில்லை
குறையவுமில்லை என்பது விஞ்ஞானிகள் கருத்து
[9/24, 10:35 PM] JacobSatish Whatsapp: உப்பு குறித்த.தியானம் உப்பை போன்றதே?குறைவாய் இரீந்தாலும் பிரச்சனை/அதிகமாய் போட்டாலும் பிரச்சனை....எனவேதான் பதிவுகள் நிதானத்துடன் வருகின்றன🙏
[9/24, 10:35 PM] Pr Samson Whatsapp: உப்பு வெளியிலிருந்து வந்து கடலில் சேருகிறது என்பதை அறிந்து "சப்பென்று" இருந்த மனதை "கப்பென்று " உங்க Audio "தெம்பாக்கி" விட்டது.
சமயத்துக்கேற்ற வார்த்தை.
நன்றி ஐயா. 👍🙏😀
[9/24, 10:36 PM] Pr Ebeneser Whatsapp: அணுவை பிளக்க முடியாது என்று ஒரு விஞ்ஞானி முடிவுரை எழுதினார்
பல வருடங்கள் கழித்து மற்றொரு விஞ்ஞானி அணுவை பிளக்க முடியும் பிளக்கும் போது ஆல்பா பீட்டா காமா கதிர்கள் வெளிப்படுத்தும் என்று முடிவுரை எழுதினார்
இப்படி ஆய்வுகள் நடந்துகிட்டேதான் இருக்கிறது
[9/24, 10:40 PM] Pr Ebeneser Whatsapp: அறிவியல் என்பது தேவன் படைத்தவைகளை கண்டுபிடிப்பதும் ஆராய்வதையும் பற்றியது
தேவனென்பவர் இன்னும் அறிவியலால் கண்டுபிடிக்கப்படாத அநேக காரியங்களை படைத்து ஆள்பவராவார்
[9/24, 10:43 PM] Pr Samson Whatsapp: 👍👏👏🙏
இப்படியும் சொல்லலாம் நினைக்கிறேன்.
தேவன் அறிவியலால் அல்ல,
ஆத்துமாவினால் அறியப்பட வேண்டியவர். 🙏🙏
[9/24, 10:44 PM] Kumary-james Whatsapp: *👉🏽நண்பர்களே நாளை பரிசுத்த ஆராதனை இருப்பதால் ஆயத்தத்தோடு காணபடுவோம்*🛐
[9/24, 11:18 PM] JacobSatish Whatsapp: இந்த உப்பதான் சாரமற்றுப்போச்சினு நினைக்கறேன்😭😭😭😭
[9/24, 11:42 PM] JacobSatish Whatsapp: 29 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
யோவான் 20

[9/24, 11:53 PM] Bro. Elango Gopal🙏😀: Thank you Ebi pastor 🙏😊
3 *விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.*
எபிரேயர் 11 :3
[9/25, 12:00 AM] Pr Ebeneser Whatsapp: அது உடான்ஸ் சகோ
நமக்கு எனர்ஜி எப்பவுமே நமது ஆண்டவர்தான்
குட்நைட் டூ ஆல்
[9/25, 10:54 AM] Manimozhi Whatsapp: சாரமுள்ள உப்பு போன்ற ஊழியர்கள் இந்தியாவில் எழும்பி
உலகத்திற்கு வெளிச்சமாக இருந்து
உலகம் ஊழியத்தில் நம்மை நோக்க 130 கோடி மக்களின் முழங்கால்கள் முடங்கி நாவுயாவும் அறிக்கை செய்ய அடையாள அற்புதத்தோடு நோய்கள் பேய்கள் அனைத்தும் ஓட்டி
ஆண்டவர் நாமம் மகிப்பட ஊழியர்களை ஆண்டவர் ஆசீர்வாதிக்க ஜெபிப்போம்

Social Plugin